மீண்டும்,மீண்டும் நிருபணமாகிய வர்க்க நலன்!
மேதின ஊர்வலம்...நமக்குத் தெரிந்த அரசியல்தாம் இது,எனவே ஏமாற்றமில்லை.ஆனால் நமது மக்கள்? பாவப்பட்ட மக்கள், பேதமையான உள்ளங்கொண்ட பாமர மக்களை எவர் காப்பாற்றுவார்? தமிழ் மொழிமீதான பற்றுறுதி தமது உயிரைக்கொடுப்பதற்குக்கூடத் தயங்காத தியாக உள்ளத்தை நம் மக்களுக்கு ஏற்படுத்தியது.இவர்கள் தமது திண்ணைக்குள் முடங்கியிருந்து,தமது குடும்பம்-உறுவுகளென வாழ்ந்த சராசரி வாழ்வை- புழுதிதோய்ந்த கல்லொழுங்கையூடாய் -கடலேரி நீரூடாய் கால் புதைத்து ஊர்விட்டு ஊர்போய் மனிதத்தைப்புரிய வைத்தது இந்தத் தமிழ் உணர்வு!தன் தேசத்தைப்- பெற்ற குழந்தையைவிட நேசிக்கத்தூண்டியதும் இந்தத் தமிழ் உணர்வே.ஆனால் அந்த மக்கள் நலன் சார்ந்த அரசியல் முன்னெடுப்புத்தாம் இங்கு ஓடியொழித்துவிட்டது.
இப்போது மத்திய ஐரோப்பிய நேரம் 16.மணி(மாலை 4மணி),இன்று காலை 9.30 மணிக்கு இடுஸில்டோல்வ்(Duesseldorf) நகரத்தில் கூடினோம்.மே தின ஊர்வலம்!உலகத்து மக்ளெல்லம் செங்கொடிகளோடு திரண்டிருக்க,நாம் தமிழர்கள் கிட்டத்தட்ட 150 நபர்கள் புலிகளின் தலைமையில் திரண்டுகொண்டோம்,நாதஸ்வர இசையோடு. சந்திரிகா ஆயுதங்கள் கொள்வனவு செய்யும் கேலிச்சித்திரக் கொடியும் முன்னணியில் நிற்க,மற்றெல்லோர்கைகளிலும்(கிட்டத்தட்ட80 வீதமானவர்களிடம்) திரு.பிராபாகரனின் திருவுருவப்படமும்,மீதமானவரின் கைகளில் 'சுனாமி நிதி உதவியை நீதியான முறையில் பங்கீடு செய்' எனும் அட்டைகளும்,'நாங்களும் ஒரு இனம்,ஓடுக்குமுறையற்றுத் தோழமையுடன் வாழவேண்டும்' என்ற அட்டைகளும் காணப் பட்டன! வழமையான'தமிழரின் தாயகம் தமிழீழம்' எனும் பதாகைகளைக் காணவில்லை. ஊர்வலம் நகரத்தொடங்கியதும் இளைஞர்கள் பாட்டுக்கோஷ்டிப்போல் பாடத் தொடங்கினார்கள்'எங்கள் தலைவன் பிரபாகரன்,எங்கள் தலைவன் பிரபாகரன்!' வான் அதிர்ந்தது.அதே அரசியல்.மாறவேயில்லை.
இரண்டுதினங்களுக்கு முன் கொலையான பத்திரிகையாளன் சிவராம் பற்றிய எந்த அட்டையுமில்லை-குறிப்புமில்லை. எனக்குக்கோபம் அதிகமாகி தலை வெடிக்கும் நிலை! மெல்லச் சென்று புலிகளின் பொறுப்பாளர்களிடம் கேட்டேன்:இதுவென்ன அரசியல்?முந்தநாள் படுகொலையான பத்திரிகையாளனுக்காக எல்லோரும் எழுதியும்,அழுதும் கூக்குரலிட்டோம். தலைவர் மாமனிதன் பட்டமும் கொடுத்தார்!இன்றிந்தப் படுகொலையை வெளிநாட்டு மக்களுக்கு முன் கொணர்ந்து, இலங்கை அரசியலை அம்பலப்படுத்த வேண்டாமா? இதை வெகுஜனத்தளத்தில் வைத்து விமர்சித்து உலக அரங்கில் நம் உரிமையின் நியாயப்பாட்டைச் சொல்லவேண்டாமா? கேள்விகளை அவர்களிடம் கேட்டோம். பதில் வரவேயில்லை.எல்லோரும் திருட்டு முழி முழிக்கிறார்கள்.ஏன்? நான் விட்டபாடில்லை!'அண்ணே ஏதோ நேரம் போதவில்லை, அதனால் அவர் பற்றிய அட்டைகளை எடுத்து வரவில்லை' ஒருவர் கூறினார்.என்னயிது, ஒழுங்கமைந்தவொரு அமைப்பின் பதிலாகுமா இது?கேட்டேன்.நானே அட்டை எழுதிவைத்துள்ளேன,; உங்களுக்கு முடியவில்லை? அண்ணே உங்களுக்கு எங்களால பதில் சொல்ல முடியாது, நீங்கள் பணிமனையோடு கதையுங்கள், இன்னொரு உறுப்பினரின் கருத்திது. மீளவும் என் விமர்சனத்தைப் பொறுக்கமுடியாத அவர்கள் 'ஏதோ தவறு நடந்திருக்குப்போல கிடக்கு' என்றார்கள்.இதுதாம் அவர்கள் அரசியல்.
ஊர்வலத்தை நோட்டம் விட்டபடி மெல்ல நகர்ந்தேன்,நடுவினில் புலிகளின் இளைஞர் அணி'புலம்பெயர்ந்தோர் இளைய எழுத்தாளர் முன்னணி' என்ற கொடி பிடித்தார்கள்.கொடி பிடித்திருப்பவரில் ஒருவர் முதியவர்.என் வயதை ஒத்தவர்.யாரடாயிது இளைஞர் அணிக்கு முதியவர் கொடிபிடிக்கிறாரேயென்று உற்று நோக்கினேன்.அட! நம்ம நண்பர்தாம்.சுமார் 15 வருடங்களுக்கு முன் இலக்கியச் சந்திப்பில் வாதப்பிரதிவாதம் செய்து கொண்டவொரு பத்திரிகை ஆசிரியர் அவர்.மனிதன் என்னை மறந்து விட்டார்.மீசையில்லை,கூடாவே நன்றாகத் தலை நரைத்துப்போய் நான் படுகிழவனின் தோற்றத்தில்.அவரை பெயர் சொல்லி என்ன முருகதாஸ் அண்ணே சவுக்கியமாவென்றேன். ஓம் என்றார்.எழுத்தாளர் நீங்கள்,எனவே ஒரு எழுத்தாளன்-பத்திரிகையாளன் கொலைப்பட்டானே அதை அம்பலப் படுத்தவேண்டாமா என்றேன்.பதில் வரவேயில்லை.மீளக்கேட்டபோது சொன்னார்:'தற்செயலா...'இதற்குப்பிறகு வார்த்தை வரவேயில்லை.என்ன தற்செயலா?சொல்லுங்கள், நான். அவரிடம் பதிலில்லை.
மேதின ஊர்வலமும்,தமிழர்களும் புலிகளின் அரசியல் நகர்வும் எம்மை ஆச்சரியப் படுத்தவில்லை.ஏலவே நாம் பார்த்த அரசியல்தாம்.இது மாறிவிட்டது-அவர்கள் முன்னையமாதிரியில்லை-என்பதெல்லாம் வெறும் வெற்றுவேட்டு வார்த்தைகளே! அவர்களின் வர்க்க அரசியலில் அவர்கள் என்றும் தெளிவாகவேயிருக்கிறார்கள்.இந்த உதாரணங்கள் சிலமாதிரிகள்தாம்.இதை வைத்து நாம் எழுதியொன்றும் ஆவதில்லை.நாமே நமது இருள்சூழ்ந்த பக்கங்களை மறைத்தல் எதனால் நிகழ்கிறது? இங்குதாம் வர்க்க இருப்பின் உணர்வே அதைத் தீர்மானிக்கிறது.ஜனநாயகத்துக்கான போராட்டத்தை புலிகளால் என்றும் முன்னெடுக்க முடியாது.இதுபோன்றேதாம் மற்றைய ஈழ இயங்கங்களின் நிலையும். இந்த நிலையில் இந்திய ஊடகங்கள் சிவராமின் மரணத்தை மறைத்து விட்டதாகப் புலம்பி ஆவதென்ன நண்பர்களே?நாங்களே முன்னெடுக்க எமது வர்க்க நலனும்-இருப்பும் விடாதபோது இந்தியப் பிராந்திய நலன் இதைச் செய்யவேண்டுமென எதிர்பார்த்தல் சரியாகுமோ?
சிவராமின் கொலையை மேதின ஊர்வலத்தில் வெகுஜனப்படுத்தாத புலிகளின் அரசியல் தமிழ் மக்கள் நலன் சார்ந்ததா? ஏதோ சொல்லித் தொலையுங்கள்!
ப.வி.ஸ்ரீரங்கன்
01.05.2005
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
45 comments:
From BBC tamil
//வட இலங்கை மே தின ஊர்வலங்களில் சிவராமின் கொலையை கண்டித்தும் கோஷங்கள்
இலங்கையின் வடக்கில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இன்று நடைபெற்ற மேதின ஊர்வலங்களில் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் சிவராமின் கொலையைக் கண்டிக்கும் சுலொக அட்டைகள் கொண்டு செல்லப்பட்டன; கண்டனக் கோஷங்களும் எழுப்பப்பட்டன. //
BBC tamil பாருங்க சிறி ரங்கன்......................
ஜேர்மனி பற்றி தெரியலை................அங்கு பொறுப்பில் உள்ளவர்களின் சிந்தனைக்கு அது தோன்றவில்லை என்றால் உடனடியாக புலிகள் வர்க்கம் ஏகாதிபத்தியம் என்று உங்கள் பல்லவியை தொடங்கிவிடுவீர்கள். எங்கையடா ஒரு குறை பிடித்து அவர்களை ஒரு பிடிபிடிப்பது என்று.
