ரீ.பீ.சீ.வானொலி மீது
மீளவும் புலிகளின் கொலைவெறித் தாக்குதல்!
பாசிசம் எந்த உருவத்தில் வந்தாலும்(தமிழீழ விடுதலை,தாயகம்-சுயநிர்ணயவுரிமை...)அதை அனுமதிக்க முடியாது!நமது காலம் மிகவும் மௌனித்திருக்கத்தக்கதல்ல!உயிர் வாழ்வதற்கே போராடியாகவேண்டிய காலவர்த்தமானத்தில், எதற்காகவும் மௌனித்திருக்க முடியாது.
புலிகளின் அதீத வன்முறை முனைப்பானது மாற்றுக் கருத்துடையவர்களைச் சமூக விரோதிகள்-எட்டப்பர்,தேசத் துரோகிகளெனும் சித்தரிப்புகளுடாகக் கருத்து விதைத்து,அப்பாவிகளான மனிதர்களைப் போட்டுத் தள்ளிவரும் புலிப் பயங்கரமானது எப்போதும் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தைப் பாதுகாக்க முடியாது!
தேசிய விடுதலைப் போராட்டமானது தனிப்பட்டவொரு மனிதரின் சுய முனைப்புக்கான போராட்டமல்ல.
ஒரு இனத்தின் தலைவிதியை அற்ப மனிதரின் நலன் சார்ந்து-அவரதும், அவரது தளபதிகளின் நலனுக்குமான காப்பரணாகக் குறுக்கிவிடும் புலிப் பயங்கர வாதிகளின் போராட்டத்தில் நாம் மரித்தாலும் சரி ஜனநாயக வாதிகளைக் காத்தாகவேண்டும்.
புலிப் பயங்கரவாதிகள்
எட்டப்பர்.கொம்,
நெருப்பு.ஓர்க்,
நிதர்சனம்.கொம் போன்ற இழி இணையத் தளங்களுடாக மாற்றுக் கருத்தாளர்கள்மீது கிட்டலர் பாணி கருத்தியல் வன்முறை மூலமும்,வன்முறை சார்ந்தும் தாக்குதல் தொடுப்பதை உலகத் தமிழ் மக்கள் புரிந்தாகவேண்டும்.
ரீ.பீ.சி.வானொலிமீதான தாக்குதலானாது(08.06.2006) ஜனநாயகத்துக்கெதிரானது-மாற்றுக் கருத்துக்கு எதிரானது.இதை நாம் கண்டித்தேயாகவேண்டும்.
ரீ.பீ.சி போன்ற கடைந்தெடுத்த முதலாளித்துவ ஊடகங்கள் மக்கள்மீது அதிகாரத்தைச் செய்யும் புலிகளுக்கு மாற்றானவர்களில்லை.அவர்கள் புலிகளிடம் பங்குச் சண்டை நடாத்தும் ஒரு கும்பல்தாம்.எனினும் நாம் ஜனநாயகப்பட்ட மக்களின் நலத்தை முன் நிறுத்துவதால் இத்தகைய ரீ.பீ.சீ வானொலிக்கெதிரான புலிப் பாசிசத்தின் பயங்கராவாதத் தாக்குதலை அம்பலப்படுத்துவது மிகவும் அவசியமானது.
நமது அற்ப சொற்ப உயிரையும் குடிக்க முனையும் புலிகளின் குருதித் தாகமானது எந்தத் தமிழ் குழந்தைகளையுமே விட்டு வைக்கவில்லை!இந்தப் பாசிசப் பயங்கரவாதப் புலிகளின் தலைமையானது கனகம் புளியடியில் பச்சைப் பாலகனின் உயிரைக் குடித்தது.இத்தகையப் பாசிசப் புலிகளா மாற்றுக் கருத்தாளர்களை ஜனநாயக ப+ர்வமாகச் செயற்பட அனுமதிப்பார்கள்?
இன்றைய காலக் கட்டமானது மிகவும் கொடுமையான ஆயுதக் காட்டாட்சி நிலவும் வன்முறைச் சூழலைக் கொண்டியங்குகிறது!
ஐரோப்பாவில் வாழும் மாற்றுக் கருத்தாளர்களை மெல்லக் கொல்லும் திட்டத்தைப் புலிகள் ஏற்கனவே செய்து முடித்துள்ளார்கள்.இப்போது ஐரோப்பாவின் தடைக்குப் பின்பான காலத்தில் நம்மைக் கொல்வதற்குப் புலிகள் தகுந்த திட்டத்துடன் பயங்கரம் புரிகிறார்கள்.
இது கிட்டலரின் நாசிக் கட்சியின் காலத்தை நமக்குக் கூட்டிவருகிறது!
நாம் எங்கும் வாழவே முடியாதவொரு அவலத்தைப் புலிப் பாசிசம் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
புலிகளின் வால்களுக்கு மனித மதிப்பு,மாண்பு எதுவுமே தெரிந்திருக்கவில்லை!அவர்களுக்குப் பிரபாகரனின் பாதத்தைத் தவிர எதுவுமே தெரிந்திருக்கவில்லை.அத்தகையவொரு தலைமுறையைத்தாம் புலிப் பயங்கரவாதிகள் தயாரித்துத் தமிழ் மக்கள் என்கிறார்கள்!இந்தவொரு கூட்டமே மனித நாகரீகத்துக்குப் புறம்பான காட்டுமிராண்டிகளாக உலகில் வலம் வருகிறார்கள்!
