ஈழப்போருக்கு
"மாவீரர்"தயாரித்தல்!
காதற் தியானிப்புத் தேவையில்லை
கள்ள விழிப்பார்வையும்
கடிதவரைவும்
கண்விழித்திருப்புந் தேவையில்லை.
மனதுக்குள் கும்மியடிக்கும்
விமானமொன்று குடற் சுவரில் முட்டிமோதிப் பறக்கும்
அம்மாவை வெறுத்தொதுக்கும்
அப்பனை வெட்டிப் புதைக்கும்
"எந்தவுணர்வுக்கும்" அவசியமில்லை!
அவனுக்காய்-அவளுக்காய் "காயும்"காலங்கள்
வெட்டெனச் சாய்ந்து மேலெழும்
தலைக் கோலமும் தேவையில்லை!
மேனிமுகரும் ஆசையோ இல்லைப் பட்டகர்த்தி
பாய்விரிக்கும் அவசரமும்
பள்ளமும் புட்டியுமாகப் படாதபாடாய்ப் படுத்திய
முத்தக் கனவுக்கும் முயற்சி தேவையில்லை
பக்குவமாய்க் களிப்பதற்கு
பால் பழம் புசிப்பதற்கு
மாலை வரத் தேவையில்லை.
மாசம் சுமப்பதற்கு
மசக்கையுணர்வதற்கு
மாங்காய் கடித்திடுவதற்கு
சாம்பல் உருசித்திடுவதற்கு
சிரமப்படத் தோன்றாது!
யோனி கிழிந்திடவோ
குருதி கொட்டிடவோ முக்கி மலமிருந்து
"ஈன்று சாகும்" பிரசவப் பொழுதை
"சுகப் பிரசவம்"என
அஞ்சல் செய்யும் கணவனுந் தேவையில்லை.
தொட்டிலிடவோ
தோளில் சுமந்திடவோ
தாலாட்டுப் பாடிடவோ
தாயாகித் தந்தையாகி மோந்திடவோ
கால்பிடித்து
மூக்கிழுத்து
முழு நிலாவாய் தலைவருவதற்கு
உருட்டிப் பிசைவதற்கோ
எண்ணை தேய்த்து"கற்கண்டு-கருப்பட்டி"க் கதைகளெல்லாம்
கடுகளவும் தேவையில்லை!
நாத்திட்டிக்குக்"கரும் பொட்டும்"காய்ச்சியிறக்கப்
பாட்டிக்கோ,
"உஞ்சு கடிக்கும்-மீயா எலி பிடிக்கும்"
கதைவிடப் பாட்டனுக்கோ தொடருறவாய் நீள்வதற்கும்
உறவெதுவும் தேவையில்லை.
சொத்துச் சேர்த்திடவோ
சோறூட்டச் "செவ்விதிழ்"தாய்மைக்கும்
சுகமில்லை என்றவுடன் காற்றில் இறக்கைவிரித்துக்
காத தூரம் "கட்டிப்" பறக்கும்
அப்பாவி அப்பனுந் தேவையில்லை!
................... குண்டெறி
குடிமத்துள் உலாவரும் சிங்கள இராணுவத்துக்கு
கோதாரி தானாய் வரும்
வெட்டியும்,வேல்பாய்ச்சிப் பெண்மையைப் பிய்த்தெறிதலும்
பிஞ்சுகளின் விழிகள் முன்னே
சிங்களத்துக் காடைக்கூட்டத்துக்கு வியர்த்துவிடும்!
பிறகென்ன?
"மாவீரர்கள்" மனத்தளவில் தயார்!
தரணம் பார்த்துச் சொல்:
..........................சிங்களவன் கொலைக்காரன்
...........................எங்கள் பெற்றோரை,உற்றோரைப்
பேசுமெங்கள்"தமிழை"அழித்திட்ட மிருகம்!
................."போரைத் தவிர வேறொரு வழி?
