Thursday, October 18, 2007

இதை வாசிப்பவர்கள் முட்டாள்கள்:

இதை வாசிப்பவர்கள் முட்டாள்கள்: எப்படி மனிதர்கள் எண்ணிக்கொண்டார்கள் என்பதாக.


"மீள் சிந்தனைக்குப் பதில் சிந்திக்க விடுதல்".இது குறித்துச் சிந்திக்க முடியும்.இத்தகையது மிகச் சொகுசானதும் இலகுவானதாகவும் இருக்கிறதென்ற ஒரு புள்ளியில் பிறதொரு வெளி அகலத் திறந்திருக்கிறது.எந்தொவொரு அநுமானத்தையுங்கடந்த ஒரு மொழியின் வழியான கவனப்படுத்தல்-குறிப்பிடுதலின் குறிப்பான்கள் மிகவும் மலினமான எண்ணத்தால் ஏதோவொரு அழுத்தத்தைச் சமாந்தரமான முறையில் அண்மிப்பதற்குப் பதிலீடாக எந்த மாற்று வழியுமில்லை.அதுவொரு குறியீடாக இருக்கும்"சிந்தனை"என்ற பிரமையிலிருந்து முற்று முழுதுமாக விலகி நிற்பதன் தொடர் தோல்வியின் மையத்தைச் சொல்வதற்குச் "சிந்தனை"அவசியத்தோடானவொரு குறிப்பானாகக் கும்மியிடுவதிலிருந்து,மனிதச் சிந்தனை எந்த மகத்துவத்தையும் இதுவரை இட்டபாடில்லை.அறிவினது தொடர்வினையின் சூட்சமம் எந்தப் பொருள் சார்ந்தும் எழும் புறநிலைப் பொருட் பெறுமானத்தை உடைத்துப்போடுவதற்கும் அந்த தளத்திலிருந்துகொண்டே அகநிலை இருத்தலை அடிமனதாட்சிமையென்பதும், கற்பிதத்தைப் படிமத் தளத்தில் இருத்தி வைப்பதற்கான சொல் அலங்காரம் ஏதோவொரு முறைமையின் சிக்கலைப் பேசுவதாகவும் அது உலகத்தின் பருப் பொருள் நீக்கியப் புனைவின் தொடர்ச்சியை வற்புறுத்துவதாகவும் போடப்படும் வலைகளுக்குள்"மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்"என்ற பெளத்த தத்துவார்த்தத்தின் அடி நாதம் செப்பும் புதுமையானது பொருள் கொள்ளதக்கதாயினும் இன்றைய சிந்தனைத் தளத்தில் தீர்மானகரமானவொரு உறுதிப்பாடு நீங்கிய "உண்மையை நோக்கிய அண்மித்தல்"என்ற ஒரு உருவகச் சிந்தனையையின்பால் அபத்த வெளியகற்றும் அற்புதங்களை அண்மிக்கும் கருத்து வெளியின் திரட்சி,மேலும் வற்புறுத்தம் சமாந்தரச் "சிந்தனை"போதுமானவரை புற நிலையின் பொருள் இருப்பைச் சார்ந்தே பிரயாணிக்கும் ஒரு திரை மறைவில் சிக்கிய பின் அதுவாக மனித இருத்தலின் மறுப்பைக் கக்கி வைக்கும் சந்தர்ப்பம் மேலும் மெருக்கேறும் வெளியை புற நிலைபொருளற்ற உலகாகச் சித்தரிக்கும் இந்த முடிச்சில் பெளத்தம் வந்த எள்ளி நகையாடுகிறது.

