Your Excellency,
in the last weeks Sri Lanka’s civil war that has
already cost more than 70,000 lives escalated. Both Sri Lanka’s army and the
Tamil freedom movement LTTE violate the security of the civilian population. Sri
Lanka’s government relentlessly tries to crush the Tamil resistance with
military means. Innocent Tamil civilians increasingly become hostage of the
conflict parties, thus paying a terrible price of total war. I urge you to work
for a truce and the start of negotiations between the warring parties. -Gesellschaft für bedrohte Völker
இலங்கைப் பாசிச அரசு, சாட்சிகளே இல்லாதபடி பாரிய கொடும் இனவழிப்பு யுத்தைத்தை தமிழ்பேசும் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிட்டுப் புலிகளைப் பூண்டோடு அழிப்பதுபற்றி, இப்போது உலகம் மெல்லப் புரிந்துவருகிறது.
இன்றும், பலபத்துப் பொதுமக்களைச் சிங்கள இராணுவம் கொன்று குவித்திருக்கிறது.
புலிகள் மக்களைப் பிலிக்கடாவாக வைத்து அறுவடை செய்வதில் முனைப்புடன் இருப்பது மிகவும் வேதனையானது.சிங்களப் பாசித்துக்கு எதிரான புலம் பெயர் மக்களின் ஊர்வலங்கள் மிகவும் உணர்வு பூர்வமாக எழுகின்றன.இதுள் அரசு,புலிகள் இரு பிரிவினது மனிதவிரோதப் போக்கு மெல்லஅம்பலப்படுத்தப்பட்டுவருகிறது.
இத்தகைய சூழலில்,உலகம் நமது மக்களின் ஆர்ப்பாட்டவூர்வலங்களை பெரிதாகக் கவனிக்கவில்லையெனினும்,நமது மக்களின் அழிவுகுறித்துப் பரவலாகப் பார்த்துவருகிறது.இலங்கை அரசின் மிகக் கொடூரமான இனவழிப்புப் போரை மிகவும் கண்டித்துவரும் சர்வதேசப் பொது அமைப்புகள் இலங்கை அரசையும்,புலிகளையும் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றன.
இன்று, பேர்ளினில் தமிழ்பேசும் இலங்கை மக்களால் செய்யப்பட்டவூர்வலத்தை ஜேர்மனிய ஊடகங்கள்பல கவனிக்கவேயில்லை!ஒருசில பிராந்தியப் பத்திரிகைகள் பெட்டிச் செய்தியுடன் தமது கடமையை முடித்துவிட்டன.
ஜேர்மனியப் பொலிசினது செய்தியின்படி இன்று பேர்ளினில் 4000 தமிழர்கள் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டதாகச் சொல்லப்படுகிறது!எனினும்,அண்ணளவான தகவலே இது.
எமது மக்களது யுத்தவாழ்வை ஜேர்மனிய அரசுசார அமைப்புகள் மிகக் கவலையோடு பதிவு செய்வது மட்டுமல்ல,ஐ.நா.சபைக்கும் அப்பீலிடுகின்றன!
இது, சமீபத்தைய மாற்றம்.நல்ல சகுனமாகுமா?
எமது மக்களினது துன்பகரமான போர்வாழ்வை, இத்தகைய அமைப்புகளால் ஓரளவேனும் உலக அரங்குக்கு எடுத்தவரமுடிகிறது.குறிப்பாக, ஜேர்மனிய இடதுசாரியவூடகங்களே இதுள் மிகப்பெரிதாகக் கவனத்துக்குள்ளாகின்றன.அவை,நமது மக்களுக்காக் குரல் கொடுப்பதை,ஜேர்மன் காசல் நகரத்துப் பல்கலைக்கழகத்தின் உலகசமாதான முன்னெடுப்பு,ஆய்வு மையம் பெரும்பாலும் தொகுத்து வருகிறது.அதுள் அடங்கியுள்ள அனைத்துக்கட்டுரைகளும் ஜேர்மனிய இடதுசாரிப்பத்திரிகைகளில் வெளிக்கொணரப்பட்டவையே!
