Tuesday, April 26, 2005

மறைக்கப்பட்ட

மறைக்கப்பட்ட
மறுக்கப்பட்ட வரலாறு
மௌனிக்காது...


இனியும் அழவேண்டாம் சோதரி(கள்) நற்கீரன்-வெங்கட் தந்த செய்திகளின் தூண்டுதலால்...


இரஜினி திரணகம அவர்கள் உண்மையிலேயே மிகச் சிறந்த கல்வியாளரும்,மனிதநேசிப்பாளருமாவார்.இத்தகைய மனிதர்கள் பலர் இருளின்தூதுவர்களால் கொல்லப்பட்டார்கள்.இலங்கை மக்களின் எதிரிகள் யார் யாரென அடையாளங் காட்டிய அற்புதச்சிந்தனையாளர். இவரது சமூகஞ்சார்ந்த செயற்பாடுகளை ஒற்றைவரிகளில் விளக்கிடமுடியாது.தமது இருப்புக்கு ஆபத்தென்றறிந்த இருளின்தூதுவர்கள் இவரையும்போட்டுத்தள்ளித் தமது வர்க்க அரசியலைக் காத்துக்கொண்டார்கள்.

ஈழத்தமிழ்பேசும் மக்கள் மத்தியிலுள்ள அநேகமான புத்திஜீவிகள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.சராசரியாக 80 வீதமான புத்திஜீவிகள் படுகொலை செய்யப்பட்டபின் இப்போது 'ஊரோடு ஒத்தோடும்; கூட்டம'; மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இரஜினியை வெளியுலகுக்குக் காட்டும் படம் நிச்சியம் ஜனநாயகத்துக்கான புதியபோரை ஈழத்தில் புதியவடிவில் தோற்றுவிக்கும்.இதை எந்த ஆயுதங்களாலும் தடுக்கமுடியாது.

இரஜினியைக் கொன்றவன் இப்போது செத்து விட்டான்.அவனோடு கூடப்போனவன்(இரஜினியைக் கொல்வதற்கு) இப்போதும் நோர்வேயிலிருக்கிறான்.இரஜினியைக் கொன்றது யாரென்ற கேள்வி இன்னும் பதிலற்ற கேள்வியாக இருப்பினும்,அது யாரென்பது பலருக்கும் தெரியாது.ஆனால் சிலருக்குத் தெரியும்.ஈழவரலாற்றை எழுதும் காலமொன்று கைக்கு வரும்போது நாமிதை மிகத்தெளிவான வடிவில் தொகுப்போம்,அதுவரையும் உயிரோடிருந்தால்.


பிரான்சில் இப்படியொரு அரிய வரலாற்றுத் தொகுப்பை வெளியிட முயன்று தனது உயிரையே இழந்தார் சபாலிங்கம். மார்டின் லூதர் கிங் கூறினார்:'கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும்ம்பார்க்க, அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மௌனமாய்ச் சகித்துக்கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருத்தமுறவேண்டும்.'


உண்மைதாம்!


ஈழத்தில் நிலவுகின்ற சமூக எண்ணவோட்டமானது மிகக்கேவலமான சமுதாய உளவியற்றளத்தை உருவாக்கியுள்ளது.இது ஒரு மனிதரைக்கொன்றுவிட்டு,மோசமான காரணங்களைக்காட்டி நியாயப்படுத்தும் கொடுமையான அராஜகத்தைக் கொண்டுள்ள சமூக இயக்கப்போக்காகவேயுள்ளது.இந்தப்போக்கை எந்த நியாயப்படுத்தல்களாலும் சமனஞ் செய்யமுடியாது.இத்தகைய சூழலில்தாம் இரஜினி உயிரைவிட்டாள்,தான் நேசித்த மக்களுக்காக!


அந்த மக்களோ அவளை மறந்துபோகும்படி பாரிய குறுந்தேசியவெறிக்குள் முடக்கப்பட இத்தகைய பெரும் தியாகச்சுடர்கள் காற்றடமற்றுக் காணமாற்போன நிலையில், இந்தப் படம் மிக முக்கியமானவொரு சமூகக்கடமையை நிறைவேற்றுமென நாம் எண்ணுகிறோம்.இது மக்கள் சார்ந்த மனித விழுமியங்களை மீளவும் மீட்டுவிடத்துடிக்கும் மனிதநேசிப்பாளர்களால் பெரிதும் மதிக்கப்படும்!


இறுதியாக, பேராசிரியர் என்.சண்முகரெட்னத்தின்(சமுத்திரன்) வார்த்தையிற் சொன்னால்:'ஈழத்தமிழர் போராட்டத்தின் முழுமையான வரலாறு என்றோ எழுதப்படத்தான் போகிறது.அங்கு தமிழ்ப்போராளிகளின் தியாகங்களைப்பற்றிமட்டுமல்ல இயக்கங்களுக்குள்ளே இடம்பெற்ற கொடூரங்கள்-இயக்கங்களுக்கிடையிற் நிகழ்ந்த அழிவுப்போராட்டங்கள் பற்றியும் அத்தியாயங்கள் எழுதப்படும்.இந்த வரலாற்றில் இத்தகைய(இரஜினி,சபாலிங்கம்...)தனிமனிதர்களுக்கும் ஒரு இடம் இருக்கத்தான் போகிறது.'-(தோற்றுத்தான் போவோமா? பக்கம்:10)


விடுதலையின் பெயரால் நசுக்கப்பட்ட ஜனநாயகத்திற்காகவும்,மண்ணின் பெயரால் மறுக்கப்பட்ட மனிதவிழுமியங்களுக்காவும்-இயக்க நலன்களுக்காக மறுக்கப்பட்ட மாற்றுச்சிந்தனைகளுக்காகவும்-மனித சுதந்திரத்துக்காகவும் நாம் கரங்களைக்கோர்ப்போம்.


'மனிதத்தை
துப்பாக்கி முனையில்
நடத்திச் சென்று
புதைகுழி விளிம்பில் வைத்துச் சுட்டுப்
புறங்காலால்
மண்ணைத் தள்ளி மூடிவிட்டு வந்து
தெருவோரச் சுவரில்
குருதியுறைந்து
நியாயம் சொல்கிறார்கள்
நியாயம்!' -கவிஞர் சேரன்.

ப.வி.ஸ்ரீரங்கன்

28 comments:

Anonymous said...

வாங்க அண்ணாச்சி வாங்க.

தமிழ் நாட்டில் சொல்வார்கள் சைக்கிள்
காப்பில் ஆட்டோ ஓட்டுறான் என,
அண்ணாச்சி நீங்க ஆட்டோ இல்ல
லாரியையே ஓட்டிறீங்க.
ஓட்டுங்க ஓட்டுங்க லாரி கவிழ மட்டும்
ஓட்டுங்க அண்ணாச்சி.
ஓட்டுற லாரிய புதூசு புதுசா ஓட்டுன்களேன் அண்ணாச்சி.அது ஏன்
ஒரே லாரிய திருப்பி திருப்பி
ஓட்டிறீங்க அண்ணாச்சி.போரடிக்குது
புதுசு புதுசா ஓட்டுங்களேன்

வன்னியன் said...

கரிகாலன்!
இப்ப ஏன் உந்தப் பின்னூட்டம்?

-/பெயரிலி. said...

/'மனிதத்தை
துப்பாக்கி முனையில்
நடத்திச் சென்று
புதைகுழி விளிம்பில் வைத்துச் சுட்டுப்
புறங்காலால்
மண்ணைத் தள்ளி மூடிவிட்டு வந்து
தெருவோரச் சுவரில்
குருதியுறைந்து
நியாயம் சொல்கிறார்கள்
நியாயம்!' -கவிஞர் சேரன்./

....நியாயம் சொல்கிறார்கள்
நியாயம் கனடாவிலிருந்தும் ஜேர்மனியிலிருந்தும் ;-)

மனித உரிமைப்போராளிகள் என்று காட்டிக்கொள்வது மிகச் சுலபம் - குறிப்பாக, கனடாவிலும் ஜேர்மனியிலும் எந்தச்சிக்கலுமில்லாமற் குந்திக்கொண்டு சொல்கையிலே. அமெரிக்காவிலே குந்திக்கொண்டு புஷ்ஷையும் அமெரிக்க அரசினையும் குறை சொல்வதிலும்விட, உவூல்பெற்றாலிலும் யோர்க் பல்கலைக்கழகத்திலிருந்தும் மனித உரிமைகளைப் பற்றிப் பேசுவது மிகவும் இலகு.

இனி ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும்; 1983 இலோ அதற்கு முன்னாலோ குறைந்த பட்சம் 1990 இற்கு முன்னாலோ, இலங்கையை விட்டு ஓடிய எந்தக்குஞ்சு குருமானும் (குறிப்பாக, அகதி அந்தஸ்துகோரி, பிரஜாவுரிமை பெற்ற குருமான்களும் குருமாடத்திகளும்) இலங்கைத்தமிழருக்கான மனித உரிமைகளைப் பேசக்கூடாதென்று.

