Sunday, October 28, 2007
கரும் புலித்தாக்குதலுக்குப் பின்பான...
"...இரவு மட்டுமல்ல
இந்த மண்ணின் இருப்பும்
அச்சத்தைத் தருகிறது
கிழட்டுப் பலாமரத்தில்
பச்சோந்தியொன்று.
வண்ணத்துப் பூச்சிகள்
சிறகடிக்கின்றன..." -செழியன்.(அதிகாலையைத் தேடி,பக்கம்:12.)
(1)
இருபத்தியொரு கரும்புலிகளின் மரணத்துக்குப் பின்பான அநுராதாபுர வான்படைத்தளத்தைத் தாக்கிய வெற்றி இன்றையபொழுதுகளில் வலைப்பதிவுகளில் புலி அரசியல் ஆதரவு-எதிர்பார்ளகளிடம் ஏற்படுத்தியிருக்கும் உளவியல் ரீதியான தாக்கம்-மரணமுற்று மண்ணையணைத்தபடி மண்டை பிளந்து கிடந்த தமிழ்க் குழந்தைகளின் உடல்களைக் கடந்து, சிந்தித்த உளவியலைப் பார்த்தறிவது மிக அவசியமாகும்.இத்தகைய மதிப்பீடானது எதிர்வரும் புலி-சிங்கள அரச வியூகத்துக்குள் மக்கள்படப்போகும் போர்காலச் சமூகசீவியத்துக்கு மாற்றீடான அரசியல் நகர்வுக்கு அவசியமான முன் நிபந்தனையில் ஒன்றாகும்.
புலம் பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடிய வெற்றியும்,தமது இன்னுயிர்களைத் தமது தேச விடிவுக்கென எண்ணி மரித்த வீரத் தமிழ்ப்பாலகர்களின் கொத்துக்கொத்தான உடல்களைக் கண்டும்,அது குறித்து எந்தவொரு பாதிப்புமேயற்ற விறைத்த பதிவர்கள் மீண்டும்,மீண்டும் தலித் மநாட்டைக் கேலி பண்ணுவதும்,அதன் பின்பு கரும் புலிப் பாடலென்று இணைப்புக் கொடுப்பதுமாக இருக்கிறதும்,பின்பு,போராளிகளின் மரணத்தைக் கண்டு அதிர்பவர்களின் உணர்வுகளைக் கேலி பண்ணுவதுமாகச் சில நறுக்குப் பதிவிடுவதுமாக மனம் பிரண்ட சைக்கோவாகக் கிடந்துழலும் இந்தப் பொழுதுகளில் நாம் இத்தகைய வக்கிரத் தலைமுறையின் உளவியலையும்,புலிகள் மற்றும் சிங்கள அரசியல் நகர்வுகளையும் பார்ப்பது ஆரோக்கியமே.
புலி அரசியல்சார் அநுதாபிகளால்கூட போராளிகளின் மரணத்தைக் கண்டு ஒரு காத்திரமான படைப்பைத்தரமுடியாதபோது புலிகளின் அரசியலை மிகக் காட்டமாக விவாதிக்கும் நாங்கள் அதிர்கிறோம்.எங்கள் குழந்தைகளின் மரணம் எம்மைப் பாதிக்கிறது.அவர்களின் மரணத்துக்கூடாக வந்து சேரும் இத்தகைய(அநுராதபுரத்தாக்குதல்போன்றவை)வெற்றிகளால் நமது தேசியவிடுதலை-சுயநிர்ணயம் வந்துவிடக்கூடுமென நாம் நம்புவதற்கு நாம் தயாரில்லை.இந்த மரணங்களை உணர்வு மரத்த இன்றைய புலி அநுதாப இளைஞர்கள் வெற்றியின்படிக்கட்டுகளாகவெண்ணியும் இனிப்புண்டு மகிழ்ந்தும் போகலாம்.நாம் இதை வெறுக்கிறோம்.இத்தகைய மரணங்களால் தேச விடுதலைச் சாத்தியமாவென்று பார்ப்பதற்கு முதலில் புலிகளின் போராட்டத்தையும்,அவர்களின் அந்நிய உறவுகளையும்,அரசியல் வியூகத்தையும்,சிங்கள அரசியல் நகர்வுகளையும்,அந்த அரசைக் காத்துவரும் உலக நலன்களையும் சற்றுப் பார்ப்பது அவசியம்.
புலிகளின் கடந்த அநுராதபுரத் தாக்குதலுக்குப் பின்பான "தேசிய விடுதலை"ப் போராடச் சூழலையும்,கரும் புலிகளின் வகைதொகையான மரணத்துக்கூடாகக் கட்டப்பட்ட "வெற்றி"யென்ற இந்த அரசியலிலிருந்து புலிகளின் போராட்ட நிலை என்னவென்பதும்,இந்தப் போராட்டத்தால் சாத்தியமாக இருக்கும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் இலக்கு என்னவென்று ஆராய்வதும் மிக முக்கியமாகும்.மரணங்கள்,உடல்கள்,மனிதக் கணங்களை வருத்துபவை.அவை உணர்வின் உந்துதல்களால் மனிதர்களின் எல்லா வகைக் கருத்துக்களையும் மெல்லக் கடைந்தேற்றி "ஓலம்,ஒப்பாரி"என்ற இயலாமையின் வெளிப்பாடாக வெளிவந்துவிடுகிறது.சக மனிதனின் அழிவைப் பார்த்தும்,அவனால் நிர்மூலமாக்கப்பட்ட பொருட் சேதாரத்துக்காக மகிழ்வுறும் சமுதாயமாக இருக்கும் இந்தத் தமிழ் பேசும் சமுதாயத்திடம் முதலில் சில கேள்விகளைக் கேட்டாகவே வேண்டும்?
இவ்வளவு மரணங்களை விலையாகக் கொடுத்து இத்தகைய வெற்றி தேவையாகிறதா?
இந்த வெற்றியால் புலிகள் சொல்லும் தமிழீழம் சாத்தியமாகிறதா?
இழந்த யுத்த தளபாடங்களை மீளப் பெற்றுத் தன்னை வலுவாகத் தகவமைப்பதற்கு இலங்கைக்கு என்ன தடை வந்துவிடுகிறது இதனால்?
இத்தகைய தாக்குதலால் இலாபமடைய முனையும் போர்த்தளபாட உற்பத்தியாளர்கள் எந்த முறையிலும் இலங்கைக்கு உதவும் தரணங்கள் அடைப்பட்டுப் போய்விடுமா?(இந்தியாவே இப்போது உதவுவதாக உருவேற்றி வருவதைக் காண்க).
போர்த்தளபாடத்தின் விருத்தியில் இலங்கை அரசியலின் எதிர்காலம் இராணுவத்தன்மையிலான அரசாக விருத்திக்கிட்டுச் செல்லும் சூழலுக்கு இத்தகைய போராட்டச் செல்நெறி ஒத்திசைவாக உண்டா,இல்லையா?
இலங்கை அரசின் வீழ்ச்சியைத் தடுக்கும் சக்திகள் எவர்?,அவர்களுக்கும் புலிகளுக்கும்-இலங்கைத் தமிழ் மக்களுக்குமான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் என்ன?
இலங்கை இராணுவத்தின் இன்றைய நிலை என்ன?அதற்கு இத் தாக்குதலால் ஏற்படும் விளைவுகள் என்ன?
மேற்காணும் கேள்விகளுக்கான விடைகளை எமக்குள் விதைக்கப்பட்ட தேசியவாதக் கருத்து எல்லைக்குள் இருந்து தேடுவதற்குமப்பால் நாம் நமது இன்றைய அரசியல் சூழலின் வெளியிலிருந்து பார்க்காது, நமது மக்களின் இன்றைய வாழ் சூழலுக்குள் இருந்தும்,இலங்கை மற்றும் புலிகள் அரசியலுக்கு அடித்தளமாக இருக்கும் பொருளாதார உறவுகள்,வெளிப்புறச் சக்திகளின் நலன்களையும் பொருத்திக் கண்டடைய முனையவேண்டும்.
இருபத்தியொரு கரும் புலிகளைத் தயார்படுத்தி இவ்வளவு பெருந்தொகைப் போராளிகளின் மரணத்தில் சில விமானங்களை அழிப்பதும்,அதுவே,இலங்கைப் பாசிச அரசின் இராணுவ ஜந்திரத்தை முடக்குமென யாராவது கனவு கண்டால் அவர் நிச்சியம் உலக அரசியலைத் துளிகூட அநுபவப்பட்டுப் புரியவில்லையென்றே எண்ண வேண்டும்.
இனி விடையத்துக்குள் நுழைவோம்.
சிங்கள அரசும், புலிகளும்:
இப்போது நம்முள் எழும் கேள்வி,புலிகளையும் சிங்கள அரசையும் சமமாக்க முடியுமா?இன்றைக்கு இந்தியக்கைக்கூலி ஆனந்த சங்கரி மற்றும் புலிகளால் சொல்லப்படும் ஒட்டுக் குழுக்கள் எனும் குழுக்கள்,கருணா அணி முதல் புலம் பெயர்ந்து வாழும் இயக்கவாத உறுப்பினர்கள்-ஊழியர்கள்,இந்தியத் துரோகத்துக்குத் துணையாகும் வானொலி ரீ.பீ.சி. மற்றும் சிவலிங்கம்-புளட் ஜெகநாதன் கம்பனி,கூடவே ரொக்சிய வாதிகளான அழகலிங்கம்,தமிழரசன் போன்றோர்கள் கூறும் அரசியலில் புலிகளை மதிப்பிடும் தவறான போக்கிலிருந்து நாம் மீள்வதற்கான ஒரு ஆரம்ப நிலையாக இக்கட்டுரைத் தொடரைப் பார்க்கலாம்.
இன்றைய நிலையில்,சிங்கள அரசு,புலிகளின் அதிகார வடிவம் இதுள் எந்த அரச-அதிகார அமைப்புத் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரிகள்?என்ற கேள்வியைக் கேட்போம்.
"புலிகளின் அதிகார வடிவம்" என்றே பதிலைத்தர குறைந்த பட்சமாவது 60 வீதமான தமிழர்கள் இப்போது இருக்கிறார்கள்.வடமாகணம் இழந்து,கிழக்கு மாகணம் இழந்து,மன்னாரும் பறிபோய் கிளிநொச்சிக்குள் அதிகார அமைப்பாண்மை பெற்ற புலிகள், கணிசமான தமிழ்பேசும் மக்களின் இலங்கை அரசசார் வாழ்வுக்கு வழிவிட்டுள்ளார்கள்.இங்கே, இலங்கை அரச ஆதிக்கம் மீளவும் விருத்தியாகி அது மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கஞ் செய்யும்போது கூடவே கிளிநொச்சிக்குள்ளும் இலங்கை அரச ஆதிக்கத்துக்கான பொருளாதாரவுறவுகள் நிகழும்போது, இலங்கை அரசு என்பது தமிழ்பேசும் மக்களின் தவிர்க்க முடியாத இரண்டாம்பட்ச எதிரியாவது சாத்தியமே.இதைக் கணிப்பெலெடுத்த சிவலிங்கம் மற்றும் அழகலிங்கம்,தமிழரசன் போன்றோர் புலிகளையே முதற்தர எதிரிகளாக வரையறுக்கிறார்கள்.இதுள் தமிழ்பேசும் மக்களின் இன்றைய புலியெதிர்ப்பு எண்ணங்களும் முட்டிமோதுவதைக் காணாதிருக்க முடியாது.எனினும்,நாம் முன்வைப்பது தமிழ் பேசும் மக்களுக்குள் புலிகள் போன்ற அமைப்பைத் தோற்றுவித்தது இலங்கைப் பாசிசச் சிங்களப் பேரினவாத அரசே என்பதால், அதுவே தமிழ் பேசும் மக்களின் முதல்தர எதிரியென்பதாகும்.இதுகுறித்துக் கீழே பார்ப்போம்.
புலிகளால் நிகழ்ந்த மக்கள்சாராக் கருத்தியல்-அரசியல்,அதிகாரத்திமிர்,அத்துமீறிய சமூக(பிள்ளைபிடி-வீட்டுக்கொருவர் போரிட அழைத்தல்) மற்றும் வாழ்வாதாரங்களின் பறிப்பும்,இவைகளைச் செய்து முடிப்பதற்குமான கொலை அரசியலும் காரணமாகிறது.எனவே, மக்களில் கணிசமானோர் புலிகளிடமிருந்து மெல்ல விடுபட முனையும்போது அங்கே புலிகளுக்கெதிரான அரசியல் இலங்கை அரசுக்குச் சாத்தியமாகிறதென்பதையும் கவனத்தில் எடுப்போம்.இந்தக்(புலிகளா இலங்கை அரசா தமிழ்பேசும் மக்களின முதற்தர எதிரி?); கேள்வியை 15 ஆண்டுகள் முன் கேட்டிருந்தால் குறைந்தது 30 வீதமாவது புலிகளே என்றிருப்பார்கள்.இதிலிருந்து புலிகள் கற்றிருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதில்.
தமிழ் பேசும் மக்களின்மீதான சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரானவொரு போராட்டம்,தமிழ் பேசும் மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்குவதற்காகவும்,அதன் உந்துதலோடு சோசலிசச் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதுமாகச் சொன்ன இந்தப் போராட்டம் எங்ஙனம் தமிழ்பேசும் மக்களுக்கே எதிரானது?இக்கேள்வியைக் கேட்காமல் எவரும் தப்பித்து ஓட முடியாது!அப்படி ஓடும்போது அவர் முழு மொத்தத் தமிழ் பேசும் மக்களின் அழிவுக்கு உடந்தையாக இருக்கிறார் என்பதே இன்றைய அரசியல் சூழலிலிருந்து(பெருந் தொகையான கரும் புலித்தாக்குதல்...மரணம்,போராளிகளின் மிகப் பெரும் அழிவு இத்தியாதிகள்) நாம் முன் வைக்கும் பதிலாகும்.
புலிகள் என்பவர்களையும்,சிங்கள அரசையும் உண்மையில் சமப்படுத்திவிட முடியாது!சிங்கள அரசோ பெளத்த சிங்களப் பேரினவாத பாசிசத் தரகு முதலாளிய அரசு.தனக்குள் ஏற்பட்ட முதலாளிய நலன்களாலும்,அதைப் பகிர்ந்தளிக்க வேண்டிய இனங்களுக்குள் முளைவிட்டத் தரகு முதலாளிக்களை ஓரங்கட்டுவதற்காகவும் இலங்கையின் சிறுபான்மை இனங்களான தமிழ்,முஸ்லீம்,மலையக மக்களை திட்டமிட்டு அடையாளமற்றதாக்கும் அரசவியூகத்துள் முழுமொத்தச் சிங்கள இன வலுவையும் பயன்படுத்தி பேரனவாதத்தை இறுக்கிப் போராடும் அரசு.இதற்காக அனைத்து உபாயங்களையும் உட்படுத்தி,இலங்கையின் பெயரளவிலான ஜனநாயகத்தையே படுகுழிக்குள் தள்ளி, இராணுவ அரச வடிவமாகிய சிங்கள அரசு உலக நலன்களால் நிலைப்படுத்திப் பாதுகாக்கப்படும் அரசாக இலங்கையில் ஆதிகத்தை நிலைப்படுத்துகிறது.
இங்கே,புலிகளோ ஒருவகைமாதிரியான(வெளியில் மக்களின் நண்பனாகவும் உட்கட்டமைவில் அதே மக்களின் விரோதியாகவும்)அமைப்பாகவும்,ஜனநாயக விரோதப் பாசிச இயல்புளைக்(மக்களின் சுயவெழிச்சுக்குத்தடை,மாற்றுச் சக்திகள்-இயக்கங்களுக்குத்தடை,கருத்துச் சுதந்திரத்தின்மீதான அதீத கண்காணிப்பு,தம்மை விமர்சிப்பதன் தளத்தைத் தகர்ப்பதற்காகக் கட்டப்பட்ட துரோகி எனும் கருத்தியல் மற்றும் அதுசார்ந்த அரசியற் கொலைகள்)கொண்ட ஒரு இராணுவ ஜந்திரத்தைக்கட்டிய அதிகார வடிவம்.எனவே,புலிகள் தமிழ்பேசும் மக்களின் நலனைப் பேணுவதாகச் சொன்னபடி அவர்களின் நலனின்மீது தமது அதிகாரத்தைக்கட்டிக்கொண்டவொரு வர்க்கமாக இருப்பதன் தொடர்ச்சியில் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள புதிய தரகு முதலாளிகளாகி வருகிறார்கள்.இதற்கும் சிங்களத் தரகு முதலாளியத்துக்குமான முரண்பாடுகள் தீர்க்குமொரு அரசியல் நகர்வில்(இது பெரும்பாலும் நிகழ்வதற்காக இந்தியாவோடு மனோ கணோசன் போன்றார் பாடுபடுவதாகச் சொல்லியுள்ளார்கள்) புலியின் இராணுவ மற்றும் அதிகார வடிவம் சிதைந்து சிங்கள அரச அமைப்புக்குள் சங்கமமாகும்.
இவர்களையும்(புலிகள்)சிங்கள அரசையும் எப்போதும் சமப்படுத்திவிட முடியாது.இந்தச் சங்கதியைப் புரிந்துகொள்வதற்குத் தடையாக இருப்பதே புலிகளின் அரசியல்தாம்.புலிகளின் பாத்திரத்தைப் புரிந்துகொள்ள முடியாத அரசியலின் விருத்திக்குக்காரணமாக நாம் இனம் காணுவது எமது போராட்டத்தைத் தக்கபடி நகர்த்தமுடியாது தடுத்த இந்தியாவினது தலையீடும்,புலிகளின் ஏகாதிபத்தியத் தொடர்புகளுமே.இக் காரணங்கள் எமது மக்களின் நோக்கு நிலையிலிருந்து போராட்டச் செல் நெறியை வகுக்க முடியாதவொரு பாரிய சதியைத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்துக்குள் திணித்த உலக நலன்களின் இன்றுவரையான அழுத்தம் எமக்கான திசைவழியில் போராட்டச் செல்நெறி அமையவில்லை.எனவே, இதைப் புரியும் நிலையில் நமக்குத் தொடர்ந்து பொய் முக அரசியல் சிந்தனைக்குள் திணிக்கப்பட்டு மக்களை உளவியல் ரீதியாக முடக்கிய வரலாறு தொடர்ந்தபடி இருப்பதுதாம்.எண்பதுகளின் மத்தியில் இயக்கங்களின் ஐக்கியம் மிகவும் அவசியமாக இருந்தது.அந்த ஐக்கியத்தூடாகக் கட்டப்படிவேண்டிய தேசியப் போராட்டச் செல்நெறி கட்டப்படவில்லை.இலங்கை இராணுவமானது இக்காலக்கட்டத்தில் மிகவும் முடங்கி,முகாங்களுக்குள்ளிலிருந்து வெளியில்வருவதே முற்றிலும் தடைப்பட்ட வேளையில், இயக்கங்களின் ஐக்கியத்தினூடாகக் கட்டபடவேண்டிய போராட்டச் செல்நெறியும் அதனூடாக வளர்த்தெடுக்க வேண்டிய மக்கள் எழிச்சி மற்றும் மக்கள் மன்றங்கள் யாவும் அந்நியத் தலையீட்டால் முற்றுமுழுதாகச் சிதறடிக்கப்பட்டு,இறுதியில் இந்தியாவின் கைக்கூலிகளாக மாறிய இயக்கங்களாகச் சில தோற்றமுற்றன.அதில் புலிகளின் பாத்திரம் முக்கியமானது.ஏனெனில்,இந்தியா எப்படிப் புலிகளை வளர்த்தெடுத்ததென்பதை நாம் அறிவது அவசியமாகிறது.
