Sunday, June 18, 2006

மீளவும் யுத்தம்!

மீளவும் யுத்தம்!


லங்கையில் மீளவும் போர்: சிங்களத் தேச ஒருமைப்பாட்டுக் கூச்சலோடு- ஈழத்தின் கனவோடு வெடித்துவிட்டது!

ஸ்ரீலங்கா அரசும்,புலிகளும் கடற்சமரில் பாரிய இழப்பில்...

இன்றைய சூழலில் போர் எதற்கு?

இலங்கை அரசால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்களென உண்மையிலேயே புலிகள் நம்பியிருந்தால்-மக்களை,பிரச்சனைகளை அரசியல்ரீதியில் கையாளும்படி ஏன் நெறிப்படுத்தவில்லை?போருக்கு முன் புலி இயக்கம்- (இத்தகையவொரு) விடுதலையமைப்புச் செய்வது அவசியமில்லையா?

இத்துடன்-நியாயப்பாடுகளைத் தெளிவாக்கிப் போரை மிகவும் பின் தள்ளியிருக்க வேண்டும்.இது மிகவும் அவசியம்!

ஆனால், எதுவித வாதப்பிரதிவாதங்களே அல்லது எதற்காக-என்னதான் சமாதானப் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின்பான பேச்சு வார்த்தைகளில் நேர்ந்தன என்பதைக் கூட மக்களிடம் எடுத்துச் செல்லாமல்,போரைத் திணிப்பது இரு தரப்புக்கும் நியாயமல்ல.

இன்றுவரை மக்கள் அனுபவித்த-அனுபவிக்கும் துன்பம் எல்லையற்ற வண்ணம் அதிகரித்தபோதும் தமிழ்-சிங்கள சமுதாயங்களில் ஜனநாயக விரோத ஆதிக்க-அதிகாரத்துவ அரசியல் மீளவும் உச்சத்தில் பறக்கிறது.

சுனாமி அழிவுக்குப் பின் தமிழ்ப் பகுதிகளில் ஒருவித ஏமாற்றமும்,வாழும் ஆசையும்-துய்ப்பின் துடிப்பும் ஒருங்கே குடிகொண்டிருக்கிறது.ஆனால் சிங்கள அரசோ வான்வழித் தாக்குதல்மூலம் இவற்றையெல்லாம் பொருட் படுத்தாது பழைய பாணியில் தாக்க முனைந்துவிட்டது!சுனாமிக்குப் பின்னும் இதே பழைய கதை...என்னவொரு சிங்கள அரசு-என்னவொரு விடுதலை இயக்கம்!!

உணர்ச்சி மிக்க இனவாதச் சவடால்கள் மக்களின் மனங்களை அள்ளிக் கொள்ளும்போது மரபுவழி யுத்தம் மீளவும் வலுப்பெறத் தொடங்கிவிடும்.

இந் நிலையிலும் இலங்கை அரசும் புலிகளும் மற்றும் சிறு குழுக்களும் தமக்கு எதிரானோரைத் தட்டுவதிலும்,துரோகியெனச் சாட்டுவதிலும் மும்மரமாகச் செயலாற்றியபடி.மறுபுறமோ பின் கதவால் இரகசியப் பேரங்கள்-ஒப்பந்தங்கள்,ஆலோசனைகள் மேசைமீது வந்து விழுந்தபடி வீச்சாகக் காரியமாகிறது.

மக்களோ தினமும் மரணித்தபடி... பசித்திருக்கும் இந்த மக்களின் "எதிர்காலக்கண்" முன்னே குருதி ஆறாக ஓடுகிறது!

இதுவரை தொடர்ந்த-தொடரும் போராட்ட வாரலாற்றை ஆராய்ந்தால் புலிகளின் தடுமாற்றமும்,இரட்டைப் போக்கும் நிறைந்த போராட்ட வாழ்வை நாம் எதிர்கொள்ள முடியும்.இதன் தொடர்ச்சி மிகவும் பாரிய மனித அழிவைச் செய்துவிடப் போகிறது!தொடங்கப்பட்ட கடற் சமர் ஒரு ஒத்திகை!இதில் புலிகளின் பல கடற்கலங்கள் இலங்கைக் கடற்படையால் அழிக்கப்பட்டும்,அதேயளவு உயிர்,ஆயுதத் தளபாடங்கள் இலங்கைக் கற்படைக்கும் புலிகளால் நாசமாகியுள்ளது.

