பிணக் கூத்து!
அவர்களுக்கென்றொரு அரசியல்
இவர்களுக்கென்றொரு அரசியல்
இடையில் மக்கள்:நான்-நீ,மற்றும் சுற்றம்
கொன்றபின் யோனியில் ஆண்குறி அமிழ்ந்ததா?
ஆராய்தல் அலுத்த கதை...
கொல்லுவதில்
எவரும் சளைத்தவர்களில்லை!
சிங்களத்து இராணுவத்திடமும்
புலிகளிடமும் பேசும்"மொழிகள்" வேறுபடலாம்
ஆனால்
கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே!!
காத்தான்குடி முன்
அநுராதபுரம்,
சமீபத்தில் கனகம் புளியடி,
வங்காலை வழி
யுத்தத்திற்கு நியாயம்:
"கொழும்பில்"கையை வைக்கப் புலிகளுக்கு ஆலோசனை...
தெரியாதா இது?
புலி அறியாத மக்கள் திரள் உண்டோ?
இறப்பவர்களும் கொலை செய்கின்றார்கள்
கொலையாகிவிடுபவர்களும் இறக்கின்றார்கள்
இறப்புக்கு:
ஸ்ரீலங்கா-தமிழீழ நாட்காட்டி,
சோற்றுக்கு:தேசவொருமைப்பாடு-ஈழ விடுதலை!
பிஞ்சுகளின்
குருதியில் கை நனைப்பவர்களுக்கு
தேசம்,
தேசியம்,
மொழி-மதம்
உணர்வு வழி உயர்வென்றால்
மக்களற்ற மண்ணை
எந்த மடையன்-மடைச்சி கோடிட்டுக் குறி வைப்பான்(ள்)ஸ்ரீலங்கா-ஈழமென்று?
கை நீட்டிச் சோற்றுக்கு அலைந்தவர்களின்
பிணங்களைக் காட்டி
ஈழத்துக்கு இரங்கற்பா பாடுவது தெருக்கூத்து-இது
திராவிடத்து அரசியலின் திருநோக்கு!
செத்தவர்களைச் சொல்லிப் பிழைப்பதும்,
சாக வைப்பதும் ஈழப் போருக்குப் புதிதில்லை
குமரப்பா,
புலேந்திரன்
குல தெய்வமான(புலிகளுக்கு) தீன் மறுக்கப்பட்ட திலீபன்!!!
ஒரு கணப் பொழுதில்
கூடு குலைத்தெறியப்பட்ட யாழ் முஸ்லீம்களும்
இரயர் போட்டெரிக்கப்பட்ட
மாற்றியக்கப் போராளிகளும்
மறுக்கப்பட்ட ஜனநாயகத்துக்காக
மரித்துப்போன விமலேஸ்வரன்- சிவரமணியும்
எதிர்க் கேள்வி கேட்டதற்கு இரையான செல்வி- ரஜனி திரணகமவும்
மனிதர்கள்தாம்-தமிழர்கள்தாம்!
மாத்தையாவும்
அவருடன் மரித்த பல நூறு பாலகர்களும்
கருணாவின் பாசறையில் ஒதுங்கியதற்காகக்
கொல்லப்பட்ட குழந்தைகளும்
தமிழிச்சிகளின் முலைக் காம்பைச் சுவைத்தவர்கள்தாம்.
முண்டங்களே!
பிணங்களின்மீதேறி
தமிழுக்கு உரிமை கேட்காதீர்!
பிணங்களின் முன்னைய நிலையிருப்பில்
ஓலைக் கொட்டிலில்
ஒரு நேரக் கஞ்சியையும் காட்டாதவர்கள் நீங்கள்.
உங்கள் அரச கரும மண்டபங்களில்
உலாவித்திரியும் தாது நீரின் உச்ச சுகாதாரத்தில்
ஒரு பங்கைக்கூட அவர்கள் நுகர்ந்தவர்களில்லை!
அறத்தின் அடி வயிற்றில் கத்தியேற்றி,
மறத்தின் உச்சத்தை உலகுக்கு வழங்கும்
ஒப்பற்ற தமிழ்த் தேசியக் கூச்சல்
இன்னும் எத்தனை பிணங்களோடு
உலகத்தில் கண்ணீர் சொட்டும்?
