Monday, May 29, 2006

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்!


அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்?
மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை.

புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை!

சாவு எப்போது?

இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன்.

எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம்.

விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே!

என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள்.

நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு?

வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி...

ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன்.


என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம்.

எதுவானாலும் நடப்பது நடக்கட்டும்.

"Schweigen ist Silber
Vergraben ist Gold."

அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

69 comments:

Anonymous said...

ha ha ha

அடுத்த பதிவினை எதிர்பார்க்கிறேன்.

கொழுவி said...

//Schweigen ist Silber
Vergraben ist Gold."//

வெள்ளி கிடைச்ச வரைக்கும் சந்தோசம் எண்டு இருக்க வேண்டியது தானே.. எதுக்கு தங்கத்தை தேடி போவான்.. உது தான் சொல்லுறது பேராசை பெருநட்டம் எண்டு.. இதை நீங்கள் கிளிநொச்சியில் தொலைபேசி மூலம் புலிகளுக்கு அறிவித்து அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பதியலாமே..

ஈழநாதன்(Eelanathan) said...

சிறிரங்கன் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது உங்களுக்காக உயரும் குரல்களில் எனது குரலும் ஒன்றாக இருக்கும்

ஒரு சிறு சந்தேகம்.ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் புலிகளை இன்று தடை செய்யவிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இப்படி ஏதாவது செய்து தங்கள் பெயரைப் பாழாக்கிக் கொள்வார்கள் என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?

ஒரு ஜேர்மனிக் குடிமகனான உங்களின் மீது கைவைத்தால் என்ன நடக்குமென்று அவர்களுக்குத் தெரியாதா?

Sri Rangan said...

ஈழநாதன்,கொழுவி,வணக்கம்.
என்னைப்படத்துடன் தேடும் புலிகளின் பொறுப்பாளர்கள்
சுவெலம் நகரத்துப் பொறுப்பாளர்கள்.
எனது மனைவி கலைகொண்டு கணினி வயர்களைப் பிய்தெறிந்தும் இப்போது பதிகிறேன்.மகன் கணினிக்கு "கோட்"போட்டுள்ளான்.பெரும்பாலும் இதுவே கடைசிப்பதிவு.

Anonymous said...

ஸ்ரீரங்கன், நான் சொல்ல விரும்புவதையே ஈழநாதன் சொல்லியிருக்கிறார்.

நீங்கள் சொல்வது மெய்யாகவிருக்கும்பட்சத்திலே, நீங்கள் தொடர்ந்தும் பதிவிடுவதுதான் (அரசியலோ அல்லது அதைத்தவிர்த்தோ) உங்களின் இருப்பை எமக்குத் தெரியப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் உதவுமென நினைக்கிறேன்.

Anonymous said...

SRI RANGAN

YOU ARE BIG TIME LIAR
WHO WILL DO IT LIKE THAT IN WESTERN WORLD. THIS KIND OF SHOW OFF I DON'T BELIVE THIS STORY FROM BOTH SIDE ( YOUR OR GERMAN POORUPALLAR)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

I express my solidarity with you.I hope that they will not take such
stupid steps , when the opinion in EU is not favorable to them.If you want to remain silent as a matter of precaution or to end the agony of your wife and children i understand that.I am sure that this crisis will end soon and you
will continue to express ur views.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

I express my solidarity with you.I hope that they will not take such
stupid steps , when the opinion in EU is not favorable to them.If you want to remain silent as a matter of precaution or to end the agony of your wife and children i understand that.I am sure that this crisis will end soon and you
will continue to express ur views.

மு. மயூரன் said...

//இதை நீங்கள் கிளிநொச்சியில் தொலைபேசி மூலம் புலிகளுக்கு அறிவித்து அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பதியலாமே..//

பதிவர்கள் எவராவது முடிந்தால், வன்னியுடன் சிறீ ரங்கன் தொடர்புகொள்ள உதவி செய்யுங்கள். இதனை அங்கே தெரியப்படுத்தி பதிலொன்றை பெற்றுக்கொள்வது அவரது குடும்பத்தாருக்கு பாதுகாப்பானது.

தலைமைக்கு தெரியாமல் ஆடுகிற வால்கள் உலகம் பூராகவும் நிறைய இருக்கு.

வன்னிக்கு இதனை தெரியப்படுத்துவது (ஆதாரங்கள் போதுமான அளவு இருப்பதால்) மிகவும் நல்லது

இளங்கோ-டிசே said...

/சிறிரங்கன் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது உங்களுக்காக உயரும் குரல்களில் எனது குரலும் ஒன்றாக இருக்கும்./
ஈழநாதன் கூறிய அவ்வண்ணமே எனது எதிர்ப்பையும் இங்கே பதிவு செய்கின்றேன்.

நற்கீரன் said...

நீங்கள் கூறுவது சரியென்றால், புலிகளின் இச்செயல் வெக்கின்றது. அதுவும் ஒரு ஐரோப்பிய நாட்டில். காவல்துறை உதவியை நாடுங்கள். எதுவும் நடந்தால் மன்னிக்க முடியாத குற்றம் ஆகிவிடும்.

Sri Rangan said...

இரவி ஸ்ரீநீவாஸ்,டி.ஜே,மய+ரன்,நற்கீரன் மற்றெல்லோருக்கும் நன்றி.

இதற்மேல் ஒரு வார்த்தை எதுவும் எழுதுவேண்டாமென்று என் மனைவி பக்கத்தில் கதிரைபோட்டு உக்காந்து இருக்கிறார்.
புலிகள் குறித்து எதுவுமே எழுதப்படாதென்று குழந்தைமேல் சத்தியம் செய்யுபடி கோரிக் கொண்டிருக்கிறார்.குடும்பத்தைமீறி என்னத்தைச் செய்ய?

Anonymous said...

ஸ்ரீரங்கன்,

செய்தியைக் கேட்டவுடன் மனம் சிறிது நடுங்குகிறது.

உங்கள் பதிவுகளின் நீண்ட நாள் வாசகன் நான். இதுவரையிலும், எந்த பின்னூட்டமும் இட்டதாக ஞாபகமில்லை.

ஆனால், இச்செய்தியைக் கேட்டவுடன் ஏதாவது ஆறுதல் வார்த்தைகள் சொல்லவேண்டும் என்று மன எத்தனிப்பில் எழுதுகிறேன்.

மிகவும் மனம் நோகிறது.... எழுத்துக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்கள் நானறிவுது முதல் தடவையல்ல. எமது சமூகத்தில் நிலவும் சாபக்கேடு...

உங்கள் பாதுகாப்பில் கவனமெடுத்துக் கொள்ளுங்கள்...

தற்போது சேழியனின் வார்த்தைகளே நினைவுக்கு வருகிறது:

"எஞ்சியிருப்பவை கரித்துண்டுகளாயினும்
எழுதியே முடிப்போம்".

-தர்சன்

Anonymous said...

http://www.nitharsanam.com/?art=17719

இந்த இனணப்பில் பிள்ளையைப் பறி கொடுத்த தாயின் முகத்தைப் பாருங்கள் ஆயிரம் கதைகள் கண்கள் இரண்டும் கூறிவிடுகின்றன. மனித இரத்தத்தை சுவைத்த மாக்களின் வாரிசுகளா அல்லது மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தையா வளர்த்து விட்டுள்ளார்கள் அரசியலின் போர்வையில் ரயாகரன் கூறியது போல காட்டுமிராண்டிகளின் தேசங்கள்'' அதன் மக்கள் என்பது இவ்றாகவே மறுவுற்பத்தி செய்யப்படுகின்றர்.
எமது சமூதாயத்தில் புதியசிந்தனை வளர்ப்பதற்கு பதில் ஆட்டு மந்தைகளைத் தான் அரசியல் பரப்புரையாளர்களாக உருவாக்கி விட்டிருக்கின்றார்கள். இவர்களின் தன்னெழுச்சியான நடவடிக்கையின் மூலமும் தேசியம் தன்னுடைய கோர நகத்தை ஐரோப்பாவிலும் பதிக்கும் என்பதை நம்ப முடிகின்றது.

நிச்சயம் தங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க கூடியவர்கள் சிறிதாகவேனும் இங்கிருக்கின்ற புரட்சிகர சிந்தனை கொண்டவர்களே. அவர்களின் உதவியை நாடுவது சிறந்தது.

சிலர் கூறுவது போல பெயருக்காக நீங்கள் கூறுகின்றீர்கள் என்பதை அவர்களின் ரசிகர்கள்தான் ஏற்றுக் கொள்வார்கள். இங்கு தனிமனிதர்களின் நடத்தை என்பது கூட ஈழத்தின் இரத்தத்தின் மூலம் மனனோயாளிகளை உருவாக்கி வைத்திருக்கின்றது தமிழ் தேசியம்.
எனவே நீங்கள் கவனமாக இருங்கள்

ஈழத்தில் இருந்து புலிகள் புலம் பெயர் மக்களை நோக்கி ''மற்றையது ஒவ்வாரு நாடுகளிலுமுள்ள சிவில் சமூக அமைப்புக்களுடனும்இ முற்போக்கான அமைப்புக்களுடனும் உறவுகளை ஏற்படுத்துவதுடன் அவர்களூடாக தமிழர் அரசியல் நியாயங்கள் குறித்து குறிப்பிட்ட அரசின் இராஜதந்திரிகளுக்கும் அரசியல் தரப்பினருக்கும் விளக்கமளித்தல் அழுத்தங்களை பிரயோகித்தல்''
எனக் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் தமது உறுப்பினர்களுக்கு அரசியல் மயப்படுத்தியதின் தரத்தை தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் மூலம் வெட்கிக்தலைகுனிய வேண்டும்.
குறைந்தது புலிகள் தமிழ் தேசிய முற்போக்காளர்களையாவது தமது தளத்தில் தான் சுதந்திரமாக செயற்பட விடவில்லை. மற்றறைய தளங்கிளாவது சுதந்திரமாக இயங்க விடலாம். அதனைக் கூட அனுமதிப்பதற்கு இன்றைக்கு வெகுசனப் போராட்டத்தை வேண்டி நிற்கும் புலிகள் உணரவேயில்லை.

தாங்கள் மற்றும் ரயாகரன் ஆகிய இருவருமே தற்பொழுது மார்க்சீய லெனினிய சித்தாந்ததை மீளாய்வு> மறுபடிப்புச் செய்து வருகின்றீர்கள் உங்களை போன்றவர்கள் புலிகளாலும் புலியெதிர்ப்பு அணியாலும் தொந்தரவு வந்து கொண்டேதான் இருக்கும்.

சகோதரியே தங்களுக்கு ஆறுதல் சொல்லுவது என்பதிலும் பார்க்க தாங்கள் தங்கள் கணவருக்கு ஆறுதல் நீங்கள் கூறினால் மிகச் சிறந்தாக இருக்கும். அவர் கதைக்கும் அரசியலை கருத்தை விளங்காதவர்கள் மனோநிலை பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்வதற்கு தாங்கள் தங்கள் கணவனை நெருக்குதல் கொடுப்பதால் எந்தப் பயணும் இல்லை. மாறாக தங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையே வீண் பிரச்சகைகள் தான் தோன்ற இடமிருக்கின்றது. ஆகவே சகோதரியே தங்கள் கணவருக்கு நீங்களும் ஆறுதலாக இருங்கள்

சுதன்

தமிழரங்கம் said...

தோமையுடன் சிறிரங்கனுக்கு

சற்ற முன் தொலைபேசி மூலம் உங்களுடன் உரையாடினேன். இந்த அந்சுறுத்தல், மிரட்டல் உளவியல் ரீதியாக அடிபாணியவைப்பதே. நன்க தெரிந்த அவாகள், உங்கள் எழுத்துகளை தடுக்கும் ஓரு மறைமுகத் தாக்குதல் தான்;. இதை எதிர் கொண்டு போராடுவதும், உங்கள் நாட்டின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு உங்கள் பாதுகாப்பை கோருவதும் அவசியமானது.