இந்தப் பேய்களின் மத்தியில் வாழும் நாம், மாற்றுக்கருத்தாளர்கள்-ஜனநாயகவாதிகள்,மக்கள் நலன் நோக்காளர்கள்மீது நடாத்தப்படும் வன்முறை சார்ந்த கொலை முயற்சிகளை-மனித வருத்தல்களை வன்மையாக் கண்டிக்கிறோம்!
இதை உலகத் தமிழ் மக்களுக்குப் பறைசாற்றி ,எமது மக்களுக்கு ஜனநாயகச் சூழல் கிடைக்கக் குரல் தரும்படி கோரி நிற்கிறோம்.
"ஒழிக புலிப்பாசிசம்!"
"ஓங்குக உலகத் தமிழ்க் குரல்கள்"
இதுதாம் இழந்த மனித மாண்பை மீளப் பெறுவதற்கு எமக்கான ஆயுதம்.
தோழமையுடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
09.06.2006
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
18 comments:
//புலிப் பயங்கரவாதிகள் எட்டப்பர்.கொம்,நெருப்பு.ஓர்க்,நிதர்சனம்.கொம் போன்ற இழி இணையத் தளங்களுடாக //
எனக்கொரு சந்தேகம்.. நாளைக்கு இதே இணையத்தளங்கள் மீது.. அல்லது அதனைச் சார்ந்தவர்கள் மீது தாக்குதல் நடந்தாலும் (அது புலிகளாலோ அல்லது வேறு எவராலோ ) அப்பவும் ஜனநாயகத்திற்காக குரல் கொடுப்பியளா..
//ரீ.பீ.சி போன்ற கடைந்தெடுத்து முதலாளித்துவ ஊடகங்கள் மக்கள்மீது அதிகாரத்தைச் செய்யும் புலிகளுக்கு மாற்றானவர்களில்லை.அவர்கள் புலிகளிடம் பங்குச் சண்டை நடாத்தும் ஒரு கும்பல்தாம்.எனினும் நாம் ஜனநாயகப்பட்ட மக்களின் நலத்தை முன் நிறுத்துவதால் இத்தகைய ரீ.பீ.சீ வானொலிக்கெதிரான புலிப் பாசிசத்தின் பயங்கராவாதத் தாக்குதலை அம்பலப்படுத்துவது மிகவும் அவசியமானது///
அண்ணை என்ன சொல்லுறியள்? ரீ.பீ.சீ யும் புலியும் ஒண்டு ஆனால் ரீ.பீ.சி இன்ர ஜனநாயக உரிமையை காப்பாத்திறியளோ! உப்பிடித்தான் அமெரிக்காக்காறனும், ஈயூக்காறனும் சொல்லி ஸ்ரீலங்காக்காறனையும் இஸ்ரேல் காறனையும் காப்பாத்திறான். அப்ப அல்லப்பிட்டி ஆக்கள ஆமியும் நேவி, ஈ.பி.டி.பி,தேனீ, வீணி குளவிக்காறற்ற ஆக்கள் அடிக்கேக்க மட்டும் ஏன் எல்லாம் புலிஆரம்பிச்சுவச்ச 'பாசிசம்' எண்டு கதை விடுறியள்.
///ஓங்குக உலகத் தமிழ்க் குரல்கள்"
இதுதாம் இழந்த மனித மாண்பை மீளப் பெறுவதற்கு எமக்கான ஆயுதம்.///
இப்படித்தான் 'உலகத் தொழிலாளர்' களுக்கும் கதைவிட்டுக் கழுத்தறுத்தீர்கள்.
இப்போது அதேகதையை 'உலகத் தமிழர்' களுக்கும் விடுகிறீர்கள்!
இந்த 'மனித மாண்பை' ப்பற்றி 4 வசனம் எழுதுங்கள் (புலியையும் அமெரிக்கா வையும் குறை கூறாமல்!)
மீண்டும் ரி.பி.சி மீது புலிகளின் தாக்குதல்
பி.இரயாகரன்
09.06.2006
08.6.2006 அன்று புலியெதிர்ப்பு அரசியல் விவாதம் நடந்த கொண்டிருந்த நேரத்தில், ரி.பி.சி மீது மிகவும் திட்டமிட்ட வகையில் தாக்குதல் ஒன்றை புலிகள் நடத்தினர். நிகழ்ச்சிகள் அடிக்கடி தடைப்பட்ட நின்ற நிலையிலும், இது தொழில் நுட்பக் கோளாறல்ல, புலிகளின் வழமையான பாசிச கொலைகார விளையாட்டுதான் என்று செய்தி பின்னால் வெளிவந்துள்ளது.
நோர்வேயில் அமைதி, சமாதானம் பற்றி தமிழ்செல்வன் யாரோ யாரோ என்று ஒப்பாரி பாடி பாடையை ஆட்ட, இங்கு அவர்களின் அரசியல் வாரிசுகள் மரணவீட்டை நடத்த முனைகின்றனர். மானம் கெட்ட அரசியல் பிழைப்பு. ஊரார் பணத்தில் இந்த மாதிரியான தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு அன்றாடம் நடத்தப்படுகின்றது. எந்த வேலைவெட்டியுமின்றி, ஊரார் பணத்தில் தின்று குடித்தபடி, பலாத்காரமாக கருவை உருவாக்கி ஊர்சுற்றும் சமூக விரோதிகள், கருக்கலைப்பு நடத்த திரிகின்றனர். இவர்கள் தான் பாசிசப் புலிகள்.
