Sunday, April 03, 2005

சில குறிப்புகள்

சில குறிப்புகள்

கடந்த சில நாட்களாக எனது வலைப் பதிவிலும் வேறு இரு முகமூடி வலைப்பதிவிலும் ஈழப்போராட்டம் பற்றிய விவாதங்களைத் தொடரும்நோக்கில் முன் தள்ளப்பட்ட படைப்புகளுக்கு நிலவுகின்ற ஆதிக்க் கருத்தியலால் ஈடுகொடுக்க முடியவில்லை.மார்க்சியத்தைக் கரைச்சுக்குடித்த நண்பர்கள் அது ஈழத்துக்குப் பொருத்தமில்லாத வெளிநாட்டுத் தத்துவம் என்றுவேறு குறிப்பிட்டு தம் அதீத மார்க்சியப் புரிதலை வெளிப்படுத்தியபோது நாம் இந்தப் புனிதமான ஈழப்போரை கொச்சைப்படுத்தாமல் ஒதுங்குவதாகவெண்ணி ஈழம் பற்றிய அனைத்துக் குறிப்புகளையும் எனது பதிவுகளிலிருந்து அழித்து விட்டுள்ளேன்.மார்க்சிய மூலவர்களே தாக்குப் பிடிக்க முடியாத இந்த முதலாளியக்கருத்தியற் போருக்கு சுண்டங்காயான 'நான்'எந்த மட்டத்துக்கு? முடியவில்லை. சொல் வீச்சுக்கொச்சைப்படுத்தல்-யாழ்பாணியத்துக்கேயுரிய:'நீர்-உம்மை'போன்ற கடுப்பான ஆத்திரமூட்டல்-படுதூஷணங்கள் நெஞ்சைப் பிளந்து இதயத்தையெடுத்து அவித்துண்ணும் உளவியற்றளத்தோடு மோதமுடியாது.என்னால் இவ்வளவுதூரம் என் கருத்தக்களை முன்னெடுக்க முடியாது.நான் எதிர் பார்த்த பண்புவேறானது.எம்மினத்துள் ஊடுரிவியுள்ள கருத்தியல் ஆதிக்கமானது அதிகாரத்துவங்களின் வழி தோன்றியது.இது காலாகாலமாக மக்களை அடிமைத்தனத்துள் இருத்திவைக்கும் பண்பைத் தன்னகத்தே கொண்டியங்குகிறது.

நடுத்தர வர்கத்துக்கேயுரிய இறுமாப்பும்-ஆதிக்கவாதமும் நிறைந்த கூட்டுக் கலைவையான இந்த உளவியலை எந்தத் தத்துவத்துடனும் ஒப்பு நோக்க முடியாது.இதற்கான பாரிய அரசியலூக்கம் ஒழுங்கமைந்த பொருளாதாரப் பலத்தடன் உருவாகியுள்ளது.சமுதாயவாரியான பொதுப் புரிதலென்பது கெட்டிதட்டிய குட்டிப்பூர்சுவா எண்ணங்களால் நிரம்பி வழியும் இந்த உளவியலோடு எந்தக் கொம்பனாலும் போட்டியிட முடியாது.இது தனது ஆயுதமாக வசை பாடுதலையும்,பழிபோடுதலையும் ஒரு உளவியல் யுத்தமாகக்கொண்டு தனிநபர் வழிபாட்டை முன்நிறுத்தி கூப்பாடுபோடும்.அதையே அதீதத் தேவையாகவும் வலியுறுத்தும்.இதை ஏற்காத தளத்தை எப்படியும்.உடைப்பதில் அது கண்ணும் கருத்துமாகக் காரியமாற்றும்.இந்த விதமான போரில் யாரும் வெற்றீ கொண்டதாகச் சரித்திரமில்லை.எனவே நாம் மிகவுமொரு கொடிய ஆதிக்கக் கருத்துக்குள் முடங்கியுள்ளோம்.நமது சிந்தனா முறை மிக மிகத் தனிநபர் வாதக் கண்ணோட்டமாக விருத்தியுறுகிறது.இதிலிருந்து எந்தச் செம்மையான செல்நெறியும் வெற்றி கொள்ள முடியாது.இதுவொரு இருண்ட காலத்தை நமக்கு வழங்கிவிடுகிறது.இந்த கருத்தியற் போரானது பல தளங்களிலும் முன்னெடுக்கப் படுகிறது.பத்திரிகை-செய்தித் துறை,வானொலி-வானொளி,கல்வித்துறை மற்றும் இணையதளமென இது விரிந்து கிடக்கிறது.இதை வெற்றியீட்டி சரியான பாதையை தெரிவுசெய்ய எந்தக்கொம்பனாலும் முடியாது.இதுவரை தம்மாலேயே செய்ய முடியாத காரியத்திற்கு -இத்தளத்திற்கு வெளியிலிருந்து யாராவது கருத்து வைத்தால்-அவரிடம் கணினிபோன்று டக்,டக் பதில்-முடிவு-தீர்வு கேட்பது நம்காலத்து உளவிலாகிவிடுகிறது.

