"தீபம் தொலைக் காட்சியில் இரண்டு நபர்கள் அரசியலுரையாடலாகத்
தோன்றுகிறார்கள்,அவர்களில் ஒருவர் மிகப்பெரிய நீண்ட மீசையோடும் மற்றவர் முழுவதுஞ்
சவரஞ் செய்தவராக முகத்தை வைத்திருக்கிறார்.இவர்களது கதையுள்"இலங்கை அரசு இவ்வளவு
இனச் சுத்திகரிப்பைச் செய்துபோட்டது,இதுமாதிரி இனச் சுத்திகரிப்பு நிகழ்ந்த கொசவோ
தனிநாடானமாதிரி ஈழத்தையும் பிரித்தானியா தலையிட்டுப் பிரிக்க இதுதாம் தருணம்"
என்கிறார்கள்.புலிகள் எதை விரும்பினாகளோ அது வன்னியில்
நடக்கின்றது.எனினும்,பிரித்தானியா ஈழம் பிரிக்குமெனும் உலக அரசியலிருக்கே இதுதாம்
தமிழர்களின் அறிவை அளப்பதற்கான அளவுகோலென்பதில் எனக்கு மாற்றுக்
கருத்தில்லை!"
கம்பூச்சியா குறித்த ஊகங்களினதும்,அச்சத்தினதும் நடுவே நடந்தேறும் யுத்தக் கிரிமினல்களின் வழக்குக் கடந்த முப்பாதாண்டுகளுக்கு முன்னான பொல் போர்ட் கம்பனியினது இலட்சக்கணக்கான மனிதப்படுகொலைகள் குறித்து விசாரிக்கிறது.இது, கடந்த நூற்றாண்டின் மிகக் கொடுமையான கிரிமினல் நடாத்தை.1975 ஏப்பிரலிலிருந்து 1979 ஜனவரி வரைக்குள் "போலிக் கம்யூனிசத்தின்"பிறப்பில் வீழ்ந்தப்பட்ட மக்கட்டொகை:1.7 மில்லியன்.கம்பூச்சிய மக்கட்டொகையில் காற்பங்கினர் "களையெடுப்பு"என்ற உதவாக்கரை வார்த்தையின் உதவியோடு சொந்த மக்களைக் கொலைக்குள் தள்ளியது கம்பூச்சிய அன்றைய அரசு.
இதன் உச்சபட்ச விசாரணைகள் ஆரம்பித்திருக்கும் வேளையில்,இலங்கையில்-உலகத்தில் எதனெதன் பெயராலோ மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்.ஈராக்கிலும்,அவ்கானிஸ்தானிலும் மற்றும் சோமாலியாவிலும்,கொங்கோவிலும் இலட்சக்கணக்காக மக்களைக் கொன்று குவித்த அமெரிக்க-மேற்குலக அரசுகளின் கம்பனிகளையும் அவர்களது தலைமைகளையும் எவர் தண்டிப்பார்? இன்னும், பல நூரன்பேர்க்குகள் ஆரம்பிக்கப்பட வேண்டிய இந்தக் காலத்தில் இலங்கையில் இரண்டு யுத்தப் பிரபுகளுக்குப் பின்னே அணிவகுத்துள்ள அந்நிய அரசுகள் இவ்கிரிமினல்களுக்கூடாக இலங்கை வாழ் மக்களில் 10 வீதமானர்களை கடந்த கால் நூற்றாண்டுக்குள் கொன்று தள்ளியபடித் தொடர்ந்தும் மனிதப் படுகொலையைத் தீவிரமாக்கியுள்ளனர்.இதற்கு"ஈடுவிடுதலை"என்று ஒருவனும் மற்றவன் "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" என்றும்-அமெரிக்கக் கொடுங்கோலரின் கொலைக்கார வாசகத்துடனும், இலங்கையை குருதியாற்றுக்குள் அமிழ்த்தியபடி அந்நியச் சேவையைக் கறாரகச் செய்யத் தமது தரப்பு நியாயங்களை எதெனதன் பெயரால் விளக்குகிறார்கள்.
"Hundreds of civilians have now lost their lives. The situation for families
trapped in between the fighting parties is horrific. Both sides should stop
their operations long enough to allow the civilians to leave and aid to reach
those who can't leave", said Yolanda Foster.
http://www.unhcr.org/refworld/country,,,,LKA,4562d8cf2,4993ea0dc,0.html
இந்த இடருக்குள் இவ் அரசுகள்-உலகங்கள் மக்களின் தலையில் மட்டும் குண்டுகளைப் பொழியவில்லை.தொடர்ந்து அனைத்து வாழ்வாதாரங்கள்மீதும் குண்டுகள் தினமும் பொழியப்படுகிறது.இன்றைய பொருளாதார நெருக்கடி இன்னும் பாரிய யுத்தங்களைவேண்டி நிற்கிறது.தமிழர்களைக் காப்பதற்காகத் தமிழ் தலைமைகள் வேண்டிநிற்கும் உலக நாடுகளில் தினமும் பொருளாதாரத்தின்மீது குண்டுகள் பொழிந்து சிதறுகிறது!அவர்கள்,விழி பிதுங்க தலையில் பித்தம் ஏறப் பிதற்றுகிறார்கள்.ஒவ்வொரு யுத்தத்தினதும் பின்னே ஒளிந்திருக்கும் காரணி பொருளாதார நலன் என்பதும் அங்கே வர்க்க ரீதியான யுத்த நடாத்தையே நிலவுவதாகவும் மார்க்சியம் குறித்துரைக்கிறது.இதைத் தாண்டி, யுத்தங்கள் குறித்து ஆய்வைச் செய்து வேறொரு முகமூடியைத் தேசத்தினதும்,தேசியத்தினதும் பெயரால் பரப்புரை செய்தவர்கள் வந்து நிற்கும் இடம் இன்று தமிழ்பேசும் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.பருப்புக்கும்,சர்க்கரைக்கும் இந்தியாவைத் தங்கி நிற்கும் ஒரு தேசம், தனது மக்களுக்குச் சுதந்திரமான தேசியப் பொருளாதாரத்தைக் கவிட்டுவைப்பதைத்தவிர வேறெதைக் கொடுக்கும்?நில ஆக்கிரமிப்புக்கும்,இன அழிப்புக்கும் உட்பட்ட தமிழ்பிரதேசத்தினது இருப்புக்கு, இன்றுவரை மக்கள் செத்துவருவதென்பதில் மேலோட்டமாகவிருக்கும் நியாயம் அதன் உட்புகுந்திருக்கும் நலனினது வெளியில் "எப்போதும்" உயிர்ப்பலி மக்களது விடுதலைக்கானதென்பது தவறாகவே பார்க்கப்படுகிறது.இங்கு எந்தவொரு மண்ணும் எவருக்கும் நிலையானது இல்லை!நீ வருவாய் போவாய்,நிலம் இருக்கும் வேறு-வேறான உருவங்களில்!
http://de.indymedia.org/2009/01/240705.shtml//Die Krise ist da und die erste Auswirkung dieser Krise ist die Fülle von
Zahlen und Daten, die über unsere Köpfe ausgeschüttet wird. Täglich und
stündlich werden wir mit neuen Aktienkursen, Indexzahlen und
Wirtschaftsprognosen bombardiert. Täglich tauchen neue Milliarden Euro auf, die
irgendwem fehlen oder fehlen könnten, und die dann vom Regierungskonto auf das
Unternehmenskonto umgeschaufelt werden. Klar ist bei all dem nur, dass die
Regierung die Milliarden, die sie derzeit verteilt, gar nicht hat. Wer kann da
den Überblick behalten? //-
தமிழீழம் என்ற வரையறை மூலமாகத் தமிழ்ப் பிரதேசங்களைத் தமிழ்பேசும் மக்களது வாழ்வாதாரமாக்கும் போர் என்பது எவ்வளவு தவறாகுமோ அவ்வளவு தவறு சிங்கள அரசு செய்யும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரென்னும் பொய் கோசத்தினதூடாகச் செய்யும் இனவழிப்பு-புலியழிப்புப் போராட்டம்!இலங்கையில் இனங்களுக்கிடையிலான இனமுரண்பாட்டைத் திசை திருப்பிப் பயங்கரவாதமாகச் சித்தரிக்கும் அரசியலென்பது இலங்கையினது கண்டுபிடிப்பல்ல.இது,முற்று முழுதான இந்திய-பார்ப்பனியக்கூட்டுடனான ஒத்துழைப்பில் மேற்குலகத்தின்வழி தமிழர்களது தலையில் குண்டுபோடும் அராஜக அரசியலாகும்!