தமிழ்தேசியம் என்ற பெயரில் புலிகளின் வரலாறு முழுக்க இது போன்ற ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் நிகழ்ந்தன, நிகழ்ந்த வண்ணமே உள்ளது. வன்முறையும் கொலையுமின்றி, அவர்களுக்கு உணவு ஜீரணிப்பதில்லை. வெள்ளையும் சுள்ளையுமாக வெள்ளை வேட்டி கட்டி திரியும் இந்த பாசிச மாமிசக் கும்பலின், மீண்டும் ரி.பி.சி மீதான தாக்குதல் என்பது உள்ளடகத்தில் மொத்த சமூக அமைப்பு மீதான வன்முறையாக உள்ளது.
அண்மையில் சிறிரங்கன் மீதும், இது போன்ற ஒரு அநாகரிகமான கொலை மிரட்டலையும், உளவியல் தாக்குதலையும் புலிகள் நடத்தினர். இதன் போது நக்கித் திரியும் புலிப் பினாமிகள் இது உண்மையா? பொய்யா? என்று சொந்த பாசிச வக்கிர புத்தியை கொட்டிக் கொண்டனர். அவர்கள் மட்டும் இதற்கு துணையாக நிற்கவில்லை. ரி.பி.சியும் அதன் எடுபிடி இணையங்களும் கூட இதை முற்றாக இருட்டடிப்பு செய்து, புலிக்கு பக்க துணையாக நின்றனர். சிறிரங்கன் புலியை மட்டுமல்ல, புலியெதிர்ப்பையும் எதிர்த்து எழுதுபவர் என்ற ஒரே காரணத்தினால், அவர் மீதான வன்முறைக்கு அனைவரும் உடந்தையாக இருந்தனர். இப்படி பொது வன்முறை மீதான கண்டனத்தைக் கூட செய்யமுடியாத நிலையில், ரி.பி.சியை சுற்றியுள்ள புலியெதிர்ப்பு அணியும் அரசியல் விபச்சாரம் செய்கின்றனர்.
இந்த நிலையில் ரி.பி.சி மீதான தாக்குதல் என்பது, புலிகளின் பாசிச நடத்தைகளின் தொடர்ச்சிதான். சில புலி ஆதரவு கும்மியடிகள் நிதர்சனம் டொட் கொம் புலியுடன் தொடர்பு கிடையாது என்றும், அதைத் தாம் பார்ப்பதில்லை என்று கூறியபடி, புலி அல்லாதவர்களை வசதியாக வசதி கருதி விமர்சித்து வந்தனர். நாற்றத்துக்கு சென்ற் அடித்துவிட்டு, நாம் நாறுவதில்லை என்று நடிப்பவர்கள் தான் இவர்கள். ஆனால் இந்த நிதர்சனம் டொட் கொம் முதல் , அதன் ஒட்டுண்ணி எடுபிடிகள் வரை, அனைவரும் பாசித்தின் ஊற்றுமூலத்தின் மையமாக இருப்பவர்கள்.
ரி.பி.சியின் கருத்தை கருத்தாக எதிர் கொள்வதும், அதை அம்பலப்படுத்துவம் அவசிமானது. அதை புலிகளின் பாசிச அரசியலால் எதிர்கொள்ள முடிவதில்லை. புலிகளின் பாசிச நடவடிக்கைகள் அன்றாடம் அம்பலமாகின்ற நிலையில், அரசியல் ரீதியாக ரி.பி.சியை அம்பலப்படுத்த புலிகளிடம் எந்த அரசியலும் கிடையாது என்பதே உண்மை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அப்பட்டமான, இது போன்ற தாக்குதல்கள் தான்.
ரி.பி.சி இன்று எதிர்ப்புரட்சிகர அரசியல் பாத்திரத்தை மக்களுக்கு எதிராக அரங்கேற்றுகின்றனர். புலிகளின் பாசிசத்தை தமது செங்கம்பளமாக மாற்றி, அதில் ராஜநடை போட்டபடியே எதிர்ப்பரட்சிகர மக்கள் விரோத அரசியல் செய்கின்றனர். இந்த வகையில் எமது அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் அவர்கள் திணறுகின்றனர். மக்களை முன்னிறுத்துபவர்கள் மீது இருட்டடிப்பு, அவதூறுகளை கட்டுவது புலியெதிர்ப்பின் அரசியல் உள்ளடக்கமாக இன்று உள்ளது. அவர்களாலும் புலியைப் போல் அரசியல் ரீதியாக எம்முடன் விவாதிக்க முடிவதில்லை. தம் மீது அரசியல் விமர்சனம் செய்பவர்கள் மீது, பாசிசத்தை அடிப்படையாக கொண்ட எதிர்புரட்சிகர அவதூறை புனைவது, மாற்றுக் கருத்தை பிரசுரிக்காமை, போன்ற பலவற்றை எதிர்வினையாக கையாளுகின்றனர். கருத்தை மட்டும் விவாதிப்பதில்லை. இவர்கள் புலியின் மற்றொரு வலதுசாரிய தொங்கில் நிற்கின்ற நிலையில், நாங்கள் அவர்களை அரசியல் ரீதியாக உறுதியாக கருத்தின் அடிப்படையில் எதிர்கொள்கின்றோம்.