இப்போதைய நிலைமைகளில் இலங்கை இராணுவம் பரவலாகத் தமிழ்ப் பிரதேசமெங்கும் தனது முகாங்களை நிறுவிப் பலாத்தகாரமான இராணுவ அதிகாரத்தை நிறுவித் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்து வாழ்வு முன்னெடுப்பையும் தீர்மானிக்கும்போதும் நமது போராட்டத்துள் சரியானவொரு போராட்டச் செல்நெறி கட்டப்பட முடியாதிருக்கிற சூழலே எம்முன் வந்துள்ளது.தமிழ் பேசும் மக்களினதும்,அவர்களினது சுயவெழிச்சி மற்றும் முழுமொத்தப் பங்களிப்புமின்றித் தேசியவிடுதலைப் போராட்டத்துக்கானவொரு புரட்சிகரமான போராட்டச் செல் நெறி சாத்தியமில்லை.
புலிகளின் நிலை மிக மோசமான நிலையாகும்.அவர்கள் தமிழ்பேசும் மக்களில் கணிசமானவர்களைப் போராட்டத்திலிருந்து பிரித்துத் தமக்கெதிரான நிலைக்குள் தள்ளுவதற்கான முறைமைகளில் அந்நியச் சக்திகளால் திட்டமிடப்பட்டு மிகக் கறாராகக் கண்காணிப்பட்டுள்ளார்கள்.இதற்கான தகுந்த ஆதாரமாக நாம் முன்வைப்பது இந்திய இராணுவத்துக்கும் புலிகளுக்குமிடையிலான யுத்தம்.இந்த யுத்தம் மிகத்திட்டமிடப்பட்டவகையில் நடந்தவை.ஆனால், இந்த யுத்தத்துக்குள்ளும் புலித்தலைமை இராஜீவ் காந்தியோடு சமரசம் செய்ய முயன்றது.இதைப் புலித்தலைமையே ஒத்துக்கொண்டது.அவ்வண்ணமே வன்னியில் நடந்த சர்வதேசப் பத்திரிதையாளர் மாநாட்டிலும் புலிகளின் தலைவர் இதையே மீளவும் சாடைமாடையகச் சொல்லியிருக்கிறார்(கவனிக்க:பாலசிங்கத்துக்கும் பிரபாகரனுக்குமிடையிலான உரையாடல்,"நாங்கள் அவர்களோடு பேசிக்கொண்டுதானே இருக்கிறம்"என்று பிரபாகரனே அதுள் முணுமுணுக்கிறார்).இந்திய இராணுவத்தின் கொடூரமான அழிப்புக்குப் பின்பும்கூடப் புலிகள் இந்திய அரசுடன் நட்புப்பாராட்டவே முயன்றார்கள்.
இப்போது நாம் சொல்வது தமிழ் பேசும் மக்களின் முதற்தரமான எதிரிகள் இலங்கை அரசும்,அந்த அரசைத் தூக்கி நிறுத்துவதற்காவும்,தமிழ்பேசும் மக்களின் போராட்டத்தையே சிதைப்பதற்காகவும் புலிகளை நிரந்தரத் தலைமையாக்கிய இந்நிய அரசுமே தமிழ்பேசும் மக்களின் அதிமுதல் எதிரிகள்.இந்திய அரசு இல்லாமல் புலிகள் இல்லை.இன்றைய புலியின் இருப்புக்கு இந்திய அரசு எவ்வகையில் செயற்பட்டதென்பதை ஆராய்பவர்,இலங்கை இந்திய ஒப்பந்தம்,அவ் ஒப்பந்தத்தில் புலிகளைத் தவிர்த்தபடி அதிகாரத்தை ஏனைய இயக்கங்களிடம் கையளித்து,அத்தகைய இயக்கங்களின்வாயிலாக மக்களை நரவேட்டையாட வைத்து,எக்காலத்திலும் ஒரு ஐயக்கியம் ஏற்படாதபடி இந்தியா பார்த்துக்கொண்டது.இத்தகையவொரு நிலையில் மக்களோடு ஐக்கியமுறக்கூடியவொரு நிலையை இவ்வியக்கங்கங்கள் இழந்தபோது புலிகளே தமிழ்பேசும் மக்களின் ஏகப்பிரதிநிதியாகும் நிலைமை தோற்றம் பெற்றது.இது இந்திய முதலாளிகளுக்குகிடைத்த முதல் வெற்றி.
தொடரும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
28.10.2007
Sunday, October 21, 2007
சுயநிர்ணயம்,விடுதலை...
மலைய மக்கள் முன்னணி அரசியல்வாதியும்,எம்.பி.யுமான மனோ கணோசன் சிங்கள அடிப்படை வாதத்தின் காரண காரியத்தால்"தமிழ்பயங்கர வாதம்" எழுந்ததாதகச் சொல்லியிருக்கிறார்."இலங்கையில் சமாதானத்திற்கும் யுத்தத்திற்கும் இடையில் தடையாக நிற்பது சிங்கள பெளத்த அடிப்படைவாதமாகும். அதுதான் இலங்கையில் தமிழ் தீவிரவாதத்தையும் ஈற்றில் தமிழ் பயங்கரவாதத்தையும் உருவாக்கியது. சுதந்திர இலங்கையின் முதல் 35 ஆண்டுகளில் தமிழ் பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்கவில்லையே."-நிதர்சனம்-கொம்.ஆக,தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயத்திக்கான போராட்டம்,இலங்கையில் அவர்கள் தமது பாரம்பரியப் பூமியல் சுதந்திரமாக வாழ்வதும்,தமது வாழ்வாதாரங்களைத் தம் உழைப்பால் கட்டியொழுப்புவதற்குமான சுய நிர்ணயம்,சுதந்திரம்"தமிழ்ப் பயங்கர வாதம்"எனும் திட்டமிட்ட சிங்கள அரசின் தமிழ் மக்கள்மீதான கருத்தியல் ஒடுக்குமுறையின் தொடர்ச்சி இங்கே விரிகிறது.நமது மக்களின் தார்மீகப் போராட்டம்,அவர்களது இன்னுயிர்களை ஈகை செய்தும்,கொலைகளாகவும் கொடுக்கப்பட்டு,இன்றுவரை தமது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து, எவரெவர் நலன்களுக்காகவோ சிதைவுற்றுப் போனதன் தொடர்ச்சியாகவின்று இந்தக் கேவலமான நிலைக்குள் வந்து தொலைகிறது.
தமிழர்களின் அடிப்படையுரிமையை இவ்வுளவு தூரம் சிதைப்பதற்குப் புலிகளைவிட வேறெவரும் முனையவில்லையென்பதை மனோகணேசன் சொல்லும் அரசியலே சாட்சியாகிறது.நமது போராட்டத்தில் புலிகளை"இந்தியா,பாகிஸ்த்தான்,சீனா"பாவிப்பதெல்லாம் என்பது புலிகள் எவ்வளவு தூரம் அடி முட்டாள்கள் என்பதையும்,அன்னிய அடிவருடிகள் என்பதையும் மனோகணேசன் நிரூபிக்கின்றார்.அதையும் நிதர்சனம்.கொம் என்ற இணையத்தளம் தனது செய்தியில் முக்கியம் கொடுத்துப் மீள் பிரசுரம் செய்வதென்றால் இவர்கள் யார்? இந்த இலட்சணத்தில் மாற்றுக் கருத்தாளர்களை இவர்கள்"துரோகிகளாம்"-கைக்கூலிகளாம் என்று பரப்புரை வேற செய்து தமது அன்னிய அடிவருடித்தனத்தை மறைக்க முனைகிறார்கள்?
இன்றுவரை தமிழர்களுக்காகப் புலிகள் செய்யும் போராட்டத்தை-கொலைகளை ஐரோப்பிய மண்ணில் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள்"தேசிய விடுதலை,சுயநிர்ணய"ப் போராட்டம் என்று தொடர் கூட்டங்கள்,ஊர்வலங்கள் வைத்து உலகத்துக்குச் சொல்லும்போது, ஒரே நொடியில் மனே கணேசன் சிங்கள அரச பாணியில் பயங்கரவாதம் என்று சொல்வதை நிதர்சனம்.கொம் உலகம் பூராகப் பரப்புகிறதென்றால் இந்தவூடகம் எவரது நலன்களைப் பிரதிபலிக்கிறது?
அடிமுட்டாள்களால் நடாத்தப்படும் பத்திரிகைகள் புலிகளின் பெயரைச் சொல்லி நமது விடுதலையைப் பயங்கரவாதமாக்கிவிட்டார்கள்.புலிகளின் தொடர் கொலைகளும்,ஜனநாயக மறுப்பும்,அராஜகமான போராட்டச் செல் நெறியும் நமது விடுதலையைச் சாகடித்து அன்னியர் நலனுக்கு எப்படி உடந்தையாக இருப்பதென்பதை நாம் கூறும்போதெல்லாம் நிராகரித்தவர்கள்,இப்போது புலிகளின் விசுவாசிகள்-ஆதரவாளாகளாலேயே "அது"உண்மைதான் எனும்போது என்ன சொல்கிறார்கள்?
இன்றுவரையும் எமது மக்களின் தார்மீகப் போராட்டத்தை மரணப்படுக்கைவரை அழைத்துச் சென்ற புலிகளை, எந்தெந்த வெளியுலகச் சக்திகள் தத்தமது நலனுக்காகப் பயன்படுத்துகிறார்கள்,எவர் இதற்குப் பாத்திரமானவர்,எவர் புலிகளைப் பயன் படுத்த வேண்டுமென்று மனோகணேசன் இடும் பட்டியலே நாம் சொல்வதை உதாரணப்படுத்தப் போதுமானது.எனவே,எமது மக்களின் சுயநிர்ணயத்துக்கு,சுதந்திரத்துகான போராட்டம் எவருக்கும்,எந்த நாட்டிற்கும் சேவை செய்வதற்கான போராட்டமில்லையென்பதும்,அப்போராட்டம் இதுவரை செய்த தவறுகளையெல்லம் பரிசீலித்து, மக்கள் புலிகளின் அடிவருடிகளை,அடி முட்டாள்களை,கையாலாகாத தலைமையை நிராகரித்துத் தேசத்துக்காப்போராடும் புலிகளின் அடிமட்டப் போராளிகளை புரட்சிகரப் போராட்டப் பாதைகுள் நகர்த்தியாகவேண்டும்.இத் தேவை மிக அவசியமானதாகவே இருக்கிறது.இதை நிராகரித்துவிட்டு,புலித் தலைமையும்,அவர்களின் உலக-உள்ளுர் எஜமானர்களும் சொல்லும்,செய்விக்கும் போராட்டத்துக்காக நமது சிறார்கள் உயிர் விடுவது மிகப் பெரும் "துரோகம்"ஆகும்.இதைத் தடுத்து நிறுத்துவதற்காக நாம் உயிர்கூட இழப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும்.ஏனெனில், நமது மக்களின் உண்மையான விடுதலைப் போராட்டத்தைச் சொல்லியே தமது பிழைப்பையும் பண வருவாயையும் மிக வலுவாகச் செழிப்பாக்கி உறுதிப்படுத்திய தமிழ் ஆளும் வர்க்கம், இப்போது நமது போராட்டத்தைச் சிங்களப் பாசிச அரசோடிணைந்து"தமிழ்ப் பயங்கரவாதம்"என்று கொச்சைப்படுத்தி,நமது நியாயத்தன்மையையே கருத்தியல் தளத்தில் உடைத்தெறிந்து, தேசியவிடுதலைப் போராட்டத்தின் தார்மீகத் தேவையையே நிராகரிக்கிறார்கள்.
இந்த அபாயமான சூழலை அனைவருக்கும் போராடுவதாகச் சொல்லும் புலிப் போராட்ட இயக்கமே மெல்ல உருவாக்கிவிட்டுள்ளது.இதைக் கூர்ந்து கவனித்தால் புலிகளின் மக்கள் விரோதத்தன்மையை உணரமுடியும்.புலியின் தலைமைக்கும்,ஆனந்தசங்கரி,டக்ளஸ் தேவானந்தா,மற்றும் உதிரிக் குழுக்களுக்கும் எந்த வகையிலும் வித்தியாசம் கிடையவே கிடையாது!சாரம்சத்தில் இவர்கள் அனைவருமே தமிழ் பேசும் மக்களின் எதிரிகள்தான்.இவர்கள் அன்னிய கைக்கூலிகள்-அன்னிய அரசுகளால் வளர்த்துவிடப்பட்ட மக்கள் விரோதிகள்.நமது மக்களின் உயிர்கள் நாளாந்தம் பறிக்கப்படுகிறது.இதுவரை இலட்சம் பிஞ்சுகளின் இன்னுயிர்கள் பறிக்கப்பட்டு,தமிழர்களின் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டும் அன்னியர்களுக்காகவொரு போராட்டம் தேவையா?
எம் மக்களின் இருப்பை அழித்து,உரிமையை அழித்து,அன்னியனின் காலடியில் எம் மக்களை மண்டியிட வைப்பதற்கு நாம் மூடர்களில்லை.எமது அனைத்து வளங்களையும் இதற்காகச் செலவிட்டு இதைத் தடுப்போம்.எம் இனத்தின் பாரம்பரியப் புவிப்பரப்பை எவரும் தத்தமது நலன்களுக்காகச் சுருட்ட முடியாது.இது உழைத்துண்ணட எமது மூதாதையரின் வாழ்வோடும்,வரலாற்றோடும் பிணைந்து உரிமையாககிறது.இந்தவுரிமைக்காகச் செய்யும் இந்தப் போராட்டத்தை எவன் கூறுவான்"தமிழ்ப் பயங்கர வாதம்"என்று?
புலிகளின் தறுதலைத்தனமான அரசியில்-போராட்டச் செல் நெறிக்கொள்கையும்,அவர்களது அன்னிய நலனும்,அடியாள் பாத்திரமும் எங்கள் உரிமையை-உரிமைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதமாக்கிவிட்டுள்ளது.இதைத் தடுப்பதற்குக் குரல் கொடுக்கும் எம்மைத் தம்மைப் போலவே நாம் அன்னியக் கைக்கூலிகள் என்றும்,அடிவருடிகள் என்றும் கதையளக்கும் இந்தப் புலிகளும்,அவர்களது விசுவாசிகளுமே தமிழ் பேசும் மக்களின் முழு மொத்த எதிரிகள் என்பதற்கு இந்த நிதர்சனத்தின் அரசியலே சாட்சி.இவ்வளவு மடையர்களாக இருக்கும் இவர்களே,தம்மைப் போலவே தமிழ் பேசும் மக்களும் இருந்தாக வேண்டுமென்பதற்காக நம் கல்வியாளர்கள் பலரை அழித்துவிட்டார்கள்.இருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய இடதுசாரிய அறிவாளிகளையும் கொல்வதற்காக அவர்களையும் அன்னியக் கைக்கூலியென முத்திரைகுத்தி வருகிறார்கள்.கூடவே, நமது மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தையும் மெல்லப் பயங்கரவாதமாக்கி நம் மக்களின் வரலாற்றையே அழிக்க முனையும் தமிழ் ஆளும் வர்க்கத்தையும், அவர்களுக்குத் தலைமைதாங்க முனையும் அனைத்துக் கயவர்களை அம்பலப்படுத்தி நாம் நமது மக்களின் விலங்கை ஒடிப்போம்.அதற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுக்கவும்,தலைமை தாங்கவும் நாம் எமக்குள் ஒருங்கிணையவேண்டிய காலவர்த்தமானம் எம்மைச் சூழ்ந்துகிடக்கிறது.நாம் மெளனிக்கும் ஒவ்வொரு நிமிடமும்,நம்மை அன்னிய சக்திகளிடம் அடைவு வைப்பதற்குப் புலிகளும்,ஆனந்த சங்கரிகளும்,டக்ளஸ் தேவானந்தாக்களும்,இன்னும் எத்தனையோ குறுங்குழுக்களுமாக இன்று முனையும்போது,இடதுசாரிய உதிரிக் குழுக்களாகக் கிடக்கும் முற்பேர்காளர்களே உங்கள் உயிரைக் கொடுத்தாவது தமிழ்பேசும் மக்களுக்குத் தலைமை கொடுங்கள்.எம்மைத் தவிர இலங்கைத் தமிழ் பேசும் மக்களுக்கு எவரும் விமோசனம் செய்யப் போவதில்லை.நாமே, நமது தேசபக்தப் போராளிகளுக்கு முற்போக்குப் போராட்டப்பாதையைக் காண்பித்து நமது மக்களை முழுமையாகப் போராட்டத்தோடு இணைத்து, அவர்களால்மட்டுமே அவர்களது விலங்கை ஒடிக்க முடியுமென்பதாக வரலாற்றை மாற்றியெழுத வேண்டும்.
இதற்காக உலகம் பூராகவும் இருக்கும் முற்போக்குச் சக்திகளோடு கரங்களை இன்னும் வலுவாக இணைப்போம்,புலித் தலைமையையும்,அவர்களது அரசியலையும்.வெளிநாட்டு உறவுகளையும்,நிதர்சனம்.கொம் போன்ற மக்கள் விரோதப் புலி முகவர்களையும் அம்பலப்படுத்தி,மக்கள் அரங்குக்கு இந்த விரோதிகளை இழுத்துவந்து அம்பலப்படுத்வோம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
21.10.2007
நிதர்சனம்.கொம் கட்டுரையைக் கீழே படிக்கலாம்:
சிங்கள அடிப்படைவாதமே தமிழ் பயங்கரவாதத்தை உருவாக்கியதாக மனோ கணேசன் எம்.பி. தெரிவிப்பு!
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 21 ஒக்ரேபர்
2007 ஸ ஜ நசார் ஸ
இலங்கைக்கு ஆயுத உதவிகளை இந்தியா அதிகரித்துள்ளதாக இந்தியாவிலிருந்து வருகின்ற ஊடக செய்திகள் எம்மை வேதனைக்கும், வெட்கத்திற்கும் ஆளாக்கியுள்ளன. எமது மூதாதையரின் தாயகமான இந்தியா எப்போது தான் இலங்கை பிரச்சினையை சரியான முறையில் கையாளப்போகின்றது என்ற ஆதங்கம் எமக்குள் எழுகின்றது என மேலக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகள் வழங்குவது தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளையிட்டு மனோ எம்.பி.ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை இலங்கை நாடுவதைத் தடுப்பதற்காகவே இந்தியா இலங்கைக்கு இராணுவ தளபாட உதவி வழங்குவதாக கூறப்படுகிறது. இலங்கைக்குள் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நுழைவதை தடுப்பதும், இலங்கையில் தமிழ் தேசியத்தை ஒழிப்பதும் இந்தியாவின் நலன் சார்ந்தது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கருதுகிறார்கள்.
