விவாதத்தைத் தவிர்த்த ஒப்பாரியால்-துவேஷிப்பதால்,தூற்றுவதால் விளைவதென்ன?
எதிரியை நோக்கி எச்சரிக்கைவிடுவதோ அல்லது வீரதீரப் பேச்சுகளோ நமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கல்ல.ஆயிரம் இளைஞர்கள் தோன்றுவார்கள் என்பதால் நமது போராட்டச் சமூக சீவியம் முன்னேற்ற மடையப் போவதில்லை.இவையெல்லாம் கட்சி அரசியலின் கயமைத்தனமானது.நாம் உயிர்களோடு விளையாடுகிறோம்.போர் செய்து மக்களைப் பலியிடுகிறோம்.நம்மிடம் விவாகமான அரசியல்-போராட்டப்பாதை,அதையொட்டிய ஆய்வுகள்-விவாதங்கள் நடந்தாக வேண்டும்.வெற்றுத் தனமான ஆயுதத் தாக்குதல்களால் விடுதலையென்பது சாத்தியமே இல்லை என்பதை நமது போராட்டத்தின் இன்றைய நிலையிலிருந்து எம்மால் இனம்காணமுடியும்!
இருந்தும்?
நாங்கள் தொடர்ந்தும் பெரும் பிழைகளைக் கண்ணீரால் கழுவப் பார்க்கிறோம்.அல்லது, உணர்ச்சி அரசியலால் துடைத்தெறிய முனைகிறோம்.தமிழ்ச் செல்வன் மீதான குண்டுத் தாக்குதலுக்காகக் கண்ணீர் சிந்துவது இருக்கட்டும்.இதுவே, அத்தகைய தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தாது.
அப்போது நாம் என்ன செய்தாகவேண்டும்?
எமக்குள் எங்கோ தவறிருக்கிறது.
இத்தகைய தவறுகளைச் சுய விமர்சனத்தோடு-உட்கட்சி ஜனநாயகத்தோடு புலிகளின் தலைமைமட்டுமல்ல,மக்களும் இணைந்தே சீர்தூக்கிப் பார்த்துத் தவறுகள் திருத்தப்பட்டாகணும்.எமது போராட்டமானது பிணங்களின்மீது அரசியல் செய்யத் தெரிந்தளவுக்கு,அத்தகைய பிணங்கள் விழும் அரசியலை விளங்கிக் கொள்ளவில்லை!இது எல்லாவகைப் புரிதலையும் சிதறடிக்கும் உணர்ச்சி வழியிலான சிந்தனையைமட்டும் நமக்குள் விதைக்கிறது.
இன்றைய தாக்குதலானது வெறும் எதிர் நடவடிக்கையென்று கருத முடியாது.தமிழ்ச் செல்வனைக் குறிவைத்துத் தாக்குவது நிச்சியமாகத் தகல்வல்களின் அடிப்படையிலேயே நடந்தேறியிருக்கிறது.இத்தகைய தகவல்களை எவர் செய்தார்-எதற்காகச் செய்தார்?புலிகளின் அமைப்பாண்மைக்குள் ஊடுருவிய இலங்கைசார் உளவுத் தளம் ஏன்-எப்படி உருவாகியது,இதற்கும் புலிகளின் தலைமையின் அரசியல் வியூகத்துக்காமான தொடர்பு என்ன?இதையொட்டிச் சிந்திப்பதும் விவாதிப்பதற்கும் பதிலாக வேறுவகையான உணர்ச்சிவகைக் கண்ணீரால் இந்த மரணங்களைத் தடுத்துவிட முடியாது.அல்லது, கருணா பிளவை கொச்சைத் தனமாகத்"துரோகி"என்ற கருத்தால் விளங்கிக்கொண்டதன் தொடர்ச்சியாக மீளவும் புரட்டிப்போட முனைந்தால், இவ்வகை மரணங்கள் மலிவதைத் தவிர வேறொரு மண்ணும் நடப்பதற்கில்லை.