வணக்கம், குமிழி! நீங்கள் சொல்வது நமது தளத்தில் நடப்பதை.நாம் சொல்வதோ வெளித் தளங்கள் பற்றியது. இதை முதலில் கவனித்தால்-சர்வதேச அரங்கில் நாம் சொல்லவேண்டிய நிர்பந்தத்தைப்புரிவீர்கள்.ஈழத்தில் செய்வதுமட்டும்தாம் தேவையென்றால் நமக்கேன் இத்தனை ஆங்கில இணையத்தளங்கள்-வெளியீடுகள்?எமது பிரச்சனையை வெளி நாட்டுமக்களிடம் கொண்டுசெல்லும் வெகுஜனப்போராட்டம் பற்றியதே நமது பதிவு.நீங்களெதற்குமே ஒரு ஞாயத்தோடு வந்துவிடுகிறீர்கள்.அவர்களுக்குத் தெரியாது-இவர்களுக்குப் புரியாமற்போய்விட்டதெனக் காரணம் கூறுவதால் நமக்கென்ன விடுதலைகிடைத்திடுமா? புலிகள் ஒரு அமைப்பு.ஒவ்வொருதரும் தத்தமது விருப்பத்திற்குக் காரியமாற்ற அதென்ன அரட்டையரங்கமா?அவர்களின் பதில்கள்கூட நமக்குப் பரவாயில்லை.ஆனால் நீங்கள் கூறும் காரணமே இன்னும் சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது.
ஒருபெரும் அமைப்பை இப்படி அவரவர் பாணிக்குக் காரியமாற்றுவதாகக் கூறவேண்டாம்.இங்கு கூறுவதெல்லாம் வெறும் வெற்று வார்த்தைகளே.
செய்யவேண்டிய நேரங்களில் செய்யாத காரியங்கள் வெறும் காரணங்களால் சரியாகிவிட முடியாது.நமது நாட்டுக்குள் செய்யப் படுவதைச் செய்வதும்,அதுபோல் சர்வதேச மட்டங்களில் செய்யவேண்டியதைச் செய்வதும் நமது மக்களின் விடுதலைக்கு அவசியமாகும்.இதைச் சாக்குப்போக்குச் சொல்லி மறைப்பது நமது தலையில் நாமே நெருப்பிடுவதுமாதிரித்தாம்!
vt;thW rptuhkpd; nfhiyia kf;fs; kag;gLj;JtJ? ,tupd; nfhiy Vd; jdpr;rpw;ghdJ? jpd;k; nfhy;yg;gLk; njhopyhsH tHf;j;jpd; Gjy;tHfs; jdpk; nfhy;yg;gLfpd;wdH. ,tHfspd; kuzk; Vd; xU nghUl;lhf njupatpy;iy? eilngWfpd;w nfhiyfs; ciof;Fk; tHf;fj;jpw;F gad; jUfpd;wjh? my;yJ Njrpaj;jpd; gpd;dhy; nrd;w cq;fisg; NGhy Gul;rpfu rpe;jid nfhz;ltHfs; Gypfis khw;w Kbe;jjh? ,d;iwf;Fj; NjitahdJ Gjpa[dehafg; Gul;rp vd;why; vt;thW epge;jidapd; fPo; Gypfis cs;thq;fg; Nghfpd;wPHFs; (ePq;fs; $wtpy;iy) ,jd;W mtHfsj; jahuhf ,Ug;ghHfsh? ahH jiyik jhq;FtJ? ,t;twT fhyKk; Kw;Mghf;Ffs; Njrapk; vd;W $wpf; nfhz;L Gypfis gy;g;Lj;jpapUf;fpd;whHfs; njhlHe;Jk; ,e;j Kw;Nghf;Ffs; Gypfisg; gyg;gLjjth Nghfpd;whHfs;
ed;wp
Njth
--
Posted by Anonymous to The point:social steady is the sociality. at 5/1/2005 07:40:27 PM
எவ்வாறு சிவராமின் கொலையை மக்கள் மயப்படுத்துவது? இவரின் கொலை ஏன் தனிச்சிற்பானது? தின்ம் கொல்லப்படும் தொழிலாளர் வர்க்த்தின் புதல்வர்கள் தனிம் கொல்லப்படுகின்றனர். இவர்களின் மரணம் ஏன் ஒரு பொருட்டாக தெரியவில்லை? நடைபெறுகின்ற கொலைகள் உழைக்கும் வர்க்கத்திற்கு பயன் தருகின்றதா? அல்லது தேசியத்தின் பின்னால் சென்ற உங்களைப் Nபுhல புரட்சிகர சிந்தனை கொண்டவர்கள் புலிகளை மாற்ற முடிந்ததா? இன்றைக்குத் தேவையானது புதியஜனநாயகப் புரட்சி என்றால் எவ்வாறு நிபந்தனையின் கீழ் புலிகளை உள்வாங்கப் போகின்றீர்குள் (நீங்கள் கூறவில்லை) இதன்று அவர்களத் தயாராக இருப்பார்களா? யார் தலைமை தாங்குவது? இவ்வறவு காலமும் முற்ஆபாக்குகள் தேசயிம் என்று கூறிக் கொண்டு புலிகளை பல்ப்டுத்தியிருக்கின்றார்கள் தொடர்ந்தும் இந்த முற்போக்குகள் புலிகளைப் பலப்படுததவா போகின்றார்கள்
நன்றி
தேவா
tzf;fk; tpthjk; njhl topapy;iyah
Rjd;
cq;fSf;F kpd;dQ;ry; Clhf mDg;gpaij ,jpy; NghlTk;
ed;wp
Rjd;
தேவா ரொம்ப நியாயமான கேள்விகளை முன்வைத்துள்ளீர்கள்! சிந்திக்கவேண்டிய கேள்விகள்.
,,இவரின் கொலை ஏன் தனிச்சிற்பானது? தின்ம் கொல்லப்படும் தொழிலாளர் வர்க்த்தின் புதல்வர்கள் தனிம் கொல்லப்படுகின்றனர். இவர்களின் மரணம் ஏன் ஒரு பொருட்டாக தெரியவில்லை? நடைபெறுகின்ற கொலைகள் உழைக்கும் வர்க்கத்திற்கு பயன் தருகின்றதா? ஈஈ
சிவராமின் கொலை தனிச்சிறப்பாக அமையவில்லை.ஆனால் வெகுஜனமட்டத்தோடு தொடர்புடைய பத்திரிகையாளன்.உலகமெல்லாம் அறிந்துகொண்ட பத்திரிகையாளனுக்கே இந்தக்கதியென்றால், இலங்கையில் அப்பாவி மக்களின் நிலையென்னவாகுமென்பதை உலகுக்குணர்த்துவதும்,அதனூடாக இலங்கையில் பேரளவுக்குக்கூட மனித விழுமியங்கிடையாது-ஜனநாயகத் தன்மையற்ற காட்டாச்சிக்குள் மக்கள் படும்துன்பங்களை வெளியுலகுக்குத் தெரியப் படுத்தும்போது தவிர்க்க முடியாது மக்களின் ஆளுமை நிறுவப்படுகிறது.இங்கே மக்கள் தன்னிச்சையாகக் காரியமாற்றுமொரு சூழலை ஏற்படுத்தி, அவர்களைச் சுயமாக எழிச்சிக்குத் தயார்ப்படுத்தி குறைந்த பட்ச ஜனநாயகக் கோரிக்கைகளையாவது வென்றெடுப்பது.இதுவே பாரிய புரட்சிக்கான தயார்ப்படுத்தலுக்கான முன்நிபந்தனையாக மாறும் காலத்தைக் கனிய வைக்கும் ஒரு செயற்பாடாகும்.அங்ஙனமாற்றுங் காரியமானது மக்களின்பாலான பொதுமன்றங்களைக் கட்டுவதற்கான செயற்பாட்டையும் தன்னகத்தே கொண்டுள்ளது.எனவே சிவராம் கொலையானதை உலகு தழுவிய மக்களிடம் எடுத்துச்செல்லும்போது கொலைகளை ஊக்குவிக்கும் அரசியல் அம்பலத்துக்கு வருகிறது.இதனூடாய் மக்களின் உயிர்கள் காக்கப்படக் கூடிய புறநிலையுருவாக்கப்படுகிறது.இதுவே மக்களின் வாழ்வியல் உரிமைகளின் அடிப்படையைக் கோரிக்காக்கமுனையும் சமூகசீவிய இருப்பாகும்.இந்த இருப்பிலிருந்தேதாம் மக்கள் புரட்சிக்கான மனநிலையைப் பெறமுடியும்.இந்த சமூக உளவியலைப் புறந்தள்ளிவிட்டு புரட்சிக்குரிய மனநிலையை மக்களிடம் உருவாக்க முடியாது.ஏனெனில் நமது மக்கள் போரினால் பட்டவேதனைகளையின்னும் மறக்கவுமில்லை,தொடரும் துன்பத்தால் போரைவிரும்பவுமில்லை.அவர்களுக்கான வாழ்வியல் மதிப்பீடுகளை புதியவுருவில் உருவாக்கவேண்டிய சமுதாய எண்ணவோட்டங்கள் அவசியமாகும்.இதனால் சிவராம் கொலை வெகுஜனப்படுத்தியே தீரவேண்டிய அகத்தேவையுள்ளது.
மற்றது புலிகளை திருத்துவது-மாற்றுவது... என்பதெல்லாம் நம் மக்களின் பிள்ளைகளை தரகு முதலாளியத் தலைமையிடமிருந்து வென்றெடுப்பதாகும்.அவர்கள் தேசபக்தர்கள்.அந்த அற்புதப் போராளிக்குழந்தைகளை எந்தவொரு நலனுக்காவும் எந்தச் சக்தியும் அழிப்பதை நான் என் உயிருக்கும் வரை எதிர்ப்பேன்! புலிப்போராளிகளின் நோக்கமும்,தலைமைகளின் நோக்கமும் ஒன்றல்ல.போராளிகள் தமது தேசத்துக்காகவே போரிடுகிறார்கள்.அவர்களின் அளப்பெரிய தியாகங்கள் தரகு முதலாளிகளின் நலனுக்காகவே பயன்படுகிறது.இதுதாம் வேதனையான நிலை!எனவே அந்தப்போராளிகளை வென்றெடுப்பதுதாம் மிக மிக முக்கியமான கட்டமாகும்.நமது புதியஜனநாயகப் புரட்சியின் நோக்கமானது புலிப்போராளிகளை பார்வையாளராக்குவதில்லை.அவர்களே நமது மக்களின் குழந்தைகள்!இவர்களின் பங்கின்றியெந்தவொரு முன்னெடுப்பும் ஈழத்தில் சாத்தியமில்லை.
