"கரும்புலித் தாக்குதலைக் கொழும்புக்கு விஸ்த்தரிக்கும் தோல்வியின் விளிம்பில்
நிற்கும் புலிகள்,இன்னும் தமது தலைவருக்காக உயிர்ப்பலிகொடுக்கத் தயாராகும்
கரும்புலிகள்!"-ஸ்பீகல்(Spiegel) சஞ்சிகை: 20.02.09.
ஜேர்மனிய முன்னணிச் சஞ்சிககையான ஸ்பீகலில், எங்கள் தேசத்துப் பிரச்சனைகளைக் குறித்துப் புலம் பெயர் படைப்பாளிகள் கட்டுரை எழுதி,அவர்கள் பிரசுரித்தால் 1000 டி.எம். பணம் சன்மானமாக வழங்கப்படுமென முன்னொரு காலத்தில்(சுமார் பத்தாண்டுகளுக்குமுன்) புலிகள் தமது பிரசுரங்கள் மூலமாகக்கேட்டுக் கொண்டார்கள்.அத்தகையவொரு மிக முக்கியமான சஞ்சிகை ஸ்பீகல்.
ஜேர்மனியில் பல கோடிப் பிரதிகள் விற்கப்படும் இச் சஞ்சிகை,ஜேர்மனிய அரசியல் வட்டாரத்திலும்,பல்கலைக் கழகமட்டத்திலும் பெரும் தாக்கஞ் செய்யும் சஞ்சிகை.அது,ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தினதும் நடுத்தரவர்க்கப் புத்திஜீவிகளினதும் குரலாகவே ஒலிப்பது.எனினும்,அதன் நீண்டகால வாசகர்களில் நானும் ஒருவன்.பெரும்பாலும் அதன் கட்டுரைகளும்,ஆய்வுகளும் மிகவும் தர்க்கம் வாய்ந்தது.இத்தகைய சஞ்சிகையில் இன்றைய நமது போராட்டச் சூழல்கள் குறித்து எழுதுகிறார்களாவென நான் தினமும் தேடிப் பார்ப்பேன்.எப்போதாவது, ஸ்பீகல் சிறிய பெட்டிச் செய்தி போடுவதோடு அதன் பணி முடிந்துவிடும்.
புலிகள் தலைவர் திரு.பிரபாகரனால் வன்னியில் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மகாநாட்டில் பாலசிங்கம் அவர்களே ஸ்பீகல் சஞ்சிகைக்குப் பிரத்தியேகமாக நேரம்கொடுத்துக் கருத்துத் தெரிவித்ததென்பதை அன்றைய சந்திப்பைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
மிகவும் பிரபலமான இச் சஞ்சிகை நேற்று அதிகாலை ஆறறரை மணிக்கு எமது போராட்ட வாழ்வு குறித்தொரு ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தது.அக்கட்டுரை வெளியிட்ட 15 மணி நேரம் கழித்துப் புலிகளது கரும்புலி வான் தாக்குதல் கொழுபில் அதிர்வுகளைச் செய்து ஓய்ந்துபோனது.இதன் சிறப்பு என்னவென நீங்கள் வினாவினால்-ஸ்பீகல் பத்திரிகை எழுதுகிறது:"Doch noch immer sind Selbstmordkader der Tamilentiger bereit, den Kampf in die Hauptstadt Colombo zu tragen."யுத்தத்தை கொழும்பு மாநகரம்வரை இழுத்துவரும் ஆளுமையோடு கரும் புலிகள் தயார் நிலையிலேயே இருக்கிறார்கள்.அவர்கள் கொழும்பை நோக்கித் தமது கரும் புலித் தாக்குதலைச் செய்யமுனைவதாக அப் பத்திரிகை விரிவாக எழுதுகிறது.