ரஜனி திரணகம தொடக்கம் சபாலிங்கம் வரையான கொலைகளைத் திட்டவட்டமாக எதிர்க்கவேண்டும் - குறிப்பாக, அதைச் செய்தவர்களைத் தெரிந்திருக்கும் ஸ்ரீரங்கன் போன்றவர்கள் புலம்பெயர்ந்திருக்கும் அந்தக்கொலையாளிக்கு உடைந்தையாக இருந்தவனை, அவர் வாழும் நாட்டு நீதிமன்றத்துக்கு ஏற்றவேண்டும். அதன் காரணமாக அவர் வரலாற்றிலே மனித உரிமைப்போராளி என்று பேசப்படுவார்

கறுப்பி படத்தினைப் பார்த்துவிட்டு வந்து, ராஜினி- இந்திய அமேதிப்படை ஆகியவர்களுக்கிடையேயான தொடர்பு குறித்தும் ராஜினியின் முறிந்த பனைமரம் எழுதிய ஸ்ரீதரன், ஹூல் சகோதரர்கள் ஆகியோர் இன்று எவ்வாறு, எதற்காக இயங்குகின்றார்கள் என்று படத்திலே சொல்லப்பட்டிருக்கின்றதா என்று சொல்வதாகச் சொன்னார். பார்க்கின்றவர்களிலே வசதிப்பட்ட வெங்கட் போன்ற மற்றையவர்களும் சொன்னால், என்னைப் போன்றோருக்குப் பயனாக இருக்கும்.

-/பெயரிலி. said...

/இது மக்கள் சார்ந்த மனித விழுமியங்களை மீளவும் மீட்டுவிடத்துடிக்கும் மனிதநேசிப்பாளர்களால்/

அடடா அடடா!! யாரைச் சொல்கிறீர்கள்? உங்களையா இல்லை ஹிந்து ராமையா கறுப்பியையா அல்லது யாரை? ;-)

ஸ்ரீரங்கன் உங்களிலோ அல்லது உங்களைப்போல விடுதலைப்புலிகளை எதிர்ப்பதாலேயே மனிதநேயர்களாகத் தோற்றுவாராலோ ஏதும் விடுதலைப்புலிகள் குறித்த உங்கள் கருத்தினைக் கொண்டு எனக்கேதும் ஆத்திரமில்லை. விடுதலைப்புலிகள் கொலைகளைச் செய்யாதவர்கள் என்று நான் வாதாடவில்லை. ஆனால், உங்களது மாற்றுத்தீர்வுதான் என்ன? பேசாமல், இந்தியாவிடம் சரணடைந்துவிடலாமா? தாய்நாடாச்சுதே! ரவா தோஸா முதல் ரஜனிகாந்த்வரை நம் தமிழருக்குத் தந்த நாடாச்சுதே, பேசாமல், தாய்நாட்டின் மார்க்கீசகத்தோழருடன் சேர்ந்து தொழிலாளருக்கும் விவசாயிகளுக்குமாகப் போராடி, அமெரிக்காவைத் திட்டிவிடுவோமா?

அல்லது, யோர்க் கண்ட சேரமான் உருத்திரமூர்த்திபோல,
துப்பாக்கி முன்னாலே, துப்பட்டும் இரத்தத்தை எப்படி மறப்பேன் நான்? கப்பலையும் கச்சானையும் என்று கவிதை எழுதிவிட்டு, காலச்சுவடுக்கும் கனடாவுக்கும் பெந்தோட்டை பீச்சுக்கும் காற்றிலேறி விண்ணையும் சாடுவோமா, காதற்பெண்களின் கண்கடைவீச்சிலே?

என்னதான் முடிவு வைத்திருக்கின்றீர்கள்? பேசாமல் ரொஸ்கிஸ்டாக மாறிப் பேசிக்கொண்டேயிருப்போமா (அங்கோ இங்கோ கார்லோ ப்ரைடா மாதிரி பெரிய அபிப்பிராயம் கொண்டு யாராவது தொட்டுக்கொள்ள ஊறுகாயாக அகப்படும் நேரம் தவிர்த்து)

ரஜனி திரணகம தொடக்கம் சபாலிங்கம்வரையானவர்களுக்கு நிகழ்ந்ததினை எவருமே நியாயப்படுத்தமுடியாது. செய்தவர்கள் விடுதலைப்புலிகள்தானென்று உறுதியாக நீங்கள் சொன்னால், அதற்குரிய எதிர்ப்பினைக் காட்டவேண்டிய நிலையும் இருக்கின்றது. ஆனால், பக்கம் பக்கமாகத் திட்டித் தள்ளுவதிலும் வரட்டு மார்க்ஸியத்தை வெட்டிவிழுத்துவதிலும் ஏது பிரயோசனம்? நீங்கள் பேசும் மார்க்ஸியத்தினை முன்வைத்த உங்கள் குறைந்த வேலைத்திட்டந்தான் என்ன? அதையாவது சொல்லுங்களேன்?

இது குறித்து நான் புலி ஆதரவாளன் என்ற அபிப்பிராயம் ஏற்படுமானால், நான் சொல்வதற்கு ஏதுமில்லை. அதை மாற்ற முயல்வதிலும் அர்த்தமில்லை என்பதே இணையம் காட்டிய அனுபவம். அதனால், அப்படியே ஆகட்டும்.

Anonymous said...

நாங்கள் சொல்லி புலிகள் கேட்கவா போகிறார்கள் என சொல்லாதீர்கள். (உங்களுடைய மாற்றுக் கருத்தெல்லாம் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில்த் தானே எழுதுகிறீர்கள்.)

அதைவிடுத்து தனிநாடுதான் என்றால் அதற்காக ஆயிரக்கணக்கில் மக்களைக் கொல்வதா என்றும் சுயாட்சி என்றால் அதற்காகவா ஆயிரக்கணக்கில் மக்களை இழந்தோம் என்றும் அவ்வப்போது எதுவுமில்லையென்றால்.. புலிகள் ரஜீவைக் கொன்றவர்கள்ää ஐயோ அவரைக் கொன்றவர்கள் இவரைக் கொன்றவர்கள் என்று உங்களை நிறுவிக் கொள்ளாதீர்கள்.

மாற்று இயக்கங்களை கொலை செய்வதிலிருந்து தமக்கு எதிரானவர்களை சித்திரவதை செய்வது வரை ஒரு அமைப்பிலிருந்த போது செய்துவிட்டு பிறகு தெளிந்து உணர்ந்து அவற்றிற்கு எதிராக எழுதவும் பேசவும் முடியுமென்றால்.. ஒரு அமைப்பும் அந்த நடைமுறைகளிலிருந்து மீள முடியாதா?

அப்பிடி மீளும் போதும் நடந்தவைகளை நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது அவர்களுக்கெதிரான ஏற்படுத்திக் கொண்டு விட்ட எதிர்ப்புணர்வின் வெளிப்பாடேயன்றி உண்மையான விவாதத்திற்கான மாற்றுக் கருத்தா..?

Badri Seshadri said...

ரமணி: ரஜினி திரணகம, முறிந்த பனை ஆகியவை பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். இணையத்தில் முறிந்த பனை ஆங்கிலப் பக்கங்கள் சிலவற்றைப் படித்த ஞாபகம்.

விஷயம் தெரிந்தவர்கள் முதலில் செய்யவேண்டியது விவாதத்தில் ஈடுபட விரும்பும் பலரும் உள்ளே நுழையும் வண்ணம் அடிப்படையான ஒரு பதிவைக் கொண்டுவருவது. அதைப் படித்தபின், அல்லது அதில் கிடைக்கும் சுட்டிகளை மேய்ந்தபின் உருப்படியான, அறிவார்த்தமான விவாதம் உருவாகலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

வெங்கட்டின் பதிவிலும், இங்கும் நீங்கள் விட்டுவைத்த பின்னூட்டங்களைப் பார்க்கும்போது "ரஜினி புலிகளால் கொல்லப்பட்டிருக்கலாம், அது கண்டிக்கத் தக்கது. ஆனால் அப்படிச் செய்வதானால் இன்னபிற லட்சக்கணக்கானோர் கொலையையும் சேர்ந்தே கண்டிக்க வேண்டும். முறிந்த பனை எழுதப்பட்டதன் பின்னணியை ஆராய வேண்டும். (அப்புறம் இருக்கவே இருக்கிறது ஹிந்து ராம்.)" என்பதுதான் உங்கள் கருத்து போலத் தோன்றுகிறது.

இப்படியாயின் ஏன் நீங்களே ஓர் எளிமையான சிறு பத்தி எழுதிவிடக் கூடாது இதுபற்றி?

இந்த ஆவணப்படம் தமிழகத்துக்கு வரும்போலத் தோன்றவில்லை. எனவே சமகால வரலாற்றில் ஆர்வமுள்ள என்னைப் போன்றோருக்கு வலைப்பதிவுகளில் படிக்கக் கிடைப்பவைதான் போக்கிடம்.

-/பெயரிலி. said...

