இலங்கை:உலகை முன்னுதாரணமாக்கொண்டு போரிடுகிறது?
இலங்கையில் சிறுபான்மை இனங்களுஞ்சரி அல்லது பெரும்பான்மை இனமாலுஞ்சரி-இந்த, மக்கள் கூட்டம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களது எதிர்காலம் இருள் சூழ்ந்து ஒளிமங்கிக் கிடக்கிறது.பிராந்திய நலனுக்கும் பொருட் சந்தைக்கும் நடக்கும் போராட்டத்தில் அந்நியச் சக்திகளே முதன்மையான பாத்திரத்தை இலங்கையில் கொண்டிருக்கும்போது நமக்கான விடுதலை,சுதந்திரம்,சுயநிர்ணயமென்பதெல்லாம் பகற்கனவாகும்.இங்கே, இலங்கை மக்களின் உரிமைகளென்பவை அந்நியச் சக்திகளின் தயவில் பெறும் விடையமல்ல.மாறாக, இலங்கை மக்களே தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு அரசியற் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கானவொரு மக்கள் எழிச்சியை செய்து இத்தகைய புறச் சக்திகளைத் தோற்கடிப்பதற்கானவொரு அரசியல் விய+கத்தைக் கட்டியமைக்க வேண்டும்.புலிகளல்லாத இலங்கை அரசியற்போக்கில் இது அவசியமானவொரு பணி.இனங்களுக்கிடையிலானவொரு நட்பார்ந்த பரஸ்பரப் புரிந்துணர்வின்றி தொடரப்போகும் மகிந்தா குடும்பத்து அந்நியச் சேவையை முறியடிக்க முடியாது.
இலங்கையில் இன்னொரு பாசிசச் சர்வதிகாரத்தைத் தடுதாட்கொண்ட இராஜபக்ஷயின்பின்னே அணிதிரண்டிருப்பவர்கள் யாவரும் எம்மை அண்மித்துவரும் உலகப் பொருளாதாரப் போக்குகளின் திசைவெளியில் சிக்கிய தென்கிழக்காசியத் தரகு முதலாளியக் குடும்பங்களாகும்.இவர்கள் இலங்கையிலோ அன்றி இந்தியப் பெரு நிலப்பரப்பிலோ ஒரு வகைமாதிரியான தேசிய வாதத்தை முன் தள்ளியபடி தமக்கிசைவானவொரு இராணுவப்படையணியைக் கட்டியுள்ளார்கள்.இந்த இராணுவத்தின் முன் புலிகள்போன்றவொரு அணி அவசியமற்றுப்போனதன் பின்பான காலம், தமிழ் மக்களினது உயிர்களைப் பறித்தாவது புலிகளின் இருப்பை அழித்துவிடுவதில் இன்றைய போர் இதே உலக அரசியலை நகலெடுக்கிறது.இந்த உலக அரசியலை,கடந்த இரு தினங்களாக ஜேர்மனிய முன்ஞ்சன் நகரில் நடைபெறும் பாதுகாப்பு மகாநாட்டினது பேராளர்களின் உரையில் மிக இலகுவாகப் புரியமுடியும்.
ஆவ்கானிஸ்த்தான் அதிபர் கார்சாய்(Karsai),தனது தேசத்தில் 65 மில்லின் மக்களுக்கு 40 பொலிஸ் அலுவலகங்களே இருப்பதால் அங்கே பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாகச் சொல்கிறார்,முன்ஞ்சனில்.போதைப்பொருள் பயிரிடும் மேற்குலக அரசியலைப் பயங்கரவாதிகளுக்கானதாகச் சொல்லிவிடும் அவர்,அதைப் பெரும்பாலும் தலிபானுக்குரிய தொழிலாக நிறுவுகிறார்.இங்கே,அமெரிக்கக் குரல் ஓலமிடுகிறது.
