படுகொலை அரசியல்.
இன்றைய இலங்கை எங்கே செல்கிறது?
இது நவீனப் பண்பாடுடைய மக்கள் வாழும் நாடுதாமா அல்லது காட்டுமிராண்டிக் கூட்டம் வாழும் கற்கால இலங்கையா?
அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கொலைகாரர்களால் செயற்படுத்தப்படும் காட்டுமிராண்டிப் படுகொலைகளுக்கு நிகராகப் பற்பல தாக்குதல்களை இலங்கை-புலி இராணுவங்கள் செய்துமுடிக்கிறார்கள்,-சாவது அப்பாவி மக்கள்!
சமீபத்து வங்காலைக் கொலைக்கு கொழும்பில்-சிங்களக்கிராமங்களில் புலிகள் தாக்கவேண்டுமென விரும்பிய தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள கெப்பித்தக்கொலாவ எனும் சிஙகளக்கிராமத்தில் பேரூந்து வெடித்துச் சிதறுகிறது இன்று! சாவு:64 பயணிகள்-அப்பாவி ஏழை மக்கள்!!-குழந்தைகள்...
குஞ்சு குருமான்கள் என்ன பாவம் செய்தார்கள் இந்த நாட்டில்?
நிம்மதியாக வாழும் இயல்பு நிலையை மறுக்கும் அரசியலின் நோக்கமென்ன?
கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக நடைபெறும் பாலஸ்தீன-இஸ்ரேலியப் பயங்கரவாதத் தாக்குதல்கள் யாவும் பழிக்குப் பழி தீர்க்கும் பயங்கரவாதத் தாக்குதல்களாகவே உலகத்தால் பேசப்படுகிறது.எனினும், இத்தகைய தாக்குதல் தொடர்கதையாய்...
இது,இன்று இலங்கையிலும் தொடர்கிறது.
நாடும் மக்களும் எங்கே செல்லப் போகிறார்கள்?
இந்த விவஸ்த்தையற்ற "இலங்கை-புலி அரசியல் பயங்கரவாதம்" எந்த நிலையில் செயலூக்கமாக முன் தள்ளப்படுகிறது?இதைச் செய்து முடிக்கும் மனிதர்கள் எந்த இலக்கை எட்டிவிட முடியும்?வரலாற்றைக் கற்றவர்கள்தாமென தம்பட்டம் அடிக்கும் தமிழ்ச் சிறார்களுக்கு பாலஸ்தீனம்-இஸ்ரேல் பாடம் மனசாகவில்லை!
இன்றைய இலங்கை-புலிப் பயங்கரவாதம் உலகத்துக்கு ஒரு பகுதி மக்களினத்தை(தமிழ் பேசுவோரை)படுகேவலமான காட்டுமிராண்டிகளாகவும்,பயங்கரவாத நோக்குடையவர்களாகவும் காட்டி விடுகிறது.கெப்பித்தக் கொலாவத் தாக்குதல் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமை வாதத்துக்குக் கிடைத்த மாபெரும் அடியாகும்.இது தமிழ் மக்களினதுமட்டுமல்ல உலகத்திலுள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை அரசியல் வழியில் மட்டுமே தீர்க்க முடியுமென மீளவும் நிரூபிக்கும் படுகொலைகளாகும்.
ஈழத்தமிழ் ஆயுதக்கும்பல்களால் எந்தப் பொழுதிலும் புரட்சியை முன்னெடுக்க முடியாதென்பதற்கு மீளவும் உறுதி கூறும் தாக்குதல்தாம் இது.
இந்த வகை அரசியல் எம்மினத்தை இன்னும் அரசியல் அநாதையாக்கும் சூழ்ச்சிமிக்கப் பயங்கரவாதச் செயற்பாடாக விரிந்து முழு இலங்கையையும் ஒரு பெரும் இனவாதத் தீக்குள் சிக்க வைக்கும் கபட அரசியலாகும்.இதனால் அரசியல் வகைப்பட்ட எந்த முன்னெடுப்பும் பின் தள்ளப்பட்டு,ஆயுதக் கலாச்சாரத்தில் மூழ்கிவிட்டர்வகள் தம்மையும் தமது இருப்பையும் தக்க வைப்பதற்கான இனவாத அரசியலையும்,போரையும் தொடக்கி நமது மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் அழித்துவரத் திட்டமிட்டாச்சு!-இங்கே புரட்சிகரமான போராட்டம் மிகவும் பலவீனமாக்கப்பட்டு மக்கள் ஐக்கியம் பாழடிக்கப்படுகிறது!!இது தமிழர்களின் அனைத்துத் தார்மீக உரிமைகளையும் இல்லாதாக்கி வருகிறது.
நாம் எதிர்வு கூறும் எந்த அரசியல் முன் நகர்வும் மேலும் அபிவிருத்தியடைய வாய்ப்பில்லை!எது எப்படி நடைபெற வேண்டுமோ அது அப்படி முன்னெடுக்கப்படும் அரசியில் விய+கத்தைச் சிதறடிக்கும் இயக்க-கட்சி நலன்கள் மக்களின் இருப்பைச் சூறையாடுகிறது.அது மனிதத் தன்மையே இல்லாத பயங்கரப் பாசிசத்தை இலங்கைத் தீவில் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
ஆயுதக் காட்டுமிராண்டிகள் அப்பாவிகளின் உயிரைத் தமது தலைமைகளின் இருப்பின் பொருட்டுப் பறிக்கும்போது நாடு மக்களின் சுயாதிபத்தியத்தை சட்டரீதியாக வலு விழக்கவைக்கிறது.இங்கே மானுடவுரிமை,ஜனநாய மரபு யாவும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு,கட்சி-இயக்க ஆதிக்கம் வன்முறைசார்ந்த அதிகாரமாக நிறுவப்படுகிறது.இந்த வன்முறைசார் அதிகாரமானது எந்தத் திசைவழியை மக்களின் விடுதலைக்கு வழங்குகிறதென்றால்-மக்களின் விடுதலையென்பது குறிப்பிட்ட அதிகார வர்க்கத்தின் நலன்களைக் காக்கும் திசைவழியையே மக்களின் விடுதலையாக மக்கள் குழுமத்தில் சமூக எண்ணமாக விதைக்கிறது.இது மிகக் கொடுமையான மக்கள் விரோதமாகும்.மேலும் பிறிதொரு பாதையில் மக்களின் அனைத்து வளங்களையும்(ஆன்ம-உடல் மற்றும் பொருள்)தமது இருப்புக்கு இசைவாகத் திருடிக் கொள்கிறது.
