Thursday, July 19, 2007

பல்கேரியப் பயணம்.

பல்கேரியப் பயணம்.


"மழை கொட்டிக்கொண்டிருக்கு,மின்னல் வெகுவாக இடியோடு மல்லுக்கட்டியபடி."எனக்கு
மழையென்றால் அதியசயத்தக்க இன்பம்,என் மனதெங்கும் கரை புரண்டோடும்.இதை நான்
எப்போதுமே உணாந்தபடி."என்ற கனவோடு சின்னராசா மழையைப் பார்த்துக்
கொண்டிருந்தான்.இவன் எந்தப் பொழுதில்,எந்த மாதிரியிருப்பானென்று எவருக்கும்
தெரியாது.மிகக் கொடுமையாளனாகவும் மிக நல்லவனாகவும் இருந்திருக்கச் சாத்தியங்கள்
கூடியபோது அப்படியே இருந்திருக்கிறான்.



வெளியில்
மெளனித்துக் கிடக்கும் காலத்தில் எப்போதும் அதிர்வுகளைச் செய்தபடி சிந்து
இருக்கிறாள்.அவளுக்கு இது முழுமுதற் பொழுதாகவும்-முயற்சியாகவும்
இருக்கலாம்.காலத்தில் வாழும் சிலருள் அவளும் ஒருத்தியாக இருப்பதாகச் சொன்னால்
மேலும் பொழுதுகள் கடந்துவிடும்."நான் திசை தெரியாதிருக்கும் கடல் வழி நடப்பதில்
அதிகம் நாட்டமுடையவள்" என்று அடிக்கடி சொல்வதில் சிந்து பகா சூரி.அவளுக்கு
அவசியமில்லாதவற்றுள் அதிகப்படியான வார்த்தைகளைக் கொட்டியபடி அதை அவசியமாக்குவது
அவளுக்கு அதிகமான இன்பத்தைக் கொடுத்தபடியிருக்க அறுப்பான் சின்னவனுக்கு
எப்பவுமே
அகதியத்திலிருந்து அறுந்து தொலைவதில் கற்பனைகள்
அதிகம்."
மக்களுக்குச் சேவை செய்பவர்கள்.

இந்தப் பொழுதில் ஒரு தேசம் நோக்கிச் செல்வதற்குப் பயணிப்பதே ஆவலாக இருந்தது.அகதியத்தைத் தொலைப்பதற்கு மாற்றாகவே இந்தப் பயணிப்புகள் மனதுள் விரிவது வழமை.

எப்பொழுதும்போலவே இந்தப் பயணமும் பெரும் தொகைப் பணத்தைத் தின்றபோதும் இந்த நாட்டைப்பற்றிய பிரத்தியேக எதிர்பார்ப்பு அதைப் பெரிதுபடுத்தவில்லை!


குழந்தைகளின் பள்ளி விடுமுறையானது எனக்குமான விடுதலையாக விரிந்துவிடும்.இது காலத்தால் தீர்மானிக்கப்பட்டதல்ல.வர்த்தக வசதிகளால் தீ¡மானிக்கப்பட்ட சூத்திரம்.


இவ்வாண்டு ஐரோப்பாவின் வாசல் நோக்கிப் பிரயாணித்தல் நோக்கமாகவிருந்தது.

மக்கள் வாழ்விடங்கள் வகை மாதிரிக்கு


உலகுக்கு:பல்கேரியா-அந்தத் தேச மக்களிடம்:புல்காறியா.


தேசத்தின் மூன்றாவது பெரிய நகரமான வார்னா(ஏயசயெ) விமான நிலையத்தை அடைந்தபோது தேசத்தின் வளங்கள் எத்தகையது என்பதை அறிவதில் நாட்டமாகியது.


முன்பு சோசலிசத் தேசமென்று அறியப்பட்ட தேசம்.