//"This is a very clear indication of all the precautions we are taking. We are
taking casualties to prevent civilians getting hurt. This is a factor we are
very concerned about. Otherwise we could have used so much artillery and just
moved in," the Defence Secretary has told. //-
http://www.defence.lk/new.asp?fname=20090217_04
இஃதை வெறுமனவே புலிகளது பிராண்டல்தனமான கோசங்களாலோ அல்லது வெகுளித்தனமான புலம்பெயர்-தமிழ்நாட்டு ஆ(ர்)ப்பாட்டக் கோசங்களாலோ தடுத்து நிறுத்த முடியாது.இத்தகைய ஆ(ர்)ப்பாட்டம் மற்றும் புலிவழிப் போராட்டங்களுடாகத் தமிழ்பேசும் மக்கள் வந்தடைந்திருக்கும் இந்த நிலைக்கு தமிழ்பேசும் முழு மக்களைப் பொறுப்பாக்கும் புலிகளது பினாமிகள் மற்றும் தத்துவம் புகட்ட முனையும் விடலைகளது கூக்குரல் மீளவும் புலிகளினது வரலாற்றுத் தவறை அவர்கள் உணர்ந்து, சுயவிமர்சனஞ் செய்து அடுத்த நகர்வைச் செய்வதைத் தடுப்பதாகவே முடியப் போகிறது.
தத்துவங்களைக் கடந்து மக்களது யதார்த்த வாழ்வுக்கு எந்தப் புனைவுகளும் அவசியமின்றிக் கிடக்கிறது.அங்கே,இன்றைக்குப் புடுங்கவேண்டியது,புலிகளையும்,அரசையும் அம்பலப்படுத்தி யுத்தத்துக்கு எதிரான அணித்திரட்சிகொள்வது.இதனூடாக உலக மக்களையும்,முற்போக்குச் சக்திகளையும் திரட்டி இலங்கைக்குப் பின்னாலும்,புலிகளுக்குப் பின்னாலும் நிற்கும் கொலைக்காரர்களை மட்டுப்படத்த முடியும்.இவர்களது அடவாடித்தனமான இந்த மூர்க்கத்தனமான மக்கள்விரோத யுத்தப் படுகொலைக்கு வெறுமனவே ஊரைக்கூட்டிப் புலியின் குரலாக ஒப்பாரி வைப்பதில் எதுவுமே நடக்காது.அரசும்,புலிகளும் மக்கள் விரோதிகளாக நின்று மக்களைக் கேடயமாக்கியுள்ளதை உலகமே புரிந்திருக்கும் இன்றைய நிலையில், நாம் புலிகளின்வழி இதை நியாயப்படுத்த இலங்கை அரசுக்கு முழுப் பொறுப்பையுஞ் சுமத்துகிறோம்.
உலகத்தினது இன்றைய நியாயம்-நீதி எனும் தர்ம விளக்கங்கட்கமையச் சிந்திப்பவர்கள் இதை எதன் பொருட்டும் வகைப்படுத்தட்டும்.எனினும்,இன்றைய வன்னி மக்களது அவலத்துக்குப் புலிகளது அரசியல் நடாத்தையும்,சிங்கள அரசினது அந்நியக்கூட்டுக்களுமே காரணமாக அமைகிறது.இது,ஒரு காலத்தினது அரசியல் தேவையாக முன் தள்ளப்பட்ட பொருளாதார நகர்வுக்கு அவசியமானவொரு யுத்தத் தேவையாக விரிவுறுவதை எதன் பொருட்டும் குறுக்கி, இலங்கை அரசினது இனவழிப்பு அரசியலின் தொடர்ச்சியில் வைத்துப் பார்ப்பது ஆபத்தானது.இதன்வழி நாம் உலகினது நகர்வை எந்த விமர்சனமுமின்றித் தட்டிக்கழித்து மீளவும் பிழையான இடத்திலிருந்து நகர்வதில் முடியும்.இது,புலிகள் இன்று வந்தடைந்த நிலையைவிட மேலும் ஆபத்தான பக்கத்தையும்,அடிமை வாழ்வையும் இலங்கையின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் வழங்கும்.இன்றைய இவ் நிலைமைகளைச் சரியாக மதிப்பிட்டு எதிரிகளைமிகத் தெளிவாக வரையறை செய்து மக்களை விடுவிப்பதற்கு முதற்படி புலிகளையும்,அரசையும் ஒரே தட்டில் வைத்து விமர்சித்து அம்பலப்படுத்துவதே.மக்களுக்கு விரோதமாக நடாத்தும் இவர்களில் ஒருவரை,ஏதாவதொரு நலத்தின் அடிப்படையில் மறைத்தபடி-மறந்தபடி-நியாயப்படுத்தியபடி வன்னியில் சாகும் மக்களுக்காகக் குரல்கொடுப்பதென்பது மிக மோசமான கபடத்தனம்.
"இலங்கைக்குள் இரண்டு தேசங்களை உருவாக்கப் புறப்பட்ட பிரபாகரனது தேசியத்தலைமை உலகத்தின் பொருளாதார மற்றும் சமூக விஞ்ஞானத்திலும் உலகப் புரட்சியிலும் மிகக் கறாரான விமர்சனங்களை வைத்தபடியேதாம் ஈழத்துக்கான புரட்சியை முன்வைத்தது."இதன் தாத்பரியம் தமிழர்களைப் படுகொலைசெய்து குவித்ததுபோகச் சிங்கள அரசினது கொலைக்காரக் குண்டுகளுக்கும் கொத்துக்கொத்தாக அழிந்து போவதுவரை தமிழீழம் முடிந்த முடிவு என்று அவர்கள் சொல்வதைக் கேட்டுப் புலம் பெயர்ந்த தமிழர்கள் பூரிப்படைகிறார்கள்.இதற்கு வலுச் சேர்பதுபோல் இயக்குனர் சீமான் தயாரித்து,இயக்கி வரும் ஈழப் புரட்சிக் காவியம் புலம் பெயர்ந்தவர்களை ஒரு கலக்குக் கலக்கிறது!அவர்கள் விசில் அடித்து வீரகாவியம் மீட்டுகிறார்கள்!நான் வன்னியில் சாகும் மக்களது தலைவிதியை நினைத்து நொந்து போகிறேன்!
//நாங்கள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. விடுதலைப் போர் என்பது ஒரு காலமும் மக்கள்
போராடுகின்ற போது, மக்கள் உணர்வை இழக்காத போராட்டம் தோற்றது கிடையாது. நாங்கள்
யாருக்கும் நியாயமற்ற முறையில் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து வாழப்
போவதில்லை. நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் .//-
விடுதலைப்புலிகளின் போர் ஆய்வுமையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி
http://thesamnet.co.uk/?p=7651
எங்கும்,பொய்யும் அது சார்ந்து போரும் தொடர்கிறது!அப்பாவிகளைக் கேடயமாக வைத்திருக்கும் புலியினது அழிவுக்காகத் தொடர்ந்து காரியமாற்றும் இந்தியா இலங்கை அரசினது அனைத்துவைகைப் பண்புகளையும் அழித்து மிகக் கொடூரமானவொரு தேசமாக இலங்கையை மாற்றிவிட்டுள்ளது!இலங்கையினது பெயரளவிலான ஜனநாயகம் அதன் இராணுவத்தின் கால்களில் சிதைந்தபின்பு,இன்று தமிழ்பேசும் வன்னிப் பகுதி மக்களது அழிவில் முழுப் புலிகளையும் துடைத்தெறிவதில் இந்தியத் தரகு முதலாளியத்தின் விருப்பு அரசியல் நாகரீகமாக விரிகிறது.இலங்கைக்குள் இந்திய அரசியல் போக்குகள் நிலவும்வரைத் தமிழ்பேசும் மக்கள்மட்டுமல்ல இலங்கையின் முழுமொத்த உழைப்பாள மக்களும் பாதிப்படைவதைத் தவிர வேறொருவழி கிடையாது.இதைப் புரிந்துகொண்ட எந்தவொரு பொருளாதாரப் போக்கும் இலங்கைக்குள் தீர்மானகரமானவொரு அரசியல் சக்தியாக உருவாகி, இலங்கையையும் அதன் மக்களையும் காப்பதற்காக தமது சொந்த மக்களது தயவில் அரசியல் நடாத்தும் சூழல் இதுவரை நிகழவில்லை.இனியும் இலங்கையில் தேசியவாதப் போக்குகள் குறுகிய இனவாதக் குறுந்தேசியவாதம் பேசும் நிலைமைக்கே இலங்கைக் கட்சி-இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் அந்நியச் சக்திகள் இட்டு வருகின்றன!இதன் தொடர்ச்சியாகப் புலிகளது மலிந்த பிரச்சார உத்திகள்-காயடிப்புகளை இலங்கை அரசே அம்பலப்படுத்தும்வரை தமிழ் நெற்றினது அறிவுப் புரட்சி கொடிகட்டிப்பறக்கிறது!தமிழர்களின் தலைவிதி-விடலைகள் செய்யும் பல்கலைக்கழகப் படிகட்டுகளைத்தாண்டிக் குதிக்கும் பருவக் கோளாறு இஃது!தூ...