ஊரெல்லாம்
தமிழர்களை
எட்டப்பரும்,துரோகிகளுமாக
உருவகப்படுத்தும் புலிகள்
உயிர் பறிப்பதும்,கொலைக்கு ஆட்த் தேடுவதும்
தமிழீழ வீரத்தின் விழுப் புண்!
சிங்களத்து உலங்கு வானூர்த்திகளில்
கூடிக் கும்மாளமடித்து
புதுப் பொலிவொடு புன்னகைக்கும்
சூனாப் பானாக்களும்
புலித் தேவர்களும்
மதுவுரைஞர்களும்
சிங்களத்து இரணுவத்துடன்
சிரித்துக் கை குலுக்கும்போது
வங்காலையில்
வாய்க்கரிசி விழுகிறது!
சுண்ணத்தைச் சேர்ந்தே இடிப்பவர்கள்
தமிழகத்து மக்களிடம் திருவாசகம் படிப்பதற்கு
விண்ணப்பித்தபடி...
ஊரெங்கும்
தெருவெங்கும்
வங்காலைக் கொலைகளை
ஒட்டிவைப்பவர்கள்
சிங்களத்துக் கிராமங்களுக்கும்
கொலைகளை
ஏற்றுமதியாக்கிவிடுவதில் ஒருமித்த வீராப்புடன்!
உயிருக்கு:மொழியென்ன-மதமென்ன,இனமென்ன?
முன்னாளில்-
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்"என்ற
தமிழன் வள்ளலாரானார்!
"பேசிய தமிழனைக் கண்டபோதெல்லாம் போட்டேன்"என்றவரும்
தேசத்துப் பிதாவாவார்-பின்னாளில்!!
பிறகென்ன
பிணங்களின் வகை தொகைகளில்
பிணக்கு வைத்து
இனக் குரோதமொன்று தீயாகும்போது
இருப்பவர்களுக்கு
இன்னுமொரு விடுதலை
சாவாக வருவதில்
வியப் புண்டோ-கண்ணீருண்டோ?
அல்லைப் பிட்டியென்ன
அகதி முகாமென்ன
அழிவுக்கு வழிகாட்டி
அரசொன்று கோலாச்சி
தமிழர்களுக்குத்
தேசமொன்று இடுகாடாய்ச் சுடுகாடாய்...
போ,போ-போய்ப் பிணங்காவி வா
பின்னொரு தேசிய யுத்தஞ் செய்ய!
போதுமே உன்
பிணக்கூத்து ஈழமே
இனியாவது
இருப்பவரை வாழ்விக்க மாட்டாயோ?
ப.வி.ஸ்ரீரங்கன்
14.06.2006
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
13 comments:
உன்னை கொன்றால் தான் என்ன?
Hello Sri Rangan what are you trying to say? Keeping mouth shut with the expectation for problems to solve or dissolve themselves?? I do not understand. Could you elaborate what you intend to say?
இது தேவையில்லாதது.
(கொலை மிரட்டல் வந்தபோது வருத்தப்பட்ட ஒருவன்)
மிக நல்ல ஒரு பதிவு.தேசிய வெறி குறித்து தொடர்ந்து அம்பலப்படுத்துங்கள்.
வணக்கம்.
தாங்கள் முன்பொருமுறை கொலை மிரட்டல் குறித்தான பதிவொன்றெழுதி, தன் முடிவு நெருங்கிவிட்டதாகவும், மனைவி மக்கள் எல்லாம் கதறுவது போலவும் ஒரு 'புரளி' கிளப்பியவர் என்று ஞாபகம்.
நீங்கள் பதிவு போடாமல் இருந்தால் குடியொன்றும் மூழ்கி விடப்போவதில்லை என நினைத்து பின்னூட்டம் போட மனம் வரவில்லை. அது பரபரப்புக்கான வெற்றுக் கூச்சல் என்றும் ஒரு பொறி என்னுள் இருந்தது. பின்னூட்டம் வாங்குவதனைக் காட்டிலும் தங்களின் பதிவுகள் வேறொன்றும் 'புரட்சி' செய்திடவில்லை.
பாசிசம் குறித்தெல்லாம் பேசிய போது எல்லாம் தங்களின் 'அறிவு ஜ“வி'ப் பிம்பம்தான் என்னுள் இருந்தது.
நடுநிலைமையுடன் தாங்கள் சிந்திப்பதாகவும் நினைத்தேன்.
எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி வருகிறீர்கள். அது சரி எனக்கு எல்லாம் தங்களைப் பற்றி என்ன பிம்பம் இருந்தால் என்ன வந்து விடப் போகிறது?
ஏழாம்தரமாகக் கூட உங்களை விமர்சிக்க முடியும். ஆனால் அது உங்களுக்கு 'உறைப்பதை'க் காட்டிலும் 'எரிச்சல்' உண்டாக்கி விடக் கூடும் என எழுதவில்லை. எனக்கு ஒன்றும் அறிவுஜ“வி பிம்பம் குறித்தான கவலையில்லை. ஏழாம் தரமாக விமர்சிக்கவும் தயங்கப் போவதில்லை.
முளைத்து மூன்று இலை கூட விடாத 'பொடிப் பையன்' நான். தமிழன் என்பதனைத் தவிர எனக்கும் ஈழ மக்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை.
எனக்கு இருக்கும் அக்கறை கூட மெத்த அறிந்த உம் போன்றவரிடம் இல்லையே என்பதுதான் என் வருத்தம் எல்லாம்.
ஏன் தேவையில்லாதது.
அவர் கூறியவற்றில் தவறெங்கே என்று சுட்டிக்காட்டலாமல்லவா?
எல்லாக் குழந்தைகளும் குழந்தைகள்தான். எல்லா உயிரும் சமம்தான்.
இராக் கொலைகளுக்கு அமிரிக்காக்காரன் கூட இப்படி வக்கிரத்தனமாகச் சொல்லமாட்டான்.
இதையே வேறு யாராவது சொன்னால் 'ஏகாதிபத்தியம், குறைந்த பட்ச மானிடப்பண்பு, புலி வக்கிரம், தரகுமுதலாளி, குட்டி-பூர்சுவா எண்று சொல்லுவார் இவர்.
இவர்தான் சிறிது நாட்களின் முன் 'புலிகள் படத்தை வைத்துக்கொண்டு தேடுகிறார்கள், மனுசி கண்ணீரும் கம்பலையுமா னிக்கிறா வயரைப் புடுங்கிப் போட்டா'
என்று வலையில் அழுதவர். இந்த அழுகைக்கு மயங்கி சிலர் தனிப்பதிவு வேறு போட்டார்கள். இன்னும் சிறிது நாளில் 'புலிகள் கவிதையை வைத்துக்கொண்டு தேடுகிறார்கள்' என்று போட்டாலும் போடுவார்.
இதைச் சொன்னதற்கு எனக்குப் குறைந்த பட்ச மானிடப்பண்பிலாதவன் பட்டம் கூடக் கிடைக்கலாம்!!!!!
Hello, It's really needed one on this time. One moment I went back to my village as a normal tamil person. This is the real life they got after this so call "Fredom Fight".
Could you do one research on the solutionsnegotioans spoiled by LTTE in past.
//உன்னை கொன்றால் தான் என்ன?//
//இது தேவையில்லாதது.//
//தாங்கள் முன்பொருமுறை கொலை மிரட்டல் குறித்தான பதிவொன்றெழுதி, தன் முடிவு நெருங்கிவிட்டதாகவும், மனைவி மக்கள் எல்லாம் கதறுவது போலவும் ஒரு 'புரளி' கிளப்பியவர் என்று ஞாபகம். //
**********************************
கருத்திட்ட அனைவருக்கும் வணக்கம்-நன்றி!
மேலும், அன்பர் வா.மணிகண்டனின் ஆதங்கத்தைப் பற்றிச் சிறு அபிப்பிராயம்.மணிகண்டன்,தாங்கள் மொழிசார்ந்து,இனம் சார்ந்து உணர்ச்சி வசப்படும் அளவுக்கு, அறிவுசார்ந்தும் இக்கவிதையை விளங்க முற்பட்டிருக்கவேண்டும்.வெறும் உணர்வுரீதியான மதிப்பீடுகளால் எதுவும் ஆவதில்லை!
இதைவிட என் சுய வாழ்வு குறித்தொரு கிண்டலை அள்ளி வந்திறைக்கும் உங்களுக்குப் புலிகளின்-ஈழ அராஜக இயக்கங்களின் கொலைக் கரம் குறித்து என்ன புரியும்?
