Sunday, May 21, 2006

மயுரனும்,இஸ்லாமிய நண்பர்களும்...

மயுரனும்,இஸ்லாமிய நண்பர்களும்...

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" பாடியவனின் வாரீசுகளுக்குச் சில
கருத்துக்கள்!


இன்று மய+ரனின் கட்டுரையை வாசித்தபோது,இஸ்லாமியர்கள் விவாதத்தில் ஒருகட்டத்துக்குமேல் "திருக் குறானை"த் தாண்டிச் செல்லப் பிரியமற்றவர்களாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.இது சகலநாட்டு இஸ்லாமியர்களுக்கும் பொருந்துவதே!இன்றைய உலக நடப்பில் இஸ்லாத்தின் வழிக் கருத்தியல் மனதானது வெறும் நம்பிக்கைகளாலேயே கட்டித் தகவமைக்கப்பட்டது.கிறிஸ்த்துவத்தைப் போன்றதொரு யுத்தம்-காணிக்கை,அன்பு-அரவணைப்பு என்ற கோதாக்களிலிருந்தும் இஸ்லாம் முழுக்கமுழுக்கக் கருத்தியற்றளத்தில் பதியம் போட்ட கருத்துக்களாலும் அதன் தலைசிறந்த"மனோவியல் தாக்க"திருக் குறானாலும் இஸ்லாம் தனக்கான அரசியல் உடல்களை இறுகப் பற்றியுள்ளது!ஒருவகையில் நாம் நம்ப மறுக்கும் கசப்பானவுண்மை என்னவென்றால்"இஸ்லாமென்பது வாழ்கையைத் தயாரிப்பது"-வாழ்வை,மனித்தன்மைக்கொப்ப அதன் அடிப்படைப் பலவீனத்தைப் புரிந்த அந்த வாழ்வைத் தீர்மானிக்கும் பெரும் கருத்தியலை மிக நேர்த்தியாக மனித மனங்களில் பதியம் போட்டுள்ளது.


குறானிடமிருந்து பெறப்படும் எந்த வாக்குகளானாலும் அது மனித மனங்களில் நம்பிக்கையைப் பதியம் போட்டே வாழ்வின் மதிப்பீடுகளைச் செய்கிறது.


"உம்மை நாம் உறுதிப்படுத்தி வைத்திருக்காவிட்டால்,நீர் அவர்களின் பக்கம் கொஞ்சமேனும் திட்டமாகச் சாய்ந்திருக்கக் கூடும்.""-திருக்குறான் தர்ஜமா:ருகூஃ 8,வாக்கு:74.பக்கம்:290.


இந்த மேற்காணும் வாக்கியத்திலிருந்து நாம் காணும் உண்மையானது பல்வேறு பிரிவுகளுக்குள் முட்டிமோதிய அன்றைய மனித வர்கங்களுக்கிடையிலான ";இருப்புப் போரில்"ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்வைத் தக்க வைக்கும் முயற்சியில் இஸ்லாம் பாரியபோராட்டத்தைச் செய்திருக்கிறது.இந்தப் போரில் அன்றைய குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்ந்த அறிஞர்கள் குறான் வழி மக்களின் மனோதிடத்தைக் காத்துப் போராடியுள்ளார்கள்.பின்னாளில் அவர்களது இடையுறாத கருத்தியல் போரில் ஒரு பகுதி மக்கள்தம் பண்பாட்டுத்தளம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


" (நபியே)சூரியன் (உச்சியை விட்டுச்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள்(கவனிக்க: இரவின் இருள் என்கிறார்கள்.அப்படியாயின் இருள் எல்லாம் இரவு இல்லை!இரவு வேறானது,இருள் வேறானது.இரவின் இருள்...லொஜீக் மிக இலகுவாகக் குறானில் பற்பல இடங்கில் இழையோடுகிறது.)சூழும்வரை (யுள்ள,லுஹர்,அஸர்,மஃரிப்,இஷா, முதலிய) தொழுகையையும்,இன்னும் பஜ்ருத் தொழுகையையும் கடைப்பிடிப்பீராக!நிச்சியமாக பஜருடைய தொழுகை (மலக்குகளின்)வருகைக்குரியதாக இருக்கிறது.-தி.குறான் தர்ஜமா:ருகூஃ 9,வாக்கு:78


தொழுகைகளை இஸ்லாமிய அறிஞர்கள் எப்பவுமே உயர்த்திப்பிடிப்பவர்கள்!ஓடும் காரை ஓரம்கட்டிவிட்டுத் தொழுவதில் நாட்டமுடையவர்கள் இஸ்லாமியர்கள்,செய்யும் வேலையைச் சற்றுவிட்டுவிட்டு-ஒழித்தாவது தொழுதுவிட்டு வருபவர்கள் இந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்.தமது கருத்துக்கு அங்கீகாரம் தேடுவதில் அக்கறையற்று,மற்றவர்களின் எந்தக்கருத்தையும் வேடிக்கை பார்ப்பது அவர்களின் கருத்தியல் பலம்.இதனாற்றாம் இன்றுவரையும் கிறிஸ்த்துவம் அரேபிய மண்ணில் அடியெடுத்துவைக்க முடியாதிருப்பது.கூட்டுப் பிராத்தனையென்பதின் முக்கிய பலத்தை இவர்கள் வெகுவாக உணர்ந்திருப்பதை நாம் மறுக்க முடியாது.இந்த எளிய முறைமைகளைக் கொண்டே பாரிய மனோ வலிமையை உருவாக்கிய குறானிலிருந்து பாரிய நிலப்பிரபுத்துவச் சிந்தனைகள் ஆங்காங்கே விரவிக்கிடப்பதை நாம் கற்றுணரமுடியும்.அந்தச் சிந்தனையானது மக்களைத் தமது நிர்வாக அலகுகளுக்கிசைவாக இணைப்பதில் "கூட்டுச் செயற்பாட்டை"யுருவாக்கியபோது, மக்கள் தமக்கு எதிராக ஐக்கியமுறும் எந்தவொரு நகர்வையும் எதிர்த்தே வந்திருக்கிறது.அன்றைய மக்கள் விரோத அரச பரிபாலனக் கட்டுமானங்களை மக்கள் தமது அதீத கூட்டுச் செயற்பாட்டால் தாக்கியழிக்கமுடியாது பெரும் கருத்தியற்றளத்தை உருவாக்கிய அன்றைய சமூக அறிஞர்கள் வெகுவாகவே மதத்தின் பெயரிலான மாற்றினத்தின் முற்றுகைகளை-வர்க்கப் போராட்டத்தை"புனிதப் போரினூடாக"த் தடுத்திருப்பதும் குறான் வாயிலாக நாம் உணரமுடியும்.