//To smother its humiliating string of defeats at the hands of the Sri Lankan
security forces LTTE propaganda clouts have taken to what they have known best
over the years 'manipulation and distortion' of true ground situations, what is
viewed as rough efforts to satisfy the war mongering diaspora communities world
wide. //
http://www.defence.lk/new.asp?fname=20090218_04
இதன் தொடர்ச்சியில் இன்னொரு வகை அரசியல் சிறுபிள்ளைத்தனத்தைக்கொண்டு,நமது மக்களைக் காப்பதற்கான தெரிவாகத் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இலங்கையைமட்டும் குற்றஞ்சாட்டிவருவதால் உலகத்தின் எந்தவொரு நியாயப்பாடும் அவர்களைக் கவனிக்கவில்லை!தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்களின்மீது உண்மையான அக்கறையிருப்பதானால் வன்னியில் மக்களைப் போரில் பலி கொடுப்பதற்காகவே ஒரு வகை யுத்தக் கருவியாகப் பயன்படுத்தும் யுத்தப் பிரபுகளையும் அம்பலப்படுத்தியாகவேண்டும்.இதைச் சம்பந்தன் மிகக் கவனமாகக் கையாளவதாகக் கருதிப் புலுடா விடுகிறார்.புலிகளதும்,இலங்கை அரசினதும் இன்றைய இந்த யுத்த நடாத்தைக்குள் நிலவும் சூழலின் மதிப்பீடென்ன?தமிழ்த் தேசியக்கூட்டமைப்புத் தம்மைத்தாம் ஏமாத்தலாம்-உலகை?
//"More than 2000 Tamils have been killed while more than 4500 injured in Vanni
due to the unrelenting attacks by the three armed forces of Sri Lanka government
in the recent past,"// -Sampanthan said.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28446
"We have clear indications that the LTTE has intensified forcible recruitment of
civilians and that children as young as 14 years old are now being targeted,"
Philippe Duamelle, Unicef's chief in Sri Lanka, said.
http://news.bbc.co.uk/2/hi/south_asia/7893970.stm
இந்த நிலைமையில் அப்பாவி மக்கள் தினமும் செத்து மடியும் தருணங்களை காட்சிப்படுத்தும் இக் கிரிமினல்கள்(இலங்கை மற்றும் புலிகள்-தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு) தமது அரசியல் இருப்புக்காக மக்களைக் கொல்வதில் மிகவும் ஒருமைப்படுகிறார்கள்,என்கின்றேன்!
பிணங்களின் நடுவே அரசியல் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இன்றைய இலங்கையர்களது வாழ்வு நாசமாக்கப்பட்டுள்ளது.இதை நியாயப்படுத்த உலககுக்கு ஒவ்வொரு தரப்பும் நியாய வாதங்களை அடுக்கினாலும்,உலகப் பொது அமைப்புகள் இவர்களை மிகவும் அம்பலப்படுத்துவதில் கணிசமானவெற்றிகளை எட்டியுள்ளன!எனினும்,இலங்கையில் அழியும் மனிதவுயிர்களை இவர்களால் தடுத்து நிறுத்தும் உடனடிக் காரியங்களைச் செய்ய முடியாதுள்ளது.இதைச் சாதகமாகப் பயன்படுத்தும் இலங்கைச் சர்வதிகார மகிந்தா குடும்பம்,பிரபாகரன் குடும்பமும் இலங்கை மக்களது எத்தகைய அழிவிலும் தத்தமது இருப்புக்கானதும்,சொந்த அரசியல் இலாபத்துக்குமாக மக்களைப் படுகொலை செய்வதில்"தேசநலன்" எனும் நியாயத்தை கொச்சைப் படுத்துகிறார்கள்.
இவர்களனைவரினதும் பிரச்சாரப் பீரங்கிகள் உலகம் பூராகவும் மனிதவிரோதப் பக்கங்களை மகத்தான பணியாகத் திட்டமிட்டுப் பரப்புரை செய்கின்றன.அழிகின்ற மக்களது உயிரைத் துச்சமாக மதிக்கும் இவர்கள், மக்களது இத்துயரைக் குறித்து உலகத்தில் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.இந்த முரண்பாட்டை இனங்கண்டு அம்பலப் படுத்தும் பொதுவமைப்புகள் இங்ஙனம் கூறுகின்றனர்:
>>>Laws-of-war violations by one side never justify violations by the other. The government and the LTTE appear to be holding a perverse contest to determine who can show the least concern for civilian protection.<<<-Brad Adams, Asia director at Human Rights Watch.
http://www.hrw.org/en/news/2009/02/03/sri-lanka-disregard-civilian-safety-appalling
Sri Lanka: Government and Tamil Tigers violating laws of war
http://www.unhcr.org/refworld/country,,,,LKA,4562d8cf2,498178c65,0.html
Vorwürfe auf beiden Seiten in Sri Lanka:
Colombo. Tamilische Politiker haben der srilankischen Regierung am Dienstag
vorgeworfen, im Kampf gegen die Rebellenorganisation Befreiungstiger von Tamil
Eelam (LTTE) Zehntausende Zivilpersonen zu gefährden. Mehr als 2000 Unbeteiligte
seien bei den jüngsten Gefechten getötet worden. Die Hilfsorganisation UNICEF
beschuldigte die Rebellen unterdessen, verstärkt die Zwangsrekrutierung von
Kindern zu betreiben. Seit 2003 seien 6000 solcher Fälle registriert worden.Die
Streitkräfte drängten in den vergangenen Monaten die LTTE auf ein Gebiet an der
Nordostküste zurück, in dem nach Schätzungen des Roten Kreuzes auch 250000
Zivilpersonen eingeschlossen sind.(AP/jW)
http://www.jungewelt.de/2009/02-18/008.php
இவற்றைப் பக்கச் சார்பானதெனவும்,உண்மைகள் அற்றதெனவும் இலங்கை யுத்தப்பிரபுகள் இருவரும் நிராகரித்துவருகிறார்கள்.இங்கே,இவர்களது இத்தகைய மக்கள் விரோத அரசியல் பாதை இவர்களது நடாத்தைகளால் தீர்மானிக்கப்பட்டதல்ல.இலங்கையின் பொருளாதாரத்தைக் கைக்குள் வைத்திருக்கும் உடமைவர்க்கத்தின் தெரிவில் நிகழும் இப் படுகொலை அரசியற் பாதைக்குப் பலமாகவிருந்து வழிகாட்டுபவர்கள் அந்நியத் தேசத்து நலன்களை இலங்கைக்குள் திணிக்க முனையும் பெரும் பகாசூரக் கம்பனிகளாகும்.
இலங்கையர்கள் நாம் அனைத்து உரிமைகளையும் இலங்கையின் யுத்தப் பிரபுகளிடம் பறிகொடுத்துக் கொலையாகி வருகிறோம்.இவர்களைத் தண்டிப்பதற்கான வலு மக்களது அமைப்புகளிடம் இல்லை.அத்தகைய அமைப்புகள் உலகம் பூராகவும் இயங்கிடினும் இவர்களால் அழியும் உலக மக்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.பாசிசம் காட்டாட்சி செய்யும் இலங்கைபோன்ற சர்வதிகாரச் சூழலில் பொதுவமைப்புகள் வெறுமனவே ஓலமிடும் நிலையிலேயே பலவீனமான அரசியலைக் கைக்கொள்கின்றன.இந்த நிலையில் இலங்கையினது யுத்தக்கிரிமனல்களையும் அவர்களது எஜமானர்களையும் தண்டிப்பதற்காக இலங்கை மக்கள் நாளாந்தம் உயிர்ப்பலி கொடுத்தபடி இன்னொரு முப்பதாண்டுகாலம் பொறுத்திருக்கவேண்டுமா?