புரளி-புடலங்காய்... இவைபோன்ற நையாண்டி எங்ஙனம் வருகிறது?
நீங்கள்- எமது வாழ் சூழலுக்குள்ளிருந்து வாழ்பவரில்லை.உங்களுக்கு நமது சமூக அச்சமென்பது வெறும் சினிமா-நாடகத் தனமாகப் புரியப்படுவது தங்கள் வாழ் சூழலின்-சமூக வாழ்வின் பிரதிபலிப்பே.
புலிகளைப் போன்ற பாரிய வன்முறைசார்ந்தவொரு இயக்கம்-தமது இணையத்தில்-அதுவும் எட்டப்பன்களை வெளிக்காட்டித் தண்டிப்பதாகச் சொல்லும் இணையத்தில், உம்மைச் சுட்டி,உமது படத்தையும் பிரசுரித்துக் கேவலாமாகச் சமூக விரோதியாகக் கருத்துக்கட்டி,அதையும் பல இலட்சம் தமிழ் மக்கள் பார்வைக்கு வைத்து,அவர்களிடத்தில் உம்மைச் சமூக விரோதியாக் காட்டும் பட்சத்திலும்,நீர் இருக்கும் இடத்தின் குறிப்பிட்ட ஆயுத அமைப்பின் பிராந்தியப் பொறுப்பாளர்கள் உம்மைத் தேடி,பகுதிவாழ் தமிழர்களிடம் விசாரித்துக் கொள்ளும் தறுவாயில் நீர் என்ன செய்வீர்?
உமக்குத் தெரியுமா ஈழ ஆயுதக் கும்பல்களின் கொலைச் செயல்கள்?
சும்மா இன அபிமானம்,தமிழ்,சகோதரர்கள் எண்ட "காலிப் பெருங்காய டப்பா" விளையாட்டெல்லாம் எங்களைப் போன்று உயிருக்கு அச்சுறுத்தல்விடப்பட்ட தமிழரிடம் வேண்டாம்!
எமது கருத்துக்களை- நாம் என்ன சொல்கிறோமென்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தோடு விமர்சிப்பதுதாம் "ஆய்வு" அறிவு முறையாகும்.
நடுநிலை,இடைநிலை என்று நீரே கற்பனைகளோடு வந்து கதையளப்பதற்கு நாம் பொறுப்பாளிகளல்ல.
நாம் பக்கஞ்சார்ந்து சிந்திப்பவர்கள்.
அனைத்து அதிகாரங்களுக்கும் குறுக்கே நிற்பவர்கள்!
எங்கே மனிதர்கள் ஒடுக்குமுறைக்குட்படுகிறார்களோ அங்கேதாம் எமது பக்கச் சார்பு நிலைபெறுகிறது.
தமிழ்,தமிழென்று திராவிட அரசியல் வாதிகள் கத்தும்போது கைதட்டி,மாலைபோட்டு வரவேற்கும் அரசியல் நோக்குடையதல்ல ஈழத்து அரசியல் நோக்கு!
இங்கே கொடூரமான கொலைவெறி ஆயுதங்களுக்கு நாம் முகங் கொடுத்தாக வேண்டும்.நமது அரசியல்,சமூக வாழ்வின் இன்றைய கடைக் கோடி நிலைமையை தமிழ்-தேசிய விடுதலை,ஈழம் எனும் கோதாவுக்குள் புதைத்துவிட்டுச் சமன்படுத்திவிட முடியாது!நாம் இதுவரை எண்பதாயிரம் உயிர்களைப் பறி கொடுத்துள்ளோம்.
நம் மக்களுக்கு விடுதலை பெறுவதென்று கூறிய நமது இயக்கங்களே நமது மக்களை நாயிலும் கேவலமாகச் சாகடிக்கும்போது அதை எந்த விடுதலையின் பேரில் நியாயப் படுத்துவது?
எமக்காக எம்மைக் கொல்வதாக எவரெவரோ உரைத்துக் கொண்டால்-அந்த உரைப்பிலும்,கொலைக்கான முனைப்பிலும் மையம் கொள்ளும் அரசியல் நலம் என்ன?இந்த நலனின் நோக்கத்தை நிறைவு செய்வதற்காக அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதுதாம் விடுதலையென்றால்,அத்தகைய விடுதலை யாருக்கானது?
