Saturday, January 26, 2008

இந்தியாவின் அழிவு அரசியலுக்கு முகவர்களாக...

வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபை: நமக்கான கொலைக் களம்!

"மக்களே!
அந்நிய மிருகங்கள் உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டு,
உங்களது சுதந்திரமான பரிசுத்த மண்ணில் தீட்டுப்படுத்தி
நீங்கள் வாழ்ந்த இல்லங்களை மண்மேடுகளாக்கின.

உங்கள் குழந்தைகளின் பிரேதங்களை
சிங்களத்துத் தீக் குண்டுகளுக்கும்,
உங்கள் உறவுகளின் மாமிசத்தைத்
தெரு நாய்களுக்கும் இரையாக்கின

நீங்கள் வாழ்ந்த
மண்ணைச் சுற்றிலும்
உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல்
சிந்தின,உங்கள் உற்றோரினது
உடல்களையெல்லாம் மாற்றியக்கமென்றும்,
துரோகிகளென்றும் கதைவிட்டு
மண்ணெண்ணை,இரயர் போட்டெரித்தன ஈழத்தைப்போலவே!!!"



அன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே!

எமது தேசம் அந்நிய இனங்களிடம் அடிமையாகக்கிடக்கிறது.இந்த அடிமைத்தனமானது இன்று நேற்றாக ஆரம்பித்ததல்ல.கடந்த ஈராயிரமாண்டுகளாகத் தமிழ்பேசும் மக்கள் தம் அனைத்து உரிமைகளையும் படையெடுப்பாளர்களிடமும்,உள்ளுர் ஆதிக்கச் சமுதாயங்களிடம் பறிகொடுத்துள்ளார்கள்.இந்தவுரிமையானது வெறும் பொருளியல் சார்பு வாழ்வியல் உரிமைகளில்லை.மக்களின் பண்பாட்டு வாழ்வியல் மதிப்பீடுகளும் அது சார்ந்த மனித இருத்தலும் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.நமது பொருளாதார வலுவைச் சிதைத்தவர்கள் எம்மை அந்த நிலையிலிருந்து மீளவிடாது இன்னும் பொருளாதார,பண்பாட்டு ஒடுக்குமுறையால் பிரித்தாளுகிறார்கள்.நாம் நமக்கென்றொரு அரசையும்,பொருளாதாரப்பலத்தையும் பெறுவதற்குத் தடையாக இருப்பது நமக்குள் நிலவும் வர்க்க முரண்பாடுகளே காரணமாகிறது.இந்த முரண்பாட்டைச் சரியான வகையில் பயன்படுத்தி நமது மக்களை ஓரணியில் அணிதிரட்டுவதில் ஈழத்தமிழ் மக்களின் அரசியலானது சமீப காலமாக வலுவிழந்து விவேகமற்று நகர்கிறது.இந்த நகர்வானது நமது மக்களை வலுவானவொரு வெகுஜனப்போராட்டத்துக்குள் உந்தித் தள்ளி எமது மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான போரை ஏதேதோ காரணங்கூறி நசுக்கி வருகிறது.நாம் கையாலாகாத இனமாக உலகின் முன் நிற்கிறோம்.எங்கள்மீதான உலகத்தின் பார்வை குவிந்தபோது அதை நாசமாக்கிய மொனராகலத் தாக்குதலை எந்த நாய்கள் செய்தார்கள்?,சிங்கள அப்பாவி மக்களைப் பலிகொண்டு நமது உரிமைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதமாக்கிய சதி எம்மைப் பூண்டோடு அழிக்கும் அந்நிய நலன்களின் பிரதிபலிப்பாகவே இருக்கமுடியும்.அந்நியனுக்குக் கூஜாத் தூக்கும் தமிழ் இயக்கக் குழுக்களும் புலிகளும் நம்மைக் கேடான முறையில் அழித்த வரலாறு இன்னும் தொடரும்போது நாம் எங்கே நிற்கிறோம்?

பலம் பெறும் எதிரிகள்:

எதிரிகள் பல ரூபங்களில் நம்மைச் சிதைத்துத் தமது நலனை எமக்குள் திணிப்பதற்கான இன்னொரு வடிவமாக இந்த 13வது திருத்தச்சட்ட நிர்வாக அலகு மிக அண்மைய நாட்டின் விருப்பத்தின்-ஆர்வத்தின் வெளிப்பாடாக விரிகிறது.

நீண்டகாலமாகத் தமிழ்பேசும் மக்கள், கூட்டணிபோன்ற ஏகாதிபத்தியக் கட்சியால் சிங்கள இனத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்.சிங்களத் தரப்புத் தன்னை அணு அணுவாக அரசியலிலும்,கலாச்சாரத் தளத்திலும் பின்பு பொருளாதாரத்திலும் வளர்தெடுத்து வரும்போது, இவர்கள் தமிழர்களை வெறும் உணர்ச்சிவழி சிந்திக்கும் கூட்டமாகச் சீரழித்தார்கள்.இன்றைய நிலையிலோ ஆயுதக் குழுக்களின் ஈனத்தனமான கொலை அரசியலிலுக்குத் தமிழ் பேசும் மக்களின் அற்ப சொற்ப அரசியலுரிமையும் பலியாக்கப்பட்டு, அது ஆயுத தாரிகளின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டபின் இன்றுவரை ஈழத்துத் தமிழினம் ஏமாற்றப்பட்டுவருகிறது.இத்தகைய ஏமாற்று அரசியலுக்கு இதுவரை எமது மக்களின் இலட்சம் உயிர்கள் இரையாக்கப்பட்டுள்ளது!இதுதாம் இலங்கைத் தேசத்தின் இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் வடு!

இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம்.அன்று ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும்,இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள்.இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு ஆயுதக் குழுக்கள் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் சமர்பிக்கும் தீர்வு ஆலோசனைகள் அதுசார்ந்த நிர்வாக அலகுகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம்.


இன்று இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான புலி எதிர்ப்பு-புலி ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு,தம்மைத் தலைவர்களாக்கும் வியூகத்தைக் கொண்டிருக்கிறது.பி(ப)ணம் தின்னிகளான இந்த ஆயுததாரி மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள்.டக்ளஸ் தேவாநந்தா என்ற பயங்கரவாதியும்,புலிகளும் இப்போது நடாத்தும் அரசியலில் நமது மக்களின் நலன்கள்தாம் பலியாகிவிட்டது!இந்தியவோடுசோந்து இலங்கையும்,இந்த மக்களின் (தமிழ்பேசும் மக்கள்) உரிமைகளைச் சிதைத்து எம்மை நிரந்தரமாக அடிமைக்கூட்டமாக்கி விடுவதில் அதன் வெற்றி,இந்தக் கேடுகெட்ட13வது சட்டத்திருத்தத்துக்குள் வரையறுக்க முனையும் நிர்வாகசபை அரசியலால் உறுதியாகிவருகிறது.

எமது தேசிய அபிலாசைகள்:

நமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க-சாதிய-பிரேதேச நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைக்காக்கும் ஒரு அரசால் பாதுகாக்கப்படுவதை நமது எதிரிகள் எவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள்.இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது மக்கள் பயன்படுத்தி,அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.

நம்மை,நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை பன்முகக் கட்சிகள்-அமைப்புகள்,ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடிக்கத் தயாராகியபடி.இவர்களே தனிநபர் துதிபாடி,கேவலமான பாசிஷ்டுக்களை தமிழரின் பிரமுகர்களாகவும்-தலைவர்களாகவும்,மகாமேதைகளாகவும் ஒளிவட்டம் கட்டுகிறார்கள்.டக்ளஸ் தேவாநந்தனனோ அல்ல ஆனந்த சங்கரியோ பிரபாகரனுக்கு மாற்றான மக்கள் சார்ந்த அரசியலைத் தரப்போவதில்லை! இவர்களும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும் அந்நியரோடு சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டார்கள்.இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.இவர்கள் கூறும் ஜனநாயம்,சுதந்திரம்,இடைக்கால நிர்வாக சபை,13வது திருத்துச் சட்டப் பரிந்துரைகள் யாவும் வெறும் பூச்சுற்றலாகும்.

எமது சிந்தனைத் தளம் புனரமைக்கப்பட்டு,அது விவேகமாக நிர்மாணிக்கப்படவேண்டும்.இந்த நிர்மாணம் எமது தேசிய இன அடையாளத்தின் இருப்பை வலுவாக நிர்மாணிக்க வேண்டும்.எமது வரலாற்றுத் தாயகத்தை நாம்(இங்கே பாசிசப் புலித் தலைமையைக் கற்பனை செய்யவேண்டாம்.மாறாக, அவர்களோடு இணைந்துள்ள நமது குழந்தைகளைக் கற்பனை செய்யவும்) நிர்மாணித்துவரும் இன்றைய காலத்தில் எங்கள் மனங்களும் புனரமைக்கப்படவேண்டும்.இங்கே புலிகளின் தவறுகளைக்கொண்டே நம்மை நெருங்கிவரும் இந்திய வலுக்கரம் முறியடிக்கப்படவேண்டும்.இதற்கு நமது மக்களின் பூரணமான பங்களிப்பு அவசியமாகிறது.மக்களைச் சுயவெழிச்சுக்குள் தள்ளி அவர்களால் போராட்டத்தை முன்னெடுக்கத்தக்க சூழலுக்குத் தடையாகவுள்ள ஒவ்வொரு நாளியும் நமக்கு ஆபத்தே!மக்களைச் சுயமாகப் போராடாது தடுத்துவருபவர்கள் மக்களின் விரோதிகள் என்பது நமது நிலைப்பாடாகவே இருக்கிறது.எங்கள் மக்களின் தயவில் சாராத எந்தப் போராட்ட வியூகமும் இலங்கை-இந்தியச் சதியை முறியடித்து நமது மக்களை விடுவிக்க முடியாது.இது நாம் அறிந்த நமது போராட்ட அநுபவமாகவே இப்போதும் விரிகிறது.நமது போராட்ட இயக்கம் நமது மக்களைத் தொடர்ந்து ஆயுதங்களால் மிரட்டிப்பணிய வைத்தபடி நமது மக்களை முட்டாளாக்கி அந்நிய சக்திக்களுக்கு அடியாளாக இருப்பதை எமது இளைய தலைமுறை நிராகரித்துத் தமது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்திப் புலிகளைப் புரட்சிப்படையாக மறுசீரமைப்பது அவசியமென்பது இன்றைய எமது இழி நிலையிலிருந்து நாம் கற்கும் பாடமாகும்.இதைப் பின்தள்ளும் புத்தி ஆபத்தானது.

