Thursday, May 18, 2006

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்...

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"


-குறள்423:அறிவுடமை.


எனக்குச் சில நேரத்தில் தோன்றுமுணர்வோ மிக அலாதியானது!

தமிழருக்குப் புத்தி சொல்ல வெளிக்கிட்ட வள்ளுவனைப்பிடித்து நாலுக்காறு போட்டாலென்னவென்று அடிக்கடி தோன்றுகிறது.இருந்திருந்து பிடரியிலுறைந்த கறுப்புப் பல பொழுதுகளில் என்னைக் கொல்வதும்,அதை நான் களைவதுமாகக் காலஞ் செல்வதுண்டு.என்றபோதும் எமது சமூகத்துக்கு-இளந் தலைமுறைக்கு படிப்பறிவின்மீதான கண்ணோட்டம் தற்காலக் கருத்துநிலையால் அறிவியல் மனத்துவாரத்துள் கடுகளவும் உரசிக்கொள்வதாவில்லை!-இது கவலையான கண்ணீருக்குச் சொந்தமாகிறது.

வள்ளுவன் சொன்னானென்று எதையோ புரியும்(அவர்கள் தாங்கள் ஏதோ உண்மையை எழுதுவது போலவும், நடுநிலையாளர்கள் போலவும் காட்டிக்கொண்டு மக்களைத் திசை திருப்புவதற்காக கையாளும் உத்தியே இது. "ஆகா, இவங்கள் சொல்லிறதும் உண்மை போல தான் இருக்கு" என்று மக்கள் சொல்லும் அளவுக்கு நம்பக் கூடிய விதமாக எழுதுவார்கள். "எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப் பொரூள் மெய்ப் பொருள் காண்பதரிது" எனும் வள்ளுவன் வாக்குப் போல அரசியல் அறிவு குறைந்த மக்கள் , இவர்களின் மாயைக் கருத்துக்களின் மெய்ப்பொருளை அறியாமல் நம்பி குழப்பமடைந்து விடுவதும் உண்டு. இக் கும்பலுக்கு உண்மையில் எம் மக்களின் விடுதலையில் அக்கறை இருந்தால், இக்கருத்துக்களை புலிகளின் தலைமைக்கு எடுத்துச் சொல்லி ஏன் தலைமையுடன் விவாதிக்கக் கூடாது? நேரடியாக விவாதிக்க முடியாவிட்டால் இக் கருத்துக்களை தலைமைப் பீடத்திற்கு கடித மூலமாகவே அனுப்பி விளக்கம் கேட்கலாமே? இங்கே உங்களுக்கு ஓர் சங்கதியைச் சொல்ல விரும்புகிறேன். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் பல தமிழ்ப் புத்திஜீவிகளும், பல தமிழ் அரசியல் அறிஞர்களும் பல விமர்சனங்களை , மாற்றுக்கருத்துக்களை, தமது கருத்துக்களை நாள் தோறும் புலிகளின் தலைமைப் பீடத்திற்குச் சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் இவர்கள் சிங்கள அரசுகளினதும் துரோகக் கும்பல்களினதும் பரப்புரை ஊடகங்கள் மூலம் மக்களைத் திசை திருப்பி விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் விதத்தில் சொல்வதில்லை. ஆகவே, இப்படியான துரோகக் கும்பல்களின் கபடத் தந்திரங்களுக்கு[dirty tricks] பலியாகி விட வேண்டாம் என என் உறவுகளைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்-வெற்றி)ஒரு கற்றுக்குட்டிக்குக் கல்வியென்பதைப் பேராடும் பல்கலைக்கழகத்துச் சுவரில் தொங்கும் கரும்பலகையில் விளக்கமுறும் பண்டமாகக் காணுவதில் பெருமகிழ்வு.ஆனால் மடமையைக் கடைந்தேற்றவேறொரு வலைப்பதிவு(!).


"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"-குறள்423:அறிவுடமை.

(எப்பொருளை-கருத்தைச் சொல்லறிவைச் செயலை,பழியை-வதந்தியை,வாய்மையை,எண்ணத்தை-எழுத்தை...யார் யாரிடம் கேட்டாலும்(கேட்டவாறே கொள்ளாமல்)அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே சரியான-தெளிவான,கறாரான கல்வி-அறிவு) இப்படித்தாம் வள்ளுவன் வடித்தான்!

வாய் விரிந்த வம்புப் பேர்வழிக்கு வரம்புமீறிய கடுப்பு.இதன் வாயிலாக எந்தவொரு கருத்தும் புரியாமல் "தும்பி"பிடிக்கும் சின்னப் பயலின் சிந்தனையோடு ஈழம்-புலிகள் குறித்துவேறு கனவு காணுது.

அரைவேக்காட்டுத் தறுதலைகளுக்குத் தமிழும் புரியுதில்லை-தமிழரையும் புரியுதில்லை.


