Sunday, March 13, 2011

ஜப்பான்:அணு ஆலை அனர்த்தமும்,கையறு நிலையும்.

ஜப்பான்:அணு ஆலை அனர்த்தமும்,கையறு நிலையும்.

-சில குறிப்புகள்.

பூக்கோஷீமா (Fukushima )அணு மின் ஆலை புவியதிர்வுக்குப்பின்பு "ரீஆக்ரரை"க் (Reaktor)குளிர்மைப்படுத்தும் செயலூக்கக் கலைவுக்குப்பின்[Das Kühlungssystem im Reaktor] அதிர்ந்து வெடித்திருக்கிறது. அணுக்கழிவு தரும் தொல்லை பெரு வணிகத்தின் மிகையுற்பத்தி தந்த பரிசுவெனச் சொல்வதில் எனக்கு எந்தக் கூச்சமும் இல்லை!

அணுப் பயன்பாடானது மனிதப் பண்பாட்டைப் பூண்டோடு அழிப்பதில் முடியுமென்பதைப் பல விஞ்ஞானிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.எனது அறிவுக்கெட்டியவரை அதன் அனைத்து அழிவுகளையும் முன்னேறிய விளக்கங்களிலிருந்து தேடிக் கற்றிருக்கிறேன்.இந்தப் புரிதலிருந்து இன்றைய ஜப்பானது அழிவுகனை நோக்குவதில் சிக்கலேதும் இல்லை!மேற்குலக ஊடகங்கள் நிமிடத்துக்கு நிமிடம் தரும் விளக்கங்கள்-ஆய்வுகள் யாவும் ஏலவே பலரால் படிக்கப்பட்டது.குறிப்பாகப் பசுமைக் கட்சிகளால்.
ஐரோப்பியப் பசுமைக் கட்சிகள் அணுவினது பயன்பாட்டிலிருந்தே முளைவிட்டவை.இவர்கள் இன்றைய ஜப்பானது இயற்கை அனர்த்தம்,மற்றும் அதன் தாக்கத்துள் சிக்கிய அணுவாலை அனர்த்தம் குறித்துப் பேசுகின்றன.மிக முன்னேறிய தேசமான ஜப்பானது கையாலாகத்தனம் விஞ்ஞானத்தின் எல்லையை எமக்குப்படும்பிடித்துக்காட்டுகிறது.


ஐரோப்பிய அரசுகள் தமது முற்றத்திலுள்ள அணுவாலைகளை மேலும் வலுப்படுத்தக் கண்கண்டிவித்தைகளைச் செய்கின்றன.ஜேர்மனிய அதிர்பர் அங்கேலா மேர்க்கெல் வீடியோக் கமராமுன் நன்றாக நடிக்கத் தொடங்கிவிட்டார்.

"விஞ்ஞானிகளே,எக்ஸ்பேர்ட்டுக்களே,அணுவாலைகளைச் சிறப்பாகக் கண்காணியுங்கள்!" என்பதோடு அவரது நடிப்புச் சரியாகிவிடும்.

அதி பகாசூரக் கொன்சேர்ன்கள் [Energieversorgungsunternehmen]சக்திவள வணிகத்தில் மக்களையே வேட்டையாடுவதென்பதில்லை! அவர்கள் ( Energiekonzerns)முழு இயற்கையையும் திருடுகிறார்கள். இன்றைய வர்த்தகவுலகமானது யுத்தத்தால் செய்யும் கொடுமை ஒருபுறமாகவைத்து விவாதிக்கும்போது,இந்த, அவர்களது உற்பத்திப் பொறிமுறையின் மனிதவிரோதப்போக்கே இனிவரும் காலங்களில் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கவேண்டும்.

இன்று, ஜப்பானது இயற்கை அனர்த்த-அணுவனர்த்த அழிவுகளை மேற்குலகமும்,முன்னேறிய முதலாளிய அரசுகளும் பெரும் பிரிசீலனைக்கு உட்படுத்த முனைகின்றன.இதிலிருந்தும்,இதுபோன்ற தமது முற்றத்தில் விடியும் அனர்த்தங்களிலிருந்து தமது அமைப்பை எங்ஙனம் காப்பதென ஆய்வுகளை முடுக்கியுள்ளனர்.மக்கள் சாவு அவர்களுக்கான பொருட்ட அல்ல.



மேற்கு ஜேர்மனிக்கு இயற்கை அழிவு-புவியதிர்வு குறித்த கவலையின்றித் தமது அணுவாலைமீது "எதிரிகள்"விமானத்தால் மோதிச் சேதங்களை உருவாக்குவது குறித்த ஆய்வே முக்கியமானதாகவிருக்கிறது.செப்ரெம்பர் 11 இக்குப் பின் இந்தமாதிரியே ஜேர்மனி சிந்திக்கிறது. முற்பகல் செய்தவர்கள் பிற்பகல் விடிவையே குறித்துக் கனாக் காண்கின்றனர்.

ஜப்பானியப் பேரரசு தாம் பேய் அரசுதாமெனச் சொல்லலவுஞ் செயற்படவும் முடியாத திண்டாட்டுத்துள் அணுவினது அனர்த்தத்துக்குமுன் கட்டுண்டுபோய்க் கிடக்கின்றது.எந்த மூளையும் எதுவுஞ் செய்ய முடியாது.கதிரியக்க மாற்றத்தின் பின்னான சூழலே அதிகமானது.மழைப் பொழிவு அதிகமாகும் சூழலொன்றில் அணுவியக்கம் தரையிலே மையமுறும்.காற்றில் கலக்கும் கதிரலையானது எங்கோ ஊசாலடிச் சென்றுவிடினும் தரையிற்றங்கும் அணுக்கதிர் பலவருடத்துக்குப் பாடாய்ப்படுத்தப்போகிறது அப்பிரதேச மக்களை.அழிவுகள் வந்து சேரும் முறைமைகளை நாம் பல முனைகளில் அறியலாம்.இந்தியத் துணைக்கண்ட அணுவாலைகள் குறித்த கட்டுரையொன்றில் முன் பே பேசவும் முற்பட்டேன்:

இந்தியத் துணைக்கண்டமும் அணுவும்:

இந்தியாவானது அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் பலபத்து அணுமின்னாலைகளை நிறுவிவிடும்.அதன் வளர்ச்சியும்,பொருளுற்பத்தியும் சீனாவுக்கு நிகராக உயரும் சாத்தியமுண்டு.இந்தத் தேவையின் பொருட்டு வளர்ந்துவரும் இந்தியாவானது எந்த நிலையிலும் சூழற் பாதுகாப்புணர்வுடன் நடந்துகொள்ள வாய்ப்பில்லை.அதன் பொருளாதாரச் சார்பானது அமெரிக்க ஆதிகத்தின் பக்கம் இருக்கும்போது இந்தச் சூழலியற்றேவைகளை ஒருபோதும் இந்தியா மதிக்காது.பண்டைய வாழ்வு அதற்கினிக் கைகூடாது.இந்தியத் துணைக்கண்டத்தின் அணுமின்சாரத்திட்டமானது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது!இதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.


1):வளர்ந்துவரும் சூழலியல் விஞ்ஞானமானது நமது உயிர்வாழ்வின் அவசியத்துக்கு இப் புவிப்பரப்பானது அணுமின்சாரத்தை நிராகரித்த உற்பத்தித் திறனோடு எதிர்காலத்தை எதிர்கொள்வதே சாலச் சிறந்ததாகக் காண்கிறது.இதன் பொருட்டுப் பற்பல மேற்குலக நாடுகள் 2030 ஆண்டுகளுக்குள் தமது அனைத்து அணுமின் நிலையங்களையும் படிப்படியாக மூடிவிடும் திட்டத்தோடு மாற்று வழிகளைக்காணும்போது இந்தியாவோ அணுமின் திட்டத்தை வலுவாகச் செயற்படுத்தத் தயாராகிறது!.

2):இந்தியா அணுமூலமாகத் தயாரிக்கும் மின்சாரத்தை மிகவும் இலாபகரமாகப் பெறமுடியாது.இதற்கான தகுதி அதற்குக் கிடையாது.அதாவது அமெரிக்காவுடன் அதன் ஒப்பந்தம் இத்தகுதியை அதனிடமிருந்து பறித்துவிடும்.மின்சாரம் போதியளவு பெற்றுவிடலாம்.ஆனால் அணுக் கழிவுகளே மிகப் பெரும் செலவை இந்தியாவுக்கு வழங்கி அதன் உட்கட்டமைப்பைச் சிதறிடிக்கும்.இது மிகவும் நிதானமான அமெரிக்காவின் சதிவலை.இந்திய ஆளும் வர்க்கமானது தமது வருவாயை மட்டுமல்ல அந்நிய சக்திகளோடிணைந்து இந்தியக் கனிவளங்களையும் சூறையாடிப் பெருவங்கிகளில் பதுக்குவதற்குத் தயாராகிறார்கள்.இதன்படி அந்த வர்க்கம் எந்த முன் நிபந்தனையுமின்றி அமெரிக்காவோடு கூட்டிணைவதில் மும்மரமாகச் செயற்படுவார்கள்.

இவை மிகமுக்கியமான உதாரணங்களாகும் இந்தியத் தரகு முதலாளிய ஆட்சியாளர்களின் ஈனத்தனத்தை அறிவதற்கு.ஏனெனில், அணுமின்சாரமானது மிகவும் ஆபத்தானது.அது புவிப்பரப்பு எதிரானது!ஏன் உயிரினங்கள் அனைத்துக்குமே எதிரானது.இதை எங்ஙனம் நிறுத்தமுடியுமென மானுவர்க்கஞ் சிந்தித்து அதற்காகப் போராடி வரும்போது இந்தியா மிகச் சிறுபிள்ளைத்தனமாகக் காரியமாற்றுகிறது.இலங்கையில் தொடர்ந்து அணுமின்சார ஆலைகள் நிறுவப்படும்.அதன் உற்பத்திக்கேற்ற வலுவுள்ள ஆலைகள் இனிவரும் ஆண்டுகளில் நிறுவப்படும்.

அணுக்கழிவுகளின் இறுதிப் பராமரிப்பு ஒரு இலட்சம் வருடங்களுக்கு:

இன்றைய மூன்றாமுலக அரசியல் வாதிகள் அதிகமாகக் கற்றவர்களோ அல்லது மனித நேயமிக்கவர்களோ கிடையாது.இவர்கள் ஆளும் பூர்ச்சுவா வர்கத்தின் வெறும் அடியாட்கள்-மாபியாக்கள்!இவர்களிடம் பணம் சேர்க்கும் அவாவுடைய மனதிருக்கு,ஆனால் மக்களின் எந்தத் தேவைகளையும் பற்றிய துளியளவு அறிவும் கிடையாது.இதனாற்றான் அநேகமான அரசியல்வாதிகள் அணுமின்சாரத்தை எதிர்ப்பதில்லை.மாறாக அவற்றை மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான முக்கிய கருவியாகக் கணக்குப் பண்ணுகிறார்கள்.



அணுமின்சாரத்தின் இறுதிக்கழிவு வடிவமானது புளோட்டோனியமாகும்.இந்தப் புளோட்டோனியத்துக்கு பலவகைத் தரப்படுத்தற் காலமுண்டு.அந்தவகையில் அதன் அரைதரக் காலமானாது 24.000.வருடங்களாகும்.இதன் அர்த்தம் என்னதென்றால்முதற்பகுதி24.000 ஆண்டுகளுக்கு நடைபெறும் கதிர்வீச்சு பின்பும்24.000.ஆண்டுகளுக்கு கதிரியக்கமாக நடக்கும்- அடுத்த அரைக் காலத்திலும் கதிரியக்கம் நடைபெறும்,அதன்பின்பு இதே தொடர்கதையென்று கதிரியக்கம் பற்றிய அறிவு குறித்துரைக்கிறது. இந்தக் கேடுவிளையும் அபாயமான சாமான் மிகவும் பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருக்கவேண்டும்.இந்தியாவல் இது சாத்தியமில்லை.அதாவது என்னென்ன வடிவங்களில் இது காக்கப்படுவேண்டுமென்றால்:

1):கதிர்வீச்சை தடுப்பதற்கான முறைமைகளைத் தவிர்காதிருக்கவேண்டும்.

2):யுத்தத்தால் பாதிப்படைவதைத் தடுத்தாகவேண்டும்.

3):வெள்ளப் பெருக்கிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

4):பயங்கரவாதத் தாக்குதிலிலிருந்து பாதுகாக்கப்படுவேண்டும்.

5):பலாத்தகாரத்துக்குள்ளாகப்படுவதைத் தடுத்தாகவேண்டும்.

6):ஊழலிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

7):கீழ்த்தரமாகப் பயன்படுத்தலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

8):நிர்வாகக் கவனக்குறையிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

9): ஞாபக மறதியிலிருந்து தவறேற்படுவதைத் தடுத்தாகவேண்டும்.


இப்படிப் பல்வகைக் கடப்பாடோடு இந்த உயிர்கொல்லியைப் பாதுகாத்தாகவேண்டும்.அதாவது கண்ணுக்குள் எண்ணையை ஊற்றிக்கொண்டே பாதுகாத்தாகவேண்டும்.இந்த வகைப் பாதுகாப்போடு எந்த நாட்டிலுமுள்ள பகுதிகளும் இல்லை!வளர்ச்சியடைந்த நாடுகளே திண்டாடும்போது இந்தியாபற்றிச் சொல்லவே தேவையில்லை!இந்த நேரக்குண்டானதையெங்குமே பாதுகாத்துவிட முடியாது.இதன் கதிரியகத்தை எந்த விஞ்ஞானமும் கட்டுப்படுத்திட முடியாது.இலட்சம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டியதை,எந்தக் கொம்பரும் மலிவாகச் செய்துவிட முடியாது.பலகோடிக்கணக்கான செல்வத்தை இது வேட்டையாடிவிடுகிறது.


இதைப் பாதுகாக்கப் பயன்படும் செலவானது அந்த நாட்டின் மொத்தவுற்பத்தியில் பல பங்கைச் சூறையாடும்.இந்தப் புளோட்டோனியம் நமது புவியையும், உயிர்களையும் கொன்று இல்லாதாக்கி வருகிறது.இன்றைய உற்பத்தி முறைமையின் சக்திவளாதாரம் எங்ஙனம் மனிதவலத்தை ஏற்படுத்துகிறது?-இதையும் சற்று நோக்குவோம்.


இன்றைய சக்திவள ஆதாரத்தில் மனித வாழ்வு:

-ஒவ்வொரு செக்கனுக்கும் ஒருவர் பட்டுணி கிடக்கிறார்.

- ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 கெக்டர் காடு அழிக்கப்படுகிறது

-நாளொன்றுக்கு 80 வகைத் தாவரங்கள் அழிந்தே போகிறது.

-ஒவ்வொரு கிழமையும் 50 கோடித் தொன்கள் கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் கொட்டுகிறோம்.

-ஒவ்வொரு மாதமும் பாலைவனத்தில் 5 இலட்சம் கெக்டரை விஸ்தரித்துப் பெருக்கிவிடுகிறோம்.

-ஒவ்வொராண்டும் ஓசான் பாதுகாப்புறையில் 1 வீதம் மெலிதாக்கி வருகிறோம்.



இந்த மனித வாழ்வு எங்கே செல்கிறது?


எதை நோக்கி முதலாளியம் மனித வாழ்வை நகர்த்துகிறது?:


நாம் பிறக்கிறோம்,கற்கிறோம் வேலைக்குச்செல்கிறோம்,மணமுடித்துக் குழந்தைகள் பெறுகிறோம்!எங்களில் எத்தனை பேர்கள் நமது சூழலின் தூய்மை-மாசு பற்றிய உணர்வோடு வாழ்கிறோம்?எத்தனை பேர்கள் தத்தம் நாட்டின் அரசியல் பொருளாதாரச் சூழல் நெருக்கடியை உணர்வுபூர்வமாக உள்வாங்கி அதை நிவர்த்தி செய்வதற்கான அழுத்தங்களை முன்வைக்கின்றோம்?


இன்றைய சூழலல் நெருக்கடியான மிக உண்மையானது.கடுமையானது!இந்த நெருக்கடியை தீர்த்தாகவேண்டும்.அங்ஙனம் தீர்க்கப்படாதுபோனால் புவிப்பரப்பில் இன்னும் ஓரிரு நூற்றாண்டில் உயர் வாழ்தல் சாத்தியமின்றிப்போவது உண்மையாகும்.நச்சுக் கிருமிகளினதும்,விஷச்செடிகளினதும் இருப்பே சாத்தியப்படலாம்.இத்தகைய எதிர்காலத்தை எதிர்கொள்ளவா நாம் மாடாய் உழைக்கிறோம்,குழந்தைகளைப் பெறுகின்றோம்?


எமது உற்பத்தி முறைகளுக்கும்,சக்திவள நுகர்வுக்கும் எந்தப் பொறுப்பும் சுமத்தாமால் வெறுமனவே இலாப வேட்கையுடன் தொடர்ந்தாற்றும் மனித இடைச்செயலானது, நம் தலைமுறையையே நோய்வாய்ப்படுத்தியுள்ளதை எத்துணை மதிப்பீடுகளுக்குள் நாம் உட்படுத்தி ஆய்ந்திருக்கிறோம்?

சமுதாயத்தின் முழுமொத்த மக்களும் ஆரோக்கியமற்ற மனிதர்களாகவும்,ஏதோவொரு குறைபாடுடைய சிசுவாகக் கருவில் உருவாகும் புதிய மனிவுயிருக்கு யார் பொறுப்பாளிகள்?நமது வாழ்கை முழுதும் பெரும் குற்றவாளிகளாக மாறிவரும் இந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு நடாத்தும் "நம் கூட்டுழைப்பு" நம்மையடிமைப்படுத்தும் இன்றைய காலத்தில் வாழ்வின் அர்த்தம் என்ன?


சூனியத்துள் விழுந்துகிடக்கும் ஒரு ஊதாரிக்கூட்டமாக மாறியுள்ள தலைமுறைக்கு எதிர்காலத்தையும்,சூழலையும் அது சார்ந்த உயிர் வாழ்வையும்,மனித இடைச் செயலையும் பற்றிய மதிப்பீடுகளா முதன்மை பெறுகிறது?


"நாவிலுள்ள எச்சிலை விரலில் தொட்டு எங்கோ பூசுவென்று "சேட்"பண்ணும்போது எழுதுகின்ற கூட்டமாக மாறியுள்ள இந்தத் தலைமுறைதாம்" நமது அடுத்த கட்டத்தை நகர்த்தப் போகிறது!நினைக்கவே தலை சுற்றுகிறது.எங்கே போகின்றது நமது தலை முறைகள்?


இந்தத் தலை முறையின் பின்னாலுள்ள உற்பத்தி-இலாப வேட்கையின் சூத்திரதாரிககளான இந்த முதலாளிப் பிசாசுகள் இப்போது குளோபல் வர்த்தகத்தின்மூலம் புவிப்பரப்பின் அனைத்துப் பாகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தபின், நமது சூழல் அனைத்து வடிவங்களிலும் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது!


இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தச் சூழல் பொறுத்துக் கொள்ளும்?




அது பொறுமையுடையதாக நாம் காணவில்லை!உலகெங்கும் புவி அதிர்வுற்றுப் பற்பல அழிவுகளையும்,வளிமண்டலத்தில் பலகோடி நோய்க் கிருமிகளையும் அது இயல்பாகமாற்றித் தந்துகொண்டேயிருக்கு. இன்றைய "எச்5 என்1"வைரஸ் அடுத்த பத்தாண்டுகளில் நம்மில் பலரைக் கொல்லப்போகிறது.இதை எந்தக் கொம்பரும் தடுத்துவிட முடியாது.அவரது எந்த மருந்தும் அதைத் தடுக்கும் ஆற்றலையும் பெறமுடியாது.இதுதாம் இன்றைய முதலாளிய உற்பத்திப் பொருளாதாரத்தின் மகத்தான பரிசு.இந்த நோயை வழங்கியது மனித இடைச்செயலேயன்றிச் சூழலல்ல!


எந்தப் பொறுப்புணர்வுமற்ற இந்தவுலகத்தின் அதிகார வர்க்கமானது முழுவுலகத்தையும் பாழாக்கிய பின் இன்னும் அணுவைக்கொண்டு இலாபமீட்டிவரும் பாரிய திட்டங்களோடு காரியமாற்றுகிறது.இந்த அணுவே இன்னுமொரு தலைமுறைக்கு-நூற்றாண்டுக்குமேல் உற்பத்திக்குக் கிடையாதுபோகும் சூழலில், அதன் கழிவுகளை நமது ஆயிரம் தலைமுறை கண்ணும் கருத்துமாகக் கட்டிக் காத்தாகவேண்டும்.இதை இந்த முதலாளியப் பொருளாதாரம் நமது தலைமுறைகளுக்குச் சுமத்தும்போது நாம் வாழாதிருக்கின்றோம்.


இன்றைய யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு!


யுரேனியத்தின் கச்சாவிருப்பு இன்னுமொரு தலைமுறைக்குச் செல்லமுடியாது.ஆகக்கூடிய அதன் வளம் இன்னும் எண்பது அல்லது நூறு வருஷங்களே.