இது பெரும்பாலும் அதிகார வர்க்க அரசமுதலாளியத்துக்கு அன்று புனையப்பட்ட "இடு" பெயர்!எனினும், இந்தத் தேசத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் தோல்வியின் இரகசியம் தெரிகிறது.பெரும்பாலும் பல்கேரியா ஒரு இனத்துக்கான தேசமல்ல.அங்கே பல்கேரிய இனம் 83,9 வீதமும், துருக்கிய ஒஸ்மானிய இராச்சியத்தின் வழிவந்த துருக்கிய இனம் 9,4 வீதமும் இந்தியத் தலையிலிருந்து இடம் பெயர்ந்து எங்களைப்போல் அலையும் மக்களான சிந்தி ரோமா 4 வீதமும்,2 வீத ருஷ்சிய மற்றும் ஆர்மேனிய இனக் குழுக்களும் வாழ்கிறார்கள்.என்றபோதும் பல்கேரிய இனத்தின் அதிவேகமான இனத்துவ வெளிப்பாடுகளே ஆதிக்கஞ் செய்கின்றன.சிறுபான்மை இனக் குழுக்கள் தேசத்தின் விளிம்பில் வாழும் நிலையைக் காணத்தக்கதாக இருக்கிறது.


1878 வரை துருக்கியச் சாம்பிராச்சியத்தின் பிடிகள் நிலவிய பல்கேரியா இது.இந்தத் தேசத்தில் இறங்கிய தரணத்தில் முன்னாள் சோசலிசக் கனவுகளும் அந்த மக்களின் மனங்களையும், இன்றைய ஏகாதிபத்தியங்களின் பல்தேசியப் பகாசூர வர்த்தக முன்னெடுப்புகளையும் அறிவதில் நாட்டம் கொண்டேன்.தெருவெங்கும் குவிக்கப்பட்டிருக்கும் பொருட்களும்,கையேந்தும் மக்களும்,கண்ணீர் மல்கச் சொல்லும் கதைகளுமாகப் பல்கேரியா இன்று "வளங்கொண்ட"நாடாகிறது!


வர்த்தகச் சாம்பிராச்சியத்தைக் கைப்பற்றியவர்கள் யார்?


உல்லாசத் துறையைக் கைப்பற்றியவர்கள் யார்?


நாட்டை ஆள்பவர்கள் யார்?


மக்கள் குவிக்கப்பட்டிருக்கும் பொருட்களைக் கொள் முதல் செய்யும்-வாங்கும்-நுகர்திறன் கொண்டிருக்கிறார்களா?


இவை கேள்விகள்.


கண்ணில் எதிர்பட்ட எல்லோரிடமும் கேள்விகளைக் கேட்டேன்.


"நீ எந்தத் தேசத்தில் இருந்து இங்கே வந்தாய்?-இந்தியனா?"என்ற கேள்விகளோடு இந்தியர்கள் படித்தவர்கள் என்ற பதிலும் வந்தது.கேட்கப் பெருமையாய் இருந்தது.


ஒரு தேசம் சிதைவுகளுக்குள்.இன்றைய அதிகாரமிக்கவர்கள் எல்லோருமே அன்றைய அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே.அவர்களின் இன்றைய இருப்பு மாபியாத்தனத்தின் வெளிப்படையான ஒடுக்குமுறையோடு சாத்தியமாகிறதாகச் சொன்னார்கள்.


"இன்றோ அங்காடி எங்கும் பொருட்கள் குவிந்திருக்கிறது.ஆனால்,வேலையில்லை.பணமும் இல்லை.அன்றோ வேலையிருந்தது,பணமும் இருந்தது.ஆனால் அங்காடிகள் வெறுமையாக இருந்தன.பொருட்களை வேண்டக் கியூ வரிசையாக மக்கள் தவித்தார்கள்."இந்தப் பதில் என்னை மீளவும் சுட்டது.

இது குறித்துச் சிந்திப்பதில் கஷ்டமெதுவுமில்லை.

பதிலும் மிக எளிமையானது.


தொடரும்.


ப.வி.ஸ்ரீரங்கன்.
19.07.2007


No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...