அதைவிடக் கொடுமை,புலிகளைப்பற்றிய புரிதல்! புலிகளை விமர்சிப்பவனுக்குப் பிடரியில் ஒன்றுமில்லையென்று, "யாரு சொல்லுகிறார்?" குறளுக்குக் குற்றுயிராக்கும் ஒரு கற்றுக்குட்டி!

"தம்பி,அம்புலியை ஞானி காட்டினால் நீயோ அவரின் சுண்டுவிரலைப் பாராதே.மாறாக அம்புலியை நோக்கடா மகனே!"என்பார்,என் தாயார்.இது எல்லோருக்கும் பொருந்தும்.


நசிகேதன் என்ற ஒரு மகா ஞானி எமனிடம் பிரமத்தைப்பற்றிக் கற்றானாம்.அவன் எல்லா வகையான தத்துவங்களையும் கேள்விகளாலேயேதாம் வேள்வி செய்து,தன்வயப்படுத்தியதாகவொரு பண்டைய பாரதத்தின் நம்பிக்கை.


அறிவைப் பெறுவதற்கு"பிரத்தியட்சம்,ஊகம்,அநுபவவாக்கு"என்ற அடிப்படைப் பிரமாணங்கள் உண்டு.அதைத்தாம் பலர் படிப்படியாக வளர்த்து,"புற நிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டி விடுவதாகும்"என்றார்கள்.-இங்கு எந்தப் புற நிலையும் இந்தப் புலி அநுதாபிகளைத் தூண்டுவதாவில்லை.அகத்தின் கருத்துப்பரப்பு:"ஆதிகேசன் போட்டான் கோடு,அது வழியே நமது பொடி நடை"என்ற மாதிரித் திரியும் ஒரு தலைமுறைச் சீர்கேடு.


அறிவைப் பெறுதலுக்கான எந்த வழியையும் மூடிவைத்துவிட்டுப் புலி அமைப்புக்குள்ளேயிருந்து வெடித்துச் சிதறிவிடும் "எறிகணையில்" தேசியத்தையும்,தமிழுரிமையும் காணுமொரு தலைமுறைக்குத் "தம்மை-எம்மை"ப் புரிகிறதுக்குப் புறத்தே பற்பல தடுப்புச் சுவர்கள்"தமிழீழம்,தேசியம்,தனிநாடு,தலைவர்-இயக்கம்"என்ற வடிவில்.மக்கள் என்ற மையப் புள்ளிக்கு எதுவும் தெரியாதாம்!எது சரி,எது தவறென்றறியாப் பச்சைப் பால் குடிகளைப் "புலிஎதிர்ப்பாளர்கள்" கெடுக்கிறார்களாம்!:-))))))

"மக்களிடமிருந்து கற்று,அதை மக்களிடமே வழங்கல்"என்று எவனொருவன் கத்து,கத்தென்று கத்தித் தொலைத்தான்.கூடவே"கற்றறி,கற்றறி,இன்னுமொரு முறை கற்றுத் தெளிவுறு"என்றான்.-அவன் புரட்சிக்காரன்,சோவியத்தை நிறுவிக்காட்டினான்.

இங்கோ"தலைவர் சொன்னார்,தலைவர் செய்தார்,தலைவருக்குத் தெரியும்,தலைவர்...தலைவர்,தலைவர்..."விளைவு?அதோ கண்ணில் தெரியுது கருங் குருதி!

இப்படியிருக்குமொரு நிலையில்- இவர்கள்தாம் தமிழ்ச் சமுதாயத்தின் நாளைய"பெருங் குடிகள்".நமக்கு இப்பவே மண்டையில் ஆராச்சியைத் தொடுக்கும் இதுகளின் பிரண்டல் தாங்க முடியவில்லை.

இன்னொருவர் எழுதுகிறார்:"அடிக்கு அடி-வன்னியில் வெடித்தால்,கட்டுநாயக்காவில் வெடித்துச் சிதறுவது சிறப்பாம்!என்றபடி...


"போரென்றால் போர்தாம்" என்ற ஜே.ஆர்.,பிரேமதாசா வகையறாக்களின் தொடர்ச்சியோ?


ஆண்டுதோறும் அழிவைக் காணும் பாலஸ்தீனத்தின் பால்குடி அட்டூழியத்தின் பிறப்பிடத்தில் வெடித்துச் சிதறிவிட,அப்பாவிப் பாலஸ்த்தீனியர்கள் "குஞ்சும் குருமானாக"க் குண்டடிபட்டுச் சாகும் நிலை இஸ்ரேலாகத் தலைமீது!
நாலென்ன,நாலாயிரம் தற்கொலைக் குண்டு வெடிப்பினும் விடுதலை வரா.இதற்குப் போராட்ட வழி வேறானது.கருப்புச் செப்டம்பர் கதை தெரியாதோ?

மக்களின் அழிவைத் தடுத்து நிறுத்துவதற்குக் குரல் போடுபவன் முட்டாள்களாம்.நல்லது!

மக்கள் நலன் என்று ப+சி,சிங்களவரின் சியோனிசத்தை மெழுகிவிடுவதாகவும் குற்றப் பத்திரிகை.