உலக அநுபவங்களின்படி இவ்வுலகத்தைப் புரிவதென்பது நிலவும் வாழ்நிலைகளின்வழியேதாம் சாத்தியமாகிறது.இலங்கையினது இன்றைய வாழ்நிலையில் மக்களிது தெரிவு சாவதென்பதாக இருக்கிறது.இதைத் தடுத்து நிறுத்துவதற்காகவேனும் முதலில் இவ்யுத்தக் கரிமினல்களின் அதிகாரத்தைப் பறிப்பதற்காக இலங்கை மக்கள் யாவரும் யுத்தத்துக்கு எதிராகத் திரண்டெழவேண்டும்.எனினும்,பாழும் இனவாதப் பரப்புரைகள் அவர்களை அதற்குள் மயக்கிய நிலையில் இதை எங்ஙனஞ் சாத்தியப்படுத்துவது?
எனவே, இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்களை அழித்தபடி புலிகளை பூண்டோடு இலங்கை அழிப்பதை எவருமே தடுத்துவிட முடியாது.இதுவே, இனிவரும் காலத்தில் வரலாறாகவும் பதியப்படுப்போகிறது.இங்கே,இன்னுமொன்றும் கூடவே ஊகமாகப் பேசப்படும்.அது,புலிகளது "பயங்கரவாதத்தை"அழிப்பதற்காக இந்தியா தனது பரீட்சார்த்தக் களமாக இலங்கையைப் பயன்படுத்தித் தனது அயலக எதிரிகளையும் மற்றும் உள்நாட்டுத் தீவிரவாத அமைப்புகளையும் ஒடுக்குவதற்கு முனைந்ததெனப் பதியப்படும்.அத்தோடு இந்தியத் தரகு முதலாளியத்தில் பொருளாதார நலன்களை இவற்றுக்குள் மறைப்பதற்கான தெரிவுகளை இந்தியப் புலானாய்வுத்துறை மிக இலகுவாகப் பின்தொடர்ந்து இந்தியத் தரகு முதலாளியக் குடும்பங்களைக் காக்கும்,ஜனநாயகத்தினதும்-காந்தியினதும் பெயரால் மட்டுமல்லக் கூடவே இந்தியப் பாதுக்காப்பு மற்றும் பிராந்திய நலனின் பொருட்டென்றும்!
ப.வி.ஸ்ரீரங்கன்
18.02.2009
1 comment:
கொலைக்களம்..
சிறிலங்கா அரசு தாக்குதல் தொடுத்த பின்னரான காலங்களில் ஏன் இன்றுவரை கூட புலிகள் பலமாக திருப்பித் தாக்குவார்கள் என்றே எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை மாறாக புலிகள் பெரும் நிலப்பரப்புகளாக விட்டு விட்டு எவ்வித எதிர்ப்பையும் காட்டாது பின்வாங்கிச் சென்றனர். இன்று சில மைல்பரப்பளவில் பெரும் மக்களுக்கிடையே புலிகள் இருப்பதாகவும் இறுதித்தாக்குதலுக்கு தயாரா இருப்பதாகவும் புலிகளின் ஆய்வாளர்கள் எழுதிக் கொள்கின்றார்கள். "விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் இராணுவத்தை புதுக்குடியிருப்பு நோக்கி வரவைத்துள்ளனர். புதுக்குடியிருப்பு சமருக்காக அவர்கள் பெருமளவான கனரக ஆயுதங்களையும் நகர்த்தியுள்ளனர். விடுதலைப்புலிகள் வசம் 10 பிரதான போர் டாங்கிகள், பல டசின் கவச வாகனங்கள், இரண்டு பல்குழல் உந்துகணை செலுத்திகள், 200 மோட்டார்கள், 60 பீரங்கிககள் உட்பட பெருமளவான கனரக ஆயுதங்கள் உள்ளதாக நம்பப்படுகின்றது. சிறீலங்கா வான்படையினரின் வான் தாக்குதல்களில் இருந்து அவற்றை பாதுகாத்து இறுதிச்சமருக்காக தயார்படுத்தி வைத்துள்ளனர்.
முன்னைய அனுபவங்களில் இருந்து தெரிந்து கொண்டது ஒன்று தான் அதாவது விடுதலைப்புலிகள் தமது கனரக ஆயுதங்களை நிலையான இடத்தில் வைத்து தொடர்ந்து பயன்படுத்துவதில்லை. உதாரணமாக டாங்கி ஒரு இடத்தில் இருந்து சூடுகளை வழங்கினால் அது சில நிமிடங்களில் வேறு இடத்திற்கு நகர்ந்து விடும். விடுதலைப்புலிகள் கவசத்தாக்குதல் படை பிரிவை ஆரம்பித்துள்ளதாக படைத்தரப்பு ஒத்துக்கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. விமானங்களின் வரவை கண்டறியும் நவீன ராடார் வசதிகளும் விடுதலைப்புலிகள் வசம் உண்டு. எனவே தான் வான்படை திடீர் தாக்குதல்களுக்கு தாழ்வாக பறக்கும் எம்ஐ-24 மற்றும் எம்ஐ-35 ரக உலங்குவானூர்திகளை பயன்படுத்தி வருகின்றது. ஆனால் அவற்றின் தாக்குதல் எல்லைகள் மட்டுப்படுத்தப்பட்டவை.
முல்லைத்தீவும், சாலைப்பகுதியும் நீரேரிகளை உடைய குடா பகுதிகளை கொண்டவை அந்த நீரேரிகளை தற்காலிக அமைக்கப்பட்ட பாலங்கள் மூலம் கடந்து 55 ஆவது படையணியும், 59 ஆவது படையணியும் கனரக வாகனங்களை புதுக்குடியிருப்பு நோக்கி நகர்த்தி வருகின்றன. ஆனால் விடுதலைப்புலிகள் திடீர் தாக்குதலை நிகழ்த்தும் போது அவர்கள் இந்த கனரக வாகனங்களை கைவிட்டே ஓடவேண்டியிருக்கும். எடுத்து செல்வது கடினம். புதுக்குடியிருப்பின் கரையோர பகுதிகளை இரு படையணிகள் கைப்பற்ற முனைந்து வருகையில் ஏனைய 5 டிவிசன்களும் தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் நகர்ந்து வருகின்றன. "(http://www.infotamil.ch/ta/news.php?2bFSo4e0dvh5e0ecBG5N3b4OcJ74d2d0h3cc2GvS2d434US3b023Nq3e
ஈழப்போர் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்த போகும் சமர் [ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2009, 15:29 GMT+01:00 ] [நிலவரம்]
புலிகளின் அடுத்த நகர்வு?
புலிகளின் ஆயுத பலம் இவ்வளவு பலத்தை வைத்துக் கொண்டு புலிகள் ஏன் மக்களை பாதுகாக்கவில்லை? இன்றுவரை கூட புலிகள் பலமாக திருப்பித் தாக்குவார்கள் என்றே எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அழிவு தொடர்கின்றது. மக்களின் நலனை அக்கறையிருந்திருந்தால் கனரக ஆயுதங்களை பாவித்திருப்பார்கள். இது சிறுபிள்ளைத் தனமான கருத்தாகக் கூட எள்ளிநகையாடலாம். இதில்
தொடர்ச்சியான ஆயுதவழிபாடு
தலைமையைக் காப்பாற்றுவது
மக்களின் இழப்பைக் காட்டி அனுதாபத்தை பெறுவது
மக்களின் இழப்புக்கள் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெறுவது அதாவது கொசவோ அல்லது கிழக்குதிமோர் போன்று தமிழீழத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும் என புலிகளின் தலைமை எண்ணியிருக்கலாம். ஏன் இன்று இழப்பின் பின்னராக கொடுக்கப்படுகின்ற சர்வதேச கவனம் கூட தம்மை நோக்கிய பார்வையை திருப்பியுள்ளதாகவே புலிகள் கருதுகின்றனர்.