ஆனால், இது மீண்டும் இந்தியாவுக்கே பாதகமாக முடியும். இலங்கையில் தமிழ் தேசியம் வளர்ச்சி பெறுவது இந்தியாவுக்குப் பிடிக்காதது என்பதை விரைவில் பாகிஸ்தான் புரிந்து கொள்ளும். அதன் மூலம் பாகிஸ்தானிய உளவுப்பிரிவு விடுதலைப் புலிகளுக்கு இரகசிய உதவிகளை வழங்கும் எதிர்மறை நிலை ஏற்படலாம் என்பதை இந்தியத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியத் தலைவர்கள் வரலாற்றை மீட்டி பார்க்க வேண்டும். இந்தியாவின் சீனா, பாகிஸ்தானிய எல்லை 1960 களில் நெருக்கடியாக இருந்தது. அதனாலேயே தென்புல எல்லை நாடான இலங்கையை நட்பு நாடாக வைத்துக் கொள்வதற்காக இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களில் பெருந்தொகையினரை மீளப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியா இணங்கியது. சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் அப்பாவி தொழிலாளர்களின் அபிலாஷைகளை கணக்கில் எடுக்காமல் செய்யப்பட்டது. உண்மையில் அவ்வேளையில் இந்தியா இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் அனைவரையும் மீளப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது ஒருவரையும் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது.
இதனால் அன்று பல குடும்பங்கள் சிதைந்தன. இதன் மூலம் எமது மக்கள் தொகை குறைந்து விட்டதனால் எமது அரசியல் பலமும் குறைந்து விட்டது. அத்துடன் தற்போது சிங்கள அடிப்படை வாதத்திற்கும் தமிழ் தீவிர வாதத்திற்கும் இடையில் தென்னிலங்கை இந்திய வம்சாவளி மக்கள் சிக்கியுள்ளனர். மறுபக்கத்தில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட எமது மக்கள் அங்கே பரிதாப வாழ்க்கை வாழுகின்றனர். ஆனால், இத்தனைக்கு பிறகும் இலங்கையை உண்மையான நட்பு நாடாக இந்தியாவால் உருவாக்க முடியவில்லை என்பது தான் உண்மை. அதேபோல் தமிழ் போராளிகளுக்கு இந்தியா ஆயுதம் வழங்கி பயிற்சியளித்தது. 1980 களில் அன்றைய ஜே.ஆரின் அரசாங்கத்தின் அமெரிக்க சார்பு கொள்கை தனக்கு எதிரானது என்ற அடிப்படையிலேயே இவைகளை இந்தியா செய்தது. பிறகு என்ன நடந்தது? இந்தியா ராஜீவ் காந்தியையும் சுமார் 1,500 இந்திய வீரர்களையும் இழந்தது. அதேபோல் இந்திய படையினரால் சுமார் 2000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
இவை கடந்த காலங்களிலே தவறான ஆலோசகர்களின் பேச்சுகளை கேட்டு செயற்பட்டதால் ஏற்பட்ட துன்பங்களாகும். தூரப்பார்வை இல்லாத முடிவுகள் ஒருபோதும் தீர்வுகளை தராது. இந்தியாவின் தவறான முடிவுகள் இந்தியா, இலங்கை, தமிழ் மக்கள் ஆகிய எந்தத் தரப்பினருக்கும் நன்மை தரவில்லை. வரலாறு முழுக்க தவறான முடிவுகள் பெரும் துன்பங்களையே தந்துள்ளன. இன்று நாங்கள் இதையிட்டு வெட்கமும் வேதனையும் அடைகின்றோம். இலங்கையில் இந்தியாவின் நலனை பாதுகாப்பதற்கு குறுக்கு வழிகள் இல்லை என்பதை இந்திய தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் சமாதானம் மலர்வதே இந்தியாவின் நலனுக்கு உகந்ததாகும். இலங்கையில் சமாதானத்திற்கும் யுத்தத்திற்கும் இடையில் தடையாக நிற்பது சிங்கள பௌத்த அடிப்படைவாதமாகும். அதுதான் இலங்கையில் தமிழ் தீவிரவாதத்தையும் ஈற்றில் தமிழ் பயங்கரவாதத்தையும் உருவாக்கியது. சுதந்திர இலங்கையின் முதல் 35 ஆண்டுகளில் தமிழ் பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்கவில்லையே. இலங்கையின் ஐக்கியத்திற்கும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் ஆதரவளிப்பதாக இந்தியா ஆயிரம் முறை சொல்லியிருக்கின்றது.
இன்னும் ஒரு ஆயிரம் முறை அதே இந்தியா சொல்லட்டும். அது எங்களின் நிலைப்பாடு ஆகும். ஆனால், ஐக்கியம் என்பது சமத்துவத்துடன் சேர்ந்து வரவேண்டும். இனிமேல் இந்தியா இலங்கையின் ஐக்கியத்தையும் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் சமாந்தரமாக கணித்துப் பார்த்து செயற்பட வேண்டிய வேளை வந்துவிட்டது என எண்ணுகிறேன். இந்தியாவின் மொழிவாரி மாநில கொள்கைகளை பற்றி இலங்கை அரசிற்கு இந்தியா உறுதியாக எடுத்துக்கூற வேண்டும். இதுவே இலங்கை பிரச்சினைக்கு தீர்வுதரும் மருந்தாகும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டியது உடனடி தேவையாகும். இந்தியாவிலிருந்து எவரோ ஒரு சிலர் எடுக்கும் தவறான முடிவுகள் காரணமாக எமது மக்கள் யுத்தம், கடத்தல், சட்டவிரோத படுகொலைகள் ஆகியவற்றால் தொடர்ந்தும் உயிர் இழப்பதை எம்மால் அனுமதிக்க முடியாது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். தமிழக அரசியல் தலைவர்கள் புதுடில்லிக்கு எதையும் எடுத்துக்கூறும் நிலைமையில் இல்லை. ஏனென்றால் தமிழகத்து அரசியல்வாதிகள் முழுமையான புலி ஆதரவு, முழுமையான புலி எதிர்ப்பு ஆகிய இரண்டு தீவிர நிலைப்பாடுகளில் இருக்கின்றார்கள். உண்மையில் பிரச்சினை என்பது இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் இடையில் தான் இருக்கின்றது. இலங்கை தொடர்பிலான கொள்கையில் இந்தியா அடிப்படை மாற்றங்களை செய்யவேண்டும். காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தியை இது தொடர்பில் சந்தித்து உரையாட நான் விரும்புகின்றேன். இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
Thursday, October 18, 2007
இதை வாசிப்பவர்கள் முட்டாள்கள்:
"மீள் சிந்தனைக்குப் பதில் சிந்திக்க விடுதல்".இது குறித்துச் சிந்திக்க முடியும்.இத்தகையது மிகச் சொகுசானதும் இலகுவானதாகவும் இருக்கிறதென்ற ஒரு புள்ளியில் பிறதொரு வெளி அகலத் திறந்திருக்கிறது.எந்தொவொரு அநுமானத்தையுங்கடந்த ஒரு மொழியின் வழியான கவனப்படுத்தல்-குறிப்பிடுதலின் குறிப்பான்கள் மிகவும் மலினமான எண்ணத்தால் ஏதோவொரு அழுத்தத்தைச் சமாந்தரமான முறையில் அண்மிப்பதற்குப் பதிலீடாக எந்த மாற்று வழியுமில்லை.அதுவொரு குறியீடாக இருக்கும்"சிந்தனை"என்ற பிரமையிலிருந்து முற்று முழுதுமாக விலகி நிற்பதன் தொடர் தோல்வியின் மையத்தைச் சொல்வதற்குச் "சிந்தனை"அவசியத்தோடானவொரு குறிப்பானாகக் கும்மியிடுவதிலிருந்து,மனிதச் சிந்தனை எந்த மகத்துவத்தையும் இதுவரை இட்டபாடில்லை.அறிவினது தொடர்வினையின் சூட்சமம் எந்தப் பொருள் சார்ந்தும் எழும் புறநிலைப் பொருட் பெறுமானத்தை உடைத்துப்போடுவதற்கும் அந்த தளத்திலிருந்துகொண்டே அகநிலை இருத்தலை அடிமனதாட்சிமையென்பதும், கற்பிதத்தைப் படிமத் தளத்தில் இருத்தி வைப்பதற்கான சொல் அலங்காரம் ஏதோவொரு முறைமையின் சிக்கலைப் பேசுவதாகவும் அது உலகத்தின் பருப் பொருள் நீக்கியப் புனைவின் தொடர்ச்சியை வற்புறுத்துவதாகவும் போடப்படும் வலைகளுக்குள்"மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்"என்ற பெளத்த தத்துவார்த்தத்தின் அடி நாதம் செப்பும் புதுமையானது பொருள் கொள்ளதக்கதாயினும் இன்றைய சிந்தனைத் தளத்தில் தீர்மானகரமானவொரு உறுதிப்பாடு நீங்கிய "உண்மையை நோக்கிய அண்மித்தல்"என்ற ஒரு உருவகச் சிந்தனையையின்பால் அபத்த வெளியகற்றும் அற்புதங்களை அண்மிக்கும் கருத்து வெளியின் திரட்சி,மேலும் வற்புறுத்தம் சமாந்தரச் "சிந்தனை"போதுமானவரை புற நிலையின் பொருள் இருப்பைச் சார்ந்தே பிரயாணிக்கும் ஒரு திரை மறைவில் சிக்கிய பின் அதுவாக மனித இருத்தலின் மறுப்பைக் கக்கி வைக்கும் சந்தர்ப்பம் மேலும் மெருக்கேறும் வெளியை புற நிலைபொருளற்ற உலகாகச் சித்தரிக்கும் இந்த முடிச்சில் பெளத்தம் வந்த எள்ளி நகையாடுகிறது.
காபர்மாஸ்காரியவாதம் என்பதன் தொடர் நிகழ்வில் குப்பர விழுந்து மோதும் மொழியாடலின் பின்னே விரிந்து மேவும்"கருத்துப் பரப்பு"என்பதன் வினை என்னவென்பதன் கேள்வியுள் உறுதியிழந்த அசமந்தப் பேர்வழிகளின் பின்னே சிரித்து நிற்கும் பிரமாண்டம் புறநிலையின் பிம்பத்தைக் கற்பிதங்களால் எள்ளி நகையாடுவதும்,மொழி விளையாட்டின் பேருண்மையாக விரிக்க முனையும் வினைமறுப்பின் தொடர்ச்சியின் மறுபக்கம் புனைவின் தொடர்ச்சி-நீட்சி என்ற இரு தளங்களில் எழிச்சியடையும்"உண்மை" உருவகப்படுத்தப்பட்ட அகநிலை இருப்பின் வெளியில் புதைக்கப்படுகிறது.இதை இன்னொரு சமாந்தரமான உணர்வு நிலையின் பெரு வெளிக்குள் சார்ந்தெழும் புறநிலைப் பொருள் சார் மதிப்பீடுகளால் புலன்பால் உண்மையாகும் ஒரு உலகைப்"புலன் ஆகும்"புறநிலைப் பொருளுலகம் என்றே வைத்துக்கொள்வதற்கு மொழிவைச் சிந்தனைப் புனைவின் தொடர்ச்சியை வற்புறுத்தி மயக்கமுற வைக்கிறது.
இந்த மயக்கத்தை உடைப்பதுள் சாத்தியமானவரை ஈடுபடுத்தப்படும் புவிப்பரப்பின் மீதான இடைச் செயலின் பிரதிபலனாக பிணைக்கப்பட்ட சமூக மிருகத்திடம் இருக்கும் ஒரே ஆயுதம்"உயிரின் தகுதியை-வளர்ச்சியை"க் குறிக்குமென்ற அத்வைத்தத்தின் ஆத்மீகத் தேடலையுந்தாண்டிய கருத்துமுதற்கட்டுகைகளை அகற்றுவதன் தொடர்ச்சியில் பெரிய சர்ச்சைகளைச் சம்பாதித்த-சம்பாதிக்கும் பொருள்முதல்வாதத் தொடர்ச்சிகளின் எல்லையற்றவொரு சமாந்தரப் புரிதலென்பது பருப்பொருள் குறித்த புரிதப்பாட்டைச் செப்புவதற்கெடுத்த முறைமைக்கு "தத்துவ ஞான இயல் பாட்டாளி வர்க்கத்திடம் அதன் பெளதிகப் பொருளாயுதப் பேராயுதத்தைக் கண்டதுபோன்று பாட்டாளி வர்க்கம் தத்துவ ஞான இயலில் தன் ஆன்மீகப் பேராயுதத்தைக் கண்டது"என்பதும் ஒரு விதத் தருக்கத்தைச் சொல்லிய போதும் அரிதான மதிப்பீடுகளையுந்தாண்டிய இந்த "உண்மையை அண்மித்தல்"அல்லது அதன் அருகினில் வந்திருப்பதென்பது உண்மையில்லை என்பதன் இன்னொரு குறியீடாய்க் கிடந்துழலும் சொற்பன வெளிகளுக்குள் சொற்காளால் நிறைக்கப்படும் எல்லா வகை நியாயவாதங்களும் புலன்பால் சுடப்பட்ட புனைவின் சிலம்பம்தாம்.
இங்கே உருப்போட முனையும் கணிதச் சமன்பாடுகளும் தூயகணித்தத்தின் தொடர்பியக்கக் கண்ணிகளும் ஒன்றின் பின்பான தொடர்வினைகளுக்கான பகுப்புகளில் சிக்கிக்கொள்ளும் சந்தர்ப்பங்களுக்குள் மெல்ல விரட்டப்படும் எந்தப் புனைவும் ஊத்திக்கப்போகிற அடர்த்தியின் மிகத்தொடர் வினையே முற்றும் அறிந்த வினையே மூப்படையாத மனிதத் தரணம் மடை திறந்து ஒப்புவிக்கும்போதே அதன் பினாத்தல் மேலும் தெளிவுற்றுப் போகிறது.அதி நவீனச் சமூகங்களும் அதை நிலைப்படுத்திய பொருள் விருத்தியும் குவித்து வைத்திருக்கும் பொல்லாத புனைவுகளுக்குள் போராடும் தரணத்தைத் தேர்ந்தெடுத்த இந்தப் பொருள்முதல்வாதப் புரிதப்பாடினது தொடர் வியாபகத் தன்னறிவு எந்தப் பேத்தல் புனைவுகளையும் தன்னகத்தே நெருடும் சிறப்பான சீரமைவுகள் என்பதில் கண்ணிகைகளைப் புதைத்து வைத்திருக்கும் புலமைத்தனப் போக்குகளை மெல்ல வருடியே வளவுறுந் தரணமே"விடுதலை"என்பதன் விழுமியத்தைப் பொருளுறுத்திச் சொல்லும் புனைவாகவும்-புறப்பொருள் யதார்த்தமாகவும் மனித்துவப் பெருவெளியின் இருத்தலைமையப்படுத்திக் கருத்தாடுவதற்கிசைவாக இருக்கிறது.இதை மறுப்பதன் தொடர்வினைகளை எந்த அரூபப் பேசு பொருளாலும் புகட்டப்படும் சந்தர்ப்பங்களை தனிநபர்-தனியுடமை மாட்சிமைகளுக்காகப் புறத்தேயொதுக்கிப் போட்டுத் தள்ள முடியாது.பேசுதல்-பறைதல்,விவாதித்தல்,சமூக விமர்சனம் எப்பவுமே அர்த்தம் பொதிந்திருங்கும் தரணங்களையுற்பத்தி செய்யும் இன்றைய காலவர்த்தமானுத்துள் மாற்றங்களைச் செய்வதற்கான அன்றைய முன்மொழிவுகள் செயற்பாடுகள் அந்தத்தத் தளத்தில் நிலவி இன்றுரையும் நிகழ்ந்து நெருங்கும் இருபதாம் நூற்றாண்டினதும் இருபத்தோராம் நூற்றதண்டினதும் பெரும் கொடும் அழிவைச் செப்பனிடவோ அல்லது தடுத்தாளவோ முடியவில்லை.இம்மானுவல் கன்டினதோ அன்றி மார்க்சினதோ புரிதப்பாடலிருந்தோ சமீபத்து சார்த்தார் வரையோ இந்தக் கோணத்தைச் செப்பனிடும் மொழிவுகளைக் கண்டடைந்து செப்பியபோதும் இன்றுவரையும் "சுழற்ச்சி இயக்க"முறைமையின் உள்ளார்ந்த நெளிவு சுளிவுகளைச் சொல்வதற்கு துணைபுரிவதிலிருந்து எந்தக் குறைபாட்டையும் செய்துவிடவில்லை.
தெரிதா
சுழற்றி இயக்கத் தொடாச்சி இன்றைய விஞ்ஞானப் பெருஞ்சுற்றில் அநுபவத்தின் தொடர்வினையை மறுப்பதற்கில்லை.அது தன்போக்கில் நிலவும் மரபுசார்ந்த மயக்கத் தன்மையிலான எல்லா மடிப்புகளையும்(சமூகவியல்,பொருளியல்,அரசியல் விஞ்ஞானம்,கணிதம்,பெளதிகம்,வானியல்,உயரியல்,வரலாற்றியல்,மானுடவியல்,இலக்கிய விஞ்ஞானம்,மொழியியல் இன்னபிற)குறித்தான சுயதேடலில் பேருண்மையாக வியாபித்திருக்கும்"ஒடுக்கு முறை"அதன் தேவையை வலியுறுத்தும் அடித்தளத்தையும்(பொருளாதாரம்)இருப்பிக்கிட்டுச் செல்லும் சமூகத்தன்மையை மறுக்கும் தனியுடமைப் புதைசேற்றில் குவிக்க முனையும் அதிகாரத்தைப் பிரதியீடாக்க எந்த மக்கள் நலனும் இல்லை என்பதன் உண்மையின் அருகினில் நகர்த்தும்.இதுவே நவீனத்துக்குப் பின்பான பெருங்கதையாடல்களைச் இந்தச் சுழற்சி இயக்க வெளிக்குள் இரண்டாம் உலகமகாயுத்தத்துக்குப்பின்பு நகர்த்திக்காட்டியது.கிட்லரின் நாசியதுக்கு வருவோம்.தேசிய சோசலிசச் சகதிக்குள் மூழ்கிய ஆரியவாதத்தன்மையைத் துக்கிப்பிடித்த விஞ்ஞானக்கும்மியில் முதல் நின்று கும்மியடித்தவர் பிலிப் லேனார்ட் (Phillip Lernard 1862-1947)இவர் பெளதிகத்துக்காக 1905 இல் நோபல் பரிசைப் பெறுகிறார்.1935 டொச்ச பெளதிகம் எனும் அறிவியல் அமைப்பைத் தோற்றிவிக்கும் மனிதன் ஆல்பேர்ட் ஐயன்ஸ்ரையினை மயிருக்கும் மதிக்கவில்லை.ஏன்-எதற்காக என்பதையும் தாண்டிச் சகதிக்குள்(ஆரியவாதம்)கிடந்துழலும் இந்த அன்னக்காவடி றிலேற்றிவிற்றேற்(Relativitätstheorie) தியரியைப் போட்டுக் குழப்பி,அது யூதனின் தத்துவம்,யூதனுக்கு மனதிலெழும் உண்மைகுறித்த அறிவு(...) குறைவென்றான்;(Dem Juden Fehlt auffalend das Verständnis für Wahrheit(...) Phillip Lenard,Deutsche Physik,Münschen 1936.Seite:ixf)இத்தகையக் கதையாடலின் பின்னே தொக்கி நின்ற உண்மையின்பால் வெறுப்பேற்றும் இனத்தூய்மையெனும் பொய்மை பெரும் பெளதிகவியாளர்களையும் விட்டுவைக்காத மனவிருப்பின் விகாரங்களைக் கொண்டிருப்பதன் தொடர்ச்சியாக இங்கேயும் ஒரு சில மனிதர்கள் எடுத்துப்போடும் கார்ல் போப்பரும் அதே கதையின் சுழற்சித் தொடரில் எடுத்துப்போட்ட அருமையான(!?)Aussage Poppers hinzufügen, die lautet: `Es kann keine vollkommene Gesellschaft gebenஉலகம் அனைத்தும் ஒருமைப்படும் சமுதாயம் கிடையவே கிடையாது.(Vgl. das `Nachwort´ zu Popper/Lorenz: Zukunft (Anm. 29), S. 138. ... Und er fügt hinzu, S. 140: `Wenn du eine vollkommene Gesellschaft anstrebst, so wirst du sicher gegen die Demokratie sein)உலகம் அனைத்தும் ஒருமைப்படும் சமுதாயத்தை நோக்கி நீ விரும்புறுந்தரணத்தில் (போராடினால்) நிச்சியமாக ஜனநாயத்துக்கு எதிராகக் காரியமாற்றுகிறாய்)" இனவாதக் கும்மியில் அன்று வழிகாட்டியவர் எவரென்ற உணர்வுக்கு வலுவூட்டியவர் ஓட்டோ கீர்க்கே(Otto v.Gierke 1841-1921யுத்தமும் பண்பாடும்" என்ற சொற்பொழிவில் சொல்லப்பட்ட:"யுத்தம் பண்பாட்டைச் சிதறடிப்பதும் உண்மை,எனினும் நியாயமானது(கிட்லர் பாணி)அது.நாங்கள் யுத்தத்தை வருவேற்போம்.அதுள் இறைவனின் நியாயத்தை நிலைநாட்டுவதற்காக" என்றான்.
