Wednesday, April 15, 2009

ஒய்யாரக் கொண்டையாம்,உள்ளே ஈரும்,பேனுமாம்.

நெருக்கடிக்குள்ளாகும் அரசியலும்,அரசியல் பார்வகைகளும்,புலிகள் பினாமிகளும்.

பகுதி:(2)


ஒய்யாரக் கொண்டையாம்,உள்ளே ஈரும்,பேனுமாம்.



அன்பு வாசகர்களே,விட்டால் இரயாகரன் கோஷ்டி எல்லோர் காதிலையும் புரட்சிப் பூ வைத்துவிடுவார்கள்.இப்போது, எனக்கு வேலை தொடங்கிவிட்டது.அவரைப்போல் முழுநேரத் தொழிலாகப் புலிப்பரப்புரை செய்வதல்ல எனது வேலை.எனவே,அப்பப்ப(உடனுக்குடன்)பதிலளிக்க முடியாது.நான் ஒரு எழுத்தைக்கூட விரயமாக்க முடியாது.இதுதான் எனது நிலை.

எனவே,நேரடியாக விஷயத்துக்குள் போவோம்:


தமது, புலி முகமூடி கிழியும் தருணங்களில் இவர்கள் விவாதம் என்று வரும்போது, "தத்துவார்த்த விவாதத் தொடரென"ப் புரட்டுவார்கள்.ஆனால்,இவர்களது தத்துவம் மிகவிரைவில் ஊத்திக்கொண்டுபோய்விடும்.


தத்துவம் என்பது நாலு புருடாக் கேள்வியைச் சுற்றிப் புனைவதில்லை!


இவர்கள்,எல்லோரையும் குதறும்போது-மற்றவர்கள் மௌனமாக இருக்கும்போது, தமது தரப்புக்கான தளம் உறுதிப்பட்டதாகவெண்ணிக்கொள்கிறார்கள்.இஃது, அவர்களது கள்ளத்தனமான செயலுக்கு மேலும் தங்குதடையின்றி வலுச் சேர்க்கிறது.எனினும் இவர்களை, இப்படியேவிட்டால்,தாம் காட்டுவது-கட்டுவதே புரட்சியெனப் பம்மாத்துப்பண்ணி, அனைவரது குரல்வளைகளையும் முறித்துவிடுவார்கள்.








எனவே,உடனடியாக புலிப் பினாமிகளின் கருத்துக்களுக்கும், அவர்கள் "தத்துவம்"என்று புரட்டும் கருத்துக் குவியலுக்கும் நேடியாகச் செல்வோம்.

"புலிகள் இறுதி முடிவு எப்படி அமையும்?"


"புலிகள் துரேகத்தைச் செய்வார்களா,சரணடைவார்களா?"


"புலிகள் போராடி மடிவார்களா?"


மேலே இவர்களது கேள்விக்குப் பதிலளிக்காது நாம் ஓடி மேய்கிறோமாம்.அரசியல் பம்மாத்து(அவர்கள் தம் அனுபவத்தை மற்றவர்களுக்குப் பொருத்தும் அவசரத்தில்...),வர்க்கம் என்று முத்திரைகுத்தி விவதத்தை; தவிர்க்கிறோமாம்.குண்டுச்சட்டியிலும் குதிரை ஓடுகிறோமாம்.


நல்லது.

நீங்கள் கேட்கும் கேள்வி எமக்கு அவசியமானதில்லை.


இதை முதலில் புரியவும்.



ஏனெனில்,புலிகள் குறித்த சரியான மதிப்பீடு இருக்கும்போது இக் கேள்வி எழமுடியாது.மாறாகப் புலிகளுக்கு இலக்கணம் வகுத்து அவர்களை"வலுதுசாரியத் தேசிய வாதிகள் என்றும்,தமது வர்க்கத்துக்கு இன்னும் துரோகஞ் செய்யாதவர்கள்"எனக்கூறிப் புலிகளைத் தமிழ் பேசும் மக்களுக்குள் தேசியச் சக்திகளாக(வலதுசாரி)க் காட்டவேண்டிய புலிகளது நிர்பந்தம் உள்ளவர்கள் மட்டுமே இக் கேள்வியைத் தொடுப்பர்.