இனிமேல் இந்த வகை அரசியலை தமிழீழத்துக்கான இறுதி இலட்சியமாக விதந்துரைக்கும் பரப்புரைகள் மக்கள் வெளிக்குள் விதைக்கப்படும்.இது பாரிய பின்னடைவை ஜனநாய முன்னெடுப்புகளுக்கு வழங்கும்.இத்தகையவொரு சூழலில் இலங்கை அரசியல் நகர்வு நிச்சியம் தமிழ் பேசும் மக்களின் அனைத்துவகைவுரிமைப் போராட்டத்தையும் சிதறிடித்து, தமிழ் மக்களைப் புதிய வகையில் ஓடுக்கும் சட்டரீதியான யாப்புகள் இலங்கைச் சிங்கள அரசால் எய்யப்பட்டு,தமிழ் மக்களின் தலையில் தீயை அள்ளிக் கொட்டும்.இங்கே பயன் பெறுவது ஆயுதக் காட்டுமிராண்டிகளின் தலைவர்களும்-மாபியாக் கும்பல்களுமே!
மக்களோ எந்த ஜனநாயக விழுமியங்களுமற்ற இலங்கை மண்ணில் யுத்தப் பிரபுகளின் அடியாட்களாகி அடிமையாய் வாழவே நேரப்போகிறது!
இதைத் தடுத்தாக வேண்டும்!
மக்கள் தமது பிரச்சனைகளுக்கான போராட்டத்தை தமது இருப்புக்கான போராட்டத்தோடு இணைத்து,ஜனநாயகரீதியாக வீதிகளுக்கு இறங்கியாக வேண்டும்.இங்கே இன,மத பேதங்கள் கடந்து மக்களின் கரங்கள் கோர்வைப்படுவது அவசியம்.இந்த நிலைமை உருவாகாதவரை பாசிச அதிகாரங்களை வீழ்த்த முடியாது!மக்களை அணிதிரட்டிப் போராட வைக்கும் சக்தி மக்களின் நலனில் அக்கறையுடைய கல்வியாளர்களிடமே தேங்கிக்கிடக்கிறது.
இவர்களது பங்களிப்பு என்றுமில்லாதவாறு இன்று மிக அவசியமாக இருக்கிறது.ஆயுதங்களுக்காக-அடக்குமுறைகளுக்காகத் தமது ஆன்ம வலுவை இழந்திருக்கும் மக்கள் நல இன்றைய கல்வியாளர்கள் நாளைக்கு முழுமொத்த இலங்கை மக்களையும் அழிக்கும் அரசியலுக்கு உடந்தையாகுவார்களா அல்லது மக்கள் எழிச்சிக்கு வித்திடுவார்களா என்பதை இனிவரும் காலவர்த்தமானம் நிர்ணயிக்கும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
16.06.2006
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின்...
20 comments:
//சமீபத்து வங்காலைக் கொலைக்கு கொழும்பில்-சிங்களக்கிராமங்களில் புலிகள் தாக்கவேண்டுமென விரும்பிய தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள கெப்பித்தக்கொலாவ எனும் சிஙகளக்கிராமத்தில் பேரூந்து வெடித்துச் சிதறுகிறது இன்று! சாவு:64 பயணிகள்-அப்பாவி ஏழை மக்கள்!!-குழந்தைகள்...//
ஸ்ரீரங்கன் சொல்வதற்கு மன்னிக்கவேண்டும். சில வேளைகளிலே நீங்கள் என்ன பேசுகின்றீர்களென உணர்ந்துதான் பேசுகின்றீர்களாவெனத் தெரியவில்லை. விட்டால், தமிழர்கள் சீனவெடி, வாணவேடிக்கை எல்லாம் விட்டு சிங்கள மக்கள் இறப்பினைக் கொண்டாடினார்களென்று சொல்வீர்களோ எனத் தோன்றுகின்றது. இணையத்திலோ அல்லது வேறெங்காவதோ, கொல்லப்பட்டவர்களைக் குறித்து மகிழ்ச்சியைக் கொண்டாடிய தமிழர் ஒருவரையாவது உங்களுக்குக் காட்டமுடியுமா? வங்காலையிலும் அல்லைப்பிட்டியிலும் இறந்தவர்கள் குறித்து பெரும்பான்மையாகச் சிங்களவர்கள் பங்குபற்றும் (இ)லங்கா அகடமிக் தளத்தின் பேச்சுத்திண்ணையிலே சென்று பாருங்கள். வேறுபாடு தெரியும். இதனால், தமிழர்களின் மனிதாபிமானம் சிங்களவர்களினதிலும் பெரிதென்றெல்லாம் உய்த்துணர்ந்து முடிவு சொல்ல நான் வரவில்லை. எந்த வயலும் சில பதர்கள் விளையவே செய்யும். ஆனால், கெப்பற்றிபொலாவ வெடிப்பிலே இறந்தவர்கள் குறித்து, தமிழர்கள் மகிழ்ச்சியடைகின்றார்களென்பதற்கு ஒரு சின்ன ஆதாரத்தினைக்கூட நீங்கள் காட்டியிருக்கலாம். அங்கும் சிறுபிள்ளைகள் இறந்து கிடப்பது நெஞ்சிலே அடிக்கவே செய்கிறது. புலிகள் செய்தார்களா இல்லையா என்று ஆதாரம் காட்டுங்கள் என்றெல்லாம் எனக்குத் தேவையில்லாத அரசியலிலே நுழைய விரும்பவில்லை. ஆனால், சும்மா செக்குமாட்டுச்சுற்றலிலே "தமிழர்கள் மகிழ்ந்தார்கள்" என்று எழுதுவது நியாயமில்லை. வேண்டுமானால், சந்தடி சாக்கிலே உங்களுக்கு இப்படியாக எழுத அவல் கிடைத்திருக்கின்றதென தமிழராக மகிழ்கின்றீர்களோ தெரியவில்லை. :-( விடுதலைப்புலிகளை நீங்கள் குற்றம் சொல்வதென்பது வேறு; "சும்மா இருக்கும் தமிழர்களெல்லாம் மகிழ்ந்தார்கள்" என்று 9/11 இன் பின் பலஸ்தீனியர்கள் மகிழ்ந்து ஆடிப்பாடிக் கொண்டாடினார்களென அறிக்கை விட்ட அமெரிக்க ஊடகங்கள் மாதிரியாக சங்கூதிக்கொண்டிருப்பது வேறு.