மேலும் புலிகளில் உள்ள உறுப்பினர் வலுவைப் பற்றி "விடுதலைப்புலிகளின் பகுதியில் ஏறத்தாள 300இ000 மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 10 விகிதமானவர்கள் போரிடும் தகமை உடையவாகள் என வைத்து கொண்டால் கூட அவர்களின் பலம் 30இ000 இனால் அதிகரித்துவிடும். விடுதலைப்புலிகளின் வசம் ஏற்கனவே 15இ000 பயிற்றப்பட்ட போரளிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அவர்களின் பலம் 45இ000 ஆக அதிகரிக்கலாம். விடுதலைப்புலிகளின் செயற்திறன் மிகவும் அதிகம்.
போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த 6 ஆண்டு காலப்பகுதியில் அவர்கள் வீதிகளையும்இ கட்டடங்களையும் கட்டிக்கொண்டு இருந்திருப்பார்களா அல்லது மக்கள் பாதுகாப்பு படையையும்இ தமது தாக்குதல் படையணிகளையும் கட்டி எழுப்பியிருப்பார்களா என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள். " ஆக இவர்கள் இங்கு கூறவருவது என்னவெனில் நம்புங்கள் நம்புங்கள் தமிழீழ நாளை கிடைக்கும் என்பதையே.
இழப்பை காட்டி மக்களின் ஆதரவைப் பெறுவதே புலிகளின் கடந்த 25 வருடகால யுத்த தந்திரமாகும். சிறுசிறுதாக்குதல்கள் மூலமாக படைகளைக் கொல்வதும் தமது சகாக்களை இழந்த இராணுவம் வெறித்தாக்குதலை மேற்கொள்வதும் பின்னர் இதனால் ஏற்படும் கெடுபிடிகளினால் விரக்தியுற்ற இளைஞர்கள் இயக்கங்களில் சேர வழிவகுத்ததது. மக்களும் இராணுவத்தை வெறுக்கத் தொடங்கினர். அரசியல் ரீதியாக மக்களை திரட்டுவது பற்றிய எவ்வித முனைப்பும் புலிகளுக்கு இருந்ததில்லை. ஆனால் ஏதோ தாம் அரசியல் நடத்துதவாக காட்டிக் கொண்டாலும் எல்லாம் தலைவருக்கு தெரியும்> தலைவர் பார்த்துக் கொள்வார்> எல்லாம் தலைவரின் வழிகாட்டலில் தான் நடைபெறுகின்றது. இவ்வாறு ஒரு வெற்று மாயையை புலிகளின் தலைவரைச் சுற்றியே புலிகளின் அரசியல் அறிவு கட்டமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைக்கான தேவை என்பது இருந்த போதும் ஈழப்போராட்டம் என்பது தன்னியல்பாக வளர்ச்சியடைந்தது அல்ல. 1983 பின்னரான நிகழ்வில் இந்தியா மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் தலையீடாது. இயக்கங்களை வீங்கி வெடிக்கச் செய்தது. 1987 பின்பகுதியில் இந்தியராணுவத்துடனான மோதல்கள் கூட புலிகளை வளர்த்தே விட்டது. அரசியல் கருத்து ரீதியாக புலிகள் இந்திய இராணுவ வெளியேற்றத்திற்கான வெகுஜன போராட்ட கட்டமைப்பை உருவாக்கவில்லை. இழப்புக்களை ஏற்படுத்தியே புலிகள் மக்கள் தம்பக்கம் திருப்பினர். இந்திய இராணுவம் செய்த கொலைகளுக்கு ஈடாக புலிகளும் கொலைகளைச் செய்தனர். பழிகளை மற்றவர்கள் மீது போட்டனர். இதன் பொருள் இந்தக் காலத்தில் இருந்த நிலவரத்தில் அப்பழுக்கற்ற சக்திகள் இருந்ததாக கூற முடியாது. அன்றைய காலத்தில் இருந்த சக்திகள் அனைத்தும் ஏதோவொரு வகையில் அனைத்துச் சக்திகளின் கைகளிலும் இரத்தம் தோய்ந்தே இருந்தது.
வழமையாக இவ்வாறு ஒரு பகுதியை இராணுவம் நெருக்குதல் கொடுத்தால் வேறுபகுதியில் அரசபடைகளின் கவனத்தை திசை திருப்புவதற்குகாக தாக்குதல்களை நடத்துவர். ஆனால் கிளிநொச்சி படைகள் வசம் வரும் வரையில் பாரிய திசைதிருப்பும் தாக்குதல்களை நடத்தவேயில்லை. இனிவருங்காலத்தில் வரவு செலவை கணக்கை காட்டுகின்ற போது எவ்வளவு தமிழ் மக்கள் படைகளால் கொல்லப்பட்டார்கள் என்பது மறைக்கப்படும் அல்லது மறக்கப்படும். ஆனால் எவ்வளவு இராணுவச் சடலங்கள் தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்டது. எவ்வளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது என்பது பற்றிய வரவுதான் பிரச்சாரத்தின் போது காட்டப்படும். இவை ஒன்றும் கற்பனை அல்ல உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம் சீலன் ஆனந்தன் ஆகிய இருவர் சுடப்பட்டு இறக்கின்றார்கள். அந்தவேளை இறந்தபோராளிகளின் துப்பாக்கியை பக்குவமாக தலைமையிடம் ஒப்படைக்கும் படி சீலன் கட்டளை இட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. விக்ரர் கொலை செய்யப்பட்ட வேளையில் இராணுவத்தின் பிணங்களும்> தளபாடங்களும் முன்வைக்கப்பட்டு கொலை மறைக்கப்பட்டது. இவ்வாறு பலநூறு சம்பவங்களை குறிப்பிடலாம்.
இன்று புலிகளின் தலைமையும்ஈ முழு உறுப்பினர்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருப்பதாக கொள்ள முடியாது. இவ்வளவு நெருக்கமான இடத்தினுள் பிரபாகரன் இருப்பாராயின் அவர் இருக்கும் இடம் எதிரிகளுக்கு தெரிய வந்திருக்கும். இவ்வாறு நெருக்கமான இடத்தினுள் பிரபா இருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. இவ்வாறு இருக்கும் இடம் தெரியும் பட்சத்தில் பிரபா இருக்கும் இடம் நோக்கியே விண்வெளிப் படங்களின் உதவியுடன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும்.
ஆனால் அரசைப் பொறுத்தவரையில் தற்கொலைத் தாக்குதலில் இருந்து தப்பிய சரத்பொன்சேகா> ராஜபட்சே ஆகியோரின் பழிவாங்கும் படலம் இந்திய ஆழும் வர்க்கத்தின் ஆசியுடன் நடத்தப்படுகின்றது. அரசிற்கு தெரியும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகளின் தலைவர் இல்லை என்பதும் எவ்வாறெனினும் இலங்கை முழுவதுமான நகரங்களை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வருதே அரச பயங்கரவாதிகளின் எண்ணமாக இருக்கின்றது. இதற்கு விலையாக தமிழ் மக்களின் உயிர்கள் இருப்பது பற்றி எந்தக் கவலையும் இல்லை.
ஆனால் தமிழ் மக்களின் இழப்புக்கள் ஏற்படுத்துவதன் மூலமே புலிகள் தமது இருப்பை ஸ்திரப்படுத்துகின்றனர். புலிகள் மக்களை சுதந்திரமாக இராணுவக் கட்டுப்பாட்டினுள் செல்ல விரும்பியவர்களை செல்ல விட்டிருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை ஆயுதங்களையும் தமது தலைவர்களையும் காப்பாற்ற வேண்டி இன்றைய கொலைகளத்தை புலிகள் உருவாக்கியிருக்கின்றார்கள்.
புலகளின் ஊடகங்கள்மக்களை மூளைச்சலவை செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. "எமது மக்களின் அரசியல் அறிவு மறைக்கப்பட்டு இழப்புக்களை வைத்தே தமது இருப்பை பேணப்படுகின்றது.
