Saturday, June 24, 2006

ரீ.பீ.சீ-தேனீக் கும்பல்: திருடர்கள்!

"1:ரி.பி.சி. வானோயின் அவசியம் இன்று உள்ளதாக கருதுகிறீர்களா?
>>(பதில் விளக்த்திற்காக மேலும் சில
துணைக்கேள்விகள்.)<<1:1நிதர்சனத்தையும்>

ரீ.பீ.சீ-தேனீக் கும்பல்:
திருடர்கள்!

அடுத்தவன்(ள்) வீட்டில்
தென்னை காய்த்திருக்கும்போது
வேலி பிரித்து வெறித்துப் பார்த்து
வேளை வரும்போது
வேட்டிக்குள் திணிப்பவர்கள்
ஊருக்கு நல்லதற்காகத் திருடுகிறார்களாம்!

"அவசியம் உள்ளதாகக் கருதுகிறீர்களா?"

எதன் பொருட்டு ரீ.பீ.சீ-மாமோய்?
எள்ளுக்காயுது எண்ணைக்கு
ரீ.பீ.சீ அலம்புது கைக் கூலிக்கு!
இதற்குள் ஐ.பீ.சீ ஆட்டுக்குட்டி,
நிதர்சனத்தோடு சேர்ந்து தேனீக்குத் திரு விழா!!

திருடர்கள்!

மக்களின் காதுகளில் மலர் சூடி
மயக்கம் காணும்போது
காதறுக்கும் கூட்டம்
மக்கள் நலன் விளக்கி
"சர்வே"செய்கிறார்கள் நம்மிடம்!

ம்...

காலம்தாம்.

இலங்கைக்கு
இந்தியாவுக்கு
ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு
காசுக்கு வாலாட்டும் ரீ.பீ.சீ-தேனீக் கும்பலுக்கு தேள் கொட்டுது
மக்கள் நலனாக.

என்ன செய்ய?

புலிகளுக்கு
நிதர்சனம்,
எட்டப்பர்.கொம் என்று
ஏராளம் கொம்புகள்!-பாசிசத்தின் பக்கவாத்தியங்கள்!!

இயக்கவாதப் பிழைப்பு வாதிகள்...
எல்லோரும்
மக்கள் விரோதிகள்தாம்!

எந்தப் பக்கம் பார்த்தாலும்
மக்கள் விரோதிகளே மக்கள் குரலாக...
துப்பாக்கிகளுக்குமுன்
மௌனித்துக் கிடக்கும் மக்கள் மனங்கள்
மரணத்தை அடைகாக்கும் இயக்கவாதிகளிடம்
உரிமைக்கு ஏங்கிக் கிடப்பது உண்மைதாம்!!

உயிர்வாழும் நிலமும்
உண்பதற்கு பயிர் செய்தலும்
உழைப்பதற்குத் தொழிலும்
தோணிவிட்டு மீன் பிடிக்கக் கடலும்
கண்ணுறங்க வீடும்
அவர்களது உரிமை

நாடென்றோ
அல்ல மொழியென்றோ
திரண்டுகிடக்கும் எந்தக் கனவும்
மக்கள் நலத்தைக் காத்திடுவதாகவில்லை

தலை தறித்துத் "தமிழ்" தம்பட்டம் அடிப்பவர்கள்
உயிர் பறித்து ஒரு தேசம் விடுதலையாகுமெனச்
சொல்வார்கள்
பற்பல வடிவங்களில்

இத்தகைய திருடர்களின்
மரண சாசனத்தில் பங்கற்றவர்கள் எவர்கள்?
மடிப்பிச்சைபோல உயிர்ப்பிச்சை கேட்கும் நிலையில் மக்கள்...
மசிரப் புடுங்கின ரீ.பீ.சீ-தேனீக் கும்பல் சிங்களக் கொடும் அரசுக்கு
சுக்குக் கோப்பி தயாரிக்குது
ஏகாதிபத்தியத் தயவில்
இதுக்கொரு இந்தியா-ஆனந்த சங்கரித் திருடன் கூட்டாக...

ஆருமற்ற அப்பாவித் தமிழர்களிடம்
அரசியல் பண்ணும் அற்பப் பிராணிகளை
ஆரூ சொன்னார் "அவசியம்"-"தேவை"
மக்களுக்கானதென?