காபர்மாஸ்

காரியவாதம் என்பதன் தொடர் நிகழ்வில் குப்பர விழுந்து மோதும் மொழியாடலின் பின்னே விரிந்து மேவும்"கருத்துப் பரப்பு"என்பதன் வினை என்னவென்பதன் கேள்வியுள் உறுதியிழந்த அசமந்தப் பேர்வழிகளின் பின்னே சிரித்து நிற்கும் பிரமாண்டம் புறநிலையின் பிம்பத்தைக் கற்பிதங்களால் எள்ளி நகையாடுவதும்,மொழி விளையாட்டின் பேருண்மையாக விரிக்க முனையும் வினைமறுப்பின் தொடர்ச்சியின் மறுபக்கம் புனைவின் தொடர்ச்சி-நீட்சி என்ற இரு தளங்களில் எழிச்சியடையும்"உண்மை" உருவகப்படுத்தப்பட்ட அகநிலை இருப்பின் வெளியில் புதைக்கப்படுகிறது.இதை இன்னொரு சமாந்தரமான உணர்வு நிலையின் பெரு வெளிக்குள் சார்ந்தெழும் புறநிலைப் பொருள் சார் மதிப்பீடுகளால் புலன்பால் உண்மையாகும் ஒரு உலகைப்"புலன் ஆகும்"புறநிலைப் பொருளுலகம் என்றே வைத்துக்கொள்வதற்கு மொழிவைச் சிந்தனைப் புனைவின் தொடர்ச்சியை வற்புறுத்தி மயக்கமுற வைக்கிறது.

இந்த மயக்கத்தை உடைப்பதுள் சாத்தியமானவரை ஈடுபடுத்தப்படும் புவிப்பரப்பின் மீதான இடைச் செயலின் பிரதிபலனாக பிணைக்கப்பட்ட சமூக மிருகத்திடம் இருக்கும் ஒரே ஆயுதம்"உயிரின் தகுதியை-வளர்ச்சியை"க் குறிக்குமென்ற அத்வைத்தத்தின் ஆத்மீகத் தேடலையுந்தாண்டிய கருத்துமுதற்கட்டுகைகளை அகற்றுவதன் தொடர்ச்சியில் பெரிய சர்ச்சைகளைச் சம்பாதித்த-சம்பாதிக்கும் பொருள்முதல்வாதத் தொடர்ச்சிகளின் எல்லையற்றவொரு சமாந்தரப் புரிதலென்பது பருப்பொருள் குறித்த புரிதப்பாட்டைச் செப்புவதற்கெடுத்த முறைமைக்கு "தத்துவ ஞான இயல் பாட்டாளி வர்க்கத்திடம் அதன் பெளதிகப் பொருளாயுதப் பேராயுதத்தைக் கண்டதுபோன்று பாட்டாளி வர்க்கம் தத்துவ ஞான இயலில் தன் ஆன்மீகப் பேராயுதத்தைக் கண்டது"என்பதும் ஒரு விதத் தருக்கத்தைச் சொல்லிய போதும் அரிதான மதிப்பீடுகளையுந்தாண்டிய இந்த "உண்மையை அண்மித்தல்"அல்லது அதன் அருகினில் வந்திருப்பதென்பது உண்மையில்லை என்பதன் இன்னொரு குறியீடாய்க் கிடந்துழலும் சொற்பன வெளிகளுக்குள் சொற்காளால் நிறைக்கப்படும் எல்லா வகை நியாயவாதங்களும் புலன்பால் சுடப்பட்ட புனைவின் சிலம்பம்தாம்.

