Thursday, January 08, 2015

நாளை மகிந்தாவுக்கும் ,மைத்திரிக்கும் ஓட்டுப் போடுவோம்!


ன்றுவரை சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்குள் இன்னல் படும் தமிழ்பேசும் மக்களது பிரதான முரண்பாடு சிங்களப் பேரினவொடுக்குமுறையாகும்.அதையொட்டிய இராணுவ ஆட்சியாகும்.இதன் தெரிவில் சிங்கள ஆளும் வர்க்கமும் அதன் அரச ஜந்திரமும் பிரதான எதிரியாகவும்,சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இட்டுக்கட்டப்பட்ட  பௌத மாதவாதத்தோடான சிங்களத் தேசியப் பெருமிதமும் அதன் வழியான தமிழ்பேசும் மக்கள்மீதான சிங்களப் பாட்டாளிகளது உளவியற்றாக்குதலும்,பழிப்பும்-ஒதுக்குதலும்கூடிய பண்பாட்டு ஒடுக்குமுறையும் இரண்டாவது பெரும் முரணாகவும்,எதிரியாகவும் இருக்கிறது.தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக, மக்களின் வெகுஜனப் போராட்டத்தால் மக்களே போராட்ட அணியாக மாறிவிடுவதைத் தடுப்பதில் மகிந்தாவை ஆதரித்தும் ,மைத்திரிபால சிறீசேனாவை ஆதரித்தும் தமிழ்த் தலைமைகள் செய்யும் பெருந்துரோகம் தமிழ் மக்களுக்கானவொரு அரசியல் வெளியை இல்லாமற் செய்ததே!அடையாள அரசியலை மறுத்த  தெரிவில் தமிழ்மக்கள் தமது அரசியலைத் தீர்மானிக்கவே முடியாதபடி நம்மை அரசியல் அநாதைகளாக்கிவிட்டு, நாளை நடைபெறும் இலங்கை அதிபர் தேர்தலில் மைத்திரியின் பின்னால் நம்மை அழைத்துச் செல்லும் நரித்தனமானது, மேற்குலக நலன்கட்கமைய கணிசமானமுறையில் வியூகத்தைச்செய்கின்றனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்!

இதைவிட தமிழ்-சிங்கள இனத்துக்குள் முகிழ்க்கும் புதியவகை மாதிரியான இடதுசாரிய வேடம் பூண்ட எதிர்ப்புரட்சிகரச் சக்திகள் சுய நிர்ணயவுரிமையைச் சிறுபான்மை இனங்களுக்கு மறுப்பதன்வழி தமது இலக்கைச் சரியகவே நிலவும் ஒடுக்குமுறை அரச ஜந்திரத்தின் வியூகத்துக்கமையவும், அதன்அரசியல்ஆதிக்கத்தை நிலைப்படுத்தவும் அதிகார அமைப்பு களோடிணைத்துள்ளனர். இவர்களது அன்றைய அரசியல் தெரிவானது நாளை 08.01.2015 அன்று,  நடைபெறும்இலங்கை அதிபர்த் தேர்தலுக்கான தெரிவுகளை இலக்காகக் கொண்டிருந்ததென்பதை நாம் இப்போதாவது உணர்கிறோமா?


தமிழ்பேசும் மக்களது இயல்பு வாழ்வுக்குள்ளும்,பொருளாதாரத் துய்புக்குள்ளும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் திமிரைக் கட்டவிழ்த்துவிடும் சிங்கள இனத்தின் பாசிச வன்முறைசார்-கருத்தியல்சார் ஒடுக்குமுறையே பிராதான முரண்பாடாகவிருக்கிறது. இதுமேலும் இனங்களுக்கிடையில் இனவாத முரண்பாடாகி அரச ஆதிக்கமும்-உரிமையுமுடைய சிங்களப் பாட்டாளிகளையும் ஆட்டிப்படைக்கும்போது நம் மக்களின் பிராதான முரண்பாடு சிங்களப் பேரினவாத வொடுக்குமுறையே அன்றி முதலாளித்துவச் சட்டவாத அல்லது நல்லாட்சி-ஜனநாயக மறுப்பு முரண்பாடல்ல!


சிங்களப் பேரினவாதவொடுக்குமுறையானது வெறுமனவே சிங்கள ஆளும் வர்க்கத்தால் மட்டும் தூண்டப்படுவதில்லை.இதற்குள் வரலாற்று ஐதீக மனமும்-பெருமிதக் கனவும் சரிசமனமாகச் சிங்கள இனத்தை ஆட்டிப்படைக்கின்றதென்பதால் பெரும் பகுதிச் சிங்கள மக்களது ஒத்துழைப்புடனேதாம் சிங்கள ஆளும் வர்க்கம் தமிழ்பேசும் மக்களை வேட்டையாடுகிறது.இதிலிருந்து தப்புவதற்குத் தமிழ் பேசும் மக்களக்குள்ள ஒரே அரசியல் ஆயுதம் சுய நிர்ணயவுரிமைக்கான தொடர் கோரிக்கையும் அது சார்ந்த அடையாள அரசியல்  வெகுஜனப் போராட்டமுமே!இதைத் தடுப்பவர்கள் சிங்களப் பேரினவாதத்தை மூடி முறைத்து இலங்கையின் ஆளும் வர்கத்துக்குத் துணைபோபவர்களாக மாறுகிறார்கள்-மாற்றப்படுகிறார்கள்.இதைத்தாம் தமித் தேசியச் கூட்டமைப்பு மைத்திரியை அல்லது மகிந்தாவை ஆதரிப்பதென்ற "அரசியல்" நகர்வில் மேற்குலச் சதியின் இலங்கை முகவர் மைத்திரியை ஆதரிப்பதன் போக்கில் நாம் பலமாக வரையறுக்க வேண்டும்.இவர்கள் இப்போது தமிழ் மக்கள்சார் அரசியற் கோரிக்கை அனைத்தையும் கைவிட்டு ஜனநாயகம்,நல்லாட்சி,சட்டத்துக்குட்பட்ட அரசு என்று தமிழ் மக்களது தலைவிதியை அதே புலிப்பாணியில் முட்டுச் சந்தியில் நிறுத்தியிருப்பது தற் செயலானது அல்ல!இது திட்டமிடப்பட்ட மேற்குலக வியூகமாகும்.


தமிழ் மக்கள்மீதான சிங்கள ஆளும் வர்க்கத்தின் பல்லாண்டுகால "திமர்த்தனமான" இனவொடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் இனத்தின் இருப்புக்கும்-தற்பாதுகாப்புக்குமான ஒரே அரசியல் அயுதமாகவேதாம் சுயநிர்ணயவுரிமைக் கோரிக்கையும் அதுசார்ந்த அடையாளமும் - வெகுஜன அரசியலும் தமிழ்பேசும் மக்களது அரசியலாக வருகிறது.இதை மையப்படுத்தி இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களது வாக்குரிமையைத் தமிழ் அரசியலது அடையாள எதிர்ப்பாக்க மறுக்கும் மேற்குலக லொபி அரசியலது தெரிவே நமது சாபக் கேடாகிறது.அதை(அடையாள அரசியல்) மறுப்பதன்வழி இலங்கையின் ஆளும் வர்க்கத்தைக் காத்து, அவர்களது அடியாளகவே இந்தத் "தமிழ்த் தலைவர்களது" "வகை மாதிரி" அரசியல் இலங்கையில் சட்டவுரிமை பெற்றுச் செல்வாக்குச் செலுத்துகிறது.இதைத் தயார்ப்படுத்துபவர்கள் பெரும்பாலும் அந்நியத் தேசத்து இராஜதந்திரிகளாகவே இருக்கும்போது நாம் ஏலவே அந்நிய நலன்களுக்காகக் குருதி சிந்திய வரலாற்றின் இன்னொரு "மாதிரி துரோக அரசியலை" இப்போது காண்கிறோம்.இதுவே நமக்கு இனிவரும் காலுத்துள் மிகப் பெரும் ஆபத்தாக மாறப்போகிறது.


ஸ்ரீரங்கன்
07.01.2015

Saturday, May 24, 2014

வடக்கு ஆதிக்கம்

"வடக்கும்,கிழக்கும் "பிரிவதற்குப் புலிகளே காரணம்!

42 வது இலக்கியச் சந்திப்பு : பிள்ளையான்-கருணா கம்பனியின் பிரச்சாரகப் பீரங்கி ஞானம் தரும் மாகாணசபை குறித்த விளக்கந்தாம் என்ன-ஏன்?

லங்கை-இந்திய அரச லொபிகாளாலும் ,மேற்குலக என்.ஜீ.ஓ.களது[Non-governmental organization ] தயவில் உயிர்வாழும் தமிழ் விசமிகளாலும் நடாத்தப்பட்ட பேர்ளின் 42 வது இலக்கியச் சந்திப்பு முற்றுமுழுதும் இந்த விசமிகளாலேதாம் நிறைக்கப்பட்டது.இதை ஏலவே புரிந்துகொண்ட பலர் இதைத் தவிர்த்துக்கொண்டனர்.இந்த இலக்கியச் சந்திப்பானது அதை உருவாக்கியவர்களால் நிராகரிப்பட்டு, இறுதியாவிருந்த ஒரு சிலரும் அதைவிட்டு ஒதுங்கும் அரசியலாக இந்த இந்திய-இலங்கை லொபிகளது கை மேலோங்கி வருகிறது.

இன்று,இந்த இலக்கியச் சந்திப்பு முன்னெடுப்பும்;நகர்வும்  ஒருவரையொருவர் கேவலமாகப் பழிவாங்கும் அரசியலாக மாறியுள்ளது. புலத்தில் எல்லோருக்கும்  தத்தமது அரசியல் நலன் சார்ந்தும்-பொருள் சார்ந்தும்;இருப்புச் சார்ந்தும்  ஏதோவொரு குழுக்கட்டல் தேவையாகி,ஒவ்வொருவரும் சிறு சிறு தீவுகளாக இருந்துகொண்டே குழுவோடு ஐக்கியமாகியுள்ளார்கள். இவர்களிடம் ஒருவரையொருவர் தலைவெட்டல் நோய் அதிகரித்துள்ளதற்கான  ஆதாரமாக,பேர்ளின் "42வது இலக்கியச் சந்திப்பு" க்குச் சொந்தங்கொண்டாடும் ஜீவமுரளி, நிர்மலா,இராகவன்,ஞானம்,தேவதாசன், போன்றோரது நயவஞ்சக வலைவிரிப்பு நல்லவுதாரணமாகிறது.குழுக்கட்டல் எந்த வகையிலும் பாரிய மாற்றத்தைத் தரப்போவதில்லை. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் இத்தகைய தலித்துவ வேடாதாரிகள்-நபர்கள்-குழுக்கள் எப்போது 'நல்ல' மனிதர்களாக,முற்போக்காளர்களாக மாறினார்கள்?
இப்போதைய அவர்தம் முன்னெடுப்புகளின் அவர்தம் அரசியல் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.இவர்கள் செய்த காரியத்தால் ஞானம்போன்ற பணத்துக்கு அலையும் வேடதாரிகள் ,கொலைக்காரன் கருணாவோடிணைந்தும்,பிள்ளையானுக்கு ஆலோசகராக மாறியும் தமிழர்களது பாரம்பரிய பூமியை அந்நிய நலன்கள் துண்டாடுவதற்கிசைவாகக் கருத்தியற் பரப்புரையைச் செய்து பிரதேசவாதத்தைக் கிளறி மக்களைக் கூறு போட்டுக்காட்டிக் கொடுத்தார்கள்.இதன் தொடராக மாகாண சபைகள் குறித்தும் அதன் இருப்பு-வளர்வு குறித்தும் வகுப்பெடுப்பதில் " 42 வது இலக்கியச் சந்திப்பு", இந்திய லொபிகளது அரங்காக மாறிக்கொண்டது.இந்த, இலக்கியச் சந்திப்புக் குறித்துப் பேசுவதைவிட மாகாணசபை எனும் இந்திய நலனுக்குட்பட்ட சிங்களப் பேரினவாதத்தின் ஆதிக்கத்தை நிலைப்படுத்தும் அதன் போக்கை ஏன் ஞானம் போன்றோர் நியாயப்படுத்துகின்றனரெனப் பார்ப்பதுதாம் அவசியமானது.