ஆடு நனையுதெண்டு ஓநாய் நீர் அழுகுறீர்.
பெயரிலி,வணக்கம்!
எனக்கு காரணமின்றி எதையும் எழுதும் மனது கிடையாது!
தீவு என்பவரின் பதிவுக்குச் சென்று பாருங்கள்!அங்கே வன்னியன் என்ன சொல்கிறார்?
"புலிகள் கொழும்பில் கைவைக்க வேண்டுமென்கிறார்."
இவர்களது பதிவுகளில் இதே கதைகளையே மீளவும் கூறியுள்ளார்கள்.
இங்கே யாரும் விரும்பும்படி அரசியல் நிகழ்வுகள் வருவதில்லை-அது அரசியலில் மிகவும் நிர்ணயஞ் செய்யப்பட்ட நலன்களைக் காப்பதற்கான திட்டமிட்ட நகர்வு.இது உங்களுக்கும் தெரியும்.
எதை எழுத வேண்டுமென்றும் எப்படி எழுதவேண்டுமென்றும் முதலில் அறிந்துவிட்டே நான் எழுதுகிறேன்.
http://theevu.blogspot.com/2006/06/ltte-commander-killed-in-claymore.html
வன்னியன் said...
ம்.
நீண்டகால உறுப்பினர்.
ஆகாய கடல்வெளிச்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் சூட்டி இவரின் தமையன் என நினைக்கிறேன். முக்கிய தளபதியொருவரின் இழப்பிது.
ஒன்றில் புலிகள் கொழும்பில் கைவைக்க வேண்டும். அல்லது சண்டையைத் தொடக்க வேண்டும்.
5:44 AM Anonymous said...
உணர்ச்சிவசப்பட்டு இணையத்திலே சொற்களைக் கொட்டுவதைத் தவிர்க்கவேண்டும். புலிகளின் செயற்பாடு எப்படியாக இருக்கவேண்டுமென்பதிலே எமக்கு எதிர்பார்ப்புகள் இருக்கலாம். ஆனால், "ஒன்றில் புலிகள் கொழும்பில் கைவைக்க வேண்டும். அல்லது சண்டையைத் தொடக்க வேண்டும்" என்று எழுதும்போது, இலங்கையிலே நிகழ்கின்றவற்றினைத் திரிக்கவென்றே இருக்கும் சிலருக்கு வாய்க்கு அவலைக் கொடுக்கின்றீர்கள் என்பதை உணருங்கள்.
7:59 AM
அப்புறம் எதுக்கப்பு ஆயுதப்போராட்டத்தை தொடங்கினீர்கள், காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்தவர்களையும், யாழ்பாணத்தில் தமிழராட்சி மாநாட்டை நடத்திய தமிழரையும், துரத்தி துரத்தி அடித்தபோதும் ஓடி ஓடி அடுத்த ஊர்வலங்களை நடத்தி இருக்கலாம்தானே, பிறகு எதற்கு வட்டுக்கோட்டை தீர்மாணங்கள்.
இதற்கு ஒரு மருந்து இருக்கிறது.
முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும்,
எப்படி மீண்டும் ஒரு யூலைக்கலவரம் உருவாகாமல் இருக்கிறதோ, மீண்டும் அநுராதபுர சந்தியில் வைத்து புகையிரதத்தில் பயணித்த தமிழ்பயணிகள் படுகொலை செய்யப்படாமல் இருக்கிறார்களோ, மீண்டும் எல்லைகிராமங்களில் தமிழ்கிராமங்களில் மக்கள் படுகொலை செய்யப்படாமலும், இன அழிப்பும் செய்யப்படாமல் இருக்கிறார்களோ, மீண்டும் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வரும் பயனிகள் பேருந்து பயணிகளுடன் சேர்த்து எரிக்கப்படாமல் இருக்கிறார்களோ, அதே மருந்தை மீண்டும் பாவிக்கவேண்டும், இதை எமது முண்ணோர்கள் சொல்கிறார்கள் "முள்ளை முள்ளால் எடுத்தல்" என்று.
படிச்ச ஆக்களில பஞ்சி பாராமல் எழுதினவர் Anonymous | 4:04 PM
மக்கள் பாதுகாப்பினை முன்வைத்துப் போராட்டம் நடத்தும் புலிகளுக்கு இதனை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்று தெரியும்.
மாறாக இதனையும் இனி இது போல நடக்க இருக்கும் கொடுமைகளையும் வைத்து உலக அரங்கில் அனுதாபம் தேடுவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்குமா என அவர்கள் முயல்வார்களாயின் மக்களின் சாவும் புலிகள் மீதான மக்களின் அவநம்பிக்கையுமே எஞ்சும்.
இப்போது ஊர்வலங்களும் போராட்டங்களும் யாரை நோக்கியும் வேண்டாம். புலிகளை முன்வைத்தே செய்வோம்.
உலக நாடுகளை விடுங்கள்.
புலிகளே.. புலிகளின் தலைவரே.. மக்களை கொடும் அரக்கர்களிடம் இருந்து பாதுகாக்க என்ன செய்ய போகிறீர்கள்..
