Tuesday, December 29, 2009

ஊடக தர்மம்

சேதுவுக்கு ஒரு முகம்-"செய்தியாளன்".
 
-சேது ரூபன்: சில கருத்துகள்
 
சேது ரூபன் கேட்கின்றார்"ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா?-குற்றமா?" என.
 
இதை யாரிடம் கேட்கின்றார்?
 
பொதுவானவொரு மக்கட்டொகுதியின்முன்!
 
நன்று.
 
இதுவரை,புலிகளுக்கும் உங்களுக்குமானவுறவு,தனியே"செய்தியாளன்"என்பதாக இருக்கின்றதெனப் புலம் பெயர் மக்களுக்குச் சொல்கிறீர்கள் இதன் மூலம்!நீங்கள் புலியினது அரசியலை"தமிழீழத்தின்"பொருட்டு ஏற்று,அவர்கட்காகக் கருத்துக்கட்டியதென்பதை பலரும் அறிவர்.இந்த அரசியற்போக்கில் உங்களுக்கும் அரசுக்குமானவுறவு தனியே"செய்தியாளன்"என்பதுவரை நீடித்ததாகவிருந்தால், இலங்கை அரசு சசிகரனை-திச நாயகத்தைக் காரணமின்றித்தாம் கைது செய்து கூட்டில் அடைத்திருக்கிறது என்றாகிறது!
 
சேது ரூபன் என்ற "செய்தியாளன்"புலிகளையும்,அவர்களது கொலை அரசியல்-போராட்டத்தையும்"நியாயப்படுத்தியது அவரது(சேதுவின்) ஜனநாயக உரிமையென இலங்கை அரசுகொள்ளும்பட்சத்தில், அதை, ஏன் சசிகரனுக்கும்-திசநாயகத்துக்கும் வழங்கவில்லை என்ற கேள்வி எனக்கு விடையளிக்கிற அளவுக்குப் புரிதற்பாட்டை ஏற்படுத்தவில்லை!
 
இன்று,இலங்கை அரசுக்காகச்"செய்தி கேரிக்கும்-கருத்தூன்றும்"சேதுவுக்கு எங்கிருந்து"புலிகள் வேறு-செய்தியாளன் வேறு"என்ற தத்துவம் சரியாக இருக்கோ, அதை அவர்சார்ந்த அன்றைய புலியும் இன்றைய இலங்கை அரசும் கவனத்தில் கொள்ளாதது சேதுவின் பிரச்சனை இல்லை!அது,அமைப்பினது-அரசினதும் பிரச்சனை.எனவே,சேது சொல்லும்போது அதைப் புரியாதவர் கற்றுக்குட்டி.
 
இந்தப்பிரச்சனையை மேலும் விருத்திக்கிட்டுச் செல்ல முனையும்போது,சில கேள்விகள் எழுவது தற்செயலானது இல்லை.அது,வர்க்க அரசியலில் வர்க்கஞ்சார்ந்த கொள்கைகளுடைய நமது உணர்வில் அறுதியான-கறாரான புரிதற்பாடு.
 
 

என்றபோதும்,சேது,"செய்தியாளன்".
 
இதன் தெரிவில், இன்று பாசிச இலங்கை அரசோடு கைகுலுக்கும்போது அது தமிழ் பேசும் மக்களது பிரச்சனையுள் கையாண்ட இலங்கையினது பாசிசத்துக்கும் சேதுவுக்கும் எந்த முரண்பாடுமில்லை.காரணம்: சேது வெறும்"செய்தியாளன்"-உலகினால் அங்கீகரிக்கப்பட்ட "செய்தியாளன்". இத்தகைய "செய்தியாளன்" புலிகள் வலுவாக இருந்தபோது, புலிக்காகக் குரல் கொடுப்பது அவரது தார்மீகக் கடமையாகிறது அது குற்றமில்லை!-இதைக் குற்றமென்று எவனும்-எவளும் உரைக்கமுடியாது-இது சேது அவர்களது வாதம்!
 
நன்று, அன்பா-நன்று!
 
இதை,இன்று உரக்கக் கூறும் காலமொன்று உருவாகியுள்ளது.
 
நீங்கள் கைகுலுக்கும்"விரிந்த"தளங்களின் மூலம் உங்களைப்போன்றவொரு செய்தியாளனான திச நாயகத்தை உங்களுடன் உறவாடும் இலங்கை அரசு 20 வருடச் சிறையுள் தள்ளியுள்ளதே! அது, குறித்து உங்களது குரலைக் காணவில்லையே?-இது, ஏன்?
 
உங்களால் இலங்கை அரசிடம் இவ்வாதத்தைக்(செய்தியாளன் வேறு-புலிகள் வேறு) கறாராகச் சொல்லமுடியுமா? அங்ஙனம், முடியாதுபோனால் உங்களது ஊடகவியல் தர்மத்துக்கமைய அதை உலகத்தில் அம்பலப்படுத்திப் போராடமுடியுமா?-இது உங்களது கடமை இல்லையா?
 
சேது ருபன் கேட்கிறார், புலிகள் ஏன் தன்னைத் துரோகியாகப் பார்க்கவேண்டுமென.அதாவது,தான் புலியின் உறுப்பினர் என்றால் மட்டுமே அஃது, துரோகமாம்.அஃதாவது, புலிகள் "துரோகி"சொல்லிப் போட்டவர்கள் அனைவரும் புலிகளது உறுப்பினர்தாம் என்று சொல்கிறார்.ஆகப் புலிகள்"துரோகி"என்று கொன்றவர்கள் அனைவரும் புலிகளது உறுப்பினர்களானால், புலிகள் தமது அரசுடனான உறவாடலில், முதலில் கொன்று தள்ளப்பட்டிருக்க வேண்டியவர் பிரபாகரனே.ஏனெனில், அவர்தாம் தனது சுமூகமான உறவாடலைப் பிரேமதாசாவுடன் செய்து,தனது தாய் தந்தையரை இலங்கை அரசின் விமானம் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கூட்டி வரச் செய்தவர்.
 
இது,வேறு-செய்தியாளனது கடமை வேறு!சொல்லக்கூடும்.சேது,இதைச் சொல்வார்.ஏனெனில்,அவர் புலி உறுப்பினரில்லை-மாறாகப் புலிக்கு ஆதரவாகக் கருத்துக்கட்டியது மட்டும்தாம்.இது,அவரது ஜனநாயக உரிமை!
 
புலிகளில் கணிசமான தலைவர்களுக்குக் கொள்கை-கோதாரி ஒன்றும் இருந்ததில்லை என்பதற்குச் சேது ரூபன் ஒரு உரைகல்.காற்றடிக்கும் திசைக்கேற்ப அவர்கள் பட்டம் ஏற்றிக்கொள்வர்கள்.இதுதாம,; அடியாட்சேவையின் இன்றைய உதாரணம்.
 
மக்களைச் சார்ந்து,அவர்களது விடுதலைக்காக இனவாத ஒடுக்குமுறை அரசை எதிர்த்துப்போராடும் அமைப்புக்கு-பத்திரிகையாளனுக்கு, ஒருபோதும் இத்தகைய நடிவடிக்கையைச் செய்ய எதிரி அநுமதிப்பதில்லை.
 
அரசுக்கும்,புலிக்கும் உறவுவைவைத்து அடுத்துக்கெடுக்கும் உளவாளிகள் மற்றும் ஒடுக்குமுறையாளர்களது ஏவல்படைகளுக்கேதாம் இத்தகைய நிலைப்பாடும்,உறவும் நிலைக்கமுடியும்.இன்றைய புலிகளது அழிவுக்குச் சேது போன்றவர்களது பாத்திரம் மிக நேர்த்தியாக இயங்கி இருக்கிறது.இதைப் பார்க்காத புலிகளது விசுவாசிகள், ஒடுக்கும் வர்க்கத்துச் செய்தியாளன்-பத்திரிகையாளன் இந்து இராமைப் போட்டுத் தாக்கினார்கள்.உள்ளிருந்து கருவறுத்த சேது போன்ற"செய்தியாளர்களை"கவனத்தில் எடுக்காது, தமது நட்பு சக்தியாகக் கனவுகண்டார்கள்.இப்போது,"செய்தியாளன்"உலகு தழுவி ஒடுக்கும் வர்க்கத்தோடு கைகுலுக்கும்போது அது"செய்தியாளன்"தார்மீக உரிமையாகிறது அன்பர் சேதுவுக்கு!
 
புலிகளின் கணிசமான புலம்பெயர் தலைவர்கள்-பினாமிகளும் இத்தகைய"கொள்ளை"யின் நிமித்தம் இப்போது இலங்கை அரசோடு கைகுலுக்குவது இந்த அர்த்தத்தில்தாம்.
 
வாசகர்களே,ஒன்றை வடிவாக இனங்காணுங்கள்!அதாவது,இலங்கைப் பாசிச அரசு மக்களைக் கொன்று புலிகளை அழித்ததுமட்டும் வரலாறு இல்லை.அத்தகைய அரசை மிக நேர்த்தியாகத் தாங்கும் இத்தகைய "செய்தியாளர்கள்"தாம் அதன் பாசிசப்போக்கின் கொலைக் களத்தை நியாயப்படுத்தும் முதற்றரமான உந்து சக்திகள்!
 
இலங்கை அரசை ஆதரித்துச் செய்தி வெளியிடும் செய்தியாளர்களை நாம் கூறுகிறோம்"ஒடுக்குமுறை அரசினது கைக்கூலிகள்"என்று.
 
அது,பரந்துபட்ட மக்களது நலனினது அடிப்படையில்.
 
இப்போது,சேது ரூபன் இலங்கை அரசோடும்,அதன் அடக்குமுறை ஜந்திரத்தோடும் உறவாடித்தாம் செய்திகளை மக்களுக்குச் சொல்வதாகவிருந்தால் சேது ரூபன் பரந்துபட்ட மக்களுக்கு எதிரான அரசுசார்பு-ஒடுக்குமுறை ஜந்திரம்சார்பு ஊதுகுழல்.
 
இத்தகைய ஊடக தர்மம் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மை இனங்களதும்,பரந்துபட்ட இலங்கை-உலக மக்களதும் எதிரி என்பது நிர்ணயமானது.
 
புலிகளின் பினாமிகளுஞ்சரி,புலித்தலைமையும்சரி ஒருபோதும் மக்கள் நலனுடனான கொள்கையுடன் இருந்தவர்களில்லை என்பதை சேதுவின் இன்றைய நிலையிருந்து உரைக்கும்போது,அவர்களில் கணிசமானோர் இன்று இலங்கை அரசின் பின்னேதாம் நிற்கின்றனர்.இது,எதனால் ஆனது?
 
இதுதாம் வர்க்க நலன் என்பது!
 
புலிகள் உழைக்கும் வர்க்கத்தின் பரம எதிரி-பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களது வர்க்க எதிரி.இதுவேதாம் இன்றைய புலிகளது நிலைக்கான சரியான தெரிவு.இதுவேதாம்,அந்நிய அடியாட்படையென நாம் புலிகளை வரையறை செய்ததற்கான அடிப்படைக் காரணம்.அதன் உச்சபட்ச அரசியலை இன்றைக்குப் புரிவதற்குச் சேது ரூபன் ஒரு உதாரணம்.
 
சேது மீளவும், அடித்துக் கூறுகிறார்"சேது ரூபன் பாசிசக் கோட்டையின் உறுப்பினர் இல்லை"என.ஆகப் பாசிக் கோட்டை என்பது புலிகள்மட்டும்தாமென இந்தப் புத்திஜீவிச்"செய்தியாளர்"புரிவது புலனதகிறது.
 
இலங்கை அரசைப் பாசிசக் கோட்டை இல்லை என்று, இதன் மறுபுரிதலை அவர் சொல்லிச் செல்வது மிக அவசியமாகப் புரியப்பட வேண்டியது!
 
இன்று,புலிகளது விசுவாசிகள் தமக்குள் இருந்த விரோதிகளை இனங்காணாமல், நம்மைப் போட்டு"எட்டப்பன்-காக்கை வன்னியன்"என்று வாந்தியெடுக்கும்போது,முழுமொத்த தமிழ்ச் சமுதாயமே மிகப் பின்தங்கிய புரிதலில் உள்ளது புலனாகிறது.புலிகள் என்ற அமைப்பு, முழுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் தம்மைப்போலவே உருவாக்கித் தமது அடியாட்பாத்திரத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்துவிட்ட வரலாற்றுப்பாத்திரத்தில் சேது ஒரு உரைகல்.
 
இதற்குமேல், சேதுவுக்கு மக்கள் சமுதாயம் வர்க்கமாக இருப்பதால் அங்கு வர்க்க அரசியலும்-வர்க்க ஒடுக்குமுறையும் உள்ளதென்று கூற நாம் என்ன மூடர்களா?
 
சேதுவுக்குத் தனது வர்க்க நிலை நன்றாகவே புரிந்துள்ளது.அது,இனிவரும் அரசியலில், சேதுவை இலங்கையின் ஒரு தொகுதிக்குப் பாராளுமன்ற உறுப்பினராக்கும் அரசின் முயற்சியில் கொணர்ந்து நிறுத்தினாலும் ஆச்சரியமுண்டோ?
 
சேதுவிடம் இரட்டை முகமில்லை என்று அவரே உரைப்பது சரியானது!அது,ஆளும் வர்க்க-ஒடுக்குமுறை வர்க்கத்தின் ஒரே முகம் என்பது சரியானதுதாம் சேது.நான் அதை ஏற்கிறேன்!
 
நீங்கள்,உங்கள் பரந்துவிரிந்த உறவுகளைச் செவ்வனவே செய்வீர்கள் என்பது உங்களது கருத்திலிருந்துகொள்ளதக்கதே.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
29.12.09

எனக்கும்,சேது ரூபனுக்கும் நடக்கும் உரையாடல்

தேசம் நெட்டில் எனக்கும்,சேது ரூபனுக்கும் நடக்கும் உரையாடல்.

இது முழுமையான தேடலை நோக்கி நகர்வதற்கு சேதுவை எனது தளத்துக்கு வரும்படி அழைக்கின்றேன்.

தேசம் நெட்தான் வசதியானால்,அங்கே மேலும் தொடர்வோம்.

ஸ்ரீரங்கன்
29.12.09

http://thesamnet.co.uk/?p=18429


சேதுரூபன் on December 29, 2009 12:23 pm

ப.வி.சிறீரங்கன்
ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா? குற்றமா? என்னதான் உங்கள் அறிவு? ஒரு செய்தியாளன் தமிழீழ போராட்டத்தை நியாயபடுத்துவது தவறா? குற்றமா? அப்ப எதிர்பது குற்றம் இல்லையா? எந்த உலகில் எவன் சொன்னது? இன்றும் இலங்கை தமிழ் ஊடகங்கள் ஆதரவாகவே செய்திகளை வெளியிடுகின்றது ஆகவே அவர்கள் குற்றவாளிகளா? புலிகள் வேறு செய்தியாளன் வேறு என்ற வேறுபாடு தெரியதவராக தாங்கள் இண்றும் உள்ளது வேதனைக்குரியது. சேதுருபன் ஏன் துரோகியாக வேண்டும்? சேதுருபன் புலி உறுப்பினராக இருந்தால்தானே புலிகள் அவரை துரோகி என்று அறிவிக்க முடியும்? சேதுருபன் துரோகி என்றால் இலங்கையில் ஊடகங்களில் சேலை செய்யும் 100க்கு மேற்பட்ட தமிழ் செய்தியாளர்கள் துரோகிகளா? ஊங்களை எட்டபன் என்று புலிகள் சொன்னால் அதற்கு சேதுவா பொறுப்பு?

சேதுவிடம் ஒரு இரட்டை முகமும் இல்லை. ஒரு செய்தியாளன் சட்டபடி அனைத்து தரப்புடனும் தொடர்பில் இருக்கவேண்டும் அவனே பூரணமான செய்தியாளன். தங்கள் வாதம் மாட்டுக்கும் ஆட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஆதங்கம் நண்பரே. உங்கள் பாதிப்புக்கு சட்டத்தை நாடலாம் அல்லது உளவியல் மருத்துவரை நாடலாம் அதுக்கு சேதுவிடம் பரிகாரம் இல்லை. சேது தங்கள் தாக்கத்தை செயதியாக மட்டும் வெளிவிட கூடியவன் அதுவே அவன் தொழில். சேது பாசிசக்கோட்டையில் உறுப்பினர் இல்லை என்றுதானே உரத்துக் கூறுகிறேன். சேது புலி என்றால் அவருடைய தகட்டு இலக்கம் என்ன? கண்டு அறிந்து சட்டத்தை நாடவேண்டிதுதானே? நீங்கள் புலியால் பாதிக்கபட்டால் சேதுவிடம் ஏன் சீறிப்பாய வேண்டும்? புலிகளை வக்காளத்து வாங்கியது சேது மட்டுமா? 500 இணையத்தளங்கள் 50 ஆயிரம் உலக ஊடகங்கள் 50 இலங்கை ஊடகங்கள் ஆகவே இவை அனைத்தும் பாசிசத்திற்கு பொறுப்பானவர்களா? அப்ப புலி தலைவரின் பேட்டியை ஒலிபரப்பிய உலகின் 1 இலட்சம் ஊடகமும் பொறுப்பாளிகளா? எட்டபர்.கொம் நானா நடாத்தினேன்? நிதர்சனம்.கொம் எனது இணையமா? நான் எவரிடம் இருந்தும் பாதிக்கவில்லை. நான் எழுதிய கட்டுரையில் சேந்து குடித்து என்றோ சேந்து படுத்து என்றோ எதுவும் எழுதப்படவில்லையே? அது நடந்திருந்தாலும் அதில் என்ன தவறு? அது எனது தனி மனித உரிமை இல்லையா? குடிப்பது தவறா? புலிகளை காட்டி கொடுப்பது எனது தொழில் இல்லையே? உமக்கு சட்ட உரிமை இல்லை என்று ஆர் சொன்னது? உமது சட்ட உரிமையை நான்தான் தட்டி பறிச்சனா? புலிகளால் நீங்கள் வெருட்டபட்டால் அதற்கு நானா பொறுப்பு? நண்பரே எனது தொடர்புகள் பரந்து விரிந்தவை. அவை இங்கு தேவை அற்றவை.



P.V.Sri Rangan on December 29, 2009 1:25 pm Your comment is awaiting moderation.


சேது,நீங்கள் பத்திரிகையாளன் என்பதைப் பயன்படுத்திவிடுவீர்களென நான் எண்ணியது சரி.அப்போது,நாங்கள் எல்லாம் உங்களது பாசையில் ஆடு மாடு வித்தியாசத்தில் கற்றுக் குட்டிகளா?

நீங்கள் ஊடகத்துறைக்கு வருவதற்குமுன் நானும் எழுத்தாளனாக-கட்டுரையாளனாக-பத்திரிகையாளனாகத்தாம் இருக்கிறேன்.இதுள் உங்களைமட்டும் இனம் காட்ட நீங்கள் குறித்த பத்திரிகையாளன் எனும் பதம் இப்போதைய”அரச-புலி”உறவுகள் குறித்துச் சொல்வதற்குப் பொருத்தமாக இருக்கும்.ஆனால்,வரலாற்றைத் திரும்பிப்பார்பவர்களுக்கு மிகத் தெளிவாகப் புலிகள் பக்கங்கள் தெரியும்.அதாவது, உங்களைப் போன்று பலருடன்-அரசு-அமைச்சகர்கள்,வெளியுலகமெனத் தொடர்பு வைத்த எத்தனை ஊடகவியலாளர்களைப் புலிகள் துரோகியாகக் கண்டு பொட்டுவைத்தார்கள் என்பது.ஒன்றா இரண்டா?


இப்போது,உங்கள் தரப்பு நியாயத்துக்கு இது பொருத்தமாகக் கையாளுகின்ற லொஜிக் ஏன் மற்றவர்கள் தரப்பில் பொருத்தப்பாடில்லை?