நாம் புலிகளது வருகையே தவறானதென வகுத்து,அவர்கள் அழிவு அரசியலை முன்னெடுக்கும் விதேசிய வாதிகளென விள்க்கியும்,மேலும் அவர்களை அந்நிய அடியாட்படை என்று வரையறை செய்து ,தமிழ்பேசும் மக்களது விடுதலைக்கு எதிரான மாபியாக் குழு என முடிவு செய்தபின் அவர்களது முடிவை ஏலவே கணித்துள்ளோம்.அது, குறித்துப் பல பத்துக்கட்டுரைகளும் போட்டாச்சு.எனவே, இக் கேள்வியோ புலிகளோ அவசியமானவர்கள் இல்லை.வரலாற்றில் அவர்களது அழிவு அரசியலை நாம் பார்க்கிறோம்தானே?அது,தத்துவார்த்த உண்மைகளைச் சொல்லப் போதுமானது.


இப்போது,விதேசிய வாதமென நாம் கூறுவதைப் புலிப் பினாமிகள்"மக்கள் நலனை மறுத்த தேசியம்"என்கின்றார்கள்.

இங்கே,திரிபு என்று அடிக்கடி இவர்கள் நம்மைப்பாத்துக் கூறும் அதே அர்த்தத்துக்கு இவர்களது இந்த வாக்கியம் நல்ல உதாரணமாகும்.இது,திரித்துப் புலிக்குத் தேசியவிடுதலைப்பாத்திரம் கற்பிக்கும் சுத்தலுக்காக"மக்கள் நலன் மறுத்த தேசியம்"என்று கரடியாக ஓலமிடுவதை வாசகர் புரியணும்.



புலிகளது வார்த்தையில் அகராதியில்"ஒரு தமிழன் இருக்கும்வரை போராடி வீழ்வோம்"என்பது உலகறிந்து மொழியாகும்.


இதைப் புரிய முனையும்போது, இந்தப் புலிப் பினாமிகள் மக்களுக்கூடாகப் புகந்து வைக்கும் கோசங்களான "அவர்களை(மக்களை) விடுவித்தல்-தப்பிப்போகவிட்டுப் போராடுங்கள்-சரணடையாது போராடி மரியுங்கள"; எனும்கோசங்களை மிக இலகுவாகக் கணிக்க முடியும்.இது,இரயாகரனது பெயரில் புலி மொழியாக நம்மை வந்தடைகிறது!ஆக,இதை"நாம் மட்டுமே துரோகத்தை மறுத்துப் போராடிச் சாகும்படி கூறுகிறோம்"என இரயா கருத்துரைப்பது ஒன்றும் தத்துவார்த்தப் பெரும் தேடுதலில்லை. கூடவே, புரட்சிகரக் கோசமும் இல்லை!இது, புலிகளது அழிவு அரசியலுக்கு அலங்காரமாகக் கருத்துக்கட்டி வரலாற்றில் புலியினது துரோகத்துக்குத் தியாகங் கற்பிக்கும் குள்ளநரி வேலை!






புலிகளது போராட்டப் பாத்திரம் துரோகமாக இருக்கும்போது, அத்தகைய துரோகிகள் இறுதிவரை போராடி அழிவதென்பது மாபியாக்களின் நடாத்தைக்கு ஒப்பானது.ஏனெனில், புலிகள் தேசியவிடுதலைச் சக்திகள் இல்லை.தேசியம் என்பது எப்பவும் முதலாளியக் கோட்டைக்குள் இருந்து வருவது.அங்ஙனம் பார்த்தோமானால்-விளங்கிக் கொள்வோமானால் புலிகளுக்கு வலுதுசாரியத் தேசியம் கற்பிக்கும் புலிப்பினாமிகளைப் புரிய முடியும்(இவர்கள் புலிகளைச் சொல்லித் திரட்டிய மக்கள் பணத்தில் புதிய ஆளும் வர்க்கமாக மாறியவர்கள் என்பதைப் பிறிதொரு கட்டுரையில் மிக விரிவாகப் பார்ப்போம்).

