Skip to main content

அடிப்படை நேர்மை?

சின்னக்குட்டி:"அடிப்படை நேர்மை"!

"................."

அடிப்படை நேர்மை?

அப்படி ஏதாவதொன்று இந்தப் பொருளுலகத்துக்கு உண்டா?


உண்டென்று நான் நினைக்கவில்லை!

கேரளாவில் பிறந்தவள் ஐரோப்பியச் சந்தையில் தனது பக்தர்களுக்குப் பாதணிப் பூஜையைக் கற்றுக் கொடுக்கிறாள்.அவளது பாதணிக்குப் பால்வார்க்கும் விளம்பரத்தைக் கள்ளன் கருணாநிதியின்"கலைஞர்"தொலைக்காட்சி விளபரஞ் செய்கிறது.இலண்டனுக்கு வந்த அந்தச் சாமிக்காரி தன் படத்தை 200 பவுண்களுக்கு விற்கிறாள் புலன்(ம்)பெயர்ந்த தமிழர்களுக்கு.இங்கே,எந்த"அடிப்படை நேர்மை" இருக்கிறது.இது கருணாநிதியின்"கலைஞர்"தொலைக்காட்சியிடம் இருக்கா?கள்ளர்களின் உலகத்தில் கதைகள் ஆயிரம்.அவை காரணங்களை அடுக்கியே நம்மைக் கடாசுவதை நாம் பார்க்கிறோம்.

"அடிப்படை நேர்மை" பொதுப் புத்திக்கு இது தூய்மையான தியானம்!புள்ளி ராஜாவுக்குத் தெரியும் கொள்ளி எங்கே வைப்பதென்று!வைக்கக் கூடிய இடங்களை அவர்கள் தெரிவு செய்ய விட்டுவிடும் நமது பொதுபுத்திக்குச் சாவுமணியை அடியுங்கோடா எந்தக் கள்ளிப்பால் பசங்களாவது!

பாருங்கோடா அதி மேதாவிகளே, வந்ததே உங்களுக்கு "அடிப்படை உரிமை","படைப்புரிமை"!

அட போடா புண்ணாக்கு.உன்ர தேசத்திலே நீ படுத்துறங்கும் அடிப்படை உரிமையே இல்லாதபோது,இந்த"உரிமைகள்"பற்றி எவன்டா கத்துறான்.எப்பவோ தனக்குச் சங்கு ஊதினமாதிரி"கம்மண்டு"இருப்பவன் "அடிப்படை நேர்மை"பேசுறான்டா!இதுதான் சகிக்க முடியேல்ல!

மிக அடவாடித்தனமான இந்தக் குவிப்புறுதிச் சமுதாயத்தில் அப்பாவி மக்களையே ஏதேதோ காரணஞ் சொல்லிக் கொன்று குவிக்கும் வர்த்தகச் சதிகாரர்கள் ஈராக்கிலும்,அவ்கானிஸ்தானிலுமாகப் பயங்கரவாதத்தைக் கண்டுபிடித்து, இன்றுவரை என்ன செய்கிறார்கள்?

இந்தியாவில் வர்த்தகச் சினிமாவின்வழி எத்தனையுள்ளங்களை இந்த"அடிப்படை நேர்மை"இன்றி அழித்துப் பெண்ணுடலைப் பண்டமாக்கி-பணமாக்கி நம்மைத் தலையைப்பிச்சுக் காமப் பேய்களாக்கியுள்ளார்கள்!

பெண்தொடையையும்,தொப்பிளையும் விட்டால் இன்றைய தமிழ்ச் சினிமாவில் என்ன "படைப்பு"இருக்கிறது?

அப்பாவி மக்களை முட்டாளாக்கி அவர்களைப் பட்டுணிபோட்டுக் காசு பண்ணுபவன் எந்த "அடிப்படை நேர்மை"கொண்டு இங்ஙனம் "சமூகத் தொண்டு"செய்கிறான்?