எனது அநுபவத்துக்கு ஒப்ப அச் சஞ்சிகை ஒருபோதுமே எமது பிரச்சனையில் நேர்மையாக எழுதியது இல்லை என்பேன்.இப்போது, இச் சஞ்சிகை மிக நேர்த்தியாகக் கட்டுரை எழுதியிருக்கிறது.முதன்முறையாக இலங்கையில் தமிழர்கள்மீது திட்டமிட்டு இனவழிப்பு நிகழ்வதாக ஒத்துக்கொண்டிருக்கிறது."Denn der blutige Konflikt, der nach jahrzehntelangen Repressionen der buddhistisch-singhalesischen Mehrheit gegenüber der hinduistisch-tamilischen Minderheit und antitamilischen Pogromen mit tausenden von Toten 1983 zum offenen Krieg geführt hatte, hatte nie einen klaren Sieger hervorgebracht"குருதிதோய்ந்து இனமுரண்பாடானது,பலதசாப்தமாகப் பெரும்பான்மைச் சிங்கள பௌத்தர்களது அடக்குமுறைக்குச் சிறுபான்மை தமிழ் இந்துக்களை உட்படுத்தி, இனவாத ஒடுக்குமுறையின் மூலமாக 1983இல் பல்லாயிரம்பேர்களைக் கொன்று குவித்ததன் விளைவால் யுத்தம் ஆரம்பிக்கும்வாய்ப்பு உண்டாகியது.இதில் எவருமே தீர்மானகரமான வெற்றியை அடையவில்லை.என்கிறது.கூடவே,அச் சஞ்சிகையில் புலிகளது அனைத்து முகத்தையும் விரிவாகவே அக்கட்டுரையாளர்-செய்தியாளர் இனம் காண்கிறார்.
அவர்கூறுகிறார்:"Und auch heute noch, kurz vor dem militärischen Untergang der LTTE, sind immer noch Selbstmordkader dazu bereit, ihr Leben für ihren autoritären Führer Prabhakaran zu opfern. Vergangene Woche sprengt sich inmitten von Flüchtlingen aus dem Kriegsgebiet eine Frau zwischen Regierungssoldaten in die Luft. Sie tötete 20 Soldaten und acht Zivilisten."அத்தோடு,இன்றுவரை,அதாவது புலிகள் தமது முடிவு நெருங்குவதற்குக் குறுகியகாலம் இருக்கும்போதுகூட,தற்கொலைத்தாக்குதலுக்கு அவர்களிடம் தற்கொலைப் படைகள் தயாராக இருக்கின்றன. தமது தலைவர் பிரபாகரனுக்காகத் தம்மைப் பலியாக்கத் தயாராகவே இருக்கிறார்கள்.கடந்தவாரத்தில் அகதிகள் தங்கியருந்த இடத்தில் பெண்ணொருத்தி வெடிபொருளை வெடிக்கவைத்துக் காற்றில் வெடித்துச் சிதறியபோது,அவள் 20 இராணுவத்தினரையும் 8 அகதிகளையும் கொன்றாள்."என்கிறார்.
மேற்குலகத்தின் இந்தப் புரிதலிலுள்ள உண்மைகளை விளங்காது,புலிகளைச் சொல்லி உலகத்தில் "தமீழீழத்தை அங்கீகரி,தமிழர்களுக்குத் தமிழீழமே வேண்டும்" எனும் கோரிக்கைகளோடும் ஜெனீவாவிலுஞ்சரி அல்லது புலம் பெயர் நாடுகளிலுங்சரி ஆர்ப்பாட்டத்தைச் செய்பவர்கள், ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும்!
அதாவது,புலிகளுக்கும் இலங்கை அரசுக்கிடையிலும் நடக்கும் இவ் யுத்தத்தை நிறுத்தி, வன்னியில் சிக்குப்பட்ட மக்களைக் காக்கும் கோசங்களும்,தமிழ்பேசும் மக்களது பிரச்சனைக்கு அரசியல்ரீதியாகப் பேசித் தீர் எனும் கோசமுமே இன்றைய கொடிய யுத்தச் சூழலில் அவசியம் என்பதாகும்!
இதைவிட்டுப் புலிகளால் முன்தள்ளப்படும் இன்றைய இளஞ்சிறார்கள்,புலிகளது கொடிகளையும் அவர்களது அரசியல் கோரிக்கையான"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"என்பதைத் தலையில் தூக்கிவைத்தாடுவதால் தம்மைத்தாமே மேற்குலகப் புலனாய்வுத்துறைக்குக் காட்டிக்கொடுத்து, எதிர்காலத்தைப் பறிகொடுப்பதில் முடியும்.புலிகள் இயக்கத்தைக் குறித்து, அனைத்து ஐரோப்பிய நாடுகளுஞ் செய்திருக்கும் ஆய்வுகள் மிக நேர்த்தியாகப் புலிகளைப் கண்காணிப்பதை உறுதிப்படுத்துகிறது.