இந்த அணுமின்,மற்றும் அணுச் செயற்பாடுகளை இந்த எல்லையிலிருந்து பார்க்குமொரு விஞ்ஞானிக்கு அதன் மாற்றைப் பற்றிய தெளிவு தெரிந்தேயிருக்கு.அந்த விஞ்ஞானி மனித இனத்தைக் காப்பதற்காக இன்றே மாற்றுச் சக்தி வளத்தைப் பயன் படுத்தும்படி கோரிக்கை செய்யும்போது(பேராசிரியர் எரிக் பீல் மற்றும் பொல்கர் பிறேயஸ்ரெட்:"தாவரத்திலிருந்து சக்தி" எனும் நூலின் ஆசியர்கள்), நமது இந்திய பேரரசோ அவற்றை உதாசீனம் செய்து அமெரிக்காவோடு அடிமை ஒப்பந்தம் போடுகிறது(புதிய ஜனநாயகம்-ஏப்பிரல்2006).


என்னைப் பொருத்தவரை நமது பொருளாதாரமானத்து சூழலிருந்து திருடுவதை நிறுத்தாதவரை மனிதவினத்துக்கு எந்த விமோசனமுமில்லை.இதற்காகவேனும் இந்தப் பொருளாதாரமானது தேவைக்கேற்ற உற்பத்தியை அனுமதிக்கும் ஷோசலிசச் சமுதாயமாக மாற்றப்பட்டே தீரணும்.


அவுஸ்ரேலியாவிலும்,தென் ஆஜென்டீனாவிலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளை 13 நிமிடங்களே வெய்யிற் காலத்தில் வெளியில் அனுமதிப்பது நடக்கின்றது.இதற்கு மிஞ்சினால் தோற் புற்று நோயை அந்தக் குழந்தைகள் எதிர்கொள்வதில் முடியும்.புவியின் தென்துருவத்தில் மெலிதாகிப்போன ஓசான் பாதுகாப்பு உறை இன்று புற்று நோயைப் பரிசாக வழங்குகிறது!இன்னும் சில வருடங்களில் புவியின் வடதுருவத்திலும் ஓசான் ஓட்டை பெரிதாகி எல்லோருக்கும் இதைப் பொதுவாக்கிவிடும்.வருடமொன்றிக்கு அவுஸ்ரோலியாவில் 140.000. பேர்கள் தோற் புற்று நோய்க்கு உள்ளாகி வருகிறார்கள்.சுவாசப்பை மற்றும் கண்,தொண்டை,மூக்குப் பகுதிகளில் கண்ட கண்ட நோய்கள் வந்து தொலைக்கிறது.


200 வருடங்களுக்கு முன் இமானுவேல் கன்ட் எனும் தத்துவவாதி சொன்னார்:"இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல மாறக மனிதர்களின் குற்றமே"அதாவது மனிதரின் இடைச் செயலே என்றான்


இயற்கை குறித்து மனிதர்கள் எந்தத் திசைவழியில் சிந்திக்கிறார்களென்பதைப் பல பத்துத் தத்துவ ஞானிகள் பதறியடித்துப் பாடங்கள் சொல்லியாச்சு.எனினும் நமது இன்றைய பொருளாதாரப்போக்குகள் அதன் வாயிலாகவெழும் போராட்டங்கள் குவிப்புறுதிச் சமுதாயத்தின் சில பத்து நிறுவனங்களுக்கான பொருள் வளத்தை மேம்படுத்துவதற்காக, சூழல் மற்றும் ஜீவராசிகளுக்கெதிரான யுத்தமாக நடக்கின்றன.இதைச் செயற்கரிய வியூகமாச் செய்து முடிக்கும் இன்றைய விஞ்ஞானம் அணுக்குண்டுகளால் தமது போரியற் சமநிலையை அடைவதற்கு விரும்புகின்றன!இயற்கையின் வளங்கள் புவிப்பரப்பில் வாழும் அனைத்து ஜீவராசிகளினதும் பொதுச் சொத்தாகும்!இது தனிப்பட்டவொரு நாட்டுக்கோ அல்லது சில நிறுவனங்களுக்கோ உரித்தாக யாரும் பட்டயம் எழுதிக் கொடுத்ததாக எந்த விபரமும் இல்லை.இந்தச் சூழலின் அதீத பொருட்குவிப்பானது மனித வளத்தைமட்டுமல்ல புவிப்பரப்பின் அனைத்துக் கொடைகளையும் உதாசீனப்படுத்தி ஓரிரு ஆதிக்க நாடுகளினது பரம்பரைச் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.

அதீதத் தேவைகள், மனித உயிராதாரமாக இருக்கும்போது-பல நாடுகளுக்கு உணவும் ,சுத்தமான குடி நீரே அதீத் தேவையாகும்!ஆனால் பொருளுற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளுக்கோ கனிவளத்தைக் கட்டுப்படுத்தித் தமதாக்கும் அவசியமே அதீதத் தேவையாகிறது.இந்த இருவகைப் போராட்டங்களுக்குள் சிக்கித் தவிக்கும் உழைப்பாள வர்க்கமானது தமது உயிர்வாழும் சாத்தியத்தை வெறும் உடலுழைப்பை நல்குவதில் உறுதிப்படுத்துதில் முனைப்பாக இருக்கும்படி அனைத்துச் செயற்பாடுகளும் பூர்ச்சுவா அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுச் சட்டமாக்கப்பட்டிருக்கு.ஆனால் இந்த இயற்கையோடு மிக நெருங்கி உயிர்வாழும் சாத்தியத்தை இல்லாதாக்கும் பாரிய செயற்திட்டத்தைச் செயற்படுத்துமொரு காட்டுமிராண்டி வர்க்கமாக இன்றைய "கொன்சேர்ன்களின் பங்காளிகள்" மனிதர்களை ,உயிரினங்களை,இயற்கையைச் சுரண்டுவதை முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுயையென்ற நெறிமுயைக்குள் எல்லாவற்றையுமே நாசஞ் செய்வதில் வலுவுடைய விஞ்ஞானத் தொழில் நுட்பங்களாக விரிந்து கிடக்கும், அதீதப் பூர்ச்சுவாக்கள் இன்றுரையும் மதங்களின் பெயரால் ,இனங்களின் பெயரால்,மக்களையும் மற்றெல்லாவற்றையும் அடக்கி வைத்துள்ளார்கள்.இதை எந்தவொரு பொது நிறுவனமும் எதிர்த்துப் போராடாத வகைகளில் மதவாதப் புனைவுகள் மக்கள் விரோத மதவாதிகளால் மிக நுட்பமாகச் செயற்படுத்தப்பட்டு,இந்தப் பூர்ச்சுவா வர்க்கம் காக்கப்படுகிறது.

எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து,ஒவ்வொராண்டும் மிகையான வருமானத்தையும்,அதீத இலாபத்தையும் உறுதிப்படுத்தியே செயலாகவிரிகிறது.இன்றைய தொழில் நிறுவனங்கள் போடும் முகமூடியானது சூழற்பாதுகாப்பு என்ற பெரு முகமூடியாக நம்முன் விரிந்து கிடக்கிறது.ஆனால் இந்த முகமூடி தமது எதிர்கால வளத்தேவைகளை மட்டுப்படுத்தும் சூழலியளர்கiளின் காதுகளில் பூச்சுற்றும் வேலையென்பதை பல விஞ்ஞானிகள் ஏலவே கூறியுள்ளார்கள்.

புவிப்பரப்பானது சில பெரும் தொழிற்கழகங்களின் சொத்துரிமையாக இன்றைய சிலபூ ர்ச்சுவா அரசுகளால் முடிவெடுத்துக் காரியமாற்றப்படுகிறது.இந்தச் சந்தர்ப்பத்தில் உழைப்பாள வர்க்கம்மானது வாளாதிருக்கும்படி அவர்களின் அனைத்து நலன்களும் பறிக்கப்படுகிறது.இழப்பதற்கரிய சொத்தாக மாற்றப்பட்ட அடிமை உடலுழைப்பு ,இன்று உயிர்வாழ்வதற்கு அவசியமாக மாற்றப்பட்டுள்ளது.இதனால் வாளாமை நமக்கு எல்லா விஷயத்திலும் தொடர்கிறது.நாம் எந்தத் திசையிலும் அணித்திரட்சி கொள்ளத்தக்க சூழலில்லை.இன்றைய உலகப் போராட்டங்கள் பூர்ச்சுவா வர்க்கத்தைச் செயலிழக்க வைப்பதற்கானதல்ல.அவை இந்த வர்க்கத்தோடு சமரசஞ் செய்வதில் ஒவ்வொரு பொழுதும் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்தே தனது உயிர்வாழ்தலைச் செய்கிறது.இதுவே புரட்சிகரப் போராட்டமல்ல.சூழலைப் பாதுகாப்பதும்,தொழிலாளர் விடுதலையும் ஒரே தளத்துக்கு வரும் பெரும் போராட்டத் தேவையாகும்.இந்தத் தேவையில் எந்தவொன்றையும் எவரும் மறுத்தொதுக்க முடியாது.இதுவே மனித சுதந்திரத்துக்கான போராட்டமாகும்!சுதந்திரம் மனிதருக்கு மட்டுமானதல்ல மாறாகப் புவிப்பரப்பிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்,சூழலுக்கும் இது பொதுவாகும்.சூழலை விடுவிப்பதும்,மனிதர்களை விடுவிப்பதும் வெவ்வேறானதல்ல!

அதாவது ,இன்றைய சுதந்திரம் எனும் அர்த்தமானது மார்க்ஸ் கம்யுனிச அறிக்கையில் கூறியபடி: >>Unter Freiheitversteht man innerhalb der jetzigen buergerlichen Produktionsverhaeltnisse den freien Handel ,den freien Kauf und verkauf.<<(Manifest der Kommunistischen Partei:seite.11) "இன்றைய உற்பத்தி நிலைமைக்குள் மனிதர்கள் புரிந்துகொள்ளும் சுதந்திரம் எனும் அர்த்தம், திறந்த வர்த்தகத்தில் சுதந்திரமான கொள்வனவு,விற்பனையே!"இதற்கு மேலாக நமது காலத்துச் சுதந்திரமென்பது வெறும் அர்த்தமிழந்த பூர்ச்சுவாக்களின் நரித்தனமான மனிதவிரோதத் தொழிற்சங்கங்களுமெனலாம்!இவையே இன்றைய பொருளாதார வாதத்துக்குள் புரட்சிகரப் பாட்டாளிய வர்க்கத்தின் உணர்வைத் தள்ளி கையாலாகாத கூட்டமாக்கியுள்ளார்கள்.இந்த ஈனத்தனத்திலிருந்து விடபட முனையும் தொழிலாள வர்க்கத்துக்கு விசுவாசமானவொரு புரட்சிகரக் கட்சியெங்கும் நிலவுவதாகவில்லை.கூலியுழைப்பென்ற ஒரு அடிமைத்தனமில்லையென்றால் பெரும் மூலதனமுமில்லாது போகும்!அப்படி இல்லதுபோகும் மூலதனத்தால் மக்களுக்கு உயிர்வாழத்தக்கவொரு சூழலும், அதைக் காத்து நலனடையும் ஒரு சமூகக்கட்டுமானம் உருவாகும்.இதை முன்வைத்து நடைபெறாத எந்த் திசை வழியும் இறுதியில் பூர்ச்சுவா வர்க்கத்துக்குள் ஐக்கியமாவதே வரலாறாக விரிவது நமது காலத்தில் அடிக்கடி நிகழும் ஒரு போராட்ட வடிவமாக இருக்கிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

13.03.2011

Tuesday, March 08, 2011

உரையூக்கம்

யுத்தத்தின் வாயிலாக வந்தடைந்த-அடையும் எந்தப் பெறுமானமும் எல்லாவகைப் புரிதற்ப்பாட்டுக்கும் இடையில் சிக்குண்டுபோன எவரையும் இதுவரை காத்துக்கொள்ளவில்லை!எனக்காகவன்றி எமக்கான"விடுதலை"என்று அறைகூவிச் செத்தவர்கள் செத்தவர்களே.செருக்கும்,தார்ப்பாரும், உள் நோக்கமும் கொண்ட பொருள்சார் உலகத்துள் ஏதோவொரு புலப்பாடு பல புள்ளிகளை அழித்தே இயக்குமுறுகிறது.இது சொல்வதற்கும்,உரையாடலுக்கும் அப்பாலுள்ள இயக்கத்துள் மலினப்படுத்தும் சுதந்திரமென்பது அர்த்தமிழந்த மனித இருத்தலுக்கொப்பானது.புரட்சிப்பயனெனப் பகரப்படும் எல்லா நியாவாதமும் நிறுவனப்பட்டியங்கும் மூலதன வியூகத்துக்கு முட்டுக்கொடுத்தவை என்பதில் எனக்கான தெரிவு மேலுஞ் சிலவற்றை நோக்கியதானது.

அ: பௌதிகவுலகமும்,உணர் அறிபுலமும்

ஆ: புறவுலகப் பருப்பொருளும் ,அந்நியப்பாடும்

இ: இடையுறாத காலக் குறுக்கமும்,நித்தியமும்

என்னை அச்சத்துக்குள்ளாக்குபவை.

என்னைக் காலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட கையோடு, குறுகக்கப்படும் வெளியில் மதில்கள் எழும்புகின்றன.எனது கால்களுக்குக் கீழே வளைந்து நெளியும் காலம் இடமின்றித் தவித்தோட முனைகிறது.பௌதிவுலகத்திலிருந்து தனித்துவமான மொழிவுகளை இழந்து வருகிறேன்.



பயங்கரவாதமும்,காட்டுமிராண்டித்தனமும்-கொலையும்,கொள்ளையுமே மக்களின் வாழ்வியல்ப் பெறுமானமாகிப் போய்,மக்களது "உரிமை"என்ற அடைமொழிக்குட்பட்ட எதிரெதிர் கொல்வதற்கான நியாயம்,"ஜனநாயம்-புரட்சி,விடுதலை"எனப் பரப்பப்படுவதில் முதன்மைப்படுத்தப்படும் நலன்களானது மீளவும் மனிதக் கொலைகளுக்கு வழிவகுக்கும் பொருத்தப்பாடுகளையே உறுதிப்படுத்தும்போது பௌதிகவுலகம்என்பதன் சாரம் என்ன?

எழுதிவைத்து உரைக்கப்படும் அனைத்துமே ஒவ்வொரு கட்டத்துக்குப் பின்னும் திருத்தப்பட்ட நிலைமைக்கொப்பான தெரிவுகளை எங்கிருந்து பெறுவதென்பதன் சுய கேள்விக்குப் பின்பான உண்மையேற்பு-உணர்வு பெறுதல் என்பதிலிருந்து என்னை விடுவித்துவருவதே எனக்கான விடுதலையெனப் பகரமுடியாதபடி என்னைச் சுற்றிய மதில்கள் பெருத்த சந்தேகங்களை கருத்தியற்பரப்புள் புதைத்து வைத்துக்கொண்ட நிலையில், நான் செத்தே போக விரும்புவதில்"சாவு"உனது உரிமையில்லையென மூன்றாவது கண்ணுரைக்கிறது!

பௌதிகவுலகத்துக்கு மூலந்தேடும் பொழுதிலிருந்து எடுக்கப்பட்ட வடிவம் சுருங்கிக்கொண்டே செல்கிறது.

இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய"அரசியல்-பொருளியல்"வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீர் தயாரிப்பான இந்த "அலகுகள்" அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய"அலகுகளை"உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.இத்தகையவொரு சூழலில் எழும் "பொருளாதாரச் சிக்கல்கள்" அந்தந்த மக்களின் -இனக்குழுக்களில் அதிகாரத்துக்காகத் துடிக்கும் சில உடமையாளர்களைத் தமது வசதிக்காக அரசியல் நடாத்தும் கூட்டமாக்கி விட்டுள்ளது.மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளும் தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பில்லை.இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு ,சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கத் தயாராகிறது.இது எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது


பகைமுரண்பாடுமிக்க இருவேறு வர்க்கங்கள் ஏதோவொரு அரசியலுக்கு தமது உடலை அடிமையாக்குவதற்கு முதலாளிய மேல்மட்ட அமைப்புகள் காரியமாற்றுகின்றன. இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமையும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இங்கேதாம் ஒடுக்குமுறையும்,அவலமும் தோற்றம் பெறுகிறது.இத்தகைய ஒடுக்குமுறையின் தொடர்ச்சிகள் எத்தனை ஆயிரம் மக்களைக் கொன்று போட்டும் அதையே அவசியப்பாடனதும், சரியானதுமெனச் சொல்வதிலுள்ள சட்ட-நியாயந்தாம் இன்றைய உரையாடலான வெகுஜன வெளியாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. :-(

ப.வி.ஸ்ரீரங்கன்
08.03.11

Thursday, February 17, 2011

அன்பன் சோபாசக்தி

ஷோபா சக்தி: பாலியில் நிந்தனைச் சொல்லைலையே அநுமதியான்-செயலை அல்ல!



"உஙகளுடைய பின்னூட்டத்தை மட்டுமல்ல இன்னும் எவ்வளவோ பெயரின் பின்னூட்டுகளை நான் மட்டுறுத்தியுள்ளேன். வெறும் வசைகளை நான் பின்னூட்டமாகக் கருதுவதில்லை. சற்று முன்கூட எனது 15 வருடகால நண்...பர் சிறீரங்கன் அண்ணன் பாலியல் நிந்தனைச் சொல் ஒன்றுடன் எனது முகப் புத்தகத்தில் ஒரு பின்னூட்டமிட்டார். பின்னூட்டத்தை மட்டுமல்ல அவரையும் முகப்புத்தகத்திலிருந்து நீக்கிவிட்டேன். அவர் தனது ஆணாதிக்க வசைகளை எழுதுவதற்கு எனது முகப்புத்தகம் இடம் கொடுக்காது. அதுவே உங்களுக்கும்"
-சோபாசக்தி


மேலேயுள்ள பின்னூட்டை அன்பன் சோபாசக்தி எழுதியுள்ளான்.ரொம்பவும்"நேர்மையான"ஜனநாயகவாதி அவர்,"பாலியல் நிந்தனைச் சொல்லை-ஆணாதிக்க வசைவுகளை" அவர் ஒருபோதும் தனது முகப் புத்தகத்தில் அனுமதிக்கமாட்டாராம்!



ஏனெனில்,



அவை பெண்ணொடுக்குமுறையின் வடிவங்கள்,பண்டுதொட்டுப் பெண்ணைப் பாலியற் சுரண்டலுக்கும்,அவமதிப்பும்,அடக்குதலுக்கும் உட்படுத்தும் இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தின் சொற்கள்-கருத்தியற் பலாத்தகாரம் அவை!வார்த்தைகளுக்குள் கண்டுண்டிருக்கும் இத்தகைய சமூகவொடுக்குமுறை உளவியலானது ஆ(ணி)ணாதி(தா)க்கத்தின் அதிகாரபூர்வமான ஒடுக்குமுறையின் எதேச்சதிகாரமானதும்,அரூபமானதுமான விலங்கு, இந்தப் பாலியல் நிந்தனைச் சொல்.



நிச்சியமாக?



உண்மையாகச் சோபாசக்தி?



அடடா,இந்த ஸ்ரீரங்கனுக்குப் பழையதொடர் இன்னும் விட்டுத்தொலைக்கவில்லைதாம்.சுட்டிக் காட்டிய என் தோழனே,துரும்பைவிட்டு நாசியிற் தும்முவதைப் பார்த்திருப்பாய்தானே? அந்தத் தும்மலுக்குள் எத்தனை மில்லியன்கள் கிருமிகள் வெளிறேம் தெரியுமோ?அப்படித்தான் உங்கள் கிருமித்தனமான செயற்களும் வெளியேறுகிறது.



பாலியல் நிந்தனைச்சொல்லுக்கும்-செயலுக்கும் என்ன வித்தியாசம்?



கூறுங்கள் கண்ணா!



முகப்புத்தகத்திலேயே பாலியல் நிந்தனைச் சொல்லை அநுமதிக்காத நீங்கள்பாலியல் நிந்தனையை-செயலை மற்ற மனிதர்கள்மீது ஏவும்போது, அதை அவர்கள் அனுமதித்தும்-அவதிப்பட்டும் இருக்கும்போது,அதைப் பொதுவெளியில் புகட்டிய செம்மலே சோர்ந்தா போகும் உன் நட்பு(ஆண்குறியெனக் கற்பனை பண்ணப்படாது)?



உடல்சார் உறவென்பது எதுவரை உறவாகவும்-உபத்திரமாகவும்,பாலியற்பலாத்தகாரமாகவும் இருக்கும் என்பதை தத்துவங்கள் ஏதும் எனக்குத் தெரியவில்லை-உரைக்கவில்லையோ?அப்படியான தத்துவங்களை அருமைத்"தோழர்"உமா சானிகாவிடமாவது கேட்டுப் புரியலாந்தாம்...


மூன்றாவது சந்திப்பில் படுகைக்குத் தயாராகும்,பெண்விடுதலைப் புரிதலானது மிக நேர்த்தியானதெனக்கொள்வதில் அவரவர் சுதந்திரமென்பதும்,பாலியற்றேவைக்காகப் படம்போடும் பிழைப்பில் மனம்சார் உறவும்,உடல்சார்வுறவும்(கவனிக்க: இங்கே, ஓழுக்கு என பாலியல் நிந்தனையைப் பயன்படுத்தவில்லை-உடல்சார் உறவு-அதுவே சரியானது!) இணைக்கப்படும் புள்ளிதாம் பாலியற் சுரண்டல் என்று சொல்லேன்!அப்படிச் சொன்னால், அது பெண்ணியத்தையும்,ஆணியத்தையும் எதிரெதிர் நிலையில் நிறுத்துவதைவிட்டு நட்பாக்கி மீளவும் ஒடுக்குமுறைக்குள் பெண்களைத் தள்ளிவிடும்.எனவே,பார்க்கும்-பழகும் பெண்களோடும்-ஆண்களோடும் நான் படுக்க(ச்சீ உடல்சார்வுறவுக்கு)த் தந்திரமாக-உள்நோக்கும் அகவிருப்பை அது கொச்சைப்படுத்திவிடும்.