இன்னொரு முறையும் பொறுமையின் விளிம்பில் நிக்கிறோம் என்ற சொல்வீர்களாயின் சின்னக்குழந்தைக்கும் சிரிப்பு வரும
படிச்ச ஆக்களில பஞ்சி பாராமல் எழுதினவர் Anonymous | 7:41 AM
நீங்கள் எடுத்துப் போட்டதிலே எவர் எழுதியது எதுவென்றே தெரியவில்லை. என்றபோதுங்கூட, "தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் கொல் வெட்டு" என்று எவருமே எதையும் எழுதியதாகத் தெரியவில்லையே? நீங்கள்தான் சொல்கிறீர்கள். "கொழும்பிலே கைவையுங்கள்" என்பதற்குத்தான் இவ்வளவு விரிவுரை + வியாக்கியானமென்றால், சொல்ல ஏதுமில்லை, அநாமதேயம் சொன்னதுபோல, "உணர்ச்சிவசப்பட்டு இணையத்திலே சொற்களைக் கொட்டுவதைத் தவிர்க்கவேண்டும். புலிகளின் செயற்பாடு எப்படியாக இருக்கவேண்டுமென்பதிலே எமக்கு எதிர்பார்ப்புகள் இருக்கலாம். ஆனால், "ஒன்றில் புலிகள் கொழும்பில் கைவைக்க வேண்டும். அல்லது சண்டையைத் தொடக்க வேண்டும்" என்று எழுதும்போது, இலங்கையிலே நிகழ்கின்றவற்றினைத் திரிக்கவென்றே இருக்கும் சிலருக்கு வாய்க்கு அவலைக் கொடுக்கின்றீர்கள் என்பதை உணருங்கள்" என்றே சொல்லிவிட்டுப்போகிறேன்
18.05.2006 அன்று நான் எழுதிய் 'சுத்திகரிப்பும் தூய்மையாக்கலும்" கட்டுரையில் இன்றைய படுகொலைக்குரிய அரசியல் நிலைமையை எடுத்துக் காட்டினோம்;. 'இந்த நிலையில் புலிகள் புதிய அரசியல் நெருக்கடியில் சிக்கிவருகின்றனர். மீள வழியற்ற சூறாவளிக்குள் சுழலுகின்றனர். வழமையாக அமைதி நிலவும் காலங்களில் புலிகள் தமது எதிர்வினைகளையும் பதிலடியையும் கிழக்கில் நடத்துவது வழக்கம். குறிப்பாக முஸ்லீம் மக்கள் மேல் அது நடத்தப்படுவதே இயல்பான ஒன்;று. புலிகள் வரலாறு முழுக்க இது காணப்படுகின்றது. ஆனால் கருணாவின் பிளவைத் தொடர்ந்து அதைச் செய்யமுடியாத நிலை உருவாகியுள்ளது. அப்படி செய்தால் கிழக்கில் இருந்து மேலும் தனிமைப்பட்டு போகும் அபாயம். இந்த நிலையில் இந்த அரசியல் நெருக்கடியின் எதிர்வினை என்பது பாரிய தாக்குதல் சார்ந்ததாகவும் பாரிய மக்கள் படுகொலைகள் நடக்கும் வாய்ப்பை தூண்டுகின்றது. சிங்கள கிராமங்கள் மீது படுகொலைகள் வடக்கில் இருந்து நடத்தப்படலாம். கடந்தகாலத்தில் கிழக்கில் இருந்த இந்த நிலைமை வடக்கு நோக்கி நகர்வதற்கான சூழல் அதிகரித்துள்ளது. வடக்கு எல்லை ஒட்டிய சிங்கள கிராமங்கள் முதல் கொழும்பு போன்ற பிரதேசத்தில் மக்கள் மேலான குண்டுவெடிப்புகளாக மாறுகின்ற வாய்ப்பு அதிகரிக்கின்றது."
அநுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லா படுகொலை முதல், உலகுக்கு கவர்ச்சியாக அழகாக வக்கிரமாக எடுத்துக்கட்ட நடந்த மன்னார் வங்களை படுகொலை வரை, அனைத்தும் அரசியல் வங்குரோத்தின் விளைவாக அரங்கேறுகின்றது. முன்ர் இது போன்ற கொலைகள் நடந்தன. அன்று அவர்கள் கொண்டிருந்த அரசியல் காரணம் வேறு. அது எதிர்கால அரசியல் நலனை அடையவே செய்தனர். இன்று அவர்கள் இதுபோன்ற கொலைகளை செய்வதற்கு கராணமே முற்றிலும் வேறானது. அவர்களின் அரசியல் எதிர்காலமின்மையின் வெளிப்பாடுகள் படுகொலைகளாக வெளிப்படுகின்றது. இதுவே தெசிய அரசியலாகி விடுகின்றது.
கி.இiயாகரன்
-/பெயரிலி. writing rubush
ignore him
ஐயா சிறிரங்கன்.
நான் சொன்னதை வைத்து நல்ல வியாபாரம்.
சண்டையைத் தொடக்க வேண்டுமென்று முதன்முதல் வெளிப்படையாக எழுதியவர் மயூரன். சரத்பொன்சேகா மீதான தாக்குதலையும் நியாயப்படுத்தித்தான் அப்பதிவு இருந்தது. ஆனால் மயூரனை விட்டுவிட்டு அப்பதிவில் பின்னூட்டமிட்ட வன்னியனைத் தூக்கிவைத்துக்கொண்டு தனிப்பதிவே போட்டீர்கள்.
மயூரனும் நீங்கள் அடிக்கடி பாவிக்கும் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், வர்க்கம், புரட்சி, மக்கள் புரட்சி, பொதுவுடமை, சமவுடமை, லெனின், மார்க்ஸ் போன்ற சொற்களைக் கலந்து எழுதுவதால் என்று புரிந்துகொண்டேன். (அவர் இன்னும் பாசிசம் பற்றி எழுதவில்லை.)
கொழும்பில் கைவைப்பதென்பது உங்களுக்கு சரத்பொன்சேகா மாதிரியோ, கட்டுநாயக்கா மாதிரியோ தெரியாமல் கெப்பிட்டிக்கொலாவ மாதிரிப் புரிந்ததுக்கு நானொன்றும் செய்ய முடியாது. கொழும்பில் ஒன்றென்றால் துள்ளிக்குதிப்பது நீங்களே சொல்லும் ஏகாதிபத்திய சிந்தனைதான். போர் முதலாளிகளுக்கு எந்தப்பங்கமும் வராமல் காக்கும் மனப்பாங்கு.
அண்டைக்கே ஒரு தீர்க்கதரிசி அனாமதேயமாக வந்து சொல்லியிருக்கிறான் உங்களைப் பற்றி. இனியாவது அவரின் வார்த்தைகளைக் கேட்டுத் திரிந்திக்கொள்கிறேன்.
வசதியாக, புலிகள் சிங்களக் கிராமங்களில் தாக்கவேண்டுமென்று போட்டுவிட்டு பிறகு என்பெயரையும் போட்டுள்ளீர்கள். யார் அப்படிச் சொன்னது?
இலங்கை அரசை கண்டிப்பதைவிட புலிகளை அதிகம் குறை சொல்வதிலே தான் அதிக கவனம் செலுத்தப் பட்டுள்ளது.
இணையத்திலே எழுதிவிட்டு களப்போராளிகளை கொச்சைப் படுத்துவது சில காலமாக நடந்து வருவது தான்.
அகதிகளாக வந்து அதன் மூலம் அந்தந்த நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொண்டு இப்படி இணையத்தின் மூலம் மட்டுமே போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர்கள் அதிகமாகி விட்டார்கள்.
என்று என் நண்பர் சொன்னதை நான் நினைவு படுத்திக் கொள்கிறேன்.