ஜேர்மனியப் பாதுகாப்பு மந்திரியோ,அவ்கானிஸ்த்தானில் ஒரு பெண் கல்விக்கூடஞ் செல்லத்தக்க சூழலைத் தாம் செய்துள்ளதாகவும்,இன்று,ஒரு மில்லியன் பெண்கள் பாடசாலைபோவதாகுவும்,குளங்கள்,கால்வாய்கள் கட்டப்பட்டு அங்கே,தேனும் பாலும் ஓடவிடப்படுவதாகவுஞ் சொல்லிக்கொள்கிறார்.இவைகளைத்தொடர மேலுஞ் சிக்கலிடும் தலிபானை முறியடிக்க இன்னும் பெரும் படைகளை அங்கே குவித்து, அப்பாவி மக்களைக் காத்தாக வேண்டுமென்கிறார்.அவ்கான் அரசியல் வரலாற்றைக் கற்பவர்களுக்குத் தெரியும் இவர்களது உண்மையான முகம்.அமெரிக்கா தொடர்ந்த இந்த அரசியல்-பொருளாதார நோக்கங்களுக்கு மேற்குலக நாடுகள் நல்லவொரு முகமூடியை ஜனநாயக மூலகங்கொண்டு தயாரித்து மேலாதிக்க யுத்தத்தைத் தொடர்கிறபோது,அண்ணல் மகிந்த இராஜபக்ஷவுக்குச் சொல்லியா கொடுக்கவேண்டும்?
வன்னியில் வரம்பின்றித் தொடரும் இனவழிப்புக்குப் பெயர்:"மக்களை விடுவிப்பது,பயங்கரவாதத்திலிருந்து நாட்டையும்,மக்களையும் காத்துக்கொள்வது!"
இதுவரை,தமிழர்களின் உரிமைகள் குறித்து எதுவுமே சொல்லாத-பேசாத அரச தலைவர் இலங்கையில் இருக்கிறாராவெனக் கேள்வியெழுந்தால்-அத்தகைய தலைவருக்கு உதாரண புருஷர்:அண்ணல் மகிந்தாவே!இவரது வருகைக்குப்பின் இலங்கையர்கள் என்றவொரு தேசிய இனம்தாம் உண்டு.இதைக்கடந்து இலங்கையில் இனங்கள் கிடையாது.
"நாம் எல்லோரும் இலங்கையர்,நமது மொழி சிங்களம்"என்பது அவருக்குப் பின்னால் நிழலாடும் மந்திரம்.
இது,தகவமைக்க முனையும் இலங்கை அவரது அரச ஆதிகத்துக்கு வெளியேதாம் கருக்கொண்டது.பெரும்பாலும் புதியவொரு பொருளாதாரக்கூட்டை நட்போடு வரவேற்ற சிங்கள ஆளும் வர்க்கமானது இந்தத் தெரிவைத் தமது இருப்புக்கு ஆதாரமாகக் கருதியதன் விளைவில்,மகிந்தா இந்தக் கயிற்றில் அழகான இனவொருமைப்பாட்டூஞ்சலைக் கட்டி,அழுது கண்ணீர்விடும் தமிழ் அரசியற் குழந்தைகளை அதிலிட்டுத் தாலாட்டி, விஸ்க்கோத்துக் கொடுக்கிறார்.
இது,புலிகளுக்குக் குண்டுகளைக் கொடுக்கின்ற அதே கையால் வன்னியில் சிறைப்பிடிக்கப்படும் மக்களுக்குக் கணிசமான கல்லறைகளை எங்கோ இடம் புரியாத-திசை தெரியாத திக்கில் கட்டிவைக்கிறது!இது,அமெரிக்க-ஐரோப்பிய அரசுகள் செய்த-செய்யும் அதே ஜனநாயக முன்னெடுப்பாக இருப்பதால்,இவர்கள் யாருமே இலங்கைக்கு எதிராக ஒரு மசிரைத்தானும் புடுங்க முடியாது!வன்னியல் மரணிப்பவர்களை அவ்கானிஸ்தானிலும்,காசாவிலும்,ஈராக்கிலும் இத்தகைய தேசங்கள் புதைக்கின்றன.இதன் பின்னாலான உலக ஆளும்வர்க்கத்தின் பெருவிருப்பு ஜனநாயகம் என்பதில் இவர்கள் எல்லோரும் அதையொட்டி அரசியல் செய்ய, இவர்களது "புதைகுழிஜனநாயகத்தை"த்தாம் நாம் மகத்தானதாகக் காணும் சந்தர்ப்பத்தை பி.பி.சி.முதல் சி.என்.என்.வரை தருகின்றன.புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் எந்தக் கூச்சல்போட்டாலும் எவரும் காணப்போவதில்லை!நாம் இவர்களைத்தானே இதுவரை நம்பியிருந்தோம்?எமக்கு இவர்களைவிட்ட இன்னொரு உலகம் தெரியாமலே இப்போதும் இருக்கிறதே-இதுதாம் அடுத்த அவலம்!
