Saturday, July 24, 2010

பொங்குதமிழ் ஊடகமும்,மகிரிஷியின் அயலுறவுக் கருத்தியலும்...

பொங்குதமிழ் ஊடகமும்,
மகிரிஷியின் அயலுறவுக் கருத்தியலும்...


கட்டுரைத்தொடர்: (4)

"புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம்,அந்நியச் சேவை:"அறிவாளிகள்!"


மிழ்பேசும் மக்களை மேலும் குழப்பத்துக்குள் ஆழ்த்தும் கட்டுரைகளை நமது "ஆய்வு"க் கட்டுரையாளர்கள் தற்போது பரவலாக எழுதிவருகின்றனர்.அதுள் முக்கியமாகப் பலராலும் வாசிக்கப்பட்ட கட்டுரையாக(பொங்குதமிழ்இணையக் கட்டுரை) இக்கட்டுரை பல தளங்களில் வாசிக்கக் கிடைத்தது.

கட்டுரையாளர் மீளத் தகவமைக்கும் அயலுறுவுக்கொள்கை எனக்கு அன்றைய புளட்டின் அரசியல் வகுப்பெடுப்பை ஞாபகப்படுத்தத் தவறவில்லை.

"இந்தியா உலகத்தில் முற்போக்கான நாடாகத தன்னைக் காட்டி வருவதால்,அது உலகத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்குச் சார்பாக இயங்குகிறது.எனவே,தமிழீழத்தை ஏற்று அங்கீகரிக்கும்,தமிழ்பேசும் மக்களது நியாயமான போராட்டத்தை அது ஆதரிக்கும்" என அன்று புளட், இந்திய அயலுறவுக்கொள்கையை எடுத்தியம்பியது.பரவலாக இந்தியா குறித்து மக்கள் கேள்விகளைத் தொடுக்கும்போது புளட் இங்ஙனம் விடையளித்தது.இத்தகைய முட்டாள்த்தனமான கருத்தை அன்று மக்கள் நம்பிக்கொண்டார்கள்.

இன்று,சுமார் கால் நூற்றாண்டு கடந்துவிட்டது.இதற்குள் இந்தியாவின் பாத்திரம் தமிழ்பேசும் மக்களில் கணிசமானவர்களைக் கொன்று குவித்துள்ளதும்,தமிழ்பேசும் மக்களது போராட்டத்தைத் திசைதிருப்பி ஒரு படுகொலைக் களத்தைத் திறந்துவிட்டதும் வரலாறாக இருக்கும்போது மீளவும், இந்தியாவுக்கும்-சீனாவுக்குமான அயலுறவுக்கொள்கை முரண்களால் யுத்தம் வெடிக்குமெனவும்,அதுள் இந்தியாவானது தனது அயலுறுவுக்கொள்கையினதும்,ஆதரவுச் சக்தியினதும் தேவையின் பொருட்டுத் தமிழர்களுக்கு நாடுபிடித்து-பிரித்துக்கொடுத்து, இலங்கைத் துறைமுகத்துள் தனது இருப்பைத் "தமிழ்த் தேசவுருவாக்கத்தில்" நிலைப்படுத்தும் எனக் கட்டுரையாளர் மகிரிஷி அரசியல்-பொருளாதார அறிவு புகட்டுகிறார்.

அயலுறுவுக்கொள்கையை வலுவாகப் புரிந்து காரியமாற்றும்போது நமக்கு விடிவுகிடைக்குமென வகுப்பெடுப்பதில் இதுவரை தேறாத புலிகளுக்கு மாற்றாகச் சிந்திப்பவர் மிகத் தாரளமாகச் சொல்லும் இந்தக் கட்டுரையினது மையக் கருதுகோள் மீளத் தகவமைப்பது என்ன?

இலங்கையை ஆளும் கட்சிகள் தமது கட்சியின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் நோக்கத்தைக்கொண்டிருப்பதிலிருந்து அந்நியச் சக்திகளைத் தத்தமது நண்பர்களாகவும் எதிரிகளாகவும் காட்டும் அரசியலை வகுக்கும் உள் நோக்கம், அந்த அந்நியப் புறச் சக்திகளின் அழுத்தமான உறவுகளோடு தொடர்புறுந் தருணங்களை இவ்வகைக் கட்டுரையினது பேசு பொருளாக உலாவவிடுதில் தமிழ்பேசும் மக்களுக்குப் புதிய அயலுறுவுக்கொள்கை வகுப்பெடுகின்றதென்று நாம் சந்தேகப்படவேண்டும்.

இலங்கைப் பிரச்சனையுள் முடிவுகளை தீர்மானகரமாக எடுக்கும் ஆற்றலைப் போராட்ட இயக்கங்களிடமிருந்து தட்டிப்பறித்த அந்நிய ஆர்வங்கள், இலங்கைப் போர்வாழ்வுக்கு மிக நெருங்கிய உறவில் தமது வலுக்கரங்களை இறுக்கும்போது அழிவு இலங்கைச் சமுதாயத்துக்கே கடந்த காலத்தில் ஏற்பட்டது.இது,மிக நீண்ட வரலாறு நமக்கு.

இதைத் தக்கபடி உணர்ந்துகொண்டு மக்களின் அழிவைத் தடுக்கும் ஆற்றலை எந்தக்கட்சியுமே-ஆயுதக்குழுக்களுமே கொண்டிருக்கவில்லை. இதுவொரு நூற்றாண்டையே இரத்தக்களரியாக்கி வந்ததில்நமது அன்றைய போராட்ட முறைமைக்கு மிக நெருங்கிய பங்கு இருந்திருக்கிறது.தற்போது அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகள்- இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் ஜனநாயகம் பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன. இதற்குத் தோதாகச் சொல்லப்படும் அந்நியவுறுக்கொள்கை-தமிழ்பேசும் மக்கள் சார்ந்திருக்கவேண்டிய அயல் நாடு-நட்பு நாடு என்பதெல்லாம் மீளவும் அதே தேசத்தால் கட்டப்படும் மிகக் கெடுதியான கருத்தியல் மோசடியென்பதைக் குறித்து நாம் பேசியாகவேண்டும்.

இலங்கையைச் சாதகமாக மேற்குலகத் தேசத்திடமிருந்து பிரித்தெடுத்துக்கொண்ட சீன-இந்தியக் கூட்டுக்கு மிக நெருக்கடியை கொடுக்கத்தக்கவர்கள் ஏமாற்றி அழிக்கப்பட்ட தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களே.அவர்கள் தமது எதிர்வினையை மீளத் தகவமைக்கும் பண்பைக் கொண்டிருப்பது இயல்பான வாழ்வை-உரிமையை மறுக்கும் சிங்கள அரசினது ஏமாற்று மோசடிகளால் நேருபவை.எனவே,தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் அரசியலைக் கடைப்பிடிக்கும் சிங்கள ஆதிக்கத்துக்கு அநுமதியளித்துச் சிங்கள ஆளும்வர்க்கத்தைத் தமக்குத் தோதாக வளைத்தெடுத்த சீன-இந்தியக் கூட்டுக்குப் புதிய நெருக்கடிகளை வழங்குபவர்கள் தமிழர்கள்தாம்.தமக்கான நீதியைப் பெறுவதென்பது அவர்களது வாழ்வோடும்-இருப்போடும் சார்ந்ததென்பதால் புலிகளை அழித்த குறிப்பிட்ட புதிய அரசியல்போக்குக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதென்பது இயல்பான மனித நடாத்தையாகவே இன்று புலப்படுகிறது.

இந்த நெருக்கடி-தமிழ்பேசும் மக்கள் தம்மைப் பழிவேண்டிய அரசுகளையும்,அவர்களது புதிய பொருளாதாரவிலக்குகளையும் நோக்கியதாகவிருக்குமென்புதும் இத்தகைய தேசங்கள் புரிந்துகொண்டதுதாம்.இன்று தமிழ்பேசும் இளைய சமூகமானது எந்தத் திசையிலும் புதிய புரிதல்களோடு தம்மைத் தகவமைக்க முனைகிறது.அதன் ஆழ்ந்த நகர்வானது தமக்கு நேர்ந்த நெருக்கடிகளைப் புதிய புரிதல்களோடு அறிவுரீதியாக விளங்க முற்படும் சூழலொன்று புலம் பெயர் தமிழ்க் குழுமத்துக்குள் உருவாகிறது.இந்தச் சூழலை எந்தத் தேசம் தமக்கேற்ற வகையில் பயன்படுத்த முனைகிறதோ அந்தத்தேசம் இலங்கையில் கணிசமான அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திச் சீன-இந்தியக் கனவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.இன்று,தமிழ்ச் சமூகத்தின் இளைய தலைமுறை தன்னைப் புதிப்பிக்கும் ஏதோவொரு உரிமைசார் போராட்டத்தில் முதன்மையுறும் அந்நியவுறாவானது பரந்துபட்ட புரிதலை மறுத்தே இயங்குகிறது.அதற்கு மேற்குலகத்தின் அரசியலை எங்ஙனம் கையாளுவதென்பது பெருஞ் சவாலாகவே இருக்கிறது.இந்தச் சவாலனின் நடுவே,"சீன-இந்திய"யுத்தஞ்சார்ந்து இந்தியாவைக் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டுமென கருத்துக் கட்டுபவர்களைக் குறித்து நிறையப் பேசியாக வேண்டும்.

கடந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குகான புள்ளியை-அரசியல் செப்படி வித்தையை இந்தியாவின் ஆலோசனைப்படி "சர்வகட்சிக் கூட்டுக்கள்"(யு.என்.பி-காங்கிரஸ்,சீனக் கம்யூனிசக் கட்சி,மகிந்தாவின் மக்கள் கூட்டணி,தமிழர் கூட்டணி இன்னபிற)அன்று முன்வைக்கும் நிலைக்கு அரசியல் வியூகம் சென்றுகொண்டிருந்தது.புலிகளது தனிக்காட்டுத்தார்ப்பாரைச் சொல்லி மக்களின் உயிரோடும்-வாழ்வோடு விளையாடிய இந்தக்கட்சிகள்-அரசுகள் ஏதோவொரு கட்டத்தில் அந்த மக்களின் நலன்களைக் காப்பதற்கான போராக இறுதிப் புலியழிப்பு யுத்தத்தை உருமாற்றம் செய்து கொண்டன.இங்ஙனஞ் செய்துகொள்ளும்போது,சிங்கள-தமிழ் தேசிய வாதத்தின் மிகக் குறுகலான உணர்வு சிங்கள-தமிழ் யுத்தக் களமுனையின் உச்சத்தைத் தத்தமது வெற்றியின் அடையாளமாகவும்,உரிமையின் வெற்றியாகவும்-தோல்வியாவும் பார்க்கத் தக்க மனநிலையை உருவாக்கும் காரியத்தை இந்தக் கட்சிகள் செய்து முடித்தன.

இந்தத் தோல்வியான வியூகத்தைச் சரி செய்ய வேண்டுமானால் தமிழ்பேசும் மக்களை மீள வென்றெடுத்தாகவேண்டிய நிலையில் சீன-இந்தியக் கூட்டணிக்கு அவசியமான முன் நிபந்தனையாகவிருக்கிறது.இங்கே,இத்தகைய கட்டுரைகள்,குறித்துரைக்கும் சர்வதேச-அயலுறவுக்குகொள்கைசார் கருத்துக்கள் அத்தகைய இலக்குகளின்வழி மேற்குலகஞ் சார்ந்தோ அன்றி இந்தியா சார்ந்தோ முன் தள்ளப்படுகிறது என்பதே இன்றையவுண்மையாக இருக்கிறது.

இதன் அர்த்தமென்னவென்றால் இலங்கை அரசியலில் மெல்ல உருவாகிய இராணுவத் தன்மையிலான ஆட்சியதிகாரம் பெயரளவிலிருந்த ஜனநாயகப் பண்பை மறுவாக்காஞ் செய்தபோது,அது அரை இராணுவச் சர்வதிகாரமாகத் தோற்றமுற்றதென்பதே.இதன் தொடர்விருத்தியானது இலங்கை அரை இராணுவச் சர்வதிகாரத்துக்குச் சார்பானதும், புதிய ஆசியப் பொருளாதாரக் கூட்டணிக்கு நெருக்கடியற்றதுமான இன்னொரு "தமிழ் மக்கள் உரிமைசார்" கருத்தியலை வலிந்து தமிழ் மக்களுக்குள் உருவாக்கும் போக்கில் பாசிச இந்திய ஆளும் வர்க்கத்தை நமது நட்புச் சக்தியாக வர்ணிக்கும் தன்மையிலானவொரு புலிகள்பாணி அரசியல் கட்டமைப்பைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக உருவாக்க முனைவது.

அன்று,முள்ளி வாய்க்கால் நிகழ்வு நேரும்வரை தமிழ்ழீழம்பெறும் மீட்புப் படையணியாக உருமாற்றப்பட்ட புலிகள் திட்டமிட்ட அவர்களது அந்நிய உறுவுகளால் மிகவும் கவனமாக நிர்வாகிக்கப்பட்டுத் தமிழ்பேசும் மக்களின் நலன்களை முன்னெடுக்காத சர்வதிகாரத்தன்மையிலான அந்நிய ஏவற்படையாகத் தமிழ் மக்களின் எழிச்சியை மறுவாக்கஞ் செய்துகொண்டது இந்த அந்நிய நலன்கள். இப்போது, முன்னெடுக்கப்படும் இந்திய-அந்நிய அரசியல் சதியை-சூழ்ச்சியை இத்தகைய கட்டுரையாளர்கள் திட்டமிட்டுத் தமிழ்பேசும் மக்களது அயலுறவுக்கொள்கையென வகுப்பெடுத்துத் தமது இலக்கை எட்ட முனைவதென்பது உண்மையானது.இதுள் பற்பல குழுக்கள் தமது விசுவாசத்துக்கேற்பக் கட்சிகளாகவோ அன்றி இலக்கிய வட்டங்களாகவே புலம்பெயர் சமூகத்திலும்,நிலத்திலும் இயங்கி வருகிறார்கள்.இத்தகைய இயக்கப்பாட்டின் அதீதமான கருத்தியற் காயடிப்பாகவே பொங்குதமிழ் இணையத்துக்காகக் கட்டுரை எழுதிய மகிரிஷி என்பவர் இயங்குகிறார்.இது,போராட்டக் குழுக்களது அன்றைய தொடர்கதையான அந்நியச் சேவையின் இன்னொரு அரூபமான வெளிப்பாடு.

அந்நிய நலன்களாலும்,புலிகளாலும் ஏமாற்றப்பட்ட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை, இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட முனைவதற்கில்லை.இங்கேதாம் கேள்வி எழுகிறது-இலங்கைச் சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்குப் பங்கமற்ற நிர்வாக அலகுகள் என்ன?-அவற்றை எட்ட முனையும் செயற்பாடுகள் இலங்கை அரச யாப்புக்குள் எத்தகைய பண்பை நிலைப்படுத்தும் என்பதே.

இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின்இனங்களைப் பிரித்தாளுவதே!இந்தப் பிரித்தாளும் தன்மையின் முதல் நிகழ்வாகப் புலம் பெயர் தமிழ் மக்களுக்குள் பல்வேறு பிளவுகளைத் தகவமைத்து ஒரு பக்கம் "புரட்சி"க்காகக் கட்சிகட்டுவதாகவும் இன்னொரு பக்கம் ஐ.நா.வரை நடைபயணமெனப் பரவாலாக இயங்கும் அந்நிய நலன்சார் முன்னெடுப்புகள் புலம்பெயர் தமிழ் இளைய தலைமுறையினது போராட்டவுணர்வைத் தமக்கேற்ற வகையில் மட்டுப்படுத்துவதாகவிருக்கிறது.இது,புலத்துப் புலிகளது முழுமையான சதி அரசியலின்வழியே இயங்குகிறதென்றுவுண்மையையும் நாம் புரிந்தாகவேண்டும். அந்தத் தளம் மேற்குலகு-ஆசியக் கூட்டினது இரு முகாங்களாகப் பிளவுபட்டிருக்கிறது.கே.பி.குழுவானது வெளிப்படையாகவே இலங்கை அரசோடிணைந்து ஆசிய மூலதனத்துக்குச் சேவை செய்கிறதென்பது கடந்த சில மாதங்களாக நாம் காணும் உண்மை.

இந்த நிலைமையில் பொங்குதமிழுக்குக் கட்டுரைவரையும் மகிரிஷியின் கூற்றுக்குள்-கருத்துக்குள் பொதிந்திருக்கும் எஜமான விசுவாசம் இன்னுமொரு முறை நம் மக்களை ஏமாற்றுவதற்கு இந்த ஏகாதிபத்தியத் துரோகிகள் நம் புத்திஜீவிகளைப் பயன்படுத்துவதென்பதற்கு நல்லதொரு உதாரணமாகும். இலங்கையின் இன்றைய படுகொலைப் பண்பாட்டு அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் இந்தியாவும்,ஏகாதிபத்திய நாடுகளுமே காரணமாக இருக்கிறார்களென்பதை நாம் பலமாக நிறுவ முடியும்.

நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் படுகொலை அரசியலுக்கு, இலங்கையை ஆளும் கட்சிகளுக்குப் பின்னாலும், தமிழ் மக்களின் விடுதலைப்படைகளென்ற குட்டி முதலாளிய இயக்கங்களுக்குப் பின்னாலும் நிற்கும் இந்திய-சீன,மேற்குலக ஏகாதிபத்தியங்களே முழுமுதற் காரணமாகும். கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்பேசும் மக்களை யுத்த வாழ்வுக்குள் முடக்கி அழித்துவரும் அரசியல் வலு இலங்கையை ஆளும் எந்தக் கட்சிக்கும் இருக்கமுடியாது. அவை, முடிந்தவரை அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிறுவ முனையுந் தறுவாயில் மட்டுமே இலங்கையை ஆளும் தகமையுடையவர்களாக உருவாக்கப்பட்டு, ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தவுண்மையைத் திட்டமிட்டு மறைத்து
"இந்தியாவின் தயவில் இலங்கையில் இரு தேசங்கள் உருவாக்கப்படும் தீர்வு சாத்தியமெனும் மகிரிஷியின் தேவரமானது எப்பவும் போலவே இந்தியத் திருவிளையாட்டே.

இது, கைவிலகிப் போகும் புலம் பெயர் இளைய குழுமத்தின் அரசியல் இருப்புக் குறித்தும்,அவர்களது மேற்குலகச் சார்பு குறித்தும் இந்தியா கவலையுறும் ஒரு நிகழ்ச்சி நிரலாக இப்போதிருப்பதற்கானவொரு முன்னெடுப்பாக நாம் உணரலாம்.எனவே,இத்தகைய கருத்து நிலைகளுக்குள் கட்டிவைக்கப்படும் பொறியானது மக்களைக் காயடித்து அதிகாரங்களுக்குள் கட்டுண்டுகிடக்க வைப்பதே.

தொடரும்

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
24.07.2010

Saturday, July 17, 2010

எதிர்நிலைகளை முன்வைத்து...

கட்டுரைத்தொடர்: (3)

எதிர்நிலைகளை முன்வைத்து...
"புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம்,
அந்நியச் சேவை:"அறிவாளிகள்!"

மிழ் பேசும் மக்களாகிய நாமோ இன்று தமிழின் பெயராலும்,தேசவிடுதலையின் பெயராலும் அழித்தொழிக்கப்பட்டும், எந்தப் பிடிமானமும் அற்ற வெறும் ஓடுகாலி இனமாக உருவாகப்பட்டு நாடோடிகளாகியுள்ளோம். நமது சமூக சீவியம் வலுவாக அழிந்தபின் நம்மிடம் எஞ்சியிருக்கும் வாழ்வானது காத்திரமான சமூக ஆண்மையாக இருக்க முடியாது! நாம் மெலினப்பட்ட இனமாக,பொருளாதாரப் பலமற்ற சிறு குழுவாகச் சிதைக்கப்பட்டு,உலக இனங்களுக்குச் சேவகஞ் செய்யும் நாடோடிகளாக்கப்படும் அரசியலைச் செய்து முடித்த ஆயுதக்குழுக்களது எச்சங்கள் இன்று போடும் அரசியல் கணக்கானது அவர்களது இருப்பைக் குறித்தான தெரிவென்பது நாம் இனங்காணத்தக்கது.இது,ஒருபோதும் நமது மக்களது அரசியல் நெருக்கடிக்கு எந்தவிதத்திலும்ஆரோக்கியமாகச் செயற்படாதென்பதைக் குறித்தே நாம் இப்போது பேச முற்படுகிறோம்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்பான புலியற்ற சூழலானது தமிழ்பேசும் மக்களுக்கு என்றும் சாதகமானவொரு அரசியல் வெற்றியைத் தரவில்லை.இயக்க நலனுக்கான தெரிவும்,தலைமைத்துவத்தின் இருப்புக்கான அரசியற்றொடர்ச்சியுங்கொண்டியங்கிய புலியினது அழிவுக்குப் பின்பான இலங்கையின் சிறுபான்மையினங்களது அரசியல் நகர்வில், இன்றுவரை தொடரும் நயவஞ்சகமான அரசியலானது புலத்திலும்,நிலத்திலும்(இலங்கையில்)தமிழ் மக்களை அவர்களது பிரிவினைகளுக்கூடாகப் பிளந்துள்ளது.கூடவே,இந்த வகைக்குட்பட்ட அரசியல் நடாத்தும் மேலாண்மைச் சமூதாயங்கள் இன்று மிக வேகமாகக் காரியமாற்றுகின்றன.

