Wednesday, November 01, 2006

நளாயினி தாமரைச்செல்வன்:உயிர்த்தீ.

நளாயினி தாமரைச் செல்வன்:உயிர்த்தீ.


"குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை
பூநுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித்
தாழ்நீர் நனந்தலைப் பெருங்களி றடூஉம்
கல்லக வெற்பன்" - நற்.36 1-4


முன்னொரு காலத்தில்...பகிடிக்குப் பாடியவொரு கவிதையில் சுவைப்பதற்குப் பாவையின் அழகே முதலிடமாக...எனினும் மனதில் உரசி விரியும் ஒரு அற்ப உணர்வாக இந்த நெடி பண்டுதொட்டு வீசியபடிதாம் இருக்கிறது!இந்த நெடி மிகப் பழமையானது.அதன் சாரம் உயிரினது இருப்போடு உரசிக்கொண்ட அகாலப் பொழுதில்தாம் அது"காதல்"என்ற கோதாவில் நம்மிடம் அறிமுகமாகிறது.


"கவிழ்மயிர் எருத்திற் செந்நாய் ஏற்றை
குருளைப்பன்றி கொள்ளாது கழியும்
சுரன்"-ஐங்.397 1-3



எனக்குத் தெரிந்த இந்தச் சமாச்சாரம் வெறும் புணர்வின் உந்துதலால் எப்பவோ தோன்றி என்னைத் தாழ்த்தியபடி,தடவியபடி,எனது காலை வாரியபடி மெல்லக் கொல்லும்!எனக்கும் அப்பப்ப நேசிக்கத் தெரிந்திருக்கிறது.நான் எனக்குள் கும்மியடிப்பதற்காகக் "காதலித்த"வரலாறு மிகக் குறுகியது.அந்தக் குறுகிய பொழுதில் எனக்கு நானே எமனாக விரிந்ததும் உண்டு.ஒரு அப்பாவியாய் வாழ்வில் குறுக்கிட்டவளை வசமாக வதைப்பதில் நான் எமனுக்கு நிகரானவன் என்பது அந்தக்"காதலின்"மறு பக்கமாய் நிழல் பரப்பிய இன்றைய பொழுதில் ஒருசில "காதற் கவிதைகளை"நளாயினி தாமரைச் செல்வன் தந்திருக்கிறார்!


"நங்கூரம்"


"உயிர்த்தீ"


நளாயினியின் முதற் தொகுப்பு நங்கூரம்!அது கடலிலிட்ட நங்கூரமாகவே இருப்பதில் வியப்பில்லை.அங்குமிங்குமாகவே படித்துப்பார்த்தேன்.பிடித்ததென்று கூறுமளவுக்கு அவரது உணர்வுகள் எதுவும் என்னை ஒன்றுஞ் செய்யவில்லை.ஆரம்பக் காலத்து எழுத்துகளுக்கு எப்பவும் இந்தக் கதைதாம்.எனினும் அவை பேசுவது படிமங்களில்பட்டுச் சிந்திப்பதன் உணர்வு தரும்"ஏற்ற இறக்கங்களாக"இருப்பதும் சாத்தியமானதே.


"உன்னை என் விழிகள் கண்டதும்
என்னமாய்ப் படபடக்கும்
அதனோடு கூச்சமும்,காதலும்
என்னுள் பவனி வரும்.
எனக்கு அருகில்
நீ வரும் போது
பூகம்ப அதிர்வு..."-நங்கூரம்,நளாயினி.



காதல் என்பது காமத்தின் நெருக்குதல் தரும் தரும அடிதாம்.அதைமீறி அதற்கென்றொரு மண்ணுமில்லை.பச்சைக் கருக்கு மட்டையால சாத்தும் பருவக் கோளாறுக்கு புலம்பித்திரிதல் "எதிர்பால்"எழும் வினையோடு அலைந்து,சல்லாபத்துக்கான தோலின் தேடுதலோடு வண்டிகட்டி"காதற் சுமை"காவித் திரிவது மனித மொழிகளுக்குள் பல்வினைப் பயனாய்க் கிடந்தலைகிறது.


"காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகுமென் றான்மதம் போலப்
பாணியு முடைத்தது காணுநர்ப் பெறினே" குறுந்தொகை.136


எந்தக் காலத்தில் நின்றாலும்,நிலைத்தாலும் சிந்தனைத் தொடர்ச்சிக்கு ஒரு குறுக்கு மதில் கட்டிக்கொள்ள முடிந்திருக்கா?எதைப்பற்றியுரைப்பினும்-"இது"பற்றியுரைப்பதும் சற்றுக் கடுப்பாகித் தணிவதற்கானதாக மேவுவது சாலப் பொருந்தும்-இடம்- எனக்கு சற்று அதிகமானதாகப் படும்போது, நான் காதல் என்றொரு கதையைக் கிளப்பி விடுவதுண்டு!அதுவும் சற்றுச் சிக்கல் நிறைந்த பருவத்தைக் கண்டால் "பட்டபாட்டுக்குக் கெட்டகேட்டுக்குப் பாயும்" உணர்வுக் கொதிக்கு நான் படும்பாடு அந்த"நாய்ப் பாடு",அப்படியொரு சக்கரத்தில் சுற்றிச் சுற்றி வரும் செக்கு மாட்டுச் சூழலை உடைத்தபடி நளாயினி எழ முனையும் தொகுப்பாக "உயிர்த்தீயை"படித்தபோது உணரத்தக்கதாக இருந்திருக்கிறது.



"மைவளம் பூத்த மலரேர் மழைக்கண்ணார்
கைவளம் பூத்த வடுவொடு காணாய் நீ
மொய்வளம் பூத்த முயக்கம்யாம் கைப்படுத்தேம்
மெய்வளம் பூத்த விளைதகு பொன்னணி"-பரி.1816-19



பரிபாடலென்ன பண்டையப் பாட்டியின் பிதற்லென்ன எல்லாம் அந்தத் திசையை மேவுவதற்காகத் தெய்வத்தின்மீது "காதலாகிக் கசிந்து"தத்தம் காமத்தைக் குறியீடாக்கியது மட்டுமல்ல அதை வெளிப்படுத்துவதிலும் ஒரு புரட்சியைச் செய்து காட்டினாள் ஆண்டாள் என்ற சீமாட்டி.சிரித்து,இரசித்து,சுவைத்துத் தமிழை ஆண்டாள் அவள்.நளாயினிக்கு உரிய காலம் இப்போது தோன்றிவிட்டது.பெண் தனது உணர்வுகளை அசலாக வெளிப்படத்தும் ஒரு காலத்தைக் கனிய வைத்த மானுட வளர்ச்சிப்போக்கு இத்தககைய உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லும் அளவுக்கு ஆண்டாள்களை உருவகித்துள்ளது.இத்தகையவொரு சந்தர்ப்பத்தை எவரும் வருந்தித் தேடியதில்லை.எனினும் இதுவும் மிக முக்கியமானவுணர்தானே!இ·தின்றி உண்டோ உலக உய்வு? "காதல் காதல்,இல்லையேல் சாதல்,சாதல்"என்றெல்லாம் நம்மட ஆட்கள் பாடிச் சென்றுள்ளான்கள்.இப்படி எக்கச்சக்கமான வீராதி வீரன்கள் எல்லாம் பாடிய நிலையில் நாமும் நளாயினியின்"காதற் கவிதைகளோடு"ஒன்றியும் ஒன்றாமலும் ஓரத்தில் நின்றபடி கொஞ்சம் உரசிப் பார்ப்பதும்,துரத்திப் பிடிப்பதும் சாத்தியமே.


நளாயினி தனது மனதைக் காதலோடு கண்டடைந்த பொழுதொன்று கவிதையாகிறது.


"...இப்போதாவது
கண்டெடுத்தேன!!


காமக் கிளர்வுகள் ஏதுமின்றி
உன் பாதச் சுவடுகளையும்
நினைவுகளையும்
சிரிப்பொலிகளையும்
துன்பங்களையும்
தாங்கியபடி


நட்பா!?காதலா!?
பிரித்துப் பார்க்க முடியவில்லை..."-உயிர்த்தீ.பக்கம்:8


எப்படியோ நளாயினிக்கும் இந்தப் பிரச்சனை வந்துவிட்டது.


நட்பு-காதல்!காதலென்றால் அதற்கு"எதிர்பால்"எழும் வினையுண்டென்று உணரத்தக்கவொரு சூழலில்தாம் இந்தப் பிரச்சனை முகத்தில் ஓங்கியொரு உதைவிடுகிறது.சும்மா நட்பு,காதலென்று உருட்டிப் புரட்டியொரு ரீல்விடுவதில் எந்தப் பலனுமில்லை.எனக்குக் காதலென்றால் அது எப்பவும் உடல் சார்ந்த"எதிர்பால் வினை"தாம்.இப்பவெல்லாம் நல்ல நல்ல மெழுகுத் தோல்களில்-அதுவும் பொன்னிறத் தோல்கள் படுத்தும்பாடு பெரும்பாடு!தமிழ்ச் சினிமாவின்"பெண்"என்னையெல்லாம் உருட்டிப் புரட்டியெடுத்து எச்சிலூறும் பொழுதுகளுக்குள் தள்ளி அவமானப்படுத்துவதும் மனசில் உரசும்போது,மீளவும்"காதலா,நட்பா"என்ற கேள்வியெல்லாம் நரகலோகத்துக்குரியது.


"மக்கள் பயந்து மனை அறம் ஆற்றுதல்
தக்கது அறிந்தார் தலைமைக் குணம் என்ப
பைத்தரவு அல்குல் படிற்றுரை யாரொடு
துய்த்துக் கழிப்பது தோற்றம் ஒன்றுஇன்றே."-வளையாபதி


எல்லோரும் நல்ல மனையாளோடு வாழ்வது...என்று பாடும்போது,நல்ல மனையானோடு(ஆண்பால்)வாழ்வதுபற்றி எந்தப் பெண்ணும் பாடித்தானாகவேண்டும்.அந்தக் காலத்துச் சுப்பர்களெல்லாம் தங்கட மனசில"பெண்டிர்களை"த் தகவமைத்தபோது"கொடியிடை,இஞ்சி இடுப்பழகி,நூலிடையாள்"என்று கக்கூசுக்குள்ளிருந்து யோசிச்சபோது,இந்தப் பெண்களும் தங்கட இரசனைகளை வலுவாகச் சொன்னாதாகச் சரித்திரமில்லை.கோகுலத்துப் பசுக்களெல்லாம் கோபாலனின் பேரைக்கேட்டே பலபடி பால் கறந்தபோது, நமது தேசத்துப் பெண்களெல்லாம் தத்தமது கோபாலர்களின் பெருமைகளைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.


"...உன் அழகு
உன் எழில்
உன் நடை
உன் தோற்றம்
உன் மதிநுட்பம்
அப்பப்பா
இன்னும் இன்னும்
எப்படி உன்னில் மட்டும்?..."-நங்கூரம்,பக்கம்:37


எல்லோரும் சொன்ன "பெருமைகளில்"உருவமைத்த ஊனங்களில் மிகுதி இன்புறல்"காதலிக்கும்"நளாயினிக்கும் சாத்தியமாவது புரிந்துகொள்ளத் தக்கதே.நமது வாழ்சூழலை மீறித் திடகாத்திரமாக எழுந்து உணர்வுகளைப் பகிர்வதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும்.அதை நளாயினி உயிர்த்தீயில் இப்படிச் சொல்கிறார்:


"உன் அங்கவஸ்த்திரம் கொண்டு
என் உயிர் பறித்தவனே!!
வாத்தியக் கருவி
ஒன்றைக் கண்டெடுத்தேன்.


அடடே!!


பார்த்துக் கொண்டிருக்கவே
எனக்குள் எத்தனை நாதம்."-உயிர்த்தீ,பக்கம்:48


கவிதையை வாசித்துவிட்டு,கொஞ்சம் கற்பனையை விரியவிட்டால் இரசவாதம் ரொம்பக் கறாராகவிரியும்!ஆனால் இது அப்படியல்ல.நளாயினியின் குடும்பம் இசைக் குடும்பம்-இசைக்கும் குடும்பம்!அவரால் கண்டெடுக்கப்பட்ட வாத்தியக் கருவி எதுவென்று பெரிதாக யோசிக்கத் தேவையில்லை.


இப்போதெல்லாம் காதலென்பதை தமிழ்ச் சினிமா மொழியில் சொல்வதைத் தவிர வேறுபல கூறுகளைப் பேசமுடியாதுள்ளது.தமிழ்ச் சினிமாவில் ஒரு துண்டு துணியோடு ஓடவோட விரட்டிப் பிடித்து,பிசைந்தெடுக்கப்படும் நாயகி "உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு"என்று பிரக்டிக்கலாகாச் சொல்லும்போது,நாமும் அவளின் பொக்கிளின்(தொப்புள்) அழகோடு சங்கமித்து,நம்மை வருத்தும்போது-


"மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பு மிகை,அவை உள்வழிப்
பற்றா வினையாய்ப் பல பல யோனிகள்
அற்றா யுழலும் அறிதற்கு அரிதே."-வளையாபதி.


இப்படி வளையாபதியில் பாடுகிறதையும் கொஞ்சம் யோசித்துக் கிடக்கத்தாம் வேண்டும்.ஆனால் நளாயினி காதலிப்பதின் சுகத்தையும்,வலியையும்-தன்னைப் புரிவதையும்,உணர்வதையும் உயிர்த் தீயில் சொல்லும்போது அதையும் செவிகொண்டு கேட்பதில் நான் எதையும் இழப்பதற்கில்லைத்தாம்.


"என் உடலுக்கு
உயிர் தா.
என் இதயத்திற்குச் சுவாசம் தா.
என் நரம்புகளுள்
உணர்வு சேர்.
என் விழிகளுக்கு
ஒளியூட்டு.
எனக்குள் கவிதை
ஊற்றாய் வா.


நீ தந்த உயிர் மூச்சு
என்னை விட்டுப் பிரியும்வரை
உன்னையே என் கவி
தொழுது நிற்கும்..." என்று எழுதிய நளாயினிதாம் இப்படியும் எழுதுகிறார்:


"என் எதிர்பார்ப்புகள் எல்லாமே
தொலைந்து போவதாய்.


கல்லெறிந்தே கொல்லும் மனிதர்
வார்த்தை அம்புகளால்.
என் இதயத்தால் வழிகிறது குருதி...


...என்னைச் சூழ இருந்த
நண்பரைக் காணவில்லை.
அவர்களின்(ஒருமை இங்கே பன்மையுற்றிருப்பினும்...)சாயலில்
மர்ம மனிதர் பலர்.
என்னை நரபலி எடுக்கத் துடிக்கும் அவசரம்..." - உயிர்த்தீ,பக்கம்:122



பறந்து பறந்து காதலைப் பாடினாலும் நாம் இந்தச் சமூதாயத்துள் கால் பதித்தேதாம் இருக்கிறோம் என்பதையும் நளாயினி புரிந்தே இருக்கிறார்.இந்தப் புரிதல் அவரிடம் நல்ல படைப்புகளைக் காலப்போக்கில் எதிர்பார்க்கத் தூண்டுகிறது.



"விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வாரி அல்குற் குறுமகள்
தோள் மாறு படூஉம் வைகலோ டெமக்கே."-(குறுந்தொகை:101)



ப.வி.ஸ்ரீரங்கன்
01.11.2006

Sunday, October 15, 2006

ஓடும் போர்க் குதிரைகள்!

ஓடும் போர்க் குதிரைகள்!


போர்க் குதிரைகள் தாறுமாறாக ஓடுகின்றன.

குதிரைகளின் கால்களில்
அழகான இலாடன்கள் அடிக்கப்பட்டும்
அவைகளில்
"பேச்சு வார்த்தை-சமாதானம்"என்றும்
அழகாகப் பொறிக்கப்பட்டும்
தேவையேற்படின் மூன்றாம் தரப்பின் அனுசாரணையோடு
கட்டுக்கு வருமென்றும்"அரசியல் சாஸ்த்திரிகள்"
மீளவும் கூறுகிறார்கள்!


முன்பும் இதே கதையாய்...


மக்களும் நம்பிக் கொண்டு
நடுகாட்டில் வெட்டிய மரத்தடிகளில் மறைப்புக்கட்டி
மண்கிண்டி
வயிறு நிறைத்திட்ட கணப் பொழுதில்
போர்க்குதிரைகள் கட்டவிழ்த்துப் பயிரழிக்கின்றன.



பாழ்பட்ட நாட்டில்
போருக்குக் குதிரைகளைத் தயாரித்த
சொல்லாத "தர்மங்கள்"பல இப்போதும் மறைப்பில்
சொல்லித் தெரிந்தவைகளையும்
சில செத்த குதிரைகளின் குருதி நெடிலில் மக்கள் மறந்தே போகிறார்கள்!


எந்த நேரத்தில்
எவர் தலையிலும் நெருப்பைக் கொட்டும் சிங்களக் கனவுக்கு
சீவிச் சிங்காரித்து"படைத் தரப்புக்கு"இது பின்னடைவல்ல என்றும்
புள்ளி விவரப்படி ஆட்டொகை காட்டி
கடைந்தேற்றும் கடையர்களும் கண்ணீர் சிந்தி
நம் தலையில் குட்டுவதும்
காலைக் கடன்போல் தினமும் தொடர் நிகழ்வாய்த் தெருக்களில் சிந்தியபடி


எந்தக் கனவைக் காண நேரிடினும்
அவை குருதிகொட்டும் சிதறிய சதைப் பிண்டத்தோடு
சொல்லும் சேதிகள் தூக்கத்தைக் கெடுத்த அதே பொழுதுகளாய்
தமிழர்களின் முற்றத்தில் வந்துறுமும் பருவக்காற்று
பாடைகட்டியே வெறுத்துப்போன கரங்களோடு
நமது பெரிசுகள் பல்லைக் கடிப்பது தினமும் தொடர்ந்தபடி


எத்தனை நாளைக்குத்தாம் இது வாழ்வாய்...?


வட்டமேசையிலிருந்து
திம்புபோய் பின்பு
நோர்வே தாய்லாந்து
சுவிஸ்சர்லாந்து என்று தீர்வுதாம்
கட்டாக்காலி எருமையாக அலைகிறது இந்தத் தேசங்களில்


செம்பு நீரில் வயிறு நிறைத்தவர்களும்
செத்துக் கிடப்பதற்கே
செல்லடி பட்டுக்கொள்வதும்
சொல்லாத அந்தத்"தர்மங்களால்"தாம்!
அதையும் காத்துக் கிடக்கும்
சொத்துக் கூட்டம் சொல்லும் கதைகளும்
போடும்"தர்மங்களும்"இந்தத் தேசத்தில் நிரந்தரமாய்ப்
போர்க் குதிரைகளை ஓடவிட்டபடி...


ப.வி.ஸ்ரீரங்கன்
15.10.2006






Thursday, October 12, 2006

கார் விபத்து...



கார் விபத்து...



பெய்யும் மழையும்
பேரதிர்வான பேய்க் காற்றும்
தேய்ந்துபோன இரயரும்
அதிவேக ஓடுபாதையும்
அதிர்வுக்குள்ளான மோதலும்
அதிர்ச்சிக்குள் அமிழ்ந்துபோன
உணர்வுமாய் நான்.









"......................"


ஈரலிப்பான பாதையில்
இழந்த எனது ஓடுபாதை
தப்பான பக்கத்தில் கார்
எதிரே வந்த பி.எம்.டபிள்யுவோட மோத...

இப்போது
என்னுடன் மோதும் ஜேர்மனியப் பொலிசு...


Sunday, September 24, 2006

சமாதானம்,ஜனநாயகம்...

சமாதானம்,ஜனநாயகம்...


உலகம்"சமாதானத்தால் உலகங்களுக்குச் சேவை செய்யட்டும்"(dem FRIEDEN der Welt zu dienen))என்று பலவிதமான சட்டங்களுடாய் இயற்றிச் சொன்ன பின்பும், அப்பாவி மக்கள் தினமும் பலியாகும் "தாக்குதல் யுத்தம்"நிகழ்ந்தபடியேதாம் முதலாளிகள்-அரசியல்வாதிகள் பொருள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!கடந்தகாலங்களில் நிகழ்ந்த அனைத்து யுத்தங்களும் இந்த வகைப் பொருள் குவிப்பதின் நோக்கத்தோடு நடாத்தப்பட்டபின் அது மறக்கடிக்கப்பட்டு,இப்போது அதே நோக்கோடு நடைபெறும் சகல யுத்தங்களும் "பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தம்"எனும் பொய்யுரையோடு நடாத்தப்படும் இருண்ட அரசியல் மெய்ப்பாட்டில் மனிதவுயிர்கள் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன.

"உள்நோக்கம் நிறைந்த அதற்குத் தோதான பேச்சுவார்த்தைகள் சமாதானத்தோடு இணைந்து வாழும் மக்களின் அமைதியை அழிக்கும்போதும்,பிரத்தியேகமாக தலைமைத்துவம்"தாக்குதல் யுத்தம்"செய்வதற்கான முன் தயாரிப்பைச் செய்வதும் சட்டத்துக்குப் புறம்பானது.இவைகள் தண்டனைக்குட்பட்டதாகும். "(Handlungen,die geeignet sind und in der Absicht vorgenommen werden,das Friedliche Zusammenleben der Voelker zu stoeren,insbesondere die Fuehrung eine Angriffskrieges vorzubereiten,sind verfassungswidrig.Sie sind unter Strafe zu stellen.-Artikel 26 vom grundgesetz der B.R.D.)ஆனால் இத்தகைய முதலாளித்துவ நாடுகள் மக்களை மடையர்களாக்கும் சட்டங்களை இன்னும் மக்களுக்கான நலனோடு சம்பத்தப்பட்டதாகக் காட்டிக்கொள்ளும்போதே தமது வர்க்க நலனைக் காக்கப் போருக்கு மக்களை அணிதிரட்டும் சட்டத்தையும் அதற்கு நேரெதிராகக் கொண்டிருக்கும்போது ,இது மிகக் கேவலமான பித்தலாட்டமாகிறது.