இன்றைய நிலையில் பிராந்திய வல்லரசின்; மேற்கு நாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலானது பொருளாதார நலன்கருதி வரையப்பட்டதாகும். இவற்றை அம்பலப்படுத்தி மக்களை அணிதிரட்டவல் இன்றைய அரசியல் நிகழ்வை புரியத்தக்க வகையில் அரசியல் ரீதியாக பலம் கொண்ட ஒரு அமைப்பும் எம்மத்தியில் வேர் ஊன்ற முடியவில்லை.
இவ்வாறு மூளைச் சலவை செய்யப்படுகின்ற மக்களிடம் இருப்பது கோபம்; உலக நடப்பை புரிந்து கொள்ளக் கூடிய அறிவில்லாத நிலை. இந்த நிலையானது விரக்தியை உருவாக்கின்றது. இதனால் மேலும் மேலும் பாசீசம் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள சந்தர்ப்பம் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில் இழக்கப்படுவது எமது சகோதரர் அம்மா அப்பா; மாமா மாமி; சின்னம்மா பெரியம்மா; சித்தப்பா பெரியப்பா.
ஆக இழப்புக்குள் உள்ளாவது எமது இரத்தம் இவ்வாறு நித்தம் இரத்தம் சிந்துகின்ற போது மற்றைய விளக்கங்கள் எவையும் நியாயம் அற்றதாக போகின்றது.
வரலாற்றை தவிர்த்த போக்கு இதனால் தான் இன்று இளையோரை போராட்டத்திற்கு தலைமை தாங்கப்படுகின்றார்கள் இதனால் ஏதோ முதிர்ந்தவர்கள் தாமாக வழியை விடவில்லை மாறாக முன்னையவர்களின் உழைப்பை குறிப்பிட்ட ஒரு அதிகாரவர்க்கம் புலம்பெயர்ந்த நாட்டில் உருவாக்கப்பட்டு அவர்களின் மேற்பார்வையில் கீழ் இன்றைய இளையவர்கள் அதிகார வர்க்கத்திற்கு ஊழியம் செய்ய மறுவுற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவைகள் தேசத்தில் இருந்து சிந்தப்படும் உதிரத்தை மூலதனமாகக் கொண்டு உரம் போடப்படுகின்றது.
இன்றைய மக்களிடத்தில் தோன்றியிருப்பது அரசியல் விழிப்புணர்வு அல்ல. இழப்புக்களினால் ஏற்பட்ட தன்னெழுச்சியான இரக்க உணர்வு இதில் இருந்து பெறப்படும் ஒவ்வொரு சிறிய சக்தியும் பாசீசத்தினை உயிரூட்டவல்ல விழைபொருட்களே."
புலியெதிர்ப்பாளர்கள்
புலிகள் மற்றையது புலியெதிர்ப்பணி என இருதுருவங்கள் இருக்கின்றன. இவர்களைத் தவிர்த்தி தனியே ஒரு நிலைப்பாடு எடுக்க முடியாதா? அல்லது அவ்வாறு எடுப்பது தறவா? ஏனெனில் இன்றைக்கு மக்களை கொல்பவர்கள் அல்லது கொல்ல துணையோகின்றவர்கள் எல்லோரும் தத்தம் பக்கம் நிற்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றனர்;. இவற்றை தவர்த்தி இருப்பவர்கள் சுதந்திரமாக இருக்க முடியாது என்பதே யதார்த்தம்.
புலிகள் சகோதரப்படுகொலையை மேற்கொண்டு தமது தலைமைதான் தமிழ் மக்களின் ஏகதலைமை என வலிந்துதினிக்கப்பட்டது. கருத்துத் திணிப்பானது சமூகத்தில் சுதந்திரமாக கருத்துருவாக்கத்திற்கு சாவுமணி அடித்ததது. இதன் விழைவு இன்று புலிகள் முடக்கப்பட்ட நிலையில் மக்கள் சுதந்திரமாக ஒரு போராட்டத்தை நடத்த முடியாத நிலையில் தான் இருக்கின்றனர். இந்த அவலத்திற்கு புலிகளே பெரும்பொறுப்பாகும். அவ்வாறு யாரென்றாலும் மக்கள் நலனில் இருந்து கருத்துக் கூறுமிடத்தில் ஏதோவொரு துருவத்தினுள் முத்திரை குத்தப்பட்டு சேறடிக்கப்படுகின்றது. புலிகள் எவ்வாறு ஏகம் என்ற ஒன்றை நிலையில் மாற்றுக்கருத்துக் கொண்டோரை அரசியல் அரங்கில் இருந்து அன்னியப்படுத்தினார்களோ இன்று புலியெதிர்ப்பாளர்கள் மக்கள் நலன் கொண்ட எந்தச் செயற்பாடும் புலிகளுக்கு சார்பானது எனக்கூறுகின்றது.
"பாசிசப்புலிகளும் தவறுஇ பேரினவாதமும் தவறு என்று சீமையில் இருந்து கொண்டு சித்தாந்தம் பேசும் இவர்கள் தாயகம் சென்று தனித்துவமான ஒரு அமைப்பை கட்டியெழுப்ப வேண்டியதுதானே. பாசிசப்புலிகளையும்இ பேரினவாதத்தையும் எதிர்த்து வடக்கு கிழக்கில் செயற்பட எண்ணியிருந்த சோசலிச சமத்துவக்கட்சி உறுப்பினர்கள் எதிர் கொண்ட மரண அச்சுறுத்தலை இவர்கள் மறந்துதான் போவார்களா?... அவர்களது முயற்சிகளை பாசிசப்புலிகள் ஒட்ட நறுக்கிஇ அந்த அமைப்பின் உறுப்பினர்களை கொன்றொழித்த வரலாறுகளை இவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். "hவவி://றறற.pயயசஎயi.நெவ/pயநப.002002.hவஅ" இனவாத அரசை ஏற்றுக் கொள்ளும்படி புலியெதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். ஓரு விடுதலை அமைப்பு என்பது சமூகத்தில் இருந்து தனது தேவையை நிவர்த்திசெய்யும் பொருட்டு உருவாகப்படுவது. அதனை புலம்பெயர்மண்ணில் இருந்து ஒன்றை உருவாக்க முடியாது. வரலாற்றின் தேவையின் நிமிர்த்தம் உருவாக்கப்படுவதற்கு அல்லது தலைமை தாங்குவதற்கு வானத்தில் இருந்து இறங்க வேண்டிய தேவையில்லை.
தமிழ் மக்களுக்கான எதிர்கால தீர்வு எவ்வாறு இருக்க வேண்டும் இதனை புலியெதிர்ப்பாளர்கள் முன்வைப்பார்களா? அரசு என்ன தீர்வுத் திட்டத்தை வைத்திருக்கின்றது என்பதை பார்க்கும் முன். புலியெதிர்ப்பாளர்கள் எவ்வகையாக தீர்வை வைத்திருக்கின்றனர் என்பது மக்களுக்கு தேவையானதாகும். "அரைகுறைத்தீர்வுகளை ஏற்பதா என்று நீங்கள் கூறுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு மாறாக யுத்தத்தை நீங்களே ஊக்குவித்தும் வந்திருக்கிறீர்கள் என்பது தெளிவாகின்றது. " சரி கிழக்கு மாகாண அனுபவத்தை எடுத்துக் கொள்ளுங்கள் பிள்ளையான் வரி> மாகாணசபையின் பொலீஸ்படை வேண்டும் எனக் கோரிக்கை இட்டார். இதனை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொண்டதா? இதையேதான் வரதராஸ பெருமாள் 1990களில் கூறிவிட்டு கப்பலில் சென்றார். (வட>கிழக்கு சபை கலைப்பிற்கு புலிகள் காரணம் ) ஆக எதிரியானவன் தான் ஒடுக்கும் மக்களுக்கு எவ்வாறு நியாயமான தீர்வை முன்வைக்கும் என நம்பமுடிகின்றது.