இத்தகைய காலவர்த்தமானத்துள்,கண்டெடுக்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை மகிந்தா இராஜபக்ஷ இலங்கைக்குள் சவாரிவிடும்போது,வன்னியில் சாகும் அனைவரும்"புலிப்பயங்கரவாதிகள்"என்பதை உலகமும் ஏற்கிறது.அந்தவகையில் உலகம் புலிகளிடம் கருணை காட்ட முடியாதாம்.எனினும்,இலங்கைக்குள் நிலவும் பாரிய பொருளாதாரச் சமமின்மையானது நிலவுகின்ற ஆட்சியைத் தூக்கியெறியும் வர்க்கவுணர்வாக ஏற்றுமுற்றிருக்கும் தருணங்களில் இந்தத்தேசங்களால்-கட்சிகளால் இத்தகைய கோசங்கள்-இராணுவ முன்னெடுப்புகள் திட்டமிடப்பட்டு மிகக் கவனமாக மக்களரங்கு வருகிறது.அங்கே, மக்களின் அடிப்படை முரண்பாடு வெறும் இராணுவாதத் தந்திரத்தால் மழுங்கடிக்கப்பட்டு, அதைப் பின் தள்ளி இராணுவாதம் உளவியற் தளத்தில் கூர்மையடைகிறது.இது,இலங்கையில் இன்னொரு சிங்களப் பொற்காலத்தைத் தகவமைக்கிறது சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு.இப்போதைக்குச் சிங்களத் தொழிலாள வர்க்கத்துக்கும் இஃது தேசியப்பசி போக்கிவிடுவதால் அவர்களும் தமது பிள்ளைகளைப் போருக்கு அனுப்பிச் சவப்பெட்டிகளைக் காண அவாவுற்றுக் கிடக்கிறார்கள்.என்னவொரு இலங்கை அரசியல்!எங்கே,மாற்றுத் தலைமைகள்-அரசியல்,இடதுசாரியப் பாரம்பரியம்?
இன்றைய வன்னிப் போரோடு புலிகள் துடைத்தெறியப்பட்டபின் எஞ்சுவது என்ன?
"காலாகாலமாகத் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றப்பட்ட அரசியல் வரலாற்றில் புலிகளும் தமக்கான பங்கை உயிர்ப்பலிகளினூடே ஆற்றியுள்ளார்கள்"என்ற சிறு குறிப்பே எஞ்சிவிடும்!இது,தமிழ்பேசும் மக்களுக்கான விடுதலை!போதும்,இதைவிட வேறென்ன அவசியம்?அப்படி அசியமானால் இருக்கவே இருக்கிறது:மாவீரர் கல்வெட்டும்,துரோகிகள் கல்லறைகளும்!இதுவும் போதாதென்றால்,மகந்தா குடும்பத்து அந்நியச் சேவையில்"பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு" இன்னொரு புலிகள் இலங்கை பூராகவும்-அனைத்து இனங்களுக்குள்ளும் உருவாகப்படும்.ஏனெனில் இலங்கையின் உண்மையான பிரச்சனைகள் அப்படியேதாம் இருக்கிறது.இதுதாம் உலகத்துக்கும்,குறிப்பாக அமெரிக்காவுக்குமான இலங்கைச் சூழலாகும்.இனப் பிரச்சனையோடுகூடிய அனைத்து முரண்பாடுகளும் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் இலங்கையே அவர்களுக்கு அவசியம்.இதைத்தாம் இந்தியாவுக்கும் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.இந்நியாவில் உறங்கிக்கிடக்கும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பிறிதொரு பாணியில் காஷ்மீரில் விடியும்.