கொடுமையான பேரினவாதச் சிங்கள அரசால்,புலிகளால் இவைகளின்; நடவடிக்கையால் போரை எதிர்கொள்ளும் அப்பாவித் தமிழ்-சிங்கள மற்றும் இஸ்லாமிய மக்களின் நிலைமைகள் மிகவும் குழப்பகரமானதாகிவிட்டது.குறுகிய நோக்கம் கொண்ட சிங்கள ஆளும் வர்க்கம் போரினால் தமிழ்பேசும் மக்களின் இறைமைகளைக் கூண்டோடு புதைப்பதற்கான பாரிய பொறியை ஏலவே வைத்திருந்தது.அதன் இந்தத் திட்டம் பலிப்பதற்காக உலகத்தைத் தனக்கிசைவாகவும் கரம் கோர்த்து வைத்திருப்தால் இம்முறை தமிழ் பேசும் மக்களின் அழிவுகள் வெறும் உள் நாட்டு ஊடகங்களின் கவனத்தையே பெறாது தட்டிக்கழிக்கப் படுவது நிசம்.

இத்தமாதிரியானவொரு சூழலில் போர் சிங்கள அரசுக்கு மிக இலாபகராமாக இருக்கும்.புலிகள் மீள முடியாத போரில் தமது இருப்பை உறுதிப் படுத்தத்தான் முடியுமேயொழியத் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாது.

உண்மையான பேச்சு வார்த்தைய+டாக ஒரு அரசியல் இணக்கப்பாட்டை எட்ட முடியாத சிங்கள அரசு-புலிகள் இயக்க இயலாமை வெறும் அரசியல் சட்ட-ஆளும் வர்க்கப் பிரச்சனைகளல்ல.மாறாக இந்திய-அமெரிக்க,ஐரோப்பிய நலன்களோடு சம்பந்தப்பட்டு எந்த அரசியல் இணக்கப் பாட்டையும் எய்திட முடியாதுள்ளது.இது ஒவ்வொரு பொழுதும் புலிகளின் இருப்பைக் குறிவைத்துத் திட்டமிட்ட தாழ் நிலை ஆயுத-அரசியல் போரை செய்து வந்துள்ளது.இதனால் புலிகளை அரசியல்-ஆயுதரீதியில் வலுவிழக்க வைக்கும் உலக நாடுகளின் தடைகள் வேண்டுமென்றில்லாது- காரணத்தோடுதான் செய்யப்பட்டதென்பதை நாம் இலகுவாகக் காணலாம்.

ஸ்ரீலங்கா அரசின் பிற்போக்குவாதக் கொடூரங்களும்,தமிழர்-சிங்களவர்-முஸ்லீம்கள் மீதான ஒடுக்கு முறைகளும் திடமானவொரு முடிவுக்கு வந்து, இல்லாதாகவேண்டும்.அதேபோன்றே புலிகளினதும் மற்ற(புலிகளின் மொழியில்:ஒட்டுக் குழுக்கள்) ஆயுதக் குழுக்களினதும் மக்கள்விரோதப் பயங்கரவாதமும் முடிவுக்கு வந்தாகவேண்டும்.இதற்கேற்ற அரசியலானது யுத்தத்தில் நிலை பெறமுடியாது.யுத்தம் எப்பவும் மக்களால் முன்னெடுக்கப்பட்டு, மக்களிடம் அதிகாரத்தைக் குவிப்பதற்கானவொரு சூழலில்தான் வெற்றியை உறுதி செய்யும்.இதை புலிகளின் போராட்ட முறையினால்-அமைப்பு அதிகாரத்தால் நிறைவேற்ற முடிவதில்லை.

அல்லைப்பிட்டி,வங்காலை,கெப்பித்தக் கொலாவப் படுகொலைகள் இந்த அரசியலின் மையப்பட்ட இலாபங்களை(பாராளுமன்ற ஆட்சி நெருக்கடி,புலி இருப்பு நெருக்கடி,நாட்டின் வறுமைச் சுமை,பொருளாதார நெருக்கடி) நோக்கிய விய+கங்களின் வெளிப்பாடே!இந்த விய+கமானது யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதை இந்தக் கடற்சமரும்,சிங்கள அரசின் வான்வழி விமானத் தாக்குதலும் நிரூபிக்கிறது.

ஆரோக்கியமான-புரட்சிகரமான சமுதாயத்தை இலங்கையில் கட்டியெழுப்புவதையே மேன்மையான நோக்கமாகக் கொண்டு,மக்கள் திரள் எழிச்சியை-இனங்களுக்கிடையிலான தோழமையுடன் கட்டி வழி நடாத்திச் சிங்களச் சியோனிசத்தை வீழ்த்வேண்டிய வரலாற்றுத் தேவையை இந்த மக்களினங்கள் தவறவிடும் துர்ப்பாக்கிய நிலையையும்,பாரிய மனித அவலங்களையும் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுத்தி விடுகிறது.