1. // என் நிலைக்காக தனிப் பதிவிட்டு எதிர்ப்புக் கூறிய இரு கல்வியாளர்கள்.... // ( முக்காடு போடாத பின்னறிவித்தல்)
2. // மக்களை அணிதிரட்டிப் போராட வைக்கும் சக்தி மக்களின் நலனில் அக்கறையுடைய கல்வியாளர்களிடமே தேங்கிக்கிடக்கிறது. இவர்களது பங்களிப்பு என்றுமில்லாதவாறு இன்று மிக அவசியமாக இருக்கிறது // ( படுகொலை அரசியல்)
1. அதென்ன கல்வியாளர்கள் என்று எதிர்ப்புக்குரல்களைத் தரம் பிரிக்கின்றீர்கள்? எங்களைப் போல பொறுக்கிகள்/புறம்போக்குகளின் எதிர்ப்புக்குரல்கள் உங்களுக்கு அவ்வளவு மட்டமாகவா தெரிகிறது?
2. திரும்பவும் கல்வியாளர்களைத் தூக்கித் தலையில் வைக்கின்றீர்கள்! ஆண்டாண்டு காலமாக தமிழரின் அரசியலை அப்புக்காத்துமாரும், பட்டம் பெற்றவர்களும்தானே பிரதிநிதித்துவம் செய்தார்கள். மலையகத் தமிழரிடம் கடைசியாக மிஞ்சியிருந்த கோவணத்தையும் உருவுவதற்கு பாராளுமன்றத்துக்குப் போனதைத் தவிர வேறையென்ன புடுங்கினார்கள்? அதுசரி, இந்த கல்வியாளர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்? இவர்கள் யாரை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்? ஷோபாசக்தி எழுதின விலங்குப்பண்ணையை வாசித்துப் பாருங்கள். கல்வி யாருக்கு "வழங்கப்படுகிறது", யாருக்கு "மறுக்கப்படுகிறது" என்று புரியும்.
ஒடுக்கப்படும் மக்கள் தாம் போராடுவதற்கு பல்கலைக்கழகத்தை எதிர்பார்ப்பதில்லை.
உங்கள் பதிவுகளுக்கு ஆத்திரமூட்டலை நோக்கமாகக் கொண்ட பல பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. என்றாலும் நீங்கள் பதிலளிக்கின்ற விதம் ஆரோக்கியமானதாக இல்லை என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.
இவர்கள் இப்படித்தான் மற்றவர்களின் கருத்துக்களை வசதியாகத் திரித்து பற்பல வார்த்தை ஜாலங்களுக்குள் புதைத்து விளையாடுவார்கள்.
இதை USA, EU செய்தால், ஏகாதிபத்தியம் அது இது என்று கூச்சலிடுவது!
இவர்களின் கருத்துக்கள் ஒருபோதும் நான்கு அல்லது ஐந்து வசனங்களுக்குட்பட்டு இருந்தது கிடையாது. பக்கம் பக்கமாக எழுதுவார்கள் அதற்குள் எதுவும் இருக்காது. கேட்டால் வாசிப்பவர்களுக்கு அறிவு போதாது என்பார்கள்.
//குஞ்சு குருமான்கள் என்ன பாவம் செய்தார்கள் இந்த நாட்டில்?
நிம்மதியாக வாழும் இயல்பு நிலையை மறுக்கும் அரசியலின் நோக்கமென்ன?//
ஓம் செத்த பிறகு வந்து கேள்வி கேளுங்கோ.. அனுராதபுரத்தில அதுகள் வாழ வழியில்லாமல் இருக்கும் போது எப்பவாவது இதை பற்றி எழுதினீங்களே..? அடுத்தவன்ர சாவில வந்து அழுகிறியள்?
சிலவேளை குறிப்பிட்ட பிணங்களின் மேல் தான் கூத்தாட முடியுமோ?
ஒருசில அனானிகளை வைத்து ஒட்டுமொத்த தமிழர்களையும் அரக்கர்களாக சித்தரித்து இருப்பது, மக்கள் போராட்டத்தை நடத்தப்போகிறவர்களுக்கு அழகில்லை.
ம்.... என்னத்த சொல்லுறது நோர்வே காரனிட்ட வாங்கி நக்கிறதுக்கு
சிறி லங்கா ராணுவத்தோட சண்டைபிடிக்கேலாது. இப்படி சனங்கள கொண்டு போட்டு வெளிநாட்டு புலிகள சந்தேஷபடுத்தறத தவிர வேற
என்னதான் செய்ய முடியும்.... கண்டதுக்கெல்லாம் யுத்த நிறுத்த மீறல்
என்று பின்னுட்டம் விடுற புலிவால்கள் இதுக்கு ஒருத்தரும் ஒரு அனுதாபத்துக்கும் விடவில்லை (சிங்களவன் எங்களுக்கு விட்டவனா என்று கேட்பாங்கள்) முல்லைத்தீவு சுனாமியல் பாதிக்க பட்ட போது இதே
சிங்களவன் தான் களனியிருந்து மூன்று லொறிகளில் தேங்காய் மண்பானை கிடுகு என அத்தியவசி பொருட்களோடு வந்து ஓமந்தையில்
வைத்து புலிகளிடம் (வாங்கி கொண்டு ஓடியவர்கள்) கொடுத்தார்கள்....
ஓம் ஓம் சிங்களவன கொல்லவேணும் ஆமிக்காரன கொல்லவேணும்
பழிக்கு பழிவாங்க வேணும் கொளும்பில குண்டு வெடிக்க வேணும்
கிராமத்துக்குள்ள புகுந்து வெட்ட வேணும்.உலகத்துக்கு நாங்கள் ஆரண்டத
காட்ட வேணும் அவங்கள் எங்கள கொல்லைக்க நாங்கள் பாத்து கொண்டிருக்க ஏலாது.... (சிறி அண்ண என்னால முடிஞ்சளவுக்கு புலிவால்கள சந்தோச படுத்தியிருக்கிறன்)
ஒரு தமிழ் தேசதுரோகி
.............................................
LTTE wants the war desperately now. That is why they indirectly defeated the peace candidate and supported this Rajapakse. This means that they know the war will be started but they wanted to show the world that they are victims in this war. That is why this outrage is staged and the Tamil community is prodded like this to show that the entire tamil community is outraged. Yes, I accuse this outrage is staged by LTTE by killing christians and getting a christian priest as the witness to the "atrocities of SLA" to show these photos in front of the world community. That is why the photos such as this is propagated with out any iota of shame or respect for the dead. So they got already a few people who would accuse the SLA and try to get the maximum mileage out of this.