இந்த நிலையிலும் ரி.பி.சி வானொலி புலியின் வன்முறை மூலம் நிறுத்தப்படுவதையும், அதில் பணியாற்றுபவர்களை கொல்ல முயல்வதையும் நாம் மௌனமாக அங்கீகரிக்க முடியாது. இந்த தாக்குதல்கள், வன்முறைகள் அவர்கள் மீதானது மட்டுமல்ல, மாறாக மொத்த சமூகத்தின் மீதானதே. மொத்த மக்களையும் அடக்கியொடுக்கி, மூச்சுக் கூட வெளிவராதா வண்ணம் காலுக்கு கீழ் இட்டு மிதிப்பதையே அடிப்படையாக கொண்டது.
புலிகளின் சில மனித விரோத செயல்களை மக்கள் அரசியலுக்கு வெளியில் சம்பவ ரீதியாக அம்பலப்படுத்தும் ரி.பி.சி, அதே அரசியலால் புலியாக இருக்கும் வரலாற்றுப் போக்கில் கூட, நாம் அவர்கள் மீதான வன்முறையை கடுமையாக கண்டிப்பது அவசியமாகின்றது. மொத்த சமூகத்தின் இருத்தலையே இது அனுமதிப்பதில்லை என்ற வகையில், இதைப் போராடி எதிர்கொள்வது அவசியமாகின்றது.
ரீ.பீ.சி போன்ற கடைந்தெடுத்து முதலாளித்துவ ஊடகங்கள் மக்கள்மீது அதிகாரத்தைச் செய்யும் புலிகளுக்கு மாற்றானவர்களில்லை.அவர்கள் புலிகளிடம் பங்குச் சண்டை நடாத்தும் ஒரு கும்பல்தாம்.எனினும் நாம் ஜனநாயகப்பட்ட மக்களின் நலத்தை முன் நிறுத்துவதால் இத்தகைய ரீ.பீ.சீ வானொலிக்கெதிரான புலிப் பாசிசத்தின் பயங்கராவாதத் தாக்குதலை அம்பலப்படுத்துவது மிகவும் அவசியமானது///
திரும்பவும் ஒரு சந்தேகம்! ரிபிசியும் புலியும் ஒண்டெண்டாலும் ரிபிசிக்காக ஜனநாயக குரல் எழுப்பிறியள்.
புலிகளையும் ஆரும் தாக்கும் போது உதே குரலைக் குடுப்பியளே.. உங்கடை வாயாலை உதைக் கேட்க ஆசை..
இல்லாட்டி ஆராருக்கு ஜனநாயகக் ககுரல் குடக்கலாம் எண்டு ஏதாவது அளவு கணக்கிருக்கோ..
what you want to say about this ...
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18447
சகோதரா!
நீ அருமையாக எழுதும் வல்லமை உடையவனாக இருக்குறாய், அது கண்டு எமக்கு மகிழ்ச்சி. ஆனால் உனக்கு இந்தப் புலிகளை எதிர்த்து மாத்திரம் பதிவு போடுமளவிற்கு வேறு ஒன்றும் உலகில் அல்லது ஊரில் இடம்பெறவில்லையா? சிலவேளைகளில் எனக்கும் சிலவிடயங்களில் அவர்களுடன் உடன்பாடு கிடையாது. ஆயினும் நீ எழுதும் வகையில் அவர்களை வெறும் வில்லனாகவே தெரிகிறது. அவர்கள் நாயகர்கள் இல்லை என்றால் பறவாயில்லை. வில்லர்கள் என்பது சரியாகத் தெரியவில்லை எமக்கு. நீ புலியெதிர்ப்புவாதி மட்டும் என்றால் நீ தொடர்ந்து இப்படியே எழுது. உண்மையில் ஏதாவது நல்லது நடக்க வேண்டுமென்றால் நல்லவை கெட்டவை என்று பிரித்து இரண்டையும் எழுது. எமக்குப் பட்டதை எழுதினோமடா சகோதாரா!!!
- தோழன்
பாசீச நடவடிக்கைள் யாரால் மேற்கொள்ளப்பபட்டாலும் கண்டிக்க வேண்டியதே.
கருத்துக்களை கருத்தால் வெல்ல தமது உறுப்பினர்களுக்கு கற்பிப்பதே ஒரு விடுதலை அமைப்பின் தலையான கடமையாக இருக்கும்.
//what you want to say about this ...
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18447//
முதலில் ஆழ்ந்த கவலையடைகிறேன்.சாவது அப்பாவி-ஏழை எளிய மக்கள்!இது குறித்துத்தாம் பல கட்டுரைகளை எமது பதிவில் எழுதியுள்ளோம்.அடுத்து-அநாமதேயம்,ஒன்றுக்கு இன்னொன்று பதிலாகாது! சிங்கள இராணுவ அட்டகாசத்தால் புலிகளின் கொலைகளைச் சமன்படுத்த முனைவது அல்ல மனிதாபிமானம்.இரண்டும் கண்டிக்கப்பட வேண்டியது.இந்த இரண்டு அரச ஜந்திரங்களின் இன்றைய நிலைமைகளை வைத்தே நாம் கருத்தாடுகிறோம்.இவைகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியலே மக்களைக் காவு கொள்கறது!அந்த அரசியலைப் புரிந்து எழுத முனையும்.இத்தகைய சூழலை நீர் எட்டும்போது எம்மிடம் மேற்காணும் வகையான அபத்தக் கேள்விகளைக் கேட்க மாட்டீர்!இதுதாம் கொழுவியின் கேள்விகளுக்கும் என் பதில்(புகலிடச் சஞ்சிகைகளை 1987 இல் இருந்து வாசித்திருந்தால் நாம், "புலிகளை இந்தியா வேட்டையாடியபோது" என்ன நிலைப்பாட்டை எடுத்தோமெனப் புரியும்).