புலிகள் உங்களையும் பொட்டு வைக்கவில்லையெனக் கருதுவதாக இதைக் குறுக்காது,நமது சமுதாயத்தில் புலிகளது பாசிசப் பக்கங்களையும்,அவர்களுக்காக வக்காலத்துவேண்டிய ஊடகவியலாளர்களையும் நாம் இனங்கண்டு,அவர்களது இரட்டை வேடத்தைப் பொதுத் தளத்தில் அம்பலப்படுத்துவது ஜனநாயகப் பண்பு.உங்களது பாணியில் பத்திரிகையாளன் என்பது செய்திகள் தொகுக்கும் வேலைமட்டுமல்ல.அது,விரிந்த தளத்தில் எல்லாவகை எழுத்துக்களோடு சமுதாயத்தின் மீதான பிரச்சனைகளை முன் வைப்பவர்களுக்கும் பொருந்தும்.உங்களது பத்திரிகா தர்மத்தின்படி சமூக விரோதப் போராட்டத்தை எங்கே-எப்படி மக்கள் முன் வைத்தீர்கள்?புலிகள் குறித்து உங்கள் மதிபீடென்ன?பத்திரிகையாளன் அனைவருடனும் தொடர்பு வைப்பதுக்கும் தனிமனிதர் வைப்பதற்குமான வித்தியாசத்தைக்”காட்டிக்கொடுப்பு-செய்தி சேகரித்தல்”என்றோ அர்த்தப்படுத்தப்படும்?


P.V.Sri Rangan on December 29, 2009 2:00 pm Your comment is awaiting moderation.


சேதுவுக்கு இன்னுமொன்றையும் கூறிவிடலாம்.இப்போது நீங்கள் பத்திரிகையாளன் என்பவன் பலமட்டத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்பதும்,அவர்கள் அப்பொழுதுதாம் முழுமையான பத்திரிகையாளர் என்பதும் சரியானால்,இது இந்துப் பத்திரிகை இராமுக்கும் பொருந்திவிடுந்தானே?

நீங்கள் ஆம் என்பீர்கள் இப்போது.

ஏனென்றால், உங்களுக்கான ஒரே துரும்பு இது.ஆனால்,இத்தகைய சந்தர்ப்ப அரசியலை விட்டு,ஒரு பத்திரிகையாளன் ஒடுக்கப்படும் மக்களுக்காகக் குரல் கொடுப்பதும்,அதிகாரத்தை கேள்வி கேட்பதும் அவசியமானது.

"புலிகள்தானே இந்து இராமைத் துரோகி என்றனர்.நான் இல்லையே" என்றும் உங்களால் சொல்ல முடியும்.இப்போது, நீங்கள் ஒரு பத்திரிகையாளன்.சுந்தரின் வானொலியில் குமாரதுரை குறித்து நீங்கள் கட்டமைத்த கருத்துக்களம், பத்திரிகைக் காரருக்கு உள்ள தார்மீகக் கடமையில்தாம் நிகழ்ந்ததா?

எனக்கு, மக்களுக்குத் துரோகமிழைத்த புலியுஞ்சரி;குமாரதுரையுஞ்சரி;இராமும்சரி;நீங்களும்சரி மக்களை ஏமாற்ற முனையும்போது அனைவருமே சமூக விரோதிகள்தாம்.மக்களைப் போலித்தனமாக எவர் ஏமாற்றிப் பாசிசத்துக்கு-அதிகாரத்துக்கு முண்டுகொடுக்கின்றாரோ(அதுள் நான் உட்பட)அவர்கள் பரந்துபட்ட மக்களதும்-ஜனநாயகத்தினதும் எதிரிகளே.

அவ்வளவுதாம்.

நீங்கள் உங்களை நியாயவாதியாகக்காட்டும் உரிமையை நான் மறுக்கவில்லை.அது அனைவருக்கும் பொதுவானதென்பதே எனது வாதம்.

சேது ரூபன் உமக்கு இருக்கும் சட்டவுரிமை எமக்கும் உண்டுதானே?

ஃது,தேசம் நெட்டில் போடப்பட்ட பின்னூட்டம்.சேது கேட்கின்ற நியாயம் குறித்தான தேடலில், புலிகளால் அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டு,இன்றும்"துரோகியாக"பல புலிவிசுவாசிகளால் உளவியற்றாக்குதலுக்குட்படும் நான், அதே நியாயத்தைக் கேட்பதற்காக இதை பதிவிடுகிறேன்!
 
புலிகளும்,அவர்களது விசுவாசிகளும் இப்போது "வெள்ளைவேட்டிக் கத்தசாமிகளாக"த் தம்மை இனங்காட்டுகின்றனர்.பாசிசச் சேட்டையால் மற்றவர்களைக் கொன்று தள்ளியவொரு கூட்டம்,தம்மை மனிதாபிமானிகளாகவும்;ஜனநாயகவாதிகளாக்காட்டவும் இந்தத் தருணத்தில் வெளிப்படையாகப் பேசுவதென்று முலாம் பூசும்போது,இவர்களால் பாதிப்புக்குள்ளாகியவர்களும் அவர்களது நியாயத்தில் தமக்கும் அதே அளவுகோல் இருப்பதாகச் சொல்கின்ற உரிமைக்காக நானும் பேசுகிறேன்!
 
எனக்கு,இவர்களது ஒற்றைத் தன்மையிலான நியாயமும்,இரட்டை வேடமும் எப்போதோ புரிந்தவொன்றுதாம்.எனினும்,புலிகளது மக்கள் விரோதம் எத்தகையது என்பதைப் புரிய இப்பதிவு வழி வகுக்கும்.
 
நாம்,சமூக விரோதிகளைப் பல தளங்களில் இப்போது இனங்காணமுடியும்.அவர்கள் தம்மால் தாமே அம்பலமாகி வருகின்றனர்.
 
 

 
>>எனது இப் படத்தை பிலிக்கரிலிருந்து வெட்டியெடுத்துச் சாத்திரி என்ற புலிவிசுவாசி,எனக்கெதிராக-நான் மகிந்தாவை அடிபணிந்து மகிந்தாவிடம் ஆயுதம் வேண்டுவதாகப் பொருத்திப் புலிக்காகக் குரல் கொடுத்தார்.இப்படத்தை இங்கே போடுவதற்கான காரணம்:புலிகளது விசுவாசிகளும் புலிகளும் ஒரே பாதையில் நடந்தார்கள் என்பதற்கே!எட்டப்பர் டொட்.கொம்இப்போது,என்னைப்பற்றி எழுதிய பழைய லிங்கில் சண்டே லீடர் பற்றி எழுதிவிட்டுப் புதிய லிங்கில் எனது படத்தை எடுத்துவிட்டு,அவதூறைமட்டும் விட்டுள்ளார்கள்.படம் கழற்றியதற்கான காரணம்:அப்படம் ரீ.ரீ.என் தொலைக்காட்சியால் பிடிக்கப்பட்டதென்பதும்,அத்தொலைக்காட்சி புலியுடையதென்பதும்,எனவே,எட்டப்பர்.கொம் புலிகுரியதென்றதையும் இல்லாதாக்குவதற்கே.புலிகள் இப்படி எத்தனை சுத்துமாத்துச் செய்வினம் என்பது உலகறிந்தது.<<

எட்டபர்.கொம் பழையசுட்டி:

எட்டப்பர்.கொம் புதிய சுட்டி:

------------
 
 
P.V.Sri Rangan on December 29, 2009 8:46 am Your comment is awaiting moderation.
 
சேது இரூபன் தன் வாக்குமூலத்துடன் ,தனக்கு இலங்கை அரசு-தூதுவராலயம் உட்பட ;அமைச்சகர்களுடன் தொடர்பிருந்ததாகச் சொல்கிறார்.இது பல வருடங்களாக.அத்துடன் ,புலிக்கு விசுவாசமாகவும் கருத்துக்கள் உரைத்துத்"தமிழீழ"போராட்டம்பற்றி- நியாயப்படுத்திப் புலிக்கு-புலியாகச் செயற்பட்டவர்.இது வரலாறு-புலம் பெயர் ஊடகங்களைக் கேட்டவர்கள்-பார்த்தவர்களுக்குத் தெரிந்தது.
 
 
இங்கு என்ன கேள்வியென்றால்,புலிகள் தம்மை எதிர்ப்பவர்கள் மாற்றுக் கருத்து வைப்பவர்கள்மீது "கருத்து"க்கட்டித் துரோகிகளாகப் பொதுத்தளத்தில் ஒருவரை"இனங்"காட்டும்போது-அவர்களுக்கு இலங்கை அரசோடும்-தூதுவராலயத்துடன் தொடர்பிருப்பதாகச் சொல்கிறது.இப்போது, சேது இரூபன் சொல்கிறார் ,தனக்கு, புலிகள் மற்றவர்கள் மீது போர்த்திய "அனைவருடனும்" தொடர்பிருந்ததாக.
இங்கே, புலிகளது தர்மப்படி சேது ரூபன் ஏன் துரோகியாக முடியவில்லை?
 
மற்றவர்கள் ,புலிகளது பாசிசத்தை அம்பலப்படுத்தியபோது: டுசில்டோர்ப் மே தினத்தில் ரீ.ரீ.என் தொலைக்காட்சியின் கமராவில் பிடிக்கப்பட்ட எனது படத்துடன் -என்னை எட்டப்பனாகக் காட்டிப் புலிகள் "கருத்து"க்கட்டிப் போட்டது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்-இங்கே, புலிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த இந்தவிசயம் சொல்லப்படுகிறது.
 
சேது ரூபனது வாக்குமூலம் மிக முக்கியமானது.புலிகளதும்-அவர்கள் விசுவாசிகளதும் இரட்டை முகத்தைப் புரிந்துகொள்ள.
 
 

 
 
புலிகளால் மிரட்டப்பட்டுத் தொடர்ந்து உளவியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நான், இப்போது எங்கே நியாயம் கேட்கலாம்?;என்னைப் போல் எத்தனை தனிமனிதர்கள் இவர்களது பாசிசச் சேட்டையால் பாதிக்கப்பட்டோம்?
 
இப்போது ,சேது ரூபன் தனது உறவுகளை வெளிப்படையாகப் பேசுகிறார்.இதுவே-புலிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும்.புலிகளுக்கு வக்கலாத்து வேண்டியவர்கள் முதல், அவர்களது உறுப்பினர்கள்வரை அனைவரும் புலிகளது பாசிசத்துக்குப் பொறுப்பானவர்கள்.எனவே,இவர்களுக்கும் அதே சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
 
எட்டப்பர்.கொம்-நிதர்சனம் என எத்தனை நூறு புலி ஊடகங்கள் மக்களை வெருட்டிப் பணிய வைத்தனர்?
இன்று இவர்கள் சுயமாகப் பாதிக்கப்படும்போது நியாயம்-சட்டம் எனப் பூச்சாண்டி காட்டுகின்றனர்.
 
எனக்கு, இலங்கைத் தூதுவர் காரியாலய அதிகாரிகளோடு உறவென்றும்;சேர்ந்து குடித்ததென்றும்,புலிகளைக்காட்டிக் கொடுப்பதாகவும் உரைத்தவர்களே இப்போது தமக்கும் நியாயம் கேட்கின்றனர்.இதுள், சேது ரூபன் எங்கே நிற்கிறார்?
 
எம்மைப்போன்ற நிலையுள்ளா;
அன்றிப் புலிப் பினாமிகளது நிலையிலா?
 
 
சேது ரூபன் உமக்கு இருக்கும் சட்டவுரிமை எமக்கும் உண்டுதானே?
 
 
புலிகளால் தொடர்ந்து வெருட்டப்பட்ட-உளவியற் தாக்குதலுக்குள்ளான-படங்கள்போட்டு எட்டப்பனாக இனம் காட்டபட்டவர்களுள் ஒருவனாக... இப்போது, நியாயம் எவரிடம் கேட்பதென்று யோசித்தபடி ,உமது(சேது ரூபன்)நிலையையும்-வாக்கு மூலத்தையும்கண்டு இதை எழுத முனைந்தேன்-அவ்வளவுதாம்!
 
"முற்பல் செய்தால் பிற்கல் விடியம்"என்று தமிழிலும் பல அநுபவ மொழி உண்டு.
 
 
அது, இப்போது நிஷமாகி வருகிறது.
 
…ம்… புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தக் கோட்டில் நியாயம் கேட்கிறது?
 
புலிகள் நிசத்தில் தற்போது அடையாளம் காட்டுவார்களா?
 
சேது ரூபனுக்கு இது தெரியாதா என்ன?
 
கேளுங்கள் சேது நியாயத்தை-அது உங்களுக்கு மட்டும் உரித்தானது இல்லை.மற்றவர்களுக்கும் எனப் புரிந்து அவர்களுக்கும் உள்ளதை அங்கீகரித்து.
 
இப்படி அங்கீகரிக்கும்போது, நீங்கள் "ஈ.ரி.பி.சி."வானொலியில் வைத்த அனைத்துப் பழி சுமத்தலுக்கும் பொறுப்பேற்று.உங்கள் குரலில் நீங்கள் புலிக்காக மற்றவர்கள்மீது பழி சுமத்தியதன் ஒலியிழை பலரிடம் ஆதாரமாக இருக்கு.
 
அதை வைத்து, அவர்களும் சட்ட நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
29.12.09
காலைப்பொழுது மணி:9.45
 
 
 



புனைபெயரில் ஒழிந்து கொண்டு பத்திரிகா தர்மம் பேசும் எஸ் சிவரூபனுக்கு….. : நடராஜா சேதுரூபன்
 
 
எஸ் சிவரூபன் தனது சொந்த முகத்துடன் கட்டுரையை வெளியிடாமல் தனது உருட்டுக்கும் புரட்டுக்கும் புனைபெயரில் கவர் எடுத்துக்கொள்கின்றார். சேதுவும் தேசம் ஜெயபாலனின் பொறுப்பற்ற பத்திரிகா தர்மமும் (http://thesamnet.co.uk/?p=18428) . : எஸ் சிவரூபன் பத்திரிகா தர்மம் பற்றிப் பேசுவதற்கு இவருக்கு எவ்வித அருகதையும் இல்லை. இவரிடம் உள்ள தாழ்வுமனப்பான்மையே இவரை மற்றவர்களது கல்வித் தகுதி திருமணம் போன்ற விடயங்களை கேவலப்படுத்த காரணம் என நினைக்கிறேன். என்னைப் பற்றிப் பிழையான தகவல்கள் பல உலாவருகின்றது. உங்களைப் போன்றவர்கள் ஒழிந்திருந்து செய்கின்ற ஊத்தை வேலைகள் தான் நிதர்சனத்திலும் இடம்பெற்றிருக்கும் என நினைக்கின்றேன். தற்போது நீங்கள் தேசம்நெற்றை இன்னொரு நிதர்சனமாக்கி இருக்கிறீர்கள்.
 
கட்டுரையாளர் எஸ் சிவரூபன் என்ற பெயருக்குள் ஒழிந்திருப்பவரிடம் நான் கேட்பது என்னைப் பற்றி எழுதிய ஒரு விடயத்திற்காவது உங்களுக்கு ஆதாரம் இருந்தால் அதனை நீங்கள் உங்களது சொந்தப் பெயரில் அல்லது எஸ் சிவரூபன் என்ற பெயரில் ஒழிந்து கொண்டே வையுங்கள். நான் எழுதுவதை நிறுத்துகின்றேன். அது எனது குழுந்தைகள் மீது சத்தியம். அப்படி ஆதாரத்தை வைக்காவிட்டால் நீங்கள் எழுதுவதை நிறுத்துங்கள்.
 
1. ‘புலிகளின் நிதர்சனம் டொட்கொம் என்ற புலிகளின் இணையத்தளத்திற்கு நிர்வாகி ஆகிய சேது என அழைக்கபடும் நடராசா சேதுரூபன் என்பவருக்கு தமிழ் எழுதவோ வாசிக்கவோ தெரியாதவன்’ என்கிறார் இந்த கட்டுரை எழுதியவர்.
 
அப்படியானால் அவர் என்ன மொழியில் இணையம் நடாத்தினார்? தொடர்பில் இருந்திருந்தால் தமிழைத் தவிர உலக மொழிகள் எதுவுமே பாவிக்காத புலிகளுடன் என்ன மொழியில் சேது உரையாடி இருப்பார்? நான் தற்போது தேசம் இணையத்திற்கு தமிழில் தான் பதில் எழுதி உள்ளேன். சேதுவுக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ தெரியாது என்பது கட்டுரையாளனின் தலைசிறந்த கண்டுபடிப்பு.
 

 
நிதர்சனம் இணையத்தளத்தை சேதுரூபனாகிய நான் இயக்கியதற்கான ஒரு ஆதாரத்தைத் தானும் கட்டுரையாளர் முன்வைக்கட்டும்.
 
சேதுரூபனாகிய நான் பொட்டமானுடன் நேரடித் தொடர்பில் இல்லாத போதும் அப்படி இருந்ததாக அடம்பிடிக்கும் கட்டுரையாளர் நான் பொட்டம்மானுடன் நேரடித் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்தட்டும்.
 
எந்தக் கொலைகளுடனும் அல்லது கொலை செய்தவர்களுடனும் எந்த தொடர்பும் வைத்திராத என்மீது சேது பல கொலைகளுக்கு நிதர்சனம் ஊடாக உடைந்தையாக இருந்தவர் என கூறபட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை வைத்துள்ள கட்டுரையாளர் ஒரு செய்தியைத் தானும் ஆதரமாக காட்ட முடியுமா என்பதே சேதுருபனாகிய எனது சவால்.
 
மத்திய கல்லூரி அதிபர் ராஜதுரையுடைய கொலைக்கும் அது பற்றிய செய்திக்கும் அது வெளியான இணைய ஆசிரியருக்கும் இணையத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி இருந்தால் அதனை வெளியிடுங்கள். எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள்.
 
இவை சாதாரண குற்றச்சாட்டுகளும் அல்ல. தண்டனைக்குரிய குற்றங்கள். இவை அனைத்தும் திட்டமிட்ட முறையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட புலம்பல்கள். ஒரு தாழ்வுமனப்பான்மை கொண்ட ஒருவர் ஒழிந்திருந்து கொண்டு புலம்பியதை விமர்சனம் என்ற பெயரில் வெளியிட்டது தேசம்நெற்றின் தவறு.
 
Sethuruban with TELO Selvam and EPRLF Sureshபுலிகளுக்கும் சேதுவாகிய எனக்கும் தனிப்பட்ட தொடர்பு இருந்திருந்தால் அதை மறைக்க வேண்டிய தேவை எனக்கு எள்ளளவேனும் இல்லை. எனக்கும் ஈ.பி.டி.பிக்கும் புளோட்டுக்கும் ரெலோவுக்கும் ஈ.பி.ஆர்.எல்எவ்க்கும் இராணுவத்திற்கும் பொலிசுக்கும் இன்னோரன்ன பல சக்திகளுடனும் தொடர்பு இருந்தது அதை நான் ஏன் மறைக்க வேண்டும்?
 
2. 1998 காலபகுதியில் ஊடகத்துறையில் புகுந்து கல்வியையும் முழுநேர ஊடகத்துறையையும் தொடராக ஆரம்பித்து இலங்கை அரச தொலைக்காட்சி கொழும்பின் தமிழ் தேசிய பத்திரிகை ஊடாக யுத்த களத்து செய்தி சேகரிப்பு வரை ரிபிசி வானொலி, ஈரிபிசி வானொலி அதன் பின்னரான பல சர்வதேச ஊடகங்கள் வரை வேலை செய்து வருகிறேன். இந்த 11 வருடகால வராலாற்றை ‘ஒரு வயது குறைந்த ஒரு மூன்றாந்தர கோமாளி’யாக வர்ணித்தமை எழுத்தாளரின் தாழ்வு மனப்பான்மையை கட்டியம் கூறி நிற்கின்றது.
 






   
Tsunami Donation_to_Veerakesari_Journalistபாலாவின் பச்சில் ஊடகத்துறைக்குள் புகுந்து பாலா இறக்கும் வரை தொடர்பில் இருந்த வீரகேசரி பிரதம ஆசிரியராக 2006 வரை இருந்த பாலவின் ஊரவரான நடராஜா ஊடாகவே சேதுவும் வளர்க்கப்பட்டான். நடராஜாவுக்கும் பாலசிங்கத்துக்குமான செய்தி தொடர்பாளனாகவும் சமாதான காலத்தில் தனிபட்ட முறையில் சேதுவாகிய நான் செயற்பட்டிருந்தமை முக்கியமானது. 1994ம் ஆண்டுவரை அன்ரன் பாலசிங்கத்தின் அதிகமான மறைவிடங்கள் யாழில் கரவெட்டி துன்னாலைப் பகுதிகளே.
 