இங்கே உருப்போட முனையும் கணிதச் சமன்பாடுகளும் தூயகணித்தத்தின் தொடர்பியக்கக் கண்ணிகளும் ஒன்றின் பின்பான தொடர்வினைகளுக்கான பகுப்புகளில் சிக்கிக்கொள்ளும் சந்தர்ப்பங்களுக்குள் மெல்ல விரட்டப்படும் எந்தப் புனைவும் ஊத்திக்கப்போகிற அடர்த்தியின் மிகத்தொடர் வினையே முற்றும் அறிந்த வினையே மூப்படையாத மனிதத் தரணம் மடை திறந்து ஒப்புவிக்கும்போதே அதன் பினாத்தல் மேலும் தெளிவுற்றுப் போகிறது.அதி நவீனச் சமூகங்களும் அதை நிலைப்படுத்திய பொருள் விருத்தியும் குவித்து வைத்திருக்கும் பொல்லாத புனைவுகளுக்குள் போராடும் தரணத்தைத் தேர்ந்தெடுத்த இந்தப் பொருள்முதல்வாதப் புரிதப்பாடினது தொடர் வியாபகத் தன்னறிவு எந்தப் பேத்தல் புனைவுகளையும் தன்னகத்தே நெருடும் சிறப்பான சீரமைவுகள் என்பதில் கண்ணிகைகளைப் புதைத்து வைத்திருக்கும் புலமைத்தனப் போக்குகளை மெல்ல வருடியே வளவுறுந் தரணமே"விடுதலை"என்பதன் விழுமியத்தைப் பொருளுறுத்திச் சொல்லும் புனைவாகவும்-புறப்பொருள் யதார்த்தமாகவும் மனித்துவப் பெருவெளியின் இருத்தலைமையப்படுத்திக் கருத்தாடுவதற்கிசைவாக இருக்கிறது.இதை மறுப்பதன் தொடர்வினைகளை எந்த அரூபப் பேசு பொருளாலும் புகட்டப்படும் சந்தர்ப்பங்களை தனிநபர்-தனியுடமை மாட்சிமைகளுக்காகப் புறத்தேயொதுக்கிப் போட்டுத் தள்ள முடியாது.பேசுதல்-பறைதல்,விவாதித்தல்,சமூக விமர்சனம் எப்பவுமே அர்த்தம் பொதிந்திருங்கும் தரணங்களையுற்பத்தி செய்யும் இன்றைய காலவர்த்தமானுத்துள் மாற்றங்களைச் செய்வதற்கான அன்றைய முன்மொழிவுகள் செயற்பாடுகள் அந்தத்தத் தளத்தில் நிலவி இன்றுரையும் நிகழ்ந்து நெருங்கும் இருபதாம் நூற்றாண்டினதும் இருபத்தோராம் நூற்றதண்டினதும் பெரும் கொடும் அழிவைச் செப்பனிடவோ அல்லது தடுத்தாளவோ முடியவில்லை.இம்மானுவல் கன்டினதோ அன்றி மார்க்சினதோ புரிதப்பாடலிருந்தோ சமீபத்து சார்த்தார் வரையோ இந்தக் கோணத்தைச் செப்பனிடும் மொழிவுகளைக் கண்டடைந்து செப்பியபோதும் இன்றுவரையும் "சுழற்ச்சி இயக்க"முறைமையின் உள்ளார்ந்த நெளிவு சுளிவுகளைச் சொல்வதற்கு துணைபுரிவதிலிருந்து எந்தக் குறைபாட்டையும் செய்துவிடவில்லை.

