Friday, October 12, 2007

சாதியமைப்பும் தேசியவிடுதலை...

சாதியமைப்பும் தேசியவிடுதலைப் போராட்ட அவநம்பிக்கைகளும்,தலித்துக்களும்


சில கருத்துக்கள்



இன்றைய ஈழத்து அரசியல் வாழ்வில் ஒடுக்கப்படும் தமிழ்மக்கள்-சாதிகளாகப் பிளவுபட்டுக்கிடக்கிறார்கள்.இவர்களின் எதிர்பார்ப்புகள் அரசியற்றளத்தில் பல தரப்பட்ட கேள்விகளைக் கொண்டிருக்கிறது.அந்தக் கேள்வியானது எப்பவும் நிலவப் போகும் அரசியற்றளத்தைப் பற்றியதாகும்.அதாவது, அதிகாரத்தைக் கைப்பற்றியபின்-அல்லது அதிகாரப் பகிர்வுக்குப் பின் எத்தகைய அரசியல் சமுதாய அமைப்பின் கீழ் எத்தகைய சமூகவாழ்வை அமைத்துக்கொள்ளப் போகிறோம் எனும் எதிர்பார்ப்பே முழு மொத்தத் தமிழ்பேசும் மக்களையும் ஒரே குடையின்கீழ் திரட்டுவதற்கான வாய்ப்பில் உச்சமடையும்.ஆனால், இன்றைய அரசியல் யதார்த்தமானது தனித் தமிழீழம் என்ற கருவ+லத்தை மெல்ல மறந்து மாற்று எண்ணக் கருத்தின்பால் தாழ்த்தப்பட்ட மக்களைக் கவனங்கொள்ள வைக்கிறது.பல நுற்றாண்டுகளாகத் தாழ்தப்பட்டு அடிமை குடிமை சாதிகளாக் கிடந்துழலும் தமிழ் பேசும் மக்களில் கணிசமானவர்கள் தமிழீழம் என்பதை அன்றைக்கே சந்தேகக் கண்ணோடு பார்த்து வந்தார்கள்-விமர்சித்தார்கள்.இத்தகைய கருத்துக்களைப் பரவலாகத் தமிழ்ப் பிரதேசமெங்கும் நாம் காணுமிடத்திலும் தமிழீழம் சார்ந்த இந்த அச்சமென்பது வெறுமனவே பொருளாதார நலன்களுடனான தொடர்பாக எழவில்லை.மாறாகத் தமக்குள் முட்டிமோதிய வரலாற்று முரண்களால் அவாகள் அங்ஙனம் நோக்கும் நிலைமைக்கு அன்றைய ஓட்டுக்கட்சிகள் தமது வலுக்கரத்தால் உந்தித் தள்ளின.இதுள் அடங்காத் தமிழன் எனும் வேளாளச் சாதிவெறியன் சி.சுந்தரலிங்கம் முதன்மையான ஓட்டுக்கட்சிச் சாதி காப்பாளனாகும்.இந்த மனிதரின் சுயம் எதுவென்பதைப்பார்க்க மாவை ஆலயப் பிரவேசப்போராட்டத்தில் தாழ்தப்பட்டவர்களுக்காக வந்த அரசாங்க அதிபரை வழிமறிக்க முனைந்த இவரது அழியாத வடுவிலிருந்து உய்துணர முடியும்.இதற்கு உடந்தையாக இருந்தவர் இன்று தந்தையென்று அழைக்கப்படும் செல்வநாயகம் என்றால் இன்றைய இளைய தலைமுறை ஆச்சரியப்படும்.ஆனால்,உண்மை அதுதாம்.


இத்தகையவொரு நிலையானது எப்பவும் தமிழ்ச் சமுதாயத்துக்குள் மிக விருப்பாக இருத்திவைக்கப்பட்டது.பதவிகளையும்,பொருட்களையும் தாம் மட்டுமே அறவிட முடியுமென்று அரசியல் அதகாரத்தைப் பயன்படுத்தி உழைக்கும் மக்களை மிகக் கேவலமாகச் சாதிகளாகப் பிளந்து அரசியல் நடாத்தியவர்களால் இந்த வடு மிக மோசமாக அவர்களைப் பாதித்தது.இத்தகையவொரு பின்னணியில் ஈழத்துத் தமிழ் மக்கள் சமுதாயத்துள்-தமிழர்கள் மத்தியில் அனைத்து முரண்பாடுகளும் முட்டியபோது அதன் பாரிய தாக்கம் வடமாகாணத்துள் நீண்டகாலமாகச் சாதிய எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து செய்தது.இங்கே மக்கள்-தாழ்தப்பட்ட மக்கள்பட்ட வேதனைகளும்-வடுவுமே மக்களின் அபிலாசைகளைத் தீர்மானித்தன.இந்தச் சந்தர்ப்பத்தில் மக்கள் தமது எதிர்ப்புக்களைக் காட்டுவதற்காகத் தொடர்ந்து சாதிக் கொடுமைக்கெதிரான போராட்டங்களைச் செய்தார்கள்.இதுள் மிக நேர்த்தியாகப் போராடியவர்கள் எல்லோருமே மிகத் தாழ்தப்பட்ட பறையர்,நளவர்,பள்ளர்,அம்பட்டர்,வண்ணார் எனப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே.எப்பொழுதெல்லாம் சாதிக் கொடுமைக்கெதிராகப் போராட்டங்கள் வெளிகிளம்புகிறதோ அப்போது வேளளரின் குடிமை சாதியான கோவியச் சாதி கைத்தடியாக வந்து இத்தகை போராட்டத்தை நசுக்கி விடும்.இங்கே நிகழ்ந்த அடியாள்-ஆண்டான்-அடிமைச் சமுதாய அமைப்புள் அங்கம் வகிக்கும் தமிழ்பேசும் மக்களிடம் பரஸ்பர நம்பிக்கை இல்லாது போய்விட்டது.