போராட்டத்தின்மீதான விமர்சனங்களை-புலிகள் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளும் பாங்கு மிகவும் வருந்தத் தக்கது.நாம் சிறு தாக்குதல்களைப் பெரிதாக்குவதும்,அதையே வைத்துக் காலாகாலத்துக்கும் அரசியல் பிழைப்பைச் செய்யவும் பழக்கப்பட்டவர்கள்.அநுராதபுரத் தாக்குதலை விஷமத்தனமாக இந்தியப் புலனாய்வுத்துறைக்குள் இருக்கும் இராமன் ஓகோவென்று மிகைப்படுத்தும்போது அதைப் பெரிதாக எடுத்து இறுமாந்து போகிறோம்.அத்தகைய மிதப்பில் எமது அறிவின்மீது அதீத பெருமிதத்தைக் கொண்டாடுகிறோம்.ஆனால்,அது நம்மைத் தோற்கடிப்பதற்கான அரசியலை நமக்குள் விரிப்பதுகுறித்து நாம் கருத்தாடுவதற்கில்லை!எங்களிடம் காரணகாரிய பகுப்பாய்வு இதுவரை கைகூடவில்லை.புலிகளின் அணுகுமுறைகள்,முரண்பாடுகளைக் கையாளும் முறைமைகள் யாவும் பிழையாகவே இருக்கிறது.
உலக அரசியலின் உதவியோடு,பெரும் படையையும் அதுசார்ந்து புதுப்புது வியூகத்தையும் அமைக்கும் சிங்களக் கல்வியாளர்கள்,இராணுவ வல்லுனர்கள் நமது மக்களின் போராட்டத்தைத் தடுத்து அதைப் பயங்கரவாதமான முன்னெடுப்பாகக் நிறுவும்போதும்,அத்தகைய போராட்டத்திலிருந்து நம்மை விடுவித்து,நாம் மக்களை அணிதிரட்டிப் புரட்சிகரமான படையணியாக மலராது வெறும் குழுவுக்கேயுரிய போராட்டப்பாதையில் நின்றபடி, பிற நலன்களின் நோக்கிலிருந்து நமது மக்களின் முரண்பாடுகளை அணுகும்போது இத்தகைய தோல்விகள் வந்துவிடுகிறது.
இப்போதும்கூட இந்தத்தாக்குதலுக்குப் பின் இழக்கப்பட்ட போராளிகளை குறித்து உணர்ச்சிப்பாட்டுக்களைக் கட்டிப் பாடுவதும்,அவர்களுக்காக உணர்ச்சி ததும்பத் துக்கம் கூறுவதும்தாம் வானொலிகளில் இடம் பெறுகிறது.இதற்குமேல் இந்தத் தமிழர்களிடம் எந்த அரசியல் இருக்கென்றால்,அது "தானைத் தலைவனின் துணையோடு நாம் தமிழீழம் காணுவது உறுதி" என்பதாகக் கருத்துப் பரிமாறுவது.நல்லது,இது வெறும் மனவிருப்பே!நாம் இன்னும் மேலே எழுந்தாகவேண்டும்.