"Arikel 87a feststellt,dass der Bund Streitkraefte ausschliesslich zur VERTEIDIGUNG aufstellt.Und dass dies auch eine Wehrpflichtarmee sein kann,dafuer gibt der Artikel 12 a gruenes Licht:"Maenner koennen vom vollendeten achtzehnten Lebensjahr an zum Dienst in den Steitkraeften...verpflichtet werden."என்னவொரு இழிமையான சட்டம்!இத்தகைய சட்டங்கள் சொல்வதென்ன?"ஜேர்மனிய அரச அடிப்படைச் சட்டம் 87அ பிரிவு கூறுகிறது:யுத்தப்படைகளானவை தேசப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது.இது சட்டப் பிரிவு 12அ வினது கூற்றுக்கு பச்சைக் கொடியைக் காட்டி,பதினெட்டு வயதடைந்த இளைஞர்களை கட்டாய இராணுவத்துக்கு ஆட் திரட்டுவதைக் கடமையாக்கிறது.

இங்ஙனம் மேலும் கீழும் முரண்பாட்டோடு சட்டங்களை இயற்றி வைத்திருக்கும் நாடுகள் தமது நலன்களை மக்களின் நலன்களாக்கிப் படம் காட்டும் இன்றைய தரணத்தில் ஒடுக்கப்படும் இனம் தனது தலைவிதியைத் தாமே நிர்ணியிப்பதைப் பயங்கரவாதமென்கின்றன.

தாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற வன்மம் நிறைந்த பரப்புரைகளால் தமது மனிதவிரோத முகங்களை மறைக்க முனையும் இத்தகைய முதலாளித்துவ நாடுகள்தாம் எமது மக்களைத் தமது கால்களில் கட்டிப் போடுவதற்காகச் சமாதான நாடகம் ஆடுவதும்,முடியாதுபோனால் தமது படைகளை அனுப்பி எம்மைக் கொன்று குவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் இனத்துவ முரண்பாடுகள் தேசியவிடுதலையைக் கோரிக் கொண்டபோது, அதை அங்கீகரிக்க முடியாத அந்நிய தேச நலன்கள் நம்மை வெறும் இனக் குழுக்களாகி,நாகரீகம் அற்றவர்களாக்கிக் குறுக்கி அரசியல் செய்யும் கரவு நிறைந்த அரசியலில்"ஜனநாயகம்"எமக்குக் கற்பிக்கின்றன.

இதையும் புலியெதிர்ப்புக் கும்பல் ரீ.பீ.சீ. வானொலியில் கவிதைகட்டி வம்பளக்கின்றனர். இந்தக் குரங்குகள் உதாரணங்காட்டும் நாடுகள்தாம் மேலே நான் காட்டும் சட்டங்களைக் கொண்டிருக்கின்றன.இவர்கள் கூறித்திரியும் "ஜனநாயகம்"அதன் உள்ளடக்கமென்பது இந்தக் கோலமாக இருக்கும்போது, "சங்கரி ஐயா"ஊடாக இலங்கையில் "ஜனநாயகம்" மலரப் போவதாகக் கவிதைபாடும் காகங்களை என்னவென்பது!


"ஜனநாயகம் உயிர்த்தெழும்" ஆம் ரீ.பீ.சீ.க்காரரின் பணப்பெட்டிக்குள் அது தவம் கிடக்கும்போது கட்டாயம் உயிர்த்தெழும்.மக்களை இன்னும் மடையர்களாக்க முனையும் புலிகளைப் போலவே புலியெதிர்ப்பு "மாபியாக்களும்" மக்களை இன்னும் மடையர்களாக்கி வரும்போது, அதற்குத் தலைமை கொடுக்கும் ஜெயதேவன்களோ அல்லது மனிதவுரிமை பேசும் பசீர்களோ மேலே காட்டிய நாடுகளின் பம்மாத்துக்கு ஒத்தூதுவதைத் தவிர வேறொரு மண்ணையும்-எமது இனப் பிரச்சனையில் காத்திரமான பங்கை வகிப்பதற்கில்லை.

இவர்கள் அந்நியர்களின் நலன்களை இலங்கைக்குள் திணிப்பதற்குதவும் அற்ப மனிதர்கள்தாம் என்பதை நாம் மிகவும் ஆதாரத்தோடு நிறுவ முடியும். எமது மக்கள் இனங்களாகவும்,மதக் குறுங் குழுக்களாகவும் சிதறுண்டு முரண்பாடுகளைக் கையாள முடியாத வெறும் மந்தைக் கூட்டமாகச் சண்டையிட, இந்த இவர்கள் கூறும் ஜனநாயக நாடுகளே முதன்மையான காரணகர்த்தாக்களாக இருக்கும்போது இந்தப்"படித்த அறிஞர்கள்"எங்கள் மக்களுக்குப் "புலிப் பாசிசம்,ஜனநாயகம்"பற்றிப் பாடம் நடாத்துகிறார்கள்.

கடந்த சனிக்கிழமை 16.09.2006 அன்று அப்பாவி முஸ்லீம்களை பொத்துவிலில் கொல்லும் அரசியல்தாம் என்ன?

இதற்குப் பின் நோக்கம் பெறும் அரசியல் நோக்கு நிலை என்ன?

மக்களைக் கூறுபோட்டுக் கொன்று குவிக்கும் கபடம் நிறைந்த உலக நலன்கள் நம்மையின்னும் பயங்கரவாதிகளாக்கி நமது சுயநிர்ணய உரிமையைக் குழிதோண்டிப் புதைக்க முனையும் ஒவ்வொரு நகர்வும் புலிப் பாசிசத்தின் கொடுமையைச் சொல்லி ஒப்பேற்றப்படுகிறது.புலிகளின் நிலையோ அவர்களுக்கே புரியாதவொரு இருண்ட நிலையில் தம்மைச் சொல்லியே எதிரி அரசியலில் வெற்றியடையுந் தரணங்களில் தாமும் பழிக்குப் பழி அரசியலைச் செய்து பழகிய வரலாற்றிலிருந்து விலகி முற்போக்கான அரசியலை முன்னெடுப்பது அவர்களுக்கே ஆபத்தென்பதால்,இத்தகைய ரீ.பீ.சீக் கும்பல் நனைந்த இடத்தில் குழி தோண்டுகிறது.


உலக அரசுகளின் அடிபடைச் சட்டங்கள் வன்முறைப்படைகளால் "ஜனநாயகம்" காக்கப்படுமென்று ஒப்புதல் வழங்கும்போது இது குடிசார் உரிமைகளுக்கு எதிராகத் தனது நிலையை எடுக்கிறது.சிவில் சமூகம் என்ற இந்த அரசியல் வார்த்தையே ஜனநாயகத்தின் பொய்மைத் தன்மையில் கானல் நீரகவே இருக்கிறது.

இந்த ஜனநாயகம் என்பது ஆதிக்க சக்திகளின் அற்பத் தனமான கனிவளச் சுரண்டலுக்கும்,தமது நிதி மூலதனத்தைக் காப்பதற்கும் தொடர்ந்து தமது ஜந்திரங்கள் இயங்குவதற்கான முறைமைகளில் தொழிலாள வர்க்கத்தைக் கட்டிப்போடுவதற்குமாக அர்த்தம் பெறுகிறது.

இதனால்தாம் நாம் "ஜனநாயகம்"என்று இவர்கள் பிதற்றும் இந்தச் சாமான் போலியானது, மக்கள் தமது இறைமைகளைக் காப்பதற்காக புதிய ஜனநாயகத்தை நிறுவும் புரட்சியை முன்னெடுக்காத வரை இது சாத்தியமில்லை என்கிறோம்.இத்தகைய தரணங்களை மறுத்தொதுக்குவதற்கு இந்தவுலகத்துக்கு எந்த நியாயப்பாடுமில்லை.

இலங்கையின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் "புலிகளின் பாசிசத்தை" மையப் புள்ளியாக்கும் இந்தப் புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய கைக்கூலிகளுக்கு உலகமே புலிகளுக்குள் அடங்குவதாகப் பிரமை தட்டுகிறாதா அல்லது திட்டமிட்டு மக்களை இத்தகைய மக்கள் விரோத அரசியலால் காவுகொள்வது நோக்கமா?

உண்மையில் இத்தகைய நரித்தனமான மனிதர்கள் திட்டமிட்டுத் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளோடு விளையாடுகிறார்கள்.இவர்கள் அந்நியச் சக்திகளின் நலனுக்காக வளர்தெடுக்கப்பட்டு வேட்டைக்கு அனுப்பப்பட்ட வேட்டை நாய்கள்.இவர்களிடம் பொதிந்திருக்கும் மக்கள் நலன்கள் என்ற கபடம் நிறைந்த விய+கங்கள் முற்றிலும் ஆதிக்க சக்திகளின் ஆர்வங்களின் மிகப் பெரும் தந்திரோபாயத்துடன் சம்பந்தப்பட்டது.

இதை மக்கள் புரியதிருக்கவே "புலிப் பாசிசத்தின்" அனைத்துப் பரிமாணங்களும் நம் முன் கொட்டப்பட்டு,ஊதிப் பெருக்கப்படுகிறது.புலிகளினது நலத்தோடு பின்னிப் பிணைக்கப்பட்ட இலங்கைத் தமிழ் தேசிய இன முரண்பாடானது புலிகளைச் சிதைப்பதால் தோற்கடிக்கப்பட்டுவிடுமென்பது இல்லை.இது அந்நிய சக்திகளுக்குத் தெரியும்.

இத்தகையவொரு புற நிலை யதார்த்தமே இவர்களுக்கு அவசியமாக இருப்பதால், இந்த முரண்பாடுகள் இன்னொன்றின் மூலவ+ற்றுக்குக் காரணமாக இருப்பதற்கான இன்னொரு தளத்தை உருவாக்குவதில் இலக்கைக் கொண்டிருக்கிறது.

கூடவே இப்போது "ஆயுதங்கள் மக்களைக் கொல்வதில்லை.மனிதர்களே மக்களைக் கொல்கிறார்கள்.ஆயுதங்கள் மக்களைக் காப்பதற்கானது".எனும் மக்கள் விரோத ஏகாதிபத்தியக் கருத்தானது, இத்தகைய நோக்கு நிலையின் இன்னொரு வடிவமாகும்.இது தமது இருண்ட பக்கங்களான குவிப்புறுதிப் பொருளாதார முன்னெடுப்பின் வாயிலான அனைத்து வகைக் காரணிகளையும்,அது யுத்தமானதாக இருந்தாலென்ன அல்லது உயிர்கொல்லி ஆயுதத் தயாரிப்பானதாக இருந்தாலென்ன அனைத்தும் ஜனநாயகத்துக்கு உட்பட்ட மக்கள் நலனின் வெளிப்பாடாக்க முனைகின்றன.இதையும் வாந்தியெடுக்கும் தேனியின் அர்சுனனுக்கு தமிழ் மக்கள் இன்னும் விட்டேந்திகள்தாம்.



ப.வி.ஸ்ரீரங்கன்
24.09.2006

Sunday, September 17, 2006

மீண்டும் நாசிகளாகிவரும்...

ஜேர்மனியர்கள்:மீண்டும் நாசிகளாகிவரும்...


இந்தவுலகத்தில் மீண்டும்,மீண்டும் இனவாதிகளே மக்களின் அதீத பிரச்சனைகளுக்குத் தீர்வை வழங்கும் பிதாமக்களாகி வருகிறார்கள்.இதுவரை பலகோடி மக்களை இரத்த வெள்ளத்தில் அள்ளிச் செல்ல வழி வகுத்தவர்கள்,பல கோடி அப்பாவிகளை வருத்தித் தமது தொழிற்சாலைகளில் புதைத்தவர்கள்.இதனால் மாபெரும் நிதி மூலதனத்தைப் பெருக்கியவர்கள்.இவர்கள் எல்லோரும் முதலாளித்துவ உற்பத்திப் பொறி முறையின் பிதா மக்கள்!இவர்களின் தயவு மீளவும் ஒவ்வொரு இனங்களுக்கும் தேவையாக இருக்கிறது.இந்த இனவாதிகளை உற்பத்தி பண்ணும் இந்தப் பொருளாதார அமைப்பில், சிக்குப்பட்டுத் தவிக்கும் புலம்பெயர்ந்த மக்கள் படும் சிக்கல்களை, அவர்களே முழுமையாக அறிவதற்கில்லை.

தேசியத் தலைவன்:ஊடோ வைக்ற்
நம்மிடம் வந்து சேர்ந்த வானொலிகளும்,தொலைக்காட்சிகளும் சினிமாவையும்,நாடகத்தையும் உலகின் எல்லைகளாக்கியபின் நம் மக்களிடம் பரந்த உலக நடப்புகள்"என்ன செல்வி பார்தீரோ?"என்ற கதையாய் போகிறது!

இந்தப் புலம் பெயர்ந்த நாடுகளில் மெல்ல மாற்றமுறும் புறச் சூழலை நம்மில் எத்தனைபேர்கள் புரிந்து கொள்கிறோம்?

நமது வாழ்வும் சாவும் இங்குதாம் என்றாகிய பின்பும்
இது குறித்து என்னத்தைப் பார்க்கவேணும்?-நீங்கள் நகைப்பது புரிகிறது!

எமது அடுத்த தலைமுறை இங்கே வாழ்வது சாத்தியாமா?

அவர்களது கல்வி நேர்த்தியகச் செல்லும் சூழல் தொடர்ந்து நிலவ முடியுமா?

எங்கள் குழந்தைகள் எந்தக் கவலையுமின்றித் தனியே உலாவிக்கொள்ளும் இந்தச் புறச் சூழல் எதுவரை நீடிக்கும்?-இது கேள்விகள் மட்டுமல்ல.வாழ்வின்,எதிர்காலத்தின் நோக்கு நிலைகளும்தாம்!

இன்றைய ஐரோப்பிய அரசியல் சூழலில் இனவாதக் கட்சிகள்-நாசிகள் பதவிக்கு வருகிறார்கள்.

உப தலைவன்:கொல்கா அப்பில்


கொலண்டில்,
அவுஸ்திரியாவில்,
சுவிசில்,பிரான்சில்,டென்மார்க்கில்,
இப்போது ஜேர்மனியில்
பற்பல மாநிலத்தில் பலம்பொருந்திய கட்சியாகத்
தங்கள் உறுப்பினர்களை
பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.


இணைந்த ஜேர்மனியில் கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள இடைவெளி இருவேறு வகுப்பாக மக்களைக் கூறுபோட கிழக்கு ஜேர்மனியர்கள் பொருமுவதும் கூடவே மேற்கில் தம்மைவிட வேலை வாய்ப்புக்களோடு வாழும் அந்நிய தேசத்தவர்களை-கருப்பு நிறத்தவர்களைக் கண்டு பெரும் மன வதைக்குள் வீழ்ந்து அவர்கள்மீது தீராத பகையோடு வாழ்கிறார்கள்.இவர்கள் மிக இலகுவாக இனவாதக் கட்சிகளிடம்-நாசிகளிடம் தம்மை இழக்க, இந்த நாசிகளும் தொடர் தேர்தல் வெற்றிகளைச் சாதிக்கிறார்கள்.இது ஒரு சுருக்கமான விளக்கம்.

இதற்குப் பலபத்துக் காரணங்கள் உந்துதலாக இருக்கிறது அவற்றை விளக்கியெழுத நேரமில்லை.

இந்த ஜேர்மனியின் சமூகக் கட்டுக்குக் கீழே நாசியக் கருத்தியல் தொடர்ந்து நிலவுகிறது.இத்தகைய நிலையில் கருத்தியலை உருவாக்கும் வெகுஜன ஊடகமாகத் தொடர்ந்து இயங்கிவரும் கல்வி ,நாசியக் கனவுகளோடு நிலைபெற்று வருகிறது.இது அந்நிய எதிர்ப்பைத் தனது பிரச்சார யுத்திக்காகத் தொடர்வதும்,அத்தோடு அதை பொருளாதார மட்டத்தில் பிரச்சனைக்கான மூலகாரணமாகவும் காணுகிறது.இதுதாம் இன்றைய நாசிகளை வெற்றிக்கிட்டுச் செல்லும் திறவு கோலாகிறது.

நிதி மூலதனத்தின் தீராத பாய்ச்சலால் பற்பல தொழிற்சாலைகள் மலிவுக் கூலிக்காக மூன்றாம் உலகுக்கு உற்பத்தியை மாற்றிவிட, ஐரோப்பிய நாடுகளில் வேலையற்ற பட்டாளம் பெருகிக் கொள்கிறது.இதனால் இளைஞர்களின் வேலைவாய்பு இல்லாமல் போகிறது.

இளைஞர்கள் கொதித்துப்போய் வீதிகளில் அலைகிறார்கள்.நாசிகள் வலையைப் போடும்போது இவர்கள் வசமாய் மாட்டுவதும் சுலபமாகிறது.வீதியின் ஓரத்தே ஒரு கருப்பு மனிதனைக் காணும்போது அவனைத் தாக்கித் தமது வெறியைத் தீர்ப்பதும் நிகழ்கிறது.இது என்ன வகை எதிர்காலத்தை நமக்குத் தரும்?

நாளொன்றுக்குப் பத்துப் பேராவது நாசிகளால் ஜேர்மனியில் தாக்கப்படுகிறார்கள்.மாதத்தில் ஒருவராவது உயிர் பிரிய நேரிடுகிறது.இந்த இலட்சணத்தில் நாசிகள் ஆட்சிக்கட்டுக்கு வருகிறார்கள்.

ஆசிரியர்கள்,கல்வியாளர்கள்,ஊடகத்துறையினர்,

அரசவ+ழியர்கள்,நகரசபையினர்கள் என்று பற்பலரும் நாசியக் கருத்துகளுக்குள் தொடர்ந்து மூழ்கி வருகிறார்கள்.
அந்நியர்களைக் கொல்லும் அழிவுப்படை


வேலையற்ற பாட்டாளிகளும்,உதிரிப்பாட்டாளிகளும்,வேலையோடு ஏனோதானேவென்று வாழும் மனிதர்களும் நாசியத்தையும்,கிட்லரையும் விரும்புகிறார்கள்.

இதோ,இன்று நடந்த மாநிலத் தேர்தலில் நாசிக்கட்சியான என்.பீ.டி. வெற்றியீட்டியுள்ளது.

இதுவரை தொடர் வெற்றிகளோடு வளரும் இக் கட்சி கடந்த சக்ஷன் மாநிலத் தேர்தலில்(die NPD im September 2004 in Sachsen mit 9,4 Prozent für Aufsehen gesorgt) 9.4வீத வாக்குகளைப் பெற்று டசின் கணக்கான உறுப்பினர்களைப் பாராளுமன்றம் அனுப்பியது.இப்போது இன்றைய மெக்கலன்பேர்க் போர்பொம்மன் மாநிலத் தேர்தலிலும்(Die NPD hat bei der Landtagswahl in Mecklenburg-Vorpommern offenbar den Einzug in den Schweriner Landtag geschafft. Nach den Hochrechungen von Infratest dimap am Wahlabend kommen die Rechtsextremen auf rund sieben Prozent der Stimmen.) 7 வீத வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களை மாநில அவைக்கு அனுப்பி வைக்கிறது.

இது வரப்போகும் சோகம் நிறைந்த இனவாதத் தாக்குதல்களுக்கு
வழிவகுக்கும் அரசியல் வெற்றிகள்.

நாம் எதை அறிவோம்?

நமது நாடும் இனவாதிகளிடம் சிக்கித் தவிக்க,நாமும் வெள்ளை இனவாதிகளிடம் நமது வருங்காலச் சந்தததிகளைச் சிறைப்படுத்த நமக்கென்றொரு போராட்டம்,ஈழம்,தனிநாடு...

ப.வி.ஸ்ரீரங்கன்
17.09.2006

Saturday, September 16, 2006

இந்திய அமைச்சர்: பாரிய சொத்து...

இந்திய அமைச்சர்:ஜேர்மனியில் பாரிய சொத்து...


இன்று இந்த இந்தியத் தேசத்தில் பல கோடி மக்கள் வறுமையிலும்,வேலையில்லாத் திண்டாட்டத்திலும் கிடந்து செத்து வரும்போது, இந்திய அரசியல் வாதிகள்,அமைச்சர்கள் இந்தத் தேசத்தைச் சுரண்டி அந்நிய தேசங்களில் சொத்தைச் சேர்க்கிறார்கள்.இது இந்த மண்ணின் சாபக்கேடாகவே இருந்து வருகிறது.ஆட்சியில் இருக்கும் கட்சிகள் தமது ஆட்சிக்காலத்தில் மாநிலத்தையோ அல்லது முழுத்தேசத்தையோ முற்றுமுழுதாக மொட்டையடித்துத் தமது பினாமிகள் மூலமாகச் சொத்துக் குவிப்பது சர்வ சாதாரணமாகிறது.




இந்தியா மக்களின் வரிப்பணத்தை எப்படியெல்லாம் அரசியல்வாதிகள் கொள்ளையிட அனுமதிக்கிறது!

தேசியம்,தேசவொற்றுமை,தேசியக் கொண்டாட்டம்,இந்தியச் சுதந்திர தினமென்றெல்லாம் மக்களைக் குருட்டுத் தேசிய வெறிக்குள் கட்டிப்போட்டுத் தமது நலனை மையப்படுத்தி, இந்தத் தேசத்தைக் கொள்ளைபோடும் இந்திய அரசியல் வாதிகளை மக்கள் இனம் காணுவது மிக முக்கியமாகும்.


நானறிய ஜேர்மனியச் சிறு நகராமான சுவெலம்(Schwelm) ஆஸ்பத்திரியில் ஒரு கேராள மலையாளிக் குடும்பம்,பெயர் தடாதில்( Family Mercy and Joseph Thadathil)- கணவனும் மனைவியுமாக நோயாளிகளைப் பராமரிக்கும் தாதி வேலை பார்த்து வருகிறார்கள்.இவர்கள் மிகச் சாதரணமான"கண்காணி"(இலங்கையில் நோயாளிகளைப் பராமரிப்பவர்களை இப்படிக் கூறுவது வழமை)வேலை பார்ப்பவர்கள், பெரும் அடுக்குமாடி வீடமைத்து திறக்க முடியுமா?