பத்ரி,
/"ரஜினி புலிகளால் கொல்லப்பட்டிருக்கலாம், அது கண்டிக்கத் தக்கது. ஆனால் அப்படிச் செய்வதானால் இன்னபிற லட்சக்கணக்கானோர் கொலையையும் சேர்ந்தே கண்டிக்க வேண்டும். முறிந்த பனை எழுதப்பட்டதன் பின்னணியை ஆராய வேண்டும். /
அஃதல்ல என் கருத்து. முறிந்தபனையை 1990 இலே அமெரிக்காவிலே பதிக்க முன்னாலேயே, பேராதனைப்பல்கலைகழகத்திலே ஒற்றையொற்றையாக திரணகமவின் மருத்துவபீடமாணவர் ஒருவர் (இவர் சிவரமணியின் நண்பருங்கூட) தரக்கிடைத்து வாசித்திருக்கின்றேன். அதன்பின்னணி குறித்து எனக்கு ஏதும் பிரச்சனையில்லை. அந்நண்பருடன் ராஜினி திரணகம உடுவிலில் நடத்திய அநாதரவான பெண்கள்காப்பகத்தினைகூட, அவரின் இறப்புக்குப்பின் 1990 இலே சென்று பார்த்திருக்கிறேன். ஒருவன் என்ற பெயரிலே எழுதியது நான் என்று தவறாக நீங்கள் எண்ணியிராவிட்டால், "ஆனால் அப்படிச் செய்வதானால் இன்னபிற லட்சக்கணக்கானோர் கொலையையும் சேர்ந்தே கண்டிக்க வேண்டும்" என்று நான் எங்கேயும் சொல்லியிருக்கவில்லை என்று கண்டிருப்பீர்கள்.

வெங்கட்டின் பதிவிலே ஒரு கேள்வி (வாழ்க்கைவரலாற்றுச்சுருக்கம்) தவிர்த்து மிகுதி, ஸ்ரீரங்கனுக்குரியவை; அதைத்தான் இங்கிட்டிருக்கிறேன்.

இது குறித்த அறிவார்ந்த விவாதத்தினை நீங்கள் கூறுவதுபோல மேற்கொள்வதற்கான முன்னாய்த்தங்கள் கொள்வது இலகுவல்லவே; அவ்வாறு செய்ய விருப்பமே. ஆனால், கூறும் எத்தனை சம்பவங்களுக்கு உசாத்துணைச்சுட்டிகளைச் சேர்க்கமுடியுமென்று நம்புகின்றீர்கள்? அந்தளவிலேதான், நான் ஸ்ரீரங்கனுடன் பேசுகிறேன். குறைந்தபட்சம், அவர் சுட்டிகள் இல்லாமலே பேசுகிறார். கொன்றவனைத் தெரியுமென்று சொல்கிறார். ஆனாலும், வெறுமனே தப்பித்துப்போகிறேன் என்று தோன்றாதிருக்க, இது குறித்து சமயம் கிடைக்கையிலே நிச்சயமாக எழுதமுயல்வேன்.

கனடாவிலும் ஜேர்மனியிலும் அமெரிக்காவிலுமிருந்துகொண்டு, மனித உரிமைகளுக்காகப் போராடுவதாகக் காண்பிப்பது மிக இலகு; தவிர, வெறுமனே வரட்டுத்தனமான மார்க்ஸியத்தினைப் பேசிக்கொண்டிருக்கின்றாரேயொழிய, அதற்கப்பால், எந்தத்தீர்வினையும் ஸ்ரீரங்கன் தரவில்லை. மேலும், தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக இயங்கும் தளங்களிலே தன் பதிவுக்கு இணைப்பினைக் கொடுத்து வைத்திருக்கும் அவர், புலிகளைத் திட்டுவதைத் தவிர தனக்குத் தெரியுமென்று சொல்லும் ரஜனி திரணகமவின் கொலைக்கு உடைந்தையாக இருந்தவரை நீதிப்படி தண்டிக்க என்ன செய்தார்?

/(அப்புறம் இருக்கவே இருக்கிறது ஹிந்து ராம்.)"/
அப்புறமில்லை, எப்புறமும் தூணிலும் துரும்பிலும் கனவிலும் நனவிலும் ராம் ராம். :-) எனக்கு அவர் இலங்கைத்தமிழர்கள்மீதான இந்திய மேலாத்திக்கவாதிகள் எல்லோரினதும் ஒரு குறியீடு அவ்வளவே. இந்தவிடத்திலே உங்களின் சொற்றேர்வுகளைக் காணும்போது, கொஞ்சம் கிண்டலுடன் வருந்தியிருப்பதாகத் தெரிகின்றது. ;-)

Anonymous said...

மறைந்த அற்புதன் எழுதிய தொடரில் ராஜினி கொல்லப்பட்டது புலிகளாலன்று என்று எழுதியிருந்ததைப் படித்த ஞாபகம். (இவர் இ.பி.டி.p. இன் பத்திரிகையான தினமுரசின் முன்னாள் ஆசிரியர்) யாருக்காவது பழைய தினமுரசுப்பத்திரிகைகள் கிடைப்பின் அதில் அற்புதனின் "அல்பிறேட் துரையப்பா முதல் காமினி வரை" என்ற தொடரில் ராஜினி கொலை பற்றிக் கூறியிருப்பதை எடுத்துப் போடமுடியுமா?
முறிந்த பனையெழுதிய ராஜினியை அதைச் சேர்ந்து எழுதிய ஹூல் சகோதரர்களுடன் சேர்த்து ஒப்பிட முடியுமென்றால், இன்று சராசரி தமிழர்களிடம் கேளுங்கள், ராஜினியை என்ன செய்ய வேண்டுமென்று.

Badri Seshadri said...

ரமணி: ஹிந்து ராம் பற்றி எனது கருத்தும் உங்களதே. ஆனால் அதே தீவிரத்தில் அல்ல. ஆனால் அவரது பெயரை எங்கெல்லாம் இழுக்கிறோம் என்பதுதான் கவலை.

அவர் கிடக்கட்டும்...

எனக்கு நிஜமாகவே ஈழ விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு கூறுகளையும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது. ஆனால் அப்படி உள்ளே நுழைய முடியாதபடி பல பிரச்னைகள் உள்ளன. எந்தச் சார்பு நிலையானாலும் பரவாயில்லை, ஆனால் நடுநடுவே சிலர், சிலவற்றைப் பற்றி மட்டும் பேசுவதில் அடியும் புரிவதில்லை, முடியும் புரிவதில்லை.

ஒவ்வொரு விஷயத்தைப் பற்றிய துணைத்தகவல்கள், சுட்டிகள் கூட பிறகு கொடுக்கலாம். ஆனால் அடிப்படை விஷயங்களைச் சற்று கோர்வையாக எழுத வேண்டும். யாராவது இதை ஆரம்பிக்க வேண்டும்! நீங்கள் கூடச் செய்யலாமே?

-/பெயரிலி. said...

பத்ரி, முயல்வேன்.

thamillvaanan said...

அன்பின் சிறிரங்கன் அறிவது.
மீண்டும் சில விடயங்களை சொல்லவேண்டுமென்பதற்காக வருகிறேன். நீங்கள் எழுதுகின்ற சித்தாந்தங்கள் சாதாரண மக்களாகிய எங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஆனால் ஏதோ புலியெதிர்ப்பு என்ற போர்வையை போட்டுக்கொள்வதற்காக விதண்டாவாதமாகவும் வரட்டு சித்தாந்தங்களையும் கதைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது இடைஇடையே புரிந்து கொண்ட சொற்களை வைத்து அனுமானிக்க முடிகிறது.

நான் உங்களிடம் ஏற்கனவே உங்களைப்போன்றவர்களின் நிலைப்பாடு என்ன என்று கேட்டிருந்தேன். ஆனால் அதை விடுத்து சந்திரிகா போல சமாதானத்திற்காக யுத்தம் என்பது போல கதைத்து கொண்டிருக்கிறீர்கள்.

வெளிப்படையாக விளங்க கூடிய தமிழில் இவற்றுக்கு விடை தரமுடியுமா?
1. புலிகளை என்ன செய்ய வேண்டும்?
2. இலங்கை தமிழர்களுக்கான தீர்வு என்ன?

Sri Rangan said...

எனது பதிவுக்கு வருகைதந்த அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம், உங்களுங்களுக்குப் புரிந்துகொண்ட தளங்களிலிருந்தபடி கருத்திட்டுள்ளீர்கள்,நன்றி.உங்கள் கருத்துக்களுக்கு எனது பதிலானது கேள்வியிலேயே துவங்குகிறது: இந்தப் பதிவில் எங்கோவொரு இடத்திலாவது புலிகளென வார்த்தைகள் உண்டா? தொப்பி அளவாக இருப்பதனால் எல்லோரும் அவரவருக்குப் போட்டழகு பார்ப்பது அவரவர் விருப்பம்.

அடுத்து ஈழப்போராட்டம் பற்றியும்,அராஜகம் பற்றியும்-இயக்க வன்முறை குறித்தும் கருத்தாடும்போது, உடனே புலிகள்பற்றிய அவதூறென்று ஏன் புலிகளை மட்டும் அடையாளப்படுத்தியதாகக் கதை கட்டுகிறீர்கள்?இத்தகைய கருத்துக்கள் கூறியவுடன் 'அவன் அந்த அமைப்பு'இவன் இந்த அமைப்பு'-நெருப்பு,ரீ.பீசீ,கருணா,புளட்,மற்றைய கஞ்சல்கள் ... என்று நாமமிடாதீர்கள்.முதலில் சில விளக்கங்களோடு மேலே செல்வோம்.