இன்னும் பலருக்கு நடு நிலைமை என்ற நாணயம்.

"நீ,ஓடுக்கப்படுபவர்களுக்கும் ஒடுக்குபவர்களுக்கும் நடுவில் நின்று,இருவருக்கும் பொதுவாய்ச் செயற்படுவதையா நடு நிலைமையென்கிறாய்? அப்படியுன்னால் செயற்பட முடியுமோடா தம்பி? ச்சீ,போங்க தம்பி!எப்பவும் தாமாஷாகத்தான் கிடக்கு."இப்படி இலக்கியச் சந்திப்பில் தலையைப் பிய்த்த தொடர்ச்சி.

மனிதாபிமானம் பொத்தாம் பொதுவானதா? மேலே கேட்கப்பட்ட இருவருக்கும் பொதுவானதாகக் கடைப்பிடிக்க முடியுமா?
இல்லை-பக்கஞ்சார்ந்தது!
என்னயிது கோதாரி வள்ளுவர் இப்படியும் சொல்லுகிறாராம்:

"நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை."-குறள் 328:கொல்லாமை.

ஐயா வள்ளுவரே,இப்போது யார் ஐயா சான்றோர்?அவர்களுக்குச் சாவு வழிச் சங்கடம் வருவதில்லை,மாவீரம் அல்லவோ வருகிறது.அல்லது மாமனிதன்!பின்னெப்படிக் கடை?"ஆக்கமொன்று இன்றியே சாவு வரும்,அதன் வழி எதுவெதுவோ வந்து"மழைக்கால் இருட்டென்றாலும் மந்தி(புலி)கொப்பிழக்கப் பாயாது"என்று மனதைக் கடைந்தேற்றும் கல்வியோடு சான்றோர் சங்கதி.

"அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்"-குறள்428:அறிவுடமை

இப்பவும் தவறிழைக்கிறாயே வள்ளுவா!

இது "அறிவுடையார்தம் தொழில் என்கிறாய்"சமூகம் முழுதுமாகக் காய்நசித்தபின் கடுகளவும் கல்வி நிலைக்காதிருக்கும்போது"அடிக்கு அடிதாம்!"அஞ்சுவ தஞ்சாமை பேதமை" முட்டாள் வள்ளுவா!அங்கே பார்!அரும்பெருஞ் சுடரறிவு"அஞ்சா நெஞ்சாய்"அடைகிடக்கிறது.
அப்போது:"அடி,அடிக்கு அடி-இடிக்கு அடி-வெடி"அறுபடுவது எதுவென்றாலும் ஆவது விடுதலையென்பதில் "வரவு" வைத்தயே இன்றைய நேர்மையை!-இதுவே தமிழுக்குத் துரோகமற்ற"தமிழினச் செம்மலின்"சிறப்பு!மற்றறிவெல்லாம் மடமை!

"அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொள்ளல்" -
குறள் 795:நட்பாராய்தல் -இதுதாம் வள்ளுவரே என் கண்முன் நிழலாக விரிவது!


ப.வி.ஸ்ரீரங்கன்
18.05.06

10 comments:

வன்னியன் said...

சிறிரங்கன்,
வன்னியில் குண்டுபோட்டால் (மற்ற இடங்களிலும்) அதற்கு எதிர்வினை என்ன?
"ஐயோ குண்டு போடுறாங்கள்" எண்டு உலகத்திடம் ஒப்பாரி வைப்பதா?
அதையே மக்களிடம் ஒப்பாரி வைப்பதா?
அல்லது 'கடும் விளைவு ஏற்படும்' என்று வாய் ஓயாமல் வெருட்டிக்கொண்டிருப்பதா?

தாம் எதையும் செய்யலாம் என்ற துணிவு எப்படி சிங்கள அரசிற்கு வருகிறது?
தங்கள் பாணியிலேயே எதிர்வினை ஆற்றமுடியாத நிலை புலிகளுக்கு எப்படி வந்தது?
யுத்தம் நடந்த இறுதி இரண்டு வருடங்களுக்கும் மேலாக வான்வழியால் மக்களை அரசபடை கொல்லவில்லையென்றும் அது ஏனென்றும் அதே பின்னூட்டத்தில் இருக்கிறது. அது ஏன்?

நிற்க,
என் போன்றவர்களை தேனி மட்டுமன்றி யாரும் ஈழப்போராட்ட தரவு விசயத்தில் ஏமாற்ற முடியாது. ஆனால் எல்லோருக்கும் அதுதான் நிலையென்றில்லை. ஏனென்றால் அதன் வாசிப்புப்ரப்பு தனியே சம்பந்தப்பட்டவர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. போர் நடந்த்காலத்தில் தாய்லாந்திலிருந்து ஒவ்வொரு கிழமையும் முல்லைத்தீவுக்கு சாப்பாடு காவிக்கொண்டு கப்பல் போய்வாறது எண்டதை நம்புறதுக்கும் ஆராவது இருப்பினம் எண்டுதான் நான் நினைக்கிறன். நான் தேனி பற்றிச் சொன்னதுக்கும் வெற்றி சொன்னதுக்குமிடையில் இருக்கும் வித்தியாசம் அதன் அடிப்படையில்தான் என்று நினைக்கிறேன்.