அஞ்ச அஞ்ச மேலும் அச்சம் பெருகும். இது தான் புலியின் அரசியல் உத்தி. அச்சத்தை விதைப்பதும் பின் அதை அறுவடை செய்வதும் அவர்களின் கடந்த காலம் முதல் நிகழ்கால வரையினான புலி அரசியலாகும்;. அதாவது இது தான் தமிழ் தேசியம்;. இதன் மூலம் தான் மக்களைக் கட்டுப்படுத்துகின்றனர். தாம் மட்டும் ஏகபிரதிநிதியாகவும் இருக்கின்றனர். மரணம் ஒரு முறைதான். இது இயற்கையாகலும் இருக்கலாம் அல்லது செயற்கையாகவும் இருக்கலாம். அதற்காக மரணத்தைக் கண்டு அஞ்சி நடுங்கமுடியாது.

வாழ்வது என்பது உயிரின் தற்காப்பு விதி தான். ஆனால் வாழ்வதற்கே போராட வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்;. மரணம் வரை போராடுவோம். உங்கள் பதிவும் கூட ஒரு முன்மாதரியானது தான்.

தொடர்ந்தும் போராட வாழ்த்துகள். குடுமபத்தில் இதை ஒட்டிய உடன் விவதிப்பதை விடுத்து, வேறு நிலைமைக்கு மாறிச் செல்வதன் மூலம் சூழலை மேலும் இலகுவாக்க முடியும்.
பி.இரயாகரன்
29.05.2006

ஒரு பொடிச்சி said...

//உண்மையாய் இருக்கும் பட்சத்தில்!ha ha ha//

நீங்கள் ஒரு நகைச்சவை பதிவுகளை எழுதி வந்த ஆள் போலும்!
உயிர் குறித்த அச்சுறுத்தலைத் தெரிவிக்கிற பதிவிலும் அது "உண்மையாய் இருக்கும் பட்சத்தில்" எனவேதான் எழுதி கண்டிக்க முடிகிறது.
இது எங்க போய் முடியுமோ??
மேலே தர்சன் கூறியதை வழிமொழிகிறேன்.

Anonymous said...

சிறி ரங்கனால் புலிகள் பலவீனம் அடையப்போவதுமில்லை
அல்லது அவர்கள் போராட்டத்தை கைவிடப்போவதுமில்லை. ஈழநாதன்
கொமூவி போன்றவர்கள் புலி ஆதரவாளர்களாக இருந்தாலும்
கருத்துகளுக்கு மிகுந்த மதிப்பளிப்பவர்கள். சிறி ரங்கனை கொல்வதன்
மூலம் எதைஅடைந்து விடலாம் என்று எதிர்பார்க்கிறர்கள்
எதிரி இல்லையேல் நமக்கான வளர்ச்சி இல்லை.

சிறி அண்ணன் உங்களுக்கு எதுவும் நிழவும் கூடாது உங்கள் கருத்துகளை
சொல்வதையும் நிறுத்தவும் கூடாது. இதுவே எல்லோரது விருப்பமும்.


இப்படிக்கு
ரவி

Anonymous said...

(1) How come Mr.SRIrangan complaint here insted of german police?


(2)How did he know poorupalar gor order from Killinochee?

(3)How come he always blame on pullee?

(4)How come he is crying now? because his kids and wife. If that case how come he didn't say anything about when ever tamil kids killed by SRILANKAN FORCES

(4)Noboday can't stop his writing and he has RIGHTS whatever he wants TO write
BUT ALL I KNOW MR. SRIRANGAN IS BIG TIME TAMIL THUUUROOKEE(KAIKAI VANNEYAN)

Anonymous said...

u r a liar

முகமூடி said...

ஸ்ரீரங்கன், சிறிது காலத்துக்காவது உங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் செயல்படுங்கள். அருகிலுள்ள காவல்நிலையத்தில் உங்களிடம் இருக்கும் தகவல்களை பதிவு செய்யுங்கள். I express my solidarity with you.

வசந்தன்(Vasanthan) said...

சிறிரங்கன்,
ஒரு மின்னஞ்சல் போடுங்கள்.
maathahal@yahoo.com

Anonymous said...

ஒரு பொடிச்சி மேலே என்னுடைய பின்னூட்டத்தினையும் இன்னொருவரின் ha ha பின்னூட்டத்தையும் சேர்த்து நீங்கள் எழுதியதற்கான பின்னூட்டம் இது.

"உண்மையாகவிருக்கும் பட்சத்திலே" சொல்லித்தான் பதிலை எழுத முடியும். இதிலே என்ன நகைச்சுவையை நீங்கள் கண்டீர்களோ? ஸ்ரீரங்கன்மீது நண்பர் என்றளவிலே எனக்கு நிறைய மதிப்புண்டு. ஆனால், அவருடைய பதிவுகளினைத் தொடர்ச்சியாக வாசித்து வந்தீர்களென்றால், அவரின் உணர்வுமயப்பட்ட கருத்துவெளிப்பாடுகளில் அதீதப்படுத்துதல் புரியும். அவ்விதத்திலேதான் மெய்யாகவிருக்கும் பட்சத்தில் என்று குறிப்பிட்டேன். இது செய்தியின்மீதான நம்பிக்கையைக் குறித்ததேயொழிய, ஸ்ரீரங்கனின் உயிர் குறித்ததும் அவரது குடும்பத்தினரின் விசனம் குறித்ததுமான எள்ளலும் வரையறுத்துக்கொண்ட ஆதரவும் அல்ல. குறைந்த பட்ச நேர்மையோடு நீங்கள் ha ha என்றெழுதிய அநாமதேயத்தினையும் என் கருத்தினையும் பிரித்தேனும் எழுதியிருக்கலாம்.

ஸ்ரீரங்கனின் நிலை குறித்த பதிவிலே இது குறித்து எதுவும் தொடர்ந்து எழுத விரும்பவில்லை. ஆனால், உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்பியதைச் சொல்லாவிட்டால், பின்னாலே வருகின்றவர்கள் எப்படியாக அரசியலைத் தமக்காகச் சுற்றுவார்களென எனக்குத் தெரியும். அதனாலே சொல்ல வேண்டியதாகிவிட்டது.

வன்னியன் said...

How come, How come எண்டு பினாத்தி விட்டுப் போற பெயரில்லாததுக்கு,
நல்ல ஆராய்ச்சி.
உங்கள் முதற்கேள்வி என்வரையில் ஓரளவு நியாயமானதென்பதால் விட்டுவிடுகிறேன்.

வெருட்டுபவன் கிளிநொச்சியிலிருந்து கட்டளை பெறாவிட்டால் என்ன? வெருட்டுகிறான் தானே? யார் பொறுப்பு?

மூண்டாவது, வெருட்டுபவன் புலிப்பொறுப்பாளராயிருக்கும் வரை அப்படித்தான் குற்றச்சாட்டு வரும்.

நாலாவதுக்கு, சிறிரங்கன் எல்லாச் சந்தர்ப்பத்திலும் மெளனித்திருந்ததில்லை என்பது என் கணிப்பு. மேலும் முன்பு புலம்பியவனுக்குத்தான் பின்பு தன்னைப் பற்றிப் புலம்பும் உரிமையுண்டென்று சொல்ல நீங்கள் யார்?

Noboday can't stop his writing and he has RIGHTS whatever he wants TO write
இது சரி.

ஆனால் அடுத்தவரியில் அவர் துரோகி என்பது நிண்டகாலமாகத் தெரியுமென்று சொல்கிறீர். அந்தச் சொல்லைப் பாவித்துத்தான் நீங்களே சொன்ன உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

ஈழநாதன்(Eelanathan) said...

பொடிச்சி

உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்ற சொற்றொடரை முதலில் பயன்படுத்தியது நான் என்ற முறையில் நீங்கள் இது எங்கே போய் முடியுமோ என்று என்னைக் குறித்துக் கவலைப்பட்டதாக எடுத்து பதிலளிக்கிறேன்

சிறீரங்கன் சொல்லிவிட்டாரே என்பதற்காக அதனை நம்பித்தான் ஆகவேண்டும் என்று என்ன கட்டாயம்?அதேபோல சிறீரங்கனுக்கு கிடைத்த இந்தச் செய்தியின் நம்பகத்தன்மை பற்றி அடுத்த பந்தியில் நான் கேட்டவற்றை நீங்கள் படிக்கவில்லைப் போலும்.ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்யக் காத்திருக்கும் நேரத்தில் இப்படியான முட்டாள் செயலில் சிலர் இறங்குகிறார்கள் என்று சிறீரங்கன் சொல்லும்போது அதன் நம்பகத் தன்மையையும் உறுதிப்படுத்தவேண்டியிருக்கிறது.வழமை போல எல்லாவற்றையும் கண்டிக்கிறேன் என்று நடுநிலைப் பம்மாத்துப் பண்ண என்னால் முடியாது.

அதற்காக நான் இவ்வளவும் சொல்வதை புலிகள் இப்படிச் செய்யமாட்டார்கள் என்று நான் கூற வருவதாக நினைத்து இது எங்கே போய் முடியுமோ என்று இன்னொருக்காக் கவலைப் படவேண்டாம் புலிகள் செய்திருக்கிறார்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்,செய்யவும் கூடும் அதே மாதிரி சிறீரங்கன் எழுதுவதை நிறுத்த வைப்பதற்காக ஒரு சிலர் உன்னைக் கொலை செய்ய படத்துடன் தேடுகிறார்கள் என்று சிறீரங்கனிடம் சொல்லியிருக்கவும் கூடும் புலிகள் மட்டுமல்ல புலிகளை எதிர்ப்பவர்கள் கூட மண்டையில் நிறைய சரக்குடன் அலைகிறார்கள்.அதன் காரணமாக எதனையும் சந்தேகத்துடன் நோக்கவேண்டியிருக்கிறது

என்னால் ஒப்புக்குச் சப்பாணியாக ஆழ்ந்த அனுதாபங்கள்,நான் உன் பக்கம்,ஐயையோ என்று நாடக வசனங்கள் எழுதிக்கொண்டிருக்கமுடியாது வாயளவில் அனுதாபம் தெரிவிப்பதை விட செய்ய முடிந்ததைச் செய்வேன்.இதையே நேரடியாக சிறீரங்கனிடம் தொலைபேசியில் சொல்லியிருக்கலாம் இப்படியெல்லாம் விளக்கம் சொல்லிக்கொண்டிருப்பது கூட இந்தப் பிரச்சனையின் தீவிரத்தைத் திசைமாற்றிவிடக் கூடும் என நினைக்கிறேன்

ஒன்று மட்டும் சொல்கிறேன் இப்படியான நிலை தொடர்ந்தால் இயக்கம் மட்டுமல்ல ஈழம் கூட எங்கே போய் முடியுமோ என்ற கவலை எனக்கும் எப்பவோ வந்தாச்சு.மயூரன் சொன்னமாதிரி வாலுகள் எங்கேயும் உண்டு எல்லா வகைமாதிரியிலும்

Anonymous said...

நீங்கலெல்லாம் இருந்து தமிழின துரோகம் செய்வதைவிட சாவதுமேல்.

இதுதான் எனது தாழ்மையான கருத்து.

மலைநாடான் said...