இதுவரை, நமது மக்கள் ஜேர்மனிய வலதுசாரிய அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்தவர்கள்.எனினும்,அத்தகைய அமைப்புகளோ அன்றிச் செய்தியூடகங்களோ நமது போர் வாழ்வைக் கவனிக்கவேயில்லை!இருந்தும்,தமிழ்பேசும் மக்களுக்காக் குரல் கொடுக்கும் ஜேர்மனியப் பொது அமைப்புகள் ஜேர்மனிய அரசை இதுவரை அழுத்தங்கொடுத்து இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை முடிவுக்குக்கொணரும் முயற்சியை மேற்கொள்ளவில்லை!
எனினும்,ஜேர்மனியச் சிறு நகரங்களில் வாழும் இளைய தலைமுறைத் தமிழ் இளையோர், நமது மக்களின் அவலத்துக்காக ஆங்காங்கே குரல்கொடுத்து,நகரத்தின் மேயரிடம் மகஜர் கையளித்து ஜேர்மனிய அரசின் மூலமாகவொரு அழுத்தத்தைச் ஸ்ரீலங்கா அரசுக்குச் செய்யலாமென எண்ணுகிறார்கள்.அந்த வகையில் தர்சினி சிவகுமாரன் இளையவர்களுக்கு முன்மாதிரியாகச் செயற்படுவது இங்கு காணத்தக்கது.
பேராசிரியர் இமானுவேல் உலகத்தமிழர் பேரவையின் தலைவராக இருந்தாலும் அவரது குரலையும் இடதுசாரியப் பத்திரிகையே கொணர்ந்தாகவேண்டும்.
இன்றைய தினத்தில் புலம் பெயர்ந்த புலி விசுவாசிகளுக்காக இதை எழுதவில்லை.நமது மக்களினது அழிவுக்கு எவர்-எங்கே-எப்படிக் குரல் கொடுப்பதில் யார்-யாரோடு நமது தோழமை விரிந்தாகவேண்டுமென்பதற்கே இந்தத் தகவல்கள்.
நமது மக்களின் அழிவைத் தடுத்து நிறுததுவதற்குப் புலிகள் ஓட்டுக் கட்சிகளை நம்பும்போது-நாம்,இத்தகைய அமைப்புகளை வேண்டிக்கொண்டோம்.இங்கேயும் நமக்காகக் குரல் கொடுக்கின்றார்கள்.
இலங்கைச் சர்வதிகாரி இராஜபக்ஷ, இன்னும் சிலதினத்தில் யுத்தம் முடிவுக்குக்கொணரப்படுமென்று திமிரோடு குரல் கொடுக்கிறான்.இதன் அர்த்தம் வன்னியில் சிக்குப்பட்ட மக்கள் அனைவரும் புலிகளின் குடும்பத்தவர்கள்-பெற்றோர்கள்,சகோதரர்கள் என்று புலிகளின் விசுவாசிகளே ஒப்புதல் கொடுத்ததுக்கமைய, அனைவரையும் வேட்டையாடுவதற்கு 48 மணித்தியால யுத்தவோய்வு அரசியல் வியூகத்தோடு, உலகைத் தனக்குள் வென்றதான வெற்றியில் இதைக் கூறுகிறான்.
நமது மக்களைக் காப்பதற்கு என்ன முயற்சி எடுத்தாலும் அது,புலிகளை மக்கள்சார்ந்து சிந்திக்க வைத்து,அவர்களை விடுவிக்கும்படி வேண்டியே அடுத்த நகர்வைச் செய்தாகவேண்டும்.இதையேதாம் உலகப் பொது அமைப்புகளும் வேண்டுகின்றன.
இதைவிட வேறு மனிதாபிமான நடிவடிக்கை இன்றைய நிலையில் இல்லை.