எவரால் முடியும் யுத்தத்தை நிறுத்தி,மக்கள் அழிவைத் தடுக்க?

மீளவும் யுத்தம் :-((((((

ப.வி.ஸ்ரீரங்கன்
18.06.2006

7 comments:

Anonymous said...

இதுவரை கால விட்டுக்கொடுப்புக்கள், விளக்கங்கள் எவற்றையும் அறியாது நித்திரையில் இருந்து எழுந்தவன் கட்டுரை இது.

Anonymous said...

இவ்வளவு காலமும் சிந்திய இரத்தம் போதாமையால் தொடர்ந்து இரத்த தாகம் எடுக்கின்றனர் தமிழ் குறுந்திதேசியவாதமும் பெருந்தேசிய சிங்களதேசியவாமும்.
பழிக்குப் பழி இரத்துக்கு இரத்தம் என்று இரு தேசியவாதம் பேசும் பாசீசச் சக்திகளும் மக்களை ஒற்றுமையாக வாழாமல் தொடர்ந்தும் இனத்துவ பேதத்தினை ஆழப்படுத்தி தொடர்ந்து ம் மக்களிடத்தில் சதிராட்டத்திற்கு தயாராக இருக்கின்றனர்.

தாங்கள் குறுப்பிடுவது போன்று அரசியலை முன்வைத்து பேச்வார்த்தை நடைபெற்றதாக இல்லை. மாறாக சில தன்னலம் சார்ந்த நிலைபாடு மக்கள் விரோத கொண்ட கோரிக்கைகளே இன்றைய பேச்சுவார்த்தைக்கு இடைநிறுத்தத்திற்கு காரணமாகும்.

இதிலும் குறிப்பாக பேரலைத் தாக்கத்தின் பின்னான மக்களின் உளவியலை தமக்குச் சாதகமாக தகர்த்ததில் புலிகள் வெற்றி கொண்டுள்ளனர்.
பேரலையின் பின்னான நாட்களில் இழப்புக்களை தத்தம் இழப்பாக கொண்டு தன்னியல்பான பல செயற்பாடுகளை பல்லினங்களும் மேற்கொண்டு இருந்தனர்.
தம்மாலான உதவிகள் துயரில் பங்கு கொள்ளல் அனுதாபம் துயரத்தில பகையை மறப்பது போன்ற நிலையை மக்கள் கொண்டிருந்'தனர். இதனை சிதைத்ததில் புலிகளின் பங்கு முக்கியமானதாகும்.
பேரலை நடந்த சில நாட்களிலேயே இனத்துவ பேதத்தை தொடர்ச்சியாக பேணவேண்டும் என்பதில் புலிகள் தொடர்ச்சியாக தமது செயற்பாடுகளை செய்திருந்தனர்.
1. புலம்பெயர் நாடுகளில் இன்த்துவ பேதத்தை தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கு அவர்களின் ஊடகங்கள் ஊடாக அரசு பாரபட்சமாக நடப்பாதக இனவாத்ததை ஊட்டிக் கொண்டே வந்திருந்தனர்.
2. தளத்தில் இனத்துவ ஒற்றுமை ஏற்படாதவாறு தமது மேலான்மையை காட்டினர்.
இதில் தொடர்ச்சியாக படுகொலைகளும் இரத்ததங்களும் சாட்சியாக உருப்பெற்று மக்கள் தம்மிடையே உறவை சுருக்கிக் கொண்ட உளவியல் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டது. அதாவது புலிகள் மக்களை நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்ற அவர்களின் அரசியல் யுத்த தந்திரோபாயத்தின் அடிப்படையில் செயற்பட்டனர்> இதில் வெற்றியும் கண்டனர்.
அதாவது யுத்த காலச் சிந்தனை வட்டத்தை தொடர்ச்சியாக பேணுவதில் புலிகள் இரத்தத்தின் மூலம் வெற்றி கண்டனர்./ இதற்காக கொடுக்கப்பட்ட விலையோ அதிகம் தான் மனித வளம் என்பது கூட ஒரு தேசியத்தின் சொத்துக்கள் தான். இந்த சொத்துக்களை வளத்தை தொடர்சியாக வளர்ச்சியற்ற சமூகமாக மாற்றி விட்டனர்.
நிரந்தர பிச்சைக் காரர்களாவும்> சிறு வயது உழைப்பாளிகளாகவும் > தாழ்ந்த பொருளாதராத்தை உடைய மக்கள் பிரிவாக உயர் வர்க்கத்திடம் தமது உழைப்பை விற்று வாழும் வறிய வர்க்கமாக குடும்பத் தலைவர்களை அழித்தத் மூலம் தமிழ் தேசம் எங்கும் இந்நிலையை உருவாக்கி விட்டிருந்தனர்.