நீங்கள் ஒரே மொழியைப் பேசினாலும் மக்கள் சமுதாயமானது உழைப்புப் பிரிவினையால்-செல்வப் பங்கீட்டு முறைமைகளால் வர்க்கங்களாகப் பிளவுற்றிருக்கிறது.இங்கே பற்பல வர்க்கங்கள் தத்தமது நலனோடு முட்டி மோதும்போது கொலைகள் தாராளமாக நடைபெறுகிறது.இதைத் தடுத்து நிறுத்தி,சமுதாயத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைத்து,வர்க்க,சாதி பேதமற்ற முறைமையில் ஆட்சி பரிபாலனம் நடந்தாக வேண்டும்.இதுதாம் எமது நோக்கு.இவ் நோக்கைத் தம்மளவில் விரும்பாதா அதிகாரா மையங்கள் நம்மைத் தமது பரம எதிரியாக முன் நிறுத்தி எமது உயிரைப் பறிப்பதொன்றும் புரளியில்லை.
எமக்குப் புரளி கிளப்பி,அரசியல் நடாத்தும் கட்சியோ,இல்லது கம்போ நம்மிடமில்லை.நாம் உதரிகள்-தனி நபர்கள்.உயிர் வாழ்வதற்காக உடல் உழைப்பில் ஈடுபடும் கூலிகள் நாம்!நம்மிடம் இத்தகைய அராஜக-சோடிச எண்ணங்களை மூட்டைகட்டி வர வேண்டாம்.நாம் எதற்காக இவ்வளவு தூரம் காட்மாக விமர்சனத்தோடு எழுதுகிறோம்?
நம்மை எந்தத் தளத்திலிருந்துகொண்டு "புலி அரச ஜந்திரம்" தனது நிறுவனமயப்பட்ட பரப்புரையாளர்களால் எதிர் கொள்ள முனைகிறது?
இவை காப்பாற்றாதபோது நம்மைப் போட்டுத் தள்ளும் சர்வ வல்லமையை உறுப்பினர்களுக்குக் கொடுத்து நம்மைக் கொல்வதும்,அடித்து முறிப்பதும் தொடர்கதையாகி வரும்போது நீங்களோ புரளி என்கிறீர்கள்!
//"உன்னை கொன்றால் தான் என்ன?"// புலிவால்களோ இப்படிக் கேட்கிறர்ர்கள்!இதுதாம் காயடிக்கப்பட்ட பாசிச மனோபாவம்!இங்கேதாம் பாசிசம் அதிகாரத்தைப் பெறுகிறது!
எழுதப்பட்ட கவிதையில் என்ன கருப்பொருள் சமூகஞ் சார்ந்து சொல்லப் படுகிறதென்பதையும்,அக்கவிதையில் சிங்கள-புலி அரசுகளை எங்ஙனம் விமர்சிக்கப் படுவதென்பதையும் புரிவதற்கு நீங்கள் அன்றைய காலங்களில் நடந்தவையின்"குறிப்பான்களை"முதலில் மனதில் இருத்தும் பண்பைப் பெற்றாகவேண்டும்.கவிதையில் சொல்லப் பட்ட உண்மைகளைக் கவனத்தில் எடுத்து உள்வாங்காமால் அதை விமர்சிக்க முடியாது!
தேச விடுதலைக்கென்று சேர்த்துக் கொள்ளப்பட்ட எத்தனையோ பாலகர்களைப் பாடையில் அனுப்பிய ஈழ ஆயுதக் குழுக்களையும்,அவைகளின் மக்கள் விரோதத்தையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது,மக்களின் தலைவிதியை மக்களே தீர்மானிக்கும் ஜனநாயகப் பண்பைப் பெறுவதற்கே!இதைவிட்டுவிட்டு நாட்டின் பெயரால்,மொழியின்-மதத்தின் பெயரால் கொலைகளைக் கண்ணை மூடி ஏற்றுக் கொண்டால் அதுவே பாசிசத்தின் உச்சக் கட்டத்துக்கு நகர்வதாகும்.
இத்தகைய பேர்வழிகள் நாம் அல்ல!
எங்கள்மீது எந்தப் பிம்பமும் வேண்டாம்.நாம் மிகச் சாதரணப் பாமர மக்கள்!