ப.வி.ஸ்ரீரங்கன்
04.02.2009
4 comments:
om rasa,
you know what. your payment will stop because government siwining the war. Imean your coolie kasu
unnka pullaipukku n naasaam rasa
ஸ்கை செய்திக்கு கோட்டபாய ராஜபட்சி கொடுத்த செய்தியில் வன்னி நிலைகள் எல்லாமே தாக்குதலுக்கான தெரிவு செய்யப்பட்ட இலங்கு என அந்த பாசீச பட்சி கூறினார். இவ்வாறாக திமிராக பேச இடம் கொடுத்தது இந்திய ஆழும் வர்க்கமும் மேற்கு வல்லரசுகளின் ஆசியின் மூலம் தொடரப்படும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் தொடர்கின்றனர்.
இதனை விளங்கிக் கொள்ளும் நிலையில் புலியினால் வளர்க்கப்பட்ட மக்கள் விளங்கிக் கொள்ள அரசியல் ரீதியாக வர்க்கப்படவில்லை. இதேபோல புலிகளின் ஊடகங்களில் இருப்பவர்களுக்கும் புதியாதா புதிராக இருப்பதாக கூறுகின்றனர்.
புலிகளைப் பொறுத்தவரையில் தமக்கு உதவிபுரிகின்றவர்கள் எல்லோருமே நண்பர்களாகும் என்ற நிலையைதான் கொண்டிருந்தார்கள். உதவிபுரிபவர்களை சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நலனைப் பெறுவதும் பின்னர் தேவையில்லை எனில் அவர்களை அகற்றுவதுமே கடந்த 25 வருட கால நடைமுறையாகும். இவ்வாறு உதவிகளை கொடுப்பற்கு பின்னரான நலன்கள் இருப்பதை எவரும் அறிந்து கொள்வதற்கு புலிகள் மக்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. இதனால் இன்று எல்லோராலும் தாம் கைவிட்டிருப்பதை ஏற்க முடியாது மனவிரக்திக்குள் இருக்கின்றனர்.
மனவிரக்திக்குள் இருக்கின்ற மக்களை தற்போதைய நிலையைப் பயன்படுத்தி புலிகள் அல்லாத பொதுவிடயம் என்ற நிலையில் ஊர்வலம் உண்ணாவிரதம் என வரும் மக்களிடையே புலிமீதான நம்பிக்கையை வளர்க்கின்றனர்.
இங்கே தான் புலிகளின் பின்வாங்கல் மீதான அரசியல் விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. அதாவது முன்னரும் புலிகள் பின்வாங்கி மறுபடியும் தளங்களைக் கைப்பற்றியுள்ளனர் எனக் கூறுகின்றனர்.
தொடர்ச்சியாக எதிரிகளை மக்களுக்கு அறியப்படுத்துவதிலும் ஏதிரிகளை அம்பலப்படுத்வதிலும் அக்கறையற்று இருக்கின்றனர்.
ஆக மக்களின் தன்னெழுச்சிகளை தமக்கு சாதகமான நிலைக்கு கொண்டுவருதில் திமைறையில் செயற்படுகின்றனர்.
இவ்வாறே தமிழக மக்களின் அனுதாப அலையை தமது இருப்புக்காக பயன்படுத்துவதில் புலிகள் இரண்டைவேடம் போடுகின்றனர்.
இந்திய எதிரிகளை நேடிடையாக எதிர்ப்பதில்லை. மற்றைய இந்திய தரகுவர்க்கமும் புலிகளின் செயற்பாட்டை எச்சரித்தே முதலாளிய வர்க்க காவலாளியான கருணாநிதியின் துரோகத்தன்தை நேரிடையாக விமர்சிக்காது ஒதுங்குகின்றனர்.
இங்கு தமிழக மக்களின் ஆதரவு நிலை
புலம்பெயர்ந்த மக்களின் தன்னெழுச்சி
இவை இரண்டையும் எவ்வாறு தொடர்ந்தும்; போராட்டத்தின் சேமிப்பு சக்தியாக பங்குவப்படுத்துவது என்பதான செயல்வடிவம்
ஈழத் மற்றும் தமிழக புரட்சிவாதிகளின் கைகளில் இருக்கின்றது. இதற்கு என்ன செய்யவேண்டும்?
