Saturday, April 02, 2005

போப் ஆண்டவரும்

போப் ஆண்டவரும்
மரணமும்!
இன்றைய பொழுதில் மரணம் குறித்த மதிப்பீடு எந்த வகைகளில் புரிந்துகொள்ள அனுமதிக்கப் படுகிறது?.மிகச் சாதரணமாகத் தினமும் செத்து மடியும் மானுடர்கள் ஒருபுறமும,; மிகப் பெரும் இழக்கமுடியாத-ஈடிணையற்ற மனிதர் செத்துவிட்டார் என்ற கருத்தியற்றளம் உருவாக்குவது இன்னொரு புறமுமாக இந்த உலகம் சாவைக் குறித்துக்கொள்கிறது!அப்பாவி ஈராக்கியக் குழந்தைகள் இன்றும் யு.838 யுரேனியக் குண்டுக் கதிர் வீச்சுக்கு இலக்காகும்போது அவற்றைப் பற்றி எந்தக்குறிப்பும் உணர்த்தாத இந்த உலகம் ஒரு அநீதியின் சாட்சியான ஆதிக்க உலகத்தின் அரசியற் தரகனதும்-ஆட்சிக் குலைப்புக்கு வழிவகுப்பானுமாகிய சகுனிக்குச் சங்கூதும்போது முழுமக்களுக்கமான இழப்பாக வர்ணிக்கும் போக்கானது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.மனிதர்கள் சதா போருக்கும்-நோய்களுக்கும்-பசிக்கும் சாகும் நிலையைத் தோற்றுவித்த இந்த அமைப்பைக் கட்டிக்காத்த இந்த அப்பட்டமான அரசியல் இடைத்தரகனுக்காகக் கண்ணீh சிந்தம் மக்கள் குழாத்தை உருவாக்கிட திடீர் வியூகம் அமைக்கப்பட்டு கடந்த சில தினங்களாகக் கண்ணீர் விட்ட ஆளும் வர்க்க ஊடகங்கள்- இன்று அவரது மரணத்தில் ஊனுருகக் கண்ணீர் விடும் கூட்டத்தை உருவாக்கி விட்ட பெருமூச்சோடு தங்கள் வியூகத்தின் ஆளுமையில் திருப்திப் பட, உலக மக்களோ கடவுளின் தூதரர் போன இழப்பைத்தாங்காது கண்ணீர் சிந்தும் பொழுதுகளாக இனிவரும் சில நாட்கள்.
அதோ அப்பாவி மக்கள் இந்த மனிதரின் இழப்பில் கண்ணீh விடுகிறார்களே! அதுதாம் ஊடக வன்முறை.இந்த ஊடகங்கள் தங்கள் நலன் சார்ந்த பரப்புரைகளை எந்த வேளையிலும் கொட்டுவார்கள்.ஆனால் ஒரு சொட்டு 'அன்ரி பாற்றிக்'மருந்தின்றிச் செத்த அந்த ஐந்த இலட்சம் ஈராக்கியப் பாலகர்களின் உயிரைக் குடித்த அமெரிக்காவின் அன்றைய வெளிநாட்டமைச்சர் போப்பின் வாசற் தலத்தில் நின்று பகிரங்கமாகக் கூறின வார்த்தை ஞபகத்திற்கு வருகிறது:'ஐந்து இலட்சம் குழந்தைகள் சாவது ஈராக் கொடுக்கவேண்டிய விலைதாம்' போப்பாண்டவனே உன் முகத்துக்கு நேரே கூறுப்பட்ட வார்த்தை இன்னும் ஒலித்தபடி இருக்கும்போது நீயோ மொழியிழந்த மானுடமாக இதை வழிமொழிந்தாய்.இப்போது உனக்காக அழத்தூண்டும் நெறி கடைந்தெடுத்த அயோக்கியத் தனமாக எமக்குத் தோன்றினாலும்- நீ மானுடர் விரோதியென்பதே தெரிமாற் போவது எந்த வகை நியாயம்?
மக்களின் நல் வாழ்வை இதுவரை முதலாளிகள் நசுக்குவதற்கு உடந்தையாகவிருந்த நீ, ஐரோப்பியத்தொழிலாளர்களை கிறிஸ்த்துவின் பெயரால் நாளுக்கு பத்துமணிநேரம் வேலைக்குத் தயார்படுத்தக் காரணமான முதலாளிய நலன் களுக்கு ஒப்புதல் அளிக்கக்காத்திருந்த உன் இழப்பு எந்த அப்பாவி மக்களுக்கும் ஒரு சிறு இழப்புமில்லை.மனிதர்களை மதவாதச் சாக்கடைக்குள் தள்ளி-இனவாத அரசியலை பைபிளுடாய் கட்டிக்காத்த அந்தக் கறைபடிந்த கொடிய மனிதனின் உயிர் அற்பமானவொரு சிறு துகளைவிட முக்கியமற்றவொன்று இந்த உலகுக்கு.மதங்களின் பால் அக்கறையுற்ற மக்களை பொருளியல் வர்த்தக நலனுக்காய் காலம் பூராகக் கண்ணீர்விட வைக்கும் ஏகாதிபத்தியங்களின் பெரு விசுவாசி இன்று பந்தி கொள்கிறார்.
02.04.2005
வூப்பெற்றால்
ஜேர்மனி -ப.வி.ஸ்ரீரங்கன்