இற்றுவரை ஈழத்தில் ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் உயிர்கள் ஈழக்கோசத்தால் பலியிடப்பட்டுள்ளார்கள்.சுமார்4.5 றில்லியன் ரூபாய் பெறுமதியான உடமைகள் போரினால் நாசமாக்கப்பட்டும்,முப்பதினாயிரம் பெண்கள் விதவைகளாகவும்,கிட்டத்தட்ட அதே தொகை சிறுவர்கள் முடமாக்கப்பட்டும் இந்தத் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்துபோனதற்குப் பிரபாகரனும் அவரது தப்பான பதவி ஆசையுமே காரணமானதல்ல.மாறாக,இத்தகைய பிரபாகரன்களை உருவாக்கிய அந்நியச் சக்திகளும்,இலங்கையின் இனவாத அழிப்புமே காரணமாகிறது!இப்போதைக்கு ஒரு பிரபாகரனின் முடிவில், இலட்சக்கணக்கான மக்களின் புதைகுழிகள் தோண்டப்பட்டன.இனிவரப்போகும் பிரபாகரன்கள் இன்னும் எத்தனை புதைகுழிகளைத் தோண்டுவார்களோ அது எவருக்குமே இப்போது புரியாது,அந்த ஆண்டவரைத் தவிர!
இத்தகைய சமூக நெருக்கடியையும்,வரலாற்றுத் துரோகத்தையும் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிட்ட யுத்தக் கிரிமனலாக இருக்கும் அந்நியத் தேசத் தலைமைகளை-இலங்கை அரச அதிபரை மனிதவுரிமைச் சட்டவரைவுகளுக்கொப்ப டென்காக்கில் தண்டித்தாகவேண்டும்?அப்படியா,நல்லது!அதுவும் இவர்களாலேதாம் உருவாக்கப்பட்டது.அங்கே,மிலேசேவிச்சுக்களுக்குத்தாம் கல்லறைகள் கட்டப்படும்.ஜோர்ஜ் புஷ்சுக்கோ, ரோனி பிளேயருக்கோ அன்றி மகிந்தாவுக்கோ அங்கே இடமில்லை.ஏனெனில்,இவர்கள் தாம் "ஜனநாயகத்தை" தத்தமது தேசங்களில் தொட்டிலிட்டுத் தாலாட்டுபவர்களாச்சே!இதற்கு உதாரணமாக:ஈராக்கும்,அவ்கானிஸ்தானும் மட்டுமல்ல இப்போது வன்னியும் இருக்கிறது-வாழ்க, இவர்களது ஜனநாயகம் காசா(Gaza) வழி!
ப.வி.ஸ்ரீரங்கன்
08.02.2009
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
3 comments:
தொடரும் மனித அவலம்….
இன்று தொடர்ச்சியாக மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்¨.
பாதுகாப்பு வலயத்தினுள் வந்தவர்கள் வடிகட்டி காணாமல் போகின்றனர்.
புலிகளின் குடியிருப்பு என்ற போர்வையில் வெளிநாட்டின் தொடர்பு கொண்டவர்களின் வசதியான வீடுகளும் தாக்கப்படுகின்றன.
கொல்லப்பட்ட நபர்கள் ஆங்காங்கே புதைக்கப்படுகின்றனர்.
காயப்பட்டவர்கள் தனித்தே வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வெள்ளைக் கொடியுடன் வருபவர்களையே அரசபடை சுட்டிருக்கின்றது.
இவைகள் வெறும் தரவுகள் அல்ல மாறாக ஒரு கிராம மக்கள் எதிர்கொள்ளும் அவலம்.
புலிகளைக் கொல்கின்றோம் எனக்கூறிக் கொண்டு இனவழிப்பை மேற்கொள்கின்றது சிறிலங்கா பாசீச அரசு.
தமது உறவுகளை அடைக்கலம் கொடுத்த வீடுகூட இனவெறி அரசின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றது. ஆக பெரிய வீடுகள் வைத்திருப்பதும் புலிகள் எனக் கூறப்படுகின்றது. இதனை எம்மவர்களும் புலிகள் இலங்குதான் தாக்கப்பட்டதாக பிரச்சாரம் செய்கின்றனர்.