இன்றைய ரசிகர்கள் இவ்வாறு தமிழ் தேசியத்தின் உண்மையான வளங்கள் இவ்வாறு சிதைபட தேசியத் தலைவர்களின் வாசிசுகள் வெளிநாடுகளில் வசதியாக வாழ்வதை கேள்வி கேட்கும் சுயபுத்தியை இவ்ரசிகர்கள் கொண்டிருக்க வில்லை.
ஆனால் வெறும் குதர்க்கத் தனமாகவும்> தமது வாரிசுகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டு அதேவேளை இங்கிருக்கும் ரசிகர்கள் தம்மை நிலைநிறுத்திக் கொண்டு இடம்பெயர்ந்த மலையத் தமிழர்களை படையணியில் சேர்த்து தற்கொடையாளிகள் என்று அவர்களை பிரகடனப்படுத்தி பிணங்களின் மேல் தமது சுயநலத்தை பேணிக் கொண்டிருக்கின்றனர்.
Velan

தமிழரங்கம் said...

'ரி.பி.சி. வானோயின் அவசியம் இன்று உள்ளதாக கருதுகிறீர்களா?
நிதர்சத்தையும் தேனீயையும் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா?
ஐ.பி.சியையும், ரிபிசியையுயம் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா?"


பி.இரயாகரன்
18.06.2006

இது எம்மிடம் எமது இணையத்தின் ஊடாக கேட்கப்பட்ட கேள்வி. அதில் ஒரு ஈமெயில் தந்த போது, அவர்களுகான பதில் திரும்பிவிட்டது. இதே கேள்வியை சத்தியக்கடாதிசியலும் பதிவிடப்பட்டுள்ளது.

முழுமையான கேள்வி
'இரயாகரன், சோபசக்தி, மற்றும் சிறீரங்கனுக்கு
உங்களிடம் ஒரே கேள்வி சுற்றிவளைக்காது பதில்தரவும். ரி.பி.சி. வானோயின் அவசியம் இன்று உள்ளதாக கருதுகிறீர்களா? (பதில் விளக்த்திற்காக மேலும் சில துணைக்கேள்விகள்.
நிதர்சனத்தையும் தேனீயையும் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா? இலலையென்றால் வேறுபாட்டை விளக்குக. ஐ.பி.சியையும், ரிபிசியையுயம் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா? இல்லையென்றால் வேறுபாட்டை விளக்குக. (சோபா சக்திக்கு, பதில் தராவிட்டால் பரவாயில்லை. ஆனால் தயவுசெய்து நக்கல் நளினங்களைத் தவிர்க்கவும்)"

1.உங்கள் ஆரோக்கியமான அவசியமான கேள்விக்கு நாங்களும் கடமைப்பட்டுள்ளோம்.
2.நாம் சுற்றி வளைத்து சமாளித்து பதிலளிப்பது கிடையாது.
3.சோபாசக்தியின் நக்கல் நளினங்கள் அரசியல் ரீதியானவை. அவரின் கருத்தின் ஆழம் மேலும் அரசியல் செறிவுடன் வளரும் போது, இந்த நக்கல் நளினங்கள் கருத்தை மேலும் வளப்படுத்தும். அதை அவர் செய்வார் என்று நம்புகின்றோம்.

இனி உள்கள் கேள்விக்கு வருவோம்.

'ரி.பி.சி. வானோயின் அவசியம் இன்று உள்ளதாக கருதுகிறீர்களா?
நிதர்சத்தையும் தேனீயையும் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா?
ஐ.பி.சியையும், ரிபிசியையுயம் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா?"

இந்த கேள்வியை எம்மை நோக்கி கேட்க முன்னம், மக்கள் நலன் என இவர்கள் எதை முன்னெடுக்கின்றனர் என்று நீங்களே உங்களிடம் கேட்டு பார்த்திருக்கலாம்.