"மக்களை ஏமாற்ற முடியாது, அவர்களுக்குப் புரியும் தன்மையுள்ளது, அவர்கள் சரியானதை எடுத்துக்கொள்வார்கள்" என்று சொல்லிக்கொண்டு அதற்கு வள்ளுவரையும் துணைக்கழைத்தால், இது மிக விரிந்த தளத்துக்குச் செல்லும்.
"பிறகேன் அரசியற்கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன என்பது முதல் தேனி ஏன் புலிகளிடமிருந்து மக்களை விழிப்புணர்வு பெறவைக்கக் கட்டுரைகள் எழுதுகிறது, சிறிரங்கன் ஏன் மக்கள் விடிவுக்குக் கட்டுரை எழுதுகிறார், இரயாகரன் ஏன் எழுதுகிறார் என்பதுவரை கேள்விகள் வந்துவிடும்.

Anonymous said...

சிறி அண்ணா

பொதுவாக ஊரில் கிராமங்களில் ஆடு வளர்ப்பார்கள் சுமாரக இருபது முதல் முப்பது முப்பத்தைந்து வரை இருக்கும். இந்த ஆடுகளை தனித்தனியாக கட்டி வைப்பதில்லை. பட்டியில் அடைத்து தான் வைப்பார்கள். மதியம் உச்சி வெயில் வந்த பின்தான் பட்டியை திறந்து விடுவார்கள். காரணம் பனிப்புழூ+க்கள் தாவரங்களில் ஒட்டியிருக்கும்
அதை ஆடுகள் தின்றால் அவைகளுக்கு நோய் வந்த இறந்து விடும்
என்ற ஒரு காரணம். இந்த ஆடுகள் எப்படா பட்டியை(கிராமத்து மொழியில்)திறந்து விடுவார்கள் என்று முட்டி மோதிக்கொண்டு நிற்குங்கள். அந்த நேரம் வந்ததும் அடைப்பை திறந்ததும் முன்னே நிற்கும்
முதல் ஆடு வெளியே வந்து ஓடும் அதன் பின்னே மற்றைய ஆடுகளும்
பின் தொடர்ந்து ஓடும். ஓடிப்போகும் முதல் ஆடு நிச்சயமாக அது
ஒரு வெறும் தரையில் போய் கடைசியாக நிற்கும் கூடவே பின்தொடர்ந்த
ஆடுகளும் இதைசுற்றி நிற்கும் கோபத்தோடு.
இதைத்தான் வெற்று ஆடு என்பார்கள் அல்லது "வெற்றி" ஆடு என்பார்கள்
இந்த ஆடு வெத்"ற்று" ஆடு

அன்புடன்
ரவி

Anonymous said...

ANNA SRI RANGAN

UNNKA WIFE FREEYA IRRUPPAAVVA

Anonymous said...

tUj;jf;fhuUk; vOJtjw;F jdpahf ,lk; xJf;fpdhy; ey;yJ BGhy; ,Uf;fpd;wJ.
Thu May 18, 03:06:29 AM 2006 ,e;j egiur; nrhy;ypf; Fwpwkpy;iy. Njrpaj;jpd;n nghuhy; tsHf;fg;gl;l urpfupy; xUtH.

jq;fspd; uahfudpd; fUj;ij tpsq;fpf; nfhs;shJ FjHf; epahak; nrhy;fpd;whH td;dpad;
@Suthan

Sri Rangan said...

வருத்தக்காரரும் எழுதுவதற்கு தனியாக இடம் ஒதுக்கினால் நல்லது டீபுhல் இருக்கின்றது.Thu May 18, 03:06:29 AM 2006
இந்த நபரைச் சொல்லிக் குறிறமில்லை. தேசியத்தின் பொரால் வளர்க்கப்பட்ட ரசிகரில் ஒருவர்.

தங்களின், ரயாகரனின் கருத்தை விளங்கிக் கொள்ளாது குதர்க் நியாயம் சொல்கின்றார் வன்னியன்

Suthan

Anonymous said...

//வருத்தக்காரரும் எழுதுவதற்கு தனியாக இடம் ஒதுக்கினால் நல்லது டீபுhல் இருக்கின்றது.Thu May 18, 03:06:29 AM 2006
இந்த நபரைச் சொல்லிக் குறிறமில்லை. தேசியத்தின் பொரால் வளர்க்கப்பட்ட ரசிகரில் ஒருவர்.

தங்களின், ரயாகரனின் கருத்தை விளங்கிக் கொள்ளாது குதர்க் நியாயம் சொல்கின்றார் வன்னியன்

Suthan//

ஏனப்பு சுதன்
சிறீ இரங்கன் அண்ணா சொன்னால் அது மெத்த நியாயமும், சரியான கருத்தும், மக்களை நல்வழி படுத்தும் கருத்து,
அதையே வன்னியன் கேட்டால் தப்போ, ?