ஓழ்த்தல் பாலியல் நிந்தனைச் சொல்!-சரி,ஏனெனில்,நான் ஊரிலேயே கூட்டுக் கலவியின் நாயகன்(இந்த நான்-நான் மட்டுமே!)ஆதலால், மிகவிரைவாகப் புரிந்துபோச்சு-"சொல் நிந்தனை-செயல் தோழமை"-அடஅட...)



குடும்பம்-கல்யாணம் ஒடுக்குமுறை நிறுவனம்!-இதுவுஞ்சரி.



ஆனால்,காணும்-பழகும் அனைவரையும் எனது கலவிவிருப்பு மனதுக்குக் கட்டிலுக்குக் கூப்பிடுவது-போவது மனிதநிலைக் கடன்.காலைக்கடன்கள்போல் இதுவும் ஒன்றுதாம்.இது குறித்துப் பேசுவது தப்பு-செயல் முடிந்து,நான்"உடல்சார்"உறவுகொண்டேன் என்பது நிந்தனையல்ல-நேர்மையான நிகழ்வூக்கப் பெறுமானம்.ஏனெனில்,இது சம்பந்தப்பட்ட இருவரதும் "தனிப்பட்ட" சுதந்திரமல்லவா?



இங்கே,புனைவுக்கும்,அ-புனைவுக்கும் என்ன வித்தியாசமோ,அதுவே,பாலியல் நிந்தனைச் சொல்லுக்கும்-பாலியலுறவுச் செயலுக்கும்"உள்ள வித்தியாசம்.எனது பாலியல் பலாத்தகாரமெல்லாம் பாவாடை(பயில்)போட்டு மூடியபோது,சொல் மட்டுமே நிந்தனையாகவும்,செயல் வெறும் துய்ப்பாகவும்-அன்புப் பரிமாற்றமாகவம்,உடல்சார் அதியுன்னத தேவையாகவும், மாறிவிடுகிறது!



எனது பாலியற்றேவைக்காக நான் அணுகும் போக்கில்-தூண்டிலில் மாட்டியவர்களுக்கு மேற் சொன்னவையை விரிவாகப் பகுக்கத் தெரியும்-நிலவும் சமூகக் கட்டுள் ஏற்பது"ஒழுக்க"ப் பிறழ்வு-" பாலியற் சேட்டையை-சுரண்டலை"இருவரது சுதந்திரமெனக் கொண்டு மென்மைச் சுட்டலுடன் ஒழுகுவது(ஓழ்ப்பதல்ல) சமூகத்தில் அடையாள நெருக்கடியிலிருந்து விடுதலைபெறும் தற்காலிக நிவாரணி எனச் சொல்லேன்.அப்படிச் சொல்லும் உரிமை எனக்கில்லை-பெண்ணியம்சார்ந்து இயங்குபவர்கள்(முப்பாலரும்)தாம் அதைப் புலத்தில் வைத்துப் புரிய வைக்க வேண்டும்.



ப.வி.ஸ்ரீரங்கன்

17.02.2011

Saturday, February 12, 2011

இன்ஷா அல்லா !

"அடடா புரட்சி அடை மழைடா,
அது அரபுப் புரட்சி
அடை மழைடா!"


எகிப்த்திய,துனேசியப் போராட்டங்களும் தொடரப் போகும் அரபு உலக"எழிச்சிகளும்"புதிய வகைமாதிரியான ஆயுதம்.இது,அணுக்குண்டைவிட அதிக சக்தியானது.இந்த ஆயுதம் இப்போதும்,மேற்குலக ஆதிக்கத்தாலேயேதாம் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன் பாட்டுக்கு வந்திருக்கிறது.


இந்தப் பயன்பாடும் அவர்களது நலன்களைக் காப்பதற்காகவே பயன்படுகிறது.எகிப்த்திய அதிபர்,எங்கேயும் ஓடித் "தப்பி"விடவும் இல்லை.எகிப்த்திலேயே சிறிய குட்டித் தேசமாக-அரசாக நிலவும் எகிப்திய உல்லாச-டிப்பிளோமற்றிக் நகரமான [ Diplomatic City _ Trade] சாமல் சைக்கில் [ Scharm El-Scheich ]மிகப் பாதுகாப்பாக முபராக் இருக்கிறார்.எகித்தியர்களோ,அல்லது எந்த அரபியர்களோ அங்கு செல்வதற்கு தகுந்த விசாவிருந்தாலும் முடியாத காரியம்.ஆனால்,நாம் விடுமுறைக்குப் போய்வரலாம்.இத்தகைய எகிப்த்தில் மக்கள் ஆரவாரம் முபராக்கைச் சுற்றிய எதிர்ப்பில் அவரது இராஜினாமா "மக்கள்"புரட்சியென வடிவமைக்கப்படுகிறது. இதன் மூலம் அதிபர்கள்,தலைவர்கள் தாம் பிழையானவர்கள்.நிலவும் அமைப்பு அல்ல என்பதையும் சொல்லியபடி, ஒரே கல்லில் பல மாங்காய்கள் வீழ்த்தப்படுகின்றன.


மக்களையும்,அவர்களது நலனையும் முடக்கியவர்கள்,வறுமையை-வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஆளும் அதிபர்கள்-கட்சிகளே செய்வதாகக் கருத்தியற் பரப்பைச் செய்தபடி,அதே அமைப்பைக் காப்பதென்பது எவ்வளவு புத்திசாலித்தனமானது.


மேற்குலகத்திடம் இருக்கும் இதுவரைகாலக் கொடும்-வன்மையான ஆயுதம் என்பதெது ? "கருதியலே" என்பதுதாம் எனது பதில்!



முபாராக் போனால் இன்னொரு எல்பாரடேய் வரலாம்.ஆனால்,அமைப்புச் சிதைந்தால் அதில் மக்கள் அதிகாரம் வந்துவிடும். இதை முன்கூட்டியே தீர்மானித்த அமெரிக்க-மேற்குலக ஏகாதிபத்தியங்கள் அரேபியச் சர்வதிகாரிகளை ஊட்டி வளர்த்தபடி நிலவும்அமைப்புக்கெதிரான மக்களது எதிர்ப்பை ஆளும் தலைமைக்கெதிராக வளர்த்தெடுத்தது.அதையே, இப்போது அறுவடைசெய்து, புதிய தரகர்களை நிலவும் அமைக்குள் புகுத்தி மக்களை மீளக் கட்டிப்போடும் புதிய வியூகங்களை நாம் சந்திக்கிறோம்.


அரபுலகப் போராட்டங்கள்,அவர்களது வளர்ச்சியடையாத சமூக நிலையை ஒட்டியே மேற்குலகத்தாற் தகவமைக்கப்பட்டுக் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.


இந்தப் போராட்டமானது மக்களை ஏய்த்துப் பலியாக்கிப் புரட்சியெனப் பேசுவதில் முதன்மையானவர்கள் இன்றைய வெள்ளையினப் பிசாசு(வெள்ளையின ஏகாதிபத்திய அரசுகள்,அதன் ஆளும் வர்க்கம்)க் கூட்டமே.

பெரும்பாலும் இச் செய்தியே பரவலாகச் சரியானதாகவிருக்கும்.ஆனால்,அரபுலகத்துப் போராட்டங்கள் மக்களது தன்னெழிச்சியானதென ஒருபோதும் நான் ஏற்கமாட்டேன்.


ஏலவே,"இப்போராட்டமானது ஐரோப்பிய-அமெரிக்கப் புதிய வியூகமெனவும்,கடந்த நூற்றாண்டுள் கணிசமாகக் கிடைக்கப் பெற்ற எண்ணை வருமானங்கள் அனைத்தும் அந்தத்தேசத்து மாபியாத் தலைமைகள்மூலம் வெளிநாட்டு(மேற்கு-அமெரிக்க)வங்கிகளில் பல ரில்லியன்கள் குவிந்திருப்பதும்,அதுவே பெற்றோ டொலரெனப் பரவலாகப் பேசப்படுவதும் ஒரு கொள்ளைக்கானது" எனக் கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்!


இதுவரையான எண்ணையை முழுமையாகக் கொள்ளையடிப்பதாக இந்த ஆட்சி மாற்றங்கள் காட்டி நிற்கிறது.



புதிய தலைமைகள் யாவும், நிலவும் அமைப்பை அங்ஙனமே இயங்க அநுமதித்துப் புதிய மேற்குலக எடுபிடிகள் இத்தேசங்களது ஆட்சிகளுக்கு வருகிறார்கள். இதுவொரு பழையபாணியுள் புதிய பரிசோதனை.


இவ்வளவு பெரிய தொகையாக மக்களைப் பயன்படுத்தி(இதற்கு முதல் நிலவும் ஆட்சியின் மூலம் மக்களுக்குத் தீராத ஒடுக்குமுறை வழங்கி-சமூகப் பதட்டைத்தையும்,கொந்தளிப்பையும் உருவாக்கியபடி புதிய பினாமிகளை உருவாக்குதல்) சதிப் புரட்சிகளை நடாத்தும் புதிய வியூகம் இது!


அரபுத் தேச மக்களது வாழ்வுப் போராட்டம் இப்படி உபயோகமாவது மேற்குலகத்தின் அடுத்த வடிவிலான ஆயுதம்.இந்த ஆயுதம் மிக வலிமையானதெனக் கடந்த 80 களின் மத்தியில் கிழக்கு ஐரோப்பாவில் உணர்ந்த ஏகாதிபத்தியம் அதே, பாணியில் அரபு உலகத்துள் இதை மிகவும் தந்திரமாகச்(மண்ணுக்கேற்ற தந்திரம்) செய்து முடிகிறது.


இப்போராட்டம் ஈரன்வரை பாயும்.

அரேபிய மக்களது வளங்களைக் கொள்ளையடித்துச் சேர்க்கப்பட்ட அரேபிய மாப்பியாக்களது வெளிநாட்டு வைப்புகள்,சொத்துகள் பகற்கொள்ளையாக மேற்குலக அரசுகள்-நிறுவனங்கள் எடுத்துவிடும்.ஒரு கல்லில் பல மாங்காய்கள் பறிக்கப்படும்போது, இதைப் புரட்சியெனவும்,மக்கள்போராட்டமெனவும் மேற்குலக ஏகாதிபத்திய ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதில் எவருடைய நலன்கள் அறுவடையாகிறதென்பதை அனைவரும் உணரவில்லையா?


எல்லாவற்றையும் சிவப்புக்கு எதிராகவே செய்து முடிக்கும் ஏகாதிபத்தியம்,முதலாளியம் இருக்கும்வரை,நாமும் எல்லாவற்றையுமே அதிலிருந்து பிரித்தெடுத்து விளங்குவது கேனைத்தனமானது.எனவே,ஏகாதிபத்தியம் எப்படிப் புகுந்து விழையாடுகிறதென்பதைப்புரிந்தால்" புரட்சிகர முகமூடியும் ஏலவே இருக்கும் ஜனநாயக முகமூடியுடன் சிறந்த ஆயுதமாச்சு!" என்பதைத்தவிர அரபு உலகப் போராட்டங்களுக்கு வேறென்ன சிறப்பு இருக்க முடியும்?


ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல்: "இன்றைய தினமானது மகிழ்சியின் தினமாகும்,எகிப்த்திய மக்கள் தம்மை விடுவித்த தினமானது எமக்கு மகிழ்சியான தினம்" என்கிறார்.இப்படி அவர் கூறிக்கொண்டிருக்கும்போது அவரது இராணுவம் அவ்கானில்,கொங்கோவில் குண்டுகள் போட்டு மக்களை வேட்டையாடுவதை எந்தவூடகமும் சொல்லவுமில்லை-மக்களும் அதை எண்ணவும் இல்லை!

பிறகென்ன ,எல்லாம்"இன்ஷா அல்லா" என்பதைத் தவிர எதுதாம் சொல் முடியும் எம்மால்?


எல்லாவற்றையுமே இழந்தவிட்ட தொழிலாள வர்க்கம் இனி இழப்பதற்கு என்னதாம் இருக்கு?


புரட்சி,
புரட்சிகரக் கட்சி,
மக்கள் எழிச்சி,
தொழிற்சங்கம்,
மக்கள் குரல்


எல்லாமே அவர்களுக்கானதாக மாற்றப்பட்டு, அவர்களே நமக்குள் போராட்டங்களை முன்னெடுக்கும்போது எவனோவொருவன் தெருவில் குந்தியிருந்து-முகப் புத்தகத்தில் எழுதி,உறவாடிப் புரட்சியை அவிட்டு விட்டானாம். ஆதலால், " எந்தப் புடுங்கியும் இனிப் புரட்சிக்கு தேவையில்லை-ஒருவன்,நினைத்தால் புரட்சி வெடிக்கும்!" என்ற அறிவுப்பரப்பு தமிழர்களிடம் வந்துவிட்டதாலும் இனித் தமிழருக்கு அழிவேயில்லை!-வாழ்க, தமிழர்கள்தம் பெரும் "அறிவு"ப் பரப்பு!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
12.02.2011

Thursday, February 10, 2011

சுய மாட்சிப் போ(க்)கி(ரி)த் தனம்:

சிலவுதிர்வுகளும்-துளிர்த்தல்களும் எப்போதும் போலவே நடந்தவைகள்தாமெனும் புரிதலுக்கு அவை சார்பு நிலைக்கப்பால் உண்மையென்பதை, உறுதிப்படுத்த"நான்"இருத்தல் அவசியமென்பதில் "மாயமானும்-வனவாழ்வும்"வாய்க்கப் பெற்றவர்கள் நாம்.வெறுப்பேற்றும் பொழுதொன்றின் பின்னையவுணர்வில் வானம் நோக்கிய "கேள்விகளை"கொட்டி வைக்க இன்றைய மனிதர்களுக்கு அவகாசம் இருக்குமென எனக்குத் தோன்றவில்லை!

அழுகின்ற பிள்ளையைச் சகிக்க முடியாத மனவூழ் தொடர்ந்து தன் அழுகைமீதான நியாயவாதத்தை அடுக்கி வைக்கவே போராடிக்கொள்கிறது.நெருக்கடிமிக்க சந்தர்ப்பங்களை உருவாக்கி வைத்த தடங்களைத் தொடர்வதில்எவருக்கு வேணும் இன்னொரு "இழவு-இழப்பு"க் கோலம்?


அதீத தொழில் வளர்ச்சிக்குப் பின்னான காலத்துள் உருவகப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் மறுவினையான பின் காலனிய-மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் முக்கியமான கோரிக்கைகள் சுயதெரிவோடு தன்னிலைகளைப் பெருக்குவதன் வாயிலாக அங்கீகரித்தலென்பதை இன்னொரு புறவயமான காரணிகளிடமிருந்து பெறுவதிலும்பார்க்க, அகவயமான உள்ளொளியோடு சங்கமித்து, அதன் அங்கீகாரத்தைப் பெறுதலென்ற போக்கு இன்னுமின்னும் அதிகமாகிறது.தன்னிலை அங்கீகரித்தலோடான தேடுதலும், கண்டடைதலும் என்பது சுயபெறுமானங் குறித்த பிரச்சனையாக மனவெளியில் மனிதர்களை அலைத்துக்கொண்டிருக்கிறது!இந்த முகநூற் பொருங் குடிகளது பொன்னான பொருதற்"பெருங் கதை வெளியில்"போக்கிடங் காண்பதற்குமுன் சஞ்சலம்கொள்வதென்பதற்கான எந்தப் பீடிகையும் இல்லை.

"சுயமாட்சி"


இதன் ஆரம்பம் "தூய்மை-உண்மை"என்ற பிம்பத்தில் தனது சுய தெரிவை உரைப்பதற்கெடுக்கும் முயற்சியில் மனிதர்கள் மீளவும் சடங்குச் சங்கதிக்குள் சென்று நித்தியத்தின் மகிமையைத் தேடுவதற்காகவும்-மதத் தாயகமொன்றை உருவாக்கி விடுவதில் தமது நிறைவுகளை தேடுவதாகவுமே சுழல்கின்றனர்.கடந்தவினைத் தவறா அன்றிச் சரியாவென்பதையுந்தாண்டி,நாம் "மனிதர்கள்"என்ற தளத்தை உதிர்த்துவிட்டு இந்த இயற்கையைப் பொருத்திப் பார்க்க முடியாதிருக்கும் வினையே பல தளங்களில் முனைப்பிடும் மனிதவுருவை நமக்கு முன் கொணர்கிறது.அகங்காரமும்-அதி விரக்திப் புத்தியும் துருவ நிலைக்குப் புரிதலையும்-உணர்வையும் நகர்த்திவிடுகிறது.அத்தகைய நகர்தலைப் புரியாதிருப்பவர்களே இன்றைய புரிதலுக்குப் பொழிப்பையும் உரைப்பதில் தம்மை முன் நிறுத்திப் பார்க்கின்றனர்."அங்கீகரீப்புக்களை"வலியுறுத்துவதென்பது ஒரே நேர்கோட்டுப்பாதையாகச் சமுதாயத்தில் அதன் அடித்தளத்தில் நிலவும் பொருள்வாழ்விலிருந்து முற்றுமுழுதாகத் துண்டித்துச் சென்றுகொண்டிருப்பதாக எண்ண முடியவில்லை.இத்தகைய தன்னிலைகளின் பின்னே படியெடுக்கப்படும் ஒரு "பொது நிலை"மீளவும் அந்தத் தன்னிலைகளைக் குறித்துக் குழப்பகரமான மறுத்தல்களைச் செய்வதை நான் தினமும் இந்த முக நூலில் பார்த்துவருகிறேன்.எத்தனை முறைதானும் ஒருவர் தனது மனவுளைச்சலைக் கொட்டலாம்.அது சபிக்கப்பட்ட காலத்தை உணர்த்திவருவதென்று அகவிருப்பில் ஒருவர்மீதான மிகையான நம்பிக்கை பிறழ்ந்துபோகும்போது, அதுவரையான தளத்துக்கு நேரெதிராகச் செல்ல முனையும் ஊக்கமோ ஏலவே கொண்டிருந்த போலி "நட்பு-உறவுக்கு"விசுவாமான ஊக்கத்தை வெகு சீக்கரமே வெளியிற் தள்ளிச் செல்கிறது.இதை எந்த வெங்காயத் தத்துவமும் விளக்குவதாக நான் சொல்லேன்!


இத்தகைய மனிதர்கள் எவ்வளவுதாம் சிந்தித்தாலும் கூட்டுழைப்புக்கு எதிரானர்வர்கள்.அங்கே,ஒவ்வொரு தனிமனிதர்களும் தமது தனித்துவத்தை மனித நடாத்தையால் பிரதியெடுக்கும்போது, இவர்களால் அதிகமாகத் தனது குடும்பத்தோடுகூடவோ அன்றி அயலட்டத்தோடுதானேனும்"சகிப்பு"த் தன்மையைக் கட்டி உருவாக்க முடியாது.

இது,ஒரு புறநிலை யதார்த்தமாக இன்று இருக்கிறது.

இதுவே,அகத்தில் தனிநபர் முனைப்போடு அறிதலில் உச்சம் பற்றிய மிதப்பில் ஒற்றை மனிதர்களாகி வருகிறது.இது, எவரோடும் பொருத்தமான எண்ணத்தை எப்போதும் அணுகமுடியாது அரசியல் தற்கொலையை தனக்குள் வற்புறுத்துகிறது.இதனிடம் வேதனையும்-விகாரமும்,அவ நம்பிக்கையைத் தூண்டி சமுதாயத்தின் முற்று முழுதான ஆளுமையையும் மிகச் துச்சமாக மதிப்பிடும் மனதைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கிறது.

இன்றைய மனிதப் புனித நடாத்தையிலும்-பொருள் வாழ்விலும் "நட்பு-இரத்தவுறவு" என்பது கடந்துவிட்ட ஒரு கட்டம்.அதற்கான தேவையும் இனி அவசியமே இல்லை!இந்தத் புள்ளிமீதான சகல எதிர்பார்ப்பும் கொச்சைத்தனமான புரிதலுக்கு வெளியில் மிக அபத்தமானவை என்பதே எனது நிலை!ஊக்கமான நிகழ்வாக்கம் எப்போதுமே இருப்பதில்லை.தனக்கும்,தன்மீதான இருப்பின் உடைவுக்குமான புரிதற் தடுமாறாட்டமே ஊசாலாட்டமான தனது நிலைக்கு ஏதுவான சொற்களைச் சதா தேடுகிறது.அதையே,தனது பெரும் பகுதியான பொழுதைத் தற்கொலைக்கு நேரான நிலைக்கு மாற்றிவைத்தபடி அதன் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கிப் பார்க்கிறது.

ஈடேற்றம் என்பதிலேயேதாம் நமக்குள் பெரும் பகுதியான நேரம் விரையமாகிறது.ஒன்றில்லாத வினையென்பது சாரம்சத்தில் தப்பானதெனுங் கோரிக்கைள், உருவகத்துக்கும் வடிவத்துக்குமான புரிதலில் இதையே உட்புறமாக நகர்த்துவதில் ஆர்வமாகிறது.நிமிடத்துக்கு நிமிடம் தும்மிக்கொள்வது அலர்ச்சிக்குட்பட்ட ஏதோவொரு எதிர்வினைப் பயனென முடிவு கூறுவதுபோல, எதையுங் குறித்து எதிர்வு சொல்வதில் நம்பகமாக எமது அநுபவங்களையே மீளச் சொல்கிறோம்.அந்த அநுபவங்களது முன்னைய இயலாமைகள் இன்றைய இயலுமானவையோடு நேரடியாகப் புரிதலுக்குள்ளும்-வாழ்நிலைக்குள்ளும் எட்டித் தலைகாட்டும்போது அதை அங்கீகரிக்க மறுப்பதிலேயேதாம் நாம் "எழ" முனைகிறோம். இந்தத் தன்னிலைப்படுத்தல்-சுயமாட்சிப் படுத்தல்களின் உயிர்த்திருப்பை அங்கீகரித்து விடுவோமானால் சொல்வதற்கும்-செய்வதற்கும் எதுவுமே இல்லை!