கிழக்கு மாகாணசபைக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் என கிழக்கின் விடிவெள்ளிகளினால் போராட முடிந்ததா? இதற்கு பதிலாக என்ன செய்கின்றனர். கிழக்கின் மானமிகுதலைவர் இனவாதிகளுடன் சங்கமமாகின்றார். ஒரே தலைவன் ஒரே கட்சி கூறிவிட்டு "ஃலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் இந்த வாரத்திற்குள் அறிவிக்கவிருப்பதாக ரி.எம்.வி.பி தலைவர் வி.முரளிதரன் எம்.பி தெரிவித்துள்ளார். பிராந்திய அடிப்படையில் அரசியல் கட்சிகளை வைத்திருப்பதை நான் விரும்பவில்லை. தேசிய அடிப்படையில் ஓர் அரசியலுக்குள் எமது மக்களை நுழைத்து அதற்கான அங்கீகாரத்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். எனவே இந்நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் உரையாடி மேற்படி தீhமானத்தை எடுத்துள்ளோம். இது எமது மக்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த வளங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பாக அமையுமெனவும் கருதுகின்றேன். அதேநேரத்தில் இனப்பிரச்சினை தீர்ப்பதற்கு இதுவொரு சிறந்த முன்னுதாரண நடவடிக்கையாக விளங்க வேண்டுமென்பதையும் கேட்டுக் கொள்கிறேன் என்றும் முரளிதரன் எம்.பி தெரிவித்துள்ளார். இதேவேளை தமது அமைப்பிலுள்ள சுமார் 1300பேர் படைகளில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும்> 200பேர் வரையில் படைகளில் இணைக்கப்பட்டு தமது முதல்மாத வேதனத்தைப் பெற்றிருப்பதாகவும் முரளிதரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்." கிழக்கின் விடிவெள்ளிகள் தமது கதிரைகளை பாதுகாப்பதில் அண்ணன் பிரபாவிற்கு ஈடாக செயற்படுகின்றனர்.
புலிகளினால் மாத்திரம் அல்ல மற்றைய கட்சிகளும் ஒருவருக்கொருவர் குழிதோண்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். "தலையில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். இப்படுகொலை அண்மைக்காலமாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் அவருடன் இணைந்து அரசியல் நடாத்தும் உறுப்பினர்களுக்கும் எதிராக செயற்படும் கருணா அம்மானின் ஆதரவாளர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டுநகர் தகவல்கள் தெரிவிக்கின்றன. " வன்னியில் தமிழ் மக்கள் தமது சந்ததிகளை இழந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வேளையில் களையெடுப்புக்களை தமிழ்கட்சிகளே தமக்கிடையே செய்து கொண்டிருக்கின்றன. புலியெதிர்ப்பணியும் மக்களை சுயமாக சிந்திக்கவிடாது மரணபயத்தை ஏற்படுத்துகின்றனர். கடத்தல்> கப்பம்> காணாமல்போதல் என்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. வன்னி மக்களைபுலிகள் விடுவிக்க வேண்டும் என்று ஊர்வலம் யாழில் நடைபெற்றது. அந்த ஊர்வலம் சுதந்திரமாக அணிதிரட்டப்பட்டது எனக் கொள்ள முடியுமா? அங்கு உள்ளவர்கள் இ.பி.டி.பி அல்லது இராணுத்தின் தயவுடனேயே அங்கே நின்மதியாக இருக்க முடியும். இதன் நிர்ப்பந்தத்தால் மக்கள் ஊர்வலத்திற்கு வந்திருப்பர். இவ்வாறே புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருப்பவர்களும் புலிகளுக்கு இசைந்தே நடக்க வேண்டிய நிலை இருக்கின்றது. எவ்வித அழுத்தங்கள் இல்லாது தாமாக தேர்வு செய்யக் கூடிய உரிமையை மக்களுக்கு அனைவரும் கொடுக்க வேண்டும்.
புலியெதிர்ப்பு இணையங்கள்.....
புலியெதிர்ப்பு இணையங்கள் அரசிற்கு விசுவாசமாக நடப்பதில் அவர்களை விட்டால் யாரும் இல்லாத வகையில் சிறிலங்கா அரசிற்கு பிரச்சார பீரங்கிகளாகச் செயற்படுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரையில் புலியை யார் எதிர்க்கின்றார்களோ அவர்கள் எல்லோரும் நண்பர்கள். இவர்களுக்கு சோ> ஜெயலலிதா> இந்துராம்> தமிழககாங்கிரஸ் எடுபிடிகள்> வணக்கத்துக்குரிய சுப்பிரமணிசாமி ஈடாக பலரும் இவர்களின் நட்புவட்டமாக இருக்கின்றது. சில தலையங்கங்களையும்> செய்திகளையும் பார்ப்போம்..
நீதிக்குத் தலைகுனிவு!
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னால் சுப்பிரமணியன் சுவாமி வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைப் பார்க்கும்போதுஇ இங்கே நடப்பது மக்களாட்சிதானாஇ இது நல்லாட்சியா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
தற்கொலைஇ தமிழ்ச் சமூகம்இ தமிழீழப்போராட்டம்!
சீமான் கைது எப்போது? தமிழக அரசு பதில்
மக்கள் ரிவிக்கு தடை என்று மக்கள் ரிவி கிளப்பிவிட்ட புரளி
விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து வெளியேறும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் : ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் குற்றச்சாட்டு
இந்தியாவையும்இ பிரித்தானியாவையும் சாதகமாகக் கையாண்ட இலங்கை
இலங்கையில் போரில் சிக்குண்டுள்ள மக்களின் அவல நிலை குறித்து ஐ.நா. கவலை: விடுதலைப்புலிகள் மீது கடும் கண்டனம்
hவவி://றறற.அயபயஎயடல.உழஅ/தமிழகப் பயங்கரவாதிகளான விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் தீக்குளித்து மரணம்; கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு சம்பவம்
இவ்வாறு இவர்களுக்கான கருத்து புலியை எதிர்ப்பதும்> புலியை எதிர்க்கின்ற அனைவரையும் தமது ஒத்த கருத்துக்குரியவர்களாக இணைத்துக் கொள்வதாகும். இவ்வாறே தீபம் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் சிவாஜிலிங்கம் தெரிவித்ததாவது.
கிறிஸ்தவர்கள் தாக்கப்படுகின்றார்கள் என கிறிஸ்தவ அமைப்புக்களிடமும்> இந்துக்கள்தாக்கப்படுகின்றார்கள் என பா.ஜ.க தலைவர் அத்வானியிடமும் முறையிட்டதாக கூறினார் என்றும் இதன் மூலம் ஈழமக்களுக்கு ஆதரவான சக்திகளை திரட்ட முடியும் எனவும் கூறினார். பா.ஜ.க மதவாதக் கட்சியாகும். இவர்களின் எந்தச் செயற்பாடும் தேர்தலை சார்ந்ததாகவே இருக்கும். இவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் கூட இன்றைக்கு என்ன நிலை இருக்கின்றதோ அவ்வாறான நிலைதான் இருந்திருக்கும். இவர்கள் எதிரியார்? நண்பர் யார் என்று திடமாக இருக்காது சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்கின்றனர்.
பா.ஜ.க ஒரு ஆழும் வர்க்கத்தை சேர்ந்த ஒரு கட்சியாகும் இவர்கள் எவ்வாறு ஒரு தேசிய இனத்திற்கு ஆதரவாக செயற்பட முடியும். இந்தியாவில் இருக்கின்ற தேசிய இனங்களின் உரிமையை இந்த மதவாதிகள் தயாராக இருக்கின்றார்களா? தமது நாட்டிலே உரிமைக்காக போராடும் மக்கள் மீது கரிசனை கொள்ளாத அமைப்புக்கள் எமது விடுதலைகக்காக குரல் கொடுப்பதானது அவர்களுடைய அரசியல்நாடகத்திற்கு நாம் அமைத்துக் கொடுக்கும் களமாகும். அரசியல் நடிகர்கள் களங்கள் கிடைக்கும் போது வீரவசனம் பேசிவிட்டுப் போய்விடுவர். நடைமுறையில் இவர்கள் எல்லோரும் ஒடுக்குமுறையாளர்கள் தான்.
இவ்வாறாக தமிழகபாசீஸ்டுகள் எல்லோரும் புலிகளை எதிர்க்கின்றார்கள் என்பதற்காக புலியெதிர்ப்பாளர்களின் நண்பர்களாக இருக்கின்றனர். இந்த அரசியல் கோமாளிகளின் கருத்துக்களை புலியெதிர்ப்பை நிலைநிறுத்துவதற்காக துணைக்கு அழைக்கப்படுகின்றனர். சோ> ஜெயலலிதா> இந்துராம்> தமிழககாங்கிரஸ் எடுபிடிகள்> வணக்கத்துக்குரிய சுப்பிரமணிசாமி மனித குல விரோதிகளாக இருக்கின்றார்கள் இவர்களிடம் இருப்பது சாதியத்திமிருடன் கூடிய ஆணவக் கருத்துக்கள்.