வீரகேசரியில் வேலை செய்த காலத்திலும் பாதுகாப்பு தரப்பினரது அனுமதிப் பட்டியல் தொடர்பான விபரங்களை பெற்று வெளியிடுவதே எனது வேலையாக இருந்தது. இலங்கையின் யுத்த முனைக்கு பிபிசி ஆணந்தியுடன் ஒரு சந்தர்பத்தில் அனுத்த ரத்வத்தை சகிதம் வன்னி களமுனைக்கு சென்று வந்தேன்.
 
Sethuruban with Rathika Kumarasamy3. ஒரு செய்தியாளன் என்ற முறையில் இலங்கை அரசும் உத்தியோகபூர்வமாக சேதுவுடன் நோர்வே வந்த நாளில் இருந்து பல்வேறு அதிகார மட்டங்களில் தொடர்பில் இருந்தது. இன்று 08 வருடங்களாக இலங்கையின் நோர்வேக்கான தூதுவராலய அதிகாரிகள் அனைவராலும் சேது அறியபட்டவராகவே இருந்தான். சேது புலியாகவோ அல்லது புலி உளவுக்காறனாகவோ இருந்திருந்தால் இலங்கை அரசால் தனது நாட்டு பிரஜைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும். இன்றும் எடுக்க முடியும். இங்கு வைக்கபட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதையும் இலங்கை தூதுவராலயம் நோர்வே அரசுக்கோ அல்லது சேதுவுக்கு எதிராக ஏன் முன்வைக்க இல்லை?
 
Sethuruban with British Parlimentarians and Councilor4. சேதுரூபன் லண்டனை விட்டு வெளியேறவில்லை எவராலும் வில்லங்கமாக வெளியேற்றப்படவும் இல்லை. சேதுரூபனாகிய நான் சட்டரிதியாக 08-11-2002 யு.எல் இலங்கை விமானத்தில் லண்டனில் உள்ள கால்ரன்லெசரில் சொந்தச் செலவில் விமானச் சீட்டைப் பெற்று இலங்கை சென்றேன்.
 
அதன்பின் 2 வாரம் கழித்து மீண்டும் அதே இலங்கை விமானத்தில் கொழும்பில் இருந்து பிரித்தானியா வந்து, பிரித்தானியாவில் இருந்து சட்டரிதியாக நோர்வே சென்றேன். நேர்வே சென்ற பின்பும் சட்டரீதியாக பல தடவை பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் சென்று வந்துள்ளேன்.
 
ஒருவன் நாடு கடத்தபட்டால் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றபட்டிருந்தால் பிரித்தானிய நடைமுறை என்ன என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்.
 
5. "Marriage of convenience மூலமாகவா சேதுரூபன் நோர்வே சென்றார்?" என்பது கட்டுரை எழுதிய எழுத்தாளரின் சிறுபிள்ளைதனமான குற்றச்சாட்டு. சேதுரூபன் திருமணம் முடித்த நாளில் இருந்து குறித்த அதே விலாசத்தில் மனைவியுடன் சீரும் சிறப்புமாக இரண்டு குழந்தைகளுக்கும் தகப்பனாக வாழ்ந்து வருகிறேன். தன்னை புனைப் பெயரில் ஒழித்துக் கொண்டு எனது திருமணம் பற்றி கதைகட்டுகின்ற எழுத்தாளர் பத்திரிகா தர்மம் பற்றி ஊருக்கு உபதேசம் வேறு. குறித்த முறையில் திருமணம் முடித்திருந்தால் நோர்வேக்கு சேதுரூபன் சென்றிருக்கவும் முடியாது. நோர்வே நாட்டு குடிஉரிமை பெற்றிருக்கவும் முடியாது.
 
Sethuruban with UNP politician Jeyalath Jeyawardana6. புலிகள் அழிந்த பின்பு மகிந்தவுடன் தொடர்பு எடுக்க முற்படுவதாக குற்றச்சாட்டு முனைவைக்கபட்டுள்ளது. ஆனால் அது தவறு தற்போதைய வெளிநாட்டு அமைச்சர் முதல் ஜ.தே.கட்சி அமைச்சர்கள் வரை பலருடன் நான் அண்மைக் காலம்வரை தொடர்பில்தான் இருந்தேன். இன்றும் தொடர்பில்தான் இருக்கின்றேன்.
 
7. ஜரோப்பாலில் எனக்கு ரி.பி.சி விடயம் தவிர்ந்த எந்த விடயத்திலும் கிறிமினல் றக்கோட் இருந்தது இல்லை. தற்போது ரிபிசி விடயமும்கூட ஒரு சட்ட தவறாக மாறியுள்ளதால் அதை கிறிமினல் றக்கோட்டாக பார்க்க முடியுமா, முடியாதா என்பது சட்டத்தின் முன் நிக்கிறது.
 
அண்டப் புழுகுத்தனமாக கட்டுரையை எஸ் சிவரூபன் எந்தவித ஆதரமும் இல்லாமல் எழுதி உள்ளார். அதனை தேசம்நெற் விமர்சனம் என்ற பெயரில் பிரசுரித்தும் உள்ளது. தேசம்நெற் பத்திரகா தர்மம் உண்மையானது என்றால் அந்த ஆதாரங்களை வாங்கிப் பிரசுரிக்க வேண்டும். இல்லாவிட்டால் எஸ் சிவரூபனின் சுயரூபத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அவர் இதுவரை இப்படி எத்தனை அண்டப் புழுகுகளை எழுதினார் என்பது வெளிவரும்.
 
 
கட்டுரையாளர் மனசாட்சி உள்ளவராக இருந்தால் இதற்கு ஆதாரங்களை வைக்கும் வரை தயவு செய்து எழுதுவதை - புனைபெயரில் ஒழிந்திருந்து எழுதுவதை நிறுத்த வேண்டும்.
 
http://thesamnet.co.uk/?p=18429#comment-160078

Friday, December 18, 2009

அர்த்தங்காண்,வெற்றி உனக்கே!

நீதி என்பது உண்மைகொள்ளலே.


ன்மாவின் தவிப்பென்ன?காலமெல்லாம் கண்ணீர் சொரிவதற்கென்றா பிறந்தோம்?சுகம் என்பதன் கற்கை என்ன?நீரின் நெடுநாள் உறவுக்கு உயிர் நன்றியைச் சொல்ல, நீரென்ன அதுவேண்டி அலையுமா?இல்லை!சொல்வதற்கு நமக்குள் ஆயிரம் உண்டு.அள்ளிப் பருகிய எம் மக்கள்தம் அர்ப்பணிப்பு இலட்சம்.எங்கெல்லாம் இன்பமென அலைகிறதோ இந்த மனம், அங்கெல்லாம் இன்பமெனும் அற்பச் சுழற்சியில் அவதிகளைக் கட்டிவைத்து, ஆன்மாவை அழிப்பதுதானே உலகத்தின் நியதி?இது,எமக்கு நீதியாக!


இந்த நியதிகளின் பின்னே அலைந்தோடுகிறேன்,அற்பமான எனது உணர்வுகளை கடைந்தேற்ற முடியாத எனக்கு, அன்றைய வாழ்வுக்கு அர்த்தமொண்றுண்டென அப்பப்ப என்னைத் துரத்தும் இந்த மக்கள் குழாம், எல்லாம் செத்து,சிதைந்து மக்கிப்போகும் எலும்புகளோடு உலகெமல்லாம் வரலாற்றைச் சொல்லும் எச்சங்களாகின.


என்ன சொல்வேன்,எப்படி ஏற்பேன்?எனக்கென்றொரு பணியொன்றுண்டானால் எல்லாவற்றையுமே சகஜமாகப் பார்க்கும் மானிடர்தம் வாழ்வில் வதைகளகற்றிய வழிகளைச் சொன்னார், பழிகளைக்கண்டு வாழ்வுக்கு என்னவொரு தேவையென உயிர்கொண்டலையும் என்னையே கேள்விக்குட்படுத்தும் எனது நிலையைச் சொல்வேன்.பொழுது புலர்ந்து விடியலை அண்மித்த சந்தியா வந்தனத்தில் சறுக்கிய எமது பாதங்கள் பட்டுத்தெறித்த புழுதியைக் கேட்டுப்பார், மக்களது அகவிருப்பை.அவர்தம் அன்புக்கு அடிமையான நாங்கள் அவர்களை அழியக்கொடுத்தது எங்ஙனம்?


செம்மண்ணொழுங்கையும் சீற்றியடித்த மண்கவர் சட்டையும்-சடையும் மூக்குத் துவராத்துள் முத்துமண் துளைத்த வாசமும், அந்நியர் தம் பாதங்கள் பதிய என் குடி சிறையினுள் சுமை காவிகளாக...


என் குடியெல்லாம் தரிசனத்துக்காய் முள்ளுக் கம்பிதன் முகவரிசொல்லி வன்னியிலே வழிபார்த்துக்காத்திருக்க,கள்வர்கள் நாம் கடைவிரிக்கும் அரசியலில், அள்ளியவர் மீள அடுப்படிக்குள் நஞ்சு வைக்க நாடகம் போடுகின்றார்-நன்றிகெட்ட நயவஞ்சக வாழ்வுகொண்டு!


இது,வாழ்வா?இல்லை வளங்களைக் குவிக்கும் வழியெனக்கொள்ள மக்கள்தம் அழிவு, உனக்கென்ன சிறுபிள்ளைக் கிலுக்கட்டியா?சொல்லு!உன் சுயத்தை நீ சொல்லு! இதுவன்றி, நீயுரைக்கும் நல்லதென நீகாண் வல்ல தத்துவமும் வதைசெய்யும் என் குடிக்கு.


இஃது, பொய்யில்லை! பொதிசுமக்கும் என் குடியின் வாழ்வு சொல்லும் மீதியை.கனவுக் குடங்கொண்டு, கண்ணீர் நிறைத்து உனக்கும்-எனக்கும் தாகம் தீர்த்த அந்தத் தாயின் புதல்வனைப் புசித்தோம். எமக்காகப் பிட்டு அவித்து, புதிய ஓலைக் குட்டானில் சீனியையும் இனிக்கக் கலந்து, தன் விடியலுக்காய் கொட்டிய அவள், தமிழ்த்தாய்.என் நெஞ்சே கனக்கும் அவள் வறுமை, கொடைக்கு அவளை தடுத்ததில்லையே!


எனக்கும் என் தலைமுறைக்கும் அவளுரைக்கும் மொழியென்ன?சிந்திக்க எனக்கு நேரமில்லை.என் கூட்டத்தின் அவாவுக்கு ஒரு மக்கட்குழாத்தின் குடிகலைப்பல்லவா பலியாகின?குருதி தோய்ந்த தன் கூந்தல் முடிக்காது, எவரெவரோ எடுத்துவைக்கும் வெற்று மொழிக்குள் தம் விடியலுக்கு வழியுண்டாவென அவர்கள் நோக்க, சூரியனே அவர்களைச் சுட்டெரிக்க, சுகமான வாழ்வு அவர்கட்கு மகிந்தா மாமா வழங்கியதாக நீ பதிலுரைக்க,பாவி அவர்களல்ல!


நீயென்றாவது மானிடனோ?


போ,போய் உனது முக்த்தை அவர்கள் முகங்களில் பார்!நீ கீறிய தாறுமாறான கோடுகள் எல்லாம் அவர்தம் முகங்களில் யுத்த வடுவாக சாட்சி பகரும்.என்ன, இன்னுமா ஏய்ப்பதற்கு நீ எடுபிடியாய் அலைகிறாய்ஆ?சின்ன வயிற்றுக்கு நீ பெரிய திமிங்கலங்கள் கேட்கிறாயா?மனிதா, உனக்கு முன் ஆண்டுகெட்ட எத்தனையோ கொடுமுடிகளைக் காண்பாய்.ஏன், மறந்தாய் அன்னையின் கர்ப்பத்திலுதித்துத் தவிழ்ந்த சோதரரை சுட்டுக் கொன்றதற்கு-ஆட்காட்டி அழித்ததுக்கு, உண்மையாய் உள்ளதை, உள்ளபடி சொல்ல?


நாமெல்லோரும் மானுடர்தாமா இன்னும்?


மகத்துவம் என்கிறாயே-புரட்சி என்கிறாயே, அதன் மொழி என்ன?


மக்களைக் கொன்றுவிட்டு, இந்தியாவுக்கும்-அமெரிக்காவுக்கும் கூடவே,மகிந்தாவுக்கும்-பொன்சேகாவுக்கும் நியாயம் உரைக்க உனக்கென உருத்தொன்றுண்டென்கிறாயா?





என்ன, மக்களது உயிருக்கு மகத்துவம் இல்லையென்பதுதானே உனது கனவு.தலைவர்களதும்,உடமையுடையவர்தம் உயிருக்கு நீ பாதுகாப்புக் கவசம் வழங்கிடினும்,உன் தாய் இலங்கையின் எல்லாத் திசையிலும் தன் சேய் வரவையெண்ணி, இருட்டுத்திசையை வெறுக்கப் பார்க்கிறாளே!அவளது மடியினுள் நீ தவழ்ந்தாயா-உன் சுகமல்லவா அவள் மொழியாகியது?மறந்தாயே மனிதா!வடக்குக்கும்,கிழக்கும் எல்லை வைத்து எல்லோரையும் மொட்டையடிக்க உனக்கென்றொரு வாழ்வு.


வா,வா.வந்து பார்!வன்னியின் குடிகளுக்கு நீ உரைத்த வாழ்வு.இத்தனைக்கும் மத்தியிலே, மகிந்தாவுக்கு மகத்துவம் உண்டென்கிறாய்.தேசியமும்,தேசமும் சொன்னவர்கள் குடித்த உயிர்போக, மீதமான எலும்புகளையும் சுவைப்பதற்கு உனக்கும் அவசியம்.உன் தலைவர்களுக்கும் அவசியம்.எதற்காக-எவருக்காக?எந்தப் பொருளுடமைக்காக அவர்கட்கு நீங்கள் முட்கம்பி முடிதரிக்க?


ஏசுவே,உனது பிறப்புத்தினம் இன்னுஞ் சில விடியலில்.என்னவர்க்கு ஏன் நீ இத்தனை கொடுமைகளை இவர்வழி வாழ்வாக்கினாய்?சொல்!நீ மட்டுமேதாம் இதையுரைக்க இன்று, வன்னி முகாமிலே வதங்கியவர்களை வேட்டைக்குத் தயார் செய்கிறாய்.எதற்காக?அவர்கட்கு வாழ்வு மறுத்து,சுதந்திரக் காற்றைத் தடுத்து, உன்னையவர்கள் துதிப்பதற்கு நீ என்ன கொடுமையானவனா?உன் பேர் சொல்லி, மதம் மாறு எனக்கூவும் உன் தூதர்கள்தம் பை நிறைக்க என் குடியா பழிசுமக்கும்?


ஓ,பாவப்பட்டவனே!உன் பழியறுக்க, நீ பெத்தேலேகமல்லவா சென்றிருக்க வேண்டும்?வன்னியிலே உனக்கும் வேலையுண்டா?பாவப்பட்டவனே-பரதேசி ஏசுவே!உன்னைத் தவிர வேறுயாரை நாம் நோக முடியும்?


எல்லோரும் வந்துவிட்டார்கள்.வன்னியிலே வாழ்வர்க்கு "நீதி"வழங்குவதென.ஆனால்,வதைப்பட்டவர் தொடர்ந்தும் வதை முகாமுக்குள்.வாய் நிறையப் பொய்யமுக்கி நீங்கள் கக்கும் அரசியலோ, என் அடுத்த தலைமுறையின் தலைகளையும் கொய்யுமா?அதைத்தாம் நாமினியும் அனுமதிப்போமா?


என் இளங் குடியே!,


கம்பி வேலிக்குள் கண்டுண்டுபோக, உமைத் தள்ளிய கோரக் கரங்களைக் கண்டு நீர் அஞ்சாதே!கண்வலிக்க கம்பி வேலிக்குள் விழிகள் எறிந்து வெறித்துப் பார்க்க உனக்கென்றொருவுலகம் அந்த மண்ணில் உண்டென்றுரைக்க, உனக்கும் காலம் வரும்.கற்றுக்கொள்.பொய்மையும்,நிஷத்தையும் பிரித்து அறிந்துகொள்.உனது சின்ன மூளையுள் சிலிர்க்கின்ற எண்ணங்களைப் பற்றி வைத்துக்கொள்.கயவர்கள் அதைப் பறிக்க இடம் கொடாதே!என்றோ ஓர் நாள், உனக்கும் கால் முளைக்கும்.அப்போது, விடியலுக்கு முந்திய "அவசரப் புத்திகொன்று", உன்னைப் பிணைத்துக்கொள் உனது உறுவுகள்வழி.எண்ணிவிடாதே, இது முடிவென்று.முயற்சி உடையோர் முன்சென்றதென்பது உன் பாட்டன்கள்-பாட்டிகள் அனுபவம்.பயப்படாதே.பாவிகள் "இவர்கள்" உன்னைச் சப்பி மென்றுவிடுவார்களென.நாமும் உன்னைப் பார்த்து உண்மைகளை தூது அனுப்புவோம்.பிரித்து-பிய்த்து மேய்!உனது இரைப்பையுள் உண்மைகளைச் சேர்த்து மென்று உருவாக்கு உன்னை!


உன் குடிக்கு உன்னைவிட்டால் உலகத்தார் எவருண்டு?

உறங்கு நீ இப்போ!

உன் ஏக்க விழியுள் தொக்கி நிற்கும் கேள்விக்குறிக்கு நீ பதிலாவாய்.



இதைவிட்டு,உனக்கெவரும் உறவென்று வெளியிலிருந்து உன் இரத்தமென்றும் உதாவார்.உப்புக்கும் உதாவது உனது உறவுகள், உலகமெல்லாம் உருண்டு மேவுவார்கள்.உன் வாழ்வுக்கும் வழி சொல்வர் வட்டுக்கோட்டை தீர்மானமென்றும்.இவையெல்லாம் அவர்கள் வழிமொழியத் தவறார்.வம்புதாம் இது.தேசம் கடந்து உனக்குத் தேசம் உருவாக்க, நாடுகடந்த "தமிழீழம்"சொல்லியும் பார்ப்பார்.நக்குத் தண்ணிக்கு நீ தவிக்கும்போது உனக்குத் தேசம் குறித்துப் பாடமும் எடுப்பர்.நல்லதோ கெட்டதோவென நீ காண்பதற்குமுன் உன் நினைவைக் கொல்வர் இவர்.


தேடு,உனக்கு நடந்த கொடுமைகளது கோடுகளைத் தேடிக் கற்றுக்கொள்!


புலத்திலிருந்து உனக்கான குட்டிக் கரங்களும் பல்மொழியுரைத்து உண்மை சொல்வர்.


பயப்படதே!


அவர்கள் உண்மைகளைத் தேடி உலகத்தின் பாடசாலைகளில் இப்போது தம்மை உருவாக்கின்றார்கள்.


நீ, தோழமையை இவர்வழிமட்டில் உரைத்துப் பெற்றுக்கொள்.என் தலைமுறையை நீ கிஞ்சித்தும் நம்பிவிடாதே.உன் உயிரை மீளக் குடிப்பதற்கு நாம் மே.18 என்று இயக்கமுரைத்து உன்னைக் கொல்ல, உலகத்தின் கொடியவர்தம் கூடாரத்தில் ஒதுங்கியுள்ளோம்.


இதை பற்றிப்பிடி.


எம்மை நம்பாதே!


நாம் உன் குரல்வளையில் நகம் பதிக்க, நடுத்தெருவில் உன் ஆத்தாளின் துயிலுரித்து அவளைவிற்பவர்கள்.நன்றிகெட்டவர்கள் நாம்!


நாளைய உலகம் உனக்குத்தாம்!,நம்பு இதை நீ!!


அதற்காக, உண்மைகளையே உண்!பொய்யறுக்க பாடம்கொள் இன்று.


எல்லோரையும் சந்தேகி!


எவர் பின்னாலும் போகாதே.உன்பின்னால் வருவதற்கு ஒரு கூட்டம் உன் வயதில் இங்கும் உண்டு.உனக்கு இனி அறிவுக்குப் பஞ்சம் இல்லை!


உணவுக்கு?...

"..................."


உனக்கு என் முன்கூட்டிய எச்சரிக்கை இது.


இதைவிட நான் ஒரு மண்ணும் உனக்காகச் செய்யப் போவதில்லை.


நீ,கற்றுக்கொள்,உன் தடத்தில் பதிந்துள்ள குருதிக் கறைகளுக்கு அர்த்தங்காண்.வெற்றி உனக்கே.