5 comments:

Anonymous said...

,jpy; cs;sit epahakhd fUj;Jf;fs; jhk;

Anonymous said...

தங்களது பல கருத்துக்களில் உடன்பாடு சிறிதும் இல்லை. தவறுக்கு எப்போதும் ஒத்து ஊதியதாய் போப் அறியப்படவில்லை. நன்கு செய்தியும், வரலாறும் படியுங்கள். பிறகு உங்களது வாதங்களை சபையில் வையுங்கள்.

Sri Rangan said...

பொஷ்கோ வணக்கம்!ஒருவர் பெரும் நிறுவனப்பட்ட மதத் தலைவரைக் குறித்துக் கருத்து வைக்கும்போது வெறும் வதந்தியா பரப்புவார்?இந்தவேலையெல்லாம் முதலாளியக் கருத்தியல் நிறுவனங்களுக்கே சாத்தியம்-அவசியமும்கூட.உங்களின் பார்வைக்கு வரலாறு அத்தகைய கருத்தியலசார்ந்த நிறுவனங்கள் வழியே வருகிறது.நமக்கோ உண்மைகள் சமுதாயத்தின் நிகழ்வு சார்ந்த நடவடிக்கைகளோடு-மாற்றுக் கருத்துகளோடு வருகிறது.இங்கு புறநிலைகளன் தன்மையே சிந்தனைத்தூண்டுகிறதேயொழிய கருத்தியல்களல்ல!இருபத்தியோராம் நூற்றாண்டின் நகைச்சுவை எதுவென்றால் தவறுக்கும் போப்புக்கும் தொடாபு இல்லையென்பதே!தவறுக்கு அல்ல 'தவறுகளுக்கு'போப் உடந்தையானவர்.இதை மதவாதியாக இருந்த பார்க்காது மனிதராக இருந்து பாருங்கள்.இங்கு மதங்களினது வரலாறே கொலைகளும்-குருதிக் கறையும் படிந்ததே.முதலாளித்துவத்தின் பொய்குள் உங்களைப்போன்றோரின் வடிவில் மக்கள் சமூகத்துள் உலாவுகிறது.இது சாத்தான்களின் வேதமல்ல.மாறாக அடக்கப்படும் மானுடர்தம் குரல் முடிந்தால் ஆண்டைகளின் பின்னே உண்மைகளைத் தேடாமற் அவதிப்பட்ட-படும் அடிமைகளின் பின்னே தேடுங்கள்.இங்கு மேய்ப்பர்களே கொலைஞர்களாகவும்-யுத்தக்கரிமனல்களாகவும் உலாவருவார்கள்.i
சிறிரங்கன்

Anonymous said...