அரசபடையின் யுத்த தந்திரம்
புலியெதிர்ப்பாளர்களின் அரசியல் தந்திரம்
புலிகளின் யுத்த தந்திரம் இவைகள் மக்களை காவு கொள்வதில் தான் முடிகின்றது.
மீண்டும் வலியுறுத்துவோம்
யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்து
நிவாரணம் வழங்கு
படைகளை முடிக்கு
புலிகளே மக்கள் குடியிருப்புகளை விட்டு உங்களால் முடிந்த முறைகளில் போராடுங்கள்
வெளிப்படுகின்ற பாசீசம் என்பது பலவகைப்படுகின்றது.
அரசபயங்காரவாதம்
புலிகளின் பாசீசம்
மற்றும் மாற்று இயக்கங்களின் மக்கள் வீரோத நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதாகும்.
இன்று சிறிலங்கா அரசின் பாசீச நடவடிக்கை என்பது தமிழ் மக்களை புலிகளிடம் இருந்து மீட்பதாக் கூறிக் கொண்டு தனது பாசீசத்தை தொடர்கின்றது. தான் தொடர்ந்திருக்கும் யுத்தத்தை விமர்சிப்பவர்கள் எல்லோரையுமே புலி முத்திரை குத்துகின்றது. 11/9 பின்னரான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் புரிவதாக கூறிக் கொள்கின்ற இவர்கள் ஏகாதிப்பத்திய பித்தலாட்டத்தை தனது பாசீச நலனுக்காக தமிழ்மக்கள் மீதான இனவழிப்பை பயங்காரவாதத்திற்கு எதிரான போர் என்ற மாயைக்குள் வைத்திருக்க விடாப்பிடியாக செயற்படுகின்றது.
சிறிலங்கா அரசு பாசீசத்திற்கு எதிராக சிறு குரல்களைக் கூட புலியைப் பாதுகாப்பதாக கூறுகின்றது. (இவர்களைப் போலவே)
தமிழ் புலியெதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை அரசு என்னசெய்கின்றதோ அவற்றை கண்மூடித்தனமாக புலிகளுக்கு எதிரான யுத்தமாக பிரஸ்தாபிக்கின்றனர். அங்கு மக்கள் படும் துன்பங்களை இட்டு எவ்வித மனவுறுத்தல்கள் இல்லாமலே அரச பாசீசத்தை வரவேற்கின்றனர். தமிழ் புலியெதிர்ப்பாளர்களும் அரசைப் போலவே புலிமுத்திரை குத்துகின்றனர்.
இதே போல புலிகளின் பாசீசத்தை விமர்சித்தால் அரசகைக்கூலிகள் என புலிகளும் முத்திரை குத்துகின்றனர்.
இவ்வாறு முத்திரை குத்துபவர்கள் மக்களுக்கான தேவை இருக்கின்றது என்பதை எவரும் ஏற்கத்தயாராக இல்லை.
நாம் வலியுறுத்துவது அனைத்து விதமான பாசீச சக்திகளிடத்தில் இருந்து விடுதலையாகும்.
இங்கு புலிகளின் அதிகார வர்க்கம் அழிவது பற்றிய பிரச்சனை அல்ல. புலிகளின் அடிமட்டப் போராளிகள் அழிவது பற்றிய பிரச்சனை மற்றையது
பொதுமக்களின் அழிவைப் பாதுகாப்பது.
அடுத்ததாக தமிழ் மக்களுக்கான உரிமையை எதிரிகளிடம் சோரம் போகாது எவ்வித விட்டுக் கொடுப்புக்கும் இடம் கொடாது சுயநிர்ணய உரிமைக்காக போராட்டத்தை அனைத்து தேசிய இனங்களின் ஐக்கியத்துடன் தொடர்வதாகும்.