நாமென்ன வைத்தக்கொண்டா இல்லையென்கிறோம்?முதலாளிய உலகத்தை வெற்றிகொள்ளதக்க எந்த மந்திரமும் இப்போதில்லை.இவர்களது கருத்தியற்போரை நாம் தனிநபர் சார்ந்த கண்ணோட்டமாகக் குறுக்க முடியாது.இது பாரிய தளங்களில் மனிதரின் ஆழ் மனிதில் காரியமாற்றும் மிகப்பெரும் நிறுவன மயப்பட்ட சமுதாய உளவியலைத்தோற்றுவதால் நாம் காணும் கனவானது ஒழுங்கமைந்த புரட்சிகரக் கட்சியில்லாமல் இந்த உலகச் சர்வ வல்லமையுள்ள முதலாளிய கருத்தியற் கட்டுமானத்தை வெற்றியீட்ட முடியாமல் ஒதுங்குகிறோம்.இந்த நோக்கோடு எனது பதிவில் இனி ஈழம் பற்றிய ஒப்பாரியோ அல்லது விமர்சனமோ பதியப்படமாட்டாது.மாறாக நாம் உலக அரசியற்போக்கை விமர்சனஞ் செய்வோம்.ஏனெனில் நாமிப்போ அரசு எனும் வடிவத்துள் வாழவில்லை மாறாக அரசுகளெனும் பாரிய கொடுங்கோனுக்குள் வாழ்வதால் குண்டுச் சட்டிக்குள் குதிரை விடத் தேவையில்லை.வழமைபோல் எந்த அதிக்க-அதிகாரத்துவத்தக்கும் கட்டுப்படாமற் செயற்பட முடியாத தோல்வியை ஒத்துக்கொண்டு இந்தப் பதிவைக்கூட அழித்த விட்டு-பேசமால் விஜேய்,ரிக்ஷா படம் பார்த்து பிள்ளைப்பெத்து -வேலைக்குப்போய் செக்ஸ் செய்து வாழ்வை முடிப்பதுதாம் இனிச் சாத்தியம்போலுள்ளது. எங்கேயும் எதையும் சொன்னால் ஒன்று டுமீல் அல்லது பேப்பூனா... இவைகளே நமக்கு அனுபவமாகிறது.இதுவுமில்லாதுபோனால் அவன் அந்த அமைப்பு,டக்ளஸ் ஆள்-சிங்களவன் இத்தியாதி!பிறகென்ன? சொல்லிக்கொண்டே போகலாம்...