Please kindly change into your font

kjq;fspd; jiyik vd;gJ kf;fis mwpahikapy; itj;jpUf;fpd;wJ vd;W fUJld; mtHfis rpe;jpf;f tplhJ itj;jpUg;jpUg;gjd; %yNk jkJ jiyikia ghJfhj;Jf; nfhs;s Kbfpd;wJ. vj;jidNa r%f mikg;Gf;fs; jhz;b te;jpUf;Fk; ,t;Ntisapy; kjj;jiyik vd;gJ MSk; jiyikAld; xl;L cwthb te;jpUg;gJ rupj;jpuk;. ,jpy; Nghg; ,jw;F tpjptpyf;fy;y ez;gH $WtJ Nghy xU epWtdj;ijg; gw;wp tpkHrpg;gJ ntWk; kQ;ry; Clfq;fisg; Nghy; ngha;Guspfis ek;Gk; $l;lj;ij cUthf;Fjtw;fy;y. khwhf kf;fs; midtUk; ,e;j g++kpapNy nrhHfj;ij fhz;gJ vd;gJ midj;J cupikfisAk; ngw;W tho;tJjhd; ,yf;fhFk;. ,jid tpLj;J Ml;L ke;ijfs; Nghy kjq;fisg; gpw;gw;Wtjd; %yk; vk;kPJ rthup nra;Ak; epiyiaj; jhd; Njhw;wp tpf;fpd;wJ.
ehDk; fj;Njhypf;f gpd;Gyj;ij nfhz;l fhuzj;jpdhy; Fwpg;ghf fj;Njhypf;f kjj;ijg; gw;wpj; njupAk;. ,jpy; rpwp $Wfpd;w Fw;wr; rhl;L cz;ikahdNjahFk;. wPfd;> rp.I.v> Nghg; vt;thW nraw;gl;lhHfs; vd;gij tuyhw;iw mwpa tpUk;GgtHfs; vy;NyhUk; Njb mwpe;J nfhs;s Ntz;ba xU tplakhFk;.
,j;Jld; Clfq;fNs mtH [dehafj;Jf;fhf vt;thW ghLgl;lhH vd Gfohuk; nrYj;Jtjpy; ,Ue;J njupatpy;iyah? ,jid tpl rhl;rp Njitah?

Sri Rangan said...

கீழ் வரும் எதிர்வினையானது அநாமதேயமாக யாரோ குறித்த மேற்காணும் சிதறிய எழுத்தக்களின்
எழுத்தாக்கம்.
சிறிரங்கன்






Pடநயளந மiனெடல உhயபெந iவெழ லழரச கழவெ

மதங்களின் தலைமை என்பது மக்களை அறியாமையில் வைத்திருக்கின்றது என்று கருதுடன் அவர்களை சிந்திக்க விடாது வைத்திருப்திருப்பதன் மூலமே தமது தலைமையை பாதுகாத்துக் கொள்ள முடிகின்றது. எத்தனையே சமூக அமைப்புக்கள் தாண்டி வந்திருக்கும் இவ்வேளையில் மதத்தலைமை என்பது ஆளும் தலைமையுடன் ஒட்டு உறவாடி வந்திருப்பது சரித்திரம். இதில் போப் இதற்கு விதிவிலக்கல்ல நண்பர் கூறுவது போல ஒரு நிறுவனத்தைப் பற்றி விமர்சிப்பது வெறும் மஞ்சல் ஊடகங்களைப் போல் பொய்புரளிகளை நம்பும் கூட்டத்தை உருவாக்குதவற்கல்ல. மாறாக மக்கள் அனைவரும் இந்த பூ10மியிலே சொர்கத்தை காண்பது என்பது அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதுதான் இலக்காகும். இதனை விடுத்து ஆட்டு மந்தைகள் போல மதங்களைப் பிற்பற்றுவதன் மூலம் எம்மீது சவாரி செய்யும் நிலையைத் தான் தோற்றி விக்கின்றது.
நானும் கத்தோலிக்க பின்புலத்தை கொண்ட காரணத்தினால் குறிப்பாக கத்தோலிக்க மதத்தைப் பற்றித் தெரியும். இதில் சிறி கூறுகின்ற குற்றச் சாட்டு உண்மையானதேயாகும். றீகன், சி.ஐ.எ, போப் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை வரலாற்றை அறிய விரும்புபவர்கள் எல்லோரும் தேடி அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.
இத்துடன் ஊடகங்களே அவர் ஜனநாயகத்துக்காக எவ்வாறு பாடுபட்டார் என புகழாரம் செலுத்துவதில் இருந்து தெரியவில்லையா? இதனை விட சாட்சி தேவையா?

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...