தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்!
"மரணத்திற்குக் காத்திருக்கும்
எந்தன் சொற்கள் உண்மையே
வனத்தின் அழைப்பைத்தாண்டி
எந்தன் மரணம் எட்டுமா?
கொலைச் சூத்திரங்களை மட்டும்
உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல்
விண்டுரைக்க முடியா
மரணத்தின் விலையை
இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..." -அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.)
"கரும்புலிகள்-
தமிழ்ச் செல்வன்கள்
மரணத்திலும்
மகிழ்வும்,
துக்கமும்
புலிகளுக்குள்."
இருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்படுத்தியாக வேண்டிய மரமண்டைகளாகத் தமிழர்கள் உருவாகியது தற்செயலானதா?
இப்படி ஒரே நிகழ்வில் மகிழ்வையும்,துக்கத்தையும் கொண்டாடக்கூடியவர்கள் புலிகளும்,அவர்களது அநுதாபிகளும்தாம்.
எவன்ரா சொன்னான் கரும்புலிகள் செத்தே ஆகவேண்டுமென்று?
புலிக்கு வால் பிடிப்பவர்களிடம் இருபத்தியொரு கரும்புலிகளின் சாவைக் கண்டு மனம் வருந்திக் கருத்தாடிய அன்றைய தினத்தில்,"என்ன அண்ணே நீங்கள் இப்படி முட்டாளாக இருக்கிறீங்கள்?, அவர்கள் யாரு?கரும் புலிகள்!"என்றார்கள் சில புலி வால்கள்.அதாவது, கரும் புலிகள் என்பது... எப்போதோ செத்துவிட்டவர்கள்.அவர்கள் புதிதாகக் களத்தில் சாகவில்லை!செத்தே செயற்படுபவர்கள் என்றான், நான்கு பிள்ளைகளை ஜேர்மனியில் பெத்து வளர்த்து வரும் ஒரு கபோதி.இன்று, சு.ப.தமிழ்ச்செல்வனோடு இன்னும் நான்கு போராளிகள் கொல்லுப்பட்டுள்ளார்கள்.இது, எதனால்?
எதனால்?
எதனால்?
எதனால்?
பாழாய்ப் போனவர்களே சிந்தியுங்கள்!
இந்தப் புலிகள் செய்யும் போராட்டமென்பது அடிப்படையில் தவறானது.
இலங்கையின் ஆதிக்கத்தை உடைத்தெறியாது அதன் அரச ஜந்திரத்தின்மீது கைவைத்துக் கைவைத்து, அவர்களை வலுப்படுத்தி வந்தவர்கள் புலிகள்.இந்தப் போராட்டச் செல் நெறி தவறானதென்பதைப் பல பத்து ஆயிரம் தடவைகள் எவரெவரா உரைத்தாச்சு.இனியும,; நாமும் உரைப்பதற்கில்லை.போராட்டமென்றால் சும்மா,சும்மா சில இராணுவ முகாங்களைத் தகர்த்துவிட்டும்,சில விமானங்களை அழித்துவிட்டால் விடுதலை வந்துவிடுமெனக் கருதிய பித்தாலாட்டக்காராகளின் முகத்தில் ஓங்கியடித்துவரும் இலங்கை அரசஜந்திரம்,தனது முழுப்பலத்தையும் காட்டாது இருக்கும் சந்தர்ப்பங்களை இனியும் ஒதுக்கி வைப்பதற்கில்லையெனச் சொல்லும் குண்டுதாக்குதலைச் செய்யும்போது,அதிலிருந்து தம்மையே பாதுகாக்க முடியாதவர்கள், தமிழ்பேசும் மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பார்களாம்.
பாவிகள்,
கொடும்பாவிகள்,
யாரூ?
மக்கள்தாம்!
அவர்களே தமது வாழ்வாதாரத்தையும்,தங்கள் உயிர்களையும் அர்ப்பணித்து இந்தப் போராளிகளையும்,அவர்களின் போராட்டத்தையும் காத்து வந்தார்கள்.விரும்பியோ,விரும்பாமலோ இதை அவர்கள் சாத்தியப்படுத்தவேண்டிய கடப்பாட்டில் இருந்தார்கள்.இன்றோ, அந்த மக்களையே வேட்டையாடிய புலிகளின் போராட்ட முறைமை, தொடர் தோல்வியில் தமது பெரும் தலைவர்களையே இரை கொடுக்கிறதென்றால் எங்கே தவறிருக்கிறது?-நாம் நிற்கும் தளம் எது?
சிந்தியுங்கள்!
அது உங்களுக்குப் பழக்கமில்லையென்றாலும்-இனியாவது சிந்தனை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்!!-ஓ,ஒப்பாரும் மிக்காருமற்றத் தானை தலைவன் அனைத்தையும் வெல்வாரா?அப்படியா?,நல்லது!நாளை அவர் எந்த நடாற்றில்...ச்சீசீசீசீ வேண்டாம்!!
தமிழ்ச் செல்வனைக் கொன்றது அநுராதபுரத் தாக்குதலின் மறுவினை.மீள்வினை விளைவுதாம்.இங்கு, எல்லாளனும் துட்டக்கைமுனுவும் விரும்பி வேட்டைக்குச் செல்லும்போது இடையில் சில சலசலப்பு?இதையும்"வரலாற்றுத் துறைப் பொறுப்பாளர்"திடீர் வரவு யோகிதாம் உரைக்கணும்!-இராணுவத்துறைப் பேச்சாளர்தாம் வகுத்து வைக்கணும்!வடிகட்டிய முட்டாள்கள்!ஏன்ரா இன்னும் நம்மைத் தொலைக்கிறீர்கள்?அந்நியத் தயவில் ஆட்சி புரியும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் கைகளென்ன புடலங்காயா ஆய்கிறது?பேயர்களே,இதுவல்லப் புரட்சி!!-இதுவல்ல விடுதலைக்கான போராட்டம்!நீங்கள் செய்த,செய்யும் போராட்டத்தின் விளைவுகளுக்கு வயது கால் நூற்றாண்டு.இதிலிருந்து கற்றதென்ன?
போராட்டமென்றால் செத்துத்தாம் விடுதலை அடைய முடியுமென்பதா?,அரைவேக்காட்டுக்கள் அள்ளிவைத்துக் கொண்டாடிய அநுராதபுரம் தந்தது இன்னுஞ் சில மரணம்.இனியும் தரும் பல மரணம்.அடிக்கு அடி புரட்சியல்லப் புலிகளே!அது காலத்தால் கனிவது.கண்ணீரைக் குறைப்பது.இங்கே, கண்ணீரையல்லவா விடுதலையென்கிறீர்கள்!
இருக்காதா பின்ன!
ரெலோ இயக்கப் போராளிகளை நர வேட்டையாடிக் குதறியவர்களல்லவா நீங்கள்?உங்கள் இயக்கத்துக்குள்ளேயே களையெடுப்பதாகச் சொல்லி, எத்தனை தமிழ்ப்பாலகர்களைப் போட்டுத் தள்ளினீர்கள்!!இதற்காகவும்,இனியும் எத்தனையோ களையாக...நடக்கட்டும்-நடக்கட்டும்!!சிங்களமும்,இந்தியாவும் நினைப்பதைச் செய்பவர்கள் நீங்கள்.
"ஆனையிறவு,
கட்டுநாயக்கா,
அநுராதபுரம்..."
இத்தகைய கீரோயிசத் தாக்குதல்கள் இயக்கக்கட்டமைப்பையே காலியாக்குமென்பது வரலாறு.இதை அன்றே-கால் நூற்றாண்டின் முன் நாம் கூறினோம்.புலிகளின் இத்தகைய போராட்டத்தைப் புரட்சிகரமான முறையில் திருத்தியமைக்கவும்,பல்லாயிரக்கணக்கான போராளிகளை மக்களோடு இணைத்துப் புரட்சிகரக் கட்சியின் கீழ் போராட்டத்தை நடாத்தவும்,எதிர்காலத்தைத் தகவமைக்கவும் நாம் நாயாக் குரைத்திருக்கிறோம்.இதையெல்லாம் பொருட்படுத்தாத புலிப் பாசிஸ்டுக்கள் தமக்கேயுரிய பாணியில் நம்மை அச்சுறுத்தியும்,கேலி கிண்டல் புரிந்தும்-கொலைதாக்குதல் செய்தும் மறுதலித்தார்கள்.நாம் அப்போதெல்லாம் எமக்குள் நொந்துகொண்டோம்.அப்பாவி மக்களின் தலைவிதியை எண்ணி மனம் வருந்தினோம்.நமக்குள் இத்தகையவொரு அராஜக இயக்கத்தை-புரட்சிக்கு எதிரான இயக்கத்தை வளர்தெடுத்த அந்நிய அரசுகளை அம்பலப்படுத்தினோம்.அவர்களின் தயவில் நம்மையும்,நமது விடுதலையையும் வேட்டையாடிவரும் புலிகளையும் மாற்றுக் குழுக்களையும் அம்பலப்படுத்தினோம்.