நாம்-நாம் என்ற நான் ஒரு உதிரி மனிதன்.உங்களைப்போன்றே சமூக அக்கறை கொஞ்சமும்,கடந்தகாலத்தில் சிங்கள அரச வன்முறைக்கெதிரான போராட்டத்தில் ஏதோவகையிற் பங்குகொண்ட உணர்வுகளோடு வாழுபவன்.எனக்கெந்த ஆயுதக்குளுக்களுக்கும் இப்போது;(அப்போது...) தொடர்புகிடையாது.தேனியின் ஆசிரியரோடு கடந்த காலத்தில் பத்திரிகைக்கு எழுதியும் விவாதித்தும் வந்தோம்,இலக்கியச் சந்திப்பால் உற்ற நண்பரானார்.பண்பாளர்,பழகுவதற்கு இனிமையானவர்.அதுவே நமது உறவு.மற்றும்படி தேனியின் அரசியற் கருத்துக்கள் அனைத்தோடும் உடன் பாடுகிடையாது.மறுக்கப்பட்ட மாற்றுக் கருத்துக்களுக்கான ஜனநாயகச்சூழலை அவர்கள் பேசுவதால் அவர்களின் தளத்தில் எனது தொடுப்பைக் கொடுக்கும்படி நானே கேட்டுக்கொண்டேன்.

தேனிக்கும் கூட்டணித் தலைவரென்ற வடிகட்டிய அரசியில் விபச்சாரி ஆனந்த சங்கரிக்குமான தொடர்புகள்... இத்யாதியெல்லாம் அவர்கள் மீதிருந்த அபிப்பிராயத்தில் இடைவெளி நீண்டுவிட்டது.வூப்பெற்றாலில் இராமச்சந்திரனோடு சேர்ந்து ஆனந்த சங்கரி தமிழ் அகதிகளிடம் காசு பண்ணிய கதைகளெல்லாமுண்டு. அதுவேறு விஷயம்.எனினும் இத்தகைய சமூக விரோதிகளை மக்கள் தலைவர்-ஜனநாயகத்தின் குரல் என்று தேனி கூறுவது அவர்களுக்கான நலன்களின் அடிப்படையாக இருக்கலாம்.ஆனால் ஸ்ரீரங்கனின் அடிப்படை? நானும் எனது தமிழ்பேசும் மக்கள் இனமும் கௌரவமாகச்(சாதி பேதங்களற்ற-சுரண்டலற்ற-அடிமைநிலையகன்ற) சுதந்திரமான-பாதுகாப்பான சமவுரிமையுடன் இலங்கையில் வாழ்வதே! அகதியென்ற நாமத்துடன் தொழில்,வசதியுடன் வாழ்வதைவிட தனது கிராமத்தில் மூக்கறைச்சிக் கீரையுடன் ஒரு நேரம் சோறுண்டாலும் சுதந்திரமாக வாழ்வதே நோக்கம்.இதுதாம் ஸ்ரீரங்கன். இந்த நோக்கோடு தனது மண்ணின் அவலத்தைப்போக்க தான் பெற்ற கல்வி;யோடு,அதன் தளத்தில் நின்று தனக்குப் புரிந்த சமூகவிஞ்ஞானத்தை சமகாலப் பிரச்சனை-சமூக முரண்பாடுகளோடு பொருத்தி,முட்டிமோதிக் கருத்திடுவதும்,உலக அரசியலில் எமது உரிமை -விடுதலை எவ்வாறு சாத்தியம் என்று சதா சிந்தித்தும்-ஆய்ந்தும் எழுதுவதுதாம் இப்போவுள்ள பிரச்சனைக்கு-மல்லுக்கட்டலுக்காரணமாகிறது.ஸ்ரீரங்கன் காண்பது சமவுடமை அமைப்பு முறை.ஏனெனில் 0ரங்கன் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மனிதன்.இது எனது அதி உண்மையான சுயம். இதிலிருந்து எந்தவொரு சமரசமும் கிடையாது.எங்களுக்குள்ளும்(எனக்குள்,என் மனைவிக்குள்)ஒரு புலியிருக்கிறதுதாம்.இதை மறுக்கமுடியாது.சுனாமியால் திரு.பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் செய்தி-வதந்திபரவிக் கொள்ளவும்- மனைவியின் அழுகைதாங்கமால் ஈழமுரசு திவாகரனுக்கு(சிவா சின்னப்பொடி)போன்போட்டுப்பார்த்ததும்-வேறொருவருடனே கதைக்கூடிய நிலையில் பிரபாகரனின் சுகம் விசாரித்த அன்றைய மாலையே தலைவரின் அனுதாபச் செய்தியென சுனாமிபற்றிய அனுதாபச் செய்தியை விசாலகன் ரீ.ரீ.என்' இல் வாசிக்க- சந்தேகம் வலுத்து வீட்டில் சாவீடாக இருந்ததும் உண்டு.'என்னயிருந்தாலும் சிங்களவனுக்கு முன் தலை நிமிர பிரபாகரன்தான் காரணம்' என்று மனைவி கூறிக்கொண்டேயிருந்தாள்.இதில் நான் கூட உடன்பாட்டோடு இருப்பவன்.அனால் மனைவிபோன்று உணர்ச்சி வசப்பட்டல்ல.அது தமிழரின் நலன் சார்ந்த புரிதலில்.அதாவது இந்திய இராணுவம் புலியை அழிக்க முற்பட்டபோது புலியை நிபந்தனையற்று ஆதரித்ததுபோல்... இதற்கெல்லாம் வலுவான தமிழ் மக்கள் நலனே அடிப்படையாகும்.

இனி விடையத்திற்கு வருவோம்.

இந்தக் காரோடுவது... லொறியோடுவது... என்ற உணர்ச்சிவழிப்பட்ட பின்னூட்டங்களுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை.அதுபோலவே இரமணிதரனின் பார்வையில் ஆண்டு வைத்து'ஈழப் பிரச்சனைகளைக் கதைக்கலாம்-கூடாது' என்ற சட்டம்(இதுதாம் பாசிசத்தின் சுரப்பி);,உலக நீதிமன்றத்தில் ஏற்றுவதுபோன்ற முதலாளியக் கருத்தியல் மனதுக்கு வெளியில் நிற்கும் கருத்துக்களே எனக்கு முக்கியமாகும்.அப்படிப்பார்க்கும்போது,இந்தக் குறிப்பினுள் நாம் குறித்ததென்ன என்பது முதலில் புரியப்பட வேண்டும்.மாற்றுக் கருத்துக்கு முகங்கொடுக்கமுடியாத போது போட்டுத்தள்ளல் முறைமையை பண்பாடாகக் கொண்ட ஈழப்போரை விமர்சனஞ் செய்வது.இதனூடே நமது தவறுகளை நாம் புரிவதும் அதன் வழியே ஜனநாயகப் பண்பை வளர்த்துக்கொண்டு எதிர்கருத்துள் நிலவும் விமர்சனங்களை உள்வாங்கி நமது போராட்டச் செல் நெறியை விருத்தியுற வைப்பதும், சரியான அரசியற் பொருளியற் பாதையை வகுப்பதும், அதனூடே நமது அரசியல் அபிலாசைகளைத் தமிழ்பேசும் மக்களின் நலனலிருந்து வகுத்துக்கொண்டு- நமது விடுதலையைச் சாதிப்பதுமே நோக்கமாகணும்.இங்கு நடப்பது இதுவல்ல.மாறாகத் தமிழ் மக்களின் நலனில் கடுகளவும் அக்கறையற்ற தருகு முதலாளிய நலன்களின் திரட்சியான கோசங்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொள்வதே.