சர்வதேச மூலதனத்தின் சதியை முடியடிப்போம்
சுயநிர்ணயப் போராட்டம் என்பது தடம் புரண்டு நேரிடையாகவே சர்வதேசத்திற்கிடையில் சதுரங்க ஆட்டம் நடைபெறுகின்றது. கண்ணீர் விட்டோம் வளர்த்தோம் என்று நாம் இன்று நெஞ்சில் அடிப்பதன் மூலம் எவ்வித பயனும் அடையப் போவதில்லை. இன்றைய நிலையில் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என பார்ப்பதே முக்கியமானதாக அமையும்.
வன்னியில் மக்கள் சிறிய பிரதேசத்தில் அகப்பட்டிருக்கின்றார்கள் இந்த மக்களை பாதுகாப்பதில் எவரும் கவனம் செலுத்துவதாக தெரிவில்லை. ஆனால் எவ்வாறு புலிகளை சரணடைய வைக்கலாம் அல்லது முற்றாக அழிக்கலாம் என்பதில் சர்வதேசம் தமக்கிடையே கருத்து ஒற்றுமை கொண்டு செயற்படுகின்றது.
இவற்றை அறிந்து கொண்ட சிறிலங்கா பாசீச அரசு புலிகளை அழிக்கின்றோம் எனக் கூறிக் கொண்டு தமிழ் மக்களை படுகொலை செய்கின்றது. புலிகளின் பகுதிகள் அனைத்துமே ஏற்றுக் கொள்ளப்பட்ட தாக்குதல் இலக்கு என ஸ்கை செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில் ராஜபட்சே கூறியிருந்தார். இதனால் அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பதில் இனவாத அரசு சிறிதும் அக்கறை கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றது. (புலியெதிர்ப்பாளர்கள் இதனை உண்ணிப்பாக கவனிக்க தவறுகின்றனர் இது அடிமை விசுவாசம் இது இருக்கட்டும்.) இதற்கு புலிகள் அந்த மக்களை தடுத்து வைத்திருப்பதாக அரசு கூறுகின்றது.
புலிகளின் பிரதேசங்களில் இருக்கின்ற மக்களை பல்வேறு வகையாக பிரிக்கலாம்
புலிகளின் தலைமையில் குடும்பத்தினர்
மாவீரர் குடும்பத்தினர்
தேசபக்தர்கள், அதாவது புலியை தமது விடுதலை அமைப்பாக ஏற்று கொண்ட விசுவாசிகள். ( இவர்கள் புலியெதிர்ப்பாளர்கள் கூறுவது போல கொல்லப்பட வேண்டியவர்கள் என ஏற்றுக் கொள்ள முடியாது.)
அங்கவீனமான போராளிகள்
இவர்களில் குறிப்பிட்ட பகுதியினர் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்ட மக்களாக இருக்கவும் முடியும். இப்படி பலதரப்பட்ட மக்கள் இருக்கின்றனர். இவ்வாற வேளையில் சர்தேசியவாத நிலையில் இருந்துதான் முடிவெடுக்க வேண்டும். எவ்வாறெனில் உள்நாட்டு சர்வதேச எதிரிகளின் சூழ்ச்சி இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆக புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டவர்களை விட மற்றவர்கள் எவ்வாறு அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரமுடியும்.
இங்கு அரசபடை வடித்தெடுத்து கொலை செய்வார்கள்
அரசபடைகளுடன் சேர்ந்தியங்கும் குழுக்களின் பழிவாங்கலுக்கு உள்ளாகுவர்.
வரும் மக்கள் திறந்தவெளிச் சிறைச்சாலையில் தான் வாழ வேண்டும். ஏனெனில் அரச கட்டுப் பாட்டில் உள்ள பிரதேசங்கள் அத்தனையும் திறந்த வெளிச் சிறைச்சாலைக்கு ஒப்பாகத் தான் இருக்கின்றது. அங்கு வாழ்கின்ற மக்கள் சுதந்திரமாக வாழவில்லை. அப்பிரதேசத்தில் தந்திரோபாயமாக தமது வாழ்க்கையை தப்பி பாதுகாத்து வாழ்கின்றனர். இலங்கையில் ஒரு சிங்கள குடி எவ்வித (பொருளாதார வசதி இல்லாது இருக்கலாம்) எவ்வித உயிராபத்தும் இல்லாது வாழ முடிகின்றது போல தமிழ் மக்கள் வாழ முடிகின்றதா?
