Wednesday, April 20, 2005

போப்பாகிய இனவாதியும்

போப்பாகிய இனவாதியும்

ஆதிக்கக்காரனும்


இன்றைய உலகமானது பயங்கரமான சதிகார உலகமாகும்.இந்த உலகம் மனிதாபிமானமுள்ள எந்த மனிதருக்கும் வாழ்வதற்குதவாத- திமிர்த்தனமான ஆதிக்கச் சக்திகளின் கரங்களில் விழுந்துகிடக்கிறது. இது நல்லதன் அறிகுறியல்ல.இந்தப் பூமிப்பந்து தலைகீழாகச் சுற்றினாலம் சுற்றுமேதவிர ஒரு வெள்ளையினமற்ற மனிதர் அமெரிக்காவுக்கு அதிபராகவோ அல்ல போப்பாகவோ முடியாதென்பது மீளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது!

முடியுமா?

ஏன் முடியாது, நாமெல்லோரும் வரலாமே! மதநம்பிக்கையுடைய வெள்ளையர்களற்ற மானுடர் கூறுகின்றார்.

சாத்தியமா?

இல்லவே இல்லை!

இன்று வெளியாகிய செய்தியைக் கண்டு துள்ளிக் குதித்த ஜேர்மனியர்கள் "Ein Deutscher ist Papst!wir sind stolz.Deutschland Jahuuu" ( ஒரு டொச்சுக்காரர் போப்பாகிவிட்டார்,நாங்கள் பெருமையடைகிறோம்,ஜேர்மனி ,யாகூகூகூகூ..) என்று பெருமிதம் கொள்வதும்,எம்பிக் குதிப்பதும்-கைகளை உயர்த்திப் பலத்தைக்காட்டத் தசைநாரைப் புடைக்க வைப்பதும் ,பழைய ஆதிக்க மனதின் அதிகூடிய விருப்புறுதிதாம்.என்றபோதும் மானுடர்கள்தம் வாழ்வின் மகத்துவத்திற்கான மதங்களெனும் பொய்மையை நாம் இன்றையகூத்தில் மட்டும் காணவில்லை.பண்டுதொட்டு இந்தக்கதையை நம் மூதாதையர்களும் அறிந்துள்ளார்கள்தாம்.

இறையியற்பேராசிரியரான இந்த ஜோசெவ் ராத்சிங்கர் ஒரு பொலிஸ் காரனுக்கு மகனாகப்பிறந்தவர். மிகவும் பிற்போக்கான உளப்பாங்குடைய குடும்பச் சூழலில் வளர்ந்த இந்த மனிதர் கிட்லரின் ;"Hitler Junge"1940 களில் செயற்பட்டுமிருக்கிறார். எனினும் அதுகுறித்த எந்தவிளக்கமும் இதுவரை முன்வைக்கப் படவில்லை.ஆனால் இந்த ஜேர்மனியானது இப்படிச் சொல்கிறது:

"Es ist eine Ehre"


Bundeskanzler Gerhard Schröder nannte Ratzinger einen "großen und geschätzten Theologen", der die Weltkirche wie kein anderer kenne. Bundespräsident Horst Köhler wünschte dem neuen Papst Mut und Kraft. "Dass ein Landsmann Papst geworden ist, erfüllt uns in Deutschland mit besonderer Freude und mit ein wenig Stolz", sagte er. Angela Merkel würdigte die Wahl Ratzingers als "historisch". "Es ist eine Ehre", sagte die CDU-Vorsitzende.

''இது ஒரு கௌரவம்'

இராட்சிங்கர் மகாப்பெரிய பெருமதிப்புக்குரிய இறையியலாளர்,உலகத் திருச்சபையைத்தவிர மற்றெவரையும் இப்படிப் தெரிந்திருக்கமாட்டார்.-இது ஜேர்மன் சன்ஸ்லர் சொரோடர்.

' என் நாட்டுமகன் போப்பாக வந்ததால்,ஜேர்மனிக்குள் நாம் சிறப்பாக-விதிவிலக்காக மகிழ்ச்சியடைகிறோம் கூடவே கொஞ்சம் பெருமையும் கொள்கிறோம்.அவருக்குத் துணிவையுங் பலத்தையும் வேண்டி வாழ்த்துகிறோம்'-கூறுவது:ஜேர்மனிய ரபர்ஸ்டாம்பு ஜனாதிபதி.

'இந்தத் தேர்தல் வரலாற்றுப் புகழுடையது.இதுவொரு கௌரவமிக்கது' யாரிது கூறுவது?-ஜேர்மனிய எதிர்கட்சித் தலைவியும்,அமெரிக்காவின் கைக்கூலியுமாகிய அங்கேலா மேர்க்கெல்.

நல்லது!