புலிகளுக்காகக் குரல்கொடுப்பதென்பதைக் காட்டிலும்,தமிழ்பேசும் மக்களின் இன்றைய அவலத்துக்காகக் குரல் கொடுப்பதென்பது முதலாது நிரலில் இருக்கவேண்டும்.
நமது மக்களைக் குறித்த அரசியலை மேற்குலகத்தில் முன்தள்ள முடியாதுபோனால்-நமது அனைத்துக் கோரிக்கைகளும் தோல்வியில் முடிவதோடு,மக்களின் தன்னெழிச்சியைப் புலிச்சாயம்பூசி மேற்குலகம் நிராகரிக்கும் அபாயம் நிலவுகிறது.இதை தவிர்த்துக் காரியமாற்றவேண்டும்.
இன்றைய மக்களின் அவலத்தில் அரசியல் நடாத்த முனையும் புலிகளது வண்டவாளங்களை ஸ்பீகல் மேற்குலக மக்களுக்கும்,ஜேர்மனியர்களுக்கும் மிக நன்றாகவே படம் போட்டு-ஆய்வு செய்து கப்பலேற்றுகிறது.இந்த நிலையில் புலிகளது சாயலில் முன்னெடுக்கப்படும் அனைத்துக் காரியங்களும் தோல்வியிலேயே முடியும்.
புலம்பெயர் தமிழ்மக்கள் இலங்கை அரசையும்,புலிகளையும் மிக நன்றாகவே தோலுரித்தபடி தமது மக்களது கண்ணீர்கதைகளை மேற்குலக மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்.இதைத் தவிர்த்துப் புலிகளது வழிகாட்டலோடு முன்தள்ளப்படும் இளையதலைமுறைகளை இங்குள்ள காவற்றுறை மிக நேர்த்தியாக இனம்காணத்தக்கபடி தகவல்களைச் சேகரித்துக்கொள்கிறது.ஒவ்வொரு ஆர்ப்பாட்டவூர்வலத்திலும் அதிகமான புலினாய்வுத்துறையினர்ரின் கமராக்கள் நமது இளைய முகங்களைத் தமது கருவிக்குள் அடக்ககின்றன.இவற்றை முடிச்சிட்டுப் புலிகளது அடுத்தகட்ட நகர்வுக்கான ஆய்வுகள் இத்தேசப் புலனாய்வுத்துறையால் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கு ஸ்பீகலின் இக்கட்டுரையிலுள்ள உள்ளடக்கம் மிகக் காட்டமான பதிலை இளைவர்களுக்குத் தரும்.புலிகளது அரசியல் மேற்குலகத்திடம் எத்தகைய நிலையில் இருக்கின்றதென்பதைக் கவனிக்கவும்.
இல்லைத் தேசத்துக்காக எதையும் இழப்போமென வீராப்புப் பேசுபவர்கள்,அடுத்த பின் விளைவுகளைச் சந்திக்கத் தயாரானர்வர்கள்.அவர்கள் குறித்துக் கவலையில்லை!ஆனால்,அவர்களால் நமது மக்களின் போருக்கெதிரான அணித்திரட்சியை-தார்மீக எதிர்ப்பை மேற்குலகம் புலிச்சாயம் பூச இடம்கொடுத்து நமது மக்களது அவலத்தை நியாயப்படுத்தும் நிலைக்குப் போவதே மிகக் கவலையான விடயம்.இன்றைய ஜெனிவாவூர்வலத்திலும் புலிச்சாயம் மேலோங்கி இருக்கிறது.எனவே,புலிக்கொடியினது அசைவில் போருக்குள் சிக்குண்ட மக்களது கண்ணீர் மறைக்கப்படும்-மறுக்கப்படும் காரியத்தைப் புலிகள் திட்டமிட்டே மேற்குலகில் செய்துவிடுகிறார்கள்.
ப.வி.ஸ்ரீரங்கன்
21.02.2009
4 comments:
ஸ்ரீரங்கர்,
//புலிகளுக்கும் இலங்கை அரசுக்கிடையிலும் நடக்கும் இவ் யுத்தத்தை நிறுத்தி, வன்னியில் சிக்குப்பட்ட மக்களைக் காக்கும் கோசங்களும்,தமிழ்பேசும் மக்களது பிரச்சனைக்கு அரசியல்ரீதியாகப் பேசித் தீர் எனும் கோசமுமே இன்றைய கொடிய யுத்தச் சூழலில் அவசியம் என்பதாகும்!//
இதில் உடன்படுகிறேன்!