எம்மைத் தவிர வேறெந்த நாட்டுக்கு-போராட்ட இயக்கத்துக்கு இத்தகைய நிகழ்வுகள் வந்து விடுகிறபோது, அவர்கள் அது குறித்து உணர்ச்சி அரசியலைத் தாண்டி அறிவுக்கு வேலை கொடுக்க முனைகிறார்கள்.இத்தகைய தாக்குதல் எப்படி நிகழும்? எதனால் உயிர்கள் பறிக்கப்பட்டது?எப்படித் தமிழ்ச்செல்வனின் தங்குமிடம் இலங்கை அரசுக்குத் தெரிய வந்தது-எங்கே நமது தவறுகள் இருக்கின்றன?என்பதுபோன்ற விவாதங்களுடாக மக்கள் கருத்தை அறிந்து,மகத்தான அறிதற்பாட்டை வந்தடையும் கருத்து நிலைகளைக் காணமுனைதலே ஊடகங்களின் பொறுப்பாக இருக்கிறது உலக அரசியல் நிலவரத்தில்.ஆனால்,நம்மிடம் ஓலம்-ஒப்பாரிக்குமேல் இத்தகைய தவறுகளை விமர்சிப்பவர்களைத் துரோகியாக்கித் துவைப்பதில் காலம் போக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கள் எத்தனை தளங்களில் எழுதுகிறார் என்று புலனாய்வு செய்யும் அறிவுக்குத் தமிழ்ச் செல்வன் எங்ஙனம் குறிவைத்துத் தாக்கப்பட்டார்,அவரது பாதுகாப்பில் எங்கே தவறுகள் இருந்தன-அவரைக் காட்டிக் கொடுத்த அரசியல் என்ன?என்ற புலானாயும் மனது கிடையாது.ஏனெனில்,அவற்றைத் தலைவர் மட்டுமே செய்து முடிப்பார்.அதைவிடத் துரோகி ஸ்ரீரங்கனே! எனவே, அவன் எத்தனை தளத்தில் எழுதுகிறான்-அவன் தனிப்பட்ட வாழ்வில் என்ன பண்ணுகிறான் என்பதை ஆய்வு செய்து, போட்டுத் தள்ளும்போது இலங்கை அரசின் தாக்குதலிலிருந்து தமிழ் பேசும் மக்கள் தப்பி விடுவார்கள்.
அல்லது,கரும்புலிகளின் தாக்குதலில் புலிகள் மகிழ்ந்தார்களா அல்லது நடுமாறனின் பச்சோந்தித் தனம் என்ன என்ற கேள்வியோடு வாசகர்கள் வந்துவிடுகிறார்கள்.நெடுமாறன் உலகறிந்த அரசியல் விபச்சாரி-பிழைப்புவாதியென்பது அவரது அரசியல் வாழ்விலிருந்து புரிந்து கொள்ளத் தக்கது.புலிகள் கரும்புலித் தாக்குதலில் மகிழ்ந்தார்கள் என்பதுற்கு அவர்களது தேசியத் தொலைக்காட்சியில் கருத்தாடிய யோகி,இளந்திரையன் போன்றோரின் கருத்துக்களே சாட்சியாக இருப்பவை.இன்றைக்குப் புலிகளின் ஊதுகுழல்கள் செய்யும் ஓப்பாரியை ஏன் இருபத்தியொரு கரும்புலிகளுக்குச் செய்யவில்லை?மாறாக,அநுராதபுரத்தாக்குதல் வெற்றியும்,அழிந்த விமானங்களையுமே பட்டியலிட்டார்கள்.இவையெல்லாம் மிகவும் நுணுக்கமாகச் சொல்பவை என்ன?
தமிழ்ச் செல்வனை முன்வைத்துச் சில பாடல்களால் நமது மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட முடியாது.அல்லது, இத்தகைய பாரிய வான் தாக்குதல்கள் நிறுத்தப்படமாட்டாது.இதற்குப் பதிலாக நாம்,மக்களைப் பேச விடவேண்டும்.அவர்களிடமிருந்து நமது போராட்ட முறைமைகள் குறித்த விவாதம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.புலிகள் தம்மைச் சுய விமர்சனத்துக்குட்படுத்தித் தவறுகளைக் களையும் அறிவின் பாதையை நாடியாக வேண்டும்.இதைவிட்டுத் "தேசியத் தலைவரை விட்டு எங்கே போனாய் அண்ணா,தேசத்தின் குரலோடு சேர்ந்து..."என்று அழுவதால் நமது விடுதலை சாத்தியமில்லை.எமது எதிரிகள் மிகவும் வலுவான வியூகத்தோடு நம்மை அணுகுகிறார்கள்.அங்கே,உலக விற்பனர்களும்,ஆயுதங்களும் அவர்களைப் பலப்படுத்தும்போது,நமக்குள் கல்லறைப்பாடல்களே கருத்தாக வருகிறது. அல்லது, "விழ விழ எழுவோம"; என்ற வாக்கியத்தால் ஒரு மண்ணும் நிகழா.மாறாக,விழுவதே சாத்தியமாகிறது.