இவர்களின் எதிரிகள் யார் எனப் பார்ப்பது நல்லது
-சிறிலங்கா அரசபடைகளும்
-அவர்களுடன் சேர்ந்தியங்கும் குழுக்கள்
-விடுதலைப் புலிகளின் பழிவாங்கல்
இந்த மூன்றுவிதமான இல்லாதொழிப்பிற்கு மத்தியில் வாழ வேண்டியிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் பழிவாங்கல் என்றில்லாமல் மக்கள் தாமே தமது நிலையை தீர்மானித்துக் கொள்ளக் கூடிய வகையில் யுத்த நிறுத்தம் அமைந்து கொள்ள வேண்டும். கைதுகள், காணாமல்போதல், சித்திரவதை மற்றும் பழிவாங்கல்கள் அனைத்துப் பிரிவினராலும் நிறுத்தப்பட வேண்டும். இவையே யுத்தநிறுத்தத்தின் ஒரு அம்சமாக இருக்க வேண்டும்.
புலிகள் தற்பொழுது இருக்கும் நிலைப்பரப்பில் அவர்களை வேண்டுமென்றால் முடக்கி விட முடியும். அதே வேளை அரசசார்பு குழுக்களின் நடமாட்டம், அரச படைகளின் கட்டுப் பாடு என்பது 1970களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். இவைகள் யுத்த நிறுத்தத்தின் பின்னரான பேச்சுவார்த்தையில் ஒரு அம்சமாக கொள்ளப்பட வேண்டும்.
யுத்தத்தை நிறுத்துவது
நிவாரணப் பொருட்களை அனுப்புவது
அரசு தனது சுற்றிவளைத்துள்ள பகுதிகளில் பாதுகாப்பினை மேற்கொள்ளலாம் ஆனால் புலிகளின் பிரதேசத்தினுள் பிரவேசம் செய்யக் கூடாது.
இதே போல புலிகளும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.
புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறும் மக்களை வெளியே புலிகள் அனுமதிக்க வேண்டும்
அனைத்துப் பகுதியினரும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும்-
அரசியல் தீர்வை முன்வைத்தல் வேண்டும் இவைகள்
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம்
தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கு என்பதை ஏற்றுக் கொள்ளல் அத்துடன் முஸ்லீம், மலையக மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் வேண்டும்
வட- கிழக்கு இணைப்பு
அனைத்து மக்களுக்கும் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும்.
புலிகள்: மக்கள் தாம் விரும்பியவாறு தமது போராட்டத்தை தொடர அனுமதித்தல் வேண்டும்
ஏகபிரதிநிதித்துவக் கோட்பாட்டை கைவிடல் வேண்டும்.
மேற்கூறியவை உடனடியாக அமுல்படுத்த வேண்டியவையாகும்.
இதன் மூலமே புலியெதிர்ப்பாளர்கள் மக்களின் உரிமையை சோற்றுக்கும் சலுகைக்கும் நிகரானது என அரசுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இன்று வன்னி மக்களின் அவலத்திற்கு புலிகளை மாத்திரம் குற்றம் சுமத்திக் கொண்டு மக்களின் உரிமைகளை நசுக்குவதில் எவருக்கும் குறையாது செயற்படுகின்றனர்.
யுத்த நிறுத்தம்
நிவாரணம்
படைகள் தத்தம் இடங்களில் நிலைகொள்வது
மக்களை விரும்பும் இடத்தில் குடியிருக்க அனுமதிப்பது
ஏகதலைமை கோட்பாட்டை புலிகள் கைவிடல்
புலம் பெயர் மக்கள் தப்பு கணக்கு போட்டுள்ளனர். புலிகள் தோற்கவேயில்லை.வெற்றிகளை மறைத்துள்ளார்களாம்.
http://www.envazhi.com/?p=3368
Post a Comment