வேண்டுகோள்!,வேண்டுகோள்!!
மொழிவழி வாழ்வையும்-மக்களின் சமூக சீவியத்தையும் துண்டு துண்டாகப் பிரிக்க முடியாது! ஒருவர் தனது வர்க்கஞ்சார்ந்து-சுயநலன் சார்ந்து எதைவேண்டுமானாலும் கூறுவார்,அது அவரது மட்டரமான சுயநலன்.இப்போது எனது பதில்களையும்-குறிப்புகளையும் தமிழ்பேசும் மக்களுக்கெதிராக நிறுத்த டோண்டு ஐயா முனைந்தால்-அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
நான் மொழிவழி வாழ்வில் தமிழ் மீதும்,தமிழ்பேசும் மக்களின் உயிர்வாழ்வுமீதும் அளவற்ற பற்றுடையவன்.தழிழால் சிந்திப்பவன்.தமிழினத்துக்கெதிராக எது நிற்பினும் அதை எதிர்ப்பவன்.எனது பதிவுகள் சமவுடமைக் கண்ணேட்டமே தவிர தமிழுக்கோ அன்றி எனது இனத்துக்கோ எதிரானதல்ல!தமிழரின் வாழ்வைக் கருவறுக்கும் எந்த அரசியலுக்கும் சார்பாக எனது எழுத்துப்போவதாக இருப்பின்-எனது பதிவையே அழித்துவிடுவேன்.
தங்கமணியின் பின்னூட்டத்தில் யாராவது வந்து'ஸ்ரீரங்கன்'உமது கருத்துக்கள் நம்மைப் பலவீனப்படுத்தும் அரசியலுக்கு உதவுகிறது'என்றுகூறும் பட்சத்தில்-இன்றிலிருந்து03.05.2005 வரும்08.05.2005 க்குள் எனது பதிவுகள் அழிக்கப்படும்.எவரும் கூறாதபோது தொடரப்படும்!என் எழுத்துக்களை எதிரி பயன் படுத்தும் நிலையானால்,அதை அழிப்பதில் மகிழ்வுடன் இருக்கிறேன்.
ப.வி.ஸ்ரீரங்கன்
03.05.2005
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின்...
9 comments:
ஸ்ரீரங்கன்,
தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்; உணர்ச்சிவசப்படாதீர்கள். நீங்கள் எழுதுவதைப் பாவித்து எந்த எதிரியும் தமிழர்க்கு எதையும் புடுங்கப்போவதில்லை. உங்களுக்கு எதிரிகள் முளைத்தால், அது வேறு கதை.
பதியவேண்டியதைப் பதியுங்கள்; ஒத்துக்கொள்கிறோமோ ஒத்துக்கொள்கிறார்களோ இல்லையோ, நீங்கள் பதிவது உங்கள் உரிமை (1990 முன்னாலே இலங்கையை விட்டுப்போனவர்கள் பதியக்கூடாதென்று நான் சட்டம் கொண்டு வந்தாலுங்கூட ;-))
ஆக, சிக்கல் என்னவென்றால், சில முகமிலிகள் (தோழர் ரயாகரனைச் சொல்லவில்லை; அவருடைய நிலைப்பாடு, ஒத்துக்கொள்கிறோமோ இல்லையோ நிதானமானது; மனித உரிமைகள் என்ற குரலிலிருந்தும் கட்டித்த மார்க்ஸியத்திலிருந்தும் வருவது) ஈழத்தமிழர் நலனைக் குலைப்பதும் தமது மேலாதிக்கவாதப்பெருவிரலை அழுத்தவுமே இப்படியாகச் செய்வார்கள் என்ற பயம் பொதுவாக ஈழத்தமிழர்களிலே அனுதாபமுள்ளவர்களுக்கு இருக்கின்றது.
இரமணி,வணக்கம்!
ஏற்றுக்கொள்கிறேன்.நீண்டநாட்ளாகப் பார்த்துவருகிறேன் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு நேரெதிரான கருத்துக்களாக எனது கருத்தை முன் நிறுத்துவதில் டோண்டு முனைகிறார்.புலிகளை விமர்சிப்பதுவேறு,தமிழ் மக்களின் உரிமையென்பதுவேறு.இவையிரண்டையும் என் கருத்துக்களால் குதறும்போது-எனக்கு நானே எதிரியாகும் நிலை.இன்றைய நமது இருள்சூழ் நிலைமைக்குள் நான்வேறு கருத்திட்டு அனைத்து எதிராளிகளையும் பலப்படுத்துகிறேனோவென மனம் வருந்தும் நிலை.தங்கள் எதிர்வினை சிலவற்றைத் தெளிவுபடுத்துகிறது.ஏற்றுக்கொள்கிறேன்.
அன்புடன்
ஸ்ரீரங்கன்
டோண்டு அவர்களின் கருத்துகளைப் பற்றி நான் சொல்வதிலும் நீங்கள் அவரின் பதிவினைப் பார்த்தால், அதற்கான மற்றோரின் எதிர்வினையைப் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள். அதனைப் பெரிதுபடுத்தத்தேவையில்லை என்பது என் அபிப்பிராயம்.
இரமணி நன்றி.
பெயரிலியை வழிமொழிகிற பேர்வழி நான்.
உங்களுக்கு முதன்முதலில் ஜேர்மனில் வாழ்த்துச் சொன்னபோதே இந்த அரசியல் தொடங்கி வி;ட்டது. புலிகளை எதிர்ப்பவர் என்ற முத்திரையோடு தான் உங்களுக்கான அந்த வரவேற்புகள். பிறகு இந்தியா பற்றியும் சோ பற்றியும் நீங்கள் கொடுத்த சில சாட்டையடிகள் இவர்களுக்கு அதிர்ச்சி. இப்போது இப்படியொரு வலைபோடுகிறார்கள். ஆனால் அந்த அரசியல் வெற்றிபெற முடியாது. குறிப்பாக அவர்களைப்பற்றி நீங்கள் அறிந்திருக்கும்வரை.
மணிக்கும்,மஷ்டுவுக்கும் நன்றி.மஷ்டு உங்கள் கருத்துக்கள் முற்றிலும் உங்களுடையது.அதை சொல்வதில் உங்கள் உண்மையான சுயத்தைச் சொல்கிறீர்கள்.நான் எனது சுயத்தைச் சொல்கிறேன்.சரியானதாக நான் உணர்வதை ஏற்பதும்,தவறானவற்றை எதிர்ப்பதும் எனது சுயம்.தமிழ் மக்கள் சகல இனங்களைப்போலவும் கௌரவமாகவும்,சுதந்திரமாகவும்,ஜனநாய விழுமியங்களுடனும்-நேரான பொருளாதாரப் பலத்துடனும் வாழவேண்டுமெனக் கனவு காண்பவன்.எனவே இந்த வகையில் எழுதுவது தவிர்க்கமுடியாது.இதைத் தத்தமது அரசியலுக்கேற்றவாறு மற்றவர்கள் பாவித்தல் வேதனையைக் கூட்டிவருகிறது.
மணி தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
அன்புடன்
ஸ்ரீரங்கன்
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் மஷ்டு.தங்கள் மேலான ஆர்வத்துக்கு நன்றி!
டோண்டுவின் அரசியலை புரிந்து கொள்ளவே நாமும் சிலசமயங்களில் குழப்பம் தரும் வகையில் ஜேர்மன் மொழியில் பின்னூட்டம் இட வேண்டியிருந்தது.
அவரது அரசியலை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்
Post a Comment