43 வீடுகள் கொண்டதும் கூடவே வைத்தியர்கள் "கிளினிக்"வைப்பதற்கும் கடைகள் நடத்துவதற்குமான இந்தக் கட்டிடம் நிச்சியம் ஜேர்மனிய யுரோவில் 15 மில்லியன்கள் முடியும்.அதவது இந்திய ரூபாயில் 75 கோடிகளாகும்.

இவ்வளவு பெருந்தொகை முடியும் இக்கட்டிடத்தை ஒரு பெரும் தொழில் நிறுவனமே கட்டிக் கொள்ள முடியும்.


ஜேர்மனியில் இத்தகைய சிறு தொழிலாளக் குடும்பம் இதைச் சாத்தியமாக்க முடியாது.

தடாதில் குடும்பமோ மிகச் சாதாரணமான மருத்துவத் தாதித் தொழில் பார்ப்பவர்கள்.இதே வைத்திய சாலையில்(Marienhospital)-மாரியன் கொஸ்பிட்டலில்- எனக்குப் பல பெரும் மருத்துவர்களைத் தெரியும்.அந்த வைத்திய சாலையில் இன்று பெரும் மருத்துவப் பேராசிரியராகக் கடமை புரியும் ஒருவர் பெறும் மாதாந்தச் சம்பளம் வெறும் 4000.யுரோதாம்.இத்தகைய வைத்தியர்களே இப்படியொரு கட்டிடம் கட்ட முடியாது -ஏன் கட்டிடம் பற்றிப் பேசுவான்-தாம் சொந்தமாகக் குடியிருக்க ஒரு வீடு கட்டுவதே கடினமாக இருக்கும்போது, இந்த மருத்துவ தாதிக் குடும்பம் 15 மில்லியன் யுரோ பெறுமதியான தொடர் மாடிக் கட்டிடத்தைக் காகன்(Hagen) எனும் நகரத்தில் அமைத்து, இந்திய முதியவர்கள் மற்றும் வலது குறைந்தவர்களுக்கு ஏதுவாக உதவுவதாகச் சொல்கிறது.இந்தக் காகன் நகரத்தில் வாழும் மலையாளிகள் சுமார் 15 குடும்பமே உண்டு.இதற்குள் வயோதிபர்கள்...என்னவொரு சுத்து.


கேராளவில் பிறந்து வளர்ந்த மத்திய மந்திரி(வெளிவிவகாரம்) வயலார் இரவி தனது பினாமியாக இந்த மருத்துவத் தாதிக் குடும்பத்தை கொண்டிருப்பாரோவெனச் சந்தேகம் கொள்வது தவிர்க்க முடியவில்லை.


இந்தியாவில் நடுத்தெருவில் மனிதர்கள் படுத்துறங்கும்போது, இந்திய அதிகார வர்க்க அமைச்சர் தனது பினாமிய+டாக மக்களின் பணத்தில் தொடர்மாடி கட்டித் திறப்பு விழா நடாத்துகிறார்,ஜேர்மனியில்!(இதோ பத்திரிகைச் செய்தியைப் படிக்கவும்).


மருத்துவத் தாதிக் குடும்பமான தடாதில் பெறும் மாதாந்த வருமானமானது அண்ணளவாக 1600. யுரோவாகும்.கணவனும் மனைவியும் சுமார் 2800. யுரோவை மட்டுமே மாத வருமானமாகப் பெறமுடியும்.இதுள் செலவுகள் தள்ளி மீதாமாவது 1000.யுரோவாகும்.இவர்களால் 15 மில்லியன் பெறுமானமான கட்டிடத்துக்கு வங்கியில் கடன் பெற முடியுமா?மாதாந்தம் வங்கிக்கு கட்டவேண்டிய தொகை மட்டும் 60.000.யுரோவாக இருக்கும்,- கட்டுக்காசு.இது கடன் பெற்றிருந்தால்...

அல்லது இந்தக் குடும்பம் போதைப்பொருள் கடத்தியிருக்கவேண்டும்.இப்படியானவர்களிடமே இவ்வளவு பெருந்தொகை புரளும்.

இதைவிட இந்த ஜேர்மனி இவ்வளவு பெருந் தொகையில் வீடு கட்டும் ஒரு சாதாரணக் குடிமகனை எப்படியெல்லாமோ தோண்டித் துருவி இப்பணத்தின் மூலத்தைக் கண்டுவிடும்.

இது அமைச்சரின் பணம்.இந்தியாவிலிருந்து சுவிசுக்குப் போய், ஜேர்மனியை வந்தடைந்து இருக்கணும்.இப்படி வந்ததனால் ஜேர்மனிய அரசும் ஒத்துழைக்கிறது.


வாழ்க இந்திய ஜனநாயகம்!,வளர்க அவர்கள் தேச பக்தி!!

ப.வி.ஸ்ரீரங்கன்
16.09.2006

Friday, September 15, 2006

ஆனந்தசங்கரி:ஒரு பலி ஆடு!

ஆனந்தசங்கரி:ஒரு பலி ஆடு!


தமிழ் மக்களின் அபிலாசைகளென்பவை அதிகாரத்துவத்தை உள்ளார்ந்து நேசித்த தமிழ் மேட்டுக்குடிகளின் கோரிக்கையென்பதை நாம் பல முறைகள் கூறியிருக்கிறோம்.இந்த அதிகாரத்துக்கான நேசிப்பிடம் மக்களின் வாழ்வியல் சார்ந்த மதிப்பீடுகள்,அவர்களது உயிராதாரமான பொருள் வாழ்வு சார்ந்த கோரிக்கைகள் சிறிதளவும் அவர்களது(தமிழ் மக்கள்) நோக்கு நிலையிலிருந்து முன்வைக்கப்படவில்லை.இத்தகைய ஒரு அவலமான அரசியலைக் கடந்த காலத்துத் தமிழர்களின் ஓட்டுக் கட்சி அரசியல் செய்து வந்ததின் தொடர்ச்சியாகப் பற்பல அழிவுகள் நமக்கு வந்து சேர்ந்தன.


இத்தகையவர்களின் இருண்ட அரசியல் சூழ்ச்சிகளால் பலிகொள்ளப்பட்ட தமிழ்பேசும் மக்களின் பொருளாதார உயிர்வாழ்வானது சிதைந்து சின்னாபின்னமாகியபோது, நாம் அதைத் தொடர்ந்து அநுமதித்து வருவதற்கானவொரு அரசியலைத் தமிழரசுக் கட்சியென்ற "ஏகாதிபத்தியத்தின் கைக்கூலித் தமிழ் வக்கீல்கள் அடங்கியவொரு கூட்டம்" மிகக் கயமையானமுறையில் எமக்குள் திணித்தது.அது இலங்கைத் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமது நலன்சார்ந்த மதிப்பீடுகளால் கிரகித்துக் கணித்துக்கொண்டு நம்மீது சவாரி செய்தது.இத்தகையவொரு பாரம்பரியமிக்க கட்சியின் காலவதியாகிப்போன தலைவர் ஆனந்த சங்கரிக்கு இந்திய அநுசாரணையுடன்,ஊக்குவிப்புடன்,பரிந்துரைப்போடு "யுனெஸ்கோ விருது" வழங்கப்படுகிறது.இது விருதுகள் குறித்துப் பிரமிப்புகளைக்கொண்ட தமிழர்களுக்குத் துரோகமாகவும்,தமிழ்பேசும் மக்களுக்குத் துரோகஞ் செய்த ஆனந்தசங்கரிக்கு வழங்குவது முறையில்லையென்றும் சிறார்கள் கருத்தாடுகிறார்கள்.

இங்கே இத்தகைய விமர்சனங்களுடாக மறைக்கப்படும் அரசியலைப் புரிவது அவசியம்.சகாத்திய அகடமி விருதிலிருந்து நோபல் விருதுவரை அரசியல் நோக்கம் மறைமுகமாக இருக்கிறது.இந்த அரசியலுக்குள் ஆதிக்க சக்திகளின் ஆர்வங்கள்,பொருளாதார,அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன.இதைக் காரணமாகக் கண்டுகொள்ள முடியாத தமிழ்ச் சிறார்களுக்கு "துரோகி ஆனந்த சங்கரிக்கு விருதா" என்ற ஆத்திரம்.இது இயல்பாக வரக்கூடியதுதாம்.தமிழ்பேசும் மக்களின் இன்றைய அவல நிலைக்குத் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தாய்க் கட்சியிலிருந்து அன்றய தமிழர் மகாசபை(மகாதேவா: ஐம்பதுக்கு ஐம்பது...) வரை ஆழம் காணமுடியாத துரோகங்கள் நிறைந்த வரலாறு காரணமாகிறது.இதையெல்லாம் கருத்தில்கொள்ளும்போது ஆனந்த சங்கரியென்ற அரசியல் சகுனிக்கு விருது வழங்க முனையும் இந்தியாவுக்குப் பல ஆர்வங்கள் காரணமாவது நாம் புரிந்துகொள்ளத் தக்கதுதாம்!


இந்த விருதுகளினூடாகத் தனது நலன்களைக் காப்பதற்கானவொரு அரசியல் தலைமையைத் தமிழ்பேசும் இலங்கத் தமிழர்களிடம் தோற்றுவித்து,ஒளிவட்டம் கட்டும்போது,இத்தகைய ஆனந்த சங்கரிகள் மக்களின் அகிம்சைத் தலைவர்கள்,ஜனநாயகத் தலைவர்கள் என்ற காவடி ஏற்றப்பட்டு, உலக அரசியல் அரங்குக்கு அறிமுகமாக்கப்படுவது இந்திய அரசியல் விய+கத்தை இலங்கைக்குள் இழுத்து வந்து, அதை உலக அரங்கில் நியாயப்படுத்துவதற்குத்தாம்.இலங்கையில் இதுவரை ஆயுதப்போராட்டத்தைச் செய்யும் புலிகளை வெறும் ஆயுதக் குறுங் குழுவாக்கிய இந்தியா, இப்போது அந்தக் குறுங்குழுவுக்கு நிகரானவொரு அரசியல் தலைமையைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணிப்பதற்கும் அதையே தமிழ்பேசும் மக்களின் நியாயமான தீர்வுக்கானவொரு பெரும் சக்தியாவும் தூக்கி நிறுத்துவதில் இத்தகைய விருதுகள் முனைப்படைகின்றன.

சாரம்சத்தில் இலங்கையின் இனப்போராட்டமானது அந்நியத் தலையீட்டுக்குள் வீழ்த்தப்பட்ட வரலாறானது காலனித்துவக் காலத்திலிருந்தே தோற்றம் பெற்றிருப்பினும் அதை முற்றுமுழுதாக இந்தியச் செல்வாக்குக்குள் இறுகத் திணிப்பதற்கு இந்த ஆனந்த சங்கரிகள் அவசியமாகிறார்கள்.கூடவே ஆனந்த சங்கரியென்ற தமது கைக்கூலிக்கு சர்வதேச விளம்பரத்தையும், அங்கீகாரத்தையும் கோரும்போது, புலிகளின் கொலை அச்சுறுத்தலில் இருந்தும் தப்பிக்க வைப்பதற்கு இந்தியா மிகவும் பிரயத்தனப்படுகிறது.இன்றைய தமது நோக்கங்களைச் செவ்வனே செய்வதற்கும்,அதைக் "காலிப் பயல்" ஆனந்த சங்கரிய+டாக நியாயப்படுத்தவும், இந்த ஆனந்த சங்கரி அவசியமாகும்.இதைப் பொருட்படுத்திப் புலிகள் "ஆனந்த சங்கரியைப் போட்டால்" இலக்ஷ்மன் கதிர்காமனின் கொலை தந்த நெருக்கடியைவிட ஆனந்தசங்கரியின்மீதான கொலை மிகப்பெரும் அவப் பெயரையும் அரசியல் பின்னடைவையும் புலிகளுக்கு ஏற்படுத்தும்.இதை எதிர்பார்த்திருக்கும் இந்தியா நிச்சியம் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஆனந்த சங்கரியைத் தனது கூலிப்படையால் ஒரு நாள் கொன்று, புலிகள்மீது அரசியல் பின்னடைவைச் செய்யும்.ஒரு கல்லில் இரு மாங்காய் விழுத்த முனையும் இந்திய-இலங்கை இராஜதந்திரத்தின் ஒரு வெளிப்பாடே இந்த விருதும்,ஒளிவட்டமும்.


ஆனந்த சங்கரிக்கு அறிவு மங்கிப் பதவி ஆசை,ஆனால் இலங்கை-இந்திய இராஜ தந்திரமோ தமிழ் மக்களை அவர்களது தலைமையாலயே கருவறுக்கிறது.இதில் இவர்கள் பெரிய சாதனையைச் சாதித்தே வருகிறார்கள்.

புலிகள் அரசியலைக் காவு கொடுத்து இன்று இருபது வருடங்களுக்கு மேலாகிறது.எப்போது துரையைப்பாவைக் கொன்றார்களோ அன்றே அவர்கள் அரசியல் மக்குகள் ஆனார்கள்.இதிலிருந்து மீண்டு ஒரு புது யுகம் தமிழ்பேசும் மக்களுக்கு உதயமாவதற்குப் புலிகள் தம்மைத் தயார்ப்படுத்தாதவரை இத்தகைய அந்நிய அரசியல் விய+கத்தை உடைத்தெறிய முடியாது.

புலிகள் என்ன செய்தாகவேண்டும்?

தமிழ்பேசும் மக்களின் நலன்களை மையப்படுத்திய கோரிக்கைகளை முன் வைத்து அவர்களைப் போராடத் தூண்டுவதும்,தமிழ் இடதுசாரிகளை தமது வன்முறைக்குப் பலியாக்காது அவர்களைச் சுதந்திரமாக இயங்க விடுவதும்,அத்தகைய தரணத்தில் மக்களின் நலன்சார்ந்து தமது அமைப்பை மத்திய குழுவின் ஆதிக்கத்துள் கொணர்வதும்,நியாயமான உட்கட்சி ஜனநாயகத்தைக் கோரித் தலைமையைத் தோற்றுவதும், புலி இராணுவத்தைப் புரட்சிகர யுத்த தந்திரோபாயத்துக்குள் திணித்து, அவர்கயைப் புரட்சிப்படையாகக் கட்டிக் கொள்வதும் அவசியமாக இருக்கிறது.இதனடிப்படையில் புரட்சிகர அரசியலை உள்வாங்கிச் சர்வதேச அரசியலை முன்னெடுக்காதுபோனால் புலிகளின் அழிவோடு, தமிழர்களின் அனைத்து உரிமைகளும் அம்போதாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
15.09.2004

Sunday, September 10, 2006

தேசிய அரசும்,புலிகளும்...

தேசிய அரசும்,புலிகளும்
அந்நிய விய+கமும்.


>>இலங்கையின் ஓட்டுக் கட்சிகள்-போராளிக் குழுக்கள் அந்நியக் காலில் விழ்த்துவது இலங்கையின் எதிர்காலச் சந்ததியையே,எம் மக்களையும் தேசத்தையும் திருடும் யுத்தப் பிரபுக்களை நாம் அம்பலப்படுத்துவோம்-அறிவோம்.<<
(இலங்கையின் சிங்களக் கட்சிகளின் தலைவர்கள்தம் குழந்தை குட்டிகள் வெளிநாடுகளில்
படிப்பதும்,வாழ்வதும்போன்றே புலிப்பிரமுகர்களின் மனைவிமார்கள் குழந்தைகள்
வெளிநாட்டில் வாழ்வதும்,படிப்பதும் சாத்தியமாகியுள்ளது.-இதுவொரு அரசியல்.ஆனால்
நாமதைப் புரிந்து கொள்வது அவசியம்.இந்தவொரு முனையில் அமெரிக்க-ஐரோப்பிய அரசுகள்
எங்ஙனம் நேர்கோட்டில் சிந்திக்கின்றனவென்பதைக் கட்டுரையின் பின்பகுதியில்புரிந்து
கொள்ள முனைவோம்.)

இன்று, இலங்கை இனப்பிரச்சனைக்காகவே ஒரு தேசிய அரசாங்கம் அவசியமாக இருப்பதாகவும்,அதன் வழி முழுமொத்தக் கட்சிகளையும் ஒரு நோக்கத்துக்குள் இணைத்து, இலங்கை இனங்களுக்குள் நிலவும் முரண்பாட்டைத் தீர்த்திடலாமென அரசியல் பரப்புரைகள் நகர்த்தப்படுகிறது.இத்தகைய பரப்புரைக்கு ஏலவே திட்டமிட்டு, கருத்தியல் தளமொன்றை மெல்லவுருவாக்கிய அரசியல் நகர்வுக்குப் பற்பல சிறு குழுக்களும்,புலிகளுக்கு எதிரான-புலிகளால் எதிர் நிலைக்குத் தள்ளப்பட்ட அமைப்புகளும்,அத்தகைய அமைப்பகளுக்குச் சாமரம் வீசிப் பதவிகளைப் பணத்தைப் பெறும் தனி நபர்களும்,இன்னும் ஜனநாயத்தையும்,அரசியல் அமைதியையும்,இனப்பிரச்சனையையும்-தீர்வையும்; அப்பாவித்தனமாகப் புரிந்த சாதரண நபர்களும் பக்கப்பலமாகவிருந்து, இந்தத் தேசிய அரசாங்கம் எனும் விய+கத்துக்கு மக்கள் கருத்தாரவுப் பலத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

சமீத்து அரசியல் காய் நகர்த்தலில் மலையக மக்கள் முன்னணியும்,இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் கூட்டாகவே ஆளும் இராஜபக்ஷ ஆட்சியுடன் இணைக்கப்பட்டதும்,அந்தக் கட்சிகளின் சுயதீனமான முடிவோ அல்லது அவைகளின் ஊசாலாட்டமான முதலாளித்துவ உள்ளடக்கத்தின் வினையாற்றலோ காரணமாக இருப்பதற்கல்லவென்பதும் பலருக்குப் புரிந்த விடையம்தாம்.கடந்தகாலத்திலிருந்து இன்றைய தேசிய அரசாங்கக் கருவ+லம் வளர்த்தெடுக்கப்பட்டது.இது முற்றுமுழுதான அந்நிய, அதுவும் இந்திய இராஜதந்திரத்தினது- ஒரு விய+கத்தின் விளைவானதென்பதும் அதை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிதி மூலதன-இராணுவ ஆர்வங்களினதும்,அத்தகைய ஆர்வங்களின் அரசியல் நகர்வும் ஒப்புதல்களோடு வழிமொழிந்திருப்பதும் இன்றைக்கு மேற்காணும் இரண்டு கட்சிகள் மலையகத்தமிழ் மக்களின் ஒத்திசைவாக இலங்கையரசுடன் இணைகின்றன.இங்கே இஸ்லாமியக் கட்சிகளை ஒரு ஓரத்தில் இணைத்தும், இணைய விடாமலும் தடுத்துக்கொண்டு அரசியல் விய+கத்தை இந்திய அரசு தெளிவாக நகர்த்த முனைவதில் முனைப்பாக இருக்கிறது.

இத்தகைய ஒரு அரசியல் விய+கத் திட்டமிடலில் ஜே.வி.பீ.போன்ற கட்சியை வெறும் இனவாதக்கட்சியினுடைய உள்ளடக்கமாகக் காட்டியபடி அந்தக்கட்சியின் அட்டகாசமான இனத்துவ வெளிப்பாடாகவும் தாம் வழங்கும்-அல்லது பிரேரிக்கும் அரசியல் தீர்வுப் பொதிகளை எதிர்தொதுக்கும் சிங்களச் சமுதாயத்துக்குள் ஒரு பலமிக்கட்சியாகவும் அடையாளப்படுத்த விரும்பும் இந்தியா நமது மக்களினதும்,புலிகளினதும் பாரிய முரண்பாடான ஜனநாயக விழுமியத்தை இன்னும் கூர்மைப்படுத்திக் கொண்டே இத்தகைய ஒரு மிகத் திட்டமிட்ட அரசியல் நகர்வை வலு நிதானமாக நகர்த்தி வருகிறது!

ஈழக் கோசம்:

இந்தப் போராட்டம்,அதாவது ஈழத்துக்கான போராட்டம் என்பது சாரம்சத்தில் காலவதியாகிவிட்டது.இதைக் காலவதியாக்கிய ஜனநாயகத்துக்கான-இயல்பு வாழ்வுக்கான கோரிக்கைகள் புலிகளின் உள்ளார்ந்த அராஜகத்தின்-பாசிச அடக்கு முறைகளிலிருந்து மக்களின் குரல்களாகவும்,உரிமையாகவும் இனம்காணத்தக்கவொரு அரசியற் கோரிக்கையின் அதிமுக்கிய வெளிப்பாடாக முகிழ்த்தபோது,மக்களின் உரிமைகளை அழித்தொதுக்கும் ஒரு அராஜக இனவொடுக்குமுறையரசே தன்னை மக்களின்-தமிழ் பேசும் மக்களின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் கபடம் நிறைந்த அரசியல் நகர்வுக்கு இஃது பாத்திரமாகிறது.இப்போது"ஈழம்"எனும் அரசியற் கோசம் ஒருவிதக் கேலித்தனமான சொற்றொடராகப் பார்க்கப்படுவதும்,இத்தகைய கோசத்தால் அழிக்கப்பட்ட ஒரு இலட்சம் உயிர்களினதும்,சொத்துக்களினதும்,பாதிக்கப்பட்ட வாழ் சூழலினதும்,இடம் பெயர்ந்து அகதிகளான மக்களினதும் சோகம் கப்பிய வரலாற்றின் பிரிதியாக நம் முன் நிற்கிறது.இந்தப் போராட்டக் கோசம் எமது சந்ததிக்குச் சொல்லப் போகும் வரலாற்றுப்பாடமானது-துரோகம் நிறைந்த போராட்டத்தின் பலனாக-இந்திய-சிங்கள,அந்நிய அரசுகளின்- புலிகளின் அரசியலையல்ல.மாறாக எமது சமூகப் பண்பாட்டினது இயலாமையையும்,அதன் வீரியமற்றச் சிந்தனையோட்டத்தையும் வரலாறு பதிந்து செல்லும்.