இத்தகைய அரசியலின் முடிவு என்ன?,நம்மிடம் இதே அரசியலின் தொடர்ச்சி கடந்த கால் நூற்றாண்டாய்த் தொடர்கிறது.அன்று "விடியலுக்கு முந்திய மரணமென்று" தொகுப்பிட்டோம்.இன்று, "தேசத்தின் குரலென்று" தொகுப்பிட்டோம்.ஆனால், எமது போராட்டம் குறித்த ஆய்வுகள் எதையும் செய்யோம்!
"நல்ல அரசியல்-போராட்டம்,விடுதலை விரைவாய் விளையும் பொறுத்திருங்கள்!"
ப.வி.ஸ்ரீரங்கன்
03.11.2007
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின்...
6 comments:
ஐயா நீங்கள் இவ்வுலகில் தானா வாழ்கிறீர்கள்..??!
அண்மையில் ஈராக்கில் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் அமெரிக்க உயர் தளபதி தாக்குதலுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் ஜேர்மனியில் உள்ள படைத்தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அமெரிக்காவுக்கு தனது இராணுவத்தளபதியையே பாதுகாக்க முடியல்ல. அதனிடம் என்ன பலமிருக்கு என்று கேட்பீர்கள் போல இருக்கே.
உலகை நோக்கி கருத்தை முன்வைக்க முதல் சற்றுச் சிந்தியுங்கள்.
எதிரி பயன்படுத்தும் விமானங்கள் அதிநவீனமானவை. அவற்றை சுட்டு வீழ்த்தும் திறன் என்பது சில நாடுகளுக்கு மட்டுமே உரித்தானது. அண்மையில் இஸ்ரேல் சிரியா மீது வலிந்து ஒரு வான் தாக்குதலை நடத்தியபோது கூட சிரியாவால் அதை தடுக்க முடியவில்லை. அதற்காக சிரியா என்ற நாடே உலகில் இருக்கத் தகுதியற்றது அதை இஸ்ரேலோடு இணைத்துவிடுவதே மக்களை பாதுகாக்கும் என்று ஜனநாயகம் பேசுவீங்களா..??!
சிங்கள புத்திசீவிகள் திட்டம் தீட்ட வேண்டிய அவசியத்தில இல்லை. பனிப்போருக்குப் பின்னர் உலக வழமைகள் மாறியமைந்துள்ளன. எமது போராட்டம் பனிப்போர் காலத்தில் இருந்து செப் 11 2001 க்குப் பின்னான நிலை என்று சர்வதே இராணுவ ஒழுங்குகளை அவதானித்து அமைய வேண்டி உள்ளது.
மக்களின் துன்பம் என்பது இடையறாது தொடர்வது என்பது ஈழத்தில் மட்டுமல்ல. சிங்கள தேசத்திலும் தான். அமெரிக்காவிலும் தான். அமெரிக்க மக்களும் ஈராக்கில் 3600 படைவீரர்களைப் பறிகொடுத்து கதறி அடிக்கவில்லையா..??! அதற்காக புஸ் ஈராக்கைவிட்டு ஓடிவிட்டாரா..??!
ஈழமக்கள் இந்தியப் படையை எப்படி எதிர் கொண்டனர். கியூப மக்கள் அமெரிக்காவை எப்படி எதிர்கொண்டனர். வியட்நாம் மக்கள் எப்படி எதிர்கொண்டனர். சோமாலிய மக்கள் எப்படி அமெரிக்காவை எதிர்கொண்டனர். சியராலியோன் எப்படி பிரித்தானியாவை எதிர்கொண்டது. எல்லாம் போரியல் சமவலு நிலையில் இருந்தா..??!