இலங்கை அரசையும் கட்டுரை குறிப்பிட்டுள்ளது. அவரவர் ஆசைக்கும், வசதிக்கும் வாசிக்கிறோம் ;)
ஸ்பீகல் சஞ்சிகை கட்டுரை ஆங்கில மொழிபெயர்ப்பு (உதவி: கூகிள்)
Sri Lanka fears the "Black Tiger"
By Sascha Zastiral, Colombo
It is a bloody, ruthless-won victory: Sri Lankan army, the rebels in the north to a tiny area in back, after over 25 years of civil war. But still have suicide cadres of the Tamil Tigers ready to take the fight to the capital Colombo to carry.
Colombo - Sri Lanka's capital Colombo, in these days is like a high wing. More than 100 checkpoints run through the entire city. Soldiers and police meticulously checked all the access roads. Prior to the ministries and government buildings are soldiers in heavy bullet-proof vests behind Sandsackverschlägen. Metal barriers and barbed wire to deter intruders.
The reason for the high security arrangements is located 250 kilometers north-east where the army of the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE), one of the most brutal and ruthless guerrilla Aarmeen the world, after a successful major offensive converter. The Tamil Tigers of guerrilla leader Velupillai Prabhakaran to control only an area of approximately 100 square kilometers size.
"We were with our campaign so successful, because we have changed our tactics," said Brigadier Udaya Nanayakkara, the spokesman of the Ministry of Defense. In his office stands on a small table a photograph of Brigadier-General in parade uniform. A map on the wall shows the remaining territory of the rebels in the northeast of the island.
"In the past we have always with large organizations to only one point attacked. When we have conquered a place, the LTTE has been reorganized and then pushed back," Nanayakkara said. Over the past 13 months had smaller organizations fight the rebels simultaneously along the entire front line and attacked the Tamil Tigers that unquestioningly with their own guerrilla tactics surprised.
Huge military apparatus in position
The renewal of the bloody civil war is the central government's program of Sri Lankan President Mahinda Rajapakse. 2005, the politicians, then Premier of the country, with the announcement in the campaign that he would be the decades-long civil war militarily solve. He won the vote with a razor-thin margin of only 190,000 votes. His brother Gotabhaya he appointed to the Defense Minister. Army chief was a close friend, General Sarath Fonseka. Immediately the trio began, the country to prepare for the upcoming battle.
Rajapakse convince China and Pakistan which, large quantities of weapons to be delivered. Army Chief Fonseka recruited additional 80,000 young men for the army, which on more than 230,000 men swelled. The massive military apparatus is brought into position.
But Prabhakaran, the LTTE's authoritarian leader, was looking for a confrontation. His men broke into thousands of cases, the ceasefire agreement, the Norwegian mediators in 2002 had negotiated. The guerrilla chief was looking for the decision.
Because of the bloody conflict, which after decades of repression of the Buddhist Sinhalese majority against the minority Hindu-Tamil pogroms and antitamilischen with thousands of dead, 1983, open war had never had a clear winner emerged. The LTTE, Prabhakaran fanatically nationalist cadre organization, was in spite of large gains ground never strong enough to Colombo for the recognition of their mini-state Tamil Eelam to compel. The government army never succeeded, the rebels back permanently. So went one of the cruelest civil wars in Asia more than a quarter century out. More than 80,000 people were killed.
Brutal beatings threaten retaliation
But this was the government for the first time at an advantage. When President Rajapakse in January 2008 on the already fragile ceasefire agreement with LTTE announced final and the war again breaks out in full, had weakened the rebels. 2004, "Colonel Karuna, the LTTE supreme commander in the east of the country, rebel chief losgesagt Prabhakaran, the Tamil Tigers lost the territory. Two years later, the European Union to the Tamil Tigers terrorist group. Organizations of the LTTE Sea Tigers naval unit had a boat of the monitoring mission for Sri Lanka (SLMM) attacked. Several states were supporters of the rebels and froze accounts. A considerable part of the money flow dried up for arms purchases.