ஒன்றை நாம் தெளிவுபடுத்திக் கொண்டு பதில் தருவது அவசியம். 'இல்லையென்றால் வேறுபாட்டை விளக்குக" என்று கூறுவதை ஒரு பக்கத்துக்கு மட்டும் கேட்பதை தாண்டியதே எமது பதில்.

மக்கள் நலனை ஒழித்துக்கட்டுவதில் இரண்டு ஒன்று தான். ஆனால் வேறுபாடு அவர்கள் சொல்லிகின்ற உள்ளடகத்தில் உண்டு. அவர்கள் கையில் எடுத்துள்ள தேசியம், ஜனநாயகம் இரண்டிலும், நேர்மையாக மக்களுக்காக செயல்படுவதில்லை. இரண்டையும் முரணாக நிறுத்தி வைத்துள்ள இவர்கள், படுபிற்போக்கு வாதிகள். இவை இரண்டையும் ஒன்றில் இருந்த ஒன்றை பிரிக்கவே முடியாது. உண்மையில் மக்களை எமாற்றி, அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்.

மக்கள் நலனைக் கடந்த எதையும் நாங்கள் ஆதாரிப்பதில்லை. மக்களை நலனை முன்னிறுத்தாத எதையும் நாம் ஆதாரிக்க முடியாது. இதை அவர்கள் எதிர்தரப்பில் நின்று சொன்னாலும், இந்த உண்மையை நாம் தெளிவாக கொண்டு வருகின்றோம்;. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை உண்மையாக பிரதிநித்துவம் செய்யாத அனைத்தும் படுபிற்போகனவை, எதிர் புரட்சிகரமானவை. அதில் ஒன்றை முன்னிறுத்தி மற்றொன்றை பின்னால் நிறுத்துவதில்லை. இது பொதுவான கருத்துத் தளத்தில்.

மறுபக்கத்தில் அரசு மற்றும் புலிகளை எடுத்தால், அரசு தான் தமிழ் மக்களின் பிரதான எதிரி. இதில் புலிகள் அல்ல. அரசை ஆதாரிக்கும் அனைத்தும் பிரதான எதிரியாக இருப்பதில், ஏன் புலியை விட முதன்மை எதிரியாக இருப்பதில் வியப்பேதுமில்லை. இதை ஒட்டி விரிவான கட்டுரை எழுதி முடித்துள்ளேன்;, சரி பார்த்த பின் இரண்டொரு நாளில் பிரசுரமாகவுள்ளது. அது இதை மேலும் துல்லியமாக தெளிவாக்கும்.

சிங்கள் பேரினவாதிகள் தமிழ் மக்களை ஒடுக்குவதாகச் சொல்லி புலிகள் போராடுகின்றனர் என்றால், புலி எதிர்ப்பு அணி புலிகள் தமிழ் மக்களை ஒடுக்குவதாகச் சொல்லி போராடுகின்றனர். ஆனால் மக்களுடன் இணைத்து, அந்த மக்களின் சொந்த விடுதலை நடத்த முனைவதில்லை. அதை தெளிவாக அரசில் அடிப்படையில் எதிர்க்கின்றனர். இவை அனைத்தும் பிற்போகானவை எதிர்புரட்கிகரமானவை.

எங்கே குழப்பம் மயக்கம் எற்படுகின்றது என்றால், நாங்கள் புலியுடன் நண்பர்களாக இருக்க முடிவதில்லை. மறாக அவர்களால் கொலை அச்சறுத்தலுக்கு சாத உள்ளாகி வாழ்பவர்கள்;. மறுபக்கத்தில் புலியெதிர்ப்பு அணியுடன் நாம் நட்பாக இருக்க முடிகின்றது. இது பலரை அரசியலுக்கு அப்பால் உறவாட வைக்கின்றது. இவர்களால் உடனடியாக கொலை அச்சுறுத்தல் இருப்பதில்லை. இந்த எதார்த்தம் சார்ந்த சூழலில் இருந்து, நாம் எமது தனிமனித உணர்வில் இருந்து சிந்திக்கும் போது, அங்கு அரசியலை மறந்து போகின்றோம்;. 1983 முதல் 1986 வரை ஒரே இயக்கத்தில் அரசிலை பேசியவர்களை வேட்டையாடி கொன்ற உண்மை, சொல்லும் செய்தி என்றும் தெளிவானது. இன்று புலியெதிர்ப்பு அணியில் உள்ள பலர் கடந்த இந்தக் கொலைகளில் பங்கு கொண்டவர்கள் அல்லது அதை ஆதாரித்தவர்கள். அதை இன்றும் அரசியல் ரீதியாக விமர்சிக்காதவர்கள். அதே அரசில் வெறுப்புடன், அரசில் பேசுவர்களையும் அந்த மக்கள் அரசிலையும் வெறுக்கின்றனர். மக்கள் அரசில் பேசுவர்கள், மக்கள் நலனை உயர்த்த கோருவது மட்டும் தான் கோருகின்றனர்.