இவை நமது மக்களது எதிர்காலவாழ்வு குறித்துப் புதுவகைக் கருத்துக்களைத் தமது எதிர்கால இலங்கை அரச வியூகத்திலிருந்து தொடரும் புதிய தெரிவுகளில், புலம்பெயர் தமிழ்க் குழுக்கள் அரசியல்ரீதியாக அணிதிரள்வது புரட்சியெனப் பரப்புரைக்குள்ளாக்கப்படும் தருணத்தில் பக்கம் பக்கமாகப் புதிய தொடர்கள் ஏதோவொரு மூலையில் இருப்பெடுக்கிறது.மாற்றுக் கருத்தாளர்களென நம்மை நாம் பிரகடனப்படுத்திய கையோடு,நமக்குள் சிதைவுறம் நமது செயலூக்கம்,இன்று, பெரும்பாலும் நமக்குள் வன்மைத்தைத் தகவமைத்தில் முடிவடைகின்றன.இவை நமது மக்களது பிரச்சனைகளைச் சொல்லியே தத்தமது எஜமானர்களது தேவைகளைக் கையிலெடுத்துள்ளது.

பகைமுரண்பாடுமிக்க இருவேறு வர்க்கங்கள் ஏதோவொரு அரசியலுக்கு தமது உடலை அடிமையாக்குவதற்கு முதலாளிய மேல்மட்ட அமைப்புகள் காரியமாற்றுகின்றன. இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமைiயும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இந்தப் புரிதலோடு இன்றைய புலம்பெயர் தமிழ்க் குழுமத்தின் அரசியல் நகர்வைப் புரிய முனைந்தால்அந்நியத் தேசங்களது கனவானது தமிழ் மக்களைப் பிரதேச ரீதியாக எங்ஙனம் பிளந்துள்ளதென்றும்,அதன் தொடர்விருத்தியாக முன் தள்ளப்படும் கட்சிகள்-குழுக்களது மாதிரிக் குட்பட்ட அரசியல் அமுக்கமும் புலியினது போராட்டப் பாதையின் எச்சமாக நகர்வதை இனங்காணமுடியும்.

இதன் தொடரில் நாம் பற்பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கிறோம்.எனினும், புலிவழி இயக்கவாதம் மீளக் கோலாச்சுகிறது.

அந்நியச் சக்திகளுக்குக் கூஜாத் தூக்கும்"போராட்டம்" தொடர்கிறது.

அஃது, ஈழத்தை-சுயநிர்ணயவுரிமையைப் பெற்றுத் தருமெனப் பல"தோழர்கள்" நம்பிக்கிடக்கிறார்கள்!இங்கே, அன்றைக்குப் புலிகள் சொல்லிய பாசிசக் கருத்து நிலை(மொழிக்காக, இனத்துக்காக, தேசத்துக்காக "உயிர்ப்பலிகொள்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு"எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டு, மனித ஆளுமையைக் காவு கொள்வது) மக்களுக்காகப் போராடுவதற்கு,அவர்களுக்கான அரசியலைத் தொடர்வர்தற்கு அணிச் சேர்க்கை அவசியமென்கிறது.அதைக் குறித்து எந்தக் கேள்வியுமின்றித் "தாம் உரைக்கும்போது "கட்சி"கட்டுவதும்,போராடுவதும்" சரியெனப் பரப்புரை செய்கிறது.இதன் வன்மமான கருத்துநிலையானது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிலவும் சூழலுக்கேற்ற எதிர்-நியாயவாதத்தை மக்களுக்கான நலனின் தெரிவனச் சொல்லியே தமது "நியாயவாத்தை"த் தொடர்கிறது.

இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற "வர்க்க"அரசியலானது இன்று புலம்பெயர் தளத்தில் ஊடகவன்மமாகவும்-கட்சிகட்டும் பெரிய போர்வினை நுட்பமாகவும் ஒருங்கே தமிழ்மக்களது விடிவு குறித்து வகுப்பெடுக்கின்றனர்.ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஏதோவொரு அரசியல் இருக்கிறது.இது, அவரவர் சார்ந்தியங்கும் தத்துவங்கட்கு அமைய நிகழ்வதில்லை.மாறாக, அவரவர் வர்க்கத் தளத்தைச் சார்ந்து இது மையமானவொரு செயற்பாட்டை நெடுக வற்புறுத்தி வருவதனால்,அதைச் சாதிப்பதில் எழும் சிக்கல்களை முழுமொத்த மாற்றுக் கருத்து நிலைகளுக்கும் பொதுமைப்படுத்தும் நோக்கில், பற்பல எண்ணங்களைப் புனைகின்றார்கள்.இதுள் தனிநபர்சார்ந்த ஒழுக்கம்முதல் அவரவர் சொந்த விவகாரங்களும் மக்கள் நலன் என்ற முலாம் பூசப்பட்டு வெளியுலகுக்கு ஒருவித வன்முறை அரசியலாக வெளிவருகிறது.

அதே புலிப்பாணி "அணிதிரள்வு-ஒத்து வடம் பிடித்தலெனும் வகைமாதிரிப் புனைவுகள்" ஏதோ எழுந்தமானமாக வாசிக்கப்படுகின்றன.இது,எந்த நிலையிலும் மகள் அரசியலறஞ்சார்ந்து சிந்திப்பதில்லை. இதன்வடிவங்கள் பற்பல முகமூடிகளைத்தரிக்க முனைகிறது.இவை ஒவ்வொரு முகமூடிகளையும் நமது வரலாற்று அரசியல் போராட்டப் போக்கிலிருந்து பெற்றுக்கொண்ட "நிகழ்வுகள்"சார்ந்தும்,பொருளாதார-வர்க்க அரசியல் சமுதாயப்பின்னணிகளிலிருந்தும் தத்தமக்கு அவசியமானவற்றை பேர்த்தெடுத்துப் பரப்புரைகளைகட்டியமைக்கிறது.

இங்கே,இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளைச் சொல்லியே அரசியல்-போராட்டஞ் செய்யும் கட்சிகள்-குழுக்கள்வரை இத்தகையப் போக்கிலிருந்து தமது நலன்களை அறுவடை செய்யும் இன்றைய நோக்குநிலையிலிருந்து இந்த"புரட்சிக் குழுக்களின்"குழுவாததத் தகவமைப்பு வேறுபட்டதல்ல. இதற்கு இவர்களால் முன்வைக்கப்படும் அறிக்கைள் நல்ல உதாரணமாக இருக்கின்றன.மக்களின் விடுதலையிலிருந்து நம்மைப் பிரித்தெடுத்துக்கொண்ட இந்த குழுவாத வரலாறு எப்பவும்போலவே தனித்த "தார்ப்பார்களை" உருவாக்கி வைத்துக்கொள்கிறது!இது,தான்சார்ந்தும் தனது விருப்புச் சார்ந்தும் ஒருவிதமான தெரிவை வைத்தபடி, தனக்கு வெளியில் இருக்கும் எதிர்நிலைகளைப் போட்டுத் தாக்குவதில் மையமான கவனத்தைக் குவிக்கிறது.இங்குதாம் அதன் அந்நியச் சேவை புரியத் தக்கது.அதன் உண்மையான நோக்கு மக்கள் அணிதிரள்வதைத் தடுத்து,மக்களது சுயவெழிச்சியை ஒடுக்குதல் அல்லது காட்டிக்கொடுத்தலென்பது வெளிப்படையற்ற உள் நோக்காக விரிகிறது.

புலிகளது ஈழப்போராட்டத்துக்குப் பின்பான இன்றைய சமூகச் சூழலில், தமிழ்ச் சமுதாயத்துள் உட்புறம் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட வாழ்வதற்கானதும்,சமூகமாக ஒருகிணைவதற்கானதானதுமான பெருவிருப்பம் முதற்றெரிவாக முன்னெடுக்கும் இருத்தலுக்கான ஆதாரத்தை உரிமையெனக்கொள்வதற்கில்லை.அது,தனது இழந்துபோன அடிப்படைத் தேவைகளையொட்டிச் சிங்கள அரசுடன் செய்யும் சமரசம் முற்றுமுழுதாக வாழ்வதற்கான தெரிவே அன்றிப் போரிட்டுத் தமது உரிமைகளைவென்றெடுப்பதென்றில்லை!

இதுசார்ந்த அவர்களது சிந்தனா முறை ஜனநாயகத்தின் அதிகபட்சக் கோரிக்கைகளை முன்வைக்க முடியாத சமூகப் பொருளாதாரத்தைக் கோரிக்கொண்டிருக்கிறது.இது தமிழ்ச் சமுதாயத்தின் இனிவரும் அவலமான சூழலுக்கு முக்கியமான காரணியாக விருத்தியாகும். இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசியலானது மக்களது சுயதெரிவான அரசியலூக்கத்திலிருந்த அவர்களது சுயாதீனச் செயற்பாட்டின்வாயிலாக எழவேண்டுமெயொழிய எந்தக் கொம்பரும் அதைப் புலத்திலிருந்து ஏற்றுமதி செய்யமுடியாது!அப்படிச் செய்வதென்பது மீளவும்,அந்நியச் சக்திகளது அரசியலை முன்னெடுப்பதன் தொடர்ச்சியாகவே பார்த்தாகவேண்டும்.கடந்த காலங்களில் நிலவிய விசும்பு நிலையான இந்தச் சிக்கல் இப்போது பின்போராட்சச் சூழலில் சமுதாயத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் தன்வயப் படுத்தியுள்ளது.

தம்மளவில் ஒருமைபட முடியாத எதிர்நிலைகளை முன்வைத்து, அதைத் தகர்ப்பதில் முனைப்புறும் அரசியல் சேட்டைகள்"கூட்டங்களாக-நிகழ்வுகளாக-நினைவுக் கொண்டாட்டங்களாக-விழா எடுப்புகளாக"புலம் பெயர் வாழ்சூழலில் அரங்கேறுகிறது.இங்கே, முட்டிமோதும் "மாற்றுக் கருத்து-புரட்சிகரக் கட்சிகட்டல்"எனும் இந்தத் தளம் தனக்குள்ளே அராஜகத்தை எண்ணக் கருவாக்கி வைத்தபடி குறுகிய தெரிவுகளுடாகக் காரியமாற்றும்போது, நடுத்தெரிவில் அம்பலப்பட்டுப்போய் அநாதவராகக் கிடக்கிறது.இதன் இன்னொருமுகம் காழ்ப்புணர்வாக வீங்கி, அறிக்கைப் போர்களைச் செய்து ஒருவர்மீதொருவர் சேறடிப்பதில் கவனமாக இயங்குகிறது.கடந்த காலங்கள்போல் இனிவரும் காலங்கள் புலத்தில் இருக்கப்போவதில்லை.

நிலத்தில்(இலங்கை)அங்கமுறும் ஒவ்வொரு குடும்பமும் ஏதோவொரு வகையில் உயிர் ,உடமையிழப்புகளுக்கும்,இடப்பெயர்வுகளுக்கும் உள்ளாக்கப்பட்டதன் பின்பு, அந்தச் சமுதாயத்தின் நெறியாண்மை மிகவும் பாதிப்படைந்துள்ளது.இந்தச் சந்தர்பங்கள் பொருளாதாரச் சிக்கலுக்குள்ளாகும் ஒரு சமுதாயத்தை, எந்த வகையிலும் சமூகப் பிறழ்வுகளுக்குள் திணித்து,அதைச் சிதைப்பதில் முடிவுறும்.இதைத் திட்டமிட்டே கணித்துச் செயற்படும் அந்நிய நலன்கள் தமிழ் மக்களுக்குள் மீளவும் சதி அரசியலைத் தொடர்கிறது.அதற்குத் தோதான கூட்டத்தை முன்னாளத் தமிழ் இயக்களது மாபியாக் குழுக்களுக்குள் இருந்து தெரிந்தெடுக்க முனைகிறது.அதன் தொடரில் சிக்கியுள்ள பலர் மக்களுக்காகப் போராட அணி திரள்வதாகப் புலம்புவது மக்களைக் கருவறுக்கவே என்பது மிகக் கறாராக விளங்க வேண்டிய உண்மை.

இன்றைய சூழலில்,புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் பலர் தம்மைத் தகவமைக்க முனைந்த ஏதோவொரு அரசியல் நடாத்தையில் வந்துசேர்ந்த அல்லது ஒதுங்கிய தளம் பெரும்பாலும் எல்லோரும் நிரூபணமாகி வருகிறது.இதுள்"மாற்றுக் கருத்து"என்ற அவசியமான எதிர்நிலைகள்-குரல்கள் முக்கியமானவை!நிலவுகின்ற அதிகார மொழிவுகளுக்கு-மக்கள் விரோத இயக்கவாத மாயைகளுக்கு-அதிகாரமையங்களுக்கெதிரான கருத்துக்கள்-சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயம் எதிர் நோக்கியுள்ள இன்றைய நிலையில், இத்தகைய "மாற்றுக் கருத்துக்களை"முன்னெடுப்பவர்களிடம் தனிநபர்சார்ந்து முனைப்பு இறுகி, முற்றி ஒருவரையொருவர் தாக்குவதுவரைச் சென்றுவிடுகிறதென்ற உண்மையில் அடுத்தகட்டம் குறித்துச் சிந்தக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.அந்நியச் சேவையின் பொருட்டு ஒருவரையொருவர் தலைவெட்ட முனைவதையெண்ணி நாம் ஆச்சரியப்பட முடியாது.

நாம் எந்தவொரு சூழ்நிலையிலும் விழித்துவிட முடியாதபடி அன்று பாசிசப் புலிகளுக்கூடாகக் காரியமாற்றிய உலக அந்நிய நலன்கள் இன்றொரு முக்கியமான கட்டத்தில் நம்மைத் தொடர்ந்து ஏமாற்றிவரப் புலிகளுக்கு மாற்றானவொரு சக்திகளை முன்னிறுத்திப் புலிகளின் இருப்பை மேலும் நிலைப்படுத்தித் தமது ஆர்வங்களை,பொருளாதாரப் பிராந்திய நலன்களைக் காத்துவருகிறார்கள். இத்தகைய நலன்களுக்குத் துணைபோகும் புலத்துப்புலிகளும்"புரட்சி"க் குழுக்களும் நம்மை இன்னும் ஏமாற்றுவதற்கான அரசியல் சூழ்ச்சிகளோடு புலிகளைக் குறைகூறியபடியே அவர்களின் எஜமானகளுக்கிசைவாகச் செயற்பட்டு வருகிறார்கள்.இவர்களே புதிய திரட்சியை வலியுறுத்துவதில் தமது பழைய பெறுமானங்களைப் புதிப்பிக்கின்றனர்.இந்தப் பெறுமானத்தின் அறுவடை தமிழ்ச் சமுதாயத்தின் முதுகெலும்பையே முறித்துவிட்டுள்ளதைக் கிஞ்சித்தும் சிந்திக்கமறுத்துப் புதிய பாணியில் அதே தொடர்ச்சியை வற்புறுத்துவது எதனால்?

இது குறித்துப் பேசுவது அவசியம்.

தொடரும்

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.07.2010

Sunday, June 27, 2010

குழுவாதம் தரும் புதிய நெருக்கடிகள்

கட்டுரைத்தொடர் (2):
புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம்,அந்நியச் சேவை:"அறிவாளிகள்!"

குழுவாதம் தரும் புதிய நெருக்கடிகள்:


ற்போது நிகழும் அணிச்சேர்க்கைகளை உற்று நோக்குபவர்களது புரிதலில் பல உண்மைகள்"தமிழீழப் போராட்டம்"குறித்தும்,தமிழ் மக்களது அரசியல் எதிர்காலம் குறித்தும் ஓரளவு இனங்காணத்தக்க அரசியல் புரிதல்கள் சாத்தியமாகிறது.இன்று,மக்களைப் பல கூறுகளாக இனங்கண்ட புலிவழிக் கருத்தியல் தன்னளவில் இலங்கையில் உடைவு காணுந்தறுவாயில் புலத்தில் பிழைப்புக்கான இருப்பாக இது நிலைப்படுத்த முனையும் அரசியலை இந்த அணிச் சேர்க்கை வற்புறுத்துகிறது.

புலம்பெயர் தமிழர்கள் தமது அடையாளங்களை இதுவரை புலிவழிப் போருக்குள் இனங்காண முனைந்தபோது,புலிகளால் கட்டியமைக்கப்பட்ட போலிக் கோசமான தமிழீழம் அவர்களை வலுவாகப் புலிகளோடும்"தமிழீழ"த்தோடும் பிணைத்துக்கொண்டது ஒரு தற்செயல் நிகழ்வாகும்.இலங்கையைவிட்டு வெளியேறிய தமிழர்கள் யுத்தம்-கொலை அரசியலிலிருந்து தப்பவே முயன்றுகொண்டனர்.இதுள்,அந்நியத் தேசங்களது அகதிகளுக்கான நெருக்குவாரங்கள் சந்தர்ப்ப வாதமாகத் "தேசம்-தேசியம்" எனும் கருத்து நிலைகளுக்கு முக்கியமளிக்கும் அக நெருக்கடிளைத் தமிழ்பேசும் புலம்பெயர் மக்களுக்கு ஏற்படுத்தியபோது அதைப் பலமாகப் பயன்படுத்தியவர்கள் பிழைப்புவாதப் புலிப் பினாமிகளும் அவர்களது பின்னாலிருந்த மேற்குலக-இந்திய எஜமானர்களுமே.

இலங்கையில் தமது அடையாளங்களைத் தேடும்புலம்பெயர் இளைய அகதிகள்தமது பெற்றோர்களது புரிதலிலிருந்து மேல் நோக்கிய புரிதலை மேற்குலகக் கருத்தியற் படிமத்திலிருந்தே பெறுகிறார்கள்.வளர்ச்சியடைந்த சமுதாயங்களது கருத்தியற் படிமத்தில் வந்தமர்ந்த "தமிழீழம்"மேலும் வலுவான அக நெருக்கடியை இளைய தலைமுறைக்கு வழங்கும் பல சந்தர்ப்பங்களை அவர்கள் தமது புற அடையாளங்களை வெள்ளையினத்தவர்கள் எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தில் தமது வேர்கள்"தமிழீழத்தில்"பதியமிடத்தான் முடியுமென எதிர்பார்த்தார்கள்.ஆனால்,அந்தத்"தமிழீழம்"சாத்தியமானதா என்ற ஒரு கேள்வியை அவர்கள் புலி வழியிலேயே புரிந்து கொண்டனர்.

இவர்களை நோக்கியதான இன்றைய அணிச்சேர்க்கைகள்-கட்சி கட்டும் இயக்கவாதக் குறுகல் பார்வைகள் எடுத்தாளும் அரசியலை அம்பலப்படுத்தப்படவேண்டும்! இக்கட்டுரையது உள்ளடக்கம் இந்த நோக்கு நிலையிலிருந்தே எடுத்தாளப்படுகிறது,நிலத்தில் வாழும்மக்கள் இதுவரையான அனைத்துக் கொலைகளுக்கும்,அழிவுகளுக்கும் முகங்கொடுத்தவர்கள்.அவர்களது தலைமுறைசார்ந்த அரசியல் தலைமைகள் இதுவரையான அனைத்துக் கொலைகளிலும் ,அழிவுகளிலும் தமது கரங்களை ஏதோவொரு வகையில் திணித்திருக்கின்றார்கள். இவர்களே,இன்று தமது இருப்பினது தெரிவாகப் புலம்பெயர்ந்த மக்களது குழந்தைகளையும்,அவர்தம் அறிவையும் மேற்குலகத் தேசங்களுக்கேற்ற வகையில் தகவமைக்கின்றனர்.இது,ஆபத்தானது!மீளவும்,தமிழீழஞ் சொல்லி இளைய தலைமுறையின்அக வளர்ச்சியை குறுந்தேசிய இனவாதப் பண்புக்கொப்ப மாற்ற முனையும்.இது,புரட்சிகரமாக சமூகத்தைப் புரிவதற்குக் குறுக்கில் நிற்கும் கருத்தியற்றடையை மேலும் இருப்புகுட்படுத்தும்.இத்தகையவொரு சூழல் வலுத்திருந்தபோதுதாம் புலிகளது பாசிசக்கட்டமைப்பு இலங்கையிலும்,புலத்திலும் தொடர்ந்து நீடித்தது.அதைத் தக்கவைக்க முனையும் இன்றைய அணிச் சேர்கைகளது"புரட்சிகர"வாதங்களும்,தெரிவுகளும் இத்தகைய புலவழிக் கட்டமைப்பைத் தொடர்ந்து தமக்குள் உள்வாங்கிப் புலிகளது அதே பாணித் "தமிழீழம்"சார்ந்த பிரமைகளது அரசியல் பிரகடனங்களது வழியில், மேற்குலகத்தின் இலங்கைக்கான அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முனைகின்றன.