DER SPIEGEL
Therefore, it took the weapons and fighters to strong government army superior in early 2008 rather quickly, into the LTTE territory follicle. In early January of this year plunged the de facto mini-state in the Tamil Tigers in a short time almost completely collapsed. Government troops captured the rebel capital Kilinochchi. A few days later, the rebels left the coastal town of Mullaittivu fluchtmöglichkeit like. Now they control only a tiny area.
But it is unclear how many LTTE cadres are still in government territory in the capital, or hiding. Therefore, the thousands of security forces in Colombo permanently strained. It could still be brutal retaliatory shock.
Because too often, the "Tiger" in the past from the defensive to bloodily repulsed. Especially the dreaded Black Tiger suicide unit. They rebel chief Prabhakaran has until then unknown in the horrors of civil war taken: 1987 contributed Vallipuram Vasanthan, a 21-year old LTTE cadre, a truck laden with explosives into an army camp on the Jaffna Peninsula in the far north of the country and killed dozens of government soldiers . Since then, more than 300 Black Tigers have died in operations.
Bloody attacks, censorship - in vain Waiting for Help
A female member of the "Black Tigers" killed Rajiv Gandhi 1991 - Ex-Prime Minister of India at that time was already voted out. The politician had four years earlier, the Indian army to Sri Lanka to curb the war. But the planned peace mission was soon on the war effort. The LTTE is supplied with the Indian soldiers fierce battles. Colombo was in this time a bizarre alliance with his greatest enemies: the government supplied the rebels with weapons.
1989 subject to Gandhi in the parliamentary elections. His successors ended the adventure of the Indian Army and withdrew the last units of 1990.
In May 1991, Gandhi had just completed a campaign event near the southern Indian city of Madras is stopped, as a wife to him zukam. They greeted the politicians and leaned forward, in an expression of respect to touch his feet. Then lit the Attentäterin their explosive belts. The brunt of the explosion tore Gandhi, the head of the body. 16 more people died in the attack. Apparently wanted LTTE chief Prabhakaran prevent Rajiv Gandhi wins the election again and again Indian troops to Sri Lanka deploys.
And even today, shortly before the sinking of the LTTE military, are still prepared to do the suicide squad, their lives for their authoritarian leader Prabhakaran to sacrifice. Last week sprinkled in the midst of refugees from the war zone, a woman between government soldiers in the air. They killed 20 soldiers and eight civilians. The propaganda apparatus of the government slaughtered immediately from the attack. All government-abiding Channel for two days showed images of women and children who are in the attack were killed.
Murders of journalists
Pictures of soldiers injured or killed, as since the beginning of the campaign a year ago, not shown. Because early made by the government over Sri Lankan press representatives clearly that it does not disrupt their war by critical media reports desires. Foreign and independent journalists, access to the north of the country denied. Most Sri Lankan media have a strict self-censorship, since there will be a series of attacks on journalists critical of the government has come.
At least nine journalists have been murdered since 2006, eight of them were Tamils. Not one of the perpetrators has been caught up today. The organization Reporters Without Borders ranks Sri Lanka in its ranking of press freedom "to place 165 of 173 countries. It ranked only totalitarian regimes like China, Burma and North Korea.
DER SPIEGEL
Defense Secretary Gotabhaya Rajapakse, the position of the government in an interview with the BBC British to the point. This, he said that there were only two groups of people: "Those who fight terrorism and terrorists." - "Does this mean," asked the reporter, "that they believe that dissent or criticism in time of war is treason?" - "Yes," replied the minister.
Therefore trust is currently also hardly a Sri Lankan journalist, about the plight of the refugees reported, which is still in the war zone are trapped. International relief agencies estimate that still more than 200,000 people in the tiny area of the LTTE stopped, the government is talking of less than 80,000.
"The people, the LTTE from the area come and seek refuge in the army looking for, often have not eaten for days," said Brigadier Udaya Nanayakkara, the spokesman for the Defense Ministry. Many of them were in very bad health condition.
Refugees wait in vain for help
What he fails: In September 2008 the government forced all aid agencies to leave the war zone to leave. They announced that henceforth it could no longer necessary for the safety of its employees guarantee. Since then, increasingly rare convoys with food and medicine to the trapped people. At the moment the refugees, most of them in the past several months had to change their residence, completely cut off from international assistance.