உலகத்தில் தோற்றமுற்ற மிகப் பின்னான இஸ்லாத்தின் சமூகப் பாத்திரமானது மற்றெல்லா மதங்களையும்விட மிக முன்னேறிய அரசியல் சட்ட ஒழுங்கு முறைமைகளையும், அதன் வாயிலாகத் தனியுடமையின் இருப்புக்கான முன் நிபந்தனைகளையும் மிக வலுவான வடிவத்தில் உருவாக்கி,மக்களிடம் கருத்தூன்றியுள்ளது.இதை மிக இலகுவாக உடைப்பதற்கான எந்தப் பண்பாட்டுத் தாக்கத்தையும் எதிர்கொள்ளும் வலிமையை அவர்கள் "கூட்டுத் தொழுகை" மற்றும் இடையுறாத தொழுகைகளுடாய்ச் செயற்படுத்துகிறார்கள்.இத்தக் கருத்தியல் ஒருமைக்கு அவர்கள் முற்றுமுழுதாக மனித ஆற்றலையும்,மனோ ஒருமைப்பாட்டையுமே தங்கியிருக்கிறார்கள்.இதற்கு எந்த நவீனப் பரப்புரைகளும் அவர்களுக்கு அவசியமின்றியிருப்பதும்,மொழியின் அனைத்து ஆளுமையும் இஸ்லாம் வழியாகப் பொருத்தப்பட்டதும்,அதுவே ஒருகட்டத்தில் மக்களின் வாழ்வியல் மதிப்பீடுகளாகவும் மாற்றப்பட்டு, குறிப்பிட்ட முறைமையில் அமைந்த மிக முன்னேறிய மனிதவலுவை அது தனதாக்கிக் கொண்டிருக்கிறது.இத்தகைய மனித மனமானதை எந்தவொரு வலுவான நவீனப் பரப்புரையும் வென்றெடுப்பது மிகக் கடினமான முயற்சியாகும்.


திருக் குறானை அவ்வளவு இலகுவாகக் கற்றுவிடுதலென்பது சாத்தியமில்லை.பகவத்கீதையையோ அல்லது பைபிளையோ எந்தத் தடுமாற்றமுமின்றி நாம் கற்றறிந்துவிட முடியும்.ஆனால் இக் குறானைத் தலையால கிடங்கு கிண்டினாலும் முற்றுமுணர்ந்து கற்றுவிடுவது சாத்தயமில்லை.இதுதாம் அன்றைய மத்திய ஆசியாவின் அறிவு நுட்பம்.இதைப் பகுத்துணர்வதும்,அதனூடாகக் கருத்துக்களை முன்வைப்பதும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அன்றைய சமூகப் பொருளாதார்த்தின்மீது நிலவிய வரலாற்று இயக்க அழுத்தங்கள்-எதிர்வுகள் பற்றிய புரிதலும்.இத்தகைய புரிதலின்றிக் குரானைவிட்டு இஸ்லாமியச் சகோதரர்களை இன்னொரு தளத்துக்கு-விமர்சனக் கண்ணோட்டத்துக்கு நகர்த்தமுடியாது.


"ரப்பே!எதன் பக்கம் என்னை இவர்கள் அழைக்கிறார்களோ,அ(த்தீய)தை விட சிறைக்கூடமே எனக்கு மிக விருப்பமுடையதாகும்.இவர்களுடைய சூழ்ச்சியை என்னை விட்டும் நீ தடுக்கவில்லையானால்,அவர்களின்பால் நான் சாய்ந்துவிடுவேன்-அறிவீனர்களில் உள்ளவனாகவுமாகி விடுவேன்."-திருக் குறான்,ருகூஃ 6:வாக்கு33,பக்கம்:240.


எந்தவொரு கருத்தியல் மனதையும் வென்றெடுத்துப் புதிய உலகைத் தரிசிக்க வைப்பதற்கான காலவகாசமானது மிக நீண்ட செயற்பாட்டோடு உறவுடையது.திடீர் புரட்சியோ-பண்பாட்டு மாற்றமோ எந்தச் சந்தர்ப்பத்திலும் நிகழ்ந்தது கிடையாது.மார்க்சியத்தின் ஆதராமே கருத்தியல் போராட்டத்தின் வலுவை மிக நுணுக்கமாக விளங்கியதுதாம்.அதை பல நூறு வருடங்களுக்கு முன் இஸ்லாம் தெளிவாக உணர்ந்து தன்னை மிகக் காட்டமாக மனித மனங்களோடு தகவமைத்திருக்கிறது.
இத்தகைய இஸ்லாமிய உடலானது தனது உளவுருவாக்கத்தை வெறும் பொருள்சார்ந்தவுலகத்தோடு தொடர்புப்படுத்தாது மறுவுலகத்தின் இரட்சிப்பவரோடு பிணைத்திருப்பதும்,அந்த இரட்சிபவரையேதாம் தமது நம்பிக்கையின் அதி உச்சமான பாத்திரத்தில் வைத்து, உலகத்தை எதிர் கொள்வதாலும், புறுவுலகத்தின் எந்தச் செயற்பாடும் வெறும் பகட்டாகவும் அதனால் எந்த விமோசனமும் மனிதர்களுக்குக் கிடைப்பதும் சாத்தியமில்லையென்று நம்புகிறது.இத்தகைய தரணங்களில் மனிதவலுவானது மிகத் திரட்சியான பொதுவுணர்வைத் தனித் தன்மைக்குள் இணைப்பதாலும் அதுவே வேறொருகட்டத்தில் தனித்துவத்தை எதிர்ப்பதாலும் பற்பல எதிருணர்ச்சிகளைத் தகவமைப்பதற்குத் தவறிவிடுகிறது.