எம்மிடம் கேள்வி கேட்க முன் அவர்களிடம் கேட்கலாமே, மக்கள் நலனை முன்னெடுக்க சொல்லி. நாங்கள் சொல்வது தவறு என்றால், நேரடியாக கருத்தை இட்டு விமர்சியுங்கள் என்ற கோரிப்பாருங்கள். அவர்களிடம் அந்த அரசியல் நேர்மை துளியாளவும் கிடையாது. மக்களுக்கு உண்மையாக இருந்தால், அது தானாக வெளிப்படும்.

நாளை புலிகள் இல்லாத இடத்தில் அரசியல் அதிகாரத்துக்கு இவர்கள் வந்தால், அரசில் ரீதியாக அவர்களும் மற்றொரு புலிகள் தான். இல்லையென்;று யாரும் இதை நிறுவமுடியாது. அவர்கள் மக்கள் பற்றி கொண்டுள்ள அரசியல் தான்;, எமது முடிவை தீர்மானிக்கின்றது.

ரி.பி.சி தேவையா என்றால் மக்கள் நலனின் அடிப்படையில் அவசியமற்றது. ஆனால் அதை புலிகள் ஒழித்துகட்டும் முயற்சியை நாம் அங்கிகரிப்பதில்லை. இந்த வகையில் நாம் முன்பு கருத்துரைத்துள்ளோம். இதேநிலை தான் புலிகளின் வனோலிக்கும் பொருந்தும். நாளை ஏகாதிபத்தியம் அதை தடை செய்தால், நாம் அதை அங்கிகரிப்பதில்லை. இது போன்ற தடைகள் குறித்ததை மட்டுமல்ல, அது மொத்த மக்களையும் அடக்கியொடுக்கும் அரசியலை அடிப்படையைக் கொண்டதே.




;

Anonymous said...

//...சிங்களச் சியோனிசத்தை வீழ்த்வேண்டிய வரலாற்றுத் தேவையை..//

அடடா, வரலாற்றுத் தேவை இருக்கிறதாமே? அதுவும் சும்மா சிங்கள ஆட்சியாளர்களை என்றால் தமது பாட்டாளி, சோஷலிசப் பம்மாத்துக்குள் ஒழிக்க முடியாது. ஆகவே 'சியோனிச' அடை மொழி!!!

பாசிசம், நாசியிசம், ஸ்டாலினிசம், ஏகாதிபத்தியம் வரிசை அர்த்தமற்றுவிட்டதோ? நீட்டி முழங்குவோருக்கு தமது இருப்பை காட்டிக்கொள்ள புதிய சொல் தேவைப்படுகிறது அதுதான் இந்தச் 'சிங்கள சியோனிசம்' !!!

இதற்கு விளக்கம்? யாருக்குத் தெரியும்?
தெரிந்தாலும் சியோனிசத்துக்கும் தமிழனுக்கும் என்ன தொடர்பு? சிங்கள அரசுக்கும் இஸ்ரேலுக்கும்(சியோனிசம்) உள்ளதொடர்பு என்றால் அது ஏன் இவ்வளவு காலம் தாழ்த்தித்தான் உறைக்கிறது?
சிங்களவனிடம் கேட்டால் அவன்பக்க நியாயமாக தமிழர் போராட்டத்தை 'தமிழ் பாலஸ்தீனியம்' எனச் சொன்னாலும் சொல்லுவான். இன்றும் பழைய லெபனான் தொடர்புகள் தமிழர்களை இணையத்தள ஆய்வுகளில் 'பயங்கரவாதி' பட்டத்துக்கு பரிந்த்துரை செய்வதை பார்க்கிறோம்.
அதுமட்டுமல்ல 'சியோனிசத்துக்கு எதிரானவர்களிடம் ஆயுதப்பாடம் கற்ற தோழர்கள்தான் 'சிங்கள சியோனிசத்துக்கு' முண்டு கொடுக்கிறார்கள்!

Anonymous said...

http://www.nitharsanam.com/?art=18122
Thanks Nitharsanam.com

here the news
ஏன் இந்த முரண்பாடு. அவர்களின் தொலைக்காட்சியே தணிக்கை செய்கின்றது? இவை கூட சனநாயக மறுப்புத்தானே.
கீழே
Thanks Nitharsanam.com
here the news

///நெஞ்சு பொறுக்குதில்லையே - ரி.ரி.என் செய்தித் தணிக்கை.