இப்போதைய தமிழ்ச் சூழலுக்குள் வருவோம்.பெருந்தவப் பயன்களால் பெற்றெடுத்த பேராடும்-பெருமைக்குரிய பெருந்தகை பற்றிய பொழிப்புகளுக்கு நடுவில் கருத்தியற்றளத்தில் கட்டிப்போடும் வலுவற்ற மொழியாடலில் மெலினப்பட்ட அந்தப் பெருந்தகையின் சமூகஜீவிகளின் அன்றாட வாழ்வுப்பயணத்தில் கட்டப்பட்ட"சுதந்திர வேட்கை"சொல்லித்தரும் அறிவு"விடுதலை".உன்னை இழந்தும் விடுதலையைப் பெற்றெடு என்பதன் முன்னைய நாடகம் இதோ! சுசான நீடன் என்ற ஆய்வாளர் இரண்டாம் உலகப் போருக்குள் சிக்கிய பெண்கள் குறித்த ஆய்வைச் செய்திருக்கிறார்.இவரது நுலை வாசிப்பவருக்கு நிச்சியம் திடுக்கிடும் உண்மைகள் "தமீழீழத்து"பெண்களுக்குள் நின்றாடுவதைப் பார்க்க முடியும்.யுத்தத்தால் அனைத்தையும் இழந்த நிலை.மனப் பிறழ்வில் உச்சம் பெற்ற நிலையுள் கிட்லர் சேனைக்குள் மிகச் சரிவேற்பட்டிருந்துபோது,அந்த நிலையிலும் பதினாங்கே வயதுள்ள கிட்லர் இளைஞி எழுதுகிறாள்:"டாக்டர் கொய்ப்பிள்ஸ்(Dr.Goebbels einen Aufruf ergehen lassen:"Totaler Krieg".Wir, unsere Schule, wird wohl auch noch eingesetzt werden für irgenwelche Arbeiten.Das wäre auch richtig.den wir müssen ja siegen!!!"(Susanne zur Nieden,Zur Theorie und Praxis von Alltagesgesichichte,Münster 1994.Seite:181) வெளிப்படுத்திய "முற்றுமுழுதான யுத்தம்"என்ற அழைப்பானது எங்களை,எங்கள் பாடசாலையை ஏதாவதொரு வேலைத்திட்டத்துக்குள் இணைப்பதற்கு முனையும்.இது சரியானது.ஏனெனில்,நாங்கள் நிச்சியமாக வெற்றியீட்டுவதற்காக" என்கிறாள்.இப்போது பார்ப்போம் நமது சூழலில் போராட்டம் குறித்தான நிலைமைகள்-மனோ நிலைகள்,வாழ்வியல் மதிப்பீடுகளும் யுத்தம் என்பதன் அர்த்தத்தால் நீட்டிமுடக்கப்பட்டு,வாழ்வே யுத்தத்துக்காகவென்பதாக இருக்கிறது.இந்தப் புனைவின் தொடர் சுழற்றி இயக்கம கடந்தகாலத்தின் நகலாக இருப்பதும் அதுவே சமூகத்தளத்தில் புநிலையான பொருள்சார் முறைமையின் தொடர்வினையின் உந்துதலாகவும் அதே இடத்தில் அகநிலை வெளியில் உறிதியான கருத்தியல் வலுவாகம்,இயற்கையாகவும் நிலைப்படும் தரணங்களை "உண்மையை அண்மித்தல்"என்ற பொதுமைப்படுத்திச் சமுதாயத்தை நோக்கிவிடுதலும் போராட்டத்தோடு,தமிழீழப் போருக்குள் உள்வாங்கப்படாத நண்பர்களை,உள்வாங்கும் முயற்சியோடு பூரணப்படுவதாக எந்தக் கார்ல் போப்பர் கதைவிட்டார்?அவரே மனித சமுதாயம் ஒருபோதும் அனைத்துமாக இணையமுடியாதென்றும்,அப்படி இணைக்க விரும்பும் செயல் ஜனநாயக விரோதம் என்றும் போட்டுடைக்க நாமே நமக்கு அரிவரிப்பாடம் போட்டுச் சோக்காட்டுகிறோம்!
சுழற்சியக்கத்தொடர் நிகழ்வுப் பரிணாமம் இன்னும் மேலே சென்று கட்டிப்போடும் இன்னொரு தளமாக விரிவுறும் பாரிய நிகழ்வு காட்சிப்படுத்தும் புனைவாகத் தொடர்கிறது.இதன் எல்லையின் பரிணாமங்கள் மிகப்பெரும் வெளியைச் சிந்தனைக்குள் திறப்பதற்குப்பதிலாக அதை மறுத்தொதுக்கிக் குறுக்கலான பாதையொன்றைத் திறந்துவிடுகிறது.இது கட்டமைக்கும் வெளிக்குள் மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு என்ற கோட்பாட்டு நிலையைப்பொருத்திப்பார்ப்பதே சில வேளைகளில் பொருத்தப்பாடாக இருக்கும்.எனினும் அதுவல்ல இன்றைய பிரச்சனை.இங்கே நாம் பார்க்கும் இன்னொரு தத்துவவாதியிடம் போவோம் யுர்கன் கபர்மார்ஸ்JürgenHabermas)இன்னொரு வினையை கார்ல் போப்பரின் மூவுலகம் எனும் சிந்தனைக்குள் விரிவடைய மறுக்கும் "நியாயப்புடுத்துதல்"(Theorie der Rationalisierung)எனும் கோட்பாட்டை மீளமைப்பில் சமுதயாத்தின் அனைத்து தளத்திலும் இதைப்பொருத்திப்பார்க்கின்ற முறைமைகளோடு அதைக் குறுக்காது மேலும் அதை இன்றைய அறிவு(...)வாதக் கதையாடல் அனைத்துக்கும் பொருத்துகிறார்.இன்றையவரை காபர்மாசின் கருத்தூட்டங்கள் நிலைகொண்டிருக்கும் பரிணாமங்களில் நாம் கால் வைப்பதற்கானவொரு வெளியைத் தரும் விவாதங்களோடு மேலும் நகர்தல(விவாதித்துக் கொண்டிருக்கிற முறைமையின் நிலை,எடுத்துரைப்பை அறிவினுடையமதிப்பீட்டுத்தன்மைக்குள் மீள் அறிமுகப்படுத்தலுக்குப் பதிலாக வேறொரு பரிணாமத்துக்குள் உருவகப்படுத்துதல்) சாத்தியமென்பதால் இதை நிறுத்தித் தொடர்வது பஞ்சி முறிக்கும் ஒரு நிகழ்வதாம் இப்போதைக்கு-வேறு வழி?.
ப.வி.ஸ்ரீரங்கன்.
18.10.2007
Friday, October 12, 2007
சாதியமைப்பும் தேசியவிடுதலை...
சில கருத்துக்கள்
இன்றைய ஈழத்து அரசியல் வாழ்வில் ஒடுக்கப்படும் தமிழ்மக்கள்-சாதிகளாகப் பிளவுபட்டுக்கிடக்கிறார்கள்.இவர்களின் எதிர்பார்ப்புகள் அரசியற்றளத்தில் பல தரப்பட்ட கேள்விகளைக் கொண்டிருக்கிறது.அந்தக் கேள்வியானது எப்பவும் நிலவப் போகும் அரசியற்றளத்தைப் பற்றியதாகும்.அதாவது, அதிகாரத்தைக் கைப்பற்றியபின்-அல்லது அதிகாரப் பகிர்வுக்குப் பின் எத்தகைய அரசியல் சமுதாய அமைப்பின் கீழ் எத்தகைய சமூகவாழ்வை அமைத்துக்கொள்ளப் போகிறோம் எனும் எதிர்பார்ப்பே முழு மொத்தத் தமிழ்பேசும் மக்களையும் ஒரே குடையின்கீழ் திரட்டுவதற்கான வாய்ப்பில் உச்சமடையும்.ஆனால், இன்றைய அரசியல் யதார்த்தமானது தனித் தமிழீழம் என்ற கருவ+லத்தை மெல்ல மறந்து மாற்று எண்ணக் கருத்தின்பால் தாழ்த்தப்பட்ட மக்களைக் கவனங்கொள்ள வைக்கிறது.பல நுற்றாண்டுகளாகத் தாழ்தப்பட்டு அடிமை குடிமை சாதிகளாக் கிடந்துழலும் தமிழ் பேசும் மக்களில் கணிசமானவர்கள் தமிழீழம் என்பதை அன்றைக்கே சந்தேகக் கண்ணோடு பார்த்து வந்தார்கள்-விமர்சித்தார்கள்.இத்தகைய கருத்துக்களைப் பரவலாகத் தமிழ்ப் பிரதேசமெங்கும் நாம் காணுமிடத்திலும் தமிழீழம் சார்ந்த இந்த அச்சமென்பது வெறுமனவே பொருளாதார நலன்களுடனான தொடர்பாக எழவில்லை.மாறாகத் தமக்குள் முட்டிமோதிய வரலாற்று முரண்களால் அவாகள் அங்ஙனம் நோக்கும் நிலைமைக்கு அன்றைய ஓட்டுக்கட்சிகள் தமது வலுக்கரத்தால் உந்தித் தள்ளின.இதுள் அடங்காத் தமிழன் எனும் வேளாளச் சாதிவெறியன் சி.சுந்தரலிங்கம் முதன்மையான ஓட்டுக்கட்சிச் சாதி காப்பாளனாகும்.இந்த மனிதரின் சுயம் எதுவென்பதைப்பார்க்க மாவை ஆலயப் பிரவேசப்போராட்டத்தில் தாழ்தப்பட்டவர்களுக்காக வந்த அரசாங்க அதிபரை வழிமறிக்க முனைந்த இவரது அழியாத வடுவிலிருந்து உய்துணர முடியும்.இதற்கு உடந்தையாக இருந்தவர் இன்று தந்தையென்று அழைக்கப்படும் செல்வநாயகம் என்றால் இன்றைய இளைய தலைமுறை ஆச்சரியப்படும்.ஆனால்,உண்மை அதுதாம்.
இத்தகையவொரு நிலையானது எப்பவும் தமிழ்ச் சமுதாயத்துக்குள் மிக விருப்பாக இருத்திவைக்கப்பட்டது.பதவிகளையும்,பொருட்களையும் தாம் மட்டுமே அறவிட முடியுமென்று அரசியல் அதகாரத்தைப் பயன்படுத்தி உழைக்கும் மக்களை மிகக் கேவலமாகச் சாதிகளாகப் பிளந்து அரசியல் நடாத்தியவர்களால் இந்த வடு மிக மோசமாக அவர்களைப் பாதித்தது.இத்தகையவொரு பின்னணியில் ஈழத்துத் தமிழ் மக்கள் சமுதாயத்துள்-தமிழர்கள் மத்தியில் அனைத்து முரண்பாடுகளும் முட்டியபோது அதன் பாரிய தாக்கம் வடமாகாணத்துள் நீண்டகாலமாகச் சாதிய எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து செய்தது.இங்கே மக்கள்-தாழ்தப்பட்ட மக்கள்பட்ட வேதனைகளும்-வடுவுமே மக்களின் அபிலாசைகளைத் தீர்மானித்தன.இந்தச் சந்தர்ப்பத்தில் மக்கள் தமது எதிர்ப்புக்களைக் காட்டுவதற்காகத் தொடர்ந்து சாதிக் கொடுமைக்கெதிரான போராட்டங்களைச் செய்தார்கள்.இதுள் மிக நேர்த்தியாகப் போராடியவர்கள் எல்லோருமே மிகத் தாழ்தப்பட்ட பறையர்,நளவர்,பள்ளர்,அம்பட்டர்,வண்ணார் எனப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே.எப்பொழுதெல்லாம் சாதிக் கொடுமைக்கெதிராகப் போராட்டங்கள் வெளிகிளம்புகிறதோ அப்போது வேளளரின் குடிமை சாதியான கோவியச் சாதி கைத்தடியாக வந்து இத்தகை போராட்டத்தை நசுக்கி விடும்.இங்கே நிகழ்ந்த அடியாள்-ஆண்டான்-அடிமைச் சமுதாய அமைப்புள் அங்கம் வகிக்கும் தமிழ்பேசும் மக்களிடம் பரஸ்பர நம்பிக்கை இல்லாது போய்விட்டது.
கடந்த காலத்தை உதாரணமாகக் கொள்ளும் ஒவ்வொரு தாழ்தப்பட்ட தமிழர்களும் தமக்கு ஏற்பட்ட வரலாற்று வடுவிலிருந்தே இன்றைய"தலித்துவ"ப் பொதுமைப்பட்ட ஒரு சமூக உளவியற் கருத்தாக்கத்தால் இணைவதற்கான முன் நிபந்தனைகளைத்"தலித்துக்கள்"என வலியுறுத்திக் கொள்கிறார்கள்.இது சாரம்சத்தில் தமிழ் நாட்டு அரசியல் பொருளியற் சூழ் நிலைகளை வலிந்து இலங்கைத் தேசத்துகுள் திணிப்பதற்கான முதற்காரணமே இலங்கைத தமிழ்ச் சமுதாயத்துக்குள் நிலவும் வேளாள மேலாதிக்கத்தின்மீதான அவநம்பிக்கையே!இதற்கான நல்ல உதாரணங்களை தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றும் வைத்திருக்கிறார்கள்.அன்றைக்கு,அதாவது 1967-1968 வரை நடைபெற்ற சாதியக் கலவரத்தில் உயர்சாதிய வேளாளத் தமிழர்கள் கோவியக் குடிமை சாதியை எங்ஙனம் அடியாளாக்கி அப்பாவித் தாழ்த்தப்பட்ட மக்களை வேட்டையாடியதென்பதை இன்றைய"சோபா சக்திகள்"சொல்லவில்லை-வரலாறு சொல்கிறது.
முன்னைய சாதிக்கலவரங்களுக்கும் இதன் பின்பான கைதடி,எழுதுமட்டுவாள்,கல்வயல்,புளியங்கூடல் போன்ற இடங்களில் நடாத்தி முடிக்கப்பட்ட கலவரங்களுக்கும் அடிப்படையிலுள்ள சமூகவுளவியலானது வேளாளச் சாதிய மேலாதிக்கம் மட்டுமல்ல.அங்கே மாறிவரும் பொருளாதார முன்னேற்றம்,தொழில்ரீதியான பண இருப்பும்,அதன் வாயிலாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான ஒடுக்குமுறை மெல்ல விலகுவதைப் பொறுக்கமுடியாத யாழ்பாண மேலாதிக்கம் இவர்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் மீளச் சிதறடித்து அவர்களை மீளவும் ஒடுக்கித் தமக்கு அடிமைகளாக்கியது.இது கொத்தடிமை முறைக்குள் நிலவும் நிலப் பிரபுத்துவ முறைமையோடு மிகவும் தொடர்வுடையது.அதாவது நிலப்பிரபுத்துவ மிச்சசொச்ச எச்சத்தின் இருப்பு மீள நிலைபெற்றதின் வெளிப்பாடாகவே இத்தகைய நிகழ்வுகள் தொடர் நிகழ்வாகத் தாழ்தப்பட்ட மக்களைப் பதம் பார்த்தது.!967-1968 வரை நிகழ்ந்த சாதியக் கலவரமானது வேளாள அரசியல் வாதிகளால் ஏவிவிடப:;பட்ட சிங்களப் பொலிசார்களிடமும்,கோவியர் சாதிகளிடமும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் பொறுப்பை இவர்களிடம் கையளித்தது.அப்போத நிகழ்ந்த கொடூரத்தைக் கண்டு சிங்கள அரசியல் தலைவர்களே கண்டிக்கும் நிலைக்கு வேளாள அரசியற்றலைவர்கள் உள்ளானார்கள்.ஆனால்,சிங்களத் தலைவர்களின் கண்டனத்துக்குச் செல்வாவும்,அமிரும் அளித்த பதில்கள் இவர்களை இன்னும் பாரிய ஒடுக்குமுறையாளர்கள் என்பதற்கும்,யாழ்ப்பாணிய மேலாதிகத்தின் காவலர்கள் இவர்கள் என்பதையும் உறுதிப்படுத்தும்.அவர்கள் அளித்த பதில்கள் பாரளுமன்றம் கென்சார்ட்,மற்றும் அன்றைய சீனக் கம்யுனிசக்கட்சியின் பத்திரிகைகளில் பதிவானது.இது வேளாளச் சாதிய மேலாதிகத்தின் மிகப் பெரும் வடு.
அடுத்து,ஈழத் தமிழர்களின் சாதிய அமைப்பை விளங்கிக் கொள்வதற்கு என்ன பிரத்தியேகக் காரணிகள் முன் நிபந்தனையாக இருக்கிறதென்று பார்த்தால் அந்தச் சாதியமைப்புக்குள் நிலவும் சமூகப் பலத்தகாரமும் அதை முன் தள்ளிய நிலமானிய உறவுகளும் இந்த உறவை தீர்மானித்த சமூகதோற்றமே முக்கியம் பெறுகிறது.