"அறிந்து கொள்ளுங்கள்!(முஃமின்களே!)நீங்கள்(வேதக்காரர்களில் முனாபிக்குகளாயிருக்கும்)அவர்களை நேசிக்கிறீர்கள்,(ஆனால்)உங்களை அவர்கள் நேசிப்பதில்லை,(அவர்களுடைய)வேதங்கள் அனைத்தையும் நீங்கள் நம்புகிறீர்கள்,(ஆனால் உங்களுடைய வேதத்தை அவர்கள் நம்புவதில்லை)உங்களை அவர்கள் சந்தித்தால் "நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம்"என்று(வாயளவில்)அவர்கள் கூறுகின்றனர்,(உங்களை விட்டும்)அவர்கள் தனித்துவிட்டாலோ,உங்கள் மீதுள்ள ஆத்திரத்தால் (தம்)விரல் நுனிகளைக் கடித்துக் கொள்கின்றனர்."உங்களுடைய ஆத்திரத்தாலேயே நீங்கள் இறந்து விடுங்கள்"என்று (நபியே!)நீர் கூறுவீராக!நிச்சியமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை முற்றும் அறிந்தவன்."-தி.குறான்,ருகூஃ 14,வாக்கு:119.பக்கம்:66


"முஃமின்களே!உங்(கள்மார்க்கத்தவர்)களையன்றி(வேறு எவரையும்)நீங்கள் அந்தரங்கக் கூட்டாளிகளாக்கி கொள்ளாதீர்கள்!(ஏனெனில்)உங்களுக்கு(மாற்றார்களாகிய)அவர்கள் தீங்கு செய்வதில் குறைவு செய்யமாட்டார்கள்,நீங்கள் துன்பப்படுவதை அவர்கள் விரும்புகின்றனர்,அவர்களுடைய வாய்களிலிருந்து(அவர்களின்)கடும்பகை திட்டமாகத் தெளிவாக வெளியாகி விட்டது,அவர்களின் நெஞ்சங்கள்(பகைமையை)மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்,உங்களுக்கு(அவர்களின்)அடையாளங்களைத் திட்டமாக நாம் தெளிவாக்கிவிட்டோம்,நீங்கள் உணர்வுடையோராக(முஸ்லீம்களாக)இருந்தால்(இதை விளங்கிக் கொள்வீர்கள்)."குறான்,பக்கம்66,ருகூஃ14,வாக்கு:118


இவ்வளவு பெரிய எடுகோள்களை நாம் தெரியப்படுத்தியேதாம் மனிதவுறவுகளுக்குள் நிலவும் சிக்கல்களைப் பற்றிய புரிதல்களை விவாதிக்கக் கடப்பாடுடையோம்.என்றுமில்லாதவாறு நாம் நட்பையும் தேடுதலையும் அதன் வாயிலான மனிதவுறவுகளையும் ஒருங்கே வளர்த்துக் கொள்வதிலும், அந்தவுறவின் வாயிலாக அடிமைத்தளைகளை அறுத்தெறியவும் முனைகிறோம்.இதற்கு
"யாதும் ஊரே யாவரும் கேளீர்"என்றவனின் பரம்பரைகள் முயற்சிக்கும்போது அவர்கள் தம்மைப்போல் உலக நடப்புகளையெண்ணுவது மிகக் கடினமானவொரு சூழலை உருவாக்கும்.அதற்கு முன் அனைத்தையுங் கற்றுத் தெளிந்து நகர்வுகளைச் செய்வதும்,எந்தெந்த இடத்தில் எந்தெந்தத் தளைகள் கண்ணிகளாக இருப்பதென்பதையும் புரிந்துணர வேண்டும்.

இவற்றைப் பின் தள்ளிவிட்டு மனிதவுறவுகளைப் புரிவது சிக்கலானது.நான் உன்னை நண்பனென்று கூறினால் நீ,அதை ஏற்கும்போது மட்டுமே அதன் வலிவு சாத்தியம்.இதை மய+ரன்மட்டுமல்ல எவருமே புரிவது அவசியம்.மக்களைக் கூறுபோடும் பற்பல பிற்போக்குக் கருத்தியற்றளைகளைக் கண்ணாக மதிப்பவர்கள் பலர் தமிழ் மக்களின் புதிய தலைமுறைவீச்சைக் கொச்சைப் படுத்துவதற்குள் நாம் மற்றவர்களின் மகிமைகளையும்,அவர்தம் பண்பாட்டையும்,அறிவியலையும் புரிந்து மாபெரும் பாலத்தை அமைத்துக்கொள்ள முனையலாம்.இங்ஙனம் அமைக்கும் பாலமே வலிவானதாக இருக்கும்.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்"-கணியன் ப+ங்குன்றனார்.

இதுதாம் தமிழரின்(யாழ்ப்பாணம்,முஸ்லீம்கள் வெளியேற்றமென்று இதற்குள் வந்து அறுக்க வேண்டாம்!) நோக்கமும்,மனித கீதமும்,மகத்துவமும்!

ப.வி.ஸ்ரீரங்கன்
21.05.2006

11 comments:

Anonymous said...

Total rubbish.

Sri Rangan said...

உண்மைதாம் அநாமதேயம்!இது முழுவதுமான குப்பைதாம்!அதைத்தாம் கட்டுரையில் முதலே கூறிவிட்டேன்!

.....பின்பு உம்மைப் புரிவதில் எனக்கேது தடை?

மு. மயூரன் said...