கடந்த காலத்தை உதாரணமாகக் கொள்ளும் ஒவ்வொரு தாழ்தப்பட்ட தமிழர்களும் தமக்கு ஏற்பட்ட வரலாற்று வடுவிலிருந்தே இன்றைய"தலித்துவ"ப் பொதுமைப்பட்ட ஒரு சமூக உளவியற் கருத்தாக்கத்தால் இணைவதற்கான முன் நிபந்தனைகளைத்"தலித்துக்கள்"என வலியுறுத்திக் கொள்கிறார்கள்.இது சாரம்சத்தில் தமிழ் நாட்டு அரசியல் பொருளியற் சூழ் நிலைகளை வலிந்து இலங்கைத் தேசத்துகுள் திணிப்பதற்கான முதற்காரணமே இலங்கைத தமிழ்ச் சமுதாயத்துக்குள் நிலவும் வேளாள மேலாதிக்கத்தின்மீதான அவநம்பிக்கையே!இதற்கான நல்ல உதாரணங்களை தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றும் வைத்திருக்கிறார்கள்.அன்றைக்கு,அதாவது 1967-1968 வரை நடைபெற்ற சாதியக் கலவரத்தில் உயர்சாதிய வேளாளத் தமிழர்கள் கோவியக் குடிமை சாதியை எங்ஙனம் அடியாளாக்கி அப்பாவித் தாழ்த்தப்பட்ட மக்களை வேட்டையாடியதென்பதை இன்றைய"சோபா சக்திகள்"சொல்லவில்லை-வரலாறு சொல்கிறது.

முன்னைய சாதிக்கலவரங்களுக்கும் இதன் பின்பான கைதடி,எழுதுமட்டுவாள்,கல்வயல்,புளியங்கூடல் போன்ற இடங்களில் நடாத்தி முடிக்கப்பட்ட கலவரங்களுக்கும் அடிப்படையிலுள்ள சமூகவுளவியலானது வேளாளச் சாதிய மேலாதிக்கம் மட்டுமல்ல.அங்கே மாறிவரும் பொருளாதார முன்னேற்றம்,தொழில்ரீதியான பண இருப்பும்,அதன் வாயிலாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான ஒடுக்குமுறை மெல்ல விலகுவதைப் பொறுக்கமுடியாத யாழ்பாண மேலாதிக்கம் இவர்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் மீளச் சிதறடித்து அவர்களை மீளவும் ஒடுக்கித் தமக்கு அடிமைகளாக்கியது.இது கொத்தடிமை முறைக்குள் நிலவும் நிலப் பிரபுத்துவ முறைமையோடு மிகவும் தொடர்வுடையது.அதாவது நிலப்பிரபுத்துவ மிச்சசொச்ச எச்சத்தின் இருப்பு மீள நிலைபெற்றதின் வெளிப்பாடாகவே இத்தகைய நிகழ்வுகள் தொடர் நிகழ்வாகத் தாழ்தப்பட்ட மக்களைப் பதம் பார்த்தது.!967-1968 வரை நிகழ்ந்த சாதியக் கலவரமானது வேளாள அரசியல் வாதிகளால் ஏவிவிடப:;பட்ட சிங்களப் பொலிசார்களிடமும்,கோவியர் சாதிகளிடமும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் பொறுப்பை இவர்களிடம் கையளித்தது.அப்போத நிகழ்ந்த கொடூரத்தைக் கண்டு சிங்கள அரசியல் தலைவர்களே கண்டிக்கும் நிலைக்கு வேளாள அரசியற்றலைவர்கள் உள்ளானார்கள்.ஆனால்,சிங்களத் தலைவர்களின் கண்டனத்துக்குச் செல்வாவும்,அமிரும் அளித்த பதில்கள் இவர்களை இன்னும் பாரிய ஒடுக்குமுறையாளர்கள் என்பதற்கும்,யாழ்ப்பாணிய மேலாதிகத்தின் காவலர்கள் இவர்கள் என்பதையும் உறுதிப்படுத்தும்.அவர்கள் அளித்த பதில்கள் பாரளுமன்றம் கென்சார்ட்,மற்றும் அன்றைய சீனக் கம்யுனிசக்கட்சியின் பத்திரிகைகளில் பதிவானது.இது வேளாளச் சாதிய மேலாதிகத்தின் மிகப் பெரும் வடு.


அடுத்து,ஈழத் தமிழர்களின் சாதிய அமைப்பை விளங்கிக் கொள்வதற்கு என்ன பிரத்தியேகக் காரணிகள் முன் நிபந்தனையாக இருக்கிறதென்று பார்த்தால் அந்தச் சாதியமைப்புக்குள் நிலவும் சமூகப் பலத்தகாரமும் அதை முன் தள்ளிய நிலமானிய உறவுகளும் இந்த உறவை தீர்மானித்த சமூகதோற்றமே முக்கியம் பெறுகிறது.

யாழ்பாணச் சமுகத்தின் தோற்றமென்பது நாம் ஈரயாரமாண்டுகள் வரலாறு கொண்டர்வகள் இலங்கையிலென்ற கோதாவிலிறிங்கித் தரவுகளைச் சொல்வதற்கில்லை.சமூக உருவாக்கம் என்பது திடமானவொரு அரசு அமைகின்றபோததெழும் அதன் பலவந்தத்தாலும் ஆதிக்கத்தாலும் தீர்மானித்து உருவாக்கங் கொள்வதாகும்.இங்கே,யாழ்ப்பாணச் சமூக உருவாக்கம் என்பது 11ஆம் நூற்றாண்டில்தாம் நிரூபிக்ககூடியவரையில் உருவெடுத்தென்பதும்,அது சோழப் படையெடுப்புக்குப் பின் வந்த தென்னிந்தியத் தமிழர்களின் வருகையுடன் ஆரம்பித்தத்தென்பதையும் ஒப்புக்கொள்வது நியாயமாகும்.ஏனெனில், இந்த யாழ்ப்பாணத்து ஆதிக்கமானது நிலப்பிரபுத்துவத்தின் நிலமான்ய உறவுகளோடு மிக நெருங்கிய தொடர்புடையது.இத்தகைய நிலப் பிரபுத்தவம் சோழப் படையெடுப்போடு பாரிய வடிவமாக யாழ்பாண இராச்சியத்தின் உருவாக்கத்துக்கு வழி வகுக்கிறது.தமிழர்கள் மத்தியில் நிலவிய முதலியார் பதவிகளின் தோற்றம் இறுதிவரை நிலத்தின் ஏகபோகத்தைத் தீர்மானிப்பதற்கானதாகவே இருந்தது.இதைப் புரிந்துகொள்ளவதற்கான ஆதரமென்பதை நமது யாழ்பாண வடமாராட்சியிலுள்ள நிலப்பரப்பின் குறிச்சிகளை நோக்குமிடத்துப் புரியும்.அங்கெல்லாம் சிங்கமாப்பாணர் குறிச்சியும்,மணிவீரவாகுத்தேவர் குறிச்சியும் மிகப் பிரபலமாக இன்றும் இருக்கிறது.மலவராயர் குறிச்சியென்பதைக் காணியுறுதிகளில்கூட இன்றும் பார்க்க முடியும்.இந்தக் குறிச்சிகளும் இதுள் சுட்டப்பட்டவர்களும் யாரென்றால்,இவர்கள்தாம் அன்றைய சமூகத்தை ஆட்டிப்படைத்த நிலப் பிரபுக்கள்.எங்கே சாதிய எச்சங்கள் நிலவுகின்றதோ அங்கே நிலப் பிரபுத்தவம் ஏதோவொருவடிவிலிருக்கிறது.இத்தகைய உறுவுகளுக்குள் நிலவும் சாதியத்தின் வேர்கள் மிகவும் வலிய வடிவத்திலிருந்து ஒருவித நெகிழ்வுத்தன்மைக்கு வரும் சூழலை எண்பதுகளுக்குப்பின்பான அரசியல் மாற்றங்கள்-ஆயுதப்போராட்ட இயக்கங்களே தீர்மானிக்கின்றன.