--
Posted by Anonymous to The point:social steady is the sociality. at 5/1/2005 08:19:08 PM
வணக்கம் விவாதம் தொட வழியில்லையா
சுதன்
உங்களுக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பியதை இதில் போடவும்
நன்றி
சுதன்
யாரோ ஒருவரின் பெயர்தெரியா மின்னஞ்சலை வைரஸ் பயத்தால் அழித்துவிட்டேன்.அதை மீள அனுப்பினால் இதில் இணைக்கிறேன்.
சிறிரங்கன்
பி|கு: இங்கு எவரினது எந்தக் கருத்தும் போடப்படும்.கருத்துக்களுக்கு கத்திவைக்கும் கோணல் மனம் நமதல்ல.
ஈழப்போராட்டத்தின் ஆரம்பமே பாசிசத்தின் தோற்றப்பாடுகளை உள்ளடக்கியதாகவே இருந்திருக்கின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் எமது சமூகத்தின் பின்புலம் நாம் ஒன்று முதலாளித்துவ ஜனநாயகம் பெறப்பட்டு வளர்ச்சியடைந்த தேசத்தில் இருந்து போராடவில்லை. (அப்படி போராடியிருந்தாலும் இவ்வளவு வேகமாக வளர்ந்திருக்க முடியாது.) எமது சமூகத்தின் பொருளாதார அடிப்படையில் இருந்துதான் சிந்தனைகளும் பிறக்கின்றன.
போராட்ட ஆரம்ப கர்த்தாக்களான இளைஞர்களில் சிலர் இன, மத, சாதி, பிரதேச வேறுபாடுகளை போக்கச் சிந்தித்தார்கள். இதே போல தோழர் சண்முகதாசனின் தலைமையினால போராட்டம் தமிழ் சமூகத்தை ஒரு தேசிய இனம் என்ற அடையாளத்துக்கு வித்திட்டதையும் மறுக்க முடியாது. ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு எதிராக நின்றார்களோ அவர்களே தமிழ் தேசியத்தின் தலைமையைக் கொண்டவர்களாக இருந்தனர். இவர்களின் இயல்பான வர்க்க நிலையிருக்க இவர்கள் வலிந்தெடுத்த கோசம் தான் தமிழீழம். இதன் வளர்ச்சிப் போக்கில் தம்மையும் தமது வர்க்க நலனைப் பேணவும் ஆயுதம் உதவியது. இது அதிகாரத்தைப் பாதுகாக்கும் நிலையில் எல்லோரையும் சந்தேகம் கொள்கின்றது. இதற்கு உள்ளமைப்பில் இருந்தவர்கள் தப்பிக்க முடியவில்லை. நாம் எமது குடுப்பத்தில் உள்ள அங்கத்தவர் அல்லது பக்கத்து வீட்டார் ஆகியோருடன் ஏற்படும் சச்சரவுகளை எவ்வாறு எதிர்க் கொள்கின்றோம்;. ஓன்று அவர்களை வார்த்தையால் சித்திரவதை செய்வது மற்றயைது உடல்ரீதியான தாக்குதல். இவை இரண்டும் எம்மிடம் உள்ளவையே. இவ்வாறான சமூகத்தில் இருந்து வந்தவர்களால் எவ்வாறு வித்தியாசமாக நடந்து கொள்ள முடியும்?
நண்பர் சிறி கூறுவது போல போராட்டத்தை உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகப் பண்புகளை வளர்த்தெடுப்பது அவசியம். இதற்கு வெளியே இருக்கின்ற உதிரிகள் தமது புலமையை, வளத்தைப் பயன்படுத்துவது இன்றைய காலத்தில் அவசியமானதாகும். நாம் அமைப்பாக இல்லை என்பது உண்மையே, ஆனால் நாம் தலைவர்களாக முடியாது. தலைமைகள் போராடி வாழும் மக்களிடத்தில் இருந்துதான் வரவேண்டும், அமைப்புக்களும் அவர்களிடத்தில் தான் வரவேண்டும். ஆனால் உருவாகவேண்டிய ஒரு அமைப்பிற்காக உழைக்க வேண்டியது அறிவுஜீவிகளின் கடமையாகும். இது கூடச் செய்ய வேண்டாம் என சொல்வது எவ்வகையில் நியாயம் கொள்கின்றது எனில் நீங்கள் வாயை மூடுங்கள் மக்கள் ஏமாளிகாக இருக்கட்டும் அவர்கள் மீது சவாரி செய்வோம் என்பது போலவே எண்ணத் தோன்றுகின்றது.
இன்று போராட்டத்தின் பாதையை தெரிவு செய்வதில் பல முனைகள் இருக்கின்றன. முன்னர் ஜே.வி.பியின் பிரதான எதிரியாக இருந்த இந்தியா இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. அதேபோல கருணா தலைமையினால புலிகள் ஒரு போராட்டப்பாதையை தெரிவு செய்திருக்கின்றார்கள். இவர்கள் முதலில் இயங்குவதற்கான சுதந்திரம் என்பது அங்கீகரிக்க வேண்டும்.
காலத்துக்கு காலம் எதிரிகளை மாற்றிக் கொள்ளும் அரசியல் இருக்கும் வரைக்கும் பல்வேறுபட்ட சக்திகள் இருப்பது தவிர்க்க முடியாதே.
நண்பர் சிறி கூறுவது போல ஈழப்போராட்டத்தில் அன்னிய சக்திகள் எமது புதல்வர்களை கொல்லும் போது நாம் கொல்லப்படும் புதல்வர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது எமது கடமை. ஆனால் அன்று தேசியம் பேசுகின்ற மாந்தர்கள் எல்லாம் சிறு சட்டங்களுக்குப் பயந்து ஒழிவர். இதுவே அவர்களின் வர்க்க நிலை.
இதேவேளை புலிகளை எதிர்ப்பதற்காய் எதிரிகளுடன் கூடிக்குலாவும் அரசியல், புலிகளுடன் ஒன்றித்து போகும் அரசியல் உழைக்கும் மக்களின் சக்திகள் வளர்வதைத் தடுத்து விட்டன. இதில் முன்னேறிய பிரிவினர் அவர்களின் சுயவர்க்கத் தேவையின் நிமித்தம் ஒவ்வொருமுகாமாக ஒதுங்கிக் கொண்டனர். இவை இலங்கையில் இருக்கும் உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பின்னடைவாகும். இந்த இடத்தி;ல் வர்க்க நலன் கொண்ட சக்திகளின் விடாப்பிடியான கருத்துக்கள் மக்கள் மத்தியில் விதைக்கப்படுவது, இதன் மூலம் அவர்களின் போராட்ட உணர்வை வளர்த்தெடுப்பது, பாதை காட்டுவது அவசியமாகும்.
மற்றையது இணையத்தில் இணைப்புக்கள் பற்றி பார்க்கின்ற போது கருத்துக்களை மூடிமறைக்கும் நிலைதான் எல்லாப் பக்கத்திலும் இருக்கின்றது. மக்கள் எல்லாச் வகை கருத்துக்களை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். இந்த வகையில் சிறியின் பக்கத்தை தேனீ போட்டிருந்தால் அதனை வரவேற்க வேண்டும்;. அதேபோல முற்போக்கான சிந்தனை கொண்ட தளங்களை அறிமுகப்படுத்தாது விடுவது. மக்களை குதிரையோட முனைபவர்களின் செயற்பாடு என்பதற்கு மேல் எதுவும் இல்லை.
ராஜீவ் கொலைபற்றி அனேக தரங்ககள் பேசப்பட்டிருக்கின்றன. இதில் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவி;வ்பதில் காட்டும் அக்கறை அக்கொலைக்குப் பின்னால் இருக்கின்ற சர்வதேச வலைத்தொடரை முழுமையாக எவரும் பார்க்கத் தவறி விட்டுள்ளார்கள். ஓரு ராஜீவ் கொலை செய்யப்பட்டால் என்ன ஆயிரம் உழைக்கும் மக்களுக்கு எதிரான ராஜீவ்கள் இருக்கின்றார்கள் இவர்களை ஒழிப்பதில் தான் ஒரு போராட்டத்தின் வலிமை தங்கியிருக்கின்றது. தனிமனிதர்களை அழிப்பதில் ஒரு போராட்டம் வெற்றி காண்பதில்லை.
இன்றைக்குத் தேவையானது புதிய ஜனநாயகப் புரட்சிக்கான ஒரு போராட்டத் தலைமை. இதுவே இலங்கையில் வாழுகின்ற மக்களின் முதலாளித்துவ ஜனநாயக உரிமையான சுயநிர்ணத்தை அவர்களுக்கு வழங்கும். வழங்குவன் ஊடாக உலகமயமாதலின் ஆக்கிரமிப்பில் இருந்து எமது மக்களை பாதுகாக்க முடியும். இதன் மூலமே ஒவ்வொரு இனங்களின் உண்மையான தேசிய அடையாளங்களை பாதுகாக்க முடியும். இதற்கான போராட்டம் என்பது தவிர்க்க முடியாது தொடரும்....
யார் அறிவாளிகள் என்பது ஒரு கேள்விகுள்ளாக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இது வர்க்க சமுதாயத்தால் தீர்மானிக்கப்படுகின்றது. ஒரு சமூகத்தில் உள்ள அறிவானது இன்னொரு சமூகத்திற்க பொருந்தாதவையாக இருக்கின்றது. ஏன் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஈடாக ஒரு சமூகம் தன்னை வளர்த்துக் கொள்ளாது விடின் மற்றைய சமூகத்துடன் போட்டி போட முடியாது. இவைகள் மூலதனத்தின் பெருக்கத்தின்பால் அவசியமாகின்றது. இதே வேளை தொழிலாளி கூட தனது அறிவிப் பெருக்கத்தின் மூலமே தனது உழைப்பை விற்பதற்கு இலகுவாகவும் இருக்கின்றது.