// புலிகளே மக்கள் குடியிருப்பை விட்டு உங்களால் முடிந்தமுறையில் போராடுங்கள்// இதில் என்ன தவறிருக்கின்றது? அரசின் தகவலின் படி 900 குறைவான போராளிகளே களத்தில் இருப்பதாக கூறுகின்றது. அப்படியாயின் மற்றைய போராளிகள் எங்கே?
அரசிற்கே தெரிந்து விட்டது புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் புலிகளின் தலைமைத்துவம் மற்றும் பெரும்பான்மையான போராளிகள் இல்லை என்பதை.
இதிலிருந்து தெரிவது என்ன புலிகள் தலைமை தம்மை பாதுகாத்துக் கொள்வார்கள். ஆனால் அப்பகுதியில் வாழும் மக்கள் நிலைதான் என்ன?
அப்படி இடைத்தங்கல் முகாமிக்கு வந்தாலும் அங்கு நடப்பது என்ன?
Keep it up Thesamnet.co.uk & Co
வணக்கம் அன்பர்களே தேசம் நெற் எவ்வாறு எழுத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கின்றது என்பதைப் பாருங்கள். எழுதிய நேரத்தையும் அவர்கள் இணைப்பினை உறுதி செய்த நேரத்தினையும் பாருங்கள் விபரங்கள் உங்களுக்கு விளங்கும்.
ஜெனிற்ரா on February 10, 2009 2:31 pm அன்பிற்கினிய பின்னூட்ட நண்பர்களே!நேற்றைய எனது குறிப்பில் எனது மின்னஞ்சல் முகவரியையும் இணைத்திருந்தேன். உங்களில் பல நண்பர்கள் எமது கிராமத்து மக்களின் இழப்பின் துயரங்களைப் பகிர்ந்து கொண்டதில் மனமதுக்கு ஒரு ஆறுதலாகவும்; இன்னமும் மனிதநேயம் மரணித்து விடவில்லை என்ற நம்பிக்கையும் வந்தது என்னவோ உண்மைதான். அதேவேளை சில அருவருப்பான மெயில்களும் வந்தன இன்று காலை. அவற்றை அனுப்பிவைத்த நண்பர்கள்மீது கோபமோ வெறுப்போ வரவில்லை. மாறாக பரிதாபம்தான் ஏற்பட்டது. மனித நேயத்தின்; மனித நாகரீகத்தின் கடைசித்துளிகூட இவர்களிடம் காய்ந்து கட்டியாகி விட்டதா என்ற ஆதங்கம்தான் எழுந்தது. நான் எனது மெயில் முகவரியைக் குறிப்பிட்டதன் நோக்கம் அறிவுள்ள தேசம் வாசகர்கள் புரிந்திருப்பீர்கள். இப்படியான சில மட்டதான மெயில்கள் வந்ததையிட்டு நான் துவண்டு விடவில்லை. என் குடும்பத்தினர் எல்லோரும் பார்த்தபின்புதான் அவற்றை அழித்தேன். ஏன் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாமேயென்று நீங்கள் கேட்கலாம். சரி. எடுக்கலாம்தான். எடுத்து…. அதற்கப்புறம்…? மொத்தத் தமிழினத்தின் தலையிலுமே இடி விழப்போகிறதாம் இதிற்போய் இந்தச் சில்லறைத் தனத்திற்கெல்லாம் சட்டமாவது சரித்திரமாவது. அன்பிற்குரிய சகோதரரர்களே! இறுதியாக ஒன்றை தட்டும் சொல்லிவிட விரும்புகின்றேன். நமது தேசத்தின் விடுதலைப் போருக்காக ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலுமிருந்து அர்ப்பணிப்புக்களும் இழப்புக்களும் நிச்சயம் ஏற்பட்டுத்தான் இருக்கின்றன என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது. அந்த வகையில் எனது குடும்பத்திலிருந்தும் நான்கு சகோதரர்கள் வெவ்வேறு விடுதலை அமைப்புகளில் (புலிகளில் ஒரு சகோதரி உட்பட) பங்கு கொண்டு தொலைந்து போனவர்கள்தான். மூன்று சகோதரர்கள் சகோதர இயக்கப் படுகொலைக்குப் பலியாகிப் போனவர்கள்தான். இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் 86ம் ஆண்டு முதற்கொண்டு இந்தப் போராட்டம் ஏற்படுத்திய காயங்களும் வேதனைகளும் எமது குடும்பத்திற்கு தந்த மனச்சோர்வைப்போல் பல்லாயிரம் குடும்பங்களும் அனுபவித்திருக்கும். தயவு செய்து நீங்களும் காயப்பட்ட அந்த மனித மனங்களை வக்கிர எழுத்துக்களாலும் சீண்டாதீர்கள். இதற்குமேல் தொடர்ந்து இவை தொடர்பாக நான் எழுதவது முறையல்ல என்றே நினைக்கிறேன். வேறெப்போதாவது ஒரு பயனுள்ள விவாதங்கள் தொடருமிடத்தில் சந்திப்போம்.