இப்போது பண்பாட்டுக்குள் ஒரு சிற கோடு கீறப்படுகிறது.அது வலுகட்டாயமாகத் தாழ்த்தப்பட்டவர்களோடான பழையபாணித்தனமான உறவாடலை வலுவாக உடைக்க முனைகிறது.இது மனிதனை ஓரளவு கௌரவிக்கும்படி வேண்டி நிற்கிறது.இதற்கு சிங்கள இராணுவத்தின் பொதுவான(சாதிபாராத) தாக்குதல் வழியும் விட்டுவைக்கிறது.அகதிவாழ்வு இதை ஓரளவு அநுமதிப்பதில் ஊக்கங் கொடுக்கிறது.இத்தகையவொரு சூழல்தாம் தீவுப்பகுதியிலுள்ள(இங்கே தீவுப்பகுதியென்பதை ஒரு உதாரணத்துக்காக எடுக்கப்படுகிறது.இது நான் வாழ்ந்த பகுதியென்பதால் அநுபவத்துள் வந்த பகுதி.சாதியக்கட்டுமானுத்துள் நிகழ்ந்த இத்தகைய பண்பு மாற்றம் ஈழத்து அனைத்துப் பகுதிக்கும் பொருந்தும்...அப்பாடா!ஆளை விடுங்கோட அப்புமாரே:-(((((( )தாழ்தப்பட்ட மக்களுக்குச் சிரட்டையில் பகிர்ந்த தேனீரைப் போத்தலுக்கு மாற்றியது.பின்பு, அதுவும் பாரிய வெருட்டல்களுக்குப்பின் தனிப்பட்ட மூக்குப் பேணிகளுக்கு மாறியது.அதாவது,தாழ்தப்பட்ட மக்கள் தமது நிலத்தில் கூலிக்குழைக்கும்போது அவர்களுக்கிடும் போசனத்துக்கான குவளை-கோப்பைகளை நாய்க் கொட்டகையிலேயே வைத்திருந்த அவலமான சூழலை நான் நேரடியாக அனுபவித்தவன்.

இத்தகைய நிகழ்வுகளை நேடியாக அனுபவித்த தாழ்த்தப்பட்ட மக்களின் தொகை கிட்டத்தட்ட ஏழு இலட்சம் மக்கள்.இவர்கள் தமிழ்ப்பிரதேசமெங்கும் கலைந்து எங்கோவொரு சேரிகளுக்குள் அடிமைகளாகக் குடிசைகளில் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.இத்தகைய இழி வாழ்வுக்கு நிர்பந்திக்கப்பட்ட மக்களின் அன்றைய-இன்றைய அச்சமெல்லாம் அமையப்போகும் தமிழீழம் அல்லது அமையப்போகும் மாநிலச் சமஷ்ட்டி வகையிலான அதிகாரப்பரவலாக்கலில் தமது நிலை என்ன?தங்களுக்கான தோல்வி மீளவும் இந்த முறைமைகளுக்குள் நிகழுமா என்பதே இன்றைய ஒவ்வொரு தலித்தினதும் கேள்வி.இதுதாம் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் அவநம்பிக்கையோடு எதிர்கொள்கிறது.அமையும் தமிழர் ஆட்சியில் தாம் இன்னும் ஒடுக்கப்படுவோமா என்ற இந்த நியாயமான சமூக அச்சம் இந்தப் போராட்டத்துள் அவநம்பிக்கையையே கொடுத்து வருகிறது.இதன் உள்ளார்ந்த இயங்கு தளத்தை மிகவும் நுணுக்கமாக அறியாதவர்களல்ல இன்றைய போராட்டக்களத்திலுள்ள புலிகள்.எனினும்,அவர்களுக்குப் பின்னாலுள்ள யாழ்மேலாதிக்க வேளாள சாதி ஆளும் வர்க்கம் இதையொரு பொருட்டாக எடுக்காது புறந்தள்ளிவிட்டு,ஒரு மொன்னைத்தனமான"தேசிய வாதம்"புரியும்போது இந்த முரண்பாட்டை-அவநம்பிக்கையைச் சரியாக இனங்கண்ட சக்தி இந்தியாவே.இதைத்தாம் இலங்கைச் சிங்களத் தரப்பும் இன்று நுணுக்கமாகப் பயன்படுத்துகிறது.

