மொழியும்,புதியசொற்களின் தேவையும்.
தமிழ் ஒரு மொழி. அதன் வளர்ச்சி-அழிவு யாவும் அதன் பயன்பாட்டை நுகரும் மக்களின் பொருளாதாரப் பலத்துடன் சம்பந்தப்பட்டது.பொருள் வளர்ச்சியுடன்தாம் மொழிதோன்றி வளர்கிறதேயொழிய வெறும் மனவிருப்புகளின் படியல்ல.
உற்பத்திச் சக்திகளை அன்நிய மொழிகள்தாம் கட்டுப்படுத்தும்போது உற்பத்தியுறுவுகளின் பயன்பாட்டு மொழியான தமிழ் எவ்வளவு காலத்துக்குத் தாக்குப்பிடிக்கும்.எந்த மொழியும் தனித்தூய்மையாக வளரமுடியாது.வளர்ச்சியடைந்த ஐரோப்பிய மொழிகள் யாவும் வேற்று மொழிச்சொற்களை உள்வாங்கி வளர்ந்துள்ளன.மருத்துவம் பயிலும் மாணவருக்குப் புரியும் இலத்தீனது சொற்கள் எவ்வளவு ஜேர்மன்,ஆங்கிலம்,பிரஞ்சிலும் கொட்டிக்கிடக்கிறதென.
தமிழின் கட்டுமரத்தை ஐரோப்பிய மொழிகள் அப்படியே'கற்றுமறாம்'என்றே அழைக்கின்றார்கள்.
மொழிமாற்றும்-ஒலிமாற்றும் ஒருமொழிக்கு அவசியமானது.இதைமறுக்கும் மொழி மெல்லச் சாகும்.
பஸ்,கார்,இரயில்,சயிக்கிள்,பேனை,கொப்பி,பென்சில்,ரேசர்,கட்டர்,
கொம்பாஸ்,ரயர்,ரேடியோ,டெலிபோன் இவையாவும் ஒலிமாற்றாகும்.இவை தமிழ் கிடையாது, எனவே தமிழில்தான் மாற்றி எழுதுவோமெனும் அறிவு மூடத்தனமானது.இவையும் ஒலிமாற்றுத் தமிழ்.அன்நிய வார்த்தைகள் பிரிவுக்குள் அடங்கும்.நம்மிடம்தாம் அப்படியொரு அகராதியே கிடையாதே.
வார்த்தைகளுள் தூய்மை காண்பது இருக்கட்டும்,முதலில் தமிழுக்கொரு சிறந்த முறையிலான-எல்லோரும் கற்கும் வகையிலான இலக்கண நூலை உருவாக்குங்கள்.அப்போது தமிழின் விருத்திக்கு வித்திட்டதாக இருக்கும்.தொல்காப்பியத்தை வைத்துச் சவாரிசெய்வது விருத்தியுறும் மொழிக்கு உதவாது.
ஆங்கிலம்,ஜேர்மன்,பிரஞ்சு மொழிகளில் இருக்கும் இலக்கண நூல்கள்போன்ற அறிவார்ந்த இலக்கணக் கட்டுக் கோப்பை உருவாக்கி முன்வைக்கும் தேவையே மிக,மிக அவசியம் தமிழுக்கு.மீளவும் சொல்வோம்: ஒரு மொழியின் வாழ்வு சொல்லாக்கத்துடன்- ஒலிமாற்றுடன்தாம் வளர்வுறும்.தனித்த கெட்டிப்பட்ட சொல்லுருவாக்கம் -உதாரணம்:துவிச்சக்கரவண்டி,பேரூந்து,புகையிரதம் போன்று பின் தங்கிவிடும்.
மக்களால் பரவலாகப் பேசப்படும் தொழில்நுட்பப் பெயர்களான 'ஒலிமாற்றுச் சொற்களைக்' களைவது மொழியை அழிப்பதற்குச் சமன்.மொழியின் உயிர் வாழ்வானது ஒழுங்கமைந்த அரசினதும்,பொருளாதாரப் பலத்தினதும் காத்திரமான உறுதியினாலேதாம் தீர்மானிக்கப்படுகிறது.இதைவிட்டு தன்னார்வச் செயற்திட்டம் ஒருபோதும் மொழியினது இருப்பை உறுதி செய்யமுடியாது.