அறுத்துப்போட்டுக் கூறுபோடும் ரீ.பீ.சீ.வானொலியா மக்கள் நலன் பேச?
நீறுப+த்த மக்கள் மனங்களை
குருதி கொண்டு"காயடிக்கும்"கள்ளர்கள் கூட்டம்
புலியாக இருந்தாலென்ன
ரீ.பீ.சீ-தேனீக் கும்பலாக இருந்தாலென்ன?

எல்லோருமே கொலைகாரர்கள்!-திருடர்கள்,
மக்களின் விரோதிகள்!!!!!

தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைத் திருடியவர்கள்
தத்தம் நலனுக்கு மக்களுரிமைகளை
தரணம் பார்த்து ஏலம் விட்டும்
போரிட்டும் பதவி சுகம் காணப் பரதவிக்குமிவர்கள்
மக்களுக்குச் சேவகர்களாம்!
மண்ணாங்கட்டி!!!

நேபாளத்துப் போராளிகள்
"கைக்கூலி ரீ.பீ.சீ-வானொலிக்கு" மாவோயிசப் பயங்கர வாதிகளாம்!
கொடும்பாவி இராஜபக்ச- "ஜனாதிபதி,
மக்களைக் கொல்வதை நிறுத்தும்படி வேண்டினேன்!"-அவிட்டுவிடும்
ஜெயதேவரின் வாய் அழகென்ன அழகு!!
அண்ணே,
அடுப்பெரிக்க உதவாத
கரிக் கட்டை நீங்கள்
ஆருக்கு அபிசேகம் செய்வதில் அவசரம்?

பாழாய்ப்போன புலிகள்
தேசத்தின்-தேசியத்தின்
விடுதலையின் பேரால்
தமிழருக்குக் கொலைகளையே தந்துவர
ரீ.பீ.சீ-தேனீக் கும்பலுக்கு
அரசியலாய்ப் பிழைப்பாய் அது உரமிடுகிறது.
எரிகிற வீட்டில்
பிடுங்குவது மிச்சமென்றலையும்
ஜெயதேவன் அன்ட் கொம்பனிக்கு
மக்களின் சாவுகளும்,குருதியும்
நல்ல கடைச் சரக்கு ஏலமொன்று விடுவதற்கு
சரியான போட்டியப்பா புலிகளுக்கு!

"ஐ.பீ.சீ வானொலியும்
ரீ.பீ.சீ.வானொலியும் ஒன்றா?
அல்லதென்றால் வேறுபாட்டை விளக்குக!"

ஆரடா நீங்கள்
ஆட் காட்டி வேலைக்கு?

அடுப்பெரிக்க அல்லல்ப்படும் நாங்களெங்கே
வானொலிகளுக்கான கூலியாக
அழிந்து போகும் ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும்
அள்ளிக் கொடுக்கும் பல்லாயிரம் பவுண்களின் ஊற்றெங்கே?

அடிவருடிகள்,கைக்கூலிகள்
மக்கள் விரோதிகள்
சிங்களப் பாசிச அரசின் பாதந் தாங்கிகள்
புலிகளுருவில் மட்டுமல்ல-அது
ரீ.பீ.சீ.-தேனீக் கும்பல் உருவிலும்
தமிழ் மக்கள் உரிமையைக் காவு கொள்கிறது.

தேசியத்துக்கு
சுய நிர்ணயத்துக்கு
விளக்கம்வேறு கேட்கினம் அரசியல் ஆய்வில்(!?)!
தேசியத்தை சிதைக்கின்ற புலிக்கோ
அல்லது சிங்கள அரசுக்கோ
குறுந்தேசியப் புலம்பலென்றால்
பதவிப்பேராசைப் பெரிச்சாளிகளான
புலியெதிர்ப்புக் கும்பல் ரீ.பீ.சீ-தேனீக்கு
தேசியத்தின் வரையறை
மக்களினத்தின் திமிராகத் தெரிகிறது

தேசத்தினதும்
மக்களினதும் பாதுகாப்பே
அந்நியனின் காலடியில்...
பிறகென்ன?
தேசியமோ அன்றித் தமிழ் பேசுவோர்
சுய நிர்ணயிப்போ
சிங்களச் சியோனிசத்தின் சந்தைக்கு நிகராகுமோ?