இங்கே, ஊசலாட்த்துக்கும்"நான்"தொடர் நெருக்கடிக்குள்ளாவதும் இல்லை!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
10.02.2011

Saturday, February 05, 2011

விருப்ப எந்திரங்கள் – விருப்ப உற்பத்தி

விருப்ப எந்திரங்கள் – விருப்ப உற்பத்தி :

ஒரு நோயாளியது குறிப்பை "இங்ஙனம் " புரட்டிப் புரிதலுக்கு நகர்த்துவது , திருட்டுத் தனமானது.


மிழ்ச் சூழலில்வேற்று மொழியிலிருந்து எதை எடுத்து,எவர் போட்டாலும்,அது மனிதவாழ்வில் கருத்தியல்சார் நிலைக்குமேற்றாண்டி,மனித அகவயங்களை ஜந்திரமாக்குவதாகினும்,அதன் தெரிவில் அனைத்தையுமே பொருள் நிலைக்குக் கீழ்க் குறுக்குவதில் சிந்தனைத்"தெளிவு"பெற்றதெனப் படியெடுக்க, நமக்குள் பலர் இருக்கின்றனர்.அவர்களின் , ஏதோவொரு புரிதல்"விருப்பு ஜந்திரங்கள் விருப்ப உற்பத்தி"என டெலோய்ஸ்-பேலேக்ஸ் குவற்ராறி [Gilles Deleuze and Félix Guattari ]எழுதியதன் தமிழ் மொழிப் பெயர்ப்பை நிஜந்தன் தனது தளத்தில் இட்டதும், ஒரு பெருவாரியான புரிதலின் வினை அதைக்கொண்ட பயனென...

சரி.நாம் பார்ப்போம்,[ கட்டுரையது ]இலக்கும்,உள்ளடக்கமும் எந்தத் தளத்திலிருந்து முழுமொத்த மக்கட் பிரிவுக்கும் எட்டுவதென.

ஜேர்மனிய செனற் அதிகாரியும்,நீதிபதியுமான டானில் பவுல்ஸ்றேபர் [Dr. jur. Daniel Paul Schreber, Senatspräsident beim Kgl. Oberlandesgericht Dresden a. D.]உடைய கருத்திலிருந்தும் அவர்கொண்ட புரிதலிலிருந்தும் கருத்தியல் கட்டுமானம் இன்னொரு திசையின் விருத்தியாக(மனித இருத்தல் X பொருள் நிலை X ஜந்திரம்) மேலெழுந்தபோது, அதன் கடந்தகாலப் பரிணாமங்கள் இன்றைய பொழுதில் பொருத்தப்பாடான புரிதலெனுங் குவியத்துள்.



நல்லது.

இந்தப் புரிதலுள் அதிதீத செல்வாக்குச் செலுத்தும் டானிளல் பவுல் ஸ்றேபரது [Daniel Paul Schreber ]சிந்தனைக்கு ( DENKWÜRDIGKEITEN EINES NERVENKRANKEN) வருவோம்.அவரது, கருத்தைக் குறித்தான புரிதலுக்கு -2 -தளங்கள் இருக்கிறது.

1: பிரஞ்சியச் சிந்தனையாளர்களது ஐரோப்பிய நவீனத்துக்குப் பின்பான புரிதல்கள்,

2: நவீனத்துக்கூடாக நகர்த்தப்பட்டு அந்த நவீனத்துவச் சமுதாயத்தின் அழுத்தமான காற்தடத்தின் கீழே நசுக்கப்பட்ட குரல்கள்-உணர்வுகளது குறிப்புகள்.

இதைப் புரிவதற்கு டானியல் பவுல் ஸ்றேபருக்குத் தொடர்ந்த வாழ்நிலைப் புரிதல்கள்,அநுபவங்கள்,அவர்மீது செலுத்தப்பட்ட அதிகாரச் செயலுகை[ Schwarzen Pädagogik] இவை குறித்தான தேடுதலை தொடர்ந்த வில்லியம் நீடர்லான்ட் (William G. Niederland (1904–1993) ஐம்பதுகளின் ஆரம்பத்தில் டானியல் பவுல் ஸ் றேபரது வாழ்வின் "கருப்பு வளர்பு"(இது பின்னாளில் சோடிசமாக_Sadismus/வழக்கங் கொள்வது)நிலைக்களன் [gesunder Haltung]அவரது தந்தை--சகோதரர்களெனக் கண்டடைந்தபோதும் அதன் தாக்கத்துள் உந்தப்பட்டு அதிக வருடங்கள் வைத்தியசாலையிலிருந்து கொண்டதும்; மனோரீதியான பாதிப்புள்[ Paranoia_Bezeichnung für eine psychische Störung ] அவர் எழுதிய நூலானது "ஒரு நரப்ம்புத் தளற்ச்சி நோயாளின் ஞாபகங்கள்"(DENKWÜRDIGKEITEN EINES NERVENKRANKEN).கவனமாகக் கொள்ளுங்கள், டொச்சில்[Auf Deutsch ]அதை ஆய்வென்றோ-அறிதல் முறையென்றோ சொல்லாது "ஞாபகங்கள்"என்றே கூறப்படுவதை.

அதாவாது> DENKWÜRDIGKEITEN <என்பது ஞாபகத்துள் வைக்கவேண்டிய,சிந்தனைக்குள் வைக்கத்தக்தென்பதாக... நீடர்லேன்டர் தனது அதீதமான தேடலில், "ஸ்றேபர் அசம்பாவிதம்"[ Fall Schreber]எனும்பொருட்டே ஆய்வினத்தொடர்ந்தார்.குடும்பத்துள் பாலியற் துஷ்ப்பிரயோகத்துக்குட்பட்ட அவரது(ஸ்றேபர்)மனப் பிறழ்வு ,தொடர்ந்த உறவு நிலைப் புரிதலுள் எந்திரமான நிலைகளை மனித நடாத்தைக்கும்,மனித உறுப்புகளுக்குமான அனைத்து பரிவர்த்தனைக்கும் "தன் _வதையின் " தொடர்ச்சியில் , உறுதியானவொரு புரிதலுக்கு அவரையிட்டுச் செல்வதாகவிருக்கிறது ; இந்தப் புரிதலில் அவர், தான் குறித்தவை மனோவியற் புகுப்புக்கு உதவுமென "அன்று" அறியவே இல்லை!மனப் பிறழ்வது போக்குக்கேற்ப தன்னை உருவாக்கியவருக்கு இறுதியில் , மனித இருத்தலென்பது குற்றமாகவும்,எந்திரத் தனவியக்கவுமாகவே புரிந்துபோகும் வாழ்நிலை. தந்தை-தாய்,உறவு,அனைத்தையும் வதைத்தெடுக்கும் பாலியல்வதையின் வடூ,மிகக் கீழான நிலைக்குள் உந்தும் மனித இருப்பாக மனிதப் பெறுமானஞ் செயலிழக்க ,அதன் தொடரில் வெறும்"விருப்பு-இயக்கம்"ஜந்திரமெனத்தொடரும் புள்ளியை வந்தடைகிறார். இத்தகைய நிலைக்கு, இட்ட சூழற்றொடர்ச்சிக்கு நீடர்லான்டர் வராதபோதும் ,அவரது இந்த நூல்(Three Notes on the Schreber Case) பரவலாகச் சில விளக்கத்தைத் தரும். பெரும்பாலும் டானியல் பவுல் மீதான புரிதலது எல்லையில், அவரைத் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தியர் பல்கேரிய எழுத்தாளர் எலியாஸ் கானற்றி[Elias Canetti]. பரந்துபட்ட மக்கள்-அதிகாரம் எனும் நூலோடு(Masse und Macht) அவர் ஒரு விவாதத்தை நகர்த்துவதை அறிய முடியும். இவர்களை, உள்வாங்காது அல்லது மறைத்துத் தமது கருத்தியலுலகுக்கு வலுவாகச் சோடித்த செயல் ,பின் முதலாளியச் சூழலது தெரிவு.

ஒரு நோயாளியது குறிப்பை இங்ஙனம் புரட்டிப் புரிதலுக்கு நகர்த்துவது திருட்டுத் தனமானது.டானியல் பவுல் இரு தாசப்பதமாக நோய்கு உட்பட்ட மனிதர்.அவர் எழுதியது, "நோய்க்கும்/தனக்குமான" புரிதல்சார்ந்த எண்ணங்கள்-மனப்போராட்டங்களையே[klassische Fallstudie aus Sicht eines Psychosekranken].அது, அவரது சொந்த வாழ்வின் வடூ.

அவர் ,தனது நோய்குச் சிகிச்சை பெற்றபோது, அதன் தளத்திலிருந்து புரிந்துகொண்டவையும்,தனக்கும் /தந்தைக்குமிடையிலான எதேச்சை-அதிகாரமிக்க பாலியற் துஷ்ப்பிரயோகங்கள் [Der das geistige Klima des gehobenen Bürgertums bestimmende positivistische wissenschaftliche Mainstream und die vorherrschenden protestantischen und leibfeindlichen Diskurse] குறித்த வடூவின் உந்துதலால், பிறழ்வுற்ற பல புரிதல்களைத் தொடர்ந்து குறிப்பெடுத்து வைத்தார்.அதைப் பின் தொடர்ந்த சிக்மன் பொறைட் [Sigmund Freud], அவரது குறிப்புகளைத் தனது தேவைக்கேற்றபடி[ Basierend auf dieser Fallstudie schrieb Sigmund Freud 1910/11 den Aufsatz Psychoanalytische Bemerkungen zu einem autobiographisch beschriebenen Fall von Paranoia (Dementia Paranoides), der 1911 erschien.] வெட்டியும் ,நிமித்துயும் பார்த்த போது , அதைப் பிரஞ்சிய விண்ணர்களும் [Gilles Deleuze and Félix Guattari] தமக்கேற்ற புரிதலுள் முடுக்கினர்.

நமக்கோ,மனிதவுறுப்புகள் X ஜந்திரம்.விருப்ப எந்திரம் Xவிருப்ப உறுப்பென்றதும் ,புதுமையான புரிதல்.அடடா,மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம் என்றதை மனித இருத்தலுக்குப் பொருத்தும் அகவயக் குறையின் தொடர்ச்சியோ இது?[ Schreber war, so Lothane, einem dreifachen »Mord« unterworfen: dem »Seelenmord«, begangen von seinem Psychiater Paul Flechsig, der seinen Patienten einfach in die Irrenanstalt verbannte anstatt ihn angemessen zu behandeln; dem »Justizmord«, begangen vom Anstaltsdirektor Weber, welcher die definitive Entmündigung Schreber veranlasste und dem »Rufmord« Elias Canettis, der in Schrebers vermeintlicher Paranoia ein Modell für Hitlers psychische Disposition sah.« ]– Lothane: Seelenmord und Psychiatrie.டானியல் பவுல் ஸ்றேபர் , மூன்று விதமான கொலைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறித்த புரிதல்களை நாம் கொள்ளத்தக்கதாக அவரது வைத்தியர்கள்-Paul Flechsig-அவர்குறித்த ஆய்வாளர்கள் [William G. Niederland- Lothane-Elias Canetti]சொல்லக் கேட்கிறோம்:"ஆன்மக்கொலை,நீதிக்கொலை,புகழ்க்கொலை"[Schreber war, so Lothane, einem dreifachen »Mord« unterworfen: dem »Seelenmord«, begangen von seinem Psychiater Paul Flechsig, der seinen Patienten einfach in die Irrenanstalt verbannte anstatt ihn angemessen zu behandeln; dem »Justizmord«, begangen vom Anstaltsdirektor Weber, welcher die definitive Entmündigung Schreber veranlasste und dem »Rufmord« Elias Canettis, der in Schrebers vermeintlicher Paranoia ein Modell für Hitlers psychische Disposition sah.« Lothane: Seelenmord und Psychiatrie. ] என ,அவரது மனதில்-நியாத்தின் தரப்பானது எங்கோ பறிகொடுக்கப்பட்டாதான திசையிலேயேதாம் அவர் தனது குறிப்பை வடித்தெடுத்தார்.

அது,உலகத்தில் தன்னையும்,தன்னைச் சுற்றிய மனிதர்களையும் வெறும் பண்டாமாக பார்த்தது-குறுக்கியது.இதன் வழி தனக்குள்ளானவொரு "நியாயத்தை" [Offenen Brief ] " த் தக்க வைத்துக்கொள்ளும் பொருளோடு அனைத்தையும் அனத்து உடலுக்குள் திணித்து, புறவுலகை மறுத்தொதுக்க முனைதல்கூட ஒரு வகையில் அவரது சுதந்திரத்தின்மீதான அத்துமீறிய கொலைதாம்.

புறநிலைக்கும்,சிந்தனைக்குமான சார்பு நிலையுள் இந்த ஜந்திரத்துக்கான எடுகோள் எப்படியுருவாகியது? விருப்பு ஜந்திரத்துக்கு விருப்பைத் திணிப்பதற்கான தொடர் நரப்பு மண்டலத்திலிருந்து உருவாகுவதாக[ "Unter welchen Voraussetzungen darf eine für geisteskrank erachtete Person gegen ihren erklärten Willen in einer Heilanstalt festgehalten werden?] " ச் சொல்கிறார் டானியல் பவுல் ஸ்றேபர். அப்போது, இமானுவேல் கான்டும்,பிறிடிறிக் பொய்யர்பக்கும் செத்துப்போயிருந்தனர்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
5.02.11

Saturday, January 15, 2011

"இடது-வலது" கடந்து...

ன்று,இலங்கைத் தீவில் வாழும்தமிழ்பேசும்மக்களோ தம்மீது சிங்கள இனவாத அரசுகள் கட்டவிழ்த்துவிட்ட இனவழிப்பை-சிங்கள மயப்படுத்தும் அரசியல் நகர்வையெல்லாம்மறந்து,ஜனாதிபதி மகிந்தாவின்பின் மிகவும் பெருமையாகவும்-மகிழ்வாகவும் இருக்க முனைகிறார்கள்.அல்லது, அங்ஙனம் இருக்கவைக்கப்படுகிறார்கள்.கூடவே, இலங்கையில் இனவொதுக்கல்-அரசபயங்கரவாதம் அற்ற சூழல் உருவாகிவிட்டதாகவும் நம்புகிறார்கள்.

"மீண்டுமொரு உழவர் திருநாள் வந்து பொங்கிச் செல்கிறது.யுத்த வடூ மிகவிரைவாக மனதிலிருந்து விலத்திவிடினும் அந்தப் பயங்கரமான சிங்கள அரசினது இனவழிப்பு யுத்தம் தமிழ்ர்களது பூமி மீது நிகழ்த்திய வரலாற்று அழிவை தமிழர்கள்தம்பூமியின்மடி மறந்துதாம் போகும்?அழிந்த பனைகள்-அறுந்த சுற்றம்,பிரிந்த மண்,விட்டுத் தொலைத்த கிராமம்,குடியிழந்து குட்டிச் சுவராகப்போன கிராமங்கள் தினமும் இந்த அழிவு யுத்தத்தைச் சபித்திருக்கப் பொங்கலுக்கான வெடிகள்,தமிழ்ப் பிரதேசமெங்கும்சிங்கள அரசினது குண்டொலிகளாக ஞாபகத்தைக் கூட்டிவருகிறதா?-கூட்டிவரவேண்டும்,அதுதாம் உண்மையாகவும் வாழ்வின் இருப்பை உறுதிப்படுத்தும். எம்மீது நடாத்தப்பட்ட அழிவை நாம் மறக்கத்தாம் முடியுமா?வயிற்றுக்குச் சோறிடுவதாக இன்று படங் காட்டுபவன் வாழ்வைப் பறித்துவிட்டு எம்மை மேய்க்கிறார்கள்!தாலியை அறுத்துவிட்டு தமிழச்சிக்குக் குங்கமிடும்படியும்-பட்டுடுக்கும்படியும் துயிலுரியும் மகிந்தா மதங்கொண்டுரைக்க மௌனமாகக் கனாக் காணும் தமிழ்த் தேசம் தன் மானத்தை இழந்துதாம் போகுமா?"

இதுவொரு நம்பிக்கை.இப்படிப் பலரிடம் கேள்விகள் உருண்டோடுகிறது!

இத்தகைய நம்பிக்கை வெறும் மனவிருப்பாகவும்-புலிப் பாசிச ஒடுக்கு முறைகளுக்கும்,மற்றும் தமிழ்த் தலைமகளது போலித்தனமான அரசியலது விருத்திக்கு எதிரான மனோபாவத்தால் தீர்மானிக்கப்பட்டவொரு கூட்டுச் சமூதாய உணர்வாகத் தமிழ்ச் சமுதாயத்துள் நிலை பெறுகிறது.இஃது, ஒருவகையில் சிங்கள-தமிழ் ஓட்டுக்கட்சி-பாராளுமன்றக் கோமாளிகளை நம்பும் பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத் தனிநபர் மீதான அதீத நம்பிக்கையையும்,தலைமை வழிபாட்டையும் இன்னும் அதிகமாகத் தூண்டும்.இத்தகைய ஒரு சமூக உளவியலை எமது எதிரிகள் விரும்பியே நமக்குள் விதைக்கவும் அதை வளர்த்தெடுக்கவும் தீராத மனவிருப்போடு செயலாற்றுகிறார்கள்.

சோறுபோடுவதும்,சுகம் பெறுவதும் மக்களது உரிமையென வகுப்பெடுப்பவர்கள் புதிய இலக்கொன்றின் திவைவழியில் ஆளும் மகிந்த அரசினது எஜமானர்களுக்கிசைவாகக் கருத்துக்களை பல வகைகளில் முன் வைக்கின்றனர்.இன்றைய இடதுசாரிகளது முகாம்மின் இயலாமையானது இந்தக் கருத்துக்களை மேலும் மெருக்கூட்டுவதில் தமிழ்பேசும் சமுதாயத்தின் இளைய தலைமுறையிடம் "மக்களுக்கு இன்று அவசியமானது அமைதி,உணவு-உறையுள்"எனச் சொல்லி தமிழ்த் தேசிவினதின் தலைமுறையையே அடிமைப்படுத்தும் அரசியலைச் சிங்கள-அந்நிய லொபிகள் செய்து முடிக்கிறார்கள்.இதைப் பெரும்பாலும்"மனிதாபிமானம்"எனும் கருத்தின் திசையில் கட்டித் தகவமைக்கும் அதிகாரத்துவ நலன்கள் நமது மக்களை அடிமைக்குட்படுத்துவதையே குறியாகக்கொண்டியங்குகிறது.

இவையெல்லாம் புதிய வடிவிலான நச்சு அரசியலாகும்.மகிந்தாவோ அல்லது சிங்கள அதிகாரவர்க்கமோ நமது மக்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்கள் அல்ல!மாறாக,இன்றைய நிதிமூலதனத்திடம் சரணாகதி அடைந்த இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்களது தெரிவில், அந்நியர்களே நமது மக்களது தலைவிதியைத் தீர்மானித்துச் செயற்படுகின்றனர்.அந்த வைகையற்றாம் இன்றைய "லொபி"அரசியல் எமது மக்களுக்குச் சந்தோசமான வாழ்வு"அமைதியும்,அடிப்படைத் தேவைகள்"எனவுஞ் சொல்கின்றதுவரை,ஒருவித "வயிற்றுக்கான அரசியல்" எமக்குள் நடாத்தப்படுகிறது.இதைக் கட்டமைக்கும் டக்ளஸ் முதலான தமிழ் அரசியல்வாதிகளுக்கு புலம்பெயர் தேசங்களில் இருக்கும் தரகர்கள் மிக நெருக்காமானதும்,அண்மையிலுமான கருத்தியல்களை விதைத்து எட்டிவிட முனையும் லொபி அரசியலானது, எதிர்காலத்தில் தமிழ்ச் சமுதாயத்தின் எந்தவுரிமையையும் சிங்கள ஆளும் வர்க்கம் மறுப்பதில் திரட்சியடையும் சங்கதிகள் என்பதை எவர் புரிந்துகொள்ள முடியும்?

இலங்கைக்கு ஜனநாயகம்:


இலங்கையில் ஜனநாயகத்தின் அவசியங் குறித்துப் பரப்புரை செய்யுங் கயமைக்கு, ஜனநாயகங் குறித்தவுணர்வு-புரிதலெல்லாம் அதிகம்போனால் தமது அரசியல் நோக்கம் நிறைவுபெறும் தளத்தில் அது மிக நேர்த்தியானதெனச் சொல்லும் கபடம் கருப்பொருளாகவிருக்கிறது.அந்தத்திசையிற்றாம் அரசியலைச் செய்யும் பெரும்பகுதியான புலம்பெயர் "மாற்று(சுத்தல்)க் கருத்து"வட்டம்நடந்துமுடிந்த "சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு"புதிய விளக்கங்கொடுத்தது.பாசிசச் சூழலிலுள்ள இலங்கையில் இத்தகைய மாநாடுகள் குடிசார் அமைப்புகளது விசும்பு நிலைக்கு ஏதுவானதாகவும்,எழுத்தாளர்களது குரல் சர்வ தேசச் சூழலில் இலங்கையினது இன்றைய சூழலைச் சொல்லும் ஒரு அரியவாய்பாகவும்,மக்களது ஒடுங்கிய-அழுத்தமான வாழ்வில் இலக்கியவாதிகளது இணைவு அவர்களது குரலை உயர்த்தும் களமாக அமையுமெனவுஞ் சொல்லப்பட்டது.இது,ஜனநாயகத்தை இலங்கைக்கு வெளியில் புரிந்ததென்னவே வளர்ச்சியடைந்த நாடுகளது நவலிபரல்தன்மையிலான சமூக நகர்வையாகவேயெனப் புரிந்துகொள்வதில் நமக்குச் சிக்கல் இல்லை!