ஸ்ரீரங்கன்
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
4 comments:
//மக்களால் பரவலாகப் பேசப்படும் தொழில்நுட்பப் பெயர்களான 'ஒலிமாற்றுச் சொற்களைக்' களைவது மொழியை அழிப்பதற்குச் சமன்.//
100% உண்மை. பலமொழிச் சொற்களையும் தனதாக்கிக் கொண்டுள்ளதாலேயே ஆங்கிலம் இன்று அதிகப்படியான ஒரு வீச்சைப் பெற்று எல்லா மொழிக்காரர்களுக்கும் ஒரு இணைப்புப் பாலமாகத் திகழ்கிறது. மற்ற முன்னணி ஐரோப்பிய மொழிகளிலும் கூட நுட்பச் சொற்களுக்கு மாற்றுகள் தேடுவதில்லை என்றே தோன்றுகிறது. கலைச்சொற்களை அப்படியே எடுத்துக் கொள்கிறார்கள் என்றே நினைக்கிறேன். தூய்மைவாதிகள் எங்கும்தான் இருக்கிறார்கள். நடைமுறைக்குதவாத அவர்களது நிலைபாட்டைப் பார்த்து சிரிப்புதான் வருகிறது.
இலக்கணம் குறித்த உங்கள் பார்வையும் வலுவான ஒன்றே.
வணக்கம்.
தங்கள் வருகைக்கும்,கருத்துகளுக்கும் நன்றி.
இந்த மொழிகளின் இன்றைய வலுவைப் புரிந்துகொள்ள நம்மில் பலர் மறுக்கின்றார்கள்.மொழியென்பது 'பெறுதலும்-வழங்குதலும்' எனும் பரஸ்பர உறவோடுதாம் இதுகாலவரை வளர்ந்து வருகிறது.இதை மறுப்பவர்கள் மொழியின் பயன்பாட்டையும்,தோற்றுவாயையும் புரியாதவர்களே.புதிய கலைச் சொற்களை உருவாக்குவது புதிய அறிமுகமான பொருட்களுக்குப் பொருந்தும்,அதுவே பன்னெடுங்காலமாகப் பேசி,ஒலிமாறித் தமிழாக மயக்கமுறும் சொற்களைக் களைவது சாலச் சிறந்தது அல்ல.
சிறீரங்கன். தமிழ் பற்று தமிழ் வளர்க்க வேண்டும் என்று ஆக்ரோஷம் கொண்டு இங்கு கனடாவில் முழங்குபவர்கள் - நான் இப்படிச் சொல்வது தவறாக இருக்கலாம். ஒன்றில் வேற்று மொழி முக்கியமாக ஆங்கில அறிவு அற்றவர்கள். அறிந்து கொள்ள வேண்டும் என்ற குறைந்த பட்ச முயற்சி கூட எடுக்காதவர்கள். அடுத்து உலக இலக்கியம் பற்றிய அக்கறை அறியாமை உள்ளவர்கள். தமிழ் மட்டும்தான் சிறந்த மொழி அது ஒன்றுதான் உலகத்திற்கு வேண்டும் போல் அவர்கள் முழங்குவதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கின்றது. இவர்களின் இந்தக் குரலிற்கு எந்த இளையவர்கள் செவிசாய்க்கப் போகின்றார்கள் என்று இவர்கள் நம்புகின்றார்களோ தெரியவில்லை. நான்கு ஐந்து வயதுக் குழந்தைகளுக்கு திருக்குறளும் திருவள்ளுவர் பற்றியும் மனப்பாடம் செய்யச் சொல்லி மேடைகளில் ஏற்றுகின்றார்கள். பெற்றோர்கள் தமது திருப்பதிக்காவும் தன் பிள்ளைகள் இதையெல்லாம் செய்கின்றார்கள் என்று மற்றவர்களுக்குப் பெருமை அடித்துக் கொள்ளவுமே இதமைச் செய்கின்றார்கள். உங்கள் குழந்தைகள் தமிழைக் கதைத்து எழுதப் பழகினால் போதாதா? எதற்காக சங்க இலக்கியங்கள் அவர்களுக்கு. என்னைப் பொறுத்தவரை இது ஒருவகை Child abuse ஆகவே படுகின்றது. இந்த வகையில்தான் பலர் தமிழை வளர்க்க முற்படுகின்றார்கள்.