அதுக்கு சிறீரங்கன் அண்ணா ஒரு பதில் எழுதுவார் தலையை சுத்தி மூக்க தொடுற மாதிரி.....

அதயும் ஒருக்கா கேப்பமன்.... அதுக்கு நீங்கள் ஏன் குறுக்கால பதில் சொல்லி கொண்டு

Anonymous said...

புலிகளிடம் தனது கொள்கைளையும் இயக்கத்தையும் அடைவுவைத்த
தற்குறி பாலகுமாரன். கடந்த வாரம் ஒரு அறிக்கை வெளிட்டுருந்தார்.
புலம்பெயர்ந்த தமிழர்களே தமிழ் ஈழ விடுதலை பரப்புரைபோரை
ஆரம்பியுங்கள் என்று. அடப்பாவிகளா இவ்வளவுகாலமும் இவர்கள் எதைசெய்து கொண்டுருந்தார்கள். வெளிநாட்டில் உள்ள எத்தனையோ தமிழர்கள் வெள்ளைகரனின் எச்சில் கோப்பை கழூவி இவர்களுக்கு
தானம் வழங்கிக்கொணடுருந்தார்கள். யாழ்ப்பாணத்தை இவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போது இருபது வயதுக்கு குறைந்தவர்கள்
வெளியேறக் கூடாது அப்படி குடாநாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்றால். இவர்களுக்கு எத்தனை பேர் எவ்வளவு தனாம் கொடுத்து வெளியேற வேண்டியிருந்தது. எத்தனை செல்வந்தர்கள் எத்தனை இவர்களால் ஓட்டண்டியாகிருக்கிறார்கள். எத்தனை பேர் தங்கள்
தொழில்களை இழந்து எத்தனை ஊயிர்களை இழந்து எவ்வளவு குடும்பங்கள் தங்கள் உறவுகளை இழந்து இவர்களுக்கா இன்று வாழ்ந்துகொண்டுருக்கிறார்கள். ஆனால் இவர்கள் சமாதானம் பேசபோகிறோம் என்று வெளிநாடு வந்து குடியும் கூத்தியும் கண்டு உண்டுகளித்து சிரித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு
போகிறார்கள். வெளிநாட்டு புலம்பெயர்ந்த தமிழர்கள் பரப்புரை செய்ய வேண்டுமாம். போதாகுறைக்கு இன்று புலிகளின் (கல்லணாபொறுப்பாளர்)நிதிப்பொறுப்பாளர் ஒரு அறிக்கை விட்டுருக்கிறார்.. தமிழ் மக்கள் அனைவரும் தேசியத்தலைவருக்கு தோள் கொடுக்க நேரம்வந்து விட்டது.
என்று. யாழ்ப்பாணத்தை இராணுவம் கைபற்றியபோது மக்களுக்கு முன் பாதுகாப்பாக ஓடிவந்து முல்லைத்தீவு காட்டுக்குள் ஒழிந்து கொண்டவர்தானே இந்த தலைவர்.
இந்த நிதிபொறுப்பாளர் சொல்வது உண்மைதான் தமிழ் மக்களின்
மரணத்தில் தானே இந்த தலைவர் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்..

இவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுகிறபோது நாம் புலிக்கு எதிரானவர்கள். கைக்கூலிகள் என்ற பட்டம் வேறு.

அன்புடன்
ரவி

Sri Rangan said...

கருத்துகளிட்ட வன்னியன்,இரவி,அநாமதேயம்,சுதன் வணக்கம்-நன்றி!

வன்னியன்,//வன்னியில் குண்டுபோட்டால் (மற்ற இடங்களிலும்) அதற்கு எதிர்வினை என்ன?
"ஐயோ குண்டு போடுறாங்கள்" எண்டு உலகத்திடம் ஒப்பாரி வைப்பதா?
அதையே மக்களிடம் ஒப்பாரி வைப்பதா?
அல்லது 'கடும் விளைவு ஏற்படும்' என்று வாய் ஓயாமல் வெருட்டிக்கொண்டிருப்பதா?//தங்கள் கருத்திலிருந்து-கேள்வியிலிருந்து ஒரு விஷயம் மிக எளிதாகப் புரிகிறது!