வடக்குக் கிழக்கு மாகாணங்களும் அதன் வளர்ச்சிக்கும்,செயற்றிறனுக்கும் ,முன்னேற்றத்துக்குமென வகுப்பெடுக்கப்படும் கருத்துக்கள் இலங்கை இனங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாட்டைக்குறித்து ஒரு மொன்னைத் தனமாக விளக்க முற்படுகிறது.

இலங்கைப் பேரினவாத அரசியலது கையாலாகாத்தனம் இலங்கைச் சிறுபான்மை இனங்களை மொட்டையடித்த வரலாறு இனங்களுக்கிடையிலான மூலதனத் திரட்சி-மற்றும், பொருளாதார நலன்சார்ந்த முரண்மிக்க அரசியல் உரிமைவழி கட்டப்பட்டதெனினும் இனத்துவ அடையாள அரசியலானது அன்றைய காலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையின் முழுமொத்த மக்களையும் காலனித்துவத்தின் பின் விளைவுகள் குறித்துச் சிந்திக்காதிருப்பதற்காகக் கட்டப்பட்டது.இதைச் செய்த பிரித்தானியக் காலனித்துவாதிகள் நமக்குள் இன்றும் தமது சிந்தனைவழி நம்மை கூறுபோடுவதில் நவ காலனித்துவத் தொடராக வெளிப்படுகின்றனர்.ஆனால், அவர்களது முகங்கள் நமது முகத்தோடு மேலெழுவதைக் குறித்துப் பேசியாக வேண்டும்.சந்தர்ப்பம் வரும்போது இது குறித்து விரிவாகப் பேசப்படவேண்டும்.ஏனெனில், 'வடக்கு ஆதிக்கம்-யாழ்பாணியம்' எனும் உளவியற் கருத்தாக்களது அரசியலானது அன்றைய காலனித்துவத்தின் வார்ப்புக்குள் உருவாக்கப்பட்ட அரசியலென்பதைக் குறித்து நீண்டவுரையாடலைச் செழுமையான மொழிவழியாகக் குறித்தாக வேண்டும்.

பண்டா-செல்வா, டட்லி-செல்வா, ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தங்களுக்குள் முக்கியமாகப் பேசப்பட வேண்டியது ஸ்ரீமா-சாஸ்த்திரி ஒப்பந்தமே.இதுதாம் "தமிழர்களது உரிமையைத் தமிழர்களை வைத்தே துவசம் செய்ததன் முன்னோடி" ஒப்பந்தம்.

இத்தகைய ஒப்பந்தங்கள் குறித்துப்பேசும் ஞானம் அரசியல் அநாதையாக இந்தியப் பிராந்திய நலனை எமக்குள் திணிப்பதில் கருத்தற்றவொரு கோழைத்தன அரசியலைப் பேசுகிறார்.

ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் என்பதைப் புரிந்துகொள்ள முனையும் ஒரு அரசியல் மாணவனுக்கு இந்தப் பிரச்சனையின்(மலையக மக்களுக்கான குடியுரிமை நீக்கம்)முக்கிய கூறு பார்ப்பனியம் போற்றும் இந்தியத் தேசத்தினது சதியென்பதையும்,அதற்கான காரணம் இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கத்தைத் தனது கைகளுக்குள் வைத்திருந்து தமிழரை கருவறுக்கவுமான பிராந்தியப் புவிகோளரசியலின் பிரதிபலிப்பு-அபிலாசை என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.

இலங்கையின் இடதுசாரிகளின் [குறிப்பாக JVP ]வரலாற்றில், அவர்கள் செய்த மாபெரும் துரோகம் மலையமக்களை 'இந்தியாவின் விஸ்தரிப்புக்கு உழைக்கும் கைக் கூலிகள்'என்று காட்டிக் கொடுத்தது.

அன்றைக்கே மார்க்சியப் பார்வையற்ற இந்த இடதுசாரிகள் சிங்களப் பூர்ஷ்சுவாக்களின் கைகளைப் பலப்படுத்தியதன் விளைவு இன்றைக்கும் சிங்களப் பாசிசத்தைக் காப்பதற்குத் துணைபோனபடி.1949இல் கொண்டுவரப்பட்ட பிராஜவுரிமைச்சட்டம் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் முழு நிறைவுகண்டது.

இவ்வொப்பந்தத்தைச் சட்டமாக்குவதற்கு நடந்தேறிய அரசியல் கூட்டுக்கள்,டட்லி-செல்வா ஒப்பந்தங்கள்,கூட்டரசாங்கத்தில் பங்குகொண்ட தமிழ் அரசியல் வாதிகளின் பதவி ஆசைகள்,அவர்களுக்கு இந்தியா ஆசைகாட்டிய முறைமைகள் யாவுந்தாம் காரணமாகிறது.இதையெல்லாம் மறைத்தபடி எவனொருவனால் மாகாணசபை குறித்து விவாதிக்க முடியும்?அதன் தோல்விக்குப் புலிகள்மட்டுமே காரணமென்றும், மாகாணசபைகளது அபிவிருத்திக்கும் அதன் வாயிலாக இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்துள் பங்குறுவதாலும் தமிழ்பேசும் மக்களுக்கும் மற்றும், இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கும் அதன் தெரிவில்-பங்கு பெறுதலில் உரிமைகள் பெறும் வாய்பு அதிகமெனவும் எந்தவொரு மூடனாலும் ஞானம்போல் விவரிக்க முடியாது.

இதிலிருந்த நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்.தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்தவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான பூர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை.ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் இன்று நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது.இத்தைகய வலையில் பொருட் குவிப்புக்காக ஞானம் போன்ற இளைஞர்கள் பலியாகியதுதாம் நம் காலத்துத் துர்ப்பாக்கிய நிலை!இதுதாம் இந்தியப் பார்ப்பனியத்தின் வெற்றி.அதன்ஆதிக்கமானது இந்திய ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தோடு பின்னப்பட்டது.இதை இந்தியா திணித்த மாகாணசபை மற்றும் அதன் அடித்தளமான ஒப்பந்தங்கள் வரை நாம் அறிய முடியும்.

1949 இல் கொணரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டம் 10 இலட்சம் மலையக மக்களை நாடற்றவர்களாக்கியதற்காகவும், பொன்னம்பலம் அதை ஆதரித்தார் என்பதற்காவும் அன்று அக்கட்சியைவிட்டு வெளியேறிய செல்வா, தமிழரசுக்கட்சியை அவரது சகாக்களுடன் அமைத்தபோது உண்மையில் அக்கட்சி மாபெரும் இயக்கமாக மாறியது.ஆனால், அக்கட்சி 1965 ஆம் அண்டில் ஐ.தே.கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்ததே அங்கேதாம் தவறும்,அரசியல் வெகுளித்தனமும் தொடங்குகிறது.இதுதாம் அந்நிய அரசுகளதும் குறிப்பாக, அமெரிக்க வல்லாதிகத்தின் தெரிவில் லொபிகளாக மாறிய தமிழ் அரசியற்றலைமைகளைக் குறித்துப் புரியும்போது இன்றைய பிள்ளையான்-கருணா கம்பனியின் சேவகர் ஞானத்தையும் அவரது கருத்துக்களையும் நாம் இலகுவாகப் புரிய முடியும்.

அன்றைக்குத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதியாக எம்.திருச்செல்வமும்,தமிழ்க்காங்கிரசு சார்பில் எம்.சிவசிதம்பரமும் சபாநாயகராக இருந்து நமது தலையில் நெருப்பை அள்ளிப்போட்டது உண்மை.இங்கேதாம்  ஞானத்தின் எஜமானர்களான கருணா-பிள்ளையான் போன்றவர்களது இந்தியக் கைக்கூலித்தனத்தின் அரசியலையும் ,திருவாளர் ஞானம் அவர்களுக்காகப் பேசும்-பிரச்சாரப்படுத்தும் மாகாண சபைகளது அரசியல் நியாயமும் புட்டுக்கொண்டோடுகிறது!

தமிழ்பேசும் மக்கள் எப்போதும்போலவே நடாற்றில் கிடக்க,இந்தத் தலைமைகள் வழமையாக மக்களைக் குட்டிச் சுவராக்கினார்கள் -தற்போது அதேயேதாம் இத்தகைய ஆயுத மாபியாக்களும் -அராஜகக் குழுக்களும் செய்து வருகின்றனர்.இதை அனுமதித்து, இத்தகைய அரசியலை செய்யத் தூண்டும் இந்தியப் பிராந்திய நலன்சார்ந்த இந்திய அரசினது அரசியல் வியூகமானது சாரம்சத்தில் இலங்கைத் தேசத்தின் இறையாண்மை மீதே தனது அரசியலை முன்னெப்போதுமில்லாத அதீத அழுத்தத்தோடு விரித்து வைத்திருக்கிறது.இதை மறைத்து, இலங்கை மாகாண சபையானது மக்கள் உரிமைபெறும் வழிமுறையென வகுப்பெடுப்பது, இலங்கைப் பாராளுமன்றத்துக்குள் பிரச்சனையின் தீர்வு இருப்பதென்று வகுப்பெடுப்பதைப் போன்றது.

இங்கே, இனவுணர்வென்பது ஓட்டுக்காகவே தவிர உரிமையை வென்றெடுப்பதற்கானதல்ல.இதுள் பாதிக்கப்படுவது மலையக மக்களாக இருந்தாலென்ன இலங்கைப் பூர்வீகத்தமிழரென்று குறிப்பிடும் மக்களாக இருந்தாலென்ன-எல்லோரும் ஒரு நிலமைக்குள்தாம் அன்று இருந்தார்கள்.மாறி மாறி ஆசிட்சிப்பீடம் ஏறும் அரசுகளோடு இந்தத் தலைமைகள்(தொண்டைமான் உட்பட)கூட்டு வைத்துத் தத்தமது பதவிகளை காத்ததென்பது இந்த அமைப்பில் மிகச் சாதரணமானது.ஏனெனில்,இத்தகைய தலைமைகளில் எவர் மக்கள் நலனில் அக்கறையோடு-மக்களுக்காக அரசியல் செய்கிறார்கள்?வடக்கையும்,கிழக்கையும் பிரித்த அமெரிக்க விருப்புக்குட்பட்ட தெரிவில் அண்மித்திருந்த இந்திய-இலங்கை அரசுகள் வடக்கையும்,கிழக்கையும் உணர்வு ரீதியாகவும்,சட்டரீதியாகவும் பிரிக்க முற்பட்டபோது அதைக் கிழக்குக்கு வசந்தமென வகுப்பெடுத்தும்,கிழக்கில் வடமாகாணத்து மக்கள்மீதான கலவதை;தைத் தூண்டியும்,வடக்கின் ஆதிக்கத்துக்கெதிரான நடவடிக்கை இதுவெனவும் பரப்புரை செய்த ஞானம் போன்றவர்கள் இப்போது புதிய கதை விடுகிறார்கள்.