"புலியல்லாத சூழல்மீதான அரசியல் எதிர்காலம் குறித்தும் தத்துவ மாமணிகள் கேள்விகள் தொடுக்கும்போது புலிகளுக்கும்,தமிழீழத்துக்கும் இவர்கள் விசுவாசமாகக் கருத்தூண்டுவதிலும் அதன் இருப்புக்கும் அர்த்தங் கற்பிக்கிறார்கள்.

அத்தோடு தாம் கேட்ட கேள்விகளைத் தனித்தும்,பிரித்தும் பார்க்கும்படியும் எமக்கு வகுப்பெடுக்கிறார்கள்.

இது, எதற்கு?


புரட்சிக்காம்!-புதியஜனநாயகப் புரட்சிக்காம்!!


புலிகள் சரணடையாது செத்து மடிவது புலியழிப்புக்கான-அவர்களை இல்லாதாக்கும்(இதுதாம் புலிகளது இன்றைய நிலை.மக்களையும்,அவர்களது குழந்தைகளையும் அழிவு யுத்தத்துக்குள் திணித்துத் தம்மைக் காப்பதற்காகச் செய்யும் இவ் யுத்தத்தைப் புரட்சிகர-ஜனநாயகச் சக்திகள் வரவேற்றுக் கொலைக் களத்துக்கு இசைவாக இருப்பதற்கு முனையும் புலிகளது தந்திரம்,இதைப் புரட்சிக்குச் சாதகமானதாகச் சொல்லி,மற்போக்கு அரசியலைக் காயடிப்பது- முற்போக்குச் சக்திகளுக்கு வரலாற்று அவதூறுகளைக் கற்பிப்பது.இது, நீண்டகால நோக்கில் நடந்தேறுவது.உடனடியான நலனாக வருவது, புலிக்கான மக்கட் கவசமும்,ஆளணியுமாகும்.இதைப் புலிப்மினாமிகள் புரட்சியின் பெயரால் நியாயப்படுத்துகிறார்கள்)புரட்சிகரக் கோசமென்று புரட்சியை இழிவுப்படுத்தும் புலிப்பினாமிகளைக் குறித்துப் புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பவர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.இத்தகைய தந்திரத்தை நியாயப் படுத்தப் புலிகளது பினாமிகள் சரணடைவை-யுத்த நிறுத்த்தைக் கோரும் நம்மைப் புலிகளது இருப்புக்குத் துணைபோவதாகச் சொல்கிறார்கள்.அவர்களது மொழியில் சொன்னால் திரிக்கிறார்கள்.


தமது கோணலான கேள்விகள் யாவும் தத்துவார்த்த விவதமாம்."கேட்கின்றவன் கேனையானாலும் கேள்வரகில் நெய்வடியுமாம்"எனத் தமிழ் நாட்டிலொரு பழிமொழி உண்டு.



புலிகள் தம்மையும்,தமது அழிவு அரசியல் முடிவையும் குறித்துக் கவனமாக இருக்கிறார்கள்.அவர்கள் ஆடுகிற ஆட்டத்துக்குப் பல வடிவங்கள் உண்டு. அதில் ஒரு வடிவம் இரயாகரன் குழுவாகும்.இதுபோன்று பற்பல வடிவங்கள் உண்டென்பதை உணரச் சமீபத்தில் இலங்கை இராணுவத்தோடு இந்திய இராணுவம் சேர்ந்து போரிடும் படங்களை ஆதாரமாகப் போடுவதாகச் சொன்ன "சக்(ங்)கடத்தார்" ஒரு வார்த்தை சொன்னார்.அதைக் கவனமாக வாசித்திருப்பவருக்கு அவ் வார்த்தையின் அர்த்தம் புரியும்.


அவர் கூறுகிறார்"ஆழ் கடலில் அலைகள் இல்லையாமே ஆனால், அங்கும் புலிகள் இருப்பார்கள்"என்று.இதுதாம் உண்மை!