//சிறீரங்கன் எழுதுவதை நிறுத்த வைப்பதற்காக ஒரு சிலர் உன்னைக் கொலை செய்ய படத்துடன் தேடுகிறார்கள் என்று சிறீரங்கனிடம் சொல்லியிருக்கவும் கூடும் புலிகள் மட்டுமல்ல புலிகளை எதிர்ப்பவர்கள் கூட மண்டையில் நிறைய சரக்குடன் அலைகிறார்கள்.அதன் காரணமாக எதனையும் சந்தேகத்துடன் நோக்கவேண்டியிருக்கிறது

என்னால் ஒப்புக்குச் சப்பாணியாக ஆழ்ந்த அனுதாபங்கள்,நான் உன் பக்கம்,ஐயையோ என்று நாடக வசனங்கள் எழுதிக்கொண்டிருக்கமுடியாது வாயளவில் அனுதாபம் தெரிவிப்பதை விட செய்ய முடிந்ததைச் செய்வேன்.இதையே நேரடியாக சிறீரங்கனிடம் தொலைபேசியில் சொல்லியிருக்கலாம் இப்படியெல்லாம் விளக்கம் சொல்லிக்கொண்டிருப்பது கூட இந்தப் பிரச்சனையின் தீவிரத்தைத் திசைமாற்றிவிடக் கூடும் //

ஈழநாதனின்மேற்குறிப்பிட்ட கருத்துக்களே எனக்குமுண்டு. இது தொடர்பாக வசந்தன்ஆக்கபூர்வமாக முயற்சிப்பது போல் தெரிகிறது. ஆகவே சிறிரங்கன் வசந்தன் குறிப்பிட்ட முகவரிக்கு மின்னஞ்சல் இடுவது நல்லது எனக்கருதுகின்றேன்.

ROSAVASANTH said...

http://rozavasanth.blogspot.com/2006/05/blog-post_114897579659155829.html

Anonymous said...

நீங்கலெல்லாம் இருந்து தமிழின துரோகம் செய்வதைவிட சாவதுமேல்.

இதுதான் எனது தாழ்மையான கருத்து. ''

1. ஐயா தாங்கள் நாட்டிற்குச் சென்று சிறுவர்களை தொழிலாளர் வர்க்கத்தின் வாரிசுகனை மலையக உழைப்பாளிகளின் வாரிசுகனை படையணியில் இருந்து நிறுத்தி விட்டு தங்களைப் போல உள்ளவர்கள்
மரணதண்டனைக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேறியவர்கள் இன்று சமூக அந்தஸ்துக் கருதி புலுக்கு கொடி பிடிப்பவர்கள் நீங்கலாக
உளவியில் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்கள் அப்படிப் பட்பவர்களின் செய்ற்பாடுகள் விபரீதமாக இருக்கும் இவர்களைப் ஒரு வகையினராகவே கருத்தூட்டம் விட்ட நபர் இருக்கின்றார். நீங்கள் இங்கு இருப்பதை விட உங்களின் விசாவில் அங்கு போராடும் சிறுவன் இந்த நாட்டில் இருப்பது சிறந்தது.

மனோநிலை பாதிக்ப்பட்டவராகவே இருப்பார்.

2.
புலி ஆதரவு நபர்கள் சிறிக்கு ஆதரவு தெரிவிக்கின்ற போது அவர்களின் கருத்தில் நம்பகத்தன்மை இருக்கின்றதா எனச் சந்தேகம் கொள்வதில் தவறிருப்பதாக தெரியவில்லை ஏனெனில் பலரது மரணத்தையிட்டு சந்தோசம் கொள்ளும் நபர்களாகவே அவர்கள் இருக்கின்றதும் ஒரு காரணம்.
கொலைகள் எத்தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டாலும் எதிர்க்கப்பட வேண்டும். மேலும் தமது முகத்தை மறைப்பதற்காக சிறியின் மீது தொடுக்கப்பட்ட அச்சுறுத்தலை மாத்திரம் ஏதிர்ப்பது ஒரு மனிதனின் உண்மையாக நிலைப்பாடாக் இருப்பதில்லை



எவை எப்படி இருப்பினும் ஈழப்போராட்டம் என்று தொ டங்கிய காலத்தில் இருந்து இன்றுவரைக்கும் அரங்கேற்றப்படும் கொலைப்படலம் ஈழ விடுதலைக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு எவ்வித நலனையும் கொடுத்து விடவில்லை. ஆனால் ஒரு நாட்டினுடைய தேசியத்தினுடைய மனிதவளம் என்பது வீணடிக்கப்படுகின்றது.

குழலி / Kuzhali said...

புலிகளின் இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது... இது நிச்சயம் சர்வாதிகாரம்...

மேலும் இந்த விடயத்தில் முகமூடி சொன்னதை செயல்படுத்துங்களேன்.

நன்றி

Anonymous said...

is it a joke Sri Rankan Anna if so i should really congratulate for getting all these people believing in you and expressing sympathy for your supposed threat.

do not think that i am a tiger supporter just coz i do not believe the threat is fact.

i am a sri Lankan Tamil who fled the country during the IPKF period (because of my family's political believes and threatened by EPRLF and EPDP)

as I was a child when i left the country i do not have any partiality for the tigers but as an interested party i do read all about sri lankan conflict and your view about the tigers

having said that i really think that either you are joking or day dreaming.

i do not believe the tigers will threaten an unpopular web writer for expressing his/her view.

can you justify why ou think they threatened you

theevu said...

//என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம்.//

வேடிக்கையான வரிகள்.உங்கள் நகரத்து பொறுப்பாளர்கள் உங்களை படத்துடன் தேடுவது.

புலிகளுக்கு இதுதான் வேலையா..
தேனி தளம்கூட உங்கள் கதையை நம்பாது

புலிகளின் தொண்டரடிப்பொடிகள் உங்களை பயமுறுத்தினார்கள் என்று சொன்னால் நம்புகிறேன்.

சின்னக்குட்டி said...

சிலபேருக்கு வாழும் போது தன்னுடைய மரணவீடு பார்க்கோணும் ஆசை வாறதாம்...சும்மா சொல்லுங்கோ...சும்மா பரபரப்புக்கு தானே... ஒரு இடது சாரி சிந்தனையாளன்..வெட்கமில்லையா....இப்படி பயப்படுறதுக்கு...
மன்னிக்கோனும் நீங்கள் நிஜமாக பயந்துகொண்டிருக்கிறீர்களென்றால்......

சின்னக்குட்டி said...

சிலபேருக்கு வாழும் போது தன்னுடைய மரணவீடு எப்படி இருக்கோணும் பார்க்கோணும் என்று ஆசை வாறதாம்...சும்மா சொல்லுங்கோ...சும்மா பரபரப்புக்கு தானே... ஒரு இடது சாரி சிந்தனையாளன்..வெட்கமில்லையா....இப்படி பயப்படுறதுக்கு...
மன்னிக்கோனும் இப்படி சொல்றதுக்கு நீங்கள் நிஜமாக பயந்துகொண்டிருக்கிறீர்களென்றால்......

Anonymous said...

சிறிரங்கனின் புலம்பலுக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்க வேண்டுமா என்று கருத்து எழுகின்றது. சிங்கள இராணுவத்தின் கொலைகளுக்கு வக்காளத்து வாங்கியும் தமிழர் கொலைகளை சிங்கள பினாமியாக நின்று மூடி மறைத்த இவருக்கு கொலை மிரட்டல் என்று ஒரு புூச்சாண்டி காட்டுகின்றார். என்னால் சத்தியம் பண்ணிச் சொல்லமுடியும். இது அப்பட்டமான சுத்துமாத்து!!

இவரதும், இவரது முன்னாள் கூட்டாளிகளான ராயகரன் போன்றவர்வர்களுக்கு இது தான் வேலை!! இவர் ஏதும் ஜேர்மனியில் குற்றம் செய்திருபப்பார்! அதை வைத்து நாடுகடத்த அரசு முனையும்போது உடனே புலிகளிடம் இருந்து கொலை மிரட்டல் என்று கதை விடுகின்றார்! ஒன்று மட்டம் தெளிவாகச் சொல்லமுடியும்!!
சகநண்பர்களே! ஈழத்தில் தினமும் 5, 6 தமிழர்கள் சிங்கள இராணுவத்தாலும், துணைக்குழுக்காலாலும் கொல்லப்படும்போது கண்ணீர் வராத உங்களுக்கு இவரின் புூச்சாண்டியைக் கண்டவுடன் கண்ணீர் வருகின்றதா? இந்த நபர் போன்றே முந்தி ராமராசனும் வானொலியில் புலிகள் திருட்டு என்று கதை விட்டு, நஸ்டஈடு வாங்கினவர்!! இந்தச் சிங்களப் பினாமிகளின் கண்ணீர் முதலைக்கண்ணீர் என்பது நிச்சயமாக உண்மை!!

உங்களின் அலுவல்களைப் பாருங்கள்!

eelavan

Kasi Arumugam said...

உங்கள் குரல் ஒலிக்கச்செய்யாமல் இருப்பது யாருக்குத் தேவையோ அவர்கள் இத்தகைய மிரட்டல்களுக்குப் பின்னால் இருக்கக்கூடிய சாத்தியம் உணரக்கூடியது. இந்த மிரட்டல்களிலிருந்து நீங்களும் உங்கள் குடும்பமும் விடுபட்டு சுதந்திரமாக வாழ உங்களுக்கு இறைவன் துணை செய்யட்டும். இந்த நேரத்தில் உங்களுக்கு என் ஆதரவையும் மிரட்டல்களுக்கு எதிர்ப்பையும் உறுதியாகப் பதிவு செய்கிறேன்.

Anonymous said...

என்னங்க உங்கட படத்தை வைத்துக்கொண்டு ஏன் உங்கள் நகரப் பொறுப்பாளர்கள் உங்களைத் தேட வேண்டும். உங்கள் நகரப் பொறுப்பாளர் என்றால் நிச்சயமாக உங்களைத் தெரிந்திருக்குமே. பொய் சொல்லும்போது கொஞ்சம் பொருந்தும்படியாவது கூறினால்தானே மற்றவர்கள் நம்புவார்கள். மற்றும் உங்களைக் கொலைசெய்ய தூண்டும் அளவுக்கு உங்களால் அவர்களுக்கு என்ன பின்னடைவு ஏற்பட்டது. உங்கள் எழுத்துக்களால்தான் ஐரோப்பிய ஒன்றியம் அவர்களைத் தடைசெய்ததா? நீங்கள் புலிகளைப்பற்றி பதிவில் எழுதும்போது பாசிசப் புலிகள் என்ற அடைமொழியைத் தவிர வேறெதுவும் அவர்களைப் பற்றி பெரிதாகக் கதைப்பதில்லையே. நீங்கள் நடுநிலைமைவாதியென்ற போர்வையில் அண்மையில்தானே ரிபிசி மற்றும் தேனியை விமர்சித்து எழுதினீர்கள். ஏன் அவர்கள் இந்தக் கொலைமிரட்டலை புலிகளின் பெயரில் விட்டிருக்கலாமே. ராமராஜனுக்கு மற்றவர்களின் பெயரில் அறிக்கை மற்றும் மிரட்டல்விடுவது கை வந்த கலையாச்சே.

-நாயகன்-

Anonymous said...

இது உண்மை என்பதுக்கு என்ன ஆதாரம், தன்னை பிரபல்யபடுத்திக்கொள்வதுக்கு மாற்றுக்கருத்துக்காரர் மேற்கொள்ளும் சின்னத்தனம் இவை போன்றவை, உண்மையை எழுது உலகுக்கு பயப்படாதே, பயந்தால் வாய்மூடி மவுனியாக இரு. பயந்தவனுக்கு வாழ்வெதற்க்கு?, எழுதுவது பொய் என்றால் பயந்துதான் ஆகனும்.

PKS said...

அன்புள்ள ஸ்ரீரங்கன்,

உங்கள் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும், உங்கள் குடும்பத்தின் அமைதிக்கும், நலத்திற்கும் என் பிரார்த்தனைகள்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

Anonymous said...

Don't write rubish like this ''can you justify why ou think they threatened you''

Don't write rubish. You dont know what is LTTE's policy.

But we know what is ltte's policy.
Who ever threatened by anyone that is wrong. That's it.

Anonymous said...