இணையத்தில் வைக்கப்படும் இன்னொரு கருத்தானது"ஈழத்தில் சாதி ஒடுக்குமுறையானது முன்பு இருந்ததைப்போல் இல்லை.ஆகவே,அதுபற்றி நாம் எதுவும் அலட்டத்தேவையில்லையென்றவாதம்."ஆம்!சாதியமைப்பு-சாதி ஒடுக்குமுறை முன்பிருந்ததைப்போல் இல்லை என்பது உண்மை.ஆனால்,இங்கே கவனிக்க மறுக்கும் இன்னொரு காரணி சமூகம் என்பது முன்னைய நிலையிலிருந்து முற்றிலும் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதே.முதலாளித்துவத்தின் வளர்ச்சி-யுத்தச் சூழல்,போராடும் இளைஞர்களின் விழிப்புணர்ச்சி இவைகள் மனிதர்களிடம்-தனிப்பட்ட ஒவ்வொரு தனிமனிதரிடமும்(அது தாய் பிள்ளை,தந்தை என விரியும்)தனிமனிதச் சுதந்திரவுணர்வைத் தூண்டியள்ளது.இங்கே, முதலாளியத்தின் மிக நுணுக்கமான இந்தப் பண்பு அதன் உற்பத்தி உறவுகளோடுள்ள தேவையின் நிமித்தம் நிகழும் சந்தர்ப்பம் அதிகமாகிறது.இது தனியே தனது இலக்கை எட்டும்வரைத் தனிநபர்களின் அனைத்துப் பரிணாமங்களிலும் மறைமுகமாகத் தலைபோடும். இதுவே, இன்றைய சாதிய ஒடுக்குமுறைக் காரணிகளை இலங்கைத் தேசிய இனச் சிக்கலுக்குள் மிக வலுவாகக் காய் நகர்த்தும் திட்டத்தோடு அதன் ஒவ்வொரு நியாயப்பாட்டையும் வற்புத்தி ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட தனிமனிதரையும் உசுப்பிவிடுகிறது.இந்த உந்துதலை மிகவும் கவனமாகக் கையாளவேண்டிய பொறுப்பு தலித்துவ முன்னணிகளுக்கு உண்டு.இங்கே,நண்பர்கள் யார்,எதிரிகள் யார்?என்ற கேள்வியில் யாழ்ப்பாண மேலாத்திக்க வெள்ளாளனா அல்லது அந்நிய அரசியல்சார நிறுவனங்களா(இவைக்குள் மறைவது இலங்கை-இந்திய மற்றும் மேற்குலக அரசுகள்தாம்)என்ற கேள்வியில் ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட ஈழத்துக்குடிமகுனும்-குடிமகளும் அந்நியச் சக்திகளையே மிகத் தோழமையோடு நம்பும் நிலைக்கு நமது கடந்தகால கசப்பான அநுபவங்களே இட்டுச் செல்கிறது.இங்கே, யாரை நோவது?இதுதாம் மிகப் பெரும் அவநம்பிக்கையாக ஈழத் தேசிய விடுதலைப்போரில் ஒரு தலித்தின் சமூக உளவியலாக உருவாகியுள்ளது.இதுவே,தன்னோடு(தலித்துக்களோடு) தோள் சேரும் எவரையும் உடனடியா"நீங்கள் ஒரு தலித்தா"என்று உடனடியாகத் தனது அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.இந்தச் சமூக அச்சத்தை அறிவியல் ப+ர்வமாக விளங்காது நமது தமிழ்ச் சமுதாயத்துள் இன்றைய தலித்துக்களின் அனைத்து நடவடிக்கைகளையும் துரோகத்தனமென விளித்து,மீண்டும் பாரிய தவறைச் செய்து,இயக்கவாத மாயையில் தூங்கிவிடுகிறோம்.இவர்களே தலித்தென்பது "தான் வேளானெச் சொல்வதற்கான வாய்ப்பு" என்றும் எம்மைச் சாடுகிறது.


ஆனால்,இந்தியாவும்,இலங்கையும் இந்த அவநம்பிக்கையை மேல் நிலைக்கு எடுத்து உந்தப்படும்போது கணிசமான தமிழர்கள் தம்மை வேளாளரின் அரசியலோடு பிணைப்பதற்கில்லை.இங்கே, இத்தகைய பிளவு ஏலவே இருந்த காயங்களோடு இன்னும் வலிமையுறுந்தறுவாயில் போராளிகளில் அறுபது வீதமானவர்கள் மிகவும் மனவுளைச்சலுக்குள்ளாகிப் பிரியும் நிலை அல்லது ஆயுதங்களை உதறியெறியும் நிலை புலிகளுக்குள் நிகழ்ந்தே தீரும்.இதைக் கூர்மைப்படுத்தும்போது ஒன்றிணைந்த தமிழர்களின் தேசியவாதம் சிதைவுறும் சந்தர்ப்பம் தோன்றும்.இங்கே,போராட்டத்திலுள்ள அதிகமான போராளிகள் தாழ்தப்பட்ட சாதித் தட்டிலிந்தே போரட்டத்துக்குள் இணைந்தவர்கள்.வேளாளர்களின் பிள்ளைகள் மிகத் திட்டமிட்ட வகையில் மேற்குலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சூழலில், இது மிகவுமொரு பாதகமான சமூகப் பிளவைக் கொடுக்கும்.இங்கேதாம் தமிழ்பேசும் மக்களின்(சாரம்சத்தில் தமிழ் ஆளும் வர்க்கத்தின்)"தேசிய விடுதலை"க் கோசம் நிர்மூலமாகிவிடும் பாரிய திட்டம் இலங்கையால் வலு சாதுரீயமாகச் செயற்படுத்தப்படுகிறது.இதை, இனிமேலும் தொடரும்-தொடரப்போகும் தலித்துக்களின் சந்திப்புக்களுடாகக் காய் நகர்த்தத் தோதான நம்பத்தகு அரசியல்வாதிகள்-ஆய்வாளர்கள் மூலமாகச் செம்மையுறச் செய்யும் இலங்கை-இந்திய ஆர்வங்கள் தலித்து மக்களின் உண்மையான முரண்பாட்டைத் தமக்குச் சாதகமாக்கும் இன்றைய இழி நிலைக்கு எவர் காரணம்?அமைதியாகச் சிந்தித்தால் விடை கிடைக்கும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
13.10.2007

15 comments:

Anonymous said...

இது சாரம்சத்தில் தமிழ் நாட்டு அரசியல் பொருளியற் சூழ் நிலைகளை வலிந்து இலங்கைத் தேசத்துகுள் திணிப்பதற்கான முதற்காரணமே இலங்கைத தமிழ்ச் சமுதாயத்துக்குள் நிலவும் வேளாள மேலாதிக்கத்தின்மீதான அவநம்பிக்கையே!

அதெல்லாம் சரிங்கோ.

எந்த நம்பிக்கையிலை திருமாவளவனையும் கிருஷ்ணசாமியையும் விட்டிப்போட்டு அ. மார்க்ஸை பிரதிநிதியா கொண்டு வந்து சுகனும் ஷோபாவும் கற்சுறாவும் ஸ்டாலினும் யாழ்ப்பாண தலித்துக்குத் தருகினம் எண்டும் ஏட்டுச் சொல்லுங்கோவன்.

உதுக்குள்ளை இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்துக்குள் நிலவும் வேளாள மேலாதிக்கத்தின்மீதான நம்பிக்கை வளந்திட்டுதோ?

ரவி said...

ஈழத்தில் தலித் என்ற பதமே கிடையாது என்று சில பதிவில் படித்தேன்...

அப்புறம் எப்படி தலித் மாநாடு ? முதலில் தமிழ்நாட்டில் இருந்து குடியேறவைத்து பிறகு விடுதலை பெற்றுத்தருமோ அமைப்பு ?

Sri Rangan said...

//ஈழத்தில் தலித் என்ற பதமே கிடையாது என்று சில பதிவில் படித்தேன்...