03.04.2005

வூப்பெற்றால்

ஜேர்மனி ப.வி.ஸ்ரீரங்கன்

8 comments:

Anonymous said...

jhq;fs; ,t;tsT Rygkhf tpl;L tpyFtJ vd;gJ ftiyf;FupaJ. ePq;fs; ntspg;gilahf vOj Kaw;rpj;jJ ghuhl;LjYf;F cupaJ vdpDk;> EPq;fs; jdpkpdjdhf epd;W rhjpf;f vz;azpaJ jtnwdg;ggLf[d;wJ. ePq;fs; Nghg;igg; gw;wp vOjpajw;F MjuTf; fUj;ij toq;fpatd; Mdhy; ,d;iwa fhyk; ntspg;gilahf vjidAk; Kfk; fhz;b nra;a KbahJ. ,JNtjhdl ajhHj;jk;.
gpd;thq;FtJ jtwy;y Mdhy; xJq;FtJ jtW
ed;wp

thamillvaanan said...

//நாம் இந்தப் புனிதமான ஈழப்போரை கொச்சைப்படுத்தாமல் ஒதுங்குவதாகவெண்ணி ஈழம் பற்றிய அனைத்துக் குறிப்புகளையும் எனது பதிவுகளிலிருந்து அழித்து விட்டுள்ளேன்.//

அன்பின் சிறிரங்கன்
உங்களுக்கு உங்கள் உணர்வுகளை கொட்டித்தள்ள ஒரு வடிகால் தேவையாக இருந்தது. ஆனால் அது சமூக ஓட்டத்துக்கும் நடைமுறை யதார்த்தத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் உண்மைகளுக்கும் முரணாக இருப்பதால் நீங்களாகவே அவ்விடயங்களிலிருந்து ஒதுங்கிகொள்வதாக முடிவெடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

நான் பிழைவிடலாம் நீங்கள் பிழைவிடலாம் நாங்கள் பிழைவிடக்கூடாது என்ற மாவீரனின் வார்த்தைகளோடு
அன்புடன்
தமிழ்வாணன்.

Sri Rangan said...

--
Posted by Anonymous to The point:social steady is the sociality. at 4/3/2005 10:21:24 PM
தாங்கள் இவ்வளவு சுலபமாக விட்டு விலகுவது என்பது கவலைக்குரியது. நீங்கள் வெளிப்படையாக எழுத முயற்சித்தது பாராட்டுதலுக்கு உரியது எனினும், நுPங்கள் தனிமினதனாக நின்று சாதிக்க எண்யணியது தவறெனப்பபடுகஜன்றது. நீங்கள் போப்பைப் பற்றி எழுதியதற்கு ஆதரவுக் கருத்தை வழங்கியவன் ஆனால் இன்றைய காலம் வெளிப்படையாக எதனையும் முகம் காண்டி செய்ய முடியாது. இதுவேதானட யதார்த்தம்.
பின்வாங்குவது தவறல்ல ஆனால் ஒதுங்குவது தவறு
நன்றி

Sri Rangan said...

அன்புள்ள பெயர் குறிப்பிடாத நண்பருக்கு,வணக்கம்!
தாங்கள் குறிப்பிட்டது.சரியே.
என்றபோதும்
காலம் பதில் சொல்லும்
வரலாறு மக்களே படைக்கிறார்கள்,தலைவர்களில்லை.



திரு.தமிழ்வாணன் வணக்கம்!தங்கள் கணிப்புச் சரியானது.
நான் 25 ஆண்டுகளாக எழுதி வருபவன்
.இந்த வலைப் பதிவு எனக்கு வடிகால்தாம்!
ம்....என்ன செய்யலாம்?
பொய்மை பயத்தின் வேகத்தை விரிவுப் படுத்துகிறது, வேதனையை கூட்டிவருகிறது.:'