This is so obvious to a fault. Even an imbecile with iota of brain would know that this is LTTE game to get the victimhood on its head. And this will help when it goes and kills 60 civilians in sinhalese area which would be termed as revenge killing. Did these same people make the same kind of accusation against LTTE when they killed 60 civilians in Sinhalese area? Are not you guys claim that LTTE is more or less a state? Does not make its work as state terrorism? When needed, you guys claim Eelam is more or less separate state. When needed same guys claim, that LTTE is an organization!
There are few idiots who would claim that LTTE is playing a strategic game in making the Rajapakse elected. Let us say for an argument this is done by SLA (which it is not), even then is this not because of the LTTE making the Rajapakse elected?
Shame on the people who support LTTE.
கருத்துகளிட்ட எல்லோருக்கும் நன்றி,வணக்கம்.
//நான் சொன்னதை வைத்து நல்ல வியாபாரம்.//
வன்னியன் இக்கட்டுரையில் குறித்த ஒரு பந்திக்காக இதை வியாபாரம் என்கிறீர்களா?கொடிய பயங்கரவாதத் தாக்குதலால் இலங்கையின் அப்பாவி மக்கள் சாவது குறித்தெழுதப்படும் கட்டுரை எந்த நிலையில் தங்களுக்கு வியாபாரமாகிறது?
முதலில் ஒன்றை விளங்கிக் கொள்வோம்: எமது பிரச்சனைக்குப் பழிக்குப் பழி தாக்குதலால் எந்த வெற்றியையும் நாம் அடைந்துவிட முடியாது.நீங்கள் குறித்த "கொழும்பில் கைவைத்தல்,சண்டையைத் துவக்குதல்"என்பவையால் தமிழ் மக்களுக்குத்தாம் இன்னும் அழிவையும்,கொடிய இடப்பெயர்வுகளையும் ஏற்படுத்திக் கொடுப்பீர்கள்.கடந்த காலத்தில் நிகழ்ந்த கொடிய யுத்த்தால் 80.000.மக்கள் உயிரிழந்துள்ளார்கள்.கடந்த சுனாமித் தாக்குதல்களால் 50.000.மேற்பட்ட மக்கள் ஓரிரு மணித்தியாலத்துக்குள் மாண்டுபோனார்கள்.இந்நிலையில் மீளவும் யுத்தத்தைத் தொடங்கு,கொழும்பில் கைவை என்பது அறிவார்ந்து செயலாக இருக்கமுடியாது!
எப்பவும் யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் மக்கள்தாம்.நமது விடுதலை என்பது இத்தகைய தாக்குதல்களால் ஒருபோதும் வென்றெடுக்க முடியாதென்பது எப்பவோ நிரூபணமாகிவிட்டது.
//கொழும்பில் கைவைப்பதென்பது உங்களுக்கு சரத்பொன்சேகா மாதிரியோஇ கட்டுநாயக்கா மாதிரியோ தெரியாமல் கெப்பிட்டிக்கொலாவ மாதிரிப் புரிந்ததுக்கு நானொன்றும் செய்ய முடியாது. கொழும்பில் ஒன்றென்றால் துள்ளிக்குதிப்பது நீங்களே சொல்லும் ஏகாதிபத்திய சிந்தனைதான். போர் முதலாளிகளுக்கு எந்தப்பங்கமும் வராமல் காக்கும் மனப்பாங்கு.//
இலங்கைக் கொடிய அரச அமைப்பை இத்தகைய போராட்டத்தால் வெற்றி கொள்ளவே முடியாது.மாறாக இன்னும் அரச ஒடுக்குமுறையைத்தாம் நாம் பெற்றுக் கொடுப்போம்.சில அதிகாரிகளை,தளபதிகளை,அரச அதிபர்களைக் கொல்வதால் அந்த அரச அமைப்பைத் தகர்த்திட முடியாது.ஒரு பொன்சேகா போனால் இன்னொரு காமினி அதே இடத்துக்கு வருவான்.இதுதாம் அனைத்து இத்தகைய தாக்குதலுக்கும் பொருந்தும்.இந்த அரச அமைப்பை இதுகாலவரையான யுத்தத்தால் நாம் என்ன செய்துவிட்டோம்?இன்னுமின்னும் இராணுவ ரீதியாக வளர்த்துள்ளோம்,நமது கிராமங்கள் தோறும் இராணுவ முகாம்கள் உருவாக வழி சமைத்தோம்.தமிழர்களின் கோட்டையான யாழ்மாவட்டம் இராணுவத்திடம் பறிகொடுத்தோம்.தீவகம் பறிபோனது,கிழக்கில் பல பகுதி இராணுவத்திடம் பறிபோனது!இது ஈழத்துக்கான தோல்வியா அல்லது வெற்றியா?
யுத்தம் என்பது ஒருசிலரின் விருப்பால் முன்னெடுப்பதல்ல.அது மக்களின் எழிச்சியுடன் சம்பந்தப்பட்டது.மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அரச ஆதிக்கத்தை மெல்ல உடைத்துவிட்டு,அடுத்த கட்டமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக யுத்தம் செய்து அரச வன்முறை ஜந்திரத்தின்மீது கைவைப்பது.இங்கேதாம் யுத்தம் அவசியமாகும்.
கொழும்பில் போர் செய்வதால் முதலாளிகள் அழிவதென்பது...நிசமானாலும் அவர்களின் நிதி மீளவும் அவர்களைத் தூக்கி நிறுத்தும் அதே கட்டத்தில் நம்மை இன்னும் உலக அரங்கில் பயங்கரவாதிகளாக்கி அந்நியப்படுத்தும்.இன்றைய உலகமய வர்த்தகத்தில் ஒரு துரும்பைக்கூட உலக அரசுகளை மிஞ்சி நகர்த்தமுடியாதளவுக்குப் புலிகளின் அரசியல் இருக்கும்போது நீங்கள் யுத்தத்தில் மூழ்கிக்கொள்கிறீர்கள்.இது தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப் போருக்கு பின்னடைவான நோக்கங்கள்.மக்களின் உயிருக்குப் பங்கம் விளைவிப்பதாகும்.