/
"முஃமின்களே!உங்(கள்மார்க்கத்தவர்)களையன்றி(வேறு எவரையும்)நீங்கள் அந்தரங்கக் கூட்டாளிகளாக்கி கொள்ளாதீர்கள்!(ஏனெனில்)உங்களுக்கு(மாற்றார்களாகிய)அவர்கள் தீங்கு செய்வதில் குறைவு செய்யமாட்டார்கள்,நீங்கள் துன்பப்படுவதை அவர்கள் விரும்புகின்றனர்,அவர்களுடைய வாய்களிலிருந்து(அவர்களின்)கடும்பகை திட்டமாகத் தெளிவாக வெளியாகி விட்டது//

இப்படி சொல்லும் புத்தகத்திலிருந்து விடுதலை பெறாமல் எப்படி மற்றவர்களோடு அவர்கள் நெருக்கமாவது?

உங்கள் பதிவு எனக்கு புரியவில்லை.

Sri Rangan said...

//இப்படி சொல்லும் புத்தகத்திலிருந்து விடுதலை பெறாமல் எப்படி மற்றவர்களோடு அவர்கள் நெருக்கமாவது?//


இதுதாம்,இப்பதிவினது நோக்கம்!

தமிழரங்கம் said...

இஸ்லாமியர் என்ற பொது அடையாளமே தவறானது

பி.இரயாகரன்
21.05.2006

இது ஏகாதிபத்தியத்தால் தனது சொந்த பொருளாதார நலன் கருதி உருவாக்கப்பட்டது. இஸ்லாமியர் என்ற பொது அடையாளம், அங்கு வாழும் மக்களை, இஸ்லாமிய மதத்தில் பிறந்தவர்களை எல்லாம் உள்ளடக்கிவிடாது. மக்களை மதத்தின் ஊடாக அடையாளப்படுத்துவது மிகப் பெரியளவிலான அடிப்படைத் தவறாகும். இலங்கையில் இப்படி மதத்தின் ஊடாக அடக்கியாள, அவர்களை தவறாக அடையாளப்படுத்தி அடக்கிய வரலாற்று எம்முன்னுள்ளது. இந்தியாவை இந்து என்று மேற்கில் அடையாளப்படுத்துவது எப்படி தவறாக உள்ளதோ, அப்படித்தான் இதுவும். இது ஆதிக்கம் பெற்ற மொழியும் புனைவுமாகும். இஸ்லாமியர் என்ற அடிப்படை பதத்துடன் ஒரு கட்டுரையை மயூரன் எழுதியிருந்தார். அதையொட்டி சிறிரங்கன் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.



மயூரன் இஸ்லாமியர் என்ற பதத்தை பொதுவாக பயன்படுத்துவதே தவறானதாகும். இஸ்லாமியர் என்பது இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களை மட்டும் குறிக்கின்றது. இஸ்லாமியனாக பிறந்த அதை பின்பற்றாதவர்களையும், அந்த சமூகத்தில் இஸ்லாமை மறுத்து போராடுபவர்களை இது எப்படிப் பொதுமைப்படுத்தும். இஸ்லாமியர் என்பது ஏகாதிபத்தியத்தால், அவர்களை இழிவுபடுத்தவும், பொதுவாக அடையாளப்படுத்தி ஒடுக்கவும் பயன்படுத்தும் ஒரு சொற்தொடராகும். இந்த சொற்றொடரை அடிப்படையாக கொண்டு, பகுத்தாய்வது, கருத்துச் சொல்வது தவறாகும்.



ஏகாதிபத்தியங்கள் புலியின் மக்கள் விரோத வன்முறையை தமிழனின் போராட்டமாக பொதுவாக சித்தரித்து, தமிழன் மீதான பொது ஒழுக்குமுறையை பொதுவாக வகைப்படுத்தி செய்தியை வெளியிடுவதன் மூலம் திடட்மிட்டு செயற்படுகின்றன. நேபாள மாவோயிஸ்ட்டுகளை நேபாளிகள் போராட்டம் என்று கூறுவதில்லை. மாறாக மாவோயிஸ்ட்டுகள் என்று குறிப்பாக்கினர். யாரை அழிப்பது, எப்படி அழிப்பது என்பதில் நுணுக்கமாக கருத்தைக் கட்டமைக்கின்றனர். இதுதான் இஸ்லாமியர் என்ற பதம் கையாளும் அரசியல் வடிவமாகும். இஸ்லாமியர் என்ற பதம், மேற்கில் நாசி வலதுசாரிய அரசியலில் கூட மிக தீவிரமாக மாறி, அது உள்நாட்டு அரசியலைக் கூட தீர்மானிக்கின்றது.



இஸ்லாமியர் என்பது இஸ்லாம் மதத்தில் பிறந்து, அதை பின்பற்றாதவர்களையும் ஏகாதிபத்தியம் உள்ளடக்குகின்றது. பெரும்பான்மை இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் நாடுகளில் வாழும், சிறுபான்மையினரையும் உள்ளடக்குகின்றது. இஸ்லாம் என்பது ஒரு சமூகமே அல்ல. அது ஒரு நாடு அல்ல. அது பல பண்பாடுகளை, பல மத முரண்பாடுகளையும், இஸ்லாமுக்குள் கூட பல பிரிவுகளைக் கொண்ட, பல வேறு நாடுகளை உள்ளடக்கிய வகையில் இஸ்லாமிய பதம் பயன்படுத்தப்படுகின்றது. உண்மையில் பொது அடையாளமே இவர்களுக்கு இடையில் கிடையாது. இந்த நிலையில் பொதுவான விமர்சனம் என்பது தவறானது. இஸ்லாமிய அடையாளம் பற்றிய விமர்சனமே முதன்மையானதாக உள்ளது. இந்த மாயை உடைக்கப்பட வேண்டும். ஏகாதிபத்திய ஆதிக்கம் பெற்ற கருத்து தளத்தில் இருந்து, இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் அடையாளமாக மாறியது வியப்பேது! இது ஏகாதிபத்தியத்தால் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்துக்கு எதிராக கட்டமைக்கப்பட்டு, தமது சொந்த எடுபிடிகளாக மாற்றிய ஒரு திடட்மிட்ட கருத்து மாயையாகும். இதனடிப்படையில் பல இஸ்லாமிய கோட்பாடுகளை அமெரிக்காவின் உளவு நிறுவமான சி.ஐ.ஏ கூட உருவாக்கியது.