தமிழ்மணம் துவக்கிவைத்திருக்கும்"உரிமை"பெறுதல் என்பது இணையத்தில் கட்டுரையாளரின் பெயரோடு மீள்பதிவிடும் ஆக்கங்களை கருத்துக்களுக்காப் பரவலாக்கும் நோக்குக்கு லாடம் கட்டுவதாக இருக்கும்.என்னய்யா பெரிய உரிமை?உங்களது உடலில் உயிரை தேக்கி வைக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா?நாளைக்கு நாம் உயிரோடு இருப்பதைத் தீர்மானிப்பவர்கள் எவர்?

உயிர்வாழ்வதற்கே போராட்டமாகப்போன இந்த உலகில் மகாப்பெரிய"படைப்புரிமை"-"அடிப்படை நேர்மை"எல்லாம் கொடிகட்டிப் பறக்குதாடா நம்ம முற்றத்திலே,பாழும் மானுட உயிரோ படுக்கையிலே குண்டடிக்குப் பறிக்கப்படுகிறது.கேட்டாச் சொல்லுறான் பாகிஸ்தான் போடருக்குள் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்குகிறார்கள்,நாங்கள் அவர்களுக்குப் போடும் குண்டில் பொதுமக்களும் சாகிறார்கள்!

யாரடா இவன்கள்?

இன்னுஞ் சொல்லுங்கோடா தம்பிமாரே"அடிப்படை நேர்மை"யை காஞ்சிக் காமக்கோடி பாணியில்.அல்லது நம்ம ஜேர்ச் புஷ் பாணியில்.
"........................."

அப்பாவி மக்களின் பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு பேயாய் அலையும் மேற்குலகமும்,அமெரிக்காவும் உலகத்தில் சொல்லும் ஜனநாயகம் போன்றதே இந்த"அடிப்படை நேர்மை"யும்-இல்லை?

"நேர்மை" மண்ணாங்கட்டி!

எவன் இதற்கு இசைவாக நடக்கிறான்?

இந்த உலகத்தில் இத்தகைய சொல்லாடலைப் புரியாதபடி இதோ "விட்டுத் தொலைக்கிறேன்" பாணியில் "அடிப்படை நேர்மை"சின்னக் குட்டியைக் கொன்று போடுகிறது!

ஐயோ பாவம்!

சின்னக் குட்டியார்,கொஞ்சம் நம்ம தேசத்தைப் பாருங்கள்.எந்த "அடிப்படை நேர்மை"யோடு நம்மைக் கொன்று குவிக்க உலகம் சிங்கள அரசின் பின் நிற்கிறது?

இந்த இலட்சணத்தில்:"உரிமை","அடிப்படை நேர்மை",வர்த்தக உரிமம்" குறித்துக் குரல் விடுகினம்...

போங்க,போய் ஈரச்சாக்கில படுங்க.

இந்த உலகத்தில்"அடிப்படை நேர்மை"குறித்துப் புலம்பும் கள்ளர்களை நம்பத்தான் வேண்டுமா?அப்படியாயின் உலகத்தை வேட்டையாடும் வர்த்தகச் சூதாடிகளிடம் மனுப்போடுவதற்கும் தயாரா?

ரை கட்டிய கள்ளர்களும்,காவி கட்டிய கள்ளர்களும் இன்னும் அங்கிகள் தரித்த கொலைக்காரர்களும் இந்த"அடிப்படை நேர்மையை"க் குறித்து எழுதுவார்கள்.இதையும் சின்னக் குட்டிபோன்றார் கர்தருக்கு விசுவாசமாக நடக்கும் பாணியில் மனம்கொள்வார்கள்!