நான் அந்தச் சூழலில் வாழவில்லை என்பதனைத் தெளிவாகவே சொல்லி இருக்கிறேன். நான் இது குறித்து அதிகம் பேசாத்தற்கான காரணமும் அதுதான்.
நான் 'காலிப் பெருங்காய டப்பா' என்று எவ்வாறு சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. என்னைச் சார்ந்தவன் என்று நான் கருதும் ஒருவன் அழும் போது அவனுக்காக நான் குரலெழுப்புவது உங்களுக்கேன் தவறாகப் படுகிறது?
நீங்கள் 'பக்கஞ் சார்ந்து சிந்திப்பவர்' என்பதுதான் நான் சொல்ல விழைந்ததும். ஒரு தலைப் பக்கமாக.
இது குறித்து நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள். எனக்கு தவறெனப் படும் வரை விமர்சித்துக் கொண்டே இருப்பேன். ஆனால் திராவிடம், தமிழ், கரவொலி, பின்னூட்டம் என்ற எந்த ஒரு சங்கதியும் அதில் இராது. உயிர்-என் சகோதரனின் உயிர் மட்டுமே.
நான் அளப்பது கதையாகவே இருக்கட்டும். கவலையில்லை.
சிறீரங்கன் சும்மா ஒரு தகவலுக்காக மட்டும் நீங்கள் எந்த ஆண்டில் புலம்பெயர்ந்தீர்கள்?
//நான் அந்தச் சூழலில் வாழவில்லை என்பதனைத் தெளிவாகவே சொல்லி இருக்கிறேன். நான் இது குறித்து அதிகம் பேசாத்தற்கான காரணமும் அதுதான்.//
இப்படித் தெளிவாகச் சூழலைப் புரிந்த நீங்கள் எப்படிப் புலிகளால் தொடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலைப் புரளியென எழுதுகிறீர்கள்?புலிகள் மேற்குலகில் எத்தனை முறைமைகளில் மாற்றுக்கருத்தாளர்களை அழித்துவருகிறார்கள் என்பதைப் புரியாததைப் புரிந்திருப்பவருக்குப்"புரளி"எனும் நையாண்டியும் புரிந்திருக்கிறது!இதுதாம் புலி மனது!-வாழ்க உமது தமிழுணர்வு!!
//நான் 'காலிப் பெருங்காய டப்பா' என்று எவ்வாறு சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. என்னைச் சார்ந்தவன் என்று நான் கருதும் ஒருவன் அழும் போது அவனுக்காக நான் குரலெழுப்புவது உங்களுக்கேன் தவறாகப் படுகிறது?//
..."காலிப் பெருங்காய டப்பா"நீங்களல்ல!
இங்கே தனிநபர் சுய முனைப்பிலிருந்து எவரும் கருத்தாடுவதில்லை.மாறாகப் பொதுத்தளத்தில் தமிழ்ச் சமுதாயத்தின் அரசியல் வக்கிரத்தை-போலித் தனத்தை-அரசியல் கயமையைக் குறித்தே இக் கருத்து-வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது.இதை விளங்கிக் கொள்ளத் திராவிட அரசியலையும்-புலி அரசியலையும் புரிபவருக்கு மேலுஞ் சொல்லத் தேவையில்லை!
உங்கள் குரலுக்கு யாரும் இடைய+றையாய் நிற்கவில்லை.அது உங்கள் உரிமை.அதுபோலவே எனது குரலும் எனது உரிமை.அது வெறுமனவே தமிழ் மனதாக இருப்பதில்லை.மாறாக மனித மனமாகவே உருப்பெறுவது.இங்கே தமிழர்களைத் துரோகியாக்கிக் கொன்று குவிக்கும் அரசியலானது தனக்கு இலாபமாக எது தேவையோ அதை முன் நிறுத்தும்போதே விமர்சனம் எழுகிறது.மூதூரில் முஸ்லீம்களை அவர்களது ப+ர்வீகத் தாயகத்திலிருந்து விரட்டும் தமிழ்க் குறுந்தேசிய வெறி,மட்டக்களப்பில் மாற்றியக்கப் போராளிகளைத் தமிழ்ர்களாக இருந்தும் துரோகியெனக் கொல்லுகிறது!இத்"துரோகி"எனும் வார்த்தைக்குள் எவர் நியாயம் தமிழ் நலன் என்பதாக வியாபிக்கிறது?