கருப்பி நீங்கள் கூறுவது யதார்த்தமான-வெளிப்படையான பேச்சு.ஏற்றுக்கொள்கிறேன்.இங்கும் இதே கதைதாம்.ஆனால் நாமென்ன தமிழுக்கு எதிரிகளா? இல்லை.நமக்கும் நமது மொழி உலகமொழிகளோடு போட்டிபோடுவதில் அலாதி விருப்பம்.ஆனால் மொழியானது முழுக்க முழுக்க அன்நியச் சொல்லின்றி உருவாவதில்லை.மனித உயிரியே பல்லினக் கலப்பிலுருவாகி வந்துள்ளபோது,அந்த உயிரியின் பூமிமீதான இடைச்செயலால் உருவாகிய மொழிமட்டும் தூய்மையான தனித்துவத்துடன் உருவாகிவிட முடியுமா? தமிழுக்கு 'ழகரம் 'சிறப்பென்பர்.அது தமிழில் மட்டும்தாமென்றும் கூறுவர்.ஆனால் இந்த 'ழகரம்'எத்தியோப்பிய மொழியான 'அம்காரா' மொழியில் இருக்கிறது. மொழியினது'ஆகா'தத்துவார்த்தம் புரிதலின் சாத்தியப்பாட்டை பிற மொழிகளின் ஒப்பீட்டோடு பாhக்கும்படி வற்புறுத்துகிறது.இப்படிப் பார்க்கும்போதுதாம் மொழியின் தோற்றம்,வளர்வு-தேய்வு பற்றியும்,கலப்பு-தள்ளல் பற்றியும் அறியமுடியும்.M.D.Berlitz -Linguist,என்ற ஜேர்மனிய மொழியியலாளர் கூறுகிறார்"dass ein mensch, dessen muttersprache Deutsch,Englisch oder eine der romanischen Sprachen ist, bereits Tausende Woerter aus fremden Sprachen kennt."- Die wunderbare Welt der Sprachen seite:'7ஒரு மனிதர், டொச் அன்றி ஆங்கிலம் அல்லவொரு உரோமானிய மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவராக இருப்பாரானால், அவருக்கு ஆயிரக்கணக்கான அன்நிய மொழி வார்த்தைகள் தெரிந்திருக்கும்.
இது எதைக் குறித்துரைக்கிறதென்றால் அனைத்து மொழிகளும்(உலகம் பூராக நிலவும்) கொடுத்தும்-பெற்றும் சொற்களைக் கொண்டிருப்பதாகவே.
எனவேதாம் ஐரோப்பிய மொழிகள்'அன்நியச் சொற்கள் அகராதி' என்றும் தமது மொழிகளுக்குள் வைத்திருக்கின்றனர். இவர்கள் ஒருபோதும் இத்தகையச் சொற்களைக் களைய விரும்பவில்லை. இதனாற்றாம் இந்த மொழிகள் வீரியமிக்க விஞ்ஞானத்தோடு சேர்ந்து வளர்கின்றன.நாமோ இவற்றைத் தவறென்று கூறுகிறோம்.எமது காலச் சூழல் மொழிவழி போராட்டத்தோடு தொடர்புடையதால் இப்படியுருவாகியுள்ளது.தாய் மொழியை விருத்தியுற வைப்பது நல்ல செயல்.ஆனால் ஒலிமாற்றுத் தமிழ்ச் சொற்களாவுள்ள சொற்களைக் களைவது ஏற்புடையதல்ல.
Post a Comment