Wednesday, October 29, 2008

ஒரு தமிழர்,ஆனந்துவின் வெற்றி

சதுரங்கத்தில் ஆனந்து (Viswanathan Anand )மீண்டும் வல்லவன் ஆனார்.


இம்முறை சதுரங்கச் சாம்பியனுக்கான போட்டி 74 ஆண்டுகளுக்குப் பின்பு ஜேர்மனியப் பழைய தலைநகர் பொன்ணில்(Bonn )ஆரம்பமாகியது.பழமைவாய்ந்த கலைக் கோட்டத்தில் நடந்த இந்தப் போட்டியானது மிகவும் விறுவிறுப்பு நிறைந்து காணப்பட்டது.ஆறு வயதிலிருந்து சதுரங்கத்தில் தேர்சியுற்ற சென்னை ஆனந்தை எதிர்த்தவர் இருஷ்சியச் சதுரங்க ஆட்டக்காரர் திரு.விலாடிமியர் கிராம்னிக்(Wladimir Kramnik).மிக இளைஞர்.உலகத்தில் தலைசிறந்த சதுரங்க ஆட்டக்காரர் என்று நம்பப்பட்டவர்.

இவோராடான போட்டியில் ஆனந்து தோற்றுவிடுவார் என்றே மேற்குலகச் சதுரங்க ஆட்டக்காரர்கள்(Helmut Pfleger,Topalow)ஆரூடம் கூறினார்கள்.நேற்று வரையும் கிராம்னிக் ஆட்டத்தை மாற்றி 12வது ஆட்டத்தில் வெற்றியீட்டுவாரென்றே மதிப்பிட்டார்கள்.எனினும்,கடினமான ஆட்டங்களையெல்லாம் மிகச் சாதுரியமாகச் சரிசெய்து ஆனந்து வெற்றியீட்டியுள்ளார்(6,5:4,5).



ஒரு தமிழர்.ஆனந்துவின் வெற்றி எனக்கு மகிழ்ச்சியாய் இருப்பதென்று சொல்வதைவிட இந்திய மக்கட்கூட்டங்கள் குறித்த மேற்குலகச் சகதி மனதுக்கு மீண்டுமொரு அடியைப் போட்டிருக்கிறார் ஆனந்து.

ஆனந்தின் ஆட்டமானது
மிக அமைதியாவும்,
தவறுகளற்றதுமாக
இருந்ததாகக்
கூறப்படுகிறது.

ஆனால்,ஆனந்து கூறுகிறார்:"நான் வெளிப்பார்வைக்கு அமைதியாகவும்,தவறுகளுமற்று ஆடியதுண்மை.ஆனால், உள்ளே பெரும் உளநெருக்கடியில் தவித்தேன்.இந்தப் போட்டிக்காக ஆறுமாதகாலமாகக் கடும் பயற்சியில் ஈடுபட்டேன்".என்கிறார்.

கடந்த 14.10.2008 இருந்து 29.10.2008 இன்றுவரையும் பதினொரு சுற்று ஆட்டங்களைச் செய்துள்ளார்.12 சுற்று ஆட்டத்தில் எவரொருவர் முதலில் 6,5 புள்ளிகளை முதலில் பெறுகிறாரோ அவர் போட்டியில் வென்றவராகிறார்.

ஆனந்து கிராம்னிக்கை மூன்று சுற்றுக்களில் வென்றும், ஒரு சுற்றில் தோற்றும் மீதமான ஏழு சுற்றுக்களில் வெற்றி தோல்வியின்றிச் சமநிலையிலும் இருக்கிறார்.இப்போட்டியில் முதன்முதலாகப் பெருந்தொகையான பணம் பரிசாக வழங்கப்படுகிறது.வென்றவருக்கும் தோற்றவருக்கும் தலா ஆறு இலட்சம்(600.000.)யூரோக்கள் வழங்கப்படுகிறது.மொத்த பரிசுத்தொகை 15 இலட்சம்.மீதி மூன்று இலட்சம் உலகச்சதுரங்கச்சங்கமான FIDE க்குப்போகிறது.