நண்பர்களே! இது வர்க்கச் சமுதாயம்,இங்கு வர்க்க அரசியலே அடிப்படையானது.இதைவிட்ட எந்த மாயமுமில்லை.முழுமொத்தமக்களுக்குமான விடுதலை சுதந்திரமென்பதெல்லாம் வெறும் போலிக்கோசமானதாகும்.தேசியக் கோசமானது-தேசிய விடுதலைக்கோசமானது எப்போது முற்போக்கானதாக இருக்குமென்றால் அது தேசிய முதலாளியம் ஏகாதிபத்தியத்துடன் முரண்படும்போது.நமது நாட்டிலோ தேசிய முதலாளியம் முளையோடு கருகிவிட்டது.இப்போது வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட இது கிடையாது. அப்போ எமது தேசிய விடுதலைக்கோசமானது தரகு முதலாளிகளின் கோசமாக விருப்பினும்,அது சிங்கள இனவொடுக்குமுறைக்கான கோசமாக வளர்த்தெடுக்கப்பட்டது.இந்த நிலையில் இது முற்போக்கானது.ஆனால் பாருங்கள் இந்தக்கோசம் எப்படிப்பட்ட இயக்க நலத்துடன் பிணைவுற்று அது குறிப்பிட்டவொரு இயக்க நலனாக மாறுகிறது.இதன் வாயிலாக மாற்று அரசியற் பாதையுடைய அமைப்புகள் அழிக்கப்படும் நிலைக்கு குறிப்பிட்ட இயக்க நலன் உந்தித் தள்ள, இந்த அருமையான முரண்பாட்டை நம்மையொடுக்கமுனையும் அந்நிய நாடுகள் தமது நலனுக்கேற்றவாறு பயன் படுத்தி ஈழத்தில் குருதியாற்றைத் தோண்டி விட்டார்கள்.நிலைமை மோசமாகி யாருக்கெதிராகப் போராட நாம் திரண்டோமோ அவர்களிடமே நம்மில் ஒருபகுதி சரணடையவேண்டிய இழிநிலை தோன்றுகிறது.இரமணியின் பார்வையில் இன்று மனோ ரஞ்சன்,ராஜன்கூல்,ஸ்ரீதரன் போன்ற புத்திஜீவிகளும்-மற்றவர்களும்(இயக்கங்கள்) சிங்கள அரசிடம் தமது உயிருக்கு உத்தரவாதம் கேட்கும் நிலை யாரால் ஏற்பட்டது? புலி இயக்க நலனால்!புலி இயக்கத்தின் நலனும்,மக்கள் நலனும் ஒன்றேதாமெனக் கூறினால்-நான் கூறுவேன்:'நீங்கள் எல்லோரும் விசமம் பண்ணும்' நபர்களென்பேன்!

மார்க்சியம்-ரொக்ஷிசவாதிகள்... என்றெல்லாம் இரமணி கோபப் படுகிறார்.இரமணி! ஈழமென்பது பொய்க்கோசமானது.இது கனவிலும் சாத்தியமாகாது.வேண்டுமானல் அவரவர் விருப்புக்கேற்றவாறு தரைத்தோற்றத்தை-நில அமைப்பை வரைந்து கனவை வளர்க்கலாம்.இன்றைய நமது அரசியல் வாழ்வானது-பிரச்சனையானது இலங்கைப் பாராளுமன்றத்துக்குள் இல்லை.அது டெல்லியூடாய் நீங்கள் வதியும் நாட்டின் வெள்ளை மாளிகைவரைக் கிடப்பதை நீங்கள் அறிவீர்கள்.அப்போ நாம் நாடென்றவொரு அமைப்புக்குள் வாழமுடியவில்லை.மாறாக நாடுகளென்ற அமைப்புகளுக்குள் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.எமது பிரச்சனை அந்நிய நாடுகளோடு சம்பந்தப் படுகிறது.இலங்கை பிளவுபட உலகப் பொருளியல் நலன் விடவே விடா.புலிகள் இதைப் புரிந்து விட்டார்கள்.உலக நாடுகள் தத்தம் எல்லைகளைத் தகர்த்துக்கொண்டு இப்போ கண்ட-உலக அரசவடிவத்துக்குள் வந்து விடுகின்றன,இதுதாம் இன்றைய நிதிமூலதனத்தின் அதிகூடிய உற்பத்திப்பொறி முறை.இந்த வியூகம் வெறும் தேங்காய்ச் சிரட்டை அரசியல் வியூகமில்லையென்பதை இரமணிபோன்ற இளைய கல்வியாளர்கள் அறியாததல்ல.எனினும் நமது நோக்கு நிலை என்ன வென்பதை விளக்க வேறுவழி? ஏன் நாம் இந்தியாவிடம் சரணடையவேண்டும்? ஐக்கிய சோசலிச இங்கையின் அரசியற் தலைமையை இலங்கைத் தொழிலாள வர்க்கம் கைப்பற்றும் போராட்டம் ஏன் சாத்தியப் படமாட்டாதா?

இன்றைய உலக-பிராந்திய பொருளியல் நலனின் அரசியலில் தனித் தமிழீழம் சாத்தியமாகுமா? என்னுடைய பதில் சாத்தியமேயில்லை.காரணம:; பலவுண்டு இப்போதைக்குத் தேவையில்லை.எனவே நான் கூறும் தீர்வுநோக்கிய பாதையானது'நீண்டதொடர்ச்சியான, முழு இலங்கைக்குமான புதியஜனநாயகப் புரட்சியாகும்.இதுதாம் மனிதவிடுதலையையும்,இனங்களுக்கிடையிலான உண்மையான ஐக்கியத்தையும்பேணி சமத்துவ அரசியலைத் தரும். இது குறித்து நீண்ட விவாதம்தேவை இப்போது இதைவிட்டுவிடுவோம்.

அடுத்து வன்னியன், உங்களுடைய கேள்வி:ஸ்ரீதரன்,கூல் போன்றோர் இலங்கையரசோடு சேர்ந்திருப்பதால் இராஜினியும் இலங்கைக் கைக்கூலியா? என்பதே.இவர்கள் ஏன்-எப்படி இந்த நிலைக்குப்போனார்கள்? இரஜினி அற்ப சலுகைகளுக்காக மயங்க அவளென்ன ஆனந்த சங்கரியே? அவள் சர்வதேசத்தில் புகழ்பெற்ற கல்வியாளர்.அதனால் எல்லா சுகபோகங்களும் அவளால் பெற்றிருக்கமுடியும்.ஏனிந்த நிலைக்குப்போய்ச் சிந்திக்கிறீர்கள்?

இங்கு கொலைகளை நியாயப்படுத்தும் அரசியல் கயமைக் கெதிரான கருத்தே வைக்கப்பட்டது.நாம் மனித விழுமியங்கள் குறித்த அக்கறையோடுதாம் எழுதுகிறோமே தவிர அரசியல் நடாத்துவதற்கல்ல.அரசியல் நடாத்துவது,பெரும் கிரிமனல்களான டக்ளஸ் போன்ற எருமைகளுக்கே சரிவரும்.நான் வெறும் தனிமனிதன்.இப்போது இலங்கையுடன் கைகோர்த்துப் புலிகள் அரசியல் செய்கிறார்களே-இலங்கை இராணுவம்-பொலிஸ் பாதுகாப்பு எல்லாம் கிழக்கில் புலித் தலைவர்களுக்குக் கொடுக்கப் படுகிறதே,அப்போ புலிகளும் சிங்கள அரசின் கைக்கூலியாகிவிட்டார்களா? இது இராஜதந்திரம்? எதுவோ!ஆனால் நான் என்ன சொல்கிறேன்? மக்களைச் சுதந்திரமாகச் செயற்பட வைப்பதும்,எமது போராட்டமானது உழைப்பவர் நலத்தின்பாலானதாக இருக்கவேண்டுமென்கிறேன். இங்கு பின்னூட்டமிட்வர்களுள் மிகவும் ஜனநாயகப் பண்போடு கருத்திட்டவர்கள்: 'ஒருவன்,பத்திரி,போன்றோரே.பெயரிலியின் முதல் பின்னூட்டமானது சர்வதிகாரத்தின் உளவியற் பரப்பைச் சொல்வதாகவே எனக்குப் படுகிறது.பின்னய அவரது பின்னூட்டங்கள் நியாயமான கேள்விகளோடு வருகிறது.

இராஜினியைக் கொன்றவன் அம்புமட்டுமே!எய்தது யார்? எல்லை தாண்டிய கண்ணிகள் இதற்குள் அடங்கும்.புலிகளுக்கு இரஜினியைத் தட்ட காலவகாசம் தேவையாக இருந்தது.


,,நாங்கள் சொல்லி புலிகள் கேட்கவா போகிறார்கள் என சொல்லாதீர்கள். (உங்களுடைய மாற்றுக் கருத்தெல்லாம் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில்த் தானே எழுதுகிறீர்கள்.)

அதைவிடுத்து தனிநாடுதான் என்றால் அதற்காக ஆயிரக்கணக்கில் மக்களைக் கொல்வதா என்றும் சுயாட்சி என்றால் அதற்காகவா ஆயிரக்கணக்கில் மக்களை இழந்தோம் என்றும் அவ்வப்போது எதுவுமில்லையென்றால்.. புலிகள் ரஜீவைக் கொன்றவர்கள், ஐயோ அவரைக் கொன்றவர்கள் இவரைக் கொன்றவர்கள் என்று உங்களை நிறுவிக் கொள்ளாதீர்கள்.

மாற்று இயக்கங்களை கொலை செய்வதிலிருந்து தமக்கு எதிரானவர்களை சித்திரவதை செய்வது வரை ஒரு அமைப்பிலிருந்த போது செய்துவிட்டு பிறகு தெளிந்து உணர்ந்து அவற்றிற்கு எதிராக எழுதவும் பேசவும் முடியுமென்றால்.. ஒரு அமைப்பும் அந்த நடைமுறைகளிலிருந்து மீள முடியாதா?

அப்பிடி மீளும் போதும் நடந்தவைகளை நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது அவர்களுக்கெதிரான ஏற்படுத்திக் கொண்டு விட்ட எதிர்ப்புணர்வின் வெளிப்பாடேயன்றி உண்மையான விவாதத்திற்கான மாற்றுக் கருத்தா..?-Oruvan.