இணையத்தில அதுவும் ஓசில எழுதலாம் என்றதுக்காக உலக வரலாற்றைக் கொஞ்சமும் அலசி ஆராயாத போக்கில கட்டுரைகளை எழுதி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி எதிரிக்கு சேவகம் செய்யும் கயமத்தனத்தைக் கைவிட்டிட்டு.. உண்மையான அக்கறை மக்கள் மேல இருந்தா வன்னிக்குப் போய் அவலப்படும் மக்களோடு கூட இருந்து அவங்களுக்கு அவசியமானதைச் செய்யுங்கள். உங்களைப் புலி அடிச்சுச் சாப்பிட்டிடாது. சும்மா பயங்காட்டி பயங்காட்டி.. புலியை வைச்சே வாழ்க்கை இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஓட்டப்போறியளோ..??!
//கரும்புலிகளின் தாக்குதலில் புலிகள் மகிழ்ந்தார்களா அல்லது நடுமாறனின் பச்சோந்தித் தனம் என்ன என்ற கேள்வியோடு வாசகர்கள் வந்துவிடுகிறார்கள்.நெடுமாறன் உலகறிந்த அரசியல் விபச்சாரி-பிழைப்புவாதியென்பது அவரது அரசியல் வாழ்விலிருந்து புரிந்து கொள்ளத் தக்கது.புலிகள் கரும்புலித் தாக்குதலில் மகிழ்ந்தார்கள் என்பதுற்கு அவர்களது தேசியத் தொலைக்காட்சியில் கருத்தாடிய யோகி,இளந்திரையன் போன்றோரின் கருத்துக்களே சாட்சியாக இருப்பவை.இன்றைக்குப் புலிகளின் ஊதுகுழல்கள் செய்யும் ஓப்பாரியை ஏன் இருபத்தியொரு கரும்புலிகளுக்குச் செய்யவில்லை?மாறாக,அநுராதபுரத்தாக்குதல் வெற்றியும்,அழிந்த விமானங்களையுமே பட்டியலிட்டார்கள்.இவையெல்லாம் மிகவும் நுணுக்கமாகச் சொல்பவை என்ன?//
நண்பரே அவை என்ன என்றுதான் சொல்லுங்களேன். திரும்பத் திரும்ப நீங்களும் வைப்பது ஒப்பாரி இல்லையா?
நெடுமாறன் அரசியல் விபசாரப்பிழைப்பு நடத்துகிறார் என்றால், என்ன செய்கிறார்?
கட்சி மாறுகிறாரா? தேர்தலிலே பங்கு பற்றுவதாகவும் தெரியவில்லை. இன்று புலிகள் நாளை பூனை என்று பேசுகிறாரா? அப்படியாகப் பேசியிருந்தால் தடாவிலே அகப்பட்டிருப்பாரா? சொல்லுங்கள்.
யோகியும் இளந்திரையனும் கரும்புலிகள் இறந்தததால் மகிழ்ந்தோம் என்று அறிக்கை விட்டார்களா? அல்லது இப்போதுதான் இலங்கை அரசு கொன்றிருக்கக்கூடாது. கொன்றுவிட்டதே என்று ஒப்பாரி வைத்தார்களா? இன்னொன்று. அது தாக்குதல் நடவடிக்கை. இறப்பு என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இது எதிர்பாராத இழப்பு.
உணர்ச்சி வசப்பட்டு இணையத்திலே அநுராதபுரம் தாக்குதலின் பிறகும் தமிழ்ச்செல்வன் இறப்புக்குப் பிறகு சிலர் எதிரும் புதிருமாக அலறுவது உண்மையே. தனி மனிதனின் உணர்வுகள் நம்மவர்-பிறர் என்ற அடிப்படையிலேயே வெற்றி தோல்வியைக் காண்பதும் ஆனந்தமும் துயரும் அடைவதும் இயல்பு. அவ்வகையிலே அவர்களிலே சிலரின் உளநிலை புரியக்கூடியது. நீங்கள் அதற்கும் அப்பால், கரும்புலிகள் இறப்பிலே மகிழ்ந்தார்கள் என்பது போலவும் இப்போது கையறுநிலையிலே இழந்தார்கள் என்பது போலவும் காட்டுவது அதீதம்.