வடக்கும்,கிழக்கும் பிரிவதற்குப் புலிகளே காரணமெனவும்,அன்றை வடக்குக் கிழக்கு மாகாணசபை இயங்கியிருந்தால் இது சாத்தியமின்றிப் போயிருக்குமென விளக்கும் அரசியலானது, இந்திய விஸ்த்தரிப்பை இயங்க அனுமதித்திருப்பது குறித்து பேசுகிறது.இந்தியாவின் பிராந்திய நலனுக்காக இலங்கைப் பேரினவாதத்தால் நசுக்கப்படும் ஒரு இனம் தனது ஐதீக உரிமையைக்கூட விட்டுவிட வேண்டுமென்கிறார் ஞானம்.மிகப் பெரும் அரசியல் பிழைப்பு வாதியாக மாறிய ஞானம், மிக ஆபத்தான அராஜகக் குழுவின் பிரச்சாரப் பீரங்கியாகவிருந்து நடந்து முடிந்த "42 வது இலக்கியச் சந்திப்பில் " இதையே தொடர்கிறார்.தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பௌத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்தியப் பிராந்திய நலனும் இவர்களுக்கு இப்போது தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!இதற்காக நமக்குள் சாதியப் பிளவுகளையும்,பிரதேச வாதத்தையும் கூர்மைப்படுத்திச் செயற்கைய மக்களைப் பிளந்து அவர்களது உரிமைகளுக்கு வேட்டு வைப்பதிலிருந்து தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக்குழுக்களும், கழகங்களும்,தனி மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் நியாயமான வடக்குக் கிழக்குப் பாரம்பரிய நிலப்பரப்பையும் அதன்வழியான சுயநிர்ணய வாதத்தையும் கொச்சைப்படுத்தி,அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டியுள்ளார்கள்.

இதற்கு இந்த தலித்துவக் காரர்களும்,இலக்கியப் பசப்பாளர்களும்,எக்ஸ்சில் ஞானம்போன்ற அதி சதிகார இயக்க அராஜகவாதக்கூட்டணியும் என்று, எல்லோருமே பொறுப்பாளர்கள்.இவர்களை வரலாறு என்றைக்குமே மன்னிக்காது!ஒருபக்கம் புலிப்பாசிசமும் மறுபக்கம், இந்த அந்நிய நலனது கூஜாத் தூக்கிகளுமாக இலங்கைப் பாசிச அரசின் காலடியில் இலங்கைச் சிறுபான்மை இனங்களை வீழ வைத்து அடிமையாக்கினர்.

இவர்கள் பேசும் தலித்துவம்கூடப் பிழைப்புவாதம் என்பதற்கு இவர்கள்பேசும் மாகாணசபையை உருவாக்கத் துணை புரிந்த இந்தியாவின் தலித்துகளின் நிலைமையே சாட்யானது!இங்கு திருமாவளவன் வகையறாக்களது அரசியலது விருத்தியே இலங்கையிலும் ஒரு மொன்னைத் தனமான தலித்துவக் குழுக்கள் இந்தியப் பிராந்திய நலனின் பொருட்டு உருவாக்கப்பட்டார்கள்.

இன்றைய இந்தியாவில் 237 மில்லியன்கள் மக்கள் நடுத்தெருவில் காலம் தள்ள-தீண்டத்தகாதவர்களாக இருத்திவைக்கப்பட்டுச் சுரண்டப்படும்போதும்,அந்த மக்களைக் காவு கொள்ளும் அரசியலானது அரசியல்வாதிகளைக் கோடிஸ்வரர்களாக்கியுள்ளது. இது எப்படிச் சாத்தியமாகிறது? ஏனிந்த மக்களுக்கு வாழ்வாதாரவுரிமை இந்தியாவில் கிடையாது? இந்தியக் குடியுரிமை இருந்துவிட்டால் சகலதும் சரியாகிவிடுமா?அல்லது, கூட்டாக'ஜன கண மண்ணாங்கட்டி...'பாடினால் இந்தியர்களாகிவிட முடியுமா?

மனிதர்களைக் கூறுபோட்டுக் கொல்லும் ஒரு சாதி அரசியலுக்கும்,அந்த அரசியலால் எழுந்த சட்ட நிர்ணயங்களுக்கும் இவற்றால் பாதுகாக்கப்படும் இந்திய பொருளாதாரத்துக்கும் எந்த மக்கள் நலனும் கிடையாது.

இதை இலங்கை அரசியலுக்குள்ளும் பொருத்திப் பார்க்குமிடத்தில் 'துரோகம்'குறித்த குழப்பம் நீங்கி,மக்கள் நலனோடு முன்னெடுக்கும் அரசியல்-அமைப்புகள் விருத்தியாகும் அவசியம் புலப்படும்.

இதைவிட்டு யாழ்ப்பாணத்தான் துரோகமென்ற மொன்னைத்தனமான விவாதம் உருப்புடியாக எதையுஞ் செய்யாது.மாறாக,இன்னும் காழப்புணர்வைக் கொட்டி இந்திய இலங்கை அரசுகளுக்குச் சேவை செய்வதில் உச்சம் பெறும்.

வடக்கு ஆதிக்கம் என்பதன் சமூக உளவியலுக்குள் கட்டி வளர்க்கப்படும் இந்திய-பார்ப்பனிய அரசியல் ஆதிக்கமானது இலங்கைப் பேரினவாதவொடுக்குமுறைக்கு மறைமுகமாகத் துணை போவதென்பதிலிருந்து இந்திய ஆளும் வர்க்க நலனை இலங்கையில் அடைய முனைவாதாகப் பார்க்கப்பட வேண்டும். அதுள், ஞானம் போன்றவர்களது ஏஜமானர்களான கருணா-பிள்ளையான் கம்பனியானது அவர்களது சட்டபூர்வ அடியாட்கள் மட்டுமல்ல மாறாக, இலங்கை மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் எதிர்ப் புரட்சிகரச் சக்திகளென்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
24.05.2014

Sunday, February 16, 2014

தலித்துத் Theva Thasan : கவுண்டமணி் . வடிவேல் எந்த முலைக்கு...

காண்பதிலுள்ள காணாததைக் காண்போம்:


Theva Thasan : கவுண்டமணி் . வடிவேல் எந்த முலைக்கு [ அஃது முலையில்லை - "மூலை"  என்று புரியுங்க மக்காள்] தூக்கிச்சாப்பிறாரு சீமான் பிணத்திலும் அரசியல் பிழைப்பு நடத்தும் பிணம்தின்னிகள்....
"முற்றத்து வாழை குலையீன
    முத்தனும் பெண்டிலுங் கூத்தாட"


இடையீடு: முப்பதாண்டு ஈழப் போருக்குப் பின்னே முள்ளிவாய்க்காலில் "ஈழத்துக்கு"அந்தியேட்டி செய்த கையோடு யாழ்ப்பாண இராஜ்சியத்தின் கல்வெட்டு இப்படிச் செதுக்க :


"Ich glaube an die Sonne,auch wenn sie nicht scheint.
     Ich glaube an die Liebe, auch wenn ich sie nicht spüre.
Ich glaube an Gott,auch wenn ich ihn nicht sehe."


- Unbekannt [Quelle: Jüdische Inschrift im Warschauer Ghetto]


 "சூரியன் பிரகாசிக்காதபோதும் நான்  சூரியன் இருக்கிறதென்பதாகவே நம்புகிறேன்.

   அன்பின் தடையமே அற்றிருக்கும்போதினுங்கூட நான் அஃதிருப்பதாகவே நம்புகிறேன்.

   தெய்வத்தை நான் தரிசிக்காத[காணாத] போதிலும் தெய்வமொன்றுண்டென்று நான்  நம்புகிறேன்."

 -யாரோ

[வார்சோவின் கெற்ரோவெனும்  போர் வலிமிகு அச்சம் -வரலாற்றுக் குறிப்புள் எழுதப்பட்ட யூதக் கவிதை ]

 பொழிப்புரைத்தலோடு பொல்லாங்குரைத்தல் இது : "Warschauer Ghetto" என்பது, இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் போலந்துத் தலைநாகரான வார்சோவில் வாழ்ந்த யூதர்களது குடியிருப்புப் பகுதி.அதை, இப்படியேதாம் யேர்மனியக் காரியாலயங்கள் அழைத்தன.இருந்தும் ,இக் குடியிருப்பை நாசிகளே உருவாக்கினர்.பரந்துபட்ட போலந்து மக்களிடமிருந்து தனிமைப்படுத்திக் குவித்து வைத்திருந்த யூதர்களை ,இலகுவாக அடையாளம்கண்டு, கொல்லும் தந்திரமாகவிதிருந்தது.

பொல்லாங்கு : இதைத் தாம் சிங்கள அரசும் இலங்கையில் தமிழர்களை அழிப்பதற்காக அவர்களையும் வன்னிக்குள் தனிமைப்படுத்தி ,முள்ளி வாய்க்கால்வரை துரத்தியடித்துத் துன்படுத்தியும், வருத்தியும் கொலை செய்தது.


இந்தவகைக் கொலை செய்த  பாசிச இலங்கை அரசைத் தலித்துவ முன்னணி(புலம்) தலைவர் தேவதாசன் மெச்சிக் கூத்தாடி வரவேற்றார்.

தமிழர்களைப் பயங்கரவாதப் புலிகளெனச் சொல்லிச் சிங்கள அரசு அழித்தபோது அதை, சனநாயகத்தின் முன்னெடுப்பென்றும் தேவதாசன் டான் தொலைக்காட்சியில்[Dan Tv]  20.12.2009 ஆண்டு நேரடியாவுரைத்தார்.

யாழ்ப்பாணியச் சமுதாயத்தின் சாதியவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்துக்கு"தலித்து"எனும் சாதி ரீதியாக ஓடுக்கப்பட்டவர்களுக்கான அடையாளங்கொண்டு போராட வேண்டுமென்று தீர்மானித்துள்ள தேவதாசன், அன்றைய பேட்டியில் தலித்துவ மக்களுக்கான குரலைத் தாண்டியும் பொதுவான அனைத்துச் சாதிகளையும் உள்ளடக்கிய தமிழ் இனத்தின் பிரச்சனைக்கும் தீர்வொன்றைச் சொன்னார்.அவரது அக் கருத்தின் மூலமாக எனக்குள் இன்றும் கேள்விகள் எழுகிறது.அவை யெனது  நியாயத்தில் ,தேவதாசன் கொண்டிருக்கும் அரசியலின் போக்குகளை மதிப்பீடு செய்வதற்குத் தேவதாசனின் ஒவ்வொரு அரசியல் மற்றும் , கருத்துரைப்பு நகர்வுகளிலிருந்து முனைகிறது.

சாதிய ஒடுக்குமுறையென்பதை உடைத்து, அம் மக்களுக்குச் சம அந்தஸ்த்தைப் பெறுவதற்குத் " தலித்து"  எனும் அடையாளமும்,சாதிகள் குறித்த அடையாளமும், இப்போதும் அவருக்கு அவசியப்படும்போது தேவதாசன் அதைத் தமிழ்த்தேசிய இனத்தின் பிரச்சனையில் பொருத்தத் தவறிவிடுகிறார்(தமிழ் - இனம் -என்றவொன்றில்லையோ?).
 
இலங்கையில், தமிழ்பேசும் மக்களது பிரச்சனைகளுக்குத் தமிழ்பேசும் மக்கள் "இலங்கையர்" என்ற பதத்தின் மூலம் நாட்டை முன்னேற்றும்படி அறை கூவலிடுகிறார்.நாட்டைத்தான் சொல்கிறார்(அந்த நாட்டுக்குள் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்கள் குறித்து "இலங்கையர்கள்" என்றவுடன் அவர்களது பிரச்சனை தீர்கிறது).