இரண்டு அரசஜந்திரங்கள்,அவைகளின் அமுக்கம்:

இன்றோ இரண்டு அரசஜந்திரங்களுக்குள் மாட்டப்பட்டிருக்கும் தமிழ்,முஸ்லீம் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது.இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது.இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது.இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும்.இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து புரட்சிகரமான படையணியாக மேலெழுந்தே தீரும்.அதை வழிநடத்தும் புரட்சிகரமான கட்சியாகப் புலிப்படையணி மாறுவது காலத்தின் தேவை.நாம் கால் நூற்றாண்டாகப் போராடியவொரு இனம்.தமிழ்சினிமாவுக்குள் தலை புதைத்த விடுபேயர்கள் நாம் இல்லை என்பதை நிருபிக்கும் ஒரு தலைமுறையானது தனது தகமையை உலகெங்குஞ் சென்று வளர்த்துள்ளது.இந்த இளைஞர்கள் அந்நிய வியூகத்துக்குத் தோற்றுப் போனால் நாம் எப்போதுமே விடுதலை அடைவது சாத்தியமே இல்லை.

பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடிக்கிறார்கள்.தமிழர்களை இராணுவத்தோடு சேர்ந்தழித்த ஈ.பி.ஆர்.எல:எப், ஈ.பி.டி.பி. புளோட் கும்பல்கள் ஒரு புறமாகவும்,மக்களால் அறியப்பட்ட பெரும் இந்தியக்கைக்கூலி ஆனந்தசங்கரி மறுபுறமாகவும் "13வது திருத்தச் சட்டமூலம் வடக்கு கிழக்கின்
மாகாணத்துக்கான இடைக்கால நிர்வாகசபையைத் தமது அரசியல் தந்திரத்தால் கிடைத்த வெற்றியாக" உரிமைகூறி பைத்தியகாரத்தனமாகக் கருத்தாடி நம்மக்களைக் கேவலமாகச் சுரண்டிக்கொள்ள முனைதல், மிகக் கேவலமானதாகும். தமிழரின் குருதியில் கும்மாளமடித்த காலங்களையெல்லாம் மறந்து- அவர்தம் கொஞ்சநஞ்ச பொருளாதாரவலுவையும் தங்கள் தேவைக்கேற்றவாறு காசாக்கிய கயமையை மறைத்து,இப்போது தமிழ்மாகாணங்களுக்கான இடைகால நிர்வாகசபையில் பன்முகத்துவ கட்சிகளின் பங்கை வலியுறுத்தும் இந்தப் பாசிசக் குழுக்கள் மக்களின் உயிர்வாழ்வின் அதிமுக்கியமான வாழ்விடங்களைச் சிங்கள ஆதிக்க ஜந்திரம் அதியுச்சப்பாதுகாப்பு வலையமாக்கி, இராணுவச் சூனியப் பிரதேசமாக்கிவைத்துள்ள அவலத்தைப்பற்றி பேசாது,நிர்வாகத்தில் தத்தம் பங்கை-பாகத்தைப் பற்றியானதான குரல்களைத் தமிழ்பேசும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களின் உரிமையாக இனம்காட்ட முனைதல் எவ்வளவு நரித்தனமான தந்திரம்!

எமது வாழ்வு பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு,மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலிலெமது மக்கள் வாழும்போது, சிங்கள அரசின் அத்துமீறிய யுத்தங்கள் கிழக்கிலும் வடக்கிலும் அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியது.இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து,இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த்த தமிழ்குழுக்கள்-கட்சிகள் இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு (தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காக) பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக எமக்கு முன் விரிகிறது!ஈழப் போராட்டத்துக்குப் பின்பான அரசியல் மக்களின் இருப்பிடங்களை விட்டுத்துரத்தியடித்தபோது,அவர்களின் வாழ்வாதாரத்தச் சொத்தைத் திருடிக் குவித்துள்ள செல்வங்களும் அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல கொலைகள் வீழ்ந்து வருகிறது.அரசியல் கொலைகள் எத்துணை அவசியமாக நமது நாட்டில் முன்னெடுக்கப்படுகிறது.இவற்றினூடாகக் காய் நகர்த்தித் தம் வலுவைத் தக்கவைக்க முற்படும் அதிகார மையங்கள் நம் இனத்தின் விடிவுக்கு வேட்டுவைத்தே இதைச் செய்கிறார்கள்.இப்போது,13வது அரைச் சனியன் நம்மை அண்டி வந்து,நமது மக்களைப் பூண்டோடு அழித்தே தீருவதெனக் கங்கணங்கட்டப் புலிகள் வாழ்விழந்து கிடக்க மக்கள் படும் துன்பமோ அரசியல் பகடையாக மாறுகிறது.என்ன மானங்கெட்ட தலையெழுத்து நமக்கு?

இந்த இழி அரசியல்சூழலுக்குள் சிக்குண்ட மக்கள் தம் உயிரைத் தினம் இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு,ஆயுதக் குழக்களின் அராஜகத்துக்கு இரையாக்கி வருகிறார்கள். மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?

மக்களின் பரிதாப நிலையும்,புலிகளின் மக்கள்சார-மறுப்பு வியூகமும்:

மக்களை அணிதிரட்டி இத்தகையச் சதி அரசியல் சாணாக்கியத்தை-இந்தியாவின் அத்துமீறிய ஆதிக்க அரசியல் காய் நகர்த்தலை முறியடிக்கும் எந்த முன்னெடுப்பும் இதுவரைப் புலிகளால் செய்து முடிப்பதற்கு அவர்களுக்கும் மக்களுக்குமான மிக நெருங்கிய உறவு பாழ்பட்ட ஒடுக்குமுறையாக இருக்கும்போது நமது மக்களின் எதிபார்ப்பு-அபிலாசைகளைச் சிதைத்த அரசியலின் இன்றைய விடிவு இதுவா? இன்றைய இந்தத் தரணத்திலும் மக்களின் நலனை முதன்மைப் படுத்தும் ஜனநாய விழுமியங்களை வென்றெடுப்பதற்கான எந்த முன்னெடுப்பும் புலி இயக்கத்துள் நிகழவில்லை.இதற்கானவொரு "பொதுச் சூழலை"எந்த அதிகார மையங்களும் எமது மக்களுக்குத் தந்துவிடவில்லைத்தாம், எனினும் இன்றைய சூழலில் இத்தகைவொரு போராட்ம் என்றுமில்லாவாறு அவசியமானது.எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.எனவே,புலிகளுக்குள் மக்களின் குரல்கள் ஓங்கியொலித்தாகவேண்டும்.இயக்கம் தனது கட்டமைப்பை "மக்களோடு மக்களாக நிற்கும்" பாரிய மறுசீரமைப்பைச் செய்தே ஆகவேண்டும்.இல்லையேல் தொடரும் சிங்கள-இந்தியக்கூட்டுப் புலிகளை அழித்து நமது குழந்தைகளின் கைகளிலுள்ள ஆயுதத்தைமட்டுமல்ல அவர்களது பொன்னான உயிர்களையும் பறித்துவிடப் போகிறது.

அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு,தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது.இதன் மறுவிளைவாகத் தமிழ்க் குறுந்தேசியவாதம் தமிழ் மக்களை வேட்டையாடும் சூழல் நிரந்தரமாகப்படுகிறது.

இந்த முரண்பாட்டைத் தொடர்ந்து யுத்தங்களால் கூர்மைப்படுத்தும் இலங்கை ஆளும் வர்க்கமானது இலங்கையின் இறைமையை எப்போதோ இந்திய- அந்நிய எஜமானர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது.இதுதாம் இன்றைய அனைத்து முரண்பாட்டையும் சிக்கலுக்குள் மாட்டி தமிழ்த் தலைமைகளை அடிமைக் கூட்டாமாகவும்,பிழைப்புவாதிகளாகவும் நிலைப்படுத்திய அரசியல் அவலமாக விரிகிறது.தமிழ் அரசியல் கிரிமனல்கள் 13வது சட்டத் திருத்தத்துக்குள் நமது சுயநிர்ணயவுரிமையை முடக்க எடுக்கும் அனைத்து நடவடிக்கையும் நமது மக்களின் தலைகளை முற்றுமுழுதாக உருட்டும் முயற்சியே.அப்பாவி மக்கள் அழிவுயுத்தால் தமது வாழ்விருப்பிடங்களையிழந்து,உயிரையிழந்து-உடமைகளையிழந்து,அகதிகளாக இடம்பெயர்ந்து வாழும்போது-அவர்களுக்கெந்த உதவிகளையும் செய்யமுடியாத போக்கிரி இயக்கங்கள்,இந்திய ஆளும் வர்க்கங்கள்,அரசியல்வாதிகள் வடக்குக் கிழக்குக்கான இடைகால நிர்வாக சபையில் முதல்வர்களாக உட்காருவதற்கு யாரு பாத்திரமுடையவர்கள் என்று திமிர்பிடித்து அலைகிறது.இத் திமிரோடான அரசியல்,படுகொலைக் களத்தை ஈழமெங்கும் உருவாக்கும்.அங்கே, இன்னும் எத்தனை மண்டையன் குழுக்கள் தோன்றுமோ அவ்வளவு மக்களின் அழிவு தொடரும்.இது முழுமக்களையும் காயடித்து அவர்களின் சுயவெழிச்சியை முடக்கி மக்களை அடிமைகளாக்கும் அந்நிய சக்திகளுக்காக நம்மை நாம் அழிப்பதாக வரலாறு விரியும்.

இந்தியாவின் அழிவு அரசியலுக்கு முகவர்களாக மாறிய தமிழ் அரசியல் சாக்கடைகள்,ஆயுதப் பயங்கரவாதிகள் மீதமுள்ள அப்பாவி மக்களின் சொத்தை சட்டப்படி கொள்ளையிடவும் தமது ஏவல்-கூலிப்படையளுக்கு நிர்வாகப் பலத்தைத் தேடுவது மக்களின் உரிமையல்லவே.இதற்கு எந்த சட்டச் சீர்திருத்தமும் தேவையில்லை.அப்பாவிச் சிறார்களை போரின் கொடுமையால் அநாதைகளாகி,பெற்றோர்களின்றிச் சிறார்கள் காப்பகங்களில் தமது வாழ்வைப் போக்கும்போதே அவர்களைக் குண்டுபோட்டுக் கொல்லும் வன்கொடுமைச் சிங்கள அரசை உலகத்துக்கு நியாயமான அரசாக இனம் காட்டும் அரசியலைத் தமிழ் மக்களின் விரோதிகள் செய்து முடிக்கும் தரணமே வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபையாகும்!இந்தத் துரோகமானது அன்று மலையகத் தமிழ் மக்களை நாடற்றவர்களாக்கியது.இன்று வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களையும் அதே நிலைமைக்குள் இட்டுச் செல்லும் அரசியலை இந்தியாவின் ஆலோசனையின்படி செய்து முடிக்கும் புலித்தனமான அரசியலாகப் புலி எதிப்புக் கூட்டம் நடாத்தி முடித்தல் நமது சாபக்கேடா அல்லது நமது மக்களை ஒடுக்கிய புலிகளின் பாதகமான அரசியல் நீட்சியின் விளைவா?


ப.வி.ஸ்ரீரங்கன்
27.01.2008

5 comments:

Anonymous said...

இதை கைவிட்டால் இருப்பதும் பறிபோகாதா?தீர்வுப்பொதி அவசியமில்லையா?தீர்வுப்பொதி கையளிக்கப்படும் இடம் பிழையேதவிர அது தவறல்ல.புலிகளிடம் இது கையளிக்கப்படுவது அவசியம்.அவர்கள்தானே போராடினார்கள்?