அன்புள்ள சிறீரங்கன்,
விவாதம் ஒன்றை தொடங்க வேண்டொயதன் தேவை உள்ளதாக பெரும்பாலனவர்கள் உணருகிறார்கள்.
ஆனால் நீங்கள் போட்ட கேவலமான தலையங்கத்துக்கு கீழ் உரையாட எவன் வருவான்?.
அதை யோசித்து பாருங்கள்.
ஒன்று மட்டும் சொல்கிறேன்.
உங்களது கருத்துக்கள் விவாதத்துக்கு எடுக்கபட வேண்டியவையே.
ஆனால் உங்களது அவமதிக்கும் அதிகார மொழிக்கு பின்னால் நின்று யாராலும் உண்மையான விவாதங்களை நிகழ்த்த முடியது.
நீங்கள் வாயாரச் சொல்லும் உங்கள் மக்களை, அவர்களின் கண்ணீருடனான எங்களுக்கு விடிவு வராதா என்ற ஏக்கத்தையும் நிராகரித்து அவர்களைப் புண்படுத்திவிட்டீர்கள்.
ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு வழியில்லாத மக்களின் மனதை கஸ்டபடுத்திவிட்டீர்கள்.
புலிகளை தலைவர்களாக ஏற்றுக்கொண்டு எங்கட பொடியள் எண்டு பாசத்தோடு அழைக்கும் அந்த நெஞ்சங்களை காயப்படுத்திவிட்டீர்கள்.
புலியை திட்டுற எத்தனையோ தாய்மார்கள் புலி செத்தா வாயிலடிச்சு கதறுவதை பார்த்து இருக்கிறேன்.
அந்த நெஞ்சங்களை காயப்படுத்தினீர்.
ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லாத ஆயிரக்கணக்கான அழுகையை எள்ளி நகையாடினீர்.
நீங்கள் விவாதம் செய்யவில்லை ரங்கன்,
கேவலப்படுத்தினீர். மற்றவனுடைய அழுகையை கேவலப்படுத்தினீர்.
தம்பியவை எண்டு சீலையை தூக்கி இடுப்பில வைச்சுகொண்டு நிக்குற எங்க்ட எல்லா தாய்மார்களையும் ஒரேயடியாய் காறித் துப்பிவிட்டீர்களே சிறீ ரங்கன்.
எல்லொருடைய கண்ணீரையும் கேவலப்படுத்தினீர்களே.
நீங்கள் என்னையா மனிதநேயவாதி?
உங்களை நான் வெறுக்கிறேன்.
உங்களுக்கு யாழ்ப்பாண நிலைமையோ, வன்னி, மட்டக்களப்பு நிலைமையோ தெரியுமா?
கரும்புலி செத்ததுக்கு அழுகின்றார்கள். கவலைப்பட்டார்கள்.
மக்கள் புலிகளை நிறையவிடயங்களுக்காக எதிர்க்கிறார்கள் தான்.
ஆனால், புலி தோற்பதை அவர்கள் விரும்பவில்லை.
புலியை வெறுக்கும் மனிதர்களே புலி தோற்றால் அழுகின்றனர்.
மற்றவனுடைய கண்ணீரை நக்கலா பாக்கிற நீங்கள் என்னையா மனுசர்?
மற்றவனை கஷ்டப்படுத்துற மாதிரி தலையங்கம் வச்சுப்போட்டு விவாதத்துக்கு வர சொல்லி கேக்குறீங்களே.
ஏனையா மற்றவனை கஷ்டப்படுத்தி பாக்கிறியள்.?
மக்கள் போராடத்துக்கு முதல் மக்களை தயார்படுத்த வேணும் ஐயா.
அதுக்கு கல்வி அறிவிலை இருந்து எவ்வளவோ வேலை பாக்கவேணும் ஐயா.
இலங்கைக்கு வாங்கோ. உங்களோட சேர்ந்து இயங்க தயார். வாங்கோ.
நீங்கள் சொல்லுற மக்களிடம் எதுவும் இல்லை.