நல்லது!
 
இதன்வழி,"சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை இல்லை"  என்று சொல்கிறீர்களென நாம் எடுப்பதற்காக உங்களது வாதத்தில் "காணப்படுவதற்குள் காணாததை"த் தேடிப் பார்க்கின்றோம்.

அங்கே: -

இலங்கையை ஆளும் மகிந்தாவின் தலைமையை ஏற்று,அவருக்கு நன்றி சொலவும் , உங்களால் முடிகிறது.

இந்த நன்றி, "புலிப் பாசிசத்தை" அழித்ததென்பதற்கெனவும் சொன்னீர்கள்.அதுவும் ,பறுவாயில்லை. நீங்கள் ஜனநாயத்தின்மீது கொண்டிருக்கும் பற்ருறுதியின்பொருட்டு இது சாத்தியமே.
 
ஆனால்,இலங்கையினது ஆளும் வர்க்கத்தால் காலாகாலமாக ஒடுக்கப்படும் இலங்கையின் சிறுபான்மை இனங்கள், தம்மைத் தமிழர்களாகவும்,முஸ்லீம்களாகவும்,மலையகத்தவர்களாகவும் அடையாளப்படுத்துவதை மறுத்து, இலங்கையர்களெனச் சொல்வது எங்ஙனம் சாத்தியமாகியது -உங்களுக்குத் தேவதாசன்?; இஃது, பிணந்தின்னும் மனத்துள் அடங்கதோ?
 
இலங்கை அரசினது சிங்கள இனவாதமும் அதன் இனவொடுக்குமுறையும் சட்டரீதியாக நியாயப்படுத்தப்பட்டு, இலங்கையில் தமிழ்பேசும் மக்களை அது வேட்டையாடி வரும்போது,இந்த இனவொடுக்குமுறைக்கும் , சாதியவொடுக்குமுறைக்கும் நீங்கள் கருத்துக்கட்டும் தளமே உங்களைச் சந்தர்ப்பவாதியாகவும்,மகிந்தாவுக்கு வக்கலாத்துவேண்டிப் பிழைக்கும், பிழைப்பு வாதியாகவும் -பிணந்தின்னும் "Cannibalist Manifesto" வரைஞராகவும் உங்களை ,நமக்குள் அன்றுமின்றுமென்றும் அறிமுகஞ் செய்கிறது- இன்னுஞ் செய்யும்?

பல்லாயிரக்கணக்கான மக்களைக்கொன்று குவித்த சிங்களப்பாசிச அரசையும் -மகிந்தாவையும் பாராட்டி,"சனநாயகத்தை"மீட்ட புரவலரென நீங்களுரைத்தபோது இல்லாத இந்தப் பிணந்தின்னும் மனநிலை, உங்களைத் தவிர்த்த மற்றவர்களுக்கு  இருக்கென்பதில் எனக்குக் குழப்பமாகவிருக்கிறது.

//  Theva Thasan : கவுண்டமணி் . வடிவேல் எந்த முலைக்கு தூக்கிச்சாப்பிறாரு சீமான் பிணத்திலும் அரசியல் பிழைப்பு நடத்தும் பிணம்தின்னிகள்....//

முள்ளிவாய்க்காற் குருதி சிவந்த மண்ணுலர்வதற்குள் நீங்கள் வாசுதேவ நாணயக்காராவின் முதுகைச் சொறிந்தபடி மகிந்தாவுக்கானவுங்கள் கரச் சேவையைக் குறித்து,"நாம் இலங்கையர்கள் என்று உணர்ந்துகொண்டு இலங்கையை உயர்த்தவேண்டும் " என்றீர்கள்.

தமிழர்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லையுமென்றீர்கள்.

வேளாளரால் ஒடுக்கப்படும் "தீண்டத்தகாதவர்கள்" என்றுரைக்கப் படும் "தாழ்தப்பட்டவர்களை" விடுவிப்பதற்கு அவர்கள் ,தம்மைத் தலித்தென்று பிரகடனப்படுத்த வேண்டும் என்றீர்கள்.

ஆனால் ,சிங்களப் பாசிச அரசால் தமிழர்கள் என்பதற்காகவொடுக்கப்படும் முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களையும் "தமிழர்கள்"என்று அடையாளப்படுத்தித் தமிழ் பேசுபவர்கள் தம்மைத்தாம் விடுதலை செய்வது  நியாயமற்றதென மறுத்து ,"இலங்கையர்கள்"என்றுரைக்கும்படி சிங்கள அரசாகவே நீங்கள் உரைத்து, அவர்களை உதைக்கும்போது இல்லாதவிந்தப் பிணந்தின்னும் பிழைப்பு, எப்படிச் சீமானுக்கும் -காசி ஆனந்தனுக்கும் வந்ததென்று ஒரே குழப்பமாகவிருக்கிறது தேவதாசன்!

"சூரியன் பிரகாசிக்காதபோதும் நான்  சூரியன் இருக்கிறதென்பதாகவே நம்புகிறேன்.
   அன்பின் தடையமே அற்றிருக்கும்போதினுங்கூட நான் அஃதிருப்பதாகவே நம்புகிறேன்.
   தெய்வத்தை நான் தரிசிக்காத[காணாத] போதிலும் தெய்வமொன்றுண்டென்று நான்  நம்புகிறேன்."

உண்மையில்,எனக்குத் தேவதாசனது"பிணந்தின்னி"த் தத்துவமானது 1930 களில் நாசிகளது பாலர் பாடசாலையில் பாடப்பட்டவொரு பாடலை ஞாபகப்படுத்துகிறது.

„Händchen falten-
 Köpfchen senken
 immer an den Führer denken.
Er gibt euch euer täglich Brot
und rettet euch aus aller Not.“ 

"கைகளைக் கட்டுங்கள்
தலைகளைத் தாழ்த்துங்கள்
எந்நேரமும் தலைவனையே நினைத்திருங்கள்
அவரே உங்களுக்கான நாளாந்த உணவைத் தருகின்றார்
அத்தோடு உங்களை அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் காத்தும் வருகின்றார். "

இதைத்தாம் எல்லாப்பாசிசவாதிகளுமே கட்டளையாகவிடுகின்றனர்.அது நாசிகளாகட்டும் இல்லைச் சிங்கள இனவாதிகளாகட்டும் இவைகளும் தேவையில்லை -ஏன் நம் "தமிழ்த் தேசிய வாதிகளாகட்டும்" எல்லோருமே ஒரு திசையிற்றாம் காரியமாற்றுகின்றர்.

எனது கேள்வியெல்லாம்,இதுள் :


"எந்தப் பாசிசவாதிகளுக்காக நீங்கள் ,தலை தாழ்த்திக் கைகட்டி அவர்தம் நாமம் நினைத்து ,நாளாந்தவுணவுக்காகப் "பிணந்தின்னும் " தத்துவம் உரைக்கின்றீர்கள் -தேவதாசன்?

-ப.வி.ஶ்ரீரங்கன்
16.02.2014

Monday, December 02, 2013

(இ)லீனா மணிமேகலைக்கு "எவர் " காட்டுவார் "ஆதாரம்"?

"சிங்கள-இந்திய ஆளும் வர்க்கங்கள் "ஈழத்தில்" நடந்த இந்திய-இலங்கை-அரசுகளினது யுத்தக் குற்றத்தை மறைப்பதற்கெடுக்கும் முயற்சியில் தமிழ்த் தலைமைகளையே தமது நோக்கிற்கிணங்கச் செயற்பட வைப்பதற்கும்,அவர்கள் வாய்மூலமே ஆளும் மகிந்தாவினது அரசை மற்றும் தென்னாசியப் பிராந்திய மேலாதிக்க இந்திய ஆளும் வர்கத்தின் கொடிய மனிதவிரோதச் செயற்பாடுகளை  மெச்சவும் அரசியல் -உளவுப் படைகளை முடுக்கிவிட்ட இன்றைய நிலையுள், இந்திய ரோவானது பல உப கூலிகளைக் கிழ்வரும்படி தகமைத்து இயக்குவது பரவலாகப் புரியவேண்டும்.

ஒரு நோக்கு நிலைக்குட்பட்டு  பல்வேறுபட்ட செயற் தளத்தில் தத்தமக்கான கூலிகளை ஏற்படுத்தியிருப்பதை இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட இலங்கையின் இற்றைவரையான அரசியல் போக்கில் பலரது புதிய-பழைய வருகையும், புலிகளுக்குள்ளிருந்து புறப்பட்ட "கலைஞர்கள்-படைப்பாளிகள்-விமர்சகர்கள்" வரையும் கூடவே, இந்தியாவின் அரசியலுக்குத் தகவமைக்கப் போதாதெனப் தமிழக்கத்துப் பல "புரட்சியாளர்கள்-குறும்படக் கோணங்கிகளென" க் கூடிக்கொண்ட அரசியல் அரங்கில், இந்தச் சுண்டங்காய்ப் பெண்ணு, லீனா மணிமேகலை போடும் தனது தனிப்பட்ட"மானப் பிரச்சனை" இந்தியாவால் ஈழத்தில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்களது உயிருக்கான நஷ்ட்ட ஈடு கோரிக்கொள்ளும் யுத்தக் கிரிமனல்களாகவிருக்கும் இந்திய-இலங்கைத் தலைவர்களை எந்தக் கோட்டில் நீதிக்காக அழைத்துக்கொள்ளாலாம்?

லீனா மணிமேகலை கட்டியமைக்கும் "தூய படைப்பாளி",மற்றும், வேலைக்கான ஊதியம் பெற்றுச் செயற்படும் அவரது "நாணயம்" தனிப்பட்ட தொழில் ரீதியான முனைப்பு-ஆளுமை-செயற்பாடென்பது வரைப் புடுங்கி அடுக்கும் மணிமேகலை ,ஈழத்தில் ஒரு தேசியவினத்தின்மீதான படுகொலை அரசியலைச் சுற்றிக் கட்டிப்போடும் படைப்பு இரகசியம் வெறும் மனிதாபிமானமெனும் போக்கில் வரலாற்றைப் பதிந்துவிடத் துடிக்கும்-தவிக்கும்  ஆளும் வர்க்கத்துக்கான கரச் சேவைக்கு "ஆதாரம் இருந்தால் காட்டு,இல்லையோல் மான நஷ்ட ஈட்டு வழக்குத் தொடுப்பேன்"  என்ற அரசியலுக்குள்  இந்திய ரோவினது நல்ல பிற்புலம் -ஒத்துழைப்பு இருக்கத்தாம் வேண்டும்.


உலகெல்லாம் வேவு பார்த்தும், பல நூறு உலகத் தலைவர்களை ஒட்டுக்கேட்டும் அம்பலப்பட்டுப்போன அமெரிக்க ஏகாதிபத்தியமோ"எங்கே ஆதாரம் இருந்தால் காட்டு"என்று திமிர்த்தனமாகப் பாதிக்கப்பட்ட தேசங்களைப் பார்த்துக் கேட்பது போன்றுதாம் இந்திய ரோவுக்குப் பின்னால் ஒழிந்து "கலைப் படைப்பு-எதிர்ப்பு அரசியல் படம்"பண்ணும் லீனாவினதும் குரலும் ஓங்கியொலிக்கிறது.