அடுத்து புலிகளை-அமெரிக்காவை விட்டு:
//இப்படித்தான் 'உலகத் தொழிலாளர்' களுக்கும் கதைவிட்டுக் கழுத்தறுத்தீர்கள்.
இப்போது அதேகதையை 'உலகத் தமிழர்' களுக்கும் விடுகிறீர்கள்!
இந்த 'மனித மாண்பை' ப்பற்றி 4 வசனம் எழுதுங்கள் (புலியையும் அமெரிக்கா வையும் குறை கூறாமல்!)//
எட நாசமறுப்பாங்களே!நாம புலிகள் செய்யும் மனிதவிரோதம் பற்றியும்,நமது உயிரை எடுக்க முனையும் அவர்களின் அதிகாரத்தை-பாசிச நோக்கை,வன் முறைத் தாக்குதலை எழுதியவுடன் வரிந்து கட்டிக்கொண்டு வந்து"இதுக்கு என்ன உன் பதில்?"என்று வாறீர்களே!இதனால்தாம் புலிகளின் போக்கில் துளியளவும் ஜனநாயக விழுமியங்கள் நிலவுவதில்லை.இதுவே இன்றைய அவலங்களுக்கு அடிப்படை.
என்ன அமெரிக்காவை,புலியைவிட்டு மனித மாண்பு பற்றி 4 வசனங்களோ அப்பு?
அப்பு உமக்கு அரசியல்,அதன் ஆதிக்க நிலைமைகள்,அதிகாரச் செயற்பாடுகள் குறித்துத் துளியளவும் அறிவில்லை.இதைத்தாம் மேலே கட்டுரையிலும் தெளிவாகச் சொன்னேன்.இத்தகைய அதிகாரங்கள்-ஆதிக்கங்கள் இதுவரை பல கோடி மனிதவுயிர்களைக் கொன்று குவித்துவிட்டென!நாகசாகி,கீரோசீமா வரையும் அணுவால் அரசியல் செய்த அமெரிக்காவும்,ஈழத்தில் இருந்து ஐரோப்பா வரையும் கொலைத் தாண்டவமாடும் புலிகளும் மனித மாண்புக்குக் குறுக்கே நிற்கவில்லையா?இவைகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியல்தாம் என்ன?ஏன் இத்தகைய நிலைமை வருகிறது?
எதற்காக இவர்களை விடச் சொல்கிறீர்?
இவர்கள் செய்வதில் ஒரு நல்ல காரியமிருப்பின் அவைகூடக் கொலையரசியலைத் தக்க வைப்பதற்கே!
எங்களைக் கொல்லும் புலிப் பயங்கரவாதம் குறித்துக் கதைத்தவுடன் அதைத் திசைதிருப்ப முனையும் இத்தகைய பெரும் நிறவன வலுவானதுகூட மேற் கூறிய அரசியலின் தொடர்ச்சிதாம்.இதனாற்றாம் கூறுகிறோம் பாசிசத்தை அதன் வேருடன் சாய்க வேண்டும் என்று.அது அமெரிக்காவானாலென்ன, இலங்கைப் பாசிசச் சிங்கள அரசாவிருந்தாலென்ன-புலியாய் இருந்தாலென்ன?அனைத்தும் ஒடுக்குமுறையின் தொடர்ச்சிதாம்!
//உனக்கு இந்தப் புலிகளை எதிர்த்து மாத்திரம் பதிவு போடுமளவிற்கு வேறு ஒன்றும் உலகில் அல்லது ஊரில் இடம்பெறவில்லையா? //
தோழரே என்ன இப்பிடிச் சொல்லிப் போட்டீர்கள்?
இத் தளத்தில் கிடக்கும் பல பதிவுகளைப் பாருங்கள்!அவை வௌ;வேறு தளங்களில் சென்று சிந்திக்கவில்லையா?
எனக்குத் தனியே புலி எதிர்ப்புக் கிடையாது!
இப்போது புலிகளைப்பற்றியே பின் தொடரும் கட்டுரைகளை எழுத வைத்ததே புலிகளின் கொலைவெறித் தாக்குதல்களே!
இவர்களின் அடவாடித்தனங்களைப் பாருங்கள்!
என்னையே எட்டப்பனாக்கி...ஸ்ரீலங்கா அரசுக்கு உளவு பார்க்கிறேன் என்று தலைமைப் பீடத்துக்குப் பொய்யுரைக்கும் ஓபகவுசன் புலித் தோழர் சங்கரை என்னவென்பது?
இது கொலைக்கான ஒத்திகை.
ஊருக்கே அந்நியனாக்கிப் போட்டான்களே பாவிகள்!
இது போகட்டும்!
எனது நோக்கமானது எமது சமுதாயத்துக்குப் புதிய சிந்தனைத் தரவுகளைச் சுட்டுவதே!
இத்தகைய நோக்கில் பொருளாதாரம்,சூழல்,சமூகவியல்,மார்க்சியம்,ஆத்மீகமென்றெல்லாம் எழுதுகிறேனே!
எனது உணர்வுகளை ஆங்காங்கே எழுதுகிறேனே!
இவைதாம் சமூகத்தின் வளர்ச்சிக்கு-மாற்றுச் சிந்தனைக்கு,புதிய சமூக மாற்றத்துக்கான சில கண்ணிகளைக் காவி வருவது.
எவ்வளவோ திட்டத்துடன் எத்தனையோ விடயங்களை வௌ;வேறு துறைகளில் எழுதுவதே எனது நோக்காக இருக்கிறது.உயிரோடு இருக்கும் காலத்தில் இதைச் செய்கிறேன்.