மார்க்சீயம் என்பது உழைக்கும் மக்களின் தத்துவம் இவற்றை வளர்த்தெடுக்க முடியும். ஆனால் இதில் மாற்றம் கொள்ளாது. இது சுரண்டுபவனைப் பற்றியும் சுரண்;டப்படுபவனைப் பற்றியும் விரிவாக ஆராந்துள்ளது. இதில் இருந்து முழுச்சமூக அமைப்பையும் கேள்விக்குள்ளாக்கின்றது. ஆனால் ரொட்கிசம் என்பது ஒரு தத்துவம் அல்ல அது ஒரு கோட்பாடு மாத்திரம் தான். இது இலங்கையில் பயன்படுத்த முடியுமா? முடியாதா? என்பது பற்றி ஆய்வுகள் செய்யப்பட வில்லை. இது கோட்பாடு ரஸ்யாவின் பயன்படுத்த முயற்சிக்கப்பட்டது. இவை தோல்விக்கு உள்ளாக்கப்பட்டது. இதனை மறுப்பதற்கும் சக்திகள் இருக்கின்றன. (ஆனால் ரொட்சியம் என்பது சித்தாந்தம் என்ன நிலைக்கு கொண்டுவரும் பட்சத்தில் தோல்வியைத் தழுவக் கூடியது. இவைகள் எமது தேசத்திற்கு பயன்படுத்த முடியுமா இது அதன் விசுவாசிகளுக்கு) இலங்கையில் பயன்படுத்தக் கூடிய புதிய கோட்பாடுகளை உருவாக்குவதன் மூலமே பற்பல இசங்களில் இருந்தும் விடுதலை பெற முடியும். இதில் புதியவர்கள் எவரும் குழப்பத் தேவையில்லை.
புதியவர்களுக்கான ஆரம்ப நிலை என்பது மார்க்சின் சொந்த படைப்புக்களில் இருந்து தொடங்குவதன் மூலமே புதிய நிலைக்கு வர இலகுவாக அமையும். இவற்றிற்கு பல புத்தகங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
கூலி, உழைப்பு, லாபம்
மூலதனத்தின் தோற்றம்
கூலியுழைப்பும் மூலதனமும்
மார்க்சீயத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் (பிளெஹானவ்(
லுத்விக் ஃபாயர்பாகும் மூலச்சிறப்புள்ள ஜேர்மன் தத்துவஞானத்தின் முடிவும் (ஏங்கெல்ஸ்)
குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் (ஏங்கெல்ஸ்)
மாக்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் (லெனின்)
சோவியத் ஆட்சியதிகாரம் என்பது என்ன?
இவற்றை வாசித்து அறிவதன் மூலம் மார்க்சீயத்தை திட்ட நினைப்பவர்கள், வரட்டுத் தத்துவம் எனக் கூறுவோர், இலங்கையில் நடப்பது என்ன என்பதை புரிந்து கொள்ள இது நிச்சயமாக உதவும். இதில் இருந்து நாம் பேசுவது வெறும் புலியெதிப்பு வாதம் இல்லை என நீங்களே புரிந்து கொள்வீர்கள
சுதனின் கருத்தகளுக்கு நன்றி!இக்கருத்தோடு என்கு முற்றுமுழுதான உடன்பாடுண்டு!இவை சரியான புரிதலைக் கொண்டுள்ளது.மிக முன்னேறிய மார்க்சியப் புரிதலை இது தருவதால் பரயோசனமான விமர்சனமாக இது ஏற்கப்படுகிறது.
நன்றி.
சிறிரங்கன்
,jpy; ,Uf;Fk; gpur;rid vd;dntdpy; Gypfis cs;slf;FtJ my;yJ ntw;wp nfhs;tJ vd;gJ rhj;jpak; ,y;yhj epiyahFk;. ,d;W ghl;lhsp tHf;fj;jpw;F jsk; vd;gJ ,y;iy vd;w epiyapy; ,Ue;Jjhd; tHf;fg;Gul;rpiag; gw;wpf; fijf;f KbAk; mjid tpLj;J ePq;fs; $Wk; epiyapy; vkJ Gjy;tH (,J rupNa) vLf;Fk; je;jpNuhghakhdJ Kw;Nghf;fhsHfis ghtpj;J tpl;Lg; NghFk; Kjyhspaj;jpd; ,d;iwa epiyf;F gypahfptpl KbahJ. ,t;tsT fhyKk; Njrpaj;ijf; fhl;b gypahf;fpaJ NghJk; ,dp jdpj;Jtkhd %d;whtJ mzpahf nraw;gLtJ mtrpakhFk;. G+HRth tHf;fk; Nkhjpf;nfhs;sl;Lk;.
--
Posted by Anonymous to The point:social steady is the sociality. at 5/1/2005 10:02:56 PM
இதில் இருக்கும் பிரச்சனை என்னவெனில் புலிகளை உள்ளடக்குவது அல்லது வெற்றி கொள்வது என்பது சாத்தியம் இல்லாத நிலையாகும். இன்று பாட்டாளி வர்க்கத்திற்கு தளம் என்பது இல்லை என்ற நிலையில் இருந்துதான் வர்க்கப்புரட்சியைப் பற்றிக் கதைக்க முடியும். அதனை விடுத்து நீங்கள் கூறும் நிலையில் எமது புதல்வர் (இது சரியே) எடுக்கும் தந்திரோபாயமானது முற்போக்காளர்களை பாவித்து விட்டுப் போகும் முதலாளியத்தின் இன்றைய நிலைக்கு பலியாகிவிட முடியாது. இவ்வளவு காலமும் தேசியத்தைக் காட்டி பலியாக்கியது போதும் இனி தனித்துவமான மூன்றாவது அணியாக செயற்படுவது அவசியமாகும். பூர்சுவா வர்க்கம் மோதிக்கொள்ளட்டும்.
,izsaq;fs; gw;wp Fwpg;gpl;bUe;ejPHfs; ,jpy www.tamilcircle.net ,jid Vd; cq;fs; ,izaj;jpy; Nghltpy;iy????
fUj;J kf;fis gw;wpf; nfhs;s cq;fUf;F tpUg;gkpy;iyah??
ghrPrj;jpd; my;yJ GpypnajpHg;py; jq;fSf;fF cld;gl KbahJ vd;gJ Gupfpd;wJ. Mdhy; cq;fisAk; JNuhfp vd;W Kj;jpiu Fj;jp tpLthHfs; vd;w gak; ,Ug;gijNa cjhuzj;jpw;F -- rdpaq;fs.> ff;#];> ,jugy vd;W Kbj;J tpLtPHFs;. ,jpy; ,Ue;J ntspapy; tuNtz;Lk;.
ehk; vtuk; ,yq;if;fF jsj;ijj t];jupf;fg;Nghtjpy;iy. Mdhy; Gyk;ngaHe;jtHfs; ehk; Gyk; ngaHehl;by; vkJ tHf;ff; flikfis ,q;Fs;stHfSld; NrHe;J jPHg;Nghk;. ,yq;ifapy; cs;stHfs; Rje;jpukhf> Ra fhypy; epw;gjw;Fk;;> ghrPrj;ijg; ghJfhf;FFk; epjpia nfhLj;J ghrPrj;ij njlhHe;Jk; tsu tplhJ jL;gjw;Fk; ehk; Gyk;ngHehl;bd; tHff; flikia nraw;gLj;JNthk;. ed;wp
tzf;fk;.
Posted by Anonymous to The point:social steady is the sociality. at 5/1/2005 10:42:18 PM< /html>
இணைளயங்கள் பற்றி குறிப்பிட்டிருந்நதீர்கள் இதில www.tamilcircle.net இதனை ஏன் உங்கள் இணையத்தில் போடவில்லை????
கருத்து மக்களை பற்றிக் கொள்ள உங்கருக்கு விருப்பமில்லையா??
பாசீசத்தின் அல்லது புpலியெதிர்ப்pல் தங்களுக்ககு உடன்பட முடியாது என்பது புரிகின்றது. ஆனால் உங்களையும் துரோகி என்று முத்திரை குத்தி விடுவார்கள் என்ற பயம் இருப்பதையே உதாரணத்திற்கு -- சனியங்கள., கக்சூஸ், இதரபல என்று முடித்து விடுவீர்குள். இதில் இருந்து வெளியில் வரவேண்டும்.
நாம் எவரம் இலங்கை;ககு தளத்தைத விஸ்தரிக்கப்போவதில்லை. ஆனால் புலம்பெயர்ந்தவர்கள் நாம் புலம் பெயர்நாட்டில் எமது வர்க்கக் கடமைகளை இங்குள்ளவர்களுடன் சேர்ந்து தீர்ப்போம். இலங்கையில் உள்ளவர்கள் சுதந்திரமாக, சுய காலில் நிற்பதற்கும்;, பாசீசத்தைப் பாதுகாக்குகும் நிதியை கொடுத்து பாசீசத்தை தெடார்ந்தும் வளர விடாது தடு;பதற்கும் நாம் புலம்பெர்நாட்டின் வர்கக் கடமையை செயற்படுத்துவோம். நன்றி
வணக்கம்.
வணக்கம் நண்பரே!
நீங்கள் குறிப்பிடுவதில் நியாயமில்லை.1988 ஆண்டு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மிகக் கறாராக புளட்,புலிகள் மற்றும் இயக்கங்களின் மக்கள் விரோத அரசியலையும்-பாசிசப்போக்கையும்'தலைவன் யார்' என்ற நூலில் நாமே முதலில் அம்பலப் படுத்தினோம்.அமைப்புகளின் அனூதாபிகள் போனில் மிரட்டிக் கொல்வதாகவும்,அந்நேரம் சொன்னார்கள்.