உலகத்தை ஒட்டச் சுரண்டுவதற்கான அடுத்த திட்டத்தை மக்களின் அதியுயர் நலனெனச் சொல்லி மக்களிடம் திணிக்க உங்கள் பழைய ஐரோப்பாப் புதல்வர் வந்தது தற்செயலல்ல.சொல்கிறீர்கள்,சொல்லுங்கோ.

115 கார்டினேல்களில் வெறும் 40 கார்டினேல்கள் ஆதரவோடு மல்லுக்கட்டிய ;ராட்சிங்கரை போப்பாக்கிவிட அமெரிக்கா முயன்ற முயற்சி வீணாகிவிடவில்லை.இந்த நன்றிக்காக ஜேர்மனிய அரசு, அமெரிக்க அழிவுயுத்தங்களை இனிவரும் காலங்களில் ஜனநாயகத்தின்பாலானதென வர்ணிக்கும்.

482 வருடங்களுக்குப் பின்பு மீளவும் 'டொச்சு'மனிதர் போப்பாகியதில் நாடே மகிழ்ச்சிக்கடலில் நீந்துகிறது.

16.04.1927 வருடம் ஒரு பெரிய வெள்ளி தினத்தில் பவேரியா மானித்திலுள்ள கிட்லர் செல்வாக்குமிகுந்த குக்கிராமமான 'மார்க் தெஸ் லிக்ட்''டில் பிறந்து கிட்லரின் கனவோடு பாலூட்டி வளர்க்கப்பட்டு,பின்னாளில்1944ஆம் ஆண்டுவரை கிட்லர் மாணவர் அமைப்பில் யூதர்களுக்கெதிராகக் காரியஞ் செய்தவர்தாம் இந்தப் புத்தம் புதிய நம் போப்பாண்டவர் 'பெனடிக் பதினாறு'.பேசாமல்-லூயி பொனபாட் 19 என்று வைத்திருக்கலாம்.

வாழ்க மகனே, வாழ்க! உன் செயற்கரிய சகுனி வேலை ஆதிக்க வாதிகளுக்கு மிக மிக அவசியம், முன்னெப்போததையும்விட இப்போது.

19.04.2005

ப.வி.ஸ்ரீரங்கன்

8 comments:

Anonymous said...

தகவலைப்பாத்ததும் கவலையாகவும் மதபீடமும் கடைசியில் அரசியல் சாக்கடையில் விழுந்துவிட்டதே என்ற சீற்றமும் வருகின்றன.ஆமை பூந்த வீடும் அமெரிக்கா பூந்த நாடும் உருப்பட்டதா சரித்திரமே இல்லை ஸ்ரீரங்கன்.

சைவத்துக்கு ஒரு ஜெயந்திரர் கிறீஸ்தவத்துக்கு புதிய போப் என்ற அவமானம் எழும் அபாய அறிவிப்பை சொல்லாமல் சொல்லியுள்ளீர்கள்.

போப் பதவியை இவ்வளவு காலமும் சமய விவகாரத்துக்கு அப்பால் ஓரினச்சேரக்கை மற்றும் ஒவ்வாத விடயங்களுக்கு அறிக்கை விடும் அமைப்பாக எதிர்பார்த்து வந்தவரக்ள இனி எதுக்கெல்லாம் பயன்படுத்தப்போகிறார்களோ தெரியவில்லை.

நல்ல பதிவு.தொடருங்கள் ஸ்ரீரங்கன்.

Sri Rangan said...

நன்றி அருணன்.மக்களை அடக்கியாளும் முறைமைகள் என்று துவங்கியதோ அன்றிலிருந்து மதங்களும் அதன் பின்னே கைகோர்த்துக் காரியமாற்றுகிறது.மதமெனும் அமைப்புத்தாம் மற்றெல்லா வடிவங்களையும்விட பாரிய ஒடுக்குமுறை வடிவம்.இதைப்புரிவதும் ஒருவகையிற் வரலாற்றுத் தேவையே.

நற்கீரன் said...

இப் பின்னூட்டம் உங்களின் எழுத்துக்களை நோக்கிய ஒரு பொது பின்னூட்டமே. உங்களின் சிந்தனைப்போக்குக்கள் பல உலகியல் தத்துவங்களையெல்லாம் அலசிவிட்டு, இறுதியில் வீட்டுக்குள் சென்று அடங்கிவிடுகின்றது. அதில் ஒரு தவிப்பு, அல்லது இயலாமை தெரிகின்றது. இந்த முரண்பாடு எனக்குள் இருப்பதால் உங்களின் பதிவுகளிலும் பார்க்கின்றேனோ தெரியாது.