நல்ல மெகா சீரியல் , 'செல்வி' தோத்திடும்.உந்த பம்மாத்துக்கு பின் நூட்டங்கள் வேற.என்னப்பா புலியளுக்கு வேற வேலை இல்லயோ?
உப்படி ஒரு அனாமதேய புலம்பலுக்கு மரணதண்டனை விதித்து, உவரை பீடத்தில வைச்சு கதானாயகனாக்கிறதே?
அப்படி என்ன உருப்படியா புலிகளைப் பற்றி உவர் விமர்சிச்சிருக்கிறார்?உவராலா அப்படி என்ன புலிகளுக்கு இழப்பு வந்தது?உப்படி புரளி கிளப்பிறதால நன்மை அடையிறது இரண்டு பேர்.ஒன்று புலிகளை ஜ நாயகவிரோதிகளாகக்காட்ட விழைவோரும்,மற்றது தனக்கு சார்பாக அனுதாப அலை ஒன்றை உருவாக்கி தனது பதிவிற்கு விளம்பரம் தேட முனையும் சிறி ரங்கனுமே.

Anonymous said...

சிறீலங்கா புலனாய்வுத்துறையின் முகவராகச் செயற்படும் வைகை சிறி.
Saturday, 27 May 2006
இவர்தான் வைகை சிறி தற்பொழுது யேர்மனி வூப்பெற்றால் நகரில் வசிக்கும் இவர் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவா பழைய புளொட் உறுப்பினர். தற்பொழுது இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் யேர்மனி முகவராக செயற்பட்டு வருபவர். இலங்கையில் மாற்று குழுவில் செயற்பட்ட இவர் யேர்மனியில் நீண்டகாலமாக வசித்து வருபவர். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு ஆதரவாளர்களை இனம் கண்டு சுயவிபரங்கள் மற்றும் புகைப்படங்களை வழங்குவதிலும் இவர் மும்முரமாகச் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்.
குறிப்பாக யேர்மனியில் நடைபெறும் நிகழ்வுகளுக்குச் சாதாரணமாகச் சென்று மக்களோடு மக்களாக இருந்து சிறிய டிஜிற்றர் கமராக்களினால் படங்கள் எடுத்தும் பின்னுக்கு இருந்து தகவல்களைச் சேகரித்து சிறீலங்கா புலனாய்வு அமைப்புக்கு வழங்கி வருபவர். இதற்கு இவருக்கு பணமும் கிடைக்கின்றது. இவர் தற்பொழுது இனம் காணப்பட்டுள்ளார்.

யேர்மனியில் சிறீலங்கா தூதரகத்தினால் அண்மையில் மது விருந்துபசாரம் நடைபெற்றது. இதில் வைகை சிறீ உட்பட நொயிஸ் நகரத்தைச் சேர்ந்த மேலும் இருவரும் கலந்கொண்டு போதையில் இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

யேர்மனி நாட்டிலிருந்து கொண்டு இன்னொரு நாட்டுக்கு புனாய்வு வேலை செய்வது என்பது மாபெரும் குற்றமாகும். தற்பொழுது யேர்மனி புலனாய்வாளர்கள் இவர் மீது ஒரு கண் வைத்துள்ளார்கள். காலப்போக்கில் இவர் மக்கள் மத்தியில் இனம் காட்டப்படுவார்.

Anonymous said...

அட அட இவ்வளவு நாளும் தெரியாமல் இருந்திருக்கு சிறி ரங்கன மண்டையில போட்ட தமிழ் ஈழம் கிடைச்சு போடும் என்று. அப்ப போடவேண்டியது தானே. இந்த புலி குஞ்சுகள் செய்தஅடவாடிதனங்களால தானே இன்று உலகம் முளுவதும் இவங்கள பயங்கரவாதிகளெண்டு சொல்லுறாங்கள். இப்ப அடுத்தநடவேடிக்கைவரப்போகுதுபத்துவருசத்துக்கு முன்னம் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சர்வதேச நீதி
மன்றத்தில தாக்கல் செய்யப்பட்டுருக்கு. கெதில கிண்டபோறாங்கள்.எப்படா இவங்களபயங்கரவாதபடியல்லஇணைப்பாங்கள் எண்டு பாத்து கொண்டு இருந்தாங்கள் இப்ப வந்தி்ட்டுது. முன்ன பின்ன யோசிக்காத புலிக்குஞ்சுகளுக்கு இனி தொடர்ந்து வில்லங்கம்தான்.

Anonymous said...

ALL TAMIL BARKING DOGS,

LISTEN SRI RANGAN IS MUCH MUCH SAFER THAN TAMILS IN NORTHERN AND EASTER SRILANKA

SRI RANGAN IS NOT A POPULAR WRITER OR NOT POPULAR SOCIAL SERVICE WORKER

HE LIVIN IN WESTERN COUNTRY SO HE CAN REACH THE POLICE ANYTIME
WHY HE NEED TO COME THIS BLOG
ALSO THIS BLOG IS NOT LIKE AP CNN AFP ETC....

WHEN KIDS KILLED BY SRILANAKN ARMED FORCES NONE OF THE MOTHER F***KERS ( INDIAN TAMILS AND SRILANAKAN TAMILS) DIDN'T OPEN THE MOUTH THIS LOUDER

PLUS MOST OF THE SRILANKAN TAMIL DO CUT PASTE FROM ALL OVER EELAM MEDIA (THEY ARRE ACT LIKE BIG TIME PULLEE SUPPORTERS)

MR. SRIRANGAN DIDN'T EVEN SPENT SINGLE PENNY OR HELP TO OUR NORTH AND EASTERN TAMIL PEOPLE

SRIRANGAN AND RAYAGARAN ALL THEY BUNCH OF BULL SHIT. ALL TIME THEY ARE TALKING ABOUT AGAINST WESTERN COMPANIES AND MULTI NATIONAL COMPANIES. DO THEY DRINK COKE OR JSUT PLAIN WATER

SO ALL MOTHER F***KERS SHUT F***KEN MOUTH AND LEAVE THIS POST

IF YOU REALLY WANT TO DO GOOD JOB DO SOMETHING BETTER THAN THIS
GO COMPLAIN ABOUT SRILANKAN GOVERNMENT HOW THEY KILLEED INNOCENT TAMIL KIDS IN SRILANKA

Anonymous said...

அடுத்தநடவேடிக்கைவரப்போகுதுபத்துவருசத்துக்கு முன்னம் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சர்வதேச நீதி
மன்றத்தில தாக்கல் செய்யப்பட்டுருக்கு. கெதில கிண்டபோறாங்கள்.எப்படா இவங்களபயங்கரவாதபடியல்லஇணைப்பாங்கள் எண்டு பாத்து கொண்டு இருந்தாங்கள் இப்ப வந்தி்ட்டுது. முன்ன பின்ன யோசிக்காத புலிக்குஞ்சுகளுக்கு இனி தொடர்ந்து வில்லங்கம்தான்.

APPA IPKF SAITHAUVUUMM INTERNATIONAL COURT IKKU VARUMMOO (KILLING AND RAPING) ANY INDAYAVUUKKUU SANEEYAN PEEDEEKUMM ENRUU SULLREEINKAL

VSK said...

தனி மனிதத் தாக்குதல் என்பது எந்த வடிவினில் வந்தாலும் கண்டிக்கத்தக்கதே!

அனைவருக்காகவும் வேண்டுகிறேன்.

Anonymous said...

இவரை புலியள் 'படத்தை' வச்சுக்கொண்டு தேடுறாங்களாம். இவர் இருக்கிற 'நகரப்பொறுப்பாளராம் தேடுறது.
போய் ஜேர்மன் பொலிசிலை சொல்லிறது தானே! இவற்றை பெண்டாட்டி வேறை 'வயரை' புடுங்கிறாவாம். பாவம் மனிசி சொல்லியிருக்கும் சும்மா இனியும் 'சோசலிசம்', 'ஜனநாயகம்' , 'வர்க்கப்போராட்டம்', 'பல்தேசிய கொம்பனி' 'மாற்றுக்கருத்து' எண்டு மயிரப்புடுங்கினியள் எண்டால் எனக்குவாற கொவத்தில வயரைப் புடுங்கி விட்டிடுவன் எண்டு! இவற்ரை மகன் வேற 'கோட்' போட்டு வச்சிருக்கிறானாம். அவனுக்கே இவற்ற பம்மாத்து தாங்கேலாமல் போச்சுது. இவர் இங்கை வந்து அழுகிறார்.
இதில அவருக்கு அனுதாபச்சில்லெடுப்பு வேற!

ஒரு பொடிச்சி said...

//ஒன்று மட்டும் சொல்கிறேன் இப்படியான நிலை தொடர்ந்தால் இயக்கம் மட்டுமல்ல ஈழம் கூட எங்கே போய் முடியுமோ என்ற கவலை எனக்கும் எப்பவோ வந்தாச்சு.மயூரன் சொன்னமாதிரி வாலுகள் எங்கேயும் உண்டு எல்லா வகைமாதிரியிலும்//
அதில்ல ஈழநாதன், நகைச்சுவைப் பதிவு பற்றியது haha என எழுதியவருக்குத்தான்.
ஆனா சிறீரங்கனைத் தொடர்ந்து படிக்கிற அளவில் -மிகை என்பத ஒருவரது எழுத்தோட இயல்பா வைத்தால்கூட -
"மிரட்டல்" தொடர்பா அப்படி சொல்ல முடியாதில்லியா (மிகைப்படுத்தினாலும் மிரட்டல் மிரட்டல்தானே என்கிற அர்த்தத்தில) என்றுதான் எழுதினன்... அதைச் சந்தேகிக்கக் கூடாதென்றில்லை. பொதுவாக தொடர்ந்து படித்துவருகிறபோது இப்படி ஒருவர் கவனம் பெற செய்வார் என்பது யதார்த்தமற்றது என்பதோடு தமிழீழ வி.பு.கள் தொடர்பாக ரகசியமில்லாத நிறைய இயல்புகளைத் தெரிந்தவர்களாயுங்கூட நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடியவரிடமே -உண்மையாய் இருப்பின் என - ஆரம்பிப்பது அபத்தமாகத் தோன்றியது, எழுதினேன். உங்களைக் குற்றம் சாட்ட எழுதவில்லை.
எனது இந்தப் பின்னூட்டத்திற்கு முதல் வந்திருக்கிற (இனி வரப்போகிற) பின்னூட்டங்களிலும் ஒரு கவனம் பெறும் "உண்மையற்ற" முயற்சியாக இந்தப் பதிவு தெரிகிறது - அதை -அவர்கள்- சொல்கிற முறையிலேயேகூட - மிரட்டல் இருக்கிறது! படிக்கிறவர்கள் இது இணையமாப் போயிற்றுதே என ஆறுதல் தான் படலாம் போல இருக்கு :-(

(அநாமதேய பின்னூட்டர்கள் தொடங்கி) தங்களது எதிரி யார் என இன்னமும் முடிவுறுக்க முடியாத நிலையே அடிப்படைப் பிரச்சினை.

-/சுடலை மாடன்/- said...

வன்முறை வழியில் செல்லாத, ஆயுதமேந்தாத, தன் நோக்கத்திற்காக மற்றவரை வன்முறையில் ஈடுபடுத்தாத எந்த ஒரு மனிதரையும் வன்முறையால் அழிக்க நினைப்பதோ, வன்முறையைக் காட்டி எச்சரிப்பதோ கூட மனிதத்தன்மையற்ற செயல், அதை அனைவரும் கண்டிக்க வேண்டும். சில நேரங்களில் திரு.ஸ்ரீரங்கன் யாருக்காக எழுதுகிறார் என்ற கேள்விகள் எழுந்தாலும், அவர் சொல்ல வந்த விசயங்கள் பல சிந்திக்க வைப்பவை. அவற்றைப் பிடிக்காதவர்கள் பொருட்படுத்தாமல் செல்லுவதே சரி. அதை விட்டு இப்படி ஒரு மிரட்டலை விடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டியது, அது புலிகளின் தலையில் இருந்து உதித்தாலும் சரி, வால்களில் இருந்து உதிர்ந்தாலும் சரி.