தமிழ்ச்செல்வனுக்காக கண்ணீர் விட்டு அழுறவன் பெரும்பாலும் சாப்பிட காசு இல்லாத அன்றாட சீவனம் செய்யும் சீவன்களே! பணக்காரன் இல்லை.
உங்கட மக்கள் தான்.
அவங்கட உணர்வுகளை தானே கொச்சைப்படுத்துனீர்கள்.
வாய் நிறைய வெத்திலையோடையும் ஊத்தை சீலையும் கட்டி கொண்டு நிக்குறதும் புலி செத்தா அழுறதும் யார் சிறீரங்கன்?
கொச்சைதனமா எழுதாதீங்க சிறீரங்கன்.
நீங்கள் நாய் மாதிரி நடுரோட்டில ஜேர்மனில வாகனத்திலை அடிபட்டு செத்து போனா நான் நிச்சயாமா கவலைப்படுவன்.
புளொக்கில எழுதிற மனுசன் செத்து போட்டுதெண்டு. கன நாளைக்காவது மனசுக்குள்ளயும் கண்ணுக்குள்ளையும் நிக்கும் உங்கட அகதி கு போட்டு வைச்ச உரிஞ்சாங்குண்டி சிறுவனின் படமும் உங்கட எழுத்தும்.
வாழ்க்கையில ஏதோவொரு கணத்தில் ஞாபகம் வந்துகொண்டே இருக்கும்.
சனத்திண்ட கண்ணுக்குள்ள தமிழ்ச்செல்வன் ட சிரிச்ச முகம நிக்குது.
"உடம்பும் சிதறிட்டுதோ" எண்டு அந்தரப்படுற சனத்திட்டை ஈ வரும் எண்டு எழுதினா மற்றவனுக்கு எப்பிடி ஐயா இருக்கும்?
என்ன மனுசரையா நீங்கள்?
30 வருடங்களாக விழவிழ எழுகிறோமே எழுந்து என்ன செய்கிறோம்.
அவுங்க விழ விழ எழுந்துக்கிறத சொல்ராங்க. உண்மை என்னன்னா, விழ விழ வேற பலரை கொண்டுவந்து விழ வைக்கிறாங்க.
எல்லொரையும் அனுசரிச்சு, எந்த இன சாதி பிராந்திய வெறித்தனமும் இல்லாத உண்மையில அது உரிமைப் போராட்டமா இருந்தா எப்போயோ வெற்றி கிட்டிருக்கும். 'ஒரே தலையில வா; ஆனால் அது என் தலைம', ' நாம தமிழருக்காகத் தான் போராடுறோம், ஆனால் தமிழர்கள்னா இந்துக்க; முஸ்லீம்கள் துரோகிங்க', "ஈழத்டுல சாதியில்ல, அப்படி சாதி இருந்தாலும் அதப் பேச இப்பத்தேவயில்ல." இப்படியாக தடுமாறும் தகிடதத்தங்கள்.
தற்போதைய தீர்வு: கறை படிந்த தலைமை மாற்றப் படவேண்டும். எல்லோரையும் அனுசரிச்சு, சொந்த மக்களையே போட்டுத்தள்ளாம உரிமைகளைப் பெற முயற்சிக்கனும்.
இலங்கையில் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகள் படுகின்ற வேதனைகள் கண்ணீரை பெருக்குகிறது. ஆனால் அனானி சொன்னது போல் தமிழன் என்றால் இந்து முஸ்லிம்கள் அல்ல என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறார்களே. பள்ளி வாசலில் தொழுது கொண்டிருந்த நிராயுதபானிகளான முஸ்லிம் சகோதரர்களை காட்டிக்கொடுத்தார்கள் என்று கொன்றார்களே. தங்களுடை சொந்த மன்னில் இருந்து ஒரிரவில் 1 லட்சம் முஸ்லிம் மக்கள் அகதிகளாக்க பட்டார்களே அப்போது எங்கு போயிருந்தீர்க்ள் இன்று என்ன மனிதர் என்று கேள்வி தொடுப்பவரே. உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? சொல்லுங்கள் சகோதரா?.
Post a Comment