யாழ்பாணச் சமுகத்தின் தோற்றமென்பது நாம் ஈரயாரமாண்டுகள் வரலாறு கொண்டர்வகள் இலங்கையிலென்ற கோதாவிலிறிங்கித் தரவுகளைச் சொல்வதற்கில்லை.சமூக உருவாக்கம் என்பது திடமானவொரு அரசு அமைகின்றபோததெழும் அதன் பலவந்தத்தாலும் ஆதிக்கத்தாலும் தீர்மானித்து உருவாக்கங் கொள்வதாகும்.இங்கே,யாழ்ப்பாணச் சமூக உருவாக்கம் என்பது 11ஆம் நூற்றாண்டில்தாம் நிரூபிக்ககூடியவரையில் உருவெடுத்தென்பதும்,அது சோழப் படையெடுப்புக்குப் பின் வந்த தென்னிந்தியத் தமிழர்களின் வருகையுடன் ஆரம்பித்தத்தென்பதையும் ஒப்புக்கொள்வது நியாயமாகும்.ஏனெனில், இந்த யாழ்ப்பாணத்து ஆதிக்கமானது நிலப்பிரபுத்துவத்தின் நிலமான்ய உறவுகளோடு மிக நெருங்கிய தொடர்புடையது.இத்தகைய நிலப் பிரபுத்தவம் சோழப் படையெடுப்போடு பாரிய வடிவமாக யாழ்பாண இராச்சியத்தின் உருவாக்கத்துக்கு வழி வகுக்கிறது.தமிழர்கள் மத்தியில் நிலவிய முதலியார் பதவிகளின் தோற்றம் இறுதிவரை நிலத்தின் ஏகபோகத்தைத் தீர்மானிப்பதற்கானதாகவே இருந்தது.இதைப் புரிந்துகொள்ளவதற்கான ஆதரமென்பதை நமது யாழ்பாண வடமாராட்சியிலுள்ள நிலப்பரப்பின் குறிச்சிகளை நோக்குமிடத்துப் புரியும்.அங்கெல்லாம் சிங்கமாப்பாணர் குறிச்சியும்,மணிவீரவாகுத்தேவர் குறிச்சியும் மிகப் பிரபலமாக இன்றும் இருக்கிறது.மலவராயர் குறிச்சியென்பதைக் காணியுறுதிகளில்கூட இன்றும் பார்க்க முடியும்.இந்தக் குறிச்சிகளும் இதுள் சுட்டப்பட்டவர்களும் யாரென்றால்,இவர்கள்தாம் அன்றைய சமூகத்தை ஆட்டிப்படைத்த நிலப் பிரபுக்கள்.எங்கே சாதிய எச்சங்கள் நிலவுகின்றதோ அங்கே நிலப் பிரபுத்தவம் ஏதோவொருவடிவிலிருக்கிறது.இத்தகைய உறுவுகளுக்குள் நிலவும் சாதியத்தின் வேர்கள் மிகவும் வலிய வடிவத்திலிருந்து ஒருவித நெகிழ்வுத்தன்மைக்கு வரும் சூழலை எண்பதுகளுக்குப்பின்பான அரசியல் மாற்றங்கள்-ஆயுதப்போராட்ட இயக்கங்களே தீர்மானிக்கின்றன.
இப்போது பண்பாட்டுக்குள் ஒரு சிற கோடு கீறப்படுகிறது.அது வலுகட்டாயமாகத் தாழ்த்தப்பட்டவர்களோடான பழையபாணித்தனமான உறவாடலை வலுவாக உடைக்க முனைகிறது.இது மனிதனை ஓரளவு கௌரவிக்கும்படி வேண்டி நிற்கிறது.இதற்கு சிங்கள இராணுவத்தின் பொதுவான(சாதிபாராத) தாக்குதல் வழியும் விட்டுவைக்கிறது.அகதிவாழ்வு இதை ஓரளவு அநுமதிப்பதில் ஊக்கங் கொடுக்கிறது.இத்தகையவொரு சூழல்தாம் தீவுப்பகுதியிலுள்ள(இங்கே தீவுப்பகுதியென்பதை ஒரு உதாரணத்துக்காக எடுக்கப்படுகிறது.இது நான் வாழ்ந்த பகுதியென்பதால் அநுபவத்துள் வந்த பகுதி.சாதியக்கட்டுமானுத்துள் நிகழ்ந்த இத்தகைய பண்பு மாற்றம் ஈழத்து அனைத்துப் பகுதிக்கும் பொருந்தும்...அப்பாடா!ஆளை விடுங்கோட அப்புமாரே:-(((((( )தாழ்தப்பட்ட மக்களுக்குச் சிரட்டையில் பகிர்ந்த தேனீரைப் போத்தலுக்கு மாற்றியது.பின்பு, அதுவும் பாரிய வெருட்டல்களுக்குப்பின் தனிப்பட்ட மூக்குப் பேணிகளுக்கு மாறியது.அதாவது,தாழ்தப்பட்ட மக்கள் தமது நிலத்தில் கூலிக்குழைக்கும்போது அவர்களுக்கிடும் போசனத்துக்கான குவளை-கோப்பைகளை நாய்க் கொட்டகையிலேயே வைத்திருந்த அவலமான சூழலை நான் நேரடியாக அனுபவித்தவன்.
இத்தகைய நிகழ்வுகளை நேடியாக அனுபவித்த தாழ்த்தப்பட்ட மக்களின் தொகை கிட்டத்தட்ட ஏழு இலட்சம் மக்கள்.இவர்கள் தமிழ்ப்பிரதேசமெங்கும் கலைந்து எங்கோவொரு சேரிகளுக்குள் அடிமைகளாகக் குடிசைகளில் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.இத்தகைய இழி வாழ்வுக்கு நிர்பந்திக்கப்பட்ட மக்களின் அன்றைய-இன்றைய அச்சமெல்லாம் அமையப்போகும் தமிழீழம் அல்லது அமையப்போகும் மாநிலச் சமஷ்ட்டி வகையிலான அதிகாரப்பரவலாக்கலில் தமது நிலை என்ன?தங்களுக்கான தோல்வி மீளவும் இந்த முறைமைகளுக்குள் நிகழுமா என்பதே இன்றைய ஒவ்வொரு தலித்தினதும் கேள்வி.இதுதாம் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் அவநம்பிக்கையோடு எதிர்கொள்கிறது.அமையும் தமிழர் ஆட்சியில் தாம் இன்னும் ஒடுக்கப்படுவோமா என்ற இந்த நியாயமான சமூக அச்சம் இந்தப் போராட்டத்துள் அவநம்பிக்கையையே கொடுத்து வருகிறது.இதன் உள்ளார்ந்த இயங்கு தளத்தை மிகவும் நுணுக்கமாக அறியாதவர்களல்ல இன்றைய போராட்டக்களத்திலுள்ள புலிகள்.எனினும்,அவர்களுக்குப் பின்னாலுள்ள யாழ்மேலாதிக்க வேளாள சாதி ஆளும் வர்க்கம் இதையொரு பொருட்டாக எடுக்காது புறந்தள்ளிவிட்டு,ஒரு மொன்னைத்தனமான"தேசிய வாதம்"புரியும்போது இந்த முரண்பாட்டை-அவநம்பிக்கையைச் சரியாக இனங்கண்ட சக்தி இந்தியாவே.இதைத்தாம் இலங்கைச் சிங்களத் தரப்பும் இன்று நுணுக்கமாகப் பயன்படுத்துகிறது.
இணையத்தில் வைக்கப்படும் இன்னொரு கருத்தானது"ஈழத்தில் சாதி ஒடுக்குமுறையானது முன்பு இருந்ததைப்போல் இல்லை.ஆகவே,அதுபற்றி நாம் எதுவும் அலட்டத்தேவையில்லையென்றவாதம்."ஆம்!சாதியமைப்பு-சாதி ஒடுக்குமுறை முன்பிருந்ததைப்போல் இல்லை என்பது உண்மை.ஆனால்,இங்கே கவனிக்க மறுக்கும் இன்னொரு காரணி சமூகம் என்பது முன்னைய நிலையிலிருந்து முற்றிலும் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதே.முதலாளித்துவத்தின் வளர்ச்சி-யுத்தச் சூழல்,போராடும் இளைஞர்களின் விழிப்புணர்ச்சி இவைகள் மனிதர்களிடம்-தனிப்பட்ட ஒவ்வொரு தனிமனிதரிடமும்(அது தாய் பிள்ளை,தந்தை என விரியும்)தனிமனிதச் சுதந்திரவுணர்வைத் தூண்டியள்ளது.இங்கே, முதலாளியத்தின் மிக நுணுக்கமான இந்தப் பண்பு அதன் உற்பத்தி உறவுகளோடுள்ள தேவையின் நிமித்தம் நிகழும் சந்தர்ப்பம் அதிகமாகிறது.இது தனியே தனது இலக்கை எட்டும்வரைத் தனிநபர்களின் அனைத்துப் பரிணாமங்களிலும் மறைமுகமாகத் தலைபோடும். இதுவே, இன்றைய சாதிய ஒடுக்குமுறைக் காரணிகளை இலங்கைத் தேசிய இனச் சிக்கலுக்குள் மிக வலுவாகக் காய் நகர்த்தும் திட்டத்தோடு அதன் ஒவ்வொரு நியாயப்பாட்டையும் வற்புத்தி ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட தனிமனிதரையும் உசுப்பிவிடுகிறது.இந்த உந்துதலை மிகவும் கவனமாகக் கையாளவேண்டிய பொறுப்பு தலித்துவ முன்னணிகளுக்கு உண்டு.இங்கே,நண்பர்கள் யார்,எதிரிகள் யார்?என்ற கேள்வியில் யாழ்ப்பாண மேலாத்திக்க வெள்ளாளனா அல்லது அந்நிய அரசியல்சார நிறுவனங்களா(இவைக்குள் மறைவது இலங்கை-இந்திய மற்றும் மேற்குலக அரசுகள்தாம்)என்ற கேள்வியில் ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட ஈழத்துக்குடிமகுனும்-குடிமகளும் அந்நியச் சக்திகளையே மிகத் தோழமையோடு நம்பும் நிலைக்கு நமது கடந்தகால கசப்பான அநுபவங்களே இட்டுச் செல்கிறது.இங்கே, யாரை நோவது?இதுதாம் மிகப் பெரும் அவநம்பிக்கையாக ஈழத் தேசிய விடுதலைப்போரில் ஒரு தலித்தின் சமூக உளவியலாக உருவாகியுள்ளது.இதுவே,தன்னோடு(தலித்துக்களோடு) தோள் சேரும் எவரையும் உடனடியா"நீங்கள் ஒரு தலித்தா"என்று உடனடியாகத் தனது அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.இந்தச் சமூக அச்சத்தை அறிவியல் ப+ர்வமாக விளங்காது நமது தமிழ்ச் சமுதாயத்துள் இன்றைய தலித்துக்களின் அனைத்து நடவடிக்கைகளையும் துரோகத்தனமென விளித்து,மீண்டும் பாரிய தவறைச் செய்து,இயக்கவாத மாயையில் தூங்கிவிடுகிறோம்.இவர்களே தலித்தென்பது "தான் வேளானெச் சொல்வதற்கான வாய்ப்பு" என்றும் எம்மைச் சாடுகிறது.
ஆனால்,இந்தியாவும்,இலங்கையும் இந்த அவநம்பிக்கையை மேல் நிலைக்கு எடுத்து உந்தப்படும்போது கணிசமான தமிழர்கள் தம்மை வேளாளரின் அரசியலோடு பிணைப்பதற்கில்லை.இங்கே, இத்தகைய பிளவு ஏலவே இருந்த காயங்களோடு இன்னும் வலிமையுறுந்தறுவாயில் போராளிகளில் அறுபது வீதமானவர்கள் மிகவும் மனவுளைச்சலுக்குள்ளாகிப் பிரியும் நிலை அல்லது ஆயுதங்களை உதறியெறியும் நிலை புலிகளுக்குள் நிகழ்ந்தே தீரும்.இதைக் கூர்மைப்படுத்தும்போது ஒன்றிணைந்த தமிழர்களின் தேசியவாதம் சிதைவுறும் சந்தர்ப்பம் தோன்றும்.இங்கே,போராட்டத்திலுள்ள அதிகமான போராளிகள் தாழ்தப்பட்ட சாதித் தட்டிலிந்தே போரட்டத்துக்குள் இணைந்தவர்கள்.வேளாளர்களின் பிள்ளைகள் மிகத் திட்டமிட்ட வகையில் மேற்குலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சூழலில், இது மிகவுமொரு பாதகமான சமூகப் பிளவைக் கொடுக்கும்.இங்கேதாம் தமிழ்பேசும் மக்களின்(சாரம்சத்தில் தமிழ் ஆளும் வர்க்கத்தின்)"தேசிய விடுதலை"க் கோசம் நிர்மூலமாகிவிடும் பாரிய திட்டம் இலங்கையால் வலு சாதுரீயமாகச் செயற்படுத்தப்படுகிறது.இதை, இனிமேலும் தொடரும்-தொடரப்போகும் தலித்துக்களின் சந்திப்புக்களுடாகக் காய் நகர்த்தத் தோதான நம்பத்தகு அரசியல்வாதிகள்-ஆய்வாளர்கள் மூலமாகச் செம்மையுறச் செய்யும் இலங்கை-இந்திய ஆர்வங்கள் தலித்து மக்களின் உண்மையான முரண்பாட்டைத் தமக்குச் சாதகமாக்கும் இன்றைய இழி நிலைக்கு எவர் காரணம்?அமைதியாகச் சிந்தித்தால் விடை கிடைக்கும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
13.10.2007
Tuesday, October 09, 2007
பாரீஸ் தலித் மகாநாட்டை முன்வைத்துச் சில...
"துப்பாக்கி நிழலில் உறங்கும் சாதியம்: ஈழத்துக்கானதாகவே
இருக்கிறது."
இலங்கையில் சாதியக் கொடுமையானது எப்படி நிகழ்கிறதென்பதற்கான சில தரவுகளை இக்கட்டுரை பேசுகிறது.இக்கட்டுரை ஆசிரியர் தரும் தரவுகளுக்கு எந்தச் சுட்டியையும் நாம் முன் வைக்கப் போவதில்லை.ஏனெனில், வரலாற்று ரீதியாகச் சாதியம் ஏற்படுத்திய வடுக்களை நாம் சுமப்பதால் அது குறித்து எவரும் பொய்யுரைப்பதற்கல்ல.ஆனால், ஈழத் தமிழ் மக்கள் குறித்தான பற்பல இட்டுக்கட்டல்களுக்கூடாக ஒரு இனத்துக்குள் நிலவும் எந்த முரண்பாட்டையும் நாம் களைந்து விட முடியாது.தமிழ் பேசும் இலங்கை மக்களில் கணிசமானோர் சாதிரீதியப் பிளந்து கிடக்கிறர்hகள்.இவர்களின் வாழ்வாதாரமோ கூலிக்கு அடிமைத் தொழில் புரிவதால் பெறப்படுபவையாக இருக்கிறது.இத்தகைய மக்களின் சமூக வாழ்வானது அவர்களை எப்பவும் மேல் சாதிய வேளாள ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாதவொரு பொருளாதார மற்றும் கருத்தியல் பலாத்தகாரச் அரசியல் சூழலை அவர்கள் முன் இட்டுள்ளதால்,இன்றைய தேசியவிடுதலைப் போராட்டதை(அப்படிச் சொல்லப்படுவது)இத்தகைய சாதிய ஒடுக்குமுறைப் பாதிப்பதாலும் அதன் உள்ளார்ந்த நலன்களாலும் மறைப்பிட்டுத் துப்பாக்கி நிழலில் சாதியக் களைவு நிகழ்ந்திருப்பினும், அது அப்பட்டமான சாதிய ஒடுக்கு முறையின் இன்னொரு விளைவைத்(தாழ்த்தப்பட்ட மக்களின் அணித் திரள்வு) தந்து கொண்டிருக்கிறது.
இந்த வினையின் தொடர்ச்சியாகப் பாதிகப்பட்ட"தாழ்த்தப்பட்ட தமிழ் பேசும்மக்கள்" தங்களுக்குள் விவாதங்களைத் தொடர்ச்சியாகச் செய்வதும்,அதன் வாயிலாகச் சாதியக் கட்டமைவின் சமூக உளவியலைப் புரிந்து கொள்வதும் தத்துவார்த்தத் தளத்தில் மிக அவசியமாக இருக்கிறது.இத்தகைய புரிதலின் தொடர் நிகழ்வில் சாதியத்தால் பிரித்தொதுக்கப்பட்ட மக்கள் தம்மைப் பாதுகாப்பதற்கான அரசியல் பலத்தை-சமூகக் காப்புறுதியைத் தக்கவைப்பதற்கும் அதன் வாயிலாகத் தமிழ்பேசும் மக்கள் சமுதாயத்தில் பண்பாட்டு மாற்றைக் கோரி வர்க்கவுணர்வைப் பெறுவதும் ஒருகிணைந்த புரட்சிக்கு அவசியமான முன் நிபந்தனையில் ஒன்றாகவே இருக்கிறது.இங்கே புரட்சியென்பதன் வரைவிலக்கணம் படும்பாடு வேறுவகையானது.எனினும்,புரட்சி சர்வ நியாயமானது-நிட்சியமானது,விஞ்ஞானப+ர்வமானது.எனினும்,அதற்கான தோல்வி அதை மட்டுப்படுத்தலாமேயொழிய தடுத்துவிட முடியாது.இது, சமூக யதார்த்தம்-இயங்கியல் விதியுங்கூட!
இன்றைய"தமிழ்த் தேசியவாதமும்"சாதியமும்:
இது இப்படியிருக்கும்போது,யாழ்ப்பாணிய மையவாதச் சித்தாந்தப் போக்குள் மையங்கொண்ட "தனித் தமிழீழம்"வலிந்து தாழ்த்தப்பட்ட மக்கள்மீது ஒரு வகைமாதிரியான "தேசிய அடையாளத்தைச்"செய்வதும்,அதையே தேசத்துக்கு அவசியமானதுமான மிக முக்கிய அலகாகவும் தாழ்த்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களிடம் தொடர்ந்து திணிக்க முனைகிறது.அதைத் துப்பாக்கியின் துணையோடு ஈழத்தில் செய்து முடிக்கும் புலிகள்,இணைய-மற்றும் ஊடகங்களிலும் கருத்துகட்டும் "கயமை அரசியல்"தமிழ்பேசும் மக்களின்"தேசிய விடுதலை-சுயநிர்ணயம்"போன்ற அரசியல் ஆதிக்கத்தின் முன் நிபந்தனைகளால் தமிழர்கள் எல்லோரும் ஒரே தேசிய இனம் என்கிறது.சிங்களப் பெருந்தேசிய இன ஒடுக்குறையானது தமிழ்பேசும் மக்களைச் சாதிரீதியகப் பார்த்து ஒடுக்குவதில்லையென்றாலும்,தமிழைப் பேசுவதால் தமிழர்கள் எல்லோரும் ஒழுங்கமைந்தவொரு தேசிய இனவுருவாக்கத்துள் இதுவரை வரவுமில்லை.அதை உந்தித் தள்ளும் மிக உயர்ந்த உற்பத்திச் சக்திகள் மற்றும் அதனூடாக உறவுறும் உற்பத் உறவுகளும் நமக்குள்-இலங்கையில் கிடையாதவொரு சூழலில் மிக யதார்த்தமாக இருக்கும் சாதிய ஒடுக்குமுறையை- குறைவிருத்திச் சமூகங்களுக்கே இருக்கும் சகல ஏற்ற இறக்ககங்களும்"குழும வாழ்வு" கூட்டு,மற்றம் சாதியச் சமூக வாழ்நிலைகளை எந்தவொரு புரிதலுமின்றி மறுதலிக்க முனையும் கதையாடல்களை இணையப் பதிவுகளில் "தேசிய விடுதலைப் போரை"சொல்லி அதுள் கனவுகளை வளர்துள்ள இளைஞர்கள் செய்துவருகிறார்கள்.அனால்,இத்தகையவொரு இறுகிய சமூகப் புரிதலுக்கு எந்தப் புறநிலைக் காரணங்களும் தோதாக இருக்காத போதும், இவர்கள் தமது அகவிருப்பின் மாயைத் தோற்றத்தால் சாதியத்தின் கொடுமைகளுக்கெதிரான சின்னக் கருத்தாடலையோ அன்றி அதை மையப்படுத்திய சந்திப்புக்களையோ சகித்துக்கொள்ளாமல் அவற்றைச் சிங்கள அரசின் சதி,தமிழ் தேசியத்துக்கு எதிரானதென்ற அபாயகரமான அரசியலால் ஒடுக்கும் சூழ்நிலைகளையும் அதன் பக்க நிகழ்வாகப் புதிய மாதிரியானவொரு சாதிய ஒடுக்கு முறையையும் அப்பாவித் தாழ்தப்பட்ட மக்களிடம் அன்றாட அரசியல் வாழ்வாக நிறுவ முனைகிறார்கள்.