எனவே புலிகளின் மக்கள் நலனற்ற அரசியலை இந்தப் பதிவில் தொடர்ந்து எழுதும்வேளை,புலிகளின் தலைமைத்துவத்தைத் தரகு முதலாளியத் தலமை என்று ஆதாரபூர்வமாக நிறுவுகிறோம்.இதைவிடப் புலிகளை இந்தியா வா,அமெரிக்கா வா,ஓடோடி வந்து அழித்துவிடு என்று எழுதிவிடவா?இந்த வகை அரசியல் டக்ளஸ் தேவானந்தன்,ஆனந்த சங்கரி மற்றும் இயக்கங்களுக்குத்தாம் சரிவரும்.ஏனெனில் அவர்கள் தம் பங்குக்கு மக்களை மேய்க்கக் காத்துக் கிடக்கிறார்கள்.நாமோ மக்கள் நலனை முன்னெடுக்கும் புரட்சிகர அரசியலை எமது சமூகத்தில் உருவான எமது போராளிகளால் எப்படி முன்னெடுக்கப்படுமென யோசிக்கிறோம்.இதில் எமது மக்களின் பிள்ளைகளை எப்படி வென்றெடுப்பதென மண்டையைப்போட்டுக் குடையிறோம்.இதைவிட்டு 'புலி அது அழிக்கப்பட வேண்டிய சக்தி' என்ற அரசியல் என்னிடமில்லை.மீள,மீளச் சொல்கிறோம் அடிமட்டப் புலிப்போராளிகள் நமது உழைக்கும் மக்களின்-ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் அவர்களிலிருந்து புரட்சிகர இராணுவத்தைக் கட்டவேண்டிய தேவையுள்ளது.அவர்களைத் தேசபக்தர்கள் என்றுசொல்வதால் புலித் தலைமையை புரட்சிகரத் தலைமையென்பதாகாது.
அடுத்து சமரின் இணையத்தை மற்றும் தேனியினது,உலக சோஷலிச அமைப்பினது,அறிதுயிலினது ஜேர்மனிய இடது சாரிக்கட்சிகளினது,இந்திய மார்க்சிய கட்சியினது எல்லாம் தொடுப்புக்கொடுக்க ஆசைதாம்.ஆனால் இந்த ஜாவா எழுத்துமுறமையெல்லாம் எனக்குத் தெரியாது.நான் கணினி அறிவில் மிகமிகத் தாழ்ந்த நிலையில் இருக்கிறேன்.கணினித் துறைக்கு மிக,மிகச் சுணங்கியே வந்துள்ளேன்.சுமார் இரண்டுமாத அறிவில் எதை எப்படிச் செய்வதென்பதில் தெளிவில்லை.அரிவரிப்பிள்ளைபோன்ற எனது கணினி அறிவை வைத்து நானெழுதும் ஒரு கட்டுரைக்குக்கூட ஒரு படம்போடத்தெரியாத நிலையிலிருக்கும் நான் உங்கள் விருப்பை நிறைவேற்ற முடியாதுள்ளேன்! எனது மருமகன் கணினித் துறையில் புறோக்கிராமராகப் புலிகளோடு இருக்கிறான், அவனிடம்தாம் கேட்கவேண்டும்.ஆனால் அவன் இந்த ஜென்மத்திலும் தொடர்பு வைக்கவில்லை.பட்டப்படிப்பு முடித்த கையோடு போனவன் போனதுதாம். அல்லது... முடிந்தால் நீங்களே இதை எழுதியனுப்புங்கள் அவற்றைத் திணித்து விடுகிறேன்.இதைவிட வேறுவழி இப்போதைக்கில்லை.
அன்புடன்
சிறிரங்கன்.
மக்களின் வாழ்வியல் உரிமைகளை மறுக்கும் கருத்துச் சுதந்திரம் :
இந்த இணையத்தளம் மக்களின் வாழ்வியல் உரிமை சார்ந்த, சமூக உண்மைகளுக்காக போராடுகின்றது. இந்தப் போராட்டத்தில் நாம் எமது கருத்துச் சுதந்திரத்தை தக்கவைக்கும் ஒரு போராட்டமும், இதில் ஒரு அங்கமாகிவிடுகின்றது. இந்த இணையத்தளத்தை குழப்பவும், செயலிழக்கப்பண்ணவும், 10க்கு மேற்பட்ட தரம் இணையத்தின் இயங்கும் தளத்துக்குள் இனம் தெரியாத நபர்கள் புகுந்து முயற்சி செய்துள்ளது தெரியவந்துள்ளது. சமூக உண்மைகளையும், சமூக உணர்வுகளையும் எதிர்கொள்ள வக்கற்ற சமூகவிரோதக் கோழைகளின், இழிந்த ஒரு வக்கிரமே இந்த முயற்சி. இதன் செயல்பாட்டை நிறுத்துவது அல்லது சமூக உண்மைகளை எழுதுபவர்களையே கொன்றுவிடுவது என்பது இன்றைய தேசியமாக வக்கரித்துக் கிடக்கின்றது. இந்த அடிப்படையில் புலி ஆதரவு, புலியெதிர்ப்புக்கு இடையில் எந்த வேறுபாடும் கொள்கையளவில் கூட கிடையாது. மக்களின் சமூக வாழ்வியலுக்கு எதிராக இயங்குவதில் இவர்கள் ஒன்றுபட்டு கைகோர்த்து நிற்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, புலி ஆதரவு இணையதளங்களும் சரி புலியெதிர்ப்பு இணையத்தளங்களும் சரி எமது இணையத் தளத்துக்கு இணைப்பு கொடுக்காமல் விடுவதில் கூட ஒன்றுபட்டு நிற்கின்றன. மக்களுக்காக பேசுவது, இவ்விரண்டு அரசியல் பிரிவினருக்கும் சகிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இதில் கொள்கை முரண்பாடு அற்றவர்கள் என்பதை நடைமுறையில் அவர்களின் எழுத்துகள், கூட்டுகள் தெளிவாக உணர்த்தி நிற்கின்றன. இந்த வகையில் மக்களின் தனித்துவமான உண்மைகளை எமது இணையத்தளம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. மக்களுக்கு எதிராக உலகெங்கும் இயங்கும் ஏகாதிபத்திய தலைவர்களின் பேட்டிகளையும், உலகத்தை அடக்கியாள நினைக்கும் மனித விரோத கயவர்களின் வக்கிரங்களையும் தேடியெடுத்து மொழிபெயர்த்து தமது இணைய பக்களை நிரப்பும் புலியெதிhப்பு இணையங்கள், எமது இணையத் தள கட்டுரைகள் எதையும் போடத் தயாரற்ற நிலையில் உள்ள அரசியல் வக்கிரத்தை நாம் காண்கின்றோம்;. சமரில் வெளிவந்த முஸ்லீம் மக்கள் பற்றிய கட்டுரை ஒன்றைப் போட்ட தேனீ இணைத்தளம், அதன் கீழ் நன்றியை ஷசமரசம்| (சமரில் பார்க்க முஸ்லீம் மக்கள் மீதான வன்முறையும், அதற்கு எதிரான போராட்டமும்;) என்று போட்டனர். இதை நாம் ஆட்சேபித்து திருத்தக் கோரியபோதும், அதை அவர்கள் அலட்சியம் செய்தனர். இதே தேனீ இணையம் எமது இணைத்தளத்தை தமது இணைப்பில் போட்ட ஓரிரு நாளிலேயே, அவசரமாக நீக்கினர்.
மக்களுக்காக பேசுவது, அதை அறிமுகப்படுத்துவதும் ஆபத்தான ஒன்று என்பது அவர்களின் அரசியல் அகராதி மட்டுமின்றி, அவர்களின் ஆலோசர்களும் எடுத்துரைத்தன் விளைவே இது. இதில் அவர்களுக்கு இடையில் ஒரு கூட்டுமுள்ளது. மக்களுக்காக பேசாது, புலிக்கு எதிராக மட்டும் இயங்குவதே புலியெதிர்ப்பு அணியின் மக்கள்விரோத அரசியல். மறுபக்கத்தில் புலிகள் மக்களுக்காக பேசாது, புலி அல்லாத அணியை பற்றி மட்டும் பேசுவது அவர்களின் மக்கள் விரோத அரசியல். புலியெதிர்ப்பு அணியினர் புலிகளைப் பற்றி பேசுவதும், புலிகள் புலியெதிர்ப்பு அணியைப் பற்றி பேசுதுமே இன்றைய செய்திகளாகின்றது. இதுவே அவர்களின் உயாந்தபட்ச அரசியலாகி விடுகின்றது. இங்கு தூற்றுதல் முதல் உண்மைக்கு புறம்பான கற்பனைகளையும் கலந்த செய்திகளை புனைகின்றனர். ஒருவர் மறைக்கும் விடையத்தை மற்றவர் கொண்டு வருவது இவர்களின் உயர்ந்தபட்ச நடவடிக்கையாக உள்ளது.
ஆனால் இவர்கள் விமர்சனத்தில் இருந்து தப்பிக் கொள்ள, தம்மை அரசியல் செயல்பாட்டில் இருந்த விலத்திக் காட்டும் இவர்கள், தாம் வெறுமனே செய்திகளை கொண்டு வருபவர்கள் என்ற காட்டமுனைகின்றனர். உண்மையில் செய்தியை ஒரு செய்தியாக கொண்டுவரும், அரசியல் உள்நோக்கமற்ற வகையில் இவர்கள் இயங்குகின்றனரா! அதாவது செய்தியை தமது சொந்தக் கருத்தின்றி செய்தியாக மட்டும் கொண்டு வருகின்றனவா என்றால் இல்லை. செய்திகளை தேர்ந்தெடுத்தல் என்பதைக் கூட, ஒருவிதமான காழ்ப்புடன், வெறுப்பை உருவாக்கும் வகையில் தம்மை வெளிப்படுத்துகின்றன. இன்று செய்தியை செய்தியாக மட்டும், உண்மையை அடிப்படையாக கொண்ட வருவது கூட பாசிச கட்டமைப்பில் முக்கியமானதது தான். ஆனால் புலி அல்லாத செய்திகள் எதுவும், இதனடிப்படையில் செயல்படவில்லை. மாறாக அவை தமக்கு தாமே ஒரு களங்கம் எற்படும் வகையில், தம்மைத்தாம் கறைப்படுத்திக் கொண்டு புலிகளைப் போல் போட்டிச் செய்தியை வெளியிடுகின்றன. புலிகள் ஒரு பக்கத்தை எப்படி மறைக்கின்றனரோ, அதையே புலி அல்லாத செய்திகளும் செய்கின்றன. செய்தியை செய்தியாக கொண்டு வரும் பத்திரிகை உள்ளடகத்தைக் கூட, நாம் தமிழ் பரப்பில் காணமுடியாது. கறைகளால் தம்மை பூசிக் கொண்டபடி, தாம் வெறும் செய்திகள் கொண்டு வருவதாக கூறுவதில் என்னதான் அர்த்தமுண்டு.