நக்கிப் பிழைப்பதற்கு
ஒரு
ரீ.பீ.சீ.-தேனீக் கும்பல்
புலிகளைப் போலவே அந்நியனிடம் மண்டியிட்டுக் கிடக்கிறது
மக்களை ஏமாற்றியபடி!

ப.வி.ஸ்ரீரங்கன்
24.06.06

Sunday, June 18, 2006

மீளவும் யுத்தம்!

மீளவும் யுத்தம்!


லங்கையில் மீளவும் போர்: சிங்களத் தேச ஒருமைப்பாட்டுக் கூச்சலோடு- ஈழத்தின் கனவோடு வெடித்துவிட்டது!

ஸ்ரீலங்கா அரசும்,புலிகளும் கடற்சமரில் பாரிய இழப்பில்...

இன்றைய சூழலில் போர் எதற்கு?

இலங்கை அரசால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்களென உண்மையிலேயே புலிகள் நம்பியிருந்தால்-மக்களை,பிரச்சனைகளை அரசியல்ரீதியில் கையாளும்படி ஏன் நெறிப்படுத்தவில்லை?போருக்கு முன் புலி இயக்கம்- (இத்தகையவொரு) விடுதலையமைப்புச் செய்வது அவசியமில்லையா?

இத்துடன்-நியாயப்பாடுகளைத் தெளிவாக்கிப் போரை மிகவும் பின் தள்ளியிருக்க வேண்டும்.இது மிகவும் அவசியம்!

ஆனால், எதுவித வாதப்பிரதிவாதங்களே அல்லது எதற்காக-என்னதான் சமாதானப் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின்பான பேச்சு வார்த்தைகளில் நேர்ந்தன என்பதைக் கூட மக்களிடம் எடுத்துச் செல்லாமல்,போரைத் திணிப்பது இரு தரப்புக்கும் நியாயமல்ல.

இன்றுவரை மக்கள் அனுபவித்த-அனுபவிக்கும் துன்பம் எல்லையற்ற வண்ணம் அதிகரித்தபோதும் தமிழ்-சிங்கள சமுதாயங்களில் ஜனநாயக விரோத ஆதிக்க-அதிகாரத்துவ அரசியல் மீளவும் உச்சத்தில் பறக்கிறது.

சுனாமி அழிவுக்குப் பின் தமிழ்ப் பகுதிகளில் ஒருவித ஏமாற்றமும்,வாழும் ஆசையும்-துய்ப்பின் துடிப்பும் ஒருங்கே குடிகொண்டிருக்கிறது.ஆனால் சிங்கள அரசோ வான்வழித் தாக்குதல்மூலம் இவற்றையெல்லாம் பொருட் படுத்தாது பழைய பாணியில் தாக்க முனைந்துவிட்டது!சுனாமிக்குப் பின்னும் இதே பழைய கதை...என்னவொரு சிங்கள அரசு-என்னவொரு விடுதலை இயக்கம்!!

உணர்ச்சி மிக்க இனவாதச் சவடால்கள் மக்களின் மனங்களை அள்ளிக் கொள்ளும்போது மரபுவழி யுத்தம் மீளவும் வலுப்பெறத் தொடங்கிவிடும்.

இந் நிலையிலும் இலங்கை அரசும் புலிகளும் மற்றும் சிறு குழுக்களும் தமக்கு எதிரானோரைத் தட்டுவதிலும்,துரோகியெனச் சாட்டுவதிலும் மும்மரமாகச் செயலாற்றியபடி.மறுபுறமோ பின் கதவால் இரகசியப் பேரங்கள்-ஒப்பந்தங்கள்,ஆலோசனைகள் மேசைமீது வந்து விழுந்தபடி வீச்சாகக் காரியமாகிறது.

மக்களோ தினமும் மரணித்தபடி... பசித்திருக்கும் இந்த மக்களின் "எதிர்காலக்கண்" முன்னே குருதி ஆறாக ஓடுகிறது!