புலிகளைப் பாதுகாக்க உள்ள ஒரே வழியை(சரணடைவு)அடைத்துத் தியாக வழியுடாக அவர்களை இல்லாதாக்கின்றார்களாம்.இதுதானே புலியினது இறுதி நிலை.அது, அடையப் போகும் இறுதி நிலையைத் தியாகத்தினூடாகக் கற்பிக்கின்றார்கள்.இதன் வழி மீளக் குறுந்தேசியவாதப் புலிகளது வருகை தியாகத்தின் திசை வழியாக உட்புகுதலாக இருக்கும்.இங்கே, துரோகம் என்றும்-தியாகமென்றும் கூறித் தமிழ் மக்கள் பெயரால் "வலது சாரிய அரசியலைத் தக்க வைக்காதிருப்பதற்காக"ப் புலிகள் இறுதிவரை போராடி மரிக்க வேண்டுமென்றவுடன் புலிகள் அதைச் செய்வார்களாம்.புலியினது இறுதி நிலை அழிவுதாம்.இதை முடிந்தளவு தடுத்து நிறுத்தித் தலைவர்களைக் காக்க எடுக்கும் முயற்சிக்கு இளைஞர்களை-மக்களைக் களப்பலியாக்குவதற்குப் பெயர் புரட்சிக்காகப் புலிகளை இல்லாதாக்கும் தியாகத்தினூடான பொறிமுறை.


இதற்குப் பெயர் தத்துவார்த்த விவாதம்?


அவித்த மீன் துடிக்கிறது அம்மியும் கவி பாடுகிறதென்ற தலைப்பில் அடுத்த கட்டுடைப்புத் தொடரும்.


...ம்,தொடர்வோம்.


ப.வி.ஸ்ரீரங்கன்

15.04.09

2 comments:

மனிதம் said...

வாங்கிய பணத்திற்கு வேலை செய்கிறீர்! தொடரட்டும் உமது வேலை. ஈழ மண்ணில் நீர் பிறந்தீரா என்பது கேள்விக்குறி..! தமிழ்த் தாய் பெற்றாளா என்பது இன்னொரு சந்தேகம். மற்றைய சந்தேகங்கள் எனக்கு வர வேண்டாம். கோத்தவாய் மற்றும் ராஜபக்சே மடியின் சூட்டில் மற்றும் தாலாட்டில் உறங்கிச் சுகம் கண்ட மேனி போலும். அனுபவி ராஜா அனுபவி.
என் தாய் கடுமையானவளாயினும் அவள் மடியே எனக்கு சொர்க்கம்! பக்கத்து வீட்டுக்காரி சாயம் போகாத சேலை உடுத்துகிறாள் என்பதற்காகவும், கனத்த நகை போடுகிறாள் என்பதற்காகவும் அவள் மடியை நாடேன். சில நரிகளுக்கு வீசப்பட்ட கொழுத்த சதைகளால் அவர்களுக்கு திருப்திதான். மற்றவர்கள் கொத்தடிமைகளாகி, கோரமாகக் கொல்லப்பட்டாலும் உம்மைப் போன்றவர்கள் இவ்வாறு நியாயம் பேசிக் கொண்டிருப்பீர்கள். இது பெரியாருக்கு எதிரான சில சாதீ மதம் பிடித்த பெரியவரின் முயற்சி என நினைக்கிறேன்.
ஐயா உலகம் உருண்டை! உமக்கு வரும் பொழுது, மிகவும் வருந்த நேரிடும். துவேஷம் ஒழித்து மனிதனாக இருக்கக் கடைப்படுவீரானால் உமது வாரிசுகளுக்கு, அது உமக்குக் குடும்பம் இல்லாவிட்டாலும் உமது சாதீயக் குழந்தைகளுக்கு புண்ணியத்தைச் சேர்த்து வைக்கா விட்டாலும், பாவம் சேர்க்காதிருப்பீர்.

manitham said...

oyyaarak kondaiyila thaazhamboovaam, ulla irukkirathu eerum penumaam//

ithu umakke porunthum!

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...