இது மிகவுமொரு கொடுமையான சமூக ஒடுக்குமுறை.இதை மேல்சாதிய வேளாள அரசியல் அனுமதிப்பதிலிருந்து தொடரும் தேசிய விடுதலைப் பரப்புரைகள் தம்மை முன்னிலைப்படுத்தும் மேல்சாதிய சமூக ஆதிக்கத்தை மிகவும் நரித்தனமாக நகர்த்தி வருகிறார்கள்.இது, மிகவும் இக்கட்டான சிக்கலாகவே மூன்றாமுலகச் சமுதாயங்களுக்குள் நிலவி வருகிறது.இத்தகைய சமுதாயங்கள் தமக்குள்ளேயேவொரு "உள்ளகக் காலனித்துவத்தை"கட்டி வைத்திருக்கும் பண்பாட்டைக் கேள்விக்குட்படுத்தாமல்-தம்மால் அனுஷ்ட்டிக்கப்படும் மத அனுஷ்டானங்களை மறுத்தொதுக்காமல் நிலவி வரும் ஆதிக்க-அடக்குமுறைக் கருத்தியலுக்கு "தேசிய விடுதலை"ச் சாயம் ப+சி மெழுகுவதைத் தொடர்கிறார்கள்.இத்தகைய அறிவு நாணயமற்ற இத்தொடர் நிகழ்வுகளால்-திட்டமிட்ட சதி மற்றும் இயலாமைகளால் ஏலவே வர்க்கங்களாகப் பிளவுபட்டக்கிடக்கும் இலங்கை அரை அரச முதலாளிய-தரகு முதலாளியப் பொருளாதார ஆதிகத்தால் அல்லது பலவந்தத்தால் ஒடுக்கப்படும் தாழ்தப்பட்ட மக்களின் வாழ்வைப் பறித்தெடுத்து தேசிய விடுதலைப்போரெனப் புலிகள் செய்யும் ஏதோவொரு வகைப் "விடுதலைப்போருக்கு"அவர்களைப் பலியிட முனைவதை இன்று வரை அனுமதிக்கும் கருத்தியலே வெற்றி பெறுகிறது.இது மிகவும் கபடத்தனமானது.சமூகமட்டத்தில் தீர்மானகரமான பொருளாதார நிகழ்வுப் போக்குகள் இன்றைய புதிய உலக ஒழுங்கமைப்பில் இன்னுஞ் சிக்கலான கட்டத்தைத் தாழ்த்தப்பட்ட மக்களைப் பகடைக் காயாக வைத்துத் தமிழ் தேசியத்தின் கையாலாகாத போராட்டத்தை; துடைத்தெறிவதில் இப்போது மிகவும் நரித்தனமாக முயற்சிகளை முடக்கி விட்டுள்ளது.இந்த முயற்சியின் அல்லது அரசியல் சதங்ரங்க விiயாட்டுக்குப் பறிகொடுக்கும் நிலையாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூவாழ்வு உள்ளது.இதை அம்பலப்படுத்தி அந்த மக்களின் உண்மையான பிரச்சளைகளை எதன் பொருட்டும் காயடிக்காத-கயமை அற்ற அரசியல் பண்பாட்டு முன்னெடுப்புகளால் தீர்க்கப்பட வேண்டிய மிகப் பெரும் பளு நம்மத்தியிலுள்ளது.இது எந்தவிதக் குழறுபடியுமற்ற-அரசியல் மற்றும் வர்க்க நலன்களையுங் கடந்து அவர்களின் அன்றாட வாழ்நிலையிலிருந்து அணுகப்பட வேண்டும்.
ஆனால்,இன்று வரை நடக்கும் படுபிற்போக்கான இயக்கவாத மற்றும் ஓட்டுக்கட்சி மனப்பாண்மையானது "தமிழர்கள் அனைவரும் ஒன்றே"என்பதாகத் தாம் விரித்து வைத்திருக்கும் வலையுள் இந்த மக்களைத் தமிழால் வீழ்த்துவது மிகப் பெரும் கொடுமை.இதைப் புரிந்தகொண்ட தாழ்தப்பட்ட தமிழ்பேசும் மக்களுக்குள் உள்ள புத்திஜீவிகள் தம்மால் இனம் காணப்பட்ட இக் கொடுமைகளுக்கெதிரான அரசியல் விழிப்புணர்வுக் கருத்தாடலையும் தமது சமூக விடுதலையையுங் குறித்த நிகழ்வுகளை செய்யும்போது,இதைத் தமது அரசியல் இலாபங்களுக்காகத் தமிழ்பேசும் மக்களின் அரசியல் எதிரிகள் தமக்குள் உள்வாங்கிச் சிதைக்க முனைகிறார்கள்.இவர்களே ஆயிரம் தடவைகள், தாழ்தப்பட்ட மக்கள் தமக்குள் இணையும் முகமாக அடையாளப்படுத்தப்படும் பொது சமூக உளவியற் கருத்தாகத்தை இந்தியாவிடமிருந்த உள்வாங்கி இணையும்போது-சந்திப்புக்களை அதன் வடிவத்தினூடாக முன் தள்ளும்போது சகிக்க முடியாது "துரோகம்"தமிழ்தேசியத்துக்கு ஆபத்து என்ற ஓலத்தில் மூழ்கித் தமது பக்க நியாயங்களை எந்தவித்தச் சமூக விஞ்ஞான அடிப்படைகளையுங் கருத்திலெடுக்காமல் கக்கி வைப்பதற்குப் பெயர் விவாதமாக இருக்காது.இதைத்"தடீர்(நிதி வலு-யாருடையது?...) கட்சிகட்டிய"(கால் நூற்றாண்டாய் நாம் கருத்தாடியும் இன்னுமொரு புரட்சிகரக் கட்சி கட்டும் சூழல் இல்லை.அவ்வளவுக்கு அது பெரிய விசயமென்பதைச் சொல்கிறேன்) புரட்சிகர(...) பெரியார் கழக நிறுவனர் திரு.சபேசன் முதல் புரிந்தாலே நமக்கு நிம்மதிதான்.
இந்தவகை எதிர்ச் செயற்பாடுகளுக்கு(இந்திய-இலங்கை அரச-ஆதிக்க நலன்கள் மற்றும் தேசிய விடுதலைச் செல் நெறிக்கு...) இலக்காகியுள்ள தொடரப்போகும் பிரான்ஸ் தலித் மாநாடும் அதன் நோக்கமும் வெற்றியடைய வாய்புகள் இல்லை.ஏனெனில்,ஓட்டுமொத்தத் தமிழ்பேசும் மக்களின் வாழ்வாதாரங்களையும்,உரிமைகளையும் மட்டப்படுத்தித் தமது அரசியல் ஆதிகத்துக்குள் வைத்திருக்க முனையும் தென்னாசியப் பராந்தியப் ப+கோள நலன்கள் முழு மூச்சாகத் தமிழ் பேசும் மக்களுக்குள் இருக்கும் உயர் சாதிய வேளாள அறிவு ஜீவிகளைத் தமது அடியாளாக-ஏஜென்டுகளாகத் தொடரப்போகும் தலித் மாநாட்டுக்குள் அனுப்பி வைக்கிறது(இதனாற்றாம் இதைத் தலித் மநாடென்பதாகச் சொல்வதில் எனக்கு உடன்பாடலில்லை.இதன் காரணத்தை வார இறுதியில் முன் வைக்கும் சாதியம் தொடர்பான எனது கருத்தாடலில் தருவேன்).
இதை மிகவும் கவனத்தோடு அணுகாத பாரீஸ் தலித் மாநாடு நிச்சியம் தலித் மக்களின் விடுதலைக்கு எந்தவிதத்திலும் வீரியமோ அன்றித் தலித் மக்களின் சமூக முன்னேற்றத்தையோ செய்வதற்கான முன் நிபந்தனைகளைச் செய்வதற்கில்லை.எனவே, பாரீஸ் தலித் மாநாடெனும் இந்த முதற் பெரும் சந்திப்பே தோல்வியில் முடியும் ஒரு கசப்பான உண்மையை இவர்கள்(குறிப்பாக மாநாட்டுத் தலைவர் தேவதாசன் கவனத்தில் எடுக்கவும்) புரிந்து கொண்டாலே புலிகளின் பரப்புரையாளர்கள் குவித்து வைத்திரும் ஓராயிரம் சேறடிப்புக்களுக்குப் பதிலை மிக நேர்த்தியாகவும்,இலங்கை மண்ணில் சாதியம் எப்படி மக்களை அடக்கியொடுக்கி வருவதென்பதையும் உலகுக்கு அம்பலப்படுத்தலாம்.
அவ்வண்ணமே "தேசிய விடுதலை"எனும் பேரால் நசுக்கப்படும் தாழ்த்தப் பட்ட மக்களின் அடிபடை அரசியல்-சமூக வாழ்வில் சில முன்னேற்றகரமான நகர்வுகளைச் செய்யும் தகமை இந்த மாநாட்டுக்குள் இணையும் தலித்துவக் குரல்களுக்கு உண்டாகும்.இல்லையேல் கிடந்த நீரையும் வந்த வெள்ளம் அடித்துச் சென்றதாக முடியும் இந்த மநாட்டில்.இதுவே இன்றைய மிக அவசியமானவொரு உந்துதலை இலங்கை அரசியலுக்குள் செய்யும்.
இலங்கைச் சிங்கள-மற்றும் தமிழ்- புலிகள்,இந்திய நலன்கள் யாவும் தாழ்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமையோடு நடாத்தும் கயமைமிகு அரசியற் சாணாக்கியத்தை ஓரளவு புரிவதற்கு நாம் முனைவது அவசியம்.அதன் தொடர்ச்சியாக வேறு சில கட்டுரையையும் இத்தோடு இணைக்கிறோம்.கீழ் வரும் கட்டுரையை தேசம் சஞ்சிகையில் நண்பர் பாலச்சந்திரன் எழுதியுள்ளார்.அக்கட்டுரையை அவசியம் கருதி இத்துடன் இணைக்கிறோம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
09.10.2007.
துப்பாக்கி நிழலில் உறங்கும் சாதியம்
இலங்கையின் வடக்குப் பகுதியில் நிலவும் சாதிப் பிரச்சனை தொடர்பாக கட்டுரை ஒன்றை எழுத திட்டமிட்டு, யாழ் உயர் சாதி தமிழர் ஒருவரிடம் கருத்துக் கேட்டேன். உடனே அவர் "சாதி குறித்து எழுதாதே. மீறி எழுதினால் நீ ஒரு தமிழ்த் தேசியத் துரோகியாவாய்" என்றார். இதைக் கேட்டதும் ஒரு கணம் திடுக்கிட்டேன். ஆச்சரியம் அடைந்தேன். ஏனெனில் நான் இதுவரை ஸ்டாலின் குறித்து எழுதினேன். மாஓ சேதுங் பற்றி எழுதினேன். புத்தர் பற்றி எழுதினேன். சிறப்புமுகாம் சித்திரவதைகள் குறித்து எழுதினேன். அப்போதெல்லாம் பாராட்டி தொடர்ந்து எழுதும்படி உற்சாகம் ஊட்டியவர் சாதியைப் பற்றி எழுதப்போகிறேன் என்றதும் "எழுதாதே. எழுதினால் தமிழ்த் தேசியத் துரோகி" என்று சாபம் இடுகின்றார். உண்மைதான். சாதீயம் அந்தளவிற்கு ஆழவேரூன்றி விருட்சமாக வளர்ந்துள்ளது. அதன் ஆணிவேரை அசைக்க முற்பட்டால் துரோகி என்ற பட்டம் மட்டுமல்ல தோட்டாவையும் யாழ் மேலாதிக்க வாதம் பரிசாக வழங்கும்.
1983 கலவரத்தின் போது தென்னிலங்கைப் பகுதியிலிருந்த தமிழர்கள் சிங்களக்காடையினரால் தாக்கப்பட்;ட நிலையில், உடைமைகளைப் பறிகொடுத்த நிலையில் பரிதாபகரமான நிலையில் பஸ்களில் வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். இவ்வாறு நெல்லியடி என்னும் பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் வந்து இறங்கியபோது அதைப் பார்த்துக் கொண்டிருந்த ‘கனப்பொல’ கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த சிலர் இதனை வெள்ளாளர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சண்டையாம் என்று கூறினார்கள். இதைக் கேட்டு நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அன்றைய நிலை அதுதான். அவர்களையும் தமிழர்களாக உயர் சாதியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அவர்கள் உயர் சாதியினரின் சாதீயக் கொடுமைகளில் இருந்து விடுதலை பெற தங்கள் கிராமத்திற்கு ‘கனப்பொல’ என சிங்களப் பெயர் சூட்டி புத்த பிக்கு ஒருவரை வரவழைத்து புத்த ஆலயம் ஒன்றையும் உருவாக்கினார்கள். நல்ல வேளையாக சிங்கள இராணுவம் சாதி வேறுபாடு இன்றி, பிரதேச வேறுபாடு இன்றி தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் தாக்கியதால் அதற்கு எதிராக தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் திரட்டுவது இயக்கங்களுக்கு இலகுவாக அமைந்தது. இன்று அதன் மேல் தமிழ்த் தேசியம் கட்ட முனைகின்றனர். ஆனால் அதன் அடித் தளத்தில் உள்ள சாதீயப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்படாமல் அவ்வாறே உள்ளது என்பதே உண்மையாகும்.
1989ம் ஆண்டுப் பகுதியில் இந்திய இராணுவத் திற்கெதிராக புலிகள் இயக்கம் போராடிக் கொண்டிருந்த போது கரவெட்டிப் பகுதியில் அதன் ஒரு பிரிவுக்கு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பு வகித்தார். அவருடன் அவருடைய சாதியைச் சேர்ந்த இளைஞர்களே பெரும்பாலும் இருந்தனர். அவர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இந்திய இராணுவத்திற்கு எதிராக போராடினாலும் கூட அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கும் அவருடைய சக போராளி களுக்கும் உயர் சாதியினர் உணவு வழங்க மறுத்தனர். தங்குமிடம் கொடுக்க மறுத்தனர். குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்க தயங்கினர். இதனால் அவர் பல தடவை இந்திய இராணுவத்தின் தாக்குதலுக்குள்ளானார். தனது போராளிகள் பலரை இழந்தார். அப்போது அவரிடம் ஒருவர் "தமிழ் ஈழம் கிடைத்தால் என்னவாகும்" என்று கேட்டார். அதற்கு அப்பொறுப்பாளர் எவ்வித தயக்கமும் இன்றி "என் சாதி மக்கள் அகதிகளாக அநுராதபுரம் செல்ல நேரிடும்" என்று கூறினார். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. அந்தளவுக்கு சாதியக் கொடுமைகளை அவர் அனுபவித்திருந்தார். அன்று மட்டுமல்ல இன்றும் கூட இந்த நிலைமைதான் உள்ளது. மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
இந்நிலை குறித்து லண்டனுக்கு வருகை தந்த மதிப்புக்குரிய தங்கவடிவேல் மாஸ்டரிடம் கேட்டபோது அவர் "சாதீயம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. அது என்றாவது ஒருநாள் மீண்டும் பற்றி எரியும்" என்றார். இவருடைய இக் கூற்று மறுக்க முடியாத உண்மையாகும். எனவே உண்மையாகவே தமிழ் தேசியத்தை விரும்புவோர் முதலில் சாதீயத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து சாதீயத்தை ஒழிப்பதற்கு முன் வரவேண்டும். அவ்வழியிலேயே தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்ப முயலவேண்டும். மாறாக அடக்கி ஒடுக்கி பல வந்தமாக அவர்கள் கூறும் தமிழ் தேசியத்தைக் கட்டியெழுப்பினால் அது என்றாவது ஒருநாள் பீறிட்டு வெடித்துக் கிளம்பி போலியாக கட்டி எழுப்பிய தமிழ் தேசியத்தை சுக்கு நூறாக்கும்.
புலிகள் இயக்கத்தில் உப தளபதியாக இருந்த ராகவன் அவர்களும் "வடக்கில் நிகழும் இச் சாதிப்பிரச்சனை தீர்க்கப்படாவிடின் தமிழ் மக்கள் விடுதலை பெறமுடியாது" என்று கூறினார். (இவர் இச்சாதீயப் பிரச்சனை குறித்து ஒரு சிறந்த ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். இதனை அவர் விரைவில் பிரசுரம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.)
இலங்கையில் குறிப்பாக வடக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் சாதி முறையும் தீண்டாமையும் பல வருடங்களாக இருந்து வருகின்றன. சாதி அமைப்பு என்பது இலங்கை முழுவதிலும் சிங்களவர் தமிழர் இருசாரார் மத்தியிலும் இருந்து வருகின்றது. ஆனால் வடக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் தீண்டாமை என்ற நாசமும் சேர்ந்து இருக்கின்றது. நளவர், பள்ளர், பறையர் போன்ற சில சாதிகள் தீண்டப்படாத சாதிகளாக கருதப்படுகின்றனர். இவர்கள் தமிழர்களாக மட்டுமன்றி மனிதர்களாகவும் கருதப்படவில்லை. இது மனிதன் மனிதனுக்குச் செய்யும் மிக மோசமான கொடுமை என்றே கூறவேண்டும்.
சாதி அமைப்பு என்பது நிலப்பிரபுத்துவத்தின் ஒரு மிச்ச சொச்சமாகும். இலங்கையில் முதலாளித் துவம் ஒழுங்காக இல்லாமல் ஏற்ற இறக்கமாக வளர்ந்துள்ள படியால்தான் சாதி அமைப்பு இன்னமும் நின்று பிடிக்கிறது. ஆளும் வர்க்கத்தின் அரசு இயந்திரம் அது அழியாமல் இருப்பதற்கு துணைபுரிகிறது. எனவே சாதீயத்திற்கு எதிரான போராட்டம் பிற்போக்கு ஏகாதிபத்திய சார்பு சக்திகளுக்கு எதிரான தேசியப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். தங்களைத் தாங்களே முற்போக்கு சக்திகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் இதனைப் பார்க்கவோ புரிந்து கொள்ளவோ மறுக்கின்றனர். இப் போராட்டத்தை முன்னெடுக்க தயங்குகின்றனர். இதுவே இன்றைய யதார்த்த நிலையாகும்.