//பாசீச நடவடிக்கைள் யாரால் மேற்கொள்ளப்பபட்டாலும் கண்டிக்க வேண்டியதே.
கருத்துக்களை கருத்தால் வெல்ல தமது உறுப்பினர்களுக்கு கற்பிப்பதே ஒரு விடுதலை அமைப்பின் தலையான கடமையாக இருக்கும்.//
இதுதாம் உண்மை!இதைத்தாம் நானும் எதிர்பார்க்கிறேன் தோழரே!ஒரு விடுதலை அமைப்பு மாற்றுக் கருத்தாளரைக் கருத்துக்களால் விவாதித்து வென்றெடுத்து, தமது அமைப்பையும் ஜனநாயக ப+ர்வமாக வளர்த்துப் போராட்டத்தைப் புரட்சிகரமாக்கணும்.இதைவிட்டு... தமக்கு எதிரான கருத்துடையவர்களைத் துரோகிகளாக்கி மண்டையில் போடுவது மாபியாக்களுக்கே சொந்தம்.
DAI SRI RANGAN NAYA UNNKAUU THEREEYUMMA
MANNARILLA PINCHUUU KULATHAIYAL KOLAIVEREE PEEDEETHA RANUVAM KONDATHUUU
ITHILL UNKAIYUMM ANTHA BLOODIL NANAINTHU ULLATHUUU
IPPO UNNAAKUU HAPPY THAAANEHAN
AYA SRI RANGA UNNDA CYCLE PARTNER RAYAGARANEEDAM KEELL ANTHA HATTON NATIONAL BANK KULLAI PANAAMM ENNKA ENDUU?
சிறிரங்கனுக்கு நடந்தது போலவே தற்பொழுது தேசம் சஞ்சிகை ஆசிரியர் மீதும் அவததூறைப் பரப்புகின்றனர். ''இவரின் இந்த தொடர்பின் ஊடாகத்தான் இலண்டன் உதயன் பத்திரிகை மற்றும் தேசம் சஞ்சிகை ஆசிரியருமான ஜெயபாலனுக்கும் இடையே ஆன தொடர்புகள் ஏற்பட்டதாக அறிய முடிகின்றது. இருவரும் சோ;ந்து தமிழிற்கு எதிராக தனது விமர்சனங்களை ஜெயபாலனின் வெளியீடுகளில் வெளியிட்டு வருகின்றார். இந்த வெளியீடுகளில் தேசத்துரோகி ரஜீவன் கூலை ஆதாpத்தும் ருவுர்சு அறிக்கைகளை ஆதாpத்தும் கட்டுரை எழுதுகின்றார். இதற்காக இவருக்கு இந்தியாவினாலும் ஜெயபாலனாலும் கூலி கொடுக்கப்படுகின்றது. இவருக்கு அவுஸ்ரேலியாவிலுள்ள வங்கிக் கணக்குகளில் மேற்கூறியவர்களால் வைப்பிலிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்றும் அதற்கான வங்கி அறிக்கைகளும் வெகு விரைவில் வெளியிடப்படும்.'' http://www.nitharsanam.com/?art=17925
கருத்தால் கருத்தை வெல்லமுடியாது வெறும் அவதூறு பரப்புகின்றனர்.
அத்துடன் எவரும் தமக்கெதிராக கதைக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்து செய்ற்படுகின்றனர்.
இவைதான் தமிழ் மக்களுக்கான அரசியல் போராட்டமாக சித்தரிக்கப்படுகின்றது.
ஆனாலும் ராஜன் இங்கு பலிக்கடாவாக ஆக்கப்படுகின்றார். இவரின் செய்ற்பாடுகளை பார்க்கின்ற போது அவரிடம் தேசத்தின் மீதான அபார நம்பிக்கை இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான சக்திகள் தவறான அரசிய்ல பாதையில் சென்று வீண் விரயம் ஆக்கப்படுகின்றனர்>
இவரைப் போல பல ஆயிரம் மலையக தொழிலாளர்களின் வாரிசுகள் இன்று புலிகளில் இருந்து போராடுகின்றனர். ஆனால் போராட்டத்தை தொடக்கி வைத்த யாழ்பாணியம் வெளிநாட்டில் இருந்து கொண்டு ரசிகர்ககளாக இருந்து விசில் அடிக்கிக்கின்றனர்.
தாங்கள் குறிப்பிட்டது போன்று புலிகளில் இருக்கின்ற அடிமட்ட உறுப்பினர்களை புரட்சிகர சக்திகளாக மாற்றுவதற்கான செயற்திட்டமே அவசியமானதாகும்.
//ஒன்றுக்கு இன்னொன்று பதிலாகாது!//
அண்ணை இதைத்தான் அண்ணை அமெரிக்காக்காறனும் சொல்லுறானண்னை! தொழிலாளரின் வேலைநிறுத்தம் முதலாளிகளின் சுரண்டலுக்குப் பதிலாகாது, பாலஸ்தீனியவன்முறை இஸ்ரேலின் வன்முறைக்குப் பதிலாகாது எண்டு!
அண்ணை நீங்கள் எதாவது புதிசாச் சொல்லுங்கோண்ணை!