இருந்தும் நிகழ்ந்தது என்ன?
போலிப் பிரச்சாரம்,துரோகி சொல்லி எளிமையாக நம்மை முடக்கும்-மக்களிடமிருந்தும் போராட்டத்திலிருந்தும் அந்நியப்படுத்தும் அராஜகம்.இந்த அராஜகத்தினூடாகத் தமிழ் பேசும் மக்களை அந்நியர்களுக்குக் காட்டிக் கொடுப்பதையே தொழிலாகக்கொண்ட புலிகள், இன்று தமது வங்குரோத்து அரசியலால் நம்மையும்,நமது வாழ்வையும் படுபாதாளத்துக்குள் தள்ளி இலங்கை அரசுக்கும்,சிங்கள-இந்திய ஆளும் வர்க்கத்துக்குச் சேவை செய்து வருகிறது.இதில் முரண்படுபவர்களையும், விவாதிப்பவர்களையும் புலிகளே போட்டுத்தள்ளியபோது,அதை நியாயப்படுத்திய தமிழ்ச் செல்வனே இன்று அந்தவகை அரசியலுக்கும்,நட்புக்கும் பலியாகியுள்ளார்.இதைப் புரிந்துகொள்ளும் பக்குவமின்றி நீ கண்ணீர் வடித்து ஆவதென்ன?
உனது கண்ணீர் போலியானது!இருபத்தியொரு கரும்புலியின் மரணத்தில் மகிழ்ந்தவர்கள் நீங்கள்,இன்று, ஐவரின் மரணத்துக்காக ஒப்பாரி வைத்து என்னடா நாடகமாடா செய்கிறீர்கள்?
"தமிழ்ச் செல்வன் சிந்திய இருத்தத்திலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றுவதாக"ப் பச்சோந்தி-அரசியல் விபச்சாரி நெடுமாறன் கூறலாம்.ஏனெனில், அவன் நக்கிப் பிழைப்பவன்.அன்று தொட்டு இன்றுவரை நிலையற்ற அரசியல் செய்வன்.ஓட்டுக்கட்சிகளோடு கள்ளக்கூட்டு வைத்துப் பிழைப்பு நடாத்தும் பிழைப்பு வாதிகள் பொய் சொல்லலாம்.ஆனால்,நாம் சொல்கிறோம்: "தமிழ்ச் செல்வன் சிந்திய இருத்தத்திலிருந்து ஏராளமான இளைஞர்கள் அல்ல ஈக்களே எழும்!"இதுதாம் நிச்சியம் நிகழும்.
இந்தத் தமிழ்பேசும் மக்களின் நியாயமான போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த கயவர்கள் புலிகள்.இந்திய அரசின் அரசியல் சாணாக்கியத்தைப் புரியாது நமது மக்களின் புரட்சிகரமான போராட்ட இலக்கையும்,மாற்றுக் குழுக்களையும் வஞ்சனை செய்து அழித்தவர்கள்.யாழ்மாவட்டமெங்கும் அப்பாவிப் போராளி இளைஞர்களைக் கொன்று குவித்து, நரவேட்டையாடிய புலிகள் இந்தியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியவர்கள்.இவர்களா தமது தளபதிகளின் அழிவுக்காய் முதலைக்கண்ணீர் வடிப்பது?-பட்டங்கள்,பதவிகள்,கௌரவப்படுத்தல்கள்...
"பிரபா-கேடியர்!"
தமிழ்ச் செல்வனைக் காட்டிக் கொடுத்த அரசியலே புலித்தலைமையின் இருப்போடு சம்பந்தப்பட்டது.அதை மூடி மறைத்தொதுக்கிவிட்டுப் புலம் பெயர்ந்த வானொலிகள் என்னதாம் சாவீடு நடாத்தினாலும் மக்கள் விழிப்பாகவே இருக்கிறார்கள்.நமது விடுதலையை வேட்டையாடிய புலிகள் இப்போது தத்தமது இருப்புக்காகத் தமது தளபதிகளையே அந்நியனுக்குக் காட்டிக்கொடுத்துத் தமது இருப்பை நிலைப்படுத்தும் சுய நலமிகளாக இருக்கிறார்கள்.
போராட்டமென்பது சிற்சில முகாங்களின் அழிப்பில் சிதைவுறுமே தவிர அது மக்கள் போராட்டமாவதற்கில்லையென்பதை மீளவும் நிலை நாட்டும் இந்த மரணங்களோடு நாம் மௌனிக்க விரும்பவில்லை.புரட்சிகரமானவொரு கட்சியையும்,அதன் பின்னால் எழிச்சியுற்ற மக்களையும் அணி திரட்டிப் பொது எதிரியை வென்றாக வேண்டும்.அங்கே, சிங்களப் பாசிச அரசுமட்டுமல்ல புலிப் பாசிசத் தலைமையுமே நமது பொது எதிரியாக இருக்கிறார்கள் என்பதை நாம் உணராதவரை இத்தகைய தளபதிகள்-போராளிகள் அழிந்தபடி, நமது விடுதலையை வேட்டையாடும் அந்நிய சக்திகள்.அதற்கு ஆதரவாகப் புலித் தலைமையும் ,அத்தலைமையின் கீழ் அணிதிரண்ட போராளிகளும் அந்நியர்களுக்கு உடந்தையாக இருந்து, நம்மை வேரோடு கருவறுப்பார்கள்.
மீளவும் நினைவுப்படுத்துவோம்: இருபத்தியொரு கரும்புலிகள் செத்து மடிந்தபோது விமானங்களின் அழிவே புலிகளுக்குள் பிரமாதமாக இருந்தது.அது பெருமிதமான ஆய்வுகளையும் அடுத்த கட்ட நகர்வையும் பேசியது.இப்போது, ஐந்து மரணங்கள் அழுகையையும் அதுசார்ந்த ஒப்பாரியையும் தருகிறது, இவர்களுக்கு!!
ஒரே நிகழ்வில் இருவகை-இருவேறு உணர்வுகள்!-போராளிகளுக்கும்,தலைவர்களுக்குமுள்ள இடைவெளிகள் நீண்டபடியே இருக்க,அப்பாவி இளைஞர்கள் இவர்களை நம்பிக் குண்டைக் கட்டி வெடித்துச் சாவதால் கிடைப்பது தமிழ் பேசும் மக்களின் விடுதலையல்ல.இது புரிந்தால்...
"............................."
ப.வி.ஸ்ரீரங்கன்.
02.11.2007
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
38 comments:
உடனடியாக இந்த பதிவை தூக்காவிட்டால் உன் தளம் விரைவில் கைப்பற்றப்படும்.
அருமையான பதிவு ஸ்ரீரங்கன்.
அநுராதபுர பிணங்கள் புதைக்கப்படாத நிலையில் கூட சில மடையர்கள் தங்கள் தளங்களில் வான்வேடிக்கை விட்டுக்கொண்டிருந்தார்கள்.
யாரோ பெற்ற பிள்ளைகளை இந்த கயவாளிகள் தங்கள் இச்சைகளுக்கு பலியாக்கி வருகிறார்கள்.
வாழ வேண்டிய உயிர்களை இப்படி அநியாயமாக நரபலியிடுவது ஒரு பெரிய பாவச்செயலே.
கரும்புலிகள் செத்தால் சந்தோசம். ஒரு தலைவர் செத்தால் மட்டும் சோகம். இது என்ன ஒருதலை பட்சமான கருத்து?
எல்லாம் மனிதர்கள்தானே? அவர்களும் ஒரு தாய் குலத்திற்கு பிறந்தவர்கள்தானே?
25 வருட சண்டைகளில் எத்தனை உயிர்கள் பலிகொடுக்கப்பட்டன?
ஒரு முக்கிய தலைவனை கூட பாதுக்காக்க திறமையற்ற இயக்கம் சாதாரண மக்களையா காப்பாற்ற போகிறது?
இவர்களின் பலப்பரீட்சை பரிசோதனை களத்திற்கு அப்பாவி மக்கள் அல்லவா பலிகடாவாக ஆக்கப்படுகிறார்கள்?