வரலாற்றுப் பேரிடி:

புலிகளின் தோல்வி-புலிகளின் அழிவுதரும் வலி, ஈழக் கோசத்தின் பொருள்வயப்பட்ட தோல்வியாகவும் கருத்தியல் தளத்திலான தகர்வாகவும் தமிழ்ச் சமுதாயத்தின் உட்புறத்தே பாரிய வெறுப்பாகவும் நிலவிக்கொண்டிருக்கிறது.இந்த வலிமிக்க வரலாற்றுப் பாத்திரத்தில் புலிகள் இல்லாத இன்றைய சூழலில், இன்னும் எத்தனை குழுக்கள்-கட்சிகள்,இயக்கங்கள் "புரட்சி-விடுதலை,சுயநிர்ணயவுரிமை" எனும்பெயர்களால் தமிழ்பேசும் மக்களைக்குட்டியபடி,அந்நிய ஆளும் வர்க்கங்களுக்கு முண்டுகொடுப்பார்களோ அவ்வளவு பேரும் இனிப் "புரட்சி" பேசுவார்கள். இவர்களை இனங்கண்டு அம்பலப்படுத்தாதுபோனால் தமிழ்பேசும் மக்களைச்சிங்கள-ஆசிய-மேற்குலக மூலதனத்துக்குத் தத்துக்கொடுத்து நிரந்தர அடிமைகளாக்குவதில் வெற்றி கண்டுவிடுவார்கள்.தமிழ்பேசும் மக்களுக்கு விடிவுவேண்டிச் சிந்திப்பவர்கள் இவ்வகைப் போராட்டத்தைக் கருத்தியல் தளத்தில் எதிர்கொள்வது அவசியமான பணி.எனவே,திடீரென முளைவிடும் கூட்டுக்கள்-கழகங்கள்,பொது அமைப்புகளெனும் முகமூடிகளை விலத்தி அவர்தம் உண்மை முகங்களைக் கண்டடையவேண்டும்.

தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்தவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான ப+ர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை. ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் இன்று நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது.இதை மேலும் தொடர்வதற்கான பல் முனைப் போராட்டம் தமிழ்மக்கள் பேரால் நடந்தேறுகிறது.

தமிழ்த் (வி)தேசிய "விடுதலை"ப் போராட்டத்தில் புலித் தலைமை வன்னியில் மக்களது குழந்தைகளைத் துடைத்து அள்ளிப் போருக்குள் திணித்துக் கொன்றதில் இன்றெவர் குற்றவுணர்வோடு இருக்கிறார்?

இது,வரலாற்றுப் பேரிடி அல்லவா?

இந்த அழிவுயுத்தம் செய்த வரலாற்றுத் தவறு ஒரு இனத்தையே அழித்து ஏப்பம் விட்டதல்லவா?

இதைக் குறித்துத் தேடுதலைச் செய்து நமது மக்களை சமூக நெருக்கடியிலிருந்து காப்பதற்கு முனையாத கபோதிகள் கட்சி கட்டுவதில் முனைப்புறும்போது,இந்தச் சொறி அரசியலை"புரட்சி"யின் பெயரால் ஆதரிப்பதென்பது அடி முட்டாள்த் தனமானது.இதைப் புரட்சி என்பவர்கள் மனிதசமுதாயத்தின் அசைவியக்கத்தையே புரியாது, அந்நியச் சதிகளுக்கு உடன்படும் பிழைப்பு வாதிகளென்பதில் எவரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.

அது,புகலிடச் சிந்தனை மையத்தின்"புதிய ஜனநாக மக்கள் முன்னணி"ஆகவிருந்தாலென்ன அன்றி மே 18 இயக்கமாக இருந்தாலுஞ்சரி அனைவரதும் தெரிவும் இதிலிருந்து மாறுபடவில்லை.

பம்மாத்துத் தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழருக்கான அரசியலைச் சொல்லியே கால் நூற்றாண்டாக எத்தனை ஆயிரம் தமிழர்களைப் பலிகொடுத்துள்ளது-எத்தனை ஆயிரம் தமிழர்களைத் துரோகி சொல்லிக் கொன்றிருக்கிறது?இது,வரலாற்று நெருக்கடி.ஒரு இனத்தின் வாழ்வோடு களமாடிய வலாற்றுக் குற்றம் இன்னும் குற்றமாகக்கூட புரிய வைக்கப்படவில்லை!அது,தேச நிர்மாணத்துக்கான-இனவொடுக்குமுறைக்கெதிரானவொரு போராட்டமாகவும்,அதுள் சில தவறுகள் நேர்ந்ததாகவும் கற்பிக்கப்படும் வரலாற்று மோசடிக்கு எதிராகப் புதிய புரிதல்கள் வாசிக்கப்பட வேண்டும்.

தொடரும் இயக்கவாத மாயையின்வழி அந்நியச் சேவை:

படுகொலை அரசியலுக்குள் உந்தப்பட்ட இயக்கவாத மாயை குறித்து எவரும் மீளாய்வு செய்ய வக்கில்லை.எனினும், புலிகளது வரலாறு ஏதோவொரு முனையில் பாமரத்தனமாகச் சொல்லப்படுகிறது.அதுவும் வரலாற்றுக் குறிப்பெனப் பதியப்படும் அபத்தம்வேறு.இந்த நிலையிற்றாம் நாம் இன்றைய திடீர் புரட்சிகரர்களை மதிப்பீடு செய்ய முனைகிறோம்.இது அவசியமான பணி.

புலிகள் செய்த மக்கள் விரோத அழிவுயுத்த அரசியல் அனைத்தையும் தேசியத்துக்குள்போட்டுத் திணித்து ஏப்பம்விட்டபடி-புலிகளை விமர்சித்தும்-ஆதரித்தும் தம்மைத் தொடர்ந்தும் "புரட்சிக்கரர்" என நியாப்படுத்திக்கொண்டு, இப்போது உலகத்தில் தமிழ் மக்களின்மனங்களோடு இயக்கவாத அரசியலை மீளக் கட்டுவதென்பது கடைந்தெடுத்த துரோகத்தனமானதாகும்.

இது,அரசியல் மோசடி!

எமது சமூகத்தின் உயிர்த்திருப்பே மாற்று இனத்திடம் அல்லது மாற்றார் தயவில் பொருளாதார நலன்களைக் கனவுகண்டது.இது முற்றிலும் சுய விருத்திக்கான எல்லாவகையான கதவுகளையும் இறுக மூடிவிட்டு மாற்றாரில் தங்கி வாழும் ஒரு உதவாக்கரை,கையாலாகாத இனமாக நமது மக்களை மெல்ல உருவாக்கிய சிங்கள மற்றும் அந்நியச் சக்திகள் இன்று நமது மக்களைப் படு குழியில் தள்ளிவிட்டுப் புலியழிப்புக்குப்பின் புலிகளது உபக் கூறுகளைப் பயன்படுத்தும் இராஜதந்திரத்தில் நோர்வே முதல் பிரித்தானியவரை தனது வலையை விரிக்கிறது.அங்கே,புலிகளது தனிப்பேட்டை ரவுடிசத்துக்கு "தேசயவிடுதலை-சுயநிர்ணயவுரிமை"போராடமெனப் பரப்புரை செய்த சண்முகரெத்தினம் முதல் "புரட்சிகர"க் கட்சி கட்டும் மர்ம மனிதர்கள்வரை ஏதோவொரு வழியில் தத்தமக்கேற்ற திசைவழியில் அந்நியச் சக்திகளோடு இணக்கமுறுகிறார்கள்.

புலிகளது நிறுவனப்பட்ட பாசிச அடக்குமுறையினது தகர்வுக்குப் பின்பான அரசியலில், தமிழ் பேசும்மக்களோ உயிர் வாழ்வுக்கான தமது உறுதியானவொரு நிலைப்பாட்டைத் தம் வாழ்வியல் நம்பிக்கைகளுடாகச் சாதிக்கும் சமூக அபிலாசையாக விருத்தியாகும் (தமிழீழ)போராட்டத்துக்கு எதிரான எதிர்ப்பு உளவியல் தோன்றுவது இலங்கையின் இன்றைய குறை ஜனநாயகச் சூழலில்தவிர்க்கமுடியாதவொரு சமூக அசைவியக்கமாகும். இதைத் தடுத்து அவர்களை மீளத் தகவமைக்கும் குழுக்கள், தமது நம்பிக்கைக் குரிய திசைவழியில் புரட்சியோ அன்றித் "தேசிய விடுதலை"யோ பேசி மக்களை அடிமையாக்குவது அந்நிய நலனினது தெரிவின் அடிப்படையிலேயே நிகழ்கிறது.இன்றையபொழுதில்,நமது அரசியல் முன்னெடுப்புகளை நாமே தீர்மானிக்க முடியாதவகையில் அந்நிய ஆதிக்கங்களிடம் நமது அரசியல் திட்டமிடல்களையும் அது சார்ந்த விய+கங்களையும் பறி கொடுத்துவிட்ட இந்தப் பயங்கரமான குழுக்கள், தமது இருப்புக்கும்-அங்கீகரப்புக்கும் அந்நியச் சேவையைத் தொடர்வதே தெரிவாகக்கொண்டியங்குகின்றன.இதன் உச்சபட்ச விருத்தியாக முகிழ்க்கும் தொடர் சந்திப்புகள்-ஆய்வு வட்டம்,கற்கைப் பட்டறைகள் யாவும் ஏதோவொரு அந்நிய தேசத்தின் அனுசாரணையுடன் அதன் நலன்களுக்கமையத் தமிழ்பேசும் மக்களது உரிமையின்-விடுதலையின் பெயரால் நடந்தேறுகிறது.இங்கே,தம்மைப் பேராசிரியர்களாகவும்,புரட்சிகரர்களாகவும் இனங்காட்டிவரும் நபர்கள்-குழுக்கள் தமது எஜமானர்களிடம் தம்மை நிலைப்படுத்த அடிக்கும் குத்துக்கருணங்கள் கட்சி-அமைப்புள்,அரசுசாரா அமைப்பகளெனக் கட்டிடத் துடிப்பதில் முடிகிறது.

எமது மக்களின் வருங்காலத்தோடு விளையாடும் இந்த அந்நியச் சேவைக்கான "அதிகாரப் போட்டி அரசியலை",புலியினது அழிவு யுத்தத்துக்குப் பின்பான இன்றைய இலங்கைச்சூழலில் "எந்தச் சூழலிலும் மக்களால் அங்கீரிக்கக்கூடியவொரு மக்கள் கூட்டமாகவே நமது மக்களது வாழ்நிலையிருப்பது இத்தகைய குழுக்களுக்கு நல்ல தருணமாகவும்-சகுனமாகவும் இருக்கிறது.இதை நழுவவிட அவர்கள் விரும்பவே இல்லை.எனவே,திடீர் சந்திப்புக்கள் தேசங்கடந்து,கண்டங்கடந்து நடந்தேறிகிறது.அங்கே,"பேராசிரியர்கள் முதல் புரட்சிக்காரர்கள்"வரை கூடுகிறார்கள்.இவர்களுக்குள் இடம் பெறுகின்ற மோதல்கள் தமிழ் மக்களது பிரச்சனைகளைச் சொல்லியே நடாத்தப்படுகிறது.அதுவே,இவர்களது எஜமானர்களது இன்றைய வியூகம்.இதன் பயனாக மக்களது பிரச்சனைகளை இவர்களே கையிலெடுத்துத் தாம் அணிதிரள்வதாலும்-கட்சிகட்டுவதாலும் மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்டிட முடியுமென உரைப்பதில் மக்களைக் கையாலாகாத கூட்டமாக மறுமுனையில் உரைத்தும் விடுகிறார்கள்!

இஃது, முற்று முழுதாக இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களையும் அவர்களது உரிமைகளையும் சொல்லி அணிதிரளும் அந்நியக் கைக்கூலிகளது காலமாக இன்றைய பின் போராட்டச் சூழல் நிலவுகிறது. கடந்த முப்பதாண்டுகளாகப் புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள். இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள்புதைகுழிக்குள் மக்கிய எலும்புகளோடு தமது உறவுகளுக்கு வலியைக் கொடுக்கும்போது,எஞ்சியிருக்கும் மக்களோ தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில் கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் மேற்குலக அரசுகள்,இந்திய-சீன அரசுகள் மிக உயர்ந்த அறிவார்ந்த முறையில் அரசியல் செய்கின்றன. இது,கணிசமான தமிழ் மக்களிடம் ஏற்புடைய உளவியலைப் பலத்தகாரமாகத் திணித்து, உருவாக்கி வருகிறது.இந்தத் தருணத்தில் இதை மக்களது பெயரால் நியாயப்படுத்துவதற்குக் கட்சிகள்,குழுக்களெனப் பன்னூறு வடிவங்களில்"புரட்சி-விடுதலை"குறித்து மீளவும் அறைகூவலிடப்படுகிறது.இது,ஒரு கெடுதியான காலம்தாம்.

தகர்க்கப்பட வேண்டிய இயக்கவாதம்:

இனவொடுக்குமுறைக்கெதிரான தேசிய விடுதலைப் போரை பிற்போக்கான வகையில் முன்னெடுத்த இயக்கவாத மாயை தகர்ந்து தவிடுபொடியாகும் தருணம் புலிகளது அழிவோடு சாத்தியமானது. எனினும்,புலிகளது வெற்றிடத்தைக் குறித்துக்கொண்டிருந்த அந்நிய மூலதனம் தனது தேவைக்கேற்ற குழுக்களை அதன் இடத்தில் இருத்துவதே அதன் முதற்பணியாக இப்போதிருப்பதென்பது உண்மையானது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிப் புறச் சக்திகள் மெல்லத் தமது நலன்களை மையப்படுத்திய அரசியற் கருத்தரங்கங்களையும்,அதுசார்ந்த பொருளாதார ஒத்துழைப்புகளையும் குறித்து வகுப்பெடுக்கச் சந்திப்புகளைச் செய்கிறது.இந்தத் திடீர் அரசியற் கருத்தரங்கங்கள்-பட்டறைகள் யாவும் தமிழ்பேசும் மக்களது உயிரைக்குடித்த இயக்கங்களது முன்னாள்-இன்னாள் உறுப்பினர்கள்-அரசியல் ஆலோசகர்களை வைத்தே நடைபெறுவதைக்கவனித்தால் இதன் உள்ளடக்கம் புரியத் தக்கது.

இந்தச் சந்தர்ப்பத்தில்மேலுஞ் சிலதைச் சொல்வது பொருத்தம்.அதாவது, இலங்கை அனைத்து இனமக்களின் மொத்த எண்ணவோட்டமானது ஒருகிணைந்த இலங்கைத் தேசத்துக்கு-அதன் பொருளாதார நகர்வுக்கு விசுவாசமாக இருப்பதற்குச் சாத்தியமிருக்கிறது.

தொடர் துன்பங்கள்,பசி,பட்டுணி,சாவு,பொருளிழப்பு,வாழ்விடங்களைவிட்டு ஒதுங்குதல்,அகதி வாழ்வு,இத்தகைய சமூகச் சீர் குலைவு மக்களிடத்தில் ஆத்மீகப் பலவீனத்தையும்,அது சார்ந்த மதிப்பீடுகளையும் வேறொரு பாணியில்(உயிர் வாழ்வதே சாத்தியமில்லாத தேசத்தில் அதைச் சாத்தியப் படுதும் அவா)உருவாக்கும். இந்தத் தெரிவானது ஆசிய மூலதனத்துக்கான வெற்றியாக இருப்பதால் இதையுடைத்து ஆசிய மூலதனத்துக்கான நெருக்கடிகளை தமிழ் மக்களது விடுதலையின் பெயரால்கொடுப்பதற்குத் தயாராகும் இன்னொரு இயக்கவாத போராட்டமுறைச் சுற்று களத்துக்கு வருவதில் பல நலன்களது தெரிவு இயக்கமுறுகிறது.இந்தவொரு நோக்குள் அமையப்பெற்ற பற்பல அரசியல் சூழ்ச்சிகள் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் திசை திருப்பி இலங்கையினது சுய வளர்ச்சியை மட்டுப்படுத்தித் தமது நோக்கங்களுக்கான தொங்கு நிலைத் தேசமாக்குவதில் அதிக அக்கறையுடைய தேசம் இப்போது நோர்வே என்பது தெரியவருகிறது.

அண்மைக் கிழக்கு நாடுகளில் அமெரிக்காவுக்கான இராணுவ அடியாள் இஸ்ரேல் என்பதுபோல ஐரோப்பாவில் நோர்வே அமெரிக்காவினது அரசியல் அடியாள்.இதன்வழி ஆசியாவில் இழந்த தனது வல்லமையைத் தக்கவைக்க நோர்வேயூடாக இலங்கையில் பற்பல நெருக்கடிகளை புதிய குழுக்களின்வழி நோர்வே ஏற்படுத்தும் தெரிவாகவே இந்தப் புதிய கட்சிகள்-குழுக்கள் அணியுறுவதும் புரட்சி பேசுவதும் சாத்தியமாகிறது.

இன்றைய தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளது வியாபாரப் போட்டியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களே நாளையச் சந்தையைத் தீர்மானிக்கும் வலுவுடையவை. கணிசமான பொருளுற்பத்தியானது, இன்று மேற்குலகை விட்டு வெளியேறி மூன்றாம் மண்டல நாடுகளின் கனிவளத்தையும்- குறைய+தியத்தையும் நீண்ட வேலை நேரத்தையும் குறி வைத்து இலங்கைபோன்ற நாடுகளுக்கு மாறி விட்டன. இத்தகைய நாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களை கடற்போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கும்போது மட்டுமே சந்தையில் ஆதிக்கம் பெறும்"மார்க்" வெற்றியோடு இலாபத்தைக் குவிக்கும். இங்கே, இந்த அரசியல் மிகவும் அவசியமான தேவையாகப் பல் தேசியக் கம்பனிகளுக்கு இருக்கிறது. இதற்கான காரணம் வளர்ந்துவரும் சீனாவினதும்,இந்தியாவினதும் பாரிய உற்பத்தி ஊக்கத்திலிருந்து பரவலாக அறியப்பட்ட அவர்களது அதிவேகத் தயாரிப்புகளால் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.இதன் பாரிய நெருக்கடியே இன்றைய தமிழ்பேசும் இலங்கை மக்களது அரசியல் நெருக்கடியாக மாற்றப்படுகிறது.இதைக் குறித்து அந்நியத் தேசங்களுக்குக் கூஜாத் தூக்க முந்தும் அவசரமே கட்சிகள் கட்டுவதன் அவசரத்தில் பற்பல புரட்சிக்காரர்களை பற்பல முறைமைகளில் கட்சிகட்டும் நியாயத்தை முன்வைத்து இயங்கக் கோருகிறது.

புலிகளது அழிவுக்குப் பின்பான இன்றைய சூழலில்,அந்நிய மூலதனத்துக்கு எதிரானதும் இலங்கையின் அந்நிய எடுபிடி ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதுமான இன்றைய இலங்கையின் உழைப்புப் பிரிவினையானது அந்த நாட்டில் தொழிலாள வர்க்க ஒருங்கிணைவுக்கும் அது சார்ந்த எழிச்சிக்குமான சூழலைக் கொண்டிருப்பதாலும் இந்தச் சூழலை உடைப்பதும் இந்திய-சீன,அமெரிக்க-ஐரோப்பிய ஆர்வமாகவும் இருக்கிறது.இதன் தொன்மையான புரிதலில்"புரட்சிகர"கட்சியென்ற வடிவத்தில் எதிர்புரட்சிகரக் குழுக்களை உருவாக்கும் அந்நிய சக்திகள் அக் குழுக்களை உண்மையில் தமது எதிரிகளாக இயங்கவே அனுமதிக்கிறார்கள்.இதனால்,இவர்கள் சாரம்சத்தில் அந்நியச் சக்திகளை எதிர்ப்பதையும்,மக்களில் பெரும் பகுதியை மயக்கி அவர்களது எதிர்ப்பு அரசியலையே காலத்துக்கு முந்திக் கட்சிகட்டி எதிரிக்கு ஆட்காட்டிச் சிதைப்பதில் சாத்தியமான சமூக அசைவியக்கம் முகிழ்கிறது.இது செயற்கையான -புரட்சிகர நிலவரத்தை-புரட்சிகரச் சூழலை ஒரு சமூகத்துக்குள் உருவாக அனுமதித்து இயங்கிறது.அரை இராணுவத் தன்மையிலான காட்டுமிராண்டிப் பாசிசக் குணம்சமுடைய அரச வடிவத்தை மூன்றாம் மண்டல நாடுகளில் இருத்திவைக்க விரும்பும் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அரசியல் தந்திரோபாயத்தை இப்போது தமிழர்களைப் பயன்படுத்தி இலங்கையில் மீளத் தகவமைக்கும்இயக்ம்- கட்சிகட்டும் அரசியல் பிரவேசத்தில் இனங்காண முடியும்.இது,இலங்கைச் சிறுபான்மை இனங்களது விடுதலைக்கு எதிரானதும்,அவர்களது உரிமைகளைப் பெறுவதற்கான தடைக் கற்களாகவுமே இருக்கும்.


தொடரும்

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.06.10

Friday, June 25, 2010

தனிநபர்கள் அணியுறும் தருணங்கள்...

புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம்,அந்நியச் சேவை:"அறிவாளிகள்!"