"We want the civilians from the area out of the LTTE," Nanayakkara said. Then the rebel army the final blow. But these were the people there as "hostages" trapped. Indeed, refugees report, LTTE fighters have been shot several times on people as they tried to fight the area to leave. Verifying these reports can not.
But the Brigadier-General acknowledges that some of the refugees aware of the LTTE area. "There is fighting in the area, many families of fallen cadres." The course empfänden sympathy for the LTTE and therefore wanted to remain in rebel territory. Nevertheless, the army so far with their attacks deliberately back.
Last hospital had to close
The last remaining observers in the conflict zone reporting otherwise. "We had the last intact hospital in the region close because it was constantly shelled," says Sophie Romanens by the International Red Cross in Colombo. Anyone who has fired artillery shells, but they could not say. The United Nations, which also have staff in the war zone have reported the whole region will be hard shelled. Hundreds of civilians were in the past few weeks fighting has died. Some observers expect more than 2000 dead civilians from.
And even if the last bastion of the LTTE warriors in the jungle between Kilinochchi and Mullaittivu as expected in the coming weeks falls, it means it probably is not the end of the debate. Because of the ethnic conflict, the root of the bloody war, is in many ways still unresolved.
Even army chief Fonseka admitted that rebels could be their fight from the ground to continue: "The LTTE cadres with 1000 could have one or perhaps two decades continue to exist." The conflict could be in an "eternal revolt" transform.
//இலங்கை அரசையும் கட்டுரை குறிப்பிட்டுள்ளது. அவரவர் ஆசைக்கும், வசதிக்கும் வாசிக்கிறோம் ;)//
நீங்கள் ஏதோ இலங்கை அரசைக் குறிப்பிடாதது என் ஆசையாகச் சொல்வது தப்பு.
எனக்கு இலங்கை அரசை அப் பத்திரிகை சாடுவதில் ஆச்சரியமில்லை!
அது, குறித்தும் இங்கு சொல்வதற்கில்லை!
ஏனெனில்,நாம் எப்போதுமே சொல்கிறோம் :இலங்கை அரசானது பாசிசக் கொடிய அரசு.அதுதாம் நமது பிரதான எதிரியென.எனவே,அவ்வரசினது நடவடிக்கை குறித்து மேற்குலகஞ் சொல்வது எமக்கு அவசியமில்லை!
எமது எலும்புந் தோலுமாக இருக்கும் விடுதலைப் புலிகள் குறித்த மதிப்பீடே அவசியமானது.
அதன்மீது முன்வைக்கப்படுஞ் செய்திகளை மட்டுமே கவனத்துக்கு எடுக்கின்றேன்.ஏனெனில்,அவ்வியக்கம் தன்னைத் திருத்திக் கட்டியமைக்கணும்.அதுவே,எமது முதலாவது அவா!புதிதாக ஒரு கோடு கீறமுடியாது.
கீறியதிலிருந்து தொடங்குவதே நமது மக்களது தலைவிதியைத் தீர்மானிப்பது.
எனவே,புலிகளைச் செம்யுறச் சொல்வதற்காவே,ஏசியும்,தூற்றியும்-வாழ்த்தியும் புலம்புகிறோமென எடுக்கவும் நண்ப!
//எமது எலும்புந் தோலுமாக இருக்கும் விடுதலைப் புலிகள் குறித்த மதிப்பீடே அவசியமானது.
அதன்மீது முன்வைக்கப்படுஞ் செய்திகளை மட்டுமே கவனத்துக்கு எடுக்கின்றேன்.ஏனெனில்,அவ்வியக்கம் தன்னைத் திருத்திக் கட்டியமைக்கணும்.அதுவே,எமது முதலாவது அவா!புதிதாக ஒரு கோடு கீறமுடியாது.
கீறியதிலிருந்து தொடங்குவதே நமது மக்களது தலைவிதியைத் தீர்மானிப்பது.
எனவே,புலிகளைச் செம்யுறச் சொல்வதற்காவே,ஏசியும்,தூற்றியும்-வாழ்த்தியும் புலம்புகிறோமென எடுக்கவும் நண்ப!//
நன்றி!