இந்த, இந்திய ஆளும் வர்க்கத் திமிருக்கு முட்டுக் கொடுக்க-ஒத்தூதவொரு கைப் பாவைகளை ஏலவே ஈழத்தில் தயாரித்த இந்தியா வரதராஜப் பெருமாளையும் ,ஆயுதக் குழுக்களையும் மட்டுமல்ல புலிகளுக்குள்ளும் பற்பல இந்தியக் கூலிகளை அது உருவாக்கியதுள் முள்ளி வாய்க்கால் படுகொலை நிகழ்வுக்குப் பின் ஓங்கியொலிக்கும் புலிக் "கலைஞர்கள்-படைப்பாளிகள்-விமர்சகர்கள்" என்போரெல்லாம் இந்த இந்தியக் கைக்கூலிகள் என்பதுமட்டுமல்ல புலத்திலும் இவர்களுக்கொப்பானவொரு குழுவை இந்திய-இலங்கை உருவாக்கி அவர்களைப் "புரட்சிக்காரர்கள்-மாற்றுக் கருத்தாளர்கள்-ஜனநாயக வாதிகள்"எனும் முகமூடி போட்டு அழகு பார்த்து இயக்கிக்கொண்டிருக்கிறது.

இந்திய ரோவுக்காக "எதிர்ப்பரசியல் படம்"காட்டும் லீனா மணிமேகலையின் உடலில் சிறு துரும்பு  உட்கார்ந்தாலும் அதை தட்டித்  தூய்மைப்படுத்தப் புலத்திலொரு கூஜாத் தூக்கிக் கூட்டத்தையும் தயாரித்த பின் இந்தியப் பிராந்திய நலனின் அரசியலானது "ஈழத்தில்"அருமையானவொரு தீர்வாகவும்,ஜனநாயகத்தேவையாகவும் படம் காட்டும் பல வரதாராஜப் பெருமாள்கள் ஈழத் தேசத்துள் இப்போது மலிந்துவிட்டபோது, லீனா மணிமேகலைக்கேது தயக்கம்-அச்சம்- இலங்கை சென்று "எதிர்ப்பரசியல்"படம் பிடிக்க?

இந்தத் தளத்தைப் புரியாதவரை நாம் லீனாவின் சேட்டைக்கு அஞ்சி அழுது புலம்ப வேண்டியதுதாம்!

இவை குறித்தெல்லாம் எப்போதாவது நாம் புரிந்துகொண்டோமா?
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்,மிக எளிமையான சொல்லாடல்கள் மூலம் ஒரு இனத்தின் வாழ்வாதார அடிப்படைக் கோரிக்கைகளை கிண்டலக்குட்படுத்திச் சீரழிக்கும் நரித் தனத்துடன் கருத்தாடுகிற தமிழ்ச் சூழலொன்று, புலி அரசியலிலிருந்து மிக வலுவாக வளர்ந்துள்ளது.இது, மக்களின் உரிமைகளை புலி எதிர்ப்பு அரசியலில் நீர்த்துப் போக வைத்தபடி,இந்திய மேலாதிக்கக் கனவுகளுக்கு  வக்காலத்து வேண்டுவதில் தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்கிறது.
இந்திய - இலங்கை அரசுகளினது கடந்த வன்னியுத்தம், தமிழின அழிப்பைச் செய்த கையோடு மீளக் கட்டியமைக்கும் படுமோசமான கட்சி, அரசியலில் மிகக் கேவலமாகத் திசைவழிகளை அமைக்கும் தமிழ்க் கட்சிகள்-முன்னாள் ஆயுதக் குழுக்கள், இந்த வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களையும் மறந்து, அரசியல் செய்யும் இந்தத் தருணத்தில்தாம் நாம் இப்போக்குகள் குறித்துக் கவனத்தைக் குவிக்கவேண்டும்.

ஒடுக்குமுறை வர்க்கத்துக்கெதிரான,அவைகளின் அரசுகளுக்கெதிரான எதிர்ப்பு அரசியல் நிலையோ இன்று, ஆளும் வர்க்ககங்களுக்கிசைவாகப் பிற்போக்குச் சக்திகளால் முன்னெடுக்கப்படுகிறது.மக்களை மிக இலகுவாகத் தமது வலுக்கரங்கள் மூலம் ஆளும் வர்கத்தினது அதிகாரத்துக்குள் கட்டிப்போட வைக்கும் "ஜனநாயக" உரையாடல் மற்றும்,  காட்சிப் படிமத்தின் வழியிலான நியாயப்படுத்தல்கள்-பொதுமைப் படுத்தல்கள்" கலை-படைப்பு-தொழில் தர்மம்-மனிதாபிமானம்" எனும் கவசத்தோடு நமது வாழ்வைச் செல்லரித்துச் செல்கிறது! இதுள், லீனா மணிமேகலை என்பது  பல இந்திய ரோவின் எடுபிடிகளில் ஒன்றென்பதைத்தவிர வேறெதுவைத் தெரிவாக்கி வைத்துரையாட முடியும்?

இந்தப் பிழைப்பு வாதக் கூலிகள் கேட்கும்"ஆதாரம் இருந்தால் காட்டு" என்பது அமெரிக்க அரசு கேட்கும் " அமெரிக்கா உளவு-வேவு பார்த்ததற்கு என்ன ஆதாரம்? " என்பதற்கும் இருவேறான தெரிவுகள் இருக்குமா?-இரண்டும் ஒரே நோக்கு-நலத்தின் வழியிலான செயற்பாடுகள்தாம்.

இதுள், லீனா மணிமேகலை காட்டும் பூச்சாண்டிதாம் பெரும் வேடிக்கையானது-வேஷமானது-விவகாரமானதுங்கூடவே! இஃது, இந்திய ஆளும் வர்க்கத்தின் திமிரினது பரந்துபட்ட தொடர்ச்சிதாம்!

இவற்றைப் பல தளங்களில் புரிந்தாகவேண்டும்: புரிந்தால், இந்தப் பாவமன்னிப்புக் கோருதல்களினது அர்த்தமும் புரிந்து போகும்!Leena Manimekalai hat ihr Profilbild  geändert.
 [இந்தப் படம் இலீனா மணி மேகலையினது உருவப்படம்.அவரது முக நூலிலிருந்து எடுக்கப்பட்டது.நன்றி]
இற்றுவரை ஈழத்தில் மூன்று இலட்சத்து நாற்பதினாயிரம் உயிர்கள் ஈழக்கோசத்தால் பலியிடப்பட்டுள்ளார்கள்.சுமார் 4.5 றில்லியன் ரூபாய் பெறுமதியான உடமைகள் போரினால் நாசமாக்கப்பட்டும்,முப்பதினாயிரம் பெண்கள் விதவைகளாகவும்,கிட்டத்தட்ட அதே தொகை சிறுவர்கள் முடமாக்கப்பட்டும் இந்தத் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்துபோனதற்குப் பிரபாகரனும் அவரது தப்பான பதவி ஆசையுமே காரணமானதல்ல.மாறாக,இத்தகைய பிரபாகரன்களை உருவாக்கிய அந்நியச் சக்திகளும்,இலங்கையின் இனவாத அழிப்புமே காரணமாகிறது!முள்ளிவாய்க்கால்வரை ஒரு பிரபாகரனின் முடிவில், இலட்சக்கணக்கான மக்களின் புதைகுழிகள் தோண்டப்பட்டன.இனிவரப்போகும் பிரபாகரன்கள் இன்னும் எத்தனை புதைகுழிகளைத் தோண்டுவார்களோ அது  எவருக்குமே இப்போது புரியாது,அந்த ஆண்டவரைத் தவிர!

இத்தகைய சமூக நெருக்கடியையும்,வரலாற்றுத் துரோகத்தையும் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிட்ட யுத்தக் கிரிமனலாக இருக்கும் அந்நியத் தேசத் தலைமைகளை அண்டிப் பிழைக்கும் இந்த லீனா மணி மேகலை போன்ற "கலைஞர்கள்" தங்கள் கூஜாத் தூக்கும் தொழிலில்"தூய்மை" வேடங்கட்ட "ஆதாரம் இருந்தால் காட்டு இல்லையேல் அஃது,அவதூறென்பது "  கூட ஒரு விதமான அரசியல்தாம்.

இவர்களுக்கு முன்னோடி சாணாக்கியன்-பின்னாற்றான் அமெரிக்க ஏகாதிபத்யம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
02.12.2013


P/S:

Leena Manimekalai :

ஊடறு டொட் கொம் நீங்கள் "வெள்ளை வேன் கதைகள்" குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையை எழுதிய சந்தியா இஸ்மாயிலின் தொடர்பு இலக்கம், இமெயில் விபரங்கள் வேண்டும். அப்படி ஒருவரே இல்லையெனில், நீங்கள் அந்த பொய் அறிக்கையை உடனே நீக்கி, படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!

@கீற்று, நீங்கள் இந்த மொட்டை அறிக்கையோடு என்னைப்பற்றி பல அவதூறு கட்டுரைகளை உங்கள் தளம் முழுவதும் நிரப்பி வைத்திருக்கிறீர்கள். ஆபாச கமெண்டுகள் வேறு , என் அனுமதியில்லாமல் லே அவுட் செய்த என் படங்கள் வேறு. உங்களை வழக்கறிஞரோடு சந்திக்கிறேன்.

Shoba Sakthi : ஊடறு டொட் கொம் அவதூறையும் பிரசுரித்துவிட்டு அது குறித்து அவதூறால் பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பும்போது ஊடறு ஆசிரியர்கள் ரஞ்சி (சுவிஸ்) தேவா (ஜெர்மனி) ஆழியாள் ஆகியோர் நெடிய கள்ள மவுனத்தைச் சாதிப்பதன் பொருளென்ன? அவதூறு பரப்புவது மட்டும்தான் அவர்களது வேலையா? அதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டாமா? என்ன இழவு இதழியல் இது!

M R Stalin Gnanam :  தே வா (ஜெர்மனி) ஆழியாள் ஊடறு ஆசிரியர்கள் ?

Shoba Sakthi  : M R Stalin Gnanam ஆம். ஊடறு இணையத்தளத்தினுள் போய் INFO பகுதியை சொடுக்கினால் இப்படித்தான் இருக்கிறது.

info
editors: ranji (swiss) , theva (germany)
co-editor : aazhiyal (australia)
contact : udaru@bluewin.ch

Sunday, April 21, 2013

சோபாசக்தி உயிர் கொடுப்பது கயமைத்தனம்

சுகனார் படிகம்.

கருவரத்தேவர் எண்ட நம்மட சுகனார் ரொம்பத்தான் காவடியொண்டை அன்று தூக்கினார்-1990 வாக்கில்!

//Shoba Sakthi :'தன்னைச் சாதிவெறியன் அல்ல என மறுபடியும் மறுபடியும் நிரூபிக்காதவரை ஒவ்வொரு வெள்ளாளனும் சாதி வெறியனே' - சுகன் //


தில்லப் பாருங்கோ, அவர் சும்மாவொரு வெறும் காவடியைத் தூக்கியிருந்தால் பறுவாயில்லை.இது,முழுமொத்தக் குறைபாட்டையும் இரண்டாயிரம் வருடங்களாக வந்த அனைத்து வினைகளையும் மறுத்து "வேளாளன் சாதி வெறியன்" என்றாக்கி வைத்து, அதன் தேற்றங்களுக்குப் பிரியாவிடைகொடுத்த சுகனது வரண்ட பார்வைக்கு அல்லது சமூகத்தைப் புரியும் திரணியற்ற கிறுக்குத் தனத்துக்கு இன்று, மகுடம் வைத்து அதையும் சோபாசக்தி ,தனக்கேற்ப வளைத்துப்போடுவது சுத்த சாக்கடைத் தனம்.

இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடாத்துவது இவர்களுக்கு அவசியமானால் அதை நடாத்துவதை விட்டுச் சாதிய அரசியலாக இதையொரு முரண்பாடாக்குவதன் தெரிவில் மீளவும், அனைவரையும் பிளந்து குருதி குடிக்கும் அந்நிய வியூகத்துள் இயங்கும் அரசியலுக்குச் சோபாசக்தி உயிர் கொடுப்பது கயமைத்தனம் என்று சொல்லேன்.ஏனெனில், அதன் பிதாமகனாக அங்கீகரிக் கப்பட்டவர்கள் நிறையவே நமக்குள் அணிதிரண்டுவிட்டனர். இதன் சூத்திரதாரிகள் பல முகங்களோடு நமக்குள் இலக்கியம் படைக்கின்றனர்.
"புத்தஞ் சரணஞ் கச்சாமே" என்றபடி கருவரத்தேவர் போடும் அரசியல் வடக்கில் டக்ளசின் அராஜகத்தை ஜனநாயகமாகக் கண்டதன் தொடரல்ல.சாதிப் பிளவுகளது தெரிவில் அவை சார்ந்தியங்கும் இன்றைய தமிழகப் பாணி அரசியலைக் கயமைமிகு டக்ளஸ் தனது சுய இலாபத்துக்காக நகர்த்துகிறார். அவரது இருப்புக்காகக் கூர்மைப்படுத்தப்படும் சாதியஞ் சார்ந்த அரசியலானது தொடர்ந்து வேளாள ஒடுக்குமுறை குறித்து வகுப்பெடுக்கும்போது இலங்கைப் பாசிச அரசால் நிர்மூலமாக்கப்படும் பரந்தபட்ட மக்களது பிரதான முரண்பாட்டை மறைத்தொதுக்கும் இந்தக் கயவர்கள், இலங்கையின் அனைத்துச் சிறுபான்மை இனங்களுக்கும் எதிராகவே நிலவும் ஒடுக்கு முறையாளர்களுக்குப் பின் நிற்கிறார்கள்.இதன் உச்சம் இலங்கைக்கு இலக்கியச் சந்திப்பை நகர்த்துவதென்பதில் இவர்கள் கட்டும் கருத்துக்கள் அதுசார்ந்து முன்வைக்கும் நியாயங்கள் யாவும் சாதிய முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அதைக் கருத்தியற் தளத்தில் மீளமீளத் தகவமைத்துக்கொண்டு அதன் வேகத்துள் பிளவுவாத அரசியலை முன்னுக்குக்கொணர்வது.

இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழர்களது பாரம் பரிய ஐதீகச் சுயாதீனப் பூமியானது சமீபத்தில் பிரதேச ரீதியாகக் கிழக்குத் தனி மாணமாகப்பட்டுத்  தமிழ்பேசும் மக்களைப் பிளந்த இலங்கை-இந்திய ஆளும் வர்க்கமானது வடமாகாணத்துள்இத்தகைய பிளவு வாத அரசியலைப் பயன்படுத்தச்சந்தர்ப்பமற்றதன் தொடரில் சாதிய முரண்பாட்டைக் கையிலெடுத்துள்ளது. அதன் வழியில் தலித்துவக் குழுக்கள் மற்றும் கிறிஸ்த்துவ மேட்டுக்குடிகளையும்(நிர்மலா இராஜசிங்கம்,நோயல் நடேசன்,அகிலன் கதிர்காமர்,இரத்தின ஜீவன்கூல்,இராஜன் கூல்...) இணைத்து ப் புலிகளது பணக்காரப் பினாமிகளையும்கூடவே,கே.பி. கருணா-பிள்ளையான்,டக்ளசு போன்ற இத்தகைய குறுக்குவழி நபர்கள்மூலம் பெரும் பான்மையான மக்களைப்பிளந்து தமிழ்பேசும் மக்களது நியாயமான அரசியல்வாழ்வையும்,அவர்களது உரிமையையும் இலாத்தாக்குவது அவசியமாகிறது.

இதன் தெளிபொருள் விளக்கவுரை:

வடமாகாணத்துள் வேளாளரைத் தனிமைப்படுத்தும்போது தாழ்த்தப்பட்டவர்கள்-ஒடுக்கப்பட்டவர்கள் என்றான தெரிவில் வடமாகாண மக்கள் தொகையில் சரி அரைவாசி மக்களைப் பிளந்து அவர்களைச் சிங்கள அரசுக்குப் பின்னே கைகோர்க்க வைப்பது இலங்கை-இந்திய அரசியலுக்கு மட்டும் அவசியமில்லை. மாறாக,இன்றைய அராஜகக் கட்சிகள்-இயக்கங்கள் அவர்களது புதிய குட்டி முதலாளிய முன்னெடுப்புக்கும்-இருப்புக்கும் அவசியமாகவிருக்கிறது.தமிழ் தேசியத்தால் தமது இருப்பு அழிந்துபோய்விடுமென அஞ்சும் இத்தகைய புதிய குட்டி முதலாளிய வர்க்கம் இதுசார்ந்து, நிதியீடுகளையும்-கலை இலக்கிய முன்னெடுப்பையும் சார்ந்து புதிய கருத்தியற்றகவமைப்பத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.இதற்குக் கடந்த கால வேளாளரது சாதியத் திமிர் உடந்தையாகியும் விடுகிறது.அந்த வடூ இனவாத ஒடுக்குமுறையாளரோடிணைந்து பரந்தபட்ட தமிழ்த் தேசியவினத்துக்குத் தூக்குக் கயிறாச்சு!

இந்தத் தெரிவில், புலம் பெயர் தலித்துவ அமைப்புகளும்,தனிநபர்களும்இலங்கையில் இந்திய அரசியல் நோக்கங்களது தெரிவுக்கான திசையில் பயணிப்பதும், அது சார்ந்த தமக்கான சாதியச் சங்கங்களை நிறுவிக்கொண்டு அதன்வழியிலான அரசியல் பலத்தைப் பெறுவதும் ஒரு கட்ட இலக்காகவே இருக்கிறது.இதுதாம் இன்றைய தமிழகத்தின் திருமாவளவன் பாணி அரசியலாகும்.

புலியழிந்துகொண்டிருந்த தருணத்தில் தமிழ்நாட்டில் சுகனார் இலங்கைத் தேசிய கீதமிசைக்கத் துவங்கினார்.இங்குதாம் புலம்பெயர் தலித்துவக் குழுக்களுக்கும்,தனிநபர்களுக்கும் பல வடிவிலான நோக்கங்கள் இந்திய உளவுப்படை ரோவால் இயக்கப்படும்தமிழகத் தலித்துவப் பிழைப்புவாதிகளால் பயற்றுவிக்கப்படுகிறது.

இப்போது மனிதத்துக்காகச் சுகன் கண்ணீர் வடிக்கிறார்.அகிம்சை பேசுகிறார்.ஆயுதம்-யுத்தம் அவருக்கு அலேர்ச்சி!ஆனால்,அவரது மானுட விரோத வார்த்தைகள்வழி, கண்ணி வைத்துப் பேசும் கருத்துக்கள் மிகப் பெரும் அராஜகத்தைத் தூண்டிச் சாதியக் கலவரங்களுக்குத் தூண்டுபவை.

இந்தச் சுகன் என்ற கருவரத்தேவர் கோமாளிக்கும் அவரது அரசியல்-இலக்கிய நடிப்பும் கண்டு  கலாமோகன் பலமுறை கொதித்தார்-அவரும் ஒரு தலித்தாய் இருந்தும்!

இந்தமாதிரியெல்லாம் சுகனார் ரொம்ப சென்டிமென்ரா நடிப்பார்."சிரிக்கிற மாதிரி அழுவார்-அழுகிறமாதிரிச் சிரிப்பார்"எண்டு எக்ஸிலில ஒருக்காய் கலாமோகன் பெரியண்ணா எழுதினவர்.அப்படிப்பட்ட சுகன் பெரும் கவிஞனாரபின் அவரைப் பார்க்க முடியாதெண்டும்-"பாடச்சொன்னால் புலவரும் பாடார்"எண்ட மாதிரி அவர் பாட மாட்டாரெண்டும் கலாமோகன் சொன்னார்.பாடுறத்துக்கு "சட்டியில இருந்தால்தானே அகப்பையில ஒட்டி கொண்டுவரும்"எண்டதை நல்லாவே புலவர் கருவரத்தேவனார் சுகன் அறிஞ்சு வைச்சிருக்கிறார்.இப்படிப்பட்ட புலம் பெயர் இலக்கியத்தில் சீனியரான சுகனார் இப்போது, இலங்கைக்கு இலக்கியச் சந்திப்பை முன்னெடுத்துச் சென்று அங்கேயொரு லொபி அரசியலுக்கும்-தெரிவுக்கும் முன்நிறுத்தப்படும்போது சுகனாரது அன்றைய கருத்துக்கள் சோபாசக்திக்கு இன்று,  அவசியமாகிறது!தன்னையும், தான்கொண்ட கருத்துக்களையும் நிலை நிறுத்த எந்தச் சதிக்கும் சோபாசக்தி தயாராகிறார்.

ஆனால்,இதே சுகன் குறித்து மேலும் கலாமோகனிடம் போவோம்:

கலமோகன்ர வார்த்தையில சொன்னால்"பெட்டையளைக் கண்டால்(இப்பை எந்தப் பெட்டையைக் கண்டாலும் கன்னங்கள் ரெண்டிலும் ஒரு உறிஞ்சல் உறிஞ்சிக் கொஞ்சுவார்.;)பெண்நிலைவாதி என்பார்,தாழ்த்தப்பட்டவரைக் கண்டால் தலித்தியவாதியென்பார்,விஸ்க்கிப் போத்திலோடு வருபவரைக் கண்டால் உடனே தன்னை விளிம்பு நிலை வாதியென்பார்"கூட்டுக் கலவிக்குப் பேர்போன வட்டுக்கோட்டைக் கருவரத்தேவருக்கு சுகனார் வேடமும் சரியான அச்சாவாகவில்லை.இப்ப பெரிய பீ நவீனத்துவ சொறீ...பின் நவீனத்துவக் கொம்பு ஒண்டும் அவருக்கு முளைச்சிருக்காம்."

இப்படியாகச் சுகனுக்கு "வேளாளனான ஒவ்வொருவரும்", தான்சாதி வெறியன் இல்லலையென்று மறுபடியும்,மறுபடியும் வேளளன் மட்டும் பிரகடனப்படுத்தியாகவேண்டும்.வேளாடிச்சி தேவையில்லை!ஏனெனில்,அவளுக்கான "பெண் விடுதலை" இதை இல்லாதாக்கிறது.அதாவது,வேளளன் கையில் அவள் தலித்தாகக் கிடப்பதே காரணமென்றுஞ் சொல்லக் கூடும்!

இப்படிப் பிரகடனப்படுத்தின பிறகுதான் "வேளாளன்" தலித்தியம் பேசலாம்.இல்லாட்டி இந்தச் சுகனார் நம்மை "இருள் வெளிக்குள்"தள்ளி மதிப்பு மறுப்பறிக்கையை விடுவார்;.

இப்படியாக எல்லா மனிதர்களையும் வேட்டையாடிய மச்சானுக்குப் பக்குவம் வந்திட்டுதாம்!அதால இப்ப டக்ளசுக்குக் காவடியெடுத்து"புத்தஞ் சரணங் கச்சாமே"வழி இலங்கைத் தேசிய கீதமுரைப்பில் மகிந்தா காந்திய வடிவம்-அகிம்சா மூர்த்தி.இலங்கை இராணுவத்தின் கரங்களில் ஒவ்வொரு ராட்டினமுண்டாம்!