அன்புடன்,

உன் கொப்பனுக்கு-கோத்தாளுக்குச் சங்கூதியவர்களுள் ஒருவனாகிய,

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்
ஜேர்மனி
18.12.2009

Thursday, December 17, 2009

அனைத்தையும் கேள்வி கேட்பது அவசியம்.

புலிக்குப் பின்னான சூழலில்:மே.18 இயக்கமும்,அதன் கடந்தகால அரசியல் திசைவழியும்.
 
 
-சில கேள்விகள்,சில்லறைக் கவனக் குறிப்புகள்.
 
 
லங்கையின் பரந்துபட்ட மக்கள்மீது நடாத்தப்படும் அதிகாரவர்கத்தினதும்,ஆளும்வாக்கத்தினதும் ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடுவதென்பது பரந்துபட்ட மக்களது தெரிவாக இன்றிருக்கிறது.தமிழ்பேசும் மக்கள் இலங்கை அரசின் மிகக் கொடுமையான அடக்குமுறையாலும்,இலங்கையின் இனம்சார்ந்த ஆளும் வர்க்க முரண்பாடுகளாலும், சிறுபான்மை இனங்கள் இலங்கையில் ஒடுக்கப்பட்டார்கள்-ஒடுக்கப்படுகிறார்கள்.
 
 
இவ்வொடுக்குமுறைகள் மனித நடாத்தையின் அனைத்துத் தளத்திலுமாக(நிலம்-பண்பாடு,மொழி,இன அடையாளம்,சாதிய,பெண் அடையாளம்,பிரதேசம்,ஆன்மீகம்,அறிவு-கல்வி,வரலாற்றுப் பெருமிதம்,உயிரியல்மரபு என...) நடந்தேறியது-நடந்தேறுகிறது!
 
 
இதன் பாதகமான பக்கத்தின் விளைவாகப் பல நிகழ்ந்தேறினெ:
>>இனம்சார் விடுதலை,தனித்தேசம்,புரட்சிகர ஐக்கிய இலங்கை,தொழிலாளர் வர்க்க விடுதலை இத்யாதி<<    எல்லாம் தொடர்ந்த இலங்கையின் வரலாற்றில் அழிவும்,சூழ்ச்சியும் அந்நியர்களால் ஏற்பட்டுத் தமிழ் பேசும் இலங்கை மக்கள் இப்போது இராணுவ ஒடுக்குமுறைக்குள் முழுமையாக உள்வாங்கப்பட்டுத் திறந்தவெளிச் சிறையுள் வாழ்வதாகவெண்ணிச் சாகின்றார்கள்(சாவு எனப்படுவது அனைத்து மனித விழுமியத்தையும் உட்கொண்டது).   இந்நிலையில்,போராட்டப்புறப்பட்டவர்கள் செய்த அழிவு அரசியல்-போராட்டத்தில் பற்பல சிதைவுகள், நமது மக்களைப் பலியிட்டன.     புலிகள் என்பது, அதுள் பிராதான பரந்துபட்ட மக்கள் விரோதச் சக்தி.இது, இலங்கைப் பாசிச இனவாத அரசினது அதே தளத்தில் வைத்துப் பேசப்பட வேண்டியது(ஒடுக்குமுறையாளர்களை இனம்-மொழிசார்ந்து வகைப்படுத்தித் தமக்குரிய பொருத்தப்பாடு(சொந்த இனம்...) ஒத்ததை, ஓரளவேற்று மென்முறையாக அணுகுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்).     இந்தச் சக்தியின்(புலி-அரசு,மற்றைய இயக்கங்கள்-அந்நிய ஆர்வங்கள்) அனைத்துக் கடந்தகால அரசியல் சூழ்ச்சிகளும் இப்போது பகிரங்கமாக ஆய்வுக்குட்படுத்தி, மக்கள்மீது கட்டவிழ்க்கப்பட்ட கொடுமைக்குப் பரிகாரம் தேடியாக வேண்டும்.     இதன்பொருட்டு,இப்போது புதிய வியூகங்களாகத் தொடரும் அரசியலைக் கேள்விக்குட்படுத்தியாகவேண்டும்.     தோற்கடிக்கப்பட்ட மக்களினம் ஒருபுறம்.மறுபுறம், கடந்தகாலப்"போராட்ட"த்தொடர்ச்சி இன்னொரு புறமுமாக நமது மக்களைச் சிந்திக்க விடாது-வாழ்வைச் செப்பனிடவிடாது,இலங்கை அரசினது இராணுவ ஒடுக்குமுறையை மேலும் மக்கள்மீது திணிக்கும் அடுத்தகட்ட"போராட்ட"பாதையென அதே, கயமைமிகு இயக்க வாதம்! இது,தகவமைக்கும் வியூகத்தின் தெரிவில்"மே 18 இயக்கம்"ஒரு குறியீட்டு அரசியலை எமக்குமுன் தள்ளுகிறது.அது,பரவலாக விளங்கத் தக்கது.     >>இதைச் செய்பவர்கள் யார்?,

அவர்களது கடந்தகாலத்தின் போராட்டப் பங்கு என்ன?<< இதன் விளைவாக மக்கள் எங்ஙனம் இலங்கைப் பாசிச அரசுக்கு இரையாக்கப்பட்டார்கள்? என்பவைகள் நீண்ட கேள்விகள்.     கடந்தகாலத்தில், தீப்பொறியாக இயக்க அராஜகத்துக்கு எதிராக மேலெழுந்தவர்கள்,தமக்குள் இலக்குகளை வகுத்துக் கோலாச்சிய இயக்க அராஜகங்களுக்கும்-அந்நிய ஆதிக்கத்துக்கும் உளவு பார்ப்பவர்களாக மாறியது வரலாறு.பின்னாளில்,காலத்துக்காலம் மாறிவரும் சூழலில் தாம்சார்ந்த அரசியலை-சதியை,புரட்சியின்பேரால்-தமிழீழத்தின் பேரால் மக்கள் முன் வைத்தவர்கள் இப்போது,இந்தப் புலிப்போராட்டத்தின் தோல்வியில் மேலெழுந்த சூழலைத் தமக்காகத் தகவமைக்க மேலும் "மே.18 இயக்கத்தை" நமது மக்களுக்குள் முன் தள்ளுகின்றனர்.இதுவே,பரவலாக விமர்சனத்துக்கான தேவையைத் "தீப்பொறி"க் குழுவின் வரலாற்று ரீதியான செயற்பாட்டின்மீது வேண்டி நிற்கிறது.     இதன் அடிப்படையில்,இன்று நம்முன் மீளவொரு கட்சிகட்டி, மக்களுக்காகப் போராடுவதற்குச் சிந்தாந்தத்தோடு(வியூகத்தின் தேசியவாதம்-தேசம் குறித்த கட்டுரை) முன்வந்திருக்கிறார் இரகுமான் ஜான்.கடந்த காலத்திலும் இதே பாணியாக "தமிழீழ" மக்கள் கட்சி கட்டிச் செயற்பட்டார்.     இன்று,எனது விவாதம் இவைகள் நோக்கியது. >இரகுமான் ஜான் என்பது ஒரு பொது அடையாளம்<அது,ஒரு அமைப்பின் குறியீடாகிறது!ஏனெனில்,காலத்துக்காலம் கட்சி-பத்திரிகை,சித்தாந்தமென இவரது தெரிவில் நமக்குமுன் தள்ளப்படுவது(இதைக் குறுக்கி,அவசரம்-தனிநபர் தாக்குதல் என்போர் ஒதுங்குக!இவர்கள் கடந்தகாலத்தில் தம்மால் முன் தள்ளிய தவறுகள் குறித்து இன்னும் மௌனித்திருந்துவிட்டு, நாம் கேள்விகள் கேட்கும்போது அதைத் தனிநபர் வாதம்-தாக்குதல் என்போர் கடைந்தெடுத்த அராஜகத்துக்கான இருப்பை மேலும் தொடர விரும்புவோரென்பது என் தாழ்மையான கருத்து)     இத்தகைய இயக்கப்பாட்டில்,கடந்தகாலத்தில் தீப்பொறிக்குள் நிகழ்ந்த இயக்க அராஜகத்துக்கு(இது மக்கள்மீது பொய்யுரைத்துத் "தமிழீழம்" பேசிப் படுகொலை அரசியல் செய்தும், தமது அந்நிய எஜமானர்களுக்கு உடைந்தையான பாசிசத்தைத் தமிழ்பேசும் இலங்கை மக்கள்மீது மட்டுமல்ல அனைத்து மக்கள்மீதும் ஏவியது.), அதிகாரத்துக்கிசைவான போக்கு எங்ஙனம் நிகழ்ந்தது?இவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜான் தலைமையில் மிக நெருக்கமான மக்கள் நலனைக் காவுகொள்ளும் போக்கோடு,அதாவது, ஒன்று கட்சியாக அல்லது பத்திரிகையாக உருமாறினார்கள்.இந்த வகையில் இவர்களது தெரிவுகள் மக்கள் நலன் என்றும்,ஒடுக்கப்படும் மக்களுக்கு விடுதலையென்றும் சொல்கின்றனர்.   இந்தச் செய்கையின் வழி தம்மால் முன்தள்ளப்பட்ட இயக்கம்,பத்திரிகை முரண்பட்டு,அதிகாரத்துக்கு உளவு(சாதகமாக) ஆதிக்கச் சக்திக்குடந்தையாக இயங்க முற்படும்போது,அதை இயங்கவிட்டபடி,"மக்கள் நல-நேர்மையான,புரட்சிவாதி"இரகுமான் ஜான் வெளியேறிவிடுகின்றாரென, அவரது"தோழர்கள்",விசுவாசிகள் கூறுகிறார்கள்.     சரி,இருக்கட்டும்.அவர் அப்பளுக்கற்ற >புரட்சிவாதியாக< இருக்கட்டும்.அவர் நேர்மையானவரென்றும் இருக்கட்டும்.   இந்த அடையாளம்,அல்லது முகத்தை அவருக்குப் பொருத்தும்போதாம் நமக்குள் கேள்விகள் எழுகிறது.   அக்கேள்விகள் வருமாறு அமைகின்றது:
 
 
காலத்துக்குக் காலம் இரகுமான் ஜான் முன்தள்ளிய செயற்பாடுகள் சீரழிந்து, ஒடுக்குமுறையாளர்களது உறுப்பாக மாறிப்போனதென்றால் அது குறித்து நீங்கள் பகிரங்கமாக >அப்போது< மக்களிடம் இதை அம்பலப்படுதாது எதனால்?   அன்று, புளட்டின் அராஜகத்துக்கு எதிராக நீங்கள் போராடியதென உங்கள் தீப்பொறியை 1985 ஆம் ஆண்டு முன் பகுதியில் மிக நெரிக்கடிக்குள்கொணர்ந்து, மக்களிடம் உண்மைகளைச் சொன்னதென்றும்,அராஜகத்தை-மக்கள் விரோதப் போக்கை மக்களிடம் கொணர்ந்ததாக இருக்கும் வரலாற்றில், தளம் மாறி மேற்குலக ஜனநாயகச் சூழலில் கட்சி-பத்திரிகை செய்தவர்கள்,தமக்குள் முரண்பாடு,புலிக்கு உளவு நிறுவனமாக மாறிய கட்சி,பத்திரிகையை,அதிலிருந்து வெளியேறிய ஜான், ஏன் மக்களிடம் >இதை< அம்பலப்படுத்தவில்லை?   தொடந்து இத்தகைய அமைப்பும்,அதன் கருத்தியல்-சித்தாந்த யுத்தமும் புலிக்கு முண்டு கொடுத்ததை >எதன்< பொருட்டு அனுமதித்தார் இந்த ஜான்?   தனது உயிரன் பெறுமதி கருதியா?   அல்லது, புரட்சியின்(...) தந்திரோபாயம் கருதியா?  


 
அப்போது, இவரால் முன்தள்ளப்பட்ட கட்சி,பத்திரிகை புலிக்கு முண்டு கொடுத்து ஒரு இனத்தையே கொன்றுகுவிக்கும் அரசியலை, போராட்டத்தைச் செய்து மக்களைக் கொல்லும்போது,அங்கு பலியாகிய மக்களது உயிர் இவரது உயிருக்கு-புரட்சிக்கு(...) இணையானதில்லையா?
 
 
இது இப்படிக் கேட்பதில்லை நண்பர்களே!
 
இது அவசியமும் இல்லை.
 
 
இவர்கள் தமது கடந்தகாலத்துக் கள்ள உறுவுகளால் ஏதோவொரு ஆதிக்க சக்திகளுக்கு உறுப்பாகவே இருக்கின்றனர்.அதை, மேலும் தொடர்வதற்காக எதையும் புலிகளைப் போலவே மக்களிடம் முன்வைப்பதில்லை.மூடிய அரசியலினுள்,தமது சதி அரசியலைத் தொடர்வது இவர்களது திசை வழியாக இருப்பதால், மக்களிடம் அம்பலப்படுத்தித் தமது இலக்குகளை உடைக்க இவர்களது அந்நிய எஜமானர்கள் இவர்களை அனுமதிப்பதில்லை.

இப்போதுகூட, இரகுமான் ஜானைக் காப்பதற்கான அனைத்து முயற்சியின் தெரிவில்(அதே இயக்கவாத மாயை) ஏதோவொரு முறையில் "அவர் தவறு செய்தவர்"எனக் கருத்துக்கட்டியபடி, அவர் கடந்தகாலத்தில் தனது அரசியல் நடாத்தையைச் சுயவிமர்சனம் செய்யும்பட்சத்தில் அவரோடு இணைந்து வேலை செய்வதென்கிறார்கள்.
 
நல்லது.
 
 
புலிகளால் பாசிசம்-இயக்கச் சர்வதிகாரம் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்டு, மக்களை ஒடுக்கும் ஒரு அமைப்பை-அதன் அரசியல் சதியை, மேலும் தேசியவிடுதலைப் போராட்ட இயக்கமாக அனுமதித்து, இவர்கள், இதுவரை கொல்வதற்கான சித்தாந்தைத் எந்தப் புரட்சியின் "வியூகத்தின்" மூலம் மௌனித்துச் செயற்பட்டார்கள்?
 
மக்கள்மீது திணிக்கப்பட்ட யுத்தம், தேசியவிடுதலைக்கானதெனச் சொன்ன இவர்களது கட்சி,பத்திரிகை தவறு செய்கிறதென்றும்,உளவு பார்ப்பதென்றும் >ஜான் முரண்படுவதானால் <அவரது வெளியேற்றத்தின்படி, மக்களிடம் தவறான இயக்கத்தை அம்பலப்படுத்தாதுபோனது வரலாற்றுக் குற்றமில்லையா?     வெளியேற்றத்தை, உள் சுற்றாகக் கடிதத்தின் மூலம் வழங்குதலும்-காரணத்தை அதுள் எழுதுவதும்,சதிகார அரசியலை மேலும் இயங்கவிடுவதென்றுதானே அர்த்தமாகிறது?     இவையெல்லாம், அதுவல்ல.   தீப்பொறி,கோவிந்தனின் கொலையோடு, மக்கள் விரோத அரசியலைத் தொடர்ந்து முன்னெடுத்தது.அது வெவ்வேறு சக்திகளால் வழிநடாத்தப்பட்டது.அதுள், இரகுமான் ஜான் தனது அரசியல் சதிகளைத் தன்னைப் பிடிகொடாது நடாத்தி, இதுவரை தன்னைத் தூய புரட்சிவாதியாகக் காட்டுகிறார்.இதுதாம், இன்று எதிர்ப்பு அரசியல் போராட்டங்களைத் தமக்காகத் தகவமைத்துத் திசை திருப்பும் ஆதிக்க சக்திகள் செய்யும் கைங்காரியம்.   இதுள், இரகுமான் ஜான், தன்னால் முன் தள்ளும் ஒவ்வொரு கட்சியும் தவறிழைத்தபோது, அதை மௌனமாக இருந்து அனுமதித்தபடி, தன்னை அதிலிருந்து உடைத்து, அதை மக்கள்மீது இயங்க அனுமதித்து வருவது>ஜான் தன்னைத் தொடர்ந்து உளவு சக்திகளுக்கிசைவான அரசியலில் மேலும் மறைவாக இருத்திக் கொள்வதற்கே<

இது, எந்தத் தவறையும் பொதுவாக ஏற்றுக் கொள்ளும்.

தம்மால் முன்தள்ளப்பட்ட அமைப்பின் கொலை அரசியலை மக்கள் கேள்வி கேட்கும்போது, தவறுளைத் தானே பொறுப்பெடுக்காது, பலரில்-மற்றவர்கள்மீது போட்டுவிட்டுத் தன்னைத் தர்காத்துக்கொள்ளும் உத்தி- கபட நாடகமே இது.வியூகத்தின் தலையங்கம் இதை உறுதிப்படுத்தும்!
 
 
இந்த வகைப் பேர்வழிகளுக்கு உலகு தழுவிய ஆதிக்கச் சக்திகளோடு நிறைந்த தொடர்புகள் இருக்கிறதா?

புரட்சிகரமாக மக்கள் போராடாதிருப்பதற்காக, அவர்களது புரட்சிகரக் கட்சியின் தோற்றுவாயை உடைத்துச் சில உதிரிகளைப் புரட்சிகரமாக இயங்க அனுமதிக்கும் மேற்குலக இராஜ தந்திரமே இவர்கள் மூலம் தெளிவாகிறது.இது, எப்போதும், காலத்துக்கு முந்திய கட்சிகள்-இயகத்தோடு ஒடுக்கப்படும் மக்களிடம் "கட்டியெழுப்பப்படும் அரசியலின்வழி அறிமுகமாககும்".இறுதியில், அந்த மக்கள் கூட்டத்தை அடிமையாக்கிச் செல்லும்.
 
இதுவே,புலியிடமிருந்தும்,இப்போதைய >மே.18 இயகத்திடமும்< இருந்து நாம் கற்கும் பாடம்.இதைத்தாண்டி எந்த இரகுமான் ஜானும் மக்கள் நல அரசியலை முன்னெடுக்கப் போவதில்லை.   இங்கே, உண்மைகளைக் கண்டடையுங்கள்.
 
நானோ அல்லது எவருமே இன்றைய மக்களது வலியைத் தொடர்ந்திருத்தி வைக்க முயற்சிக்க முனையும்போது அதை அனுமதித்தல் சாபக்கேடானது.
 
>அனைத்தையும் கேள்வி கேட்பது அவசியம்.<   கடந்த காலத்தைத் தோண்டிப் பார்த்து, சதிகளை முறியடித்து, மக்களைத் தமது சுய காலில் நிற்க அனுமதிப்பதும் அதன்வழி அவர்கள் தமது இன்னலுக்கு அவர்களே முகம்கொடுத்துத் தமது தலைவிதியைத் தாமே கண்டடைய வைப்பதும், உண்மைகளைப் பேசுவதன் மூலம் நடந்தேறும்.   இந்தவுண்மை நம்மைப்போன்ற சதிகாரர்களை முதலில் இனம் காண்பதற்கே.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
17.12.09

Monday, December 07, 2009

மக்களிடம் உண்மைகளை இடித்துரைப்பதே அவசியம்

இலங்கையில் நேர்வழி "புரட்சி" அமைப்பும்,
அதன் இனியொருவுக்கான பேட்டி அரசியலும்.
 
 
சிறு குறிப்பு.
 
 
லங்கையில் திடீரெனக் கட்சிகள்-அமைப்புகள்,ஆயுதக்குழுக்கள்-மார்க்சியப் புரட்சி அமைகளெனப் புலிகள் அழிவுக்குப் பின்னால் அதிவேகமாக உருவாகின்றன.இத்தகைய அமைப்புகள் உடனடியாக இனியொரு இணையத்தளத்துக்குப் பேட்டிகள்-செய்திகளும் வழங்கிவிடுவதாகவும் இனியொரு இணையம் தெரிவிக்கின்றது.இன்றைய சூழலில் இலங்கையில் நிலவும் அந்நியச் சக்திகளது ஆதிக்க நலன் நோக்கிய அரசியலானதும், தமிழ் அரசியல் கட்சிகள் முதல் பரவலான இனங்கள்சார் கட்சிகள்-குழுக்கள் யாவும் ஏதோவொரு அந்நியச் சக்தியோடு உறவாடி அச் சக்திக்கு விசுவாசமாக இலங்கையில் அரசியல் செய்வதில் மக்களைக் கொல்ல முனைகின்றன.
 