என்ன அநியாயம் இது?
இனியும் அப்பாவிகளின் உயிர்கள் சேதமாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
நன்றி.
‘அழிந்தே போ
விமானங்களையும் அழித்து’
என ஏவியவர்களும்
அழிந்தார்கள்
விமானத்தால்
பாசிசம்
ஒரு நீர்க்குமிழி
- செ.குணரத்தினம்
திரு ஸ்ரீரங்கன்,
எனக்கு ஒரு கேள்வி புலிகள் மற்றும் சிங்கள அரசு எடுத்த வன்முறைத்தீர்வை தவிர்த்து ஒரு நல்ல முறையில் தீர்வு காண தாங்கள் முன் வகைக்கும் வழிமுறை என்ன?
இவன்.
மனித நேயர்களின் மரணத்தில் ,
வடியும் எமது குருதியை நக்கியபடி,
ஈக்களை விரட்டும் கிழட்டு ஓ நாயே,
மக்களின் விடுதலைக்காய் தமை ஈந்தவர்களின்,
உடலங்களைக் குதறித் தின்னும் கூரூரமான மிருகமே,
எம் இதயத்தை ருசி பார்க்கும் முன்,
ஒன்றைப் புரிந்து கொள்,
இழப்புக்களே எமது போராட்டத்தின் ஆன்மா,
நாம் குற்றியுராய் மண்ணில் வீழ்ந்த போதெல்லாம்,
எமைத் தூக்கி வழி காட்டியதும் அதுவே,
விழ,விழ நாம் எழுந்தோம்,இனியும் ஆயிரம்,ஆயிரமாய் எழுவோம்.
மக்களை நேசிப்பவர்கள் , என்றும் மரணிப்பதில்லை.
மக்களின் போராட்டம் கணனித் திரைகளில் நிகழ்வதில்லை,
மாயமான சூத்திரங்களால் எழுதப்படுவதுமில்லை,
இரத்தத்தாலும், வேர்வையாலும்,சதைப் பிண்டங்களாலும் எழுதப்படுவது.
உலகின் எங்கோ ஒரு மூலையில்,
கணணி முன் காவல் இருந்து,
உள் மன வக்கிரங்களை உமிழும்,
உன் ஒவ்வொரு முகமூடியையும் அறிவோம்.
உன் உள் மன வக்கிரங்களினால்,
சீழ் வடியும் உன் தலை,
ஓர் நாள் வெம்பி வெடித்துச் சிதறும்.
கேட்பதற்கு நாதியற்று,
கேட்பார் யாருமற்று,
கணனி முன் மடியும் உன்,
உடலை மொய்பதற்கு,
ஈக்கள் கூட வரா.
தோழர் மயூரன் விடுதலைப்புலிகள் கரும்புலிகள் இறந்தபோது மகிழ்ச்சியிலே குதித்தார்களா? எங்கே என்று காட்டுங்கள். நாங்களும் எதிர்காலத்திலே காட்டப் பயன்படும்.
தோழர் ஸ்ரீரங்கன் நெடுமாறன் பச்சோந்தி-அரசியல் விபசாரி என்று சொல்லியிருக்கின்றீர்கள்.நெடுமாறனின் பச்சோந்தித்தனம், அரசியல் விபசாரத்தைப் பட்டியல் போடுங்களேன். நாங்களும் வருங்காலத்திலே பட்டியல் போடலாம்.
அரகுறை அலசல்... குரூரமான உங்கள் குணம் வெளிப்படுகிறது சீரீரங்கா..
ஐயா புத்தரின் பேரர்களே,
விடுதலைக்கு அர்த்தம் கற்றுக் கொடுப்பதாகச் சொல்லும் பெருமக்களே,
வியட்நாம் விடுதலையில் இழந்தது எவ்வளவு..??!
அமெரிக்க விடுதலையில் இழந்தது எவ்வளவு..??!
உலகப் போர்களின் போது இழந்தவை எவ்வளவு..??!
ஏன் அதிகம் போவான் ஈராக் போரில் இன்று இழந்து கொண்டிருப்பது எவ்வளவு...??!
ரெலே இயக்கத்தினரை தாக்கி அழிக்க வேண்டும் என்ற நோக்கம் புலிகளிடம் இருக்கவில்லை. அவர்கள் எல்லோரையும் ஒரே தலைமையின் கீழ் போராட அழைத்தனரே தவிர வேறெதையும் கோரவில்லை. ஆனால் தமிழீழம் மீட்கப்போறம் என்று ஆயுதம் தூக்கினவை எத்தினை பேர் தியாகம் செய்யத் தயாராக இருந்தவை. இறுதியில் செய்தவை என்ன..! அந்நியரின் சொல்லுக்கு மட்டியிட்டு இனத்தைக் காட்டிக் கொடுத்ததே..!
கரும்புலிகள் சரி தமிழ்செல்வன் அண்ணா சரி களத்தில் உள்ள மக்கள் சரி எல்லோரும் போராடும் சக்திகளே. அவர்களுக்குத்தான் போராட்டத்தின் தேவை வலி தெரியும்.
சிங்களப் பேரினவாதம் தமிழனை தாக்கி அழிப்பது போராட்டம் தொடங்கியதன் பின்னர்தானா..??!
ஏன் கலவரங்களும் இன அழிப்பும் அதற்கு முன்னர் நடக்கவே இல்லையா..??!
எல்லாம் அமைதியாத்தான் இருந்தது ஜனநாயகமயமாத்தான் இருந்தது என்றால் அப்ப ஏன் செல்வநாயகம் போன்ற தலைவர்கள் அகிம்சைவழில நடத்தின போராட்ட்டம் வெற்றியளிக்கல்ல. ஏன் அந்தத் தலைவர்கள் வன்முறைக்கு இலக்கானார்கள்..??!
ஆயுத பலத்தால் போராட்டத்தை அழிக்க முடியாது. போராடும் மக்களின் உறுதியில் தான் போராட்டமும் விடுதலையும் தங்கியுள்ளதே அன்றி இழப்புக்களை தவிர்த்து சிங்களத்தின் காலடியில் சரணடைவதால் அது சாத்தியமாகாது.
இன்று புலி என்ற ஒன்று இல்லையேல்.. உங்களுக்கு புலம்பெயர் வாழ்வும் இல்லை. புலி எதிர்ப்பு அரசியலும் இல்லை. இப்படி கொச்சைப்படுத்தலுக்கு அவசியமும் இருந்திருக்காது.
புலி புலிப் பாசிசம் என்று கூவியவர் அஸ்ரப். இன்று அவர் எங்கே. புலிகள் ஆயுதங்களைப் போட்டிவிட்டு சரணடைந்தாலும் செம்மணிகள் குழிகளோடு காத்திருக்கின்றன. ஆனால் புலி எதிர்ப்பு அரசியல் நடத்தி பிழைக்கும் கூட்டமும் அதே செம்மணிக்குள் சிங்களத்தால் புதைக்கப்பட அதிக நேரம் எடுக்காது என்பதை உணரும் போது.. நீங்கள் இப்படி எழுதுவதை எண்ணி வருந்துவீர்கள்.
உயிர்கள் எல்லாமே போராடித்தான் வாழ்கின்றன. போராட்டம் இன்றேல் வாழ்க்கையில்லை. என்ற நிலைதான் உலகில்.
உலகில் எவருமே நிரந்தரமாக வாழப்போவதில்லை. ஆனால் எதிர்கால சந்ததியாவது வாழும் வரை நிம்மதியாக வாழ ஒரு தேசம் வேண்டும் என்றுதான் இந்த வீரர்கள் சுயநலத்துக்கு அப்பால் தங்கள் வாழ்வை இடையில் முறித்துக் கொள்கின்றனர். காரணம் அவர்கள் இலட்சிய மனிதர்கள். உங்களைப் போன்ற காட்டிக்கொடுப்பு அரசியல் செய்து வயிறு வளர்க்கத் தெரியாமல் அவர்கள் மாழவில்லை. அவர்களால் அதுவும் முடியும். ஆனால் இனமானத்தை காக்க எண்ணியவர்கள் அவர்கள்.
சிங்கள பாதங்களை அண்டிப்பிழைத்து பாசிசம் உச்சரிக்கும் நீங்கள்.. உலகெங்கும் பேரழிவுகள் நிகழ்த்தும் வல்லாதிக்கங்களின் பாசிச ஆட்சிக்குள் ஜனநாயகத்தை காண்கிறீர்களே அதெப்படி..???! காரணம் உங்களுக்கு பதுங்கவும் பணம் பிடுங்கவும் அவை இடமளிப்பதால்..! அந்த நிலை கடந்தவர்களே மாவீரர்கள் புலிகள்.