"யாரும் உனக்கு
செவி சாய்க்கவில்லையானால்
தனிமையில் நடந்து செல்
அச்சத்திலாழ்ந்து அவர்கள்
சுவரைப் பார்த்தபடி
மௌனியாகிப் பதுங்கினார்களானால்
ஓ...மகிழ்சியற்றவர்களே
நீ உன்னுடைய மனம் திறந்து
வெளிப்படையாகப் பேசிவிடு
பாலைவனத்தை நீ கடந்துவரும்போது
வேறு திசையைத் திரும்பியபடி
அவர்கள்
உன்னை அலட்சியப் படுதஇதினால்
ஓ.. மகிழ்ச்சியற்றவர்களே
முட்புதர்களடங்கிய குருதிவழிப் பாதையில்
நீ திடமாகக் கால் பதித்து நட
உன் பயணம்
தனிமையில் தொடரட்டும்
புயல் அடிக்கும்
துன்பமான
இரவுச்சூழலில்கூட
விளக்கை உயர்த்திப் பிடித்து
வெளிச்சம்தர
அவர்கள் துணியவில்லையானால்
ஓ... மகிழ்ச்சியற்றவர்களே
உனக்கு ஏற்பட்ட
வலியினாலும்
உள் மன மின்னலாலும்
நீ உன் இதயத்தையே
பற்றவைத்துக்கொண்டு
ஒளியேற்றிக்கொள்
அவ்வாறானால்-நீயே
வழிகாட்டும்
ஒளியாவாய்."

-கவியோகி:இரவீந்திரநாத் தாகூர்

ப.வி.ஸ்ரீரங்கன்

Anonymous said...

use Bamini to read this ......
tzf;fk;
trjp gilj;jtH $Wfpd;w cz;ik vd;gJ grpapy; thLgtdpd; cz;ikapYk; ghHf;f ngha;ahdit. ,tHfs; njUf;fspy; gLj;jpUg;gtHfisg; gw;wp ,tHfs; fijg;gjw;F jahuhf ,y;yhjtHfs;. Vnddpy; mt;thW gLj;Jwq;Fk; $l;lk; ,Uf;fpd;w Ntisapy; jhd; ,tHfshy; ciog;igr; Ruz;l KbAk;. Mf ,tHfspd; cz;ik vd;gJ mjhtJ khHf;rPa ghHit ngha;nad ciug;gtH. ,e;jr; r%fj;jpd; caH epiyapy; ,Ue;J nfhz;L fPo; ,Uf;Fk; kf;fspd; Nky; rthup nra;aj; jahuhf ,Uf;Fk; $l;lNk.
ehk; njhlHr;rpahf vk;ik ,dk;fhl;lhy; $l ,Uf;fpd;w etPd trjpfisg; gad;gLj;jp vk;khy; ,ad;wij nra;a Ntz;Lk;. kf;fs; jhd; tuyhw;iw cUthf;FgtHfs; Mdhy; mtHfis Kd;dzpg;gilahf;Fk; flik Kd;Ndhf;fpa gpuptpdHfspd; nghWg;ghf ,Uf;fpd;wJ. ,jd; nghUs; mwptpaPtpfs; jiytHfshf ,Ug;gjy;y. ciof;Fk; kf;fis tpopg;Gf; nfhz;nlo itg;gJ Kd;Ndwpa gpuptpdupd; nghWg;G.
ePq;fs; Fwpg;gpLtJ Nghd;W mjpfhu jpkpH> Mztk;> miuNtw;fhl;Lj;jdk;> ,Wkhg;G vd;gJ ,d;iwa r%fj;jpd; epajp ,jid nty;tJ vd;gJ gd;Kfg; Nghuhl;lk;.
,d;W Gypfspd; ,Ue;J gpupe;j fUzhtpd; MjuthsHfshfr nraw;gLtHfs; ,d;W ,lJrhupfs; nrhy;tjpy; rpwpjsthtJ cz;ik ,Uf;fpd;wJ vd ek;Gfpd;whHfs; jhNd. ,jw;F rpy fhyk; vLj;jJ. ,jw;F fpof;F tpiy nfhLj;Jf; nfhz;L ,Uf;fpd;wJ. ,e;j epiy khWk; Mdhy; mjw;fhd Ntiy mZFKiw vd;gJ GJg;gpf;fg;gl Ntz;Lk;. ,Uf;fpd;w Clfq;fspd; jdp GypnajpHg;G epiy vd;gJ vt;tpjj;jpYk; Kd;Ndw;wj;ij nfhz;Ltug; Nghtjpy;iy. ,jpy; ,Ue;J kf;fis nty;tJ gw;wpa mZFKiw mtrpahFk;.
,d;W INuhg;gpa jdpj;Jtthj tho;epiy> kjthjpfspd; %iyr;ryit> ,af;fj;jpd; rdehaf tpNuhjg; Nghf;Ff;fs; studttgard ntwpahl;lk; Nghlf;$ba cstpaiy cz;lhf;fpd;wJ.
,e;j epiyia khw;WtJ vd;gJ xU fl;rpapdhy; jhd; KbAk;. jdpegHfshf ,Ue;J ,g;ngUk; fhupaj;ij rhjpg;gJ vd;gJ ngUk;,lH. vdNt ,tw;iw nra;a xU mikg;gpd; fPo; nraw;gl Ntz;ba Njitia cq;fs; mDgtk; czHj;jpapUf;;Fk; vd ek;Gfpd;Nwd;. ,jw;fhd xU topiaj; NjLq;fs;
tho;Nt Nghuhl;lk; jhd; ,jpy; vtUk; xJq;fp tpl KbahJ. ,JNtjhd; cz;ik.......
rq;fuh.....