அதாவது புரட்சிகரப் போராட்டத்துக்கும்,அரச வன்முறை ஜந்திரத்துக்குமான புரிதலில் கோளாறிருக்கிறது.ஒரு புரட்சிகரப் போராட்டமானது சாரம்சத்தில் எதரியைத் தெளிவாக வரையறுத்துக் கொண்டே,யுத்த தந்திரோபாயத்தை தகவமைக்கும்.ஆனால் ஒடுக்குமுறை அரச வன்முறை ஜந்திரம் எப்பவும் இந்த முறைமையில் இயங்குவதில்லை.அதன் நோக்கம் தமது எஜமானர்களைக் காப்பதற்கான எந்தக் கேடுகெட்ட முறைகளையுஞ் செய்வது.அவர்கள் மக்களின்மீது மட்டுமல்லை தமது சக இராணுவத்தின்மீதும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுபவர்கள்.ஆனால் புரட்சிகரமானவொரு போராட்ட அமைப்பானது மிக முன்னேறிய புரட்சிகரக் கண்ணோட்டத்தோடு மக்களின் ஒருமைப்பட்ட பங்களிப்போடு முதலில் அரச ஆதிக்கத்தை உடைப்பதற்கு முனையும்.இத்தகைய ஆதிக்கம் உடைந்து நொருங்கும்போது புரட்சிகர மக்கள்படை ஒடுக்குமுறை அரச வன்முறை ஜந்திரத்தின்மீது கையை வைத்து,அதை நொருக்கியெறிந்து அதிகாரத்தைக் கைப்பற்றும்.இது மக்கள் யுத்த தந்திரத்தின் மிக முக்கிய விடையம்.இதுவல்லாது ஒருபகுதி நிலப்பரப்பையும்,மக்களையும்,சில ஆயிரம் இராணுவத்தையும் ஒடுக்குமுறை அரசிடமிருந்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு அமைப்பானது சாரம்சத்தில் அரச ஆதிகத்தை உடைக்காது அந்த ஆதிக்கத்துக்குள் உட்பட்டதாகவே இருக்கும்.


இங்கே ஆதிக்க வலுவுடைய அரசை வெறுமனவே சிறுசிறு தாக்குதலால் வெற்றியீட்ட முடியாது.இத்தகைய நிலைமைகளில் ஆதிக்க அரசானது தனது வன்கொடுமைகளை இன்னும் அதிகமாக்கும்.அப்போது தனது எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளையும்,மக்களையும் அழிக்கும் யுத்தத்திலும்,பொருளாதார மற்றும் அடிப்படை வாழ்வாதாரங்களையும் தடைப்படுத்தி பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.இத்தகைய தரணங்களில் குறிப்பிட்ட புரட்சிகரமற்ற அமைப்புத் தானும் பதிலடியென்ற கோதாவிலிறங்கிப் புரட்சிகரவுணர்வுடைய மக்களைக் காட்டிக் கொடுக்கும் உருப்படியற்ற பதிலடித் தாக்குதலில் இறங்கும்.இதைவிட அதற்கு வேறு வழியிருக்காது.ஏனெனில் அது மக்கள்படையல்ல. இந்தச் சந்தர்ப்பத்தில்தாம் உங்கள் கேள்வி மேற்காணும் அணுகுமுறையோடெழுகிறது.ஆனால் புரட்சி இத்தகையதல்ல.அங்கே மக்கள் மன்றங்களும்-மக்களின் அடிப்படையுரிமைகளைக் கண்ணாகக் காத்து,அவர்களைப் புரட்சிகரப் படைகளாக்கி உட்கட்சி ஜனநாயகவுரிமையோடு பெரும் புரட்சிகர இராணுவம் கட்டப்படும்.அது தரணம்பார்த்துப் புரட்சியைத் துரிதமாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றும்.


"அடிக்கு அடி" என்பதே வரலாறாகிய பாலஸ்தீனத்தில் பீ.எல்.ஓ இருக்கும்போதே காமாஸ்சும் தோன்றி(கவனிக்க-ஏகப்பிரதிநித்துவம்...) அடிப்படைவாத-மதவாத இராணுவச் சாகசம் புரிந்து, உலகத்தில் பாலஸ்தீனத்தவர்களின் சுயநிர்ணய நீதிப் போரை மிகக் கேவலமாகக் கருதும்படி ஆக்கினார்கள்.எனினும் பழைமைவாத-இஸ்லாமிய அடிப்படைவாத்திலூறிய மக்களோ காமாசை தேர்தலில் வெற்றிபெற வைத்தாலும்,அவர்களால் சுய சார்புடைய வலுவையும்,தனித்துவமான அரசையும் அமைக்க முடியவில்லை.சுதந்திரமான தேசத்தை அமைக்கச் சகலவிதமான அந்நிய ஆதிக்கங்களையும் முதலில் உடைப்பது அவசியமாகும்.


இன்று 18.05.2006 காமாஸ் இயக்கத்தால் பாலஸ்தீனத்தில் அரச அலுவல்களைப் பார்க்கும் அரச உத்தியோகத்தவர்கள் 160.000.பேர்களுக்குச் சம்பளம் கொடுக்க வக்கற்று- ஐரோப்பா வழமையாகக் கொடுக்கும்- நிதியைத் தரும்படி மண்டியிடுகிறார்கள்.ஆனால் ஐரோப்பிய ய+னியனோ காமாசான நீ இஸ்ரேலிய அரசைச் சட்டப+ர்வமாக அங்கீகரித்தால் உதவி தருவேமெனக் கூறியுள்ளது.இது வரலாறு.நான் இதை நீட்ட விரும்பவில்லை.இதுதாம் புலிக்கும் இன்று நடக்கப் போவது.