தெரிதா


சுழற்றி இயக்கத் தொடாச்சி இன்றைய விஞ்ஞானப் பெருஞ்சுற்றில் அநுபவத்தின் தொடர்வினையை மறுப்பதற்கில்லை.அது தன்போக்கில் நிலவும் மரபுசார்ந்த மயக்கத் தன்மையிலான எல்லா மடிப்புகளையும்(சமூகவியல்,பொருளியல்,அரசியல் விஞ்ஞானம்,கணிதம்,பெளதிகம்,வானியல்,உயரியல்,வரலாற்றியல்,மானுடவியல்,இலக்கிய விஞ்ஞானம்,மொழியியல் இன்னபிற)குறித்தான சுயதேடலில் பேருண்மையாக வியாபித்திருக்கும்"ஒடுக்கு முறை"அதன் தேவையை வலியுறுத்தும் அடித்தளத்தையும்(பொருளாதாரம்)இருப்பிக்கிட்டுச் செல்லும் சமூகத்தன்மையை மறுக்கும் தனியுடமைப் புதைசேற்றில் குவிக்க முனையும் அதிகாரத்தைப் பிரதியீடாக்க எந்த மக்கள் நலனும் இல்லை என்பதன் உண்மையின் அருகினில் நகர்த்தும்.இதுவே நவீனத்துக்குப் பின்பான பெருங்கதையாடல்களைச் இந்தச் சுழற்சி இயக்க வெளிக்குள் இரண்டாம் உலகமகாயுத்தத்துக்குப்பின்பு நகர்த்திக்காட்டியது.கிட்லரின் நாசியதுக்கு வருவோம்.தேசிய சோசலிசச் சகதிக்குள் மூழ்கிய ஆரியவாதத்தன்மையைத் துக்கிப்பிடித்த விஞ்ஞானக்கும்மியில் முதல் நின்று கும்மியடித்தவர் பிலிப் லேனார்ட் (Phillip Lernard 1862-1947)இவர் பெளதிகத்துக்காக 1905 இல் நோபல் பரிசைப் பெறுகிறார்.1935 டொச்ச பெளதிகம் எனும் அறிவியல் அமைப்பைத் தோற்றிவிக்கும் மனிதன் ஆல்பேர்ட் ஐயன்ஸ்ரையினை மயிருக்கும் மதிக்கவில்லை.ஏன்-எதற்காக என்பதையும் தாண்டிச் சகதிக்குள்(ஆரியவாதம்)கிடந்துழலும் இந்த அன்னக்காவடி றிலேற்றிவிற்றேற்(Relativitätstheorie) தியரியைப் போட்டுக் குழப்பி,அது யூதனின் தத்துவம்,யூதனுக்கு மனதிலெழும் உண்மைகுறித்த அறிவு(...) குறைவென்றான்;(Dem Juden Fehlt auffalend das Verständnis für Wahrheit(...) Phillip Lenard,Deutsche Physik,Münschen 1936.Seite:ixf)இத்தகையக் கதையாடலின் பின்னே தொக்கி நின்ற உண்மையின்பால் வெறுப்பேற்றும் இனத்தூய்மையெனும் பொய்மை பெரும் பெளதிகவியாளர்களையும் விட்டுவைக்காத மனவிருப்பின் விகாரங்களைக் கொண்டிருப்பதன் தொடர்ச்சியாக இங்கேயும் ஒரு சில மனிதர்கள் எடுத்துப்போடும் கார்ல் போப்பரும் அதே கதையின் சுழற்சித் தொடரில் எடுத்துப்போட்ட அருமையான(!?)Aussage Poppers hinzufügen, die lautet: `Es kann keine vollkommene Gesellschaft gebenஉலகம் அனைத்தும் ஒருமைப்படும் சமுதாயம் கிடையவே கிடையாது.(Vgl. das `Nachwort´ zu Popper/Lorenz: Zukunft (Anm. 29), S. 138. ... Und er fügt hinzu, S. 140: `Wenn du eine vollkommene Gesellschaft anstrebst, so wirst du sicher gegen die Demokratie sein)உலகம் அனைத்தும் ஒருமைப்படும் சமுதாயத்தை நோக்கி நீ விரும்புறுந்தரணத்தில் (போராடினால்) நிச்சியமாக ஜனநாயத்துக்கு எதிராகக் காரியமாற்றுகிறாய்)" இனவாதக் கும்மியில் அன்று வழிகாட்டியவர் எவரென்ற உணர்வுக்கு வலுவூட்டியவர் ஓட்டோ கீர்க்கே(Otto v.Gierke 1841-1921யுத்தமும் பண்பாடும்" என்ற சொற்பொழிவில் சொல்லப்பட்ட:"யுத்தம் பண்பாட்டைச் சிதறடிப்பதும் உண்மை,எனினும் நியாயமானது(கிட்லர் பாணி)அது.நாங்கள் யுத்தத்தை வருவேற்போம்.அதுள் இறைவனின் நியாயத்தை நிலைநாட்டுவதற்காக" என்றான்.