கடந்த காலங்களின் வரலாறானது "அந்நிய ஆக்கிரமிப்புக்கும்,அழிவுக்கும்,கொலனித்துவ அடக்கு முறைக்கும் உட்பட்ட இந்திய நிலப்பரப்பு" என்பதாக இருக்கும்போது,அத்தகைய நிலைக்குள் மிகச் சுலபமாக வீழ்த்தப்பட்ட இந்தப் பாரிய அகண்ட நிலப்பிரதேசத்தின் இயலாமையென்பது அதன் சமூகப் புறநிலைகளையும்,பண்பாட்டுச் செழுமையற்ற அறிவுப் பரப்பையும் நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டும்போது,வெறுமனவே "நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததால் அந்நியர்களிடம் தோற்றோம்" என்பதாக இன்று சொல்வதுபோல், நாளை ஈழத் தமிழ் மக்கள் சொல்வதற்கு ஒன்று இருக்கும்.அது பெரும்பாலும் புலிகளென்ற ஒரு அமைப்பைக் காரணப்படுத்தும் சமூக உளவியலாக விரிந்து பொருள் வாழ்வுக்குள் பிரபாகரன் என்று வழங்கும்.இது காலத்தால் தவிர்க்க முடியாத வரலாற்று நிகழ்வாக மாற்றப்பட்டு வரும் அரசியலின் வெளிப்பாடே இப்போது "தேசிய அரசாங்கம்"என்ற அரசியல் விய+கத்தில் நிலைப்படும் இராஜ தந்திரமாகும்.


இலங்கையென்பது இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட நிலப் பிரதேசம் என்பதும்,இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சமூகவுறுகளின் இறமைக்கு அதி முக்கிய பாத்திரம்பெறும் வலையமென்பதும் உண்மையாக இருப்பதால்,பண்டுதொட்டு இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் முடிவுகள்,விருப்பங்கள்,ஆர்வங்கள்,ஆதிக்கங்கள் சங்கிலித் தொடராகப் பின்னப்பட்டு வருகிறது.இந்த இந்தியாவென்ற ஒரு தேச அரசியல் கட்டுமானமானது பிராந்திய ஆதிகத்தின் வெளிப்பாட்டோடு முன் நிறுத்தப்படும் பாரிய யுத்த ஜந்திரத்தோடு"உலகின் பாரிய ஜனநாயக நாடு"என்று பிரகடனம் பெறுகிறது.இந்த நாட்டைப்பற்றிய அரை குறைப் புரிதலின் வெளிப்பாடே நமது போராட்டச் செல் நெறியில்-தந்திரோபாயத்தில் மாபெரும் தவறையேற்படுத்தியது.

எமது மக்களின் விலங்கையொடிப்பதற்காகப் புறப்பட்ட இளைஞர்களை தகுந்த வழிகளில் அரசியல் மயப்படுத்தி,அவர்களைப் புரட்சிகரப் படையணியாகத் திரட்ட வக்கற்ற தமிழ்ச் சிந்தனா முறையானது வெறும் பித்தலாட்டமாக இந்தியா குறித்துக் கருத்துக்களை 80 களில் வெளிப்படுத்தியது."இந்தியா வென்பது உலகத்துக்கு முற்போக்கு நாடாகக் காட்டுவதால் அது தமிழீழக் கோரிக்கையை-தமிழீழத்தை தவிர்க்க முடியாது அங்கீகரித்துத் தன்னை முற்போக்காகக் காட்டும்"என்று நமது அரசியல் வல்லுநர்கள் அன்று புலம்பிச் சொதப்பினார்கள்(இத்தகைய நிலையில் ஓரளவு ஸ்தாபன ஆற்றலுள்ள விஸ்வா நந்ததேவன் போன்றவர்களை அன்றைய புலிப் பினாமிகள் இலங்கையரசின் துணையுடன் கொன்றொழித்தார்கள்).பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடு இந்தியா, எனவே ஈழத்தையும் அங்கீகரித்துத் தமிழர்களுக்குச் சாதகமான நாடாக இருக்குமென்றும் மனப்பால் குடித்த ஈழத் தமிழ் (அரசியல் கைக் குழந்தை) வல்லுநகர்களை அன்றே எள்ளி நகையாடிய சிங்கள அரசியல் தந்திரம் இன்று மிக அற்புதமாகத் தமிழர்களின் உரிமைகளை மறுத்தொதுக்கிவிட்டுப் "புலிப் பயங்கரவாதம்"குறித்து அரசியல் நடாத்த முடிகிறது.இது எவ்வளவு தூரம் நமது முட்டாள்தனத்தைப் பறைசாற்றி வருகிறது!

தேசிய அரசாங்கம்:

இன்றிருக்கும் இலங்கைப் பொருளாதாரச் சமூக வாழ்நிலையில் தேசிய அரசாங்கமெனும் கருவ+லம் எந்த நோக்கு நிலையில் கட்டியமைக்க முனைப்புப் பெறுகிறது,இதன் தேவை யாருக்கு அவசியமானது?


இந்தக் கேள்வியைப் பெரும்பாலும் இலங்கை வாழ் அனைத்து இன மக்களுக்குமான நோக்கு நிலையிலிருந்தே நாம் கேட்கின்றோம்!


கடந்த காலத்தைப்போல் இலங்கையின்; சமூக வாழ்நிலை இன்றில்லை!இன்றைய இலங்கையானது பாரிய மனித அவலத்துக்குச் சொந்தமான இராணுவப் பொருளாதாரத்துக்குள் மையங் கொண்ட இலங்கையாகும்.இந்த இலங்கை அரை இராணுவச் சர்வதிகாரத்துக்குள்ளும் அரைக் காலனித்துவத்துக்குள்ளும் அரசியல் பலமற்றுக் கிடந்தலையும் இலங்கையாக நிலை பெற்றுவிட்டது.முன்னைய இலங்கையில் நிலவிய பெயரளவிலான ஜனநாயகப் பண்புகளே இன்று துளியுமின்றிக் காட்டாட்சியாக மாறிவரும் இலங்கைக்கு ஒரு தேசிய அரசு தேவையாக இருக்கிறது!


இது நாள்வரை தேசிய அரசெனும் கருவ+லத்தை தமது வர்க்க நலன் கருதி, ஒவ்வொரு இனத்துக்குள்ளும் இருக்கும் ஆளும் வர்க்கங்கள் தத்தமது அரசியல் பாகப்பிரிவினைக்காகப் பேரங்களில் ஈடுபட்டபோது "இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சிப்போக்கிலெழுந்த முரண்பாடுகளை"-அமெரிக்க உளவுப்படை தனக்குச் சாதகமாகப் பாவிக்க வழிவகுத்துக்கொடுத்தும்- ஒவ்வொருவினமும் ஒருவரையொருவர் தலைவெட்டப் பாவித்துச் சிதைத்து வந்திருக்கிறார்கள்.இத்தகையவொரு நிலையில் மக்கள் நலன் சார்ந்த தேசிய அரசு என்ற இந்தக் கோரிக்கை வெறும் இனத்துவ அடையாளத்தைமீறிப் பொதுத் தேசத்தின் அபிவிருத்தியோடும்,தேசிய இனங்களுக்குள் குறைந்தபட்ச சமத்துவத்தைக் கோருவதற்கான வாய்ப்பாகவும் பார்க்கப்பட்ட ஒரு வடிவமாக முதலாளித்துவ ஜனநாயகத்தில் இருக்கிறதென்று பலர் கருத்தாடுகிறார்கள்.ஆனால் இந்தவுண்மையானது எந்தச் சந்தர்ப்பத்தில் சாத்தியமாகுமென்று பார்த்தால் அது பெரும்பாலும் முதலாளித்துவத்தின் அதீத வளர்ச்சிப்போக்கில்- முதலாளித்துவம் பாரிய வளர்ச்சியை எட்டிக்கொண்டு- சமூக வளர்ச்சிப் படிகளை மிக விருத்திக்கிட்டுச் சென்றிருக்கும் வளர்ச்சியடைந்தவொரு சமூகத்திலேயே இது சாத்தியமானவொரு விளைவைத் தரும்.


இலங்கையிச் சமூகமானது மிகவும் பின் தங்கிய நிலப்பிரபுத்துவ எச்சொச்சங்களையும்,தரகு முதலாளித்துவத்தின் மிகக் கேவலமான நுகர்வடிமைச் சமூகக் கூறுகளையுங்கொண்ட மனிதக் குழுக்களாகப் பின் தங்கியிருக்கும்போது இத்தகையவொரு இலங்கையில் தேசிய அரசுவென்ற கானல் நீர் அந்நிய ஆர்வங்களினது மிகத் தெளிந்த நோக்கங்களுக்காக இலங்கையில் முன் தள்ளப்படுகிறது.இத்தகைய தேசிய அரசாங்கமெனும் இந்த அரசியல் நாடகமானது இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தொடர்ந்து நீறுப+த்த நெருப்பாக வைத்திருப்பதற்காத் தூவப்படும் ஒரு இரசாயனக் கலவைதாம்.இது இலங்கையினது எந்த இனப்பிரிவுக்கும் சாதகமான வளர்ச்சிப்படிகளையும் தன்னகத்தே வைத்திருக்கவில்லை.முற்றுமுழுதாக இலங்கையை அந்நிய-பிராந்திய ஆதிக்கத்துக்குள் கட்டிவைத்திருக்கவும் அந்த ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தவுமே இது அரசியல் விய+கமாக விரிகிறது.

இந்தியா பிராந்தியப் பொலிஸ்காரன்:

இன்றைய இந்தியாவானது தனது பிராந்தியப் பொலிஸ்காரன் பதவியைத் தொடர்ந்து ஊசலாட்டத்தோடு காப்பாற்றி வருகிறது.இதன் பாத்திரம் மிகவும் பலவீனப்பட்டுள்ளது.நிதிமூலதனத்தின் அதீதப் பாய்ச்சலானது தொடர்ந்து முதலாளித்துவ ஆர்வங்களை மையப்படுத்திய பெரும் தொழிற்கழகங்களுக்கே சாதகமான அரசியல் வெற்றிகளைத் தந்துகொண்டிருக்கிறது.இது பெரும்பாலும் அமெரிக்க-ஐரோப்பிய முதலீட்டுக் கழகங்களுக்கே சாதகமான எதிர்காலத்தைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.இத்தகைய தரணத்தில் தொடர் தோல்வியைச் சந்திக்கும் இந்தியத் தரகு முதலாளிய வர்க்கத்துக்கு இந்த ஐரோப்பிய-அமெரிக்க அரசுகளோடும் அவர்களின் ஏஜமானர்களான பெரும் தொழிற்கழகங்களோடும் விட்டுக்கொடுப்பு, அரசியல்-பொருளியலுக்கு சமரசமத் தேவையாக இருக்கிறது.


இந்தியத் தேசத்தின் சுயயாண்மையைக்கூட விட்டுக்கொடுக்கும் நிலைக்கு இந்தியக் காங்கிரசுக் கயவாளிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.இதற்கான உந்துதல் இந்தியப் பெரும் தரகு முலாளிகளிடமிருந்து தொடர் தாக்குதலாகக் கட்சி அரசியலுக்குள் தோற்றம் பெறும்போது,அமெரிக்காவுக்கு இந்தியாவின் இயற்கை வளங்களைத் தாரவார்த்துத் தென்னாசியப் பிராந்தியத்தின் சந்தயைத் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்தியா முனைகிறது.ஆனால் இந்தக் கனவைத் தொடர்ந்து, இந்தியா ஆற்றும் பிராந்திய அரசியல் முன்னெடுப்புகள் இலங்கையிலொரு ஸத்திரமான அரசியல் முன்னெடுப்பையும் அது சார்ந்த இந்திய ஆதிகத்தையும்,இந்தியாவின் நலன்களுக்கான இலங்கையாக வைத்திருக்க விரும்புகிறது.தொடர்ந்து இலங்கை யுத்தத்துக்குள் மூழ்கும்போது இந்தியாவைத் தவிர்த்த பல வகை நலன்களைக் குறிவைத்து இலங்கைக்குள் கால் வைக்கும் அந்நிய ஆர்வங்கள் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு எதிராகவும் இந்தியாவின் சந்தைப்படுத்தும் வலுவையும் மிகப் பலவீனப்படுத்தி, இந்தியத் தரகு முதலாளிகளின் பொருள் உற்பத்தியைப் பெரிதும் பாதிக்கும்.


யுத்தம் செய்யும் சமுதாயம் தனது வலுவுக்குள் எந்தவொரு கட்டமைப்பையும் கொண்டிருப்பதில்லை.இது அரசியல் விஞ்ஞானத்தில் மிகத் தெளிவாக நாம் உணரத்தக்கது.இந்தச் சூழலில் இலங்கைபோன்ற மிகவும் பின் தங்கிய-எந்தச் சமூகவுற்பத்தியையும் தனது சொந்த முயற்சியால் முன்னெடுக்காதவொரு நாட்டில் "எந்தச் சுயாண்மையும்" நிலவ முடியாது.இதுதாம் இன்றைய இலங்கையில் யுத்தத்தை"ரெண்டரில்"(குத்தகைக்கு)எடுத்த அந்நிய சக்திகள் தமது வலுவுக்கேற்ற வடிவில் இலங்கைச் சிங்கள-தமிழ் அடியாட்படைகளைத் தகவமைத்து யுத்தத்தைச் செய்து வருகிறார்கள்.தமது சந்தையில் தேங்கிக்கிடக்கும் சிறு இரக ஆயுதங்களை விற்றுத் தொலைப்பதும் அதன் வருமானத்தில் புதிய கனரக ஆயுதங்களின் ஆய்வுகளுக்கு நிதி முதலிடவும் அவசியமாக இருக்கிறது.இது ஒரு பகுதியுண்மை என்பதும் மற்றைய பகுதியுண்மை தொழிற்சாலைகளின் எதிர்காலப் பொருள் உற்பத்திக்கான மூலவளத் தேவையை மையப்படுத்தியதாகவும் விரிகிறது.இன்றைய தொழிற்கழகங்கள் சக்திசார்ந்த"எரிபொருள்,மின்சாரம்"மற்றும் இரும்பு,இரசாயனத் தேவைகளையே எதிர்காலத்தின் அதி முக்கிய உற்பத்தி ஊக்கமாகக் கொள்கிறார்கள்.இதன்படி மூலவளத்தை உறுதிப்படுத்துவதும்,தேவைக்கேற்ப உடனடிப் பயன்பாட்டுக்குள் கொணர்வதற்கான வாய்புகளுக்காகவும் பற்பல சதிகளில் ஈடுபடுகின்றன.இதற்காக தத்தமது நாடுகளின் தூதர்களை இதுசார்ந்த பொறிமுறைக்குள் இணைக்கிறார்கள்.இந்தியாவினது இந்தத் தேசிய அரசுக்கான கனவு இலங்கையில் பலித்திடுவதற்கான அங்கீகாரத்தை அமெரிக்கா வழங்கியிருப்பினும் அந்த அரசியலில் புலிகளை வீழத்;தி முறியடிக்காதும் பார்த்துக்கொள்கிறது.புலிகள் இல்லாத இலங்கையை ஐரோப்பிய-அமெரிக்க நலன்கள் விரும்புவதில்லை.
தொடரும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
10.09.2006

Friday, September 01, 2006

துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!(4)

துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!(4)


நாடுகளும்,யுத்தமும்- உதவியும்.

லெபானானுக்கான நிதி வழங்கும் கூட்டம் இன்று இஸ்ரொக்கோல்ம் சுவீடனில் நடைபெறுகிறது.அறுபது அரசுகளும்,அமைப்புகளும் பங்குபெறும் இக்கூட்டத்தில் ஜேர்மனி 22மில்லியன்கள் யுரோவை லெபனானுக்கு உதவுவதாக உறுதிகூறியிருக்கிறது.கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுமாக 500.மில்லியன்கள் டொலர்களை உதவியாக வழங்குவதாகச் செய்தியொன்று கூறுகிறது.

இன்று ஈரானுக்கான காலக்கெடு முடிவுக்கு வருகிறது.


அணு குண்டைத் தயாரிப்பதற்கான"Uran-235(யுரேனியம-;235, வெடிப்புச்சக்தி பிளப்பு மூலமானது!(Explosionsenergie aus der spaltug von Uran -235 oder Plutonium-239)இதனாலான குண்டு கீரோசீமாவின் மீது கொட்டப்பட்டுப் பரிசோதித்த அமெரிக்கா ஓப்பன்கைமர்,சினைடர்(goldene Liste) பயங்கரவாதிகளால் உலக அணுவல்லரசானது.)Plutonium- 239(இந்த மூலகத்தால் வெடிக்க வைக்கப்பட்ட குண்டு நாகசாகிமீது விழுந்து வெடித்தது.இதையும் அமெரிக்கா பரீசீலித்துக் கொண்டது.கீராசீமாவில் யுரேனியம-;235 ம்,நாகசாகியில் புளுட்டோனியம்-239 ம் குண்டுகளாக வெடிக்க வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.)போன்றதைப் பெற்று அணுக்குண்டைத் தயாரித்துவிட ஈரான் முயல்கிறது.


இதைத் தடுத்துவிட உலக வல்லரசுகள் முயல்கின்றன.(1939 இல் கோதாரி பிடித்த நீல் போரும்,ஜோன் ஆர்ச்சிபெல் வீலரும் அணுப்பிளப்புத் தியரியை விளங்க முற்படும்போது,ஓப்பன்கைமரும் அவனது கூட்டாளிகளும் அணுக்குண்டைத் தயாரித்துக் கொடுக்கும் வேலையில் அமெரிக்க அரசோடு முனைந்தான்.கீரோசீமாவிலும்,நாகசாகியிலும் பல்லாயிரம் மக்களைக் கொன்று பரிசீலிக்கப்பட்ட அணுக் குண்டுகளால் வேதனையடைந்த திரு.வீலர் சொல்கிறார்:"நான் அதை மீளத் திரும்பிப் பார்ப்பேனானால்-அதாவது நானும் போரும் இணைந்து உருவாக்கிய அணுப்பிளப்புத் தரவுகளை-எனக்குள் நான் கவலை கொள்கிறேன்."ஓப்பன் கைமர் கூறுகிறான்:"யுத்தம் செய்யும் உலகுக்கு அணுக்குண்டு புதிய ஆயுதமாக ஆயுதக்கிடங்குக்குள் இருக்கும்,அல்லது ஆயுதக்கிடங்கிலிருந்து நாடுகள் யுத்தத்துக்குத் தயாராவார்கள்,அப்போது லோஸ் அலாமோஸ் எனம் பெயரும் கீரோசீமாவின் சபிப்பும் மனித கணங்களுக்குள் வரும்."-லோஸ் அலோமாஸ் விஞ்ஞானிகள் சந்திப்பின்(16.10.1945) உரை.)


ஈரானிய ஜனாதிபதி அமாடினெட்ஷா கூறுகிறார்:"நாங்கள் எங்கள் வரலாற்றுத் தேவையை தவிர்க்க முடியாது.நாம் அணுத் தேவையை யாருக்காகவும் தவிர்ப்பதற்கில்லை."


அமெரிக்கப் பயங்கரவாதி புஷ் உடனடியாக பதறியடித்துக் கத்துறான்:"நாங்கள் ஈரான் அணுக்குண்டு தயாரிப்பதை அநுமதிக்க முடியாது."


நல்லது!


லெபனானுக்கு 500 மில்லியன்கள்,
ஈரானுக்குப் பொருளாதாரத்தடை?


சமீபகாலத்தில் சதாமின் ஈராக்குக்கு வழங்கப்பட்ட பொருளாதாரத் தண்டனை ஐந்து இலட்சம் பாலகர்களைப் பாடையில் அனுப்பியது.வைத்தியர்களின் விழிகள்முன்னே நோய்க்கிருமி தாக்கிய பாலகர்கள் சிறிது சிறிதாகச் செத்து மடிந்தார்கள்.இக் குழந்தைகளுக்கு "அன்ரிபாற்றிக்"(எதிர்ப்பு நுண்கிருமி)கொடுப்பதற்கு ஒரு துளியும் ஈராக்கில் இருக்கவில்லை.

தலை சுற்றுகிறது.

ஈரான் எவ்வளவு குழந்தைகளை இழக்கும்?

இன்றைய ஆளும் வர்க்கங்கள் தத்தமது முரண்பாடுகளையும் யுத்தச் சம நிலைகளையும் அணுவால் சம நிலைப்படுத்த முனைகின்றன.உலகிலுள்ள மனிதர்கள்தம் நலன்களை மையப்படுத்திய எந்த நோக்கு நிலையும் நிதி மூலதனத்துக்கும் அதன் இலாபத்துக்கும் கிடையாது.அங்கே யுத்தங்களே மனிதர்களைக் கொல்வதற்கான கருவியாகப் பயன்படுகின்றன.இவை முற்றுமுழுதாகப் முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையின் அடிப்படையான தேவையாக இருக்கிறது.

லெபனானைக் அடித்து நொருக்கிறது அமெரிக்காவின் அடியாள்.பின்பு அதே அமெரிக்கக் கூட்டு அபிவிருத்தியுதவியாகச் செயற்பட முனைகிறது.

எதற்காக இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டார்கள்?

இவ்வளவு பெருந்தொகையாக மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக மாறியது எதற்காக?