இலங்கையின் அரச வரலாற்றில் இவை புதிதானதில்லை!
 
எனினும்,கொடும் இனவாத அரசியல்-இராணுவ அடக்குமுறைக்கு முகங்கொடுத்து, அழிவுற்ற மக்களை மேலும் மொட்டையடிக்கும் அரசியல் சதி சகிக்க முடியாதது.இதைக் குறித்து கவலைப்படுவதுமட்டும் போதுமா?
 
 
இதைக் குறித்து அம்பலப்படுத்தி, எச்சரிக்கை செய்வதும் அவசியமில்லையா?
 
 
பிரபாகரன் அழிந்தபின்பும் புலம் பெயர் புலிகள் மேற்குலகத்தின் தெரிவில் இயங்கும்போது,அவர்கள் இன்னொரு குறுந்தேசியவாதக் கட்சியோடு-அமைப்போடு இனிமேலும் களமிறங்கவும்கூடும்.அதற்கான தெரிவுகள், அமெரிக்காசார் வியூகத்தில் நிலைபெறலாம்.
 
 
வளரும் ஆசிய முலதனத்துக்கு தடைக்கற்களை இலங்கைபோன்ற இனப்பிரச்சனைகள் உள்ள தேசங்களில் உருவாக்க முடியும்.
 
 
இன்றைய சூழலில் ஆதிக்கத்துக்கு-அதிகாரத்துக்க எதிரான எதிர்ப்பு அரசியலின் நிலை பாதகமாக இயங்குகிறது.அது, பரிதாபகரமாக ஆதிக்கத்துக்குள் உள்வாங்கப்பட்ட கைக்கூலி அரசியலாக நகர்கிறது.ஒடுக்கப்பட்ட மக்கள் தமது எதிர்ப்பு அரசியல் நடாத்தையை இத்தகைய குழுக்களிடம் தாரவார்த்துப் பின் தொடரும் நிலையை ஏகாதிபத்தியங்கள் செவ்வனவே செய்யும்போது,இலங்கையில் இனங்களுக்கிடையிலான அரசியல் நகர்வுகளும் இதிலிருந்து தப்பவில்லை.
 
 
புரட்சி,மார்க்சியக் கட்சி,வர்க்க விடுதலையெனக்கூட இத்தகைய குழுக்கள் அந்நியச் சக்திகளின் தயவிலிருந்து கூக்குரலிடுகின்றன.இந்த நிலையில் இனியொரு இணையவிதழின் ஆசிரியர் குழுவினர் போடும் அரசியல் நாடாகம், எம்மக்களை மேலும் முட்டாளாக்குவது.புலம்பெயர் மக்களது அரசியலையும்,அவர்களது உணர்வுகளையும் மழுங்கடிக்கும் புலிகளது செயற்பாட்டின் இன்னொரு பகுதியாக இனியொரு இணையத்தளம் முயற்சிக்கிறது.இதை நாவலனின்"புலிகளின் பின்னான அரசியல் சக்திகள்"என்ற இட்டுக்கட்டும் கட்டுரையிலிருந்து பார்ப்பதோடு, மேலும் அதன் தடால் அடிப் பேட்டிகள்-செய்திகளிலிருந்து விளங்க முற்படுவோம்:
 
 
 
இனியொரு தடால் அடி:
 
 
இனியொரு இணையத் தளத்தை நடாத்தும்,நாவலனும்,அசோக்கும் மாறி,மாறித் தமக்குத்தாமே மலிவு விளம்பரஞ் செய்வதையும்,அவர்களே புலம் பெயர் மக்கள் வாழும் ஐரோப்பா தழுவிய முற்போக்குச் சக்திகளுடன் கூட்டமைத்துப் போராடுவதாகவும் அறைகூவல்விடும் சாணாக்கியத்தைப் பார்க்கும்போது, நாம் எள்ளி நகையாடுவதா இல்லை இவர்களது போலித்தனமான இட்டுக் கட்டல்களை அம்பலப்படுத்துவதாவென யோசிக்கின்றோம்.
 
இன்றைய பொழுதில் இனியொரு நாவலன் எழுதும் பித்தலாட்டம் தமது அரசியல் நடாத்தையின் விளைபொருளாக வெளித் தள்ளப்படுவதன் உச்சம்,அசோக்குக்குக் காவடி தூக்குவதில் முடிகிறது.கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்பேசும் மக்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கித் தனது சுயநலத்தேவைகளோடு சரணடைந்த நாவலன், இப்போது கிணற்றுக்குள் இருந்து வெளியேறிய தவளையாகப் புலம்பெயர் சூழலைத் தரிசிக்கின்றார்.அங்கே,அவரது கண்கள் கிணற்றின் மையப் புள்ளியையே உலகமாகக் காணுவதன் தொடரில், இனியொருவுக்குள் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துப் பரிணாமமும் அடங்குவதாக ஓலமிடுவதில் அவரை தள்ளியுள்ளது காலம்.
 
 
நாவலனது இந்தக் கட்டுரையில் , நாவலன்தம் மைய நோக்கத்தைப் பாருங்கள்.கட்டுரையின் கருப்பொருளே தம்மை முன்னிறுத்தும் பாரிய மனவிருப்போடு மக்கள் நலன் பேசுகிறார்களாம்.புலியிருக்கும்போது பதுங்கியிருந்த பூனைகள்,புலிகளது அழிவோடு மக்களுக்காகக் கத்துகின்றன!
 
புலிகள்,தமது பாசிசச் சேட்டையினால் மக்களைப்படாதபாடு படுத்திக் குதறியபோதெல்லாம் ஒருவரி எழுத்தக்கூட முடியாத நாவலுனுக்குத் திடீர் தாகம் எடுக்கிறது மக்கள் விடுதலையென.பாசிசத்தின் பிடியில் சிக்கிய மக்களது விடுதலையைப் புறந்தள்ளிய சுயநலக்கனவு, இப்போது தனக்கான இருப்பின் தொடராக மெல்ல அரங்கேறுகிறது.
 
 
ஏமாற்றலாம்.
 



யாரும் நமது மக்களைத் தொடர்ந்து ஏமாற்றலாம்!மக்கள் வலுவிழந்து திறந்தவெளிச் சிறையினுள் தமது வாழ்வுக்காக ஏங்கிக் கிடக்கும்போது அவர்களை எவரும் ஏமாற்றலாம்.
 
 
புலிகளதும்-இலங்கை அரசினதும் பாரிய ஒடுக்குமுறை ஜந்திரத்துக்குள் கட்டுண்டுபோயிருந்த அந்த மக்கள், இப்போதோ தமது தொலைந்த வாழ்வின் எச்சங்களைத் தேடுகிறார்கள்.அத்தகைய மக்களது குரல்வளையை ஒட்ட நறுக்குவதற்கான திசைவழியில் தமிழ் அரசியல் கட்சிகளும்,புலம்பெயர் புலிகளும் செல்லும்போது,அவர்களால் அறுக்கப்படும் மக்களது குரல்வளையிலிருந்து சிந்தும் குருதியைக் குடிப்பதற்கு இந்தக் கூட்டம் மெல்ல வாய்களைத் திறக்கின்றன.அந்த வாய்கள் திறுக்கும்போதே இங்ஙனம் குருதி நெடில்வீசும்போது, மக்களது எதிர்காலம் இன்னும் இருளாகவே இருக்கப் போவதென்பது ஆருடமல்ல!
 
 
அராஜகத்துக்கு எதிராக எத்தனையோ வழிகளில் எத்தனையோபேர்கள் தமது உயிரையும் அர்ப்பணித்துப் போராடியிருக்கிறார்கள்.புலம்பெயர் மண்ணில் 1984 ஆம் ஆண்டிலிருந்து மாற்றுக் கருத்துக்கான குரல்கள் எண்ணங்களாக ஒலிகத்தொடங்கியது.போலித்தனமான இயக்கவாத மாயையை உடைத்து உண்மையான போராட்டப்பாதையைத் தேர்ந்தெடுக்கப் பலர் இப்படிப் போராடியபோது ,பாரிசில் மிகப்பெரும் அரசியல் படுகொலையாக 01.05.1994 ஆண்டு சபாலிங்கம் அவர்கள் கொல்லப்பட்டார்.இப்படி எத்தனையோ மாற்றுக் கருத்துக் குரல்கள் கொன்றழிக்கப்பட்ட இந்த ஆண்டு ஏப்பிரல்வரை(2009) பாசிசத்துக்கு எதிரான அரசியல் அநாதையாகக் கிடந்தது.புலிப்பாசிசத்தின் முடிவு நெருங்கியபோது மேலெழுந்த இந்த நாவலன் வகையறாக்கள் மக்களது விடுதலை குறித்து இயங்கியல்ரீதியாக ஆய்வுகளைச் செய்யவதற்கு எதிர்வு கூறுகிறார்கள்.
 
 
ஆதிக்கச் சக்திகளது எதிர்ப்புரட்சிக்குழுக்கள்:
 
 
இனியொரு நாவலன்-அசோக் அவிழ்த்துவிடும் முற்போக்கு"ஆய்வு"தாம் நமது மக்களது சுயநிர்ணயத்தைக் குறித்த சரியான போராட்டத் திசைவழியைக் கொடுப்பதாகவும் புனைவதற்கான மலிவு அரசியலை நாவலன் நடாத்தும்போது,கிழக்கு மாகணத்தில் மார்க்சியப் போராட்டக்குழு ஈழத்தை நோக்கிப் போராடுவதாகச் செய்தியை ஒரு அன்பன் காதில் போட்டும் விடுகிறான்.
 
 
ஆசிய மக்களது பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறதான தெரிவில், ஆசிய மூலதனம் போடும் வியூகங்களின் நடுவே,மேற்குலகம் தனது இருப்பின் வெளிப்படுத்தல்களை இத்தகைய குழுக்களின்வழிச் சொல்கிறதா?இலங்கைத் தேசத்தின் சுய வளர்ச்சி,அதன் இறையாண்மைசார் பரந்துபட்ட மக்களது விடுதலையென்பது இத்தகைய வல்லாதிக்கச் சதி-வியூகங்களின் நடுவே, பல தரப்பட்ட குழுக்களின்வழி மேலும் குழப்பத்துக்குள்ளாக்கப்பட்டு, இலங்கையின் புரட்சிகர அரசியல் சிதைக்கப்படமுடியும்!
 
 
இத்தகைய இலங்கைச் சூழலில், இனியொரு நாவலன்-அசோக் மட்டுமல்ல நாமெல்லோருமே திறம்பட மக்களைக் குழப்பியபடி அந்நியச் சக்திகளுக்கு இலங்கை மக்களை இரையாக்கி இயங்கமுடியும்.என்றபோதும்,இலங்கையில் புலிகளது அழிவின் பின்னே நிகழும் அனைத்து அரசியலும், தென்னாசியப் பிராந்தியத்துள் நிலவும் மேற்குல ஆதிக்கத்தின் அரசியல் வியூகத்தின் தெரிவில் இயக்கமுறுவதும் சாத்தியமாகிறது.
 
 
ஆசிய மூலதனத்தின் இன்றைய கண்ட அரசியல் மற்றும் சந்தைகளுக்கான விய+கம் இந்தியாவின் செல்வாக்குக்கு உட்பட்ட இலங்கை என்பதையும்தாண்டி இலங்கையில் கூட்டாளுமையை வற்புறுத்துகிறது.இதன்வழி, சங்காய் கோப்பிரேஷன் ஓர்க்கனேஷேசன்(Shanghai Cooperation Organisation) புலிகளை அழித்துத் தமது வியூகத்தை முன்னெடுக்கும் இந்தத் தருணத்தில்தாம் அனைத்து உதிரிக் குழுக்களும் "மார்க்சியம்-புரட்சி-விடுதலை-ஈழப்போராட்டம்" என உறுமுகின்றன.இவைகளின் பின்னே அணி வகுத்துள்ள இந்திய-சீனா தலைமையிலான ஆசிய மூலதனமும்,அமெரிக்கா தலைமையிலான மேற்குலக மூலதனமும், நமக்கு விடுதலை குறித்தும்,புரட்சி குறித்தும் மார்க்சிய வகுப்பெடுக்கும்.கூடவே, புரட்சிகரக் கட்சியையும் கட்டிக் களத்தில் இறங்கிப் போராடியும் காட்டும்.இவையெல்லாம், இலங்கை மக்களனைவரையும் ஒட்ட மொட்டையடித்து இலங்கையின் பாராளுமன்ற அரசியல் பணியையும், தத்தமக்கு ஒத்தூதும் கட்சிகளையும் பதவியில் அமர்த்தி நமது மக்களை ஒடுக்கும் தந்திரமே.
 
 
இன்றுவரை,இலங்கையின் அரசியல்-ஆட்சி நெறியாண்மை சுயதீனமாக இலங்கை ஆளும் வர்க்கத்தால் வழி நடாத்தப்படுவதில்லை.இது, அறிவியல்சார் உண்மை.இலங்கையின் ஆளும் வர்க்கம் தரகு முதலாளிய வர்க்கமாக இருப்பதால் அது தத்தமது எஜமானர்களுக்கிசைவான ஆதிக்கத்தை இலங்கைக்குள் அவர்களது தெரிவில் முன்தள்ளுகிறார்கள்.இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் அனைத்துத் தெரிவும் தமது நலனையும்,இருப்பையும் தாம்சார் அந்நியச் சக்திகளோடிணைந்து இலங்கையில் நிலைப்படுத்துவதே.
 
 
வரும் ஜனாதிபதித் தேர்தல்கூட இதன்வழி இரண்டு பிரிவுகளான இலங்கைக் கட்சியாதிகத்துள் நிலைத்திருக்கும் இலங்கை அளும் வர்க்கங்கள்-பிரிவுகளது நலன்களே மேற்குலகைச் சார்வதும்,ஆசிய வல்லாதிக்கங்களைச் சார்வதுமாக இருக்கிறது.இதுள் சீருடைகளைந்த இராணுவ ஜெனரலும்,சீருடையணியாத இராணுவ ஆட்சியாளனும் மல்லுக்கட்டுவது தத்தமது எஜமானர்களது கனவுகளுக்கு இலங்கையைத் தகவமைப்பதற்கே.இதையொட்டி வருகின்ற அனைத்து முரண்பாடுகளும் மக்களை ஒட்ட மேய்ந்து ஏப்பமிடும்.
 
 
மக்களிடம் உண்மைகளை இடித்துரைப்பதே அவசியம்:
 
 
வன்முறையை அன்றாட வாழ்வாக்கிய இலங்கைக் கட்சி-பாராளுமன்ற"ஜனநாயகத்தில்",நமது மக்களது அழியப்பட்ட வாழ்வு மேலும் அந்நிய ஆதிகச் சக்திகளால் சிதைவுறும்.பொன்சேகாவோ அன்றி இராஜபக்ஷாவோ மக்களது வலிகளையும்,அவர்களது சிதைவுற்ற சமூக சீவியத்தையும் செப்பனிட முடியாத திசையில்தாம் அரசியலை முன்னெடுக்கப் போகிறார்கள்.
 
 
இதுள்,மேற்குலகைச் சாரும் பொன்சேகாவும் ஆசிய மூலதனம் எடுக்கும் அனைத்து அரசியல் வியூகத்தையும் சிதைக்க முடியும். குறிப்பாக,இன்றைய ஆசிய மூலதனத்தின் செயற்திட்ட வடிவங்கொண்டிருக்கும் வியூகம்(குறிப்பிட்ட தேசங்களில் நிலவும் இனங்களுக்கிடையிலான தேசிய இனப் பிரச்சனைகளைக் கிடப்பில் போட்டுவிட்டு,போரினால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரங்களைச் செப்பனிடுதல்,பொருளாதார முன்னெடுப்புகளால் அதன் வாயிலாகவெழுந்த முரண்பாட்டை மெல்லத் தணித்தல் என்பன இதன் திட்டத்துள் அடக்கும்).
 
 
இத்தகைய அரசியல் போக்கிலிருந்து,போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் அனைத்து மக்களது பரிதாப நிலைகுறித்துத்தாம் இப்போது யோசிக்க வேண்டும்.
 
 
இதுள், அரசியல் ஆதயமடையமுனையும் இனியொருபோன்ற அரசியல் வேடதாரிகள், இலங்கையின் இன்றைய அரசியற் சூழலைத் தமது பங்குக்கும் பயன் படுத்த முனையும்போது இதை அம்பலப்படுத்தும் பணியில், தமிழரங்கமும் தன் வலுவுள்ள வரை போராடுகிறது.இதுதாம் இப்போதைய அவசியமான தேவை.
 
 
மக்களிடம் உண்மைகளை இனங்காட்டல்.அவர்களுக்கு எதிரான அரசியல் போக்குகளை அம்பலப்படுத்தல்,எதிர் புரட்சிகரமாக எழும் ஆயுதக் குழுக்களைக் குறித்து எச்சரித்தல்.மார்க்சியத்தின் பெயரில் அந்நியச் சக்திகள் இலங்கை அரசின் ஆசியோடு புரட்சிகர அமைப்பு வேடம் பூணுவதுகூட நடைபெறும் இன்றைய சூழலில், உண்மைகளை இனம் காட்டுதலன்றி வேறென்ன தெரிவைச் செய்ய முடியும்?
 
 
இதுதாம், தமது தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் பாதையை ஒடுக்கப்படும் மக்கள் கூட்டம் கண்டடையவைக்கும் முதன்மையான தெரிவு.எதிர்காலத்தினது எதிர்ப்பு அரசியலின் தலைவிதி இங்ஙனமே மீட்சியடைய முடியும்!
 
 
இப்போதுள்ள எமது பணி மக்களிடம் உண்மைகளை எடுத்துச் செல்வது.
 
 
இதைக் குறித்துத்தாம் நாம் தொடர்ந்து எழுதுகிறோம்.
 
 
மக்களுக்குத் தவறான அரசியல் மூலம் கெடுதிசெய்யும் ஆயுதக்குழுக்களும்,அவைகளின் அந்நிய எஜமானர்களும் ஒரு வகையில் இலங்கைப் பாசிச அரச ஜந்திரத்துக்கு ஒத்தே இயங்குகிறார்கள்.
 
 
மக்கள் குறைந்த பட்சமாவது இச் சூழலை எதிர்த்து வாழத்தக்கவர்களாக, அவர்களது மனோ திடத்தை உருவாக்கி விடவேண்டும்.இத்தகைய வினையின் விளைவினாற்றாம் அவர்கள் தமது கடந்தகால அழிவுகளிலிருந்து மேலெழுந்து, எதிர்காலத்தைத் திடமோடு எதிர்கொள்வார்கள்.
 
 
இதுவே,மக்கள் தமது தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கக்கூடிய சக்தியை அவர்களிடம் தோற்றுவிக்கும்.
 
 
 
எனவே,பொய்களை-சதியை உடைத்து, உண்மைகளைப் பேச முனைவோம்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
 
வூப்பெற்றால்,
ஜேர்மனி
 
07.12.2009

Sunday, November 15, 2009

நீட்சேக்கு "நான்" முகவுரை எழுதியபோது...

அச்சமுடையவர்கள்,
அதிகாரத்துவமுடையதொரு சமூதாயத்தைக்
குறித்துக் கனவு காண்கின்றனர்!


னிதர்களாக இருப்பதற்கு மனிதர்கள் ஏன் முயற்சிக்கவேண்டும்?
 
நீ,உனது சுயத்தில், மனித நடாத்தையில்தானே வாழ்கிறாய்-பின்னெதற்கு மனிதர்களாக இருப்பது?
 
இந்த மனிதர்கள் என்பதன் கற்பிதம் எங்கிருந்து தொடர்கிறது?
 
உன்னை மேல்நிலைப்படுத்தும்போது நான் உனது கற்பிதத்திலிருந்து விலகிவிடுகிறேன்.
 
உன்னிலிருந்து நான் கீழ்மைப்பட்டதாக நீ கற்பிக்கும்போது, எனக்கு மேலான சாதியாகவோ அன்றி இனமாகவோ நீ நிலைத்திருக்க விரும்புகிறாய்.உனது விருப்பம் எதன் பொருட்டும் உனக்கு விருப்பமற்றதை அழிப்பதில் அந்த "மேல்நிலையை"(Übermensch)உருவகப்படுத்துகிறது.உன்னிலிருந்து ஆரம்பமாகும் உலகாக நீ,உனக்கும்-புறவுலகுக்குமான புரிதலைக் கொள்வதில் என்னைத் தொடர்ந்து அழிக்கிறாய்.எனினும்,நீ,கனவுகளுக்குத் தீனி போடும் எமது"வடிவ"மனித விருப்புக்கு உகந்தவனாகும்போது,அப்பப்ப உன்னைப் பிரதி செய்வதில் நான் நிறைவடைகிறேன்.
 