உண்மையில் மதப்பிற்போக்களார்களும், தீவிர வலதுசாரிகளும், ஏகாதிபத்திய விசுவாசிகளும் இஸ்லாம் என்ற மத அடையாளத்தின் ஊடாக தம்மை ஒருங்கிணைக்க முனைந்த போது, படுபிற்போக்கான மக்கள் விரோதிகளாகவே உருவானார்கள். மக்கள் இவர்களின் எதிரிகளாக இருந்தனர். மக்களை சுரண்டுவது இவர்களின் அடிப்படைக் கோட்பாடாக இருந்தது. சமூக பிற்போக்கின் சின்னங்களாக இருந்தனர். இஸ்லாம் என்ற பதம் இவர்களை ஒரு அணியாக்கி, முரண்பாடற்ற முரணற்ற சமூகமாக மாற்றிவிடவில்லை.



மத அடிப்படைவாதத்துடன் உருவாவர்கள், மக்களின் அபிலாசைகளுடன் முரண்பட்டே இருந்தார்கள். புலிகள் எப்படி மக்களின் அபிலாசைகளுடன் முரண்பட்டு அவாகளின் எதிரியாக உள்ளனரோ அப்படித் தான் இது. இந்து மத அடிப்படைவாதிகள், சாதிகளை கையாள்வது போல் இதுவும் பொருந்தும். மத அடிப்படைவாதத்தின் போக்கில், சமூகம் இருப்பதில்லை. இஸ்லாம் அடிப்படைவாதம் இதில் இருந்து விதிவிலக்கல்ல.



இந்து, இஸ்லாம், ய+த, கிறிஸ்ததுவ அடிப்படை வாதங்கள் அனைத்தும் ஒரே தன்மை வாய்ந்தவை. இது உலகளாவிய சமூக பொருளாதார போராட்டத்தின் ஏற்ற இறக்கத்துடன் ஒன்று கலந்ததாகும். இதனால் தீவிரமானதாகவும் மற்றது மென்மையானதாகவும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கின்றது. சமூக பொருளாதாரத்தில் மதம் எந்தளவுக்கு இணக்கத்துடன் ஒத்திசைந்து செல்லுகின்றதோ, அந்தளவுக்கு மதம் தன்னை ஒருமைப்படுத்துகின்றது. இல்லை என்றால் முரண்படுகின்றது. போராடாடுவதாகக் காட்டுகின்றது.



இன்று உலகின் பொருளாதாரத்தை தீhமானிப்பதில் எண்ணை வகிக்கம் முக்கிய பங்கு, ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் அச்சாக உள்ளது. எண்ணை வளம் பெருமளவில் உள்ள நாடுகளில் பெரும்பான்மை மக்கள் இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றுவதால், அங்கு ஏகாதிபத்தியம் நடத்தும் வரைமுறையற்ற சூறையாடலை மக்கள் எதிர்கொள்ளும போது, இஸ்லாம் எதிர்வினையாற்றுவதன் மூலம் தான் அதன் இருப்பை தக்க வைக்க முடிகின்றது. தென் அமெரிக்காவில் கிறிஸ்துவ மதம் போல் இது செயலாற்றுகின்றது. பொதுவாக மக்கள் நலன் சார்ந்த எதிர்வினை பின்தள்ளப்பட்டுள்ள நிலையில், அடிப்படைவாதிகளான இஸ்லாமியவாதிகளின் கையோங்குகின்றது. ஒப்பீட்டளவில் வலதுசாரிகளான புலிகள் போல்.



இவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது, செல்வத்தை தமக்கிடையில் பகிர்வதில் உள்ள முரண்பாடு தான். இதனால் வலது அடிப்படைவாத தீவிரவாதம், ஏகாதிபத்தியதின் நலனுக்கு இசைவானதாக மாறுகின்றது. இப்படி உருவாகும் மத அடிப்படைவாதத்தை, ஏகாதிபத்தியம் தனது சொந்த எதிரியாக காட்டுவதன் மூலம், மக்கள் தமது சொந்த அதிகாரத்துக்கான சொந்த போராட்டத்தின் மூலம் வருவதை தடுக்க முனைகின்றது.



இந்த வகையில் இஸ்லாமிய தீவிரவாதம் போன்றவற்றை வளர்த்தெடுத்து, பின் தமக்குள் மோதிக்கொள்வது இயல்பானது. இந்தியாவில் சீக்கிய போராட்டத்தின் போது, இது போன்ற குழுக்களை வளர்த்தனர். பங்களாதேச பிரிவினையின் போது கூட, இந்தியா இது போன்ற குழுக்களை வளர்த்தது. இலங்கையில் இந்தியா இது போன்ற குழுக்களை வளர்த்தது. உலகில் இவ்வாறு பல உதாரணம் உண்டு. இந்த வகையில் தான் தன்னார்வக் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. பின் அவற்றுடன் மோதின. நட்பும், முரண்பாடும் உள்ளடக்கத்தில் வளங்களை பகிர்வதில் ஏற்படுகின்றது.



இஸ்லாம, அமெரிக்கா தலைமையிலான உலக ஆக்கிரமிப்பை தீர்க்கும் மாற்றல்ல. தொல்லை கொடுக்கலாம். தொல்லைகள் நிலத்தை மேலும் பண்படுத்தவே உதவுகின்றது. உண்மையில் இஸ்லாம் ஏகாதிபத்திய நலன்களுடன் ஒன்றிணைந்து, மனித உழைப்பை கொள்ளையடிக்கும் கோட்பாட்டுடன் தான் இயங்குகின்றது. ஏகாதிபத்திய சுரண்டல் கொள்கைக்கு மாற்று என்பது, மக்கள் தமது கையில் அதிகாரத்தை பெறுவதற்கான போராட்டம் மட்டும் தான் அதற்கு வழிகாட்ட முடியும். மக்கள் தமது சொந்த அதிகாரத்தை கோருவதை நோக்கி, வழிகாட்டும் அரசியல் தெரிவு தான் மாற்றாகும்.