இப்படியாகச் சுகன் "அகிம்சா மூர்த்தியாக" மாறியதற்குக் கடந்கால பின்-நவீனத்துவப் பார்வைக்கும்(பின் நவீனத்தைத் தமிழில் அங்கொன்றுமிங்கொன்றுமாய்த்தாம் சுகன் வாசித்துவிட்டு...),தலித்தியப் பிரகடனங்களுக்கும் ஒரு பரிகாரம் தேடுறாரெண்டு எடுத்துப் போடாதேங்கோ!இப்ப பலருக்குத் தங்கட "இருப்பில" சந்தேகம் வந்திட்டுது.அதுக்காக, இப்பிடி மீள் பார்வைகள் வருகிறதெண்டும் பார்த்துப்போடலாம்.

பாத்திபன்ர கதையொண்டை(பலமா,யாருக்கு?) ஒப்பிரேசன் செய்து" செட்டியிலிருந்து ஜொனிவோக்கர் அடித்தபடி சோவியத் ய+னியன் சரிவை ஆராய்ந்தார்கள்"எண்ட பார்த்திபனின் எள்ளலை நக்கி,

1: சோவியத் யூனியன் சரிவை ஆராயக் கூடாதென்கிறானா?

2: ஜொனிவோக்கர் அடிக்கக் கூடாதென்கிறானா?"

3: ஜொனிவோக்கர் அடித்தபடி சோவியத் யூனியன் சரிவை ஆராயக் கூடாதென்கிறானா?"

4: செற்றியில் இருக்கக் கூடாதென்கிறான?"-எனக்கு உறுத்துகிறது,நான் சாராயம் காய்ச்சி விற்கின்ற விளிம்பு மனிதன்." எண்டு தன்னைப் பற்றிப் பிரகடனப்படுத்தி ஜொனிவோக்கர் கம்பனியை விளிம்பு மனிதர்களின் கம்பெனியெண்டவருக்கு இலங்கை ஆளும் வர்க்கங்களும் விளிம்பு மனிதர்களானார்கள்-வடக்கில் அவர் காணும் ஒவ்வொரு இராணுவமும் விளிம்பு மனிதர்களே-வேளாளனைத் தவிர!

"தன்னைச் சாதிவெறியன் இல்லை என்று
தொடர்ந்து(கவனியுங்கள் தொடர்ந்து...)நிருபிக்காதவரை ஒவ்வொரு
வெள்ளாடனும் சாதி வெறியனேதான்
என்று தலித் கருதுவதில் தவறில்லை."-சுகன் 


இப்படியெல்லாம் பொன் மொழி பொழிந்த எங்கட கருவரத்தேவரது பொன் மொழிகளை முன்வைத்துச் சோபாசக்தி தொடர்ந்து  வேளாளர்களைப் பார்த்து தன்னையொரு சாதிவெறியன் இல்லையெண்டு நிரூபிக்கச் சொல்லும்போது இலங்கையில் இலக்கியச் சந்திப்புக்கான தொகுப்பையும் வெளியிடுவதற்கு ஆக்கங்கள் தேடுகிறார்.ஆனால்,தமிழ்ப் பிரதேசமெங்கும் தமிழர்கள் அடிமையாய் சிங்கள இராணுவத்தின் முன் மண்டியிடும்போது குவானிக்காவின் தெரிவு "புலிப்பாசிசம்-வேளாளச் சாதி வெறியாகவும் இருந்திட்டால் ஆச்சரியமில்லை!


ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

21.04.2013

Sunday, April 07, 2013

"ஆண்டாள் மார்க் அளவு நாடா" வும் இலக்கியச் சந்திப்பும்.

"ஆண்டாள் மார்க் அளவு நாடா" வும் இலக்கியச் சந்திப்பும்.

40 வது, இலக்கியச்சந்திப்பின் வரலாற்றைச் சொல்லும் சுசீந்திரன்,சந்துஷ்-சில கருத்துக்கள்!

இதுவரையான இலக்கியச் சந்திப்புக்குறித்தும்,அதன் வரலாற்றுக் கட்டங்கள் குறித்தும் சந்துஷ்,சுசீந்திரன் இருவரும் தங்கள் அநுபவங்களைச் சொல்கின்றனர்.இலக்கியச் சந்திப்புக் குறித்துக் கருத்தாடுவதில் சந்துஷ்கும்,சுசீந்திரனுக்கும் காத்திரமான பாத்திரமுண்டு.இந்த 40 வது, இலக்கியச் சந்திப்பை நாமும் நேரடியாகப் பார்க்க வழி செய்த தலித்தியத்துக்கு நன்றி.இல்லையேல் இவர்களது கருத்தை நாம் கேட்கும் எந்தச் சந்தர்ப்பமும் கிட்டியிருக்காது!

பொதுவாகக் கருத்தாடியவர்கள்-விவாதித்தவர்களென்போரைக் கடந்து, இவர்களை 1988 ஆம் ஆண்டு செம்படம்பரிலிருந்து தொடரும் இலக்கியச் சந்திப்பின் தொடரில் வைத்துக் காணமுற்பட்டபோது இந்தச் சந்திப்பு பெரிதாக எந்த உள்ளடக்க மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவாக இவர்களே உரைக்கின்றனர்.

எனினும்,வரலாற்றின் நிகழ்வு சார்ந்த இலக்கியச்சந்திப்பின் பாத்திரத்துள் சந்துஷ் வகுத்துக்கொள்ளும் பிரிப்புகளும்,அதுசார்ந்து மாவோயிசம்,ரொக்சிசம்,மார்க்சிசம் என்ற வகைப்படுத்தலில் சிலரை முன்வைத்துக் கருத்தாடுவது தமிழ்ச் சமுதாயத்தின் ஆரம்பகால அரசியலை வகைப்படுத்துவதென்பதைவிட இந்த இலக்கியச் சந்திப்பானது அதன்வழியில் சிலரது இன்றைய அரசியல் தற்கொலையை எனக்கு உறுதிப்படுத்துகிறது.அந்த வகையில் சந்துஷ்சுக்கு நன்றி.மாவோயிசம் பேசிய அறுவைச் சீனி லோகன் இலங்கை அரசியலில், அரசின் போக்குகளுக்குச் சார்பாக இயங்குவதும்,மார்க்சியம் பேசியவர்களில்பலர் குறிப்பாய்ந் சிந்தனை,பரா மாஸ்டரது இழப்போடு தலியத்தோடு சங்கமித்து இலங்கையின் பொது அரசியலோடு ஒன்றித்துப்போனதும்,ரொக்சியம் பேசிய புதுமை,வாணீ,ஜெயபாலன்,பாரதி தமிழ்த் தேசிய அரசியலில் தடுமாறுவதும்,தூண்டில் இது எதுவுமேயின்றித் தனது பாத்திரத்துள் சமூகக் கொடுமைகள்,சமத்துவத்துக்காகப் போராடியதில் அது தமிழ்த் தேசிய-மற்றும் தமிழீழ மக்கள் கட்சியால் தோற்கடிக்கப்பட்டாலும் அதன் பாத்திரத்தின் கூறு சிலரை இன்னும் துடிப்போடு இந்தப் பெரு வெள்ளத்தை விட்டு மக்கள் பக்கம் நின்றியங்கவும்,விமர்சிக்கவும் தூண்டிக்கொண்டுதாம் இருக்கிறது.

அண்மை வரை, இலக்கியச் சந்திப்பானது புலிகளது அரசியல் மற்றும் பாசிசம் குறித்துக் கருத்தாடியதிலிருந்து சில நிசப்த காலத்துள்(அதுள் பங்கு பற்றிய பலரை இன்று வரலாறுரைக்கும்) அனைவரையும் கட்டிப்போட்ட அரசியல் தெரிவு முள்ளி வாய்க்காலுக்குப்பின் அடுத்த எல்லைக்கு(பாசிசத்துக்கு எதிரான போராட்டப் பாத்திரம்)த் தாவுவது வரலாற்றின் உண்மைகளைக் குறித்து நோக்குபவர்களுக்கு அச்சத்தைத் தருகிறது.தலித்தியம் முதல் மாவோயிசம் பேசியவர்கள்,மார்க்சியம் முதல் ஈ.பீ.ஆர்.எல்.ஏப் வரை அரசியல் செய்தவர்கள் இலங்கையின் பொது அரசியல் நீரோட்டத்துள் கலந்துபோனதும் ,வாசு தேவ நாணயக்காராக்களையும் இலங்கியச் சந்திப்புள் இனங்கண்டபோதும் இவர்கள் முள்ளி வாய்க்காலுக்குள் சிக்குப்பட்ட மக்கள் குறித்து என்ன பதிவை 2005 களுக்குப் பின் முன்வைத்திருக்கிறார்கள்?

பாசிச இராணு ஜந்திரங்களுக்குள் சிக்குப்பட்ட அப்பாவிகள் குறித்து, அவர்களது நலனின் அக்கறை கொள்ளாது, முள்ளி வாய்க்காலில் அவர்களைப் பாசிசச் சிங்கள இராணுவம் அழித்துக்கொண்டபின் -அந்த மக்களது குருதி உலர்வதற்குள் தலித்துவ வாதிகளும்,இராகவன் போன்றவர்களும் இலங்கையில் மகிந்தா ஜனநாயகத்தை மீளக் கொணர்ந்ததாகப் பேட்டிகள் செய்தும்,நன்றி தெரிவித்ததுமாக இந்த இலக்கியச் சந்திப்பின் உள்ளடக்கம் மாறிப் போனது உண்மை!

இன்று,சாத்திரியை கேள்வி கேட்டுத் துளைப்பவர்கள்,தேவதாசன்,அசுரா,ஞானம்,இராகவன் போன்றோரைப்பார்த்து அரசியல் ரீதியான காட்டிக்கொடுப்புக்குகான எதிர்வினையை ஆற்றுகிறார்களா?அல்லது, பாசிச மகிந்தாவின் அரசியலை ஜனநாயகமென வகுப்பெடுத்து முழுத் தமிழ்பேசும் மக்களை மட்டுமல்ல இலங்கையின் சிறுபான்மை இனங்களையும் மகிந்தாவின் அரசியல் நிகழ்வுக்குள் தற்கொலை செய்ய வைக்கும் கயமைக்குப் பதில் தேடுகிறார்களா?

இங்கு,தனிப்பட்ட நட்பு,உறவாடலென்பது பரந்துபட்ட மக்களது அரசியல் வெளிக்குள் இல்லையென்பதைச் சந்துஷ் நிரம்பவே புரிந்தவர்.ஆனாலும்,யாரை விட்டது முகம் பார்த்து அரசியல் பேசுவது?
அடுத்து,அண்ணன் சுசீந்திரனிடம் வருவோம்.

எப்பவும்போல நகைச் சுவையாக மனிதவுணர்வுகளை தனக்குள் ஒன்றிக்க வைக்கும்"அன்பு" நிறைந்த உரையாடல் அவருக்கானதே!அதனாற்றான்,நான் அவரை "நேசம் நிறைந்த சுசீ அண்ணா" என்று எப்போதும் அழைப்பவன்.அவரது உரையாடலில் முரண்படும் கருத்துக்களை அவர் மிக விவேகமாகத் தவிர்த்துவிட்டு வரலாற்றையுரைக்கிறார்.அதுள், தனக்குள் வசப்பட்ட நியாயங்கட்குவுட்பட்டு வரலாறு கட்டும்போது பீட்டர் ஜெயரெட்னத்தை மட்டும் சொல்லிச் செல்பவர் ஏனோ பார்த்திபனை,செல்வராஜாவை,சிவத்தை,ஜோசெப்பை மறந்தாரோ தெரியவில்லை!