அப்புறம் எப்படி தலித் மாநாடு ? முதலில் தமிழ்நாட்டில் இருந்து குடியேறவைத்து பிறகு விடுதலை பெற்றுத்தருமோ அமைப்பு ?//

இரவி,தலித்தெனும் சமூக உளவியலை ஆராய்ந்தால் அது சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட,தாழ்தப்பட்ட மக்களை ஒரு குடையின் கீழ் கொணரும் பொதுக் கருத்தாக்கமாகும்.இச் சொல் தமிழ் நாட்டுக்கும் சொந்தமில்லை.அது வட இந்தியாவிலிருந்த இறக்குமதி செய்தது.எனவே,எவரையும் குடிபெயர்க்கும் அவசியம் இல்லை.ஈழத்தில் சாதிரீதியாக ஒடுக்கப்படும்,தாழ்தப்பட்ட சாதிகளை ஒருங்கிணைப்பதற்கானவொரு பொது கருத்தாக்கமாக"தலித்"மாறிவிட்டது.

மாசிலா said...

மிக அருமையான கட்டுரை.

தமிழீழத்தில் இவ்வெளிய மக்களுக்கு நடக்கும் அநியாயங்கள், ஆதிக்க சாதிக்காரர்கள் (?) அமைதி விரும்பும் மக்கள் மீது அனைத்து அட்டூழியங்களையும் சதா அவிழ்த்துவிட்டு அவர்களை நசுக்கிவரும் பல வரலாற்று செய்திகளை அறிந்து கொண்டேன். இணையத்தில் இன்றும் பொய்கள் பேசி திரியும் பல ஆதிக்க சக்திகளின் ஆதரவாளர்கள் இக்கட்டுரையை கட்டாயம் படித்து புத்தி தெளிவடைய வேண்டும்.

தலித் என்கிற வார்த்தை ஆங்கிலத்தில் "broken people" என சொல்லலாம்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

Sri Rangan said...

குழப்பங்காச்சி,செந்தழல் இரவி,மாசிலா அனைவருக்கும் வணக்கம்-நன்றி!

குழப்பங்காச்சி,அ.மார்க்ஸ் தமிழ்ச்சமூகத்தில் மிக முக்கியமான சமூகவியலாளர்.அவரை சாதிரீதியாக எவரும் பார்ப்பதற்குப் பதிலாக ஒடுக்கப்படும் மனிதர்களுக்குத் தோழமையாகப் பார்க்கலாமே?அடுத்து திருமாவளவன்...இவர் ஓட்டுக்கட்சி அரசியல் மாயைக்குள் இருப்பவர்களுக்குப் பிதாவாக இருக்கலாம்.நமக்கல்ல.

மாசிலா,தங்கள் கருத்துக்கு நன்றி.தலித்துக்கான ஆங்கிலப் பதம் அவ்வளவு பொருத்தமாகவில்லை.எனவே ஆங்கிலத்திலுமென்ன அனைத்து உலக மொழிகளிலும் "தலித்"என்று அழைப்பதே சரி.

Sri Rangan said...

இரமணிதரன் அறியத் தருவது,தாங்கள் இரயாவின் பதிவில் குறித்த //...தீவுகள் யாழ்ப்பாணக்குடாநாட்டிலேதான் இருக்கின்றன அவற்றிலேயிருக்கும் சாதிப்பாகுபாடும் யாழ்க்குடாநாட்டுச்சாதிப்பாகுபாடுதான் என்பதை விளங்கிக்கொள்ளும் குறைந்தபட்சம் அறிவுகூட இல்லாமல்...//இவ்வாக்கியம் எனது கட்டுரைக்கு அளவான தொப்பியாக இருப்பதால் சிறு விளக்கம்-எனது உணர்வுக்கு வெளியில் நின்றாடும் புரிதப்பாட்டிற்காக: இங்கே தீவுப்பகுதியென்பதை ஒரு உதாரணத்துக்காக எடுக்கப்படுகிறது.இது நான் வாழ்ந்த பகுதியென்பதால் அநுபவத்துள் வந்த பகுதி.சாதியக்கட்டுமானுத்துள் நிகழ்ந்த இத்தகைய பண்பு மாற்றும் ஈழத்து அனைத்துப் பகுதிக்கும் பொருந்தும்...அப்பாடா!ஆளை விடுங்கோட அப்புமாரே:-((((((

Anonymous said...

வரலாறு தனி மனிதர்களின் விருப்பங்களை - அவை எவ்வளவு தான் உன்னதமாய் இருந்த போதிலும் - பொருட்படுத்துவது கிடையாது

-/பெயரிலி. said...

/அ.மார்க்ஸ் தமிழ்ச்சமூகத்தில் மிக முக்கியமான சமூகவியலாளர்.அவரை சாதிரீதியாக எவரும் பார்ப்பதற்குப் பதிலாக ஒடுக்கப்படும் மனிதர்களுக்குத் தோழமையாகப் பார்க்கலாமே?அடுத்து திருமாவளவன்...இவர் ஓட்டுக்கட்சி அரசியல் மாயைக்குள் இருப்பவர்களுக்குப் பிதாவாக இருக்கலாம்.நமக்கல்ல./

அண்ணை; நீங்கள் நல்லா உங்கட வயல் பார்த்து வாய்க்கால், வரப்பு வெட்டுற ஆள் - எங்கட மிதக்கும்வெளி அண்ணர் மாதிரி. நீங்கள்தான் 'இது சாரம்சத்தில் தமிழ் நாட்டு அரசியல் பொருளியற் சூழ் நிலைகளை வலிந்து இலங்கைத் தேசத்துகுள் திணிப்பதற்கான முதற்காரணமே இலங்கைத தமிழ்ச் சமுதாயத்துக்குள் நிலவும் வேளாள மேலாதிக்கத்தின்மீதான அவநம்பிக்கையே!" எண்டு லெக்சர் குடுக்கிறியள். பிறகு சுகன், கற்சுறாக்காரர் கொண்டு வர்ற தரகுமுதலாளிகளை நம்பிக்கையோட ஏற்றுக்கொள்ளோணும் எண்டு குழப்பிறியள். இது உங்கட வழமையான "ரீபிசி கூடாது; ஆனால், அதுதான் மிஞ்சிக்கிடக்கிற பேசும் வெளி" எண்டமாதிரியான டயலாக்காப் போச்சு :-( இதுக்கும்மேலை, நீங்களே உங்கட சாதியிதுதான் எண்டு (அதை மறுக்கும்விதத்திலேதான்) ரெண்டு மூண்டு பதிவுக்கு முன்னால சொல்லியிருக்கிறியள். உங்களிலை எப்பிடி நம்பிக்கை வச்சு உதைக்கேக்கிறது? ஔவையாற்றை "தையல் சொல் கேளாதீர்" கச்-22 சிக்கலாயெல்லோ ஆக்கிறியள்?