Anonymous said...

,d;iwa mtyepiy!!!

,d;iwa ClftpayhsHfs; vy;yhk; ,e;jr; r%f mikg;gpd; cw;gj;jpNa. ,tHfs; ngw;Wf; nfhz;l mwpTk; $l ,e;j nghUshjhu mikg;gpd; kWTw;gj;jpahFk;. ,tHfsplk; ,Ue;J ve;jtpjkhf khw;Wj; jPHitAk; Gjpa gbg;Gf;fisAk; Kd;nfhz;Ltu KbahJ.
,af;fq;fspd; Muk;gfhyj;jpy; Nrhryprk; vd;W fijj;jhHfNsad;wp mtHfshy; xU Gul;rpfu mikg;ig nfhz;LtuKbatpy;iy. Vnddpy; miuepygpuGj;Jtj;jpd; cw;gj;jpapy; cUthf;fg;gl;;l rpe;jidNa Nkd;ik nfhz;bUe;jJ. ,jdhy; xU Gul;rpfu fl;rp cUthfhkNy rpije;jJ.

,d;W kf;fSf;F mlf;FKiwahsHfs; nfhLf;Fk; jPHit jpzpf;f ClftpahsHfs; Kaw;rpf;fpd;wdH. ,tHfs; Vfhjpgj;jpa nghUshjhu mikg;Gf; nfhLj;j rpe;jidia kf;fs; kj;jpapy; tpijf;f ,irthf nraw;gLfpd;wdH. ,d;iwa ClftpayhsHfs; jhk; nfhLf;Fk; fUj;J vd;gJ ahH ve;j eyd; nfhz;L ,Uf;fpd;wJ vd;gij r%f mtyj;ij kWj;jNy fpukpdy; murpaYf;fhd ikag;Gs;sp (uahfud;) vd;w fl;LiuClhf Rl;bf; fhl;LtJ kpfr; rupNa.

Vd; jPHTg; nghjpgw;wp GypnajpHg;ghsHfs; ghuhl;bf; fUj;Jiua tsq;FtJk; mlf;FKiwahsHfspd; rpe;jid mwptpy; ,Ue;J ngw;w fUj;JiuahFk;. ,tHfs; vy;NyhUk; Gypfis tpul;btpl;L gpd;fjthy; Eioa Kw;gLfpd;wdH. ,tHfs; ghrPrk; vd vijf; $Wfpd;wdNu> kdpj cupikia kjpf;fhj rf;jpfs; vdf; $Wfpd;wdNuh. mijNa tuNtw;fpd;wdH.

mur gaq;futhjkhfTk;> gpuhe;jpa Mf;fpukpg;G tbtj;jpYk;> Vfhjpgj;jpaj;jpd; tbtj;jpYk; ,Ug;gij %bkiwf;fpd;wdH.
Rahjpgj;jpaj;jpw;fhf msTNfhs;jhd; vd;d vd;gij ,tHfshy; xU Rakhd Kbtpw;F tuKbatpy;iy. ,JNtjhd; ,tHfspd; gytPdkhFk;. ,tHfsplk; cs;s ClfNkyhd;ik ,tHfspd; epiyg;ghil kf;fspd; xU gFjpapduplk; ,Ue;J ghJfhf;fpd;wJ. ,tHfSf;F rHtNjr tpUJfSk; ,jd; nghUl;L fpilf;fTk; $Lk;.
gupRg; nghjpfs; nfhLf;fg;gLtNj ,e;j r%f mikg;ig ghJfhf;f Kw;gLk; egHfSf;Nf md;wp NfLnfl;l r%f mikg;ig khw;wg; NghuhLk; NghuhspfSf;f my;y. mtHfSf;F fpilg;gJ vd;dNth Jg;ghf;fpf; Fz;LfSk;> njUtpy; mdhijfshf gpzq;fshf mOfp tpLtijAk;> mtkhd tirnkhopfSk;> ,Ul;lbg;Gf;fSk; jhd; guprhff; nfhLf;fg;gLfpd;wJ.

Kjypy; muR vd;gNj xU xLf;FKiwr; rhjdk; vd;gij kWj;Jf; nfhz;L murhq;fj;ij Kz;L nfhLj;Jf; nfhz;bUf;Fk; ehlhSkd;wthjpfSk;> ,dthjj;ijf; ff;fpf; nfhz;bUf;Fk; rf;jpfs; Gul;rpfu khf;rPa gl;lq;fis nfhLj;Jf; nfhz;L kf;fis Vkhw;wpf; nfhz;L ,Uf;Fk; epiyia tuNtw;Fk; rf;jpfs; nghUk;ghd;ikahf ,Uf;fpd;wd.