உங்கள் மரணமும் ஒரு நாள் வரும். அன்று எவனும் அழான். ஆனால் வீரனின் மரணம் அவன் நினைவுகளை தாக்கி நிற்கும்.
மனித வரலாறு பல சாம்பிராச்சியங்களைக் கண்டு பல யுத்தங்களைக் கண்டு வந்ததே தவிர.. மனிதன் பேடியாகி வாழ்ந்து இன்றைய நவீன உலகைப் படைக்கேல்ல..!
i think all these people are venting anger that Tamilselvan's death dampened their November Victory festival....
beside how can they claim that A'pura attack crippled Srilankan Army...these people are crying their festivities are put down...
Cheers for next glorius attack..
//மிகவும் நிதானமான மனிதநேயமான பதிவு. காலமறிந்து கூறியிருக்கிறீர்கள். உங்கள் முயற்சி பாராட்டபடவேண்டியது.
எவருமே கூறத்தயங்கும் விடயத்தை மிகவும் சாதுரியமாக விளக்கி இருக்கிறீர்கள்.
புலிகளின் போராட்ட வழிமுறைகளில் உள்ள பிழைகள் புலிகளை எங்கே கொண்டு போய் விடுமென எல்லோருக்கும் உணர்த்தியிருக்கிறீர்கள். புலிகளையும் அவரது போராட்ட வழிமுறைகளையும் பார்க்கும் போது எனக்கு ஒரு அதிர்ச்சி கலந்த துயரம் ஏற்படுகின்றது. அநேகமாக இப்படியான பார்வை கொண்ட கட்டுரைகளில் வலிந்து திணிக்கப்படும் வார்த்தை ஜாலங்கள் இங்கே இல்லாதிருப்பதும் ஆறுதலளிக்கிறது. தமிழ்ச்செல்வன் போன்றோர் இறந்ததும் துடித்து போகும் தமிழ்ச்சமூகம் கரும்புலிகள் இறந்த போது ஏன் துடிக்கவில்லை.?//
என்னுடைய இந்தக்கருத்து சிறீரன்கனின் வேறொரு பதிவுக்கு இடப்பட்டது.
இங்கே யாரோ எனது பெயரையும் போட்டு, தமது கருத்தையும் சேர்த்து மீளப்பதிந்திருக்கிறார்கள். தமிழ்ச்செல்வனின் இறப்புக்கு முதலே இகருத்து எழுதப்பட்டது. தமிழ்ச்செல்வன் குறித்த செய்திகளை இதில் விசமத்தனமாக இணைத்திருக்கிறார்கள்.
நான் மு.மயூரன் என்ற பெயரில், எனது பிளாகர் க்கணக்கிலிருந்துதான் பின்னூட்டமிடுகிறேன்.
இந்தச்செயலைச்செய்தவர்கள் இதிலிருந்து என்ன நன்மையடைய முயற்சிக்கிறார்கள் என்று வியக்கிறேன்.
சிறீரங்கன் தயவு செய்து எனது பிளாகர் கணக்கிலிருந்தல்லாமல் என்னுடைய பெயரில் வரும் பின்னூட்டங்களை அனுமதிக்க வேண்டாம்.
எனது பெயரில் போடப்பட்டிருக்கும் திரிக்கப்பட்ட கருத்தினை நீக்கிவிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
//... தயவு செய்து எனது பிளாகர் கணக்கிலிருந்தல்லாமல் என்னுடைய பெயரில் வரும் பின்னூட்டங்களை அனுமதிக்க வேண்டாம்.//
மயூரன் அப்படியே செய்கிறேன்.வரவுக்கு நன்றி.
Thoo naye........... பரதேசி நாயே.....solluda enna thaan seiya porai? Mental????
i am working at colombo ...i am the only one tamil girl here..at my office....
sinhalavan enna solran theriyumada ....thamilanai ellam kolla venumam.....
neeyelam miruham
மரணத்தை கூட மகிழ்ந்து கொண்டாடும் நீர் ஒரு மனநோயாளியாக தான் இருக்க வேண்டும்.
உங்களை மாதிரி ஆட்களால்தான், தமிழர்கள் இன்னும் இலங்கையில் இன்னும் இன்னல்களை அனுபவிக்கிறார்கள்!
நல்லதோ கெட்டதோ, புலிகள்தான் இலங்கைத் தமிழர்களைக் காக்கப் பிறந்தவர்கள்...உணர்ந்துகொள்ளுங்கள்.
எனக்கு மனவருத்தமாக இருக்கிறது உங்களுடைய ஆக்கம் பார்க்கின்ற பொழுது. தமிழுணர்வு அற்ற கேவலமானவரே...
என்னுடய அலுவலகத்தில் காசு சேர்க்கின்றார்கள் சிங்களவர்கள். வெற்றியை கொண்டாடுவதற்கு....என்னிடமும் வந்து கேட்டார்கள்...நெஞ்சு வலிக்கிறது...உயிர் என்று சொல்கிறீர்கள்..நாங்கள் இராணுவம் இறந்தால் இனிப்பு கொடுத்து கொண்டாடுகிறோமா???? உங்களை மாதிரி துரோகிகள் இருக்கும் வரை சிங்கள்வர்களுக்கு வெற்றி தான்....
அட நாயே
Blogs Freeயாக கிடைக்குது என்று நீ நினைத்ததையெல்லாம் எழுதாதே. நாயே எங்கடா இருக்கிறாய் கையிலை கிடைத்தால் தெரியும் ஈ மொய்க்குமா இல்லையா என்று. நீயும் கசிப்புக்காச்சியதற்காக அவர்களால் தண்டிக்கப்பட்டாயா? அல்லது மாமா வேலை பார்த்ததறகாக தண்டிக்கப்பட்டாயா? நீ செய்த குற்றங்களுக்கு அவர்கள் உனக்கு தண்டனை வங்கியிருப்பார்கள் அதுக்குபோய் உன்ரை மாமா புத்தியை காட்டுகிறியே. நீ தண்டிக்கப்படடவன் என ஊருக்கு தெரியும் ஆனால் ஏன் தண்டிக்கப்பட்டாயென்று சிலருக்குத்தான் தெரியுமடா நாயே.
//மரணத்தை கூட மகிழ்ந்து கொண்டாடும் நீர் ஒரு மனநோயாளியாக தான் இருக்க வேண்டும்.//
லக்கி லுக்கு வாரும்மையா வாரும்.மரணத்தைக்கூட எவனய்யா மகிழ்ந்தான் இங்கே?உமக்குத் தமிழில் புரியாதிருந்தால் சொல்லும் ஆங்கிலத்தில்,ஜேர்மனில் எழுதி விடலாம்.அதைச் செய்பவர்கள் தமிழ்த் தேசிய மனதுகள்தாம்!புரிந்தீரோ?இருபத்தியொரு கரும்புலிக்குச் சமாதிகட்டிவிட்டு,தமிழ்ச் செல்வனுக்கு வீரவணக்கஞ் செய்கிறார்கள் வானொலியில்.இது என்ன முறைமை?உணர்ச்சி ரீதியாகச் சிந்திக்கும் எவரும் நான் கூறுவதைப் புரியமாட்டீர்கள்.உங்களை எதிர்பார்த்து இவற்றை நாம் எழுதுவில்லை!நமது மக்களின் போராட்டத்தைச் சிதைக்கும் வழிகளை ஆராய்ந்து தடுப்பதற்கான வழியைக் கண்டடையும் ஆய்வு மனதுக்கே இது அவசியமானது.நீங்கள் எதைவேண்டுமானாலும் கற்பிக்கலாம்.ஆனால், உண்மைகளுக்கு எந்த முக்காடும் கிடையாது.மரணங்களைக் குவித்தவர்கள்-அதை மீளவும்,மீளவும் நமக்குள் நடாத்திக் காட்டுபவர்கள் நாமல்ல.எத்தனை முறைகள் இவற்றைச் செய்து அவர்கள் தமிழர் தேசிய விடுதலையைக் குழிதோண்டிப் புதைப்பினும் அதைப் புரியாது தேசிய வெறி நம்மை இந்தக் கோலத்துக்குக் கொணர்ந்துள்ளது.எனினும்,அதே கதையிலேயே தொடரும் இப்போராட்டத்தை எவராலும் காத்துவிட முடியாதென்பதை உங்கள் கருத்துக்களிலிருந்து இனம் காணக்கூடியதாக இருக்கிறது."தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்" என்றவுடன் அது மலர்ந்துவிடாது.:-(((((((
சரி சரி..
