Saturday, February 21, 2009

ஸ்பீகல் (Der Spiegel)சஞ்சிகை புலிகள் குறித்துக்கூறியது கொழும்பில்...

ஜேர்மனிய ஸ்பீகல் பத்திரிகையின் ஆருடம் பலித்தது.


"கரும்புலித் தாக்குதலைக் கொழும்புக்கு விஸ்த்தரிக்கும் தோல்வியின் விளிம்பில்
நிற்கும் புலிகள்,இன்னும் தமது தலைவருக்காக உயிர்ப்பலிகொடுக்கத் தயாராகும்
கரும்புலிகள்!"-ஸ்பீகல்(Spiegel) சஞ்சிகை: 20.02.09.


ஜேர்மனிய முன்னணிச் சஞ்சிககையான ஸ்பீகலில், எங்கள் தேசத்துப் பிரச்சனைகளைக் குறித்துப் புலம் பெயர் படைப்பாளிகள் கட்டுரை எழுதி,அவர்கள் பிரசுரித்தால் 1000 டி.எம். பணம் சன்மானமாக வழங்கப்படுமென முன்னொரு காலத்தில்(சுமார் பத்தாண்டுகளுக்குமுன்) புலிகள் தமது பிரசுரங்கள் மூலமாகக்கேட்டுக் கொண்டார்கள்.அத்தகையவொரு மிக முக்கியமான சஞ்சிகை ஸ்பீகல்.


ஜேர்மனியில் பல கோடிப் பிரதிகள் விற்கப்படும் இச் சஞ்சிகை,ஜேர்மனிய அரசியல் வட்டாரத்திலும்,பல்கலைக் கழகமட்டத்திலும் பெரும் தாக்கஞ் செய்யும் சஞ்சிகை.அது,ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தினதும் நடுத்தரவர்க்கப் புத்திஜீவிகளினதும் குரலாகவே ஒலிப்பது.எனினும்,அதன் நீண்டகால வாசகர்களில் நானும் ஒருவன்.பெரும்பாலும் அதன் கட்டுரைகளும்,ஆய்வுகளும் மிகவும் தர்க்கம் வாய்ந்தது.இத்தகைய சஞ்சிகையில் இன்றைய நமது போராட்டச் சூழல்கள் குறித்து எழுதுகிறார்களாவென நான் தினமும் தேடிப் பார்ப்பேன்.எப்போதாவது, ஸ்பீகல் சிறிய பெட்டிச் செய்தி போடுவதோடு அதன் பணி முடிந்துவிடும்.


புலிகள் தலைவர் திரு.பிரபாகரனால் வன்னியில் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மகாநாட்டில் பாலசிங்கம் அவர்களே ஸ்பீகல் சஞ்சிகைக்குப் பிரத்தியேகமாக நேரம்கொடுத்துக் கருத்துத் தெரிவித்ததென்பதை அன்றைய சந்திப்பைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.



மிகவும் பிரபலமான இச் சஞ்சிகை நேற்று அதிகாலை ஆறறரை மணிக்கு எமது போராட்ட வாழ்வு குறித்தொரு ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தது.அக்கட்டுரை வெளியிட்ட 15 மணி நேரம் கழித்துப் புலிகளது கரும்புலி வான் தாக்குதல் கொழுபில் அதிர்வுகளைச் செய்து ஓய்ந்துபோனது.இதன் சிறப்பு என்னவென நீங்கள் வினாவினால்-ஸ்பீகல் பத்திரிகை எழுதுகிறது:"Doch noch immer sind Selbstmordkader der Tamilentiger bereit, den Kampf in die Hauptstadt Colombo zu tragen."யுத்தத்தை கொழும்பு மாநகரம்வரை இழுத்துவரும் ஆளுமையோடு கரும் புலிகள் தயார் நிலையிலேயே இருக்கிறார்கள்.அவர்கள் கொழும்பை நோக்கித் தமது கரும் புலித் தாக்குதலைச் செய்யமுனைவதாக அப் பத்திரிகை விரிவாக எழுதுகிறது.


எனது அநுபவத்துக்கு ஒப்ப அச் சஞ்சிகை ஒருபோதுமே எமது பிரச்சனையில் நேர்மையாக எழுதியது இல்லை என்பேன்.இப்போது, இச் சஞ்சிகை மிக நேர்த்தியாகக் கட்டுரை எழுதியிருக்கிறது.முதன்முறையாக இலங்கையில் தமிழர்கள்மீது திட்டமிட்டு இனவழிப்பு நிகழ்வதாக ஒத்துக்கொண்டிருக்கிறது."Denn der blutige Konflikt, der nach jahrzehntelangen Repressionen der buddhistisch-singhalesischen Mehrheit gegenüber der hinduistisch-tamilischen Minderheit und antitamilischen Pogromen mit tausenden von Toten 1983 zum offenen Krieg geführt hatte, hatte nie einen klaren Sieger hervorgebracht"குருதிதோய்ந்து இனமுரண்பாடானது,பலதசாப்தமாகப் பெரும்பான்மைச் சிங்கள பௌத்தர்களது அடக்குமுறைக்குச் சிறுபான்மை தமிழ் இந்துக்களை உட்படுத்தி, இனவாத ஒடுக்குமுறையின் மூலமாக 1983இல் பல்லாயிரம்பேர்களைக் கொன்று குவித்ததன் விளைவால் யுத்தம் ஆரம்பிக்கும்வாய்ப்பு உண்டாகியது.இதில் எவருமே தீர்மானகரமான வெற்றியை அடையவில்லை.என்கிறது.கூடவே,அச் சஞ்சிகையில் புலிகளது அனைத்து முகத்தையும் விரிவாகவே அக்கட்டுரையாளர்-செய்தியாளர் இனம் காண்கிறார்.


அவர்கூறுகிறார்:"Und auch heute noch, kurz vor dem militärischen Untergang der LTTE, sind immer noch Selbstmordkader dazu bereit, ihr Leben für ihren autoritären Führer Prabhakaran zu opfern. Vergangene Woche sprengt sich inmitten von Flüchtlingen aus dem Kriegsgebiet eine Frau zwischen Regierungssoldaten in die Luft. Sie tötete 20 Soldaten und acht Zivilisten."அத்தோடு,இன்றுவரை,அதாவது புலிகள் தமது முடிவு நெருங்குவதற்குக் குறுகியகாலம் இருக்கும்போதுகூட,தற்கொலைத்தாக்குதலுக்கு அவர்களிடம் தற்கொலைப் படைகள் தயாராக இருக்கின்றன. தமது தலைவர் பிரபாகரனுக்காகத் தம்மைப் பலியாக்கத் தயாராகவே இருக்கிறார்கள்.கடந்தவாரத்தில் அகதிகள் தங்கியருந்த இடத்தில் பெண்ணொருத்தி வெடிபொருளை வெடிக்கவைத்துக் காற்றில் வெடித்துச் சிதறியபோது,அவள் 20 இராணுவத்தினரையும் 8 அகதிகளையும் கொன்றாள்."என்கிறார்.



மேற்குலகத்தின் இந்தப் புரிதலிலுள்ள உண்மைகளை விளங்காது,புலிகளைச் சொல்லி உலகத்தில் "தமீழீழத்தை அங்கீகரி,தமிழர்களுக்குத் தமிழீழமே வேண்டும்" எனும் கோரிக்கைகளோடும் ஜெனீவாவிலுஞ்சரி அல்லது புலம் பெயர் நாடுகளிலுங்சரி ஆர்ப்பாட்டத்தைச் செய்பவர்கள், ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும்!


அதாவது,புலிகளுக்கும் இலங்கை அரசுக்கிடையிலும் நடக்கும் இவ் யுத்தத்தை நிறுத்தி, வன்னியில் சிக்குப்பட்ட மக்களைக் காக்கும் கோசங்களும்,தமிழ்பேசும் மக்களது பிரச்சனைக்கு அரசியல்ரீதியாகப் பேசித் தீர் எனும் கோசமுமே இன்றைய கொடிய யுத்தச் சூழலில் அவசியம் என்பதாகும்!





இதைவிட்டுப் புலிகளால் முன்தள்ளப்படும் இன்றைய இளஞ்சிறார்கள்,புலிகளது கொடிகளையும் அவர்களது அரசியல் கோரிக்கையான"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"என்பதைத் தலையில் தூக்கிவைத்தாடுவதால் தம்மைத்தாமே மேற்குலகப் புலனாய்வுத்துறைக்குக் காட்டிக்கொடுத்து, எதிர்காலத்தைப் பறிகொடுப்பதில் முடியும்.புலிகள் இயக்கத்தைக் குறித்து, அனைத்து ஐரோப்பிய நாடுகளுஞ் செய்திருக்கும் ஆய்வுகள் மிக நேர்த்தியாகப் புலிகளைப் கண்காணிப்பதை உறுதிப்படுத்துகிறது.


புலிகளுக்காகக் குரல்கொடுப்பதென்பதைக் காட்டிலும்,தமிழ்பேசும் மக்களின் இன்றைய அவலத்துக்காகக் குரல் கொடுப்பதென்பது முதலாது நிரலில் இருக்கவேண்டும்.


நமது மக்களைக் குறித்த அரசியலை மேற்குலகத்தில் முன்தள்ள முடியாதுபோனால்-நமது அனைத்துக் கோரிக்கைகளும் தோல்வியில் முடிவதோடு,மக்களின் தன்னெழிச்சியைப் புலிச்சாயம்பூசி மேற்குலகம் நிராகரிக்கும் அபாயம் நிலவுகிறது.இதை தவிர்த்துக் காரியமாற்றவேண்டும்.


இன்றைய மக்களின் அவலத்தில் அரசியல் நடாத்த முனையும் புலிகளது வண்டவாளங்களை ஸ்பீகல் மேற்குலக மக்களுக்கும்,ஜேர்மனியர்களுக்கும் மிக நன்றாகவே படம் போட்டு-ஆய்வு செய்து கப்பலேற்றுகிறது.இந்த நிலையில் புலிகளது சாயலில் முன்னெடுக்கப்படும் அனைத்துக் காரியங்களும் தோல்வியிலேயே முடியும்.


புலம்பெயர் தமிழ்மக்கள் இலங்கை அரசையும்,புலிகளையும் மிக நன்றாகவே தோலுரித்தபடி தமது மக்களது கண்ணீர்கதைகளை மேற்குலக மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்.இதைத் தவிர்த்துப் புலிகளது வழிகாட்டலோடு முன்தள்ளப்படும் இளையதலைமுறைகளை இங்குள்ள காவற்றுறை மிக நேர்த்தியாக இனம்காணத்தக்கபடி தகவல்களைச் சேகரித்துக்கொள்கிறது.ஒவ்வொரு ஆர்ப்பாட்டவூர்வலத்திலும் அதிகமான புலினாய்வுத்துறையினர்ரின் கமராக்கள் நமது இளைய முகங்களைத் தமது கருவிக்குள் அடக்ககின்றன.இவற்றை முடிச்சிட்டுப் புலிகளது அடுத்தகட்ட நகர்வுக்கான ஆய்வுகள் இத்தேசப் புலனாய்வுத்துறையால் மேற்கொள்ளப்படுகிறது.


இதற்கு ஸ்பீகலின் இக்கட்டுரையிலுள்ள உள்ளடக்கம் மிகக் காட்டமான பதிலை இளைவர்களுக்குத் தரும்.புலிகளது அரசியல் மேற்குலகத்திடம் எத்தகைய நிலையில் இருக்கின்றதென்பதைக் கவனிக்கவும்.


இல்லைத் தேசத்துக்காக எதையும் இழப்போமென வீராப்புப் பேசுபவர்கள்,அடுத்த பின் விளைவுகளைச் சந்திக்கத் தயாரானர்வர்கள்.அவர்கள் குறித்துக் கவலையில்லை!ஆனால்,அவர்களால் நமது மக்களின் போருக்கெதிரான அணித்திரட்சியை-தார்மீக எதிர்ப்பை மேற்குலகம் புலிச்சாயம் பூச இடம்கொடுத்து நமது மக்களது அவலத்தை நியாயப்படுத்தும் நிலைக்குப் போவதே மிகக் கவலையான விடயம்.இன்றைய ஜெனிவாவூர்வலத்திலும் புலிச்சாயம் மேலோங்கி இருக்கிறது.எனவே,புலிக்கொடியினது அசைவில் போருக்குள் சிக்குண்ட மக்களது கண்ணீர் மறைக்கப்படும்-மறுக்கப்படும் காரியத்தைப் புலிகள் திட்டமிட்டே மேற்குலகில் செய்துவிடுகிறார்கள்.


ப.வி.ஸ்ரீரங்கன்
21.02.2009



Thursday, February 19, 2009

துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம்களின் வாழ்வு...

எம்மை விடுதலை செய்வீர்!


"இன்றைய தமிழ்த் தேசிய அரசியலில் மற்றும் மக்கள்சார்
அரசியலில், எல்லோராலும் வெறுத்தொதுக்கப்படும் தேனீ இணையத்தளம் சிங்கள அரசோடு
கைகோர்த்திருப்பதாகவும் அது மக்கள் விரோத அரசியலை முன் தள்ளுவதாகவும் நாம் குற்றஞ்
சாட்டியுள்ளோம்.அது, உண்மையானதாக இருக்கிறதா இல்லையா என்பதைவிடத் தேனியின் மக்கள்
விரோத அரசியலை நாம் தெளிவாக வரையறுத்தபின்-அது, இன்று பிரசுரித்தவொரு கட்டுரையின்
நியாயமான கேள்விகளோடு உடன்படுகிறோம்."



நாம் மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் வாழ்கிறோம்?நமது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டென,நமது மண்ணிலிருந்து நாம் துரத்தியடிக்கப்பட்டுவிட்டோம்?நமது உறவுகள் மரங்களுக்கீழும் வெட்டவெளித் தரைகளிலும் குண்டடிபட்டுக் குற்றுயிரில் கிடக்கிறார்கள்?அப்படியானால் இவையெல்லாம் எவரால் நிகழ்த்தப்படுகிறது?இதைச் செய்பவர்கள் முற்றிலும் மனித விரோதிகளே!


வன்னியில் மக்கள்தம் தலைகளில் வீழும் குண்டுகளுக்கு ஆளும் மகிந்த இராஜபக்ஷ அரசுமட்டும் காரணமில்லை!மாறாகத் "தமிழீழவிடுதலை"ப் போராட்டஞ் செய்வதாகக் கதைவிட்டு நம்மை இனவாதிகளாகவும்-இழிச்சவாயர்களாகவும் உலகில் ஆக்கிய, புலித்தலைமையும் காரணம் என்பதைப் புரிவது கடினந்தாம்.பிராணர்ப் முகர்ச்சி ஏதோ தவறாகப் பேசுவதாகவும்,பிதற்றுவதாகவும் கூறி இந்திய அரசினது இலங்கைமீதான பிராந்திய மற்றும் இராணுவ வியூகங்களை-பொருளாதார இலக்குகளை மறைக்கின்ற வேலையில் கோபால்சாமிகள் தொண்டை கிழியக்கத்தித் தமது எஜமானர்களின் நோக்குகளை நிறைவேற்றுவதற்கேற்ப தமிழ் தேசியம் கடலலையாகத் தமிழகத்தில் கரைபுரண்டோகிறது.சீமான்வேறு குழம்பிய குட்டையில் தன்னை அமுக்கி அப்பாவி மக்களை தீக்கு இரையாக்கிறார்.

நாம்,தேசியப் பித்துப்பிடித்துத் தமிழுக்குத் தீயில் கருகத் தயாராக இருக்கிறோம்!


நம்மை எவர் விடுதலை செய்வார்?


தமிழ்க் குறுந்தேசியத்தின் குரல்வளைவரை இப்போது சிங்களக் குறுந்தேசியத்தின் பாசிச நீர் வந்துவிட்டது.மூச்சுமுட்டுவதற்குள் தமிழ் தனது வேலையைப்பார்த்துவருகிறது.இதற்காகப் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு தீபந்தொலைக்காட்சி, மிக நுணுக்கமாகத் தேசிய வெறியைத் தூண்ட அது எத்தகைய நடாத்தையிலும் இறங்கத் தயங்காதென்பதற்கு கடந்த திங்களன்றோ அல்லது ஞாயிறன்றோ வாசிக்கப்பட்ட செய்தியில்:"வன்னியில் காயப்படும் சிங்கள இராணுவத்துக்கு இலங்கை பூராகவும் இரத்தானம் செய்யக் கோரி, இரத்தஞ் சேகரிக்கும் இலங்கை அரசினது இவ் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சருட்பட பெருந்தொகையான "முஸ்லீம் இளைஞர்கள்" இரத்ததானஞ் செய்தார்கள்"என்று கூறுகிறது!இங்கே,எதற்கு முஸ்லீம் அடையாளம்?இது, என்ன செய்யும் புலம் பெயர் தமிழர்களை?எதற்காக இந்தப் புலிப்பாணி அரசியல் அத் தொலைக்காட்சிக்கு?


வன்னிப் போருக்குள் கேடயமாகத் தடுத்துக் கொல்லப்படும் மக்களுக்கு எந்த மிருகங்களது அரசியல் காரணமெனச் சொல்லத் துப்பற்ற ஊடகங்கள் மீளவும் தமிழ்பேசும் மக்களை இனவாதத் தீயில் வீழ்த்திக் குளிர்காயமுனைவதில் என்றும் புலிகளாகவே இயங்கும்போது,புலிகளது கடந்தகாலக் காட்டுமிராண்டித்தனத்தைக் குறித்து இலங்கையின் சிறுபான்மை இனங்களிலொன்றான முஸ்லீம் சமுதாயத்தின் குரல் இப்போது நம்மைக் கழுமரத்தில் ஏற்றாக்குறையாக-நாக்கை பிடுங்கும் கேள்விகளோடு தமது கண்ணீர்க்கதைகளைச் சொல்கிறது!


இதைப் புரிந்துகொள்ளும் வலி எமக்குள் நடந்தபோதும் நாம் நமது மனங்களில் மற்றையவர்களின் வலியைப் புரியும் வகைக் குணங்களைக் கொண்டிருக்கவில்லை!நாம் சிங்களச் சமுதாயத்தின்மீது கொண்டிருக்கும் குரோதத்துக்கு எவர் காரணமெனப் புரிந்திருந்தால் அன்று யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை ஓடவோடத் துரத்தியிருக்கமாட்டோம்-நாம் இனவாதத்தையும் அதன் தோற்றுவாய்களையும் புரட்சிகரமாக விளங்கிப் போராட்டத்தைத் தொடர்ந்திருந்தால் அப்பாவிச் சிங்கள-முஸ்லீம்களை-பள்ளிவாசல்களை அழித்து மூர்க்கத்தனமாக நமது மக்களையே-சகோதரங்களையே கொன்றிருக்கமாட்டோம்.

இவற்றையெல்லாம் புரியவிடாது நம்மையே மொட்டையடித்து நடுத்தெருவில்விட்டவர் எங்ஙனம் தேசியத் தலைவர் ஆனார்?இது பெரிய விந்தைமிக வரலாற்று நிகழ்வு?


செய்தது எல்லாம் தனது இனத்துக்கே துரோகம்.எனினும்,பிரபாகரன் தமிழ்த் தேசியத்தின் குறியீடாகத் தேசியத் தலைவராகிறார்?இது, தனிப்பட்ட பிரபாகரனால் முடிந்திருக்கிறதென்றால் அத்தகைய மனிதருக்குப் பின்னால் எந்தவொரு சக்தி இருந்திருக்கிறது!


நமது மனங்கள் தமிழர்களைச் சுற்றியும்,தமிழைச் சுற்றியும் மதில்களைக் கட்டிவைத்திருக்கிறதா?


இதைக் கடந்து நம்மை விடுதலை செய்வது அவசியம்தானே?


நாம் நடாத்தி முடிப்பவைகளை-கெட்டவைகளை-நமது மக்களுக்கே எதிரானதை மௌனித்துப் பேசாதிருப்பதற்கான மனச்சிறையிலிருந்து நம்மை விடுதலை செய்வதில்-இலங்கைச் சிறுபான்மை இனங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட இனங்களில், தமிழ்பேசுபவர்களும்,இஸ்லாமியர்களும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களென நாம் வரையறுப்போமா?


நமது கைகளாலே நமது சகோதரர்களான முஸ்லீம்களை வேட்டையாடினோமே,இதுகுறித்து எத்தனைபேர்கள் விசாரித்து இருக்கிறோம்?குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம்களின் வாழ்வு பற்றியும், அவர்களது உரிமைகள் குறித்தும் நாம் எமக்குள் விசாரணைகளைச் செய்தோமா?


புலிகளை முஸ்லீம் மக்கள்மீதும், சிங்கள மக்கள்மீதும் ஏவி விட்டவர்கள் குறித்து நாம் எப்போதாவது மீளாய்வு செய்திருக்கிறோமா?


இத்தகைய செயலற்ற பழிக்கு ஆளாகிய வரலாற்றில், அவர்களது அரசியலில் நமது நிலைகள் எங்ஙனம் பேசப்படுகிறது?முஸ்லீம்கள் தமக்கு ஏற்பட்ட அனைத்துக்கொடுமைகளுக்கும் முழுத் தமிழ்பேசும் மக்கள்மீதும் பழி சுமத்தினால் சரியாகுமா?