நல்லகாலம் பிறக்கிறது "அடிப்படை நேர்மை"கொண்டு,அவசரப்படாதீர்கள் எல்லோரும் பரதீசில் பக்குவமாக வாழப்போகுறோம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
18.09.2008
வூப்பெற்றால்

Comments

என்ன அண்ணை..
இண்டைக்கு கொஞ்சம் கூடிப்போச்சு போல :)
Sri Rangan said…
அப்பன் மவனே சிங்கன்டா நீ!உடனே கண்டு பிடிச்சிட்டாய்.அப்படியே ஓரமாய் அதைக் கட்டு.அதுபோக,எங்கே உங்களைக் காணமாற் போவேனோ என எண்ணியபொழுதில் தலை காட்டும் கொழுவியோ கொழுவிதான்-நீ ஒரு அடிப்படை நேர்மையானவன்!
Anonymous said…
ஸ்ரீரங்கன்,
குழப்பிறியளே. சவாரி போறவனை விட்டுப்போட்டுக் குதிரையைச் சுடுகிற காலத்திலை, ஓசிக்குதிரையாச்சும் ஒழுங்கா இருக்கவிடமாட்டியள்போலை.

தொப்புள் நிப்பிள் பீப்பிள் கப்பில் மப்பில் எல்லாம் அவரவர் விருப்பப்படி பண்ணலாம்; ஆனால், அவற்றை வீட்டிலை வச்சிருக்கிற மற்றவன்ரை சாமானுக்கு நீயாரடா விளம்பரம் குடுக்கிறது எண்டெல்லோ, பலகீனமானவனைப் பாத்துக் குத்துற வீரத்தமிழ்ப்பரம்பரையுலகு இது. உதால உரிமையெல்லாம் சொல்லித்தான் ஆகவேண்டுமெண்ட நியாயமிருக்குதெல்லோ?
Anonymous said…
//புலன்(ம்)பெயர்ந்த தமிழர்களுக்கு//

:)

அடுப்படி நேர்மையே இன்னும் சரியாக வருகுதில்லை.

இதிலை அடிப்படை நேர்மைக்கு எங்கு போவது? :)

Theevu-.n
Anonymous said…
தண்ணியடிச்சிப் போட்டு எழுதுகிறாய் போல.

பேமானி
கஸ்மாலம்
கேணப் பய
Sri Rangan said…
வணக்கம் இரமணி,

குழப்பவில்லை!

இது, இந்த வர்த்தகச் சமுதாயத்தின்மீதான ஒழுங்கு கலைத்தல்.
அவர்கள் எம்மை முட்டாளாக்கியபடி உலகை மொட்டையடிப்பதற்கு உரிமை கொண்டாவதையே நான் உடைப்பதாகச் சொன்னேன்.
உதாரணமாகத் தமிழ்ச் சினிமாகூட இதுள் அடங்கும்.

நீங்கள் குறித்த அர்த்தம்படி
அந்தவுரிமையை உடைப்பதாக இருந்தால்
எனது கருத்துக் குழப்பமாக இருக்கும்.

அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை!


தீவு,வாங்கோ-வணக்கம்!

"அடுப்படி நேர்மையே இன்னும் சரியாக வருகுதில்லை" என்ற வாக்கியத்துள் இந்தவுலகத்தின் அனைத்து "ஆண் தன்மையும்"அடக்கம்!
உண்மையில் நாம் அடுப்படியை எங்கள் தாய்மாரிடமிருந்து தலைமுறை தலைமுறையாகக் கைமாற்றிப் பெண்களிடமேதான் ஒப்படைக்கிறோம்.

இங்கே,நம்மையே கேள்விக்குட்படுத்தும் வாக்கியத்தை
மிக இலகுவாகச் சொல்லிவிட்டுப் போகிறீர்கள்.

உங்கள் கருத்து நியாயமானதுதான்.


கருத்துக்களுக்கு நன்றி.

Popular posts from this blog

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின் அழைப்பைத்தாண்டி எந்தன் மரணம் எட்டுமா? கொலைச் சூத்திரங்களை மட்டும் உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியா மரணத்தின் விலையை இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..." -அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.) "கரும்புலிகள்- தமிழ்ச் செல்வன்கள் மரணத்திலும் மகிழ்வும், துக்கமும் புலிகளுக்குள்." இ ருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்ப...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படிய...