jPHTg; nghjp Kd;itf;fpd;wNghJ mjpy; midj;J kf;fs; gpuptpw;Fkhd cupikfs; cs;slf;fg;gl;bUf;f Ntz;Lk;. mjpy; cs;s tplaq;fs; NeHikahf ,Uf;f Ntz;Lk;. Gypia fhuzk; fhl;b cupikfis nfhLf;f KbahJ vd;W thjpf;f KbahJ.
Gypiaf; fhl;b fhzp> ePjp> fhty; Nghd;wtw;wpid nraw;gLj;j KbahJ vd fUj;J Kd;itg;gJ $l NeHikapd;ikiaf; fhl;Lfpd;wJ. cupik Kd;itf;ff; NfhUk; NghJ $dpf; FWf;fj; Njitapy;iy. midj;J kf;fSf;Fkhd cupikia Kd;it.
Suthan
~~மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டமான உறவுகளில் தவிர்க்கமுடியாத வகையில் ஈடுபடுகின்றார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும் அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக> அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம்> அரசியல் என்ற மேற்கட்டம் எழுப்பப்பட்டு> அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன.
பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக> அரசியல்> அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை> அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றது.
வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில்> சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கு இருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு- அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்தூpமை உறவுகளோடு- இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறி விடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.
பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள்> அந்த மாபெரும் மேற்கட்டடம் முழுவதையுமே சீக்கிரமாகவே அல்லது சற்றுத் தாமதமாகவோ மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கின்ற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகின்ற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம்> அரசியல்> கலைத்துறை அல்லது தத்துவஞானத் துறைகளில்- சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத்துறைகளில்- இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.
ஓரு தனிநபர் தன்னைப் என்ன நிலைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை. அது போலவே இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதற்கு மாறாக> இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாகவே விளக்க முடியும்.
எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படவில்லை> புதிய> உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக்கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்க்கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்த பட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகின்றது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்.
வரிவான உருவரையில் ஆசிய> பண்டைக்கால> நிலப்பிரபுத்துவ> நவீன முதலாளித்துவ உற்பத்தி முறைகளை சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தைக் குறிக்கின்ற சகாப்தங்கள் என்று குறிப்பிடலாம். முதலாளித்துவ உற்பத்தி முறைதான் உற்பத்தியின் சமூக நிகழ்வில் கடைசி முரணியல் வடிவம்- முரணியல் என்பது தனிப்பட்ட முரணியல் என்ற பொருளில் அல்ல> தனிநபர்களின் ஜீவனோபாயத்தின் சமூக நிலைமைகளிலிருந்து தோன்றும் முரணியலே> ஆனால் முதலாளித்துவ சமூகத்தின் உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் உற்பத்திச் சக்திகள் இந்த முரணைத் தீர்ப்பதற்குரிய பொருளாயத நிலைகளையும் உருவாக்குகின்றன. எனவே இந்த சமூக அமைப்போடு மனித சமூகத்தின் வரலாற்றுக்கு முந்திய காலம் முடிவடைகிறது.(மார்க்ஸ்)

Sri Rangan said...

சுதனின் பாமினி எழுத்துக்களை யுனிக்கோட்டுக்கு மாற்றி...


இன்றைய அவலநிலை!!!

இன்றைய ஊடகவியலாளர்கள் எல்லாம் இந்தச் சமூக அமைப்பின் உற்பத்தியே. இவர்கள் பெற்றுக் கொண்ட அறிவும் கூட இந்த பொருளாதார அமைப்பின் மறுவுற்பத்தியாகும். இவர்களிடம் இருந்து எந்தவிதமாக மாற்றுத் தீர்வையும் புதிய படிப்புக்களையும் முன்கொண்டுவர முடியாது.
இயக்கங்களின் ஆரம்பகாலத்தில் சோசலிசம் என்று கதைத்தார்களேயன்றி அவர்களால் ஒரு புரட்சிகர அமைப்பை கொண்டுவரமுடியவில்லை. ஏனெனில் அரைநிலபிரபுத்துவத்தின் உற்பத்தியில் உருவாக்கப்பட்;ட சிந்தனையே மேன்மை கொண்டிருந்தது. இதனால் ஒரு புரட்சிகர கட்சி உருவாகாமலே சிதைந்தது.

இன்று மக்களுக்கு அடக்குமுறையாளர்கள் கொடுக்கும் தீர்வை திணிக்க ஊடகவியாளர்கள் முயற்சிக்கின்றனர். இவர்கள் ஏகாதிபத்திய பொருளாதார அமைப்புக் கொடுத்த சிந்தனையை மக்கள் மத்தியில் விதைக்க இசைவாக செயற்படுகின்றனர். இன்றைய ஊடகவியலாளர்கள் தாம் கொடுக்கும் கருத்து என்பது யார் எந்த நலன் கொண்டு இருக்கின்றது என்பதை சமூக அவலத்தை மறுத்தலே கிரமினல் அரசியலுக்கான மையப்புள்ளி (ரயாகரன்) என்ற கட்டுரைஊடாக சுட்டிக் காட்டுவது மிகச் சரியே.

ஏன் தீர்வுப் பொதிபற்றி புலியெதிர்ப்பாளர்கள் பாராட்டிக் கருத்துரைய வளங்குவதும் அடக்குமுறையாளர்களின் சிந்தனை அறிவில் இருந்து பெற்ற கருத்துரையாகும். இவர்கள் எல்லோரும் புலிகளை விரட்டிவிட்டு பின்கதவால் நுழைய முற்படுகின்றனர். இவர்கள் பாசீசம் என எதைக் கூறுகின்றனரே, மனித உரிமையை மதிக்காத சக்திகள் எனக் கூறுகின்றனரோ. அதையே வரவேற்கின்றனர்.

அரச பயங்கரவாதமாகவும், பிராந்திய ஆக்கிரமிப்பு வடிவத்திலும், ஏகாதிபத்தியத்தின் வடிவத்திலும் இருப்பதை மூடிமறைக்கின்றனர்.
சுயாதிபத்தியத்திற்காக அளவுகோள்தான் என்ன என்பதை இவர்களால் ஒரு சுயமான முடிவிற்கு வரமுடியவில்லை. இதுவேதான் இவர்களின் பலவீனமாகும். இவர்களிடம் உள்ள ஊடகமேலான்மை இவர்களின் நிலைப்பாடை மக்களின் ஒரு பகுதியினரிடம் இருந்து பாதுகாக்கின்றது. இவர்களுக்கு சர்வதேச விருதுகளும் இதன் பொருட்டு கிடைக்கவும் கூடும்.
பரிசுப் பொதிகள் கொடுக்கப்படுவதே இந்த சமூக அமைப்பை பாதுகாக்க முற்படும் நபர்களுக்கே அன்றி கேடுகெட்ட சமூக அமைப்பை மாற்றப் போராடும் போராளிகளுக்க அல்ல. அவர்களுக்கு கிடைப்பது என்னவோ துப்பாக்கிக் குண்டுகளும், தெருவில் அனாதைகளாக பிணங்களாக அழுகி விடுவதையும், அவமான வசைமொழிகளும், இருட்டடிப்புக்களும் தான் பரிசாகக் கொடுக்கப்படுகின்றது.