பிரபாகரனின் படுமுட்டாள்தனமான அரசியல் நடாத்தையுள் கண்டெடுக்கப்பட்ட மனிதவிரோதப்படுகொலை அரசியலை, அவருக்குக் கற்பித்த எஜமானர்கள் யார்?யாழ்ப்பாண முஸ்லீங்களது பாரம்பரிய பூமியைத் தட்டிப்பறித்து, அவர்களை நாதியற்றவர்களாக்கிய தமிழ்க் கொடிய மனதுக்கு என்ன தீர்ப்பை வரலாற்றில் வழங்கமுடியும்?இன்று, சிங்கள அரசுக்குத் தீர்ப்பெழுதும் இளைய தலைமுறைத் தமிழ் மனத்துக்குத் தமது பெற்றோர்கள் இன்னொரு சமுதாயத்துக்குச் செய்த தீவினை தெரிந்திருக்க வாய்ப்புண்டா?


தமிழர்களது நிலங்களைச் சிங்களம் அபகரித்ததென்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட இஸ்லாமியர்களின் தாயகத்தைத் திருடிய தமிழர்களும் அவர்களது பாரம்பரிய நிலத்தைக் கொள்ளையடிததென்பது.கூடவே,யாழ்ப்பாணிய மேட்டுக்குடி இதற்குமுன்-யாழ்ப்பாணத்திலிருந்து நிலம் பறிக்கப்பட்டு முஸ்லீம்களைத் துரத்தியடிப்பதற்குமுன்-தமது இனத்துக்குள் சாதி சொல்லி, அப்பாவித் தாழ்த்தப்பட்ட மக்களை எந்த அதிகாரமுமற்ற கொத்தடிமைகளாக வைத்திருந்து, அவர்களது முதுகில் குற்றியபடியேதாம் அவர்களது தலைமுறைகளையும்,அவர்களது சொந்த மண்ணையும் திருடியது.இதன் விபரீதமான விளைவின் விருத்தியானதன் பலாபலனாக யாழ்ப்பாணித்திலிருந்து இஸ்லாமியர்களைத் துரத்தியடிப்பதற்கான சமூக உளவியலை நாம் பெற்றோம்-இல்லையா?


நமது,அசியலுக்கு மாற்றார்கள் குறித்து மாற்றான்தாய் மனமே இருந்திருக்கிறது.தமிழர்கள் பூண்டோடு அழிவதென்பதைச் சொல்லியழும் நாம், யாழ்ப்பாண முஸ்லீம்களின் இடப்பெயர்வைக்குறித்து எத்தகைய மனதோடு வரவேற்றோம்?அவர்களைத் துரோகிகளாகச் சொன்ன தமிழ் மனதுக்கு இன்று தம்மையே துரோகிகளாக்கிக்கொன்ற தமிழ் அரசியல் நடாத்தை புரிந்துள்ளதா?


இன்றைய தமிழ்த் தேசிய அரசியலில் மற்றும் மக்கள்சார் அரசியலில், எல்லோராலும் வெறுத்தொதுக்கப்படும் தேனீ இணையத்தளம் சிங்கள அரசோடு கைகோர்த்திருப்பதாகவும் அது மக்கள் விரோத அரசியலை முன் தள்ளுவதாகவும் நாம் குற்றஞ் சாட்டியுள்ளோம்.அது, உண்மையானதாக இருக்கிறதா இல்லையா என்பதைவிடத் தேனியின் மக்கள் விரோத அரசியலை நாம் தெளிவாக வரையறுத்தபின்-அது, இன்று பிரசுரித்தவொரு கட்டுரையின் நியாயமான கேள்விகளோடு உடன்படுகிறோம்.



அக்கட்டுரை நமது மனங்களைப் பிழிந்தெடுக்கிறது!நமது போலித்தனமான மனிதாபிமான வேடங்களைக் கலைக்கிறது.நம்மிடமுள்ள குறுந்தேசிய இனவாதத்தையம் ,நாம் மாற்றினங்கள்மீது கொண்டிருக்கும் சமுதாயப்பார்வையையும் அக் கட்டுரை மிகக் காட்டமாகக் கேள்வியெழுப்புகிறது.அக்கட்டுரையில் முன்வைக்கப்பட்ட வரலாற்றுப்பழி நம்மால் திட்டமிடப்பட்டு நடாத்தி முடிக்கப்பட்ட மானுடவிரோத அரசியலின் அறுவடை.இதைக்குறித்து இக்கட்டுரை மிக நியாயத்தோடு சில கேள்விகளை வைத்துத் தமிழ் குறுந்தேசிய வாதத்தினது மனிதவிரோத அரசியலைக் கேள்விகேட்கிறது.யார் இதற்குப் பதிலளிக்க முடியும்?


தலைகுனிந்து, நம்மை நாம் நொந்துகொள்ளும் இவ்விழிநிலையை நமக்குள் விதைத்த புலிப்பாசிசத்தைக் குறித்து நொந்துகொள்வதா இல்லை அதன் மக்கள் விரோத அரசியல்-படுகொலைக்கலாச்சாரத்துக்காகப் புலிகளின் தலைமையைத் தண்டிக்கக் குரல் கொடுப்பதா-எது, இங்கே நியாயமான செயல்?


நம்மை நாம் ஏமாற்றியுள்ளோம்!தமிழீழத்தின் பெயரால்-தேசத்தின் பெயரால் நாம் நமக்குள்ளேயே "துரோகிகள்"எனப் படுகொலைகளைச் செய்ய புலியைத் தயார்ப்படுத்தியுள்ளோம்.புலிகளது இந்தக் கெடுதியான அரசியல் எல்லைதாண்டியபோது யாழ்ப்பாணமாவட்டத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த நமது சகோதர முஸ்லீம் சமுதாயத்தையே "துரோகிகளாக"வர்ணித்து, அவர்களது உயிரோடு கொலைக்காரப்பாசிசக் கரங்களைப் பதியவைத்து, அவர்களது வாழ்வையும்,வளத்தையும் அழித்தெறிந்துள்ளோம்.பாழும் இப்பாசிசப் புலிகளது எல்லையற்ற கொலைக்கார அரசியல் நடாத்தை இன்று முழுமொத்த தமிழ்பேசும் இனத்தையே தனது கொலைவெறிப் பாதையூடாக அடிமையாக்கியுள்ளது.


இஃது, சொந்த மக்ளையே கொத்தடிமையாகவும்,கொடுங்கொலைக்குள்ளும் தள்ளிய வரலாற்றுத் தெரிவில் முஸ்லீம் மக்களுக்கு வழங்கிய வரலாற்றுப் பழிச் சொல்"துரோகிகள்-காட்டிக்கொடுப்போர்"என்பதாகும்.இதைத் துடைத்தெறிந்து, நமது சமுதாயம் மாற்றினங்களோடு நேர்மையான தோழமையுறவை வளர்ப்பதாக இருப்பதானால் முதலில் புலிகளது பாசிச அரசியலையும் ,அப்புலி இயக்கத் தலைவனையும் தண்டிப்பதற்கான அரசியல்லைக் குறித்துப் பகிரங்கமாக உரையாடவேண்டும்.இலங்கையில் முழுமொத்த மக்களையும் ஒடுக்கும் பாசிச யுத்தக் கிரிமினல் மகிந்தா குடும்பத்தை எங்ஙனம் உலக நீதிமன்றத்தில்-டென்கார்க்கில் கொணர்ந்து விசாரிக்கவேண்டுமோ அதே அடிப்படையில் பிரபாகரனையும் இழுத்துவந்து தண்டித்தாகவேண்டும்!


புலிகளைத் தமிழ்பேசும் மக்கள் சமுதாயத்திலிருந்து அரசியல் நீக்கஞ் செய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பிரபாகரனையும் அவரது கொலைவெறிக்கூட்டத்தையும் சர்வதேச நீதி அரங்கில் ஏற்றி,அவர்களுக்கான தண்டகைளை வழங்கக் குரல் கொடுப்பதும்.இன்றைய சூழலில் புலிகளைக் குறித்து எவருமே மௌனித்திருக்கமுடியாது.மகிந்தா குடும்பத்து அரசியல் இருப்புக்குப் புலிகளே காரணமானர்வர்கள்-மகிந்தாவின் பாசிசக் குண்டுகள் வன்னித் தமிழர்கள் தலைகளில் வீழ்ந்து கொல்வதற்குப் பிரபாகரனது முட்டாள்தனமான கொலைக்கார அரசியல் தெரிவே காரணம்.இதைப் புரிவதற்கு நமது மனங்கள் முன் பல நூறு அடிகளுக்கு எழுப்பப்பட்டுள்ள தமிழ்த் தேசிய வெறி மதில் உடைத்தெறியப்பட்டாகவேண்டும்!


தமிழர்களின் அழிவைத் துரிதப்படுத்திய புலிகளது அரசியல்-போராட்டப்பாதை மக்களது அனைத்து உரிமைக்கும் எதிராகவே இயங்கியது.இதைத் திட்டமிட்டுப் புலிகள் அமைப்புக்கூடாகச் செய்து முடித்த புலிகளது எஜமானர்கள் புலிகளைச் சுத்திகரித்துத் தொலைத்துக்கட்டும் இத்தருணத்தில் பாரிய மனித அவலத்தை வன்னியில் திறந்துவிட்ட பின்பும், தமது அரசியலை மக்களுக்காகத் துறக்க முடியாத புலித் தலைமை முற்றிலும் மனிதவிரோத அமைப்பு என்பதையே நாம் பார்க்கிறோம்.எனவே,இன்று புலிகளது அன்றைய-இன்றைய மனிதவிரோதப் பக்கங்களை கேள்விக்குப்படுத்தும் பாதிக்கப்பட்ட இனங்கள்-மக்கள் கூட்டங்கள் தத்தமது குரலுக்கு நியாயம் கேட்பது மிக அவசியமானதே.இதை முதலில் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறும் ஒரு இஸ்லாமியக் குரல்(அப்படி இல்லாதுபோகினும்,அதன் நியாயமான கேள்விகள் மறுத்தொதுக்க முடியாதது) நமக்குமுன்-வரலாற்றுக்குமுன் வைக்கிறது.


அதை, இங்கே இக்கட்டுரையின் கீழே இணைப்பதென்பது எமக்கு அவசியம்.


ஒடுக்கப்படும் மக்களுக்கான குரலை நாம் இனம்,மொழி,மதங்கடந்து முன்வைக்கின்றோம்.இங்கே,உழைக்கும் மக்கள் தம்மை உழைப்பால் இணைப்பதைத்தவிர அவர்களுக்கான எந்தவொரு பிற அடையாளத்தையும்சார்ந்து அடையாளப்படுத்தித் தம்மை குறுகிய நலன்களுக்கு இரையாக்கமுடியாது.இத்தகைய குறுகிய நலன்களுக்கு நாம் தமிழீழத்தின் பெயராலும்,தமிழ்த்தேசியத்தின்பெயராலும் நம்மை இரையாக்கியது வரலாற்றில் என்றும் படிப்பினையாக இருக்கும்.ஆதலால்,இஸ்லாமியச் சமுதாயத்தின் குரலை இன்றைய அடையாள அரசியலுக்கும் அப்பால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இலங்கையர்கள் எனும் பார்வையில் தோழமையோடு அணுகுகிறோம்.இக் குரலை எதன் பெயராலும் அடக்கிவிடத் துடிக்கும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக நாம் பாடுபடுவோம்.


தோழமையோடு,


ப.வி.ஸ்ரீரங்கன்
19.02.2009
*****************************************************
அல்லாஹ் அக்பர், அஸத்தோ மஹ், ஸற்கவயாஹ், ஸமஸோமாஹ்ஜோஸிற்கமயாஹ்


-யஹியா வாஸித்-


"குல்லு நப்சின் தாயிக்கதுன் மவுத்" (அல் குர்ஆன்) மூச்சுவிடும் அனைத்து உயிரினங்களும் மரணம் என்னும் பானத்தை அருந்தியே ஆகவேண்டும். இந்த வகையில் மூச்சை நிறுத்திக்கொண்ட முத்துக்கிருஷ்ணனினதும் முருகதாசினதும் மரணத்தை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் அவர்களைப் பெற்று வளர்த்து, பாலூட்டி, தேனூட்டி வளர்த்து இப்போது மத்தளமாகிக் கொண்டிருக்கும் அந்த தாய், தந்தை, உடன் பிறப்புக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துத்தான் ஆகவேண்டும். இதே பாணியில் அன்று நம்மவர்கள் "நல்லதோர் வீணை செய்வார்கள்"என நினைத்து உரும்பராயில் உடைந்து சிலையாக இருக்கும் சிவகுமாரனும், நல்லுர் சந்தியில் பட்டினி கிடந்து உரிமைக்காக உயிரைவிட்ட திலீபனும் இறைவனடி சேர்ந்தார்கள். அந்த தியாகமும், தீட்சண்யமும் மழுங்கடிக்கப்பட்டு மனிதகுலமே வெட்கித் தலைகுனியும் படியான ஒரு இக்கட்டில் தமிழ்பேசுவோரை, தமிழனை தள்ளிவிட்டு இன்னும் பிடித்த முயலுக்கு மூணுகால் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்னும், இன்னும் நிறையக்காலங்களும், நேரங்களும், தமிழ் எங்கள் மூச்சு என தமது சக்தியெல்லாம் திரட்டி போராட உலகத்தமிழனும் உணர்ச்சியோடுதான் இருக்கின்றான். உரிமைக்காக ஏங்கிக் கொண்டும்தான் இருக்கின்றான். ஆனால் யார் மணிகட்டுவது?
ஏதும் தெரியாமல் எனை(ம) மறைத்த வன்னிருளை நீக்கநாதா என(ம)க்கொரு ஞான விளக்கில்லையோ !அல்லும் பகலும் அகன்ற வடிவே !!
உன்னை நான்(ம்); அண்டும் படி என(ம)க்கு ஒரு
ஞான போதம் தான் இல்லையோ!?


என்று ஒப்பாரி வைத்து அழுத தாயுமான சுவாமியின் நிலையில்தான் இன்று ஒவ்வொரு தமிழ் மகனும் இருக்கின்றான். நமது முகத்துக்கு முன்னால் அவன் சிரித்தாலும் முதுகுக்குப் பின்னால் கனன்று, வெம்பி, வெடித்துக் கொண்டிருக்கின்றான். இப்போது போய் எண்ணையோ, நெய்யோ ஊற்றி வேல் பாய்சிசிவிடக் கூடாது. அப்புறம் அது மீண்டும் ஒரு தமிழ் இளைஞர் பேரவைக்கோ, புதிய புலிகள் இயக்கத்துக்கோ வழி சமைத்துவிடும்.
இன்றைய பல மாத வன்னிநகர்வையும், அன்றைய அந்த யாழ் வாழ் முஸ்லீம்களான எங்களது ஒரு நாள் நகர்வையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன். வாப்பாவின் சைக்கிளில் மார்ட்டின் றோட்டிலுள்ள எனது தமிழ் நண்பர்களுடன் சுற்றித் திரிந்து விட்டு வீட்டுக்கு வருகின்றேன். மொத்தமுஸ்லீம்களும் றஹ்மானியா கொலோஜ், ஐந்து சந்தி, பள்ளிவாசலடி போன்ற இடங்களில் குழுமியிருந்தனர் (இதை உணர்ச்சி வசப்பட்டு வை.கோபால்சாமியின் பாணியில் சொல்வதானால் அங்கே மொத்த சோனியும் குய்யோ முறையோ என அலறிக் கொண்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார்கள்) .வாப்பா சொல்கின்றார் "மகன் நம்மள போகச் சொல்லி விட்டார்கள்". யார் வாப்பா போகச் சொன்னது? ஏன் போகச் சொன்னார்கள்? எதற்காகப் போகச் சொன்னார்கள்? யாரும் யாரிடமும் இந்தக் கேள்வியை கேட்கவில்லை! கேட்க நேரமுமில்லை!! கேட்க நாதியுமில்லை!!
"எஸ் வீ ஓள் ஆர் பாஸ்ட்ரட்". "திஸ் ஓடர் புறம் ஒன் மேன் ஆமி"
"அல் ஹம்துலில்லாஹ்" (அல் குர்ஆன்) எல்லாப்புகழும் அந்த இறைவன் ஒருவனுக்கே.என்று மனதிற்குள் ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டு உடலையும் உயிரையும் காவிக்கொண்டு வேட்டை நாய்களால் குறி பார்க்கப்பட்ட முயலாக நடந்தோம், ஓடினோம், பதறினோம். வழியில் உளவுப்பிரிவினரால் பரிசோதிக்கப்பட்டோம். எனது சகோதரி, எட்டுமாத கர்ப்பிணி வாயில் நுரை தள்ள நடந்து வந்து கொண்டிருந்தார்.அவரது காதில் ஒரு 4கிராம் பெறுமதியான காதுப்பூ இருந்தது. ஒரு வாட்ட சாட்டமான இளைஞர் தனது இரு கைகளாலும் காதைப் பிய்த்து அதை புடுங்கினார். "எஸ் யு காண்ட் கெரி எனிதிங் புறம் அவர் மதர் லேன்ட்". "திஸ் ஓடர் புறம் அவர் பிக் பிறதர்"

வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகிமானிலத்தை ஒரு நொடியில் வகித்த மண்ணில்குணமாத மனிதரையும் படைத்து இந்த குவலயத்தில்தானுதித்து குருவாய் வந்து.சகமான சம்சாரம் ஒன்றில்லாமல்சன்னியாசிபோலிருந்து.

சித்தத்தை காட்டிச் சென்றவனே அண்டுவாயே.அண்டுவாயே,அண்டுவாயே என அலறிக் கொண்டு..! இற் இஸ் ஒன் றெக்கார்ட். இற் இஸ் ஒன் றெக்காட். இற் இஸ் ஒன் றெக்கார்ட்.

மறுமை என்ற ஒன்றிருக்கின்றது. உலகமே மரணித்த பின் அனைத்து ஜீவ ராசிகளையும் எழுப்பி, தன்முன்னால் நிறுத்தி கேள்விகள் கேட்டு செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப சொர்க்கம் ,நரகம் என இறைவன் (அல்லாஹ்) அனுப்பிவைப்பான். இது இந்த கேள்வி கணக்கு பெரியதொரு மைதானத்தில் நடக்கும். உலகின் மொத்த ஜன சமுத்திரமும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருப்பர். பரந்த வெளி, உச்சி வெயில் தலையைத்தொடும். தாய் தகப்பன், உற்றார், உறவினர், அத்தான், அக்கா.ஆண்டான்,அடிமை, எதுவும் கிடையாது. இந்த நாளை "மஹ்சருடைய நாள்"; என்போம்.இந்த நாளுக்காகத்தான் உலகில் வாழும் ஒவ்வொரு நாளும் பயந்து புண்ணியம் தேடிக் கொண்டிருப்போம். "மை கோர்ட்னெஸ்". இந்த யாழிலிருந்து துரத்தப்பட்ட நாளே இப்படி என்றால் !?அந்த நாள் !!!
அந்த மறுமை நாள்.

இப்போது இந்த வன்னி மக்களை நினைக்கும் போது அந்தநாள் ஞாபகம் மூச்சை முட்டுகின்றது.தொண்டை அடைக்கிறன்றது, பிடறி மயிர் விறைக்கின்றது. அன்று எங்களுக்காக குரல் கொடுக்க யாரும் இருக்கவில்லை. இன்று உங்களுக்காக உலகமே குரல் கொடுக்கின்றது. உரிமைக்குரல்கள் ஆர்ப்பரிப்புகள், உயிர்த்தியாகங்கள் என என்னென்னவோ !? ஆனால் எதுவுமே ,எங்குமே நச்சென உறைக்கவில்லை. மீண்டும், மீண்டும், மீண்டும் அதே பாணி, அதே தோற்றம், அதே கும்பல், அதே பாட்டு. உங்களுக்காக ஒப்புக்கு சப்பாணியாக அழுபவர்கள் "தண்ணிக்குள்ளால் லாம்பு கொண்டு போற" அதே பாணியைத்தான் பின்பற்றுகின்றனர். ஆனால் சிங்கள அரசு "பெற்றோலுக்குள்ளால் லாம்பு"களை கொண்டு போய்க் கொண்டிருக்கின்றது.

அண்மையில் "காஸா"வுக்காக இங்கிலாந்தில் ஒரு ஊர்வலம் நடந்தது. ஒரு இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினர் "காஸாவுக்காக ஒரு கவனயீர்ப்பு நடாத்த உள்ளோம் விருப்பம் இருந்தால் நாளை வாருங்கள்" என பல நண்பர்களுக்கும்,பல அமைப்புகளுக்கும் போன் பண்ணி சொல்லுகின்றார். அடுத்த நாள் பலர் வருகின்றனர். கவனயீர்ப்பு செய்வதென முடிவாகின்றது. வந்தவர்கள் எல்லாம் 9000பவுண் சேர்த்து பைனான்சியல்ஸ் டைம்ஸ் இல் பிரிட்டிஷ் பிரதமருக்கு
ஒரு முழுப்பக்க வேண்டுகோள் விடுகின்றனர். "பிளீஸ் ஹெல்ப் த காஸா இனஸன் பீப்பிள்". அத்துடன் அதே வெள்ளிக் கிழமை ஒரு ஊர்வலம் இஸ்ரேலிய எம்பஸிவரை. ரொம்ப அமைதி, 50 வீதம் பிரிட்டிஷ் வெள்ளையர்கள்,ஒரு தடியடி கிடையாது. யாரும் இதுவரையும் பீற்றிக் கொள்ளவில்லை இத்தனை லட்சம் மக்கள் வந்தார்கள் என்று. நிச்சயம் நீர் குடும்;பத்துடன் வரவேண்டும் என யாரும் யாரையும் மிரட்டவுமில்லை. அலைகடலென மக்கள், ஆர்ப்பரித்தது தமிழ் உறவுகள், மலைத்தது பிரிட்டிஷ் அரசு என எங்குமே எந்த துண்டுப்பிரசுரமுமில்லை. ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும் பாடுற மாட்டை பாடிக்கறக்கணும் என்பதெல்லாம் கறிக்குதவாது. சைலன்ட் கொஞ்சம் சமயோசிதம்.