எல்லாம் கனிவளத்தின் "பாதுகாப்பு-எடுத்தல்-சொந்தமாக்கிக்கொள்ளல்-தடங்கலற்ற கடற்பாதை."என்று மூலப்பொருள்களுக்கான தொடர் வினைகளே இவ்யுத்தத்துக்குக் காரணமாக இருக்கிறது.இங்கே லெபனானுக்குள் வந்திறங்கவிருக்கும் தத்தமது இராணுவத்துக்கான செலவுகளுக்கே இவ் உதவி வழங்கப்படுகிறது.ஆனால் பெயரென்னவோ மீள்கட்டுமானத்துக்கான உதவி.இந்த உதவியை லெபனான் வட்டியுடன் கட்டியாகவேண்டும்.அதாவது ஐ.நா.துருப்புகளின் செலவுக்கு ஒரு நாடு கடன்படுகிறது.

ஜேர்மனி சொல்கிறது.:"Die Bundesregierung stelt 22 millionen Euro fuer den wiederaufbau des Lebanon.das Geld solle fuer die Verbesserung von Grenzkontrollen und den wiederaufbau der wasser vorsorgug eingestzt werden.-N.TV Nachrichten.""ஜேர்மனிய அரசு 22மில்லியன்கள் யுரோவை லெபனானின் மீள்கட்டுமானப்பணிக்காக இடுகிறது.இப்பணத்தை லெபனானின் எல்லைப் புறங்களை சிறப்பாகக் கண்காணிப்பதற்கும் குடிநீர் விநியோக மீள் கட்டுமானத்துக்கும் பயன்படுத்துவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்."


ஆதிக்கவாதிகள் தமது நலன்களை மெல்ல இத்தகைய வார்த்தைகளுக்கூடாகவே வெளிப்படுத்தி விடுகிறார்கள்.லெபனானின் கடல் குடா 250 கி.மீ.தூரம்.இது மத்திய கடலுக்குள் இருக்கிறது.இதைக் கண்காணிக்கும் பொறுப்பு ஜேர்மனியக் கடற்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.உலகத்தில் அதி நிவீன நீர்மூழ்கிக் கப்பலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 600 மில்லியன்கள் யுரோவுக்கு உருவாக்கிய நாடு ஜேர்மனி.இப்போது புரிகிறதா?எவரிடம் எதைக் கொடுக்கவேண்டுமென அமெரிக்க மாமாக்களுக்குப் புரிந்தே இருக்கு!"G3,MP5,HK21"(Heckler&Koch) இவைகளின் தாய் நாடல்லவா!இவர்கள்தாம் பணத்தைத் தமது கடற்படையின் செலவுக்கு வழங்கிவிட்டு,அதையே வட்டியுடன் அறவிடப் போகிறார்கள்.நல்ல வியாபாரம்.

மக்கள் தொடர்ந்து யுத்தங்களால் தமது வாழ்வைப் பறிகொடுப்பதும்,அதை மீளப் பெறுவதற்கும்,உயிர்வாழும் உத்தரவாதத்துக்கும் சதா அகதி முகாங்களில் தவமிருப்பதும் இன்றைக்கு அன்றாட,இயல்பு நிலையாக மாற்றப்பட்டுள்ளது.

தொடரப்போகும் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தாக்குதல்-யுத்தம் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொள்ளப் போகிறது.கூடவே பல இலட்சம் மக்கள் அகதியாகி உள்நாட்டிலும் வெளி நாடுகளிலுமாக அவதிப்படப் போகிறார்கள்.

அண்மைய எண்ணைக்கான யுத்தமும்,போர்த்துக்கீசிய கொலனித்துவச் சுரண்டல் போரும் அங்கோலா((Angola)என்ற எண்ணை மற்றும் வைரம் நிறைந்த நாட்டைச் சுடுகாடாக்கியுள்ளது.1992-1994 இருவருடமாக நடந்த யுத்தில்மட்டும் மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.சிறார் இராணுவம்,மிதிவெடிப்பலி,அகதிகள்,அவநம்பிக்கை,மற்றும் எல்லா வகைச் சமூக விரோதங்களும் மலிந்த இந்த அங்கோலாவில் ஒருவர்கூட யுத்தத்தைத் தவிர வேறெதையும் வித்தியாசமாக அநுபவிக்கவில்லை.இது போர்த்துக்கீசிய கொலித்துவத்தின் முடிவுவரைத் தொடர்ந்தது.இப்போதும் அந்த நாட்டுக்கு இதே கதைதாம்.

இங்கு நடந்த யுத்தங்களெல்லாம்(1961 இல் காலனித்துவ வாதிகளுக்கு எதிரான யுத்தமும் சேர்க்கப்பட வேண்டும்.ஏனெனில் பல் வகை காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்கள் தோன்றி அவை தமக்குள் அடிபட்டுக் கொண்டதும் வெளி நாடுகளுக்காகவே- அங்கோலா மக்களுக்கான விடுதலைக்கல்ல.) எண்ணைக் கச்சாப் பொருளான மசகு எண்ணைக்கும்,வைரத்துக்குமானதாகும்.


எவரொருவர் யுத்தத்தின் கொடுமையை உணரவேண்டுமானால் அங்கோலாவைப் பார்க்கவேண்டும்!


வீதியல் செல்லும்போது ஒவ்வொரு நான்காவது மனிதரும் ஒற்றைக்காலுடன் அல்லது கையுடன் நடப்பதைப் பார்க்கலாம்.குண்டு துளைக்காத சுவர்களோ கிடையாது.இப்படி முழுமொத்தத் தேசமும் மதிவெடிகளால் விதைக்கப்பட்டு,மனித நடமாட்டத்துக்கு உதவாத மண்ணாக அங்கோலா மாற்றப்பட்டுவிட்டுது.

இது யாரால்?

இதே ஐரோப்பிய தொழிற்சாலைகளால்!

90களில் அமெரிக்க உளவுப்படையானது அங்கோலாவின் எதிர் புரட்சிப்படைகளுக்குப் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வழங்கிப் போலிச் சோஷலிச இராணுவத்துக்கெதிராகப் போராட வைத்தது.MPLA-அரசு எதிர்த்துப்போராடி அனைத்தையும் அடக்க முடியவில்லை.இறுதியாக ஐ.நா.வின் கூற்றுப்படி மூன்றாவது யுத்தத்துக்குக் காரணமானது யுனிற்ரா.எல்லாமாக அங்கோலா தனது மக்களை அகதியாகக் கண்டது.

இதுவரை இருபது இலட்சம் அகதிகள் உலகம் ப+ராகவும் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.நாடு மதி வெடிகளால் நிரம்பி வழிகிறது.சிறார்களின் கைகளில் பழைய குண்டுகள் விளையாட்டுப் பொருளாகக்கிடக்கிறது.தனிமையில் சற்று நடந்தால் மிதிவெடி வெடித்து மக்களைப் பலிகொள்கிறது.உள்நாட்டில் பல இலட்சம் மக்கள் அகதியாகிப் பட்டுணியுடன் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அனைத்துக்கும் அந்நிய ஆர்வங்களின் யுத்தமே காரணமாகிறது.

கொங்கோ:

அமெரிக்க,ஐரோப்பிய மற்றும் சீனாவின் வேட்டைக்காடாகிய கொங்கோ என்ற கனிவளமிக்க இந்த ஆபிரிக்கத் தேசத்தில் இதுவரை 35 இலட்சம்(இலங்கைத் தமிழர்களின் மொத்தச் சனத்தொகை.)மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்!சிறு இனக்குழுக்களுக்குள் பற்பல போராட்டங்கள்.ஒவ்வொரு பகுதிகளையும் ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரான்ஸ்,ஜேர்மனி,அமெரிக்கா,என்று கூறுபோட்டு ஆளுகின்றன.பெயருக்கு ஒரு கபிலா கொங்கோ ஜனாதிபதி.கண்துடைப்புத் தேர்தல்,ஐ.நா.துருப்புகள்...என்னவொரு வேட்டைக்காடு இந்தக் கொங்கோ! கேக்கைப் பங்கிட்டதுபோன்று ஒவ்வொரு ஐரோப்பியத் தொழிற்கழகங்களும் அந்தத் தேசத்தைப் பங்கிட்டுவிட்டென.இதற்கு ஐ.நா.ஒரு சடங்கு நிகழ்த்தி ஐ.நா.துருப்புகள் என்ற போர்வையில் ஒவ்வொரு நாடும் தத்தமது தேவைக்கேற்ற கனிவளங்களைத் தோண்டியெடுத்துத் தமது நாடுகளுக்குப் பத்திரமாக அனுப்பியபடி.தொடர்ந்து கனிவளம் மிக்க பகுதிகளைத் தத்தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாய் அடிபாடு.


இந்தத் தேசத்துக்கு எல்லையும் இல்லை.மக்கள் தொகை பற்றிய சரியான தகவலும் இல்லை.கிட்டத்தட்ட ஐந்து கோடிப் பேர்கள் வாழ்வதாகக் கொள்ளலாம்.உகண்டா,ருவண்டா என்று வேறு இத்தேசத்தில் கனிவளங்களைத் திருடித் தமது அமெரிக்க எஜமான்களுக்குத் தள்ளியபடி. கேமா((Hema)லெண்டு(Lendu) இனக் குழுக்கள் கிழக்குக் கொங்கோவில் ஒருவரையொருவர் விழுங்கியபடி...பேய்கமேன்( Mambuti-Pygmaen) என்ற இனக்குழு மனிதர்களைப் பிடித்து உண்பதும் இந்தத்தேசத்து மனிதர்களிடம் இடம்பெறுவதுண்டு.இந்த மம்புட்டி-பேய்மேன்களின் இருதயம் இற்றுறிப்(Ituri-Region) பகுதியிலுள்ள காடுகளைப்பற்றிச் சிந்தித்து துடிப்பதுமட்மல்ல.மாறாக பெரும் சக்தியையும் மற்ற மனிதர்களுக்கு வழங்குவதாக நம்பப்பட்டு,இந்த இனக்குழுவை வேட்டையாடி,அவர்களின் இதயத்தை உண்டு உருசிப்பதும் நிகழ்கிறது.இத்தகைய மூட நம்பிக்கையோடு கொங்கோ.


அவ்வளவு பின் தங்கிய மனிதக் குழுக்கள் இங்கேதாம் வாழ்கிறார்கள்!


"...Der Osten Kongo ist wahrscheinlich der schlimmste Platz auf Erden fuer Fraun."-bedrohte Voelker.seite:15.


"கொங்கோவின் கிழக்குப் பகுதியானது பெரும்பாலும் பெண்களுக்கு ஆபத்தான பகுதியாகும் இப்புவிப்பரப்பில்."அச்சுறுத்தப்படும் மக்கள்.பக்கம்:15.

அதாவது கொங்கோவின் கிழக்கு மாகணத்தில் எண்பது வீதமான பெண்கள் பாலியற் பலாத்தகாரத்துக்குட்படுத்தப்பட்டு,பால்வினை நோய்களினால் சாகும் நிலையிலுள்ளார்கள்.உதாரணத்துக்கு: பெம்பாசின்;"Mouvement de la Libe´ration du Congo" போராளிகள் கடந்த 29.10.2002 ஆம் ஆண்டு 65 பெண்களையும்,சிறுமிகளையும் வல்லுறுக்குட்படுத்தினார்கள்.117 மனிதர்களைக் கொன்றார்கள்.(அதே நூல்.)இது தொடர்கதை.

இந்த நிலையில் மக்கள் பெரும் அவலத்துள் வாழ,ஐரோப்பிய-அமெரிக்க வல்லூறுகள் வளத்தைத் திருடியபடி.

கொங்கோவின் கனிவளம்தாம் இந்தத் தேசத்தின் அழிவுக்கும் காரணமாகிறது.

யுரேனியம்,

தங்கம்,

வைரம்,

கொல்ரன் எனும் கைத் தொலைபேசி உருவாகத்துக்குரிய மூலப்பொருள்.


பெற்றோலுக்கான மசகு எண்ணை.


கடந்த ஜுலை மாதம் ஜேர்மனி 560 துருப்புகளை ஐ.நா.துருப்பெனும் போர்வையில் கொங்கோவுக்கு அனுப்பித் தனது கம்பனி(Bayer-Tochter H.C) நிலைகொண்டிருக்கும் கனிவளப்பகுதியைக் காத்து வருகிறது.பெயரென்வோ தேர்தலைக் கண்காணிக்க-பாதுகாப்பு வழங்க,என்றபடி...



ப.வி.ஸ்ரீரங்கன்
01.09.2006

Wednesday, August 30, 2006

அரசியல் சகுனி:ஆனந்தசங்கரி...

அரசியல் சகுனி:ஆனந்தசங்கரி-ரீ.பீ.சீ.வானொலி...

(சிறு இடைமறிப்பு.)

இன்றைய இலங்கை- புலிகள் யுத்தம் குறித்து நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.யுத்தங்கள் எப்போதும் மக்களைக் காவு கொள்வதுமட்டுமல்ல,மக்களின் அடிப்படை வசதிகளைக் கொண்ட குடிசார் கட்டமைப்புகளைச் சிதறடிப்பதாகும்.அத்தகைய வன் கொடுமை அரச பயங்கர வாதத்தை கடந்த சில கிழமைகளாக இஸ்ரேலியச் சியோனிச அரசு லெபனான் குடிமக்கள்மீது கட்டவிழ்த்துவிட்டதை நாம் அறிவோம்.இது குறித்துச் சர்வதேச மனிதவுரிமைக் கண்காணிப்பு அமைப்பே அறிக்கைவிட்டுக் கண்டித்தது.

*மக்கள் வாழ்விடங்களை

*நுகர்வு அங்காடிகளை

*பாடசாலைகளை


*வைத்தியசாலைகளை


*மருந்தகங்களை

*பாலங்களை

*போக்குவரத்து வீதிகளை


*நெடுஞ்சாலைகளை


*நீர்த்தேக்கங்களை


*குடிநீர் விநியோக் கட்டமைவுகளை


இப்படிப் பற்பல குடிசார் அடிப்படைக் கட்டுமானங்களை இஸ்ரேலிய அரசு லெபனானில் குண்டுபோட்டழித்தது.


இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதியில் இலங்கையரசானது- வெளிநாடுகளின் வழிகாட்டலில்- இஸ்ரேலை உதாரணமாக்கித் தமிழ்பேசும் மக்களின் குடியிருப்புகள்மீது குண்டெறிந்து, அந்த மக்களை அகதிகளாக்கி வருவதை நாம் ஊடகங்களுடாகவும்,தொலைபேசிய+டாகவும் அறிகிறோம்.இத்தகைய மனிதவிரோதப் படுகொலைகளை இலங்கையரசு "புலிகளின் பெயரால்" விய+கம் அமைத்துச் செய்து வருகிறது.


இன்றைய இந்தப் பெரும் யுத்த அழிவானது மக்களின் நிரந்தரமான வாழ்சூழலாக மாற்றப்பட்டு வருகிறது.தமிழ்பேசும் மக்களின் நாளாந்த அழிவுகள் "புலிகளின் பயங்கரவாத்தை" அழிக்கிறோம் எனும் அரசியல் பரப்புரைய+டாக நியாயப்படுத்தும் அதி இழிவான செயலில் ஆளும் மகிந்த அரசு செயற்பட்டுவருகிறது.தினமும் புதுப்புது இராஜ தந்திரத்தோடு புலிகளும் தத்தமது நியாயப்பாடுகளைச் சொன்னாலும், யுத்தம் நிறுத்தப்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது.இன்றைய இராணுவச் சமமின்மையான புலிகளின் இராணுவ வலுவானது சிங்கள அரசையும,; இந்தியாவையும் பெரு மகிழ்வுக்குள்ளிட்டுச் சென்று, அவர்கள் தமது தந்திரங்களை,சாணாக்கியத்தை செயற்படுத்த வழிவிட்டுள்ளது.


இந்த விய+கத்தின் வெளிப்பாடாக "அரசியல் அலி,பொறுக்கி,பச்சைக் கள்ளன்,அரசியல் விபச்சாரன்" ஆனந்த சங்கரியை உசார் படுத்தி,இஞ்சியுண்ட குரங்காய்ச் செயற்பட வைக்கிறது.இந்த "முதிர் அரசியல் விபச்சாரகன்" தனது பதவி இலாபத்துக்காக அப்பாவித் தமிழ்பேசும் மக்களை இந்திய அரசுக்குக்கும்,அந்நிய அரசுகளுக்கும் காட்டிக்கொடுத்துப் "புலிகளின் பாணியிலேயே" நமது சுயநிர்ணயவுரிமையைக் காயடிக்கிறான்.

மக்கள் இதுவரையான யுத்தால் இலட்சத்துக்கு மேல் கொல்லப்பட்டுவிட்டார்கள்.


இன்றுவரையும் இலங்கையரசும்,அந்நிய அரசுகளும்,புலிகளும்,எலிகளுமாக மக்களைக் கொன்று குவிப்பதில் முனைப்பாக யுத்தம் செய்யும் தமிழ் நிலப்பரப்புகளில் குருதியாறு ஓடிக்கொண்டிருக்கிறது.


இவன் ஆனந்த சங்கரி பத்தாதற்கு...

எமது மக்களுக்கு-அதுவும் புலம் பெயரும் மக்களுக்கு அரசியல் அரிவரிப்பாடம் புகட்ட முனைவதும்,அதை ஜெயதேவன் என்ற திருட்டு முதலாளி-கோயில் கொள்ளைக்காரன் வழிமொழிந்து, எமது மக்களுக்காகக் கண்ணீர் வடிப்பதாக நாடகம்போட,அதையும் கமுக்கமாக ஆமோதிக்கும் மார்க்சியமே தெரியாத மார்க்சியர் திரு.விஸ்வலிங்கம் சிவலிங்கம் ரீ.பீ.சீ-இந்திய,இலங்கை கூட்டுச்சதிக்குப் பலிபோவதும்,தமிழ் பேசும் மக்களை இன்னும் அடிமைகளாக்கிப் பாரிய விலங்கை அவர்களுக்கு மாட்டித் தீருவோமெனச் செயற்படுவதும் இன்று வழமையாகி வருகிறது.


இன்றைய(30.08.06) ரீ.பீ.சீ.வானொலியின் உரையாடலானது இந்தியாவின் செல்லப்பிராணிகளாக இந்தப் பாவிகளை வெளிப்படுத்துகிறது.

"புலிகளைத் தோற்கடித்தவுடன் சமஷ்டிக்குக் குறைவான எந்தத் தீர்வையும் தமிழ் மக்களுக்கு வழங்கினால் அவர்கள் அதை ஏற்கமாட்டார்களென நான் ஜனாதிபதியிடம் கூறினேன்"என்கிறான் ஆனந்தசங்கிரி.

இவன் என்ன சொல்கிறான்?


மகிந்த எந்தப் பிரதேசத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்?

செவ்வாய்க்கிரகத்திலிருந்தா?

தமிழ் பேசும் மக்களுக்கு "இதை" வழங்கினால்தாம் ஏற்பார்கள் என்று ஆனந்தசங்கரித் திருடன் கூறும்போதுதாம் மகிந்த புரிந்து கொள்வாரா?


தமிழருக்கு உள்ள பிரச்சனை குறித்து எந்த அரசியல் அறிவுமற்றா மகிந்த அரசியலுக்கு வந்தவர்?


எட ஆனந்த சங்கரி!

உனது பித்தலாட்டமானது இன்னும்பலபடி உச்சிக்குச் சென்று "இந்தியவோடு ஒத்து,அவர்களின் விருப்பைத்தாம் நாம் ஏற்கவேண்டும்-அவர்களது மாநிலங்களுக்குள்ள உரிமையைவிடக் கூடிய எந்த உரிமையையும் இந்தியா தர விடாது-அப்படிக் கூடிய அதிகாரத்தை இருபது கட்டை தூரத்திலுள்ள தமிழர்கள் பெற்றால் 50 இலட்சம் தமிழர்களும்(தமிழ் நாட்டில் 50 இலட்சம் தமிழர்கள்தாம் வாழ்வதென்று புலம்பும் ஆனந்த சங்கரியின் அறிவோ அறிவு!ஐந்தரைக்கோடியில் 550 இலட்சம் மக்கள் என்று யாராவது அரிவரிப்பாடம் நடாத்தும் அளவுக்குப் பதவிப் பித்துப்பிடித்து,அறிவு மங்கிக் கிடக்கிறது ஆனந்த சங்கரிக்கு)பின் கூடிய அதிகாரத்தைக் கேட்பார்கள்.தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா.வேறுபல மாநிலங்களும் பின் உரிமைகேட்டுப் போராடும்.இந்தியாவில் எந்தப் பிரச்சனையும் இல்லை"...


இப்படித் தனது இந்தியக் கைக்கூலித்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டு,மக்களை மடையர்களாக்கும் இந்தத் திருடர்கள் எப்போது தமிழ் பேசும் மக்களின் நலனிலிருந்து இலங்கை இனப் பிரச்சனையைப் பேசப் போகிறார்கள்?.


ஆனந்த சங்கரியோ வ+ப்பெற்றால் இராமச்சந்திரனோடிணைந்து அப்பாவி அகதித் தமிழர்களை ஓட்டச் சுரண்டியவன்.


இவன் எங்கே மக்களின் நலனைப்பற்றிச் சிந்திப்பான்?

தனது அத்தாட்சிக்கடித்துக்கு 10.000. இலங்கை ரூபாயையும்,ஆட்கடத்தி இலட்சத்தையும் பெற்றவன் இவன்.


இராமச்சந்திரன் மக்களை ஏமாற்றிப் பொருள் சேர்த்தும்,ஆரம்பத்தில் புலிகளை ஏசித்திரிந்து,பின்பு புலிகளுக்கு நிதி வழங்கித் தனது உறவைப் பகைக்காது,இன்று கொழும்பில் மாட மாளிகையோடு,பிரயாண முகவர்த் தொழில் பண்ணுவதும் இந்த ஆனந்த சங்கரியின் கூட்டுக் கொள்ளையோடுதாம்.

இதற்குப் போதிய ஆதாரங்களை நாம் வைத்திருக்கிறோம்.