இந்தியாவில் உயர்சாதியினரான பிராமணர் வெறும் மூன்று வீதமே சனத்தொகையில் உள்ளனர். ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியினர் சனத்தொகையில் பெரும்பான்மையினராக இருப்பதால் பாராளுமன்ற அரசியலில் சில சலுகைகளை பெறமுடிகிறது. ஆனால் இலங்கையில் வடக்குப் பகுதியில் உயர் சாதியினர் பெரும்பான்மையினராகவும் தாழ்த் தப்பட்ட சாதியினர் முப்பது சதவீதமாக சிறுபான்மையினராக இருப்பதனால் எந்தப் பாராளுமன்றக் கட்சியும் உயர் சாதியினரைப் பகைத்துக் கொள்ளவோ, புண்படுத்திக் கொள்ளவோ விரும்பவில்லை. தாழ்த்தப்பட்ட சாதியினர் முப்பது சதவீதமாக இருந்தும் கூட அவர்கள் எந்தத் தேர்தல் தொகுதியிலும் பெரும்பான்மையைப் பெறமுடியாத விதத்தில் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல்கமிஸன் மற்றும் அதிகாரவர்க்கம் அனைத் திலும் உயர்சாதியினர் இருப்பதால் அவர்களால் இவ்வாறு தந்திரமாக செய்ய முடிந்தது.
ஆனால் இந்த நிலைமை தோழர்.சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியின் தோற்றத்துடன் மாறியது. ஏனெனில் அவருடைய கட்சியானது பாராளுமன்றப் பாதையை நிராகரித்து புரட்சிகர ஆயுதப்போராட்டத்தை முன்வைத்தது. அது தாழ்த்தப்பட்ட மக்களின் சாதீயத்திற்கு எதிரான போராட்டத்திற்கு துணிச்சலான தலைமையைக் கொடுக்க முன்வந்தது.
1966ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி சாதி அடக்கு முறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுஜன இயக்கம் கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமையில் சுன்னாகத்தில் இருந்து யாழ் முற்றவெளிக்கு ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை ஒழுங்குபடுத்தியது. பொலிசாரும் உயர் சாதியினரும் இவ்ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தடுத்த நிறுத்த எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் தடைகளை உடைத்தெறிந்து ஆயிரக்கணக்கான மக்கள் முற்றவெளியில் திரண்டார்கள். அங்கு அம்மக்கள் மத்தியில் உரையாற்றிய தோழர்.சண்முகதாசன் அமெரிக்க நீக்ரோ பாடகர் போல் போப்சனுக்கு அவருடைய சகோதரர் கூறிய புத்தி மதியை மேற்கோள் காட்டினார். "ஒரு போதும் அடி பணிந்து போகாதே. எதிர்த்து நின்று அவர்கள் அடிப்பதிலும் பார்க்க கடுமையாக அடி. அவர்கள் படிப்பினையைப் பெற்றதும் விடயங்கள் வித்தியாசமாக இருக்கும்"
இதன்பின் நிலைமை மாறியது. தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து நூற்றுக்கணக்கான போராளிகள் தோன்றினார்கள். புதிய உணர்வு கொண்ட இப்போராளிகள் அடிக்கு அடி கொடுத்தார்கள். இவர்களுடைய போராட்டம் ஆலயப்பிரவேசம், தேனீர் கடைப் பிரவேசம், பொதுக் கிணறுகளில் தண்ணீர் அள்ளுதல் ஆகியவற்றைச் சுற்றி நடைபெற்றது. ஆனால் இன்னும் வேறு வடிவங்களில் இப் போராட்டம் நடைபெற்றது. சில போராட்டங்கள் வன்முறையான வடிவத்தில் நடைபெற்றன.
தாழ்த்தப்பட்ட மக்களின் சாதீய ஒடுக்கு முறைக்கு எதிரான இப்போராட்டத்தில் பொலிசார், நீதிமன்றங்கள், அதிகாரிகள் ஆகிய முழு அரசு இயந்திரமும் உயர் சாதியினருக்கு ஆதரவாக செயற்பட்டன. மாஜி மந்திரியாகிய சுந்தரலிங்கம் போன்றவர்கள் வெளிப்படையாக உயர் சாதியினருக்கு ஆலோசகர்களாக செயற் பட்டனர். இவ்வேளையில் சங்கானை என்னும் கிராமத்தில் உயர் சாதியைச் சேர்ந்த ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரின் சவ ஊர்வலத்தின் பாதையை மறித்து அவ் ஊர்வலத்தின் மீது சுட்டார். இத் துப்பாக்கிச் சூட்டிற்கு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் பலியானார். கண்துடைப்பிற்காக சுட்டவரைக் கைது செய்த பொலிஸ் அவரை வெறும் 250 ரூபா பிணையில் பிணையில் விடுவித்தது. நீதிமன்றம் அவரை நிரபராதி என்று கூறி விடுதலை செய்தது. போலிஸ், நீதிபதி எல்லாம் உயர் சாதியினருக்கு ஆதரவாக இருந்தமையினால் இவ்வாறு நடந்தது. எனவே இவ் அமைப்பில் தமக்கு நீதி கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த போராளிகள் அன்று மாலை சங்கானைச் சந்தையில் வைத்து அக் குற்றவாளியைச் சுட்டுக்கொன்றனர்.
இதே போன்று இந்தியாவில் தஞ்சாவூரில் கீழ்வெண்மணி என்னும் இடத்தில் கூலி உயர்வு கேட்ட தாழ்த்தப்பட்ட சாதிக் கூலித் தொழிலாளர்களை குடிசைக்குள் பூட்டி வைத்து எரித்துக் கொன்றனர் உயர் சாதியினர். இதற்கு காரணமான பண்ணையாரை "அப்பாவி" என்று கூறி இந்திய நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் அவரை கம்யுனிஸ்ட் போராளிகள் சுட்டுக் கொன்றனர். இது தான் சாதிப் போராட்டத்தின் இயல்பு. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் தம் கன்னத்தில் அறை விழுந்த போது மறு கன்னத் தைக்காட்டாமல் அடிக்கு அடி கொடுக்கக் கற்றுக்கொண்டார்கள். இந்த மாற்றத்திற்கு காரணம் கம்யுனிஸ்ட் கட்சிகள் இப் போராட்டத்திற்கு தலைமை அளித்ததாகும்.
இலங்கையில் கம்யுனிஸ்ட் கட்சியானது இப்போராட்டத்தை ஆதரிக்கக்கூடிய உயர்சாதி மக்களின் முற்போக்கான பகுதி களை அணி திரட்டியது. இக்கட்சியின் யாழ்ப்பாணக் கிளையின் தலைமைத் தோழர்களில் சிலர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். இந்தப் போராட்டத்திற்கு அவர்கள் அளித்த தலைமையினால் இந்தப் போராட்டத்தின் நோக்கங்கள் சகல பகுதி மக்கள் மத்தியிலும் பரவலாயின. சிங்கள மக்கள் மத்தியிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கையை அறிமுகம் செய்ய கட்சி பெரும் நடவடிக்கை எடுத்தது. பல தேசிய தின நாளிதழ்கள் இப்போராட்டத்தைப் பற்றிய பல செய்திகளை வெளியிட்டன. சீனாவின் பீக்கிங் வானொலி அதன் ஆதரவை இதற்குத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பல வடிவக் கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன என்பதைக் குறிப்பிடவேண்டும். அற்புதமான கவிதைகள் பாடல்கள் தோன்றின. நூற்றுக்கு மேலான தடவை அரங்கேற்றப்பட்ட ‘கந்தன் கருணை’ என்னும் சிறப்பான நாடகமும் தயாரித்தளித்தார்கள். இந்து மதத்தின் படி கந்தபெருமானுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி வள்ளி ‘குறவர்’ என்னும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர். இதனால் நாரதர் கந்த பெருமானிடம் சென்று இலங்கையில் வடக்குப் பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் உயர் சாதியினரால் இம்சிக்கப்படுவதாக முறையிடுவதுடன் இந்நாடகம் ஆரம்பிக்கின்றது. இதைக் கேட்ட கந்த பெருமான் கோபம் கொண்டு இதற்கு தண்டனை வழங்க பூமிக்கு வருகிறார். அவரின் பெயர் கந்தன் என்பதால் அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று சந்தேகம் கொண்ட உயர்சாதியினர் அவரை முருகன் ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் கொண்ட கந்த பெருமான் உயர் சாதியினர் மீது எறிவதற்காக தனது ஆயுதமாகிய ‘வேல்’ ஜ உயர்த்தினார். அப்போது நாரதர் இடைமறித்து ‘இந்த ஆயுதத்தை மக்களிடம் கொடுங்கள்.அவர்கள் பாவிக்கட்டும்’ என்று கூறுகின்றார். இந்த மாவோயிச அரசியல் தத்துவத்துடன் அந் நாடகம் முடிவடைகின்றது.
புரட்சிகர கலை எப்படி புரட்சிகர இயக்கத்தை முன்தள்ளிவிடமுடியும் என்பதற்கு இது நல்லதோர் உதாரணமாகும். புரட்சிகர நடைமுறையின்றி புரட்சிகரக்கலை பிறக்காது என்பதையும் அது தெளிவாக்கிறது. நடைமுறைதான் பிரதானமா னது. ஆனால் புரட்சிகர நடைமுறையில் இருந்து தோன்றும் புரட்சிகரக் கலை புரட்சிகர இயக்கத்தை மேலும் முன்தள்ளி விட உதவுகின்றது. சூன்யத்தில் நாம் புரட்சிகரக் கலையை உருவாக்க முடியாது. புரட்சிகர இயக்கத்தின் அங்கமாக அது உருவாகின்றது
Sunday, October 07, 2007
சாத்திரியும்,அற்புதனும் அவிழ்க்கும் நரகல்கள்!
தமிழ் மணத்தில் இரயாகரன் பதிவுகள் தரும் புரிதலுக்கு மாதிரியாகச் சாத்திரி மற்றும் அற்புதன் பதிவுகளைச் சொல்லித்தாம் ஆக வேண்டும்.
ஒரு பொறுக்கி,அதுவும் புலியிசத்தின் அழிக்க முடியாத நரகல்தாம் இந்தச் சாத்திரி.வம்பும்,வடிகட்டிய முட்டாள்த் தனமும்,ஆணாதிகத் திமிரும் கொண்ட சாக்கடை மனிதனான சாத்திரி தமிழச்சியைத்"தம்பி"என்று விளிப்பது அவன் தரும்"தேசிய விடுதலையின்"புரிவுக்கு உதவும்.
புத்திசாலித் தனமாக இந்தச் சாக்கடையை அம்பலப்படுத்தி வரும் தமிழச்சியிடம் வேண்டிய சொல்லடியால்,அவரைத்"தம்பி"என்று இடறும் மாபியாத் தனத்துக்குத்தாம் இரயாகரன் பதிவெழுதியவர்.இது அற்புதன் என்ற மிகப் பெரும்"தேசிய விடுதலை"ப் பற்றாளருக்கும் பொருந்தும்.இவர்கள் செய்யும் கயமை நம் தேசத்தின் விடுதலையையே பாழாக்கும்.இதைத்தாம் மீளவும் இரயா சுட்டிக் காட்டுகிறார்.இங்கே,மிக விரைவாக இந்த கயவர்கள் அப்பலப்பட்டு நிற்பது காலத்தின் கோலமல்ல,மாறாக, இவர்களின் அரசியல் புரிதலினதும்,தேசியவிடுதலைப் போராட்ட முன்னெடுப்பினதும் செல் நெறி தந்த-இட்ட வரலாற்று நிகழ்வே இது.
சில மாதிருக்கு:
12:04:00 "தமிழச்சி said...
///சாத்திரி தமிழிச்சி நானும் உங்களைஎன்னவோ ஏதோ எண்டு நினைச்சன்ஆனால் நீங்கள் தெரிந்துததான் பிரான்சில் நடக்க இருக்கும் தலித் மகாநாட்டுக்கு விளம்பரம் போட்டு இருக்கிறீங்களா என்று சந்தேகமா இருக்கு இந்த மகாநாட்டுக்கு பின்னாலை ஒரு தேசிய இன விடுதலை போராட்டத்தின் கொச்சசை படுத்தல் இடம்பெற போகின்றது அந்த சதியை புரிந்து கொள்ளுங்கள்///
சாத்திரி உங்களுடைய நடத்தைகள் எனக்கு சந்தேகத்தை கொடுக்கிறது. நீங்கள் யாரால் ஏவி விடப்பட்டவர்! என் வலைப்பூவில் பூந்துக் கொண்டு சூனியக்காரியின் கையில் இருப்பதை போல் எதையோ வைத்துக் கொண்டு தேவையில்லாமல் லூசு மாதிரி உளறிக் கொண்டு அங்கங்கே என் கட்டுரைகளுக்கு போடும் பின்னூட்டங்களை பார்த்தால் கடுப்படிக்கிறது. வந்தமா, படிச்சமா, போனமான்னு இரு என் கதையை கேட்பது போன் நம்ப ர் கேட்பது இவையெல்லாம் உனக்கு தேவையில்லாதது. உன் வலைப்பூவில் படிக்கப் போனால் ஒன்றும் காணவில்லை. இங்கேயே சுத்திக் கொண்டிருப்பதை விட்டு விட்டு போய் உருப்படியாக எதையாவது எழுது. நீ பிரான்சில் இருந்தால் என்ன? சுடுகாட்டில் இருந்தால் எனக்கென்ன? சும்மா கலாக்கிற வேளையெல்லாம் என்கிட்ட வேனாம்.அடுத்த தடவை என் சொந்தக்கதையை கேட்ட செவுலு ****
10:39:00 "தமிழச்சி said...
///சாத்திரி a dit... தமிழிச்சி நானும் உங்களைஎன்னவோ ஏதோ எண்டு நினைச்சன்ஆனால் நீங்கள் தெரிந்துததான் பிரான்சில் நடக்க இருக்கும் தலித் மகாநாட்டுக்கு விளம்பரம் போட்டு இருக்கிறீங்களா என்று சந்தேகமா இருக்கு இந்த மகாநாட்டுக்கு பின்னாலை ஒரு தேசிய இன விடுதலை போராட்டத்தின் கொச்சசை படுத்தல் இடம்பெற போகின்றது அந்த சதியை புரிந்து கொள்ளுங்கள் ///
இங்க பாருங்க சாவித்திரி! அரசியலை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு சமூதாய நோக்கத்தோடு பிரச்சனைகளை பார்ப்போமே? போன் நம்பர் கேட்டிர்கள் பேசுவதற்கு. 3 நாட்களாக 24 மணிநேரத்தில் 20 மணிநேரம் போனிலேயே போய்விட்டது.அறிவுரைகள் வேண்டாம். உங்களுடைய கருத்துக்களையும் என்னிடம் திணிக்கக் கூடாது. இதற்கு ஒகே என்றால் உங்கள் போன் நம்பர் கொடுங்கள். பேசுகின்றேன
தோழர் தமிழச்சிக்கு,அண்மையில் உங்களுக்கு விடப்பட்ட அனாமதேய மிரட்டல் முதல், பதிவுலகில் டிபிசி ராமராஜனுடன் முறையிடும் படி எழுதப்பட்ட பதிவுகள் வரை உங்களைப் பிழையான வழியில் திசை திருப்புவதாகவே இருக்கிறது.இவற்றின் பின்னால் இயங்கும் அரசியற் பின் புலங்களை ஆராய்ந்து செயற்படும் வண்ணம் உங்களைக் கேட்டு கொள்கிறேன்.தமிழ் தேசியத்தைக் கூறு போடும் கைங்கரியமே இங்கே நடக்க உள்ளது.பிரதேச வாதம் மத வாதாம் சாதீயம் இவை எல்லாவற்றையும் கடந்ததே தமிழ்த் தேசிய உணர்வு , இதனைச் சிதைக்கும் எந்த நடவடிக்கையும் தேசிய விடுதலைப் போராட்டத்தை பாதிக்கும். புலத்தில் இருக்கும் தமிழர்களின் மூட நம்பிக்கைகள் சாதிய நம்பிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுவது என்பது வேறு, இவ்வாறான உள் நோக்கங்களுடன் பின் புலங்களுடன் செயற்படும் அமைப்புக்கள் நபர்கள் பற்றி போதிய தெளிவின்றிச் செயற்படுவது என்பது வேறு.இவ்வாறான சிதைவுகள் பல வடிவங்களில் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான உளவியற் செயற்பாடக புலத் தமிழர்களை நோக்கி நடாத்தப்படுகின்றது.இவை பற்றிப் போதிய புரிதல் இன்றி நீங்கள் செயற்படுவது கவலை தரும் விடயம், தீர விசாரித்துச் செயாலாற்றுங்கள்.
10:47:00 PM "அற்புதன் said...
//வணக்கம் தோழர்! தலித் மாநாடு விஷயமாக யாரும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. எனக்கு ஈழத்து தமிழ்மக்களுக்கு அதுவும் தலீத் மக்களுக்கு என்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொள்வதற்கு ஏன் தயங்க வேண்டும்?//
நீங்கள் தமிழ நாட்டில் நிலவும் சாதீயத்தையும் ஈழத்தில் நிலவும் சாதீயத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்.இந்த மா நாட்டின் நோக்கமும் அவ்வாறான ஒரு மயக்கத்தை ஏற்படுத்துவது தான்.ஈழத்தில் அடித்தட்டு மக்கள் தங்களை தலிதுக்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை.தமிழ்த் தேசிய விடுதலைப் போரானது அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்து ஓர் அணியில் நிறுத்தி உள்ளது.மட்டகளப்பான் என்று கருணா பேசிய பிரதேச வாதம் என்பது அவரின் சுய நலத்திற்கானது என்பது ஊர் அறிந்த உண்மை.அதற்காக கருணா மட்டகளப்பு மக்களுக்காகப் பேசினார் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்களாயின் உங்களுக்கு ஈழம் சம்பந்தமாக ஆளமான புரிதல் இல்லை என்று அர்த்தப்படும்.தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை யாழ் உயர் சாதியினரின் போராட்டம் என்று கொச்சைப்படுத்தி அதன் நியாயங்களை யதார்த்தை மறைத்து ஒன்று பட்ட மக்கள் எழுச்சியைச் சிதைப்பதே இதன் உள் நோக்கம்.இது சமூக நீதிக்கான மா நாடு அன்று ,அரசியல் உள் நோக்கதுடனான ஒரு வலை விரிப்பு.நாவலர் உருவாக்கிய குறுந் தேசிய வாதாமே யாழ் மைய வேளாளரின் தமிழ்த் தேசியமாக இருந்தது.அந்தக் காலம் இன்றில்லை.இன்றைய தேசியத் தலமை மிகத் தெளிவாக சாதிய மத பிரதேச வாத அடையாளங்க்களைத் துறந்த தமிழ் அடையாளத்தையே தமிழ் ஈழத்தில் கட்டி எழுப்பி உள்ளது.இம் மாநாட்டை நாடாத்துபவர்களின் பின்னணிகளைக் கவனியுங்கள்.இவர்கள் பாரிசில் ஏன் இவ்வாறான மா நாட்டை நாடாத்துகிறார்கள்? இவர்கள் ஈழத்தில் என்ன செய்கிறார்கள்?ஈழ விடுதலைப் போரைப் பொறுத்தவரை இவர்களின் நிலைப்பாடு என்ன?மா நாட்டின் விடயத் தலைப்புக்களைப் பாருங்கள்? இவை உங்களுக்கு அரசியல் அற்ற ஒரு சமூக மாநாடாகவா தெரிகிறது? அவசரப்பட்டு வாழ்த்துரை அறிவிக்க முதல் இவை பற்றி ஆராயுங்கள்.கொன்சம் பொறுத்திருங்கள் ,கருணா விவகாரம் போல் பூனைக் குட்டிகள் மெதுவாக வெளியே வரும் வரை.