விமர்சனங்கள் முன்வைக்கப்படவேண்டும். சுதந்திரமாக முன்வைக்க தடைகள் ஏதும் இருக்ககூடாது. ஈழதமிழ் தளத்தை பொறுத்தவரையில் இதை கருத்தளவில் ஏற்றுக்கொள்கின்றார்கள், நடைமுறையில் இருக்கென்கிறார்கள், ஆனால் இங்கு ஒரு பத்திரிகை கூட விமர்சனத்தை முன்வைப்பது கிடையாது.

விமர்சனம் செய்வது இலகு, மாற்று வழிமுறைகளை சொல்வது கடினம். அப்படி சொன்னாலும் செயலில் செய்வது இன்னும் கடினம். ஆகையால்தான் என்னவோ நாம் வீட்டுக்குள் சிறைப்பட்டு போகின்றோம்.

உங்களின் பின்புலம் எனக்கு தெரியாது. ஆனால், உங்களின் எழுத்துக்களில் மாற்று சிந்தனைகள் தெறிந்து கிடக்கின்றன. சில வரட்டு தத்துவ வாதங்களாகவும் தெரிகின்றன. தொடர்ந்த்து எழுத வாழ்த்துக்கள்.

Sri Rangan said...

வணக்கம் நற்கீரன்!தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.புலம்பெயர் சூழல் எந்த மனிதரையும் செயற்றிறன்மிக்கவராக விட்டுவைக்கா.எனினும் இந்தச் சூழலை வெற்றிகொள்ளமுனைதலுங்கூட ஒரு வகையிற் தேவைதாம்.தனிநபர்கள் புரட்சிகரமாக இருக்கிறோம்.ஆனால் இதை ஒருங்கமைக்கும் புரட்சிகரமான அமைப்புக்கிடையாது. இத்தகைய அமைப்புத்தோன்றும்போது அது ஆதிக்கச்சக்திகளால் நிர்மூலமாக்கப்படும்.இதுவே வரலாறாகவுள்ளபோது நமது சிந்தனைகளும் நீங்கள் குறிபிட்டபடி நகர்கிறது.குடும்பமெனும் பாரிய முதலாளிய ஒடுக்குமுறை நிறுவனம் எத்தனையோ வகையிற் பலவற்றுக்கு விலங்கிட்டபடியே...
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

Anonymous said...

உழுத்த உங்கள் வேத சித்தங்:களைத்தானே இலக்கியம் சந்திப்பு என பியருடனும் சந்திப்புகளில் வரும் பெண்களையும் உங்களுக்கு சுவையாக இரவு விடுதிகளை இலக்கிய சந்திப்புகள் செய்தயைும் சொல்லலாதே சிறீறங்க சித்தா; அவர்களே.
குடும்பம் என்ற நிறுவனத்தை உடைத்து நீங்களே வெளிவர துப்பில்லை. சும்மா இருக்கிறவங்களை உடை கடையென்பது என்னய்யா நாயம். உமது புலம்பல்களை உம்மைச்சுத்தி நிக்கும் ஜந்துகளுக்கு சொல்லுமப்பா.

றஜீ

Sri Rangan said...

நேசமிக்க றஜீ,வணக்கம்!தங்கள் உளவியற்றளத்தை நான் புரிகிறேன்.தங்கள் சோதரிகளாகிய அந்த இலக்கியத்தோழிகள்-ஆர்வலர்கள் குறித்த தங்கள் மதிப்பீடு எங்ஙனம் உருவாகியதென்பது எமக்கு நன்றாகத் தெரியும்.ஏனெனில் நாம் படுத்தொழும்பியபோது நீங்கள் தானே விளக்குப்பிடித்தீர்கள்?அன்றைய அவசரத்தில் உங்களைக் கவனியாது நாம் காரியமாற்றிவிட்டோம்.கவனித்திருந்தால் கொஞ்சம் துட்டைவிட்டி உங்கள் வாயையடைத்திருக்கலாம்....ம்... தப்புப்பண்ணிட்டோம்.

Anonymous said...

What is this?Anonymous said...
What is this?Sri Rangan said...
both are mad

Sri Rangan said...

உங்கள் கேள்வி நியாயமானது.ஆனால் பாருங்க ஆண்பெண்ணுறவை இவ்வளவு கேவலமாகப் பார்க்கும் வளர்ச்சிகுன்றிய-குறைவிருத்தியுடையவர்களிடம் எதைப்பேசமுடியும்? இத்தகைய மனோபாவமானது எமது சமுதாயத்துள் விரவிக்கிடக்கிறது.இதை நோவதைவிட்டு இத்தகைய மனிதர்களுக்கு அவர்கள் பாணியில் பதிலளிப்பது அவர்களின் மனசாட்சியைத் தொடத்தாம்...ம்.. நான் வேற... இவர்களிடம் மனசாட்சியெங்கே இருக்கும்! சரி விடுங்க.எமது நோக்கம் வேறானது.
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...