இந்த இலக்கியச் சந்திப்புக்காக ஆரம்பம் முதல் அதன் பல சந்திப்புகளுக்கு அவித்துப் போட்டவர்களும் அதற்காகத் தமது வீடுகளைத் திறந்து விட்டவர்களும் இந்த மேற்சொன்ன பேர்வளிகளுக்குள் இருக்கின்றனர்.இதற்காகப் பாரிய பொருள் இழப்பையும் அவர்களே தாங்கினர்.

போகட்டும்.

கன்னை கட்டி அரசியல்,வரலாறுரைக்க முடியாது.

திரு.சுசீந்தரன் ஆரம்பகால இலக்கியச் சந்திப்புள் ஒருவருமாக,இப்போது ஒருவருமாகக் கருத்தாடுவதுள் அவரோடு முரண்படும் ஒரு விடையத்தை "மனம் புண்படும்" என்ற அகவிருப்போடு அவர் மறுத்துரைத்ததற்கு நாம் சில வற்றைச் சொல்லியாகவேண்டும்.

நா.கண்ணன் என்பவர் பார்ப்பனர் என்பதும்,அவரது படைப்புகள் நவீனப் பெண்ணியச் சம வாழ்வுக்கு,எதிரானதென்பதும்,அவர் அடிப்படையில் பார்ப்பனர்களைத் தாண்டி இலக்கியமோ, அரசியலோ செய்ய விரும்பாதவரென்பதும் நாம் அவரோடு விவாதித்துத் தெரிந்துகொண்டவை.

அவரது இலக்கியச் சந்திப்புப் பங்களிப்பில் அவர் பார்ப்பனியச் சனாதன தர்மத்தைக்கூடப் புதிய மொந்தையில் வார்த்தவர்.

அப்படியாகிய, அவருக்கெதிரான "ஆண்டாள் மார்க் அளவு நாடா" என்ற குறியீட்டு அரசியல் எதிர்ப்புப்பிரசுரம் மிகவும் தார்மீகத் தன்மையுடையது.

அது,பார்ப்பனியத்தாலும்,சனாதன தர்மத்தாலும் பாதிக்கப்பட்டவர்களது நியாயத்தின்-உணர்வின் வெளிப்பாடு!


இதுவொரு தனிப்பட்ட மனிதரைப் புண்படுத்துவதென்பது பார்ப்பனியத்தின் அதிகாரத் தன்மையை,தனிப்பட்டவர்களது தெரிவுக்குள் குறுக்குவதாகும்.பார்ப்பனியர்கள் ஒவ்வொருவரும் அதன் சேவர்களாக இருப்பது மட்டமல்ல அதற்கு வெளிநிலைப் படிச் சாதிகளும் அதையே வெளிப்படுத்துபவர்கள்.இந்த ஆண்டாள் மார்க் அளவு நாடா பொதுவாகப் பார்ப்பனியத்தின் மனித விரோதத்தை எதிர்ப்பதாகும்.இதைத் தனிப்பட்ட தாக்குதலாகக் குறுக்கி"மனித மனம் புண்படும்"என்பது மிகவும் பொறுப்பற்று வரலாற்றை மறுப்பதில் முடிச்சிடுகிறது.

இன்றைய 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவில்,239 மில்லியன் மக்களைச் சனாதன தர்மம் தீண்டத் தகாதவர்களாக்கிச் சிதைக்கிறது.அந்தச் சீரழிவுப் பண்பாட்டின் கூறுகளைத்தாங்கி நமக்குள் கருத்துக்கட்டிய கண்ணனின் மனம் புண்படும் என்ற சீசீந்தரனுக்கு இவர்களால்  சிதைக்கப்பட்ட , 239 மில்லியன்கள்  மக்களது மனத்தின் காயங்கள் ஒரு பொருட்டாக இல்லை!இதை எதனோடு ஒப்படி முடியும்?

இலக்கியச் சந்திப்பில் இப்படியும் வரலாறு திரும்புகிறது.

பிற்குறிப்பு : "ஆண்டாள் மார்க் அளவு நாடா" விளிம்புக்குரல் துண்டுப் பிரசுரம் 1998 ஆம் ஆண்டு பிராங்பேர்ட் இலக்கியச் சந்திப்பில் சோபாசக்தி-ரஃபேல் போன்றோரால் வினியோகித்து எதிர்ப்புக் காட்டப்பது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.04.2013

Monday, March 25, 2013

புலத்துத் தமிழர்களும் ஆதிக்கப் பரீட்சார்த்தமும்

வானேவித் தாக்குதல்களின் [Drone attack ]சனநாயகக் கோரிக்கை என்ன?அரசியல் அறமெனக் கொள்ளும் மேற்குலகத்துக்கு யுத்த அளவு கோலாக  ஜப்பான் மீது போடப்பட்ட  Fat Man and Little Boy  சட்ட -நீதிசார்ந்த அறமாக இருக்கும்போது , நாகசாகி-கீரோசீமாக்கள்[ Nagasaki and Hiroshima  ] வெறும் தார்மீகத்துள்கூட ஒட்டவில்லையே!

சமீபகாலமாக ,இந்த வானேவிகள்[Drone ]  இந்தியத் துணைக்கட்டத்துள்[Drone attack in Pakistan  ] போட்டுத் தொலைக்கும் மழலைகளது இருப்பை மறுப்பதென்பது பயங்கரவாதத்துக்கெதிரான யுத்த அளவுகோலக இருக்குமெனில் இலங்கையில் செத்த பிஞ்சுகளுக்கு இவர்களது அகராதியில் என்ன அர்த்தமுண்டு?

அதிகாரம் மற்றும் ஆதிக்கம்  குறித்துண்மையில் அடிக்கடி மிக தெளிவாக நான்  உணருவதென்றாலும், சமூக உறவுகளில் இந்த அடிப்படை கூற்றுப்  பார்வையில் பல புள்ளிகள் அரசியல்-சமூகப் பிரதிநிதித்துவம் கொண்ட  சர்ச்சைக்குரிய மற்றும் சிக்கலான பிரச்சினை போன்றதே  அறிவியல் விவாதத்திலும் சமாந்தரமானதும்-விரிவானதுமான  விதிமுறைகளை வழங்க வேண்டுமென நினைக்கிறேன்.இன்றைய தமிழகத்து மாணவர்களது போராட்டத்தைப் பரவலான புரிதற்கேற்ப நகர்த்துவதில் பலவிதமான சிக்கலெழுவதும்,எமது புரிதற்குள் கட்டுப்படாததுமான கோரிக்கைகள் உண்மையில் விரித்து வைத்திருக்கும் சொல்லாடல்களாகச் சுருங்கிவிடும் அபத்தத்தைக் குறித்து நாம் எத்தகைய புரிதலில் முன்னகரும் அரசியலைச் செழுமைப் படுத்துகிறோம்?இங்கிருந்துதாம்  ஐ.நா.மனிதவுரிமைக்கான தெரிவுகளில் அமெரிக்காவின் இலக்கைக் [  UN Resolution on Sri Lanka ]குறித்துவைத்து ,இலங்கையின் இனங்களுக்கிடையிலான நட்பார்ந்த போக்குகளைக் குறித்துப் பேசமுடியும்.

இதே கருத்தில் துல்லியமாகவும்  எவ்வளவு, சக்தி யூக்கத் தோழமை உறவுகளை தீர்மானிக்க  முனைவதிலும்,இடம் பெயர்ந்தும்-இருப்பிழந்தும் அலைவதன் தொடரில் தமிழ்பேசும் மக்களது தலைவிதியைக் குறித்துச் சிந்திக்கும்போது எமது சிந்தனைக்கு மேலாகவெழும் "சனநாயகம் மற்றும் அதுசார்ந்த மனிதவிடுதலைக்கான தெரிவுகள், பழைய கிரேக்கம்  மற்றும் அன்றைய நீதி பரிபாலனத்துக்கான அரசியல் அறநெறியாண்மையும் அதைத்தாண்டியதும் மற்றும்  கி.மு. 7 ஆம் நூற்றண்டுடிலிருந்த  டராக்கோனிய முறைசார் அறவியலானது [Draco  was the first legislator of Athens in Ancient Greece.  ] கி.பி. 4 ஆம் நூற்றாண்டு க்கான சீன எண்ணப் பாடுகள் வரை ஒரு கெட்டிப் படுத்தப்பட்ட மேலாண்மை வர்க்கத்தின் மனவாசைகள்-கற்பனைகள் "புரட்சிக்கார ஏசுவையும் " நானூறாண்டுகளில் மறந்ததுபோய்விட்டதென்பதில் உலக தர்மத்தைத் தாண்டிச் சீனத்துடன் புதிய மாற்றுக்களைக் கொணரப்போகுதென்பதை  இன்றைய இலங்கைச்  சமுதாயம் கணிக்கிலெடுத்திருக்குமோ தெரியாது!

பொதுவாக நிலம்-புலம் , அதுசார்ந்த மக்களது  சக்தி மற்றும் ஆதிக்கம்  குறித்த பலப்பரீட்சையுள் சமன் செய்வது சாதாரணமானது அல்ல. சக்திவாய்ந்த மேற்குலக  அரசாட்சி நிலவும் சர்வதே ஒழுங்காண்மைக்குத் தோதான நேட்டா அணிச் சேர்கையானது வலிந்து சீனாவையும்-இருசியாவையும் ஒரு இலக்கு நோக்கிய அணிக்குள் வன்முறைசார்ந்து கூட்டொத்துழைப்புக்கெனவும் கனி வளங்களைத் திருடிக் கொள்வதின் தொடரில், இராணுவத் தந்திரத்துள் இருசிய-சீன நிலைப்பாடுகள்   வல்லமைக்கு நிகரானதே!
தமிழகத்து மாணவர்களை இந்தவிடத்தில் பொருத்தும்போது 1960 களில் யேர்மனியில் எழுந்த மாணவர்களது போராட்டத்தில் ஒரு ரூடி டுச்கே[Alfred Willi Rudi Dutschke was the most prominent spokesperson of the German student movement of the 1960s  ]  இன்றுவரை  மூன்றாம் உலகத்துள் வெற்றிடமாகவே இருக்கிறது.

இந்த நிலைமைக்கேற்ப  ஐ.நா.வில் அமெரிக்கத் தீர்மானமென்பதை இலங்கையில் இனங்களுக்கிடையிலான சமத்துவமின்மையின் விளைவாக வகுப்பெடுப்பதென்பது கயமைத்தனமாகவே பார்ப்பதாகவேண்டும்.அமெரிக்க- ஐரோப்பிய மண்டல நலன்கள் கூட்டிணைவுகளுக்குள் பேசப்படும் சன நாயகமானது கங்கேரியில் பல மில்லியன்  சிந்தி-ரோமா மக்களைத் துவசம் செய்யும்போது விக்டர் ஓர்பானை [Viktor Orbán, Prime Minister of Hungary  ]ரோம் போப்பிலிருந்து யேர்மனியப் பிரதமர்வரை முத்தமிட்டு வரவேற்பதில் எந்தச் சமத்துவத்தைக் காணமுடிகிறது?

ஆக,மொழிவுகளைத் தாண்டிச் சமத்துவம் ,சகோதரத்துவம், ஒருமைப்பாடுகளைப் பிரஞ்சியப் புரட்சியின் அறுவடைக்குள் வைத்து, நம்மைத் தரிசிக்க அறை கூவலிட்டாலும் நமது மண்ணுக்கெனச்  சில சிறப்பியல்புகள் உண்டு.அதைக் கண்டடைந்தால் இந்த ஐ.நா.வொரு செல்லாக் காசு!.

-ப.வி.ஶ்ரீரங்கன்
25.03.2013