இதுவரை தொடர்ந்த-தொடரும் போராட்ட வாரலாற்றை ஆராய்ந்தால் புலிகளின் தடுமாற்றமும்,இரட்டைப் போக்கும் நிறைந்த போராட்ட வாழ்வை நாம் எதிர்கொள்ள முடியும்.இதன் தொடர்ச்சி மிகவும் பாரிய மனித அழிவைச் செய்துவிடப் போகிறது!தொடங்கப்பட்ட கடற் சமர் ஒரு ஒத்திகை!இதில் புலிகளின் பல கடற்கலங்கள் இலங்கைக் கடற்படையால் அழிக்கப்பட்டும்,அதேயளவு உயிர்,ஆயுதத் தளபாடங்கள் இலங்கைக் கற்படைக்கும் புலிகளால் நாசமாகியுள்ளது.

கொடுமையான பேரினவாதச் சிங்கள அரசால்,புலிகளால் இவைகளின்; நடவடிக்கையால் போரை எதிர்கொள்ளும் அப்பாவித் தமிழ்-சிங்கள மற்றும் இஸ்லாமிய மக்களின் நிலைமைகள் மிகவும் குழப்பகரமானதாகிவிட்டது.குறுகிய நோக்கம் கொண்ட சிங்கள ஆளும் வர்க்கம் போரினால் தமிழ்பேசும் மக்களின் இறைமைகளைக் கூண்டோடு புதைப்பதற்கான பாரிய பொறியை ஏலவே வைத்திருந்தது.அதன் இந்தத் திட்டம் பலிப்பதற்காக உலகத்தைத் தனக்கிசைவாகவும் கரம் கோர்த்து வைத்திருப்தால் இம்முறை தமிழ் பேசும் மக்களின் அழிவுகள் வெறும் உள் நாட்டு ஊடகங்களின் கவனத்தையே பெறாது தட்டிக்கழிக்கப் படுவது நிசம்.

இத்தமாதிரியானவொரு சூழலில் போர் சிங்கள அரசுக்கு மிக இலாபகராமாக இருக்கும்.புலிகள் மீள முடியாத போரில் தமது இருப்பை உறுதிப் படுத்தத்தான் முடியுமேயொழியத் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாது.

உண்மையான பேச்சு வார்த்தைய+டாக ஒரு அரசியல் இணக்கப்பாட்டை எட்ட முடியாத சிங்கள அரசு-புலிகள் இயக்க இயலாமை வெறும் அரசியல் சட்ட-ஆளும் வர்க்கப் பிரச்சனைகளல்ல.மாறாக இந்திய-அமெரிக்க,ஐரோப்பிய நலன்களோடு சம்பந்தப்பட்டு எந்த அரசியல் இணக்கப் பாட்டையும் எய்திட முடியாதுள்ளது.இது ஒவ்வொரு பொழுதும் புலிகளின் இருப்பைக் குறிவைத்துத் திட்டமிட்ட தாழ் நிலை ஆயுத-அரசியல் போரை செய்து வந்துள்ளது.இதனால் புலிகளை அரசியல்-ஆயுதரீதியில் வலுவிழக்க வைக்கும் உலக நாடுகளின் தடைகள் வேண்டுமென்றில்லாது- காரணத்தோடுதான் செய்யப்பட்டதென்பதை நாம் இலகுவாகக் காணலாம்.

ஸ்ரீலங்கா அரசின் பிற்போக்குவாதக் கொடூரங்களும்,தமிழர்-சிங்களவர்-முஸ்லீம்கள் மீதான ஒடுக்கு முறைகளும் திடமானவொரு முடிவுக்கு வந்து, இல்லாதாகவேண்டும்.அதேபோன்றே புலிகளினதும் மற்ற(புலிகளின் மொழியில்:ஒட்டுக் குழுக்கள்) ஆயுதக் குழுக்களினதும் மக்கள்விரோதப் பயங்கரவாதமும் முடிவுக்கு வந்தாகவேண்டும்.இதற்கேற்ற அரசியலானது யுத்தத்தில் நிலை பெறமுடியாது.யுத்தம் எப்பவும் மக்களால் முன்னெடுக்கப்பட்டு, மக்களிடம் அதிகாரத்தைக் குவிப்பதற்கானவொரு சூழலில்தான் வெற்றியை உறுதி செய்யும்.இதை புலிகளின் போராட்ட முறையினால்-அமைப்பு அதிகாரத்தால் நிறைவேற்ற முடிவதில்லை.