இப்போதைய தமிழ்ச் சூழலுக்குள் வருவோம்.பெருந்தவப் பயன்களால் பெற்றெடுத்த பேராடும்-பெருமைக்குரிய பெருந்தகை பற்றிய பொழிப்புகளுக்கு நடுவில் கருத்தியற்றளத்தில் கட்டிப்போடும் வலுவற்ற மொழியாடலில் மெலினப்பட்ட அந்தப் பெருந்தகையின் சமூகஜீவிகளின் அன்றாட வாழ்வுப்பயணத்தில் கட்டப்பட்ட"சுதந்திர வேட்கை"சொல்லித்தரும் அறிவு"விடுதலை".உன்னை இழந்தும் விடுதலையைப் பெற்றெடு என்பதன் முன்னைய நாடகம் இதோ! சுசான நீடன் என்ற ஆய்வாளர் இரண்டாம் உலகப் போருக்குள் சிக்கிய பெண்கள் குறித்த ஆய்வைச் செய்திருக்கிறார்.இவரது நுலை வாசிப்பவருக்கு நிச்சியம் திடுக்கிடும் உண்மைகள் "தமீழீழத்து"பெண்களுக்குள் நின்றாடுவதைப் பார்க்க முடியும்.யுத்தத்தால் அனைத்தையும் இழந்த நிலை.மனப் பிறழ்வில் உச்சம் பெற்ற நிலையுள் கிட்லர் சேனைக்குள் மிகச் சரிவேற்பட்டிருந்துபோது,அந்த நிலையிலும் பதினாங்கே வயதுள்ள கிட்லர் இளைஞி எழுதுகிறாள்:"டாக்டர் கொய்ப்பிள்ஸ்(Dr.Goebbels einen Aufruf ergehen lassen:"Totaler Krieg".Wir, unsere Schule, wird wohl auch noch eingesetzt werden für irgenwelche Arbeiten.Das wäre auch richtig.den wir müssen ja siegen!!!"(Susanne zur Nieden,Zur Theorie und Praxis von Alltagesgesichichte,Münster 1994.Seite:181) வெளிப்படுத்திய "முற்றுமுழுதான யுத்தம்"என்ற அழைப்பானது எங்களை,எங்கள் பாடசாலையை ஏதாவதொரு வேலைத்திட்டத்துக்குள் இணைப்பதற்கு முனையும்.இது சரியானது.ஏனெனில்,நாங்கள் நிச்சியமாக வெற்றியீட்டுவதற்காக" என்கிறாள்.இப்போது பார்ப்போம் நமது சூழலில் போராட்டம் குறித்தான நிலைமைகள்-மனோ நிலைகள்,வாழ்வியல் மதிப்பீடுகளும் யுத்தம் என்பதன் அர்த்தத்தால் நீட்டிமுடக்கப்பட்டு,வாழ்வே யுத்தத்துக்காகவென்பதாக இருக்கிறது.இந்தப் புனைவின் தொடர் சுழற்றி இயக்கம கடந்தகாலத்தின் நகலாக இருப்பதும் அதுவே சமூகத்தளத்தில் புநிலையான பொருள்சார் முறைமையின் தொடர்வினையின் உந்துதலாகவும் அதே இடத்தில் அகநிலை வெளியில் உறிதியான கருத்தியல் வலுவாகம்,இயற்கையாகவும் நிலைப்படும் தரணங்களை "உண்மையை அண்மித்தல்"என்ற பொதுமைப்படுத்திச் சமுதாயத்தை நோக்கிவிடுதலும் போராட்டத்தோடு,தமிழீழப் போருக்குள் உள்வாங்கப்படாத நண்பர்களை,உள்வாங்கும் முயற்சியோடு பூரணப்படுவதாக எந்தக் கார்ல் போப்பர் கதைவிட்டார்?அவரே மனித சமுதாயம் ஒருபோதும் அனைத்துமாக இணையமுடியாதென்றும்,அப்படி இணைக்க விரும்பும் செயல் ஜனநாயக விரோதம் என்றும் போட்டுடைக்க நாமே நமக்கு அரிவரிப்பாடம் போட்டுச் சோக்காட்டுகிறோம்!