இதெல்லாத்தயும் விட்டுட்டு தண்ணியை போட்டுட்டு வந்து ஜனநாயகத்தில வந்து வர்க்க நலனில் என்னை வதைக்காதீர் என ஒரு கவிதை எழுதும். அது தான் உம்மடை உண்மையான குரல் !
புலிகளை 4 வகையானோர் எதிர்க்கின்றார்கள்.
1. அரசாங்கத்திடம் பணத்துக்காக எதிர்ப்பவர்கள். இவர்களைப் பற்றி பேசி பிரயோசனமில்லை. அவர்களுக்கு புலிகள் பணம் கொடுப்பதன் மூலமே அவர்களது எதிர்ப்பை தங்களுக்கு சார்பாக மாற்றிக் கொள்ள முடியும்.
2. புலிகளிடம் உள்ள குரோதத்தால் எதிர்ப்பவர்கள். இவர்கள் புலிகளால் ஏதொ ஒருவகையில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் பழைய இயக்ககாரர்கள் இவ்வகையில் அடங்குவர். தங்களது இருப்பை மறுத்தது அவர்களது கோபம். நியாயமானது. புலிகளும் இவ்வகையானவர்களுக்கு எவ்வித சாதகமான போக்கையும் தங்கள் போராட்டத்தில் காட்டவில்லை. 'உண்மையான' மக்கள் விடுதலையை எப்போதும் விரும்புபவர்கள். புலிகள் சந்தித்த பேரிழப்பு என்பது இவ்வகைமாதிரியினரை இழந்ததே.
3. தம் மக்கள் மீது உள்ள நேசத்தால் எதிர்ப்பவர்களை இவகைக்குள் அடக்கலாம். இவ்வகையினர் பெரும்பாலும் எழுத்துகளில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டுவதில்லை. எதிர்ப்பு என்பது தம் மக்களை பாதித்து விடுமோ என நினைத்து பெரும்பாலும் பேசாமல் இருந்துவிடுவர். ஏனெனில் தமிழ்மணத்தில் எழுதுவதால் புலிகள் போராட்ட திசையை மாற்றமாட்டார்கள் என்பதை அறிந்தோர்.
4. இவ்வகையினர் புகழுக்காகவும் பேருக்காகவும் எதிர்ப்போர். இவர்கள் எக்கருத்தை ஆதரித்தால் 'வித்தியாசனமானவன்' என்ற பெயர் கிடைக்கும் என்று அலைபவர்கள். 'விலாசம்' காட்டும் கூட்டம். இவர்களில் பெரும்பாலானோர் புலிகளை பார்த்தே அறியாதவர்கள். புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் என்ன நடக்குது என்றே அறியாதவர்கள். இவர்கள் எங்கிருந்தாலும் தமது பிரசன்னத்தை அறிவித்துக்கொள்வார்கள். நாங்களும் புலிகளை எதிர்க்கிறோம் என அறிவித்துக் கொள்வர். அற்ப சந்தோசம் பட்டுக்கொள்வர். அறிவுஜீவி வேசம் போடுபவர்கள். தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போலக் காட்டிகொள்வர். இவர்களை புலிகள் எதிரியாக கணக்கெடுப்பதில்லை.
ப.வி.ஸ்ரீரங்கன்....நீங்கள் எழுதியிருக்கும் இந்த பதிவு..தமிழ்ச் செல்வனின் மரணத்தை ஒட்டி எழுந்துள்ள பதட்டத்தையும் துக்கத்தையும் கொச்சைப் படுத்தி உங்களின் கருத்தை அதிகார மைய்யமாக மாற்ற முயர்ச்சித்துள்ளீர்கள்..உங்களுக்கு ஈழப் போராட்டத்தின் மீது ஆயிரம் முரண்கள் இருக்கலாம்.தனிநபர் சுதந்திர ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கலாம்..ஆனால் எல்லாவற்றையும் தயார் படுத்தி வைத்து நேரம் பார்த்து பாணத்தை ஏவுகிற ஒரு விதமான நேர்மை இன்மை இந்த கட்டுரையில் இருக்கிறது.உங்கள் கருத்துக்கள் சிலருக்கு நியாமாக படலாம் ஆனால் மனித உயிர்களின் பால் கொண்டுள்ள சின்ன இரக்கம் கூடவா?உங்களுக்கு இல்லாமல் போனது...பார்ப்பனத்தன்மான உங்களது கட்டுரையை நான் கண்டிக்கிறேன்..
யாருடைய மரணமும் மனித நாகரீகம் கொண்ட கண்ணியம் கொண்ட எவருக்கும் உவப்பானவையல்ல. வழிபடுதற்குரியனவல்ல.
நேற்றைய தினம்(02-11-2007) அதிகாலை 6.00 மணியளவில் கிளிநொச்சி இரணைமடு மற்றும் திருவையாற்றில் நிகழ்ந்த விமானக் குண்டு வீச்சில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு புலிகளின் முக்கியஸ்தர்கள் வீரச்சாவடைந்ததாக புலிகளின் சமாதான செயலகம் அறிவித்திருந்தது.
மனித மரணங்களை வன்முறை மனநோயாளிகள்தான் விரும்புவார்கள். நாம் அனைத்து வகைப்பட்ட மனித மரணங்களையும் வெறுக்கிறோம்.
ஆனால் புலிகள் மனிதர்களின் மரணங்களை மூலதனமாக்குபவர்கள். அதை வைத்து பணம் பண்ணுபவர்கள். அதை வைத்து தமது அதிகாரத்தை ஸ்தாபிப்பவர்கள். வாழ்வின் மீது நம்பிக்கையற்றவர்கள். மரணங்களை பூசிப்பவர்கள். உயிரோடு இருக்கும் மனிதர்களை வெறுத்து நடுகற்களை வழிபடுபவர்கள்.
சகோதர மாற்று தமிழ் கட்சிகளின் தலைவர்களை கொன்று விட்டு குதூகலித்தவர்கள். இந்தியாவின் முன்னாள் தலைவர் ரஜீவ்காந்தி அவர்களை படுகொலை செய்துவிட்டு அதனை வன்னியில் இனிப்பு கொடுத்து கொண்டாடியவர்கள். அப்பாவி தமிழ் மக்கள் மாத்திரமல்ல முஸ்லீம், சிங்கள மக்கள், நாட்டின் தலைவர்கள், கல்விமான்கள், சமூக சேவையாளர்கள், சாதாரண பிரஜைகள் என பலரையும் கொன்றுவிட்டு குதூகலிப்பவர்கள். மக்களின் அவலங்களில் குளிர்காய்பவர்கள்.
மாற்று தமிழ் கட்சியினரை துணை இராணுவக் குழுக்கள் என விரோதமும் வன்மமும் தொனிக்க விளிப்பவர் பிரிகேடியர் சு.ப. இவர் எத்தனை பேரின் குரூர மரணங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டவர், எவற்றுக்கெல்லாம் குதூகலித்தவர் என்பதை இன்னோரிடத்தில் விரிவாக ஆராய்வோம்.
இந்திய அமைதி காப்பு படை இலங்கையில் நிலை கொண்டிருந்தபோது யாழ்ப்பாணத்தில் புலிகள் நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதல்களில் இவர் முன்னணியில் நின்றவர். இவருடைய குரூரங்களாலும், கொலை மனோபாவத்தாலும் பிரபாகரனின் விருபத்திற்கும், நம்பிக்கைக்கும் உரிய ஆளாக தன்னை மாற்றிக் கொண்டார்.
தமிழ்ச்செல்வன் புலிகள் இயக்கத்தில் இருந்த மிதவாத தலைவரென சிலர் அவருக்கு முலாம் பூச முனைகிறார்கள். அவருடைய வசீகரமான முகத்தோற்றத்திற்கும் நஞ்சும் அயோக்கியத்தனமும் நிறைந்த அவருடைய மனதிற்குமிடையே பாரிய இடைவெளி நிலவியது என்பது பலருக்கு தெரியாத சங்கதி. அவர் ஒரு பாசிச இயக்கத்தின் அரசியல் பேச்சாளராக வெளிவேஷம் போட்டபடி உலா வந்தார் என்பதை பலரும் அடிக்கடி மறந்து விடுகிறார்கள்.