இலங்கை வரலாற்றின் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் - இலங்கை அரசு-இராணுவமானாலும் சரி, சிங்கள அரசியல் கட்சிகளானாலும் சரி, தமிழ்ப் போராளிக் குழுக்களானாலும் சரி, அல்லது மோப்பமிட்டுக் கொண்டிருக்கும் ரா-உளவினராலும் சரி - எந்தப் பாம்பு, எந்தப் புற்றிலிருந்து கிளம்பி, எந்த நேரத்தில் யாரைக் கொலை செய்து அல்லது கொலை செய்யத் தூண்டி/மிரட்டி யார் மீது பழியை வீசும் என்பது தெரியாது. தடயங்களை விட பொய்களையும், பிரச்சாரங்களையும் நம்பியே பழக்கப் பட்டு அனைத்து தரப்பினருமே இரத்த வெறியர்களாக மாறிக்கொண்டிருப்பது தான் மிச்சம். அதுவும் குறிப்பாக தமிழர்களுக்குள்ளாக நடந்து வரும் இத்தகைய கொலைகள்/முயற்சிகள் ஈழமக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விடுதலையைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கின்றன என்பது மிகுந்த வேதனைக்குரியது.

நன்றி - சொ. சங்கரபாண்டி

வன்னியன் said...

சிறிரங்கன்,
உங்கள் பிரச்சினையைத் திசை திருப்பும் நோக்கமன்றி ஒரு அவசர பதிவு எழுத வேண்டி வந்தது. பொடிச்சி போன்றவர்கள் மேலே வந்து 'இது உண்மையாயின்' என்ற ஒற்றை வரியோடு கருத்துச் சொன்னவர்கள் மீது கேட்ட கேள்வி சம்பந்தமாக ஒரு பதிவது.
தனிப்பட்ட அளவில் உங்கள் மீதான பார்வையை வைத்து அப்பதிவு உள்ளது.
மற்றும்படி இப்பிரச்சினையை மலிவாக்கவோ, திசைதிருப்பவோ அப்பதிவு முயலவில்லையென்பதைத் தெரிவிக்கிறேன்.

இது உண்மையாயிருக்கும் பட்சத்தில்

வன்னியன் said...

மேலே பொடிச்சியின் பின்னூட்டம் வெளிவர முதல் (அல்லது பார்க்காமல்) இடப்பட்ட பதிவே அது. என்றாலும் பதிவு தனியே பொடிச்சியை முன்வைத்தன்று என்பதால் அது அப்பிடியே இருக்கும்.

ரவி said...

தலைப்பை பார்த்தவுடன் ஏதோ காட்டுல மாட்டிக்கிட்டீங்கன்னு நினைச்சேன்..

அப்புறம் தான் தெரியுது ஏதோ சீரியஸ் மேட்டருன்னு..

நான் எஸ்கேப்..

Anonymous said...

"பேய் அரசாண்டால்,பிணம் தின்னும் சாத்திரங்கள்"
இலங்கையில் பிறந்த தமிழ்ப் பெண் நான், எனக்கு தமிழ் ஈழம்; தேவையில்லைப் போன்ற உணர்வுண்டு.
அதைச் சொல்லும் உரிமை எனக்கு ;மறுக்கப்படிடுள்ளதே!!!; இங்கே எங்கே???? தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போற்றப்படுகிறது.
பவானி சிறீதரன்

Anonymous said...

//"பேய் அரசாண்டால்,பிணம் தின்னும் சாத்திரங்கள்"
இலங்கையில் பிறந்த தமிழ்ப் பெண் நான், எனக்கு தமிழ் ஈழம்; தேவையில்லைப் போன்ற உணர்வுண்டு.
அதைச் சொல்லும் உரிமை எனக்கு ;மறுக்கப்படிடுள்ளதே!!!; இங்கே எங்கே???? தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போற்றப்படுகிறது.
பவானி சிறீதரன்//
உம்மையும் பிறக்க வேண்டாம் என்று தான் கோத்தை நினைச்சிருப்பார். கொப்பர் விட்டிருக்க மாட்டார். அதுக்கும் தனிமனித சுதந்திரத்தைப் பற்றிக் கதையும்! சிறிதரன் என்று பாக்கவே தெரியுது! ராஜனி திரணகமவைக் கொன்று போட்டு புலிகளில் பழியைப் போட்ட வீரமிகு கனவான் சிறிதரனாக இருக்கும் என்று!

மற்றது ஒவ்வொருவனுக்கும் என்னபிடிக்கும் எண்டதற்காக போராடிக் கொண்டிருக்க இயலாது. ஒட்டுமொத்த சனம் என்ன நினைக்கும் எண்டதற்குத் தான் போராட்டம். மொத்தமாக ஈழம் வேணாம் என்றதற்காக கூ பேரை மப்பில்லாமல் கூட்டி ஆர்பாட்டம் செய்யுங்கோ பார்ப்பம். அதற்குப் பிறகு எத்தனை பேர் அதை விரும்புகினம் என்று!!

இத்தனையும் எழுதிப்போட்டு உமக்கு எழுத்துரிமை கிடைக்கவில்லை என்று புலம்பினால் என்ன அர்த்தம்! உமது கருத்தை எல்லோரும் தலையில் வைத்து கொண்டாட வேணும் என்று எதிர்பார்க்கின்றீரா?

Anonymous said...

shan-
well its nice story made inorder to become popular in the name of Puli. here (in Germany)even a child knows better that Puli cant make a single step towards what u cry about.

Anonymous said...

//பேய் அரசாண்டால்,பிணம் தின்னும் சாத்திரங்கள்"
இலங்கையில் பிறந்த தமிழ்ப் பெண் நான், எனக்கு தமிழ் ஈழம்; தேவையில்லைப் போன்ற உணர்வுண்டு.
அதைச் சொல்லும் உரிமை எனக்கு ;மறுக்கப்படிடுள்ளதே!!!; இங்கே எங்கே???? தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போற்றப்படுகிறது.
பவானி சிறீதரன் //

பவானி அக்கா,

உங்களுக்கு வாற உணர்வுகள் எப்படி தமிழரின்ர சுய நிர்ணயம் ஆகும்?உங்கட உணர்வுகளுக்கு நீங்கள் உங்கள் கணவரை அல்லோ நாட வேணும்.தமிழ் மக்கள் என்பது ஒரு கூட்டம் அது தனி நபர் இல்லை.இப்ப எத்தின தேர்தல்களில தமிழர்கள் தங்கட அரசியற் பிரதி நிதிகளைத் தேர்ந்தெடுத்திருக்கினம்?
கூட்டணியின் வட்டுக்கோட்டைத்தீர்மானம் முதல் தமிழ் மக்கள் தங்கட சுய நிர்ணய உரிமை எண்டா என்ன எண்டு தெளிவாச் சொல்லி இருக்கினம்.வேணுமெண்டா ஐ நா மேற்பார்வயில ஒரு வாக்கெடுப்பு வச்சுப் பாக்கலாமே தமிழர்கள் பிரிந்து போக விரும்புகினமா இல்லயா எண்டு.

உங்கட தனிப்பட்ட பிரச்சினையளுக்கூடாக ஒரு தேசிய வீடுதலைப் போராட்டத்தையும் அதன் முன்னணி போராட்டச் சக்த்தியையும் பார்ப்பது தான் உங்கள் எல்லாருக்கும் இருக்கும் வருத்தம்.சிறி ரங்க்கன் நல்ல ஒரு மன நல வைத்தியரை நாடி சிகிச்சை பெறுவதே நல்லது.
உந்த வசதியான நாடுகளில் இருந்து கொண்டு வலைப்பதியிற அக்காமாரே ,அண்ணாமாரே உங்களுக்கு தமிழ் மக்கள் மேல உண்மயான கரிசனை இருந்தா உந்த கணணியத் தூக்கி எறின்ச்சிட்டு வாங்கோ வன்னிக்கு , நீங்கள் சொல்லுற மக்கள் போராட்டத்தை நடத்துவம்.

அறிவிஜீவித் தனமாக எழுதுவதால் நாங்கள் மெத்தப் படிச்சனாங்க்கள் எண்ட நினைப்போட வலைப்பதியும், 'பெடிச்சி' என்னும் சொந்த்தப் பெயரை உடய அனாமதேய வலைபதிவாளருக்கு,
உங்கட எழுத்துக்கள் தமிழ் மக்களுக்கு விமோசனத்தைத் தேடித் தராது.ஆயுதப் போராட்டமே விடுதலையைப் பெற்றுத் தரும்.உந்த உன்னத உரிமைப் போராட்டத்தின் வீச்சில் ,உங்கட தனி நபர் அலம்பல்களும்,புலம்பல்களும்,வலைப் பதிவுகளும் அள்ளுப் பட்டுப் போகும்.
உங்களின் சுய விம்பத்தை தூக்கிப் பிடித்து நீங்களுமிழும் சுய புராண தம்பட்டங்களால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்?
வரலாற்றைப் படைப்பவரே ஈற்றில் வரலாற்றை எழுதுகின்றனர்.

வேற என்னையும் அனாமேதயம் எண்டு திட்டித் தீர்த்து ,உமக்கு இங்க கதைக்கேலாது ஏன்ண்டா நீர் புலி வால், நாங்க தான் அறிவுஜீவிகள் அதனால ,இது உண்மயா இல்லயா என்பதைக் கூட வினாவிற ஜன நாயக உரிமை கூட உந்த புலியளின்ட வாலுகளுக்கு இல்லை என்று முழங்கும் ஜன நாயகப்போராளி பொடிச்சியே உமது ஜன நாயகம் ஓங்கி வளரட்டும்.உங்களப் போன்ற நேர்மையற்ற மனிதர்கள் இருக்கும் இடத்தில் நான் ஒரு அனாமதேய புலி வாலாகவே இருந்து விட்டுப் போகிறேன்.

ஏனெனில் நான் எமது மக்களை,அவர்களுக்காக தமது இன்னுயிரை நித்தம் மாய்த்துப் போராடிக் கொண்டிருக்கும் உயர்ந்த மனிதர்களை,அவர்களின் தியாக வேள்வியை நேசிக்கிறேன்.

-இன்னொரு புலி வால்.
(புலி வால் எவ்வளவு நீண்டு கொண்டு போகுது ?)

தமிழரங்கம் said...

சிறிரங்கன் மீதான எதிர்வினைகள் மீது
பி.இரயாகரன்
31.05.06

சிறிரங்கனை அடிபணிய வைக்கவும், புலிகளின் ஏக பிரநிதித்துவத்தை பாதுகாக்கவும், விடப்படும் மிரட்டலின் ஒரு வடிவம் தான் இது. இது ஒன்று ஆச்சரியமானதல்ல. புலியின் தேசிய மொழியே, அவர்களின் பண்பாடே இது தான். ஆயிரம் ஆயிரம் உயிர்களை இப்படி பலியெடுத்தவர்கள், பலியெடுக்க அதற்குரிய சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டு இருப்பவர்கள். இதற்கு வெளியில் புலி தேசிய அரசியல் என்பதே கிடையாது. இதை சிறிரங்கன விடையம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.

இந்த அரசியல் செய்தி சிறிரங்கன் பதிவாக கொண்டு வந்தவுடன் பலர் பதறிப் போகின்றனர். மோட்டுக் கூட்டம் என்று மனதுக்குள் திட்டுகின்றனர். இதற்கு எப்படி பதிலளிப்பது என்று மண்டையை போட்டு குடைகின்றனர். பதிலளித்தோரின் கருத்துக்கள் சில இழிவானவை, நரித்தனமானவை. இது எப்படி இருந்தது என்றால், ஆணாதிக்கத்தன்மை கொண்டதாக இருந்தது.

ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால், இந்த ஆணாதிக்க (தமிழ்) சமூக அமைப்பு பெண்ணை மீளவும் கூண்டில் ஏற்றி மீள மீள எப்படி கற்பழிக்கின்றனரோ அதே போன்றதே இது. ஆணாதிக்கத்தை விமர்சிக்காத, ஆணாதிக்கத்தை பாதுகாக்கின்ற வடிவத்தில் இது கையாளப்பட்டது. எப்படி சமூகத்தின் பல்வேறுபட்ட பாத்திரங்கள் இதை அணுகுகின்றதோ, அப்படித் தான் இதுவும் கையாளப்பட்டது. இங்கு ஆணாதிக்கத்தின் இடத்தில் புலித் தேசியம் அவ்வளவே. வழக்கம் போல் பாசிசத்தின் தசையாட, உரோமங்கள் ஆட்டுவிக்கப்படுகின்றது.

1. நடந்த சம்பவத்தில் புலிகளின் தலைமையின் நேரடியான உத்தரவுக்கு அமைய இது நிகழவில்லை என்பதே சரியானது. உள்ளுர் அளவில் இது நிகழ்ந்த சாத்தியக் கூறே அதிகமானது. குறிப்பட்ட பிரதேசத்தை சேர்ந்தோர், தன்னியல்பாக இதை செய்திருக்கும் வாய்ப்பே அதிகமாக உள்ளது. இருந்தபோதும் இது புலிகளின் அரசியலுக்கு முரணானதல்ல. தலைமை இதுவாக இருப்பதால், அதில் பொறுக்கித் தின்னும் அணிகள் துள்ளிக் குதிக்கின்றனர்.

சிலர் வன்னி தலைமையுடன் தொடர்பு கொண்டு, இதை அணுக கோருகின்றனர். இப்படிக் கோருபவர்கள் ஒன்றில் அப்பாவிகளாக இருக்கவேண்டும் அல்லது நரித்தனம் கொண்ட சதியாளராக இருக்க வேண்டும். பொதுவாக தலைமை சரியாக உள்ளது, அணிகள் தான் தவறு இழைக்கிறனர் என்ற புலியின் வழமையான பிரச்சார உத்தியைச் சார்ந்தது. மற்றறொரு விதமாகவும் கூறலாம். ஜெயதேவனின் அண்ணன் எழுதியது போல், கீழ் அணியில் உள்ள இழிந்த சாதிகள் தான், இதைச் செய்கின்றது, மேலே உள்ள உயர்சாதிகள் இப்படி ஈடுபடுவதில்லை என்ற யாழ் மேட்டுக் (மோட்டுக்) குடியின் புலித் தேசிய வகைப்பட்டதாகவும் விளக்கலாம்.

வன்னியை அணுகுங்கள் என்பது, வன்னித்தலைமை இதை வேறுவிதமாக அணுகும் என்று நம்புவதே நம்ப வைப்பதே முட்டாள்தனம் தான். அவர்களின் அறியாமையின் உள்ளகத்ததையே இது பிரதிபலிக்கின்றது. மறுபக்கம் வன்னியுடன் தொடர்பு கொண்டு, மேலும் பலத்த மிரட்டலைப் பெற்று அடங்கியொடுங்கிப் போங்கள் என்ற உள்ளடகத்தை அடிப்படையாக கொண்டது.

வன்னித் தலைமையின் வழி தான், அவர்கள் அணிகள் இழிந்து சீரழிந்து இயங்குகின்றனர். மாற்றுக் கருத்தை புலிகள் எப்படி எதிர்கொள்வர்! கொலை, கைது, சித்திரவதையின்றி புலியின் தேசிய கட்டமைப்பே இயங்கவில்லை. இது தான் ஏகப் பிரதிநித்துவம்.

பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட அணுகுமுறைக்கு உட்பட்டுத் தான் கீழ் அணிகள் இயங்குகின்றன. தலைமை எப்படியோ, அப்படித் தான் அணிகள் இயங்குகின்றன. தலைமையுடன் பேசி இந்த விடையத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று நம்புவோம் என்றால், எமது மண்ணில் இவ்வளவு அவலங்கள் நிகழ்ந்து இருக்காது. அதாவது மக்கள் தலைமையாக இருந்திருந்தால், எங்கேயாவது ஒரு தவறு நிகழும் போது அதை திருத்தியிருக்க முடியும். தலைமையே கொலைக் கலாச்சாரத்தில் வாழ்கின்ற போது, மாற்றுக் கருத்தை எதிர்கொள்ள வக்கற்ற ஒரு நிலையில் இருக்கின்றது. அதன் பொது அணுகுமுறையே, விதிவிலக்கின்றி கொலை தான் அதன் தேசிய மொழியாகின்றது. மக்களுக்கும் புலிக்கும் இடையில் பரிமாறப்படும் மொழியே கொலைதான். மக்கள் வாயைப் பொத்தி, காதுக்கு பஞ்சை அடைந்து, கண்ணை மூடிக் கொண்டு வாழ்வதே வாழ்வு, இது தான் புலித் தேசியம்.

2. இது உண்மையாக நடந்ததா என்று ஒரு குதர்க்கம். ஒவ்வொரு தமிழ் மக்களும் இது போன்ற ஆயிரம் சம்பவங்களை சொந்த அனுபவத்தில் அறிவர். புலிக்கு பின்னால் கொடி பிடிக்கும் குருபக்த கும்பலுக்கும் கூட இது தெரியும். எம்மண்ணில் அன்றாடம் நடக்கும் புலி அல்லாத கொலைகளைக் கூட, நடக்கவில்லை என்று மார்பில் தட்டி சொல்பவர்கள் தான் புலிகள். நாங்கள் யாரை இதுவரை கொலை செய்தோம் என்ற கேட்பவர்கள் தான் இந்தப் புலிகள். ஆனால் எம் மண்ணின் நிகழ்வுகள், உயிருள்ள சாட்சியாக இந்த பொய்யையும் புரட்டுகளையும் எதார்த்தமாக இயல்பாகவே எல்லாவற்றையும் மறுக்கின்றது.

ஆயிரம் ஆயிரம் கொலைகள், புலிசெய்யாத கொலைகளாகவே காட்டப்படுகின்றது. யாரும், ஏன் அவர்களே நம்புவதில்லை. அப்படி இதை மீறி கூறினால் மரண தண்டனைதான் பதிலாக எதார்த்தத்தில் கிடைக்கின்றது. எமது தமிழ் சமூக அமைப்பில் இது போன்ற மிரட்டல் நேரடியாக வருகின்றதோ இல்லையோ, அந்த ஆணைச் சார்ந்து வாழும் பெண்ணும், உற்றார் உறவினரும் புலியை விமர்சிப்பதை நிறுத்த நச்சரிக்கின்றனர். அவர்களுக்கு நன்கு தெரியும் இதன் விளைவை. எம் மண்ணில் மூச்சுக்கு மூச்சு நடக்கும் கொலைகள், இதைவிட வேறு எதையும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவில்லை. தாய்மையும், தாய்மை சுமந்த தனது குழந்தைகளுடன் வாழும் எந்தப் பெண்ணும் மகனுக்காக, தனது கணவருக்காக இந்த மாதிரியான கொலைகாரக் கும்பலுக்கு அஞ்சி சதா அழுகின்றது. குறிப்பாக சமூக ரீதியான ஆணாதிக்க மற்றும் சமூக ஒழுக்குமுறையால் சமூகம் பற்றிய பின்தங்கிய பார்வை, அச்சத்தையும் அவர்களையே சிதைக்கும் அளவுக்கு புலி தேசிய கொலைக் கலாச்சாhரம் பரிச்சயமானதே.

தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த மொழி கூட கொலைதான். புலியை விமர்சித்தாலோ, அது எதார்த்த உண்மையாகிவிடுகின்றது. இதற்கு சாட்சியம், உண்மை பொய் என்ற விதண்டாவாதம் எல்லாம் கொலைகார பாசிசக் கும்பலின் கைதேர்ந்த தொழில்முறை மூடிச்சுமாற்றிகளுக்கு நிகரானது.

இந்த நிகழ்வை உண்மையா என்று கேட்பதும், பின் கொல்லப்பட வேண்டும் என்று கூறுவதும் கூட பாசித்தின் வக்கிரம் தான். இதையும் கருத்திட்டோர் இடையே நாம் காண்கின்றோம். என்ன வக்கிரம். புலித் தேசிய நாற்றம் தாங்க முடியாது, இணைய விவாதத் தளமே நாறுகின்றது.

சிறிரங்கன் பற்றி எழுதிய அவதூறுகள், அவர் மீதான அச்றுத்தலை மீண்டும் தெளிவாக உறுதி செய்கிறது. கொல்வோம் என்று கூறுவது கூட இங்கு பதியப்படுகின்றது. இது தான் அவர்கள். இது தான் புலித் தேசியம். அவர்கள் அதை பதிவிலேயே இட்டுள்ளதுடன், இப்படி அவரை குதர்க்கம் செய்வது அவர்களின் தேசியத்தில் சாதாரணமானது. யாருக்குத் தான் அவர்கள் பட்டம் கட்டவில்லை. பொம்பளைப் பொறுக்கி முதல் ஆயிரம் பட்டங்கள் எப்போதும் புலித் தேசிய மூளையில் தயாராகவே வைத்திருப்பவர்கள். இதையெல்லாம் தமது சொந்த நடத்தைகளில் இருந்து, மற்றவன் மீது காறித் துப்புவது தான்.

ஊரார் பணத்தில் சொகுசாக வாழும் கும்பல், மற்றவன் சொகுசாக வாழ தங்களைப் போல் இழிந்து வாழ்வதாக கூறுவது எதிரொலிக்கின்றது. சிறிரங்கன் ஒரு தொழிலாளியாக உழைத்து வாழும் ஒருவர். உங்களைப் போல் தண்டல் சோறு உண்டு, தூசணத்தால் சமூகத்தை புணர்ந்த விபச்சாரம் செய்பவரல்ல. அது உங்கள் தேசிய குலத் தொழிலாகிவிட்டது. காட்டுமிராண்டிகளாக இழிந்து போன, பண்பற்ற நீங்கள் தமிழ் மக்களின் பாதுகாவலர் என்று கூறுவதை, எந்த தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டதே கிடையாது. உங்களைப் போல் பொறுக்கித் தின்னும் கும்பல் மட்டும் தான் உங்கள் பின் அரோகரா போடுகின்றது.

தமிழ் மக்கள் வாயைப் பொத்தி, அடக்கவொடுக்கமாக ஏகபிரதிநிதிகளுக்கு கால்தூசு துடைத்து அடங்கி வாழும் பாசிச சர்வாதிகார அமைப்பை யாரும் திரிக்க முடியாது. அது அவர்களின் சொந்த நடத்தையால், அவர்களின் சொந்த அரசியல் நெறியால் நிர்வாணமாகவே உள்ளது. சிறிரங்கன் போல் ஆயிரம் ஆயிரம் பேர் இந்த அனுபவத்தையும் துன்பத்தையும் சதா அனுபவித்தபடி தான் வாழ்கின்றனர். இதற்கு யாரும் விளக்கு பிடித்து காட்ட வேண்டியதில்லை. அதை புலிகளே யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தின் போது தெளிவாக கூறியுள்ளனர்.

''விடுதலைப் புலிகளை அரசியல் அனாதைகளாக்கக் கூடிய, மேலும் இரு கோரிக்கைகள் வெகுஜன அமைப்பின் மூலம் எம்முன் கொண்டு வரப்பட்டு பேச்சுவார்த்தை தொடரமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது." என்று புலிகள் அறிவித்து நிராகரித்த அந்த இரு கோரிக்கை

1.மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்.

2.மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்.