கனகம் புளியடியில் பாலகனைக் கொன்ற புலிகள்,வங்காலைக் கொலைகளைப் பட்டியல் போடுகிறது.யாழ் வீதியில் ஓடவோடத் துரத்திக் கொல்லப்பட்ட ரெலோப் போராளியளை எந்த நலன் துரோகியாக்கியது?
யாழ்ப்பாண முஸ்லீம்கள் எந்தக் காரணத்துக்காகத் துரத்தப்பட்டார்கள்?இதையே(முஸ்லீம்கள்மீது சுமத்ததப்பட்ட அவதூறுப் பழி) இப்போது புலித் தலைமைகள் சிங்கள உலங்கு வானூர்த்திகளில் பறந்து திரிந்து செய்யும் போது இங்கே யாரூ துரோகி?
உங்கள் குரலில் தமிழ் நாட்டில் பரபரப்பான மேல்வளவு சாதியக் கலவரத்தில் உயிரோடு வெட்டிச் சரிக்கப்பட்ட தலித் தமிழர்களின் கொலைகள் வெளி வந்ததா?இது குறித்து உங்கள் தமிழ் மனம் எந்தப் பாசத்தில் இருக்கிறது?
துப்பாக்கிப் பயங்கராவதப் பொறுக்கி அரசியலிலிருந்து பிறப்பெடுக்கும் சந்தர்ப்பவாதக் கொலை அரசியலே புலிகளின் பரப்புரைகள்!இவர்களே அப்பாவித் தமிழர்களை வகை தொகையின்றி இன்றுவரைத் துரோகிகளெனக் கொன்றுவரும் சூழலில் இந்த வங்காலைக் கொலைக்கும் இந்த வகை அரசியலே எதிர்த் தரப்பிடம்-சிங்களச் சியோனிசத்திடம் இருக்கிறது!
இத்தகைய நிலைமைகளை மூடி மறைக்கும் புலிப் பரப்புரைகள் தமது குருதிபடிந்த கரங்களைச் சிங்களப் பாசிசத்துக்குள் மறைத்துப் பதுங்குவது மீளவும் இதே வகைக் கொலைகளுக்குள் தமது இருப்பைக் காப்பதற்கே!
இதை அம்பலப் படுத்தாமல் வங்காலை போன்ற இன்னும் தொடர இருக்கும் கொலைகளை நிறுத்தமுடியாது!
//நீங்கள் 'பக்கஞ் சார்ந்து சிந்திப்பவர்' என்பதுதான் நான் சொல்ல விழைந்ததும். ஒரு தலைப் பக்கமாக//
நாம் ஒரு தலைப்பட்சமாகச் சிந்திப்பதென்பவர்கள்தாம் தமது ஒரு தலைப்பட்சமான "புலி மனதை"மறைப்பதற்குப் பிரயத்தனஞ் செய்கிறார்கள்.புலிக்கு வால்பிடிப்பவர்களும்,புலியின் பரப்புரைப் பீரங்கிகளும் தமிழின்-ஈழத்தின் பெயரால் துரோகிகளாக்கிக் கொல்லப்படும்-துரத்தப்படும் மக்களைப்பற்றி வாயே திறப்பதில்லை!புலிகளின் நலன்களுக்காக ஒரு தேசிய இனத்தின் ஜீவாதாரவுரிமையே ஏலமாகப் போகிறது!இதுவரை கொல்லப்பட்ட 80.000. தமிழ் பேசிய மக்களின் உயிர்கள் இந்த ஈனத் தனத்தின்வாயிலாகப் பறிக்கப்பட்டது!
இன்று(15.06.2006) 62 பேருந்துப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளார்கள்.இதுள் சிறார்கள்,தாய்மார்கள் அடக்கம்!இவர்களை எவன் கொன்றான்?
புலி சொல்லும் சிங்களவன் என,சிங்கள அரசு சொல்லும் புலியென!
ஆனால் செத்தவர்கள் அப்பாவிகள்!
இந்த அரசியலைத்தாம் நாம் கேள்வி கேட்கிறோம்!-நாசமாய்ப்போன ஈழப்போராட்டம்!
இன்னும் எத்தனை மனித உயிர்களைக் குடிக்கும் இந்தத் தேசம்?
உன்னை துண்டு துண்டாக வெட்டி கொல்ல வேணும் நாயே!
Post a Comment