Sri Rangan said...

Posted by Anonymous to The point:social steady is the sociality. at 4/4/2005 10:02:41 AM

வணக்கம்
வசதி படைத்தவர் கூறுகின்ற உண்மை என்பது பசியில் வாடுபவனின் உண்மையிலும் பார்க்க பொய்யானவை. இவர்கள் தெருக்களில் படுத்திருப்பவர்களைப் பற்றி இவர்கள் கதைப்பதற்கு தயாராக இல்லாதவர்கள். ஏனெனில் அவ்வாறு படுத்துறங்கும் கூட்டம் இருக்கின்ற வேளையில் தான் இவர்களால் உழைப்பைச் சுரண்ட முடியும். ஆக இவர்களின் உண்மை என்பது அதாவது மார்க்சீய பார்வை பொய்யென உரைப்பவர். இந்தச் சமூகத்தின் உயர் நிலையில் இருந்து கொண்டு கீழ் இருக்கும் மக்களின் மேல் சவாரி செய்யத் தயாராக இருக்கும் கூட்டமே.
நாம் தொடர்ச்சியாக எம்மை இனம்காட்டால் கூட இருக்கின்ற நவீன வசதிகளைப் பயன்படுத்தி எம்மால் இயன்றதை செய்ய வேண்டும். மக்கள் தான் வரலாற்றை உருவாக்குபவர்கள் ஆனால் அவர்களை முன்னணிப்படையாக்கும் கடமை முன்னோக்கிய பிரிவினர்களின் பொறுப்பாக இருக்கின்றது. இதன் பொருள் அறிவியீவிகள் தலைவர்களாக இருப்பதல்ல. உழைக்கும் மக்களை விழிப்புக் கொண்டெழ வைப்பது முன்னேறிய பிரிவினரின் பொறுப்பு.
நீங்கள் குறிப்பிடுவது போன்று அதிகார திமிர், ஆணவம், அரைவேற்காட்டுத்தனம், இறுமாப்பு என்பது இன்றைய சமூகத்தின் நியதி இதனை வெல்வது என்பது பன்முகப் போராட்டம்.
இன்று புலிகளின் இருந்து பிரிந்த கருணாவின் ஆதரவாளர்களாகச செயற்படுவர்கள் இன்று இடதுசாரிகள் சொல்வதில் சிறிதளவாவது உண்மை இருக்கின்றது என நம்புகின்றார்கள் தானே. இதற்கு சில காலம் எடுத்தது. இதற்கு கிழக்கு விலை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. இந்த நிலை மாறும் ஆனால் அதற்கான வேலை அணுகுமுறை என்பது புதுப்பிக்கப்பட வேண்டும். இருக்கின்ற ஊடகங்களின் தனி புலியெதிர்ப்பு நிலை என்பது எவ்விதத்திலும் முன்னேற்றத்தை கொண்டுவரப் போவதில்லை. இதில் இருந்து மக்களை வெல்வது பற்றிய அணுகுமுறை அவசியாகும்.
இன்று ஐரோப்பிய தனித்துவவாத வாழ்நிலை, மதவாதிகளின் மூலைச்சலவை, இயக்கத்தின் சனநாயக விரோதப் போக்குக்கள் ளவரனவவபயசன வெறியாட்டம் போடக்கூடிய உளவியலை உண்டாக்கின்றது.
இந்த நிலையை மாற்றுவது என்பது ஒரு கட்சியினால் தான் முடியும். தனிநபர்களாக இருந்து இப்பெரும் காரியத்தை சாதிப்பது என்பது பெரும்இடர். எனவே இவற்றை செய்ய ஒரு அமைப்பின் கீழ் செயற்பட வேண்டிய தேவையை உங்கள் அனுபவம் உணர்த்தியிருக்;கும் என நம்புகின்றேன். இதற்கான ஒரு வழியைத் தேடுங்கள்
வாழ்வே போராட்டம் தான் இதில் எவரும் ஒதுங்கி விட முடியாது. இதுவேதான் உண்மை.......
சங்கரா.....