புலிகள், புலிகள் என சொல்லிக்கொள்பவர்கள் கோசங்களை மாற்றி,ஆட்களை மாற்றி,புதியதொரு தோற்றத்துடன் வெளிவந்து, முதலில் உங்களால் பணயம் வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் அந்த மனிதப்புனிதர்களை மூச்சு விட வைத்துவிட்டு பின்னர் மற்றவர்களுடன் கைகோர்த்து (கொஞ்ஞம் கஸ்டமான விடயம்தான். இப்போது எல்லோருமே தண்டல்காறர்கள்) ஐயா செல்வநாயகம் அவர்கள் தனது கடைசிக்காலத்தில் வாயில் உமிழ் நீர் வழிய, வழிய சொல்லி வழி மொழிந்து விட்டுப் போன உரிமையின் ஒரு பங்கை முதலில் பெறபார்ப்போம். இல்லை "வீ ஆர் டிபறன்ட் புறம் அதர் பீப்பிள்"என்று வழி மொழிவீர்களானால் !?

எல்லோருடைய கடவுள்களும் எங்கே இருக்கின்றார்கள் என எனக்குத் தெரியாது ஆனால் என்னுடைய கடவுள் ரஷ்யாவில் லெனின் கிராட்மைதானத்தில் செத்துக்கிடக்கிறார் என்று ஈழத்து சித்துக்கவிஞன் ஒருவன் எழுதியது போல் இன்னொரு பித்துக் குளிகவிஞன் எழுதிவிடுவான். பனங்கள்ளு அடித்து விட்டே இப்படி எழுதியவர்கள் இப்போது வொட்காவை வெறும் வயிற்றுடன் அடித்துவிட்டு என்னென்னவோ எழுதுவார்கள். உலக நாகரிகம் சொல்லித்தந்த லெனினையே மொத்தமாக விலை பேசி விற்ற உலகமிது. (கோர்ப்பச்சேவ் மன்னிப்பாராக )

ஒன்றுமே கெட்டு குடிமுழுகிப்போய் விடவில்லை. சிறிலங்காவில் பாரிய பிரச்சனை இருப்பது உலகிற்கே தெரியும். அது இப்போதுதான் தோன்றியுள்ளது போல் புதியதம்பிகள் இப்போது சேவல் கணக்காக கொக்கொரக்கோ போடுகின்றனர். உங்களால் ஆக்ரோசமாக விரட்டப்பட்ட நாங்களும் அன்று அமைதியாகத்தான் வெளியேறினோம். அந்த எல்லாம் வல்ல இறைவன் எங்களுக்கும் ஐ.நா.வுக்கு அருகிலும், ஐ.எம்.எப்.க்கு அருகிலும், பாராளுமன்றங்கழுக்கருகிலும், ஐ.சி.ஆர்.சி, யு.என்.எச்.சி.ஆர். போன்ற பாரிய நிறுவனங்களுக்கருகிலுமுள்ள குட்டிக் குட்டி காபி சொப்பிலும், உணவகங்களிலும் வேலை பெற்றுத் தந்துள்ளார். இவ்அலுவலகங்களிலிருந்து நிறைய அதிகாரிகள் காபி,டீ குடிக்க இங்கு வருவர். இப்போது நீங்கள் ஒண்ணரை லட்சம் பேரை வைத்து ஊர்வலம் செய்ததை நாங்கள் தனித்தனி ஆட்களாக 1991இலிருந்து செய்து கொண்டிருக்கின்றோம். செய்வோம். மிக மெதுவாக நிதானமாக ஒவ்வொரு வெள்ளையனின் காதுக்குள்ளும் வேத மந்திரமாக உண்மைகளை, உண்மையாக கூறியுள்ளோம். அப்போது உங்கள் துதிபாடும் தம்பிகள் கட்டுநாயகாவில் இவ்வளவு, வவுனியாவில் அவ்வளவு, என என்னன்னவோ சொல்லிப்பிதற்றிக் கொண்டிருந்தனர். பணமறவிட்டுக் கொண்டிருந்தனர், இப்படி ஒரு "கல்குலேற்றிவ் றிஸ்க்"ஐ சிங்கள அரசு எடுத்தால் !? விலை மதிக்க முடியா அந்த உயிர்களுக்கு யார் பதில் சொல்வது. என கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை.இந்த உங்களின் பாரிய தோல்விக்காக நாங்கள் சந்தோஷப் படப்போவதில்லை.மெலியாரை வலியார் கொன்றால் வலியாரை தெய்வம் கொல்லும் என்பர்.இதில் யார் மெலியார் ? யார் வலியார் என்று இப்போது கணக்குப் பார்க்க முடியாது. புதுக்குடியிருப்பு புதர்களுக்குள் இருந்து பூதங்கள் கிளம்பும் வரை…..

இஸ்லாமிய ஆட்சியாளர் (அலி றலி என நினைக்கின்றேன்) ஒரு முறை யுத்தத்திற்குச் செல்கின்றார். வாழ் சண்டை. ஒரு எதிரியுடன் போரிடுகின்றார். எதிரி கீழே விழுந்து விட்டார்.அவரை வெட்டுவதற்கு இவர் வாளை உருவுகின்றார். அப்போது கீழே விழுந்த அவர் ஆட்சியாளரின் முகத்தில் காறி உமிழ்கின்றார். அவர் காறி உமிழ்ந்ததும் இவர் அவரை வெட்டுவதை நிறுத்திவிட்டார். இதைப் பார்த்த இவரது படையினர் ஏன் அவரை வெட்டவில்லை, கொல்லவில்லை என கேட்கின்றனர். அவருக்கு என் மேல் ஏதோ தனிப்பட்ட கோபம் இருக்கும் போல் இருக்கிறது. அதனால்தான் காறி உமிழ்ந்துள்ளார். அதனால் நான் வெட்டவில்லை என்றாராம்.

இப்படியானஒரு யுத்த தர்மத்தைத்தான் வன்னி மக்களும் "தலைவர் செய்வார்" என அடம்பிடிப்பவர்களும் இப்போது எதிர்பார்க்கிறார்கள். அண்மையில் ஜேர்மனியில் ஒரு கருத்தரங்கு நடந்தது. ஒரு பார்வையாளராக தற்செயலாக அங்கு சென்றிருந்தேன். நிறைய விடுதலைப்புலி ஆதரவாளர்கள் வந்திருந்தனர். மற்றவர்கள் எவரையும் பேசவிடவில்லை. பேசினாலும் ஆயிரம் குற்றம், குறை கூறிக்கொண்டிருந்தனர். இதில் ஒரு தம்பி திருக்கோணமலை சொந்த ஊர். அப்பா யாழ்ப்பாணம், அம்மா திருகோணமலை. சுத்தமாக தமிழ் தெரியாது. ஜேர்மன் மொழிதான் பேசுகிறார். நாங்கள் செய்வதொன்றுதான் சரி. மற்றைய மொத்த தமிழனும் செய்வது தேசத்துரோகம். எவரையும் நாங்கள் விட்டுவைக்க மாட்டோம். தலைவர் கட்டளை இட்டுவிட்டார். இன்னும் என்னன்னவோ.

நீங்கள் யார் எனக்கேட்டார். நான் ஒரு முஸ்லீம் ஒரு பிரண்டுடைய திருமணத்துக்காக பிரான்சிலிருந்து வந்த நான் என்றேன். என்னை பரிதாபமாகப் பார்த்துவிட்டு எங்கட போராட்டத்தை பற்றி உமக்கு ஒன்றும் புரியமாட்டாது என கூறி விட்டு நகர்ந்துவிட்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரது தகப்பனை எனக்கு நன்கு தெரியும.; 1982ஆம் ஆண்டு திருகோணமலை 10ம் நம்பரில் உள்ள சிங்களமீன் வியாபாரிகளுக்கும் தமிழர்களுக்கும் ஒரு பிரச்சனை வந்து அவர்கள் துப்பாக்கிகளைக்காட்டி மிரட்டிக் கொண்டிருக்க எங்களிடம் ஒன்றுமே இல்லையே என தமிழர்கள் விழித்த போது 100 மைல்களுக்கப்பால் இருந்து பென்சில்,அழிறப்பர்,கொப்பி, புத்தகம், கொம்பாஸ் பெட்டி எல்லாம் கொண்டு போய் கொடுத்த சங்கதி அந்த குட்டித்தம்பிக்கு தெரிய வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் இப்போது யுரோப்பில் இருந்து கொண்டு இப்போராட்டத்தை குழப்புவதே இவர்களைப் போன்றவர்கள்தான். முதலில்உள்ளுக்குள் களை எடுங்கள்.கதைக்கக் கற்றுக் கொடுங்கள்.

கரியவளம் என்றால் என்ன? துத்த நாதத்திற்கு கெமெஸ்ட்றியில் என்ன குறியீடு, குங்குலியத்தின் பயன்கள் என்ன? அமிழ்தண்டூர்தி எத்தனைகால் மிருகம்? எனக் கேட்டு எழுத்தறிவித்து களத்துக்கோ பிரச்சாரத்துக்கோ தயார்படுத்துங்கள். ரம்போவும், ஜேம்ஸ் போண்ட்டும் பெரிய சம்பளம் வாங்குபவர்கள். அவர்களை வெள்ளித்திரைகளில் ரசிப்பதுடன் விட்டுவிடச் சொல்லுங்கள். உலகின் முகடு என்று சொல்லுகின்ற அமெரிக்காவே சைனாவுக்கு ரியுஷனுக்கு ஆள் அனுப்புகின்றார்கள. யாருக்கும் எதற்குமே நேரமில்லை. யுரோப்பில் வாழும் பெற்றோர்களுக்கு பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி எடுப்பதே பெரிய பாடாகியுள்ளது. இப்போது புதிதாக வன்னி நிலவரம் என்ற மரணக்குண்டு. முருகதாஸின் முத்துக்குழிப்பின் பின் அகதிகள் மேல் உள்ள பரிதாபப் பார்வை வேறு உருவம் எடுக்கும் போல் தெரிகின்றது. எங்களை விடுங்கள் நாங்கள் வாழ வந்தவர்கள் யாரையும் ஆள வரவில்லை. ஆளவும் ஆட்டவும் இன்னும் நினைக்கும் உங்கள் அபிமானிகள்தான் பாதிக்கப்படுவார்கள். இதை இங்கு ஏன் சொல்ல வருகின்றேன் என்றால் முஸ்லீம்களும் (அக்பர்), பௌத்தர்களும் (அசோகன்) நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இந்தியாவை ஆளவிட்ட ஹிந்துக்கள் பிராமணர், பிராமணரல்லாதவர் என மனு நீதி சாஸ்திரங்களைக் கூறி இந்துக்களை தொடர்ந்து ஆளவே விடவில்லை என்பதையும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் .ஓன்று பட்டால்தான் உண்டு வாழ்வு என்பதை உணருங்கள். உணர்த்துங்கள்.

உங்களால் அனைத்தையும்,அனைத்தையும் இழந்து இறுதியில் மகனையோ,மகளையோ இழந்த வன்னித்தாயொன்று பிணத்தை மடியில் இருத்திக்கொண்டு அல்லது கல்லறையில் தலைவிரிகோல மாக விழுந்து இறைவனுக்கு பிடித்த மொழியில்
"அஸத்தோ மஹ்ஸற்கவயாஹ்ஸமஸோமாஹ்ஜோஸிற்கமயாஹ்"


என அறம் பாடியிருப்பாளோ எனவும் எண்ணத்தோன்றுகிறது. இல்லாவிட்டால் ரூபவாஹினி றிப்போர்ட்டர் சமன் குமார ராம விக்கிரமவிக்;கும், ஐ.ரி.என்.றிப்போர்ட்டர் சமில் ஆனந்தவுக்கும் புதுக்குடியிருப்பு பங்கருக்குள் என்ன வேலை வேண்டிக்கிடக்கிறது. பத்தினிகள் தொடர்ந்து பதுங்கியிருக்கமாட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவராக சாண் என்ன முழம் என்ன எனப் புறப்பட்டால் அகிலம் தாங்காது. அல்லாஹ் அக்பர்.

Wednesday, February 18, 2009

மக்களது இத்துயரைக் குறித்து உலகத்தில் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்...

இலங்கையில் அழிவு யுத்தம்:எவர் தரப்பில் நியாயம்?


"தீபம் தொலைக் காட்சியில் இரண்டு நபர்கள் அரசியலுரையாடலாகத்
தோன்றுகிறார்கள்,அவர்களில் ஒருவர் மிகப்பெரிய நீண்ட மீசையோடும் மற்றவர் முழுவதுஞ்
சவரஞ் செய்தவராக முகத்தை வைத்திருக்கிறார்.இவர்களது கதையுள்"இலங்கை அரசு இவ்வளவு
இனச் சுத்திகரிப்பைச் செய்துபோட்டது,இதுமாதிரி இனச் சுத்திகரிப்பு நிகழ்ந்த கொசவோ
தனிநாடானமாதிரி ஈழத்தையும் பிரித்தானியா தலையிட்டுப் பிரிக்க இதுதாம் தருணம்"
என்கிறார்கள்.புலிகள் எதை விரும்பினாகளோ அது வன்னியில்
நடக்கின்றது.எனினும்,பிரித்தானியா ஈழம் பிரிக்குமெனும் உலக அரசியலிருக்கே இதுதாம்
தமிழர்களின் அறிவை அளப்பதற்கான அளவுகோலென்பதில் எனக்கு மாற்றுக்
கருத்தில்லை!"


கம்பூச்சியா குறித்த ஊகங்களினதும்,அச்சத்தினதும் நடுவே நடந்தேறும் யுத்தக் கிரிமினல்களின் வழக்குக் கடந்த முப்பாதாண்டுகளுக்கு முன்னான பொல் போர்ட் கம்பனியினது இலட்சக்கணக்கான மனிதப்படுகொலைகள் குறித்து விசாரிக்கிறது.இது, கடந்த நூற்றாண்டின் மிகக் கொடுமையான கிரிமினல் நடாத்தை.1975 ஏப்பிரலிலிருந்து 1979 ஜனவரி வரைக்குள் "போலிக் கம்யூனிசத்தின்"பிறப்பில் வீழ்ந்தப்பட்ட மக்கட்டொகை:1.7 மில்லியன்.கம்பூச்சிய மக்கட்டொகையில் காற்பங்கினர் "களையெடுப்பு"என்ற உதவாக்கரை வார்த்தையின் உதவியோடு சொந்த மக்களைக் கொலைக்குள் தள்ளியது கம்பூச்சிய அன்றைய அரசு.

இதன் உச்சபட்ச விசாரணைகள் ஆரம்பித்திருக்கும் வேளையில்,இலங்கையில்-உலகத்தில் எதனெதன் பெயராலோ மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்.ஈராக்கிலும்,அவ்கானிஸ்தானிலும் மற்றும் சோமாலியாவிலும்,கொங்கோவிலும் இலட்சக்கணக்காக மக்களைக் கொன்று குவித்த அமெரிக்க-மேற்குலக அரசுகளின் கம்பனிகளையும் அவர்களது தலைமைகளையும் எவர் தண்டிப்பார்? இன்னும், பல நூரன்பேர்க்குகள் ஆரம்பிக்கப்பட வேண்டிய இந்தக் காலத்தில் இலங்கையில் இரண்டு யுத்தப் பிரபுகளுக்குப் பின்னே அணிவகுத்துள்ள அந்நிய அரசுகள் இவ்கிரிமினல்களுக்கூடாக இலங்கை வாழ் மக்களில் 10 வீதமானர்களை கடந்த கால் நூற்றாண்டுக்குள் கொன்று தள்ளியபடித் தொடர்ந்தும் மனிதப் படுகொலையைத் தீவிரமாக்கியுள்ளனர்.இதற்கு"ஈடுவிடுதலை"என்று ஒருவனும் மற்றவன் "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" என்றும்-அமெரிக்கக் கொடுங்கோலரின் கொலைக்கார வாசகத்துடனும், இலங்கையை குருதியாற்றுக்குள் அமிழ்த்தியபடி அந்நியச் சேவையைக் கறாரகச் செய்யத் தமது தரப்பு நியாயங்களை எதெனதன் பெயரால் விளக்குகிறார்கள்.

"Hundreds of civilians have now lost their lives. The situation for families
trapped in between the fighting parties is horrific. Both sides should stop
their operations long enough to allow the civilians to leave and aid to reach
those who can't leave", said Yolanda Foster.

http://www.unhcr.org/refworld/country,,,,LKA,4562d8cf2,4993ea0dc,0.html


இந்த இடருக்குள் இவ் அரசுகள்-உலகங்கள் மக்களின் தலையில் மட்டும் குண்டுகளைப் பொழியவில்லை.தொடர்ந்து அனைத்து வாழ்வாதாரங்கள்மீதும் குண்டுகள் தினமும் பொழியப்படுகிறது.இன்றைய பொருளாதார நெருக்கடி இன்னும் பாரிய யுத்தங்களைவேண்டி நிற்கிறது.தமிழர்களைக் காப்பதற்காகத் தமிழ் தலைமைகள் வேண்டிநிற்கும் உலக நாடுகளில் தினமும் பொருளாதாரத்தின்மீது குண்டுகள் பொழிந்து சிதறுகிறது!அவர்கள்,விழி பிதுங்க தலையில் பித்தம் ஏறப் பிதற்றுகிறார்கள்.ஒவ்வொரு யுத்தத்தினதும் பின்னே ஒளிந்திருக்கும் காரணி பொருளாதார நலன் என்பதும் அங்கே வர்க்க ரீதியான யுத்த நடாத்தையே நிலவுவதாகவும் மார்க்சியம் குறித்துரைக்கிறது.இதைத் தாண்டி, யுத்தங்கள் குறித்து ஆய்வைச் செய்து வேறொரு முகமூடியைத் தேசத்தினதும்,தேசியத்தினதும் பெயரால் பரப்புரை செய்தவர்கள் வந்து நிற்கும் இடம் இன்று தமிழ்பேசும் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.பருப்புக்கும்,சர்க்கரைக்கும் இந்தியாவைத் தங்கி நிற்கும் ஒரு தேசம், தனது மக்களுக்குச் சுதந்திரமான தேசியப் பொருளாதாரத்தைக் கவிட்டுவைப்பதைத்தவிர வேறெதைக் கொடுக்கும்?நில ஆக்கிரமிப்புக்கும்,இன அழிப்புக்கும் உட்பட்ட தமிழ்பிரதேசத்தினது இருப்புக்கு, இன்றுவரை மக்கள் செத்துவருவதென்பதில் மேலோட்டமாகவிருக்கும் நியாயம் அதன் உட்புகுந்திருக்கும் நலனினது வெளியில் "எப்போதும்" உயிர்ப்பலி மக்களது விடுதலைக்கானதென்பது தவறாகவே பார்க்கப்படுகிறது.இங்கு எந்தவொரு மண்ணும் எவருக்கும் நிலையானது இல்லை!நீ வருவாய் போவாய்,நிலம் இருக்கும் வேறு-வேறான உருவங்களில்!

//Die Krise ist da und die erste Auswirkung dieser Krise ist die Fülle von
Zahlen und Daten, die über unsere Köpfe ausgeschüttet wird. Täglich und
stündlich werden wir mit neuen Aktienkursen, Indexzahlen und
Wirtschaftsprognosen bombardiert. Täglich tauchen neue Milliarden Euro auf, die
irgendwem fehlen oder fehlen könnten, und die dann vom Regierungskonto auf das
Unternehmenskonto umgeschaufelt werden. Klar ist bei all dem nur, dass die
Regierung die Milliarden, die sie derzeit verteilt, gar nicht hat. Wer kann da
den Überblick behalten? //-


http://de.indymedia.org/2009/01/240705.shtml


தமிழீழம் என்ற வரையறை மூலமாகத் தமிழ்ப் பிரதேசங்களைத் தமிழ்பேசும் மக்களது வாழ்வாதாரமாக்கும் போர் என்பது எவ்வளவு தவறாகுமோ அவ்வளவு தவறு சிங்கள அரசு செய்யும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரென்னும் பொய் கோசத்தினதூடாகச் செய்யும் இனவழிப்பு-புலியழிப்புப் போராட்டம்!இலங்கையில் இனங்களுக்கிடையிலான இனமுரண்பாட்டைத் திசை திருப்பிப் பயங்கரவாதமாகச் சித்தரிக்கும் அரசியலென்பது இலங்கையினது கண்டுபிடிப்பல்ல.இது,முற்று முழுதான இந்திய-பார்ப்பனியக்கூட்டுடனான ஒத்துழைப்பில் மேற்குலகத்தின்வழி தமிழர்களது தலையில் குண்டுபோடும் அராஜக அரசியலாகும்!

//"This is a very clear indication of all the precautions we are taking. We are
taking casualties to prevent civilians getting hurt. This is a factor we are
very concerned about. Otherwise we could have used so much artillery and just
moved in," the Defence Secretary has told. //-

http://www.defence.lk/new.asp?fname=20090217_04



இஃதை வெறுமனவே புலிகளது பிராண்டல்தனமான கோசங்களாலோ அல்லது வெகுளித்தனமான புலம்பெயர்-தமிழ்நாட்டு ஆ(ர்)ப்பாட்டக் கோசங்களாலோ தடுத்து நிறுத்த முடியாது.இத்தகைய ஆ(ர்)ப்பாட்டம் மற்றும் புலிவழிப் போராட்டங்களுடாகத் தமிழ்பேசும் மக்கள் வந்தடைந்திருக்கும் இந்த நிலைக்கு தமிழ்பேசும் முழு மக்களைப் பொறுப்பாக்கும் புலிகளது பினாமிகள் மற்றும் தத்துவம் புகட்ட முனையும் விடலைகளது கூக்குரல் மீளவும் புலிகளினது வரலாற்றுத் தவறை அவர்கள் உணர்ந்து, சுயவிமர்சனஞ் செய்து அடுத்த நகர்வைச் செய்வதைத் தடுப்பதாகவே முடியப் போகிறது.