இந்தக் கோரிக்கை "புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்" என்று கூறிய போது, பாசிசம் குதிராட்டம் போடுவதையே காணமுடியும். எந்த வகையிலும் இதை மக்களுக்கு நிராகரிக்கும் உரிமை புலிகளுக்கு கிடையாது. மக்கள் விரோதியான புலிகள் இதை மக்களுக்கு மறுத்தார்கள். இந்த உரிமை மக்களின் அடிப்படை உரிமையாகும். இதை நிராகரிக்கும் புலிகளின் வக்கிரமான மக்கள் விரோத போக்கு, வரலாறு காணாத வகையில் அனைத்து துறையிலும் விசுவரூபம் எடுத்துள்ளது. இன்று வரை இது தான் புலிகளின் அரசியலாக, ஒழுக்கமாக, படுகொலையாக நீடிக்கின்றது. சர்வாதிகார பாசிச மக்கள் விரோத வன்முறை அரசியலே, எப்போதும் மக்களின் அடிப்படை உரிமையை நிராகரிக்கின்றன. புலிகள் அதன் ஒட்டு மொத்த மக்கள் விரோதிகளாக இருப்பதையே, அவர்களின் துண்டுப்பிரசுரம் அன்றே அம்பலமாக்கியது. மக்கள் மக்கள் என்று வாய் கிழிய பிதற்றும் புலிகளின் உண்மை முகம், மக்களின் அடிப்படை மனித உரிமையை மறுப்பதை ஆதாரமாக கொண்டே எழுகின்றது. இவற்றை அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தெளிவாக்குகின்றன.

மக்களின் உரிமைகள் புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடக் கூடியது என்றால், மக்கள் விரோத கொடூரத்தை நாம் அவர்களின் சொந்த கூற்றின் ஊடாகவே புரிந்து கொள்ளமுடியும். அதி புத்திசாலியாக தனிமனித வழிபாட்டின் மூலம் நிறுவ முனையும் புலிகளின் தேசிய "மேதகு" தலைவர் பிரபாகரனினதும், புலிகளினதும் "தணியாத தாகமான தமிழீழக் கோரிக்கை" தமிழ் மக்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திர மறுப்பில், அதன் கல்லறையின் மீதே கோரப்படுகின்றது. தமிழீழம் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுத் தரப்போவதில்லை. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை, புலிகளை அரசியல் அநாதையாக்கி விடுமல்லவா. அதனால் புலிகள் தமது பாசிச தனிமனித சர்வாதிகார அதிகாரத்தில் மக்களை துப்பாக்கி முனையில் மந்தைகளாக, வாய்பொத்தி கைகட்டி தோப்புக்கரணம் போடவைத்துள்ளனர். இதைததான் ஏகபிரதிநிதித்துவம் என்கின்றனர்.

Sri Rangan said...

எங்களுக்குப் ப்பிளீஸ்சிட்டி அவசியமில்லை அன்பர்களே!எம்மை ஒடுக்குபவர்கள் புலிகளென்று அம்பலப்படுத்திய பின்பும்,புலிகளால் சட்டப+ர்வமாக மறுக்க முடியுமா? இதுவரை மறுக்கத் தெம்பில்லாது மௌனமாகக் கிடக்கும் ஜேர்மனியப் பொறுப்பாளர்களை பொலிசில் பிடித்துக் கொடுப்பதல்ல எமது நோக்கம்.மக்களுக்காகப் போராடும் ஒரு அமைப்பென்றால்-தம்மால்-தமது பிராந்தியப் பொறுப்பாளர்களால் தமிழர் ஒருவருக்கு விடப்படும் மரண அச்சுறுத்தல் குறித்து இதுவரை பதிலளிப்பது அல்லது அதுகுறித்துக் கருத்தளிப்பது அவர்களின் பொறுப்பில்லையா?ஆதாரத்தோடுதானே நாம் பதிவிட்டுள்ளோம்.இதோ இந்த எட்டப்பர்.கொம்முக்குப் போகவும் http://www.eddappar.com/content/view/57/26/ இங்கே அவர்களின் வால்கள்விடும் அடுத்த அச்சுறுத்தல்.

இவர்கள் வெறும் ஒழுகீனமான பேர்வழிகள்தாம்.மனிதவிரோதிகளே மற்றவர்களை இனவிரோதிகளாம்!

இரா.சுகுமாரன் said...

//எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம்.

விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே!//

கேட்பதற்கே மிகவும் வருத்தமான தகவலாக இருக்கிறது.

புலிகளின் இந்த நடவடிக்கை மிகவும் வருத்ததிற்குரியது. கண்டிக்கத்தக்கது.

Anonymous said...

Dear
-இன்னொரு புலி வால்.
(புலி வால் எவ்வளவு நீண்டு கொண்டு போகுது ?)'' -----

''ஏனெனில் நான் எமது மக்களை,அவர்களுக்காக தமது இன்னுயிரை நித்தம் மாய்த்துப் போராடிக் கொண்டிருக்கும் உயர்ந்த மனிதர்களை,அவர்களின் தியாக வேள்வியை நேசிக்கிறேன்.''

இந்த நிலைப்பாட்டை எவரும் எதிர்க்க வில்லை. மாறாக மக்களை மாக்களாக்கும் புலித்தலைமையையும் சுயநல அரசியலையும் தமது பாசிச கரத்தின் மூலமே மக்களை அடக்கி ஒடுக்கி ஆழ்வதையே எதிர்க்கின்றோம்.
மக்கள் தேவை என்பது சுனாமி கட்டமைப்பு பயண தேவை வெளிநாட்டிற்கு சென்றுதான் பேசவேண்டும் என்பதல்ல மாறாக உள்ளுரிலையே குளிர்ஊட்டிய அறைகளில் இருந்து பேசமுடியும்.
மக்கள் இன்று பயணத்திற்கான உத்தரவாதத்தைப் பெறுவதற்காகவே பகடைக்காய்களாக பயன்படுத்தப் படுகின்றனர். புலிகள் அன்று தொடக்கம் இன்று வரையும் மக்கள் கொல்லப்படுவதையே முதன்மையான போராட்டப் பாதையாக கொண்டுள்ளனர்> அவ்வகையான கொலைக்கும் பயந்துதான் உம்மைப் போன்ற பல லட்சக் கணக்கானவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இன்று நாம் நாட்டை விட்டு வெளியேறுதவதற்கு இரண்டு காரணங்களை முன்வைக்கப்படுகின்றது இதில பிரதானம் ஒன்று புலியின் சனநாயக மறுப்பு.
2> இனவாத அரசின் கொலைவெறி இவை இரண்டும் புலியின் அரசியலில் இருந்து பிறந்தது.
நாட்டை விட்டு வெளியேறியவர்கள் பெரும்பான்மையானவர்கள் பொருளாதார அகதியாகவே இருக்கின்றனர்> இவர்கள் முதலில் என்னதான் நடந்தாலும் பரவாயில்லை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என எண்ணிச் செயற்பட்டவர்கள். இவர்கள் தமது வசதிகளைப் பெருக்கிக் கொண்ட பின்னர். இன்று தமது சமூக அந்தஸ்தைப் பாதுகாத்துக் கொள்ள ஒதுங்கியுள்ள ஒரு புகழிடம் தான் ஏக பிரதிநிதிகளின் கூடாரம்.
இதில் இன்னொரு வகையினர் கருணா வை ஆதரிக்கின்றனர். இவர்கள் கூட உங்கட ஆட்களின் அரசியலால் உருவாக்கப்பட்டவர்ளே.

மக்கள் போராட்டம் என்பது தேன்கூட்டைக் களைப்பது போல் இராணுவத்தை சீண்டுவது அல்லது அவர்கள் உணர்வு பெற்று சக்தியாக அணிதிரள்ளவது. மக்களை பயம் கொள்ளவைத்து அரசியில் வலுக்கட்டாயமாக இணைப்பது அல்ல மக்கள் சக்தி.

சிறிரங்கள் மீது தொடுக்கப்பட்ட அராஐக நடவடிக்கை கூட புலிகளின் அரசியால் உருவாக்கப்பட்ட ஒரு இழிநிலையில் வெளிப்பாடுகளே.
இவற்றில் இருந்து வெளியே மக்களின் கோரிக்கையை அவர்கள் சார்ந்த தளத்தில் இருந்து வெளிக் கொண்டு வருவதும். அவர்களின் இருப்பை உறுதிப் படுத்துவது மாத்திரம் அல்ல அனைத்து இனங்களின் இருப்பையும் உறுதி செய்வது தமிழராகிக எனது கடமையாகும். இதன் மூலமே தமிழர்களின் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க முடியும். வெறுமனே ஆயுதங்கள் பேரம் பேசும் வலுவைக் கொடுக்கப் போவதில்லை.

Suthan

Anonymous said...

HI SRI RANGAN ANNA

I REALLY THINK YOU SEEKS CHEEP PUBLICITY LIKE NAMBI SAID

IF YOU ARE REALLY FEAR FOR YOUR LIFE WHAT SHOULD BE YOUR PRIORITY SEEK HELP AND NOT TO ANTOGONISE THE PEOPLE WHO ARE THREATENING YOU BUT SEE WHAT YOU ARE DOING

AS A SRI LANKAN BORN TAMIL WHO HAS SUFFERED PERSONAL LOSSES AT THE HAND OF SRILANKAN,INDIAN ARMIES AND TAMIL PARA MILITARY GROUPS I AM REALLY FED UP WITH PEOPLE WHO ARE TRYING TO UNDERMINE OUR FREEDOM STRUGGLE WITH THEIR PETTY GRIEVENCES AND DESIRE FOR CHEAP PULICITY LIKE THIS.

OH PLEASE GROW UP AND BE REALISTIC

ஈழநாதன்(Eelanathan) said...

கொழுவி said...
//Schweigen ist Silber
Vergraben ist Gold."//

வெள்ளி கிடைச்ச வரைக்கும் சந்தோசம் எண்டு இருக்க வேண்டியது தானே.. எதுக்கு தங்கத்தை தேடி போவான்.. உது தான் சொல்லுறது பேராசை பெருநட்டம் எண்டு.

Thanks kozuvi

Anonymous said...

தம்பி சுதன்,

என்ன சொல்லுறீர் ஒண்டுமா விளங்கேல்ல? அட நீங்க சொல்லுறது உங்களுக்கே விளங்காம இருக்கேக்க மற்றவைக்கு எப்படி விளங்கும்.
புலிகள் மக்களின் ஜன நாயகத்தை பறிக்கின்றனர் அழிகின்றனர் எங்கிறீர்கள்,ஆனால் மீண்டும் மீண்டும் ஏன் அந்த மக்கள் புலிகளை தங்கள் பிரதினிதிகள் என்று வாக்கு அளிக்கின்றனர்?மக்கள் யுத்தம் ,மக்கள் ஜனா நாயகம் எண்டு இன்றய இபிடிபி முதல் அன்றய இபி ஆர் எல் எப் வரை கிளிப்பிள்ளயள் மாதிரி ஒப்புவிகிறீர்கள் ஆனல் மக்கள் தான் பாவம் விளங்காம தொடர்ந்து உங்களைப் புறக்கணித்து வருகிறார்கள். ம் அப்ப யாரில பிழை?ஒண்டில் உந்த மக்கள் எல்லாம் ஒண்டும் தெரியாதா மோட்டுச் சனமா இருக்க வேணும்.
புலிகள் என்றால் யார் ?அவர்கள் ஏன் பலம் பெற்றனர்?ஏன் மக்கள் அவர்களை தமது பாதுகாவலர்களாக கருதுகிறார்கள்.ஏன் அவர்களுக்கு ஆதருவு தருகிறார்கள்?

என்ன புலிகள் வேறு தலமை வேறோ? அப்ப செத்த தளபதிகள் எல்லாம் தலவர் மார் இல்லயோ?
கடசியா இந்த சமாதான காலத்தில செத்த ரமணணும்,வீரமணியும் தலைவர் மார் இல்லயோ? நீங்கள் சொல்லுற பொய்களால தான் உங்களை சனம் நம்புவது கிடயாது.இதற்கு சிறி ரங்கனின் உந்த நாடகம் நல்ல உதாரணம்.