கட்டுரைத்தொடர்: (1)


தனிநபர்கள் அணியுறும் தருணங்கள்:

லங்கையில் இனங்களுக்கிடையிலான மூலதன வளர்ச்சியானது பெரும்பாலும் ஒரு பெரும் வரலாற்று அழிவை இலங்கையின் அனைத்து இனங்களுக்குள்ளும் ஏற்படுத்தி மேலும் தகவமைக்கும் அரசியல் நெருக்கடிகள், மெல்ல உயர்த்தும் முரண்பாடுகள் , இலங்கையின் அனைத்து இனங்களுக்குள்ளும் குரோதத்தை வளர்த்து இரத்தங்குடிக்கக் காத்திருக்கிறது.இதை ஊக்குவிக்கப் பல தளங்களில் உசாராகும் அந்நிய நலன்கள், இலங்கை மக்களது ஜனநாயக விழுமியங்களைக் காலிற்போட்டுமிதிக்கும் சர்வதேசச் சதிகளை இனங்களுக்குள் இருக்கும் கட்சிகள்-குழுக்களைப் பயன்படுத்திச் செல்லும் அரசியல் திசைவழியானது புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு வகையான நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

அஃது, இது காலவரையான அனைத்து அரசியல் நடாத்தைகளையும் புலம்பெயர் தமிழ்ச் சமுதாயம் முன்னெடுத்த பெரும்பகுதி ஆதரவுக்கான புலிகளது அரசியல் கூச்சல்"தமிழீழத்தை"க் கனவுக்குட்படுத்தியபோது,அதை நோக்கிய எதிர்பார்ப்பு பொருட் செலவில் மையங்கொண்டிருக்க இப்போது, அதன் தொடர் நிகழ்வுகள் அதே"தமிழீழத்தை" ஏலம் போட்டுப் "புரட்சி-கட்சி"என அந்நியத் தெரிவுகளில் இருப்புக்கான போராக விரிகிறது.இது குறித்த சரியான புரிதலின்றி "பேராசிரியர்" சண்முகரெத்தினம்,மற்றும் "புகலிடச் சிந்தனை" மையத்தின் தொடரான புதிய புரட்டுக் குறித்துவொரு தெளிவான நோக்கு நிலைகளை நாம் பெறவே முடியாது.சம்பந்தப்பட்ட நபர்கள்-குழுக்களுக்கான அந்நியத் தெரிவுகள்"விடுதலை-புரட்சி"எனத் தொடராகப் புனையும் கருத்தியல் யுத்தத்தில் மக்களது அடிமை வாழ்வு மேலும் இருப்புக் குள்ளாகிறது.

இதுவரை, இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களது எந்த வாழ்வியற்றேவைகளையும் நிறைவு செய்ய முடியாத தமிழ் அதிகார மையங்கள் அம் மக்களது உயிர்வாழ்வைக் குறித்துப் புதிய புனைவுகளது தெரிவில் பேசுகிறார்கள்.இவர்களது சுய தெரிவு அவ் மக்களது எதிர்ப்புக் கூறுகளைத் தமது வரும்படிக்கான-பதவிக்கான உந்துதலாகக் கனவு காண்கிறது.

இது குறித்து நாம் நிறையக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும்.


பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடித்திருக்கிறார்கள்.புலிகள் அழிந்த கையோடு அவர்களது உப பிரிவுகள் தனித்தியங்க அனுமதிக்கப்பட்டு,புலிகளது தொடர் இருப்புக்கான பல் முனை நகர்வுகள் ஒழுங்கு படுத்தப்படுகிறது.அந்நிய சக்திகளிடம் கட்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு,தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது .இது,புதிய இலங்கையின் புரட்சிக்கு எதிரான கூறுகளைக் கொண்டியங்குகிறதென்பதை நாம் மறுக்க முடியாது.இதன், மறு விளைவாகத் தமிழ்க் குறுந்தேசியவாதம் தமிழ் மக்களை வேட்டையாடும் சூழல் நிரந்தரமாகப்படுகிறது. புலிகள் அழிந்தாலும் அவர்களது எச்சங்கள் பல வடிவங்களில் புதிய மாதிரிகளை உருவாக்கிக் கட்சி-அமைப்பாகுதலெனக் குமுறுகின்றனர். இவர்களில் பற்பல குள்ள நரிகள் "பேராசிரியர்களாகவும்-போராசிரியர்களாகவும்" ஏலவே அறியப்பட்ட தமது பிம்பங்களுக்கு நடுவே கோலமிடும் அரசியல் நகர்வானது, எமது மக்களுக்கு மேலும் அரசியல் நெரிக்கடிகளைச் செய்யக் கூடியவை.இந்தப் புள்ளியை இலக்குப் படுத்தும் இக் கூட்டம் பரந்துபட்ட மக்களது எதிரிகளாக இனங்காணப்படவேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.இது தொடராக என்னால் வலயுறுத்தப்படும் வெகுஜனக் கருத்தின் தெரிவாகவே இருக்கிறதென நம்பிக் கொள்வதில் எந்தக் குறைபாடும் இருக்க முடியாது.

மக்கள்:

ஒருகட்டத்தில் மக்கள் இனங்களாகவும்-மொழிவாரியாகவும்,மதவாரியாகவும் பொருளாதார ஆர்வங்களுக்காகக் கூறுபடும்போது, அத்தகைய முகமூடிகளுக்குள் ஒளிந்துள்ள மேட்டுக்குடிகள்(ஓடுக்குபவர்கள்) தமக்குள் நடந்தேறும் அதிகாரத்துக்கான பங்குச் சண்டையில், இனத்தை,மதத்தை,மொழியை முதன்மைப்படுத்திப் போராட்டத்துக்குப் போராளிகளை அப்பாவி மக்களிடமிருந்து தட்டிப் பறித்தெடுக்கின்றார்கள். இதன் தர்க்கால நடாத்தையைப் புலிகளது போராட்டத்தில் குழந்தைகளைப் பறிகொடுத்த குடும்பங்கள் மிக நன்றாகவே அறியும்-புலம் பெயர்ந்த தமிழர்களை மேலும் இது குறித்துச் சிந்திப்பாயாகவென எவரும் வற்புறுத்த அவசியமில்லை.தற்போதைய கட்சிகட்டும் கிறுக்குப் புத்திக்கு ஒப்பாரி வைக்க தெரியுமளவுக்கு உலக அரசியல் வியூகம் தெரிந்திருக்கவில்லை! அதைத் தெரியவேண்டுமென எவரும் வற்புறுத்தத் தேவையில்லை.ஏனெனில்,"ஏன்-எதற்கு"என்ற கேள்விகளைக் கேட்காது தலைமை வழிபாட்டில் புலியைப் பீடத்தில் ஏற்றிய தமிழ் மனதுக்கு எல்லாஞ் சரிதாம்."ஆரு குத்தியும் அரிசி ஆனால் சரிதாம்"என்ற மிகக் கெடுதியான சுய நலப் புத்திக்கு இன்றைய அரசியலையும் அதுசார்ந்து இயங்கும் தமிழ் கபடவாதிகளையும் அறிய முடியாதுதாம்.இந்த நிலையில் அன்றைய சரித்திரம் மீள முடிகிறது...

இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம்.அன்று, ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும்,இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள் இன்று!. இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு புலம்பெயர் "புரட்சி"க் குழுக்கள் தமது இருப்புக்காக-அந்நியத் தொழுகைக்காக நம்மை ஏமாற்றச் சமர்ப்பிக்கும் கட்சி-அமைப்பாகும் ஆலோசனைகள் அதுசார்ந்த அலகுகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம். இதைப் பேதமையான புரிதல் "புரட்சியின்"இடி முழக்கமாக இனங்கண்டால் அது,புலித் தலைமைக்குக் கட்டிய ஒளிவட்டத்தின் தொடர்ச்சியாகவே வரலாற்றில் பதியப்படும்.


கட்சி கட்டும் அவசரம்:

இன்று இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான "கட்சி"கட்டுவதற்கான ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு,தம்மைத் தலைவர்களாக்கும் வியூகத்தைக் கொண்டிருக்கிறது.பிணம் தின்னிகளான இந்த மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, தம்மைக் குழப்பியெடுக்கிறார்கள்.நமது மக்களது உரிமைசார் கோரிக்கைகளைக் குலைக்க முனையும் சக்திகள், எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைக்காக்கும் ஒரு ஐக்கிய இலங்கைப் புரட்சிகர அரசால் பாதுகாக்கப்படுவதை நமது எதிரிகள் எவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில்,இலங்கையில் இனங்களுக்குள்பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி ,நமது இறைமையைச் சிதைப்பதில்இலங்கை மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள். இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது மக்கள் பயன்படுத்தி,அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.

ஐக்கிய இலங்கை, புரட்சிகரமாக மாற்றப்பட்டு மக்களுக்கான அரசு-கட்சி ,அதிகாரத்துக்கு வருவதற்கான தொடர் நிகழ்வுகள் இலங்கைப் பொருளாதார நகர்வுகளோடு தன்னை இணைப்பதென்பது இந்திய-சீன மற்றும் மேற்குலக அரசுகளுக்குக் காவடி தூக்குவதென்ற அர்த்தமாக முடியாது!இது வழமையான பூர்ச்சுவா அரசு குறித்த புரிதலை விட்டகன்று , புதிய தெரிவுகளின்வழி இன்றைய பொருளாதாரவியக்கத்தில் அரசுக்கும் மக்களுக்குமான பங்கு என்னவென்ற புரிதலின்வழி ,அவ்வரசைத் தூக்கியெறியும் மக்களது தர்க்காலிகச் சமூகவியக்கம் தன்னையொரு மக்கள்சார் அலகாகக் கண்டு,அரசுக்குரிய பண்பை கருத்தளவில் வைத்து முன்னெடுக்கப்படவேண்டும்.இதுவே, இன்றைய பூர்ச்சுவாக் கட்சிகள்-அரசுகளுக்கான மாற்றாக மக்கள் தமது உரிமைகளைக் கையிலெடுப்பதென்பதன் நோக்காகும்.இந்த நோக்கே புரட்சகரகட்சியின் தெரிவில் ஒருகட்டத்தின் முன் நிபந்தனையாகும்.இது,முழுக்க-முற்றாக, மக்களது சுய ஆளுமையில், அவர்களது மண்ணிலிருந்தே எழ முடியும்.இதைப் புலம் பெயர் மண்ணில் பெயர்த்தெடுக்க விரும்புபவர்கள் அன்றைய இந்திய மண்ணிலிருந்து இயக்கங்கட்டிப் போரிட்டவர்களது கால் அடிகளை மறந்துவிட முடியுமா?

ஆழ்ந்து யோசித்தால்,இவர்களின் வரலாறு நமக்கு எதிரானதாகவே இருக்கிறது!தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.இத்தகைய வரலாற்றுத் தொடர்ச்சி இன்னொரு முனையில் புரட்சிகர வேடம் பூணும்போது, அதையும் மக்கள் நலனினது தெரிவில்"புரட்சிகரக் கட்சி"யாக எவரும் குறித்துரைக்கலாம். எனினும்,அது கெடுதியான முகவுரை எழுதும்போது புலிகளது அழிவுக்குக் கூறிய காரணத்தால் மீள நம்மைத் தேற்றியுங் கொள்ளலாம்.

இலங்கையில் கட்சி-இயக்க அரசியலானது இலங்கையைத் தத்தமது பொருளாதார மற்றும் பூகோள அரசியல் வியூகங்களுக்கமைய வழி நடாத்த முனையும் அந்நியச் சக்திகளால் ஊக்கப்படுத்தப்பட்டு,ஒருவகைக் கோணங்கித்தனமான அரசியலாகவே நகர்கிறது.


தொடரும்.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
25.06.2010

Sunday, June 20, 2010

கட்சிகட்டும் அவலத்தின் மீதான கண்ணோட்டம்.

"கட்சி" கட்டும் அவலத்தின் மீதான கண்ணோட்டம்.

க்களின் எதிரிகள் யார்,நண்பர்கள் யார்? என்ற கேள்விக்கு நாம் நமது கடந்தகால இயக்கங்களது தோற்றுவாயையும்,அவ்வியக்கங்களது போராட்ட செல் நெறியையும் பகுத்தாரயவேண்டும். அவர்களது அந்நியவுறவுகள் மற்றும் அவர்களது,அரசியல் பாதையும் அவசியமான இருவுண்மைகளை நமக்குள் இன்னும் பகர்பவை.

ஒன்று:இன்றும் அந்நியச் சேவைக்காக விலைபோகின்றவர்கள் கடந்தகால இயக்க எச்சங்கள்.

இரண்டு:அதை அடைவதற்காக ப்"புரட்சி-விடுதலை"பேசி மக்களைக் இனியும் கொல்வார்கள்.
- என்பதே அவ்விருவுண்மையும்!

இலங்கையையும்,அந்தத் தேசத்து மக்களையும் அடிமைப்படுத்தித் தமது புவிகோள அரசியலை முன்னெடுக்க விரும்பும் ஆதிக்க சக்திகளோ இன்றைய சூழலைப் பயன்படுத்தி, புரட்சிகரமான அமைப்பைக் காட்டிக் கொடுக்கும் ஒட்டுண்ணிகளைப் புரட்சிகர வாதிகளாக்கி , ஒடுக்கப்படும்இலங்கை மக்களைக் காவு கொள்கிறது.இங்கே,புலம் பெயர்ந்து, நாம் வாழும் மேற்குலகத் தேசங்களில், யாரு உண்மையாகப் பேசுகிறார்கள் என்பதே புரியாதிருக்கும்போது-எவரோடிணைந்து காரியமாற்றுவது,தோழமையைப் பெறுவது?

சமூகத்தின் பெரும்பகுதி மக்களது விடுதலையில் தங்கி இயங்காத எந்த மனிதரும் தனது அரசியற்செயலூக்கத்துக்கு தன்னையறியாமலே ஒரு எல்லையை வைத்திருப்பார்.அந்த எல்லை உணரப்படும்போது இதுகால வரையான அனைத்துப் பரிமாணங்களும் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறது.இத்தகைய சூழலில் அவநம்பிக்கையும்,இயலாமையும் புலம் பெயர் சமூகத்தின் பொது எண்ணவோட்டமாக நிலைகொண்டு, தம்மை அந்நியச் சக்திகள் காவுகொள்ள இடமளிக்கிறது.

இன்றைய புலம் பெயர் தமிழ்ச்சமுதாயத்தின் அரசியலானது சமூகத்தை வழி நடத்தும் புரட்சியின் முன் நிபந்தனைகளை வெறும் மொழிவுகளாக்கி வீம்பாக வெளிப்படுத்துகிறது,அந்நியச் சேவையில் பண வரும்படிகண்ட தனி நபர் முனைப்போ சகல முனைகளிலும் தனது நியாயப்பாடுகளைச் சட்டதிட்டங்களை உள்வாங்கவேண்டு மென்றும்- தம்மோடு இணையாதவர்கள்"எதிர்ப்புரட்சி"காரர்களெனவும் முன்வைத்துத் தமது அந்நியச் சேவையைப் புரட்சிகர முலாத்துடன் "வற்புறுத்தி ஏற்கவைக்க" முனைவது மிகவும் வருந்தத் தக்கது.

வர்க்க உணர்வானது வெறும் கருத்தாடல்களால் நிர்மாணிக்க முடியாதது என்பதை மற்றவர்களும் அறிவார்கள் என்பதை இக் கள்வர்கள் அறிவதற்கில்லை.

சமூக வாழ் நிலையால் தீர்மானிக்கப்பட்டு, உற்பத்திச் சக்திகளின் உறவோடு அது உணர்வுபூர்வமாக உள்வாங்கப்படுகிறது.இத்தகைய உறவினால் தீர்மானிக்கப்படும் வர்க்கவுணர்வானது குறைவிருத்திச் சமூகத்தில் ஒரு மொன்னைத் தனமான இரண்டுங்கெட்டான் உணர்வாக நிலை கொள்கிறது.வளர்ச்சியுற்ற தொழில் வளமுடைய நாடுகளில் வர்க்கவுணர்வானது காட்டமாக மழுங்கடிக்கப்பட்டு"காயடிக்கப்பட்ட"மனிதக் கூட்டாகத் தொழிலாள வர்க்கம் வாழ்வைக் கொண்டு செல்லும் இந்த மேற்குலகச் சூழலில் இவர்கள் கட்டமைக்கும் "கட்சி-புரட்சி "யாவும் அந்நியச் சேவை என்பது எல்லோரும் புரிந்து கொள்வது கடினம்தாம்.

எனவே,இவர்கள் முன்வைக்கும் தம்மைச் சுற்றிய நியாப்படுத்தல்கள்-அர்த்தமற்ற தனிநபர் வாதங்கள், சக மனிதரை அழித்துவிட முனையும் கருத்தாடல்கள் எதிர் புரட்சிகரமாக மாற்றமுற்று,எதிரியிடம் கைகாட்டும் செயலூக்கமாக விரிவடைகிறது. இந்தக் கற்பனாவாதக் கனவுகளை புரட்சியின் மதிப்பீடுகளால் வர்ணமுலாம் பூசும் அட்டகாசமான குறுங் கருத்தாடல்களாக மாற்றும் வெகுளித்தனமான இன்றைய கட்சிகட்டும் நியாயவாதம், மக்களை வெறும் வெகுளித்தனமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறது.இதற்குப் புரட்சிகரச்சூழல் குறித்து என்ன மதிப்பீடிருக்கிறது?

புலியழிப்புக்கு முன்னிலிருந்து இன்றுவரை தமிழ்ச்சமூகத்தின் இயலாமையானது அந்தச் சமூகத்தின் உழைப்பின்மீதான ஒடுக்குமுறையின் அதீத வன்முறையில் முகிழ்க்கிறது. இன்றுவரையான நமது புரிதல்களுக்கு நேரெதிராகக் காரியமாற்றும் இயக்கவாத மாயை-அந்நிய ஏவற் புத்தி,ஏவற்படை நோக்கம் இலங்கை மக்களது பாரம்பரியமான உழைப்பின் மீதான சக்தி வாய்ந்த உறுதிப்பாட்டை உடைத்தெறிந்துள்ளது.


உயிராதாரமிக்க உழைப்பைக் கேவலாமாக்கிவிட்டு,அதன் மையமான முரண்பாடுகளைத் தணிப்பதற்கான சாகசங்களில் தமிழருக்கான"விடுதலை-சுயநிர்ணயம்"எனக் கூவிக்கொண்டு உலகெங்கும் திரிகிறது பற்பல கும்பல்கள்.இவர்கள், திடீர் திடீரெனக் கட்டும் கட்சிகள் உருமாறிச் செல்ல முனையும் அந்நியத் தொழுகையின் மீட்சியாக நமது மக்களுக்கு விடுதலையென புலம்பெயர் தளங்களில் வகுப்பெடுக்கமுனையும் ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஏதோவொரு மறைமுகமான வருகையின் தெரிவு மெல்லவெழுகிறது.இதைக் குறித்து மிக அவதானமாகக் கணித்து வரவேண்டியுள்ளது.

மறுபுறமோ,தமிழ் பேசும் மக்களது விடுதலைகுறித்து இயங்கும் நவீனக் கருத்தாடல்கள் யாவும் மனிதவுரிமை,மனிதத் தன்மை,தனிநபர் சுயநிர்ணயம்,சுயதெரிவு என்ற தளத்தில் விவாதிக்கிறது.இதை ப்பல தளத்தில் பார்க்க முடியும்.குறிப்பாகச் சொல்வதானால்"லும்பினி" இது நோக்கிப் பயணிக்கிறது.

ஆனால்,
இந்தக் கருத்தாடல்களை வழிப்படுத்தும் மூலதன இயக்கமானது தனக்குகந்த வகையில் மனித மாதிரிகளைத் தெரிவு செய்வதில் இவற்றைச் சாதகமாக்கியபின்"பெரும் காதையாடல்களெனும்"மேற்குலக அகண்ட கருத்தாடற் பன்மைத்துவம் மனிதர்களின் விருப்பத்தின்மீதான தெரிவானதைத் தனித்துவமென்கிறது.என்றபோதும்,இத்தகைய விருப்புறுதிகளைத் தெரிவு செய்து,அதையே தனிநபரின் விருப்பாகத் தகவமைத்து வரும் இந்த அமைப்பின் கருத்தியல் பலமானது எங்கிருந்து தனித்துவத்தை முன்னெடுப்பதென்பதை எவரும் ஒருமித்த குரலில் தெளிவுப் படுத்துவதாகவில்லை.


மனித சமூகத்தின் கருத்தியில் பன்மைத்துவமானது சிந்தனையின் சுதந்திரத்தைக் கோரிக்கொண்டாலும்,அந்தச் சுதந்திரத்துக்கான எல்லைகளையும்,வரைமுறைகளையும் "அடிமட்டத்தின்" நலன்கள் வரையறுத்துப் புதிய தலைமுறையை உருவாக்கிவரும் ஆதிக்கமானது, எங்கே சிந்தனைச் சுதந்திரத்தை விட்டு வைத்திருக்கிறது? ஒவ்வொரு தனிநபரும் தனது தனித்துவமென்பதின் உள்ளடக்கம் இந்தவகைக் கருத்தியல் தளத்தை மேவிக் கொண்டு,அதன் நகலாகத்தாம் இருக்கிறது.இத்தகைய நகல்களைப் பெரும் கருத்தாடலென்று பின்னியெடுக்கும் சிந்தனை மட்டம் தமக்குள் முற்றுமுழுதானவொரு காலச் சிதைவை வற்புறுத்துகிறது!இதுதாம்,இன்றைய அந்நியச் சேவைக்கு அவசியமானது.இதன் தொடர்ச்சி கட்சி கட்டுவதில் வந்து நிற்கிறது.