நீட்சேக்கு "நான்" முகவுரை எழுதியபோது,நடுத்தெருவில் நின்றது எனது சந்ததி.அன்றைய பொழுதொன்றில் எலிசபெத் நீட்சே அவசரமாகக் கைத்தடியைக்கொடுத்தாள் கிட்லருக்கு-ஒருத்தி!
 
ஏனென்றாள்,எதற்கென்றாள் தனக்குள்!
 
அவளது விருப்பத்துக்குரிய மேல்நிலை மனிதன் வந்துவிட்டான்-பிறந்துவிட்டான்.அவனது பின்னால் அவனைத் தகவமைத்த ஈ.ஜீ.பார்ப்பன்(I G Farben) இரசயானத்தை உலகுக்கு வழங்கியபோது,அதன் தெரிவில் உலகாளும் மேல்நிலை அவசியத்தைப் பிரதி பண்ண நீட்சேக்கு நன்றிக்கடனாகத் தடியைத் தன் கனவானுக்குக் கொடுத்தாள் அவன் தங்கை(Therese Elisabeth Alexandra Nietzsche).
 
 
 
எல்லோரும் வாருங்கள் வாசல் வரையும் வந்து தரிசிப்போம்
எங்கள் மேலவனை-வெல்வதற்காகவே நாம் சூரியக் குழந்தைகளாகப் படைக்கப்பட்டோம்.
 


 
கடவுளது கட்டளைக்காரர்களுக்கு(Der Rat der Götter;Die Aufsichtsratsmitglieder der I. G. Farben nannten sich im internen kreis "Der Rat der Götter"ஈ.ஜீ.பார்ப்பன் என்ற இரசாயனத் தொழிலகத்தின் மேற்பார்வையாளர்கள்-கட்டுப்பாட்டாளர்கள் தம்மைத் தாமே உள்ளக ரீதிய அழைத்துக்கொண்ட வார்த்தை"கடவுளின் கட்டளையாளர்கள்"என்பது..),கடவுள் செத்துவிட்டான் என்றவன் சாக,அவனது தெரிவின் மேல்நிலை மனிதன் கனவினது வடிவத்தில் ஆரியக் குழந்தைகளாவும் அகலக் கால்வைக்கும் ஆண்டவக் குழந்தைகளாகின.
 
இதன் தெரிவில் செத்தவன்போக,சிறந்தவன் கிட்லர் என்றே இன்றும் ஜெர்மனியர்களில் பலர் அக மகிழக் கூட்டம் வான் நோக்கிக் கை அசைக்க, "மேல்நிலை" அவர்களுக்குள் தெளிவாகவே புரிகிறது.நீ,எங்கு-எது செய்தாலும் நீ வெல்வோனாக இருவென ஆண்சார் புடை நெஞ்சு அகவ,அத்தனைக்கும் ஆரியமே ஆளுந்தகமையுள்ள அதி மானுடத்தின் திசையில் மேல் நிலையுள் மெலிதானவர்களைப் புதைத்தே ஆகவேண்டும்.
 
நீ,நஞ்சை உற்பத்தி செய்திடினும்-அது
கீழ்நிலையானுக்குப் பிணியகற்றும் ஓளடதம்
கொன்றழித்தலென்பது விருப்ப-வடிவத்தின் வினை என்ப
உனக்கே எனது அண்ணனின் திசையைத் தெரிவாக்கிறேன்!
 
கைத்தடிதாம் இது?
இல்லை,உலகை ஆள்வதற்கான செங்கோல்
செஞ்சேனை கட்டிக்காத்த இருஷ்சிய மண்ணில்
சோகமாய் கிட்டலர் காலில் தொங்கிய மானுடம் கீழ்நிலை
 
கொடிய வதைகள் எல்லாம்
விருப்ப மானுடத் தெரிவில் உலகைக் கடைந்தேற்றும்
கோபுரமுள்ள கோவில்கள் என்று கொடியை ஏற்று-அது
ஆரிய சாம்பிராஜ்யத்தை அழகு என்று சொல்லும் அதிமானுடன் வணங்க!
 
 
தத்துவத்துக்கும்,நடைமுறைக்குமான புள்ளியில் அறுபது மில்லியன் மக்களுக்குச் சமாதிகட்டக்கூடிய வலுவுக்கு உரம் போட்டது இந்த "மேல்நிலை"மனித நிலை-விருப்பு.இந்த உரத்தோடு வளர்தெடுத்துச் செல்வத்தின் இருப்பைக் கொள்ளையிட முனைந்தவர்கள் மேல்நிலையை விரும்பியவர்கள்.அப்போது,விருப்பமென்பது ஒரு நிலை.அது,ஒரு குழுவுக்குரிய விருப்பாகவே என்றும் இருப்பதால் அந்தக் குழுவிலிருந்து அந்நியப்படும் பெரும்பகுதி மக்கள் கீழ்நிலையை அடைகிறார்கள்.
 
அதீத புனைவுக்கு எது அவசியமான தெரிவாக இருக்கிறது?
 
அச்சமுடையவர்கள்,அதிகாரத்துவமுடையதொரு சமூதாயத்தைக் குறித்துக் கனவு காண்கின்றனர்!
 
அந்த அதிகாரம் நம்மிடம் புலிவடிவிலும்,பிரபாகரன் வடிவிலும் நிலைத்திருந்தது.அதன் முடிவு,கிட்லரது முடிவோடு நெருங்கும்போது எஞ்சியது ஏமாற்றம் மட்டுமல்ல.அது,நோக்கிய விருப்பின் தெரிவில் கற்பனைக்குள் "அழ்மன விருப்பு" அதி மானுட நடாத்தையும் தான்.இந்த விருப்பு இன்றுவரையும் ஜேர்மனியர்களை எங்கும்-எதிலும் முதன்மை பெறவேண்டுமென்ற துடிப்புக்கும்,மற்றவர்களை ஏற்காது-பரிகாசிக்கும் பண்புக்கும் விரட்டிக்கொண்டிருக்கு.
 
 
கட்டுக்குள் இருக்கும் அதிகாரம்,கண்டுகொள்ளவதற்கு நீட்சே சொன்ன வடிவ-விருப்பு"மேல்நிலை"மனித நடாத்தை புரியத்தக்கபோது புரியாத புதிராக நம்மை ஆட்டும்.மதத்தினதும்,பெண்ணினதும் இயல்புகளைச் சதா வருத்தத்துக்குரிய பகுதிகளாகக் கண்ட நீட்சேக்கு சரதுஷ்டரா துணைக்கு வருகிறான்.சொல்லாத பக்கங்களென்ற ஒன்றிக்கு அவன் கொடுத்த "ஊபமென்ஸ்"தன்முனைப்பின்பாற்பட்டதென்று சொல்வதிலும் சிக்கலொன்று உண்டாக்குவதற்கு அவனுக்குக் கைகொடுத்தது"அதிகாரத்தின் ஆண்மை"இது திரும்பத்திரும்ப வரும்.அழியும் அழிந்து மீளத் தன்னைத் தகவமைக்கும்.இந்த நிகழ்வூட்டத்தோடு திசை நோக்குகிறது இன்றைய புதிய நாசிகளது திசைவழி.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
 
15.11.2009

Thursday, November 12, 2009

சமூக விரோதிகளின் திசையமைவு

உண்மைகளை இனங்காணும் பாதை...
 
 
னவுகளைக் காவுகொள்ள ஒரு வினாடியை ஒதுக்கிவிடுவோம்.கனவினால் ஆனது எதுவுமில்லை.தூங்கிய பொழுதெல்லாம் எமது வாழ்வு பறிபோனது.ஆயிரக்கணக்கான மைல் தாண்டி நம் மண்ணையிழந்து புகலிடம் தேடிய வாழ்வு, தாயகத்தை நோக்கிய திசையில்...
 
யார் யாருக்காகவோ மனிதர்கள் செத்தார் நம்மிடம்.
 
நாடு பிரிப்பதற்காய்ப் போராடி அனைத்தையும் இழந்து அடிமைப்பட்ட இனம்,பணத்தைக் குறிவைத்தும்,பதவியைக் குறிவைத்தும் எமக்கு எகத் தாளமாய் அரசியல் சொல்கிறது.கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மனிதர்கள் குறித்து அது மீளவும் நியாயப்படுத்துகிறது.இதுவரையான கொலைகளுக்கு உடந்தையானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.
 
சமூக விரோதிகளின் திசையமைவு:
 
 
இத்தகைய கொலைஞர்கள் கட்டியமைக்கும் "தமிழர் நல அரசியல்" என்பது இலங்கைக்கு வெளியே புலம் பெயர்ந்து வாழும் மக்களை ஒட்டச் சுரண்டும் கயமையோடு,அவர்களது அறிவை மழுங்கடிக்கும் தமிழ்த் தேசிய வெறியை மீளவூட்டுவதாக இருக்கும்.இதற்காகப் பிரபாகரனை மீளத் துதிப்பதிலிருந்து இது ஆரம்பிக்கப் போகிறது.வரும்"மாவீரர்"நினைவு நாட்கள் இத்தகைய தெரிவின் முன்னே கட்டமைக்கப்படுகிறது.
 
துதி பாடும் அரசியல் இதுவரை செய்த தீங்குகள் குறித்து எவருமே அலட்டிக்கொள்ளவில்லை.தமிழின்பெயரால் தாயகம் தேவை என்பவர்கள், தாம் சேகரித்த செல்வத்தோடு மீதமாகவும் செல்வம் குவிக்கப் புறப்படும் திசை "தமிழர் நலம்,தேசம்,விடுதலை" என்று விரிகிறது.இவர்களைத் திருத்துவதென்பது அவசியமற்றது.இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும்,இதுவரை இலங்கையில் கொலைகளை "தமிழ் மக்கள் விடுதலை"யெனும் பெயரில் கட்டியமைத்தவர்கள் என்பதாலும் கிரிமினல் பேர்வழிகளாவார்கள்.
 

பெருந்திரளான மக்களது வாழ்வாதாரத்தையும்,உயிரையும் கொள்ளையடித்தவர்கள் என்பதால் இவர்களைக் கண்டிப்பாகத் தண்டித்தாகவேண்டும்.ஐரோப்பிய மண்ணில் பலாத்தகாரமகத் தமிழ்பேசும் மக்களை மேலும் குழப்பத்துக்கும்,மனமுடக்கத்துக்கும் உள்ளாக்கும் உளவியற் போரைச் செய்யும் இந்தச் சமூகவிரோதிகள், பழைய புலிகளது இன்றைய செயற்பாட்டாளர்களாக இனம் காணப்படுகிறார்கள்.இவர்கள் குறித்து நிறையப் பேசப்பட வேண்டும்.
 
1): இலங்கையில் கொலை அரசியலைச் செய்வதற்கு புலம் பெயர் மக்களைத் தமக்காகான வழிகளில் திரட்டி, அவர்களது எழிச்சியின் திசையில் கொலைகளை நியாயப்படுத்தியது,
 
2):புலம்பெயர் மக்களை தமிழீழ விடுதலை எனும் பெயரில் வெறியூட்டி அவர்களைப் பொருளாதார ரீதியாகவும்,பௌதிக ரீதியாகவும் சுரண்டியது,
 
3):இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்களை மேலும் குழப்பத்துக்குள்ளாக்கி அவர்களது சமூக வாழ்வைத் தொடர்ந்து திருடுவது,
 
4):இலங்கையில் யுத்தத்தில் சீரழிந்த சமூக வாழ்வைச் சீரமைப்பதற்குத் தடையாக மீளவும், தமிழ் தேசியவெறியைக் கிளறிவிட்டு,அவர்களை இலங்கை அரசுக்குக் காட்டிக்கொடுத்துப் பலியிட முனைவது,
 
5):நாடுகடந்த தமிழீழ அரசு,நாடாளுமன்றம் எனும் திசை வழியில் புலம்பெயர் தமிழ்-இளம் சந்ததியை மேலும் குழப்பத்துக்குள்ளாக்கி அவர்களது செயற்றிறனை மழுங்கடிப்பதும்,அவர்களை வைத்து இலங்கை அரசோடு பேரம்பேச முனைவது,
 
மேற்காணம் சமூகவிரோதச் செயற்பாடுகளின்பொருட்டு இவர்களைத் தண்டித்தாகவேண்டும்.ஒரு இனக் குழுமத்தைத் தொடர்ந்து ஏமாற்றியபடி,அக் குழுமத்தின் சமூக இருப்பைக் கொந்தளிப்புக்குள்ளாக்குவதும்,அவர்களை பயங்கரவாதச் செயற்பாட்டுக்குள் தொடர்ந்து இருத்தி வைப்பதும் மிகப் பெரிய சமூ விரோதமாகும்.பொது மக்களது பரந்துபட்ட வாழ்வையும்,அவர்களது அமைதியையும் சீரழிக்கும் இக் கொடிய சமூக விரோதிகள், செல்வம் சேகரிப்பதற்காக ஒரு இனக் குழுமத்தைத் தொடர்ந்து வருத்துவதென்பது தண்டனைக்குட்பட்ட குற்றச் செயலாக இருப்பதால்,இவர்களைச் சர்வதேசச் சட்டங்களுக்குட்பட்ட வகைகளில் தண்டனைக்குட்படுத்த வேண்டிய தேவையும், அனைத்து மக்கள் நலச் சக்திகளுக்கும் உண்டு.இலங்கையில் அமைதிக்கும்,சகோதாரத்துவத்துக்கும் எதிராகச் செயற்படும் இலங்கையின் ஆளும் வர்க்கத்துக்கும்-இனவாதக் கட்சிகளுக்கும்,இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
 
சிந்தனைச் சோம்பல்:
 
நசிகேதன் என்ற ஒரு மகா ஞானி எமனிடம் பிரமத்தைப்பற்றிக் கற்றானாம்.அவன் எல்லா வகையான தத்துவங்களையும் கேள்விகளாலேயேதாம் வேள்வி செய்து,தன்வயப்படுத்தியதாகவொரு பண்டைய பாரதத்தின் நம்பிக்கை.
 
அறிவைப் பெறுவதற்கு"பிரத்தியட்சம்,ஊகம்,அநுபவவாக்கு"என்ற அடிப்படைப் பிரமாணங்கள் உண்டு.அதைத்தாம் பலர் படிப்படியாக வளர்த்து,"புற நிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டி விடுவதாகும்"என்றார்கள்.-இங்கு எந்தப் புற நிலையும் இந்தத் தமிழ்-ஈழ அநுதாபிகளைத் தூண்டுவதாவில்லை.அகத்தின் கருத்துப்பரப்பு:"ஆதிகேசன் போட்டான் கோடு,அது வழியே நமது பொடி நடை"என்ற மாதிரித் திரியும் ஒரு தலைமுறைச் சீர்கேடு.
 
"மக்களிடமிருந்து கற்று,அதை மக்களிடமே வழங்கல்"என்று எவனொருவன் கத்து,கத்தென்று கத்தித் தொலைத்தான்.கூடவே"கற்றறி,கற்றறி,இன்னுமொரு முறை கற்றுத் தெளிவுறு"என்றான்.-அவன் புரட்சிக்காரன்,சோவியத்தை நிறுவிக்காட்டினான்.
 
இங்கோ"தலைவர் சொன்னார்,தலைவர் செய்தார்,தலைவருக்குத் தெரிந்திருந்தது,தலைவர்...தலைவர்,தலைவர்..."
 
விளைவு?
 
அதோ கண்ணில் தெரியுது, கருங் குருதி!
 
 
வன்னி யுத்தத்தில் வடிந்த குருதி உலர்வதற்குள்,வாய் நெறையப் பொய்யுரைக்க நாம் உசாராகிறோம்.
 
புலம் பெயர் புலிகள் இன்னும் அந்நியச் சேவையில் தம்மை இணைத்தே உள்ளனர் என்பதும் புரியப்படவேண்டும்.
 
 
ஒரு தேசிய இனம்,இன்னொரு தேசிய இனத்திடம் ஒடுக்குமுறைக்குள்ளாகிய நிலையில்-அவ்வொடுக்குமுறைக்கெதிராகப் போராடித் தன்னை விடுவித்துக்கொள்ளச் செய்யமுனையும் விடுதலைப்போரை,அந்நியச் சக்திகள்-பிராந்திய நலனுக்கான தேசங்கள் அதன் ஆரம்பிலிருந்தே திட்டமிட்டுத் தொடக்கி ,அதைச் சீரழித்து-அழித்த வரலாறு ஈழத்தமிழர்களின் வரலாறாகவே இன்று இருக்கிறது.
 
இந்நிலையில்...
 
அ): மனித சக்தியை விரயமாக்கிப் புரட்சிக்கு எதிரானவொரு சூழலைத் தொடர்ந்திருத்திவைக்கும் சதியை உலகக்கூட்டோடு செய்துவரும் புலம்பெயர் புலிக் கயவர்களையிட்டுத் தமிழ் பேசும் இளைஞர் சமுதாயம் விழிப்படையவேண்டிய தேவை இப்போது மிகவும் அவசியமானது.இதையிட்டு இளைஞர்களிடம் இத்தகைய சதியைக் குறித்தான பரப்புரைகள்-ஆய்வுகளை முதலில் கொண்டு செல்வதும் காலத்தின் தேவைகளில் ஒன்று.தமிழீழப் போலி கனவுகள் மேலும் ஒரு இனத்தை மொட்டையடிப்பது என்பது தடுத்து நிறுத்த வேண்டிய அவசியமான பணி.
 
 
ஆ): எமது சமுதயாத்துக்காக, அப்பாவிகளாகப் போராடி மடிந்த அனைத்துச் சிறார்களுக்கும், தேசபக்தர்களுக்குரிய மரியாதையைச் செய்வதற்கு நாம் தயங்கக்கூடாது.அதே தருணத்தில், அவர்கள் அணிதிரண்ட அமைப்புகள் யாவும் அந்நியச் சக்திகளது ஊக்கம்-உந்துதலோடு கண்காணிக்கப்பட்டவை என்பதையும், அந்நியர்களுக்குப் புலிகள் போன்ற அமைப்புகள் அடியாளாக இருந்த இத்தகைய நடாத்தையின் பொருட்டே எமது போராளிச் சிறார்கள் அழிக்கப்பட்டார்கள் என்பதையும் வரலாற்றில் ஆய்ந்து கூறுவது எமது கடமையே.
 
 
இ): தமிழ்பேசும் மக்களின் தேசிய அடையாளமாயினும் சரி,அல்லது அவர்களின் சுயநிர்ணயமானாலும் சரி,அது பொதுவான ஜனநாயகத் தன்மைகளை மதிப்பதற்கு முனையும்போதே வலிவுற முடியும்.உலகத்தின் செயற்பாடுகள்-இவர்களைச் சார்ந்திருக்கும் ஊடகங்களின் பக்கச் சார்புகள் இன்று நேற்றைய கதைகளில்லை.தமிழ் மக்கள்,இலங்கையின் அனைத்து மக்களின் பன்முகத் தன்மையிலான வெளிப்பாடுகளை அங்கீகரித்து,அதையே புரட்சிகரமானமுறையில் இலங்கையினது மாற்றினங்களது தோழமையோடு,தமிழ்-சிங்கள இனவாதச் சியோனிசத்துக்கெதிரானதாக வளர்த்தெடுக்கும்போதுதாம் இலங்கையின் சிறுபான்மை இனமக்கள் தம் விடுதலைக்கான முதற்கல்லை எடுத்துவைப்பர் என்றே நாம் இப்போதும்-அப்போதும் கருதி வருகிறோம்.
 
 
இப்போதும்-அதுவும் பூண்டோடு புலித் தலைமையும்,போராளிகளும் அழிந்த பின்பும்,தமிழீழத்தைச் சொல்லியே"துரோகம்-தியாகம்"என்னுங் கருத்தாங்கங்களை மலினப்படுத்துகிறோம்.புலம்பெயர் "தமிழ் மனது"இதுவரை போட்டுத்தள்ளிய தமிழ்பேசும் மக்களின் உயிரோடு தேசக்கனவைத் தொடர்ந்து நிலைப்படுத்த எத்தனிக்கிறது.இந்தப் புலிவழித் தமிழீழப் போராட்டத்தில் நம்மால் இழக்கப்பட முடியாத மானுட இழப்பு நடந்தேறியுள்ளது.இது குறித்துப் பூசி மெழுகிவிடுகிறோம்!
 