முதலில் அரசு என்பதே ஒரு ஒடுக்குமுறைச் சாதனம் என்பதை மறுத்துக் கொண்டு அரசாங்கத்தை முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்றவாதிகளும், இனவாதத்தைக் கக்கிக் கொண்டிருக்கும் சக்திகள் புரட்சிகர மாக்சீய பட்டங்களை கொடுத்துக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கும் நிலையை வரவேற்கும் சக்திகள் பொரும்பான்மையாக இருக்கின்றன.

தீர்வுப் பொதி முன்வைக்கின்றபோது அதில் அனைத்து மக்கள் பிரிவிற்குமான உரிமைகள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் உள்ள விடயங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். புலியை காரணம் காட்டி உரிமைகளை கொடுக்க முடியாது என்று வாதிக்க முடியாது.
புலியைக் காட்டி காணி, நீதி, காவல் போன்றவற்றினை செயற்படுத்த முடியாது என கருத்து முன்வைப்பது கூட நேர்மையின்மையைக் காட்டுகின்றது. உரிமை முன்வைக்கக் கோரும் போது கூனிக் குறுக்கத் தேவையில்லை. அனைத்து மக்களுக்குமான உரிமையை முன்வை.

-Suthan


~~மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டமான உறவுகளில் தவிர்க்கமுடியாத வகையில் ஈடுபடுகின்றார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும் அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக> அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம்> அரசியல் என்ற மேற்கட்டம் எழுப்பப்பட்டு> அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன.
பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக> அரசியல்> அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை> அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றது.
வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில்> சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கு இருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு- அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்தூpமை உறவுகளோடு- இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறி விடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.
பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள்> அந்த மாபெரும் மேற்கட்டடம் முழுவதையுமே சீக்கிரமாகவே அல்லது சற்றுத் தாமதமாகவோ மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கின்ற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகின்ற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம்> அரசியல்> கலைத்துறை அல்லது தத்துவஞானத் துறைகளில்- சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத்துறைகளில்- இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.
ஓரு தனிநபர் தன்னைப் என்ன நிலைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை. அது போலவே இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதற்கு மாறாக> இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாகவே விளக்க முடியும்.
எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படவில்லை> புதிய> உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக்கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்க்கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்த பட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகின்றது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்.
வரிவான உருவரையில் ஆசிய> பண்டைக்கால> நிலப்பிரபுத்துவ> நவீன முதலாளித்துவ உற்பத்தி முறைகளை சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தைக் குறிக்கின்ற சகாப்தங்கள் என்று குறிப்பிடலாம். முதலாளித்துவ உற்பத்தி முறைதான் உற்பத்தியின் சமூக நிகழ்வில் கடைசி முரணியல் வடிவம்- முரணியல் என்பது தனிப்பட்ட முரணியல் என்ற பொருளில் அல்ல> தனிநபர்களின் ஜீவனோபாயத்தின் சமூக நிலைமைகளிலிருந்து தோன்றும் முரணியலே> ஆனால் முதலாளித்துவ சமூகத்தின் உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் உற்பத்திச் சக்திகள் இந்த முரணைத் தீர்ப்பதற்குரிய பொருளாயத நிலைகளையும் உருவாக்குகின்றன. எனவே இந்த சமூக அமைப்போடு மனித சமூகத்தின் வரலாற்றுக்கு முந்திய காலம் முடிவடைகிறது.(மார்க்ஸ்)

Anonymous said...

தீர்வுப் பொதி!! மக்களுக்கான அரசியல் பற்றி யாருக்கு அக்கறை???????

தீர்வுப் பொதி> மக்களின் பிரச்சனைக்கான தீர்வு> ஒவ்வொருவரும் தத்தம் உள்ளாந்த விருப்பத்திற்கும்> பட்டறிவிற்கு உட்பட்டு எழுதிக் கொள்கின்றனர். இவர்களில் ஒரு சிலர் மக்கள் நலன் சார்ந்து எழுதுகின்றனர்.
இன்றும் சிலர் புலியெதிர்ப்பின் மையவாத நிலையில் இருந்து எழுதுகின்றனர்.
இன்றும் சிலர் சுரண்டுபவர்களின் சிந்தனையை பரப்பும் நிலையில் இருந்து எழுதிக் கொண்டு இருக்கின்றனர்.
இதில் மக்கள் சார்பாக நின்று சுரண்டுபவர்களின் கயமையை அம்பலப்படுத்தும் நிலையில் இன்றைய எழுத்தாளர்கள் பலர் நிற்கவில்லை. மாறாக சுரண்டுபவன் பக்கம் நின்றே கருத்துக்களை கூறுகின்றனர்.