ஜ திங்கட்கிழமைஇ 19 யூன் 2006 ஸ ஜ யோககுமார் ஸ
hவவி://றறற.லயசட.உழஅ/கழசரஅ3/எநைறவழிiஉ.pரி?வஃ11539

லண்டனில் பரவலாக சிங்களப் பெளத்த பேரினவாதிகளின் அடக்குமுறைக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தைப் பிரச்சாரம் செய்து தமிழா;கள் தங்கள் உரிமைகளைத் தட்டிக்கேட்க வீதிக்கு இறங்க ஆரம்பித்துள்ளார்கள். பிரித்தானியப் பாராளுமன்றத்தின் நுளைவாயிலில் இதற்கான ஆரம்ப நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது பரவலாக லண்டனில் தமிழ்த் தேசிய பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் மங்கள சமரவீர மற்றும் மகிந்த றாஜக்சவின் மனைவி தலைமையிலும் இலங்கை விமானத்தில் ஒரு சிங்கள விசேட இசை நடனக் குழுவும் இன்னொரு விமானத்தில் யானைக்குட்டிகளும் அதன் பாகன்களுமாக மாபெரும் அரசியல் பிரச்சாரம் மேற்கொள்ளும் குழுவும் லண்டன் வந்து பல கோடி செலவில் தீவிர பிரசாரம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. இதனைத் தமிழ் இளைஞா;களும் சிறுவர்களும் தமிழா;களின் பாரம்பரிய இசைக்கருவிகளான பறைமேளங்களையும் வேறு சில இசைக்கருவிகளினையும் பயன்படுத்தித் தமிழ்த் தேசியத்தின் பக்கம் உள்வாங்கியதுடன் சிங்களவர்களின் நிகழ்வுகளைப் பார்க்க வந்த சுமார் 25 ஆயிரம் வெள்ளை இனத்தவர்களையும் தமிழ்த் தேசியப் பிரச்சாரத்தின் பக்கம் திசை திருப்பினார்கள். நீண்ட நெடுங்காலமாகத் திட்டமிட்ட முறையில் மழுங்கடிக்கபட்டும் போட்டி பொறாமை மமதை காரணமாக நிகழ்வுகளைக் குழப்பியும் வேறு பல சுயநலக் காரணங்களைக் கருத்திற் கொண்டு நிகழ்வுகளை நடத்தாமலும் இருந்து வந்த சிலரால் கடந்த காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் முடக்கப்பட்டிருந்தது. சின்னஞ் சிறுசுகள் தற்போது உணர்வின்பால் உந்தப்பட்டு வீதிக்கு வந்தும் நீண்ட நெடுங்காலமாக மாமனிதா; சிவராம் பேராசிரியர் சிவதம்பி ஆகியோர் கூறியது போன்று மீண்டும் பிரித்தானியாவில் முளைவிட்டுள்ள தமிழ்த் தேசியப் பிரச்சாரத்தைத் தமிழ்த் தேசியத்துக்கு உரம் சோ;த்து மக்களை உற்சாகம் கொடுக்க வேண்டிய ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்து வருகின்றமை பலருக்கும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

hவவி://றறற.வயஅடைநெவ.உழஅ/யசவ.hவஅட?உயவனைஃ13ரூயசவனைஃ18553





நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில் தமிழ்ச் சிறுவர்கள் செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் துண்டுப் பிரசுர விநியோகத்தை சிறிது வினாடிகளுக்கு மட்டும் ஒலிபரப்புச் செய்துவிட்டு தமிழா;களுக்கு வேண்டத்தகாத சிங்களவர்களின் ஏற்பாட்டு நிகழ்வைப் பல நிமிடங்களாக ரி.ரி.என் ஒலிபரப்புச் செய்து தமிழ் இளைஞா;ளின் நிகழ்வுகளை ஓரங்கட்டியிருந்ததுடன் இலங்கை தேசியத் தொலைக்காட்சி றூபவாகினியின் செய்தித் தணிக்கை போன்று செயற்பட்டிருந்தது.