இந்தப் புரிதலுக்கு வெளியில் நமது மக்களது அரசியலைச் சிதைக்கும் லொபி அரசியலானது அதன் வர்க்கத் தன்மைக்கேற்ற அதீத முனைப்புடைய புறக் காரணிகளை(மாநாடு,சங்கம்,சமயக்கூட்டம்-சொற் பொழிவு,இலக்கியவுரையாடல்,நிலவும் அமைப்புக்கிசைவான பரப்புரை,குறிப்பாகக் கருத்தியற்றிசையமைவு) தமது நலன்களுக்குட்பட்ட வகையில் பேச முற்படுகிறது.இது,மக்களது வாழ்வதாரத்தைக் குதறிய அரசினது இன்றைய நகர்வைக் குறித்துப் "பாசிசப் புலிகளது"அரசியலோடிணைப்பதில் அரசுக்கும்,போராடுங் குறுங் குழுவுக்குமிடையிலான வித்தயாசம் என்னவென்பதை மறைத்து ஆளும் அரச-ஆளும் வர்க்கத் திமிரை மக்களது உரிமையுடன் ஒப்பிட்டுத் தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமைக்கே வேட்டு வைத்திருக்கிறது.இந்தப் புரிதல் வகைப்பட்ட அரசியலானதின் இன்றைய வகிபாகமானது தமிழ்ச் சூழலில் மகிந்தாவினது அரச எடுபிடிகளாக்குச் சிலரை மேலும் வென்றெடுப்பதில் குறிவைத்து மையங்கொள்ளும்.இது வெளிப்படுத்தம் அரசியல்பரந்துபட்ட இலங்கையின் முழுமொத்த மக்கட்டொகைக்கும் எதிராதென்பதில் காலங்கடந்துதாம் புரிந்துகொள்ளத் தக்க வினைக் கூறுகள் அடங்கியுள்ளது.

மக்களது பெயரில் அவர்களை அண்மிக்கும் இத்தகைய அரசியல் உரையாடலானது மீளமீளத் தகவமைக்கும் கருத்துவெளியானது தமிழ்பேசும் மக்களது அரசியலுரிமையைச் சோற்றுக்கு விற்பதென்பதைக் கடந்தியங்கமுடியாதென்பதை அவர்கள் தினமும் சொல்வதில் கவனமாகவிருக்கிறார்கள்.இதுவே,இலங்கைக்கு ஆதரவான லொபிக் குழுக்களான இலங்கை ஜன நாயக ஒன்றியம்,இலங்கையர் சங்கம்,தலித் சமூக மேம்பாட்டு முன்னணி போன்ற குழுக்களது பெரும்பான்மைப் பலத்துடன்கவிஞர் ஜெயபாலன் சோபாசக்திபோன்ற இலக்கியச் "செம்மல்"களையும் கையெழுத்திட்டு ஆதரிக்கத் தூண்டியது.இந்தவிடத்தில் சோசலிசம்-மார்க்சியம்பேசும் இரயாகரனது தாந்தோன்றித்தனமான விசம அரசியலை என்னவென்பது!இத்தகைய சர்வ தேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை ஆதரித்து அறிகைவிட்ட இரயாகரனது பினாமி அரசியல் செயற்பாடோ அப்பட்டமான ஒடுக்குமுறையாளர்களது நலனை ஒடுக்கப்பட்ட மக்களது அரசியல்வழியாகச் சொல்வதில் இதுவரை புலிக்கு வேவு பார்த்த சூழலெல்லாம் இன்னொரு தரப்புக்கு விசுவாசஞ் செய்வதில் அழிக்கப்பட்ட புலிக்கு மாற்றீடு காண்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?இவர்கள் கூறுவதன் சாரம்தாம் இன்றைய இலங்கைக்கான "ஜனநாயகம்" என்பதைப் புரிந்துகொண்டால் இந்தச் சூத்திரத்துள் மையமுறும் நலன்கள் மக்களுக்கானதுதானவென்று புரிந்துவிடாதோ?

புலிகளது அழிவுக்குப் பின்பான இன்றைய சூழலில்,அந்நிய மூலதனத்துக்கு எதிரானதும் இலங்கையின் அந்நிய எடுபிடி ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதுமான இன்றைய இலங்கையின் உழைப்புப் பிரிவினையானது அந்த நாட்டில் தொழிலாள வர்க்க ஒருங்கிணைவுக்கும் அது சார்ந்த எழிச்சிக்குமான சூழலைக் கொண்டிருப்பதாலும் இந்தச் சூழலை உடைப்பதும் இந்திய-சீன,அமெரிக்க-ஐரோப்பிய ஆர்வமாகவும் இருக்கிறது.இதற்கேற்ற தளங்களிற்றாம் இடதுசாரியம்(இரயாமாதிரி),ஜனநாயகம்(சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு மாதிரி) எல்லாந் திசையமைக்கப்படுகிறது.இதற்கு வெளியில் இயங்க முற்படுவதை இத்தகைய குழுக்கள் "இடது"சாரியத்தின் பெயராலும்,"ஜனநாயக"த்தின் பெயராலும் எதிர்த்து, மக்களது உரிமைகளைப் பேசும்"தகுதி"தமக்குத்தாமெனச் சொந்தங்கொண்டாடுவது தமது எஜமானர்களது ஆதிக்கத்துக்கு எதிரான எந்த விசும்பையும் கிள்ளியெறிவதற்கான புள்ளியென்பதே எனது கருத்தாகும்.

புலியில்லா இலங்கை:


புலியில்லா இலங்கைக்குப் பிரிவினைவாதப் பூச்சாண்டி அரசியல் இனிச் சறுக்கலாகவே இருக்குமென்பது மகிந்தாவுக்குப் புரிந்தவொன்று.புலிகள் தம்மை மீளத் தகவமைப்பதாக இந்திய ஆளும் வர்க்கம் கடந்த மாதம் ஊதிப் பெருக்க அது எடுபடவில்லை!

ஒன்றுபட்ட இலங்கைக்கான அரச ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்துவது மற்றும் இலங்கை பூராகவும் அதை விஸ்தரிப்பதென்பதும் இன்றைய இலங்கைக்கு முதலாயக்கடமைகளில் ஒன்று.



இதன் தொடரில், வரலாற்று ஆவணங்கள் உருவாக்கப்படும் புத்த விகாரைகளது மீள்வருகையில் எட்டப்படும் மனிதப் பதிவுகளது திட்டமிடப்பட்ட ஆதிக்கமானது ஆத்மீகத்தோடு சிங்கள அரச ஆதிக்கத்தை வலுவாக்கி, பண்பாட்டு ஒடுக்குமுறையை-ஆதிக்கத்தை இறுக்கி வருவதன் வியூகத்தை முதலிலும்-இறுதியிலுமாகச் சொல்லித்தாம் ஆகவேண்டும்.இந்தப் போக்கோடு மிகந்தாவே விரும்பாவிட்டாலும்,இலங்கையின் தரகு முதலாளியமானது ஆசிய மூலதன வருகைக்குப் பின்னும்,புலிகளது இடத்தைத் தொடர்ந்து வெற்றிடமாக வைத்திருக்கவும் கீழ்வரும் இரு முக்கியமான போக்குகளுக்கு வந்தேயாகவேண்டும்-நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும். இதைச் செய்யாதிருக்கும்போது தமிழ் நிலப்பரப்பில் அதன்(சிங்கள அரசு) அரச ஆதிக்கம் மெல்லவும்-மெதுவாகமே நகரமுடியும்.ஆதலால் அரச ஆதிக்கத்தை மிக விரைவாக நிலைப்படுத்தும் நிகழ்ச்சி நிரல் இப்படித்தாம் நமக்குள் அறிமுகமாகும்:

1: இலங்கை பூராகவும் இனப் பாகுபாடற்ற பொருளாதார முன்னெடுப்புகள்-அபிவிருத்திகள் நடந்தே ஆகவேண்டும்.யுத்தத்தால் பாதிப்படைந்த பொருளாதாரக் கட்டமைப்புகள் சீராக்கப்படுவதும்,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரங்கள் அவர்களது வாழ்வுக்கானதாகப் பயனெட்டுவதும்,குடிசார் அமைப்புகள்
சமூக வாழ்வைச் செப்பனிடுவதும்,குடும்பங்களை இணைப்பதும் அவசியம்.இதற்காகக் குடிசார் அமைப்புகள் செயலிழந்த கடந்தகாலத்தைத் தொடைத்து எறியவேண்டிய நிலையில் இலங்கை ஜனநாயகம் தன்னைப் புதிப்பித்தாகவேண்டும் இல்லை உயிர்த்திருக்க வேண்டும்.

2: இராணுவவாதம் மங்கி,குடிசார் நிறுவனங்களுக்குள் அரசியல் ஆதிக்கமும்,சிவில் சமூக ஆளுமைiயும் இணைந்துகொள்வது.அரசியல் ரீதியான இனஞ்சார் அதிகாரப்பரவலாக்கம்(மாகண சபைகளுக்கு அதிகாரங்களைக் கையளித்தல்) பொதுவான ஒருகிணைந்த இலங்கை அரச சட்டயாப்பாக மாற்றப்பட்டே ஆகவேண்டும்.இதுவே,தடையற்ற பொருளாதார முன்னெடுப்புகளை மேற்குலக மூலதனத்திடமிருந்து பாதுகாத்து ஆசிய மூலதனத்துக்குச் சாதகமான தெரிவுகளை வலுப்படுத்தும்(இது,மாகண சபைகளுக்கு சட்டரீதியான அதிகாரங்களைக் கையளித்தே ஆகவேண்டும் என்ற பொருளில் புரியப்படுகிறது).


மிகந்தா இரண்டாவது தடவை ஜனாதிபதியான கையோடு அவரது அரசியலானது திட்டமிடப்பட்ட ஆசிய மூலதன வியூகத்தை மிக ஒழுங்குற இலங்கையில் பரிசீலித்துவருகிறது.ஆசிய மூலதனமானது ஐரோப்பிய அரசுகளிடமிருந்து கற்றதைத் திருப்பிக்கொடுக்கும் பதிலீடான பாதையிலேயே சென்றுகொண்டிருக்கிறது.அது,திட்டமிடப்பட்ட பாரிய உலக யுத்தமொன்றின் முன்தயாரிப்பில் இலங்கைமீதான அனைத்து அதிகாரத்தையும் நிலைப்படுத்த இலங்கையானது ஒரு இனத்தின் ஆளுமைக்குள்கொணரப்பட்ட, ஒற்றை இலங்கைத் தேசியவுணர்வு முதன்மையாக இருக்கவேண்டுமென உணரும் அரசியல் புரிதலின்வழி செயற்படுவதை,பேராசிரியர் கிஷோர்(Kishore Mahbubani _ http://www.mahbubani.net/ ) மபுபானியின் உரைகள் மூலம் அறியக்கிடைக்கிறது.

இதைத் விரித்தியாகவும்-நேர்த்தியாகவும் செய்ய முனையும் ஆசிய மூலதனத்துக்கு, இலங்கைவாழ் மக்கள் அனைவரையும் ஒருகிணைந்த இலங்கைக்குள் தேசிய இனமாக்கிக்கொள்வது அவசியமாகவே இருக்கிறது.இதைத்தாம்"நாம் அனைவரும் இலங்கையர்கள்,சிறுபான்மை இனங்கள் என்பது கிடையாது"என்ற மகிந்தாவின் கோரிக்கைக்குள் இனங்கண்டாக வேண்டும்.தவிர்க்க முடியாத இந்தப் பொருளாதார நகர்வுகள்-முரண்பாடுகள் மக்களினங்களை வலு கட்டாயமாக ஒரு தேசத்து நிலவரையறைக்குள் ஒன்றிணிக்கவே முனைகின்றன.இதிலிருந்து இனிமேற்காலத்தில் "தமிழர்களது பூமி" என்ற ஐதீகப் பாரம்பரிய பிரதேசம் முகமிழந்து காணமாற்போவதென்பது புத்தரது கொட்டகைகளதும்,"தமிழ் நிலப்பரப்புகளில்" தங்குதடையின்றிப் பல்லாயிரும் சிங்களச் சிப்பாய்கள் காதல் செய்வதிலிருந்தும் விசும்பாகி முகிழ்த்துவருவதை எவரும் புரிவர்.

"லொபி"கள்தம்உலக அணிச்சார்பு:

இன்று மேற்குலகம் விரும்பாமல் வெறுக்கும் சீனாவும்-இந்தியாவும் அடுத்த இருபதாண்டுகளில் ஆசியாவிள் மிகப்பெரும் பிராந்திய ஆதிக்க சக்திகள் என்பதிலிருந்துவிடுபட்டு உலகச் சக்திகளென அடுத்த நூற்றாண்டுவரைத் தொடரத்தாம் போகின்றன.இதற்காக அமெரிக்கவே யுத்தத்துக்கு அழைத்தாலும் அதைத் தட்டிக்கழித்துச் செல்ல விரும்பும் இத்தகைய நாடுகளை யுத்தத்தின்மூலஞ் சிதைந்தாலே தவிர அமெரிக்கா-ஐரோப்பா உயிர்வாழ முடியாது.

எனவே,அமெரிக்கா திறக்க முனையும்"ஈரான் யுத்தம்-வடகொரிய யுத்தம்"நேரடியாகச் சீனாவைத்தாக்கி அழிக்கும் மிகப்பெரிய வியூகத்தோடு நகர்வதை சீனா முன்கூட்டி அறியும்.அதைத் தொடர்ந்த அதனது வியூகப் பங்காளிகளில்(The Shanghai Cooperation Organization _ http://www.cfr.org/publication/10883/shanghai_cooperation_organization.html ) முதன்மைக் கூட்டாளி இருஷ்சியா,இந்த வருட மூனிக் நகர்(ஜேர்மனி) பாதுகாப்புக்(Munich Security Conference ) கூட்டத்தில்(நேட்டோ அணியினது இச்சந்திப்பு_ http://www.securityconference.de/ ) நேட்டோவோடு இணையும் அவர்களது வேண்டுகோளுக்கு அளிக்கும் பதிலிலிருந்தே சீனாவின் தலைவிதி தீர்மானிக்கப்படும் என்பது உண்மையானது.

தென்னாசியப் பிராந்தியத்திலிருந்து இந்தியா,சீனா போன்ற இரண்டு பொருளாதார ஆதிக்கச் சக்திகளைத் தனிமைப்படுத்தும் அரசியலை அமெரிக்காவும் மேற்குலகமும் முழு முயற்சியாகச் செய்து வருகிறது.இந்தியாவின் சந்தையை வெற்றிகொண்ட மேற்குலகமும் அமெரிக்காவும் அதன் அரசியல் ஆதிக்கத்தையும் பொருளாதாரச் சந்தையையும் மெல்ல உடைப்பதின் ஒரு அங்கமே ஐக்கிய தேசியக்கட்சி(இரணில் மௌன்ட் பெலாரின் சொசைட்டி போர்ட் மெனம்பர்_The Mont Pelerin Society _ https://www.montpelerin.org/montpelerin/home.html ) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகளது கூட்டு-நகர்வு,அரசியல் கோரிக்கைகள்.

இலங்கையில், இந்தியா-சீனா போன்ற நாடுகள் அதிகமாக ஆதிக்கத்தைச் செலுத்தி, இலங்கையை இந்தியாவினது-சீனாவினது செல்வாக்குக்கு உட்பட்ட நாடாக்கவே புலியழிப்பைக் கொள்கையாக வகுத்தது -Shanghai Cooperation Organization !இங்கு, இவ்வமைப்பின் செல்வாக்கு என்பதன் மறுவடிவம் இந்திய-சீன,இருஷ்சிய ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடு என்பதன் பொருளைக் குறித்து நிற்பதென்பதை இந்த மேற்குலகம் நன்றாகவே புரிந்து கொண்டது.

இத்தகைய நாய்ச் சண்டையில் அடியாளாக இருக்கும் ஒவ்வொரு இனம்சார் கட்சிகளும்,அமைப்புகளும்- இயக்கங்கங்களும் தத்தமக்குரிய வேலைகளைத் தமது எஜமானர்களுக்காச் செயற்படுத்தும்போது"இலங்கைத் தேசியம்,தமிழ்,ஜனநாயகம்,மக்கள் நலன்,பசிபோக்குதல்,நிவாரணம்,மீள்கட்டுமானம்,பேச்சுரிமை,சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு-வாழ்வாதாரம்"என்று பற்பல முகமூடிகளைப் போட்டுக் கொள்கின்றன.புலம் பெயர் "இடது"மாபியாக்கள் இன்னமும் தத்தம் அணி பிரித்துத் தமிழ்த் தேசியம்-விடுதலை என வகுப்பெடுப்பதையுந்தாண்டித் தாம் மட்டுமே மக்களுக்கு மயிரைப் பிடுங்குவதாகப் பூச்சுற்றுவதும் இத்தகைய"லொபி"அரசியலுக்கு அடிமையான கட்சிகளது வால்கள்தாம் இவை என்பதை நிரூபணமாக்கிறது.

ஆசிய மூலதனம் ஒரு புறமும்,மறுபுறம் மேற்குலக மூலதனமாகப் உலகத்தின் கனிவளங்கள் சில பெரு வங்கிகளது-நிறுவனங்களது சொத்தாக மாறிவிட்டென.இதைச் சுற்றித் தேசங்களது அரசியல்,மக்களது அழிவுகள் நடந்தேறுகிறது.இயற்கை அனர்த்தங்களாக சீறிச் சொல்கிறது! மனிதத் தவறுகள், புவி அதிர்வாகச் சுனாமியாக,வெள்ளப் பெருக்காக இலட்சம்-கோடி மக்களது உயிர் குடிக்கக் காத்திருக்கிறது.இலங்கைக் கிழக்கு வெள்ளம்-அவுஸ்ரேலிய வெள்ளம்,கெயிட்டி நிலவதிர்வு-பிரேசில் மண்சரிவு...

"யுத்தம் விடுதலையாக
அடிமைத்தனம் சுதந்திரமாக
அறியாமை பலமானதாக..."

இதன் மூலம் தொடரும் லொபி அரசியலானது பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வை இன்னும் அதே அழிவுக்குள் திணிப்பதாகத் தொடர்வதில் மக்கள் நலன் என்று சொல்பவர்களையே மக்கள் நம்பாமற்போகும் காலமொன்று உருவாகும்.அந்தக் காலமானது அழிவினது விளிம்பில் உலக யுத்தமெனச் செய்யப்பட்டு, இன்னொரு பாசிச வரலாற்றை இந்த நவ லிபரல் ஏகாதிபத்தியப் பிசாசுகள் எழுதிச் செல்வார்களா?

இதுள் தமிழ்த் தேசியத்தின் வரைவிலக்கணம் என்னவாக இருக்கும்?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
15.01.2011

Sunday, January 09, 2011

இனியொருவில், புலம்பெயர் நிலைவரம்

எம்மை, அகதி என்றே பிரகடனப்படுத்துவது
மானுட விடுதலைக்கு ஆனது!


னியொருவில், புலம்பெயர் நிலைவரம் குறித்த உரையாடலது பகுதி உரை.தொடராக, இது குறித்த கருத்தாடலும்-ஆய்வுகளும் அவசியமிருக்கு.அதைச் சாத்தியப்படுத்தும் புரிதல், அவசியமானதும் அடுத்த கட்டத் தேவையுமென்பது எனது எண்ணம்.அதன்வழி உரையாடலை இங்கு பகிர்கிறேன்.

புலம் பெயரும் மக்கள் கூட்டம்: துண்டிக்கப்பட்ட மக்கள் குழாமே-அவர்களுக்கு நிறம்,மொழி,இனம் இல்லை-அவர்கள் தம்மை அகதி என்றே பிரகடனப்படுத்துவது மானுட விடுதலைக்கு ஆனது!

சரி,விரிவாக விவாதிக்க வேண்டியவொரு தேவைக்கு சிரஞ்சீவி உந்தித் தள்ளுகிறார்.இந்தக் கட்டுரையின்வழி நாவலன் பேச முற்பட்டதை அவர் (நாவலன்)பின்னூட்டில் விளக்கியுள்ளார்(.) .

சரிஞ்சீவி,தமிழ்"சிவப்பு" பெண்கள்-ஆண்கள்,"கருப்பு"ஆண்-பெண்களை கேலி பேசுவதை என் விமர்சனம் எப்படிப் பேசியுள்ளதென்பதை இன்னொரு முறை வாசித்துப் புரியவும்.அடுத்து,தமிழ்பேசும் புலம் பெயர் மக்களை மட்டுமான வட்டத்துள் பேசப்படாததும்-பேசப்பட்டதுமான எனது உரையாடாலானது ஒரு சமூகத்தின் இருப்பை நோக்கி-உருவாக்கத்தின் ஆரம்ப நிலைமைகளைப் பேசுவது.அதுள் ,புலம்பெயர் மக்களுக்கு எங்கிருந்து-எப்படி ஒடுக்குமுறைகள் வருகின்றனவென்பது அவசியமான தேடுதலாக எனக்குப்படுகிறது.அதன்வழி ,மேலோட்டமாக எவர் எழுதும்போதும் அதைக் குறித்து எதிர்வினையாற்றுவதென்பது பதினெட்டாம் நேற்றாண்டினது மொழியாகவிருந்தாலென்ன, 21 ஆம் நூற்றாண்டினதாகவிருந்தாலென்ன?