தத்துவங்களைக் கடந்து மக்களது யதார்த்த வாழ்வுக்கு எந்தப் புனைவுகளும் அவசியமின்றிக் கிடக்கிறது.அங்கே,இன்றைக்குப் புடுங்கவேண்டியது,புலிகளையும்,அரசையும் அம்பலப்படுத்தி யுத்தத்துக்கு எதிரான அணித்திரட்சிகொள்வது.இதனூடாக உலக மக்களையும்,முற்போக்குச் சக்திகளையும் திரட்டி இலங்கைக்குப் பின்னாலும்,புலிகளுக்குப் பின்னாலும் நிற்கும் கொலைக்காரர்களை மட்டுப்படத்த முடியும்.இவர்களது அடவாடித்தனமான இந்த மூர்க்கத்தனமான மக்கள்விரோத யுத்தப் படுகொலைக்கு வெறுமனவே ஊரைக்கூட்டிப் புலியின் குரலாக ஒப்பாரி வைப்பதில் எதுவுமே நடக்காது.அரசும்,புலிகளும் மக்கள் விரோதிகளாக நின்று மக்களைக் கேடயமாக்கியுள்ளதை உலகமே புரிந்திருக்கும் இன்றைய நிலையில், நாம் புலிகளின்வழி இதை நியாயப்படுத்த இலங்கை அரசுக்கு முழுப் பொறுப்பையுஞ் சுமத்துகிறோம்.

உலகத்தினது இன்றைய நியாயம்-நீதி எனும் தர்ம விளக்கங்கட்கமையச் சிந்திப்பவர்கள் இதை எதன் பொருட்டும் வகைப்படுத்தட்டும்.எனினும்,இன்றைய வன்னி மக்களது அவலத்துக்குப் புலிகளது அரசியல் நடாத்தையும்,சிங்கள அரசினது அந்நியக்கூட்டுக்களுமே காரணமாக அமைகிறது.இது,ஒரு காலத்தினது அரசியல் தேவையாக முன் தள்ளப்பட்ட பொருளாதார நகர்வுக்கு அவசியமானவொரு யுத்தத் தேவையாக விரிவுறுவதை எதன் பொருட்டும் குறுக்கி, இலங்கை அரசினது இனவழிப்பு அரசியலின் தொடர்ச்சியில் வைத்துப் பார்ப்பது ஆபத்தானது.இதன்வழி நாம் உலகினது நகர்வை எந்த விமர்சனமுமின்றித் தட்டிக்கழித்து மீளவும் பிழையான இடத்திலிருந்து நகர்வதில் முடியும்.இது,புலிகள் இன்று வந்தடைந்த நிலையைவிட மேலும் ஆபத்தான பக்கத்தையும்,அடிமை வாழ்வையும் இலங்கையின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் வழங்கும்.இன்றைய இவ் நிலைமைகளைச் சரியாக மதிப்பிட்டு எதிரிகளைமிகத் தெளிவாக வரையறை செய்து மக்களை விடுவிப்பதற்கு முதற்படி புலிகளையும்,அரசையும் ஒரே தட்டில் வைத்து விமர்சித்து அம்பலப்படுத்துவதே.மக்களுக்கு விரோதமாக நடாத்தும் இவர்களில் ஒருவரை,ஏதாவதொரு நலத்தின் அடிப்படையில் மறைத்தபடி-மறந்தபடி-நியாயப்படுத்தியபடி வன்னியில் சாகும் மக்களுக்காகக் குரல்கொடுப்பதென்பது மிக மோசமான கபடத்தனம்.


"இலங்கைக்குள் இரண்டு தேசங்களை உருவாக்கப் புறப்பட்ட பிரபாகரனது தேசியத்தலைமை உலகத்தின் பொருளாதார மற்றும் சமூக விஞ்ஞானத்திலும் உலகப் புரட்சியிலும் மிகக் கறாரான விமர்சனங்களை வைத்தபடியேதாம் ஈழத்துக்கான புரட்சியை முன்வைத்தது."இதன் தாத்பரியம் தமிழர்களைப் படுகொலைசெய்து குவித்ததுபோகச் சிங்கள அரசினது கொலைக்காரக் குண்டுகளுக்கும் கொத்துக்கொத்தாக அழிந்து போவதுவரை தமிழீழம் முடிந்த முடிவு என்று அவர்கள் சொல்வதைக் கேட்டுப் புலம் பெயர்ந்த தமிழர்கள் பூரிப்படைகிறார்கள்.இதற்கு வலுச் சேர்பதுபோல் இயக்குனர் சீமான் தயாரித்து,இயக்கி வரும் ஈழப் புரட்சிக் காவியம் புலம் பெயர்ந்தவர்களை ஒரு கலக்குக் கலக்கிறது!அவர்கள் விசில் அடித்து வீரகாவியம் மீட்டுகிறார்கள்!நான் வன்னியில் சாகும் மக்களது தலைவிதியை நினைத்து நொந்து போகிறேன்!

//நாங்கள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. விடுதலைப் போர் என்பது ஒரு காலமும் மக்கள்
போராடுகின்ற போது, மக்கள் உணர்வை இழக்காத போராட்டம் தோற்றது கிடையாது. நாங்கள்
யாருக்கும் நியாயமற்ற முறையில் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து வாழப்
போவதில்லை. நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் .//-
விடுதலைப்புலிகளின் போர் ஆய்வுமையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி


http://thesamnet.co.uk/?p=7651



எங்கும்,பொய்யும் அது சார்ந்து போரும் தொடர்கிறது!அப்பாவிகளைக் கேடயமாக வைத்திருக்கும் புலியினது அழிவுக்காகத் தொடர்ந்து காரியமாற்றும் இந்தியா இலங்கை அரசினது அனைத்துவைகைப் பண்புகளையும் அழித்து மிகக் கொடூரமானவொரு தேசமாக இலங்கையை மாற்றிவிட்டுள்ளது!இலங்கையினது பெயரளவிலான ஜனநாயகம் அதன் இராணுவத்தின் கால்களில் சிதைந்தபின்பு,இன்று தமிழ்பேசும் வன்னிப் பகுதி மக்களது அழிவில் முழுப் புலிகளையும் துடைத்தெறிவதில் இந்தியத் தரகு முதலாளியத்தின் விருப்பு அரசியல் நாகரீகமாக விரிகிறது.இலங்கைக்குள் இந்திய அரசியல் போக்குகள் நிலவும்வரைத் தமிழ்பேசும் மக்கள்மட்டுமல்ல இலங்கையின் முழுமொத்த உழைப்பாள மக்களும் பாதிப்படைவதைத் தவிர வேறொருவழி கிடையாது.இதைப் புரிந்துகொண்ட எந்தவொரு பொருளாதாரப் போக்கும் இலங்கைக்குள் தீர்மானகரமானவொரு அரசியல் சக்தியாக உருவாகி, இலங்கையையும் அதன் மக்களையும் காப்பதற்காக தமது சொந்த மக்களது தயவில் அரசியல் நடாத்தும் சூழல் இதுவரை நிகழவில்லை.இனியும் இலங்கையில் தேசியவாதப் போக்குகள் குறுகிய இனவாதக் குறுந்தேசியவாதம் பேசும் நிலைமைக்கே இலங்கைக் கட்சி-இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் அந்நியச் சக்திகள் இட்டு வருகின்றன!இதன் தொடர்ச்சியாகப் புலிகளது மலிந்த பிரச்சார உத்திகள்-காயடிப்புகளை இலங்கை அரசே அம்பலப்படுத்தும்வரை தமிழ் நெற்றினது அறிவுப் புரட்சி கொடிகட்டிப்பறக்கிறது!தமிழர்களின் தலைவிதி-விடலைகள் செய்யும் பல்கலைக்கழகப் படிகட்டுகளைத்தாண்டிக் குதிக்கும் பருவக் கோளாறு இஃது!தூ...

//To smother its humiliating string of defeats at the hands of the Sri Lankan
security forces LTTE propaganda clouts have taken to what they have known best
over the years 'manipulation and distortion' of true ground situations, what is
viewed as rough efforts to satisfy the war mongering diaspora communities world
wide. //

http://www.defence.lk/new.asp?fname=20090218_04




இதன் தொடர்ச்சியில் இன்னொரு வகை அரசியல் சிறுபிள்ளைத்தனத்தைக்கொண்டு,நமது மக்களைக் காப்பதற்கான தெரிவாகத் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இலங்கையைமட்டும் குற்றஞ்சாட்டிவருவதால் உலகத்தின் எந்தவொரு நியாயப்பாடும் அவர்களைக் கவனிக்கவில்லை!தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்களின்மீது உண்மையான அக்கறையிருப்பதானால் வன்னியில் மக்களைப் போரில் பலி கொடுப்பதற்காகவே ஒரு வகை யுத்தக் கருவியாகப் பயன்படுத்தும் யுத்தப் பிரபுகளையும் அம்பலப்படுத்தியாகவேண்டும்.இதைச் சம்பந்தன் மிகக் கவனமாகக் கையாளவதாகக் கருதிப் புலுடா விடுகிறார்.புலிகளதும்,இலங்கை அரசினதும் இன்றைய இந்த யுத்த நடாத்தைக்குள் நிலவும் சூழலின் மதிப்பீடென்ன?தமிழ்த் தேசியக்கூட்டமைப்புத் தம்மைத்தாம் ஏமாத்தலாம்-உலகை?


//"More than 2000 Tamils have been killed while more than 4500 injured in Vanni
due to the unrelenting attacks by the three armed forces of Sri Lanka government
in the recent past,"// -Sampanthan said.


http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28446




"We have clear indications that the LTTE has intensified forcible recruitment of
civilians and that children as young as 14 years old are now being targeted,"
Philippe Duamelle, Unicef's chief in Sri Lanka, said.


http://news.bbc.co.uk/2/hi/south_asia/7893970.stm




இந்த நிலைமையில் அப்பாவி மக்கள் தினமும் செத்து மடியும் தருணங்களை காட்சிப்படுத்தும் இக் கிரிமினல்கள்(இலங்கை மற்றும் புலிகள்-தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு) தமது அரசியல் இருப்புக்காக மக்களைக் கொல்வதில் மிகவும் ஒருமைப்படுகிறார்கள்,என்கின்றேன்!

பிணங்களின் நடுவே அரசியல் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இன்றைய இலங்கையர்களது வாழ்வு நாசமாக்கப்பட்டுள்ளது.இதை நியாயப்படுத்த உலககுக்கு ஒவ்வொரு தரப்பும் நியாய வாதங்களை அடுக்கினாலும்,உலகப் பொது அமைப்புகள் இவர்களை மிகவும் அம்பலப்படுத்துவதில் கணிசமானவெற்றிகளை எட்டியுள்ளன!எனினும்,இலங்கையில் அழியும் மனிதவுயிர்களை இவர்களால் தடுத்து நிறுத்தும் உடனடிக் காரியங்களைச் செய்ய முடியாதுள்ளது.இதைச் சாதகமாகப் பயன்படுத்தும் இலங்கைச் சர்வதிகார மகிந்தா குடும்பம்,பிரபாகரன் குடும்பமும் இலங்கை மக்களது எத்தகைய அழிவிலும் தத்தமது இருப்புக்கானதும்,சொந்த அரசியல் இலாபத்துக்குமாக மக்களைப் படுகொலை செய்வதில்"தேசநலன்" எனும் நியாயத்தை கொச்சைப் படுத்துகிறார்கள்.

இவர்களனைவரினதும் பிரச்சாரப் பீரங்கிகள் உலகம் பூராகவும் மனிதவிரோதப் பக்கங்களை மகத்தான பணியாகத் திட்டமிட்டுப் பரப்புரை செய்கின்றன.அழிகின்ற மக்களது உயிரைத் துச்சமாக மதிக்கும் இவர்கள், மக்களது இத்துயரைக் குறித்து உலகத்தில் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.இந்த முரண்பாட்டை இனங்கண்டு அம்பலப் படுத்தும் பொதுவமைப்புகள் இங்ஙனம் கூறுகின்றனர்:

>>>Laws-of-war violations by one side never justify violations by the other. The government and the LTTE appear to be holding a perverse contest to determine who can show the least concern for civilian protection.<<<-Brad Adams, Asia director at Human Rights Watch.


http://www.hrw.org/en/news/2009/02/03/sri-lanka-disregard-civilian-safety-appalling



Sri Lanka: Government and Tamil Tigers violating laws of war


http://www.unhcr.org/refworld/country,,,,LKA,4562d8cf2,498178c65,0.html



Vorwürfe auf beiden Seiten in Sri Lanka:


Colombo. Tamilische Politiker haben der srilankischen Regierung am Dienstag
vorgeworfen, im Kampf gegen die Rebellenorganisation Befreiungstiger von Tamil
Eelam (LTTE) Zehntausende Zivilpersonen zu gefährden. Mehr als 2000 Unbeteiligte
seien bei den jüngsten Gefechten getötet worden. Die Hilfsorganisation UNICEF
beschuldigte die Rebellen unterdessen, verstärkt die Zwangsrekrutierung von
Kindern zu betreiben. Seit 2003 seien 6000 solcher Fälle registriert worden.Die
Streitkräfte drängten in den vergangenen Monaten die LTTE auf ein Gebiet an der
Nordostküste zurück, in dem nach Schätzungen des Roten Kreuzes auch 250000
Zivilpersonen eingeschlossen sind.(AP/jW)



http://www.jungewelt.de/2009/02-18/008.php




இவற்றைப் பக்கச் சார்பானதெனவும்,உண்மைகள் அற்றதெனவும் இலங்கை யுத்தப்பிரபுகள் இருவரும் நிராகரித்துவருகிறார்கள்.இங்கே,இவர்களது இத்தகைய மக்கள் விரோத அரசியல் பாதை இவர்களது நடாத்தைகளால் தீர்மானிக்கப்பட்டதல்ல.இலங்கையின் பொருளாதாரத்தைக் கைக்குள் வைத்திருக்கும் உடமைவர்க்கத்தின் தெரிவில் நிகழும் இப் படுகொலை அரசியற் பாதைக்குப் பலமாகவிருந்து வழிகாட்டுபவர்கள் அந்நியத் தேசத்து நலன்களை இலங்கைக்குள் திணிக்க முனையும் பெரும் பகாசூரக் கம்பனிகளாகும்.

இலங்கையர்கள் நாம் அனைத்து உரிமைகளையும் இலங்கையின் யுத்தப் பிரபுகளிடம் பறிகொடுத்துக் கொலையாகி வருகிறோம்.இவர்களைத் தண்டிப்பதற்கான வலு மக்களது அமைப்புகளிடம் இல்லை.அத்தகைய அமைப்புகள் உலகம் பூராகவும் இயங்கிடினும் இவர்களால் அழியும் உலக மக்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.பாசிசம் காட்டாட்சி செய்யும் இலங்கைபோன்ற சர்வதிகாரச் சூழலில் பொதுவமைப்புகள் வெறுமனவே ஓலமிடும் நிலையிலேயே பலவீனமான அரசியலைக் கைக்கொள்கின்றன.இந்த நிலையில் இலங்கையினது யுத்தக்கிரிமனல்களையும் அவர்களது எஜமானர்களையும் தண்டிப்பதற்காக இலங்கை மக்கள் நாளாந்தம் உயிர்ப்பலி கொடுத்தபடி இன்னொரு முப்பதாண்டுகாலம் பொறுத்திருக்கவேண்டுமா?

உலக அநுபவங்களின்படி இவ்வுலகத்தைப் புரிவதென்பது நிலவும் வாழ்நிலைகளின்வழியேதாம் சாத்தியமாகிறது.இலங்கையினது இன்றைய வாழ்நிலையில் மக்களிது தெரிவு சாவதென்பதாக இருக்கிறது.இதைத் தடுத்து நிறுத்துவதற்காகவேனும் முதலில் இவ்யுத்தக் கரிமினல்களின் அதிகாரத்தைப் பறிப்பதற்காக இலங்கை மக்கள் யாவரும் யுத்தத்துக்கு எதிராகத் திரண்டெழவேண்டும்.எனினும்,பாழும் இனவாதப் பரப்புரைகள் அவர்களை அதற்குள் மயக்கிய நிலையில் இதை எங்ஙனஞ் சாத்தியப்படுத்துவது?

எனவே, இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்களை அழித்தபடி புலிகளை பூண்டோடு இலங்கை அழிப்பதை எவருமே தடுத்துவிட முடியாது.இதுவே, இனிவரும் காலத்தில் வரலாறாகவும் பதியப்படுப்போகிறது.இங்கே,இன்னுமொன்றும் கூடவே ஊகமாகப் பேசப்படும்.அது,புலிகளது "பயங்கரவாதத்தை"அழிப்பதற்காக இந்தியா தனது பரீட்சார்த்தக் களமாக இலங்கையைப் பயன்படுத்தித் தனது அயலக எதிரிகளையும் மற்றும் உள்நாட்டுத் தீவிரவாத அமைப்புகளையும் ஒடுக்குவதற்கு முனைந்ததெனப் பதியப்படும்.அத்தோடு இந்தியத் தரகு முதலாளியத்தில் பொருளாதார நலன்களை இவற்றுக்குள் மறைப்பதற்கான தெரிவுகளை இந்தியப் புலானாய்வுத்துறை மிக இலகுவாகப் பின்தொடர்ந்து இந்தியத் தரகு முதலாளியக் குடும்பங்களைக் காக்கும்,ஜனநாயகத்தினதும்-காந்தியினதும் பெயரால் மட்டுமல்லக் கூடவே இந்தியப் பாதுக்காப்பு மற்றும் பிராந்திய நலனின் பொருட்டென்றும்!



ப.வி.ஸ்ரீரங்கன்
18.02.2009

Sunday, February 15, 2009

இறுதிச் சமர் எனும் புலிப்பினாமிகளின் போக்குக் காட்டும்...

இலங்கை:இனங்களுக்கிடையிலான
ஐயக்கியமே விடுதலையின் முதற்படி!

இன்று 15.02.09,தீபம் தொலைக்காட்சியில் தமிழர் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.சிவாஜிலிங்கம் சொல்லும் உண்மையற்ற அரசியலின் கருத்துக்களுக்கும் மிக அண்மித்த புலிகளது அரசியல் நகர்வுக்கும் நெருங்கிய தொடர்புகளுண்டு.புலியினது மிக மூடத்தனமான அரசியல் எங்ஙனம் உலகில் அரசியல் ரீதியாகப் புலிகளைத் தோல்வியடைய வைத்ததோ அதே கதையோடு மீளவும் சிவாஜிலிங்கம் கதை புனையும்போது,புலிகளது இந்த அரசியற் தோல்வியை முழு ஈழத் தமிழினமும் பொறுப்பேற்க வேண்டுமென்கிறார்.இஃது, எவ்வளவு கொடுமையானதென்பதை புலிப் பீரங்கிக்கு அங்கீகாரந்தேடுவதிலுள்ள தனது முனைப்பில் தெரிந்தே சிவாஜிலிங்கம் பம்பாமாத்துப் பண்ணுகிறார்.

இணைத்தலைமை நாடுகள் மற்றும் உலக நாடுகள் ஒரு தற்காலிக யுத்த நிறுத்தத்தைச் செய்வதற்கு இலங்கையை வற்புறுத்த வேண்டுமென்கிறார்.இந்த தற்காலிகம் எதுவரை?இதற்கும் மக்களது நலனுக்கும் என்ன சம்பந்தம்?தற்காலிக யுத்த நிறுத்தம் என்பதன் பொருள் மீளவும் தமிழ்பேசும் மக்களை மட்டுமல்ல முழு இலங்கையையும் தொடர்ந்து யுத்தத்துக்குள் நிலைப்படுத்துவதாகும்.இது,இன்னும் பலதமிழர்களின் தலையைக் கொய்தெறிய புலிக்கு அவகாசந்தேடும் ஒரு கபடக்கூற்று!மக்களை இவ்வளவு கொடிய யுத்தத்துக்குள் கட்டிப்போட்ட புலிகளது கடந்தகால அரசியற் தவறை முழுமொத்த தமிழர்களின் தவறென்கிறார் இந்த மக்கள்விரோதி சிவாஜீலிங்கம்!

இதுதாம் நமது அரசியல்-புலிகளது உபயமாக இது எம்மை வேட்டையாடுவதற்குப் பற்பல ரூபங்களில் தமிழ்பேசும் மக்களது நலனாக முகமூடியணிகிறது!இதையும் புலம்பெயர்ந்த மக்களுக்குள் திணிக்கிறது தீபம் தொலைக்காட்சி.அது,தனது சொத்து மதிப்புக்கும்,வருவாய்க்கும் எவர் பங்களிக்கின்றார்களோ அவர்களுக்காக முடிந்தவரையது ஏதோ செய்கிறது.அதனால்,இலவசமாக அது இப்போது நமது வீடுகளுக்குள் கருத்தைக் காவி வருகிறது.இத்தகையவூடகங்களின் பொய்மைகளை உடைப்பதில் கோகர்ணனின் இன்றைய மறுபக்கப் பத்தி எழுத்து இயங்குகிறது.அது குறித்து மேலுஞ் சிலவற்றை நாம் பார்ப்போம்.