........................கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க-
சிங்களத்துக்கு:
தேச ஒருமைப்பாடு,"ஒரே தேசம்-ஒரே இனம்!"நாம் ஸ்ரீலங்கர்கள்.
பயங்கரவாதம்.
தமிழுக்கு:
தமிழீழம்,சுயநிர்ணயம்-தாயகம்!
தேசியம்,
தமிழ்-சமூகவிரோதி.
மாவீரர்
துரோகி,
ஒட்டுக்குழு-இனத் துரோகி,தேசத்துரோகி!
எடுத்துவிடு
இன்னும் ஓராயிரம்"புரியா மொழியில்"எந்த நிகழ்வுக்கும்
எங்கேயுமொரு காரணம் இருப்பது புரியும்.
வேறு,
நம்பிக்கையறுந்த நடுச்சாமப் பொழுதில்
தூக்கத்தின் தற்கொலையில்
புரண்டும்,நிமிர்ந்தும் விழிமறுத்த
தூக்கத் தற்கொலையைத் தடுக்கமுடியாத தவிப்பு
அகதிச் சங்கிலியில் பிணைத்துப் போட
ஒரு வாழ்வும்,ஏதோவொரு எதிர்பார்ப்பும்
ஊரிழந்தும் உணர்வு வெளிக்குள் நங்கூரமிட்டபடி
திசையறியத் தெருவுக்கு வழித் துணை தேடுவதைப்போல்
தீப்பட்டு வெந்தவிந்த
விறகுக்கு"முன்னம்"விறகென்று எவரிடுவார் நாமம்?
கரிக்கட்டை"விறகாகா"வினைப் பயனே
அகதியப்"புலப் பெயர்வு"பெருவாழ்வுக்கும்.
அச்சப்பட்ட மனதின்
பேரிரைச்சலுக்கு
எதையுந் தயாரித்திட
திக்குந் தெரியும்-திசையுந் தெரியும்
துப்புவதற்குத் துணைபோகாதிருக்கும் வரை!
ப.வி.ஸ்ரீரங்கன்
07.05.2006
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
4 comments:
Very nice
Suthan
tzf;fk;
Mk; cz;ikjhd; jpahfpfis cUthf;fpf; nfhs;s ntWk; ,uj;jj;ij njUtpy; rpe;j itg;gjd; %yNk cUthf;fpf; nfhs;s Kbfpd;wJ.
,d;iwa cyfpy; kuzj;ijf; fhl;bNa murpay; nra;Ak; faikj;jdk; eilngw;Wf; nfhz;bUf;fpd;wJ. ,jpy; ,uj;jk; vd;gJ vt;tsT kfj;Jtkhd rf;jpfs; vd;gij mwpe;J faikj;jdk; nra;Ak; jiyikfs;.
kdpj cwTfis Kjyhspj;Jt nghUshjhu mikg;G gpupe;J tpl;l epiyapy; ,Uf;fpd;w kdpj tpOkpaq;fisAk; murpay; fatHfs; gwpe;J nfhs;fpd;wdH.
,uj;j cwTfSf;Fs;NsNa nfhiyf;fhur;rhuj;ij Cl;Lfpd;wdH. nfhiy kpul;ly;fs;> ,y;yhJ xopj;jy; vd;w epiyia jf;fitj;Jf; nfhz;L Nkyhd;ik nfhs;fpd;w murpay; rpe;jidNa jw;nghOJ kpQ;rpapUf;fpd;wJ.
JNuhfp jpahfp vd;w gl;lj;jpd; fPo; rfkdpjiu kdpjH Nkyhd;ik nfhs;Sk; fyhr;rhuj;ijAk; cw;gj;jp nra;J ,Uf;fpd;wJ. ,q;F kdpj tpOkpaq;fs; Kf;fpaky;y vd;w epiyapy; ntWk; gaj;ijf; fhl;bNa murpay; elj;Jk; faikj;jdk;. ,tw;iw Mjupf;f urpfH kd;wq;fs;> urpfHfs;> mwpthspfs;> gug;GiuahsHfs;> cjpup tpRthrpfs; cUthf;fg;gl;bUf;fpd;wdH.