உண்மையில் மக்களைப்பற்றி, மக்களின் வாழ்வியல் பற்றி இவர்கள் யாரும் பேசுவதில்லை. மக்களின் தேசியம் பற்றி பேசுவதில்லை. ஏகாதிபத்தியம் உலகமயமாதல் போன்றன, உலகளவில் மக்களுக்கு எதிராக இயங்குவதை (இதில் தமிழ் மக்களும் உள்ளடங்கும்), இரண்டு பகுதியும் திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர். ஏகாதிபத்தியத்தின் கால் தூசுக்கு ஏங்கி தவிக்கும் இவர்கள், மக்களை எதிரியாக கருதியே அவர்களின் வாழ்வியல் அவலத்தை மூடிமறைத்து நிற்கின்றனர்.
இது இணையம் முதல் ஊடகவியல் எங்கும் ஒரேவிதமாகவே உள்ளது. ஒரு மனிதன் தனது கருத்தை, எழுத்தை, பேச்சுச் சுதந்திரத்தை மக்கள் நலனில் இருந்து பயன்படுத்தும் உரிiமையை மறுப்பதே, புலியெதிர்ப்பு, புலியாதரவு அணிகளின் அன்றாட அரசியலாகும். இதையே அவர்களின் எழுத்துகள், நடைமுறைகள் முதல் அவர்களின் திட்டமிட்ட புறக்கணிப்புகள் வரை, தெளிவாக உழைத்து வாழும் மனித இனத்துக்கு எடுத்துக் காட்டுகின்றது. ஏகாதிபத்திய கைக்ககூலிகளாக செயல்படத் தயாராக இருக்கும் எல்லைக்குள் இருந்தபடிதான், இரண்டு பிரிவினரும் மக்கள் விரோத அரசியலை முன்வைக்கின்றனர். இந்த உண்மையை புரிந்து கொள்வது, புரிந்துகொள்ள முனைவது சமூக அக்கறை உள்ளவர்கள் ஒவ்வொருவரினதும் சமூகக் கடமையாகும். இவற்றை புரிந்து கொள்ளாமல் மக்களுக்காக ஒரு நாளுமே போராடமுடியாது.
தமிழ் அரங்கம்
vtUk; ntspr;rf;jp nfhz;L Gypfis mopf;Fk;gb $wtpy;iy. Mdhy; Njrpaj;ijf; fhg;ghw;wg; Ngha; mtHfspd; NrtfHfshf khWk; epiyiaj; jhd; ,q;F Rl;bf; fhl;lg;gLfpd;wJ. ,tHfs; Njrpaj;jpid ghJfhg;gjd; Clhf mtHfspd; tHf;fj;jtHfspd; $ypfshf khwptpLk; epiyjhd; Rje;jpukhf rpe;jpf;Fk; epiyia njhlHe;Jk; jkpo; ghrPrk; Vw;gLj;jpapUf;fpd;wJ. Njrpaj;jpd; gpd;dhy; my;yJ GypnajpHg;gpd; gpd;dhy; vtUk; nry;yl;Lk; Mdhy; ciof;Fk; kf;fspd; rf;jpia fUtWg;gjpNyNa ,e;j rf;jpfs; ,Uf;fpd;wd. ,t;thwhd rf;jpfspy; khw;wkpy;iy vd;gijNa mOj;jkhf Fwpg;gpl tpUk;Gfpd;Nwd;. ePq;fs; $Wk; tHf;f cld;ghL juFfSf;Fk; Vd; epjp%yjdj;jpw;Fk; Vw;gl;LtUk; cwit ePq;fs; cq;fs; epiyapdhy; ghJfhf;fg;gLfpd;wJ.
--
Posted by Anonymous to The point:social steady is the sociality. at 5/2/2005 10:43:30 AM
எவரும் வெளிச்சக்தி கொண்டு புலிகளை அழிக்கும்படி கூறவில்லை. ஆனால் தேசியத்தைக் காப்பாற்றப் போய் அவர்களின் சேவகர்களாக மாறும் நிலையைத் தான் இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றது. இவர்கள் தேசியத்தினை பாதுகாப்பதன் ஊடாக அவர்களின் வர்க்கத்தவர்களின் கூலிகளாக மாறிவிடும் நிலைதான் சுதந்திரமாக சிந்திக்கும் நிலையை தொடர்ந்தும் தமிழ் பாசீசம் ஏற்படுத்தியிருக்கின்றது. தேசியத்தின் பின்னால் அல்லது புலியெதிர்ப்பின் பின்னால் எவரும் செல்லட்டும் ஆனால் உழைக்கும் மக்களின் சக்தியை கருவறுப்பதிலேயே இந்த சக்திகள் இருக்கின்றன. இவ்வாறான சக்திகளில் மாற்றமில்லை என்பதையே அழுத்தமாக குறிப்பிட விரும்புகின்றேன். நீங்கள் கூறும் வர்க்க உடன்பாடு தரகுகளுக்கும் ஏன் நிதிமூலதனத்திற்கும் ஏற்பட்டுவரும் உறவை நீங்கள் உங்கள் நிலையினால் பாதுகாக்கப்படுகின்றது.
சரியாகச் சொன்னீர்கள்.நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரிக்கவில்லை.அது எப்பவுமே முதலாளியக் கோட்டைக்குள்ளிருந்து வருவது.ஆனால் அதன் பெயரால் தமிழ் மக்களைச் சிங்களவரசு ஓடுக்கும்பொழுது அதற்கெதிரானபோராட்டத்தை புரட்சிகர அரசியலால் முன்னெடுக்கவேண்டுமென்கிறோம்.இதுகுறித்த இன்னும் விபராமாக விவாதிப்போம்.இப்போது வேலைக்குப் போகிறேன் .எனவே இந்த விளக்கம் காணுமென நினைக்கிறேன்.
,J vd;d மிக முன்னேறிய மார்க்சியப் புரிதலை mg;gb xU khHf;rPAk; ,Uf;fpd;wjh? khHf;rPak; vd;gJ xd;Wjhd; Mdhy; mJ tsHr;rpaile:H khNthaprkhf ,Ug;gJ vd;gJ fUj ,lKz;L Mdhy; khNthtpd; rpe;jid vd;gNj Kd;Ndwpa Gupjy; vd;W miof;fyhk;. Ktjyhspa tHf;fr; rpe;jiia ghJfhf;f Kaw;rpw;Fk; tHf;f vjpupfs; mtHfspd; NtH Kw;whf mWglhky; ,Ug;gjw;fhf khNthit vjpHf;fpd;wdH.
இஇது என்ன மிக முன்னேறிய மார்க்சியப் புரிதலை அப்படி ஒரு மார்க்சீயும் இருக்கின்றதா? மார்க்சீயம் என்பது ஒன்றுதான் ஆனால் அது வளர்ச்சியடைந:ர் மாவோயிசமாக இருப்பது என்பது கருத இடமுண்டு ஆனால் மாவோவின் சிந்தனை என்பதே முன்னேறிய புரிதல் என்று அழைக்கலாம். முவதலாளிய வர்க்கச் சிந்தiயை பாதுகாக்க முயற்சிற்கும் வர்க்க எதிரிகள் அவர்களின் வேர் முற்றாக அறுபடாமல் இருப்பதற்காக மாவோவை எதிர்க்கின்றனர்.
ஐயோ,நண்பரே என்னயிது?...
மிக முன்னேறிய மார்க்சியப் புரிதல் என்பது நம்மில் பலர் இப்போது மார்க்சியத்தில் பாலர் பாடம் படித்துக்கொண்டிருக்க, அந்த அன்பர் கொஞ்சம் முன்சென்ற அனுபவத்தோடு கருத்திடும்போது,அவரது மார்க்சியப் புரிதலின் நிலையைச் சொன்னேன்.அடுத்து இன்னொரு அபிப்பிராயம்: மார்க்சியம் என்பது கணினி மாதிரியில்லைத்தானே?எதற்கும் டக்,டக் பதில் தந்துவிடுவதற்கு! அதன் ஒளியில் பல இருள் நிறைந்த பக்கங்களைப் பார்த்து புதிய வகைகளையுருவாக்கவேண்டிய தேவையை நிராகரித்தால்-மார்க்சியமும் இன்னொரு பைபிளாகிவிடும்.எனவே அதனொளியில் நாம் பலவற்றைத் தேடி விருத்தியுற வைக்கவேண்டிய சமூகச் சூழலையும் எனது புரிதல் முன்வைக்கிறது.இதுகுறித்து விவாதிப்பதல்ல அந்த 'மிக முன்னேறிய...'
rupahf nrhe;ePH Iah
சரியாக சொந்நீர் ஐயா
வணக்கம் சிறீரங்கன் அவர்களே. உங்கள் இப்பதிவின் சுட்டியை தங்கமணி அவர்கள் பதிவில் கொடுத்தேன். பார்க்க: http://ntmani.blogspot.com/2005/05/blog-post.html
அங்கும் இதே கதிதான். மஸ்ட் டூ அவர்கள் மட்டும் பதில் எழுதினார். அதையே எழுதிய இன்னொருவருக்கு நீங்கள் கொடுத பதிலை மறுபடியும் இங்கு இட்டேன். மிகவும் சப்தமான மௌனம்தான் அதன் பதில். நான் அங்கு கூறினால் போல் "Something is rotten in the State of Denmark"
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம்,டோண்டு ஐயா!