-ஜெனிற்ரா-
Nathan on February 10, 2009 5:37 pm Your comment is awaiting moderation. விடப்பட்ட பின்னூட்டங்கள் சில கருத்துக்களை வலிமையாக தாங்கி வந்திருக்கின்றன.
அதாவது பாசீசத்தை ஏற்றுக் கொள் என்பதாகும். வெளிப்படுகின்ற பாசீசம் என்பது பலவகைப்படுகின்றது.
அரசபயங்காரவாதம்
புலிகளின் பாசீசம்
மற்றும் மாற்று இயக்கங்களின் மக்கள் வீரோத நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதாகும்.
இன்று சிறிலங்கா அரசின் பாசீச நடவடிக்கை என்பது தமிழ் மக்களை புலிகளிடம் இருந்து மீட்பதாக் கூறிக் கொண்டு தனது பாசீசத்தை தொடர்கின்றது. தான் தொடர்ந்திருக்கும் யுத்தத்தை விமர்சிப்பவர்கள் எல்லோரையுமே புலி முத்திரை குத்துகின்றது. 11/9 பின்னரான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் புரிவதாக கூறிக் கொள்கின்ற இவர்கள் ஏகாதிப்பத்திய பித்தலாட்டத்தை தனது பாசீச நலனுக்காக தமிழ்மக்கள் மீதான இனவழிப்பை பயங்காரவாதத்திற்கு எதிரான போர் என்ற மாயைக்குள் வைத்திருக்க விடாப்பிடியாக செயற்படுகின்றது.
சிறிலங்கா அரசு பாசீசத்திற்கு எதிராக சிறு குரல்களைக் கூட புலியைப் பாதுகாப்பதாக கூறுகின்றது. (இவர்களைப் போலவே)
தமிழ் புலியெதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை அரசு என்னசெய்கின்றதோ அவற்றை கண்மூடித்தனமாக புலிகளுக்கு எதிரான யுத்தமாக பிரஸ்தாபிக்கின்றனர். அங்கு மக்கள் படும் துன்பங்களை இட்டு எவ்வித மனவுறுத்தல்கள் இல்லாமலே அரச பாசீசத்தை வரவேற்கின்றனர். தமிழ் புலியெதிர்ப்பாளர்களும் அரசைப் போலவே புலிமுத்திரை குத்துகின்றனர்.
இதே போல புலிகளின் பாசீசத்தை விமர்சித்தால் அரசகைக்கூலிகள் என புலிகளும் முத்திரை குத்துகின்றனர்.
இவ்வாறு முத்திரை குத்துபவர்கள் மக்களுக்கான தேவை இருக்கின்றது என்பதை எவரும் ஏற்கத்தயாராக இல்லை.
நாம் வலியுறுத்துவது அனைத்து விதமான பாசீச சக்திகளிடத்தில் இருந்து விடுதலையாகும்.
இங்கு புலிகளின் அதிகார வர்க்கம் அழிவது பற்றிய பிரச்சனை அல்ல. புலிகளின் அடிமட்டப் போராளிகள் அழிவது பற்றிய பிரச்சனை மற்றையது
பொதுமக்களின் அழிவைப் பாதுகாப்பது.
அடுத்ததாக தமிழ் மக்களுக்கான உரிமையை எதிரிகளிடம் சோரம் போகாது எவ்வித விட்டுக் கொடுப்புக்கும் இடம் கொடாது சுயநிர்ணய உரிமைக்காக போராட்டத்தை அனைத்து தேசிய இனங்களின் ஐக்கியத்துடன் தொடர்வதாகும்.