இந்த எண்ணத்தை வாசிப்பவர்களிடம் உங்களது முந்தைய பத்திகள் உருவக்கவில்லை. எதிர்மறை கருத்தை தந்தது. இப்படியொரு எதிர்பார்ப்பிலிருக்கும்/ எண்ணமுடைய நீங்கள் புலிகளை ஏசவும், பேசவும், விமர்சிக்கவும் காலத்தை அறிந்து செய்வது மேலில்லையா? உங்கள் அறிவும், திறனும் இனத்தின் முழுவிடுதலைக்கும் பயனாவது எனது எதிர்பார்ப்பு.
//புதிதாக ஒரு கோடு கீறமுடியாது.
கீறியதிலிருந்து தொடங்குவதே நமது மக்களது தலைவிதியைத் தீர்மானிப்பது.//
முழுமையான அவதானம். கீறிய கோட்டை திருத்தம் செய்யும் போது கோடு முழுவதுக்கும் சேதம் வராமல் செய்வது தானே சிறப்பு?
//கீறிய கோட்டை திருத்தம் செய்யும் போது கோடு முழுவதுக்கும் சேதம் வராமல் செய்வது தானே சிறப்பு?//
இக்கேள்வியை மேலோட்டமாக நீங்கள் கேட்க முடியும்.அப்போது உங்களது தரப்பில் அஃது,மிக ஆரோக்கியமான பார்வையாகவும் இருக்கும்.நாம் இக்கேள்விக்குள்தாம் இயக்கவாத மாஜை இருக்கென்கிறோம்.
புலிகளது அமைப்பை மக்கள்சார்ந்து விமர்சிக்கும் நமது பார்வைகளை,மேலோட்டமாகப் பார்த்தால் புலிகள் அமைப்பு எதிரானதாகவே கருத இடமுண்டு.ஏனெனில்,அங்கே உங்களது பார்வை இயக்க நலன்-இயக்கவாதஞ்சார்ந்து சிந்திக்கிறது.நாம் இதைக்கடந்து மக்களது சார்பிலிருந்து இயக்கத்தை அணுகுகிறோம்.இங்கேதான் புலிகள் இயக்த்தினது கட்டமைவுகள் தகர்கின்றன.
அதன்மீதான மிக எளிய உரையாடல்கள் அதனது இறுகிய-குறுகிய இயகவாதத்தையும் அதன் இருப்புக்கான அரசியலையும் உடைக்க முனைகிறது.அங்கே, அவ்வியத்தை உட்கட்சி ஜனநாயகப் பண்புக்குள் உந்தித் தள்ளுவதும்,அதன் மக்கள் விரோதப் போராட்டச் செல்நெறியை சுயவிமர்சனத்துக்குட்படுத்தி, மக்களைச் சார்ந்தியங்க அதன் தலைமையை மத்தியகுழுவுக்குள் கொணர்ந்து,தனிநபர் வாதத்தைத் தகர்க்க முனைவதில் அர்த்த புஸ்டியான புரட்சிகரப் பாத்திரத்தை எடுக்கவுமே கோரப்படுகிறது!
சமீபத்தில்கூட அதன் இறுகிய இயக்க இருப்புக்கான போர்வியூகமே வன்னி மக்களது அவலத்தை மேலும் விருத்தியாக்கிச் சிங்களப் பாசிச அரசுக்கு மக்களைக் கொல்லும் வாய்ப்பை அளித்துள்ளது.இதைப் புலிகள் ஒருபோதும் ஓத்துக்கொள்வதற்கில்லை!ஏனெனில், புலிகளது கடந்தகாலத்துத் தவறுகள் யாவும் மக்களைது நலனைப் பிரதிபலிக்காதவொரு அரசியல்-வர்க்க நலனிலிருந்து கட்டப்பட்டது.அதுவே,அவர்களது அழிவில் போராட்டத்தை கொணர்ந்துள்ளது.
இதை உடைக்க, மக்கள் நலன்சார இயக்கத்துக்கு-புரட்சிகரமாகப் புறச் சூழலைப் புரிந்துகொள்ளமுடியாதவொரு யுத்தச் செல்நெறிக்கு மக்ளைக் கேடயமாக்குவதைத்தவிர வேறொரு வழி இருக்கப் போவதில்லை!இதை நாம் ஒரு போதும் சுட்டிக்காட்டப்படாதென்பது எவ் வகையில் நியாயம்?