இந்தச் சாம்பியன் பட்டத்தை ஆனந்து இராண்டாவது தடவையாகக் காத்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது!

உலகத்தில் கணினிக்கு நிகராகச் சதுரங்க ஆட்ட மூளையை ஒப்பிடுவது வழமை.இதுள் ஒரு தமிழரும் இணைகிறார்.

ஆனந்து ஜேர்மனின் லீகாச் சதுரங்க ஆட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாடன் பாடன் கிளப்புக்கு விளையாடுகிறார்.அவரது ஆட்டத் திறமைக்குக் காரணம் என்னவென்ற கேள்விகுப் பதில்:அவர் மிகச் சாதரணமாக அமைதியாக விளையாடுகிறார்.அவசரக் குடுக்கைத்தனமும்,ஆத்திரம் முட்டிய அமைதியின்மையும் அவரிடம் இல்லை.இதனால் பெரும்பாலும் தவறுகளின்றி விளையாடுகிறார்.

சதுரங்க ஆட்டம் மிகவும் கடினமானதென்று நான் சொல்லத் தேவையில்லை!
அது,மூளை நிரம்பியவர்களினதும்-முயற்சியுடையவர்களினதும் விளையாட்டு.

இவ்விளையாட்டில் தொடர் வெற்றிகளைக் குவிப்பவர்கள் பலரைக் கவனித்திருக்கிறேன்,அவர்கள் அனைவரும் மிக அமைதியானவர்கள்.ஆணவம் என்பது துளியுமற்றவர்கள்.இவ்விளையாட்டில் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்திய கஸ்பாறு(Garri Kasparow )இன்று இருஷ்சியாவான தனது தாயகத்துக்கு எதிராகக் கயிறு திரிப்பவர்.மேற்குலக அரசுகளின் வால்பிடியாக இருக்கிறார்.

ஆனந்து தமிழராக இருக்கவில்லை.இந்தியனாக இருப்பதாகவே படுகிறது.எதுவாக இருந்தாலென்ன?அவர் இந்திய வம்சாவழிகள் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

ப.வி.ஸ்ரீரங்கன்.
29.10.2008

2 comments:

Anonymous said...

ennaanga neenga visuvanadhana poyi thamilarungireenga? parpanar illeengala?

-kross kostin goyindu.

Sri Rangan said...

//ennaanga neenga visuvanadhana poyi thamilarungireenga? parpanar illeengala?//-kross kostin goyindu.


இந்திய மக்கள் சமுதாயமொரு கேடுகெட்டசமுதாயம்.அதை மொழிவாரியாகவோ அன்றித் தேசவாரியாகவோ இணைக்க முடியாதளவுக்குச் சாதியப் புதை சேற்றில் மூழ்கிப்போய்க் கிடக்கிறது.பொருளாதார வளாச்சியின் வேகத்துள்-மாற்றமடையுமொரு சமுதாய வளர்ச்சியுள் இந்த நிலப் பிரபுத்துவச் சகதி(வர்ண-சாதிய அமைப்புமுறை) அழிந்துபோவதற்கேற்றவாறு இந்தியச் சமுதாயத்தின் ஆன்மீக உறவுகள் இல்லை!மிகக் கேடான சமுதாயத்திடம்போய் என்னத்தைப்பேச?பார்ப்பனன்,பண்டாரி,பனியா,செட்டி,முட்டி,குடுவை,கோதாரி,பு...டை, போங்கடா...

ஈரான் : இசுரேல் மீதான பதிலடி

  ஈரான் : இஸ்ரேல் நேட்டோ தலைமையில் ஈரான் மீது படை எடுக்க நிச்சியம் ஈரான் , ஈராக் அல்ல .   சூடான் —பாலஸ்தீனத்திலிருந்து உலகு தழுவி உக்கிரைன் ...