//அந்த அரசியலைப் புரிந்து எழுத முனையும்.இத்தகைய சூழலை நீர் எட்டும்போது எம்மிடம் மேற்காணும் வகையான அபத்தக் கேள்விகளைக் கேட்க மாட்டீர்//
'தோடுடைய செவியன்..' தேவாரம் படிச்ச நாளில இருந்து சத்தியசாயிபாபா விபூதி கொட்டுண்ட வரை இதைத்தானண சொல்லுறாங்கள். ' அத்தகைய சூழலை எட்டத்தன்னால் விளங்கும் அபத்தக்கேள்வி கேளாதீர்' எண்டு சொல்லுறாங்களண்ண.
அண்ணை, தெரியாமல் தானே கேக்கிறன். தெரிஞ்சாலேனண்ண நான் கேக்கிறன். ஏனண்னை நீங்கள் பூவாலசிங்கத்தின்ர கடேல நல்ல மொத்தப்புத்தங்கள் மலிவா வாங்கிப்படிச்சிருப்பியளண்ண. எனக்கு வசதியில்லமப்போட்டுதண்ண. இப்பவசதியிருக்கண்ண ஆனா நாசமாப்போன இங்கிலீசில விளங்குதில்ல அண்ணை! நீங்கள் தமிழில, ஜேமனில, பிரெஞ்சில படிச்சிருப்பியளண்ண சொல்லுங்கோண்ண. இன்னுமொண்டு பூவாலயிங்கம் எண்ட உடன அவற்ற மகன் மாரெல்லாற்ற பேருகளெல்லம் ரஷ்ய கொமினிசப்பேருகள் எண்டு கேழ்விப்பட்டு உருகின்வனில நானும் ஒருத்தன். ஆனால் ஒரு நாசமறுப்பான் சொல்லுறான் அட விசரா அவங்கள் பிளானோடதான் உந்தப்பேருகள் வச்சவங்கள் எண்டு. என்ன பிளான் எண்டால் அபத்தக்கேள்வி கேளாத எண்டுறான்.
//இதுவே இன்றைய அவலங்களுக்கு அடிப்படை.//
அண்ண சரியாச்சொன்னியள் அண்ணை.
உதைத்தான் இந்த தேனி, குளவிக்கூட்டமும், பேரிலமட்டும் 'புரட்சிகர'த்தை வச்சிருக்கிறவங்களும் செய்யிறாங்கள். கேட்டால் 'எல்லாம் புலிபாசிசத்தின் வெளிப்பாடு' எண்டுறாங்கள். ஏனடா அல்லைப்பிட்டிக்கொலை செய்தனியள் எண்டால் 'தோழர் சுந்தரத்தின் பாசிசக் கொலை..' எண்டு ஆரம்பிக்கிறாங்கள்.
//அப்பு உமக்கு அரசியல்,அதன் ஆதிக்க நிலைமைகள்,அதிகாரச் செயற்பாடுகள் குறித்துத் துளியளவும் அறிவில்லை//
அறியலாமெண்டு வெளியிலபோய் ஏணியில ரெலிபோன் கேபிள் திருத்திக்கொண்டிருந்த ஒரு வெள்ளக்காறனிட்டக்கேட்டன். அவன் கேட்டான் எங்க உதக்கேள்விப்பட்டநீர் எண்டு. நான் சொன்னன் எங்கட தோழர் ஒருதர் எங்கேயோ ஜேர்மனியில இருந்து 'வலைப்பூவில' எழுதுறார் எண்டு. அதுக்கு அவன் சொன்னான் , நீ ஒண்டுக்கும் யோசியாத இப்படித்தான் இந்த ஜேர்மன்காறங்கள். விட்டிருந்தால் ஹிட்லருக்குக்கீழ சந்தோஷமா இருந்திருப்பாங்கள். இப்ப ஹிரோஷிமா, நாகசாஹி எண்டு கதைப்பாங்க்கள். அதோட 'வலைப்பூ' வேற இலவசமா முதலாளித்துவம் குடுத்திருக்கு. அந்த நாசமாப்போனத ஒழுங்காக்கத்தான் நான் இந்த ஏணியில மாரடிக்கிறன். அப்பதான் ஆக்கள் வசதியா கதிரயில இருந்து உழைக்கும் மக்களை ஒன்று படச்சொல்லி எழுதலாம் எண்டு. அப்ப இதை சொல்லட்டோ எண்டு கேட்டன், தாராளமாச் சொல்லு அனா வெள்ளக்காறன் சொன்னவனெண்டிடாத பிறகு என்ன 'கொள்ளக்காறன்' எண்டுபோடுவாங்கள் எண்டான்.
//ஒன்றுக்கு இன்னொன்று பதிலாகாது!//
அண்ணை இதைத்தான் அண்ணை அமெரிக்காக்காறனும் சொல்லுறானண்னை! தொழிலாளரின் வேலைநிறுத்தம் முதலாளிகளின் சுரண்டலுக்குப் பதிலாகாது, பாலஸ்தீனியவன்முறை இஸ்ரேலின் வன்முறைக்குப் பதிலாகாது எண்டு!
அண்ணை நீங்கள் எதாவது புதிசாச் சொல்லுங்கோண்ணை!
//அந்த அரசியலைப் புரிந்து எழுத முனையும்.இத்தகைய சூழலை நீர் எட்டும்போது எம்மிடம் மேற்காணும் வகையான அபத்தக் கேள்விகளைக் கேட்க மாட்டீர்//
அண்ணை, தெரியாமல் தானே கேக்கிறன். தெரிஞ்சாலேனண்ண நான் கேக்கிறன்.