Gyk;ngaHe;j ehl;bNy cstpay; rpf;fypy; rpf;fpapUg;gtHfs; gpur;rhuj;jpy; fhl;lg;gLk; ,uj;ij ghHj;Nj mtHfspd; cstpay; jhf;fj;jpw;F cUthfp ngUk; jdpegH Nrjj;ij cUthf;fpf; nfhs;fpd;wdH> ,itfs; vy;yhk; Njrpaj;ij Nghw;Wjy; vd;gjd; gl;lj;jpd; fPo; cUthf;fg;gl;Ls;s xU faik tiyapy; rpf;fpj;jtpf;fpd;wJ ,d;iwa r%fk;.
Suthan
வணக்கம்
ஆம் உண்மைதான் தியாகிகளை உருவாக்கிக் கொள்ள வெறும் இரத்தத்தை தெருவில் சிந்த வைப்பதன் மூலமே உருவாக்கிக் கொள்ள முடிகின்றது.
இன்றைய உலகில் மரணத்தைக் காட்டியே அரசியல் செய்யும் கயமைத்தனம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் இரத்தம் என்பது எவ்வளவு மகத்துவமான சக்திகள் என்பதை அறிந்து கயமைத்தனம் செய்யும் தலைமைகள்.
மனித உறவுகளை முதலாளித்துவ பொருளாதார அமைப்பு பிரிந்து விட்ட நிலையில் இருக்கின்ற மனித விழுமியங்களையும் அரசியல் கயவர்கள் பறிந்து கொள்கின்றனர்.
இரத்த உறவுகளுக்குள்ளேயே கொலைக்காரச்சாரத்தை ஊட்டுகின்றனர். கொலை மிரட்டல்கள், இல்லாது ஒழித்தல் என்ற நிலையை தக்கவைத்துக் கொண்டு மேலான்மை கொள்கின்ற அரசியல் சிந்தனையே தற்பொழுது மிஞ்சியிருக்கின்றது.
துரோகி தியாகி என்ற பட்டத்தின் கீழ் சகமனிதரை மனிதர் மேலான்மை கொள்ளும் கலாச்சாரத்தையும் உற்பத்தி செய்து இருக்கின்றது. இங்கு மனித விழுமியங்கள் முக்கியமல்ல என்ற நிலையில் வெறும் பயத்தைக் காட்டியே அரசியல் நடத்தும் கயமைத்தனம். இவற்றை ஆதரிக்க ரசிகர் மன்றங்கள், ரசிகர்கள், அறிவாளிகள், பரப்புரையாளர்கள், உதிரி விசுவாசிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றனர்.
புலம்பெயர்ந்த நாட்டிலே உளவியல் சிக்கலில் சிக்கியிருப்பவர்கள் பிரச்சாரத்தில் காட்டப்படும் இரத்தை பார்த்தே அவர்களின் உளவியல் தாக்கத்திற்கு உருவாகி பெரும் தனிநபர் சேதத்தை உருவாக்கிக் கொள்கின்றனர், இவைகள் எல்லாம் தேசியத்தை போற்றுதல் என்பதன் பட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கயமை வலையில் சிக்கித்தவிக்கின்றது இன்றைய சமூகம்.
சுதனின் கருத்துக்களை யுனிக்கோட்டுக்கு மாற்றியுள்ளேன்.
சுதன் தங்களுக்கு வணக்கம்,நன்றி!
தாங்கள் குறித்தவைதாம் உண்மை!
இன்றைய படுகொலைகளினூடே நகரும் அரசியல் மீளவுமொரு பாரிய அழிவைத் தமிழ்பேசும் மக்களுக்கு ஏற்படுத்தும்.
ஆனால் அவர்களின் விடிவுக்கு வழிகாட்டுமென்று எண்ணுவதற்கு எவரும் முனையமுடியாது.
Post a Comment