// புலிகளே மக்கள் குடியிருப்பை விட்டு உங்களால் முடிந்தமுறையில் போராடுங்கள்// இதில் என்ன தவறிருக்கின்றது? அரசின் தகவலின் படி 900 குறைவான போராளிகளே களத்தில் இருப்பதாக கூறுகின்றது. அப்படியாயின் மற்றைய போராளிகள் எங்கே?
அரசிற்கே தெரிந்து விட்டது புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் புலிகளின் தலைமைத்துவம் மற்றும் பெரும்பான்மையான போராளிகள் இல்லை என்பதை.
இதிலிருந்து தெரிவது என்ன புலிகள் தலைமை தம்மை பாதுகாத்துக் கொள்வார்கள். ஆனால் அப்பகுதியில் வாழும் மக்கள் நிலைதான் என்ன?
அப்படி இடைத்தங்கல் முகாமிக்கு வந்தாலும் அங்கு நடப்பது என்ன?
santhanam on February 10, 2009 6:10 pm மனிதத்தை காப்பாற்றுங்கள் உலக போரட்ட நகர்வுகளை வைத்து எமது மக்களை பகடகாய்களாக பாவியாதீர்கள் மக்களை சுதந்திர நகர்வுக்கு விடவும் இதற்கு புலம் பெயர்ந்த தமிழர் அனைவரும் ஆர்பட்டம் செய்யவும்.இல்லையேல் பேர் அழிவு முல்லைத்தீவில் உள்ள மக்களிற்கு ஏற்படும் உடனே தடுக்கவும்.
nagan on February 10, 2009 6:35 pm ஐயா தா.பாண்டியன் அவர்களே
ஐயா வைக்கோ அவர்களே
ஐயா ராமதாசு அவர்களே
ஐயா திருமாவளவன் அவர்களே
தங்களுக்கு இன்னுமா தெரியவில்லை ஈழத்தில் நடப்பது
இன்னும் ஏன் வாய் மூடி மெளனியாக இருக்கிறீர்கள் உங்கள் பொன்னான வாயால் உங்கள் தமிழீழத் தலைவர்களுக்கு கூறுங்கள் பாவம் எமது அப்பாவித் தமிழ்மக்களை விட்டுவிடுங்கள். புலம்பெயர்ந்த நாங்கள் உங்களுக்கு பணம் பொன் பொருள் எல்லாம் தருகிறோம். இன்னும் என்வெல்லாமோ தருகிறோம். எமது மக்களை மட்டும் விட்டுவிட சொல்லுங்கள். தமிழனை தமிழன் கொல்லுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் நீங்கள் யாருக்காக போராட்டங்கள் நடத்துகிறீர்கள். சிந்தியுங்கள் தலைவர்களே சிந்தியுங்கள்
Nathan on February 10, 2009 7:41 pm Your comment is awaiting moderation. புதுக்குடியிருப்பிலிருந்து உடையார்கட்டுப் பகுதிக்கு படையினரிடம் தஞ்சமடைய வந்த மக்கள் மீது புலிகள் மேற்கொண்ட காட்டுமிராண்டித் தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் தற்போது கிடைத்த தகவல்களின்படி 19 பேர் கொல்லபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 75 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 2 சிறுவர்களும் 5 பெண்களும் 12 ஆண்களும் அடங்குகின்றனர்.
இச்சம்பவத்தில் 28 சிறார்கள் 30 பெண்கள் 17 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் உயிர்பிழைத்த நிலையில் 1046 பேர் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
http://www.epdpnews.com/news.php?id=2171&ln=tamil
Nathan on February 10, 2009 7:43 pm Your comment is awaiting moderation. மேல் தரப்பட்ட செய்தியின் உண்மை நிலை என்ன? இதில் எவ்வளவு உண்மை இருக்கின்றது. கூற வருவது ஒன்றுதான் அனைத்துவகை பாசீச சக்திகளையும் நம்ப முடியாது என்பதேயாகும்.
Post a Comment