எதேச்சையாக எதுவும் நடப்பதற்கில்லை.

எல்லாமே ஒழுங்கமைந்த முறைமைகளால் திட்டமிடப்பட்டு உறுதிப்படுத்திய இந்தவுலகத்தில்,

தனி நபர்களின் உதிரித்தனமான புரட்சிகரத் தன்னார்வக் கருத்தாடல்கள்-செயற்பாடுகளின் செயலூக்கமானது எதுவரை?

இவர்களுக்குப் பின்னால் கண்ணிகள் வைத்துள்ளவர்கள் எவர்கள்?

மக்களைத் தமது எஜமானர்களுக்காகக் காலாகாலத்துக்கு முட்டாளாக்கிப்" புரட்சி-விடுதலை"யெனத் தலையெடுக்கும் இந்தக் கோஷ்டிகள் யார்?

இவர்களுக்கும் இன்னல்படும் மக்களது சுயாதீனமான செயற்பாட்டுக்கும் என்ன தொடர்பு?

இது குறித்துக் கருத்தளவில் விவாதித்தலுக்கும் மேலாகத் தற்போதைய அரசியற் சூழலில் இத்தகைய கேடிகளை இனம் கண்டாக வேண்டும்.

அந்நியச் சக்திகளது ஏவலாக இயங்கும் தனி நபர்களின் உதிரித்தனமான "புரட்சிகரத் தன்னார்வ"க் கருத்தாடல்கள்-செயற்பாடுகளின் செயலூக்கமானது எதுவரை? இத்தகைய ஒரு சூழலையே விரும்பிச் செயற்படுத்தும் இந்த தமிழ்த்தேசிய "புலி-புரட்சிகர" ஆதிக்க உலகம்,தமிழ் மக்களது பிரச்சனைகளைச் சொல்லி ஒவ்வொரு திசையிலும் புரட்சிகரமான கருத்துக்களையும்,அதைத் தமது கோஷ்டிகளுக்குள் உள்வாங்கியும்,போராடும் மக்களுக்குள் கலந்து அவர்களது சுயாதீனமான போராட்ட முனைப்பை முளையிலேயே கிள்ளியெறிந்து வருகிறது.இத்தகைய செயற்பாட்டை மக்களது பெயரால்-விடுதலையால் நியாயப்படுத்தும் இத் திடீர் கட்சிகள்-குழுக்கள் தமது ஏவால் நாய் செயற்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்துப் பிழைக்க முனையும் செயலாகத் தமது எஜமானர்களிடம் தாம் வலுவாக மக்களைக் கட்டிவைத்திருப்பதாகச் சாட்சி பகரக் கட்சிகளைத் திடீர் திடீரெனக் கட்டுகிறது.அதை நியாயப்படுத்த நகைப்புக்கிடமான காரணங்களை அது அடுக்குகிறது. இந்த தளத்தின் வெகுளித்தனமான நம்பிக்கையை என்னவென்பது?

இத்தகைய பழைய இயக்கங்களது கோஷ்டிகள்-குழுக்கள் முன்வைக்கும் வர்ணமுலாம் பூசப்பட்ட புரட்சிகரச் சவடால்கள் வெறும் கழிப்பறைக் காகிதங்களாகக் கிடக்கின்றன.இவர்களது அடி தொட்டு அலசப்படும் போராட்டச் செல் நெறியும்,யுத்த தந்திரங்களும் இந்தக் கொடூரமான உலகத்தின் ஏதோவொரு ஆதிக்க சக்திகளுக்கானது.அவர்களது நலனுக்கான தெரிவுகளை மக்களது பெயரால் முன்தள்ளித் தமது தொடர் வருமானத்தைக் காக்கும் இத்தகைய குழுக்கள் நவமூலதனச் சுற்றோட்டப் பாதையில் தமிழ்ச் சமூகத்தின் அமுக்கக் குழுவாக மாறுகிறது.இஃது, நல்லதற்கான அனைத்து வாய்பையும் முறியடித்தே மேலெழுகிறது.


இவர்களை வெற்றி கொள்ளத் தக்க எந்தத் தகுதியுமற்று நாம் கிடக்கும்போது,தமிழ் மக்களுக்கு உண்மையாக உழைக்கும் அச் சமுதாயத்தின் உறுப்பினர்களும்-தனிநபர்களும் அதீதமான உணர்வெழுச்சிக்குள் சிக்குண்டு, இத்தகைய போலிகளை-அந்நியச் சேவகர்களை நம்பி,அவர்களை முன்வைத்து மிகையான கனவுகளை விதைப்பதில் காலத்தைக் கடத்துவது நமது மக்களை மேலும் அடிமைப்படுத்தவே செய்யும்.

நாம் இது குறித்துச் சிந்திக்கின்றோமா?

புலம்பெயர் தளத்தில் திடீர் கட்சிகட்டும் நபர்களது நோக்கம் என்ன? அறிவின்மீதான நம்பிக்கையானது எந்த அத்திவாரத்தில் கட்டப்பட்டதோ அந்த நம்பிக்கையானது இன்று நமக்குக் கை கொடுப்பதாகவில்லை.அந்த அறிவு மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பதில் தன் சூரத்தனத்தைக் காட்டுகிறது.இது,தனது எஜமான விசுவாசத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தத் தனது இருப்புக்கான போராட்டத்தைப் பல திசைகளில் நடாத்த முனைகிறது.இதன் தொடராகத் தொடர்ந்து தமிழ்பேசும் மக்களது அனைத்துப் போராட்ட முனைப்புகளையும் தனக்குள் உள்வாங்க முனைகிறது. இது நடாவத நிலைகளில், அதைத் தொடர்ந்து எதிர்ப்பதிலும்-தூற்றுவதிலும் தன்னைப் புரட்சியின் பெயரால் புனிதப்படுத்திக் கொள்கிறது.தேர்ந்தெடுத்த நபர்கள் இதன் நிரைப்படுத்தல்களைத் திசை புரியாத கருத்துகளால் நியாயப்படுத்தத் தவறுவதில்லை!

இலங்கை மக்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும்அந்நியச் சக்திகளுக்கு இரையாக்கிவரும் சூழலுக்குள் மாட்டுண்டு கிடக்கும் நாம்,எம்மை மிகைப்படுத்திக்கொண்டு புரட்சி பேசுகிறோம்.இஃது,பொய்யானது.

தமிழ்பேசும் மக்களுக்கு-இலங்கை மக்களுக்கு இவர்களால்-நம்மால் நாசமேயொழிய எந்தப் பயனுமில்லை. புரட்சிகரக்கட்சி-இயக்கம் என்பதெல்லாம் அந்த மண்ணில் அவர்களது போராட்டச் சூழலில் ,அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புரட்சிகர நிலைவரங்களுக்கொப்பவே மேலெழமுடியும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் செய்யும் ஒவ்வொரு அரசியல் நகர்வுக்கும்பின்னால் ஏதோவொரு சக்தி மறைந்திருக்கிறது.அஃது,பழைய இயக்கவாதக்காரர்களிடம் பலமாக வேரூன்றியுள்ளது என்றவுண்மையை நாம் தெரிந்தாகவேண்டும்.


மக்கள்தாம் வரலாற்றைப் படைக்கிறார்கள்.ஆனால்,தமிழ்பேசும் மக்களைக் காவுகொண்ட இயக்கவாதமானது தனது சர்வ வியாபகத்தையும் மக்களின் உரிமைகளைப் பறிப்பதில்-ஒடுக்குவதில் அந்நியச் சக்திகளோடிணைந்து வலுவாகச் செய்து வருகிறது. இது,புலிகளாகவிருந்தாலுஞ்சரி இல்லை மாற்றுக் குழுக்களாகவிருந்தாலுஞ்சரி தொடர்கதையாக நடந்தேறுகிறது. புலிவலுவாக இருந்தபோது புலியே தனித்துத் தமது எஜமானர்களது நோக்கத்தை நிறைவேற்றிப் புரட்சிகரச் சூழலை இல்லாதாக்கியது.அதன் பாத்திரம் அப்போது மேற்குலகத்தின் அடியாட்பாத்திரமாகும்.

இப்போது,
தென்னாசியப் பிராந்தியத்தில் நிலையெடுத்துவரும் சீனா-இந்திய மூலதனமானது மேற்கைப் பழிவாங்கும்போது,தென்னாசியாவில்-இலங்கையில் மேற்குலக ஆர்வங்களை மீள நிலைப்படுத்தப் புலியில்லாத சூழலில் பல குழுக்கள் அப்பாத்திரத்தை உள்வாங்க முனைகிறார்கள்.இங்கே,பற்பல குழுக்கள் புதிய கட்சிகளைக் கட்டித் தமது எஜமானர்களது செல்லப் பிள்ளைகளாக முனையுந்தருணங்கள் புரட்சிப் பயணமில்லை என்பது எனது நிச்சியமான வாதமாகும்.


இன்று, பற்பல முனைகளில்-தளங்களிலிருந்து ஆட்டுவிக்கும் சூத்திரதாரிகளைப் பற்றியும்,அந்தச் சூத்திரதாரிகளை உலகத்தின் முதற்றர எதிரிகளாகக் கண்டு,அவர்களை(தேசங்களை-ஆளும் வர்க்கத்தை) எதிர்ப்பதற்கான வெகுஜனப் போரை முன் நடத்தும் அமைப்புகளே,அத்தகையச் சூத்திரதாரிகளால் ஒழுங்குபடுத்தப்பட்ட பினாமிகளாக இருப்பதற்கும், புரட்சி பேசி எல்லாவற்றையும் மறுப்பதற்கும்(புரட்சியையொடுக்குவதற்கு) உள்ளே நிலவுகின்ற இயங்கியற் தொடர்ச்சிதாம் என்ன?

நம்மீதான மிதமான மதிப்புகள் தனிநபர் சாகசங்களாகும்.இவை எந்தச் சந்தர்ப்பத்திலும் வர்க்கவுணர்வுள்ள மக்களை அரவணைத்துச் சென்றதில்லை.மாறாக, அவர்களையின்னும் அந்நியப்படுத்தி,புரட்சிக்கு எதிரான வர்க்கமாக மாற்றும் எதிர்ப் புரட்சிகர நடவடிக்கையாக மாறுகிறது.இதுகூட இந்தவுலகத்தின் மூலதனப் பொறிக்குச் சாதகமாகவேயிருக்கிறது.இது, குறித்து இலங்கையில்-புலம் பெயர் சூழலில் மக்கள் நலன்சார்ந்து செயற்ப்படுபவர்கள் சிந்தித்தாகவேண்டும்.இன்றைய சூழலில் எவரும் தம்மால்-தமது அமைப்பால் புரட்சி முன்னெடுக்கும் தகுதி குறித்து உரையாட முடியாது.மக்கள்தாம் தமது விடுதலையைக் குறித்து இயங்குபவர்கள்.புலம்பெயர் தளத்தில் கருக்கொள்ளும் கட்சிவடிவங்கள் யாவும் நமது மக்களை மேலும் அடிமைப்படுத்தும் பொறிமுறையோடு புரட்சி பேசுவது அவர்களது எஜமானர்களுக்கானதென்பது புரியப்பட்டேயாகவேண்டும்.

திடீர் கட்சி கட்டும்தனிநபர்களான ஒவ்வொரு மனிதரும் தமது விருப்புறுதியின்மீதான அதீதக் கற்பனைகளை,மதிப்பீடுகளை,சமூகப்பார்வைகளை வர்க்கஞ்சார்ந்த வர்க்க உணர்வாகப் பொருத்திவிட்டு "பொய்யான"உணர்வுத்தளத்தை நிறுவுவது திமிர்தனமான வெற்றுச் செயலாகும்.
மனித சமூகத்தின் மீதான அதீத நம்பிக்கைகளும்,அந்தச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்மீதும் அளப்பெரிய பொறுப்பும் சுமத்தி,இந்த நம்பிக்கைமீதான மிகையான எதிர்பார்ப்புகள் எங்ஙனம் மனித சமூகத்தின் எதிர்கால வாழ்வுக்கு உடந்தையாக இருக்குமென்பதை நாம் வெறுமனவே நம்பிக்கைகளாக்கிச் செயற்படமுடியாது.இன்றைய மக்கள் சமுதாயமானது இருவேறு நோக்குகளை முன் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது. அஃது, "கடந்த கால மூலதனத்தைப் பெருக்குவது,காப்பதென்பதைத்தாண்டி",இன்று, விஞ்ஞானத்தையும்,காற்றையும் மூலதனத்தினது இடத்துக்கு பெயர்த்தெடுத்து மூலதனத்தை வெறும் சூட்சுமமான இயக்கமாக்கியுள்ளது.

இந்த அறுதியற்ற சுழற்சிப்போக்கை சமூகத்தின் அதிர்வில் பொருத்துகின்ற இன்றைய ஊகவணிகம் மேன் மேலும் மனித சமூகத்தின் உழைப்பை வெறும் அர்த்தமற்றவொன்றாக்கிவிட்டு - உழைப்பை இன்னும் கீழான நிலைக்குள் தள்ளிவிட்டு சமூகத்தின் இருப்பைத் தகர்த்து-உழைப்பவர்களை வெறும் உயிர் வாழும் மனிதக் கூட்டமாக்கிறது.இதற்கான விஞ்ஞானத்தின் அதீத மனித மூளை உழைப்புத் தனது சக பிரிவை வெறும் அர்த்தமற்ற,செயலூக்கமற்ற பிரிவாக்கி அதைச் சந்தைப் படுத்தும் ஒரு உப தொழிலாக்கி"உழைபுச் சந்தையை"திறந்துள்ளது.எனினும்,தமிழ் மக்களுக்குப் புரட்சிப்படங்காட்டும் மூளையோ அமெரிக்கப் பாணியில் "என்னோடு நிற்பவன் ஜனநாயகவாதி அல்லாதவன் பயங்கரவாதி" எனும் தார்ப்பாரில்"புரட்சி-எதிர்ப்புரட்சி"ப்பாடம் நடாத்துகிறது.இந்த அநியாயத்தை யாரும் கேட்பாரில்லை!

"மே 18 இயக்கம்,புதிய ஜனநாயக மக்கள் முன்னணி"இன்னும் எத்தனை முன் அணிகளும்,இயக்கங்களும் உருவாகுமோ அத்தனையும் உருவாகி விடட்டும்.அப்போதாவது,மக்கள்-நிலத்தில் வாழும் மக்கள் தமது எதிரிகளைத் தமக்குள் இனங்காணும் காலமொன்று உருவாகிறதா பார்ப்போம்.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
20.06.2010

Monday, May 24, 2010

புரட்சிகரச்சக்தியாக நடிக்கும் ...

புரட்சிரச்சக்தியாக நடிக்கும்
ஒடுக்குமுறையாளர்களது உறுப்புகள்.




சிறு கவனக் குறிப்பு.



"குருதியின் உலர்ந்த கறை கண்களில் பட்டு
கொடிய நெடிலாக மூக்கைத் துளைக்கும்போதும்
மரணத்தின் நீண்ட வலி நெஞ்சைப் பிழிந்த போதும்
தத்தம் வீடுகளில் இவையெட்டாதவரை
தேசமே விருப்புறுதியாகி
இவையனைத்தும் தியாகமென மெட்டமைத்துப் பாடப்பட்டது!


புலம்பெயர் நாடுகளில்
சாவோலை படித்துக்கொண்டிருக்கும் சில கிழட்டு நரிகள்
கருப்புத்துண்டை கக்கட்டில் சொரிகியபடி
சில்லறைக்கு மௌனித்துக்கொள்ளும் ஒளிச் சட்டகத்துள்


ஊராரின் உயிர்கள்
தேசமென்ற அரக்கியின் பெயரால் வேள்வியாக்பட்டு புதை குழி நிரம்பியது!
கேட்பாரின்றிக் கோலாச்சிய மொழித் தர்பார்
உயிரினது உச்சந் தலையில் மோதிக்கொண்டது..."



டுக்கப்படும் வர்க்க மனிதரை விடுவிக்கும் நோக்கமானது இன்று மெலினப்பட்டுக்கிடக்கிறது.அனைத்து மூலையிலும் இருளின் தூதர்கள் பதுங்கிக் கிடக்கிறார்கள் . நடந்த முடிந்தவை முடிந்துபோனவையாகவும்,முயற்சியில் இது தவிர்க்கமுடியாததாகவும் உரைக்கப்படுகிறது.புலம் பெயர் தமிழர்களுக்குள் கொட்டப்படும் புலிசார் மதிப்பீடுகள் யாவும் பிழையான தெரிவுகளை இளைஞர்களுக்குள் கட்டியமைக்கிறதோ இல்லையோ அவர்களது சுயதெரிவை இது மழுங்கடிக்கிறது.எல்லாப் பொழுதிலும்"தேசியம்-தமிழ்-தேசம்"அவர்களது நியாயவாதமாகப்படுகிறது.


தனக்குச் சம்பந்தமே இல்லாத தெரிவுகளால் பட்டு அவஸ்த்தைப்படும் இலங்கைவாழ் தமிழர்கள்,மீளவும் புதியதைத் தெரிந்துகொள்ளத் தடையாக"நாடுகடந்த தமிழ்த் தேசம்"அவர்களை இராணவக் கெடுபிடிக்குள் முடக்கியுள்ளது.


புலிகள் போரிட்ட இலங்கையின் அரசியலையும்,மக்கள் சமூகத்தின் உள்ளார்ந்த உளவியற்றளத்தையும் இருவேறு கூறுகளாக்கருத முடியாது.இரண்டுமே படுபிற்போக்குவாத சமுதாயத்தின் வெளிப்பாடுகள்.மனிதம் முட்டுச் சந்திக்கு வந்துவிட்டது. இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் காலனித்துவ நாடுகளில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு,குறிப்பாக இலங்கையில் இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான புலிகளின் கடந்தகால அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு, மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கிய இழி நிலையில் புலிகள் அழிந்தே போயினர்.எனினும்,களத்துப் புலிகளது மரணத்தில் காசுசேர்த்த சதிகாரக்கூட்டம் மீண்டும்,மீண்டும் பற்பல வேடம் போடுகிறது.


"நாடுகடந்த தமிழீழம்சார்ந்தும்,எதிர்த்தும்,புரட்சிபேசியும்"புலிகள்-புலத்துப் பினாமிகளென ஒவ்வொருவரும் ஏதோ வகையில் இணைந்தபடி புலம்பெயர்தமிழர்களைத் தமக்குள் இணைத்துக்கொள்ளப் பொறிமுறைகளைத் தகவமைக்கின்றனர்.இதில் எவரையும் இலகுவாக இனங்காண முடிவதில்லை!எல்லோருமே புரட்சி-விடுதலையெனத் தத்தமக்குச் சொந்தங்கொண்டாடுவதில் மக்களது தெரிவு என்னவாக இருக்க முடியும்?


புலம்பெயர் தமிழ் மக்கள் பலியாகும் அரசியலானது இதுவரை பல இலட்சம் தமிழ்-முஸ்லீம்,சிங்கள மக்களைப் பலியெடுத்தும் அவர்களது சமூகவாழ்வைச் சிதறடித்துவிட்டும்வியாபாரஞ் செய்வதில் குறியாகவிருக்கிறது. இதற்குப்புலத்து-நிலத்து மக்களது வாழ்வு மூலதனமாக்கப்படுவதில் தமிழ்பேசும் மனிதவுடலானது அந்த அரசியல்- அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது.இந்த நிகழ்வுப் போக்கானது தலைமுறை,தலைமுறையாகத்தமிழ்த் தேசிய நடாத்தையால் தகவமைக்கப்பட்டுக் கடத்தப்படுகிறது.இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக"மக்கள் விரோதமாக"இருந்தும் அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் "நாம்" மிக இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.




தேசியம்-தேசம்-பண்பாடு என்ற வர்ணம் பூசிய பூர்ஷ்சுவாக கருத்தானது தன்னளவில் மனிதர்களை ,அவர்களது உரிமைகளைத் தமது வர்க்க இருப்புக்காக புதிய பல பாணியிலான போக்குகளுக்குள் சிதைத்துக்கொள்வதில் முந்திக்கொள்கிறது.