மக்களது நலன் என்பது இலங்கை அரசும்,புலிகளும் வன்னியில் சிக்குண்ட மக்களை இடம்பெயர்ந்து சர்வதேசக் கண்காணிப்புடைய இராணுவ-புலி சூனிய வலையத்துக்குள் உள் நுழைய அனுமதித்து, அவர்களது வாழ்வாதாரத் தேவைகளை செய்வதாகும்.இதனூடாக,புலிகளும் இலங்கை அரசும் யுத்தத்தை தொடர்ந்தாலுஞ்சரி இல்லை விட்டாலுஞ்சரி.மக்களது பிரச்சனைகளுக்கும் புலிகளது நலனுக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தப்பாடேயில்லை என்பதை சிவாஜீலிங்கத்தினது குரலில் இனங்காணமுடியும்.புலிகளது இன்றைய போராட்டஞ் சரியானதெனக் கூறும் சிவாஜிலிங்கம், வன்னியில் புலிகளால் மனிதக் கேடயமாகப் பயன்படுத்திக் கொல்லப்படும் மக்களது இழி நிலையை நியாயப்படுத்திவிடுகின்றார்.இவர்களது அரசியலை மிகவும் அம்பலப்படுத்துவதில் திரு.கோகர்ணனின் இக்கட்டுரை மக்களோடு நெருங்கி வருகிறதென்றே நினைக்கிறேன்.

இன்று,வன்னிக்குள் மக்களது தலையில் இலங்கைப்பாசிச அரசின் குண்டுகள்- வீழ்ந்துவெடிக்கும் குண்டுகள் ஈழப் போராட்டத்தைக் குத்தகைக்கெடுத்த தமிழ் ஆளும் வர்கக்கத்தால் உருவாகியதென்பதை அறிவதற்கும்,அதன்மீதான விமர்சனத்தை கிழக்கு மற்றும் வடக்கு புலிகளது இடப்பெயர்வுகளோடும் ஒப்பிட்டு யுத்தத்துக்கு எதிரான போராட்டம் என்றோவுருப்பெற்றிருக்கவேண்டுமென்கிறார் திரு.கோகர்ணன்.தினக்குரலில் அவரது பத்தியை வாசித்தபோது மேற்காணும்தமிழ் அரசியல் வாதிகளினது ஒவ்வவொரு அசைவையும் மிகத் தெளிவாகவே புரியத்தக்கதாக அமைகிறது.இன்றுவரை, புலிக்குப் பின்னால் அரசியல் செய்த சம்பந்தனின் அரசியல் பம்மாத்தை மிக எளிய வரிகளில் கோகர்ணன் அம்பலப்படுத்துகிறார்.


சம்பூரில் வீழ்ந்த குண்டுகளுக்கும்,கிழக்கு மாகாணத்தில் வீழ்ந்த குண்டுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பிரித்தறியும் அரசியலொன்று இருந்தது.அங்கே,வீழ்ந்த குண்டுகளெல்லாம் வெறுங் காடுகளுக்குள் வீழ்ந்ததென்று எண்ணியிருப்பார்கள்.அதனால் யுத்தத்தை நிறுத்துவெனச் சொல்லமுடியாது தந்திரோபாய ரீதியான புலிகளின் பின் வாங்கலுக்கு வியாக்கியானம் கொடுத்து வந்தார்கள்.இப்போது, அதே குண்டுகள் வன்னியைப் பதம் பார்க்கும்போது மிக மூர்க்கமாகக் குரல் கொடுப்பவர்கள் அன்றே இதைச் செய்திருந்தால் போராட்டத்தின் திசையே மாறியிருக்கலாம்.மக்கள் இவ்வளவு அழிவையும் தவிர்த்துப் புலிகளும் தமது போராளிகளைக் காத்து சமாதானமாக ஒரு தீர்வை நோக்கி நகர்ந்திருக்க முடியும்.அன்று, வீராப்போடு பேரங்கள் நடாத்தும் அரசியல்-தாக்குதல் நகர்வை மேற்கொண்ட புலிகள், இறுதிவரையும் மக்களைக் கேடயமாக்கும் அரசியலை வலிந்துருவாக்கினர்.இன்று, தமது இருப்புக்கான அனைத்துவகை அரசியலுக்குள் பிணங்களைக் குறித்து மக்கள் வாழ்வைத் தள்ளியவர்களுக்குக் திரு.கோகர்ணன் எழுதுகிற பத்தி மிகக் காலம் கடந்ததுதாம்.

தமிழ்ச் சமுதாயத்தில் மேலோங்கியிருந்த (வி)தேசியப் பார்வைகள் வெறுமனவே அவர்களாகத் தெரிந்தெடுத்த அரசியற்பார்வையில்லை.இவை, திட்டமிட்டு இயக்கவாத அரசியல் செய்த மிகப்பாதகமான இனவாதக் குறுகிய அரசியல்.இதை மிகக் காலங்கடந்து குறித்துரைப்பது சமுதாயத்தை எவ்வளவு கொடிய துயருக்குள் தள்ளியிருப்பதென்பதை நாம் கண்டுகொள்ளக் கோகர்ணனின் மறுபக்கக் கட்டரையே சான்று.என்றபோதும்,"உண்மைகளை முன்வைத்துக் கடந்த ஒரு தசாப்பத காலத்துக்குமுன்பே பேச வேண்டியதைக் கோகர்ணன் இன்று பேசுவதில் என்ன நடந்தேறப்போகிறது?"எனுங் கேள்விக்குக் கீழ்வரும் தேவைகள் பதிலாகிறது!

இன்றும் மக்களை ஏமாற்றும் இயக்கவாத அரசியலின் எச்சங்கள் புலிகளைச் சுற்றியே அரசியல்-வெகுஜனப் போராட்டங்களைத் தகவமைக்கும்போது,இதிலிருந்து மக்களை விடுவிக்கவேண்டிய பணி இலங்கையிலுள்ள ஒவ்வொரு புத்திஜீவியினதும் கடமை.இதைக் கோகர்ணன் இப்போது பேசுவது அவரது நாணயத்தின்பார்ப்பட்டதெனினும் நமக்கு அழியும் மக்களைக் காப்பதற்கான அரசியலை மையப்படுத்த அவரது தெரிவு சரியானதாகவே இருக்கிறது.


நாம் கடந்த கால் நூற்றாண்டாக இவ்வகை அரசியலை விடாது நடாத்தி வந்திருக்கிறோம்.மக்களது நலனுக்கும் இயக்க நலனுக்கும் எவ் வகையிலும் சம்பந்தங் கிடையாதென்றும், இலங்கையில் "ஈழப்போரை"த்தொடக்கிய இயகங்களின் தெரிவில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை ஆளும் வர்கங்களின் தெரிவினது அடிப்படையிலேயேதாம் இவ் இயக்கங்கள் இயங்குகின்றனவென்றும்,இவைகளால் மக்களது விடுதலை சாத்தியமில்லையென்றும் முன்வைத்து வந்திருக்கிறோம்.அத்தகைய அரசியலைப் புறந்தள்ளிப் புலித் தேசியம் மாற்றுக் கருத்தினது குரல்வளைகளை ஒவ்வொன்றாகத் தறித்தெறிந்தபோது,அவற்றைத் தேசியத்தின் பெயரால்-ஈழத்தின் பெயரால் துரோகம் என்று சொல்லி தம்மைச் தூயவர்களாக இனங்கண்ட தமிழர்கள் இன்று புலியினது அரசியலின் இறுதி விளைவுக்காக இதுவரை கொடுத்த-கொடுக்கும் விலையை இனங்கண்டாக வேண்டும்.

புலிகள் இயக்க இருப்பை முற்று முழுதாகவே மறுத்தொதுக்கி, அவ் இயகத்தின் அரசியலை நீக்கஞ்செய்தாகவேண்டும்.மக்கள் தமது அரசியலைத் தமது தலைமைத்துவத்தினூடாக முன்னெடுக்கும் சூழல் நெருங்குகிறது.இவ்தலைமைத்துவம் வெற்றிடமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.வரலாற்றில் வெற்றிடங்களை மக்கள் எப்போதுமே விட்டவர்களில்லை.எனவே,இலங்கை பூராகவுமான மக்களது உயிர்வாழும் உரிமைக்கானவொரு அரசியற் கோரிக்கை இனவாதக் குறுக்கல்களுக்குள் முடங்கிக்கிடந்தபோது இலட்சம் உயிர்களைப் பறிகொடுத்த அநுபவத்திலிருந்து, இனிமேற் முற்போக்கான புரிதலோடு இலங்கைச் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை இனங்களோடான பரஸ்பர நம்பிக்கை-புரிந்துணர்வுடன் முன்னெடுக்கவேண்டும்.இது, தம்மைத்தாமே நம்பி அரசியல் செய்யும் முன்னெடுப்பாகும்.







தென் கிழக்காசியாவில் ஒப்பீட்டளவில் வளங்களற்ற இலங்கைத் தேசத்தில் வெறுமனவேயான பணப்பயிர்களை நம்பித் தனித் தேசவுருவாக்கம் என்ற பொய்க் கோசம் வெற்றிபெறுவதற்கான சகல சூழலும் இப்போது தொலைந்துவிட்டென.இனிமேல் நாம்,எங்ஙனம் நமது அரசியல் நடாத்தைகளைத் தகவமைக்கவேண்டுமென கோகர்ணன் குறைந்தபட்சமாவது நேர்மையோடு முன்வைத்த இந்தத் தருணத்தில் நாம் முன் நோக்கி நகரவேண்டும்.

இறுதிச் சமர் எனும் புலிப்பினாமிகளின் போக்குக் காட்டும் குறுகிய நோக்கங்கொண்ட பரப்புரை மற்றும் தீக்குளிப்பு-தற்கொலைக் குண்டு அரசியலைவிட்டும்,புலிப் பிரமைகளைவிட்டும் புலம்பெயர் மக்கள் தமது தன்னெழிச்சியான போராட்டங்களை இலங்கை அரசின் மக்கள்விரோத யுத்தத்துக்கும்,புலிகளது குறுந்தேசியவாத இயக்க இருப்புக்கான அழிவு யுத்தத் திணிப்புக்கும் எதிராகவும் முன்னெடுக்கவேண்டும்.இங்கே,மீளவும் புலிகளது முகவர்கள் தமது கையாலாகாத அரசியலோடு தமது பொருளாதார நலன்களை அடைய முனையும் ஒவ்வொரு தருணங்களும் தேசியத்தையும்,தமிழர்கள் உரிமையென்பதையும் தமது வழமையான பாணியில் விளக்க முற்படுவதைத் தடுத்து, அவர்களது எந்த ஏமாற்று வித்தைகளையும் நிராகரித்தாகவேண்டும்.புலம் பெயர் மக்களை மிகவும் கீழானமுறைமைகளில் தமக்கிசைவாக நடாத்த முனையும் இப் புலிகளது அரசியல், இதுவரை எமது மக்களது அழிவுக்குக் காரணமான உலகத்தோடும் இலங்கை அரசியல் கட்சிகளோடும் கொண்ட உறவினது வர்க்க நலனை நாம் புரிந்துகொள்வது அவசியம்.இது, குறித்து நாம் என்ன செய்தாகவேண்டுமென்ற ஆரம்பப் புரிதல்களைக் கோகர்ணன் மிக யதார்த்தமாகச் சொல்கிறார்.

மாற்றுக் கருத்துக்குப் பழக்கப்படாத தமிழ்ச் சமுதாயத்தில் மகத்தான மாற்றங்களோடு மனித்தத்தைக் கட்டமைக்கவேண்டிய பணி விரிந்துகிடக்கிறது.இவ்வளவு காலமும் குறுந்தேசிய வெறியர்களாகவும்,புலித் தேசியத்துக்கு-துரோகியெனச் சொல்லிச் செய்த கொலைகளுக்கு ஒப்புதல் கொடுப்பவர்களுமாகவிருந்த நாம், இலங்கையிலுள்ள பிறச் சிறுபான்மை இனங்களைப் பூண்டோடு அடித்து வெருட்டிய அரசியலுக்கு"அவன் தொப்பி பிரட்டி"இவன் வடக்கத்தையான்"என நியாயஞ் சொல்லி எமது குடியை நாமே கெடுத்த கடந்தகாலக் கொடு நிலையை விட்டொதுங்கி,இலங்கையில் அனைத்து இனங்களுடனும் நாம் ஐயக்கியப்படவேண்டும்.இந்த ஐயக்கியம் ஒருகிணைந்த இலங்கையில் அழிந்த ஜனநாயகச் சூழலையாவது குறைந்தபட்சம் மீட்டெடுக்கப்பாடுபட்டாகவேண்டும்.இவ் ஜனநாயகச் சூழலின்றி இலங்கைப் பாசிச அரச-இயக்க அடவாடித்தனமான அரசியலையும்,அந்நிய நலன்களின் வேட்டைக்கான கொடிய இராணுவவாத அரசியற் போக்கையும் உடைக்க முடியாது.

இலங்கையில் கடந்த முப்பதாண்டுகளாகப் புலிகளும் அவர்களது எஜமானர்களுஞ் செய்த அரசியல் படுகொலைகள் ஏராளம்.இவ் படுகொலை அரசியலூடாக நமது மக்களின் அனைத்துவகைப் படைப்பாற்றலையுஞ் சிதைத்து,அவர்களது வாழ்விடங்களிலிருந்தே துரத்தி அகதிகளாக்கியதைத்தவிரப் புலியினது தேசியம் எந்த உரிமையையும் நமக்கு வென்று தரவில்லை.தமிழர் தேசியக் கூட்டமைப்பு,தமிழீழ விடுதலைப் புலிகள் என்று "எல்லாந் தமிழ்,எதிலுந் தமிழென" எம்மைப் படுகொலை செய்த இந்தப் பாசிஸ்டுக்களை நம்பி, நம்மை நாமே அனைத்து வகையிலும் அடிமைப்படுத்தியதை இனியும் தொடரமுடியாது.


எமது மக்கள் படும்-பட்ட துன்பங்கள் போதும்.இந்தியாவோ அல்லது எந்த வெளிநாடுகளோ நமக்கு விடுதலையைப்பெற்றுத் தந்துவிடமுடியாது.விடுதலைக்கான ஆரம்பமே இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஐயக்கியம் என்பதே எனது தெளிவான புரிதல்.இலங்கையில் சாவு அரசியலூடாகத் தத்தமது இருப்பைக் கட்டியமைத்தவர்கள் அதையே மீளவும் தொடர்ந்து இந்தச் சூழலிலும் தம்மைக் காக்க முனைகின்றனர்.அவர்களை மிகம் தெளிவான புரிதலூடாக நிராகரித்து நாம் இலங்கையில் குற்றுயிரில் ஊசாலாடும் மக்களது நலன்களையும்,ஜனநாயகத்தையுங் காக்கின்றபோது மட்டுமேதாம் அரசியல் ரீதியாக ஓரளவு வெற்றிபெறமுடியும்.இதற்கான முதற் தெரிவும்,நிபந்தனையும் இனங்களுக்கிடையிலானவுறுவைக் கெடுக்கும் இனவாதப் பரப்புரைகளை,காட்சித் தொகுப்புகளை அடியோடு மறுத்தொதுக்கி, கடந்த முப்பாதாண்டுகளுக்குமுன் சிங்கள மக்கள் மத்தியில் உறவாடிப் பிழைத்த நமது மக்களையும் எண்ணிப்பார்த்து, சிங்கள மக்களோ அன்றி, நமோ அல்ல இனவாதிகள் என்றும்,ஆளும் வர்க்கங்கள் நமக்குள் இருந்து தமது நலனுக்காக இவற்றைச் செய்து நம்மைப் பலிகொடுத்தார்கள் என்பதையும் நாம் புரிந்தாகவேண்டும்.


கட்சி-இயக்க நலனுக்காகத் தமிழ்-சிங்கள ஆளும் வர்க்கங்கள் தத்தமது முரண்பாடுகளை உழைக்கும் மக்களது தயவில் வென்றெடுக்க முனைந்தபோது இலங்கை இரத்த ஆறாக ஓடுகிறதென்பதை முதலில் புரிந்தாகவேண்டும்.இன்று,பல இலட்சம் மக்களை இலங்கை இழந்தவிட்டது.இலங்கையின் அனைத்து இனங்களும் இக்கொடிய போரினால் பாதிக்கப்பட்டுவிட்டது.மலையக மக்களானாலுஞ்சரி அல்லது இஸ்லாமிய மக்களாலுஞ்சரி இலங்கையில் பாதிப்படையாமல் சகல உரிமையுடனுமாவிருக்கிறார்கள்?இதைச் சிவாஜிலிங்கம்போன்ற புலிப்பினாமிகள் புரிந்தா அரசியல் பேசுகிறார்கள்?இவர்களுக்குப் புலிகளை எப்படியாவது காப்பதென்பது அவசியம்.ஏனெனில்,அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்போடும் சம்பந்தப்பட்டதால் மேலும் இனவாதிகளாகவும்,பாசிஸ்டுக்களுமாகச் சீரழிந்துபோகிறார்கள்.இவர்களே மேலும் மக்களைப் பலிகொடுக்கும் தற்காலிக யுத்த நிறுத்தத்துக்காக குரல் கொடுக்கிறார்கள்.நாம் இவர்களை அம்பலப்படுத்தி, இலங்கையில் இனங்களுக்கிடையிலான நிரந்தரமான சமாதான சக வாழ்வுக்காகக் குரல்கொடுப்பது அவசியம்!

இலங்கையிலுள்ள அனைத்துச் சிறுபான்மை இனங்களது உரிமைகளைக் குறித்து நாம் எப்போதாவது யோசித்தோமா?இலங்கை மக்கள் இனங்கள் யாவும் ஆளுஞ் சிங்கள-தமிழ் வர்க்கங்களாலும் அவர்களது அந்நிய எஜமானர்களாலும் மிகவும் கேவலாமாக ஒடுக்கப்பட்டே வருகிறார்கள்.இதை இலங்கையில் எந்தவொரு இனமும் தனித்து நின்று போராடித் தடுத்துவிட முடியாது.இதுவே இன்றைய அழிவினது உண்மை!எனவே,நாம் இலங்கைக்குள் எமது சகோதரர்களுடன் ஐயக்கியமாகும் முதற்படியைத் தாண்டியாகவேண்டும்.இங்கே,"சிங்களவன்,தமிழன்,துலுக்கன்,வடக்கத்தையான்"என்ற கொலைக்காரக் கோசங்களுக்கு இடமில்லை.

நாம் மற்றைய இனங்களோடு நமது நட்புக் கரங்களைப் பிணைக்கும்போதுதாம் மேற்குலகத்தில் அடிமையாகக் கிடக்கும் இந்த அகதி வாழ்வைத் தொலைக்கமுடியும்.அந்நிய தேசங்களில் அடிமையாகக் கிடந்து மூன்று நேரம் உண்பதைவிட, எமது தாய் நாட்டில் அனைவரும் ஐயக்கியத்துடன்,அமைதியாக வாழ்ந்து ஒரு நேரக்கஞ்சியைப் பகிர்ந்துண்ணுவதே விடுதலையாகும்.

இதைச் சாத்தியமாக்க, நாம் இலங்கையில் யுத்தத்தை நடாத்தும் யுத்தப் பிரபுகளான மகிந்தாவையும்,பிரபாகரனையும் நிரகாரிப்பதால் எல்லாம் நடந்தேறிவிடுமென்பதல்ல!

இதன் உண்மையான அர்த்தம் இலங்கையில் நிலவும் பொருளாதார ஏற்றவிறங்கங்களைக் களையும் முன்னெடுப்போடு இலங்கைக் கட்சி-இயக்க ஆதிக்கத்தைவிட்டொழிக்க இலங்கை தொழிலாளர்கள் எல்லோரும் மதம்,மொழிகடந்து இணைவதென்பதாகும்.இதைச் சாத்தியப்படுத்த இலங்கைக்கு இப்போது அவசியமானது இந்த யுத்தக் கிரிமினல்களை நிராகரித்து, மக்களோடு மக்களாக இலங்கை இனங்கள் யாவும் இணைவதே.இதைக் கடந்த எந்த முன் நிபந்தனையும் இப்போது இலங்கைகுள் இல்லை!


திரு.கோகர்ணனின் இவ்வாரப் பத்தி இதன் தொடக்கத்துக்கான சில புள்ளியைச் சுட்டுகிறது.இதை இங்கே சென்று வாசிக்கவும்.


ப.வி.ஸ்ரீரங்கன்.
15.02.2009

Saturday, February 14, 2009

புலி-தமிழ் அதிகார வர்க்கம் தோல்வியடையும் தருணங்களில்...

புலன்(ம்)பெயர்ந்த புலிகளால்
ஐரோப்பிய மண்ணும் கொலைக்களமாகிறது.



"புலிவால்களைச் சுரண்டுவதால் அராஜகம்
ஒழிந்துவிடாது,எனவே,புலிகளது அராஜகத்தின்மீதும்,அதிகாரத்தின்மீதும் கேள்விகளை
எழுப்புவோம்,அவர்களது "ஈழப்போராட்டத்தில்"இதுவரைத் துரோகி சொல்லிக்
கொல்லப்பட்டவர்களைக் குறித்துக் கேள்வியெழுப்வோம்,இலங்கையில் சிங்களச் சமுதாயத்தோடு
சேர்ந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் வாழ்நிலைகளைப் புலிகளது கட்டுப்பாட்டில்
வாழ்ந்த வன்னிமக்களின் வாழ்நிலையோடு உரைத்துப் பார்ப்போம்.அங்ஙனம் பார்க்குங்கால்
சிங்களவர்களுக்கு நாம் அடிமை என்பதன் கருத்து நிலையைத் தமிழ்ச் சமுதாயத்துள் ஆண்ட
பரம்பரைக்குள் இனங்காண முடியும்.அது,புலிகளுக்குள்ளும் வேரோடி விழுதெறிந்து
கொலைகளாக அரங்கேறியதை உய்துணர வாய்ப்பளிக்கும்."