//வசதியாகஇ புலிகள் சிங்களக் கிராமங்களில் தாக்கவேண்டுமென்று போட்டுவிட்டு பிறகு என்பெயரையும் போட்டுள்ளீர்கள். யார் அப்படிச் சொன்னது?//
இங்கே சிங்களக்கிராமங்களை நீங்கள் தாக்கச் சொன்னதாகக் கூறவில்லை.பெயரிலிக்குக் கூறியபோதே அதை விளக்கியுள்ளேன்.சிங்களக்கிராமங்களைத் தாக்குவது மற்றும் கொலைக்குக் கொலையென்பது பொதுவாக நமது மக்களின் எண்ணவோட்டமாக இருப்பதால் அவர்களோடு நேரடியாகக் கருத்தாடி நான் தெரிந்ததை எழுதினேன்.தொப்பி அளவாக இருப்பதால் நீங்கள் போட்டுக் கொள்கிறீர்கள்,அவ்வளவுதாம்!
//அண்டைக்கே ஒரு தீர்க்கதரிசி அனாமதேயமாக வந்து சொல்லியிருக்கிறான் உங்களைப் பற்றி. இனியாவது அவரின் வார்த்தைகளைக் கேட்டுத் திரிந்திக்கொள்கிறேன்.//
அடேங்கப்பா,
தீர்க்கதரிசியோ?
சபாஷ்!
சரியான போட்டியோ உங்களுக்குள்?
காலம் தந்த கைவிளக்கு,சோழ மகராஜாவின் கொள்ளுப் பேரன் "தீர்க்கதரசி" மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நிகராக இன்னொரு தீர்க்கதரசி ஈழத்தமிழ்ச் சமுதாயத்துக்குள் வந்துவிட்டாரோ?
இருக்கக்கூடாதே!
தேசியத்தலைவரின் தீர்க்க தரிசனத்துக்கு இன்னொரு போட்டியாளர்!
ம்...
தேசியத்தலைவரே உங்கட பதவி மிக விரைவில் காலியாகப் போகிறது,கவனம்!
மனிதர் இவ்வளவு காலமாகக் கட்டிக்காத்த தேசியத் தலைமையைப் பறிப்பதற்கு இன்னொரு தீர்க்கதரிசி!பாவம் தேசியத் தலைவர்,தன்ர வாரீசுகளை மேல் நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிப் படிப்பிக்கும் நிலையிலும் கூடவே மேதகு தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனத்தில் உதித்த வாரீசுப் பதிவிக்கு ஆப்பு வைக்கும் இந்தப் புதுத் தீர்க்கதரிசிப் புல்லுருவியை முளையிலேயே... அது தேசியத் தலைவருக்குத் தெரியும்! எண்டாலும் என்னைப் பொருத்தவரை அவரின்ர காதில போடுவதும் முக்கியமாகத் தெரியுது(வன்னிப் பக்கம் போனால் உயிர்ப் பிச்சையாவது தருவாரென்ற நப்பாசைதாம்).ஈழத்தின் ஒரேயொரு தீர்க்கதரிசிக்கு,மேதகுக்கு நிகராகத் தீர்க்க தரிசியா?அதையும் புலிகளின் புகழ்பாடிகள் அங்கீகரிப்பதா?இது மேதகு தேசியத் தலைவருக்குச் செய்யும் துரோகம் வன்னியன்!
//அகதிகளாக வந்து அதன் மூலம் அந்தந்த நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொண்டு இப்படி இணையத்தின் மூலம் மட்டுமே போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர்கள் அதிகமாகி விட்டார்கள்.என்று என் நண்பர் சொன்னதை நான் நினைவு படுத்திக் கொள்கிறேன்//
இரா.சுகுமாரன்,நண்பர் சொன்னதை வைத்து ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழ்பவரைக் கொச்சைப் படுத்தாதீர்கள்!தங்கள் நண்பரின் மேட்டிமைக் குணமானது அகதிகளைக் கொச்சைப்படுத்தும் நிலையில் நானும் ஒரு அகதி என்று பிரகடனப்படுத்தி, தங்கள் நண்பரின் எண்ணம் தப்பானதென்பதை கூறிக் கொள்கிறேன்.நாம் எமது உடல் உழைப்பை நல்கியே இந்த நாடுகளில் எமது உயிர் வாழ்வைத் தக்க வைக்கின்றோம்.எந்தவொரு நபரும்-நாடும் நம்மைத் தங்கள் வருமானத்தில் காத்துவிடவில்லை.ஆனால் நாம்தாம் இத்தகைய நாடுகளுக்கு,அவர்களது பொருளாதாரத்துக்கு குறைந்த கூலியில் ஆதாயத்தை அள்ளிக் கொடுக்கிறோம்.அதுபோலவே எமது பணத்தில்தாம் ஈழப்போருக்கே பலவகை ஆயுதம் கொள்வனவு செய்யப்படுகிறது.இன்று அஜித்தும்,விஜேயும் 5கோடி ரூபாய் ஊதியம் பெறுகிறார்களே தமிழ் நாட்டில்-தமிழ்பட நாயகர்களின் ஊதிய உயர்வுக்கே எமது பணம்தாம் மூலகாரணம்.எங்கள் உழைப்பு இப்படி எத்தனையே வழிகளில் செல்லும்போது,எம்மை மற்றவர்களின் தயவில் வாழும் தற்குறிகளாக்கும் "மேட்டிமைக் குணாம்சம்"உங்களில் பலருக்கு இருப்பது எமக்கு வியப்புத்தாம்.
//1. அதென்ன கல்வியாளர்கள் என்று எதிர்ப்புக்குரல்களைத் தரம் பிரிக்கின்றீர்கள்? எங்களைப் போல பொறுக்கிகள்ஃபுறம்போக்குகளின் எதிர்ப்புக்குரல்கள் உங்களுக்கு அவ்வளவு மட்டமாகவா தெரிகிறது?
2. திரும்பவும் கல்வியாளர்களைத் தூக்கித் தலையில் வைக்கின்றீர்கள்! ஆண்டாண்டு காலமாக தமிழரின் அரசியலை அப்புக்காத்துமாரும்இ பட்டம் பெற்றவர்களும்தானே பிரதிநிதித்துவம் செய்தார்கள். மலையகத் தமிழரிடம் கடைசியாக மிஞ்சியிருந்த கோவணத்தையும் உருவுவதற்கு பாராளுமன்றத்துக்குப் போனதைத் தவிர வேறையென்ன புடுங்கினார்கள்? அதுசரிஇ இந்த கல்வியாளர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்? இவர்கள் யாரை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்? ஷோபாசக்தி எழுதின விலங்குப்பண்ணையை வாசித்துப் பாருங்கள். கல்வி யாருக்கு "வழங்கப்படுகிறது"இ யாருக்கு "மறுக்கப்படுகிறது" என்று புரியும்.