தமிழையும்,தேசியத்தையும்,பண்பாட்டையுஞ்சொல்லித் தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடித்துவிட்ட தமிழ் மேட்டுக்குடிகள் இப்போது ஒருகிணையுந்தளம் வர்க்க எதிரிகளைத் தீர்த்துக்கட்டும் ஒடுக்குமுறையாளர்களது தளமாகவே இருக்கிறது.இதற்காகப் புரட்சிகரமான அரசியல் முன்னெடுப்புகளைக் காட்டிக்கொடுப்பதும் அதன்வழி இல்லாதாக்குவதற்கும் அவர்களே"புரட்சிகரமான"அணியாக உருவாகி வருகிறார்கள்.இதை இனங்காணுவதென்பது மிகக்கடினமாகும்.அவர்கள் தமக்கான வரலாறைப் போலிப் புரட்சிகரக் குரல்களின்வழி நிறுவிக்கொண்ட கடந்தகாலம் நம்மையெல்லாம் உதிரிகாளாக்கிவிட்டுள்து.இதில் புலிகளது அரசியல் மிக விவேகமாக அந்நியர்களது பணிப்பின்படி நடந்துள்ளது.இதை இனங்காண்பதும்,அதை முறியடிப்பதென்பதும் இன்னொரு புலிவழிப்பட்ட அல்லது சார்புடைய அணிகளுக்குள் நம்மை விழுத்துவதில் போய் முடியலாம்.அது,ஒரு நெருக்கடியான இன்றைய சூழலில் சாத்தியமாகலாம்.இதைக் குறித்து முன்கூட்டிப் பேசுவது அவசியமானதுதாம்.புலம் பெயர்வுச் சூழலில் ஒவ்வொருவரும் சொந்தங்கொண்டாடும் அரசியலில் மடிந்தவர்கள் பலர்.புரட்சியின் பெயரால் நடந்தேறிய குழிபறிப்பில் புலிகளது இருப்பு நியாயமுற்ற தமிழ்ச் சமுதாயத்தில் இதைவிட மேலான அரசியல் அரும்ப முடியாதுதாம்.என்றபோதும்,இதைக்குறித்த சரியான தேடுதல் அவசியமாகிறது.இங்கே,இனங்காணும் செயற்பாடுகள் அவசியமாகிறது.



புலிகள் என்ற அமைப்பு, முழுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் தம்மைப்போலவே உருவாக்கித் தமது அடியாட்பாத்திரத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்துவிட்ட வரலாற்றுப்பாத்திரத்தில்
புலிகள் உழைக்கும் வர்க்கத்தின் பரம எதிரி-பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களது வர்க்க எதிரி.இதுவேதாம் இன்றைய புலிகளது நிலைக்கான சரியான தெரிவு.இதுவேதாம்,அந்நிய அடியாட்படையென நாம் புலிகளை வரையறை செய்ததற்கான அடிப்படைக் காரணம்.அதன் உச்சபட்ச அரசியலை இன்றைக்குப் புரிவதற்குப் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான அரசியல் சமூக இருப்புப் பலமானதாகவில்லை.புலம்பெயர் சமூகம்மிகவும் முரண்படுதன்மைகளை -பொருந்தாத்தன்மைகளை தன்னகத்தே கொண்டுடியங்குகிறது,இணக்கமற்ற இருவேறு அணுகுமுறைகளின் ஒருமாதிரி சேர்க்கையிலேதாம் புலம் பெயர் தமிழ்மக்களினது இருப்பே தங்கியுள்ளது. இங்கெல்லாம் நாம் நமது வாழ்வை சமூகக்கூட்டாகமைக்க முடியவில்லை .இதனால் சமுதாயரீதியான அணுகுமுறையற்றுப்போவதால் குழுவாரீயான அணுகுமுறையே நிலவுவதால் அஃது ஒன்று,மற்றது: தனிநபர்வாத அணுகுமுறை! குழுவாரியான அணுகுமுறைக்குள் சிறு சுய அமைப்பாண்மையும்,ஆற்றலையும் காணும்போது மறுபுறத்திலோ தனிநபர்வாத அணுகுமுறை எல்லாச்சீரழிவுக்கும் பசளையிடும் காரியத்தில் இயங்கிக்கொள்கிறது.


இத்தகைய தனிநபர்வாத அணுகுமுறை பழைய குட்டிப் பூர்ச்சுவா குணாம்சம் காரணமாக மிகவும் இறுக்கமான மரபுசார்ந்து செயற்படும் தந்திரத்தில் மையங்கொண்டுள்ளது, இத்தகையவொரு சூழலில் தமிழ்பேசும் மக்களின் இருள் சூழ்ந்த இந்தச் சமூகவாழ்வைப் போக்குவதற்கு இயலாமை நிலவுகிறது.இதனால் அராஜகத்துக்கு முகங்கொடுக்கும் மக்கள் ஸ்தாபனமடையாதிருப்பதற்கேற்வாறு புலிகளினது தளங்கள்செயற்படுகிறது.இத்தகைய நிலைமையில் அராஜகவாதிகளே தம்மை "ஜனநாயக வாதிகளாக"க்காட்டிக் கொண்டும்,புரட்சிக்காரர்களாகக் காட்டிக்கொண்டும் பல்வேறு முகாங்களாகத் தம்மைத் தகவமைத்து மக்களரங்குக்கு வருகிறார்கள்.இவர்களது வரலாற்றைத் தோண்டி அம்பலப்படுத்தாமல் இலங்கைவாழ்மக்களது விடுதலையென்பது பகற்கனவானது.


புலி அதிகார வர்க்கமானது "புரட்சிகரக் கட்சியின் "தோற்றத்தைத் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தே வருகிறது.இதை அறிவுத்தளத்திலும்,அதிகாரத்தளத்திலுமிருந்து நகர்த்தி வருகிறது.களப் புலிகளது அழிவுக்குப்பின்பான கருத்தியல் வளர்ச்சியானது இதை அறிவுத்தளத்தில்புரட்சிக்கெதிரான அறவியில் பண்பாக வளர்க்க முற்பட்டு"தமிழ்த் தேசியத்தின்"தத்துவ விசாரணையாக வளர்த்தெடுத்து வருகிறது.சேரன் போன்ற மேட்டுக்குடிச் சிந்தனையாளர்கள் இதையொரு தொழிலாகவே இப்போது செய்து வருகின்றனர்.இங்கே அதிகாரங்களுக்கெதிரான சிந்தனை சோஷலிசக் கட்டமைப்புகளுக்கெதிரானதாக-புரட்சிக் கட்சிக்கு எதிரானதாக மொழியப்பட்டதேயொழிய ஒழுங்கமைந்த இனவாதப் பூர்ச்சுவாக் கட்சிக்குகெதிராக ஒரு மண்ணையும் செய்யவில்லை.இதுதாம் தமிழ்சிந்தனை மரபாக இதுவரை செயற்படுகிறது!



நமது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதமான இந்தத் "தமிழீழ"அழிவு யுத்தத்துக்கு உடந்தையாக எவரொருவர் இருந்தாரோ-அவர் மக்கள் விரோதியே.ஏனெனில்,இன்றுவரை இலட்சம் மக்கள் சாவதற்கான சித்தாந்தவலுவைச் செய்து,மக்கள் விடுதலையை அந்நியச் சக்திகளுக்குக் காட்டிக்கொடுத்தும்,புலிகள் மூலமாக அந்நியத் தேசங்களுக்கு ஏவல் நாய்களாக நமது மக்களது குழந்தைகளை உருவாக்கியும், இன்று கொன்று குவித்தற்கும்,துரோகிகளாக அழித்தற்கும் இவர்களே உடந்தையாக இருந்தவர்கள்.இவர்களே இப்போது புலியினதும்-புரட்சியினதும் பேச்சாளர்களாக வலம் வருகிறார்கள்.


நாடுகடந்த தமிழீழ அரசுக்காரர்கள் புரிய மறுக்கும் இலங்கைச் சிங்களச் சமுதாயமானது, இன்னும் நிலவுடமைச் சமுதாயமாகவே சாரம்ஸ்சத்தில் நிலவுகிறது. காலனித்துவத்தால் இறக்குமதி செய்யப்பட்ட அரசமுதலாளியமானது மக்களின் வாழ்வை அதன் கடைக்கோடி நிலைக்குள் தள்ளியதில் போய்முடிந்துள்ளது.தரகு முதலாளிய வர்க்கத்தோடு ஏற்பட்ட சமரசங்கள் அதைக்காக்கவும்,வெல்லவவும் மதவாதக் கட்டுமானங்களைப் புதிய பாணியிலுருவாக்கிப் புத்த சியோனிஸத் தன்மையிலானவொரு கருத்தியல் மேலாண்மையை இலங்கையில் உருவாக்கிக்கொள்ள முயன்ற நிலவுடமை வர்க்கமானது, இனங்களாகப் பிளந்துகிடக்கும் தமிழ்-சிங்கள மக்களை தத்தமது இருப்புக்காகக் காவு கொள்ளும் நெறியாண்மையைக் கலாச்சாரமட்டத்தில் நிறுவுகிறது.இதையே ஒத்திசைவாகச் செயற்படுத்த உதவிய புலிவழிச் சிந்தனையாளர்கள் இப்போது நாடுகடந்த அரசுக்கு முண்டுகொடுப்பதில் புலம்பெயர்-நிலத்துத் தமிழ் மக்களை அதிகார மையங்களுக்கு அடிமையாக்கின்றனர்.


தமிழ்மக்களை இரசித்துக் கொல்வதற்கு வழிகாட்டிய தத்துவம் என்ன?


அதன் பின்னால் தெரிவுகளாகிய நலன்கள் யாருடையது?

கடந்தகாலப் புலிகளது போராட்ட வரலாற்றில் கொன்று கவர்வது வழமையானதாகவே இருக்கிறது.மிகச் சிக்கலான பொருள் குவிக்கும் புலிப் பினாமிகளின்ஆசையானது பின்னோக்கிய கற்காலத்தைத்தாண்டியும், இன்றைய பின் முதலாளித்துவச் சூழல்குறித்துக் கருத்தாடும் மனிதச் சமுதாயத்தில் மிக நரித்தனமாகவே உரிமை-தேசியம்-சுயநிர்ணயம் குறித்துப் பேசுகிறது.


புரட்சிகரச் சக்திகளையெல்லாம் உதிரிகளாக்கிய களத்து-புலத்துப் புலிகள், இன்றும் தமது கைவரிசையை புலத்தில் காட்டியே வருகிறார்கள் என்பதற்கு புலம் பெயர் சூழலில் மாற்றுக் கருத்தாளர்களின்அணிச் சூழல் நல்ல உதாரணம்.இவர்கள் பேசும் புரட்சிகரச் செயற்பாடு,அணிச் சேர்க்கை,புலிகளுக்குகெதிரான செயற்பாடு,புலிவழித் தேசியத்தை அம்பலப்படுத்தல் என்பதெல்லாம் ஏதோவொரு தளத்துக்குகிசைவானதாகவே இருக்கிறது.அந்தத் தளத்தை அறிவதே இன்றைய மக்கள் நல அரசியலாக இருக்க முடியும்.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
24.05.2010

Tuesday, May 18, 2010

முள்ளி வாய்க்காலைப் பிரபலப்படுத்திய கொலைக்களம்

டந்த வருடம் 15.05.09 இல் இருந்து 18.05.09 வரையான ஏதோவொரு தினத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட அவரைக்குறித்துத் தமிழ்மக்கள் இன்னும் உயிர்வாழ்வதெனக்கொள்ளும் பரப்புரைகளைப் புலத்துப் புலிகள் செய்ய முனைவதில் நாளை மீளவொரு ஈழத்தைக் காணலாம்.இன்று, நாடுகடந்து அதைக்(ஈழத்தை)கண்ட புலத்துப் புலிகள் மக்களது உரிமைக்கான போராட்டத்தில் புதிய திசைவழிகளைக் கண்டதாக "நாடுகடந்த தமிழீழ அரசை"ப் பிரகடனப்படுத்தக் களத்துப் புலிகள் வன்னிக்குள் பலமாக இருந்து, ஒரு பெரும் நிலப்பரப்பைக் கட்டியாண்டபோதுங்கூடச் செய்ய விரும்பாத"தமிழீழப் பிரகடனத்தை"இப்போது தேர்தல்-வாக்கெடுப்பின் மூலம் பிரகடனப்படுத்திய புலத்துப் புலிகள் உண்மையில் "வீரம்"செறிந்த மறவர்கள்தாம்.


அவர்கள் "தமிழருக்கான ஊடகத்தில்"கட்டியமைக்கும் "ஈழம்-தமிழ் மண்"யாவும் அவர்கள்கூறும் பிரபாகரன் வரும் வரை நிலைத்திருக்கும்.அது,எல்லாத் தரப்பாலும் தமிழருக்கான உரிமைக்கான குரலின்-போராட்டத்தின் தொடர்ச்சியெனக் கட்டியமைக்கும் முனைப்பில் பலர் முனைவதும் ஈழத்திற்கான வகைமாதிரிப் போரெனக் கொள்க!




ஆயுதத்தாலும்,அதிகாரத்தாலும்,பணப்பலத்தாலும் நிறுவ முனையும் இந்தப் பாதாளவுலக அரசியலானது, மக்களது அனைத்து உரிமைகளையும் புதை குழிக்கு அனுப்பி வருகிறது.இலட்சம் தமிழ் மக்களது புதை குழியோடும் இவைகள்(வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பு-நாடுகடந்த தமிழீழ அரசு)தமது நிலை குறித்துப் பேசிக்கொள்கின்றன.இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களது குடிசார்வுரிமைகளைப் புதைப்பதில் முதன்மையான செயற்பாட்டாளர்களாக இருக்கும் இன்றைய "நாடுகடந்த தமிழீழ அரச" நிறுவனர்கள்-உறுப்பினர்கள், நிறுவனமயப்பட்ட சிங்கள ஆளும் வர்க்கத்தினது அதிகாரத்தை மேலும் இருப்புக்குட்படுத்துவதில் கணிசமான பங்கு வகிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு வெறுத்தொதுக்கத் தக்க கருத்து நிலைக் கதம்ப எழுத்தாகுமா?


"நாடு கடந்த" இவ்வரசானது பெரும்பாலும் இலங்கையின் முழுமொத்த மக்களுக்குமே துரோகமிழைத்தபடி, தமது அதிகாரத்தைப் பேணும் ஒருசில புலத்துப் புலிக்குடும்பத்தின் நிதியாதாரத்தின்மீது கட்டப்பட்ட குறுகிய நலன்களையும் மறுபுறத்தில்கொண்டியங்குவதால் அதன் அரசியல் ஆதிக்கமானது பாசிசத்துக்கும்,பெயரளவிலான தரகுமுதலாளிய ஜனநாயக நடாத்தைக்கும் இடையிலான ஊசலாட்டமாக விரிந்து மேவுகிறது.பாசிச ஆட்சியில் நிலவும் அரசினது தாத்பரியம் ஆளும் வர்க்கத்தினது தெரிவை தலையிற் சுமந்து காரியமாற்றுவதில் அதன்பாத்திரம் முழு மக்களையும் காயடித்துக் குதறும்.இது,வருங்காலத்தில் முழுமொத்தப் புலம் பெயர் தமிழ் மக்களையும் ஏதோவொரு திசையில் தமது நோக்கிற்கிணங்கப் பயன் படுத்தும்.



"தேசியத் தலைவர்"பிரபாகரன் சரணடைய வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டபோது அவரோடு புதைக்கப்பட்ட"தமிழீழம்"இப்போது நாடுகடத்தப்பட்டு புலத்துப் புலிகளது அனைத்துவகைக் குறுகிய நோக்குக்கும் இசைவாகப் பயன் படுத்தப்படுகிறது.இதன் பயன் இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்களது உரிமைக்கான அடுத்த கட்டப் போராட்டத் திசையின்தெரிவாகவும் வலிந்துகூறும் புலிப்பார்வைகள், இதுவரையான புலிவழிப் போராட்டத்தின் அழிவைக்குறித்து மௌனிக்கிறது.அதைத் திரும்பிப் பார்ப்பதற்கு அது மறுத்தொதுக்குவது புலித் தலைவரை உயிர்த்திருக்க வைப்பதன் தொடரில் நியாயமுறுகிறது.இனவாதத்தை உயிர்த்திருக்கவைத்து மக்களை ஏய்த்துப் பலியாக்கும் அரசியலைப் புலிகள் தமிழீழப் போராட்டத்தினூடாக இலங்கை அரசுக்கு மிக நேர்த்தியான இனஞ்சார் அரசியல் வழிகாட்டியாக மாறியதன்பின், இலங்கையில் நடந்தேறிய இனவழிப்பு உச்சம் பெற்றது.இஃது, கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் சட்டபூர்வமான இனவழிப்பை இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கத்துக்கு உலகு தழுவிய ஒப்புதலோடு" தேசத்தின்"இறைமையாகக் கையளித்தது.


இதன்வழி, மிக மோசமானவொரு அரசாக இலங்கையின் அரசியல் வரலாற்றை மாற்றுவதற்கேற்ற திட்டமிடப்பட்ட பாசிச இராணுவாதம், இலங்கை அரச ஆதிக்கத்துக்குள் உள் நுழையும் தருணம் திட்டமிடப்பட்டு, "இலங்கை மக்களது குடிசார்வுரிமைகளை இனவாதத்தேற்றத்தினூடாக" ஒரு பகுதி புலிசார் தமிழ்பயங்கரவாத மக்களிடமிருந்து பறிப்பதாகக்கூறி, முழு இலங்கையின் மக்களிடமிருந்து பறித்தெடுத்தது, மகிந்தா குடும்பத்தின் பின்னாலுள்ள இலங்கை-இந்திய,சீன ஆளும்வர்க்கங்கள்.இதற்கான அனைத்துவகை இசைவுத் தளத்தையும் செய்வித்த புலிப் போராட்டம், இறுதியில் தமது எஜமானர்களது கையினாலேயே கடந்த வருடம் மே 18 இல் அழித்தொழிக்கப்பட்டது.




இத்தொடரான இன்றைய இலங்கை அரசியலின் போக்கானது, மிகவும் கொடிய இராணுவத்தன்மையிலானவொரு அரசவடிவத்தை, இலங்கைக்குள் நிலைப்படுத்துவதில் போய் முடிந்த துர்ப்பாக்கிய நிலைக்கு இலங்கையின் பெயரளவிலான ஜனநாயகத்தை கொண்டு சென்றுள்ளது.இதை மாற்றுவதற்கான எந்த பொருளாதார நகர்வும் தனக்கான பொதுமைப்பட்ட கோரிக்கைகளை முன்தள்ள முடியாதவொரு நிலையில்இப்போது உலகப் பொருளாதார நிலைமைகள் உருவாகியுள்ளபோது, இலங்கையின்பெயரளவிலான ஜனநாயத் தன்மை முற்றிலும் சீரழிந்துள்ளது.இலங்கை அரசினது புலியழிப்பு யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து அதன் இறுதி இலக்கு எட்டும்வரை, இலங்கை அரசு சிங்கள அரசாகவே நடந்துகொண்டது.அதன் உண்மையான இலக்கு என்பது சிங்கள ஆதிக்கத்தை இலங்கை வாழ் மற்றைய இனங்கள்மீது திணிப்பதாகவும், அதன் வாயிலாக இனவொடுக்குதலின் உச்சபட்ச சாத்தியத்தை கொண்டியக்குவதாகவும் இருந்தது.இதன் ஊக்கத்துக்கு புலயினது பாசிச அகங்கார நடாத்தை(நான்காம் கட்ட ஈழப்போர் போர் இம் முறை முழு இலங்கையிலும் இரத்த ஆற்றைத் திறக்கும்-தமிழ்ச் செல்வன்) மிக அண்மித்த கருத்தியற்பலத்தை இவ்வரசுக்கு அன்று, வழங்கியிருந்தது.


"தமிழீழத்தனி அரசுக்கான" போராட்டத்துக்குப் பின்பான இன்றைய சமூகச் சூழலில், தமிழ்உதிரிச் சமுதாயத்துள் உட்புறம் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல்(சம்பந்தன்-சிவாஜிலிங்கம்அரசியல்) முன்னெடுப்பும்,அது சார்ந்த சிந்தனா முறையும் ஜனநாயகத்தின் அதிகபட்சக் கோரிக்கைகளை முன்வைக்க முடியாத சமூக யதார்த்தைக் கோரிக்கொண்டிருக்கிறது. இஃது,முழுமொத்த இலங்கைவாழ் தமிழ்ச் சமுதாயத்தின் இன்றைய அவலமான சூழலுக்கும் முக்கியமான காரணியாக விருத்தியாகியுள்ளது.இதந்த அவலத்தின் தொடராகப் புலத்தில் "நாடுகடந்த தமிழீழ அரசு"அமைக்கப்பட்டு, ஒப்பாரி முள்ளிவாய்க்கால் நினைவாக எமது காதுகளில் கொட்டப்படுகிறது!


இந்த முள்ளி வாய்க்கால்வன்னி மக்கள்- புலிகள் அழிவு குறித்து இன்று நினைவு கூறுவதாகவிருந்தால்"காலாகாலமாகத் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றப்பட்ட அரசியல் வரலாற்றில், புலிகளும் தமக்கான பங்கை உயிர்ப்பலிகளினூடே முள்ளிவாய்க்காலில் கடந்த வருடம்ஆற்றியுள்ளார்கள்" என்று கூறுவதைத் தவிர வேறென்னத்தை நினைத்து உருக முடியும்?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
18.05.2010

Wednesday, April 21, 2010

ஷோபாசக்தி-லீனா மணி மேகலை.