உங்கள் பார்வை சரியானது.நாம் ஏலவே குறிப்பட்டபடி ஒரு புரட்சிகரக்கட்சியின் அவசியம் உறுதிப்படுகிறது.இப்போது தொழிற்சாலையில் உடல்வியற்க நேரமாகிறது.போய் வந்ததும்,தங்களோடு விரிவாக்க உரையாடுகிறேன்.தங்கள் தோழமையான கரம் கொடுப்பு என்னை தூக்கி நிறுத்துகிறது.
நன்றி!
மிக விரைவாக வருகிறேன்
ப.வி.ஸ்ரீரங்கன்

கறுப்பி said...

சிறீரங்கன் இந்த உலகம் தவறான பாதையில் போய்க் கொண்டிருப்பதற்குக் காரணம் அராஜகத்தைச் சகிக்க முடியாமல் குறைந்த பட்சமாகிப் போன மனிதாபிமானிகளும் விலகிக் கொள்ளலே. உலகில் ஆஸ்திகம் ஆணாதிக்கவாதம் முதலாளித்துவம் சர்வாதிகாரம் இத்யாதிகள்தான் மேலோங்கி நிற்கின்றன. இங்கே ஜனநாயகம் அடிபட்டுச் சிதைந்து கொண்டிருக்கின்றது. மனச்சாட்சியில் பேரில் சிறிது உயர்த்திக் குரல் கொடுக்கின் தன் உயிருக்கே ஆபத்தாகிப் போகலாம் என்று ஒதுங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. ஒன்றும் செய்யமுடியாது உலகம் ஆதாளபாதாளத்துக்குள் விழுந்து விட்டது. ஈனக்குரல்கள் யாரின் காதிலும் விழப்போவதில்லை.

Sri Rangan said...