ஒருவன் உங்கள் கேள்வி அன்றுகேட்டது.எனினும் நியாயமானது! இப்போ பதிலளிப்போம்.நாம் சொல்லிப் புலிகள் கேட்கப் புலிகள் தொழிலாளார்களின் நலனில் அக்கறையுள்ள புரட்சிகரமான வேலைதிட்டமுடைய அமைப்பாக இருக்கும்போது சாத்தியமாகலாம்.இப்போது அசாத்தியம்.

மற்றவர்களைக் கொன்றீhகளளென்று கூறி நம்மை நிறுவவில்லை.கொலைகள் தொடர்கிறதே ஒருவன்! அதற்கெதிராகவே கருத்துக்கூறுகிறோம்.கொலையாவது எல்லோரும் நமது மக்கள்தாம்.அது(மரணத்தின் பின்: அது)கௌசல்யனாலும் சரி அல்லது டக்ளஸ் அடியாளாவது இருக்கட்டும் கொலை, கொலையே.இது நிற்கும்போது இந்தச் சூழலை மதிப்பீடு செய்வுது மட்டுமே சாத்தியமாகலாம்.அதுவரையும் அராஜகத்தின்பாலான கொலைகளை நியாயப்படுத்தும் அரசியலைக் கேள்விக்குட்படுத்துவது தவிர்க்கமுடியாதபோக்கே.

நிச்சியமாக முடியும்!அந்த அமைப்புக்குள் உட்கட்சிஜனநாகம் நிலவும்போது நிச்சியமாக முடியும்.ஈழத்துப் போராளியமைப்புகளுக்குள் எந்த அமைப்பிடம் இந்த உட்கட்சி ஜனநாயகப் பண்பு நிலவுகிறது? தனிநபார் தன்னை சுயவிமர்சனஞ் செய்து மேலெழுகிறார்.அதற்கு அவரது கல்வியும் துணையிருக்கவேண்டும்.அப்போதுதாம் இயக்கவாத மாயயை விட்டு தன்னைப் பிரித்துச் சீர்தூக்கிப் பார்ப்பார்.இல்லையேல் வெறும் தனிநபர் வழிபாடுதாம் மிஞ்சும்.

புலிகள் அமைப்பு அப்படி மீளும்போது யாருமே கதைப்பதற்கான கொலைகள் நடைபெறாது.எனவே அத்தகைய விமர்சனங்கள் எழுவதற்கான புறச்சூழல் இல்லாமற்போவது ஆளுமையுள்ள அமைப்பின் கைகளிலேயேதாமுள்ளது.ஆனால் கொலைகள் தொடர்கிறது.அனைத்துக் குழுக்களும் தாரளமாகக் கொலையிலீடுபடுகிறார்கள்.கொலைகளுக்கெதிரான குரல்கள் புலிகளுக்கெதிரான குரலெனப் பார்த்தல்கூட விவேகமற்றதுதாம்.

Anonymous said...

உங்கள் கருத்தியல் தளம் வேறானது. அது புலிகள் எதை செய்தாலும் எதிர்ப்பது தான் என படுகிறது. நீங்கள் புலிகளை மேலே எந்த இடத்திலும் பதிவில் சுட்டவில்லை. பின்னுட்டத்தில் சுட்டிகாட்டமுற்பட்டுள்ளீர்கள். நீங்கள் உங்களை நடுநிலையான மாற்றுகருத்தாளர் போல காட்டமுயன்றாலும் அது தோல்விதான் மாற்று கருத்து என்பது ஒருவரை எப்போதும் எதிர்ப்பது என்ளது போல தான் உங்கள் பதிவுகள் உள்ளன. நடுநிலையென்றால் நல்லது நடந்தால் பாராட்டவும் மனம் வேண்டும். இதுவரை பார்த்தளவில் அது உங்களிடம் இல்லை என நினைக்கிறேன். ரஜனி திரணகம பற்றி அற்புதனின் தினமுரசு கட்டுரையில் தான் தெளிவான படித்துணர்ந்து கொண்டேன். அதில் புலிகள் செய்யவில்லை என்று தான் காரண காரியங்களுடன் நிறுவியிருந்தார். அவரது செயற்பாடுகளையோ அவரையோ தெரியாது. அப்போது அந்தவயதில் நானில்லை.

உங்களை சமூகவியலாளர் அல்லது அதுபற்றிய ஏதோ ஒரு துறைசார்ந்தவர் என சொல்லமுற்பட்டுள்ளீர்கள். ஆனால் உங்களது பார்வை தெளிவற்றது முன் பின் முரணாகவே படுகிறது.

மற்றையது சில கல்வியாளர் எனப்படும் பெயர்களும் அவர்கள் அரசிடம் தஞ்சமடைய புலிகளே காரணம் என்பதானவும் உங்கள் பதிவு இருந்தது. அவர்களாக அதை தேடினார்கள் என்பது தான் பொருத்தம். அவர்களின் அடிவருடிதனம். அல்லது பச்சோந்திதனம் காரணம். KUMILI

Sri Rangan said...

வெளிப்படையாக விளங்க கூடிய தமிழில் இவற்றுக்கு விடை தரமுடியுமா?
1. புலிகளை என்ன செய்ய வேண்டும்?
2. இலங்கை தமிழர்களுக்கான தீர்வு என்ன?


வணக்கம் தமிழ்வாணன் அவர்கட்கு,
உங்கள் கேள்விக்கு எனது பதிலானது வர்க்கஞ்சார்ந்தது.மற்றைய இயக்கவாத-கம்யூனிசப்பார்வையுள்ளவரிடமிருந்து நான் வேறு படுகிறேன்.அவர்கள் புலிகளை இந்தியா-அல்லது வெளிநாட்டு இராணுவம் சிதறடித்தபின் சூழ்நிலை வேறொரு கட்டமைப்பை முன் தள்ளலாமென்பர்.அது அவரவர் செல்நெறி சம்பந்தப்பட்டது.புலிஅமைப்பின் போராளிகள் உழைப்பவர்களின் பிள்ளைகள்,எனது பிள்ளைகள்,சகோதரர்கள்.அவர்களை எவரழிக்கமுற்பட்டாலும் நிபந்தனையின்றி புலிகளை ஆதரிப்பது எனது கடமை.புலிகள் அமைப்பை-அந்த அதியுயர் இராணுவ வலுவை எப்படிப் புரட்சிகரமாக்குவது என்பதே என்கேள்வி.அமைப்பைச் சிதைக்கிறதல்ல இதன் நோக்கம்.புலிகளின் பின்னுள்ள ஆளும் வர்க்கத்தை அப்புறப்படுத்தி,மக்கள் படையாகவும்(பாட்டாளிகள்,விவசாயிகள்,சிறுதொழில் உடமையாளர்கள்,கூலித்தொழிலாளர்களை உள்ளடக்கிய) புரட்சிகர அமைப்பாகவும்,உட்கட்சி ஜனநாயகமுடைய மிக முன்னேறிய அமைப்பாக்காவும் மாற்றுவதே. இது எதற்காகவென்றால் நீண்டகால ஐக்கிய இலங்கைக்கான புதியஜனநாயகப் புரட்சியின் பயனைநோக்கியே.

தமிழ் மக்களுக்கான தீர்வு தமிழீமாக இருக்காது.இது உண்மையிலேயே இப்போது சாத்தியமில்லை.ஆனால் இலங்கையில் புரட்சிக்குரிய சூழல் நிலவுகிறது:இது இனங்களுக்கிடையிலான ஐயக்கியத்தை வலியுறுத்திப் பாரிய வேலைத் திட்டத்துடன் நகரவேண்டும்.மீளவும் போராட்டம்தாம்.ஆனால் சிங்களவர்களோடல்ல.சிங்கள-தமிழ்,இஸ்லாமியத் தரகு முதலாளிகளுடனும்-உலக,பிராந்திய ஏகாதிபத்தியங்களுடனும் போராடவேண்டியதுதாம்.இது அல்லாத இன்றைய அரசியலில் புலிகள் பெறும் தீர்வு மீளவும் தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட சாதிகளைக் கருவறுக்கும் அரசியலோடு உழைப்பாளருக்கு விலங்கிடும் ஆட்சியே நிலவும்.பிரேமதாச ஆயிரக்; கணக்கான சிங்கள மக்களைக் கொன்றானே எதற்காக?அவன் சிங்களவருக்கான சிங்கள ஆட்சிதானே செய்தான்!தமிழ் நாட்டில் பேரளவுக்கான மாநிலசுயாட்சி தமிழர்களின் கீழ்த்தானே நடைபெறுகிறது? இது ஏன் தமிழகத் தமிழ்பேசும் மக்களை அடக்கியாளுகிறது?தமிழகப் பொலிஸ் ஏன் தமிழக மக்களை வேட்டையாடுகிறது? தமிழக அரசியல் வாதிகள் எப்படி பல்லாயிரம் கோடிகளைச் சொத்தாகப் பெற்றார்கள்? எல்லாம் இந்த முதலாளிய அமைப்பால்தான்.இப்படியான ஒரு ஆட்சி இலங்கையின் வடக்குக் கிழக்கில் அமைவதுதாம் தேவையானால்-நான் கூறுவது காலத்துக்கொவ்வாத கதையே!
அன்போடு
சிறிரங்கன்

Sri Rangan said...