இந்த மனிதர்கள்தாம் இந்தியாவுக்கு விளக்குப்பிடித்து அப்பாவித் தமிழர்களைக் கொல்வதற்கு நியாயம் வழங்கி வருகிறார்கள்.
இவர்கள்தாம் ஜனநாயகத் தலைவர்களாம்! கேட்கவே சகிக்க முடியவில்லை.புலிகளுக்கும் இந்தத் திருடர்களுக்கும் எந்தத் தளத்தில் வித்தியாசமுண்டு?

காலம் இதைக் காட்டுவதற்கு ஏதாவது வித்தியாசமுண்டா?

கிடையாது!

அப்பாவிகளாக மக்களென்றும் இருக்க முடியாது.

இந்த இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்கள் தொடர்ந்து இத்தகைய அரசியல் மாபியாக்களால் ஏமாறும் நிலைக்குப் புலிகளின் அடி முட்டாள்த்தனமான யுத்த விய+கமே காரணமாகிவருகிறது.

தொடர்ந்தும் மக்களைப் பலிக்கடாவாக்கும் பாரிய யுத்தம் வெறும் அச்சத்தையும்,அழிவையும் நிரந்தரமாக்கிக்கொள்ளும்போது அரசியல் வெறுமை இருந்துகொண்டேயிருக்கும்.இந்த வெறுமைக்குள் சதிராடும் ஆனந்த சங்கரி வகையறாக்கள் இப்படிப் பல துரோகத்தை நமது மக்களுக்குச் செய்ய முனைப்புடன் திரிவது இன்னும் தொடரத்தாம் போகிறது.

எனினும் மக்களுக்கு சுய எழிச்சிகொள்ள முடியாத சூழலில் இவர்களைத் தட்டிக்கேட்க முடியாது!
மக்களைப் பேசவிடுவதும்,போராட விடுவதும் காலத்தின் தேவை.இதைப் புலிகள் செய்யும்போது,புலிகளின் கையிலிருக்கும் தமிழர்களின் உரிமைகளை,அது சார்ந்த நியாயப் பாடுகளை எவரும் தோற்கடிக்க முடியாது.

ப.வி.ஸ்ரீரங்கன்

30.06.2006

துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!(3)

இனவாதமும்,இணைவின்மையும்:

தினமும்,பொழுதும் அகதிகள் பெருக்கமும்,பட்டுணியும்,மரணவோலமும்,நோயும் நொடியும் மனித வரலாற்றில் ஒரு செயலூக்கமிக்க நிகழ்வாக மாறி வருகிறது.இது ஒருபுறத்தே இங்ஙனம் நிகழும்போது,மறுபுறமோ இந்த நிகழ்வால் அரசியல் இலாபமடையும் ஐரோப்பிய ஓட்டுக்கட்சிகள்,வலதுசாரிய-இனவாதக் கட்சிகள் யாவும் இந்த அகதிகளை மனித சமநிலையிலிருந்து துண்டித்து விடுவதிலும்,துரத்தியடிப்பதிலும் மும்மரமாகச் செயற்படும்போது, அதைவைத்து மக்களின் மனங்களைத் தம் பக்கம் இழுத்துக் கட்சிகளுக்கு ஆள்பிடிக்கும் வேலையில் இந்த ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் ஊடகங்கள் செற்படுகின்றன.இதனால் சாதரண மக்களிடமிருந்து நாளாந்தம் அந்நியப்படும் நாம் சமூகக் கூட்டு மனப்பான்மையை இழந்தும்,இந்தத் தேசத்தின் ப+ர்வீகக் குடிகளோடு கலந்தும்,இணைந்தும் வாழமுடிவதில்லை.


இது மனிதப் பண்பாட்டிற்கு மிகவும் முரணானது.வளர்ச்சியடைந்த நாடுகளில் மக்கள் தமது வலுவுக்குள் உட்பட்ட செயலூக்கத்தை கண்டிப்பாக இந்த ஐரோப்பிய உற்பத்திச் சக்திகளுக்கு வழங்கியாகவேண்டும்.இத்தகைய செயலூக்கத்தை மிகுதியாக வழங்கிவரும் அகதிகளின் அதீத உழைப்பானது மூன்றாந்தரமாக மறைக்கப்பட்டு,அவர்கள் ப+ர்வீகக் குடிகளின் வரிப்பணத்தை தின்று ஏப்பம் விடுபவர்களாக இந்த உடகங்கள், அரசியல் வாதிகள் கருத்துக்களைத் தமது மக்களிடம் பரப்புகிறார்கள்.இங்கே சமூகக் கூட்டுணர்வின்றிக்கிடக்கும் ஒரு பகுதி மக்களை தம்மால் தாங்கிக் கொள்ளப்படுவதாகச் சொல்லுப்படும் பொய்,புரட்டை இந்தப் ப+ர்வீகக் குடிகள் நம்பி விடுவதாலும் சமுதாயத்தில் ஒரு கொதி நிலையைத் தூண்டிவிடும் அரசியல் அமுக்கத்தை ஐரோப்பிய ஆளும் வர்க்கம் தோற்றுவித்துத் தமது பொருளாதார முரண்பாட்டைத் திசை திருப்பித் தம் ஆட்சியை நீடிக்கிறார்கள்.


இத்தகைய நீடிப்பில் ஆட்சியாளர்கள் தவிர்க்கமுடியாது அகதிகளுக்கான அனைத்து எதிர் நடவடிக்கைகளையும் ஒரு அட்டவணைக்குள் திணிப்பதுபோன்று(...Durch Kategorisierugen...z.B."die Auslaender","die Schein Asylanten"...usw.)" வெளிநாட்டார்கள்"பொய் அகதிகள்"என்று அட்டவணையிடுதல் கருத்தியலாக வளர்தெடுக்கப்பட்டு,மக்கள் சமூகத்தில் அதுவே அந்நிய எதிர்ப்புச் சமூக உளவியலாக ஊன்றப்படுகிறது.இது மனிதாபிமானத்தையும்,ஜனநாயக அடிப்படைப் பெறுமானத்தையும் மிகவும் பலவீனப்படுத்தி,மக்களிடம் ஒருவித சாத்வீக இனவாதமாகவும்;("passiver"Rassismus)வளர்த்து விடுகிறார்கள்.இத்தகைய சாத்வீக இனவாதமானது அடிப்படையில் செயலூக்க இனவாதிகளுக்கு("aktiver"Rassismus) பெரும் உந்துதலையும்,பொருட்பலத்தையும் மற்றும் தார்மீக வலுவை,ஆட்படையையும் கூட்டிவருகிறது.ஏலவே காலனித்துவப் பார்வையுடைய ஐரோப்பிய மனோபாவமானது மிக விரைவாக இனவாதத் தீயில் விழுந்தவிடுகிறது.


இதன்பலாபலனே ஆயிரம் தடவைகள் அகதிகளுக்கான சட்ட மாற்றங்களையும்,புதிய சட்ட வகுப்புக்களையும் அரசியல் ரீதியாகச் செய்யும் நிலைக்கு இந்த மக்களின் ஒப்புதல் மிக இலகுவாகக் கிடைக்கிறது.


இன்றிருக்கும் ஐரோப்பியச் சந்தைப் பொருளாதாரத்தின் நிலையானது மிகவும் கொடிய மனித விரோதச் சட்டங்களை இயற்றுவதிலும்,தமது மூலதனத்தைப் பெருக்குவதற்கும்-அதைக்காப்பதற்குமாக வெறிகொண்டலைகிறது.இதற்கு முரண்பாடாக ஐரோப்பியத் தொழிலாளர்களினதும்,அகதிகளினதும் ஒன்றிணைவு இவர்களுக்குக் குறுக்கே கோடுகிழிக்க முனைவதால் இந்தச் சாத்வீக இனவாதம் மேன் மேலும் வளர்தெடுக்கப்படுகிறது.இது தொழிலாளர்களின் முரண்பாட்டையொடுக்கும் ஐரோப்பாவின் புதிய குடிசார் சட்டவுருவாக்கத்துக்கு முதற்கல்லை எடுத்துப்போட்டபோது மக்களால் எந்த எதிர்ப்பும் வராது காத்திருக்கிறது.இந்தப் "பொது ஐரோப்பியச் சட்டம்;"(Europaeischen Verfassung und Grundgesetz)ஐரோப்பிய மக்களின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் மட்டுப்படுத்தி அவர்களை வெறும் நுகர்வோர் ஆக்கும் சட்டம் என்பதையுணர்ந்த ஓட்டுக்கட்சிகள்,அதை மறைப்பதற்காக இந்தச் சாத்வீக இனவாதத்தை பரப்பி வந்தார்கள்-வருகிறார்கள்.


உதாரணமாக இன்றைய நோர்த்தன் வெஸற்;பாலின் மாநிலத்து(Nordrhein-Westfalen)முதல்வர் திரு.யுர்கன் றுட்கார் கடந்த 2001 மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு சாத்வீக இனவாதக் கோசத்தை முன்வைத்துப் பிரசாரம் செய்தார்."."Kinder statt Inder"(இந்தியர்களுக்குப் பதில் குழந்தைகள்)எனும் தேர்தல் கோசம் பட்டி தொட்டியெல்லாம் ஒட்டப்பட்டன.இது ஜேர்மனியை நோக்கிப் படையெடுக்கும் இந்தியக் கணினி மென்பொருள் வல்லுனர்களை எதிர்த்து முன்வைக்கப்பட்ட கோசமாகும்.இந்தியர்களுக்குப்பதிலாக "நமது குழந்தைகளை-அதுவும் நீல விழிகளும் பொன்னிறத் தலைமுடியும் கொண்ட வெள்ளைக் குழந்தைகளை இப்போதே படிக்க வைத்துத் தயார்படுத்து" என்பதே அதன் பொருளாக இருந்தது.இதன் பின்பு ஜேர்மனிய நாசியக் கட்சிகள் யாவும் இத்தகைய வெளிநாட்டார்-அகதிகள் எதிர்ப்பை மிகவும் வலுவாகச் சட்டப+ர்வமாக முன்னெடுத்தார்கள்.


ஏலவே பற்பல படுகொலைகளைச் செய்திருந்த இனவாதிகளுக்கு இத்தகைய ஓட்டுக்கட்சிகளின் அடவாடித்தனம் மிகவும் பயனுள்ள செயலாகத் தெம்ப+ட்டியது.(நாங்கள் தமிழ்பேசும் மக்கள்.இலங்கையின் இனவாத அரசியலிலும்,அதன் இனவாதக் கருத்தியலிலும் அநுபவம் பெற்றவர்கள்.எமக்குள்ளும் மாற்று இனங்கள் குறித்த இந்த சாத்வீக இனவாத்தின் ஆதிக்கம்-அநுபவம் இருப்பதை உணரவேண்டும்.இதுவேதாம் செயலூக்க இனவாதிகளை யுத்தத்தில் உருண்டு பிரண்டு கிடக்கத் தூண்டுவதையும் நாம் மறக்கப்படாது.)இவர்கள் அகதிகளுக்கு-வெளிநாட்டார்களுக்கெதிரான தாக்குதல்களைத் தொடுத்துத் தினமும் மனிதர்களைக் காயப்படுத்தியும்,கொன்றும்,அகதிகளின் வதிவிடங்களைத் தீ மூட்டியும் அகம் மகிழ்கின்றார்கள்.


கடந்த 26.05.1993 ஆம் ஆண்டு அகதிகளுக்கான சட்டம்(Art.16 des Grundrecht auf Asyl)ஆர்ட்டிக்கல் 16 ஐ மாற்றிய மூன்றே நாளில் 29.05.1993 ஆம் ஆண்டு ஜேர்மனியின் இரும்பு நகரான சோலிங்கனில்(29.Mai 1993 wurden in Solingen fuenf tuerkische Frauen ermordet.) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து துருக்கியப் பெண்மணிகள் நித்திரைப்பாயில் அவர்களின் வீடெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.அடுத்த சில மாதங்களில் இன்னும் இரண்டு குழந்தைகள் மோல்ன்(;(Moelln)எனும் கிராமத்தில் தீ மூட்டிக் கொல்லப்பட்டார்கள்.இத்துடன் இத்தகைய அகதிகள்-வெளிநாட்டார்கள் வெறுப்புத் தணியவில்லை.அது தொடர்ந்து, நாளும் பொழுதும் பெரும் தீயாய் பரவி அகதிகளை அடித்துக் கொல்கிறது-மரணப்படுக்கையில் கிடத்துகிறது.கிழக்கு ஜேர்மனியில் நாளொன்றுக்கு இருவராவது நாசிகளால்-சாமானிய ஜேர்மனியர்களால் உடற் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள்.


மிகச்சமீபத்தில்,16.04.2006 அன்று கிழக்கு ஜேர்மன் சக்ஷன் மாநிலத்தின் தலைநகரமான பொட்ஸ்டாமில்(;(Potsdam)இஒரு நைஜீரிய அகதிப் பொறியியலாளர் அடித்துக் கோமாவில் கிடத்தப்பட்டார்.இத்தாக்குதல் குறித்து நாடு தழுவியவரையில் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே பேர்ளினிலிருந்து தினமும் அகதிகள் தாக்கப்படுவதை"முதலாம் தேதியிலிருந்து முப்பத்யோராம் தேதிவரையும்" ஆவணமாகத் தொகுத்தது "Konkret"எனும் இடதுசாரியச் சஞ்சிகை.இவற்றுக்கு ஜேர்மனியப் பொலிசாரே உடந்தையாக இருப்பதையும் அது அம்பலப்படுத்தியது.இங்ஙனம் நிர்வாகத்துறையிலும்,அமைப்பு நெறியாண்மைக்குள்ளும் இடையாக இந்த"சாத்வீக இனவாதக் கட்டமைப்பு வேரோடியுள்ளது((Besondere Aufmerksamkeit werden wir auf rassistische Strukturen innerhalb des Verwaltung-und Organisationapparates...z.B. wie Sri Lanka/Tamil Eelam.).



இவையெல்லாம் இந்தப் பொருளாதாரத்தின் மறுபக்கச் செயற்பாடாக விரிகிறது.அகதிகள்மீதான ஐரோப்பிய இனவெறியாளர்களின் தாக்குதலைப்பட்டியல் போடுவதற்கு ஒரு ஆயுள் போதாது.தினமும் ஒருவராவது ஒரு நகரத்தில் உடல்ரீதியாகத் தாக்கப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது,ஜேர்மனியில்.

இந்த நிலையில் யுத்தங்களால் மக்கள் புலம் பெயர்ந்து அகதியாகும் கீழ்வரும் அறிக்கையைப் பார்த்தால் உலகம்ப+ராக மக்கள் அகதியாகி மடிந்துவிடுவார்களோவென அஞ்சவேண்டியுள்ளது.உலகத்தில் நடைபெறும் அனைத்து நாசகார யுத்தங்களும்,உயிர் கொல்லி ஆயுதத் தளபாடங்களும், நிதி மூலதனமும்,பாரிய தொழிற்சாலைகளும் மனிதர்களை அகதியாக்கி வரும் இந்த அட்டவணை மிகவும் அச்சமூட்டுகிறது.


"2003 ஐக்கியநாட்டுச் சனத்தெகை பற்றி அறிக்கை ஒன்றில் ,உலகத்தில் 17.5 கோடிகள் மக்கள் தத்தமது நாட்டுக்கு வெளியில் வாழ்வதாகக் கூறியுள்ளது. 10 பேர்களுக்கு ஒருவர் சொந்த நாட்டடை விட்டு வெளியேறுகின்றார். முன்னேறிய நாட்டை நோக்கிப் பன்தங்கிய நாட்டைச் சேர்ந்த 23 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் புலம் பெயர்கின்றனர். 1975க்குப் பின் மூன்றாம் உலகநாடுகளில் இருந்து வெளியேறியவர்களின் புலம் பெயர்வு இரண்டு மடங்காகியுள்ளது.


இந்த புலம் பெயர்வு வட அமெரிக்காவி;ல் 5 கோடியும், ஐரோப்பாவில் 4.1 கோடியும், ருஷ்சியாவில் 5 கோடியமாகும். முன்னேறிய நாடுகளில் ஒவ்வொரு 70 பேருக்கு ஒருவர் வெளிநாட்டவராகியுள்ளனர். 1995-2000 இடையிலான 5 வருடத்தில் 1.2 கோடி பேர்கள் முன்னேறிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். மொத்தம் 23 இலட்சத்தால் அதிகரிக்கும் வெளி நாட்டவாகளில் 18 சதவீதம் பிறப்பினால் உருவாகின்றது. மொத்தில் வட அமெரிக்கா 14 இலட்சமும,; ஐரோப்பாவில் 8 இலட்சமுமாக அதிகாரிக்கின்றது. மொத்தில் 9 வீதம் பேர்கள் அகதி அந்தஸ்தைப் பெறுகின்றனர்.

வருடந்தம் 2000 முதல் 2050 வரையான காலத்தில் வெளிநாட்டவரின் புலம் பெயர்வு சராசரியாக:
அமெரிக்காவை நோக்கி 11 லட்சம்
ஜேர்மனி 2.11 லட்சம்
கனடா 1.73
இங்கிலாந்து 1.36
அவுஸ்ரேலியா 0.83

வருடாந்தம் அகதிகளின் புலம் பெயர்வு இலட்சத்தில்:

சீனா 3.03
மெக்சிக்கோ 2.67
இந்தியா 2.22
பிலிப்பைன்ஸ் 1.84
இந்தோநேசியா 1.8- (புள்ளி விபரக்குறிப்புக்கு நன்றி:தமிழரங்கம்)"

மேற்காணும் இந்தப்பட்டியல் சொந்த நாடுகளில் அகதிகளானவர்களின் பட்டியலை இணைக்கவில்லை.இன்றைய நிலவரப்படி வெளிநாடுகளிலும்,சொந்த நாடுகளிலுமாக "உலக மக்கள் தொகையில் 50வீதமானவர்கள"; அகதிகளாக வாழ்கிறார்கள்-வதைபடுகிறார்கள்.

தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
30.08.2006

Tuesday, August 29, 2006

துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!(2)

துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!(2)


"ASYLUM"-Asyl , இந்த வார்த்தைகள் உலகத்தில் பிரபலமான அளவுக்கு மற்றெந்த வார்த்தைகளும் பிரபலமடைந்திருக்க முடியாது!அவ்வளவுக்கு மனிதர்களின் இடப்பெயர்வு நிகழ்ந்து வருகிறது.இன்றிந்தக் கோணத்தில் இடப்பெயர்வு நிகழுந் தறுவாயில்,இத்தகைய இடப் பெயர்வுக்குக் காரணமான ஐரோப்பிய-அமெரிக்க அரசுகள் தமது எல்லைகளை இறுக மூடிவைத்துவிட்டு,அசூல் எனும் வார்த்தைக்குப் புதுப்புது அர்தங்களை அள்ளி வழங்குகிறார்கள்.அகதி எனும் கோசம் "அரசியல் கோரிக்கையாக-உயிர்வாழ்வை காத்து,எம்மை வாழவிடு"என்ற மிக வலுவான மனிதாபிமானக் கோரிக்கையாக,மனிதவாழ்வின் அடிப்படையுரிமையாக விரிந்து செல்லும்போது,இத்தகைய நாடுகள் அதை மிகக் கேவலமாகத் தமது மக்களுக்குப் பரப்புரை செய்கிறது.

"Schein Asylanten."பொய் அகதிகள் என்று ஜேர்மனிய ஊடகங்களும் அரசியல் வாதிகளும் இந்த மனித அடிப்படையுரிமையைக் கேலிக்குள்ளாக்குகின்றனர்.இவர்களே தமது தேவைக்காகவும்,வசதிக்காகவும் உலக யுத்தங்களை நடாத்தியபோது,இவர்களுக்கு இந்த அரசியல் சட்டவுரிமைக் கோரிக்கை அவசியமானதாக இருக்கிறது.இவர்கள் தமது நாடுகளை மீளக்கட்டியமைக்கும் தேவைக்காக தமக்குள் உடன்பாட்டுடன்-சமாதானத்துடன் மற்றைய கண்டங்களிலுள்ள நாடுகளை யுத்தத்தால்-கொடும் சுரண்டலால் அழிக்கும்போது,உயிர்ப்பலியெடுக்கும்போது,யுத்தத்துக்குள் சிக்கி உயிர்காக்கப் புலம்பெயரும் மக்கள் வெறும் பொய் அகதியாகி விடுகிறார்கள்,இந்த ஐரோப்பியத் திமிருக்கு.


நேற்று முன் தினம்(27.08.06 ஞாயிற்றுக் கிழமை)கரீபியன் தீவுகளில் கால்பதிக்க முனைந்த ஆபிரிக்க அகதிகள் கடலில் படகு கவிழ நீரில் மூழ்கிப் பலியானார்கள்.இதுள் பல பத்துப் பேர்கள் பலியானதை மேற்குலக ஊடகங்கள் செய்தியாக அறிவித்தன.இந்தப் படகுப் பயணமானது ஐரோப்பாவை நோக்கி வாழ்சூழல் பாதிப்படைந்த ஆபிரிக்கக் கண்ட மக்களால் தினமும் நடாத்தப்படுகிறது.தமக்குமுன் போன பல படகுகள் கவிழ்ந்ததையறிந்தும் இந்தப் பயங்கரமான கடற் பயணம் தொடர்கிறது.எனினும் ஐரோப்பா தனது கதவுகளை இறுக மூடிக்கொண்டு மனிதாபிமானம் பேசுகிறது.மொரோக்கோவுக்கும் இஸ்பெயினுக்குமான "போடர்"புலம்பெயரும் மக்களுக்கு மூடப்பட்டபின்,ஆபிரிக்க மக்கள் இத்தகைய விபத்துகளில் தினமும் பலியாகி வருகிறார்கள்.இந்தாண்டுக்குள்-இதுவரை அண்ணளவாக15.000.அகதிகள் இப்படி வந்து,மரணித்தும், அடித்தும் விரட்டப்பட்டுமுள்ளார்கள்!மொரோக்கோவுக்கு வரும் கருப்பின அகதிகளை மொரோக்கோ இஸ்பெயினுக்குள் நுழையவிடாது அடித்து விரட்டுவதற்காக ஐரோப்பிய ய+னியனானது பல மில்லியன்கள் யுரோவை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.இது ஏலவே பேர்ளின் போடரை மூடுவதற்கு அன்றைய கிழக்கு ஜேர்மனிக்கு மேற்கு ஜேர்மனி வழங்கிய தொகையைவிட அதிகமானதென அகதிகளைப் பராமரிக்கும் பொது அமைப்புக்;(Wohlfahrtspflege fuer Fluechtlinge e.v) கூறுகிறது.