இந்த பாசிச இயக்கத்தின் பிரமுகர்கள் அவர்களின் வெளிவேஷ சிரிப்பு இங்கிதம் என்பவற்றை வைத்துக் கொண்டு இனப்பிரச்சனையை அணுகுபவர்கள் தமிழ் மக்களின் வாழ்க்கையை தாம் நரக படுகுழிக்கு இட்டுச் செல்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வதில்லை.
அவர் ஊடகவியலாளர்களுக்கு அதிகூடிய பேட்டிகளை அளித்தவர், அதிக பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியவர், சமாதானத்தில் ஆர்வம் கொண்டிருந்தவர் என்று அகிம்சை முகம் ஒன்றை கொடுக்க பலரும் பிரயத்தனம் செய்கிறார்கள்.
தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், சமாதானத்திற்காகவும் ஏனைய சமூகங்களுடன் சகவாழ்விற்காகவும் இதயபூர்வமாக உழைத்த பல நூற்றுக்கணக்கான தலைவர்களை, சமாதான ஆர்வலர்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்களை, போராட்டக்காரர்களை படுகொலை செய்த ஒரு பாசிச இயக்கத்தின் வேஷம் கட்டப்பட்ட பிரதிநிதி. இந்த அக்கிரமங்களையெல்லாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட, இந்த அக்கிரமங்களில் பல சந்தர்ப்பங்களில் நேரடியாக சம்பந்தப்பட்ட ஒருவர்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்.
ஒருவர் வெள்ளை உடையையும், முகத்தை மலர்வாகவும் வைத்திருந்தால் அவர்கள் சமாதானத் தூதுவர்கள் என்றில்லை. அயோக்கியர்களும் இத்தகைய வேடத்தை தாங்க முடியும்.
புலிகள் இயக்கம் சதிகளும், குழிபறிப்புக்களும் நிறைந்தவொரு இயக்கம் என்பதை நாம் மனதில் இருத்த வேண்டும். அண்மைக்காலமாக பல சதிகள் குழப்பங்கள் புலிகள் இயக்கத்தினுள் நிகழ்வதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பலருக்கும் தெரிந்த சங்கதிகளே. கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை படகு விபத்தில் படுகாயமடைந்தது ஒன்றும் தற்செயலான நிகழ்ச்சியல்ல என்றும் பேசிக்கொள்ளப்படுகிறது. இதேவேளை பொட்டம்மான், தமிழ்ச்செல்வன் புலிகளின் வேறு தளபதிகளுக்கிடையே முரண்பாடுகள், காழ்ப்புணர்வுகள் இருந்து வந்ததும் பரகசியம்.
குழிபறிப்பு என்பது புலிகளின் வரலாறு முழுவதும் காணப்படும் சமாச்சாரம். 70 களின் பிற்பகுதியில் பக்கத்தில் பாயில் படுத்திருந்த சகாக்களை நள்ளிரவில் கொல்லைபுற வாழை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று படுகொலை செய்தவர் தேசிய தலைவர் பிரபாகரன். அது மாத்திரமல்லாமல் அவர் முன்னர் அங்கத்துவம் வகித்த டெலோ இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் 80 களின் முற்பகுதியில் தீவிரமாக அரச படைகளால் தேடப்பட்ட போது அவர்கள் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயல்கையில் அவர்கள் பற்றிய தகவல்களை அளித்து அவர்கள் கைது செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்தவர். பிரதித்தலைவராக இருந்த மாத்தையா தனது பதவிக்கு சவாலாக எழுந்துவிடுவாரோ என அஞ்சி அவரை தீர்த்துக் கட்டியவா. யாழ்ப்பாணத்தில் புலிகள் நிகழ்த்திய தாக்குதலொன்றில் செல்லக்கிளியை பின்புறமிருந்து சுட்டவர்.
மன்னாரில் செல்வாக்குமிக்க புலி தளபதியான விக்டரை பின்புறமிருந்து சுட்டு படுகொலை செய்வதவர்களுக்கு தூண்டுகோலாக இருந்தவர். தேசியத் தலைவரின் இந்தக் கலையை, கைவண்ணங்களை புலிகளின் அடுத்த நிலை தலைவர்கள் கற்றிருக்கமாட்டார்கள் என்றில்லை.
தமிழ்ச்செல்வன் பரவலாக சின்டுமுடியும் ஆள் என பரவலாக புலிகள் இயக்கத்தினுள் கருதப்பட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்படும் மித மிஞ்சிய முக்கியத்துவம் புலிகள் இயக்கத்தினுள்ளே காழ்ப்புணர்வுகளையும் குரோதங்களையும் அதிகப்படுத்தியிருந்தது. மற்றவர்களின் குற்றம் குறைகளை தலைவருக்கு போட்டுக்கொடுப்பவர் என பெயர் பெற்றிருந்தார்.
விமான குண்டுவீச்சை துல்லியமாக நடத்துவதற்கு வன்னியில் இருந்து கிடைத்த தகவல்களும் உதவியிருந்தன என படைத்தரப்பு செய்தி குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.
தகவல்களை அளிப்பதற்கு எத்தனையோ இலகுவான வழிகள் இருக்கின்றன. எனவே தமிழ்ச்செல்வனின் மரணத்தில் உள்வீட்டு பங்களிப்புக்களையும் மறுதலித்துவிட முடியாது.
தவிர மாற்று கட்சிகளின் தலைவர்களை, உறுப்பினர்களை, சர்வதேச தலைவர்களை, உள்நாட்டு தலைவர்களை படுகொலை செய்யும் போது அவர்கள் பெரும் எடுப்பில் மகிழச்சி ஆரவாரங்களை செய்வார்கள். அதேபோல் தமது கீழ்மட்டத்திலுள்ள உறுப்பினர்களை தற்கொலையாளிகளாக மாற்றி அவர்கள் வெடித்து சிதறும் போது அவர்களின் இரத்தமும் அவர்களால் கொல்லப்பட்டவர்களின் இரத்தமும் சங்கமமாகும் போது குதூகலிப்பார்கள். அண்மையில் அனுராதபுரத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலிலும் தமது குதூகலிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
இந்த குதூகலங்களுக்கு இடையே குறிப்பிட்ட சில மரணங்கள் மட்டும் மிகைப்படுத்தப்பட்ட சோகத்துடன் நினைவு கூரப்படும். அண்மையில் புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தின் மரணமும் தற்போது தமிழ்ச்செல்வனின் மரணமும் அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மற்றவர்களின் உயிர்கள் அற்பமானவை என்றும் புலிகளின் தலைவர்களின் உயிர்கள் உப்பரிகை துயரங்கள் போலவும் ஏதோ சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகவும் சித்தரிக்கப்படுகின்றது. புலிகள் எட்டடி பாய்ந்தால் புலிகளின் ஊதுகுழலான தமிழ் ஊடகங்களோ பதினாறடி பாய்வார்கள். தமிழர்களுக்கு ஒரேயொரு ரட்சகர் இருந்தார் அவரும் போய்விட்டார் என்பது போல அரற்றுவார்கள்.
யாருடைய மரணமும் மனித நேயம் கொண்டவர்களுக்கு, நாகரீகமான மனிதர்களுக்கு உவப்பானவையல்ல. தமிழ்ச்செல்வனின் மனைவி பிள்ளைகள் உற்றச் சுற்றத்தை பொறுத்தவரை அவர்களுக்கு இது ஒரு துயரம். இதேபோன்றதுதான் புலிகளால் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கானவர்களின் உறவுகளினதும், உற்ற சுற்றத்தாரினதும் துயரம்.
வஞ்சகமும், சூழ்ச்சிகளும் போலித்தனங்களும் முதலில் எமது சமூகத்தில் இல்லாதொழிய வேண்டும். சிலரது மரணங்களை ஈடு செய்ய முடியாதது என்பதும், பலரது மரணங்களை துச்சமாக எண்ணுவதுமான இழிநிலை எமது சமூகத்தில் ஒழிந்தாக வேண்டும்.
சிறிதோ பெரிதோ சமூகத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்களின் உயிர்த்தியாகங்களும் மதிக்கப்பட வேண்டும். சமூகம் தொடர்பில் ஒழிவு மறைவற்ற செயற்பாடுகள் இருக்க வேண்டும். அப்போதுதான் எமது சமூகம் விமோசனத்தை நோக்கிச் செல்ல முடியும். திறந்த வெளிப்படையான அணுகுமுறையில்லாத ஏகபிரதிநிதித்துவ பாசிச கருத்தியல் செயற்பாடு என்பன தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக செழுமையான ஆக்கபூர்வமான, பல நூற்றுக்கணக்கான பங்களிப்புக்கள் கருத்துக்களை, செயற்பாடுகளை நிராகரிக்கிறது. உடல் மீதியின்றி அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கிறது. இது சமூகத்தை மேலும், மேலும் அழிவை நோக்கியே நகர்த்துகிறது. அரசியல், மனித உரிமை, பொருளாதாரம், சமூகம், கல்வி என பல்துறை செயற்பாடுகளின் ஆக்கபூர்வமான தேடலுடனான இயக்கத்தை இது நிராகரிக்கிறது. இதுவே எமது சமூகத்தின் இன்றைய பேரவலம்.