மக்கள் போராட்டம் எண்டா என்ன? அதை எப்படி நடத்தப் போறியள்?உங்களுக்குப் பின்னால எத்தினை சனம் நம்பி வரும் எண்டு நினகிறியள்?முதலில நீங்க உந்தக் கணணியில பொழுதுபோக்கா வலு பவுசா இருந்து உப்படி வார்த்தைகளை அடிச்சுக் கொண்டிருக்காமா ,வாங்கோவன் வன்னிக்கு.ஜெயபாலன்,சேரன்,பாருக் எல்லாரும் வந்து சுகமாத் தானே இருக்கினம்.உந்த ஜன நாயகம் எண்டு சொல்லுறியளே? உதத்தானே அமெரிக்கனும் சொல்லிறான்,சிரிலங்கா அரசாங்கமும் சொல்லுது,இப்டிபியும் சொல்லுது ரயகரனும் வரிக்கு ஒரு தரம் சொல்லி பயித்தியக் காரன் போல அலம்புது.

ஒருக்காச் சொல்லுங்கோ உந்த ஜன நாயகம் எண்டு நீங்கள் எல்லாரும் எதைச் சொல்லுறியள்?

தமிழரின் சுய நிர்ணய விடுதலைப் போரை தோற்கடிப்பதற்காகன ஜன நாயக உருமையையா? அதை எப்படி தமிழ் மக்கள் தாரைவார்பார்கள்?
ஆயிரம் உயிர்களைக் குடுத்தல்லவா நாம் இதுவரை பெற்றவற்றை பெற்றுள்ளோம்.எதை ,யாரை நம்பி நாம் எமது விடுதலைப் போரை கை விடுவது?

Sri Rangan said...

//Schweigen ist Silber
Vergraben ist Gold."//


கிட்லரின் அதீத கொடுமைக்குள் ஜேர்மனி இருந்தபோது,எங்கும் பாசிசம் தலைவிரித்தாடியது.
அங்கே கிட்லருக்கு எதிரான செயற்பாடுகள்>கருத்துக்கள் அற்ற நிலை.எதிர்த்தால் உடனடியாகக் கொலை.

இந்த நேரத்தில் அநியாயங்களைக் கண்டு :"மௌனித்திருப்பது வெள்ளிக்குச் சமம், இதைவிட அனைத்தையும் குழிதோண்டி ஆழப் புதைப்பது தங்கத்துக்குச் சமம்."

இப்போது தமிழ்ச் சமுதாயத்தில் புலிகளினது-சிங்கள அரசினது அநியாயங்களைக் கண்டு:இதில் எந்த நிலையை எடுக்கச் சொல்கிறார் கொழுவி?-திரு.ஈழநாதன் அவர்களே!

//வெள்ளி கிடைச்ச வரைக்கும் சந்தோசம் எண்டு இருக்க வேண்டியது தானே.. எதுக்கு தங்கத்தை தேடி போவான்.. உது தான் சொல்லுறது பேராசை பெருநட்டம் எண்டு..//-கொழுவி.

Anonymous said...

சிறி அதாவது புலிகளின் தேசியத்தலைவர் மட்டுந்தான் தங்கத்தை தேடி
போகலாம். சிறிரங்கனோ அல்லது புலிஎதிப்பு கருத்து கொண்டவரோ
வெள்ளியோடு நின்று விடவேண்டும். புரிந்து கொள்ளுங்கள்

அனனிமஸ்
-----------

ஈழநாதன்(Eelanathan) said...

என்ன சிறீரங்கன் அண்ணை இதுகூட விளங்கேலையா வெள்ளியை விடத் தங்கம் தானே பெறுமதி மிக்கது

Sri Rangan said...

//என்ன சிறீரங்கன் அண்ணை இதுகூட விளங்கேலையா வெள்ளியை விடத் தங்கம் தானே பெறுமதி மிக்கது //

வேதனையிலும் வாய்விட்டுச் சிரித்தேன்டா தம்பிப்பயலே!

Anonymous said...

//எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம்.

விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே!//

கேட்பதற்கே மிகவும் வருத்தமான தகவலாக இருக்கிறது.

புலிகளின் இந்த நடவடிக்கை மிகவும் வருத்ததிற்குரியது. கண்டிக்கத்தக்கது.///

ஜயோ சிறிரங்கனுக்கு கொலை மிரட்டல்! மனுசி எழுதவே வேண்டாம் என்று சொல்லி அவர் இரவில் எழுதுகின்றாராம் என்று கதை விட்டு, 3 பதிவுகள் எழுதிப்போட்டார்!! அதுவும் கணனி வயரைப் புடுங்கியும்!! யாருக்கு உந்த ரீல் சிறி??

அந்தக் காலத்திலிலேயும் யாழ்பல்கலைக்கழகத்தில் புலிகள் பிடிச்சுக் கொண்டு போனவங்கள் என்று அனுதாபம் தேடலாம் என்று ராயகரன் புலம்பிப் பார்த்தவர் தானே! என்ன ஆச்சு!! தன்னை தனியறையில் அடைச்சு வைச்சவையாம் என்று தனிப்பட்ட பிரச்சனைகளை மட்டுமே புலம்பித் திரிந்து, புலிக்காச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் ராயகரனுக்கு நல்ல தோஸ்து நீர்! அவர் பாணியிலேயே இப்ப கதை விடுகின்றீர்!!

உம் பதிவைகளைக் கண்டு அல்லோகல்லோப்படுகின்றமா? ஆமாம்! பெரிய அளவு சமூக மாற்றத்தை ஏற்படுத்தி தமிழ்மக்களுக்கான் தீர்விற்காய் அறிக்கைகளை விட்டால் பிரச்சனை தீரும் என்று புலம்புவர்களைக் கணக்கில் எடுக்காவிடினும் கூட உம் அறிக்கை கண்டு இந்திய நண்பர்கள் ஏமாறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம்!!

சிங்களத்து பேரினவாதிகளுக்கு சப்பை கொட்டும் பிழைப்பை எப்போது நிறுத்துகின்றீரோ, அன்று தான் உம் கண்ணிருக்கு சமுதாயத்தில் மதிப்புக் கிடைக்குமே தவிர, சிங்கள அடிவருடியாக இருப்பதால் அல்ல! ஆனால் நீர் மாறப்போவதில்லை என்பது எமக்குத் தெரியும்! சிங்கள தேசம் தரும் வருவாய் அதிகம் என்பது அறிவோம்!!( பத்திசாலித்தனமாக இப்போதும் 8 மணிநேர வேலை செய்கின்றேன் என்ற? கதை விடாதையும்! 10 தலைமுறைகளையும் மிஞ்சிய பணம் இருப்பதால் பில்கேட்ஸ் என்ன உழைக்காமலா, இருக்கின்றார்)

Sri Rangan said...

//ஜயோ சிறிரங்கனுக்கு கொலை மிரட்டல்! மனுசி எழுதவே வேண்டாம் என்று சொல்லி அவர் இரவில் எழுதுகின்றாராம் என்று கதை விட்டு, 3 பதிவுகள் எழுதிப்போட்டார்!! அதுவும் கணனி வயரைப் புடுங்கியும்!! யாருக்கு உந்த ரீல் சிறி??//


//உம் பதிவைகளைக் கண்டு அல்லோகல்லோப்படுகின்றமா? ஆமாம்! பெரிய அளவு சமூக மாற்றத்தை ஏற்படுத்தி தமிழ்மக்களுக்கான் தீர்விற்காய் அறிக்கைகளை விட்டால் பிரச்சனை தீரும் என்று புலம்புவர்களைக் கணக்கில் எடுக்காவிடினும் கூட உம் அறிக்கை கண்டு இந்திய நண்பர்கள் ஏமாறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம்!!//


அப்பு புலிவாலே,உனக்கு உதரப்பு நியாயத்தையே சொந்தப் பெயரோடு பேசமுடியவில்லை.உத்தமப் புலிகளின் நியாயத்தை அநாமதேயமாக வந்து நீ புலம்பி,இந்தியத் தமிழர்கள் நம்பி... அதுவும் புலிப் பயங்கர வாதிகளை நம்புவார்கள்!...ம்... சூரியன் மேற்கே உதிக்கும் போது பார்க்கலாம்.அடுத்து...மக்களின் செவிகளுக்குப் புலிகளின் உண்மைகள் செல்லக்கூடாது,அவர்கள் புலிகளை விமர்சிக்க முனையக்கூடாதென்ற உங்கள்-புலிகளின் பயம் தெளிவாகத் தெரிகிறது.மக்களைக் கண்டு அஞ்சுதல் பாசிஸ்டுக்களுக்கே சொந்தம்.அதுதாம் ஸ்ரீரங்கனின் ,இராயாவின் வாயை மூடுவதற்கு ஒரு பட்டாளமே இணையத்தில் உலாவருகிறீர்கள்.உங்களால் மாற்றுக் கருத்தாளர்களைக் கொல்லத்தாம் முடியுமே தவிர அந்த நியாயத்தை எப்போதும் அழித்துவிடமுடியாது. புலிகளின் பினாமிகளான நீங்களே பத்துத் தலைமுறைக்கு மக்களிடம் தட்டிப்பறித்து இங்கே மேற்குலகத்தில் சொகுசாக வாழும் அநுபவத்தில் மற்றவர்களுக்குச் சேறடித்துப் பாடையோடு அலைகிறீர்கள்!

உங்களுக்குத் தமிழ் மக்களின் உரிமையை மில்லிகள் டொலருக்கு ஏலம் விடத்தெரியும்.இவைற்றைதாம் நாம் அம்பலப்படுத்துகிறோம்.இவையெல்லாம் நாம் சொல்லித் தமிழக மக்களுக்குத் தெரியவேண்டியது கிடையாது. அதைப் புலிகளே தம்மால் செய்து அவர்களை எப்பவோ அந்நியமாக்கியாச்சு.இனியும் எவரும் அதைச் செய்வதற்கில்லை.புலிகளை நியாயப்படுத்தும் நீ,உனது முகத்தைக் காட்டிப் பேச வக்கில்லை.வந்திட்டாய் அநாமதேயமாய்.தூ...நீயெல்லாம் தமிழ் மக்களின் விடுதலைக்கு...போ,போய் மக்களட்டைத் தட்டிப் பறித்ததை சுவிஸ் வங்கியில் போட்டுட்டு மீள வந்து முகமூடியோடு எழுது:இராயாவை,ஸ்ரீரங்களைப் போடவேண்டுமென!

Anonymous said...

புலிவால் - said...
ஐயா உமக்கு பதில் கொடுப்பதற்கு நாம் தயார் ஆனால் அரட்சை அடிப்பதற்கு நாம் தயார் இல்லை. அவ்வாறு உமக்கு விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டு மென்றால் ரயாகரன்இ சிறிரங்கள் எழுதிய பல ஆக்கங்கள் ஆய்வுக் கட்டுரைகள் தாராளமாகவே இணையத்தில் இருக்கின்றது. அதனை புரட்டிப் படியுங்கள் உமக்கு தேவையான பதில்களை பெறமுடியும்.
மேலும் தாங்கள் கூறிய EPDP, EPRLF ஆகியவை எதிரிகளிடம் தமது கொள்கையை விற்றவர்கள். இப்போ புலிகள் நோர்வேக்குப் பின்னால் சென்று தம்மை விற்கின்றனர்> ஏன் அவர்களின் வாரிசுகளை நோர்வேயில் வதியவும் செய்கின்றனர்..
ஏகம் என்பது வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்டது அது மக்களால் சக்தியால் உருவாக்கப்படவில்லை.
கொலைகளினால் உருவாக்கப்ப்ட்டது. கொலைகளே எல்லாtற்றிற்கும் பதிலாக இன்று இருக்கின்றது.
ஒரு நாட்டின் வளம் என்பது மக்களும் தான் அந்த மக்கள் வளமே கொலைகாரர்களினால் அழிக்கப்படுகின்றது. இவ்வகையாக தேசியத்தின் வளம் அருகுவதை குறுத்தேசிய வாதிகள் கவனத்தில் எடுக்கமாட்டார்கள்.
சிறிரங்கன் மீதான அவதூறை மலினப்படுத்தாதேயும்.

சுதன்

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...