11:26:00 PM "தமிழச்சி said...
தோழர் அற்புதன் சொல்வது உண்மையா? சம்பந்தப்பட்டவர்கள் பதில் தர இயலுமா? இவ்வலைப்பூவில் ஒரு நாளைக்கு 1000 பேர்களுக்கு குறையாமல் வருபவர்கள். ஒரு வேலை சம்பந்தப்பட்டவர்கள் பதில் தரவில்லை என்றால் நாங்கள் அனைவரும் தோழர் அற்புதன் சொல்வதை உண்மையென எண்ண வேண்டியிருக்கும்.
12:03:00 AM "Sri Rangan said...
தமிழச்சி,வணக்கம்!
தாங்கள் பிரசுரித்த "தலித் மகாநாடு"அறிவுப்புக்கு நன்றி.
கூடவே,சில கருத்துக்களை நான் முன் வைக்கின்ற தேவை எனக்குண்டு.ஏனெனில,; உங்களது நிலைகண்டு,அதை மக்கள் மத்தியில் பரவலாக்கும் முகமாக"ரீ.பீ.சீ.வானொலிக்குத் தொடர்பு கொள்ளலாமெனச் சொன்னவன் நான்.இதுவரை இயக்க விசுவாசிகள்தாம் உங்களோடு போன் கதைத்திருக்கினம்.அரசியல் உள் நோக்கம் நிறைந்திருப்பின் "ரீ.பீ.சீ"வானொலி அதிபர்(அவரது அரசியலை நாம் அம்பலப்படுத்தியிருக்கிறோம்.அவர் முன்வைக்கும் அரசியல் மக்களுக்கு விரோதமானதென்பதில் இருவேறு கருத்தில்லையெம்மிடம்) உங்களோடு போன் போட்டுக் கதைக்க முந்தியடித்திருப்பார்.அப்படி ஏதாவது வந்ததா?இல்லையே!இப்போது சொல்லுங்கள்,யாருக்கு உள் நோக்கமென்று!
பொதுவாகத் தமிழச்சிக்கு நடந்த வலிகளை எவனும் உணராது அரசியல் கற்பிக்கிறாங்கள்.பேமானிகள்(என்னையும் சேர்த்துத்தாம்!):-((((((
//அண்மையில் உங்களுக்கு விடப்பட்ட அனாமதேய மிரட்டல் முதல், பதிவுலகில் டிபிசி ராமராஜனுடன் முறையிடும் படி எழுதப்பட்ட பதிவுகள் வரை உங்களைப் பிழையான வழியில் திசை திருப்புவதாகவே இருக்கிறது.இவற்றின் பின்னால் இயங்கும் அரசியற் பின் புலங்களை ஆராய்ந்து செயற்படும் வண்ணம் உங்களைக் கேட்டு கொள்கிறேன்.//
அற்புதன் இப்பதிவின் மேலுள்ள பின்னூட்டுக்களைப் படித்துப்பாரும் முதலில்!
இதுள் யாரூ,யாருக்கு அரசியல்பின் புலன்களுக்காகப் போன் போட்டுப் பதிவு போட்டுத் தமிழச்சியைத் துரத்துவதென்று விளங்கும்.எனக்கு இது குறித்தும் பற்பல கட்டுரைகள் எழுதுவதற்குத் தோதாகத்"தேசிய விடுதலை"குத்தகைக் காரர்கள் பற்பல முறைகளில் தம்மை அம்பலப்படுத்தி-அம்பலப்பட்டு நிற்பதையொட்டிப் பெரு மகிழ்வு.ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்குத் தமிழச்சியின் பதிவுகளில் பலர் உள்ளனர்.இதற்காக எனது நன்றி தமிழச்சிக்கு உண்டு.ஏனெனில், அவர் தன்வரையில் மிக நேர்மையாகவும்-வெளிப்படையாகவும் இருக்கிறார்.
இதுதாம் தமிழச்சியின் பலமும்,பலவீனமும்.இந் நிலை அவரைப் பின்தொடரும் தொலைபேசியழைப்புக் காரர்களால் ஒரு நாளைக்கு அவரது குரலை அமுக்கக் கூடிய நிலை உருவாகும்.எனினும்,அவர் தன்னளவில் நேர்மையாய் இருப்பதால்,அவருக்கான இருத்தலில் பங்கம் நேரிடாதென்றே எண்ணுகிறேன்.
அடுத்து"ரீ.பீ.சீ."வானொலியை விட்டால் இத்தகைய தனிபட்டவர் பிரச்சனைகளை என்ன ஐ.பீ.சீ.வானொலியா அம்பலப்படுத்தும்?அதுவொரு அரச வானொலியாகத் தன்னைமட்டுப்படுத்தி அமைப்புக்கு உட்பட்ட செய்தியைத் தரும்போது,தமிழச்சி போன்ற தனிநபருக்குத் தலை சாய்க்குமோ?ஏனெனில்,எமக்கு ஐ.பீ.சீ.வானொலியோடு தாசீஸ் காலத்திலிருந்து தொடர்புண்டு.அக்காலத்தில் நானும் நிறைய விசுயங்களை அவ் வானொலிக்கு எடுத்துச் சென்றவன்.இப்போதைய நிலை எதுவென்ற நாம் அறிவோம்.ரீ.பீ.சீ.வானொலியென்பதும்,அதன் அரசியல் நோக்கங்களும் எவ்வளவு மக்கள் விரோதமோ அவ்வளவும் உங்கள் அரசியலுகஇகும் உண்டு.இதைப் போட்டுடைக்கும் சாஸ்திரிகளும்,அற்புதன்களும் அரசியலில் எவ்வளவு தூரம்...சே,விட்டுத் துலைவம்...
கூடவொரு சின்ன இடையீடு:
ரீ.பீ.சீ. வானொலியோடு புலம் பெயர்ந்த நாடுகளில் இப்போது கணிசமானவர்கள் இணைந்து கருத்திடுகிறார்கள்,விரும்பிய பாடல்கள் கேட்கிறார்கள்.ஆக, உங்கள் பார்வையில் இவர்கள் எல்லோரும் தேசிய விடுதலைக்கு எதிரானவர்கள்?அப்போது எங்கேயோ தவறுள்ளது.பார்த்துத் திருத்துங்கோ.ஐயோ பாவம் அற்புதன்.இவ்வளவு புத்திசாலியாக இருக்கிறீங்குள்.போங்கள் தம்பி,பின்னீட்டிங்க!
இப்படிக்குபுலி-இயக்க எதிர்பர்பாளரும்,அரசியல் உள்நோக்கம் மற்றும் வெளி நோக்கம் நிரம்பி வழியும்
ப.வி.ஸ்ரீரங்கன
12:04:00 "தமிழச்சி said...
///சாத்திரி தமிழிச்சி நானும் உங்களைஎன்னவோ ஏதோ எண்டு நினைச்சன்ஆனால் நீங்கள் தெரிந்துததான் பிரான்சில் நடக்க இருக்கும் தலித் மகாநாட்டுக்கு விளம்பரம் போட்டு இருக்கிறீங்களா என்று சந்தேகமா இருக்கு இந்த மகாநாட்டுக்கு பின்னாலை ஒரு தேசிய இன விடுதலை போராட்டத்தின் கொச்சசை படுத்தல் இடம்பெற போகின்றது அந்த சதியை புரிந்து கொள்ளுங்கள்///
சாத்திரி உங்களுடைய நடத்தைகள் எனக்கு சந்தேகத்தை கொடுக்கிறது. நீங்கள் யாரால் ஏவி விடப்பட்டவர்! என் வலைப்பூவில் பூந்துக் கொண்டு சூனியக்காரியின் கையில் இருப்பதை போல் எதையோ வைத்துக் கொண்டு தேவையில்லாமல் லூசு மாதிரி உளறிக் கொண்டு அங்கங்கே என் கட்டுரைகளுக்கு போடும் பின்னூட்டங்களை பார்த்தால் கடுப்படிக்கிறது. வந்தமா, படிச்சமா, போனமான்னு இரு என் கதையை கேட்பது போன் நம்ப ர் கேட்பது இவையெல்லாம் உனக்கு தேவையில்லாதது. உன் வலைப்பூவில் படிக்கப் போனால் ஒன்றும் காணவில்லை. இங்கேயே சுத்திக் கொண்டிருப்பதை விட்டு விட்டு போய் உருப்படியாக எதையாவது எழுது. நீ பிரான்சில் இருந்தால் என்ன? சுடுகாட்டில் இருந்தால் எனக்கென்ன? சும்மா கலாக்கிற வேளையெல்லாம் என்கிட்ட வேனாம்.அடுத்த தடவை என் சொந்தக்கதையை கேட்ட செவுலு ****
12:09:00 AM
Anonymous said...
தோழர் தமிழச்சி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் தேவையில்லாமல் ஈழத்து பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். விளம்பர துண்டறிக்கையை அகற்றி விடுவதே உத்தமம். ஏற்கனவே காலிப் பொடியன்களின் பிரச்சனை இருக்கும் போது இது வேறா?
12:18:00 AM "Sri Rangan said...
//சாத்திரி உங்களுடைய நடத்தைகள் எனக்கு சந்தேகத்தை கொடுக்கிறது. நீங்கள் யாரால் ஏவி விடப்பட்டவர்! என் வலைப்பூவில் பூந்துக் கொண்டு சூனியக்காரியின் கையில் இருப்பதை போல் எதையோ வைத்துக் கொண்டு தேவையில்லாமல் லூசு மாதிரி உளறிக் கொண்டு அங்கங்கே என் கட்டுரைகளுக்கு போடும் பின்னூட்டங்களை பார்த்தால் கடுப்படிக்கிறது. வந்தமா, படிச்சமா, போனமான்னு இரு என் கதையை கேட்பது போன் நம்ப ர் கேட்பது இவையெல்லாம் உனக்கு தேவையில்லாதது. உன் வலைப்பூவில் படிக்கப் போனால் ஒன்றும் காணவில்லை. இங்கேயே சுத்திக் கொண்டிருப்பதை விட்டு விட்டு போய் உருப்படியாக எதையாவது எழுது. நீ பிரான்சில் இருந்தால் என்ன? சுடுகாட்டில் இருந்தால் எனக்கென்ன? சும்மா கலாக்கிற வேளையெல்லாம் என்கிட்ட வேனாம்.அடுத்த தடவை என் சொந்தக்கதையை கேட்ட செவுலு ****//
இது தேவையா சாத்திரி?உம்முடைய அரசியலின் நாணயம் அம்பலமாகிறது.
அற்புதன் நீர் மட்டும் ஈழத்துத் தமிழினிவிடுதலையின் வேரில்லை.இங்கே நமது சமூகத்துள் சாதிரீதியாகத் தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமைகளை-சமுதாய முன்னேற்றத்தை,எந்த வெள்ளாள நாய்கள் அடுத்துக்கெடுத்தார்களென்று எனக்குத் தெரியும்!ஏனெனில், நானும் இந்த வேளாளச் சாதியில் விபத்தாய்ப் பிறந்ததால் எல்லாம் தெரியும்.
இவ்வளவு நாளாக நான் தலித்தாகவே வாழ்கிற உணர்விலுள்ளேள்.என்னிடம் தேவதாசன் கேட்ட முதற்கேள்வி"நீங்கள் தலித்தா?"இதற்கு இல்லை என்றால் சாதி வெறியனாவேன்-ஓம் என்றால் பொய்யனாவேன்.இதன் பொருட்டு இப்போது சொல்வேன் நான் ஒடுக்கும் வெள்ளாளச் சாதிக்குள் விபத்தாய் பிறந்தேன்,வளரும்போது தாழ்த்தப்பட்டவர்களை நமது பெற்றோர்கள் அனைத்து வழியிலும் அடக்கியொடுக்கியதைக் கண்ணுற்று வளர்ந்தவன் நான்.
நீங்கள் ப+ச்சுற்றாது வேலைகளைப் பாருங்கள்.தலித்துக்களுக்குத் தெரியும் தமது மாநாடு"தேசிய விடுதலைக்கு"எதிரானதா இல்லையா என்று.
ஏனெனில்,இன்று வரையும் சாதித் தடிப்போடு காரியமாற்றும் புலம் பெயர் வேளாளர்கள் இப்போது ஒரே குடையுள் வரட்டாம்.இதைவிட வேறொரு வம்பு உண்டா?
அவர்களின் மகா நாட்டை இங்ஙனம் வரையறுக்கும்(தேசியவிடுதலைக்கு எதிராக)முடிவு எங்கிருந்தெழுகிறது?-உயர் சாதியத்(இங்கே அற்புதனையோ அல்லது சாத்திரியையோ வேளாளனாகக் கருதாமல்,அவர்களிடமிருக்கும் ஆதிக்கச் சாதிய எண்ணக் கருவை...) திமிரில் இருந்துதானே?
பட்டவர்களுக்குத்தாம் தெரியும் வலி- இப்போது தமிழச்சியைப் போல்.
Sunday, October 07, 2007
தமிழிச்சி தம்பிக்கு
சாசலில் வாழும்அன்பான தமிழிச்சி தம்பிக்கு ஒரு வேண்டுகோள் தம்பி உங்களள் ஆரம்பத்தை வலைப்பூவில் வடிவாகதான் கொண்டுவநந்தீர்கள் ஆனால் கடைசியிலைபாரிஸ்பிள்ளையார் தேரண்டு துண்டுபிரசுரம் குடுத்தன் புலியாதரவாளர்கள் மிரட்டல்தலித் மகா நாடு ஏன் ஒரு படத்தை வேறைபல கோணத்திலை விலாசமா போட்டு சே எதுக்கு இந்த பிழைப்பு
Publié par சாத்திரி à 2:11 PM
அரசியல்சாரா "என்னை" அரசியலாக்காதீர்கள்!
"என்னை" அரசியலாக்காதீர்கள்!
"அரசியல் சாராததென்பதும் அரசியல் சார்ந்ததே!"
அரசியலின்றி அணுவும் இல்லை
அதுதரும் ஒளியுமில்லை-அழிவுமில்லை
எப்பெப்ப ஏது எழுதிடினும் இருப்பது அரசியல்தான்
நான் என்பதன் திரட்சியே
உடலின் அரசியலையும்
உளத்தின் அதுசார்ந்த கருவுருவையும்
புற நிலையின் தன்மையே
"நான்"என்பதையுஞ் சொல்லி
எனதென்பதையும் காட்டி
அதுதாண்டிச் செயலையும் தூண்டி
"எப்படியும்"எழுதத் தூண்டுவதால்
அங்கேயும்"அப்பன் அரசியல்"
அமர்ந்திருந்து அழுத்தி
ஐந்து ருபாய்க்கு அப்பம் வேண்டும்போதும்
அரசியலாய் வந்துவிடுகிறது!
பெரியாரியமென்பது
அரசியலற்ற நிலவினது
(ஓ... நிலவின் நிலத்தைக்கூட விற்றிருக்கிறார்கள்,
அதையும் அமெரிக்க "அப்பன்கள்" வேண்டியுமிருக்கு...) நீட்சியல்ல
நீட்டிமுடக்கும் ஒவ்வொரு சொல்லும்
அரசியலின் அடுத்த நகர்வைச் சொல்பவை
"பெரியார்"என்பதே அரசியல்தான்
அங்கேயும் அடுக்கப்பட்ட
ஒவ்வொரு கல்லும் அரசியலை உரைப்பதற்கே
விழிப்புணர்வென்பதன்
உட்புறஞ்செரியும் உருவம் என்ன?
அதைச் சொல்லும் அரசியலும்
நிலவும் அரசியலின் அடுக்குகளுக்கு ஆராவாரம்
அள்ளித் தெளித்து
கக்கத்தில் வைக்கும்"அரசியல் சாரச் செயற்பாடு" என்றும்
அடுத்தவருக்குச் சொல்லும் அவசரத்தில்
"பெரியாரியம்"அரசியலின்றி இருந்தால்
அடுப்பு ஊதவும் அருகதையின்றி
அழிந்தொழிந்து அக்கிரகாரத்து
அடுக்களையுள் அள்ளிய சருகாய் கிடந்திருக்கும்!
அறிக!
அரசியலறிவற்று
அரசியல் பேசும்
அன்புநிறை அகப் புரட்சியார்களே-
பெரியாரிய விழிப்புணர்வுப் விழுப் புண் வீரர்களே!!
அரசியலுக்கு
அடித்தளம் பொருள்
அது தரும் வறுமைக்கு
சட்டம் சொல்லுஞ் தனியுடமை
அப்பவும் வரும்
அடக்குவதற்காய் ஆயிரம் படை மதமென்றும்
மண்ணென்றும் மோட்ஷமென்றும்
இப்பவும் சொல்வோம்
"அரசியலற்ற-எந்த அரசிலுமற்றென்னை
உங்கள் அரசிலுக்குள் தள்ளீ
அடக்கப் பார்க்காதீர்கள்"
"பெரியார்" எவரது என்போம்?
அரசியல் அற்றிருந்தால்
மார்க்ஸ்-காந்தி மற்றும் பல புள்ளிகளும்
பாருக்குள் பண்டியாய் இருந்திருப்பர்
அந்த அரசியல் சாராதிருந்தால்!!
பகக்தில் பாம்பு வருங்கால்
படபடக்கும் உணர்வுக்குள்ளும்
பொருள் சார்ந்த எண்ணம் கண்டீர்!
போரிடும் தரணமே
காரணத்துக் காரியத்துக்கும்
முடிச்சிடும் முன்னைய புரிவில்
மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே!
உங்களைச் சொல்லி"அரசியல்"செய்யும் அரசியலும்
அரசியலில்லை அரசியல் இல்லை(!!!???)
அப்போதெதற்கு நான்
வார்த்தைகளை அடுக்கி
வம்பு பேசுகிறேன்?
அரசியல் சாரா "என்னை"
அரசியலாக்க "ஒரு கூட்டமே" அலைகிறது
அது ஒதுங்குக ஓரமாய் இப்போது
என் "வாடகை" வீட்டுக்கான நிலவரியை கட்டுவதற்கு
நான்
பேரூந்துக்கு "ரிக்கற்" எடுக்கக் காசு இல்லை!!
ப.வி.ஸ்ரீரங்கன்
07.10.2007
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின்...