தீர்வு என்று கூறும் பொழுது முதலாளித்துவ வர்க்க அமைப்பில் உள்ள உரிமைகளை உள்ளடக்கியதாகத்தான் இருக்க முடியும். இதில் மக்கள் நலன் என்பது கூட ஆழமாகப் பார்கின்ற போது அங்கும் ஒன்றும் இல்லை. இது சுரண்டும் வர்க்கம் தமக்கு இடையேயான சந்தையை பங்கிட்டுக் கொள்ளும் ஒரு சமரசமாகும்.
தீர்வுப் பொதி பற்றிய பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும் இதற்கான இறுதித் தீர்வு என்பது எவராலும் வைக்க முடியாது.
மக்களுக்கானது என்கின்ற போது குறைந்த பட்சமாக முதலாளித்துவம் வழங்கக் கூடிய அதிகபட்ச முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளைத் தான் வேண்டி நிற்க வேண்டும். இதுதான் தீர்வுப் பொதியில் அடங்கியிருக்க வேண்டும். இதன் பொருள் ஒரேநாளில் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று எவரும் நம்புவதில்லை.

அது மக்கள் தடது உரிமையை தாமே நிர்ணயம் செய்கின்ற போதுதான் அவை பெற முடியும் இது மக்கள் போராட்டத்தின் ஊடாக பெறப்பட முடியும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் முதலாளித்துவ ஆட்சியாளர்களால் முன்வைக்கப்படும் தீர்வுகள் சந்தையை பங்கிட்டுக் கொள்ள மேற்கொள்ளப்படும் ஒரு சமரச ஒப்பந்த முயற்சியேயாகும். இங்கு இரண்டு இனத்திலும் உள்ள சுரண்டும் வர்க்கத்தினர் சந்தையை பங்கிட்டுக் கொள்ளும் ஒரு ஒப்பந்தம்.

இதில் செழியன்> சிறிரங்கன்> மற்றும் ரயாகரன் மீதான விமர்சனத்தை வைப்பவர்களில் இ.பி.ஆர்.எல்.எவ்> ஈரோஸ் தொடர்புடையவர்கள் தம்மை மார்க்சீயவாதிகளாக இப்பவும் நம்புபவர்கள் மார்க்சீய அரிவரிப் பாடத்தை அறியாது எழுகின்ற எழுத்துக்களை அலடச்சியம் செய்ய முடியாது. இதிலும் இவர்களின் அறியாமை என்பது ஒரு புறமிருக்க செழியன் போன்றவர்களின் உட்கட்சிப் போராட்டத்தை அறியாமலும் அவர்களின் உணர்ச்சியினை (யிpநயட வழ நஅழவழைn) சீட்டி அவர்களின் வெளிப்பாடை ரசிக்கும் மனப்போக்கினையும் காணமுடிகின்றது.

மார்க்சீயம் லெனினிசம் என்று இன்னும் பலவற்றை இவர்கள் கற்றுகு; கொண்டிருக்கின்றார்கள் புலியிசத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டு பறந்தோடிவிட்டார்கள்……….
இவ்வாறு கவிஞர் எழுதியது போல வெளிநாட்டிற்கு சென்றவர்கள் துரோகிக்கள் என இவரும் கூறுகின்றார்; போலும்.
மேலும் தோழர் சண்முகதாசன் இனங்களுக்கிடையோன சந்தேகத்தை போக்க வேண்டிய தேவை பற்றி எழுதிவிட்டே மறைந்து விட்டார். இவர் உழைக்கும் வர்க்கத்தின் மிகப்பெரும் தலைவர்களில் ஒருவர்தான் இவரும் தமிழ்தேசிய குறுங்குழுவாதத்தைப் பற்றி 25 வருடங்களுக்கு முன்ன்ரே விமர்சித்திருக்கின்றார். ஆனால் அன்று அவரைத் து}ற்றியவர்களே. இன்று புலியின் குறுங்குழுவாதத்தை விமர்சிக்கின்றனர். இதுதான் வரலாறு வரலாற்று நிகழ்வுகளை சரியாக புரிந்து கொண்டு விமர்சனங்களை முன்வைப்பது நல்லது.

ரயா> செழியன்> சிறிரங்கன் அவர்களே. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என மக்கள் விரோதிகள் கொடுக்கும் வினாவிற்கு பதில் கொடுத்து உங்கள் சக்தியை வீண்செய்ய வேண்டாம். மாறாக உங்களுக்கு இவர்கள் தலைவர்கள் அல்ல. உங்களுக்கு தலைவர்கள் உழைக்கும் வர்க்கமே அவர்களுக்கே கேள்வி கேட்கும் உரிமை இருக்கின்றது. மக்கள் விரோதிகளுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
Suthan

Sri Rangan said...

அன்புத் தோழர் சுதன் வணக்கம்!

தங்கள் கருத்துக்கள் எமை வலுப்படுத்தும்.

உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மிகவுண்மையானது!

உங்கள் கருத்துக்களோடு எனக்கு முழு உடன்பாடுண்டு.

இன்றைய சூழலில் நாம் நம்மைப் பார்த்துக் கேள்வியெழுப்பும் ஒடுக்குமுறையாளர்களின் ஏவல்களிடம் சிலவேளை நேரத்தை வீணாக்குகிறோம்.எனினும்,பொதுச் சமூகமட்டத்தில் விமர்சனரீதியாக நமதுபோராட்ட நிலைகளையும்,அதுசார்ந்த மதிப்பீடுகளையும் முன்வைக்கவேண்டிய நிலையில் அவர்களின் மழுங்கடிப்புகள் இருக்கும்.அவற்றை எதிர்கொள்வது சில வேளைகளில் அவசியமாகிவிடுகிறது!

நன்றி தோழரே தங்கள் சரியான கருத்துக்களுக்கு!

தோழமையுடன்,

ஸ்ரீரங்கன்.

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...