இமானுவல் காண்டையும்,மார்க்சையும் எத்தனையாம் நூற்றாண்டு மொழிகொண்டு வாசிக்கிறோம் ?

பெரிய விடுகதையெல்லாம்"பின்நவீனத்துவம்"என்ற வார்த்தையை வைத்து விளையாடாதீர்கள்!

இது குறித்து வாங்கோ விரிவாக விவாதிப்போம்.நான் இத்தகையவுரையாடல்களை மிகவும் மனத்தோடு பேச முற்படுபவன்.இந்தவுரையாடலையே பேஷ் புக்கில் அதிகம் இணைக்கிறேன்.இப்போதைக்கு மிக்கேல் பூப்காவின் ஒரு பதிலை உங்களுக்குச் சுட்டுவேன்.

"Ich bin kein theoretiker.Als Throretiker bezeichne ich Jemanden,der ein allgemeines System errichtet,sei es ein deduktives oder ein analytisches,und es immer in der gleichen Weise auf unterschiedliche Bereiche anwendet.Das ist nicht mein Fall.Ich bin ein Experimentator in dem sinne,daß ich schreibe,um mich selbst zu verändern und nicht mehr dasselbe zu denken wie zuvor.-Gespräche mit Ducio Trombadori-Die Hauptwerke von Michel Foucault,Seite:1585-86.

"நான் ஒரு சிந்தாந்தவாதி அல்ல.சிந்தாந்தவாதியாக என்னை நான் காட்டிக்கொள்வேனானால் எங்கேயாவது,அது வித்தியாசமான நிலைகளுக்குள்-பகுதிகளுக்கு ஒவ்வொரு முறையும் ஒருமாதிரியான விளக்கங்களும்-கழித்தல்களையுமே பயன்படுத்திக்கொள்வதில் முடியும்.அது எனக்குரிய செயலல்ல! உங்களுக்கு என்னைக் குறித்துச் சொன்னால்,நான் ஒரு பரிசோதகன்.நான் சித்தாந்தவாதியல்ல.எனது நோக்கத்துள் நான் எழுதுவது என்னைத் தொடர்ந்து மாற்றுவதற்கும்,மற்றும் முன்னையே சிந்தித்ததை நெடுகவும்,மீளவுஞ் சிந்திதித்து வருவதை மறுப்பதே."

இப்படிச் சொல்லும் பூப்காக மனிதன் ஒரு அநுபவ மிருகமென(Der Mensch ist ein Erfahrungstier) இடூசியோ டொறோம்பாடோறியோடு(Ducio Trombadori) நீண்ட உரையாடலையும் செய்திருக்கிறார்.இப்படிப் பின் நவீனத்துவம் பரிசோதித்து வரும் பகுதிகளை மனித அநுபவத்தை-நடாத்தையை,அதன் அடையாள நெருக்கடியைத் தட்டிக்கழிக்க நாம் பயன்படுத்தும் தற்குறித்தனத்துக்குத் தெரிந்த வார்த்தை ஒன்று மட்டுமே.அது,"பின் நவீனத்துவம்"இந்த வார்த்தைக்கு வெளியில் விரிவாக உரைக்க முடியாத "புத்திசாலிகள் "நம்மில் பலர் இருக்கிறார்கள்.அதுள் நீங்களும் ஒன்றா சிரஞ்சீவீ?

அப்படியில்லையென்றால் வாருங்கள் பூப்கா,தெரிதா,லெக்கான்,சசூர்,ரொலாந் பார்த்,சார்த்தார்,அந்திரே ஜீத் குறித்தும் காம்யுவின் கொள்ளை நோய் (Die Pest)குறித்த அல்ஜீரிய மானுடரது முகமிழந்த வாழ்நிலை பற்றி, சமூக அசைவாக்கவும் குறித்துப் பகிர்வோம்.அதுள் நமது மக்களது புலம் பெயர் வாழ்வது வலி என்னவெனப் புரிந்தும் போகும்!

பின் நவீனத்துவம் ஏதோவொரு பெரிய தத்துவமெனப் பீலாக்காட்டும் கயமைக்கு முன் அவரது[Michel Foucault ] கூற்றுப் புட்டுவைப்பதும்-எனது புரிதல் இந்தத் தமிழ் பின்நவீனத்துவப் பீலாவைக் கண்டு புன்னகைத்தலும் சதா நிகழ்வது சிரஞ்சீவீ!

உங்களுக்கு மனிதசமூகத்தின் இடப்பெயர்வு அவ்வளவு கேலித்தனமாக இருக்கு?புலம் பெயர்ந்து உலகம் பூராகவும் வாழ்பவர்கள் எத்தகைய ஒடுக்கு முறைகளை நேர்முகமாகவும்-மறைமுகமாகவுஞ் சந்திக்கின்றார்கள் என்பதைக் குறித்து மேட்டுக் குடித் தனமாக எள்ளி நகையாடுவதாகவிருக்கிறது?

புலம் பெயர்ந்து"அகதி"யாக வாழ்ந்து மடிவதன்வலி உங்களுக்குப் புரியமுடியாதபோது எனது எழுத்தின்மீதான கேலியாக வாக்கியங்கள் வருகிறது.அதைவிட மோசமான கேள்வி"யாரர் ஐயா உங்களை இங்கு வரச் சொன்னது-தமிழ்நாட்டுக்குப் போயிருக்கலாமே?" சிரஞ்சீவி இந்தக் கேள்வி எமக்குப் புதிதில்லை.

இக் கேள்வியை 1988 ஆம் ஆண்டு சட்டத்தரணி மேயர் கைம் [Mayer Heim_Nürnberg]எனது அகதி விண்ணப்பக் [ Asylverfahren]கோட்டு விசாரணையின் முடிவில் ,மொழிப் பெயர்ப்பாளரான வேந்தனார் இளங்கோவைப் பார்த்துக் கேட்டார்.அதற்கு அந்தப் பொறியிலாள மேதை அளித்த பதில் சிரிஞ்சீவீயிகளது அதே "மோட்டு"தனமானது.



"ஒரு நாயின் முன் சோற்றையும்,இறைச்சியையும் வையுங்கள் அவற்றில் எதை நாய் நாடும்-இறைச்சியைத்தானே?"என்றான் அந்த இளங்கோ.பின்பு அவருக்கு அவுஸ்ரேலியா இறைச்சியாகத் தெரிய அங்குபோய் "டாக்டர்"பட்டம் பெற்றுத் தமிழ்ச் சங்கம் அமைத்து அரை வயதில் இறந்தே போனார்.இது,ஒரு எடுத்துக்காட்டு.

புலம் பெயர் மனிதர்களை நாயின் முன் ஒப்பிட்டு. ஐரோப்போ இறைச்சி,தமிழ்நாடு சோறு.

தமிழ் மக்கள் ஐரோப்பா வரக் கூடாதென்பதற்கு நீங்கள் கூறும் காரணமென்ன?தமிழ்மக்கள் யுத்தாத்தால் பாதிப்படையாத பொருளாதார அகதிகள் என்பதா?இதன்வழி அவர்களுக்கு-தமிழ்பேசும் மக்களுக்கு பிரச்சனையே இலங்கையில் இல்லையென்பதா?

ஐரோப்பியனும்-அமெரிக்கனும் எங்களது மண்ணில் நேரடியாகவும்-மறைமுகமாகவும் வந்து யுத்தப் பிரபுகளை ஊக்குவித்து யுத்தஞ் செய்வான்,ஆனால் ,நாம் அவர்களது மண்ணுக்கு இடம் பெயரக்கூடாது.அவ்வகான் அகதி பாகிஸ்த்தானுக்குள்தாம் நுழையவேண்டும் மேற்கு ஐரோப்பாவுக்குள் இல்லை-,ஈராக்கியர்கள் சிரியாவுக்குள் அல்லது ஈரானுக்குள் நுழையவேண்டும்.அப்படியா சிரஞ்சீவி?

நாயோடு நம்மை ஒப்பிட்ட இளங்கோ,உங்களது திமிருக்கு நிகரானவர்தாம்.தமிழ்நாட்டில் எத்தனை இயக்கம்,எத்தனை அட்டகாசம் செய்ததென்பதும்,ஈழ அகதிகளை ரோவினது குரங்குகள் எப்படிக் கண்காணித்துத் திறந்தவெளிச் சிறையில் அடைத்தார்கள் என்பதும் எவருக்கும் புரியாததல்ல.மாற்று இயக்கத்தவன்,அவனது-அவளது குடும்பத்தவர்கள் கணிசமாகத் தமிழ்நாடு செல்ல முடியாது.அங்கே, இருமுனைத் தாக்குதல் தயாராகவிருந்தது.அடுத்துத் தனது சொந்த மக்களையே அகதியாக வைத்திருக்கும் தமிழகத்துக்குப் புதிதாக இன்னொரு அகதி குழுமம் செல்லுமென எதிர்பார்ப்பது அகங்காரம்.

மக்கள் சமூகத்தில் யுத்தம் என்பதைவிடக் கொடிய யுத்தமானது திட்டமிட்டு ஒரு இனத்தின்மீது வறுமையை ஏவிவிடுவது.இதை எவர்கள் செய்கின்றார்களோ 'அங்கே, சென்று அவர்களது முற்றத்தில் பறிக்கப்பட்ட எமது வாழ்வைக் கேட்பதே நியாயமானது.அந்த வகையிற்றாம் இன்றைக்கு ஆபிரிக்காவிலிருந்து கடல்வழிப் பாதைமூலம் பாதிக்கப்பட்ட ஆபிரிக்க மக்கள் ஐரோப்பாவுக்கு வரும் வழியில் கடலில் மூழ்கிச் சாகிறார்கள்.

ஆபிரிக்க மக்களிடம் என்ன இல்லை?அவர்களை ஒட்டச் சுரண்டுபவன் எவன்?

ஏன் நாமெல்லாம் பட்டுணி கிடந்தா காலந் தள்ளினோம்.நமது மக்களிடம் என்ன இல்லாமல் இருந்தது.எம்மை மொட்டையடித்தவனுக்கு வக்கலாத்து வாங்கும் கேள்விகளை இலண்டனிலிருந்து கொடிபிடிப்பவன்கூடக் கேட்பான்.அவனுக்கு ஐரோப்பியக் கொலனித்துவத்தின் கொடுமை இன்றுவரை நம்மைச் சிதைப்பது புரியாது!அதிலொரு மேதைதாம் இந்தச் சிரஞ்சீவியெனச் சொல்லேன்.ஏனெனில் ,நாம் எல்லோருமே வீணர்கள்-வினைமறுப்பாளர்கள்!எமக்கு ஆழமாகச் சிந்திக்கும் திறன் அறவே கிடையாது.

ஐரோப்பாவில் அகதியாக வாழ்பவன் தன்மீது நடாத்தப்படும்,உயிரியில்ரீதியான ஒடுக்குமுறையையும், சட்டரீதியான ஒடுக்குமுறையையும் சேர்த்து தனது அடையாளத்தின்மீதான ஒடுக்குமுறையைப் பரம்பரைவரை சந்திக்கிறது சிலருக்குப் புரிவதே இல்லை. அகவொடுக்குமுறையானது அள்ளிப்போடும் சில்லறைகளால் மறைக்க முடியாது. அதுவரையும் ,இந்த ஏகாதிபத்தியப் பேய்களால் பாதிப்படைய உலகக் குடிமக்கள் எங்கும் இடம் பெயர்வார்கள்-எப்படியும் வாழ்வார்கள்!அதை தட்டிக் கேட்கும் உரிமை எந்தப் பேய்க்கும் கிடையாது!கொங்கோவைப் பிளந்து பத்தாண்டுக்குள் கோடி மக்களை இரகசியமாய்க் கொல்பவனுக்குச் சொல்-அவ்வகானை வேட்டையாடும் அமெரிக்கனுக்குச் சொல்-அல்லது ஆசியாவை வேட்டையாடும் இந்தியனுக்கும்-சீனனுக்கும்போய் வகுப்பெடு உனது பித்தலாட்டத்தை!

அன்பு நாவலன்,தூர தேசிய உரையாடலானது மிக மோசமான இனவாதம் நிறைந்த அல்லது,அதை மறைக்க முனைந்த உரையாடலாகும்.அதை நினா(நைனா ஆங்கில உச்சரிப்பு) கிலிக் சில்லர் [ Nina Glick Schiller ]மூலம் தத்துவ நிலைக்குட்படுத்தியவர்களில் ஜேர்மனிய அரசுக்குப்(Visiting Research Associate, Max Planck Institute, Social Anthropology, Germany ) பெரிய இடமுண்டு.மக்ஸ் பிலாங் பல்கலைக் கழகமானது[ Max Planck Institute ]பேர்ளினில் அவருக்கு ,மானுடவியற்றுறையை வழங்கியது அவரது புலமைசார் புரிதலில் இல்லை.அவர் மேற்கொண்ட குடியேற்ற வாசிகளது வாழ்வு-சாவு,விருப்புகள் குறித்து(Global Migration Project, Center for International and Area Studies, ) அச்சொட்டான இரகசியங்கள் பற்றியது.ஆபிரிக்காவில் அவர் செய்த ஆய்வுகள் ஆபிரிக்க மக்களைத் துரத்தி அவர்களது கனிவளங்களைத் தொடர்ந்து கையகப்படுத்தும் வியூகத்தோடு சம்பந்தப்பட்டது.

அதற்காகவே 21 நூற்றாண்டின் காட்சிச்சலையென(African Culture and the Zoo in the 21st Century ) அவுஸ்பேர்க்கில் [ Augsburg ]நிறுவி ஆபிரிக்கர்களை ஒட்ட மொட்டையடிக்கும் செயல்களில் (The “African Village” in the Augsburg Zoo and Its Wider Implications )அவர் மும்மரமாக இருக்கிறார்.அவ்கானில் அமெரிக்கா படையெடுப்பதற்கு முன் அமெரிக்க மானுடவியலாளர்கள் மூலம் அவ்கான் மக்களது வாழ்வையும்-சாவையும் ஆய்ந்து (http://www.linksnet.de/de/artikel/25589 )பார்த்தது.

எனவே,நினா சொல்வதும்-நிறுவுவதும் அடிப்படையில் கயமைத்தனமானதும்,ஐரோப்பிய இனவாதத்தை குடியேற்ற வாதிகளது வாழ்வுப்போராட்டத்தில் ,மேலெழும் அடையாள அலகுகளை முன் நிறுத்தித் தமது சுரண்டலை-கொள்ளையை-இனவாத அரசியல் நகர்வை மறைத்தல்-நியாயப்படுத்தலாகும்.

இப்போதைக்கு இவ்வளவுந்தாம் நான் சொல்வேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
09.01.2011

Sunday, January 02, 2011

"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை" ஆதரிப்போம்!

ஷோசலிசத் தமிழீழத்துக்காகக் கூடியவர்கள் இப்போது இலங்கையில் நடைபெறப்போகும்"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்காக"க் கூடுகின்றனர்-கையெழுத்துப் போட்டு இலங்கை ஜனநாயகத்தைத் தழைத்தோங்க வைக்கின்றனர்.இந்தப் புதிய ஆண்டில் இப்படியும் ஒரு போலிக் கூட்டம் மடியிற் கனத்துடன் விடிய மறுக்கும் மக்கள் முற்றத்தில் புரட்சிக் கோலமிட, மகிந்தாவோ தேசியக் கூத்தில்இலங்கையைத் தாண்டி சீனாவில் நிமிர்கிறார்!

இந்தச் சூழலில் எமது அரசியல் வாழ்வு குறித்து யோசித்தோமானால்,"நாம் எப்படித் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம்?இந்த ஏமாற்று வேலையை எமக்குள் இருந்து மிகக் கச்சிதமாக நடாத்தி முடிப்பவர்கள் எவர்கள்?" என்று கேள்விகள் தொடர்கின்றன!

நாம் எங்ஙனம் ஏமாற்றப்பட்டோம்? "தமிழீழ" விடுதலை,சுதந்திரம்-சுயநிர்ணயமென்றதெல்லாம் எப்படிப் போயுள்ளது?புலம் பெயர் புலிகளதும்-மாற்றுக் குழுக்களதும் நாணயம் எந்த வகையானது?இவர்களது அரசியலது தெரிவில் மலிந்துலாவும் நலங்கள் என்ன-தமிழ் "இடதுசாரி"யர்களாகத் தம்மை வலிந்து நிறுவும் குழுவாத மனிதர்கள் எமது மக்களுக்கு எதை வழங்க முடியும்?இவர்கள் ஒருதரையொருவர் கழுத்துவெட்டக் கங்கணம் கட்டிச் செய்யும் சதி வலைகள் எத்தகையவை?இவைகள் குறித்தான குறைந்த பார்வையாவது இப் புதிய ஆண்டில் அவசியமானது.


இராயாகரன் பாணியிலான சூழ்ச்சி அரசியலைப் பின்ன பல குள்ள நரி"இடது போலிகள்"ஒவ்வொரு திசையிலும் நமது மக்களது நலன்கள் குறித்து வகுப்பெடுக்கின்றன.இத்தகைய மனித விரோதிகளது தெரிவுக்கு எது-எப்படி பலியாகிறதென்றவுண்மை"மக்கள்"நலன் எனும் முகமூடியோடு சதா நம்மை எட்டுகின்றன.


உதாரணத்துக்கு இம்மாதம்மட்டில் இலங்கையின் தலைநகரில் நடைபெறவுள்ள"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு"பற்றிக் கவனத்தைக் குவிப்பவர்களுக்கு இந்தப் புலம்பெயர்"இடதுகள்-வலதுகள்"குறித்தவொரு முடிவுக்கு வரமுடியும்.இம்மா நாட்டை இலங்கையின் பாசிச அரசுக்குத் துணைபோகும் கருணா-பிள்ளையான் குழுவின் தலைமைச் சிந்தாந்தக் குரு ஸ்டாலின் முதல் இரயாகரன்வரை ஆதரிப்பதாக இருக்கின்றதென்றால் இதுள் மக்களது நலன் என்னவென்று மிக இலகுவாகப் புரிந்துணர முடியும்.இம்மாநாட்டை இந்திய-இலங்கை உளவமைகள் நெறிபடுத்தக்கூட முடியும்.இதுள்இரஜாகரன் போன்ற"போலிப் புரட்சிக்காரர்கள்"ஆதரிப்பதும் எதிர்ப்பதும் சகஜமாகவே நடந்தேறுகிறது.இது ஏமாற்று அரசியல்!


இத்தகைய ஏமாற்று அரசியலுக்குத் தமிழ் இளைஞர்கள் எங்ஙனம் பலியாகினார்கள்?இன்றைய நமது போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் புலிகள்தான் காரணம் என்ற ஒற்றைப் பதில் நியாயமாகத் தெரியவில்லை.எனவே,புலிகளை முன்னே தள்ளியபடி அவர்களின் பின்னே மறைந்திருக்கும் சக்தி எது-ஏன் எம்மைப் புலிகளினூடாகத் தோற்கடித்தார்கள்-கொன்றொழித்தார்கள்?இந்த அழிப்புக்கும் மேற்காணும் புலம்பெயர் போலி "இடது-வலதுகளுக்கும்" எத்தகைய தொடர்புகள் இருந்தன-இருக்கின்றன?


இக் கேள்விகளுக்கு நான் பல்வேறு கட்டுரைகளுடாகப் பதில் கூறியிருக்கிறேன்.


ஆனால்,அதைவிட,இன்றைக்கு அனைவரும் சுயமாகப் பதில்களைத் தேடி நமது போராட்டம்குறித்து மீள் மதிப்பீடுகள் செய்வது அவசியம்.நம்மைப் புலிகளும் ஏனைய ஆயுதக் குழுக்களும் ஏமாற்றிவிட்டார்கள்.இவர்களை வைத்து நம்மை வேரோடு மொட்டையடித்த அந்நியச் சக்திகள் இன்று தமது நலன்களை இலங்கையில் எட்ட முனைகின்றன.அந்த முயற்சிக்குப் பங்கம் ஏற்படாத முறையில் அவர்களது சேவகர்கள்"இடது-புலம்பெயர் படைப்பாளிகள்"எனும் போர்வையில் தமக்குள் முட்டிமோதுகின்றன.இந்தப் போலிகளில் எவரும் மக்களது நலனை முதன்மைப் படுத்தும் எந்தவொரு அமையையும் நிறுவ முடியும்.அதன் வழியாக நமது மக்களது சுயவெழிச்சியை வேட்டையாட முடியும்.இது,மிக ஆபத்தான காலம்.எல்லாமே மக்களது நலன்வழியானதென இத்தகைய எச்சில் பேய்கள் கூக்கிரலிடுகின்றன.இதுள் முன்னணியில் எவருள்ளார்கள் என்பதிற்கூடப் பல போட்டிகள்.தமிழ்பேசும் மக்களை மட்டுமல்ல முழுமொத்த மனித சமுதாயத்துகே எதிரான போக்கில் இந்தக் குழுக்கள் இயங்குகின்றவென்ற சிறியவுண்மைகூடப் பகிரங்கமாகப் பேசப்படுவதில் பல சிக்கல்கள்!