மிதக்கும் வெளியருக்கு ஆராவது தெணியான்ரை "பொற்சிலையில் வாடும் புனிதர்கள்" ஐ ஷோபா சக்தி ஆருக்குள்ளாலையும் மார்க்ஸிட்டைக் குடுத்துக் குடுக்கச் சொன்னால், பெரிய உபயோகமாயிருக்கும் எண்டு ரெண்டு மூண்டு அறிஞ்ச பெடியள் சொன்னாங்கள். தெணியானையும் திருமாவளவன் போலைத் திட்டுவியளோ? அப்பிடியே டானியலின்ரை பஞ்சமரை (அவர் வாசிச்சிருப்பார் எண்டபோதுங்கூட) இன்னொருக்கால் வாசிக்கக்குடுத்தால், ஐயரை விட்டுப்போட்டு, உங்களையும் சுகனையும் பிடிச்சு உதைக்கத்துவங்குவாரோ தெரியாது.

சீரியஸா, ஒரு அஞ்சு பத்து வருசத்துக்கு முதலிலை அ. மார்க்ஸிலை(யும்) எனக்கும் மரியாதை இருந்தது. ஆனால்,

குழப்பங்காசி நான் தானெண்டு உங்களுக்குத் தெரியாதே?

நிற்க; தீவாரை யாழ்ப்பாணத்தார் ஏதோ தள்ளிவைக்கிறதா, பொட்டீகடை ஒரு போடு போட்டிருந்தார். எந்தப்பிள்ளை பொடி அப்பிடி அவருக்கொரு ஐடியாவைக் குடுத்துதெண்டு தெரியேல்லை. அதுதான் சொல்லியிருந்தன். ஆற்றையும் தொப்பியை மாட்டிக்கொண்டு ஆடினால், வியாபாரி நான் என்ரை தலையில இருக்கிற தொப்பியை எல்லோ கழட்டி எறிஞ்சு காட்டித் திரும்ப வாங்கி சேர வேண்டிய இடத்தில சேக்கவேண்டியாதாப் போச்சு.


பிகு: சொன்னாப்போல, மாசிலாவிட்ட, நீங்கள் புதுவைவைட்கொலர்தமிழர் அங்கீகாரம் பெற்ற ஜேர்மன் அகதித்தமிழர் சேர்டுபிக்கேட் எடுத்திட்டியள்போல; இரயாகரனும் எடுத்துபோட்டாரெண்டு தெரியுது. எனக்கும் மனுசிக்கும் பிள்ளைக்கும் கொஞ்சம் சொல்லிக் கிள்ளி எடுத்தத்தர ஏலுமே? எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அங்கையிங்கை கேட்டு வாங்கித்தாறன். தட்டுக்கழுவின காசென்ன சில்லி சோசுக்கும் சிக்கன் பிரியாணியும் மணக்கவேபோகுது?

===========
மெய்யா ஒரு வருத்தம்; இந்து ராம், இன்னும் நான் என் பதிவிலே பெயர்கள் குறிப்பிட்ட இணையத்திலே இருக்கும் தனிப்பட்ட அளவிலே நான் இலங்கைத்தமிழன் என்றளவிலே என்னைக் கருதத் தள்ளும் முற்றாக வெறுக்கும் சிலருக்கு இப்படியான நிலைமைகள் வாய்ப்பாகக்கூடாதென்பதும், இயன்றவரை, மிதக்கும்வெளி, ரயாகரன்+அசுரன், ஸ்ரீரங்கன், சத்தியக்கடதாசியினர் போன்ற விபரங்களும் வாசிப்பும் நிறைந்தவர்களுடன் எனக்குத் தெரிந்த அரைகுறை விபரங்களோடுகூட நீட்டி முழக்கிப் பேசாமற் தவிர்ப்பதற்கான - நேரப்பற்றாக்குறைக்கு அப்பாலான முக்கிய காரணம். இவர்களுடனான என் முரண்பாடு சில முக்கிய கருத்தாக்கங்களிலேயும் முதன்மைப்பிரச்சனைகள் / அவற்றுக்கான தீர்வுகள் எவை என்பதிலே மட்டுமே - அதற்கப்பால் ஈழத்தமிழர்களின் தேசிய, சாதிய ஒடுக்கலுக்கு எதிரான நலனுக்குத் தேவை அவர்களின் வழியோடு முழுமையாக ஒன்றாததாலேதான். இதனை நீங்களேனும் புரிந்துகொள்வீர்களென நம்புகிறேன்.

Sri Rangan said...

//வரலாறு தனி மனிதர்களின் விருப்பங்களை - அவை எவ்வளவு தான் உன்னதமாய் இருந்த போதிலும் - பொருட்படுத்துவது கிடையாது//

சரியாகச் சொன்னீர்கள்!இதைத் தம்பி பிரபாகரன் தமிழீழம் காண்பார்-கரிகாலன் காலத்தில் விடியம் என்பவர்கள் நிச்சியம் படிக்கணும்.உங்களைப் போன்ற புத்திசாலிகள் "அங்கே தனிநபர் துதி பாடுபவர்களிடம்" இடித்துரைக்கக் கடப்பாடுடையவர்கள்.உங்கள் வரவுக்கு நன்றி.இப்படிச் சரியான திசையில் சிந்திக்கிற நீங்கள் ஏன்-எதற்காக முகத்தை மூடிச் சொல்கிறீர்கள்?முகங்காட்டும்போது கருத்துக்குச் சரியானவொரு வலுவுண்டு! ஏனெனில், உங்களைப் போன்ற மக்களே வரலாற்றைப்படைப்பவர்கள்.அதுள்தாம் நாமும் அடக்கம்.எனவே, நாமெல்லாம்"தோழர்கள்".நடுவினில் என்ன மறைப்பு?

-/பெயரிலி. said...

//வரலாறு தனி மனிதர்களின் விருப்பங்களை - அவை எவ்வளவு தான் உன்னதமாய் இருந்த போதிலும் - பொருட்படுத்துவது கிடையாது//

ஹி! ஹி! இஃது எனக்கு, உங்களுக்கு, இரயாகரனுக்கு, வேறெந்த பம்பிளிமாசுக்கு எல்லாருக்கும் சரியாப் பொருந்துது பாருங்கோ.