நாம் மனிதர்களாகச் சிந்தித்தலென்பது அடியோடு மறந்துபோன விசயமாகப் போய்யுள்ளது.
 
 
இன்று, இலங்கையில் நம்மை இன்னொரு இனத்தின் ஆளும் வர்க்கம் அடிமை கொண்டுள்ளது.நாமும் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு,அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம்.இந்தக் காரணத்தால் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது.வன்னியில் புலிகளை அழித்த கையோடு எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் வியூகத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான் இப்போது.நமது மக்கள் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.உழைத்துண்ட மக்கள் ஒரு குவளை சோற்றுக்காக வரிசையில் வெயிற் காய்கிறார்கள் இன்று.இந்தக் கொடுமையிலும் இங்கே நாடுகடந்த தமிழீழப் பிரகடனமும்,பங்கீட்டுச் சண்டையும் மக்களது பணத்தின் பொருட்டுத் தொடர்கிறது.
 
மக்களைத் தொடர்ந்து அந்நியமாக்கிய "தமிழீழப் போராட்டம்"சாரம்சத்தில் தவறானவர்களால் தவறான நோக்கத்துக்கமைய நடாத்தப்பட்டு அழிந்துபோனது.இதன் தொடரில், இப்போதும் பேராசை,பதவி வெறி பிடித்த புலம்பெயர் புலிப்பினாமிகள் தமது அற்ப வருவாய்க்காகவும்,பதவிச் சுகத்துக்காவும் மக்களையும் அவர்களது ஆன்ம விருப்பையும் அடியோடு மறுத்தொதுக்குவது என்றைக்கும் மகத்தான செயலாக இருக்கமுடியாது.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,ஜேர்மனி
13.11.2009
 

Wednesday, November 11, 2009

கிழக்கு ஜேர்மனியின் மதில்கள்...

மதில்கள் வீழ்ந்தன...
 
 
மக்களுக்கும்,
தமக்கும் இடையில்
இரும்பைக்கொண்டு வேலி அமைத்தபடி
தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்,
ஐரோப்பா,
கிழக்கு ஜேர்மனியின் மதில்கள் வீழ்ந்ததன்பொருட்டு
புதிய உலகைத் திறந்ததென.
 
 
சுதந்திரம்,சகோதரத்துவம்,
ஜனநாயகம் தமது புதிய உலகத்தின்
அத்திவாரம் என்பதும் அவர்கள் கூற்று.
 

 
இரும்பு வேலிக்குப் புறமாக
மக்கள் ஆரவாரித்துக் கரம் கொட்ட
மக்கள்முன் மதில்கள் அமைத்துத்
தம்மைப் பாதுகாத்தனர் தலைவர்கள்!
 
 
இவர்களிடமிருந்து
தம்மைப் பாதுகாக்க
மதில்கள் அமைத்தனர் அன்றைய கிழக்கு ஜேர்மனியத் தலைவர்கள்...
 
எல்லாஞ் சரிதாம்!
 
எதற்க்கெடுத்தாலும் அமைதி
சமாதானம்,சகோதரத்துவம்,
ஜனநாயகம் சொல்லும் தலைவர்கள்
யாரிடமிருந்து தம்மைப் பாதுகாக்க வேலி அமைக்கின்றனர்?
 
 
எல்லோருக்குமான ஒரு வீதியில்
யாரோ சிலர் கார் ஒட்ட
அடைப்புகள் இட்டார்கள்.
பின்னாளில்,
வீதியில் தமது கார்கள் மட்டுமே செல்ல முடியுமெனவும் சொன்னார்கள்.
 
 
இதை,
ஜனநாயகம் என்றும்,தனியுடமை என்றும் சொன்னார்கள்.
எனக்கும்,எனது கூட்டத்துக்கும்
நச்சுவாயு அறைகள் கட்டியவர்கள்
நடுத்தெருவில் நின்று நறுமணமிக்க தமது வரலாற்றைச் சொல்கிறார்கள்!
 
 
பழைய ஐரோப்பா
பாட நூலிலிருந்து மாயமாய் மறைந்துபோகிறது...
 
 
மக்களது தெரிவில்
இவர்கள் மீட்பர்கள் என
ஊடகங்கள் பேசுகின்றன-அவை
கெட்டியாய் சொல்வதெல்லாம் விடுதலை என்பதாகத்
தலைவர்கள் தமக்குத்தாமே மொழி பெயர்த்தார்கள்.
 

கொட்டும் மழையில்
தலைகளை நனையக்கொடுத்தவர்கள்
கொடும் புயலில் சிக்கிய
தமது உறவுகளை மறந்து
,
மதில்களின் வீழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்!
 
 
மதில்கள்,இரும்பு வேலிகள் சிறைகளெனின்
வன்னியிலும்,வேறு பல பரப்புகளிலும்
சிறைகள் வேலிகளாக விரிகின்றன
மதில்களை வீழ்த்தும் வல்லமையுள்ள தலைவர்கள்
சிறையுடைக்க...
 
 
மதில்கள் வேண்டாம்,
இரும்பு வேலிகள் வேண்டாம்...
இவர்கள் இவற்றை வீழ்த்துவதெனும் பெயரில்
புதிய இரும்பு வேலிகளை
எமக்கும் தமக்கும் இடையில்
கட்டிவிடுவர் ஜனநாயகத்தின் பெயரில்!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
11.11.2009
 

Monday, November 09, 2009

நவம்பர் இருபத்தியேழுக்கான ஒத்திகைச் செய்துவரும் ஜீ.ரீ.வி.

மக்களைக் கருவறுக்கும்
பணச் சேகரிப்பு அரசியல்
 
நவம்பர்: 27,நெருங்க-நெருங்க கட்டியமைக்கப்படும் பிம்பங்கள்
பணத்தைக் குவிப்பதற்கான பந்தையக் குதிரைகளாக...
 
"தமிழ்-பிரபாகர" வீரத்துக்குச் சிங்களக் துட்டக்கைமுனு வன்னிக்குள்-நந்திக் கடற்கரையில் பிரபா உச்சி பிளந்து காட்டிய துட்டக்கைமுனு நமது மக்களது அடிமை சாசனத்தை உறுதிப்படுத்தும் சிங்கள உளவியலாக அன்று வெளிபட்டது.இது, ஒரு வரலாற்றுத் தரிசனமாகவே உள்வாங்கப்படவேண்டும்.இத்தகையவொரு உளவியலைச் சமுதாய மனநிலையாக மாற்றிய இலங்கையின் இனவாதத்தத் தொடர்சியுள் உள்ள உண்மைகளை வெறுமனவே இனவாதக் கருத்தாக ஒதுக்கிவிட முடியாது.
 
என்றபோதும், எங்கும்,பொய்யும் அது சார்ந்து கருத்தியில் போரும் தொடர்கிறது!புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகக் கணிசமான வீதத்தில் இத்தகைய பொய்யுரைப்புகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகிறது.
 
 
ஒரு இயக்கத் தலைவனது சரணடைவுக்குப்பின்,அவனைக் கொலை செய்து மகிழ்ந்த அரசியல் இலங்கைக்குச் சொந்தமெனினும்,அதையே மறைத்து இன்னும் தமிழீழக் கனவு வீசும் கயமைமிகு புலம்பெயர் தமிழ் அரசியலானது ஆபத்தானது.
 
இஃது, ஒரு சமுதாயத்தையே சதிராடிச் சீரழித்தபின் மீளவும், பணம்பறிக்கும் வியாபார உத்தியோடு அரசியல் செய்வதுதாம் எமக்குரிய பாரிய வெறுப்பாக அமைகிறது.கடந்த முப்பதாண்டுப் புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள்.இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்மண்ணைப் போக,எஞ்சியிருப்பவர்கள், தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில், கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் இனிவரும் நவம்பர் 27 கொலையையும்-சதியையும்,சரணாகதி அரசியலையும் புனிதப்படுத்தியபடி போர்க்கதை சொல்லப் போகிறது.
 
மக்களை ஒட்ட மொட்டையடித்து,அநாதைகளாக்குவதில் தொடரும் அரசியல் என்னவென்பதைப் புரிந்துகொண்டாக வேண்டும்!
 
 
இது,மற்றவர்களை ஏமாற்றிப்பிழைப்பதில் காலாகாலமாகப் பழக்கப்பட்டவொரு சமுதாயத்தின் அகவிருப்பாகவே இனங்கண்டாக வேண்டும்."ஊரை அடித்து உலையில் போடும்" ,யாழ்ப்பாணிய அரசியலுக்கு, அழிவு இன்னும் இல்லை என்பதை அழகாகக இனங்காணும் அரசியலை இப்போது ஜீ.ரீ.விக்குள் காணமுடியும்.வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லுகிறது.
 




 
 
எனினும்,இத்தகைய அரசியல் காயடிப்பைச் செய்த புலிகளின் அழிவில், தமிழர்களைச் சொல்லி-வன்னிய அவலத்தைச் சொல்லியும்,கூடவே, இலங்கைப்பாசிச அரசினது நிகழ்கால இனவழிப்பு அரசியலைச் சொல்லியபடி "வன்னி மக்களுக்கு உதவி-புனரமைப்பு"எனப் பற்பல பெயரிட்டு,பணப்பறிப்பை நிறைவேற்றப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் அரசியல் அநாதைகள் முயற்சிப்பது பணத்தை-செல்வத்தைத் மிக இலகுவாகத் திரட்டிக் கொள்வதற்கான எதிர்பார்ப்பிலிருந்தே தோன்றுவதாக எண்ணிக்கொள்வதற்கான சாதகமான போக்ககள் இப்போது உருவாகிறது.இதன் அடிப்படையில் இன்னொரு நிதிதிரட்டல் மற்றும் சிந்தனை மழுங்கடித்தல் இலங்கை-இந்திய நலன்களுக்கிசைவாக நடந்தேறும் அபாயம் நம்மை நோக்கிப் படையெடுக்கிறது.இதை மீளத் தொடக்கி வைப்பது ஜீ.ரீ.வீ என்றாக இருக்கும்.இது,பழைய புலிகளது"துரோகிகளின்"-இன்றைய "நாணயப் புலிகளது" ஊடகமாக உருபெறத் துடிக்கிறது.
 
 
"எமக்கு உருப்படியாய்ப் புலராத வாழ்வு
ஓடாய் உழைத்தும் கடன்பட்ட
நெஞ்சோடு சோற்றுக் கோப்பை
விரல் நனைத்த கணமே மறு வேலை
துரத்தும் எமை...
 
உங்களுக்கோ உலையேறும் அடுப்புகள்
எங்கள் அடுப்பில் பூனைகள் புரளும்
துள்ளும் குட்டிகள்
தூங்கும் சுகமாய்
 
குண்டடிபட்ட மனிதக் குழந்தை
குருதியுள் அமிழ்ந்து கருவாடாகியபோது
கம்பி வேலிக்குள் அதன் எச்சம் அடக்கப்பட்டது
இத்தனைக்கும் மத்தியில் மீள உண்டியலோடு
உருப்படாத ஜீ.ரீ.வீ. ஊடகக்காரர்!..."
 
 
தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்திலும்,எவரெவரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும், தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.
 
ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே சென்று,இறுதியில் சிங்கள இராணுவத்திடம் படுதோல்வியடைந்து தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் சிங்கள மற்றும் உலக முலதனத்திடம் காட்டிக்கொடுத்தது.
 
அது, எமை அனைத்துக்கும் அடிமையாக்கிச் சென்றுள்ளது.
 
இந்த அடிமை வாழ்வை மேலும் தீவிரப்படுத்த முனையும் புலம் பெயர் எச்ச சொச்சங்கள் போடும் திரை மறைவு அரசியல், தமிழ்பேசும் மக்களுக்கு "உரிமை"குறித்துப் பேசுகிறது.அதே பழைய பாணியில் கருத்தாடும் நபர்கள், கடந்த காலத்தில் அழியுண்டுபோன போராளிகளை மிக மலினப்படுத்திப் பூசிப்பதால் அவர்களது கொலைகளை தேசத்துக்கான தியாகமாக்கிவிட முடியாது.
 
நவம்பர் இருபத்தியேழுக்கான ஒத்திகைச் செய்துவரும் ஜீ.ரீ.வி.
 
இந்த ஊடகமோ,மேலும் தமிழ் பேசும் மக்களது முற்போக்கு நகர்வை முடக்குவதற்கானதான வாதங்களில் கருத்துக்களைத் தகவமைத்துக் கொள்கிறது.இதுவரையான எல்லாவிதப் போராட்ட முறைகளும் செய்து பார்த்த இவர்களது போராட்டத் தலைமையோ, இறுதியில் சரணடைந்து செத்த ஈனத்தனத்தை,இவர்கள் தியாகமாக்குவதில் மேலுஞ் சில்லறைகளைக் கவ்வுவதற்கேற்ப அரசியல் பேசுவது தமிழ் மக்களது ஞபகசக்தியோடு விளையாடுவதே.
 
மக்களோ எல்லாவற்றையும் விசாரிக்க முனையும்போது, மீளவும் அதே வித்iதாகளோடு புலம்பெயர் ஊடகங்கள் உருவேற்ற முனையாவிடினும்,ஒப்பாரிவைத்துக்கொண்டபடி தம்மீது பச்சோதாபங்கொள்ளும் ஒரு இனத்தின் ஒப்புதலைக் குறிவைப்பது, பணம் பொறுக்கும் பண்புக்குட்பட்டதென்பதற்கு ஜீ.ரீ.வீக்கு காசு சேர்க்கும்-பிச்சை கேட்கும் என்.ரீ. ஜெகனது பாங்கே உறுதிப்படுத்துகிறது.
 
அதிகார வர்க்கத்தோடிணைந்து தமிழ்மக்களை மொட்டையடிக்கும் குவிப்பூக்க விருப்புறுதியானது தமக்கு எதிரான எந்தப் புறநிலை மாற்றத்தையும் இரகசியமானமுறையில் வேவுபார்த்துச் சிதைப்பதில் முன்நிலை வகிக்கிறது!இதைப் புதிய புலிக்காவடிகளும்,அதை ஆட்டுவிப்பவர்களும் தொடர்தே வருகிறார்கள்.தத்தமது இடத்தைத் தக்கவைப்பதில் மிகவும் நிதானமாகவே இந்தக்கூட்டு இருக்கிறது.
 
இலங்கையில் தமிழ்பேசும் மக்கள்படும் தொடர் துன்பங்கள்,பசி,பட்டுணி,சாவு,பொருளிழப்பு,வாழ்விடங்களைவிட்டு ஒதுங்குதல்,அகதி வாழ்வு,இத்தகைய சமூகச் சீர் குலைவு மக்களிடத்தில் ஆத்மீகப் பலவீனத்தையும்,அது சார்ந்த மதிப்பீடுகளையும் வேறொரு பாணியில்(உயிர் வாழ்வதே சாத்தியமில்லாத தேசத்தில் அதைச் சாத்தியப் படுதும் அவா)உருவாக்கும்.இப்போது விடுதலை,சுதந்திரம் என்பதெல்லாம் மக்களின் வாழ்வோடு சம்பந்தப்படாத விஷயமாக மக்களே உணரத்தலைப்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
 
இதை இனம் கண்டவர்கள் எமது மக்களின் எதிரிகளே!நம்மைச் சுற்றி மதில்களை உருவாக்கிய விடுதலை இயக்கங்கள், நமது மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாது அவர்களையே ஆயுதப் பலாத்தகாரத்தால் ஒடுக்கித் தமது ஆதிக்கத்தை நிலைப்படுத்த முனைந்த இந்தக் கேடுகெட்ட அரசியலுக்குப் புலிகளையோ அல்லது மற்றைய இயக்கங்களையோ காரணம்காட்டிப் பேசுவதைவிட,நமது மக்களின் அரசியல் அறிவு நிலை சார்ந்து சிந்திப்பதே சாலச் சிறந்தது.
 
இன்றோ, புலிகளது தோல்வியிலிருந்து பாடங்கற்க வேண்டியவொரு ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனமாக நாம் இருந்தும்... அது, குறித்து மேம்போக்கான மனநிலையோடு மிகக் கெடுதியாகத் தொலைக்காட்சியில் வீராப்புப் பேசுகிறோம்!
 
இலங்கை அரசவரலாற்றில் தமிழர்களை வெற்றிகொண்ட சிங்கள இராணுவ மாயை சிங்கள மக்களைத் தமிழ்பேசும் மக்களுக்கான எஜமான நிலைக்கு உயர்த்தியுள்ளது.இது,இனவாத அரசியலில் பின் தொடரும் பொருளாதார இலக்குகளோடு முற்றிலும் தொடர்புடையதாக மாறியுள்ள நிலையிலும் சிங்கள எஜமான உளவியலானது எந்தவிதப் பண்பு மாற்றத்தையும்கொள்வதற்குச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார இலக்குகள் இடங்கொடுக்கவில்லை. அது,தொடர்ந்து இன மேலாதிக்கத்தைக் கடைப்பிடித்தபடியேதாம் ஆசிய மூலதனத்தோடான தனது உடன்பாடுகளைக் கொண்டியங்குகிறது.
 
புலம்பெயர்ந்த மண்ணிலோ,தமிழ்மக்களை ஒட்ட மொட்டையடித்து,அரசியல் அநாதைகளாக்குவதற்கென்றொரு கூட்டம்"நாடு கடந்த தமிழீழம்-நாடு கடந்த நாடாளுமன்றம்"என்று ஒப்பாரி வைத்துப் பணங்கறப்பதில் குறியாக...இதைத் தடுத்து நிறுத்துவதற்கு நாம் முனைந்து,இவர்களது மோசடி வித்தைகளை அம்பலப்படுத்தியாகவேண்டும்.இது எந்தவடிவிலுஞ் செய்து முடிக்கவேண்டிய அவசியப்பணி.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,ஜேர்மனி
09.11.2009

Saturday, October 10, 2009

அமெரிக்கா:தனக்குத்தானே பரிசளிக்கும் பாசிசம்!

அமெரிக்கா:தனக்குத்தானே பரிசளிக்கும் பாசிசம்!
 
2009-இவ்வருடத்துக்கான, சமாதானத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிர் பெயரில் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இத்தகைய விருதினது வழி புரிய முற்படும் ஒவ்வொரும் ஏதோவொரு வகையில் தத்தமது புரிதலைக் கொண்டிருக்க முடியும்.என்றபோதும்,உலக ஆளும் வர்க்கக் கண்ணோட்டம்,அதன் எதிர்கால அரசியல் நகர்வுக்குத் திட்டமிடப்பட்ட எதிர்பார்ப்பும் அதுசார்ந்த வியூகம் இருக்கிறது.இந்த வியூகம்சார்ந்த நிலைப்பாடுகளுக்கமையவே ஓபாமாவென்ற குறியீடு சமாதானத்துக்கான நோபல்பரிசைப் பெறும் தகுதியாக்கப்பட்டுள்ளது.இந்தக் குறியீடு குறித்துப் பல வகைகளில் புரிந்துகொண்டாக வேண்டும்.
 
அ):ஓபாமா, அமெரிக்காவினது மாறிவரும் உலக அரசியலை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம்,
 
ஆ):ஒபாமா,நடுநிலையானதும்,சமாதானத்துக்குமானதும் என்பதான புனைவு,
 
இ):ஒபாமா,மக்கள் நல்வாழ்வு மற்றும் மனிதவுயிர்வாழ்வுப் பாதுகாப்பு எனும் சுட்டல்
   
இந்த மூன்றுவகைக் குறிப்பானக இன்றைய அமெரிக்க ஜனாதிபதி உருவாக்கப்பட்டுள்ளார்.குறி குறிப்பானகச் செயற்பட வைக்கின்றபோது அதன் தேவையையொட்டி எழுப்பப்படும் சகலதும் ஏதோவொரு நலனுக்கு இசைவானது.
 
 
அந்த நலன் என்ன?
 