வணக்கம் கருப்பி.
தங்களின் கருத்துக்கு நன்றி.
சமூகத்தள் பலமான தேசியவன்னுணர்வு மேலோங்கி அதுவே ஓருகெட்டிப்பட்ட புனிதமான உளவியலாக மாற்றப் பட்டுள்ளது.இது சமுதாய ஆவேசமாகத் தன் இருப்பை விருத்திக்கிட்டபின் நாம் இந்த உளவியலை புரிய மறுத்துள்ளோம்.இது கடந்தகாலங்களைப் போலல்லாது.பலமட்டங்களாலும் பரப்புரைக்குள்ளாக்கப் பட்டு ஒரு மாதிரித் தேசியமாக முன்னேறியுள்ளது.இங்கு இந்த உளவியற்றளத்தின் மீது யார் கருத்துச் சொல்லி விவாததித்தாலும் அது தேசத்தின்பால் வைக்கப்படும் விவாதமாகவும்-மொத்தத் தமிழரையுமே அவமதிப்பதாகவும்,பின் போராட்டக்காலத்தில் நிறுவப்பட்டுள்ளது.எனவே சூழல்பற்றிய கணிப்பு பாதகமான வினையைத் தருகிறது.வெகுஜன மட்டத்திலான புரிதல் நிச்சியமாக வேறானது.இத்தகைய மனோ நிலை அன்றாடங் காட்சியாய் வாழும் உழைப்பாள தினக்கூலிக்கு இருக்கமுடியாது.எனவே நடுத்தர வர்க்கத்தின் சலசலப்பு அந்த வர்ககத்;தின் குணயியல்பாலேயே தோல்வியடைவது வரலாற்றிற்குப் புதிதல்ல.இங்கும் அதுதாம் நிகழும்.ஏனெனில் ஒழுங்கமைந்த உற்பத்தியுறவற்ற ஒரு சமூகம் இப்போது நாடோடியான நிலையில் திக்குத்திக்காய் நின்று தேசித் தன்மைகளின் பால் அளவற்ற நம்பிக்கை கொண்டுள்ளது.இதுவும் ஒரு முக்கிய காரணமாக நமது கருத்து நிலையை தேசிய விரோதமாகப் பார்க்கிறது.தொடரியக்கமாக வளர்ந்து வரும் இத்தகைய தேசிய அபிலாசைகள் வெறும் கற்பனாவாதத் தேச வரைபடத்தையும்-மொழிவழியான அதிகாரத்தையும் எந்த நேரத்திலும் முன்நிறுத்தும் அரசியலாக விரிவுறும்.எனவே இந்த வகைத் தேசிய அபிலாசை முழுக்கமுழுக்க கருத்தியற்றளத்தின் தொடர்பாடல் முறைமைகளுக்குள் ஆழமாக உள்வாங்கப் பட்டு-அதுவே மிகப்பெரும் நிறுவனமாகப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாம் ஓரம்போவதுதாம் முறையென்றானால் அதுவும் தப்பு.என்றபோதும் ஒருபெரும் இராட்சத பொருட்பலம்-ஆயுதப் பலமுள்ள இந்த அதிகார எல்லையை கண்மூடித்தனமாக எதிர்க்க முடியாது.இதற்கான விலையை உயிராகவோ அன்றி திட்டலாகவோ நாம் பெற்றேயாகவேண்டும். எனவே சற்றுக் கவனமாக முன்னெடுக்கப் படவேண்டிய வர்க்கப் போராட்டம் நம்முன்னே அம்மணமாக உள்ளது.இதை தனிமனிதரின் தன்னார்வக் கோளாறால் சாதிக்கமுடியாது!

ஒடுக்கப்படும் தேசிய இனமாகவுள்ள எந்த மக்கள் குழுவும் தன் தேசிய எல்லையைக் குறுக்க விரும்பாது.இதுவே வேறோரு பாணியிலான திடீர்த்தாக்குதலாக முன்னேறும் வாய்புகள் அதிகமாகும். காரணங்கண்டபின் கவனமாகச் செயற்படவேண்டும்.

அன்புடன்
சிறிரங்கன்

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...