ஆனால், ஒரு கணிதச்சிக்கல் ஸ்ரீரங்கன். (கோவிக்காதீங்கோ; மெய்யாகவே கணிதச்சிக்கல்தான்)
தனிமனிதர்விருப்பமில்லாமல் எப்படி மக்கள்விருப்பம் உருவாகும். ஒரு வேளை கட்சியும் மத்தியகமிட்டியும் மக்களின் பெயரால் மக்களுக்காக உருவாக்கி மக்களுக்குத் தருமென்றாலும், அங்கேயும் தனிமனிதர்களின் விருப்பங்களின் தொகுதி அல்லோ வரலாறு ஆகின்றது. மேற்கண்ட மேற்கோளே வெறும் ஒலித்துண்டமாகச் செத்துப்போகிறது பாருங்கள். வரலாறு (தனி)மனிதர்களின் கட்டளைக்கு அடங்காது செயற்படுமென்றால், எதுக்குக் கொள்கையும் போராட்டமும்? வரலாறே எல்லாத்தையும் தீர்மானிக்கட்டுமெண்டு விட்டுப்போட்டு அப்பிள்மரத்துக்குக் கீழே நாங்கள் பப்பியோட விளையாடிக்கொண்டிருக்கலாமே?

வரலாறு என்பதே எத்தனை தனிமனிதர்கள் ஒத்த குரலிலே சத்தான உத்தியோடு எழுகின்றார்கள் என்பதன் கணக்கெடுப்புதான், இல்லையா?

கொழுவி said...

சிறிரங்கன் அண்ணை
பெயரிலி உங்களை அப்பிடியிப்பிடியெண்டு மடக்கப்பாக்கிறார். விட்டுடாதேங்கோ..

//வரலாறு தனி மனிதர்களின் விருப்பங்களை - அவை எவ்வளவு தான் உன்னதமாய் இருந்த போதிலும் - பொருட்படுத்துவது கிடையாது//

இதை படிச்ச உடனை எனக்கு கவலையாப் போச்சு. என்னதான் உங்கடையும் ரயாகரனினதும் நோக்கங்கள் உன்னதமாய் இருந்த போதும் ஒருவேளை வரலாறு உங்களைப் பொருட்படுத்தாமல் போகப் போகிறதோ :))

அற்புதன் said...

//ஒன்றிணைந்த தமிழர்களின் தேசியவாதம் சிதைவுறும் சந்தர்ப்பம் தோன்றும்//


ஒன்றிணைந்த தமிழர்களின் தேசியவாதம் சிதைவுறுவதால், ஈழத்தில் தலிதுக்களுக்கு நன்மையா?

ஈழத்து தலிதுக்கள் பவுத்தர்களாக மாறினால் அவர்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்பதே தீர்வா?

இரண்டாம் உலகபோரின் போது நேச அணியில் எவ்வாறு முதலாளிய அரசுகளும் சோவியத் அரசும் ஒன்று சேர்ந்தது?

கிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எவ்வாறு பெரியார் உயர் சாதிய சைவத் தமிழ் அறிஞர்களோடு ஒன்று சேர்ந்து போராடினார்?

போராட்ட நடைமுறையைப் புரிந்து கொள்ளாத வரட்டுச் சித்தாந்தம் ஈற்றில் இந்த வரட்டுச் சித்தாந்திகளை எதிரியின் முகாமிலையே தள்ளிவிடும் என்பதே யதார்த்தம்.மக்களோடு மக்களாக நின்றால் தான் நடைமுறையையும் சிந்தாந்தையும் ஒன்றாக இணைக்க முடியும். அது களத்தில் நின்று போராடுபவர்களாலையே சாத்தியம் ஆகும்.

மக்களிடம் இருந்து அரசியலைக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதே மாவோ சொல்லும் பாடம் தான்.

போராட்டம் என்பதே பிரதான முரணில் இருந்தே வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்டியமைக்கப்பட்டு வந்துள்ளது.இது உலக வரலாற்றில் நடை பெற்ற எந்தப் போராடத்தை எடுத்துக் கொண்டாலும் ஒரு பொதுவான அம்சமாக இருக்கிறது.ஒரு பிரதான முரண் தீர்க்கப்படும் போது இன்னொரு முரன் பிரதான முரணாக உருவெடுக்கிறது, ஒரு போராட்டத்தின் முடிவில் இன்னொரு போராட்டாம் தொடங்குகிறது.

தேசிய விடுதலையே வென்றெடுக்கப்படாதா நிலையில் , தலித்தியம் என்பது என்ன தீர்வை முன் வைக்கிறது?

நாளை உயிர் வாழ்வோமா என்றே தெரியாதா நிலையில் உள்ள மக்களுக்கு இந்த மாநாடுகள் என்ன வகையில் உதவப் போகின்றன?

Sri Rangan said...

பெயரிலி,கொழுவி,அற்புதன்,வணக்கம்.இன்று தங்கள் கருத்துக்களுக்குப் பதிலளிப்பதற்கு நேரமில்லை-வெளியிற் செல்கிறேன்.இரவு வந்தாலும் பதிலெழுதும் நிலை இருக்காது.எனவே, தொடரயிருக்கும் கிழமைக்குள் பதிலளிக்கப்படும்.இதில் பெயரிலியின் கேள்விகளுக்குப் பெரிதும் பதிலளிக்கவேண்டியது அவசியம்.அது என் தனிப்பட்ட-பிறப்பால் வந்த சாதிய அடையாளத்தின்மீதான கேள்விகளாகவும் இருப்பதால் அவை முக்கியம் பெறுகிறது.அற்புதன் வைத்தவை நடைமுறைசார்ந்த இயக்க-புரட்சிகர இயகத்தின் போராட்டச் செயல் முறைமீதான கேள்விகள்.அத்தோடு அணிகளின் கூட்டுச் சேர்க்கை மீதானது.இதுள் நமது போராட்ட அமைப்புகள் ஏலவே பொது எதிரிக்கெதிராகத் தமக்குள் இணைந்து, பின் ஒருவரையொருவர் கழுத்தறுத்த விஷயமெல்லாம் பொருத்திப் பதிலளிக்க வேண்டும்.எனவே,உலக மகாயுத்தத்தில் நாசியத்திற்கெதிரான அணிச் சேர்க்கையென்பதோடு மட்டும் இவற்றை(புலியின் ஈழப் போராட்டச் செல் நெறி,தலித்துவ போராட்ட முறைமைகள்...)ஒப்பீடு செய்வதுமட்டும் போதாது.பதில்களைப் பிறகு தருகிறேன்.அற்புதன் தங்கள் கேள்விகளுக்கும்,வருக்கைக்கும் நன்றி.


"................."கொழுவி,நமக்குள் எதுவிதக் கருத்துக்களும் "பயங்கரமாக"விவாதத்துக்காக வராதபடியினால்,இப்போதைக்குக் கிளித்தட்டு விளையாட நேரமில்லை.கணினிமுன் உட்கார்ந்துகொண்டு ஒவ்வொருவரின் தளத்துக்கும் வரும் பின்ன}ட்டங்களை மேய்ந்து,வெளியில் சூரியன் உதிப்பதோ,மறைவதோ தெரியாமற்போகிறது.இன்று,வெளியில் செல்வதே உந்தக் கண்றாவிகளைவிட மேல் மகனே!அப்ப வரட்டே?