சிவராம் கொலையை சர்வதேச மட்டத்தில் புலிகளால் மக்களோடு முன்னெடுக்க முடியாது.அது அவர்களின் இருப்புக்கு எதிராகும்.இலங்கைக்குள் தமிழ் மக்களை சிங்கள மக்களிடமிருந்து பிரித்து வைக்கும் அரசியலால் தளத்தின் இருப்பானது உறுதியடையும்.எனவே அங்கு இத்தகைய ஆர்ப்பாட்டமெல்லாம் நடக்கும்.இதை மஸ்டு புரிந்திருப்பாரென எதிர்பார்க்க முடியாது.இலங்கையில் இனவாத அரசியல் முன்னெடுப்புகள் இருதரப்பாருக்கும்(தமிழ்-சிங்கள ஆளும் வர்க்கங்கள்); அவசியம்.மக்கள் உணர்ச்சிவசப்படும்போது அறிவுரீதியான எந்த முன்னெடுப்புமிருக்கா.வெளிநாடுகளில் இந்தக் கொலையை மையப் படுத்திய வெகுஜனப்போராட்டம் புலிகளுக்கு ஆபத்தானது.அது தன்னளவில் தெளிவாகவேயிருக்கிறது.இதைச் சுட்டிக்காட்டுவது மிக,மிக அவசியம்.இந்த வர்க்க அரசியல் தமிழ் மக்களின் நலனோடு சம்பந்தப்பட்ட விடையமல்ல. இது முழுக்க,முழுக்க கட்சி நலன் -மூலதன நலன் சார்ந்த அரசியலால் வழக்கத்துக்குமாறாக - 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!'எனும் பதாகையும் அவர்கள் ஏந்தவில்லை!தனியே 'சுனாமி உதவியை நீதியாகப் பங்கிடு!' எனும் சுலோகமே ஏந்தப்பட்டது!அத்துடன் தமிழர் ஒரு தேசிய இனம் என்ற பதாகையும் சிலரிடமிருந்தது. எந்தவொரு வெளிநாடுகளிலும் சிவராம் கொலையை வெகுஜனமட்டத்துக்குப் புலிகள் முன்னெடுக்கவில்லை.எடுக்கவும் முடியாது!
அன்புடன்
ஸ்ரீரங்கன்
ஈழநாதன் வௌ;வேறு நாடுகளில் சிவராம் கொலையை அம்பலப்படுத்தியதாக நண்பர்(புலிகளின் மாவட்டப் பொறுப்பாளர்)கூறினார்.டோண்டுவுக்கு எங்கேயும் அப்படி நடக்கவில்லையெனப் பதிலிட்டு நான்வேறு எல்லோரையும் குழப்பிவிடுகிறேன்.அப்படி வெளிநாடுகள் பலவற்றில் நடந்திருந்தால் பொதுவாக நான் மன்னிப்புக் கேட்கிறேன்:மன்னிக்கவும்!
கடைசிப் பின்னூட்டத்துக்கு நன்றி சிறிரங்கன்!
ஜேர்மனில் நீங்கள் சொன்ன சம்பவம் துரதிஸ்ட வசமானது.
ஆனால் மற்றய நாடுகளில் நடந்தவற்றைத் தயவு செய்து தேடி அறியவும். அங்கு சிவராமை மையப்படுத்தியே எல்லாம் நடந்துள்ளன. இதை நான் குறிப்பிட முன்பு நீங்களே உணர்ந்து கொண்டுள்ளீர்கள் நன்றி.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் மஷ்டு.தங்கள் மேலான ஆர்வத்துக்கு நன்றி!
சிறீரங்கன், மஸ்ட் டூ, ஈழ நாதன் மற்றும் தங்கமணி அவர்களே, நானும் மன்னிப்பு கோருகிறேன். எனக்கு உண்மையாகவே சிவராம் அவர்களின் மரணத்தைக் குறித்த மௌனம் வருத்தம் அளித்தது. நான் நினைத்தது தவறு என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
சிறீரங்கன், மஸ்ட் டூ என்றப் பெயரை மஷ்டு என்று எழுதி விட்டீர்கள். என்னுடையப் பெயர் டோண்டுவின் மாற்றாக அவர் மஸ்ட் டூ என்று பெயர் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன், சரியா மஸ்ட் டூ ஐயா? எங்கள் ஊரில் மஷ்டு என்றால் அழுக்கு என்று அர்த்தம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ஐயா,வணக்கம்.தங்கள் மேலான விளக்கத்துக்கு என் நன்றி!
அன்புடன்
ஸ்ரீரங்கன்
பி.கு: மஸ்ட்டூ பெயரை இனிமேற் சரியாக எழுதமுயற்சி செய்வேன்,இப்படித்தாம் குழைக்காட்டானை-குலக்காட்டானென எழுதினேன்.இந்தப் புனைபெயர்கள் என்னைப் படுத்தும்பாடோ சொல்லிக்க முடியவில்லை.வாயில் உட்புக முடியாத பெயர்கள் அதிகம்.
vj;jid gj;jpupiupifshsHfs; nfhy;yg;gl;Ls;shHFs; fdk nghUe;jpa dont do kw;W must do jpdKk; nfhy;yg;gLk; capHfs; gw;wp VD; ePq;fs; ftiyg;gLtjpy;iy? ,tHfspd; capH mt;tsT ngWkkjpaw;wjh? kw;wtHfspd; cpiu tpl rptuhkpd; caH vt;tsT tpNlkhdJ vd;gij tpl mtHNky; ,Uf;Fk; tHf;f ghrk; ,jid fhl;b epw;fpd;wJ.
jhd; Mlhtpl;lhYk; jirahLk; vd;ghHfs; mJ ,Jjhdh????
//சிவராம் கொலையை சர்வதேச மட்டத்தில் புலிகளால் மக்களோடு முன்னெடுக்க முடியாது.அது அவர்களின் இருப்புக்கு எதிராகும்//
//எந்தவொரு வெளிநாடுகளிலும் சிவராம் கொலையை வெகுஜனமட்டத்துக்குப் புலிகள் முன்னெடுக்கவில்லை.எடுக்கவும் முடியாது!//
சிவராம் கொலை தொடர்பில் நீங்கள் எழுதியவை இவை. இப்பொழுது பரவலாக நாடுகள் எங்கணும் சிவராம் கொலை குறித்த வெளிப்படுத்தல்கள் நிகழ்கின்றன. வெவ்வேறு நாடுகளிலும் நிகழ்ந்திருப்பதாய் நீங்களும் ஏற்கறீர்கள்..
இப்போது உங்கள் முன்னைய கருத்துக்கள் குறித்து என்ன சொல்லலாம் என நினைக்கிறீர்கள்.நேரமிருந்தால் சொல்லுங்கள்..
குறிப்பாக இந்த வசனத்திற்கு..
//புலிகள் முன்னெடுக்கவில்லை. எடுக்கவும் முடியாது!//
,jpy; vd;d GJikk ,Uf;fpd;wJ kuzj;ijf; fhl;bNa murpay; elj;j Ntzlba murpay; ntWikf;Fs; mfg;ggl;bUf;Fk; NghJ SR kuzk; xU ey;y re;jHg;gk; Rdhkp epjpf;F SR CHtyq;fSf;F. ,jpy vd;d ngupa tpj;jpahr;rj;ijf; fz;BH ?
அன்பரே,நீங்களென்ன புத்திபேதலித்தவரோ?
மேதின ஊர்வலத்தில புலிகள் எங்கெங்கு சிவாராம் கொலையை வெகுஜனப் படுத்தினார்கள்? ஆதாரத்துடன் செய்தி போடுவீரா? நான் நேரில் பங்கு பற்றியபோது எனக்குக் கிடைத்த பதிலை முன்வைத்திருக்கிறேன்.அன்று வாய்மூடிய நீரோ,நான் நடந்திருக்கலாமெனக் கூறியவுடன் கொடுக்குக் கட்டிக்கொண்டு வாறீர்.ஒரு நாட்டில் செய்யாமல்,இன்னொரு நாட்டில் செய்வது ஏன்?உம்மால் கூறமுடியுமா? அவரவர் பாட்டுக்குக் காரியமாற்றும் அரட்டையரங்கமோ புலிகள் அமைப்பு? வெளிநாடுகளில் மேதின ஊர்வலத்தில் புலிகள் இக்கொலையை வெகுஜனப் படுத்தவில்லை என்பது என் கருத்து. அதை ஆதாரபூர்வமாக நீரே மறுத்துக்காட்டும்.இதைவிட்டுவிட்டு நான் ஓத்துக்கொண்டவுடன் 'இதற்கென்ன பதில்'என்கிறீர்.இப்பவுந்தாம் சொல்கிறேன் புலிகளால் மக்களைத் தன்னிச்சையாகக் காரிமாற்ற விடமுடியாது. தனது அமைப்புக்குள்ளாற்றாம் செயற்பட அனுமதிப்பார்கள்.
புலிகளே பலநூறு பத்திரிகையாளர்களை,ஜனநாயக முன்னெடுப்பாளர்களைக் கொன்றுவிட்டு சிவராமுக்காக இயக்க முத்திரையுடன் வெகுஜன மட்டத்தில் இதைக் கொண்டுசெல்வது எப்படி?அராஜகத்தை வளாத்தெடுத்துவிட்டவர்களே அதற்கெதிராகக் குரல்கொடுப்பது எந்த முகத்துடன்? சும்மா தோரணையாகக் கதைக்கவேண்டாம்.நாம் நமது மக்களின் நலத்தின் பொருட்டே இதையெல்லாம் சகிக்கிறோம்.நீங்களோ பெரும் தூய்மையான அமைப்பின் அனுதாபிபோல் காட்டிக்கொள்ள முனைதல் அப்பாவித்தனமாக இருக்கிறது.
சிவராமினது கொலையை வெகுஜனப்படுத்தும்போது இனிப் படுகொலைசெய்யப்படப்போகும் பலரின் படுகொலைகளையும் புலிகள் எதிர்த்து வெகுஜனப்படுத்தும் நிலைதோன்றும்.அதன் முதல்படி ஜனநாயகத்தை மீட்டுப்பார்த்தலாகும்,எனவே இதைச் செய்ய புலிகளின் ஏகப்பிரதிநித்துவ அரசியல் விடாது.இதனாலேயேதாம் கூறினோம் புலிகளால் இது சாத்தியமில்லையென.இலங்கையில் மேதின ஊர்வலங்களில் இவற்றைச் செய்வதற்கும் இங்கு செய்வதற்கும் முடிச்சிடாமல்,வெளிநாடுகளில் எங்கெங்கு செய்யப்பட்டுள்ளதென்பதை போட்டோக்கள் மூலம் இணையத்தில் போடுங்களேன்.பிறகு பேசுவோம்.அத்தோடு ஜேர்மனியில் ஏன் முன்னெடுக்கவில்லையென்றும் பதில் கூறுங்கள்.எப்போது மக்கள் சுயமாகக் காரியமாற்றுகிறார்களோ அப்போது பல்வகை அமைப்புகளின் தோற்றம் சாத்தியம்.இதுதாம் மக்ளாண்மையின் குறியீடு.மென்மேலும் இந்த விஷயங்களைக் கதைத்துக்கொள்ளவும்,பழைய பல்லவியை ஆரம்பிக்கவும் தூண்டாதீர்.