இன்றைக்கு இந்த ஐரோப்பா தனது தொழிற்சாலைகளை நல்லபடியாக இயக்கிப் பொருள்களை உற்பத்தி செய்து வருகிறது.அதற்கான மூலப் பொருள்களை 90வீதம் ப+ர்த்தி செய்யும் கண்டம் ஆபிரிக்கக்கண்டமே.இந்த நிலையில் இவர்களே அகதிப் பெருக்கத்துக்கான மூலகாரணமாக இருந்தும்,தம்மால் இயற்றப்பட்ட அரசியல் தஞ்சக் கோரிக்கைச் சட்டங்களை மதிப்பதில்லை.அந்தச் சட்டம் தமக்குத் தேவையென்றால் மட்டுமே நடைமுறைக்கு உகந்ததாகக் கணிக்கும் மேற்குலகம்,அதை மதிப்பதில் இரட்டைவேஷம் போடுகிறது.


இத்தகைய சட்டங்களை எதற்காக ஐ.நா.முன்மொழிந்து வரைந்தது?அதன் உள்நோக்கம் எதுவாக இருந்தது?


முன்னாள் நாசிய ஜேர்மனி 20ஆம் நுற்றாண்டுகளில் இரண்டு உலகயுத்தங்களில் சுமார் 80 மில்லியன்கள் அப்பாவி மக்களை வேட்டையாடியது.இந்த ஈனத்தனத்திற்குப் பின் ஐரோப்பிய மனிதவுரிமை ஆணையகம் மற்றும் ஜெனிவா அகதிகள் ஆணையகமும் சில வரைவுகளை -ஒப்பந்தங்களை செய்துள்ளார்கள்இஇந்த வரைவுகள் 'சட்டத்தின் முன் சகலரும் சமனம்'என்றபடி எதையுரைத்ததோ அஃது இவ்வைரோப்பியரசுகளால் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது.


அரசியல் தஞ்ச உரிமை சட்மாக்கப்பட்ட வரலாறானது 1946 இல் ஆரம்பமாகிறது,ஐ.நா.சபையின்
பொதுக்கூட்டம் சர்வதேச அகதிகள் கழகத்தை மேற்கூறிய ஆண்டில் ஆரம்பித்தது. இக்கழகமானது முதலில் நான்கு வருடங்களும் அதன்பின் மீள இரண்டாண்டுகளும் தொடர்ந்தியங்கியது,ஆரம்பத்தின் நோக்கம் உலகயுத்தத்திற்குப் பின்பான சமூகப்பிரச்சனையை
ஓரளவு தீர்க்கக்கூடியமாதிரி இது இலக்கு வைத்து மீள் குடியேற்றம் மற்றும் புதிய குடியேற்றங்களை யும் அதுசார்ந்த தேவைகளுக்காக இயங்கிக் கொண்டது.


எனினும் முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் யுத்தத்தை இரண்டாவது உலக யுத்தத்தோடு நிறுத்தி விடவில்லை,மாறாகத் தனது குருதிதோய்ந்த வலுக்கரத்தை உலகம் பூராகவும் விரிகத் தொடங்கியது.இதன் போக்கால் இந்த அகதிகள் பிரச்சனை ஒரு தொடர் இயக்கமாக இயங்கிக்கொள்ள ஐ.நா.சபை அகதிகளுக்கான உயர் ஸ்தானிக சபையை உருவாக்கிச் சட்ட வரைவைச் செய்தது.


பொதுவான மனிதவுரிமை விளக்கப்படி 10.12.1948ஆம் ஆண்டு ஆக்கப்பட்ட சட்டம்:Art.14 Abs 1"Jeder Mensch hat das Recht, in anderen Laendern verfolgungen Asyl zu suchen und zu genießen."(வேறொரு நாட்டுக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோருவதற்கும்,அதை அனுபவிப்பதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.) இந்த அழகான வார்த்தை ஜாலம் அதை குடிசார் சட்டவாக்கத்திற்குள் அடக்காது நாடுகளினது கடமையாக -அவர்களே அதை நிறைவேற்றும்படி அரசியல் யாப்புச் சட்டத்தில் அடக்கியதன் விளைவு இப்போது ஒவ்வொரு நாடுகளும் தாம் நினைத்தபடி தார்ப்பார் காட்டிக்கொள்கிறது.

இந்தத் தவறைச் சரிக்கட்ட 1951ஆம் ஆண்டு யூலாய் 28 பிரேரிக்கப்பட்டு 22.04.1954 இல் அமூலுக்கு வந்த 'அகதிகளுக்கான சட்ட அமூலாக்க ஒப்பந்தம்' ஜெனீவா ஒப்பந்தமாக அறியப்படுகிறது.இதுவே அரசியல் தஞ்சம் கோருபவரின் காரணத்தைக் குறித்து இந்திந்தக்காரணம் மட்டுமே அரசியல் தஞ்சம் கோர உரித்துடையதென வகுத்து வைத்துள்ளது.


இதன்பிரகாரம் ஒரு தனிநபர் தனது மத,இன,பிரைஜாவுரிமை இவைகளின் பொருட்டு அல்லது தனது அரசியல்,சமூகக் காரணிகளால் பாதிக்கும்போது வேறு நாட்டிற்குள் சென்று புகலிடம் கோர உரித்துடையவராகிறார்.


ஆனால் இன்று நடப்பதோ அனைத்தும் தலைகீழ்! இன்று 29.08.2006 செவ்வாய்க் கிழமை, கிழக்கு ஜேர்மன் மாநிலமான சக்ஷன் மாநிலத்தின் உள்துறை மந்திரி போட்டலா கூறுகிறார்:"இணைந்து வாழ்வதென்பதற்குப்பதில் வதிவிடவுரிமையற்ற வெளிநாட்டார்களைப் பிடித்து அவர்களது தாய் நாட்டுக்கு அனுப்புவதுதாம் சரி.அதைவிட்டு இணைந்து வாழ்தல்,கலந்து வாழ்தல் என்றபடி சட்டங்கள் இயற்றுவது தப்பு.குடும்பமாக இருப்பவர்களுக்கு,அவர்களது குழந்தைகளுக்குப் பாடசாலை செல்ல ஒழுங்கு செய்து கொடுப்பது நல்லது"என்று சக்ஷன் மாநிலத் தினசரி ஒன்றுக்குப் பேட்டியளிக்கிறார்(Volkszeitung vom 29.08.2006).


கடந்த கிழமை எனது மகன் ஒரு பேப்பர் கட்டிங்கோடு பதறியடித்து வந்தான்.அவனது வகுப்பு மாணவனின் பெற்றோர்கள் அந்தப் பத்திரிகை நறுக்கை இவனிடம் கொடுத்து,"இதை தமிழ் இணையங்களில் பிரசுரிக்கவும்"என்று.அவர்கள் ஜேர்மனியப் பெற்றோர்.மிகவும் பொறுப்பானவொரு காரியத்தை செய்திருந்தார்கள்.


அந்தப் பத்திரிகையில் இருந்த வாசகம்:


Abschiebung:Tamile fuerchtet um sein leben.


Vimalathas Kurunathpillai hat Angst."Ich weiss nicht, was passieren wird,wenn ich aus dem Flugzeug in Clombo steige."sagt der junge Mann.(Wuppertaler Zeitug)



நாடுகடத்தல்:தனது உயிருக்கு ஆபத்தென்று தமிழர் அச்சம்.விமலதாஸ் குருநாதபிள்ளைக்கு அச்சம்." நான் விமானித்திலிருந்து இறங்கிக் கொழும்பில் கால்வைக்கும்போது,எனக்கு என்ன நடக்குமென்றே புரியவில்லை."இந்த இஞைர் இங்ஙனம் கூறுகிறார்.



விமலாதாஸ்(வயது 23) வ+ப்பெற்றாலில் இருப்பவர்.1997 இல் ஜேர்மனிக்குள் கால் வைக்கும்போது 14 வயது.இந்த நகரத்தில் அவரது சகோதரர்,சகோதரி இருந்தும் அவரைக் காப்பாற்ற முடியாது சட்டம் சதிராடுகிறது.இப்போது இவர் பொதுத் திருச்சபை நிறுவனம் ஒன்றால் மறைத்து வைக்கப்பட்டுள்ளார்.


தொடரும்.



ப.வி.ஸ்ரீரங்கன்
29.08.2006

Monday, August 28, 2006

துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!(1)

துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!(1)

அகதியால் அகதிகளின் கதைகள் தொகுப்பதும்,அதன் வாயிலாக மானுடவுரிமையென்பதைக் கேவலமாக்கும் பாரிய தொழிற்கழகங்கள், சட்டம்,நிர்வாகம்,அரசுகள்-அமைப்புகள் பற்றித் தெரிந்திருப்பதும்,அநுபவமாக்கிப் போராடக் கற்பதும் நமக்கு அவசியமானது.

நாமே நமது விலங்கொடிப்பதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை!

அகதி!

அகதி என்றே தெளிவாக-உரமாகப் பிரகடனப்படுத்து!!இதிலிருந்துதாம் மற்றெல்லாவுரிமைகளும் வென்றெடுத்தாகவேண்டும்.உலகத்தின் திமிர்த்தனமான யுத்தங்கள் தினமும் பல நூறு மக்களைக் கொன்றும்,பல்லாயிரம் மக்களை அகதியாக்கியும் வருகிறது.

எனினும் மக்கள் உயிர்வாழப் போராடியும்,கண்டம் தாண்டிக் கையில் பிடித்தவுயிருடன் அகதி நாமம் தேடிக் கொள்வதும்,துரத்தப்படுவதும் நிகழ்கிறது.


எதற்காக நான் அகதியானேன்?


இது கேள்வி மட்டுமல்ல!-தேசத்தின் இருப்பையும் அதன் தன்மானத்தையும் பேசுவது.


இந்தச் சூழலை மறுதலித்துவிட்டு எனது ஜேர்மனியப் பிராஜாவுரிமையோடு என்னைக் கழுவிக் கொள்வதில் நாட்டமில்லை.நம்மில் பலர் தம்மை அகதிகள் என்பதைக் கேட்கச் சகிக்க மாட்டார்கள்.

என்றபோதும் பத்துத் தலைமுறை தாண்டினாலும் நானும் எனது தலைமுறைகளும் அகதியே!-இது பிரகடனம்.


தேசம் தொலைத்தவனின் வயிறு எரியும் மனப் போராட்டம்.தான் வளர்ந்து மண்ணளைந்த ப+மியைப் பார்க்க முடியாது தவிக்கும் வாழ் சூழல் இந்தவுலகத்தின் அனைத்து ஒடுக்கு முறையிலும் மிகக் கொடியது.இந்தவுணர்வைத் தேசத்தில் உழையாது,பிறர் பணத்தில் உண்டு ,ஏப்பமிட்டுத் தனக்கு பக்கத்தில் உடல் உழைப்பை நல்கும் மனிதர்களைச் சாதி சொல்லித் திட்டும் ஏப்பத்தால் உணரமுடியாது.-இது ஒரு தேச அவமானம்.தேசம்!...

உயிர் வாழும் வலையம்:

மனித அவலம் தொடர்கிறது.

பல்லாயிரம் மக்கள் இடம்பெயரப் ப+மியின் பெரும் பகுதி அகதிகளின் பெருக்கத்தைக் காண்கிறது.

இன்றைய மதிப்பின் படி புவிப்பரப்பெங்கணும் 370 கோடிகள் மக்கள் அகதியாகியுள்ளார்கள்.

இந்தப் பெரும் மனித அவலமானது மனிதவுயிர்வாழும் சூழலுக்கானவொரு போராட்டமாக வெடித்துக்கொண்டிருக்கிறது.இந்தப்போரில் நம்மிடம் நவீனச் சுடு கருவிகளோ அல்லது தாங்கிகளோ,ஆட்லெறிகளோ கிடையாது.அல்லது நம்மிடம் மதமோ இல்லை எந்த மொழிவாரி,இனவாரிக் கோசங்களோ கிடையாது.மாறாக நம்மை உயிர் வாழ-உழைத்துண்ண விடு,என்ற தார்மீகக் கோசமே ஆயுதமாக இருக்கிறது.இதைக் கண்டு அஞ்சும் நிலை ஆளும் வர்கங்களின் விழிகள் முன் வருகிறது.வாழும் சூழல் இல்லாதாகும்போது மனிதர்கள் வாழக்கூடிய சூழலை நோக்கி இடம் பெயர்வது சாத்தியமே!

இது உலகத்தில் உயிர்கள் தோன்றிய காலத்திலிருந்தே தொடங்கி விட்டது.வலுவுள்ளது மட்டும் வாழுமென்பது உயிரியலுக்கும் அன்றையச் சமூகவாழ்வுக்கும் பொருந்தட்டும்.ஆனால் இன்றைய நவீன மனிதர்களுக்கு இது பொருந்தத் தேவையில்லை.

நாம் இன்று பின் நவீனத்து சமூகக் கட்டமைப்புக்குள் வாழ்கிறோம்.இன்றைய சமூகப் பொருளாதார உற்பத்தித் திறனாது மனிதர்களின் எந்த நிலையானவர்களுக்கும்(ஊனம்,பலமற்றவர்கள்...)சமூகக் காப்புறுதியையும் தீவனத்தையும் உயிர் வாழும் தகுதியையும் கொடுக்க முடியும்.இதுதாம் இன்றைய பின்தேசிய அடையாளமாக(postnationalen Identitaet) விரியும் உற்பத்தித் திறன்மிக்க இனங்களுக்குள் முகிழ்க்கும் பொதுவறித் தளமாக விரிகிறது.

இதை எமது முன்னோர்களின் அறிவே நிலை நாட்ட உதவுகிறது.சதா தன்னைச்(சுய சோதனைக்குள் தம்மை ஈடுபடுத்திய விஞ்ஞானிகள்) சிதைத்து கண்டுபிடிக்கப்பட்ட அறிவியலறிவு குறிப்பிட்டவொரு இனத்துக்கோ அல்லது தேசத்துக்கோ-தொழிற்கழகத்துக்கோ சொந்தமில்லை.இது முழுமொத்த மனித இனத்துக்கும் பொதுவான சொத்து.இங்கே மானுடம் உயிர்வாழப் போராடும் இழி நிலை.

வாழும் இருப்பிடம்,கிராமம்,நகரம்;-பயிர் விளையும் மண் நாசமாகிறது!-நஞ்சாகிறது.நீர் நிலைய+ற்றுக்குள் வற்றி வரண்டுபோகிறது.நதி நீர் நஞ்சாக்கப்படுகிறது.இங்கே மீளவும் கனிவளங்களை வேட்டையாடிக் கொள்ள மேற்குலகத் தொழிற்கழகங்கள் யுத்தம் நடாத்தக் குண்டுகள் வெடிக்கின்றன.வாழும் வலையம்(Lebensraum)சிதைக்கப்படுகிறது.இதற்கு நல்லதொரு உதாரணம் நர்மதா அணைக்கட்டு விவகாரம்.இதுகுறித்துப் பேசும்போது, நாம் நமக்கு அருகினில் பிரச்சனையிருப்பதை இன்னும் அதிகமாகவே உணர்கிறோம்.

யாருக்காக
யார் வாழும் இடங்களைப்
பறிகொடுப்பது?


"Laenger als ein halbes jahrhundert haben wir geglaubt,dass die grossen Staudaemme die Bewohner Indien von Hunger und Armut befreien wuerden.Das Gegenteil ist eingetreten."-(Arundhati Roy,indische Schriftstellerin)


"இந்தியக் குடிமக்களின் பசியையும்,பட்டுணியையும் நர்மதா அணைக்கட்டு போக்கிவடுமென அரை நூற்றாண்டுக்கு மேலாக நம்பிக்கொண்டோம்.ஆனால் நடந்ததென்னவோ எதிர் நிலைதாம்."என்கிறார் அருந்ததி ரோய்.


மனிவுரிமைச் சங்கத்தின் 2000 ஜுனிக்கான(ஜுனி என்பதை ஜுன் என்று வாசிக்கவும்,ஜேர்மனிய மொழிப் பயன்பாட்டின் வெளிப்பாடது.) மனிதவுரிமைக்கான கோரிக்கையின் அறிவுப்பு நர்மதா மனித அவலத்தை மேத்கா பட்டர் மூலம் அறிவிக்கிறது.அது பொருளாதாரத்தின்மீதே கோரிக்கைகளை முன்வைத்துச் செல்கிறது.(ISBN 3-89290-044-2 என்ற சர்வதேச நூற்சுட்டியின் மூலம் இவ் நூலைப் பெறமுடியும்.)

1.5 மில்லியன் மக்கள் குஜராத்,மகாரிட்ஷ்ரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அகதிகளாகப்பட்டு வருகிறார்கள்.இவர்கள் தமது வாழ்விடங்களைப் பறி கொடுப்பதும்,அகதிகளாக உருப்பெறுவதும் பாரிய தொழிற்சாலைகளின் மின்சாரத் தேவைக்காவேதாம்.1993 ஆம் ஆண்டளவில் நர்மதா அணைக்கட்டுக்கு உலக வங்கி உதவி வழங்கி மக்களை அகதிகளாகத் திட்டம் தீட்டியது!அது தனது வாலைச் சுருட்டிப்பதுங்கும் நிலைக்கு மக்கள் நலக் குழுக்களின் தீவிரமான போராட்டம் காரணமானது.எனினும் 2000 க்குப் பிறகு அதே உலக வங்கி 450 மில்லியனகள்; டொலர் நிதி உதவியை வழங்கி மீளவும் தனது வலுக்கரத்தை இந்த அப்பாவி மக்கள்மீது வைத்து,அவர்களை அகதிகளாகி அநாதையாக்கிறது.இது நர்மதாவின் கதை.

ஒரிசா மாநிலத்தில் 1993 இலிருந்து ஆதிவாசி மக்கள் துரத்தியடிக்கப்பட்டும்,கொல்லப்பட்டும் அவர்களது நிலங்கள்-வாழும் வலையங்கள் பல் தேசியக் கம்பனிகளின் கால்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்படுகிறது.இந்தியாவிலேயே ஒரிசா மாநிலமானது மிகவும் தனிச் சிறப்பான தாதுப் பொருட்கள் நிரம்பிய-கனிவளமிக்க மாநிலமாகும்.இந்த மாநிலத்தை அந்நியத் தொழிற்கழகங்கள் வேட்டையாட ஆதிவாசி மக்கள் தமது வாழ்வைப் பறிகொடுப்பதில்போய் முடிகிறது.பாலங்கள்,கட்டுமானங்கள்,தொழில் முன்னெடுப்பு என்று, பல்வகைக் காரணங்களால் இவ் மாநிலம் மக்கள் வாழும் உரிமையைப் பறிக்கிறது.உட்கால் அலுமெனியம் (Utkal Alumina) எனும் பாரிய தரகு முதலாளிய நிறுவனம் ஒரிசாவை அந்நியக் கம்பனிகளான நோர்வே நாட்டு நோஸ்க் கைட்ரோ(Norsk Hydro)மற்றும் கனேடிய அல்கான் அலுமெனியம்(Alcan Aluminium) தொழிற்கழகங்களோடு சேர்ந்து ஒரிசாவின் தாதுப் பொருட்களைத் திருடிக்கொண்டிருக்கிறது. இதற்கு இந்திய அலுமெனியம்(INDAL Ltd.)உதவி வழங்கிக் கொழுத்து வருகிறது! லார்சன் அன்ட் ரூப்புரோ(Larsen &Toubro)என்ற மாபெரும் தொழிற்சாலை இந்தியாவின் மிகப் பெரும் ஜந்திரத் தொழிற்சாலை.இது அந்நியக் கம்பனிகளின் கூட்டுக்கொள்ளை நிறுவனமாகும். இந்த நிறுவனங்கள்தாம் போராடும் மக்களை அரச மற்றும் தனியார் படைகளை வைத்துக் கொல்கிறது.அப்பாவி மக்களின் வாழ்விடங்களைப் பலாத்தகாரமாகப் பறிக்கிறது.இந்திய மத்திய அரசோ அந்நியக் கம்பனிகளால் நிர்வாகிக்கப்பட்டு மக்கள் நல அரசியலைப் பறி கொடுத்து அந்நியக் கம்பனிகளின் தயவில் வாழ்கிறது.இதை ராபி மிஸ்ரா போன்றோரின் கைதுக்கும்,விடுதலைக்குப் பின்பும் அவர்களே ஒப்புக்கொண்டு கருத்துக் கூறினார்கள்.தாம் கைது செய்யப்பட்டது தனியார் படையின் மூலமாகவும்,அது உட்கால் அலுமெனியத்தின் அடியாட்படையென்பதாகவும்.(Persecuted for challenging injustice,Human rights defenders in India.)

இதைப்போன்றோதாம் இன்று ஆசிய, ஆபிரிக்க,மத்திய ஆசிய மற்றும் பாரசீக வளைகுடாவெங்கும் மக்கள் வாழும் வலையங்களைப் பறி கொடுத்து, அகதிகளாக்கப்படுகிறார்கள்.


உலக வர்த்தகக் கழகத்தின்(;(WTO)சேட்டில் மாநாட்டில் மனிவுரிமைச் சங்கம் வாய்கிழியக்கத்திய"Multinationale Investoren haben die Verpflichtung zum Schutz der Menschenrechte,unabhaengig davon, in welchem Lande sie taetig werden" சுலோகத்தை இவர்கள் மதிப்பதுமில்லை,காப்பதும் இல்லை!