காலம் பூராகவும் நம்மை ஒடுக்கும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கங்கள் ஏதோவொரு முறையில் ஒடுக்குதலையே தத்தம் தலைமைக்குள் ஆதிக்கமாக-அதிகாரமாக நிகழ்த்திய வரலாற்றுப் போக்கில் அதை மேலும் தமது எஜமானச் சேவைக்கேற்ற வகைகளில் இப்போது தகவமைக்கின்றன.ஒருபுறம் இடது வேடம்-மறுபுறம் ஜனநாய ஒன்றிய வேடம்.இந்தப் போலித்தன அரசியலுக்கு இனியெவர் பலியாவர்கள் என்பதில் பல குழப்பங்கள் நிலவுகின்றன.


எங்கு நோக்கினும்,பணம் பண்ணும் ஒரே நோக்கு மலிந்து கிடக்கிறது!



அழிந்த "ஈழத்தை"ச் சொல்லி,போராட்டத்தைச் சொல்லி,அகதிகளைச் சொல்லிப் பிழைப்பு நடந்தேறுகிறது.அடிமை வாழ்வு,உணவுக்காக,உடைக்காகக் கையேந்தும் சிறுமை வாழ்வைத் தந்ததைவிட எதையுமே இந்தப்"ஈழவிடுதலைப் போராட்டம்" நமக்குத் தரவில்லை!இதையே மீளத் தொடரத் துடிக்கும் புலம் பெயர்ந்து வாழும் முன்னாள் போராட்டக் குழுக்கள், அவர்களது எஜமானர்களெல்லாம் இன்னும் அதிகமாக மக்களை மொட்டையடிக்கும் அரசியலைச் செய்வதில் தத்தமது இருப்பை உறுதிப்படுத்தும் கபட அரசியலில்மிகமோசமான "துரோகத்தை" நான் இனங்காண்கிறேன்.


காடையர்கள்-மாபியாக்கள்,பல்லாயிரம் இளைஞர்களையும், இலட்சக்கணக்கான மக்களையும் கொன்று குவித்துவிட்டு,அதை மண்ணால் மூடிய கையோடு மீளவும் ஏமாற்ற விளையும்போது,உண்மை செத்துப் போகிறது.பற்பல முகமூடிகளது முகாங்களுக்குள் நடக்கும் சதி வியூகங்கள் ஐரோப்பிய மண்ணில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்பேசும் மக்களில் பலரை மிக மோசமான நடாத்தைக்கு உந்தித் தள்ளுகிறது.


எந்தத் திசையிலும் நம்பிக்கை கருகிச் சாகிறது.


பார்க்கும் இடமெங்கும் போலி"இடது சாரிகளது"கை மேலோங்கியிருக்கிறது.அவர்கள் புலிகளது பினாமிகளாக இருந்த அன்றைய அதே அரசியலோடு இன்றும் பொதுத் தளத்தில் மயிர் பிடுங்கும் விவாதமெனத் தள்ளும் எழுத்துக் குப்பைகள் அற்பத் தனமாக மக்களை ஏமாற்றுவதென்பதை எவரும் இலகுவில் அறிய முடியாதபடி தகவமைக்கப்படுகிறது!


இதுவரை,தமிழையும்-,ஈழத்தையும் சொல்லிக் கொல்லப்பட்ட மக்களதும்,போராளிகளதும் உடல்களின் மீதேறித் தமது செல்வத்தைத் தக்கவைக்க முனையும் சமூக விரோதிகளை இனங்கண்டாக வேண்டும்.புலம் பெயர் மண்ணிலிருந்தபடி"புரட்சி"பேசும் இந்தப் போலிகள் தாம் வாழும் நாட்டு இடதுசாரியப் பாரம்பரியத்தோடு துளியளவும் தொடர்பற்ற போலிகள்-பொய்யர்கள்!


தாம் வாழும் நாட்டின் எந்தப் போராட்டத்திலும் தம்மை இணைக்காத இந்தக் கூட்டம் தமக்கும் புரட்சிக்கும் வரலாறிருப்பதாக ஏப்பம் விடுகிறது.இதை நம்பும்படி மக்களை வற்புறுத்துகிறது-மற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்க முனைகிறது.


இந்தக் கூட்டத்தைத் தமிழக ம.க.இ.க. நல்லதொரு சந்தர்ப்பத்தில் அம்பலப்படுத்தி,நிராகரித்தது வரலாற்றுத் தேவையே!அதுபோன்று புலம் பெயர் மக்களாகிய நாம் பரவலாக இவர்கள் குறித்துக் கவனத்தைக் குவித்து இவர்களது அரசியல் மோசடிகள் குறித்து விவாதிக்க வேண்டும்.இவர்தம் ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்காமல் இவர்களைத் தொடர்ந்து இயக்கங்கட்டவும், அதைத் தமிழ் மக்கள் பெயரால் வளர்த்தெடுக்கவும் அநுமதிக்கும் ஒவ்வொரு கணமும் மக்களது நலனை அந்நியர்களுக்கு அடகுவைப்பதாகவே இருக்கும்.


இதை, நாம்"சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை"ஆதரிக்கும் எத்தனையோ சிதைந்துபோன போலிக் கயவர்களது செயலில் உரைத்துப் பார்க்க முடியும்! இப்போது,இக் கயவர்கள் இலங்கை அரச பரிபாலனத்துக்கு ஆட்காட்டும் வேலையில் கையெழுத்துப்போட்டுத் தம்மை நியாயவான்களாகவும், இலங்கை அரசினது புதிய தெரிவுகளுக்கு உடந்தையானவர்களாகவும் நிறுவுவதில் தம்மை மாநாட்டை ஆதரிக்கும்"எழுத்தாளர்களாக-சமூகவியலாளராக"காட்டும் வித்தைதாம் இந்ந ஆண்டின் அதிக தந்திரமுடையது.இதன் வழி இலங்கை அரசைத் தமிழ் மக்களது "புத்திஜீவிகள் மட்டம்" தொடர்ந்து ஆதரிப்பதாகவும் இனம் காட்டி, இலங்கையைப் பாசிசத்துக்குத் தொடர்ந்து ஜனநாயக முகமூடியணிகின்றனர்!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.01.2011

Saturday, January 01, 2011

தேசிய கீதம் சிங்களத்தில் பாடினாலென்ன,பாடாதுபோனால் என்ன?

ஏன், சிங்களத்தில்"மட்டும்" தேசிய கீதம் பாடப்படாது-பாடினால் என்ன ஓய்?


ன்று,நமது மக்கள் படும் மிகக்கொடுமையான அடக்குமுறை உலகுக்குத் தெரிவதற்குப் பதிலாக மகிந்தா செய்யும் மொழிவழித்தாக்குதல்களே ப+தாகரமாகத் தெரிகிறது.உலகத்தின் பார்வையில் நமது போராட்டம் தேவையற்ற ஒன்றாகவும்,ஒரு பயங்கரவாதக் குழுவால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதப் போராட்டமாக மாறியதற்கு யார் காரணம்?

பதில் மிக இலகுவானது.ஆனால், அதன் உண்மையை ஏற்பது கடினமானது.


தமிழ் ஓட்டுக் கட்சி அரசியலிலிருந்து முன் தள்ளப்பட்ட அரசியலும் அதன் வாயிலாகத் திட்டமிட்டு இந்தியாவால்-உலக ஏகாதிபத்திய அமெரிக்காவால் கட்டி வளர்க்கப்பட்ட ஆயுதக் குழுக்களே இத்தகைய நிலைக்குக் காரணமாகும். கடந்த ஆண்டு 2009 இல்புலிகளின் பரிதாபகரமான அழிவு இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

தம் மக்களையே வேட்டையாடிக்கொண்டு,அந்த மக்களின் உரிமைக்காகப் போராடுவதாகச் சொன்னவொரு பாசிச இயக்கத்தின் அழிவு இன்று நம்முன் அநாதைகளாக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களை வறுமையுடன் சுட்டி நிற்கிறது!அவர்கள்,ஆதிக்க சக்திகளால் அடக்கப்படுவதென்பது தொடர்கதை.அவர்களை,அவர்களது இன அடையாள அரசியலே நிர்க்கதியாக்கி அடக்கி ஆதிக்க சக்திகளது காலில் விழ வைத்திருக்கிறது.

நம்மால் இதை உண்மையாக உள்வாங்க முடியுமா?

இந்த 2010ஆம்ஆண்டு நேற்றுடன் முடிந்து இன்று புதிய வருடமாம்!எல்லோரும் மகிழ்ந்து குலாவி ஓய்ந்து...

எனினும்,நாம்,எம்மைப் பார்த்துக் கேள்விகளைக் குவிக்க மறுக்கிறோம்.நமது கடந்த கால அழிவு அரசியலை மிக இலகுவாக மறந்துவிட்டு மகிந்தாவின்"சிங்களத தேசிய கீதம்"பற்றிப் பண்டுதொட்ட புரிதலில் கருத்தாடுகிறோம்!எம்மிடம் பாராளுமன்றப் பாசிஸ்ட்டுகள் குறித்த பார்வை மிக அருகிய நிலையில் மகிந்தாவைச் சாடுவதில் இலங்கை அரச ஆதிக்கத்தைப் புரிய மறுக்கிறோம்.இதுவே புலிகளது அரசியலது தொடர்ச்சி.

இலங்கையின் இனவாதச் சிங்கள அரசு, தமிழ் பேசும் மக்களுக்கிழைத்த அரசியற் துரோகங்கள் பெரும் சமூகக் குற்றமானது.அது யுத்தகாலத்தில் செய்த மனிதவிரோதக் கொலைகளானது பெரும் இனவழிப்பானது.அது,பாலஸ்த்தீன-கொங்கோ மற்றும்,ஈராக்- கொசோவோ மக்களுக்கு,குர்தீஸ் மக்களுக்கு நேர்ந்ததைவிடப் பன்மடங்கு பெரிதானதாகும்.என்றபோதும், நமது அரசியல் தோல்வியில் முடிந்து,இந்தியக் கயமைவாத அரசிடம் தஞ்சம் கோரும் நிலைக்கு எமது போராட்டச் சக்தியைப் பலவீனமாக்கியது வரலாறு.

நாம் எதற்காக நமது மக்களின் சுயவெழிச்சியை முடக்கினோம்- இப்போதும் எதற்காக முடக்குகிறோம்?

நமது மக்களின் தயவில் நிற்காது இந்தியாவை-ஏகாதிபத்திய மேற்குலகை எங்ஙனம் நம்பினோம்?இன்றுவரை டக்ளஸ் முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் யுத்தக் கிரிமனல் இராஜபக்ஸாவின் காலில் விழுவதென்பது என்ன? அது,உலக ஆதிக்கச் சக்திகளுடன் ஒட்டியுறவாடுதலென்பதையுந்தாண்டி,இலங்கை ஆதிக்கத்திடம் மண்டியிடுவதையெவர் புரிந்திருக்கின்றனர்?இங்கேதாம் வர்க்க நலனும்,அதன் இருப்பும் நம் அரசியல் அபிலாசையைச் சிதைத்து வந்திருப்பதைப் புரிக என்கிறோம்.மக்களது அரசியல் எழிச்சியை மொட்டையடிக்கும் தரகு இடதுசாரியப் பார்வையானது மகிந்தாவுக்கு விளக்கங் கொடுப்பதென்று கங்கணங் கட்டுவது திட்டமிடப்பட்ட அவர்களது எஜமானச் சேவையின் தொடர்ச்சியே.இன்றைய நிலையில் தமிழ் மக்களது பாரம்பரிய நில ஐதீகவுணர்வையே சிதைக்கும் இலங்கை ஆதிக்கமானது தமிழ் மக்களது முற்றத்தில் இலங்கைப் பாசிச இராணுவத்iதாக் குவித்து வைத்து நடாத்தும் ஜனநாயக விரோத வியூகமானது இனவழிப்பினது தொடர் சுற்றில் மிகவும் ஆழ்ந்து யோசிக்கத் தக்கது.

இது புதிய தரகு முதலாளிய நலன்களுக்கிசைவாக பரந்துபட்ட மக்களது நலனையும்-உரிமையையுங் குறுக்கும்போது அந்தக் கவனத்தை மகிந்தாவின் தேசிய கீத நாடகத்துள் திணிக்கும் இடதுசாரியப் போலிகள் மக்களது நலன்சார் அரசியலைத் தமது இருப்புக்குப் பயன் படுத்தி வருவதின் அப்பட்டமான கயமை அரசியலுக்குள் இன்று வீழ்ந்துள்ளனர்.

இன்றைய தமிழ் இடதுசாரிகள் போன்று,எத்தனை தாக்குதல்களை இலங்கைப் பாசிச அரசு நம்மீது நடாத்தியது?

இடப்பெயர்வு!-சாவு,பசி...

இதைவிடக் கொடிய பெரும்அழிவையெல்லாம் ஈழமக்கள் கண்டார்களா?

முள்ளி வாய்க்கால் யுத்தத்துள் பெருந்தொகையான மக்கள் சில தினங்களுக்குள் கொல்லப்பட்டார்கள்.நாளாந்தச் சிங்கள அராஜகமாகத் தமிழ்பேசும் பெண்களின் பெண்ணுறுப்பில் குண்டு புதைத்துக் கொல்லப்பட்டார்கள்.எனினும்,உலகம் திரும்பிப் பார்க்காத நிலைமையில் நமது"தடுப்பு யுத்தம்"நடந்தேறியது.அது,சிங்கள அரச ஆதிக்கத்துக்குச் சமாதிகட்டுவதாகச் சொல்லித் தமது சவக் குழியைத் தினமும்தோண்டிய நிலையில், எல்லாம் சரியாக நடந்தேறிப் புலிகள் பூண்டோடு அழித்துப் புதைக்கப்பட்டனர்!


இன்றுவரை சிங்கள மேலாதிக்க அரசின் கொடிய இராணுவமானது தமிழ்பேசும் மக்களைப் பயங்கரவாதத்துக்கெதிரான தேசநலப் பாதுகாப்புவென்ற போர்வையில் பல்லாயிரக்கணக்காக வருத்தி அவர்களின் வாழ்விடங்களை அபகரித்தும்,கொன்றும் மக்களை அடிமைப்படுத்தி வருகிறது.என்றபோதும்,தமிழ்த்"தேசியவாதிகளது"தவறான அரசியற் செல் நெறியால்நம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.இந்திய-சீன வல்லாதிக்கம் நம் மக்களை இலங்கை நரவேட்டையாட ஒப்புதல் அளித்தபடி நம்மைப் படுகுழியில் தள்ளுவதற்காகப் செத்த புலிகளைப் பயன்படுத்துகிறது.


"நாடுகடந்த அரசு-கே.பியின் புனர்வாழ்வுப் பெரும் தேட்டம்" எல்லாம் இந்த ஆதிக்கங்களது ஏதோவொரு வியூகத்தின் தெரிவுகளாக நமது மக்களை அண்மிக்கிறது!-இதுவொரு உதாரணம்தாம்.


சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதென்பது இலங்கையின் சிங்கள அரச வரலாற்றைத் திரும்பிப்பார்ப்பவருக்கு ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கதல்ல.பண்டார நாயக்கா சிங்களத் தேசிய முதலாளியத்தைத் தலைமைதாங்க வெளிக்கிட்டபோது தனிச் சிங்கமொழிச்சட்டவாக்கம் மேலெழுகிறது.இது சிங்கள வோட்டாளர்களை நோக்கி மாறுபட்ட நலனது தெரிவாகிறது.ஏகாதிபத்தியத்துக்கு எதிரான உலக மூன்றாவது அணியின் தலைவர்களில் ஒருவர் பண்டாரநாயக்கவென்பதும் குறிபிடத் தக்கது.இன்றைய அரசியலும் அதே கதையின் இன்னொரு பாகமாக மாறுகிறது.ஏகாதிபத்திய முகாங்கள் பிளவுபட்டுக் கண்ட நலன்களோடு சந்தைகளை உருவாக்குகின்றன.இங்கே மகிந்தாவும் இலங்கைத் தரகு முதலாளியப் பிளவுபட்ட முகாமொன்றின் ஆசியக் கூட்டுக்குத் தலைமைதாங்குவது நிதர்சனமாகத் தெரிகிறது.அன்று,தமிழ்த்தலைமை "பண்டா-செல்வா ஒப்பந்தம்" போட்டபோது அவர்களது மேற்க்கு விசுவாசம் அதைத் தோல்வியடைய வைத்துப் பண்டாவையே கொன்று போடுமளவுக்குச் சி.ஐ.ஏ யின் அரசியலிருந்தது.இன்றும் தமிழ்த் தலைமைகள் இருவேறு முகாங்களாகப் பிளவுபட்டு மகிந்தாவையும்,மேற்குலக எஜமானர்களையும் ஜெபிக்கும் கூட்டமாக மாறியிருக்கிறது.


இதுள் தேசிய கீதம் சிங்களத்தில் பாடினாலென்ன,பாடாதுபோனால் என்ன?தமிழ் மக்களது மண்ணை அபகரித்து வைத்துள்ள சிங்கள அரச ஆதிக்கமும்,அவர்களது அடக்குமுறை வன்ஜந்திரமும்தமிழ் மண்ணைவிட்டு மாயமாக மறைந்திடுமா?ஆகவேண்டியது என்னவென்பதையே தட்டிக்கழிக்கும் அரசியலானது இப்படி முட்டுச் சந்தியில் தட்டிகட்டும் அரசிலது வெளிப்பாடுததாம் மகிந்தாவின் தனிச்சிங்களத் தேசியக் கூத்தைத் தூக்கிப்பிடிப்பதாகும்.


மொழிவாரியாகவும்,பிராந்திய ரீதியாகவும்வாழும் அநேகமான ஆசிய நாடுகளின் சிறுபான்மையினர் ஐரோப்பியக் காலனிய ஆட்சியின் கீழ் அநுபவித்த அடக்கு முறைகளைப்போலவே-அடிக்கடி அதிகமாகவும் அநீதிகளுக்கும்,அராஜகங்களுக்கும் உள்ளாகின்றனர்.இந்த அநீதிகளும்,அராஜகங்களும் சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதல்ல!மாறாக,சிறுபான்மையினர் மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலுக்கேற்பத்தட்டிக் கேட்பார் யாருமற்றுச் சந்திக்கும் அரசியல் ஆதிக்கமும் அதன் வன்முறை ஜந்திரத்தால் ஒடுக்கப்படுதலுமே இன்றைய அவசியமான முரண்பாடாக இருக்கிறது.இதுவே பிரதான முரண்பாடாக இருப்பதைப் புரிய மறுக்கும் "தமிழ் இடதுகள்" மொழிக் குச்சியை வைத்துப் பற்குத்துகிறது!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.01.2011

Saturday, November 13, 2010

சோரம் போகும் புரட்(டு)சீ-தலித்துவ முன்னணி!

சிங்கள மேலாத்திக்கக் கனவு:
சோரம் போகும் புரட்(டு)சீ-தலித்துவ முன்னணி!


சில குறிப்புகள்.



சிங்கள-இந்திய அரசுகள் இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோமா? இத்தகையதும்,ஏலவே தம்மை அரச பரிபாலனத்துக்குரிய இனங்களாகக் கருதும் மேலாண்மைச் சமுதாயங்கள் தம்மிலும் மெலிய இனங்களை தமக்குள் உள்வாங்கி ஏப்பம் விடும் பாரிய யுத்தத்தைப் பல வடிவங்களில் முன்னெடுக்கின்றன.இவை அனைத்துக்கமான அடிப்படை நோக்கானது தகவமைக்கப்பட்ட பொருளாதாரப் பொறி முறைகளுக்கேற்ப இந்தயுத்தம் பொருளாதாரத்தை முழுமையாகக் கையகப்படுத்திய இனங்களுக்குள் இருக்கும் மேட்டுக் குடிகளது நிகழ்சி நிரலுக்கேற்ற படி முறைமைகளைத் தப்பாது திசை வழியாக்கிக் கொண்டிருக்கின்றன.


ஜேர்மனியை உதாரணமாக எடுத்தோமானால்,இங்கே, இனங்களுக் கிடையிலான பரஸ்பர சமூக அசைவூக்கமானது மேலாண்மையைக் கொண்டியங்கும் பெரும்பான்மை டொச்சு மொழிக்குழுமத்தை மையப்படுத்தியே குடியேற்ற இனங்களை உந்தித் தள்ளுகிறது.சில நூறு ஆண்டுகளுக்குட்பட்ட குடியேற்றக் குடிகளுக்கு இது பொருத்தமானதும்-தவிர்க்க முடியாததுமான புறச் சூழலாலும் தமக்கு அந்நியமான சமுதாயப் பொருளாதாரப் பொறிமுறைகளாலும் இது குடியேற்றக் குடிகளுக்கு அவசியமாகவும்,அத்தியவசியமுமாகக் கப்பட்டிருக்கிறது. எனவே,கலந்து காணாமற் போதல் தவிர்க்க முடியாத நெருக்கடியில் தன்னிலையாக இருக்க முனையும் அவர்களது தடங்கள் காலவோட்டத்தில் நெருக்கடிக்கு முன்னேயே அழிந்து காணாமற்போகிறது. இத்தகையவொரு அளவு கோலை இலங்கை போன்ற தேசங்கள் தமக்கு முன்னே வளர்ச்சியடைந்து ஒரு மொன்னைத் தேசிய இனமாக மாற்றப்பட்ட தேசங்களது வழமையான அரசியல்-சமூகக் கோரிக்கைகளைத் தமக்குள் உள்வாங்கவும்,அந்தத் தேசத்துச் சிறுபான்மை இனங்கள்மீது தாந்தோன்றித்தனமாகக்ச் சுமத்தப்படும் பொருளாதாரப் பண்பாட்டு அத்துமீறல்களையும்நியாப்படுத்தும் மேற்குலகச் சிந்தனையாளர்களது வழிகாட்டலில் தகவமைக்கப்படும்நவ பாசிசப் போக்குகளை ஆசிய மூலதனத்துக்கேற்ற புதிய மாதிரிகளாக இலங்கைத் தேசம் வலிந்து தமிழ் பேசும் மக்கள்மீது பரிசீலித்துப் பார்க்கிறது.