யாருடைய மரணமும் மனித நாகரீகம் கொண்ட கண்ணியம் கொண்ட எவருக்கும் உவப்பானவையல்ல. வழிபடுதற்குரியனவல்ல.
தமிழ்நியூஸ்வெப்
தமிழ்ச்செல்லவனால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதே இந்நேரத்தில் பொருத்தமானதாகும். எனவே எனது அஞ்சலியினை தமிழ்ச்செல்லவனால் கொல்லப்பட்ட மக்களுக்கு செலுத்துகின்றேன்.
- திவாகர்
இதில் ஒவ்வொருவருடைய குணம் தெரிகிறது
Srirangan nanrigal
tamilnews web too make verygood article
லக்கிலுக்கு பெரிய வெண்ணை மாதிரி புத்தி சொல்ல வந்துட்டாரு....
ஏன்யா லக்கீலுக்கு, இப்படி வேஸ்டா பதிவும் பின்னூட்டமும் போடறதுக்கு பதிலா டில்லி அரசாங்கத்துகிட்ட சொல்லி இலங்கைக்கு ஆயுத உதவியை நிறுத்த சொல்ல வேண்டியதுதானே?
மத்தியில உங்க கூட்டணி ஆட்சிதான நடக்குது.
அது சரி, நாளைக்கு கனிமொழிக்கு பதவி கொடுக்க மறுத்தா ஆதரவு வாபஸ்னுவீங்க. ஈழத்துகாரன் செத்தா அறிக்கை விட்டு ஸீன் காட்டுவீங்க..... அடத்தூ
Sri Rangan's observation is very bookish.
If GOSL knows the target and kills the negotiator. They have a different message to the World which the leader knows.
Since 1948, in this 59 years of struggle, The Leader is alone in the field. Every one else lost themselves in / to thier ideology and what not.
பல சந்தர்ப்பங்களில்
"கொண்டையை மறை" என்ற வாக்கியங்களை தமிழ்மணத்தில் பார்த்தாலும் அதை பெரிதாக கணக்கில் எடுத்ததில்லை.
ஆனால் சிறிரங்கனின் பதிவை பார்த்ததும் அது தான் ஞாபகம் வந்தது.
சிறீரங்கன் எவ்வளவு தலீத்தியம் பேசினாலும் அவரின் வெள்ளாள உயர்சாதி கொண்டை தமிழ்செல்வனை போற்றுவதை பொறுக்க முடியாது வெளிவந்துவிட்டது.....
தோழர்,
உங்கள் மீதான வசைகளையும் அறம்பாடுதலையும் கவனித்தேன். அது இயல்பானதே. மேலோட்டமான உணர்ச்சிவசப்படல், குறுந்தேசிய இனவெறி, சாகசத்தின் மீதான ஆறாக்காதல், தத்துவார்த்தப்பின்புலமற்றமை எனப் பல்வேறுகாரணிகள் விரிந்து பரவுகின்றன. என்னைப்பொறுத்தவரை தமிழ்ச்செல்வனின் மரணத்திற்காய் வருந்துகிறேன், ஆனால் தமிழ்ச்செல்வன் மட்டுமிற்காயல்ல, சகோதரயுத்தம், எதிரியை நோக்கிய யுத்தம் என அனைத்து யுத்தத்தினாலும் கொல்லப்பட்ட போராளிகள் என அழைக்கப்படுபவர்கள் மற்றும் அப்பாவிகள் என அனைவரின் மரணத்திற்காகவும். ஆனாலும் போராட்டம், துரோகம், மாவீரம் என்றெல்லாம் இருமை எதிர்வுகள் கட்டப்படும் பெருங்கதையாடல் பரப்பில் பிணங்களுக்கான வேல்யூவும் மாறுவது இயல்புதானே!
மிதக்கும்வெளி,வணக்கம்!-தங்கள் கருத்துக்களுக்கும் வரவுக்கும் நன்றி.
Dear Comrade, I totally agree with your political stand and your critizism on the Mafia LTTE.Thses are the words I like to mention and bring it from your article,
1.The LTTE's Mafia leadership are the worst taitors of the Tamil people.
2.We highly suspect that ,the Killing of one of the Mafia leadership is an internal and may be imperialist plot.
3.Srilanka facist leadership and LTTE's leadership, both are the enemy of the tamil people
Dear All,
I am accepting that unity among the working class is the solution to all type of problems including the Tamil eelam ethnical problem.
There is no doubt that sinhala pacists simply diverting the sinhala working class towards ethnical problem and preventing them for working against the sinhala capitalists.
But for that we cannot grant ourself to be killed to educate this things to sinhala working class.
Now all capitalist countries including India, America, Europe are pressurising tamils to live within Unity Lanka. You people say the same thing but in different words.
Sinhala working class is poisoned with Bhudha pacists like JVP and no one can divert them from their point of view.
Marxism is the ideology to live, not die by practioning it or try to practice it with our life.
First tamils should shield themself from killings by sinhala pacist government and then they can try to save sinhala people.
Still Tigers not make any attempt to kill innoscent sinhala people with any means.
Tigers not happy to give the black tigers life to destroy any military establishments.
I cannot say Prabhakaran did mistake by preventing any other organizations to live.
Bz during IPKF period, Tigers not having any option to shield themself by preventing other organisations who gave intelligence information to IPKF about LTTE.
And you tried to get benefit by making difference between Leaders and Normal Fighters.
I have to tell u that Prabakaran was fighting as a soldier for several years and then only he came as supremo to LTTE.
Like that only Tamilselvan served as fighter and then improved himself his leadership.
But i wonder how Srirangan nanrigal is agreeing with Tamil news web in their false propaganda.
It is very clear (from their post itself) Tamil News Web is against tamils and not having even any moral.
Sellakili is very good friend to Prabakaran and how Praba could kill by ? Very good imaginations even SLA cannot think like this.
So let us unity ourself to give a homeland to tamils for living peacefully.
Arivuda Nambi
Tamil Nadu
Please read this funny artical about TamilChelvan
http://lankaguardian.blogspot.com/2007/11/sp-thamilselvan-maoist.html
S.P. Thamilselvan – A Maoist?
is a very good article. congradulations.
\\At Sat Nov 03, 04:49:00 AM 2007, லக்கிலுக் said…
மரணத்தை கூட மகிழ்ந்து கொண்டாடும் நீர் ஒரு மனநோயாளியாக தான் இருக்க வேண்டும்.//
What did you/your party people/vi.pu do when Rajiv Gandhi was assasinated? Didn't some people celebrate his death? In your words, are they all "மனநோயாளி"?
Mohanakrishnan think twice before writing anything. This is not your madippakkam or ilaikkaaran blog!!!
உங்கள் கேள்வி உண்மையிலேயே வலிக்கிறது சிறீரங்கன்
ஈழநாதன் வாருங்கள்!
நீண்ட நாட்களுக்குப் பின்பு பின்னூட்டியுள்ளீர்கள்!!
