மார்க்சினது மீள் வருகை:"ஆசிரியனின் மரணத்தில் வாசகன்-தொகுப்பாளன் பிறக்கின்றான்"
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மிகவும் காட்டமாக மார்க்சின்மீது முன்வைக்கப்பட்ட பல்கலைக்கழக அறிவுசார் விமர்சனங்கள்யாவும் மார்க்சியத்தின் முடிவு நெருங்கிவிட்டதாவும்-அது, இன்னுஞ் சில பத்தாண்டுகளில் நூதன சாலைக்குப் போய்விடுமெனப் பற்பல பேராசிரியர்கள் கருத்தாடினார்கள்.அவர்களுள் முக்கியமானவர் பிராங்பேர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஊவ வேர்த்((Uwe Wirth).இவர் பூவ்கா(Michel Foucault) மற்றும் தெரிதாவின்(Jacques Derrida) அடியொற்றிச் சிந்திக்கும் மாணவர்-பேராசிரியர்களுள் மிக முக்கியமானவர்.எனினும்,மார்க்சியமென்பதை வெறுமனவே சோவியத் யூனியனுக்குள் முடக்கும் அறிவுசார் விமர்சனங்களை கடந்த இரு தசாப்தாமக எதிர்த்துக்கருத்தாடியவர்களில் மிக முக்கியமானவர் பீட்டர் முல்லர்(Der Marxismus ist für mich kein nichthinterfragbares Dogma, sondern ein sehr wertvoller Beitrag zur Entwicklung der Wissenschaften und eine Anleitung zum selbständigen Weiterdenken.-Peter Möller)மற்றும், பேர்ளின் கும்போல்ட் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறைப் பேராசிரியர் கேர்பிறீட் முன்கிலர்(Es ist aber nicht mehr der Marx des Marxismus und schon gar nicht der Marx der Sowjetideologie, der dieses Interesse findet, sondern der schwierige, sperrige deutsche Wissenschaftler und Intellektuelle, der mitunter zu rhetorisch brillanten, mitreißenden Formulierungen imstande war und dann wieder seine Leser durch staubtrockene, hochgradig komplizierte, nicht selten auch noch mit mathematischen Formeln durchsetzte Überlegungen quälen konnte. In diesem Sinne ist Marx für seine Leser seit jeher ein Chamäleon gewesen.-Prof.Herfried Münkler).முதலாம்மவர் பீட்டர்: மிகவும் அடிமட்டத்திலிருந்து,மிகச் சாதரணமான கூலித்தொழிலாளியாகவிருந்து பின்னாளில் அரசியல் விஞானம்படித்து டிப்ளோமப்பட்டபெற்றவர்.இவரது மார்க்சியம் குறித்தான பார்வை மிக விரிந்த தளத்துக்கு நம்மை அழைத்துச் செல்பவை.
பீட்டர் முல்லரது மார்க்சியைப்பார்வையானது எனது மார்க்சியப் புரிதலுக்கு மிக நெருக்கமான சாதகமான பக்கங்களைத் திறந்துவிட்டது.இவரது பார்வையுள் மார்க்சியம் என்பதைச் சோவியத்துக்குள் முடக்கி அந்தத் தேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட விளைவுகளின்வழி புரிதலை அடியோடு மறுப்பது.இதுள் மிகச் சிறந்த முறையில் இவரது ஆய்வுகள் இன்றைய நடப்பாண்டில் நிதர்சனமாகிவருகிறது.கடந்காலத்தில் மார்க்சியம்,மார்க்ஸ் என்பது காலங்கடந்ததாகக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகங்கள் பல இன்று மார்க்சியத்தைப் புரிய முனையும் பல்கலைகழக மாணவர்களின் பெருக்கத்தால் தலையைச் சுவரோடு மோதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.இரண்டாமவர்:பேராசிரியர் கேர்பிறீட் முன்கிலர்.இவரது விமர்சனமானது இன்றைய நவலிபரால்களின் அரசியலைத் தோலுரிப்பது.கடந்த சோவியத் தகர்வில் உச்சி குளிர்ந்த ஜேர்மனிய அரசியல் வாதி-அமைச்சர் நோபேர்ட் புளும் (Norbert Blüms: "Marx ist tot, und Jesus lebt")"கிழக்கைரோப்பிய இடதுசாரிய முகாங்களின் தகர்வைக்கண்டு"மார்க்ஸ் இறந்துவிட்டார்,ஆனால்,ஜேசு நாதர் இன்னும் வாழ்கிறார்"என்றார்.இன்றோ வூப்பெற்றால் நாளிதழுக்கு-"வெஸ் டொச்ச சைற்றுங்குக்கு" முதலாளித்துவம் தோல்வியடைந்துவிட்டதென்று பேட்டியளிக்கின்றார்.இப்பத்திரிகை "West Deutsche Zeitung"போன கிழமைக்கானது எனது பொழுதுபோக்குத் தோட்டத்துக் குடிசையுள் கிடப்பதால் அதன் தேதியைத் தரமுடியாதுள்ளது.
நவலிபரல்களால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் பெரும் பல்கலைக்கழகங்களுக்குள் மாணவர்கள் தஸ் கப்பிட்டல் நூலை வாசகச் சுற்றுக்குவிட்டு சங்கிலித்தொடராக வாசிக்கின்றார்கள்.இத்தகைய பெரும் எண்ணிகையாகப் பெருகிவரும் இந்த ஆர்வத்துக்குக்காரணமாக அமைந்தது: இன்றையப் பங்குச் சந்தைச் சூதாட்ட நெருக்கடி.இத்தகைய பொருளாதாரச் சிக்கிலானது முதலாளித்துவத்தினது சந்தைப் பொருளாதாரப் பொறிமுறைவீழ்ச்சியைச் சொல்வதால் மாணவர்கள் மார்க்சிடம் பாடம் படிக்கிறார்கள் என்கிறது யுங்கே வேர்ல்ட் எனும் தினசரிப் பத்திரிகை.