புலி அழிப்புக்குப் பின்பான இன்றைய சூழலில்,அந்நிய சக்திகளிடம் கட்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப் படுத்தப்படுகிறது.சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது.சிங்கள அடையாளஞ்சார் பண்பாட்டு மேலாத்திக்கம் பற்பல வடிவத்தில் தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பரப்புகளில் கட்டியெழுப்பும் கருத்தியற் பலமானது மேலுஞ் சிக்கலான அக அழுத்தத்தைத் தமிழ்பேசும் மக்களிடம் உருவாக்கும்போது ,அவர்களால் "தமது அடையாளந் தள்ளிவைப்பதெனும் தப்பித்திலே" இந்தச் சிங்களப் பண்பாட்டு மேலாத்திகத்தால் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.இலங்கையை ஆளும் மகிந்தாவினது அரசுக்கு மிக அண்மையாக இயங்க முனையும் ஆசிய மூலதனமானது ஆசியாவின் இருபெரும் வல்லதேசங்களால்(இந்தியா-சீனா)நிர்வாகிக்கப்பட்டுப் புதிய சந்தை-கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் போக்குவரத்துக்கான வியூகத்தில், இலங்கையைக் குறிவைக்கின்றன.


இவ்வெதிர்காலப் பொருளாதார வல்லரசுகள், தமது நோக்கையை மிக இலகுவாக வென்றெடுக்கப் பலியாக்கப்படும் தென்னாசியச் சிறுபான்மை இனம் தமிழ்பேசும் இலங்கை மக்களாக வரலாற்றின் முன் நிற்கிறார்கள்.இந்நிலையுள்,சிங்கள வரலாற்றுப் புனைவுகளைப் புதுப்பிக்க முனையும் சிங்களப் பழமைவாத ஆதிக்க வர்க்கத்துக்குத் தமது தேசத்தின் இறைமையைவிடத் தமிழ் மக்களை ஒட்ட மொட்டையடிக்கும் நோக்குக்கு எவர் அங்கீகாரம் வழங்குகின்றனரோ அவருடன்கூடித் தேசத்தை மொட்டையடித்தாலுங்கூடத் தமிழ்பேசும் மக்களுக்குத் துண்டுவுரிமையும் இலங்கையில் நிலவக்கூடாதென்ற சமூகவெண்ணவோட்டத்தின் தொடரில் தமிழ் அரசியலோ(கட்சி-இயக்க,தலித்துவச் சங்கம் முதல் வேளாளச் சதி அரசியல்வரை) கலந்து சங்கமிக்கிறது.இதுதாம்,இந் நூற்றாண்டின் மிகக் கேடான அரசியல் சூதாட்டம்.

சிங்களப் பண்பாட்டு மேலாத்திக்கமானது தமிழ் பேசும் மக்களிடம் பற்பல படி முறைகளால் தகவமைக்கப்படும்போது அதுள் பொருளாதாரம்(அழிக்கப்பட்ட வாழ்வாதாரங்களை மீளக் கட்டுவது எனும் போர்வையில்),சிங்கள வன்முறை ஜந்திரம்,மற்றும் அரச ஆதிக்கம்-ஓட்டுக்கட்சிசார் நலன்கள் இவற்றைச் சிங்கள அகவிருப்புக் கொப்பக் காரியமாற்றி வருவதற்கான பாரிய ஒத்திசைவை ஏற்படுத்திக்கொடுக்கும்போது, பாமர மக்கள் தமது பௌதிக ரீதியான இருப்பின் உறுதிப்பாட்டுக்காகத் தொடர்ந்து சிங்களத் திமிருக்குப் பலியாவதைப் புதிய பாணியில் ஜனநாயகப்படுத்தல் மற்றும்,பல்லினப் பண்பாட்டோடும், இலங்கையர்களெனும் தேசத்துக்குப் பழக்கப்படுத்துவதுமாகப் புதிய கதையாடல்களை நமக்குள் இலங்கை அரசு கட்டிக் கண்ணியாக வைக்கிறது.

இந்த ஒற்றைத்துருவ இனஞ்சார் மதிபீடுகள் வரலாற்றுரீதியாகத் தமிழ்பேசும் மக்களது வாழ்வாதாரவுரிமையையும், அவர்களது வரலாற்று ஐதீகமுடைய இறையாண்மையும், அவர்தம் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து அகற்றும் உள் நோக்கங்கட்கமையவே சிங்கள மேலாண்மைச் சின்னங்கள்-கதைகள்மெல்லக் கட்டியமைக்கப்படும் தமிழர்களது வரலாற்று மண்ணில், வேரோடு பெயர்த் தெடுத்து அழிக்கப்பட்டும் தமிழ் மக்களது வரலாற்று அடையாளங்கள் அவர்களது எதிர்காலத்தை இலங்கையில் கேள்விக் குறியாக்கிறது.எனினும்,தமிழ் பேசும் மக்கள் தமது கடந்தகால அரசியல் உணர்வினூடு துண்டற வெட்டப்பட்ட சூழலில் பாரம் பரியமாகக் கட்டியெழுப்பப்பட்ட காலனித் துவத்துக்குப் பின்பான அரசியல் உணர்வானது இலங்கையின் பேரினவாதத்திடம் சரணடைவதாகவே இருத்தி வைக்கப்பட்டதன் தொடரில், இலங்கையின் அரச ஆதிக்கம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.அது,தமிழ் பேசும் மக்களிடம் இட்டுக்கட்டும் சமூக உணர்வானது அந்த ஆதிக்கத்தை மீள அவர்களது மனத்தில் அனைத்துக்கும் மேலாக இயலாமையின் மறுவுற்பத்தியாக்கித்தகவமைக்கிறதென்றவுண்மையை நாம் அறிந்தே ஆகவேண்டும்.

இந்தப் புரிதலின்வழியாக நாம் கண்டடையவேண்டிய உண்மையொன்றுண்டு.அதாவது,பரந்துபட்ட தமிழ்பேசும்மக்கள், இலங்கை அரசின்மீதுகொள்ளும் ஆத்மீக உறவென்பது பலகாலத்தொடர்புகளின் விருத்தியாகும்.அதை ஒருசில கட்டத்தில் எழுந்தவொரு தமிழ்த் தேசியவாதத்தால் மிக இலகுவாகத் தேசத்தைச் சொல்லி வீழ்த்த முடியாது.ஏனெனில்,மக்கள் இயக்கங்களை-தமிழ்த் தேசியவாதத்தை நம்பிக் குரல் கொடுத்துத் தமது சந்ததிகளைப் போரிடக்கொடுத்தும், தமது வாழ்வு இருண்டதைத் தவிர வேறெதையும் இந்த ஈழப்போராட்டம் வழங்கியதல்ல.இத்தகைய இறுதி விளைவையே திட்டமிட்டு நகர்த்தியவர்கள் இன்று நம் மக்களை நிர்கதியாக்கிய நிலையில் உளரீதியாகவும் தாக்கிச் சிதைப்பதில் நமது அரசியல்வாதிகளை வைத்தே அதை வென்று வருகிறார்கள்.காலனித்துவத்துக்குப் பின்பான சமூக எண்ணவோட்டமானது இலங்கை வாழ் மக்கள் அனைவரிடமும் இலங்கையின் மேட்டுக் குடிகளது விருப்புக்கொப்பவே வளர்த்தெடுக் கப்பட்டது. அத்தகைய மையச் சிந்தனைப் போக்கானது யாழ் நடுத்தரவர்க்கச் சிந்தனையோட்டத்தை மிக இலகுவாகக் கைப்பற்றிய கடந்தகால அநுபவத்திலிருந்தே இன்றைய அனைத்துப் பரிணாமமும்(தேவதாசன்-இராகவன்,அரசியல்-தலித்துவ வாதங்கள் முதல் வரதராஜப் பெருமாளுக்கு அக்கபூவமான வரலாறு இருப்பதால் அவர் இந்தியாவின் பொம்யெனச் சொல்ல முடியாதெனும் புதிய மாதிரிகளான உரையாடலுடன்கூடிய இன்னபிற) கட்டியமைக்கப்படுகிறது.

எனவே,மக்கள் தமது வாழ்வின் பெறுமதியை உணரத்தொடங்குவதில் இலங்கை அரசின் சூழச்சிகள் சாதகமானதாகவும்,சமீபத்துக் கசப்பான அழிவுகளுக்கு வடிகாலாகவும் இருப்பதால் இந்திய-இலங்கை அரசுகளின் பின்னே மக்கள் தொடர்ந்து செல்ல வியூகங்களை வரதராஜப் பெருமாள் போன்றவர்கள் திட்டமிட்டபடிச் செய்து வருகின்றனர்.

இன்று நம்மீது கவிந்திருக்கும் அரசியற் சதிகளுக்கு உடந்தையாக இருக்கும்முன்னாள் இயக்கத் தலைவர்களும்,அரசியல்வாதிகளும் அவர்களின் சேவகத்தால் பயன் பெற முனையும தனிநபர்சார் ஆர்வங்களும், ஊடகங்களும் நம்மக்களை இன்னும் அரசியல் அநாதைகளாக்கும் முயற்சிகளைப் முன்னெடுக்கின்றன.இன்றைய அரசியல்சார் இயக்க-கட்சிசார் ஆர்வங்கள் தத்தமது இருப்புக்கும் குழுக்கட்டலுக்குமான திசைவழிகளைத் தேர்ந்தெடுக்கும் தந்திரோபாயத்திலிருக்கும்போது அவர்களை ஏலவே சதிகாரர்களுடன் கைகோர்த்த இயக்கத் தலைவர்கள்-கட்சித்தலைவர்கள் மிக இலகுவாகப் கையப்படுத்தும் அதீத கவனத்தில் மக்களது எந்தவுரிமையையும் தமது நலன்களின்வழியே சிந்திக்க முனைகிறார்கள்.இந்தச் சிந்தனையைத் தகவமைக்கும் இலங்கைச் சிறுபான்மை மக்களது எதிரிகளாக மாறியுள்ள ஆதிக்க சக்திகள், தமது வர்க்க நிலைசார்ந்து தமிழ்பேசும் மக்களின் மேல் தட்டு வர்க்கத்தைத் தாஜா செய்வதில் வெற்றியீட்டியுள்ளது.

வன்னிப் படுகொலைகளுக்குப் பின்னால் கணிசமான மக்களின் அடிப்படை வாழ்வு, பாதாளத்தில் வீழ்ந்து, உயிர்வாழும் எந்த ஆதாரமுமின்றி மக்கள் படும் துயரமானது வெறும் வார்த்தைகாளால் வர்ணிக்க முடியாதவை.இத்தகைய கொடும் வாழ் சூழலில் மக்கள் கிடந்துழல, அவர்களுக்குத் தீர்வு,அதிகாரப் பரவலாக்கமெனச் சரடுவிடும் கூட்டங்கள்-சந்திப்புகள்,வானொலி-தொலைக்காட்சி உரையாடல்கள் யாவும் இந்திய-இலங்கை ஆதிக்க வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கமையவே மீளவும் மக்களை அண்மிக்கின்றன.புலிகளது வெற்றிடத்தில் குந்தியிருந்து மீளத் தலைகளைக் கொய்யும் அரசியலுக்காக மண்டையன் குழுத் தலைவன் வரதராஜப் பெருமாளும், இந்தியாவால் புலம் பெயர் தேசத்தில் வெள்ளோட்டத்துக்காகப் பாடுபடும் உரையாடல்கள் யாவும் ஏலவே தகவமைத்துத் திறபடத் திட்டமிடப் பட்டிருக்கிறது. இதன் வியூக நிரல்களை உற்று நோக்கும்போது சமீக கால அரசியலைக் திடீரெனக் கைப்பற்றும் பொருட்டு புலம் பெயர் தேசத்துள் இயங்கிய கருத்து மேல் நிலைசார் வட்டத்தை மிக இலகுவாகத் தமக்கு அண்மையில் இருத்தி வைத்தபடி, அவர்களது தயவோடு தம் கடந்தகாலச் சதி அரசியலை நியாயப்படுத்தும் கருத்தியலைக் குவித்துவரும் இன்றைய புலம்பெயர் ஊடகங்களில் கணிசமானவை தமக்குத் தீனிபோடும் அதிகார சக்திகளுக்கு நமது மக்ளைத் தாரவார்த்துக்கொடுப்பதில் போட்டியிடுகின்றன.இந்தச் சூழலிலேயேதாம் புலம்பெயர் "மாற்றுக்"கருத்தாளர்கள்-படைப்பாளிகளெனச் சொல்லும் கும்பல்களும் ஏதோவொரு மையத்தில் சதிகாரர்களை நியாயப்படுத்துவதில் "அவர்களது மக்கள் விரோதப் போக்கை" நீர்த்துப் போக வைப்பதில் வரலாற்றையே திரித்தெடுக்கின்றனர்!

புலிகளுக்குப் பயந்து எதுவுமே செய்ய முடியவில்லையெனக் கொட்டாவி விட்டவர்கள் இப்போது தமது அரசியல் இயலாமையைத் தட்டிக்கழித்துத் தம் இருப்பை இலகுவில் நிலைப்படுத்த பழைய பெருச்சாளிகளது கட்சி-இயக்கவாதப் போக்குள்ளும் அவர்களது இந்திய-இலங்கை மற்றும் மேற்க்கு ஆதிக்கச் சக்திகள் சார் நலனுக்குமாகமானதெரிவில் தம்மைத் தொலைத்து, உயிர்வாழப் போரிடுகின்றனர்.இதன் பயனாகத் தமது அரசியற் தற்கொலையை நியாயப்படுத்துவதில் பழைய பெருச்சாளிகளது வரலாற்றுப் பாத்திரம் குறித்தும் தலைகொய்யும் தீர்ப்புகளும் வழங்குவதில் முனைப்பாகவே இருக்கின்றனர்.


பாதிக்கப்படும் மக்களையும் அவர்களின் அடிப்படை ஜநாயக உரிமைகளைப் பாசிச இலங்கை-இந்திய அரசுகளோடு இணைந்து,அவர்களின் தயவோடு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடுவதாகவும் ப+ச் சுத்தும் இந்தப் பொய்யான கயமைவாதிகள் இலங்கை மக்களின் அடிப்படை வாழ் வாதரங்களோடு மட்டும் விளையாடவில்லை.மாறாகத் தேசத்தின் இறைமையுடனும் அந்தத் தேசத்துள் உயிர்வாழும் உழைக்கும் மக்களின் அனைத்துவகை உரிமைகளுடனும் தமது அரசியல் இலாபங்களைக் கூட்டிக் கழித்து வருகிறார்கள்.இவர்கள் கூறும் கருத்துச் சுதந்திரமென்பது தமது இலக்கை அடைய முனையும் கருத்துக்களைச் சொல்லக் கூடிய ஒரு ஊடகச் சுதந்திரத்தையே.


இயக்கங்களின் நலனை முதன்மைப் படுத்தும் பிரச்சாரங்களை மட்டும் முன்னெடுப்பவர்கள், தம் இலக்கை அடைவதற்காகவே பாதிக்கப்படும் மக்களின் உரிமைகளைக் கைகளில் எடுத்து வேசம் கட்டுவதென்பது இன்றைய பொழுதில் உலகம் அறிந்த விடையமாகும்.


மக்களைச் சுயவெழிச்சிக்குள் தள்ளி அவர்களால் போராட்டத்தை முன்னெடுக்கத் தடையாகவுள்ள ஒவ்வொரு நாளியும் நமக்கு ஆபத்தே!மக்களை சுயமாகப் போராடாது தடுத்துவருபவர்கள் மக்களின் விரோதிகள் என்பது நமது நிலைப்பாடாகவே இருக்கிறது.

எங்கள் மக்களின் தயவில் சாராத எந்தப் போராட்ட வியூகமும் இலங்கை-இந்தியச் சதியை முறியடித்து நமது மக்களை விடுவிக்க முடியாது.இது, நாம் அறிந்த நமது போராட்ட அநுபவமாகவே இப்போதும் விரிகிறது.நமது போராட்ட இயக்கம், நமது மக்களைத் தொடர்ந்து ஆயுதங்களால் மிரட்டிப்பணிய வைத்தபடி நமது மக்களை முட்டாளாக்கி அந்நிய சக்திக்களுக்கு அடியாளாக இருப்பதை எமது இளைய தலைமுறை நிராகரித்துத் தமது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்துப் புலிகளின் தவறுகளையும்,புலித் தலைமையைக்கொன்று அத்தலைமையைக் கைப்பற்றியச் சதிகாரக்கூட்டத்தையும் இனங்கண்டு முறியடித்தாவேண்டும். இதனூடகப் புதிய முறையில் போராட்டப் பாதைகளைத் தகவமைத்துப் புரட்சிகரமாக இளைய தலைமுறை அணிதிரளவேண்டும்.இவர்களை வழிநடாத்தும் புரட்சிகரத்தலைமை உருவாகவேண்டும்.இது,காலத்தின் தேவையாக நம்முன் இருக்கிறது.போராட்ட அணிகளைப் புரட்சிப்படையாக மறுசீரமைப்பது இன்றைய எமது இழி நிலையிலிருந்து நாம் கற்கும் பாடமாகும்.இதைப் பின்தள்ளும் புத்தி ஆபத்தானது.


இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்;களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமது மக்களின் ஆளுமை சிதறி, நாம் அழிவுற்றோம்.அன்று, ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சதிகளால் சிதைவுற்றுப் போனபின்,புலிவழிப் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும்,இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால், இன்று நமது மக்கள் தமது உற்றார் உறவினர்களையும்,தமக்காக இதுவரை களத்தில் நின்ற பல்லாயிரம் தமது குழந்தைகளையும், வாழ்விடங்களையும் பறிகொடுத்து அநாதையாகியுள்ளார்கள்.

தமிழ் மக்களது பிணம் தின்னிகளான வரதராஜப் பெருமாள்போன்ற இந்த முகமூடி மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள். நம்மை,நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை இந்தப் புலியழிப்பு யுத்த்தில்குறியாகக்கொண்டியங்கியுள்ளார்கள்.இவர்களே இறுதிவரைப் புலித்தலையை வன்னிக்குள் முடக்கிப் பிரபாகரனது குடும்பத்தையே முற்றாகக் கொன்று குவித்துள்ளனர்.இவர்கள் அனைவரும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும், அந்நியரோடு சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டார்கள்.இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை. இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.

இதற்குத் தோதான புள்ளியில் இன்றைய தலித்துவ நிகழ்வோட்டம் சந்திக்கின்றது.தமிழ்பேசும் மக்கள் சமூகத்துள் இருத்திவைக்கப்பட்டிருக்கும் இந்தச் சமூகக் காட்டுமிராண்டித்தனமான சாதியப் பாகுபாட்டிற்கு எதிரான போராட்டமானது தன்னளவில் நியாயப்பாடு கொண்டிருப்பினும் அதைத்தகவமைத்து இயக்கும் புள்ளி ஆதிக்கச் சக்திகளது நலன்வழியே உருவாக்கப்பட்டுத் தொடர்ந்து தமிழ் தேசியவுணர்வுக்கு எதிரான திசைவழியூடாகப் பகரப்படும் பல் தேசியக் கருத்தாடலானது தன்னளவில் ஒடுக்குமுறையாளரது நீண்டகால நலனோடு சமரசஞ்செய்தே மேலெழு முடிகிறது.இதைக் குறித்தான சரியான புரிதலைக்கொண்டிருப்போர் தமது அரசியல்வங்குரோத்தின்வழி இன்றைய மகிந்தாவின் மைய அரச ஆதிக்க நிலைக்கு எதிராகவெந்தத் துரும்பையும் எடுத்துப்போட வக்கற்றுத் திசையறியாதவொரு புள்ளியில் வரதராஜப் பெருமாளுக்கே காவடியெடுப்பதில் முன் நிற்கிறார்கள்.இதுவே,தேவதாசன் போன்றவர்களின் தற்கொலைப் பாதையான அரசியலைச் சமாந்திரமாகவும் இயக்கி வருகிறது.

இலங்கையில் இனரீதியாகவொடுக்கப்படும் மக்களது நியாயமான போராட்டமானதைப் பிளவுபடுத்தும் அரசியற் புள்ளியே தலித்துவ மேம்பாட்டு முன்னணியினது இன்றைய அரசியலாக விரிவுறும் அல்லது உயரும் நிலைமையாக மாற்றப்படும்போது,சாதிரீதியானவொடுக்குமுறையென்பது மீளவும் இருத்திவைக்கப்படுகிறது.அது பூண்டோடு அழிக்கப்படும் அரசியலைச் சிதைத்தபடி,சாதிரீதியாகப் பிற்படுத்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்களது பொருளாதாரச் சிக்கல்களை ஓரளவு உள்வாங்கித் தீர்மானகரமான சில முன்னகர்வுகள் பொருளாதாரவாதமாகச் சுருங்கியபடிக் கூறுபோடும் தமிழ்த் தேசியவுணர்வில், எந்த மூலையிலும் ஒதுங்க முடியாது சிங்களப் பேரினவாதத்தின் பிரதான பாத்திரத்தைப் பின்தள்ளித் தமிழ்த் தேசியவினத்தினது அக முரண்பாடுகளான பல்வேறு சிக்கல்களை மேல் நிலைக்குச் செயற்கையாக உந்தித்தள்ளுகிறது.இதைக் கவனத்தில் எடுக்காது எந்தத் தரப்பும் விடுதலையடையுமெனக் கொள்ளமுடியாது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
14.11.2010

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...