'தோடுடைய செவியன்..' தேவாரம் படிச்ச நாளில இருந்து சத்தியசாயிபாபா விபூதி கொட்டுண் நாள் வரையும் இதைத்தானண சொல்லுறாங்கள். கடவுள் இருக்கிறாரே எண்டால் ' அத்தகைய சூழலை எட்டத்தன்னால் விளங்கும் அபத்தக்கேள்வி கேளாதீர்' எண்டு சொல்லுறாங்களண்ண. கடவுள் கொமினிசம், ஆதிக்க நிலைமைகள்,அதிகாரச் செயற்பாடுகள் எல்லாத்துக்கும் ஒரே 'அல்வா' தானா அண்ண? அப்பிடி எண்டா வசதியாப்போச்சு. மிக்க நண்றி அண்ண!!!
ஏனண்னை நீங்கள் பூவாலசிங்கத்தின்ர கடேல நல்ல மொத்தமான கொமினிசப்புத்தங்கள் மலிவா வாங்கிப்படிச்சிருப்பியளண்ண. அப்ப சீனாக்காறன்ர 'மகசீன 25 சதத்துக்கு வாங்கி கொப்பிக்கு உறை போட்டுக்கொண்டு திரிஞ்சிட்டன். இப்ப வாசிக்கலாமெண்டா நாசமாப்போன இங்கிலீசில விளங்குதில்ல அண்ணை! நீங்கள் தமிழில, ஜேமனில, பிரெஞ்சில படிச்சிருப்பியளண்ண கெஞ்சிக்கேக்கிறன் சொல்லுங்கோண்ண.
இன்னுமொண்டு பூவாலயிங்கம் எண்ட உடன அவற்ற மகன் மாரெல்லாற்ற பேருகளெல்லம் ரஷ்ய கொமினிசப்பேருகள் எண்டு கேழ்விப்பட்டு உருகின்வனில நானும் ஒருத்தன். ஆனால் ஒரு நாசமறுப்பான் சொல்லுறான் அட விசரா அவங்கள் பிளானோடதான் உந்தப்பேருகள் வச்சவங்கள் எண்டு. என்ன பிளான் எண்டால் அபத்தக்கேள்வி கேளாத எண்டுறான்.
//இதுவே இன்றைய அவலங்களுக்கு அடிப்படை.//
அண்ண சரியாச்சொன்னியள் அண்ணை.
உதைத்தான் இந்த தேனி, குளவிக்கூட்டமும், பேரிலமட்டும் 'புரட்சிகர'த்தை வச்சிருக்கிறவங்களும் செய்யிறாங்கள். கேட்டால் 'எல்லாம் புலிபாசிசத்தின் வெளிப்பாடு' எண்டுறாங்கள். ஏனடா அல்லைப்பிட்டிக்கொலை செய்தனியள் எண்டால் 'தோழர் சுந்தரத்தின் பாசிசக் கொலை..' எண்டு ஆரம்பிக்கிறாங்கள்.
//அப்பு உமக்கு அரசியல்,அதன் ஆதிக்க நிலைமைகள்,அதிகாரச் செயற்பாடுகள் குறித்துத் துளியளவும் அறிவில்லை//
அறியலாமெண்டு வெளியிலபோய் ஏணியில நிண்டு ரெலிபோன் கேபிள் திருத்திக்கொண்டிருந்த ஒரு வெள்ளக்காறனிட்டக்கேட்டன். அவன் கேட்டான் எங்க உதக்கேள்விப்பட்டநி எண்டு. நான் சொன்னன் எங்கட தோழர் ஒருதர் எங்கேயோ ஜேர்மனியில இருந்து 'வலைப்பூவில' எழுதுறார் எண்டு. அதுக்கு அவன் சொன்னான் , நீ ஒண்டுக்கும் யோசியாத இப்படித்தான் இந்த ஜேர்மன்காறங்கள். விட்டிருந்தால் ஹிட்லருக்குக்கீழ சந்தோஷமா இருந்திருப்பாங்கள். இப்ப ஹிரோஷிமா, நாகசாஹி எண்டு கதைப்பாங்க்கள். அதோட 'வலைப்பூ' வேற இலவசமா முதலாளித்துவம் குடுத்திருக்கு. அந்த நாசமாப்போனத ஒழுங்காக்கத்தான் நான் இந்த ஏணியில மாரடிக்கிறன். அப்பதான் ஆக்கள் வசதியா கதிரயில இருந்து உழைக்கும் மக்களை ஒன்று படச்சொல்லி எழுதலாம் எண்டு. அப்ப இதை தோழரிட்ட சொல்லட்டோ எண்டு கேட்டன், தாராளமாச் சொல்லு அனா வெள்ளக்காறன் சொன்னவனெண்டிடாத பிறகு என்ன 'கொள்ளக்காறன்' எண்டுபோடுவாங்கள் எண்டான்.
u r idiot.
//u r idiot//
எனக்கும் இந்தச் சந்தேகமுண்டு!
ஆத்தை அடிக்கொரு தடவை "மக்கு,மக்கு" என்பார்.
இப்பதாம் இது உங்கள் மூலமும் மறுபடியாக உறுதியாகிறது.-நன்றி!
Njdpiag; Nghy; ,Uf;f KbahjJjhd'
,e;j epiyapYk; hp.gp.rp thndhyp Gypapd; td;Kiw %yk; epWj;jg;gLtijAk;> mjpy; gzpahw;WgtHfis nfhy;y Kay;tijAk; ehk; nksdkhf mq;fPfhpf;f KbahJ. ''www.tamilcircle.net
,it ruoahd fUj;Nj.
Post a Comment