கேடுகெட்ட தமிழ்த் தேசியம்.இதுவரை காலமும் தாங்கள் சொல்வதே "தேசியம்-விடுதலை" என்ற அடக்குமுறை அராஜகத்தால் எத்தனையோ போராளிகளைத் துரோகி சொல்லிப் போட்டுத்தள்ளிய புலிகள், இன்றுவரை தமிழ்மக்களின் நலனில் அக்கறை கொள்ளாது இருப்பதை உறுதிப்படுத்துபவன் இந்தச் சாத்திரி என்ற மூத்திரம்-அலுக்கோசு-அரைப்பனி-நரகல்!ஒரு வார்த்தை ஒழுங்காக எழுதுமுடியாத தரித்திரம்-ஊதாரி-உலக்கை ஊரார் குடும்பங்களுக்கு ஆப்பு அடிக்கும் எழுத்தை ஐரோப்பிய அவலமென எழுதத் தொடங்கி இன்று, வக்கிரமானவற்றைத் தொடக்கி முடிக்கிறான்.மற்றவர்களின் மனைவிமாருக்கு முடிச்சுப்போடுபவனின் மனைவியையும் அவன் தங்கையையும் படுக்கைக்கு அழைப்பது பற்றி அவனே பாடம் நடாத்துவதில் முன்னோடி...

தமிழ் பேசும் மக்களின் நியாயமான சுய நிர்ணய விடுதலையை மரணப்படுக்கைக்கு தள்ளிய புலிகளின் கொலைகள், உலகப் பிரசித்தமானது.இவர்களால் மாற்றியக்கங்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைவெறித் தொடர்ச்சியின் இன்னொரு வகையான அராஜகமே இன்றைய சேறடிப்புகள்-செல்லரித்துப்போன கோணங்கித்தனமான குதர்க்கங்கள்.இந்த மக்கள் விரோதிகள் எத்தனையெத்தனை இளம் போராளிகளைத் துரோகி சொல்லிப் போட்டுத் தள்ளினார்கள்?இவர்களைத் தவிர அனைத்து இயக்கங்களும் "துரோகிகளான"கதை நாம் அனைவரும் அறிந்ததே!இந்தக் கேவலமான சதியை இந்திய உளவுப்படையான ரோவ் மூலம் வளர்த்தெடுக்கப்பட்ட புலிகளின் முன்னணித் தலைவர்கள்-ஆலோசகர்கள் செய்து முடித்தபோது, நமது தேசத்தின் மிகப் பெரும் செல்வமான மனிதவளம் அழித்தொழிக்கப்பட்டது.இதை அறிவானா இந்தச் சாத்திரி என்ற சைக்கோ?பிறகெதற்கடா "புலிப்பிராண்டலும் சூனாவும் காட்டுகிறாய் நாயே?-பொறுக்கி!

இன்று, இதே புரளியோடு புலிப்பினாமிகள் மாற்றுக் குரலை நசித்திடவும்,தம்மைத் தவிர வேறொரு அமைப்புப் பலம் பெற்றுவிடக் கூடாதென்ற பதவி-அதிகார வெறியால் தமிழ் மக்களில் கணிசமானவர்களைத் "துரோகி"யென்றழைத்து, எதிரிக்கு நமது விடுதலையை விலைபேசுவது மிகப் பெரும் சமூகக் குற்றமாகும்.இது நமது மக்களை இன்னும் அடிமை கொள்ளமுனையும்,இந்திய மற்றும் உலக-இலங்கைச் சிங்களக் கொடுங்கோன்மை அரசுகளுக்கு பலமான-சாதகமான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதாகவே நாம் இனம் காணவேண்டும்.இன்றைய வன்னி யுத்தத்துக்குப் பின்னான புலி இருப்புக்கான அரசியல்-போராட்டத்தில் புலிகளினது தெரிவு மக்களை வேட்டையாடுவதில் முடிந்தவரை பிணங்களை வீழ்த்துவதே.அது,தீக்குஞ் சரி,குண்டுக்குஞ்சரி பொதுத்தன்மை இரண்டுக்கும் பிணங்களென்பதே!இத்தகைய புலிக்கு வால்பிடிக்கும் நாய்கள், மக்களது எந்தப் பிரச்சனையில் மன சுத்தியோடு காரியமாற்றினார்கள்.அனைத்தையும் இயக்கவாதத் தன்மையுடன் அணுகும் எருமைகள் யுத்தப் பிரபு பிரபாகரனுக்காக மக்களையே சாவடிப்பதற்கு ஈழவிடுதலையின் பெயரால் நியாயம் தேடுவதில் வன்னியில் சாகும் ஒவ்வொரு அப்பாவியின் பிணத்தையும் புசிக்கின்றவர்களாகவே இருக்கின்றனர்.



கருத்தியல் தளத்தில் ஒரு சிறு பொறிகூட மேலெழும்புவதை இந்தத் (வி)தேசியவாதச் சகதிகள் பொறுத்துக்கொள்ள முடியாது, இஞ்சி தின்ற குரங்காய் ஓடியாடித் திரிகிறார்கள்.தமது அதிகாரப் பீடத்தைத் தொடர்ந்து தக்க வைப்பதற்காக இவர்கள் செய்த-செய்யும் கொலைகளின்பின்னே கோரமாகக் கொட்டப்பட்ட அராஜகக் கருத்தியல்கள் நமது உரிமைகளுக்கு ஆப்பு வைத்த அதே பாணியில் தொடர்ந்து செயற்படும் புலிகளின் முகவர்கள்,இன்னும் எத்தனை பொய்களை உரைத்திடினும் ஒடுக்கப்படும் மக்கள் தமது அதிகாரத்துக்கான நியாயத்தை உயர்த்திப் பிடித்தபடி போர்க்கொடி தூக்குவது தொடரவே செய்யும்.


>>Civilians not allowed to leave << //"When we tried to leave, the LTTE didn't allow civilians to leave and said only we can leave," Sister Mary Colostica, a 74-year-old Catholic nun told Reuters from a hospital in Trincomalee, where she and the others were taken by the Red Cross. "So we stayed back with the civilians," she said.


Worse was to come - "At least 10 to 15 people die a day and no one is there to bury them," she said. "The LTTE fired from close to civilians. We had objected, but that didn't work." She is now being treated for shrapnel wounds.

"When we tried to escape with civilians, the LTTE fired at me. I got shot in my leg," Sister Louise, another Catholic nun was quoted on al-Jazeera.


"My wife and child got killed in the shooting by the rebels," 23-year-old Selvadorai Thavakumar from Killinochchi, another of the evacuees to reach Trincomalee told the Associated Press.
Others described how Tigers fired from behind at civilians moving towards army lines waving white flags at Suthanthirapuram.

The civilian death toll in the recent fighting has reached close to 100 going by figures released by the UN and ICRC. On February 9, 16 patients had died at Putumattalan, the ICRC said. The military said that 19 others had died on the same day while trying to cross the frontlines at Visvamadhu. The army said that the Tigers had shot at the fleeing civilians.

The Tigers have rejected that they shot the civilians, but no such denial has come on the suicide attack. Pro-Tiger websites like TamilNet have quoted Tigers as saying that makeshift medical facilities and the no-fire zone have come under shelling killing hundreds. //-
http://www.thesundayleader.lk/20090215/Defence.HTM


ஒடுக்கு முறைகளுக்கெதிரான மனிதச் செயற்பாடானது எப்பவும் தனிநபர் சுதந்திரத்தைத் தூண்டியபடியேதான் நகர்வது.கடந்த காலத்தில் எத்தனையெத்தனை கொலைகள்தான்"துரோகி"சொல்லி நடந்தேறியது?இருந்தும் மக்களின் குரல்களை அடக்க முடிந்ததா?

இன்று, இதே மக்களைச் சிங்கள அரசுக்குக் காட்டிக்கொடுத்துக் கொன்று குவிக்க வக்காலத்துவாங்கும் புலிவால்களும்-புலியும் மக்களது நலனைக் குறித்துப்பேசுவதென்பது தமது நலன் என்பதாகவே இதுவரை காணத்தக்கது.வன்னிக்குள் வாழும் அப்பாவி மக்களையும் அவர்களது குழந்தைகளையும் வலுகட்டாயமாக போராடத்தோடு இணைத்தும், அவர்களது குழந்தைகளை கட்டாயமாகக் கடத்தியும் களத்தில் பலியிட்டபடி"வன்னியில் உள்ள மக்களில் கணிசமானோர் புலிகளது பெற்றோரும்,உறவினரும்தான்"என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துப் பிணங்களை அரசியலாக்கும் தந்திரத்தோடு, புலி இயக்க நலன் அரசியல் செய்வதில் இந்தப் புலிவால்கள் தொடந்து மும்மரமாக இயங்குகிறார்கள்.இதற்காக வன்னியில் சாகும் மக்களது இந்த நிலைக்குத் தாமே காரணமென்பதை மறைத்துச் சிங்கள மக்கள்மீது வெறுப்பைக்கொட்டி இன வாதத்தைத் திட்டமிட்டுப் புலம் பெயர் மண்ணில் விதைக்கிறார்கள்.இத்தகைய விரோதிகளை வெறுத்தொதுக்குவதற்குள் வன்னியிலுள்ள கணிசமான மக்களை புலிகள் சிங்கள இராணுவத்தின் மூலமோ அல்லது தமது துப்பாக்கி-குண்டுகள்மூலமோ கொன்று வெளியுலகுக்குப் படம் காட்டிவிடுவார்கள்.இஃதிப்போது,தொடர்கதையாகத் தினமும் நடந்தேறுவதை உலகம் சிலவருடங்களுக்கு முன்னமே அறியும்.

மக்களின்மீதும்,அவர்களின் நலன்கள்மீதும் அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்த முனையும் புலி-தமிழ் அதிகார வர்க்கம் தோல்வியடையும் தருணங்களில்,அந்த மக்களையே"துரோகி"என அழைத்து ஒடுக்கும் சூழ்நிலைகள், ஏலவே பற்பல நாடுகளின் சிறுபான்மை-பெரும்பான்மை இனங்களுக்குள் நடந்தேறியபோதும் புலிகளினது அரசியல்-அராஜகமே நம்மை இன்னும் கிலிகொள்ள வைப்பதாகும்.இவர்கள், தமிழ்பேசும் மக்களின் சிங்கள ஆளும்வர்க்க எதிரியைத் தொடர்ந்து நண்பராகவும்,எதிரியாகவும் சித்தரித்துத் தமது நலன்களைப் பெறுவதற்காகச் செய்யும் போராட்டத்துள் முழுமொத்த மக்களையும் எதிர் நிலைக்குத்தள்ளித் தமது கொலைக் கரத்தைத்"தேசிய விடுதலை"சொல்லி மறைப்பதற்கெடுக்கும் எல்லா வகைக் காரணிகளும் தமிழ்பேசும் மக்களுக்கே எதிரானதாகத் திரும்புகிறது.இன்றிவர்கள் செய்யும் பிரச்சாரத்துள் மலினப்படுத்தப்பட்ட இழி அரசியல் கொலைகளாக மாறுகிறது.இக்கொலைகளுக்கு தியாகம்-துரோகம் சொல்லி மக்கள் மத்தியில் நியாயப்படுத்தும்போது சாதாரண மக்களும் புலி சொல்லும் நியாயத்தை நம்பிவிடுவதாகப் புலி இறுமாந்திருக்கிறது.இதன் தொடர்ச்சியில் அதன் அழிவு ஆரம்பமாகி, இன்று பூண்டோடு துடைத்தெறியப்படுகிறது.இதையிட்டெவர் மனம் வருந்தவேண்டும்?அராஜகத்தின் முடிவு மக்களுக்கு விடிவைத் தராதுவிட்டாலும் கொலைகள் வீழ்வதைத் தடுத்துவிடும்.இதுவே, அவசியமாக நமக்குள் இருப்பதால் முதலில் எது அவசியமோ அதை துரிதப்படுத்தவது அவசியத்திலும் அவசியமாகிறது.மக்கள் படையோ,புரட்சிகர கட்சியோ புலிகள் அல்ல.எனவே,ஒரு மாபியாக் குழு வீழ்வதையொட்டி எவரும் புலம்பத் தேவையில்லை.இந்த அமைப்பினது தலைவனே அடிமட்டப் படைகளை அம்போவெனவிட்டு எங்கோ மறைந்த நிலையில், அதன் "மக்கள் போராட்டம்" நன்றாகவே மக்களுக்குப் புரிந்துவிட்டது.

அன்று யாழ்ப்பாணத்திலிருந்த முழு மொத்த இஸ்லாமிய மக்களையே தமிழர்களுக்கு எதிரிகள்-சிங்களக் கைக்கூலிகளென வர்ணித்து,அவர்களின் பூர்வீக யாழ்மண்ணிலிருந்து வதைத்து வெருட்டியடித்த புலிகள்,இப்போது அதே கதையோடு மாற்றுக் கருத்தாளர்கள்-இயக்கங்கள்-கட்சிகள் இருப்போடு விளையாடுகிறார்கள்.இதற்காக,வன்னி யுத்தத்துக்குள் சிக்குண்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் பத்திரிகைகளை-இலக்கியகர்த்தாக்களை,மனித மேம்பாட்டாளர்களைச் சிங்கள இனவாத அரசின் கைக்கூலியாக வர்ணிக்கும் கயமையான அரசியலோடு, முழுமொத்தத் தமிழினத்துக்கே ஆப்பு வைத்துத் தமது அரசியல் ஆதிக்கத்தை-ஏக பிரதிநித்துவத்தை நிலைநாட்ட முனைகிறார்கள்.இதற்காக எவரையும் "துரோகி,கைக்கூலி"என்ற மிகக் கொடுரமான கருத்தியல் ஒடுக்குமுறைக்கள் தள்ளி,அவர்களை தொலைத்துக்கட்டுவதற்காக முனைகிறார்கள்.இதற்காகப் புலிகள்போடும் எச்சிலை உறிஞ்சும் சாத்திரிகள்,பூசாரிகள்,தேவன்கள் கட்டும் மடத்தனமான கருத்துக்கள் மிகவும் மலினப்பட்ட புலியின் நெட்டூரம் நிறைந்த அராஜகத்தையே நிலை நாட்டுகிறது.இது, புலம் பெயர் சூழலில் மிகவும் ஆபத்தானது.மிகப் பெரும் அராஜகச் சூழலும்,கொலைக் கரமும்,மாற்றுக் கருத்துகளின் குரல்வளையை நெரிக்க முனையும் தருணமாகவே பார்க்கப்பட வேண்டும்.

இத்தகையவொரு வலிய-கொடிய அடக்குமுறை தமிழ் பேசும் மக்களின் உரிமையைச் சொல்லி அரங்கேறுகிற சந்தர்ப்பங்களில்,இன்னும் அதிகமான அப்பாவி மக்களின் உயிர்கள்"துரோகி"சொல்லிப் பறிக்கப்படும் அபாயம் நெருங்குகிறது.இதை ஏலவே செய்து இதுவரைத் தமது ஏகத் தலைமையைத் தக்க வைத்த புலிகள்,இனிமேலும் அதைத் தொடரவே முனைவர்.அதன் தொடர்ச்சியாகப் புலிகளின் பினாமிகளால், ஜனநாயக ரீதியாகச் செயற்படும் அமைப்புகளுக்கு அச்சுறுத்தல்-சேறடித்தல் முதல்கட்டமாக நடாத்தப்பட்டு,மக்களை மூளைச் சலவை செய்து,தாம் செய்யப்போகும் கொலைகளுக்கு மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் வராதிருப்பதற்கான முன்னெடுப்பே இந்தச் சாத்திரி,பூசாரிகள்,தேவன்கள் அள்ளிப் போடும் அவதூறுகள் என்பதில் நாம் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும்.

இது,நமது குரல்வளையைமட்டும் நெரிப்பதில்லை.தமிழ் பேசும் முழு மொத்த மக்களையும் அடிமைப்படுத்த முனையும் சிங்கள இனவாத மற்றும் உலக அரசுகளுக்காக இவர்கள் கூலிக்குக் கொலை செய்யும் அமைப்பாகச் சிதைந்ததையே காட்டுகிறது.இத்தகைய அரசியலை விளங்குவதற்கு ரெலோ அமைப்புமீதும் மற்றும் ஏனைய தோழமைக் குழுக்கள்மீதும் புலிகள் நடாத்திய கொலைவெறியே சாட்சியாகும்.பல் வகை இயக்கங்கள் ஒன்றிணைந்து போராடும்போது,மக்களின் உரிமைகளைச் சிங்கள இனவாத அரசு ஏமாற்றிவிட முடியாது.ஆதலால்,இத்தகைய நோக்கிலிருந்து தமிழ்பேசும் மக்களையும்,அவர்களது அமைப்புக்களையும் நரவேட்டையாடும் ஒரு அமைப்பாகப் புலிகளை அன்னிய நலன்கள் வளர்தெடுத்து,இன்றுவரையும் அமைப்பு ரீதியாகவும்,இராணுவரீதியாகவும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உலாவவிட்டிருந்தார்கள்.இப்போது, இந்த ஏவற் பிராணிகளை வேட்டையாடும் வன்னி யுத்தத்தில், தமது இருப்புக்காக மக்களின் குரல்வளையைக் கடிக்கும் இந்தப் பாசிசப்புலி, ஐரோப்பிய மண்ணிலுள்ள தமது உறுப்பினர்களைவைத்து மேலும் கொலைகளைகளைத் திட்டமிட்டு நடாத்தப்போகிறது.

இங்கே, பற்பல தளங்களில்,தீக்குளிப்பு,சுட்டுக்கொல்லுதலெனும் வடிவங்களில்(ஏலவே ஈழமுரசுப் பத்திரிகை ஆசிரியர் கஜன் மற்றும் நாதன் போன்ற தமது பிரமுகர்களையே கோஷ்டிப் பேராத்தால் கொன்றொழித்த புலிகள்-சபாலிங்கத்தை வேட்டையாடிய புலிகள் இதைச் செய்துவிடுவார்கள்) கொலைகள் வீழ்ந்துவிடும்.இவற்றை நாம் தேசத்தினதும்,தேசியத்தினதும் பெயரால் மௌனமாக அங்கீகரிக்கும்போது புலிகளது அழிவோடு கணிசமான மக்களையும் புலிகள் அழிப்பதற்கு உடந்தையாகவே இருந்துவிடுவோம்.இது, மனித மறுப்புக்கு உடந்தையாவதைமட்டுமல்ல மக்களது உரிமைகளை உலகுக்குத் தாரவார்த்த புலிகளது வரலாற்றுத் தவறுகளைத் நாமே பொறுப்பெடுப்பதாகவும் இந்த அங்கீகரிப்புக்கு நேர்ந்துவிடும்.

இதனால் புலிகளும் அதன் வால்களும் தமிழ் பேசும் மக்களின் எந்த நியாயமான குரலையும்"துரோகி" என்றே குரைத்துக் குதறும் சூழலைப் புலம்பெயர் மண்ணிலும் உருவாக்கும்.இந்தக் குரைப்புக்கு சாத்திரிகளோ அல்லது பூசாரிகளோ அன்றி தேவன்களோ தலைமை தாங்குவதில்லை.புலிகளே நேரடியாக இவர்களைப் பயிற்றுவித்து வருகிறார்கள்.இது குறித்து நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.


"ஆயுதங்களைவிட ஆபத்தானது"துரோகி"என்ற கருத்தியல் தளமாகும்!"


ப.வி.ஸ்ரீரங்கன்

Friday, February 13, 2009

இது,புலியினது இருப்புக்காகச் செய்யப்படும் கொலையே!

முருகதாசன்: சுவிஸ்சர்லாந்து-ஜெனிவாவில் கரும்புலித் தீக்குளிப்பு!



"ஒரு தமிழன்-ஒரு சிங்களவன் இருக்கும்வரை எஜமான விசுவாசம்
இருக்கும்-யுத்தம் நடக்கும்?தீக் குளிப்பு ஜெனிவாவரை ஓங்கும்,ஊரர் பிள்ளைகள்
உயிரோடு பிரபாகரன் அரசியல் ஈழத்தை விடுவிக்கப்போகிறது-நம்புங்கள் நலமடித்த
தமிழர்களே!"

இன்றைய யுத்த முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன.இங்கே, மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும்,யுத்தத்துள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது.அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் புலிகளுக்கும் இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது.நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள், தம் முன் விரிந்து கிடக்கும் இந்த யுத்த முனைப்பைக் கண்டு, தம்மைத்தாமே நொந்து சாகிறார்கள்!புலிகள் தம்மைக்காப்பதற்கான இறுதி முயற்சியாக மக்களைப் பலிகொடுப்பதில் தமது இருப்புக்கான அனைத்து வகைப் பிரச்சாரங்களையும் செய்து மக்களது குருதியில் நீந்துகிறார்கள்-ஊரார் குழந்தைகளைத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள்!இதையும் புலம் பெயர் ஊடகங்கள் ஊக்கப்படுத்திப் புலியின் நாசகார அரசியலை தமிழீழ விடுதலையின் பெயரால் அங்கீகரிக்கிறார்கள். இவர்களை வரலாறு தண்டிக்கும்!