அல்லைப்பிட்டி,வங்காலை,கெப்பித்தக் கொலாவப் படுகொலைகள் இந்த அரசியலின் மையப்பட்ட இலாபங்களை(பாராளுமன்ற ஆட்சி நெருக்கடி,புலி இருப்பு நெருக்கடி,நாட்டின் வறுமைச் சுமை,பொருளாதார நெருக்கடி) நோக்கிய விய+கங்களின் வெளிப்பாடே!இந்த விய+கமானது யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதை இந்தக் கடற்சமரும்,சிங்கள அரசின் வான்வழி விமானத் தாக்குதலும் நிரூபிக்கிறது.

ஆரோக்கியமான-புரட்சிகரமான சமுதாயத்தை இலங்கையில் கட்டியெழுப்புவதையே மேன்மையான நோக்கமாகக் கொண்டு,மக்கள் திரள் எழிச்சியை-இனங்களுக்கிடையிலான தோழமையுடன் கட்டி வழி நடாத்திச் சிங்களச் சியோனிசத்தை வீழ்த்வேண்டிய வரலாற்றுத் தேவையை இந்த மக்களினங்கள் தவறவிடும் துர்ப்பாக்கிய நிலையையும்,பாரிய மனித அவலங்களையும் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுத்தி விடுகிறது.

எவரால் முடியும் யுத்தத்தை நிறுத்தி,மக்கள் அழிவைத் தடுக்க?

மீளவும் யுத்தம் :-((((((

ப.வி.ஸ்ரீரங்கன்
18.06.2006

Thursday, June 15, 2006

படுகொலை அரசியல்.

படுகொலை அரசியல்.

இன்றைய இலங்கை எங்கே செல்கிறது?

இது நவீனப் பண்பாடுடைய மக்கள் வாழும் நாடுதாமா அல்லது காட்டுமிராண்டிக் கூட்டம் வாழும் கற்கால இலங்கையா?
அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கொலைகாரர்களால் செயற்படுத்தப்படும் காட்டுமிராண்டிப் படுகொலைகளுக்கு நிகராகப் பற்பல தாக்குதல்களை இலங்கை-புலி இராணுவங்கள் செய்துமுடிக்கிறார்கள்,-சாவது அப்பாவி மக்கள்!

சமீபத்து வங்காலைக் கொலைக்கு கொழும்பில்-சிங்களக்கிராமங்களில் புலிகள் தாக்கவேண்டுமென விரும்பிய தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள கெப்பித்தக்கொலாவ எனும் சிஙகளக்கிராமத்தில் பேரூந்து வெடித்துச் சிதறுகிறது இன்று! சாவு:64 பயணிகள்-அப்பாவி ஏழை மக்கள்!!-குழந்தைகள்...

குஞ்சு குருமான்கள் என்ன பாவம் செய்தார்கள் இந்த நாட்டில்?

நிம்மதியாக வாழும் இயல்பு நிலையை மறுக்கும் அரசியலின் நோக்கமென்ன?

கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக நடைபெறும் பாலஸ்தீன-இஸ்ரேலியப் பயங்கரவாதத் தாக்குதல்கள் யாவும் பழிக்குப் பழி தீர்க்கும் பயங்கரவாதத் தாக்குதல்களாகவே உலகத்தால் பேசப்படுகிறது.எனினும், இத்தகைய தாக்குதல் தொடர்கதையாய்...

இது,இன்று இலங்கையிலும் தொடர்கிறது.
நாடும் மக்களும் எங்கே செல்லப் போகிறார்கள்?

இந்த விவஸ்த்தையற்ற "இலங்கை-புலி அரசியல் பயங்கரவாதம்" எந்த நிலையில் செயலூக்கமாக முன் தள்ளப்படுகிறது?இதைச் செய்து முடிக்கும் மனிதர்கள் எந்த இலக்கை எட்டிவிட முடியும்?வரலாற்றைக் கற்றவர்கள்தாமென தம்பட்டம் அடிக்கும் தமிழ்ச் சிறார்களுக்கு பாலஸ்தீனம்-இஸ்ரேல் பாடம் மனசாகவில்லை!