ரொலான் பார்த்;(Roland Barthes) () மொழியில்கூறினால் "ஆசிரியனின் மரணத்தில் வாசகன்-தொகுப்பாளன் பிறக்கின்றான்" "La mort de l´auteur" vertretenen These, so ist der metaphorische Tod des Autors die Voraussetzung für die Geburt des Lesers: "la naissance du lecteur doit se payer de la mort de l´Auteur" (Barthes 1984: 67). என்பது,இன்றைய இந்தச் சூழலோடு பொருத்திப் புரியத்தக்கதாகவே இருக்கிறது."."(...)the birth of the reader must be at the cost of the death of the author" (Barthes 1977)பொருளாதாரத்தைச் சுற்றிய அனைத்துவகை மனிதவெளிகளும் தமது வெளிகளெல்லாம் சுருங்கும்போது அதன் காரணத்தை நோக்கிய கவனம் முதன்மையுறுவது தவிர்க்கமுடியாது நிகழ்கிறது.
ஆசிரியனின் முதல்வாசகன் தொகுப்பாளனெனும் எடிட்டர் வாசகர்களைத் தனக்குள்ளே கருத்தரிக்கிறான்(ள்).இத்தகைய கருத்தரிப்பு காலத்தால் தீர்மானிக்கப்படுவதன் தொடர்ச்சியாக மார்க்சின் மீள்வருகை பெரும்பாலும் அசாத்தியமான அறிதல்பரப்பொற்றை ஊக்குவிக்கப் போகிறது.இதன் உள்ளார்ந்த பலமே வர்க்கங்களாகக்கிடக்கும் மனிதக்கூட்டைப் புதுமையாகத் தரிசிப்பதும்,அந்தத் தரிசிப்பூனூடாக மனித நேசிப்பு, மானுடவிடுதலையென்பதெல்லாம் வர்க்க விடுதலையென்பதோடு தொடர்புடையதென்பதும்,அதன் இருப்பில்(வர்க்கச் சமுதாயமாகப் பிளவுற்றுக்கு கிடப்பது) கட்டப்பட்ட பொருளாதாரக் கடைந்தேற்றம் இதுவரையான மனித சுதந்தரத்தை எங்ஙனம் முடிச்சிட்டு ஒருவகை மனிதசமுதாயத்தைத் தோற்றுவித்துள்ளதென்பதை மாணவர்கள் மேலும் புரிவதற்கும் அதன்மீதான பார்வையினோடு மனிதவிடுதலைக்கான பரிணாமங்கள் புதிய உத்வேகமெடுப்பதற்கும் உலக தழுவிய புரட்சிகரமானவொரு கட்சி-அரசியல் மையமுறுவதற்கும் இன்றைய காலம் மீளவும் மார்க்சோடு கைகோர்க்கிறது.மாhக்சியம் என்பது மேலதிகப்பிரதியாகவோ அல்லது இன்னொருமாதிரியாகப் புனைவாகவோ எடுத்தாளப்படும் புரிதலையுடைத்து அது செயலூகத்துக்கான நடைமுறைச் சுமுதாயத்தை நிலவுகின்ற பொருளாதார அடிப்படையக்கொண்டு விமர்சனரீதியாகப் புரியும் நிலையை உருவாக்கிவிட்டுள்ளது.இங்கே தொடர்கிற இந்த ஊக்கத்தில் ஜேர்மனியச் சுயாதீனப் பல்கலைக்கழகங்கள் முதன்முதலாக மார்க்சியத்தைக் அரசியல் விஞ்ஞானக் கற்கை நெறிக்குள் கொணர்வதற்கான ஆயுத்தங்களில் மூழ்கியுள்ளார்கள்.
இது மாணவர்கள் வருங்காலத்தில் பொருளாதாரத்தை வெற்றியாக நடைமுறைப்படுத்துவதற்காகவே என்று கூறப்படுகிறது.இந்தக்கூற்று உண்மையாவதிலுள்ள சிக்கல் கென்றிபோர்ட் மார்க்சியம் கற்ற நோக்கத்துக்கிசைவாக இருக்குமென்றால் மீளவுமொரு பொருளாதாரச் சரிவும் யுத்தங்களும் மலியும் உலகைத்தாம் நாம் கனவுற முடியும்.
இந்தச் சுயாதீனமான பல்கலைக்கழகங்களின்வழி மாணவர்கள் மார்க்சியத்தை மிக நுணுக்கமாகக் கற்கும் சூழலில் மேலும் புதிய உத்வேகத்தோடு மார்க்சியத்தின்மீதான பன்முக வாசிப்பு நிச்சியம் நிகழும்.இன்று,ஒரு பீட்டர் முல்லரும்,இன்னொரு கேர்பிறீட் முன்கிலரும் நமுக்கு முன் மார்க்சியத்தைப் புதிய புரிதல்களோடு அண்மிப்பதுபோன்று,வரும் ஆண்டுகளில் பலர் உருவாகுவார்கள்.இந்தச் சூழலில் நவலிபரல்களின் பொருளாதாரச் சுற்றோட்டமும் அதுசார்ந்த சிந்தனாச் சிறைக்கூடமும்(...) தகர்ந்து,இயக்வியற் பொருள்முதல்வாதம் மேலும் இன்னொரு சமுதாயத்தின் தோற்றுவாய்க்கான அணிதிரட்சியை நிச்சியம்கொண்டியங்கும்.
ப.வி.ஸ்ரீரங்கன்.
23.10.2208.
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
No comments:
Post a Comment