நாம் கூறுவதெல்லாம் புரட்சிகர மக்கள் போராட்டப் பாதையாகும்.அது இன்றைய புலிப் போராட்டத்திலிருந்து முற்றும் வேறானது.

ஒடுக்குமுறையாளன் காலாகாலமாக மக்களைப் பலி கொள்கிறான்.இதை நாம் அம்பலப்படுத்தி எமக்கான நேச சக்திகளாக சர்வதேச மக்களைத் திரட்ட முடியவிலை.ஏன் நமது தொப்புளக்; கொடியுறவான தமிழக மக்களையே எமக்குச் சார்பாகக் கிளர்ந்தெழும் நிலைக்குச் சாதகமாக்கவிலை.


ஈழப் போராட்டமானது முதலில் அனைத்து ஆதிகத்துக்குமெதிரான வெற்றியை நிலை நாட்டிய பின்பேதாம் இறுதி...வேண்டாம் இத்தோடு நிறுத்துவோம்.இது நீண்டுபோகும் சமாச்சாரம்.


இரவி,உங்கள் கருத்துக்கள் யாவும் உண்மையானது.

சுதன் தங்கள் கருத்துக்கு நன்றி.


அநாமதேயம்,நானும் உன்னைப் போல இந்த விஷயத்தில் பெரும் மாதா!

உமக்கு வயதான பெண்கள் தேவையில்லை.

நல்ல விடலையாகப் பார்த்துப் பிடிக்கிற வழியைப்பாரும்.இல்லையென்றால் ஒரு நூறு யுரோவோடு வா நான் காட்டுகிறேன் சொர்க்கம்.


இது சிரமமென நினைத்தால் மதியுரைஞர் பாலசிங்கம் அவர்கள் இருக்கவே, இருக்கிறார். அவரிடம் போய் உன் குறையைச் சொல்.அவர் பெரும்பாலும் (சொப்பிங் அனுபவ சாலி)உமது பிரச்சனையை மிக நேர்த்தியாகத் தீர்ப்பார்.பயப்படாதே ஈழப்பிரச்சனை மாதிரிச் சொதப்பமாட்டார்.

Anonymous said...

ஐயா பிதா மகனே.

உளவியல் தாக்கத்திற்கு உள்ளான ஒரு சமூகம் எம்மத்தியில் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. இது ஒரு சமூகப் பிரச்சனை. தமது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்த ஒரு இடம் உருவாக்கிக் கொள்வது நல்ல. காரணம் சமூகத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில் அவர்களின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது தவிறில்லையே. இவர்கள் விகாரமான காட்சிகளை பார்த்தபின்னர். ஆத்திரப்பட்டு பல தவறான முடிவுகளுக்கு வருகின்றனர். இவர்களின் ஒரு பகுதியினரை தேசியம் என்ற போர்வையில் மென்மேலும் நோயாளிக்கின்றோம். இது ஒரு சமூகத்தில் இருக்கின்ற பிரச்சனை என்பதை ஏன் மறுக்கின்றீர்.
உடல்ரீதியான வடு என்பது ஒரு தாக்கினால் ஏற்படுவது போல
வார்த்தையால் ஒருவரை தாக்குவது கூட ஒருவருக்கு ஏற்படுத்மதும் வடுத்தான் இவற்றிற்கு எல்லை உண்டு என்பதை எழுதுபவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

நண்பர் சிறி புரட்சிகர அரசியல் எவ்வகையாக எதிரிகளை இனம் கொள்கின்றது என விளக்கியுள்ளார். அதே வேளை தேசத்தின் நலன் என்பதை வரையறுத்துக் கொள்ள அதிமேதாவித்தனம் கொண்ட அறிவு தேவையில்லை.
புலிகளை அழிக்க வேண்டும் என வெளிச்சக்திகளை அணுகுவது தவறு அதே போல புலிகள் தாமே தமக்கு எதிரிகளை உருவாக்கிக் கொள்கின்ற நிலையில்
ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்தியங்கும் நலன்களும் மக்கள் விரோதாமானதே.

வெளிநாட்டில் இருந்து கொண்டு யுத்தத்திற்கு தூபம் இடுவது என்பது கூட ஒரு ரசிகர் செய்யும் செயல்தான்.

சிறி ரயாகரன் சொல்லது எவ்வளவு உண்மைத்தன்மை இருக்கின்றது என்பதை வரலாறு நிரூபிக்கும். ஏனெனில் அவர்களிடம் வரலாற்று இயங்கியல் அவர்களின் ஆய்வில் தங்கியிருக்கின்றது. அதேவேளை தாங்கள் அவர்கள் எழுதும் அனைத்தையும் தங்களால் உடனடியாக விளங்கிக் கொள்வீர்கள் என்றும் கருதவில்லை. அதற்கு நீண்ட பொறுமையான படிப்பு முயற்சி அதற்கும் தேவை.
அவர்கள் தாங்கள் தலைவர் போல எல்லாம் அவர் சிந்தனை என்று ரயாகரன்/சிறி கூறிவில்லை. மக்களிடம் இருந்து கற்றுத்தான் கற்றவற்றை மறுபடியும் கூறுகின்றனர். இதில் உண்மை நிலை இருப்பதனால் வரலாற்று நிகழ்வும் உண்மையாக இருக்கின்றது.