உலகத்தில் சமாதானந் தழைத்தோங்கி,உலக மானுடர்கள் சகோதரத்துவத்துடன் தத்தமது தேசத்தின் வளங்களை நெறிமுறையோடு பகிர்ந்துண்டு வாழ்வதா இதன் நலன்?அல்லது,சில தேசங்களது கூட்டோடு,உலக வளங்களைச் சுருட்டித் தமது இனத்துவ அடையாளத்தைப் பேணி,உற்பத்தியைத் தக்கவைத்து உலகைத் தமது விருப்புக்கமைய ஆளுவதா?
 
 

இத்தகைய கேள்விகள் இரண்டும் சமகால அரசியல் போக்குகளால் எழுவது.கடந்தகால ஐரோப்பிய மக்களதும்,அவர்களது இராசதானியங்களதும் மனித நடாத்தையானது இத்தகைய கேள்விகளுக்குள் நம்மைத் தள்ளிவிடுபவை மட்டுமல்ல, அதன்வழி இன்றுவரை ஐரோப்பிய-அமெரிக்க அரசியல் நடாத்தையுமே இத்தகைய கேள்வியின்பால் நம்மைக்கொண்டுசென்று இயக்குகிறது.
 
இன்றைய நோபல் பரிசுக் கமிட்டியின் முழுப்பரிணாமத்தையும், புரிந்துகொள்வதற்கும்முன் அதன் இருப்பு அவசியமாக உணரத்தக்க அரசியலைப் புரிந்துகொள்வதே நம்மெல்லோருக்குமான தேவைகளில் ஒன்று.
தற்போதைய வர்த்தகச் சூழலில்-சந்தைப் பொருளாதாரப் போக்குகளில் பாரிய நிதியளித்துக் காக்கப்படும் நோபல்பரிசு அறக்கட்டளையை தத்தமது தேவைக்கேற்பவும்,தமது அரசியல்-பொருளாதார மேலாண்மைக்குமாகவே மேற்குலக-அமெரிக்க தேசங்கள் பயன்படுத்துவதை மிகவும் நாணையத்தோடு ஒத்துக்கொள்ளவேண்டும்.அவர்கள்,தமது எதிர்காலத்தையும் அதில் தமது இருப்புத் தொடர்ந்து சிதையாதிருக்கும் பலமுறைகளில் திட்டமிட்டு இயங்கின்றார்கள்.இயற்கை விஞ்ஞானம்,மருத்துவம்,இரசயனம்,பொறியியல்,சூழலியல்,மனிதவளம்-இன இருப்பு,வர்த்தகம்,நெறியாண்மை,அரசியல் ஆதிக்கம்,அதிகாரம்,சட்டம்,தாக்குதல்வலு,பண்பாட்டு மேலாண்மை,பாராளுமன்றம்,நீதி போன்ற பலபடிகளில் ஒன்றாகத்தாம் நோபல் பரிசு அறக்கட்டளையையும் புரிந்தாகவேண்டும்.
 
அது,இத்தகைய மேற்குலக நலன்சார்ந்த பின்னணிகளோடுதாம் இயங்குகிறது.இதன் பாத்திரத்தில் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட சமாதானத்துக்கான நோபல் பரிசு, அதன் இன்றையதும் கடந்தகாலத்துக்குமான நடவடிக்கைகளுக்கு மறைமுக அங்கீகரம் வழங்குவதும் அதன் வாய்ப்பாக அடுத்த தசாப்பத்தில் மேற்குலக நலன்சார்ந்த அடுத்தகட்ட ஆதிக்கத்தை மேலும் நிலைப்படுத்துவதில் மையங்கொள்கிறது.
 
இதையிங்ஙனம் புரிந்துகொள்வது அவசியம்:
 
1):வெறும் ஆலோசனைகளும்,அபிப்பிராயங்களும் சொல்பவருக்கும்,
 
2):ஆணு ஆயுதமற்ற உலகைக் குறித்து வெறும் கனவு காண்பவருக்கும்,
 
3):அவ்கானிஸ்த்தானைப் புதிய வியாட்னாமாக்கிப் போர் நடாத்துபவருக்கும்
 
சமாதானத்துக்கான நோபல் பரிசு-கீரிடம் வழங்கப்படுவதானது அவரது அரசியலுக்கு அங்கீகாரம் அளிப்பது,அடுத்த கட்ட அனைத்துவகை அமெரிக்க அரசியல்-ஆதிக்க நடவடிக்கைகளை நியாப்படுத்துவது-நிலைப்படுத்துவது,முடிந்தால் அதை உலகு தழுவிய வகையில் விஸ்த்தரித்து ஒற்றைத் துருவ ஆதிக்கத்தை மற்றைய குடிசார் சமூகங்களுக்குள் திணிப்பதுவரை நிகழ்த்துவதே இதன் புரிதலாகும்.இதன்வழி அமெரிக்கா முன்னெடுக்கும் அனைத்துவகை விஸ்த்தரிப்பும் உலக சமாதானத்துக்கான முன்நிபந்தனையென்பதை இப்பரிசின்வழி நியாயமுறுத்துவதாகும்.
   
கடந்த காலத்தில்-இருஷ்சிய உடைவுக்கு முன் அமெரிக்கா செய்த அரசியல்-போர் நடவடிக்கைகள் ஒற்றைத்துருவத்திலிருந்து செய்யப்பட்டதல்ல.அங்கே, இரண்டு துருவங்களாக மூலதனச் சழற்சியும் அது சார்ந்த அரசியல்-ஆதிக்கமும் இயங்கியது.எனினும்,சோசலிச நாடுகளது இறையாண்மையைப் பல வழிகளிலும் தோற்கடித்த அமெரிக்க மற்றும் மேற்குலகங்கள் 90 களின் மத்தியிலும்,2000 த்தின் ஆரம்பம்வரை இந்த ஒற்றைத் துருவ அரசியல்-பொருளாதார ஆதிக்கத்தைச் சுவைத்துத் தமது இராணுவ மேலாண்மையை உலகெங்கும் நிலைநாட்டின.குறிப்பாக,,ராக்கில்,அவ்கானிஸ்த்தானில்.ஆனால்,இது நிலைத்திருக்கும் வாய்ப்பை அவை தமது அரசியல்-பொருளாதாரப் பலத்தின்வழியாகத் தக்கவைக்கும் சூழலொன்று 2002 ஆம் ஆண்டுக்குப்பின் மெல்ல இல்லாதாகிறது.
   
இருஷ்சியா-சீனாவுக்கிடையிலான நேட்டோவுக்கு மாற்றான சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கம் 2002 ஆம் ஆண்டு சென் பீட்டர்பேர்க்கில் ஆரம்பித்துக் கைச்சாத்தாகியபின், இன்னொரு வார்சோ அணியாக இந்தச் சங்காய்க் கூட்டு உருவாகிறது.இத்தகைய தருணத்தில் அமெரிக்கச்சார்பு நாடுகளது தலைமைத் தேசமான அமெரிக்காவினது ஒற்றைத் துருவ அரசியல் மெல்லச் சிதறுகிறது.அதுமட்டுமின்றிக் கடந்தகாலத்து சோசலிச-முதலாளிய முகாங்களெனும் இருபெரும் எதிரெதிர் நிலையைக்கடந்து, முதலாளித்துவ முகாம் இரு துருவங்களாக உலகை வேட்டையாடப் பிரிந்தன.இவற்றுள் மிகவும் மூலப்பொருள்கள் நிரம்பியதும்,சந்தையில் மலிவாக உற்பத்தியைச் செய்யக்கூடியதும்,இராணுவ-மனிதவலுவில் பலம்கூடியதுமாக இந்தச் சங்காய்க் கூட்டே இன்று உருவாகியுள்ளது.
 
ஐரோஆசியன் வலயத்தில் இருஷ்சியாவினது இறையாண்மை மற்றும் செல்வாக்குட்பட்ட பிரதேசமாக கஸ்பிஸ் எண்ணையூற்றத் தேசங்கள் இருக்கின்றன.என்னதாம் ஜோர்சியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் நேட்டோ உள்வாங்கினாலும், அஃது இருஷ்சிய இராணுவ ஆதிக்கத்திலிருந்து தப்பிடவிட முடியாதளவுக்கு அதன் தரைத்தோற்றம் இருக்கிறது.இதையுறுதிப்படுத்த 2008 இல் நடந்த யுத்தம்தாம் ஒசித்தியாவைக் காக்கும் இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தம்.அவ்வண்ணமே,சீனாவினது மிகப்பெரும் மனித ஆற்றல் அத்தேசத்தை உலகு தழுவிய உற்பத்தித்திறனுடைய தேசமாக மாற்றியுள்ளது.இது,சீன உற்பத்தி மற்றும் அதன் நிதியாதார வலுவோடு அமெரிக்க ஆதிக்கம் நிலவிய அனைத்து மண்ணிலும் சீனாவையும் அதன் ஆதிக்கத்தையும் திணிக்கும் சூழலை உருவாக்கியது.அது,கொங்கோ முதல் அங்கோலா,நைஜீரியாவெனத் தொடரும்.
 
சீனா, ஆபிரிக்காவின் கட்டுமானப்பணிகளில் பெரும் பங்கெடுத்தபடி அரேபியத் தேசங்களில் இருஷ்சியவோடிணைந்து காரியமாற்றுகிறது.இது,அமெரிக்கக்கூட்டினது கணிசமான ஆதிக்கவலுவைத் தோற்கடித்தபடியேதாம் சாத்தியமாகிவரும் இன்றைய சூழலில்,ஓபாமாவுக்கான சமாதான நோபல் பரிசு அமெரிக்கா முன்னகர்த்தும் இன்றைய "பதுங்கிப்பாய்தல்-நட்பாகிக் கொல்லல்,உட்புகுந்து தாலியறுத்தல்"போன்ற அதன் வெளியுலக அரசியலுக்குத் தர நிர்ணயமாகும்,அதை நியாப்படுத்தி உலகை ஏமாற்றிக்கொள்ளவும்,அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னைச் சமாதானப்பிரியனாக வேடம் இட்டுள்ளது.இதை வலுப்படுத்தி மேலும் கட்டியமைக்க இன்றைய நோபல் பரிசின்வழி அமெரிக்க மூலதனம் முயன்றுவருகிறது.
 
அமெரிக்கா இனி முன்னகர்த்தும் உலக அரசியலானது மிகவும் தந்தரமானதாகும்.சமாதானவேடம் பூண்ட குள்ளநரிக்குப் புதிய முகமூடிகள் அவசியமாகிறது.அன்றைய காலத்தில் புஷ் வகையறாக்கள் சொல்லிய"ஜனநாயக"ப்படுத்தல் எனும் முகமூடிக்கு இப்போது "சமாதானம்-பயங்கரவாதத்தை முறியடித்தல்"என்று பெயராகிறது.சமாதானத்துக்கான பரிசைப்பெற்றவர் செய்வதெல்லாம் இனி உலக அமைதிக்கானதென்ற புலம்பலில் பலிகொள்ளப்படும் வலிமையற்ற தேசங்களது இறையாண்மை, அமெரிக்கக்கூட்டினது அடுத்த ஐம்பதாண்டு ஆதிக்கவலு நிலைப்படுத்தலின் தொடராகும்.என்றபோதும்,இருஷ்சிய-சீன வல்லரசுகளின் அரசியல் ரீதியான நகர்வையும் அவை கொண்டியங்கும் தூர நோக்கையும் முடக்குவதற்கான பரிந்துரையாகவே அமெரிக்கா தனக்குத் தானே பரிசளிக்க முனைந்துள்ளது.
 
 

கடந்த 23.09.2009 அன்று ஐ.நா.வில்(GENERAL DEBATE OF THE 64TH SESSION OF THE UNITED NATIONS GENERAL ASSEMBLY )உரையாற்றிய இருஷ்சியத் தலைவர் மெட்வேடேவ் தனது உரையை மிக நிதானமாகச் செய்திருக்கிறார்.அவர் உலகத்துக்கு அச்சுறுத்தலாகவிருக்கும் வெள்ளையின நாசியப் பயங்கரவாதம்வரை தனது உரையின் இறுதியில் சுட்டிக்காட்டி, அமெரிக்க-மேற்குலக நிறவாத அரசியல் தகவமைப்புகளையுஞ் சாடியபோது மாற்றுக்கருத்தற்ற மேற்குல வெள்ளையினவாதம், மிகச் சாதுரியமாகத் தமது நடாத்தைகளைச் சமாதானத்துக்கான முன் நிபந்தனையாகவும், அமெரிக்க அதிபர் வடிவினில் அமெரிக்காவை முன்நிறுத்துகின்றன.இந்த வகை அரசியலது தொடரில் இந்தச் சமாதானத்துக்கான நோபல் பரிசை தனியே "ஸ்க்கன்டால்"(Scandal: Obama gets the "peace prize)என்ற மொழிவுக்கூடாகத் திசை திருப்ப முடியாது.ஈராக்,அவ்கானிஸ்த்தான் யுத்த நடவடிக்கைகளை முன்னிறுத்தி அமெரிக்காவின் அடுத்த நாடகத்தை மறைக்க முனையக்கூடாது.ஆனால்,ஜார்ன் ஓபேர்க்(Jan Oberg ist Leiter des Friedensforschungsinstituts TFF in Lund, Sweden )செய்து முடிக்கிறார்.
 
புதிய ஆதிக்கத் தெரிவுகளின்வழி,அமெரிக்க எடுக்கும் அரசியல் நகர்வுக்கான அங்கீகாரமே இப்பரிசினது நோக்காக இருப்பதற்கு வலுவான காரணிகளாக இருப்பது இன்றைய அமெரிக்க வியூகமே.
 
இனிவரும் கால அமெரிக்க அரசியல் நகர்வில் ஒபாமா அரசு செய்யும் அரசியல்:
 
1:உலக மூலவளத் தேவைக்கான போட்டியில் யுத்தத்தைச் சமாதான எல்லையில் வைப்பது,
 
2:வளர்ந்துவரும் பொருளாதார நகர்வில் ஐரோஆசியன் வலயத்தில் தனது நிலையைத் தக்வைத்து அதன் எண்ணை வளத்தைக் குறைந்தளவாவது மேற்குலகக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்வது,
 
3:அர்டிக்ஸ்-வடதுருவப் பனிவலயத்தில் கரையும் பல சதுரக் கிலோமீட்டர் கடல் நிலப்பரப்பில் பதுங்கிக்கிடக்கும் போட்டி வள அவகரிப்பில், அமெரிக்கா முதன்மையாக இருக்க முனைதலில் நடந்தேறும் அரசியலில் இருஷ்சியாவை தனிமைப்படுத்தல்.
 
4:தென்கிழக்காசிய வலயத்தில் மாறிவரும் சீனா-இருஷ்சியப் பொருளாதார ஆதிக்கம் மற்றும் கடற்போக்குவரத்து முரண்பாடுகளில் குறைந்தளவாவது அமெரிக்க நலனைப் பாதிக்காத நட்பு-பகை அரசியல்-ஆதிக்க வியூகத்தைக் கொண்டியங்குதல்.இதன் முரண்பாட்டில் சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கத்தையும் அதன் உறுப்பு நாடுகள் தவிர்ந்த செல்வாக்குக் உட்பட்ட பார்வையாளர்கள் தகுதிபெற்ற ஈரானைத் தாக்குவதற்கான தகுதியை அவ்கானிஸ்த்தானைத் தளமாக்கி எடுத்துபடி, இருஷ்சிய-சீன ஒப்பந்தத்துக்கு யுத்த நிர்ப்பந்தம் வழங்குவது,
 
5:இத்தகைய யுத்தத்தை, சமாதானத்தின் மூலமாக இருக்கும் அமெரிக்காவினது தலைமைப்பாத்திரத்தில் தவிர்க்கமுடியாது மனிதகாப்புக்கான நிபந்தனைகளில் ஒன்றாக்குவது.
 
6:இவற்றைச் செய்வதற்காக பனிப்போர் முகாந்திரத்தில் மையமாக இருந்த போலன்-செக்காய் ஏவுகணைப் பாதுகாப்பைத் தற்காலிகமாகக் கிடப்பில் போடுவது,
 
7: ஆர்மேனியாவுக்கும்,துருக்கிக்குமிடையிலான நட்புணர்வு-அரசியல் உறவு ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை முதன்மைபடுத்துவது,
   
8:இதனூடாக துருக்கியை ஊடறத்துவரும் நபுக்கா(Nabucco) எண்ணைக் குழாயை இருஷ்சியாவிடமிருந்து தனிமைப்படுத்தியும், இருஷ்சியாவினது எரிபொருளில் தங்கியிராத (South Stream எண்ணைக் குழாய்க்கு எதிராக) மேற்குலகச் சார்பான சுதந்திரத்தை எரிவாயுப் பொருளாதாரத்தில் நபுக்காவை நிலைப்படுத்துவது.இதன்தொடரில் துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துள் உள்வாங்கும் நெகிழ்வை மரபுசார்ந்த ஐரோப்பிய மேன்மைக்குள் மெல்ல உருவாக்குதல்,அதற்காகத் துருக்கிய அரசியலையும், இஸ்லாமிய மதவாத அடிப்படையையும் தனிமைப்படுத்திவிடத் தேவையான பண்பாட்டுக் கருத்தியலைத் தகவமைப்பது,
 
9:இதற்காக இருஷ்சியாவை நேட்டோவுக்குள் உள்வாங்க முனைவதும்,சீன-இருஷ்சியப் பலக்கூட்டை உடைப்பதும்,ஆப்பிரக்காவிலிருந்து சீனாவைத் தனிமைப்படுத்துவதும்,
 
10:உலகத்தின் எப்பாகத்தில் இனவிடுதலைப் போராட்டம் நிகழினும் அவற்றைத் துடைத்தெறியும் முயற்சியில் சங்காய் கூட்டுழைப்பு இயக்கத்துக்கும்,நேட்டோவுக்கும் இடையில் பாரிய முரண்பாடில்லை.எனினும்,சீனாவைத் தனிமைப்படுத்துவதற்கு இருஷ்சியாவை மேற்குலகச் சார்பாக்குவது,மேற்குலக நபுக்கா எரிவாயுக்கு குழாயை இதற்காகப் பயன்படுத்துவது(இது,ஒரு கட்டத்தில் யுத்தமாக வெடிக்கும்போது இருஷ்சியா சீனாவிடமிருந்து அந்நியப்பட்டிருப்பதும் அவசியமான அமெரிக்கத் தெரிவாக இருக்கிறது.இனவிடுதலைப் போராட்டங்கள் தத்தமது பொருளாதார நிலைகளுக்கமைய ஆதிரித்தும்-அழித்தும் வருவது சமீபகால நிகழ்வாக இருப்பினும்,இப்போதைய நிலைமையில் புதிய தேசங்களை உருவாக்குவதை ஏகாதிபத்தியங்கள் தமது வேலைத்திட்டத்திலிருந்து பின்தள்ளுகின்றன).
 
இன்றைய அதீத தேவையாக மேல்காணும் நிகழ்சிநிரல் அமெரிக்க மூலதனத்துக்கு இருக்கிறது.இதன் உச்சபட்சத் தெரிவானது உலகில் அமெரிக்க ஆதிக்கத்தைச் சமாதானத்துக்கான முன்னெடுப்பாகவும்,இதுவே உலக அமைதிக்கான பணியாகவும் காட்ட முற்படும் அமெரிக்க மூலதனம்,உலகில் தனக்கெதிரான அனைத்தையும் தனிமைப்படுத்தும் முதன் தெரிவாகத் தன்னைத்தானே உலகச் சமாதான அரசாக இந்த நோபல் பரிசின்வழி சொல்கிறது.அதையே அமெரிக்க அதிபர் ஒபாமா இப்போது சொல்லி வருகிறார்.இது,அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்காவது அமெரிக்காவின் தலைமையை உலகத்தில் நிலைநிறுத்துவதற்கான புதிய தெரிவுகளாகின்றன.இதை உறுதிப்படுத்தும் அமெரிக்க மூளை சீப்பினிக் பிறசென்ஸ்கி (Zbigniew Brzezinski )என்பது உலகறிந்த உண்மை.
   
உலகை ஏப்பமிட முனையும் ஏகாதிபத்தியம்,பாசிசத்தின் கடைக்கோடி நிலையாக இத்தகைய நோபல் பரிசின்வழி உலகைத் துடைக்க முனைவதை போராட்ட இயக்கங்கள்-ஒடுக்கப்படும் இனங்கள்சார்பாக எழும் எழிச்சிகள் புரிந்துகொண்டாக வேண்டும்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
10.10.2009

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...