எத்தனை பத்திரிiரிகைளாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்குள் கனம பொருந்திய dont do
மற்று must do
தினமும் கொல்லப்படும் உயிர்கள் பற்றி ஏனு; நீங்கள் கவலைப்படுவதில்லை? இவர்களின் உயிர் அவ்வளவு பெறுமமதியற்றதா? மற்றவர்களின் உpரை விட சிவராமின் உயர் எவ்வளவு விடேமானது என்பதை விட அவர்மேல் இருக்கும் வர்க்க பாசம் இதனை காட்டி நிற்கின்றது.
தான் ஆடாவிட்டாலும் தசையாடும் என்பார்கள் அது இதுதானா????
"எத்தனை பத்திரிஇரிகைளாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்குள் கனம பொருந்திய டொன்ட் டொ மற்று முச்ட் டொ தினமும் கொல்லப்படும் உயிர்கள் பற்றி ஏனு; நீங்கள் கவலைப்படுவதில்லை? இவர்களின் உயிர் அவ்வளவு பெறுமமதியற்றதா? மற்றவர்களின் உயிரை விட சிவராமின் உயிர் எவ்வளவு விடேமானது என்பதை விட அவர்மேல் இருக்கும் வர்க்க பாசம் இதனை காட்டி நிற்கின்றது.
தான் ஆடாவிட்டாலும் தசையாடும் என்பார்கள் அது இதுதானா????"
சரி அனானிமஸ் அவர்களே, இதில் உள்ள வர்க்க நலனைப் பற்றி விளக்க முடியுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ராகவன் mtHfNs
nfhiyfs; ve;j cUtj;jpy;te;jhYk; fz;bf;Fk; epiyt ,Uf;f Ntz;Lk; ,t;thW nra;fpd;wPHfsh?
டோண்டு ராகவன் அவர்களே
கொலைகள் எந்த உருவத்தில்வந்தாலும் கண்டிக்கும் நிலைவ இருக்க வேண்டும் இவ்வாறு செய்கின்றீர்களா?
டோண்டு ஐயா, இந்தப் பெயர் குறிப்பிடாத தோழர் சொல்லும் 'வர்க்கம்' சாதிகளைக் குறிப்பதல்ல.அவர் மிகவும் ஆரோக்கியமாக மனிதவுறவுகளைப் பார்க்கின்றவர்.உலக மக்கள் சமுதாயம் இன்று முதலாளிய உற்பத்திப்பொறிமுறைக்குள் தனது பொருளாதாரவாழ்வைக் கொண்டிருப்பதால் இந்த மக்களில் ஒரு சிறுபகுதி உடமையாளராகவும் பெரும்பாலார் உழைப்பாளர்களாகவும் ,,வர்க்கங்கள்ஈஈ உருப்பெற்று அரசமைப்புகள் தோற்றமாகி முதலாளிகளுக்கான ஆட்சி அதிகாரமுருவாகிப் பெரும் பகுதியான உழைப்பவர்களுக்கெதிராக இயங்குவதால்-இதில் நீங்கள் எந்த வர்க்கஞ் சார்ந்தவராக இருப்பீர்களென அவரூகித்து ,உங்களை ஆளும் வர்க்க அனுதாபியாகக் கற்பனை செய்கிறார்.மற்றும்படி நமக்கே(இந்திய வழித்தோன்றல்களுக்கு) உரிய சாதிப் படிமத்தில் அவரது கருத்து நிலைபெறவில்லை.அவர் மனிதநேயம் நிறைந்த பல கேள்விகளை முன்வைப்தால் அவரை ஓரளவு இவ்வகையில் புரிந்துகொள்ளுவோமாக!
அன்புடன்
ஸ்ரீரங்கன்
சிறீரங்கன் அவர்களே நானும் கவனித்துக் கொண்டு வருகிறேன். அன்னனமிஸ்களை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்கிறீர்கள்? உதாரணத்துக்கு குமுழி, தேவா, சுதன் இப்போது இந்த அனானிமஸ்?
"இந்த மக்களில் ஒரு சிறுபகுதி உடமையாளராகவும் பெரும்பாலார் உழைப்பாளர்களாகவும் ,,வர்க்கங்கள்ஈஈ உருப்பெற்று அரசமைப்புகள் தோற்றமாகி முதலாளிகளுக்கான ஆட்சி அதிகாரமுருவாகிப் பெரும் பகுதியான உழைப்பவர்களுக்கெதிராக இயங்குவதால்-இதில் நீங்கள் எந்த வர்க்கஞ் சார்ந்தவராக இருப்பீர்களென அவரூகித்து ,உங்களை ஆளும் வர்க்க அனுதாபியாகக் கற்பனை செய்கிறார்.மற்றும்படி நமக்கே(இந்திய வழித்தோன்றல்களுக்கு) உரிய சாதிப் படிமத்தில் அவரது கருத்து நிலைபெறவில்லை."
தலை சுற்றுகிறது ஐயா. இன்னுமா பூர்ஷ்வா என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்? வாய்ப்பு கிடைத்தால் எல்லோருமே முதலாளிகள் ஆகத்தானே நினைக்கின்றனர்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அது சுலபம் டோண்டு ஐயா.நான் சுமார் இருபது வருடங்களாக அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் தமிழர்களோடு,இலக்கியம்-சமூகம் சார்ந்து சந்திப்புகள் நடக்கும் போது பங்குபற்றியவன்,கூடவே பல சஞ்சிகைகளில் எழுதுவதால் அச்சஞ்சிகைகளின் படைப்பாளிகளை-வாசகர்களைப் பெரும்பாலும் அறிந்துள்ளேன்.மேலும் நீங்கள் கூறுவது உண்மையே.வாய்புக்கிடைத்தால் எல்லோரும் முதலாளிகளகவே விரும்புவார்கள்.அதுதாம் இந்த அமைப்பின் கருத்தியற் பலம்.ஏனெனில் இந்த அமைப்புக்குள் வாழும் அனைவரையும் இந்தக் கருத்தியற்றளம் கல்வி,நீதி-நிர்வாகம்,தொடர்பாடல் ஊடகங்கள்,கலை-கலாச்சாரம்,மொழி இப்படி எல்லா நிறுவனங்கள் ஊடாகவும் பற்றிக்கொள்வதால்- அந்தத் தளத்தை மீறி உருவாகுவது மிக மிகக் கடினம்.என்றபோதும் நம்மிடம் இப்புரிதலிருக்கும்போது இவற்றை மறுத்து எல்லோரையும் திருப்திப்படுத்தும் பொருளாதாரவுறவை நிறுவ முயற்சிக்கலாம்.
அன்புடன்
ஸ்ரீரங்கன்
டோண்டு ராகவன் அவர்களே
கொலைகள் எந்த உருவத்தில்வந்தாலும் கண்டிக்கும் நிலைவ இருக்க வேண்டும் இவ்வாறு செய்கின்றீர்களா?
jhq;fs; Fwpg;gpl;l tpkHrdk; vd;gJ Gupe;J nnfhs;sf; $baNj. mNJNtis epj;jk; nfhiyfs; eilngw;Wf; nfhz;bUf;Fk; ehl;by; ciof;Fk; tHf;fj;jpw;F vjpuhd xU egupd; nfhiy vd;gJ kw;iwa capHfis tpl NkyhdJ my;y. mNJNghy rpw mtHfs; $WtJ Nghy mbepiy kf;fspd; Njitf;Fk; vk;ikg; NGhd;wtHfsdpd; Njitf;Fk; ,ilNa epiwaNt tpj;jpahrk; ,Uf;fpd;wJ. ,jdhy; mtHfspdl ,uj;jk; epj;jk; JNuhfpfs; vd;W njUf;fspy; gpzq;fshf ghHf;fpd;wNghJ mtHfsisg; gw;wp mjpfk; mf;fiw Nfhs;tjpy; vd;d jtW ,Uf;fpd;wJ.
ciof;FK; kf;fspd; gpd;Gyj;jpy; ,Ue;J jtwhd murpay; topfhl;ypdhy; cUthf;fg;gLgtHfs;> mtHfs; jtwhd ghijapy; nry;fpd;wdH ,e;j eppiyapy; Gypfs; mtHfisNAh my;yJ kw;wtHfs; GypfisNAh nfhy;tij Vw;Wf; nfhs;s Kbatp;yi.
ed;wp Dont DO Ragavan
>>டோண்டு ராகவன் அவர்களே
கொலைகள் எந்த உருவத்தில்வந்தாலும் கண்டிக்கும் நிலைவ இருக்க வேண்டும் இவ்வாறு செய்கின்றீர்களா?<<
தாங்கள் குறிப்பிட்ட விமர்சனம் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. அNதுவேளை நித்தம் கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாட்டில் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான ஒரு நபரின் கொலை என்பது மற்றைய உயிர்களை விட மேலானது அல்ல. அNதுபோல சிறி அவர்கள் கூறுவது போல அடிநிலை மக்களின் தேவைக்கும் எம்மைப் Nபுhன்றவர்களனின் தேவைக்கும் இடையே நிறையவே வித்தியாசம் இருக்கின்றது. இதனால் அவர்களின் இரத்தம் நித்தம் துரோகிகள் என்று தெருக்களில் பிணங்களாக பார்க்கின்றபோது, அவர்களளைப் பற்றி அதிகம் அக்கறை கோள்வதில் என்ன தவறு இருக்கின்றது.
உழைக்கும் மக்களின் பின்புலத்தில் இருந்து தவறான அரசியல் வழிகாட்லினால் உருவாக்கப்படுபவர்கள், அவர்கள் தவறான பாதையில் செல்கின்றனர். இந்த நிpலையில் புலிகள் அவர்களையோ அல்லது மற்றவர்கள் புலிகளையோ கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவி;ல்லை.
நன்றி Dont DO Ragavan
Post a Comment