இரண்டாவது இஸ்லாமிய மக்கள் எதற்கும் இணங்க மாட்டார்கள் அல்லது அதற்குள் நிற்பவர்கள் என்ற கருத்து தவறானது. மக்கள் என்ற வகையில் எதார்த்த வாழ்வியல் உண்மைகளை, மதங்கள் முரணற்ற வகையில் தீர்ப்பதில்லை. முரணற்ற கொள்கை கோட்பாடுகளை கொண்ட ஒரு பன்மை சமூகமாக, எல்லோரையும் போல் உள்ளனர். இஸ்லாமியரை மட்டும் இதற்குள் வகைப்படுத்தி பார்ப்பது தவறாகும். பொதுவாக இஸ்லாமில் பிறந்து, அதை இஸ்லாமை பின்பற்றாத மக்கள் விமர்சனத்துடன் போராடத்துடன் வாழ்கின்றனர். இஸ்லாமிய கோட்பாடுகள் பல பிளவாக, பிளந்து பிய்ந்து போயுள்ளது. பல ஆயிரம் பண்பாடுகள் முதல், பல பத்தாயிரம் வேறுபாடுகள் அவர்களிடையே வாழ்வு சார்ந்துண்டு. இது அனைவருக்கும் பொருந்தும். அடையாளம் காணும் நடைமுறை, அனைவருக்கும் பொருந்தும். இணக்கமற்றவனின் வேறுபாடு தான், மற்றவனை தனித்துவமாக்குகின்றது. இலங்கையில் தமிழர் தரப்பின் இழிவான கடந்தகால நிகழ்வுகள், இலங்கை முஸ்லிம்களை தனிமைப்படுத்தி அவர்களை வேறுபட வைத்தது. இதற்கு அடிப்படைவாதங்கள் புத்துயிர் பெற்று துணைநிற்கின்றது. எமது தமிழர் தரப்பில் அனுமான் கோயில்கள் எப்படித் திடீரென்று யாழ் குடா முதல் எங்கும் முளைத்தன! இப்படி வரலாறு காணப்படுகின்றது. கடந்த ஒரு சில நூற்றாண்டுக்கு முன் கிறிஸ்தவ மதம் மேற்கில் நடத்திய கொடூரங்கள், அவை பின்பற்றிய முறைகள் இஸ்லாமிய இன்றைய முறையைவிட கொடூரமானவை.



இந்து அடிப்படைவாதம் சாதியத்தின் பெயரில் செய்யும் கொடூரங்களைவிட குறைவானவை. இந்து என்ற அடையாளத்தை கொண்டோர், சாதிய ஒழுங்கை பின்பற்றும் வடிவம், அதைப் பாதுகாக்கும் அடிப்படையை விட இஸ்லாம் எந்தவிதத்திலும் மோசமானதல்ல.



சர்வதேச பொருளாதார கட்டமைப்பில் முட்டி மோதும் ஏகாதிபத்தியங்களின் நலன் சார்ந்த கருத்துகள், ஆதிக்க மொழியாகவும் அதுவே கருத்தாகவும் இருப்பதால், இஸ்லாம் பற்றி மட்டும் தவறாகப் பேசப்படுகின்றது. இது எல்லா மதத்துக்கும் பொருந்தும். ஆனால் இஸ்லாமை மட்டும் காட்டுமிராண்டித்தனமானதாக காட்டப்படுகின்றது. காட்டுமிராண்டித்தனம் பன்மைத்தன்மை வாய்ந்தவை. அது இஸ்லாமுக்கு வெளியிலும் உள்ளது. அது இந்துவின் சாதியாக இருக்கலாம், யூத அடிப்படைவாதமாக இருக்கலாம், இவை விரிவான தளத்தில் உள்ளது. ஏகாதிபத்திய பொருளாதாரமே சகிப்புத் தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமானது. வருடாந்தம் ஏகாதிபத்திய பொருளாதாரம் 10 கோடி உயிர்களை நரைவேட்டையாடுகின்றது. ஆனால் பொதுவான சமூக கருத்தியல் அதற்கு ஆதரவாக உள்ளது. இஸ்லாம் அடிப்படைவாதம் இதற்கு கிட்ட கூட நெருங்கவே முடியாது.

மாமன்னன் said...

சிறப்பான பதிவு.
மயூரனுக்கு பதில் சிறப்பானதாக இருந்தது

Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

S.L said...

""/
"முஃமின்களே!உங்(கள்மார்க்கத்தவர்)களையன்றி(வேறு எவரையும்)நீங்கள் அந்தரங்கக் கூட்டாளிகளாக்கி கொள்ளாதீர்கள்!(ஏனெனில்)உங்களுக்கு(மாற்றார்களாகிய)அவர்கள் தீங்கு செய்வதில் குறைவு செய்யமாட்டார்கள்,நீங்கள் துன்பப்படுவதை அவர்கள் விரும்புகின்றனர்,அவர்களுடைய வாய்களிலிருந்து(அவர்களின்)கடும்பகை திட்டமாகத் தெளிவாக வெளியாகி விட்டது//

இப்படி சொல்லும் புத்தகத்திலிருந்து விடுதலை பெறாமல் எப்படி மற்றவர்களோடு அவர்கள் நெருக்கமாவது?

உங்கள் பதிவு எனக்கு புரியவில்லை.""


I agree with mayuran.

வாசகன் said...