கொழுவி said...

//வெளியிற் செல்கிறேன.. இரவு வந்தாலும் பதிலெழுதும் நிலை இருக்காது.//

என்சாய் :)))

Anonymous said...

No Responses to “முதலாவது தலித் மாநாடு - பிரான்ஸ்”
முதலாவது தலித் மாநாடு பற்றி சிறு கருத்து

ஒடுக்கப்பட்;ட மக்களுக்கான ஜனநாயக உரிமைக்காக போராடுவது எந்த வகையிலும் தவறில்லை. இவைகள் சீர்திருத்தம் செய்வதும் கூட தவறில்லை. முதலாளித்துவ ஜனநாயகம் மறுக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்கள் பகுதியினரின் உரிமைக்காக குரல் கொடுப்பதில் எந்தத் தவறும் அல்ல இந்த வகையில் வர்ணாசிரமக் கொடுமைகளால் பாதிக்கப்படும் மக்களின் ஜனநாயக உரிமைக்காக போராடுவது எந்தக் காலதிலும் தவறானதாக கொள்ளத் தேவையில்லை.

இலங்கையி;ல் சாதியம் அல்லது புலம்பெயர்ந்த நாடுகளில் உயிர்வாழ்கின்றதாக என்றால் நிச்சயம் பலநூறுமடங்கு உண்மையானதாகும். இதனை மறுப்பது குறுகிய நோக்கம் கொண்டதாக இருக்க முடியும். நோக்கம் என்பது பலதளங்களில் பல சந்தர்ப்ப சூழலில் தென்படுகின்றது.

இங்கு தலித்துக்கள் என்ற சொற்லாட்சி என்பது பற்றிய கருத்துக்கு முதல் இவர்கள் வர்க்க நிலைக்கு அப்பாற்பட்டு தனித்து ஒரு மக்கள் பிரிவாக இருந்து கொள்ள முடியுமா?
இந்த சமூகத்தில் இருந்து பொருளாதாரப்பலத்தில் இருப்பவர்கள் தமது மக்களையும் ஒடுக்காமலா அல்லது சுரண்டாமலா இருக்கப் போகின்றார்கள். (இப்படிக் கேட்டால் கட்டுப்பெட்டித் தனமாக கருத்தை மறுபடியும் கதைக்க வந்துட்டாங்கள் என> ஏற்பாட்டைச் செய்கின்றவர்கள் கூறுவர் இவை ஒருபுறமிருக்க) ஒரு மக்கள் கூட்டத்தில் இருந்து பால் ரீதியாக அல்லது மொழிரீதியாக அல்லது சாதி ரீதியாக நிலைப்பாடுகள் எடுப்பது ஒன்றும் புதிதல்ல. (தமிழ் நாட்டுக்குச் செல்லத் தேவையில்லை) இலங்கையில் தமிழ் என்ற இனரீதியாக செயற்பட்டு எந்த நிலைக்கு வந்துள்ளனர் என்பதை நாம் வாழ்ந்து கொண்டே அனுபவித்துக் கொண்டு வருகின்றோம்.

தலித்தியத்தைக் வரையறுப்பவர்கள் இடைநிலை மக்கள் அல்லது விழிம்பு நிலை மக்கள் எனக் கொள்கின்றனர். இடைநிலை அல்லது விழிம்பு நிலை என்பது கலாச்சார பண்பாடு ரீதியாக அல்லது அறிவு (னi) ரீதியாக பின்தங்கியிருக்கின்றார்கள். என்றுதான் பொருள்படுத்த வேண்டியுள்ளது. உயர்சாதியினர் மக்கள் மற்றவர்கள் மாக்கள் என்ற கருத்துப்பாட்டிற்கு வந்திருக்கின்றனர். அல்லது வரையறுத்திருக்கின்றனர். நான் வர்க்க ரீதியாக பின்வகுப்பில் இருக்கின்றேன். அப்படிப்பட்ட என்னை எவ்வாறு நான் ஆறு அறிவுள்ள மனிதர் என்ற நிலைக்கு பொருந்தாது என்று வரையறுத்துக் கொள்ள முடியும். இடைநிலை என்றால் அங்குமில்லை இங்குமில்லை என்று வரையறுப்பீர்கள் என்றால் நான் எங்கு இருக்கின்றேன். உங்களைப் போல மேசையில் இருந்து சாப்பிடத்தெரியாதவனாக இருக்கலாம் அல்லர் உள்ளங்கையில படாது ஐந்து விரல்கால் மாத்திரம் சாப்பிடத் தெரியாதவாக இருக்கலாம் அல்லது நுனிநாக்கில் ஆங்கிலம் தெரியாதவனாக இருக்கலாம் அல்லது குடிசையில் இருக்கலாம் அல்லது நான் சிறுவயதில் இருந்தே குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் கல்வி கற்க முடியாது வேலைக்கு சென்றவனாக இருக்கலாம் அல்லது பொருளாதார அமைப்பு மாற்றத்தை நிலத்தை விட்டே நகரத்துக் துரத்தியடிக்கப்பட்ட கூலியாக இருக்கலாம் இப்படியே பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக பின்தங்கிய நிலையில் உள்ள என்னை எனது நிலையை கூறிக் கொண்டே போகலாம்.
அப்படித்தான் உங்களைப் போல நாகரீக உலகத்தில் வாழ்கின்றதினால் என்னிடம் உள்ள ஒடுக்குமுறைச் சிந்தனை இல்லாமலா போய்விடும்?

இவ்வாறு ஒரு மக்கள் பகுதியை வரையறுத்துக் கொள்ள கீழ்மைப்படுத்திக் கொள்ள எவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது யாரால் வழங்கப்பட்டது? இன்றைய நிலையில் அறிவைப் பெறுவது கூட பொருளாதார நிலை என்பது முக்கிய காரணமாக இருக்கின்றது. இதிலும் இந்தச் சமூகத்தில் இருந்து பெறப்படுகின்ற அறிவு கூட இந்த பொருளாதார கட்டமைப்பை பாதுகாக்கின்றதாக உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி நிலைகளில் இருக்கின்ற பாடத்திட்டம் என்பது இந்த பொருளாதார அமைப்பை மறுவுற்பத்தி செய்யும் படியானதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

Sarava said this on Your comment is awaiting moderation. October 17th, 2007 at 8:02 am

http://www.satiyakadatasi.com/?p=112#respond

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...