ஜரோப்பா எங்கும் மக்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தி ஏற்பாட்டாளர்களைத் து}ண்டி அவர்களுக்குப் பூரண ஆதரவு கொடுத்துப் பல வேறு வகையான தீவிர தமிழ்த் தேசியப் பிரச்சாரத்தை சுயாதீனமாக முடக்கி விடவேண்டிய தொலைக்காட்சி இவற்றையெல்லாம் மழுங்கடிக்கும் செயல்களைக் காட்சி நேரங்களில் குறைத்து தேவையற்ற விடயங்களையும் தமிழ் மக்களுக்கு வேண்டத்தகாத விடயங்களையும் ஒலிபரப்புச் செய்து வருகின்றது.

இத்தகைய விடயங்களை சாதமாகப் பரிசீலித்துப் பிரித்தானியா உட்பட ஜரோப்பிய நாடுகள் அனைத்திலும் தமிழ்த் தேசியப் பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்குப் பூரண ஊடாக ஆதரவு கொடுத்து பிரச்சார சக்திகளை ஊக்குவித்து வளர்த்துவிட வேண்டியது தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கும் ஊடகம்; ரி.ரி.என் பார்த்து ஜரோப்பாவில் மக்கள் சோம்பலாளிகளாகவும் தமிழ்த் தேசிய ஊற்றில் வற்றியவர்களாகவும் மாறவிடாது பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது போன்று தேவையற்ற சீக்கிய இனத்தவர்களின் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் ஜரோப்பாவெங்கும் சுயாதீன தமிழ்த் தேசியப் பிரச்சார சக்திகளை வளர்த்துவிட வேண்டுமென்று எந்தவித வேறுபாடுகளும் அற்ற முறையில் இத்தகைய ஒரு ஆர்பாட்டமாக இருப்பினும் அதற்குப் பூரண ஆதரவு கொடுப்பதுடன் ஏற்பாட்டாளர்களுக்கு மேலும் பல உதவிகளைச் செய்து கொடுத்துக் கட்டமைப்பொன்றை வளர்க்க வேண்டுமென்றும் தாயகத்தில் தேசியத்திற்கெதிராக பல்லாண்டுகளாக செயற்பட்ட பலர் இன்று தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்ட நிலையிலும்> புலத்தில் மாறாக தேசியத்திற்காக செயற்பட்ட செயற்பாட்டாளர்கள் புறக்கணிக்கப்பட்டும்> ஒதுக்கப்பட்டும் வரும் சூழ்நிலையே தொடர்கிறது எனவும் லண்டனிலிருந்து சுந்தரம் என்பவர் எமக்கு எழுதி அனுப்பியுள்ள தனது ஆதங்கத்தில் தெரிவித்துள்ளார்.

Anonymous said...

இன்றும் இலகுவாக கூறமுடியும்.
சொந்தக் பலத்தில தங்கியிருக்க வேண்டும்
சொந்த மக்களை நம்பவேண்டும்
எதிரிகளுடன் கையோர்க்க் கூடாது
நிச்சயம் அழிவு ஏற்படும் அதற்கு மக்கள் மத்தியில் இருந்துதான் பாதுகாப்புத் தேட வேண்டும்.
சொந்த மக்களை அழிப்பதில் துணைபுரியும் அரச இயந்திரத்தில் அங்கம் வகித்துக் கொண்டு ஒடுக்கு முறைக்கு தாம் துணைபோகவிலலை என கூற முடியாது.
புலி இரத்த்தைக் காட்டியே மக்களை தம்பக்கம் இழுக்கின்றது. இது தாம் அவர்கள் என்ற இனத்துவ எல்லையை ஆழப்படுத்தியுள்ள நிலையை சரியாகப் பயன்படுத்த புலியெதிர்ப்பணி உதவுகின்றது.
தாம்- அவர்கள் என்பதை இலகுவாக அடையாளப்படுத்தியே இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் இந்திய ஆதரவுக் குழுக்களை இலகுவாக மக்கள் மத்தியில் இருந்து அகற்றவும் முடிந்தது.
சொந்தக் காலில் நிற்பதே மக்கள் பாதையாக நலனாக இருக்க முடியும்.

Anonymous said...

//...இது நவீனப் பண்பாடுடைய மக்கள் வாழும் நாடுதாமா அல்லது காட்டுமிராண்டிக் கூட்டம் வாழும் கற்கால இலங்கையா?
அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கொலைகாரர்களால் செயற்படுத்தப்படும் காட்டுமிராண்டிப் படுகொலைகளுக்கு நிகராகப் .../

அப்போ 'அமெரிக்க-ஐரோப்பிய' நாடுகளும் காட்டுமிராண்டிக்கூட்டம் வாழும் நாடுகள் தாமா? லொஜிக் உதைக்குதே!

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...