ந்தப் பிரச்சனைகள் யாவும் ஒன்றுடனொன்று தொடர்புப்படுத்தப்பட்ட சிக்கலிலிருந்து பேசப்படும் பிரச்சனையாக இருக்கிறது.ம.க.இ.கவுக்கு மனிதவுணர்களைத்தாண்டி வார்த்தைகளுக்கு அர்த்தங்காணும் தூய்மைவாதக் கருத்தென்றால் இரயாகரனுக்குத் தொழிலாளர்மீது தாக்கியதும் அதன் தளத்திலிருந்து மறுமுனையில் சோபாசக்தி செயற்படுவதுமான எண்ணத்தை உரைத்துப் பார்த்தல் சோபாசக்திக்கும் அவனது தனிப்பட்ட பாலியல் நடாத்தைக்குமான புள்ளியில் நிகழ்கிறது.எனவே,நீங்கள் என்ன வேடமிட்டு எழுதினாலும் இந்தப் புள்ளிகளை அழித்துவிட்டுப் புரிய முனையாதவரை எம்மில் பலர் "நல்ல-தூய"தொழிலாள வர்க்கத் தோழர்கள்தாம்.இதைத் தாண்டுவதற்கு நாம் பலதரப்பட்ட மக்களோடிணைந்து வாழ-போராடக் கற்றாகவேணும்.அது மறுக்கப்படும் சூழலில் ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோதான அட்டைகளை எழுதி நெற்றியில் ஒட்டுவதைத் தவிர வேறெதுவையும் செய்யவில்லை.இதுதாம் இன்றைக்கு அதிகாரத்துக்கு அவசியமானது.அதை நாம் எல்லோருமே சரியாகச் செய்கிறோம்.

பரவலாகப் பேசப்படும்-எழுதப்படும் எழுத்துக்கள் யாவும்"மக்கள் நலன்"சார்ந்தது என்பதாகவே நமக்குள் வருகின்றன.இதில் இன்றைய பிரச்சனைகள் யாவும் ஏதோ சில தனிநபர்களுக்குள் இருந்து பற்றி வளர்வதாகவும் அது தனிப்பட்ட சிலரது செயலால் மக்கள் விரோத நிலையை எடுத்துவிடுவதாகவும் பர்ர்க்கப்படுவதானபோக்கில் சிக்கியுள்ள நிலைமைகளுக்கொப்ப, சோபாசக்தி தனது கருத்தை முன்வைத்திருப்பது ஒரு தளத்தின்மீதான எதிர்வினைக்குப் பதிலானாலும், அஃது, பரவலான இன்றைய அரசியல்-பொருளியில் உலகத்தோடு மிகப் பொருத்தமாக உறவுறுகின்றதென்பதை எல்லோருக்கும் பொதுவான "மக்கள்"நலன்சார்ந்து உள்வாங்கப்படுவதிலிருந்து எவரும் தப்ப முடிவதில்லை.

இந்த இலக்கில் அசோக்கினது அரசியல் குறித்த இராஜாவின் தொடர்விமர்சனம் இறுதியில் குறிபிட்ட தளத்தில், அசோக்கையும் இன்னொரு புறத்தில் மற்றறெல்லோரையும் அம்பலப்படுத்துவதாக இரயாகரன் சொல்லி முடித்துவைத்துவிட்டு,அடுத்த தொடரை சோபா சக்தி-லீனா மணிமேகலை குறித்தும்,அவர்களுக்குள் இயங்கும் அரசியலை அம்பலப்படுத்துவதாக ஆரம்பமாகிறது தமிழரங்கத்தில்.

இந்தத் தருணத்தில் சோபாசக்தி,தனதும்,லீனாமணிமேகலை குறித்ததுமான பொதுத்தளத்தில் விவாதிக்கப்படும் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றத்தக்க செயலின்பொருட்டு ஒரு கட்டுரையை வரைந்துள்ளார்.வாசிக்கப்படும்போது,எத்தரப்பில் நியாயமிருக்கெனப் புரிந்துகொள்வதற்கப்பால் இவர்களனைவரும் இயங்கிகின்ற தளத்தின் இருப்பு என்ன?அதற்கும் பரந்தபட்ட மக்களது வாழ்வுக்கும்-விடிவுக்கும் எத்தகைய தொடர்பு,சமூகத்தன்மை என்னவெனப் பார்ப்பது அவசியமானது.

ஏனெனில், சோபாசக்தி ஆண்டாளின் பெண்மன விருப்புகள்,அதை அவளன்று வெளிப்படுத்த இறைவன்மீதாகப் பாடிக்கொண்ட சமூகச் சூழல்வரை, சோபாவின் எழுத்து விரிகிறது.இதில் தனிப்பட்ட பிரச்சனைகளை அரசியலாக்குதல்-பொதுப்பிரச்சனை ஆக்குதலென்பது மாற்று-மற்றும் அரசியல் கட்சிகளது நடவடிக்கக்குப் புதிதில்லை என்ற எனது பொதுப்புத்தியிலிருந்து புரியமுனையும் தளத்தில், இவர்களது இன்றைய இந்த"அரசியல்"ஒருபோதும் எவரையும் திரட்டிப் பொதுத் தளத்தில் இயங்க அனுமதிக்கத் தயாரில்லை என்பதை எனது கடந்தகாலக் கூட்டுக்கள் நிரூபித்திருக்கிறது.

தாந்தோன்றித்தனமான செயற்றளத்தில் இயங்கும் எழுத்துக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தம்மை முன் நிறுத்துவதில் வந்து நிற்கின்றன.இந்தத் தாந்தோன்றித்தனமான எழுத்துக்களது பின்னே இயங்கும் அல்லது இயங்க அனுமதிக்கப்படுவதான சந்தர்ப்பவாத அரசியலில் நிலவுகின்ற அதிகாரத்துக்கிசைவான தெரிவையே இன்னொரு தளத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடிவுக்கான பாதையாகவும் காட்டி நிற்கிறது.இதைத்தாண்டிச் செயற்பாட்டுத் தளத்தில் இத்தகைய எழுத்துகளுக்கு வாழ்வே கிடையாது.

இவர்களது தெரிவில் எத்தகைய சுயநலம் தங்கியுள்ளதென்பதை பூதக்கண்ணாடி கொண்டு துப்புத்துலக்க அவசியமில்லை.ஒவ்வொருவரும் தத்தமது நியாயமாக மக்களின் சிண்டைப்பிடித்து அரசியல்-இலக்கியம்-புரட்சி பேசுகிறார்கள்.இதில் நான் பல சந்தர்ப்பங்களில் இதன் பின்னாலுள்ள தொடர்புகளைச் சந்தேகக்கண்ணோடு பார்க்கின்றேன்.ஒவ்வொரு தனிநபர்களதும் விரிந்த செயற்பாட்டுக்கும் ஒரு எல்லை இருக்கின்றது.அந்த எல்லையுடைத்து இயங்க அனுமதிக்கும் கட்சிசார் நடவடிக்கையாக-நிறுவனமாகப்பலர் இயங்கும் சூழல் இன்றைய புலம் பெயர்வுத் தளத்தில் புலிகளைத்தாண்டி எவருக்கு இருக்கிறதோ அவரது செயற்பாட்டின்மீது எனக்கு அதிகமான சந்தேகம் உள்ளது.இப்படியான சந்தர்ப்பத்தில்"மக்களை"சொல்லி இயங்கும் எவரும் வெளிப்படையான அரசியலைச் செய்வதாக மறைப்பு அரசியலோடு புரட்சி-இலக்கியம்-அரசியல் பேசுகின்றனர்.இவர்களிலிருந்து சோபா சக்தியும்,லீனா மணிமேகலையும் நசுக்கப்படும் குரலாகப் புனையும் சோபாசக்தியின் எழுத்து உண்மையானதாவெனச் சந்தேகம் எழுகிறது.

எதையுமே-எவரையுமே நம்புவதற்குத் தயாராக நான் இல்லை.

இங்கு, எவர்மீதும் தியானித்தபடி பின் செல்லவும் எவரும் வேண்டாம்.எழுத்துக்களால் இயக்கப்படும்"நியாயம்-அநியாயம்"நிலவும் ஆதிக்கச் சக்திகளுக்கு ஏதொவொரு வகையில் முண்டுகொடுப்பதில் மையங்கொள்ள முனையும் அரசியலையே கேள்விக்குட்படுத்தவேண்டும்.அங்கே,நானோ அல்லது எவரோ தூய்மைவாத முகமூடியணிந்து புரட்சி பேசமுடியாது!

இந்த முதலாளித்துவச் சாக்கடையில் நாம் எல்லோருமே கருவுற்றதன்பொருட்டு,எமக்குள் நிலவும் அனைத்துச் சிறுமைகளுடனும் பிணைந்த கூட்டுச் செயற்பாடு எவ்வளவு தூரம் ஒரு பொதுத் தளத்திலான பரந்துபட்ட மக்களோடு பிணைவுறும் என்பதை உரைத்துப்பார்த்து இயங்க முனைவதன் தொடரில் சோபாசக்தியின் இக்கட்டுரையை அனைவரும் வாசிக்க வேண்டியதுதாம்.என்றபோதும்,பொதுத் தளத்திலான உரையாடலைத் தனிப்பட்ட நடாத்தைகளின் தெரிவில் அரசியலாக்க முனையும் செயற்பாட்டின் இன்னொரு தன்மையிலான வெகுளித்தனத்தின் கடைக்கோடி நிலையும் பாசிசத்தின் ஊற்றுக்களில் ஒன்று என்பதும் உண்மையானது.


ப.வி.ஸ்ரீரங்கன்
21.04.2010
ஜேர்மனி



Friday, March 12, 2010

இனம்,இனத்தோடுதாம் சேரும்.பயப்படவேண்டாம்.

என்னைவிடப் பொறுக்கி உலகினில் உண்டோ?



சோபாசக்தி, ஹெலேனா டெமுத் அவர்களது வாழ்நிலை குறித்து ஒரு கட்டுரை எழுதினார்.அக்கட்டுரையில் சொல்லப்பட்டது யாவும் எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது.அக்கட்டுரையும்,எனது கட்டுரையும் சோபாசக்தியின் தனி-பொது வாழ்வும் விமர்சனத்துக்காகிறது தமிழரங்கத்தில்!

நான் "சோபாவின் இந்தக் குரல் நியாயமென்பது" எனது கருத்து.அதற்கான நியாயப்பாடுகளோடு கட்டுரை ஒன்றை எழுதியிமிருந்தேன்.

என்னைப் பொறுத்தவரை கார்ல் மார்க்ஸ் உழைப்பாளர்களுக்கு ஒரு ஏசு அல்ல.அவர் உழைப்பாள வர்க்கத்துக்கான விடுதலைக்கான போராட்ட ஆயுதத்தைக் கண்டடைந்த மனிதர்.

அவரது வாழ்வில் ஹெலேனாவின் பாத்திரம் வெறும் வீடுபராமரிப்பது மட்டுமல்ல.அதற்கும் மேலான நிலைகளை அடைந்திருப்பது.அது குறித்து நீண்ட தகவல்கள் இணையத்திலும், எனது புத்தக விறாக்கியிலும் நான்றுகொண்டு இருக்கின்றன.நான் அது குறித்துத் தகவல்களுடன் கட்டுரை செய்தேன்.

இங்கே,சோபாசக்தியின் தனிபட்ட நடாத்தைக்கும் இதற்கும்-எனக்கும் என்ன முடிச்சு வேண்டிக்கிடக்கிறது?

நான் இந்தச் சமூகத்தின் காவற்காரனோ அன்றி அதன் குத்தகைக் காரனோ அல்ல.முதலாளிய அமைப்பில் இச் சமூகத்தின் நிலையென்ன-குடும்பம்-உறவுகளது நிலை என்னவென்பதும்,இன்றில்லாத பொதுவுடமையுலகத்தில் குடும்ப-சமூக உறவுகள் இப்படி இருக்க முடியாதென்பதும் நான் அறிவேன்.எனவே,இச் சமூக அமைப்பில் "பத்தினிகள்-ஏகபத்தினி விரதர்கள்" எனக்கு அவசியமில்லை.


நான் யாரோடு படுத்தாலென்ன இல்லை சோபா சக்தி எவரோடு படுத்தாலென்ன? அது எனது நோக்கல்ல.அவரவர் சுதந்திரத்தை எதன் பெயராலும் நான் மொட்டையடிக்க முடியாது.எனவே,சோபாசக்தி எதை-எதுக்குப் பயன்படுத்துகிறார் என்பது எனக்குப் பொருட்டல்ல.

என்றுமில்லாதவாறு,ஹெலேனா டெமுத் குறித்து நீதியானவொரு கட்டுரையை தமிழில் வாசிக்கக்கிடைத்தபோது அதன் நியாயவாதம் எனக்குச் சரியெனப்படுகிறது. அதற்குத்தோதான பல ஆவணங்கள் எழுதாகவும் ஜேர்மனியமொழியில் கிடக்கிறது.இது ஆதாரமாகுமா?

இல்லை!

கார்ல் மார்க்சுக்கும்,ஹெலேனாவுக்குமான உறவு,வீட்டுப் பணிப்பெண்,அரசியல் தோழமை என்பதைவிட அது ஹெலேனாவினது குழந்தைக்கு அப்பாவென்பதுவரை வரலாற்றில் சொல்லப்படுகிறது.

இதை,மறுத்து மார்க்ஸ் அவர்கள் அப்பிள்ளைக்கு அப்பாவில்லை,அவர் மிக"ஒழுக்கமான"சமூக-மனிதவுறவுகளைப் பேணியவர் என சொல்பவர்களை நாம் மறுத்துப் பேசவில்லை.அது அவர்களது நம்பிக்கை.எனது நம்பிக்கை மார்க்சுக்கும் ஹெலேனாவுக்கும் உள-உடல் ரீதியாக உறவிருந்ததென்பதும்,அவர்களுக்கு மழலை பிறந்தது என்பதும்.இதை தப்பு-தண்டனை எனப் பகர நான் முன்வரவில்லை.

ஆக,மார்க்சுக்கும்-ஹெலேனாவுக்கும் காதல்-பாலியல் ரீதியான தொடர்பு இல்லை என்பவர்கள் நாம் கூறுவதற்கு ஆதாரம் கேட்கின்றனர்.

எனக்கு எனது பிள்ளைக்கு நான் அப்பாவென்பது எனது மனைவி சொல்லித்தாம் தெரியும்.இன்றிருக்கும் மருத்துவ வளர்ச்சியுடன் அதை நிரூபிக்கவும் முடியும்.

அன்று, 1851ஆம் ஆண்டில் இவ்வளவு தூரம் மருத்துவ வளர்ச்சி இல்லாததால் ஒரு சர்ச்சை விரிந்திருக்கிறது.

மார்க்ஸ்-ஹெலேனா இருவரும் இப்போது உயிருடன் இருந்து,அவர்களுக்குப் பிறந்த குழந்தை என்பதும் உயிர் வாழ்ந்தால் நவீன மருத்துவத்தின்படி ஆதாரம் தரலாம்.மற்றும்படி சாத்தியமில்லை.நான் எவர்க்கும் விளக்குப் பிடிக்கவில்லை!

இனிச் சில கேள்விகளை கீழ்வரும்பாணியில் கேட்க முடியும்:

1):நான் சோபா சக்தியின் தனிப்பட்ட நடாத்தைகளைத் தூக்கி நிறுத்தும் அவரது தந்திரத்துக்கு மார்க்சை வலுகட்டாயாமாக வம்புக்கு இழுப்பது,

2):சோபாசக்தி பல பெண்களோடு தொடர்பு வைக்கும் சமூகப் பிறழ்வுடையவன்.

இதன் ஆதாரம் என்ன?

எழுத்துக்கள்.பலரது கருத்துக்கள்-இவைதானே?

நான்,மார்க்சுக்கு எதிராக எழுதுவது என்பது உண்மையாக இருக்கட்டும்.

சோபாசக்திக்கு வக்கலாத்து வேண்டுவதும் உண்மையாக இருக்கட்டும்.


நான்,மார்க்சிடம்,ஏங்கெல்ஸ்சிடம் கேட்பது இதுதாம்:

ஐயன்மீர்,ஹெலேனாவின் கருவுக்குக் காரணம் என்ன?குந்தியின் கருவுக்குச் சூரியதேவன் காரணமானால்,ஹெலேனாவின் குழந்தைக்கும் காரணம் இருக்கும்(ஹெலேனாவுக்கு அப்படியொரு குழந்தையே பிறக்கவில்லை-பிறந்ததற்கு என்ன ஆதாரம்? என்றுங் கேட்கக்கூடும்).அவரது குழந்தைக்குத் தகப்பன் எவர்?யாரோ ஒருவரது ஏமாற்றுக்குச் சூழ்ச்சிக்குப் பலியாகக் ஹெலேனா வாழ்வு சிதைந்ததெனின் இவை குறித்துச் சமூக ரீதியாக அம்பலப்படுத்தி அவரது "கணவனை-காதலனை-கயவனை"ச் சமூகத்தின் முன் கொணர்ந்திருக்கலாம்.இது அன்றைய உங்கள் போராட்ட வாழ்வில் மிக இலகுவானதும்,சாத்தியமானதும்.

ஹெலேனாவுக்கான நீதிக்கான போராட்டம்-தேடுதல் குறித்து அவரது தோழர்களால்-நண்பர்களால் நடாந்ததாக இதுவரை எனது வாசிப்புக்குள் ஒரு எழுத்துமில்லை!அப்படி இருக்குமானால் அது இன்னொரு நியாயம்.

ஹெலேனாவின் எதிர்காலம்-வரலாறு குறித்த புரிதல் முன் கூட்டியே இருந்திருந்தால் இது சாத்தியமானது.மார்க்ஸ் ஏங்கெல்ஸ் சாகும்வரை இது சாத்தியப்படாதது எதற்கு?

அப்பாவிப் பெண்ணைச் சமூகத்தில் "மானங்கெட"வைக்க முடியாதென்ற "நல்"எண்ணமா?

அப்போ,மார்க்ஸ் தனது நண்பர் வில்கேம் வொல்வ்(Wilhelm Wolff) அளித்த அன்புப் பரிசை தனது மரணத்துக்கு முன்-படுக்கையில் ஹெலேனாவுக்குப் பரிசாகக் கொடுக்கிறார்.வொல்வ்(Wilhelm Wolff), உழைப்பாள வர்க்கத் தலைவனுக்கு (Marx) அளித்த அப்பரிசு,இன்னொரு உழைப்பாள வர்க்கத் தலைவனுக்கு(ஏங்கெல்சுக்கு)போய்ச் சேரவில்லை.

மார்க்சின் வீட்டில் பணியாள-உழைப்பாளப் பெண்ணுக்குப் போய்ச் சேருகிறது.

அப் பெண்ணின்(ஹெலேனா டெமுத்) மரணத்துக்குப் பின் அந்த பொக்கற்கடிகாரத்தை ஹெலேனா விரும்பியபடி ஏங்கெல்ஸ் ஹெலேனாவின் புதல்வன் பிரிடிறிக்கிடம் கையளிக்கவில்லை.இது ஏன்?(இதற்கு ஆதாரம் கீழுள்ள ஸ்க்கான்பண்ணிய படத்தை அழுத்தி வாசிக்கவும்.டொச் தெரியாது போனால் நான் கீழே தரும் தகவல்கள்தாம் அதன் உள்ளடக்கம்)


எனினும்,அக் கடிகாரம் மார்க்சினது மூத்த பேரப்பிள்ளையான அவரது மகள் ஜென்னியின் குழந்தை ஜேஆன் லோங்குவிடம்(Jean Longuet) போய்ச் சேருகிறது.அதன்பின் அவனது மைந்தன் ரோபார்ட் ஜேஆன் லோங்குவிடம் (Robert Jean Longuet)போய்,இப்போது கார்ல்மார்க்சின் பூர்வீக இல்லத்தில் (Karl-Marx-Haus in Trier, Deutschland)காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இக்கடிகாரத்தின் பின் பகுதியில் அது யார்-யாரிடம் இருந்ததென்பது செருக்கப்பட்டுள்ளது.அதுள்,மார்க்சுக்கு அடுத்த பெயர் ஹெலேனாவென்பது குறிப்பிடத்தக்கது.

கேள்விகளுக்குப்பின்னாக,

என்னைப் பொறுத்தவரை"ஆண்-பெண்"பாலியல் உறவென்பது "சமூகமாக"இயங்கும் இந்த முதலாளித்துவ அமைப்பில் ஒரு அம்சம் என்பது கிடையாது.அது,எந்த அமைப்பிலும் ஒரு அம்சமோ அல்ல ஒரு பகுதியோ கிடையாது.உழைத்து வாழ்வது-உயிர்வாழ்வதென்பது புவியின் இருப்புடன் சம்பந்தப்பட்டதென்ற வகையில் அது இயற்கையானது.அதை எந்தச் சமூக அமைப்புக்குள்ளும் அடைத்து நிலைப்படுத்த மனித உயிரியொன்றும் பொருள்நிலை வகைப்பட்ட தெரிவு இல்லை.இந்த அமைப்பில்தாம் இப்படி இருக்கமுடியும்.ஒரு பொதுவுடமைச் சமுதாயத்தில் இன்றைய சமூக-குடும்ப அமைப்புகள் தலைகீழாகவிருக்கும்.அங்கே,"ஆண்-பெண்"பாலியல் உறவுகள் குறித்த பேச்சே இருக்காது.அரசு எங்ஙனம் நூதனசாலையில் இருக்குமோ அப்படி இந்தக்குடும்ப-சமூக அமைப்பும் அங்கே அனுப்பப்படும்.

மார்க்சைத் தனது நடாத்தைக்காகச் சோபாசக்தி பயன்படுத்துவதாகவும்,அதற்குச் ஸ்ரீரங்கனும் துணைபோய்ச் செயற்படுத்துவதாகவும் எவராவது எண்ணுவாரானால் அது குறித்து எனக்கு எந்தக் கவலையுமில்லை.