"எந்த நாட்டில் பல்தேசிய நிதியீட்டாளர்கள் இயங்கினாலும் மனிவுரிமையைச் சுதந்திரமாகக் காத்து இயங்குவது அவர்களது கடமை"என்பதெல்லாம் நீரில் எழுதப்பட்ட எழுத்துக்களாகும்.

கடந்த 45 ஆண்டுகளாக நடைபெறும் சூடானிய யுத்தத்தால் 2.5 மில்லியன்கள் மக்கள் கொல்லப்பட்டு,5 மில்லியன்கள் மக்கள் உள் நாட்டில் அகதியாகியும் அந்நியத் தொழில் நிறுவனங்களின் எண்ணை வேட்டை தொடர்கிறது.மக்கள் வாழ்விடங்களைப் பறிகொடுத்து அகதியாக அல்லல்படும் இழி நிலை! ஒரு மில்லியன் மக்களுக்கு மேலாக மேற்குலகத்துக்குள் அநாதைகளாக நுழைந்துள்ளார்கள்.செல்வம்(கனிவளம்) கொழிக்கும் நிலத்தின் மக்கள் அதை அநுபவிக்க முடியாது,அநாதைகளாகி-அகதியாகி...

1956 ஆம் ஆண்டளவில் சூடானில் யுத்தம் வெடித்தது.இது உள்நாட்டு யுத்தமாகவே வர்ணிக்கப்பட்டது.ஆனால் அதன் கதை கனிவளங்களை-எண்ணையை மையப்படுத்தியே போர் ஆரம்பமாகியது.

அங்கு கேட்கப்பட்ட கேள்வியானது:

"யார் எண்ணையை-அந்த ஊற்றை சொந்தமாக வைத்திருப்பது,எவர் அதனால் இலாபம் அடைவது"என்பதே!

அந்நியக் கம்பனிகளின் கனிவளச் சுரண்டலால்,அவர்களுக்காக நடாத்தப்படும் யுத்தத்தால் சுடுகாடாக மாறிப்போனது சூடான்!


இங்கே சூடான்மட்டுமல்ல சமீப ஆவ்கானிஸ்த்தான் முதல் ஈராக்வரை இது தொடர்கதை!

எனவே "அகதி" என்பது சர்வதேச அரசியல் முரண்பாட்டின் அதியுச்ச அரசியற் கோசமாகிறது.இது நமக்குக் கடந்த கால் நூற்றாண்டாகப் புதுப்புது அர்த்தங்களைச் சுட்டிக் கொள்கிறது!


அடுத்த பகுதியிலும் சொல்வேன்.



ப.வி.ஸ்ரீரங்கன்
28.08.2006

இந்த வாரம் நான் ...

வணக்கம்!

சொல்லத் தக்க விஷயங்கள் பல, வெவ்வேறு தரணங்களில் பேச முடியாது போய்விடுகிறது.அதைப் பேசித்தாம் ஆகவேண்டுமென்றும் எந்தக் கட்டாயமும் இல்லை!


எனினும் சொல்லிவிடத் தூண்டும் நிகழ்வுகள் சதா நம்மைச் சுற்றி நிகழ்ந்தபடியே...

உலகம் என்றுமில்லாதுவாறு சுருங்கிவிட்டது.இந்தப் புவிப்பரப்புமீது ஆதிக்கஞ் செய்யும் பெரும் தொழிற்கழகங்களும்,அவைகளின் விய+கங்களும் மனித வாழ்வை-வாழும் சூழலை,உயிர் வாழும் புற வலையத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியுள்ளது.ஒரு இனத்தின் இருப்பை-அவைகளின் நியாயப்பாடுகளை,உரிமைகளை,குறிப்பிட்டவொருவினத்தின் உயிர்வாழும் உரிமையை,சமூகத் தகுதியை இவை காலில் போட்டு நசித்தழிக்கின்றன!

மூன்றாமுலகத்திலுள்ள பற்பல நாடுகளில் தேசியவினப் போர்கள் நிறைவுக்கு வரமுடியாது சிக்கலுக்குள் தள்ளிவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.உதாரணமா பாலஸ்தீனம்,காஷ்மீர்,நாகலாந்து,ஈழம்... என்று தொடர்ந்து செல்கிறது.வாழத் துடிக்கும் பல தேசிய இனங்கள் எந்தவுரிமையுமின்றிப் போர்களால் மடிந்து போகின்றன.யுத்தங்களால் சூழல் வலுவாகப் பாதிப்படைகிறது.இதனால் பாரிய விஷக் கிரிமிகளின் கொடிய தாக்குதல்வேறு அடிப்படை வசதிகளற்ற மக்களைத் தினமும் அழித்தபடி...


இவையெல்லையற்ற தொடர் நிகழ்வாய் உலகம் சுழன்றபடி.சுழலும் ஒவ்வொரு நொடியும் இப் புவியில் உயிர்வாழப் போராட்டம் நிகழ்ந்தபடி.புவிப்பரப்பு அமைதிப் ப+ங்காவல்ல!-அது போராட்டக்களம்.

இந்தப் போராட்டக் களம்(ஆளும் வர்க்க அடக்கு முறை) விருப்புடையதல்ல!இது மனிதவிரோதமானது.

இந்த மனித விரோதப்போக்கை மனிதர்களின் குவிப்புறுதி மனதைக் கடந்த உற்பத்திப் பொறிமுறையும்,நிதி மூலதனமுமே நடாத்திச் செயற்படுத்தி வருகிறது!

நாம் எமது தலைமுறைகளோடு இந்த உயிர்வாழும் தகுதியை இழந்துவிடும் நிலைமை நெருங்கி வருகிறது.

எங்கும் யுத்தம்!

எதற்காகவென்றே தெரியாதபடி,அமைதிக்குச் சமாதானத்துக்கு,ஜனநாயகத்துக்கு-மனிதவுரிமைக்கு என்றபடி சதா போர் நடாத்தப்படுகிறது.

பல தேசத்து இராணுவங்கள் ஒன்றுகூடிக் கொண்டு ஜ.நா.ப் படைகளென்று பம்மாத்துப்பண்ணி மேற்கத்தைய நாடுகளின் தலைமையில் மூன்றாம் உலகமெனக் கூறப்படும் கனிவளமிக்க நாடுகளை வேட்டையாடி வருகின்றன!

இந்த மையமான மனித வதைச் சூழலில் எந்த மனிதரும் உலகத்தின்-இயற்கையின்,இலக்கியத்தின்-கலையின் அழகைப் பேசமுடியாது!அப்படிப் பேசிக் கொண்டால் அது அவரவர் அறிவீனத்தையல்ல இந்தச் சமுதாயத்தின் அக்கறையற்ற சமூகவெண்ணவோட்டத்தையேதாம் வெளிச்சப்படுத்துகிறது.
மனிதர்களின் வாழ்வை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல,வாழ்நிலையே உணர்வைத் தீர்மானிக்கின்றது.இந்த வாழ் நிலையில் நமது உணர்வு மேற்காணும் நோக்கு நிலைக்குள் சுற்றியே பின்னப்பட்டுள்ளது!

புயலடிக்கும்,கடல் நீர் கொந்தளித்து படகுகள் நீரில் அமிழ்ந்து போகின்றன!பல பத்து மக்கள் இந்தக் கோரத்தில் நாளும் பொழுதும் இறந்துபோகிறார்கள்!இது எங்கே?

சொற்கத்துக்கும் நரகத்துக்கும் எல்லையிடப்பட்டதாக உணரப்படும் இஸ்பெயினுக்கும் மேற்கு ஆபிரிக்காவுக்குமான எல்லைப் புகுமுகத்தில்.இத்தாலிய,இஸ்பெயின் கடற் தீவுகளில் வந்திறங்கும் ஆபிரிக்க மக்களை நாயிலும் கேவலமாக அடித்து விரட்டும் மனித அவலம் இன்னும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.அப்பாவி ஆபிரிக்க மக்களின் வாழ்விடங்களைச் சூறையாடும் மேற்குலகத் தொழிற்கழகங்கள் அவர்களது உயிர்வாழும் சூழலை அழித்துவிட்டு,இங்ஙனம் இந்த மக்களை அகதிகளாக இடம் பெயர்ந்து சாகும் நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது.

இந்த வாரம் நான் இத்தகையவை பற்றியே எழுதவிருக்கிறேன்.

தமிழ் மணத்தில் இந்தவாரம் எனக்கானதென முன்கூட்டித் தெரிந்திருப்பினும்,எதையும் முன்கூட்டி எழுதிவைத்துவிட்டு மணிக்கொரு தடவை பதிவேற்றம் செய்யும் நிலையில் நான் செயற்படவில்லை.பதிவேற்றம்படும் தரணம்வரை எழுதிவிட்டு,அடுத்தவினாடி பதிவேற்றுவதுதாம் எனது நிலை!இதைவிட்டுத் தயார்ப்படுத்தி எதையும் எழுதுவது கிடையாது.(தினமும் எனது உணர்வு வெளிக்குள் சிறைப்படும் சூழலே என்னை எழுதத் தூண்டுபவை.இந்தப் புற நிலைகளின் தன்மையே எனது சிந்தனைகளைத் தூண்டுவதால்,நான் இந்தச் சமூகத்தில் கால் பதித்து இருக்கிறேன்.இதைக் கடந்து வானத்தில் எம்பிக் குதித்து-எனக்கு முன் நிகழ்பவற்றைத் தாண்டி அழிகியல் பேச முடியாது,தத்துவம் பேசிக் கொள்ளவும்,தவப் பயன்களை அறிவிக்கவும் முடியாது.
வாங்க!நமது கால்களில் மிதிபடும் நமது முகங்களைத் திரும்பப் பார்ப்போம்.நம்மீது சுமத்தப்படும் சுமைகளின் பாரத்தை இறக்க முனைவோம்.)

எனவே,தினமும் ஒரு பதிவு என்னிடமிருந்து வருவதற்கில்லை.அப்படி வருவேண்டுமென எவரும் ஒத்தக்காலில் தவமும் செய்யப் போவதுமில்லை.-தெரியும்!என்றபோதும்,இந்தவொரு வாரத்தில் மூன்று பதிவுகளையாவது எழுதிவிடுவேனென எனது மனது உணருகிறது.அப்படி எழுதப்படும் பதிவுகள் எமது வாழ்வின்(மனித வாழ்வின் அகதியக் கோலம்!) சீர்கேட்டுக்கான காரணங்களை அறிவிப்பதில் முனைப்புறும்.

இதை முன்மொழிவதால்,விருப்புடையவர்கள் இவற்றை வாசிப்பதற்கும்,அதற்றவர்கள் ஓடியொதுங்குவதற்குமான சாத்தியப்பாட்டின் கதவைத் திறந்துவிடுகிறேன்.

மழை மேகத்தின் நிலைத்திருப்பில் அப்பப்பத் தலைகாட்டும் கதிரவனின் நிலைதாம் எனது.


அதுவரை...

நட்போடு

ப.வி.ஸ்ரீரங்கன்
28.08.2006

Saturday, August 19, 2006

இலங்கை:யுத்தம் எவரால்-ஏன் தொடங்கியது?

இலங்கை:யுத்தம் எவரால்-ஏன் தொடங்கியது?


வெஸ்ற் டொச்ச றுண்ட் புங்5-West Deutsche Rundfunk 5(மேற்கு ஜேர்மன் வானொலி 5)19.08.2006 13-35மணிக்கு- இன்றைக்கான செய்தி விவரணத்தில் இலங்கை யுத்தம் குறித்து விவரணம் செய்தது.இது தொகுத்த செய்தி விவரணமானது ஓரளவு முற்போக்கானதாகும,; தமிழ் பேசும் மக்களின் துயர் நிறைந்த பக்கத்துக்கு ஓரளவு சாதகமான செய்தியைத் தாங்கி வந்தது.இத்தகைய நிலையை இதுவரை இத்தகைய ஊடகங்கள் எடுப்பது மிக அரிதானாதாகும்!எனினும் எமது மக்களின் கண்ணீர்க் கதைகளுக்குக் காரணம் தேடுகிற நாம் தொடர்ந்து புலிகளைக் கூண்டிலேற்றிச் செய்தி தொகுத்து வருகிறோம்.குறிப்பாக இந்திய-இலங்கைப் புலனாய்வுப் பிரிவால் இயக்கப்படும் ரீ.பீ.சீ. T.B.C.வானொலி இத்தகைய வகைகளில் தொடர்ந்து செய்தி தொகுப்பதை நாம் அறிவோம்.

ரீ.பீ.சீ.T.B.Cபோன்ற மக்கள் விரோத வானொலியானது இலங்கைச் சிங்கள பௌத்த சியோனிசத்தின்(இங்கு சியோனிசம் பற்றியும் குறித்தாகவேண்டும்.வாசகர் ஒருவர் கடந்த கட்டுரையில் கேள்வியும் எழுப்பியிருந்தார்! இஸ்ரேலியச் சியோனிஸ்ட்டுகள் இரண்டாவது யுத்தத்தின் பின்பாக தமக்கானவொரு தாயகத்தை பாலஸ்தீன நிலப்பரப்புக்குள் அமெரிகத் துணையுடன் நிறுவியது வரலாறு.இது அண்மைக் கிழக்கு நாடுகளுக்குள் தனது எண்ணை அரசியலை ஒழுங்குற நடாத்துவதற்கு அமெரிக்கா இஸ்ரேலென்ற விஷச் செடியை நாட்டியது.இந்தச் செடியானது தனது மேலாதிக்க நலனின் பொருட்டு தனக்குச் சொந்தமல்லாத,வரலாற்றுத் தொடர்ச்சியற்ற நிலப்பரப்புகளை தனது தாயகமெனக் கூறியபடி பாலஸ்தீனத்திடமிருந்து பறித்தபடி,வரலாற்றுப் புரட்டுக் கதைகளை அவிட்டு விட்டபடி, நாடுபிடிக்கும் யுத்தத்தையும்,கொலைகளையும் செய்தபோது, இது அந்தக் கொடிய இஸ்ரேலியச் சியோனிசத்தின் வெளிப்பாடாக இருக்கிறது.இத்தகைய அரசியல் ஆர்வத்தை,கொடிய மனிதவிரோதச் செயற்பாட்டை அரசியல் விஞ்ஞானத்தில் பொதுமைப்படுத்திக் கொண்டபோது "சியோனிசம்"மெனும் அரசியற் கருத்தாக்கம் "பாசிசம்"போன்ற பொதுமைப்படுத்தல் போன்று பயன்பாட்டுக்கு எடுத்தாளப்படுகிறது.இலங்கை அரசானாது இஸ்ரேலிய வழிகாட்டலோடுதாம் இனவாதப் போரைச் செய்வதும் கூடவே இக்கருத்துக்கு வலுவை வழங்கிக் கொள்கிறது.இத்தகைய அரசியற் கருத்தை இலங்கை இடது சாரிகள் 70 களில் பயன் படுத்தத் தொடங்கினார்கள்.குறிப்பாக கே.கணேசலிங்கன் எனும் மார்க்சியக் கல்வியாளர் தனது பல கட்டுரைகளிலும் பயன்படுத்தியதைச் சுட்டலாம்.இத்தகைய கருத்துக்களை இலங்கையின் முன்னணி சமூக விஞ்ஞானி குமாரி ஜெயவர்தனாவும் அப்பப்ப பயன் படுத்துவார்கள்.) காலடியில் கிடந்தபடி இந்திய உளவுத்துறையால் உரமிடப்பட்டு நடாத்தப்படும் வானொலியாகும்.இது தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமையைத் தனது எஜமானர்களுக்காக சிதைக்கும் கருத்தியற்றளத்தை கட்டியமைக்க முனையும் பிழைப்புவாத வானொலிதாமென்பதை இந்த யுத்த காலக்கட்டத்தில் நாம் மிக இலகுவாக அறியமுடியும். இத்தகைய தரணத்தில் இந்த ஜேர்மன் வானொலியினதும்,ஜேர்மன் கரிதாஸ் நிறுவனத்தின் கொழும்புக்கான அதிகாரி திருமதி பெக்கரின் கருத்துகள்,அவர்களின் செய்திகள்-இலங்கை யுத்தம் குறித்து என்னவென்பதைப் பார்ப்போம்:

"இலங்கையில் எதற்காக யுத்தம்?இந்த யுத்தமானது அப்பாவி மக்கள் பலரைக் கொன்று தள்ளியுள்ளது.இது தொடங்கப்பட்ட பின் சுமார் 1500.மக்கள்வரைக் கொல்லப்பட்டுள்ளார்கள்.நேற்றைய நிலவரத்தின்படி புலிகளின் பல கடற்கலங்களை இலங்கை இராணுவம் அழித்துள்ளதாக இராணுவம் கூறுகிறது.இதைப் புலிகளின் சார்பு ஊடகமான தமிழ் நெட் மறுத்து"அது சுனாமிக்குப் பின்பு கட்டியமைக்கப் பட்ட மீனவர்களின் நவீனப் படகுகள்"என்று கருத்துச் சொல்கிறது.இவையெல்லாம் சுதந்திரமான செய்திகளில்லை.இன்றைய நிலவரப்படி இலங்கையில் தனித்துவமான சுதந்திர ஊடககங்கள் கிடையாது.

கடந்த காலத்தில்,அதாவது 2004 சுனாமியால் இந்தத் தேசம் பாதிப்படைந்தது.அப்போது,தேசத்துpலுள்ள அனைத்து இனங்களும் பொதுவாகப் பாதிக்கப்பட்டு,பொதுவான துக்கத்தில் மூழ்கியது.எனினும்,மீளவும் யுத்தம்!இது எதற்கானது?இது கேள்வி.யாழ்பாண மாவட்டத்திலும் மற்றும் பல பாகங்களிலுமாகத் தொடரும் யுத்தத்தால் இதுவரை 160.000 அகதிகள் உருவாகியுள்ளார்கள்.இலங்கையில் சமாதானமான தீர்வு எட்டப்படவேண்டும்.யுத்தம் தவிர்கப்பட வேண்டுமென ஐ.நா.பிரதிநிதி திரு.கோபி அனான் தொலைபேசி மூலமாக இலங்கை ஜனாதிபதி திரு.இராஜ பக்சவைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.எனினும் யுத்தம் தொடர்கிறது.மேற்கு ஐரோப்பிய நாடுகள் பல புலிகளைப் பயங்கரவாத அமைப்பென்று தடையைச் செய்த பின்பு, இத்தகைய நாடுகளால் இலங்கைப் போரில் பாரிய தாக்கத்தைப் புலிகள் மேல் செய்ய முடியாதுள்ளது.நோர்வே அரசுக்கும் இந்த யுத்தத்தின் வாயிலாக என்ன செய்ய வேண்டுமென்ற ஆலோசனையும் இருப்பதாகத் தெரிய வில்லை.யுத்தும் நடாத்தும் அரசும் புலிகளும் யுத்தம் பாதுகாப்புக்கென்றபடி போரிடுகிறார்கள்.இது விரைவாக நிறுத்தப்படும் நிலை அங்கு இல்லை!"-வெஸ்ற் டொச்ச றுண்ட் புங்க.West Deutsche Rundfunk5-Mittagsecho : 19.07.2006. vom 13.35 Uhr.

அதே வானொலி தொடர்ந்து கொழும்புக்குத் தொடர்பை மேற்கொண்டு,ஜேர்மன் கரிதாஸ் நிறுவனத்தின் கொழும்புக்கான அதிகாரி திருமதி.பெக்கரைப் பேட்டி காண்கிறது:

வானொலி: கொழும்பில் இந்த யுத்தம் குறித்து எந்தவிதமான சூழல் நிலவுகிறது?இந்த யுத்த்தால் யாழ்பாணத்தோடான கொழும்புத் தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதே?

திருமதி பெக்கர்: கொழும்பில் இது குறித்து எதையும் பெரிதாக அறிய முடியாது.எனினும் இந்த யுத்தம் பாரிய அவலத்தைக் கொண்டுள்ளது.

வானொலி: இந்த யுத்தத்தில் 160.000.மக்கள் அகதிகளாகியுள்ளார்கள்,அவர்கள் எங்கே-எப்படித் தங்கி வாழ்கிறர்hகள்?

திருமதி.பெக்கர்:இது குறித்துப் பெரிதாக அறி முடியாதுள்ளது.எனினும் பல பொதுமக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி இடம் பெயர்ந்துள்ளார்கள்.கிட்டத்தட்ட 7000.பொதுமக்கள்வரை இந்தியாவுக்கு அகதிகளாகிச் சென்றுள்ளர்கள்.வெளி நாட்டுக் கடவுச்சீட்டை வைத்திருக்கும் தமிழர்கள் கொழும்பு நோக்கி வரவதற்கு முயற்சித்து வருகிறார்கள்.
வானொலி:இந்த யுத்தம் எதற்காக தொடங்கியது?கடந்த நான்கு வரடமாகச் சமாதானமாக இருந்து வந்தவர்கள் திடீரெனப் போருக்குள் மூழ்கியது எப்படி?

திருமதி பெக்கர்: இது இலங்கையின் புதிய அரசியல் தலைமை மாற்றத்துடன் ஆரம்பமாகிறது.கடந்த தேர்தலில் இராஜ பக்ச தலைமையில் ஆட்சி மாறியது.இந்தத் தலைமை சிங்களத் தேசியச் சக்திகளால் வழி நடாத்தப்படுவதால் இலங்கையில் இனங்களுக்கிடையிலான பிரச்சனைக்குச் சமஷ்ட்டி முறையில் அமையும் தீர்வுகளை விரும்புகிறதில்லை.எனவே ஒப்பந்தங்களிலுள்ள திட்டங்களைக் கிடப்பில்போட்ட அல்லது நிராகரித்த இராஸபக்ச ஆட்சியின் செயற்பாட்டால் யுத்தம் புலிகளுக்கும் அரசுக்கும் வெடித்துள்ளது."-கரிதாஸ் நிறுவன கொழும்புக்கான அதிகாரியோடான பேட்டி:19.08.2006 மணி:13.40.

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...