//Sun May 21, 04:15:20 PM 2006, மு.மயூரன் said...
/
"முஃமின்களே!உங்(கள்மார்க்கத்தவர்)களையன்றி(வேறு எவரையும்)நீங்கள் அந்தரங்கக் கூட்டாளிகளாக்கி கொள்ளாதீர்கள்!(ஏனெனில்)உங்களுக்கு(மாற்றார்களாகிய)அவர்கள் தீங்கு செய்வதில் குறைவு செய்யமாட்டார்கள்,நீங்கள் துன்பப்படுவதை அவர்கள் விரும்புகின்றனர்,அவர்களுடைய வாய்களிலிருந்து(அவர்களின்)கடும்பகை திட்டமாகத் தெளிவாக வெளியாகி விட்டது//

இப்படி சொல்லும் புத்தகத்திலிருந்து விடுதலை பெறாமல் எப்படி மற்றவர்களோடு அவர்கள் நெருக்கமாவது?//

மயூரன், மேற்கண்ட வாசகங்கள் யாரைப்பற்றி எந்தக்காலக்கட்டத்தில் சொல்லப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஏன் வீணாக கவலைப்படுகிறீர்கள்? நீங்கள் அவர்களின் பகைவரில் இருக்கிறீர்களா?!

Sri Rangan said...

கருத்துகளிட்ட அனைவருக்கும் என் நன்றி-வணக்கம்!



//மயூரன், மேற்கண்ட வாசகங்கள் யாரைப்பற்றி எந்தக்காலக்கட்டத்தில் சொல்லப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஏன் வீணாக கவலைப்படுகிறீர்கள்? நீங்கள் அவர்களின் பகைவரில் இருக்கிறீர்களா?!//



என்னங்கடா இது! மத போதகர்கள் உபன்யாசம் செய்யும்போது தலையை ஆட்டிக்கொண்டு கேட்டால்,பைபிளிலுள்ளது,பகவத்கீதையிலுள்ளது,புனிதக் குறானில் உள்ளது யாவும் எக்காலத்துக்கும் பொருந்தும்!


கொஞ்சம் ஆராய்ந்து கேள்வி கேட்கத் துவங்கினால்...


"அது எந்தக் காலக்கட்டத்தில்-எப்போது,யாருக்காச் சொன்னது தெரியுமா?"என்றபடி வந்துடுறாங்க நம்ம சனங்கள்!


இந்தக்காலத்துக்குப் பொருந்தாதவற்றை இன்னும் எதற்காக வைத்திருக்கிறீர்கள்?"பழையன கழிதலும்,புதியன புகுதலும்" மதங்களின் வரலாற்றில் கிடையாதோ?


கருத்துக் கந்தசாமி,
குறானில் மட்டுமல்ல நாம எல்லா மத- தத்துவங்களிலும் இத்தகைய மனிதவிரோதப் போக்குகளைக் கற்று,அவற்றையொதுக்குவதற்கான முறைமைகளில் மக்களைத் திரட்டுவது முக்கியமென்கிறோம்.



நீங்கள்,புதிய தலைமுறைகளை ஏமாற்றமுடியாது.


காலத்துகுதவாத கருத்துக்களைக் காவுவது ஒடுக்குமுறையாளருக்கு அவசியம்.ஆனால் ஒடுக்கப்படுபவர்களுக்கு அந்த அவசியம் கிடையாது,அது எந்த மதம் சார்ந்திருந்தாலும்.


மனிதர்களை-வேற்று இனத்தை,கொள்கையுடையோரை மிகக் கேவலமாகச் சித்தரிக்கும் மனிதவிரோதப் போக்கு அனைத்து மதங்களிலுமே விரவிக்கிடக்கிறது!


நீங்களோ காலம்,இடம் பொருளறிந்து கற்க முனைவதுபோன்றதொரு தோற்றப்பாட்டைத் திணிக்கிறீர்கள்.சும்மா தமாசு விடாதீர்கள்! நாங்களும் இத்தகைய மதத் தத்துவங்களில் நல்ல முறையான பரிச்சியங்களைக் கொண்டே கருத்தாட வருகிறோம்.


முடிந்தால் புனிதக் குறான் பற்றிய விவாதத்தைத் தொடருங்கள் நாம் மனமுவந்து பங்கு பெறுகிறோம்.

S.L said...

karuthu kandasamy,


I just saw this site. They are claiming that this quranic verse sets an eternal example for muslims to follow:

"இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் உலக அளவில் போருக்கான ஆயத்தம் என்பதே விரிவாக அலசப்பட வேண்டியதாகும்! எனவே போருக்காகத் திட்டமிடுவோர் ஆயுதப் படையில் முஸ்லிமல்லாதோர்யாரும் சேர்க்கப்படக்கூடாது என்பது முதற்கொண்டு சில குறிப்புகளை மனதிற்கொள்ள வேண்டும். தன் இராணுவத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத எவரையும் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. åதர்கள் யாரும் முஸ்லிம் படையில் சேர்க்கப்படவில்லை. அது கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனத்தின் காரணமாகவும் இருக்கலாம்.

''இறைநம்பிக்கையாளர்களே! உங்களைச் சர்ர்ந்தவர்களைத் தவிர, மற்றவர்களை உங்களின் அந்தரங்க நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் நழுவவிடுவதில்லை. உங்களைத் துன்புறுத்து வது, அவர்களுக்கு விருப்பமானதாய் இருக்கிறது. அவர்களின் வாய் மூலமாகவே அவர்களின் காழ்ப்புணர்வு வெளிப்படுகிறது. இன்னும் அவர்கள் தங்கள் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருப்பவை (இவற்றை விட) அதிகக் கொடியனவாக இருக்கின்றன. நிச்சயமாக நாம் உங்களுக்குத் தெளிவான அறிவுரைகளை அளித்திருக்கின்றோம். நீங்கள் அறிவுடையவர் களாயின் (அவர்களோடு தொடர்பு கொள்வதில் விழிப்புடன் இருங்கள்) அவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்கள்; நீங்களோ எல்லா இறைவேதங்களின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள்! அவர்கள் உங்களைச் சந்திக்கும்போது ''நாங்களும் (உங்களுடைய தூதரையும், வேதத்தையும்) நம்புகின்றோம்'' எனக் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து சென்றதுமே, உங்கள் மீது மன எரிச்சல் கொண்டு தம் விரல் நுனிகளைக் கடிக்கிறார்கள்.'' (அல்குர்ஆன் 3:118, 119)

பிந்தையக் காலங்களில் முஸ்லிமல்லாத சிலர் முஸ்லிம் படைகளின் உள்ளிருந்து கொண்டு ஏமாற்றிய ஏராளமான சம்பவங்கள் படிப் பினையாக இருக்கின்றன. அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவருக்கும் போரிடும்படிக் கட்டளையிட்டுள்ளான். ஒரு முஸ்லிம் தேசம் தாக்கப் படும்போது இராணுவத்தில் எல்லாப் பகுதி மக்களும் பங்கேற்காமல் குறிப்பிட்ட பகுதி முஸ்லிம்கள் மட்டுமே பங்கேற்க முன்வரும்போது அனைவர் மீதும் அது கட்டளையல்லவா என்ற கேள்வி எழும் வாய்ப்பு உள்ளது. இதற்கும் குர்ஆன் பதில் கூறுகிறது.