குமிழி?குமிலி? வணக்கம்.நான் நடுநிலையாளனல்ல.பக்கஞ் சார்ந்தவன்.ஒடுக்கும் வர்க்கமாகவும்,ஒடுக்கப்படும் வர்க்கமாகவுமுள்ள மனித சமுதாயத்துள் நான் ஒடுக்கப்படும் வர்க்கத்தைச்சேர்ந்தவன்.எனவே ஒடுக்கும் வர்க்கத்தின் சிறுசிறு கண்துடைப்புகளை நான் போற்றவேண்டியதில்லை.அடுத்து 'நமது கல்வியைக் காட்டுவதாகவென்பது'... என் சுயவிமர்சனத்தை உங்களுக்குப் புரியும் மனநிலையில்லையென்பதைக் காட்டுகிறது.

Anonymous said...

BY KUMILI

நீங்கள் எங்கோ சொல்லியிருந்தீர்கள் எனது சமூகவியல் அறிவை கொண்டு கருத்தாட முற்படுவதாக. அதையோ நாம் சுட்டியிருந்தோம்.
அதாவது உங்கள் சமூகவியல் பார்வை தெளிவற்றது. முன்பின் முரணனானது .மற்றும் படி சுயவிமரிசனத்தை தாங்கமுடியாது என்று நீங்கள் கருதினால் அது உங்களோடு.............. அடிமைபட்டமக்களின் விடுதலைக்காக கதைப்பதாக நீங்கள் கூறுவது ...............................அபத்தம்

Anonymous said...

BY KUMILI

நீங்கள் எங்கோ சொல்லியிருந்தீர்கள் எனது சமூகவியல் அறிவை கொண்டு கருத்தாட முற்படுவதாக. அதையோ நாம் சுட்டியிருந்தோம்.
அதாவது உங்கள் சமூகவியல் பார்வை தெளிவற்றது. முன்பின் முரணனானது .மற்றும் படி சுயவிமரிசனத்தை தாங்கமுடியாது என்று நீங்கள் கருதினால் அது உங்களோடு.............. அடிமைபட்டமக்களின் விடுதலைக்காக கதைப்பதாக நீங்கள் கூறுவது ...............................அபத்தம்

Sri Rangan said...

நன்றி குமிழி.அது சரி குமிழி நாம் வைக்கும் கருத்துத் தெளிவற்றதெனக் கூறுவதைவிட்டு,அவற்றின் தெளிவானதையும்-எமது தெளிவற்றதையும் ஆதாரப்படுத்திக்காட்டினால் நானும் தெளிவு பெறமுடியுமே!
அவற்றைச் செய்வீர்களென ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.அடுத்துச் சுயவிமாசனத்தைப் புரிவதென்ற வார்த்தைக்கும்-தாங்க முடியாதென்ற வார்த்தைக்கும் பாரிய பொருள்வேறுபாடுண்டு.நான் முன்வைத்தது:புரிந்துகொள்ளும் மனநிலையில்லை,என்பதே!நீங்களோ உங்கள் பாட்டுக்குச் சொல்கிறீர்கள்.

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன், என்னைப் பாசிசவாதி ஆக்கிவிட்டீர்கள்; அதுவும் சரிதான். ;-) வெங்கட்டின் பக்கத்திலே நான் எழுதியதிலிருந்து வெட்டி ஒட்டும்போது சிரிப்புக்குறி [ :-) ] நீர்த்துப்போகுமென்று யார் கண்டது! அப்படியே கிடக்கட்டும். ஏதோ வாதியாகவே போகட்டும்; மார்க்ஸிஸம் ரொட்ஸ்கிஸம் குறித்து நான் கிண்டல் செய்யவில்லை. அப்படியாகக் கிண்டல் செய்ய மனம் வராத நிலைப்பாட்டிலேதான் நிற்கிறேன். ஆனால், நடைமுறைச்செயற்றிட்டங்கள் ஏதுமில்லாமல் உதிரி மனிதன் - உபரி விளைச்சல் என்று பேசிக்கொண்டே இருப்பதிலே ஏது பயன்? உந்த நடைமுறைச்செயற்றிட்டங்கள் இல்லாமப்போய்த்தான் புளொட் போல காத்திரமாக இருந்திருக்கக்கூடிய இயக்கங்களும் உள்ளே செயற்பட முனைந்த தீப்பொறிகளுக்குத் தலையிலே எண்ணெய் ஊத்தின எண்டாவது யோசிச்சுப்பாக்கலாமே? தேனி.கொம்மிலே இணைப்பும் அதைத் தொடர்ந்து உங்கள் கனவுப் போஸ்டுகளும் என்னத்தை எம்மைப்போல உங்களை உயிர்நிழலிலே கட்டுரை வாசித்தறியத் தொடங்கின பார்வையாளருக்குச் சொல்லும்? உங்கள் கருத்துகள் உங்களுடையவை; அதைச் சொல்லக்கூடாதென்று எங்கேயாவது சொல்லியிருக்கிறேனா? ஆனால், செயற்றிட்டமில்லாமற் பேசும் தத்துவம் வத்தை மற்றக்கரைக்குப் போக உதவுமாவெண்டு யோசிச்சுப்பாத்தியளெண்டால், விளங்கும். மிகுதிக்கும் பதிலெழுத விருப்பமே; ஆனால், நீங்கள் பதிலான பகுதிக்குள்ளே உங்கள் பதிலையும் முடக்கிப்போட்டிருக்கிறதைப் பார்த்து இருந்து வாசிக்க முடியவில்லை. வேலையிலயிருந்து வீட்டுக்கு ஓடுறன்; இரவைக்கு அல்லது நாளைக்கு விபரமாய்ப் பதில்.

Anonymous said...

சிறீரங்கன் நீங்கள் சொன்னது போலவே தினமுரசு அற்புதன் ராஜினியை கொலை செய்தது ஈபிஆர்எல்எப் என்று குறுப்பிட்டிருந்தார்.

Sri Rangan said...

இரமணி,உங்கள் மனதைப் புண்படுத்தும்படி அதிலெழுதவில்லை.அந்தக் கருத்துக்களை 80 களிலிருந்து கேட்டோம்.இத்தகையச் சட்டாம்பித்தனத்தை அமைப்புகளுக்குள் மிக மலிவாகக்கேட்கப் பட்டதைச் சொன்னேன்.என்னை மன்னிக்கவும்.அடுத்து செயற் திட்டம் வகுப்பதெல்லாம் ஒரு அமைப்புக்குள்ளேதாம் முடியும்.அதனாற்றாம் புரட்சிகர அமைப்பைத் தோன்றவிடாதபடி வன்முறைவடிவமும்-வன்முறையற்ற கருத்தியல் வடிவமாக வைத்துக்கொண்ட அடக்குமுறை வடிவத்தால், முதலாளித்துவம் விடுவதில்லை.மக்கள்-தனிநபர்கள் புரட்சிகரமாகவிருந்து ஒன்றுஞ் செய்யமுடியாது.அமைப்பாண்மையுடைய எந்த அமைப்பும் இப்போதைய காலத்தில் தோற்றமுற முடியாது.இதற்குப் பற்பல காரணிகளுண்டு.அதன் நிமித்தமேதாம் புலிகளைப் புரட்சிகர அரசியலை முன்னெடுக்க வற்புறுத்துகி(றேன்)pறோம்.இந்த அடிப்படையையொட்டித்தாம் பேசமுடியும்.மாற்றமைப்பெனும் கருதுகோள் வெறும் கருதுகோள் மட்டுமே.இதனால் ஆவது பூச்சியம்.ஈழத்தைப் பொறுத்தவரை யாராவது புதிதாய்க் கோடுகீறியொன்றை வரைவதாகச் சொன்னால் அவரைப்பார்த்துப் பரதாபப்படத்தாம் முடியும்.புரட்சிகர அரசியலை முன்னெடுக்முடியாத பலவீனத்தைப் புலிகளின் இராணுவக்கட்டமைப்போடு போட்டுக் குழப்பிவிடாமல் அவர்களது சித்தாந்தத்தை உந்தித் தள்ளும் வர்க்க அரசியலுக்குள்தாம் காணமுடியும்.எனவே அரசியலின் பொருளாதாரக்கோரிக்கையென்ன?முதலாளித்துவமா?தேசியமுதலாளியமா அல்லத் தரகு முதலாளியமா?தேசியமுதலாளித்துவத்தையே அடியோடுவெட்டிச் சரித்துவிட்டது, ஏகாதிபத்தியம்.இதில் தரகு முதலாளிகளைப் பலப்படுத்தும் அந்நிய சக்திகளால் புலிகள் அமைப்புச் சிதறப்போகுதென்று நான் கூறினால் பலர் திட்டுவார்கள்.உண்மை கருணா பிளவில் நம் முன்னே.

இவற்றை வைத்தே முற்போக்கு அரிசியல்வேலைத் திட்டத்தை முன்னெடுக்கத் தூண்டுகிறோம்.இது சாத்தியமானால் இலங்கை தென்னாசியப் பிராந்தியத்துக்கே வழிகாட்டும்.