இக்கட்டுரையிலுள்ள கருத்துக்களில் தொக்கி நிற்பது எமது விடுதலைப்போராட்டத்தைச் சிதைக்கும் போராட்டச் செல்நெறி மற்றும் இயக்க உட்கட்சி ஜனநாயகம்,வெகுஜன விய+கம் சம்பந்தப்பட்டது.தமிழ்ச் செல்வனின் மரணத்தை மகிழ்வதாகச் சிலர் சொல்கிறார்கள்."ஏன்ரா இன்னும் நம்மைத் தொலைக்கிறீர்கள்?"இங்கேஇ கண்ணீரையல்லவா விடுதலையென்கிறீர்கள்!"என்ற வார்த்தைகளின் ஊடாக என்ன சொல்ல வருகிறேன்?தமிழ்ச் செல்வனைத் தொலைக்கும்போது-நம்மைத் தொலைப்பதாகவும்,இதனூடாகத் தரும் கண்ணீர்தாம் விடுதலையாகச் சொல்வதா என்கிறேன்.நாங்கள் அழுது புரண்டாலும் நமது போராட்டத்தில் செல்நெறி மாறாதுபோனால் இத்தகைய மரணங்கள் தொடரவே செய்யும். குருதியிலிருந்து"ஈக்கள் தோன்றுமென்பது"கட்சி அரசியலாளர்களின் மகுடி வித்தைக்கு எதிரானது.உண்மையில் அதுதாம் நிகழும்.ஆனால், விடுதலையுணர்வைக்குறித்துப் பெருமிதமாகச் சொல்லும்போது அந்தத் தேசிய உணர்விலிருந்து ஆயிரம் என்ன இலட்சம் போராளிகள் தோன்றுவார்கள்.தேசியவுணர்வுத் தீயை எவராலும் அணைத்திட முடியாது.ஆனால,; நாம் சொல்லும் தேசியம் புலிகளுக்கூடாய் புலி எதிர்பினர் கட்டமைக்கும் தேசியமல்ல.எனவேதாம் ஓட்டுக்கட்சிப் பிரமுகர்களின் போலிக் குரலை அம்பலப்படுத்தி எமது விடுதலையை நேரிய பாதைக்கு எடுத்துச் செல்ல இப்படி எழுதுகிறோம்.இதுதாம் எமக்கு முன்னுள்ள கடமை!எதிரி பலதரப்பட்ட அந்நிய உதவி-விய+கங்களோடு எம்மைத்தாக்கி அழிக்கும்போது நாம் க்ண்ணீரோடு அழுது புரண்டால் நியாயமா?அடுத்தகட்டத்தை நோக்கிச் சிந்திக்க வேண்டும்.பாரதிராஜா,விஜயகாந்,ஓட்டுக்கட்சி மனிதர்கள் இதுவரை எமது போராட்டத்தைச் சிதைவிட்டுக் கண்ணீர்வடித்து என்ன பயன்?தமிழ்ச் சினிமா புரிந்து வைத்திருக்கும் எமது போராட்டம் என்ன?எமது கரங்கள் சர்வதேசத்தில் முற்போக்குச் சக்திகளோடும்,தேசிய விடுதலை அமைப்புகளுடனும் கைகோர்த்தாகவேண்டும்.இந்திய அரசியல் வாதிகள்,அதிகாரிகள் நம்மைக் குழிதோண்டிப் புதைக்கும் விய+கத்தோடு மட்டுமே நம்மை வாழ்த்துவதாக வாழ்த்திக் காலை வாருவார்கள்.நமது கடந்தகாலம் இதை உறுதிப்படுத்துகிறது.இருந்தும் இத்தகையவர்கள் ஒரு வார்த்தை போலியகச் சொன்னவுடன் எனது உடன் பிறப்புகள் ஓடோடிவந்து"கலைஞர்" சொன்னார்,பாட்டாளிமக்கள் தலைவர்,பாரதிராசா,புரட்சித் தமிழன் விஜயகாந்த என்றெல்லாம் இறுமாந்து போகிறோம்.இவர்களில் குரல்கள் யாவும் வெற்று வார்த்தைகள்.ஆபத்தானவை இவை எமக்கு!
நாம்,திரவிட அரசியல் வாதகள்போல் கூச்சிலிட முடியாது.எங்கள் குழந்தைகள் பல பத்தாயிரம் மாண்டுவிட்டனர்.இன்னும் தம்மைக் கொடையாக வழங்கித் தேசத்தைக் காக்க தேச பக்த இளைஞர்கள் இருக்கிறார்கள்.இவர்களின் தியாகத்தைத் தமிழ் பேசும் மக்களின் உண்மையான விடுதலைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துவதாகவிருந்தால் நமது போராட்டம் வெகுஜன எழிச்சியாக மக்கள்சார்ந்து,மக்களாலே முன்னெடுக்கப் புலிகள் புரட்சிகரமான மக்கள் போராட்டப் படையணியாக மாறவேண்டும்.எமது மக்களின் விடுதலைக்குப் பேச்சு வார்த்தையென்பது கிடையவே கிடையாது.ஏனெனில்,பேச்சு வார்த்தை நமது எல்லைகள் பற்றி நடைபெறுவதற்கானதல்லவே.ஆக,விடுதலை என்பது சாத்தியமாக வேண்டுமானால்,நமது இளைஞர்கள் மக்களோடு மக்களாக நின்று அந்த மக்களின் வெகுஜன எழிச்சியோ,அவர்களின் நலனிலிந்து போராடுவதற்கும்,அந்தப் போராட்டத்தில் நமது நண்பர்கள் யாராக இருப்பதென்று மதிப்பிட்டு முற்போக்குச் சக்திகளோடு கரம்கோர்த்து,தேசிய விடுதலைப் போராட்டம் புரட்சிகரமாக முன்னேறும்போது,எம்மை எவரும் அழித்திட முடியாது.இதுவன்றிப் புலிகளின் இன்றைய நிலையிலேயே போராட்டம் நிகழ்ந்தால்...தமிழ்ச்செல்வனை மட்டுமல்ல நாம் இழந்துபோனது.இன்னும்...
ஏகாதிபத்தியங்களை நம்பும் குர்திஸ் மக்களைப் பாருங்கள்!பேராசிரியர் சிவசேகரம் இது குறித்து வீரகேசரியில் சொல்லியுள்ளார்கள்.ஆனால்,நேற்று நடந்த துருக்கிய அதிபர் ஏர்டுவான் புஷ் சந்திப்பில் அமெரிக்கா என்ன முடிவைச் செய்திருக்கிறது?
உளவுத் தகவல் பரிமாற்றம் மற்றும் செய்மதிமூலம் குர்தீஸ் நிலைகளை உளவறிந்த அனைத்துத் தகவல்களையும் துருக்கிக்கித் தருவதாகவும்,அதைவைத்து அனைத்துக் குர்தீஸ் போராளிகளின் இலக்குகளையும் தாக்கி அழிப்பதற்கு அமெரிக்கா ஒத்துழைக்கிறது.வட ஈராக் எல்லையில் ஒரு இலட்சம் துருக்கியத் துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளது.துருக்கி நேற்றா பாட்னர்.அங்கே,துருக்கியைத் தூக்கிப் பிடித்து நிறுத்தும் ஏகாதிபத்தியம் குர்த்ஸ் மக்களைத் தமது கால்களுக்குத் தோதான பந்தாக்கி வைத்திருக்கிறார்கள்.ஆனால்,தொடர்ந்து எழுவதும் வீழ்வதும் கதையாக இருக்கிறது.இது எதனால்?
குர்தீஸ் போராட்ட பீ.கே.கே.யிடம் குட்டி முதலாளியப் பண்பு இருக்கிறது.அது உண்மையில் புரட்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை.ஆனால்,பேரளவில் அவர்கள் மக்களை அண்மித்துவரும் அரசியலை முன்னெடுக்கிறாகள்.எனவே,வீழ்ச்சியிலிருந்து மீள எழுகிறார்கள்.ஆனால்,வெற்றிக்கு வழியில்லை.காரணம்?குர்தீஸ் மக்கள் வட ஈராக்கில் எடுத்த முடிவு குறுகிய கால வெற்றிக்கானது.நீண்டகாலத்தில் அது தோல்வி.அந்தத் தோல்வி,அமெரிக்கா வழங்கும் அனைத்துப் புலனாய்வுத் தகவல்களுடாகத் துருக்கியிடம் போய்ச் சேரும்போது,குர்தீஸ் விடுதலையமைப்புப் பலவாறாகச் சிதைந்து,மீளவும் பல தளபதிகளை இழக்கும்.ஆனால்,அமைப்பாண்மை மீளக் கால் நூற்றாண்டு பின் செலு;லும் அதுவே,அமெரிக்காவுக்கு,ஐரோப்பாவுக்குத் தேவை.இதுவே,புலிகள் பற்றிய பார்வையிலும் இவர்களுக்கான இப்போதைய உடனடித் தேவை.புலிகள் கால் நூற்றாண்டு பின்னோக்கிச் செல்வதா அல்லது முன்னோக்கிச் செல்வதா என்பதைத் தீர்மானிப்பது நிச்சியம் நமது விவேகமே.இந்த விவேகம் ஏகாதிபத்தியத்தை நம்பினால் அந்த ஆண்டவனாலும் எம்மைக் காத்திட முடியாது ஈழநாதன்.இது குறித்து தொடர் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.இப்போதைக்கு இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
மிகவும் சிந்திக்க வேண்டிய பதிவு
Post a Comment