சுழற்சியக்கத்தொடர் நிகழ்வுப் பரிணாமம் இன்னும் மேலே சென்று கட்டிப்போடும் இன்னொரு தளமாக விரிவுறும் பாரிய நிகழ்வு காட்சிப்படுத்தும் புனைவாகத் தொடர்கிறது.இதன் எல்லையின் பரிணாமங்கள் மிகப்பெரும் வெளியைச் சிந்தனைக்குள் திறப்பதற்குப்பதிலாக அதை மறுத்தொதுக்கிக் குறுக்கலான பாதையொன்றைத் திறந்துவிடுகிறது.இது கட்டமைக்கும் வெளிக்குள் மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு என்ற கோட்பாட்டு நிலையைப்பொருத்திப்பார்ப்பதே சில வேளைகளில் பொருத்தப்பாடாக இருக்கும்.எனினும் அதுவல்ல இன்றைய பிரச்சனை.இங்கே நாம் பார்க்கும் இன்னொரு தத்துவவாதியிடம் போவோம் யுர்கன் கபர்மார்ஸ்JürgenHabermas)இன்னொரு வினையை கார்ல் போப்பரின் மூவுலகம் எனும் சிந்தனைக்குள் விரிவடைய மறுக்கும் "நியாயப்புடுத்துதல்"(Theorie der Rationalisierung)எனும் கோட்பாட்டை மீளமைப்பில் சமுதயாத்தின் அனைத்து தளத்திலும் இதைப்பொருத்திப்பார்க்கின்ற முறைமைகளோடு அதைக் குறுக்காது மேலும் அதை இன்றைய அறிவு(...)வாதக் கதையாடல் அனைத்துக்கும் பொருத்துகிறார்.இன்றையவரை காபர்மாசின் கருத்தூட்டங்கள் நிலைகொண்டிருக்கும் பரிணாமங்களில் நாம் கால் வைப்பதற்கானவொரு வெளியைத் தரும் விவாதங்களோடு மேலும் நகர்தல(விவாதித்துக் கொண்டிருக்கிற முறைமையின் நிலை,எடுத்துரைப்பை அறிவினுடையமதிப்பீட்டுத்தன்மைக்குள் மீள் அறிமுகப்படுத்தலுக்குப் பதிலாக வேறொரு பரிணாமத்துக்குள் உருவகப்படுத்துதல்) சாத்தியமென்பதால் இதை நிறுத்தித் தொடர்வது பஞ்சி முறிக்கும் ஒரு நிகழ்வதாம் இப்போதைக்கு-வேறு வழி?.

ப.வி.ஸ்ரீரங்கன்.
18.10.2007








2 comments:

கொண்டோடி said...

பெயரிலி விளங்காமல் எழுதினாலும் பின்னூட்டம் போடுறாங்கள், எனக்கு மட்டும் போடுறாங்களில்லை எண்டு நீங்கள் குறைநினைக்கக்கூடாதெண்டதுக்காக இந்தப் பின்னூட்டம்.

படங்களில இருக்கிறவை ஆரெண்டாவது ஒரு குறிப்புப் போட்டிருக்கலாமெல்லோஃ

Sri Rangan said...

//பெயரிலி விளங்காமல் எழுதினாலும் பின்னூட்டம் போடுறாங்கள், எனக்கு மட்டும் போடுறாங்களில்லை எண்டு நீங்கள் குறைநினைக்கக்கூடாதெண்டதுக்காக இந்தப் பின்னூட்டம்.//


கொழுவிக் கொண்டோடி,மூஞ்சியில் ஓங்கியடித்துச் சொல்கிறீர்.புரியுது.ஆனால்,இலகுபடக் கூற முடியவில்லை.இதுக்கே இப்படியென்றால்...இன்னும் பல சூரர்களை உரித்துத் தீத்தக் காத்திருக்கிறேன்,நீங்களோ இப்படி அலுத்துக்கொண்டால்... "lifelong learning"என்னவாவது?-brave new world!

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...