இரமணி!மீண்டும் மன்னிக்கவும்.
அன்புடன்
சிறிரங்கன்.

Sri Rangan said...

அது சரியானது.

வன்னியன் said...

விளக்கத்துக்கு நன்றி சிறிரங்கன்!
குறிப்பாக தேனியுடன் உங்களுக்கிருக்கம் தொடர்பையும் அவர்களின் மீதான சில விமர்சனத்தையும் கூறியதற்கு. இது இல்லாத சந்தர்ப்பத்தில் அவர்களின் முட்டாள்தனமான, கோமாளித்தனமான கருத்துக்களைக் கொண்டே (இப்படிச் சொல்வதும் பாசிசமாக உங்களுக்குத் தெரியலாம்)உங்களை எதிர்கொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்தேன். இப்போது தெளிவாக்கிவிட்டீர்கள். நன்றி.
ஆனால் உங்களின் அரசியல், புலியெதிர்ப்பு அரசயல்தான் என்பதுதான் இன்னும் எனது கருத்து. "பொடியங்களுக்குக் காயடித்தல்" என்பதும் "அனாதைச் சிறுவர் இல்லங்களை போருக்காக வளர்க்கப்படும் வேள்விக் கிடாய்கள்" என்பதும் உங்களின் அடிப்படையில்லாத தீவிர புலியெதிர்ப்பே. இரண்டுமே அப்பட்டமான பொய்யென்று நான் சொன்னால், உடனே உங்களுக்கு உலகம் முழுக்க தொடர்பு இருப்பதாகச் சொல்வீர்கள்.

தமிழீழம் சாத்தியமில்லையென்று சொல்லிவிட்டீர்கள். புலிகளின் சமஸ்டி ரீதியிலான தீர்வை எங்குமே நீங்கள் நையாண்டி செய்ததில்லையா? இப்போதய நிலையில் கொலைகளைத் தவிர புலிகள் மீது குற்றம்சொல்ல ஏதுமில்லை. அப்படியா?

Anonymous said...

ஸ்ரீரங்கன் வாதம்முழுவதையும் வாசித்துவிட்டுத்தான் உங்களுடன் வாதிட வருகிறேன்.கருணாவின் பிளவோடு புலிகள் இயக்கம் சிதறுண்டு போய்விட்தென்று கூறும் நீங்கள் இன்னமும் தமிழருக்கு புலிகளால் விடிவு வரும் என்று நம்புவது போன்ற தோரணையில் அவர்களது அரசியல் இராணுவ கட்டமைப்புக்கள் தொடர்பான அலசலில் ஈடுபட்டுள்ளீர்கள்.இரண்டுக்கும் இடையில் பலத்த முரண்பாடு தெரிகிறது.

சிறுவர்களை படைக்கு சேரத்தல் உட்பட எத்தனையோ குற்றச்சாட்டுகளுக்கு உலகநாடுகளுக்கு தேடிச்சென்று விளக்கமளிக்கும் புலிகள் சுயவிமர்சனத்தை விரும்பாதவர்கள் என்று இலக்கணப்படுத்துகிறீர்களே எவ்வாறு?

புலி எதிர்ப்பு என்ற உள்ளார்ந்த உணர்வை பொருளாதாரக்கோரிக்கை முதலாளித்துவம் தேசியமுதலாளியம் தரகு முதலாளியம் என்றபோர்வையில் போட்டுக்குழப்புவதுபோல தெரிகிறதே?

Anonymous said...

d

Sri Rangan said...

வன்னியன்,அருணன் வணக்கம்!
நீங்களிருவரும்தாம் ஏதோ விடுதலை விசுவாசிகளாகவும்,உங்களுக்கேதாம் புலிகள் அமைப்பைப் பட்டயமெழுதிய மாதிரியும் குதர்க்கம் பேசுகிறீர்கள்.நான் கூறும் கருத்துக்களை முழுமையாக விளங்கிக் கொள்ள முனையவும்.இல்லையேல் மற்றவர்களுக்கு முத்திரைகுத்தும் வேலையை விடவும்.தமிழ் மக்களின் தேசிய விடுதலையை உங்களுக்குப் பட்டயம்போட்டு யாரும் தரவில்லை.விவாதங்களைப்புரிந்துகொள்ளப் பக்குவமற்ற நீங்கள்தாம் புலிகள் அமைப்பின் ஆளுமைக்கு எதிரிகள். மற்றவர்களை விமர்சிக்கிற பாணியில் ஆரம்பித்துப் பின்பு முத்திரைகுத்தி அன்னியப்படுத்தி விடுவதிலும்-அதையே சாட்டாக வைத்துத் துரோகிப் பட்டம் தரவும் முனைவதில்தாம் உங்கள் செயற்பாடுகள் அமையும்.உங்களுக்கும் பொருளாதார அறிவுக்கும் எட்டாம் பொருத்தம். எனது பதிவில் எதைவேண்டுமானாலும் மறுமொழியாக எழுதுங்கள் அது பற்றிக் கவலையில்லை.ஆனால் உங்களிருவருக்குமாக எந்தப் பதிலும் தர நான் விரும்பவில்லை.

வன்னியன் said...

பொருளாதாரத்துக்கும் எனக்கும் வெகுதூரம்தான் நான் அதை ஒத்துக்கொள்கிறேன். நானெங்கே பொருளாதாரம் பற்றிக் கதைத்தேன்? சொல்லப்போனால் மற்றவர்கள் சோசலிசத்தையும் பொதுவுடமையையும் கேள்வி கேட்ட அளவுக்குக் கூட நானெதையும் கேட்கவில்லை. உங்கள் தேனி பற்றிய விளக்கம் பற்றி நான் கூறியது என்ன? உங்களுக்கும் அவர்களுக்கும் கொள்கையளவில் உடன்பாடில்லையென்று நீங்கள் தெளிவித்ததற்கு நன்றிதானே கூறியிருந்தேன். நான் கேட்டது இரு விசயங்களைத்தான். காயடித்தல் பற்றி நீங்கள் கூறியதும் வேள்விக்கிடாய் பற்றிக் கூறியதும். இது எப்படி புலிகளைக் குத்தகைக்கு எடுத்ததாகும்? உங்களைத் துரோகி பட்டம் கட்டியதாகும்?
என்னைத் தயவுசெய்து புலியென்று சொல்ல வேண்டாம். அது எனக்குக் குற்ற உணர்ச்சி. வேண்டுமானால் வால்பிடிகள் என்று கூறுங்கள்.

Anonymous said...

அரசாங்கம் அரசாங்கம் எண்டு சொல்லியே காலத்த ஓட்டுங்க
புலி இந்த முப்பது வருசத்தில் என்னதான் செய்தது சொல்லுங்கோவன் பார்ப்பம்
நீங்க என்னத்த கிளிச்சநீங்க என்றாவது சொல்லுங்க பார்ப்பம்
தமிழன் அடிமைப் புத்தி உள்ளவன் ………………
நேற்றுச் சந்திரிக்காவோடு, இன்று ரனிலோடு,
நாளை மன்மோகனோடு.
இவர்கள் எப்போதும் மக்களோடு இல்லை.
தமிழரின் முதுகில் சவர்ரி விட்டு தமிழரின் கழுத்தை அறுக்க மற்றுமொரு கோஷ்டி தயாராகுது போல.

அகதி தமிழனுக்கு இனி வித்தை காட்டி பிழைப்பு நடத்த ஏலாது. ஆனால் அரசாங்கத்திற்கு அவித்து நாலு விளையாட்டு காட்டலாம் எண்டு கண்டு பிடிச்சிட்டாங்கள்

சந்திரிகாவிடமும் காசு அடித்து ரூபவாகினியிலும் காசு அடித்து
பிறகு ஊர்க் காசில் கனடா வந்து
மனச் சாட்சியின் குரல் என்று மனோ ரஞ்சன் மனச் சாட்சி இல்லாமல் மனச்சாட்சி உள்ளவரின் காசுக்கு கள்ளக் கணக்கு காட்டி டோரோண்டோவில் கண் காட்சி வைத்தது வரை இவங்கள் ஆர என்று ஊருக்கு தெரியும்.
சந்திரிகாவுடன் நின்ற மனோரஞ்சனுக்கு ஏன் ராஜபக்சேவுடன் நிற்க முடியவில்லை?
காரணம் தெரிந்தவர்களுக்கு இந்த குழு இலக்கற்ற சுயநல தம்பட்ட குழு என்று நிட்சயமாக புரிந்திருக்கும்

வங்காலை செல்லையா இக்னாசியஸ் (மனோ ரஞ்சன்)
மிகவும் பலவீனமான ஒரு பேர்வழி
எழுத்துக்கும் பேச்சுக்கும்
நடத்தைக்கும் சம்பந்தமே இல்லை.

சும்மா பீலா விட்டு பிலிம் காட்டி
தம்பட்டம் அடித்து
மனோ ரஞ்சன் போன்றோர்
இம் இனத்தின் சோரம் போன
துரோகிகள்.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...