புலியெதிர்ப்பாளர்கள் கூறுவதற்கும் சிறி/ரயாகரன் கூறுகின்றவற்றிற்கும் நிறையாவே மாறுபாடுகள் இருக்கின்றது.
இவர்கள் மக்களின் நலனில் இருந்து கருத்துக் கூறுகின்றனர்.
மற்றவர்கள் பின்கதவால் எவ்வாறு புலியின் இடத்தை பிடிப்பது என வழி தேடுகின்றனர்.
புரட்சிகர அரசியலுக்கும்
இரத்தத்தை காட்டி செய்யும் அரசியல் என்பதில் மக்கள் நலன் இல்லை.

Suthan

Anonymous said...

ஐயா பிதா மகனே.

உளவியல் தாக்கத்திற்கு உள்ளான ஒரு சமூகம் எம்மத்தியில் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. இது ஒரு சமூகப் பிரச்சனை. தமது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்த ஒரு இடம் உருவாக்கிக் கொள்வது நல்ல. காரணம் சமூகத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில் அவர்களின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது தவிறில்லையே. இவர்கள் விகாரமான காட்சிகளை பார்த்தபின்னர். ஆத்திரப்பட்டு பல தவறான முடிவுகளுக்கு வருகின்றனர். இவர்களின் ஒரு பகுதியினரை தேசியம் என்ற போர்வையில் மென்மேலும் நோயாளிக்கின்றோம். இது ஒரு சமூகத்தில் இருக்கின்ற பிரச்சனை என்பதை ஏன் மறுக்கின்றீர்.
உடல்ரீதியான வடு என்பது ஒரு தாக்கினால் ஏற்படுவது போல
வார்த்தையால் ஒருவரை தாக்குவது கூட ஒருவருக்கு ஏற்படுத்மதும் வடுத்தான் இவற்றிற்கு எல்லை உண்டு என்பதை எழுதுபவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

நண்பர் சிறி புரட்சிகர அரசியல் எவ்வகையாக எதிரிகளை இனம் கொள்கின்றது என விளக்கியுள்ளார். அதே வேளை தேசத்தின் நலன் என்பதை வரையறுத்துக் கொள்ள அதிமேதாவித்தனம் கொண்ட அறிவு தேவையில்லை.
புலிகளை அழிக்க வேண்டும் என வெளிச்சக்திகளை அணுகுவது தவறு அதே போல புலிகள் தாமே தமக்கு எதிரிகளை உருவாக்கிக் கொள்கின்ற நிலையில்
ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்தியங்கும் நலன்களும் மக்கள் விரோதாமானதே.

வெளிநாட்டில் இருந்து கொண்டு யுத்தத்திற்கு தூபம் இடுவது என்பது கூட ஒரு ரசிகர் செய்யும் செயல்தான்.

சிறி ரயாகரன் சொல்லது எவ்வளவு உண்மைத்தன்மை இருக்கின்றது என்பதை வரலாறு நிரூபிக்கும். ஏனெனில் அவர்களிடம் வரலாற்று இயங்கியல் அவர்களின் ஆய்வில் தங்கியிருக்கின்றது. அதேவேளை தாங்கள் அவர்கள் எழுதும் அனைத்தையும் தங்களால் உடனடியாக விளங்கிக் கொள்வீர்கள் என்றும் கருதவில்லை. அதற்கு நீண்ட பொறுமையான படிப்பு முயற்சி அதற்கும் தேவை.
அவர்கள் தாங்கள் தலைவர் போல எல்லாம் அவர் சிந்தனை என்று ரயாகரன்/சிறி கூறிவில்லை. மக்களிடம் இருந்து கற்றுத்தான் கற்றவற்றை மறுபடியும் கூறுகின்றனர். இதில் உண்மை நிலை இருப்பதனால் வரலாற்று நிகழ்வும் உண்மையாக இருக்கின்றது.


புலியெதிர்ப்பாளர்கள் கூறுவதற்கும் சிறி/ரயாகரன் கூறுகின்றவற்றிற்கும் நிறையாவே மாறுபாடுகள் இருக்கின்றது.
இவர்கள் மக்களின் நலனில் இருந்து கருத்துக் கூறுகின்றனர்.
மற்றவர்கள் பின்கதவால் எவ்வாறு புலியின் இடத்தை பிடிப்பது என வழி தேடுகின்றனர்.
புரட்சிகர அரசியலுக்கும்
இரத்தத்தை காட்டி செய்யும் அரசியல் என்பதில் மக்கள் நலன் இல்லை.

Suthan

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...