வன்னியெங்கும் மக்களின் உடல்கள் சதைத் துண்டுகளாகச் சிதறுகிறது.அதைத் தத்தமது அரசியலுக்கேற்றபடி புலிகளும்,இலங்கை அரசும் பயன்படுத்துகிறது.இதையும் முழுவுலகமும் பார்த்து வருகிறது-நாமும் கண்ணுற்று நொந்துகொள்வதற்காக G-TV வன்னி மக்களின் மரணவோலத்தை புலம் பெயர் மண்ணுக்கு எடுத்துவருகிறது.அது, தமது எஜமானர்களின் அரசியலை முன்னெடுப்பதில் மிகக் கவனமாகக் காரியமாற்றுகிறது.அழிந்துபோகும் மனிதர்களின் அந்தச் சிலநிமிட உயிர்வாழும் ஆசையின் ஓலம் இங்கே அரசியலாகிறது!அற்ப மனிதர்களின் அழுகுரல் ஒருசில மனிதர்களின் பெருவிருப்புக்குத் தோதாக அரசியலாகிறது.


நேற்று, ஜெனிவாவில் தீயிட்டு மாண்டுபோன முருகதாசனின் மரணமென்பது எங்ஙனஞ் சாத்தியப்படுத்தப்பட்டது?


அவரது மரணத்துள் கண்டுகொள்ளதக்க அரசியல் புலியினது இருப்போடு, புலிகளினது கரும்புலித் தீக்குளிப்பாகப் பார்க்கப்படமுடியாதா?


(முருகதாசனின் இப்படம் தமிழ்நெற்றிலிருந்து எடுக்கப்பட்டது.எனினும்,இப்படத்தை தமிழ்நெற் இப்போது கழட்டிவிட்டது.இது ஏனெனப் புரியவில்லை!)


இன்றைய புலம்பெயர் தமிழர்கள், ஈழத்து உறவுகளுக்காக இங்கே உயிர் துறந்துவிடக்கூடியவொரு சூழல் நிலவுகிறதா?

அதுவும்,இலண்டனிலிருந்து ஜெனிவாவுக்குப் பிரயாணித்து, ஐ.நா.முற்றில் தீயிட்டுத் தற்கொலை செய்த பட்டதாரி முருகதாசன் புலிகளின் வளர்ப்பில் உருவாகியவர் என்றால் தப்பாகுமா?இவர், கரும்புலிக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பதில் கணிசமான சாத்தியம் உண்டு!

முருகதாசனைப்போன்று, புலிகளினது கரும்புலி உறுப்புகள் பலர் ஐரோப்பாவில் கல்விகற்றபடி தமது அமைப்பினது கட்டளையைச் செவ்வனவே முடிக்கும் நிலையில் இருப்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே அறியக்கூடியதாக இருந்தது.இத்தகைய இளைஞர்கள் ஐரோப்பிய தேசங்கள்தோறும் ஏதோவொரு வடிவில் உலாவருகிறார்கள்.இவர்கள் செய்யும் இவ்வகை அரசியலைப் பலரூபங்களில் இனிக் காணமுடியும்.இது,இன்னும் எத்தனை தமிழர்கள்தம் தலைகளை உருட்டுமோ எவரறிவார்-அந்த யுத்தப் பிரபா பிரபுவைத் தவிர?

இத்தகைய பலியெடுப்புகள் ஓருபோதும் நமக்கு விடுதலையைப் பெற்றுத்தரமுடியாது!-இது,சத்தியம்!!

கரும்புலித்தாக்குதலுக்குத் தமது உயிரைக்கொடுக்கும் போராளிகளாக நமது குழந்தைகளைத் தயார்ப்படுத்திய புலித் தேசியம், அதே கரும்புலிகளைப் பயன்படுத்தித் தீயிலும் வெந்து சாவென்பது இன்றைய யதார்த்தமாக விரிகிறது!இத்தகைய நடாத்தைகளுக்கூடாகத் தமது இருப்புக்கேற்றவொரு அரசியலை முன்தள்ளும் புலிகளது வங்குரோத்துப் போராட்டம் இன்னும் எத்தனை வகையில் நமது மக்களை அழிக்கும்?இதையும் எத்தனைபேர்கள் தியாகத்தினதும்,தமிழீழத்தினதும் பெயர்களால் மௌனித்து வரவேற்க முடியும்?

இத்தகைய நடாத்தைகளின்பின்னே நாம் இனங்காணத்தக்க நாசகார அரசியலின் விளைவு,நமது மக்களைப் பலியெடுப்பதற்கானவொரு புலித்தேசியமாக உருவாகிய இந்த மக்கள்விரோதப்போராட்டம்-புலித் தலைமையின் இருப்போடு சம்பந்தப்பட்டவொரு கொலைக் களத்தைத் திறந்து, மக்களை வேட்டையாடுவதிலும்,சிங்கள அரசுக்குக் குண்டுபோட்டுக் கொல்லுமொரு வாய்ப்பைத் திட்டமிட்டுத் திறுந்து வைத்திருப்பதுமாக உணரமுடியும்.புலிகளது மிக மோசமான இலக்கை எந்தத் தேசியவினவொடுக்குமுறையோடும் சம்பந்தப்படுத்தி நியாயப்படுத்த முடியாது.இது, திட்டமிட்ட கொலை அரசியல்.கடந்தகாலத்தில் எத்தனையோ உயிர்களைப் பலியெடுத்த புலிகளது போராட்டம்,இப்போது இறுதிக்கட்டமாகவும் இளைஞர்களைக் கொல்லுவதில் அவர்களுக்குத் தியாகிகள் பட்டத்தைத் தயாரித்துக் கொடுக்கிறது.

போராட்டச் சூழலில் இளைஞர்களைத் திட்டமிட்டுக் கரும்புலிகளாகத் தயாரித்த புலித்தலைமை, தமது பிள்ளைகளைத் தவிர்த்து அனைத்துத் தமிழரின் குழந்தைகளையும் கரும்புலியாகக் கருதிக் களத்துக்குப் பிடித்துச் சென்று கொன்றது.இதிலொரு பகுதியைத் திட்டமிட்டு அறுப்புக்கு வளர்த்த கிடாவாக வளர்த்து இப்போது பல வடிவினில் பயன்படுத்தி வருகிறது.

முட்டாள்த் தலைவன் போடும் கட்டளைகளை செவ்வனவே செய்வதற்கென ஒரு கூட்டத்தைத் தயாரித்து, அதையே இப்போது கணிசமான வகைகளில் வெவ்வேறு இலக்கு நோக்கிப் போராடத் தூண்டிக் கொல்வதில் பிரபாகரனின் புத்தி நகருகிறது!இதுவெல்லாந் தியாகமென ஓலமிடும் காண்டுமிராண்டிகளாகப் புலிப் பினாமிகள்போடும் ஒப்பாரியை மனிதப் படுகொலையைத் திட்டமிட்டுச்செய்யும் மிக கொடியவொரு சூழலின் பிரதிபலிப்பாகவே நாம் இனம் காணவேண்டும்.

இது,புலியினது இருப்புக்காகச் செய்யப்படும் கொலையே!

வன்னியில் மக்களின் சாவைத் திட்டமிட்டு நிகழ்த்திய புலிகள், இப்போது புலம்பெயர்ந்த மண்ணில் தமது கரும் புலிகளை வைத்தே தீக் குளிக்கவைத்துத் தியாக அரசியலென உணர்ச்சிகளைத் தூண்டி, உலகத்தை ஏமாற்றப் பார்க்கிறார்கள்.வன்னியில் சாகும் மக்களைக் காப்பதற்கான அரசியலை முன்வைக்க முடியாத புலிகளோ அவர்களைக் கொன்றுகுவிக்கும் சிங்கள அரசை ஊக்கப்படுத்திய செல் நெறியில் மக்களை இருத்திவைத்தபடி, இங்கே தம்மால் உருவாக்கப்பட்ட கரும்புலிகளை வைத்துப் புதிய "வெகுஜனப் போராட்டத்தை"ச் செய்து காட்டுகிறார்கள்.உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு வந்த பல தமிழ் மாணவர்களில் சிலர் புலிகளது நோக்குக்கேற்றபடி கல்விக்காக மட்டும் அனுப்பப்பட்டவர்களல்ல.மாறாக, அவர்களது திட்டமிட்ட நோக்கை நிறைவேற்றத்தக்க முறைமைகளில் அவர்கள் எப்போதும் தமது உயிரைக்கொடுக்கத்தக்கபடி வளர்க்கப்பட்டு கல்வியோடு இணைந்தனர்.இப்போது,புலிகளது நோக்கம் நிறைவேற்றத் தக்க தருணங்கள் நெருங்கி வருவதால் தமது பலிக் கடாக்களை வைத்துத் தீயிலும் கருக்கிக் காட்டுகிறார்கள், தமிழீழ விடுதலையென்றால் என்னவென!.இத்தகைய காயடிக்கப்பட்ட இளைஞர்கள் இங்கே இன்னும் பல கொலைகளைச் செய்து முடிப்பர்.அவர்கள் மாற்றுக் கருத்துடையவர்களை, மற்றும், புலிகளால் புலம்பெயர் மக்களிடம் அறவிடப்பட்ட பெருந்தொகை பணத்தை நிர்வாகிக்கும் அவர்களது பினாமிகளையும் இவர்களை வைத்தே கண்காணிக்கின்றனர்.இதன் உச்சக்கட்டம் புலிகளின் பினாமிகளுக்கும் மரணத் தண்டனையை நிறைவேற்றும்.

மக்களைப் பலியெடுப்பதற்கானவொரு அரசியலைத் தேசியத்தின் பெயரால் முன் தள்ளிய புலிகளது தெரிவு,இன்றுவரை மனிதவுயிர்களைத் துஷ்பிரயோகித்து வருகிறது.தமது அரசியல் எதிரிகளிலிருந்து மற்றும் தமது இருப்புக்கான அரசியல்வரை ஊரார் குழந்தைகளைப் பலியெடுக்கும் புலிப்பாசிசத்தின் அழிவிலாவது நமது மக்கள் வேறொரு வகையானவொரு அரசியலைத் தமதாக்க வேண்டும்.இதைக் குறித்தான வகைகளில் மக்களது இன்றைய இழி நிலைமைகளில் புலியினது பங்கு என்ன-சிங்கள அரசினது பங்கு என்னவென்பது பேசப்பட்டாகவேண்டும்!

இப்போது, புலிகளின் தரப்பில் யுத்தமென்பது தவிர்க்க முடியாத காரணியாகக் கருத்துக்கட்டப்படுகிறது.சிங்களப்பாசிச இனவாத அரசோ புலிகளைக் கொல்லுவதாகச் சொல்லித் தமிழ்பேசும் மக்கள் அனைவரையுமே கொல்லுகிறது.வன்னியில் புலிகளின் கோட்டைகளையெல்லாம் மிகவிரைவாகப் பிடித்த அரசுக்குப் புலிகளைத் தொடர்ந்து கொல்வதில் சிக்கலொன்று ஏற்படுகிறது.அது,மக்களுக்குள் மக்களாகப் புலிகள் பதுங்கிய நிலையில், தனது நடவடிக்கைகளில் புலிகளோடு மக்களும் பெருந்தொகையாக அழிவதை எதிர்கொள்ள அச்சப்படுகிறது இலங்கை அரசு.புலிகளின் மிகக் கேவலமான செயல்களில் மிக முக்கியமானது மக்களைக் கேடயமாகப் பாவிப்பதே.இதுவரை ஆயுதங்களையே நம்பிக்கிடந்த புலிகள்,இப்போது மக்களையே நம்பி உயிரைக்கையில்பிடித்து ஊசலாடுகிறார்கள்.தம்மை எந்தவொரு வெளிநாடாவது காத்துவிடாதாவென ஏங்கிக் கிடக்கிறார்கள்.இதற்காக, ஜெனிவாவில் தமது வளர்ப்புப் பிராணியைவைத்துத் தீயில் கொன்று உலகத்துக்கான கவனயீர்ப்பு அரசியலைச் செய்து பார்க்கிறார்கள்.இது,கரும்புலியினது புதிய வடிவம்.அங்கே,இலங்கையில் கரும்புலிக்கான இராணுவ அங்கி,இங்கே பொதுமகனுக்குரிய-அப்பாவித் தமிழனுக்குரிய வேஷம்!
(A 26-year-old diaspora Eezham Tamil from UK has self-immolated himself to death in front of the United Nations Office at Geneva (UNOG) in Switzerland Thursday night around 8:20 p.m., according to police spokesman Eric Grandgean. The man has identified himself as Murukathasan in a letter left behind by him 10 meters away from the scene, the Police officer said when contacted by a Tamil journalist in Switzerland on Friday. The copy of the letter in English and Tamil, received by Tamil journalists, with the identical name, said: "I believe the flames over my body, heart and soul will help the world community to have a deep human look over the great sufferings of the Sri Lankan Tamils. -Tamilnet)ஆனால்,இரண்டினது தெரிவும் ஒன்றுதாம்!தம்மைத் தாம் கொன்றாவது பிரபாகரனுக்குப் படைப்பதென்பதைத்தவிர இவர்களால் வேறெதுவுஞ் செய்துவிட முடியாது!

இத்தகைய புலிகளது தமிழீழத்தேசிய அரசியல் உலகத்தைத் தரிசிப்பதைப் பார்க்கும்போது உண்மையில் பிரபாகரனுக்கென்ற ஒரு இலக்கு-முட்டாள்தனத்தைத் தரிசிப்பதென்றே-தோன்றுகிறது.இந்த முட்டாள்த்தனத்தின் கடைக்கோடி நிலையென்னவென்றால்-அமெரிக்கப் புதிய ஜனாதிபதி திரு.பாராக் ஒபாமா தம்மைக்காப்பதற்கான சூழல் நிலவுவாதாகப் புலிகள் நம்பியமாதிரித்தாம்!இவ்வண்ணமே, புலிகளின் விசுவாசிகளும் நம்பிக்கிடந்தார்கள்.இத்தகைய நம்பிக்கைக்கு வெளியில் தமிழர்களின் வெளியுலக வாழ்க்கையில்லை!எனினும்,அமெரிக்கா இப்போது புலிகளது இறுதியிடமான "மக்கள் அமைப்புகள்"எனும் நாமங்கொண்ட முகமூடிகளையும் உருவிவிட்டுப் புலிகளைத் தடைசெய்கிறது.அவர்களது ஒவ்வொரு அசைவையும் அமெரிக்கா புதிய அரசுக்கூடாக நிறைவேற்றும்போது,பாராக் ஒபாமா"கருப்பு வெள்ளையராக"ப் புலிவிசுவாசிகளுக்குத் தென்படுகிறார்.இந்த நிலையற்றாம் "தமிழ்ப் பொதுமகன்"முருகதாசன் தீக்குளிக்க இலண்டனிலிருந்து ஜெனிவா நோக்கி அனுப்பிவைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.பாவம் அவர்!அப்பாவிகளைக் காயடித்துக் கொல்வதில் புலிகளுக்கு நிகர் புலிகளே!

முருகதாசன் கூறுவதாகச் சொன்ன இறுதி மந்திரமான"தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்"என்பது புலிகள் தம்மைத் தடைசெய்த உலக நாடுகளுக்குள் வேலை செய்வதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாற்றிய வாசகம் என்பது கவனிக்கத்தக்கது.தம்மோடு உலக நாடுகள் தேன்நிலவு செய்தபோது"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்",அது முறிந்தபோது"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"என்று தாகங்கள் முகமூடியணிகின்றன.கூடவே,இளைஞர்களைக் கொல்வதிலும் வெவ்வேறு முகமூடிகளைப் புலிகள் தேசியம் சூழலுக்கேற்றபடி தயாரிக்கிறது!முருகதாசனுக்குரிய முகமூடி:"பொதுமகன்".

வன்னியில் சாகும் மக்களைக் காப்பதற்கு நாம் அனைவரும் குரல் கொடுப்பதற்கு முனையும்போதுகூட இத்தகைய கொலைகளையுங் கண்டிக்கவே வேண்டும்.அங்கே,அரசும் புலிகளும் மக்களைக் கொன்று குவிக்கும்போது, புலம் பெயர் மண்ணில் புலிகள் தமது இரத்தக் கறை படிந்த கரத்தால் நமது இளைஞர்களைக் கொல்வதில் முனைப்போடு அரசியல் செய்கிறார்கள்!

தூ...

இப்படியெல்லாம் ஒரு போராட்டம்!

இதையெல்லாம் போற்றிப் பூசிக்கும் ஒவ்வொரு நபரும் கொலைக்காரரே!

இந்தக் கொலைக்காரரிடமிருந்து நமது மக்களைப் பாதுகாப்பதற்கான அரசியல் புலம்பெயர் மண்ணில் அநாதையாகக் கிடக்கிறது.இந்த நிலைமை தொடரும்போது இன்னும் பல முருகதாசன்களைப் புலிகள் ஏலவே தயாரித்து வைத்தபடி, வெவ்வேறு களத்தில் இறக்குவார்கள்.எனினும்,அழிவது பிரபாகரன் குழந்தைகள் இல்லைதானே?ஊரார் குழந்தைகள்தான் சாகிறது,நாம் இப்போதைக்கு மூச்(மௌனிக்கிறோம்-வாளாது இருக்கிறோம் என்கிறோம்) தமிழீழத்தின் பெயரால்!



ப.வி.ஸ்ரீரங்கன்
13.02.2009




Tuesday, February 10, 2009

அவசரகால நிதியாக ஆயிரம்-இரண்டாயிரம் யூரோ...

வன்னியில் சாகும் மக்களைச் சொல்லிப்
பணம் குவிக்கமுனையும்
புலம்பெயர் தமிழ் மாபியாக்கள்.

"ஈழப்போராட்டத்தின் கறைபடிந்த வரலாறு குருதியினால்
எழுதப்பட்டதாகினும்
அஃது ஒரு சில தமிழ்க் குடும்பங்களைச் செல்வந்தர்களாக்கியதில்
இலட்சக்கணக்கான மக்களின் தலைகளைக் கொய்தெறிந்துள்ளதுதாம்.என்றபோதும்,
சிங்கள
இனவாத அரசு தமிழ்பேசும் மக்களுக்கான அழிவைத் திட்டமிட்டுச் செய்ததன் பலாபலனே
இஃதென்பதில் எனக்குச் சந்தேகங் கிடையாது."


இலங்கை மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு-உயிர்வாழும் வலையம் அமைதியாக இருப்பதும் அந்த வலையம் மக்களின் நலன்களைக் கண்ணாக மதிக்கும் மக்கள் கட்சிகளால் நிர்வாகிக்கப்பட்டால் ஓரளவேனும் முதலாளித்துவ ஜனநாயகத்தன்மையின் பெறுமானத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.இன்றெமது மண்ணில் தொடரும் கட்சி-இயக்க ஆதிக்கமானது மிகவும் கடுமையான விளைவுகளைச் செய்துவிடுகிறது.கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது-இயக்கத்தினது பின்பக்கம் ஒளிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி-இயக்க நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.


எங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடும்,இனவாதத்தைத் தூண்டும் சுய அரசியற்றேவைக்ககான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.மக்கள் தம்மை அறியாத வகையில் அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.இங்கே, நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.ஒவ்வொரு முறையும் நாம் நம்மைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்,கருத்துகள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.யுத்தத்தால் தமிழீழம் அமைக்க முடியுமென்றும்,அதற்காகப் புலம் பெயர்ந்தமக்கள் செய்யவேண்டியது தங்குதடையற்ற நிதியளிப்பு ஒன்றே தேவையென்றும் இப்போது புலிப் பினாமிகளால் திட்டமிட்டுப் பிரச்சாரப்படுத்தப்படுகிறது.மிக நுணுக்கமாகக் கட்டியமைக்கப்படும் இத்தகைய தந்திரம் மக்களைக் கொள்ளையடித்துப் பணஞ் சேர்க்கும் மாபியாக்கூட்டத்தை உருவாக்கியுள்ளது!இது,வன்னியில் சிக்குண்ட மக்களைத் தனியே கொல்லவில்லை கூடவே,புலம் பெயர்ந்த மக்களையும் சுரண்டிக் கொண்டேதாம் அங்கு கொலைகளைச் செய்து பணத்தைத் திரட்ட முனைகிறது.



கடந்த காலங்களில் குறிப்பிட்ட இயக்கங்களது தலைவர்களின் சொத்துக்கள் இங்ஙனஞ் சேர்க்கப்பட்டதுதாம்.இது, காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறியபோது, பூர்ச்சுவா வர்க்கக் குணாம்சத்தோடு மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி, மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இயக்கச் சர்வதிகாரமாக மாறியது.இது,மக்கள் போராட்டம்,புரட்சி-விடுதலை என்றதெல்லாம்,தத்தமது இருப்புக்கும்,தமது சொத்தைக் காப்பதற்கான வியூகத்துக்குமானதாகவே இருந்தது.இத்தகையபோக்குள் சிக்கிய இயக்கத் தலைமைகள், மக்களை அழித்த இரத்த வரலாறை எழுதியதைத் தவிர நமது மக்களுக்கு எதை இவர்களால் வழங்கமுடிந்தது?