ஏனெனில்,நானும் இந்தச் சமூகச் சாக்கடையில்தாம் வாழ்கிறேன்.என்னைவிடப் பொறுக்கி இந்தவுலகத்தில் எவரும் இருக்கமுடியாது.பின் நான் சோபாசக்திக்குத் துணைபோகாமல் இரயாகரனா துணைபோக முடியும்?

இனம்-இனத்தோடுதாம் சேரும்.பயப்படவேண்டாம்.

என்றபோதும்,ஹெலேனா அம்மையாரைக் கைவிட்ட காலங் கொடியதுதாம்.அது,எவரது பெயராலும் அவளைச் சிதைப்பது கொடியது.

ஆதாரம்?

ஆதாரம்,அதுதாம் ஆதாரம்!


இறுதியாகச் சொல்வதென்றால்:


"நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாது நின்ற நிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவர் தேடும் பொருள்"-ஒளவை சொல்லக் கேட்டேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
12.03.2010


P/S:
Biographie in Daten

Marx Karl Heinrich

* geboren am 05.Mai 1818 in Trier (Moseltal/Deutschland)
* gestorben am 14.März 1883 in London


* seine Eltern: Heinrich Marx, Dr. jur., Rechtsanwalt, lebte von 1777 bis 1838, Henriette Marx, geboren als Henriette Preßburg,
* seine Geschwister: Sophie, Hermann, Henriette, Louise, Emilie und Caroline Marx
* seine Ehefrau: Johanna Bertha Julie, lebte von 1814 bis 1881
* seine Kinder:

* Jenny Caroline, lebte von 1844 bis 1883;
* Jenny Laura, lebte von 1846 bis 1911;
* Edgar, lebte von 1847 bis 1855;
* Heinrich Guido, lebte von 1849 bis 1850;
* Franziska, lebte von 1851 bis 1852;
* Eleanor, lebte von 1855 bis 1898;
* Frederick Lewis Demuth, lebte von 1851 bis 1929;

http://de.wikibooks.org/wiki/Soziologische_Klassiker/_Marx,_Karl

Saturday, March 06, 2010

நித்தியாநந்தா பாலியல் வல்லுறவுக்காரனா?

திருச்சபைகள் மற்றும் நிதி நிறுவனங்கள்:
பாலியல்,மனித ஒடுக்கு முறைகள்.



ஜேர்மனிய அதிகார வர்க்கத்தின் ஊழல்கள் அம்பலமாகும் தருணம் பாலியல் பலாத்தகாரம் அதை விஞ்சும் அளவுக்குத் திருச்சபைகளைச் சந்திக்கு இழுத்து வருகின்றன.இதற்குள் நித்தியானந்தாவின் போலிப் பிரமச் சாரியம் அம்பலத்துக்கு வரும்போது அனைத்தும் ஒன்றினது தொடர்ச்சியாகவும்,பிளவுமாக நம்மை அண்மிக்கிறது.


பிரமச் சாரியத்தைப் பரப்பிய நித்தியானநந்தா என்ற மனிதன் பெண்களோடு(பெண்ணோடு?) பாலியல் உறவை வைத்துக் கொண்டதும்,அவன் வெளியல் தன்னைப் பிரமச் சாரியகக் காட்டிக் கொண்டதும் இந்தியாவில் தொடர்கதைகளில் ஒன்று.நித்தியாநந்தா"பிரமச் சாரியம்" பேசாது ஆச்சிரமங்களை நடாத்தியிருந்தால் அவரது பாலியல் உறவுகள் குறித்துப் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

அவரோடு பாலியல் உறவுகளைச் செய்வதற்கு விரும்புவது அல்லது மறுப்பது சம்பந்தப்பட்டவர் உரிமை-சுதந்திரம்.அதுள் தலைபோட எவருக்கு உரிமையுண்டு?

இத்தகைய நித்தியானந்தாக்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் பூராகவுமே இப்போது அம்பலத்துக்கு வருகிறார்கள்.

ஜேர்மனியக் கத்தோலிகத் திருச்சபைகளுக்குள் "தமது உடலைப் பாலியற் சுரண்டலுக்குக் கட்டாயமாகக் காவு" கொடுத்த பெண்கள்-ஆண்களெனப் பலர் இப்போது பேச முனைகிறார்கள்.ஐம்பது ஆண்டுகளுக்குமுன் பாலியல் வதைக்குட்பட்டவர்கள்கூட இப்போது அதைக் குறித்துப் பேசுகிறார்கள்.நித்தியானந்தா இந்த விஷயத்தோடு ஒப்பிடும்போது ஒரு ஜுஜிப்பி.

கத்தோலிக்க திருச்சபைகள்,அவர்களது பாடசாலைகள்,கோவில்களெனப் பாலியல் சேட்டைகள்-வதைகள் தொடரும் வதைக் கூடமாகக் கத்தோலிக்க மதஞ் சீரழிந்து போகின்றது.ஜேர்மனியில் பல பத்தாண்டுகளாகப் பாலியல்-காமச் சேட்டைகளெனப் பாலகர்களைப் பந்தாடும் பரம விரோதிகளாகக் கத்தோலிக்மதப் "பாதர்கள்"(பாதகர்கள்?) இருக்கின்றார்கள். இவர்களோடிணைந்து ஜேர்மனியப் பொருளாதாரப் புலிகளும் மக்களையொடுக்கும்போது அப்பாவி மக்கள் எங்கே செல்வார்கள்?

ஜேர்மனியப் பொருளாதாரத்தையும் அந்த நாட்டின் அரசியலையும் தீர்மானிப்பவர்களாக இருக்கும் அதிகாரவர்க்கம் மிகக்கபடத்தனமாக உழைப்பவர்களை ஏமாற்றி வருகிறது.உடல் ரீதியாகவும்,உளரீதியாகவும் மக்களை வேட்டையாடும் பெரும் பொருளாதார-மத நிறுவனங்கள் பொதுவாகச் சீரழித்துவரும் மக்கள் தொகை பெருகி வருகிறது.நாளாந்தம் திடுக்கிடும்படியாகப் பாலியல் வல்லுறுவுக் கதைகளை திருச்சபைகளில் படித்த பெண்களும்-ஆண்களும் அவிழ்த்துவருகிறார்கள்.

ஒருபுறம் பொருளாதாரத்தைத் தின்று ஏப்பமிடம் பெரும் தொழிற் குடும்பங்களது கறுப்புப்பண மற்றும் வரி ஏய்ப்புச் செய்திகள்.மறுபுறம் திருச்சபைகளின் பாலியல் வல்லுறுவுக்கதைகளென ஜேர்மனிய ஊடகங்களில் இவை மெல்லக் கசிக்கின்றன.மனித சமூகம் என்றுமில்லாதவாறு அடிமைகொள்ளப்பட்டு வருகிறது.எங்கும் அதிகாரமுடையவர்கள் மனிதர்களை ஒட்டச் சுரண்டி வருகிறார்கள்.இச் சுரண்டல் பல் முனைகளில் மனித விழுமியங்களைக் காவுகொள்கின்றது.இங்கே,நித்தியாநந்தா வேறு பாலியல் ரீதியாக அம்பலப்பட்டு பெரும் சர்ச்சையாக நமக்குள் கொட்டப்படுகின்றன.இந்த இளைஞனின் பாலியல் உணர்வை எவரும் கேலிக்குட்படுத்த முனையும்போது கொதிப்பு ஒரு புறம்,மறுபுறம் நித்தியாநந்தாவின் போலி வாழ்க்கை அதைவிடக் கொதிப்பை உண்டுபண்ணுவதாக மறுபுறம் நம்மைக் கொல்கிறது.இங்கே,"சரி-தப்பு" என்பது பாலியல் தேவைகளது தெரிவில் சரிப்பட்டு வராது.வலிந்து தூய்மைவாதம் பேசுபவர்கள் கள்வர்கள்.அதேதாம், நித்தியானந்தாவுக்கும் பொருந்தும்.

உலகு தழுவிய பொருளாதார மாபியாக்களால் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்ட கறுபுப்பண அனைத்து விபரங்களையும் அந்த வங்கியில் வேலைபார்ப்பவர்கள்-மற்றும் இணையக் கெக்கர்களென உலாவும் மனிதர்கள் சி.டி.யில் பதிந்து பல ஆயிரக்கணக்கானவர்களையும், அவர்களது கருப்புப் பண விபரங்களையும் ஏலத்தில் விடுகிறார்கள்.ஜேர்மனிய அரசோ 2.5 மில்லியன்கள் யூரோ வரை விலைகொடுத்த அந்தச் சி.டி.யை வேண்டுகிறது.அந்த அரசில் அமைச்சர்களாகவும்-பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களும் அதுள் அடக்கமென்பது உண்மையாகிறது.

அவ்வண்ணமே கத்தோலிக்கத் திருச்சபைகளது பாலியல் வல்லுறவுக்கதைகளும் ஏலத்தில் வருகிறது.திருச்சபைகள்-மடாலாயங்கள் என்பவை பரந்துபட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நிறுவனம் என்பது இடதுசாரிகளது கருத்து.இது நிரூபணமாகி வருகிறது.இதேதாம்,நித்தியாநந்தாவினது தெரிவிலும் பாலியல் சேட்டையாக விரிகிறது!


நவலிபரல் ஆட்சியாளர்களது நயவஞ்சகத்தனமான பொருளாதாரச் சீரமைப்பால் நாளும் பல்நூறு தொழிலாளிகள் வேலையிழக்கக் காரணமானர்வர்கள். இவர்களின்று தமது தேசப் பற்றைக் கிழித்து நடுத்தெருவில் எறிந்த கதை அம்பலமாகிவருகிறது! இவர்களைத் தூக்கி நிறுத்தும் திருச்சபைகளது பாலியல் சுரண்டலும் ஒரே திசையில் அம்பலமாகி வருகிறது.

முதலாளியச் சமுதாயமானது படு கேவலமான மனிதவிரோதிகளது கூடரம் என்பது அம்பலமாகிறது.மார்க்சினது கருத்துக்கள் இப்போது பரவலாகப் பொருளாதாரஞ் சார்ந்தும்-மனித நடாத்தை சார்ந்தும் மெய்யாகி வருவதில் எனக்கு மிகப் பெரும் ஆச்சரியம்.நித்தியானந்தா அந்த வகையில் ஒரு துரம்புதாம்.ரஞ்சிதா இங்கே தனது சுதந்திரமான தெரிவில் தனது பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கருவியாகக்கொண்ட மனிதனது நடாத்தையில் சமூகப் பிறவுள் உள்வாங்கப்பட்டவராக நம்முன் நிற்பது விசமத்தனமானது.

அப்பாவி மக்களை மிகக் கொடும் வரிகளைப்போட்டு வாட்டி வதைக்கும் ஜேர்மனிய-உலக அரசுகள்,தொழிலாளர்களை ஒட்ட மொட்டையடித்து,அவர்களை வேட்டையாடும் முதலாளிகளால் வழிநடத்தப்படும் அரசாகளாகவே இருக்கின்றன.மனசாட்சி என்பதெல்லாம் அதிகாரவர்க்கத்துக்கு,ஆளும் வர்க்கத்துக்கு-ரொப் மனேச்சர்களுக்குக் கிடையாதென்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தினமும் வறுமையோடும் வேலைப் பளுவோடும் ஜந்திரமாக வேலைவேண்டிப் பாவிக்கப்படும் ஒரு கருவியாகவே உலகத்தில் உழைக்கும் மனிதரை இன்றைய பொருளாதார அமைப்பு-உலக ஏகாதிபத்தியத் தொழிலகங்கள் உருவாக்கி வைத்து அடிமையாக்கியுள்ளது.இது ஒருவகையில் மறைமுகமான அடிமையுடமைச் சமுதாயமாகவே இருக்கிறது.

இத்தச் சமுதாயத்தில் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் நிதி நிறுவனங்கள் ஒருபுறம்,மறுபுறம் இவர்களுக்குக் கருத்தியல் மற்றும் உளவியற் பலத்தைக் கொடுக்கும் மத நிறுவனங்கள் மக்களுக்கு விரோதமான செயல்களில் இறங்கும்போது மக்கள்கூட்டம் அம்போவெனவிடப்படுகிறது.மனிதர்கள் பொருளாதாரம் முதற்கொண்டு விஞ்ஞானம்-ஆத்மீகமெனச் சுரண்டப்படும்போது இதை அனுமதித்து வருவதில் அரசு உடந்தையாக இருக்கிறது.பூர்ச்சுவாக்களது அரசு இதைவிட மேலாக எதையும் செய்யாதென்பது மார்க்சினது அறிவுரை.நாம்தாம் இதை மறந்து நப்பாசைகளில் கனவைக் காண முற்படுவது நமது புரிதலில் உள்ள குறைபாட்டின் தொல்லைதாம்.

அரசியல்-பொருளாதாரம் இவை இரண்டுக்கும் அப்பால் மனிதவுறவுகள் என்பது கிடையாதெனக் கத்தோலிக்கத் திருச்சபை மீள,மீளச் சொல்கிறதா?-மடாலயங்கள் இவை குறித்துச் சொல்லும் கருத்துக்கள் மோசமானவை.அவை கத்தோலிகமாக இருந்தாலென்ன இல்லை இந்துமதமாக இருந்தாலென்ன இவைகள் அனைத்தும் மனித விரோதமாகவே செயற்படுகின்றன.

இங்கே,அனைத்து மதங்களையும் கடந்து இஸ்லாமிய மதமே பாலியல் விசயத்தில் பெரும்பாலும் சிக்குப்படாமல் இருக்கிறது.மற்றும்படி அனைத்து மதங்களும் மனிதர்களை வௌ;வேறு வடிவங்களில் சுரண்டுகின்றன.இஸ்லாம் சரியாவின்வழி மக்களை அடக்குவது வேறு கதை.

இன்றைய பொருளாதாரக் கிரிமினல்கள் உலக அரச அதிபர்கள்-அமைச்சர்கள் வடிவினில்மட்டுமல்ல பெரும் தொழிலகங்களின் ரொப் மனேச்சர்களாகவும்,மதப் பீடாதிபதிகளாகவும்,வற்றிக்கான் போப்பாண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.இவர்களே பாலியல் வல்லுறுவுகளையும் கடவுளது பெயரால் நியாயப்படுத்துகிறார்கள்!

இந்த "அதியுயர் நிர்வாகிகள்-மதப் போதகர்கள்-திருச்சபைப் பிஷப்புகள்"செய்யும் திட்டங்கள் உலக மக்கள் அனைவரையுமே பாதிப்புக்குள்ளாகி விடுகிறது.உலக நாணய வங்கிய அதிபர் போடும் திட்டமானது இலங்கையில்-இந்தியாவின் விவசாயிகளின் வயற்றில் அடிப்பவையாக இருக்கென்றால் அதன் வீச்சு எவ்வளவு மனித விரோதமானதென்பதை நாம் அறிந்துவிடலாம்.

நாம் முன்பு ஜேர்மனியே அதிபரும் உலகப்பெரும் அதியுயர் நிர்வாகியான கிளவுஸ் சும்விங்கெல் எனும் ஜேர்மன் தபால் நிறுவனத்தின் (முன்னாள்) அதிபரின் வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப்பணம் குறித்து அறிந்தோம்.

இப்போது, இதைவிட அதிகமான தொழிற்குடும்பங்கள் அரசை ஏமாற்றி வரிப்பணத்தை அரசுக்கக்கட்டாது சுவிஸ் வங்கிகளில் பணத்தைப் பதுக்குவது அம்பலமாகி வருகிறது.

ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளிகள் வேலை பார்க்கும் அரச-தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தபால் நிறுவனத்தின் பெரும் அதிபர்.மாதமொன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் யுரோ சம்பளம் எடுக்கும் அதிகாரி தேசத்தை-நாட்டை ஏமாற்றியது மட்டுமல்ல தனக்குக் கீழே தொழில் பார்க்கும் அரை மில்லின் தொழிலாளிகளையும் உலகத்தின் மக்களையும் ஏமாற்றினான் அன்று.

கொடியவர்கள்!

குளிரினில் கைவிறைக்கக் கடிதங்கள் சுமக்கும் தொழிலாளிக்கு பட்டுணிச் சம்பளம் கொடுத்தபடி தனது வயிற்றுக்குக் கோடிகோடியாகச் சுருட்டிக்கொண்டான் கிளவுஸ் சும்விங்கல் என்ற கொடிய மிருகம்.

இத்தகைய திருடர்களே மக்களின் பெரும் பொறுப்பான அதிகாரிகளாக இந்த அரசுகள் ஒப்புவிக்கின்றனர்.


ஜேர்மனிய இறைவரிப் புலனாய்துறையின் தேடுதலில் வசமாக மாட்டுபவர்கள் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் வெளியில் வருகிறார்கள்.தம்மீது சுமத்தப்படும் குற்றத்துக்கான தண்டனையைப் பணமாகச் செலுத்தி வெளியில் வந்துவிடுகிறார்கள்.இவர்களே இன்றைய பொருளாதாரத்தைத் தின்று ஏப்பமிட்டு,அப்பாவிகளை வேட்டையாடுபவர்கள்.

இவர்கள் எங்ஙனம் மாட்டுப்படுகிறார்கள்?முதலாளித்துவப் பொருளாதார அமைப்பே சட்டரீதியாகக் கொள்ளையிடும் சட்டதிட்டங்களைத்தாமே உருவாக்கி உழைப்பவர்களைச் சுரண்ட ஜனநாயகம் என்கிறது!

எனினும்,இத்தகைய பொருளாதாரக் கிரிமினல்கள் எப்படி உருவாகிறார்கள்?

ஏன் உருவாகிறார்கள்?

அரசியல்வாதியிலிருந்து அதிகாரத்திலிருப்பவர்கள்வரை ஊழலில் மிதக்கிறார்கள்!

திருச்சபைகள் இவர்களால் வளர்த்துவிடப்பட்டு,அப்பாவிகளை ஆத்ம ரீதியாகவும் பௌதிகரீதியாகவும்-பாலியல் சுரண்டல் செய்வதற்கு அரசு அனுமதித்து வருகிறது.சட்டம் பாராமுகமாக நடக்கின்றது.


அப்பாவித் தொழிலாளர்களை வேட்டையாடும் பொறிமுறைக்கு முதலாளித்துவ ஜனநாயகம் என்று வேறு பெயரென்றால் அவர்கள் இதைவிடவா வேறு வழியில் சிந்திப்பார்கள்?

வரியேப்புத் திமிங்கலங்களில் ஆயிரக்கணக்கான பெரும் தொழிற்கழகங்களிள் நிர்வாகிகள்-அதிகாரிகளின் பெயர்களை ஜேர்மனிய அரசு பணம் கொடுத்துப் பெற்றிருக்கிறது.வெளியுலக வங்கியில் பதுக்கப்பட்ட பணங்களின் தொகையும்,அதைப் பதுக்கியர்வர்களின் முழுவிபரமும் அடங்கிய சி.டி.றூம் ஒன்றிற்கு கமிசனாக 4.2 மில்லியன்கள் யுரோவை ஜேர்மனியப் புலனாய்வுத்துறை குறிப்பிட்டவொரு துப்புத்துலக்கிக்கு வழங்கியுள்ளார்கள்.இன்னொரு சி.டி.க்கு 2.5 மில்லியன் கொடுத்து வேண்டுவதற்கு அரசு ஆலோசித்து வருகிறது.இதையிட்டு அரசு விளம்பரப்படுத்தி செய்தியின் அடிப்படையில் பல வரி ஏய்ப்புத் திமிங்கலங்கள் தாமாகவே முன்வந்து தமது வரி ஏய்ப்பு விபரங்களைச் சொல்லி அரசுக்கு வரிகட்டிச் சமுதாயத்தில் தமது பெயர்கள் வெளிவராது தடுக்கின்றார்கள்.இதை அனுமதிக்கும் அரசு,தொடர்ந்து இத்தகைய அமைப்பைக் காப்பதற்கு முயற்சித்து வருவது கண்கூடு.

எனினும்,மதப் பீடாதிபதிகள் தமது அதீத செல்வாக்கை அரசுக்குக்கூடக் காண்பித்து இத்தகைய அரசையே முடக்குகின்றார்கள்.

இங்கே, எவர் மிகப் பலமாக இருக்கின்றனர்?

இதுதாம் இன்றைய இந்தியாவில் நடப்பதும்.

அரசைவிட இந்தியாவில் பலமானவர்கள் மதப் பீடாதிபதிகள் என்பதை காஞ்சிக்காமக் கோடியின் கொலை நடாத்தையிலும், பாலியல் வல்லுறவிலும் உரைத்துப் பார்க்கும்போது,நித்தியாநந்தா சட்டத்திலிருந்து மட்டுமல்ல சமுதாயத்திடமிருந்தும் தப்பித்துப் புதிய உருவில் வெளிப்பட முடியும்.

எனினும்,இந்த இளைஞனின் அடிப்படை ஆசைகளை மறுத்து அவனைக் கிரிமனலாகப் பார்க்கும் நிலைக்கு நாம் போவது எதனால்?

அவன்,வெளியில் தன்னைப் பிரமச்சாரியாகக் காட்டியதன் விளைவால்.

இங்கே,உலகம் உருண்டை என்பதைத் தவிர நாம் செய்யக் கூடியது எது?

இது,குறித்து யோசிப்பதே மேலானது.


ப.வி.ஸ்ரீரங்கன்

06.03.2010.

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...