மீளவும்-மீளவும்,இயக்க நலன்சார்ந்து சிந்திப்பதில் நாம் விடுதலையடைய முடியாது.முதலில்,மக்களுக்கும் புலிகளுக்குமான உறவில், மக்களது பாத்திரம் குறித்துச் சரியான மதிப்பீட்டை செய்யுங்கள்.அதன் பிறகு புலிகளது இருப்பினது அரசியலுக்கும் மக்களது நலன் சார்ந்த அரசியலுக்குமான இயங்கியல் போக்கை மிக எளிமையாகப் புரிந்துகொள்வீர்கள்.அவ்வண்ணம் நமது விமர்சனங்களது நியாயத் தன்மையும் உணர்வீர்கள்.இதுவே,மிக எளிமையான வழி.
இதைவிட்ட வேறொரு பாதையைத் தேசத்தினதும்,தேசியத்தினதும் உணர்வெழிச்சியுடன் இயக்கத்தை மையப்படுத்தி மக்களை யுத்தத்தில் யுத்த ஜந்திரத்தின் ஒரு உறுப்பாக அணுகவேண்டாம். இத்தகைய தொடர்ச்சியான பார்வைகளேதாம்,தனிநபரைச் சுத்திய இயக்க ஆண்மையாக நமக்குள் வடிவமெடுத்தது.இதுவே,இலங்கை அரசுக்கு மிகச் சாதகமான வாய்ப்புகளை அரசியல் ரீதியாகவும்,தந்திரோபாயரீதியாகவும்,போர் வியூகரீதியாகவும் பல வெற்றிகளைக் குவிப்பதற்கு ஏதுவாக இருந்திருக்கிறது!
இதன் ஆரம்பம் பிரதேசம்,பிரதேசமாகத் தமிழ்பேசும் மக்களைச் சிங்கள அரச ஆதிகத்துக்குள் கொணர்ந்தது.இதன் தொடர்ச்சியாக வன்னிக்குள்ளும் இலங்கை அரச ஆதிக்கமே கோலாச்சியது.அரச ஆதிக்கத்தை உடைக்கமுடியாதவொரு புரட்சிகர அமைப்பு, ஒருபோதும் அதன்(சிங்கள அரசினது) யுத்த ஜந்திரத்தின்மீது சொறியப்படாது.இது,புரட்சிகரப்படிப்பினை.
ஆனால்,புலிகள் நிலங்களைக் கைப்பற்றி அதன்மீது தமது யுத்த ஜந்திரத்தை நிலைப்படுத்தியதில் முனைப்புடையவர்களாகவிருந்தபடி இலங்கை அரச ஆதிக்கம் குறித்த மந்தமான புரிதலில் இருந்தார்கள்.இதைக் கண்டபோதெல்லாம் நாம் விமர்சித்தோம்.அவர்கள் கேட்கவோ அன்றித் தமது போரியல் பார்வைகளை சீரமைக்கவோ முடியவில்லை-முனையவில்லை!
இஃது,ஏனென்பது மிகவும் கேட்கப்பட வேண்டிய கேள்வி.
பதில்,புலிகளது தோற்றத்தையும்,அவர்களது வெளியுலக உறவையும் சார்ந்தது மட்டுமல்ல கூடவே புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலிருந்து பரஸ்பர வர்க்க உறவையும்சார்ந்தே அமைகிறது.இதைக் குறித்து நாம் கருத்தாடுகிறோம்.அவ்வளவுதாம்.
இதை,இயக்கத்தை மையப்படுத்திய-மக்களைப் பார்வையாளர்களாக்கிய வாதங்களுக்குள் புரிந்துகொள்வது கடினமே.எனவே,நாம் எழுதுவதெல்லாம் இன்றைய இயக்கவாத-இயக்க இருப்பு நோக்கிய நலன்களுக்குப் பாதகமானதே.அதை நாம் உங்களது நிலையிருக்கும்போது மட்டுமே செய்யமுடியும்.இஃது,மீளவும் நமது மக்களுக்கு இன்னும் பல் நூறு ஆண்டுகள் சென்றாலும் விடிவைத் தராது.
எனவே,நமது விவாதங்களிலுள்ள பொருளை எடுத்துப் புரட்சிகரக் கண்ணோட்டத்துடன் விவாதியுங்கள்,என்பதைமட்டுமே இப்போது என்னால் கூறமுடியும்.
Post a Comment