ஒடுக்கப்படும் மக்கள் தாம் போராடுவதற்கு பல்கலைக்கழகத்தை எதிர்பார்ப்பதில்லை.
உங்கள் பதிவுகளுக்கு ஆத்திரமூட்டலை நோக்கமாகக் கொண்ட பல பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. என்றாலும் நீங்கள் பதிலளிக்கின்ற விதம் ஆரோக்கியமானதாக இல்லை என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.//
பொறுக்கி அவர்களே,ரொம்ப நன்றி கருத்துக்களுக்கு.தங்கள் கருத்துக்களை உள்வாங்குகிறேன்.மிகச் சரியானவொரு குறிப்பைத் தந்திருக்கிறீர்கள்.
மீளவும் கருத்துகளிட்ட எல்லோருக்கும் நன்றி!
அண்ணா இதை இலங்கை அரசோ அல்லது ஒட்டுபடைகளோ செய்துருந்தா
நோர்வேக்கு போயிருந்த புலிகள் இலங்கை இராணுவ பாதுகாப்போடு
வன்னிக்கு வந்த பின்பு ஏன் செய்வேண்டும். அவர்கள் நோர்வையிலிருந்து
திரும்பி வரும்வேளையில் சில மணி நேரம் முன்பாக இதைசெய்திருந்தால் (பஸ் குண்டு வைப்பு) இவர்களை கட்டுநாயக்கா
விமானநிலையத்திலிருந்து உலங்குவானுறுதியில் நேராக அனுராத புரத்து
கிராமத்தில் கொண்டு வந்து இறக்கி இருப்பான் அந்த விமானி.
தமிழனுக்கு வீராப்பு இருக்கலாம் சிங்களவனுக்கு இருக்க கூடாதோ..?
//இரா.சுகுமாரன்,நண்பர் சொன்னதை வைத்து ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழ்பவரைக் கொச்சைப் படுத்தாதீர்கள்!//
இதில் கொச்சைப்படுத்தும் நோக்கமில்லை.
உண்மையில் களத்தில் இருப்பவர்களை கொச்சைப்படுத்துவது மேற்குலகில் வாழும் சில தமிழர்கள் தான் அதனால் தான் என் நண்பர் -/இணையத்தின் மூலம் மட்டுமே போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர்கள் அதிகமாகி விட்டார்கள்./-
என்று குறிப்பிட்டிருந்தார்.
இணையத்தில் எழுதும் சில நண்பர்கள் பற்றித்தான் என் நண்பர் குறிப்பிட்டார். ஆனால், நீங்கள் மேற்குலகில் வாழும் ஒட்டுமொத்தம் தமிழினத்தையே கொச்சைப் படுத்துவதாக சொல்வது திசைத்திருப்புவது.
//இன்று அஜித்தும்,விஜேயும் 5கோடி ரூபாய் ஊதியம் பெறுகிறார்களே தமிழ் நாட்டில்-தமிழ்பட நாயகர்களின் ஊதிய உயர்வுக்கே எமது பணம்தாம் மூலகாரணம்.//
இதனால் தமிழர்களுக்கு என்ன பயன்?
புலம் பெயர்ந்த தமிழர்கள் வெளிநாடுகளில் அகதிகளாக தங்கிவிட்டப்பின் உள்நாட்டுப் போராட்டங்களுக்கு சிலர் நிதிவழங்கு வதில்லை. ஆனால் இப்படி விஜய்க்கும் அஜித்துக்கும் போய்ச் சேறுகிறது.
//எமது உடல் உழைப்பை நல்கியே இந்த நாடுகளில் எமது உயிர் வாழ்வைத் தக்க வைக்கின்றோம்.//
உண்மைதான், நான் மறுக்கவில்லை. ஆனால், களப்போராளிகளை தொடர்ந்து கொச்சைப்படுத்துவது சரியல்ல!. நெருக்கடியான நிலைகளில் அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் விதம் சரியல்ல. சுட்டிக்காட்டுவது சரி. முறை சரியல்ல என்பதுதான். நட்பு ரீதியிலான விமர்சனமாக இருக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
நாங்கள் இந்திய தமிழர்கள் எங்களால் இங்கிருந்து கொண்டு அதிகம் எதுவும் செய்ய இயலவில்லை. அங்கு கொல்லப்படும் தமிழர்கள் நிலையை எங்களால் பார்த்துக்கொண்டு இருக்க முடிகிறதே தவிர வேறு எதுவும் செய்ய இயலவில்லை.
அதிக பட்சமாக இந்தியாவில் போராட்டம் நடத்துவது, என்ற அளவிலிருந்து அதிகம் செய்ய முடியவில்லை.
தமிழர்கள் தமது உட்பிரிவுகள் மூலம் தம்மைத் தாமே அழித்துக் கொள்கிறார்கள்.
இது மிகவும் வருந்ததக்கது. கருணா குழு இலங்கை அரசின் கைக் கூலியாகவே செயல்படுகிறது.
இலங்கை அரசு இந்தியாவிற்கு எதிராக போராட புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது போல இப்போது, இலங்கை அரசு புலிகளுக்கு எதிராக போராட கருணா குழுவிற்கு ஆயுதம் வழங்குகிறது.
இந்த நிலைமைகள் இந்தியத் தமிழர்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆகவே நாங்கள் தமிழ்க் குழுக்கள் தனித்தனியாகப் பிரிந்து தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
புலிகளை தமிழர்கள் எதிர்க்கிறார்கள் யாருமே ஆதரிக்கவில்லை என்பது போல செய்திகளை சிலர் எழுது கின்றனர்.
தமிழகத்தில் புலிகள் இயக்கத்தைத் தவிர வேறு எந்த இயக்கத்திற்கும் யாரும் ஆதரவளிப்பதில்லை என்பது தான் உண்மை.
ஆனால், தமிழர்களிடையேயான அழித்தொழிப்பை நாங்கள் விரும்பவில்லை.
உங்களை மனம் புண்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை. எப்படி இருந்தாலும் நீங்கள் தமிழர் என்ற அடிப்படையில் நான் உங்களின் சகோதரன்.
தமிழகத் தமிழர்களாகிய நாங்கள் வெளிநாடு வாழ் தமிழர்களைப்பற்றி என்ன வகையான கருத்துக்களை வைத்திருக்கிறோம் என்பதற்காகவே இதை எழுதியுள்ளேன்.
Post a Comment