இந்த மோசமான சமூக விரோத நடவடிக்கைகளைக் கேள்வி கேட்கும் மாற்றுக்கருத்தெழுவதற்கானவொரு சூழல் வலுமூர்க்கமாக அழித்தொழிக்கப்படுகிறது.இது, தேசத்தினது பெயரால்-தேசியத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டபடி"புலிகளை எதிர்பவர்கள் தமிழர்களை எதிர்பவர்கள்"என்றும் கருத்துக் கட்டுகிறது.இத்தகைய கருத்துக்களின் பின்னே மறைந்திருக்கும் அதிகார மையம் பாசிசத்தால் தன்னை இருத்திக் கட்டிக்காத்து வருகிறது.இங்கே,மக்களின் துயரங்கள் துன்பங்கள் யாவும் சிங்களப் பாசிச அரசுக்கும்,புலிகளுக்கும் மற்றும் குழுக்களுக்கும் பதவி மற்றும் பொருள் திரட்டும் அரசியல் செய்வதற்கானவொரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டுவரும் பரிதாபம் நிலவுகிறது.அப்பாவி மக்கள் உயிர்வாழ்வதற்காகத் தமது எதிர்கால விடிவை எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.வன்னியில் யுத்த வலயத்துள் சிக்குண்ட மக்கள் எங்கேயும் இடம்பெயரமுடியாதளவுக்கு இராணுவத்தினதோ அன்றிப் புலிகளது குண்டோ மிகவும் கறாராகக் கவனித்துக்கொண்டிருக்கின்றன.இவை எந்த நேரத்தில் எப்படி வெடிக்குமென்பதை தற்கொலைக் குண்டுதாரிகளே தீர்மானிக்கிறார்கள்.தத்தமது உடலை எதன் பெயராலும் அழிக்க முனையும் அவர்கள்,பொது மக்களின் உயிரை மசிருக்கும் மதிக்கமாட்டார்கள் என்பதை நாம் தொடர்ந்து கவனிக்க முடியும்!இந்தச் சூழலிலும் புலம் பெயர்ந்த மக்களிடம் பணம் பிடுங்குவதைத் தீவிரப்படுத்தும் மனித நேயமற்ற புலிப்பினாமிகளை என்னவென்பது!

வன்னியில் தொடரும் நாசகார யுத்தம்,இலங்கை அரச வரலாற்றில் என்றுமில்லாதவாறு மனித அவலத்தைத் தொடக்கிவைத்துள்ளது.மக்கள் எதன்பெயராலோ சாகடிக்கப்படுகிறார்கள்.மக்களின் அழிவை வைத்து-அவர்களது பிணங்களை வைத்து அரசியல் செய்யும் ஒவ்வொரு மனதர்களினதும் அக விருப்பும் தாம் சார்ந்தியங்கும் அரசியலுக்கு(முடிந்தவரை மக்களை மொட்டையடித்துப் பொருள் திரட்டுவது) வலுச் சேர்ப்பதில் நியாயங்களை அடுக்குகிறது.எனினும்,அப்பாவி மக்களை எந்த ஊடகத் தர்மமும் தமது வர்க்க நலன்களைக்கடந்து அணுகவதற்கு முனையவில்லை-இந்தச் சோகத்தை வெளிப்படுத்தவில்லை.அதாவது,வன்னி மக்களின் அழிவில் நிதிமூலதனமாகப் புலம் பெயர் மக்களின் குருதி மாறுகிறதை எவரும் அம்பலப்படுத்தவில்லை என்கிறேன்.


வன்னியில் தொடரும் யுத்தங்களின் பின்னே ஏற்படும்"வெற்றி-தோல்விகள்"இலங்கையின் இராணுவப் பிடியிலிருந்து தமிழ் பேசும் மக்களை ஒருபோதும் விடுவிக்க முடியாது.தமிழ்பேசும் மக்கள் தமது விடுதலையை வென்றெடுப்பதற்கான நிபந்தனைகளை உருவாக்காது தமது விடுதலை குறித்த கற்பனைகளை வளர்த்துள்ளார்கள்.புலித் தேசியத்தினூடாகவும்,ஓட்டுக் கட்சிகளின் அற்பத் தனமான பரப்புரைகளாலும் இந்த மக்களின் விடுதலையென்பது வெறும் வடிகட்டிய முட்டாள் தனமான யுத்தங்களால் பெற்றுவிட முடியுமெனுங் கருத்து இன்னும் ஓங்கியுள்ளது.இன்றைய புலிகளின் பின்னடைவு-அழிவினது காலவர்த்தமானத்தில்,எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சமெனும் நிலைக்குப் புலிப் பினாமிகள் வந்துள்ளார்கள்!அவர்கள், இப்போது ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவெங்கும் மக்களை ஏமாற்றிப் பணஞ் சேர்க்கிறார்கள்.இதைத் தவிர வேறெதை ஈழப் போராட்டம் நமக்குத் தந்துள்ளது?இலட்சக்கணக்கான பிணங்களின் நடுவே பொருள் குவிக்கப்பட்ட வரலாறாக இந்த ஈழப்போராட்டம் இன்னும் சேடம் இழுக்கிறது!அப்பாவிகள் ஏமாறும்போது ஒருசில புலிப்பினாமி மாபியாக்கள் கோடீஸ்வரர்களாக மாறுவது நிகழ்ந்து விடுகிறது!

இங்கு,இன்னுமொரு கேடான காரியத்தையுங்கூடவே செய்கிறார்கள்.அதுதாம் இனவாதம்!அவசரகால நிதியாக ஆயிரம்-இரண்டாயிரம் யூரோக்களைத் தண்டமாகப்பெறும் ஐரோப்பியப் புலிகள் இன்னும் இனவாதத்தைக் கிளறி"புலி இல்லாத சூழலில் சிங்களவருக்கு அடிமையாகத்தான் வாழவேணும்"எனவே,புலிகளைக் காக்க-ஈழவிடுதலையைப் பெறவென யுத்தகால நிதியெனும் போர்வையில் புலம் பெயர்ந்த மக்களை ஒட்ட மொட்டையடிப்பதில் வேகமாகச் செயற்படுகிறார்கள்.இஃது, உணர்த்துவது என்னவென்றால்-மக்கள் போராட்டமென்பதெல்லாம் பணம் சேர்க்கும் அரசியலாக மாறிவிட்டபின்பு,மக்கள் செத்தாலென்ன-வாழ்ந்தாலென்ன? என்ற அரசியலைத்தாம் உணர்த்துகிறது!இத்தகைய இழி நிலையை, எந்த ஊடகங்கள் அம்பலப்படுத்தி மக்கள் விரோதிகளைத் தண்டிப்பதற்கான முறையில் மக்களை அண்மித்த அரசியலைச் செய்கிறார்கள்?

இன்றைக்கு வன்னியில் செத்து மடியும் மக்கள் ஏதோவொரு விதத்தில் இத்தகைய மக்கள் விரோதிகளுக்குப் பொருள் சேர்க்கும் ஊடகமாக இருக்கிறார்கள்.பிணங்களை வைத்துச் சுனாமி நிதி சேகரித்தவர்கள் எங்கே-எப்படிக் கொழுத்த முதலாளிகளாக மாறினார்களோ அப்படியே இன்னொரு கூட்டம் இந்த வன்னி அவலத்துக்குள் மாறுவதற்கு முனைகிறது!இதுவொரு சாபக்கேடானவொரு இருண்ட சூழல்.தமிழ் பேசும் மக்களின் அனைத்து வகை இருப்பையும் வியாபாரமாக்கும் இந்த மக்கள் விரோதிகள், நமது மக்களின் உண்மையான உரிமைகளுக்காக எப்போதுமே குரல்கொடுக்கவில்லை!மக்களைச் சொல்லிப் பேரம் பேசியவர்கள் இன்று தமது அழிவிலும் தம் விசுவாசிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய மௌனமாக ஒப்புதல் கொடுத்துள்ளார்கள்.இது,உண்மையிலேயே ஒரு கிரிமினல் குற்றம்.



ப.வி.ஸ்ரீரங்கன்
10.02.2009

Sunday, February 08, 2009

நாம் எல்லோரும் இலங்கையர்...

இலங்கை:உலகை முன்னுதாரணமாக்கொண்டு போரிடுகிறது?


இலங்கையில் சிறுபான்மை இனங்களுஞ்சரி அல்லது பெரும்பான்மை இனமாலுஞ்சரி-இந்த, மக்கள் கூட்டம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களது எதிர்காலம் இருள் சூழ்ந்து ஒளிமங்கிக் கிடக்கிறது.பிராந்திய நலனுக்கும் பொருட் சந்தைக்கும் நடக்கும் போராட்டத்தில் அந்நியச் சக்திகளே முதன்மையான பாத்திரத்தை இலங்கையில் கொண்டிருக்கும்போது நமக்கான விடுதலை,சுதந்திரம்,சுயநிர்ணயமென்பதெல்லாம் பகற்கனவாகும்.இங்கே, இலங்கை மக்களின் உரிமைகளென்பவை அந்நியச் சக்திகளின் தயவில் பெறும் விடையமல்ல.மாறாக, இலங்கை மக்களே தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு அரசியற் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கானவொரு மக்கள் எழிச்சியை செய்து இத்தகைய புறச் சக்திகளைத் தோற்கடிப்பதற்கானவொரு அரசியல் விய+கத்தைக் கட்டியமைக்க வேண்டும்.புலிகளல்லாத இலங்கை அரசியற்போக்கில் இது அவசியமானவொரு பணி.இனங்களுக்கிடையிலானவொரு நட்பார்ந்த பரஸ்பரப் புரிந்துணர்வின்றி தொடரப்போகும் மகிந்தா குடும்பத்து அந்நியச் சேவையை முறியடிக்க முடியாது.


இலங்கையில் இன்னொரு பாசிசச் சர்வதிகாரத்தைத் தடுதாட்கொண்ட இராஜபக்ஷயின்பின்னே அணிதிரண்டிருப்பவர்கள் யாவரும் எம்மை அண்மித்துவரும் உலகப் பொருளாதாரப் போக்குகளின் திசைவெளியில் சிக்கிய தென்கிழக்காசியத் தரகு முதலாளியக் குடும்பங்களாகும்.இவர்கள் இலங்கையிலோ அன்றி இந்தியப் பெரு நிலப்பரப்பிலோ ஒரு வகைமாதிரியான தேசிய வாதத்தை முன் தள்ளியபடி தமக்கிசைவானவொரு இராணுவப்படையணியைக் கட்டியுள்ளார்கள்.இந்த இராணுவத்தின் முன் புலிகள்போன்றவொரு அணி அவசியமற்றுப்போனதன் பின்பான காலம், தமிழ் மக்களினது உயிர்களைப் பறித்தாவது புலிகளின் இருப்பை அழித்துவிடுவதில் இன்றைய போர் இதே உலக அரசியலை நகலெடுக்கிறது.இந்த உலக அரசியலை,கடந்த இரு தினங்களாக ஜேர்மனிய முன்ஞ்சன் நகரில் நடைபெறும் பாதுகாப்பு மகாநாட்டினது பேராளர்களின் உரையில் மிக இலகுவாகப் புரியமுடியும்.


ஆவ்கானிஸ்த்தான் அதிபர் கார்சாய்(Karsai),தனது தேசத்தில் 65 மில்லின் மக்களுக்கு 40 பொலிஸ் அலுவலகங்களே இருப்பதால் அங்கே பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாகச் சொல்கிறார்,முன்ஞ்சனில்.போதைப்பொருள் பயிரிடும் மேற்குலக அரசியலைப் பயங்கரவாதிகளுக்கானதாகச் சொல்லிவிடும் அவர்,அதைப் பெரும்பாலும் தலிபானுக்குரிய தொழிலாக நிறுவுகிறார்.இங்கே,அமெரிக்கக் குரல் ஓலமிடுகிறது.


ஜேர்மனியப் பாதுகாப்பு மந்திரியோ,அவ்கானிஸ்த்தானில் ஒரு பெண் கல்விக்கூடஞ் செல்லத்தக்க சூழலைத் தாம் செய்துள்ளதாகவும்,இன்று,ஒரு மில்லியன் பெண்கள் பாடசாலைபோவதாகுவும்,குளங்கள்,கால்வாய்கள் கட்டப்பட்டு அங்கே,தேனும் பாலும் ஓடவிடப்படுவதாகவுஞ் சொல்லிக்கொள்கிறார்.இவைகளைத்தொடர மேலுஞ் சிக்கலிடும் தலிபானை முறியடிக்க இன்னும் பெரும் படைகளை அங்கே குவித்து, அப்பாவி மக்களைக் காத்தாக வேண்டுமென்கிறார்.அவ்கான் அரசியல் வரலாற்றைக் கற்பவர்களுக்குத் தெரியும் இவர்களது உண்மையான முகம்.அமெரிக்கா தொடர்ந்த இந்த அரசியல்-பொருளாதார நோக்கங்களுக்கு மேற்குலக நாடுகள் நல்லவொரு முகமூடியை ஜனநாயக மூலகங்கொண்டு தயாரித்து மேலாதிக்க யுத்தத்தைத் தொடர்கிறபோது,அண்ணல் மகிந்த இராஜபக்ஷவுக்குச் சொல்லியா கொடுக்கவேண்டும்?


வன்னியில் வரம்பின்றித் தொடரும் இனவழிப்புக்குப் பெயர்:"மக்களை விடுவிப்பது,பயங்கரவாதத்திலிருந்து நாட்டையும்,மக்களையும் காத்துக்கொள்வது!"



இதுவரை,தமிழர்களின் உரிமைகள் குறித்து எதுவுமே சொல்லாத-பேசாத அரச தலைவர் இலங்கையில் இருக்கிறாராவெனக் கேள்வியெழுந்தால்-அத்தகைய தலைவருக்கு உதாரண புருஷர்:அண்ணல் மகிந்தாவே!இவரது வருகைக்குப்பின் இலங்கையர்கள் என்றவொரு தேசிய இனம்தாம் உண்டு.இதைக்கடந்து இலங்கையில் இனங்கள் கிடையாது.


"நாம் எல்லோரும் இலங்கையர்,நமது மொழி சிங்களம்"என்பது அவருக்குப் பின்னால் நிழலாடும் மந்திரம்.


இது,தகவமைக்க முனையும் இலங்கை அவரது அரச ஆதிகத்துக்கு வெளியேதாம் கருக்கொண்டது.பெரும்பாலும் புதியவொரு பொருளாதாரக்கூட்டை நட்போடு வரவேற்ற சிங்கள ஆளும் வர்க்கமானது இந்தத் தெரிவைத் தமது இருப்புக்கு ஆதாரமாகக் கருதியதன் விளைவில்,மகிந்தா இந்தக் கயிற்றில் அழகான இனவொருமைப்பாட்டூஞ்சலைக் கட்டி,அழுது கண்ணீர்விடும் தமிழ் அரசியற் குழந்தைகளை அதிலிட்டுத் தாலாட்டி, விஸ்க்கோத்துக் கொடுக்கிறார்.


இது,புலிகளுக்குக் குண்டுகளைக் கொடுக்கின்ற அதே கையால் வன்னியில் சிறைப்பிடிக்கப்படும் மக்களுக்குக் கணிசமான கல்லறைகளை எங்கோ இடம் புரியாத-திசை தெரியாத திக்கில் கட்டிவைக்கிறது!இது,அமெரிக்க-ஐரோப்பிய அரசுகள் செய்த-செய்யும் அதே ஜனநாயக முன்னெடுப்பாக இருப்பதால்,இவர்கள் யாருமே இலங்கைக்கு எதிராக ஒரு மசிரைத்தானும் புடுங்க முடியாது!வன்னியல் மரணிப்பவர்களை அவ்கானிஸ்தானிலும்,காசாவிலும்,ஈராக்கிலும் இத்தகைய தேசங்கள் புதைக்கின்றன.இதன் பின்னாலான உலக ஆளும்வர்க்கத்தின் பெருவிருப்பு ஜனநாயகம் என்பதில் இவர்கள் எல்லோரும் அதையொட்டி அரசியல் செய்ய, இவர்களது "புதைகுழிஜனநாயகத்தை"த்தாம் நாம் மகத்தானதாகக் காணும் சந்தர்ப்பத்தை பி.பி.சி.முதல் சி.என்.என்.வரை தருகின்றன.புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் எந்தக் கூச்சல்போட்டாலும் எவரும் காணப்போவதில்லை!நாம் இவர்களைத்தானே இதுவரை நம்பியிருந்தோம்?எமக்கு இவர்களைவிட்ட இன்னொரு உலகம் தெரியாமலே இப்போதும் இருக்கிறதே-இதுதாம் அடுத்த அவலம்!


இத்தகைய காலவர்த்தமானத்துள்,கண்டெடுக்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை மகிந்தா இராஜபக்ஷ இலங்கைக்குள் சவாரிவிடும்போது,வன்னியில் சாகும் அனைவரும்"புலிப்பயங்கரவாதிகள்"என்பதை உலகமும் ஏற்கிறது.அந்தவகையில் உலகம் புலிகளிடம் கருணை காட்ட முடியாதாம்.எனினும்,இலங்கைக்குள் நிலவும் பாரிய பொருளாதாரச் சமமின்மையானது நிலவுகின்ற ஆட்சியைத் தூக்கியெறியும் வர்க்கவுணர்வாக ஏற்றுமுற்றிருக்கும் தருணங்களில் இந்தத்தேசங்களால்-கட்சிகளால் இத்தகைய கோசங்கள்-இராணுவ முன்னெடுப்புகள் திட்டமிடப்பட்டு மிகக் கவனமாக மக்களரங்கு வருகிறது.அங்கே, மக்களின் அடிப்படை முரண்பாடு வெறும் இராணுவாதத் தந்திரத்தால் மழுங்கடிக்கப்பட்டு, அதைப் பின் தள்ளி இராணுவாதம் உளவியற் தளத்தில் கூர்மையடைகிறது.இது,இலங்கையில் இன்னொரு சிங்களப் பொற்காலத்தைத் தகவமைக்கிறது சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு.இப்போதைக்குச் சிங்களத் தொழிலாள வர்க்கத்துக்கும் இஃது தேசியப்பசி போக்கிவிடுவதால் அவர்களும் தமது பிள்ளைகளைப் போருக்கு அனுப்பிச் சவப்பெட்டிகளைக் காண அவாவுற்றுக் கிடக்கிறார்கள்.என்னவொரு இலங்கை அரசியல்!எங்கே,மாற்றுத் தலைமைகள்-அரசியல்,இடதுசாரியப் பாரம்பரியம்?


இன்றைய வன்னிப் போரோடு புலிகள் துடைத்தெறியப்பட்டபின் எஞ்சுவது என்ன?


"காலாகாலமாகத் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றப்பட்ட அரசியல் வரலாற்றில் புலிகளும் தமக்கான பங்கை உயிர்ப்பலிகளினூடே ஆற்றியுள்ளார்கள்"என்ற சிறு குறிப்பே எஞ்சிவிடும்!இது,தமிழ்பேசும் மக்களுக்கான விடுதலை!போதும்,இதைவிட வேறென்ன அவசியம்?அப்படி அசியமானால் இருக்கவே இருக்கிறது:மாவீரர் கல்வெட்டும்,துரோகிகள் கல்லறைகளும்!இதுவும் போதாதென்றால்,மகந்தா குடும்பத்து அந்நியச் சேவையில்"பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு" இன்னொரு புலிகள் இலங்கை பூராகவும்-அனைத்து இனங்களுக்குள்ளும் உருவாகப்படும்.ஏனெனில் இலங்கையின் உண்மையான பிரச்சனைகள் அப்படியேதாம் இருக்கிறது.இதுதாம் உலகத்துக்கும்,குறிப்பாக அமெரிக்காவுக்குமான இலங்கைச் சூழலாகும்.இனப் பிரச்சனையோடுகூடிய அனைத்து முரண்பாடுகளும் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் இலங்கையே அவர்களுக்கு அவசியம்.இதைத்தாம் இந்தியாவுக்கும் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.இந்நியாவில் உறங்கிக்கிடக்கும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பிறிதொரு பாணியில் காஷ்மீரில் விடியும்.
இற்றுவரை ஈழத்தில் ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் உயிர்கள் ஈழக்கோசத்தால் பலியிடப்பட்டுள்ளார்கள்.சுமார்4.5 றில்லியன் ரூபாய் பெறுமதியான உடமைகள் போரினால் நாசமாக்கப்பட்டும்,முப்பதினாயிரம் பெண்கள் விதவைகளாகவும்,கிட்டத்தட்ட அதே தொகை சிறுவர்கள் முடமாக்கப்பட்டும் இந்தத் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்துபோனதற்குப் பிரபாகரனும் அவரது தப்பான பதவி ஆசையுமே காரணமானதல்ல.மாறாக,இத்தகைய பிரபாகரன்களை உருவாக்கிய அந்நியச் சக்திகளும்,இலங்கையின் இனவாத அழிப்புமே காரணமாகிறது!இப்போதைக்கு ஒரு பிரபாகரனின் முடிவில், இலட்சக்கணக்கான மக்களின் புதைகுழிகள் தோண்டப்பட்டன.இனிவரப்போகும் பிரபாகரன்கள் இன்னும் எத்தனை புதைகுழிகளைத் தோண்டுவார்களோ அது எவருக்குமே இப்போது புரியாது,அந்த ஆண்டவரைத் தவிர!


இத்தகைய சமூக நெருக்கடியையும்,வரலாற்றுத் துரோகத்தையும் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிட்ட யுத்தக் கிரிமனலாக இருக்கும் அந்நியத் தேசத் தலைமைகளை-இலங்கை அரச அதிபரை மனிதவுரிமைச் சட்டவரைவுகளுக்கொப்ப டென்காக்கில் தண்டித்தாகவேண்டும்?அப்படியா,நல்லது!அதுவும் இவர்களாலேதாம் உருவாக்கப்பட்டது.அங்கே,மிலேசேவிச்சுக்களுக்குத்தாம் கல்லறைகள் கட்டப்படும்.ஜோர்ஜ் புஷ்சுக்கோ, ரோனி பிளேயருக்கோ அன்றி மகிந்தாவுக்கோ அங்கே இடமில்லை.ஏனெனில்,இவர்கள் தாம் "ஜனநாயகத்தை" தத்தமது தேசங்களில் தொட்டிலிட்டுத் தாலாட்டுபவர்களாச்சே!இதற்கு உதாரணமாக:ஈராக்கும்,அவ்கானிஸ்தானும் மட்டுமல்ல இப்போது வன்னியும் இருக்கிறது-வாழ்க, இவர்களது ஜனநாயகம் காசா(Gaza) வழி!


ப.வி.ஸ்ரீரங்கன்
08.02.2009

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...