புதிய பாதை ஒன்று இல்லையா?
இன்றைய நிலையில் எந்தச் சக்திகளின் பின்னால் செல்லமுடியதா நிலைதான் இருக்கின்றது. தமிழர்களே தமிழர்களே இறுதிப் போராட்டத்திற்கு வாருங்கள் என்ற அழைப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. இவர்கள் போடும் யுத்தவெறியில் இருந்து மக்களை காப்பாற்றுவது தான் முதன்மையான கடமையாகும். இனவெறி அரசின் பேச்சாளர் கூறிவிட்டார் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் எல்லாம் நியாயப்படுத்தப்பட்ட தாக்குதல் தளங்கள் என. இவ்வாறு இருக்கையில் புலிகள் தமது தலைமையை முதலில் காப்பாற்றியிருப்பார்கள். ஆனால் இங்கு அகப்பட்டிருக்கும் மக்கள் அங்கு இருப்பதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன. புலிகளின் நெருங்கிய உறவினர்கள்> காயப்பட்ட போராளிகள்> தடுத்துவைக்கப்பட்ட மக்கள்> இராணுவத்திடம் சென்று சாவதை விட புலியின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்துவிட்டு போவோம் என மக்கள் இருக்கத்தான் செய்வார்கள். புலிகளின் அடிமட்டப் போராளிகளைக் காப்பதும் முக்கியமான கடமையாகும்.
இன்றைய ஊடகங்கள் எல்லாம் எதிர்நிலைக்குச் செல்கின்ற வழிமுறைகளில் தான் பிரச்சாரங்களை செய்கின்றன. மக்களில் பலவிதமான நிலையில் உள்ளவர்கள் இருக்கின்றார்கள்.
"தமிழ் மக்களை எடுத்துக் கொண்டால் பல்வேறுபட்ட அனுபவங்களையும்; சோகம்; பலதுன்ப துயங்களினால் ஏற்பட்ட வடுவென்பது மக்களிடையே ஆழ வேர் ஊண்றியுள்ளது. இவ்வகையான கசப்பான உணர்வு என்பது அனைத்து மக்கள் பிரிவினரிடையேயும் இருக்கின்றது. இந்த சகப்புணர்வை தீர்ப்பது என்பது நீண்ட செயற்பாடுகள் மூலமாகவே சாத்தியமாகும்.
பிரதானமாக தமிழ் மக்களிடையே இருக்கின்ற புலியெதிர்ப்பாளர்களை எடுத்துக் கொள்வோம் அல்லது
அரசின் மீதுள்ள நம்பிக்கையீனத்தால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் இருக்கின்ற மக்களை எடுத்துக் கொள்வோம் அல்லது
முஸ்லீம் மக்களை எடுத்துக் கொள்வோம்
சிங்கள மக்களை எடுத்துக் கொள்வோம்
அல்லது சில தனிநபர்களின் நிலைப்பாட்டை எடுத்துக் கொள்வோம்.
இவைகள் அனைத்தும் ஏதோ ஒரு சிந்தனை அல்லது ஒரு கருத்துச் சார்ந்தே இருக்கின்றது.
எல்லோரும் உலகத்தை ஒவ்வொரு விதத்தில் உலகத்தைப் பார்க்கின்றனர். இந்தப் பார்வையான அவர் அவர் சிந்தனைக்கு ஏற்றால் போல் ஒவ்வொருவரும் திடமாக தமது கருத்துக்களில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் இந்தக் கருத்துக்களில் உள்ள மனிதவிரோதத்தன்மைகளை களைந்தெடுப்பது எவ்வாறு என்பது முக்கிய கேள்வியாகும். மனிதவிரோதத் கருத்துக்கள் என்ன என்பது பற்றிய திறந்த விவாதம் என்பது தேவையானதாகும். இவற்றில் இருந்துதான் சமூகத்திற்குகான கருத்துக்களை சென்றடைய முடியும். "
இங்கு மக்களிடம் தோன்றியுள்ள ஐயப்பாட்டை தீர்க்கவல்ல ஒரு வேலைமுறையை மேற்கொள்வதற்கா நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இவ்வகையாக வேலைகளில் ஈடுபடுவது என்பது தேவையானதும் அவசியமானதாகும். இவற்றை தவிர்த்து விட்டு யுத்தத்தின் முனைப்புக்கு கொம்புசீவும் நிலையானது அபாயகரமானதாகும். நாம் புலிகளின் பக்கமோ ஒடுக்குபவன் பக்கமோ நிற்க முடியாது. நாம் ஒடுக்குமுறையாளர்களுடன் துணைபோக முடியாது. ஆழவேர் ஊன்றியுள்ள கசப்புணர்வை அகற்றப் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். எம்முன்னே இருக்கும் கடமைகள் அனைத்து இனங்களுக்குமான ஜனநாயக உரிமையை அங்கீகரிக்க வேண்டிப் போராட வேண்டியிருக்கையில் யுத்தமானது. இன்னும் இன்றும் பாசீசத்தை ஆழவேர் ஊன்றி வளர்ப்பதாகவே இருக்கின்றது. இன்றைய மக்களிடத்தில் தோன்றியிருப்பது அரசியல் விழிப்புணர்வு அல்ல. இழப்புக்களினால் ஏற்பட்ட தன்னெழுச்சியான இரக்க உணர்வு இதில் இருந்து பெறப்படும் ஒவ்வொரு சிறிய சக்தியும் பாசீசத்தினை உயிரூட்டவல்ல விழைபொருட்களே.
" புலிகளின் தளங்களை அழிப்பதில் மாத்திரம் கவனம் செலுத்த முடியாது. புலியை முடியடிப்பது என்பது பரந்துபட்ட மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சியினால் மாத்திரம் தான் சாத்தியமாகும். சில தளபாடங்களையும்> தளங்களையும் கைப்பற்றுவதன் மூலம் புலிகளை அழிக்க முடியாது. புலிகள் பழைய மாதிரி கெரில்லா போராட்டத்திற்கு தயாராக இருக்கின்றனர்.
இதில் யுத்தத்தை ஆதரிப்பது கூட புலியை வளர்த்தெடுக்கும் முறையோயாகும். இன்று நடைபெறும் யுத்தம் கூட புலியை முழுமையாக அழிக்கும் நோக்கம் கொண்டில்லை. மக்கள் எவ்வளவு அழிகின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு புலம்பெயர்நாடுகளில் புலியைப் பலப்படுத்தும்.
புலியெதிர்ப்பாளர்களினால் அரசின் இனவழிப்பிற்கு உதவுவதன் மூலம் மக்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுக்க முடியாது.
இவற்றை எல்லாம் அம்பலப்படுத்தும் ஒரு போராட்டவடிவமே அவசியமாகும். இவற்றிற்கும் பாசீச சக்திகளை ஆதரிப்பதற்கும் நடுவே நிறையவே மாறபாடு இருக்கின்றது. இன்றிருக்கும் தனிமனிதனின் பழியுணர்ச்சி உட்பட இனங்களுக்கிடையே இருக்கின்ற ஐயப்பாட்டை தவிர்ப்பதான செயற்பாடுகளே மாற்றத்தை கொண்டு வரும்.
இதனால் யார்ரெல்லாம் மக்களின் எதிரிகளாக இருக்கின்றார்களோ அவர்களை நோக்கிய கோரிக்கைகள் முக்கியமானதாகும். இந்த இடத்தில் அனைத்து பிரிவினரையும் மக்களின் எதிரிகளாக வரையறுக்கப்படுகின்றது.
-புலிகள்
-புலியெதிர்ப்பாளர்கள்
-சிறிலங்கா அரசும் அதன் கூட்டாளிகளான இந்திய மேற்கு அரசுகளுமாகும
அல்லல்படும் மக்களுக்கு தேவையானது
யுத்த நிறுத்தம்
நிவாரணம்
படைகளை முடக்குவது
தமது உறவுகளுடன் மீள்இணைவது
அரசியல் பேச்சுவார்த்தையை தொடங்குவது
புலிகள் ஏகக் கொள்கையை விடு
புலிகள் மக்களை கேடயமாக வைத்துக் கொள்ளாது அவர்களை விடுத்து மாற்றுவழிகளில் போராடு
Post a Comment