இறைநம்பிக்கையாளர்கள் ஒட்டு மொத்தமாகப் புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்றுக் கொள்வதற் காகவும், (வெளியேறிச் சென்ற அவர்கள், பின்தங்கிவிட்டவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களைத் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.

சுகமான வாழ்க்கை வாழ விரும்பும் கூட்டத்தை குர்ஆன் மற்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வழியில் 'ஜிஹாத்' செய்யத் தயார்ப் படுத்துவதென்பது உண்மையில் சிரமமானதே! மூஸா(அலை) அவர்களின் மக்கள் அவரை நிராகரித்தார்கள்; எனவே நீண்ட காலமாக மகிழ்ச்சியான வளமான வாழ்க்கை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. அவர்கள் நாற்பது வருடங்களாகப் ப+மியில் அலைக்கழிக்கப்பட்டார்கள். அதற்குப் பின்னரே அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளை அனுபவிக்கத் தகுதி பெற்றார்கள்."

http://www.a1realism.com/TAMIL/BASIC/JIHAD/porkalathil4.HTM#p18

Note that the muslim writer himself doesn't state that the verse is only relevant for that particular period. He is of the view that by this verse god has given an eternal advice to muslims.

I feel that what Nesakkumar and Arokkiyam say contains truth.

Sri Rangan said...

//பிந்தையக் காலங்களில் முஸ்லிமல்லாத சிலர் முஸ்லிம் படைகளின் உள்ளிருந்து கொண்டு ஏமாற்றிய ஏராளமான சம்பவங்கள் படிப் பினையாக இருக்கின்றன. அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவருக்கும் போரிடும்படிக் கட்டளையிட்டுள்ளான். ஒரு முஸ்லிம் தேசம் தாக்கப் படும்போது இராணுவத்தில் எல்லாப் பகுதி மக்களும் பங்கேற்காமல் குறிப்பிட்ட பகுதி முஸ்லிம்கள் மட்டுமே பங்கேற்க முன்வரும்போது அனைவர் மீதும் அது கட்டளையல்லவா என்ற கேள்வி எழும் வாய்ப்பு உள்ளது. இதற்கும் குர்ஆன் பதில் கூறுகிறது.//



இன்று,ஈழப்போராட்டம் செல்லும் திசையை நோக்கும்போது,பிரபாகரன் நிச்சியமாகப் "புனிதக்குரான்"பால் கவனஞ் செய்வது நல்லது!


இதோ ஒரு உதாரணம்:


"""நாட்டுப்புற அரேபியர்களில்(போருக்கு வராமல்)பின் தங்கி விட்டவர்களுக்கு:"கடினமான பலம் உடைய ஒரு கூட்டத்தாரின் பால் அவர்கள் வழிபடும்வரை-அவர்களுடன் நீங்கள் போரிடுவதற்காக அடுத்து நீங்கள் அழைக்கப்படுவீர்கள்,எனவே,(இவ்வழைப்பை ஏற்று)நீங்கள் வழிபட்டீர்களானால் அல்லாஹ் உங்களுக்கு அழகிய கூலியை வழங்குவான்,இதற்குமுன் நீங்கள் புறக்கணித்ததுபோல்(இப்பொழுதும்) நீங்கள் புறக்கணித்தால் நோவினை தரும் வேதனையாக அவன் உங்களை வேதனை செய்வான்"என்று (நபியே!)நீர் கூறுவீராக!340.புனிதக் குறான்:ருகூஃ2,வாக்கு:16-ஸ{ரத்துல் ஃபதாஹ்.பக்கம்:514."""


வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுகிடையினது!இதில் எந்த வர்க்கத்தைக் குறான் காத்ததென்பதை அதைக் கற்பவர் அறிவார்!அவ்வண்ணமே நம்ம தேசியத்தலைவர் போடுகிற சட்டங்கள்கூட குறானின்படி நியாயம்தாம்!அந்த வகையில் பிரபாகரனை எவர் சொல்வார் பாசிஸ்ட் என்று?புலிகளும் நிச்சியம் குரானைப்படித்தால் மாற்றினத்துக்கு நல்ல பெரும் பதில்ளைச் சொல்லித் தமது மனிதவிரோதப் போராட்டங்களை-கொலைகளை நியாயப்படுத்திவிட முடியும்!இப்படிப்பார்த்தால்...யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர்களைத் துரத்திய புலிகளுக்குப் பற்பல நியாயங்கள் குவிகின்றன!குறான்கூறும் "போரியல்"நியாயத்தின்படி புலிகளின் அனைத்துச் செயற்பாடும் மாபெரும் நியாயத் தன்மை பெறுகிறது!பின்பெந்த இஸ்லாமியச் சகோதரரும் புலியைக் குறைகூறிப் பலனில்லை.இது இந்திய இந்துப் பாசிஸ்ட்டுக்களுக்கும் பொருந்தும்.அயோத்தியில் நடந்த பள்ளிவாசல் இடிப்பு,குஜராத்தில் அப்பாவி இஸ்லாமியர்களை நர வேட்டையாடிய மோடியின் பக்கமும் பெரும் நியாயமுண்டு.இது குரான்கூறுவதுமாதிரித்தாம்!வாழ்க மானுட தர்மம்!வளர்க குரான்வழி போராட்டம்!


மானுடமே நீ எப்போது மனிதனாவாய்?

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...