இன்றைய இலங்கை-புலிப் பயங்கரவாதம் உலகத்துக்கு ஒரு பகுதி மக்களினத்தை(தமிழ் பேசுவோரை)படுகேவலமான காட்டுமிராண்டிகளாகவும்,பயங்கரவாத நோக்குடையவர்களாகவும் காட்டி விடுகிறது.கெப்பித்தக் கொலாவத் தாக்குதல் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமை வாதத்துக்குக் கிடைத்த மாபெரும் அடியாகும்.இது தமிழ் மக்களினதுமட்டுமல்ல உலகத்திலுள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை அரசியல் வழியில் மட்டுமே தீர்க்க முடியுமென மீளவும் நிரூபிக்கும் படுகொலைகளாகும்.

ஈழத்தமிழ் ஆயுதக்கும்பல்களால் எந்தப் பொழுதிலும் புரட்சியை முன்னெடுக்க முடியாதென்பதற்கு மீளவும் உறுதி கூறும் தாக்குதல்தாம் இது.

இந்த வகை அரசியல் எம்மினத்தை இன்னும் அரசியல் அநாதையாக்கும் சூழ்ச்சிமிக்கப் பயங்கரவாதச் செயற்பாடாக விரிந்து முழு இலங்கையையும் ஒரு பெரும் இனவாதத் தீக்குள் சிக்க வைக்கும் கபட அரசியலாகும்.இதனால் அரசியல் வகைப்பட்ட எந்த முன்னெடுப்பும் பின் தள்ளப்பட்டு,ஆயுதக் கலாச்சாரத்தில் மூழ்கிவிட்டர்வகள் தம்மையும் தமது இருப்பையும் தக்க வைப்பதற்கான இனவாத அரசியலையும்,போரையும் தொடக்கி நமது மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் அழித்துவரத் திட்டமிட்டாச்சு!-இங்கே புரட்சிகரமான போராட்டம் மிகவும் பலவீனமாக்கப்பட்டு மக்கள் ஐக்கியம் பாழடிக்கப்படுகிறது!!இது தமிழர்களின் அனைத்துத் தார்மீக உரிமைகளையும் இல்லாதாக்கி வருகிறது.

நாம் எதிர்வு கூறும் எந்த அரசியல் முன் நகர்வும் மேலும் அபிவிருத்தியடைய வாய்ப்பில்லை!எது எப்படி நடைபெற வேண்டுமோ அது அப்படி முன்னெடுக்கப்படும் அரசியில் விய+கத்தைச் சிதறடிக்கும் இயக்க-கட்சி நலன்கள் மக்களின் இருப்பைச் சூறையாடுகிறது.அது மனிதத் தன்மையே இல்லாத பயங்கரப் பாசிசத்தை இலங்கைத் தீவில் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

ஆயுதக் காட்டுமிராண்டிகள் அப்பாவிகளின் உயிரைத் தமது தலைமைகளின் இருப்பின் பொருட்டுப் பறிக்கும்போது நாடு மக்களின் சுயாதிபத்தியத்தை சட்டரீதியாக வலு விழக்கவைக்கிறது.இங்கே மானுடவுரிமை,ஜனநாய மரபு யாவும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு,கட்சி-இயக்க ஆதிக்கம் வன்முறைசார்ந்த அதிகாரமாக நிறுவப்படுகிறது.இந்த வன்முறைசார் அதிகாரமானது எந்தத் திசைவழியை மக்களின் விடுதலைக்கு வழங்குகிறதென்றால்-மக்களின் விடுதலையென்பது குறிப்பிட்ட அதிகார வர்க்கத்தின் நலன்களைக் காக்கும் திசைவழியையே மக்களின் விடுதலையாக மக்கள் குழுமத்தில் சமூக எண்ணமாக விதைக்கிறது.இது மிகக் கொடுமையான மக்கள் விரோதமாகும்.மேலும் பிறிதொரு பாதையில் மக்களின் அனைத்து வளங்களையும்(ஆன்ம-உடல் மற்றும் பொருள்)தமது இருப்புக்கு இசைவாகத் திருடிக் கொள்கிறது.

இனிமேல் இந்த வகை அரசியலை தமிழீழத்துக்கான இறுதி இலட்சியமாக விதந்துரைக்கும் பரப்புரைகள் மக்கள் வெளிக்குள் விதைக்கப்படும்.இது பாரிய பின்னடைவை ஜனநாய முன்னெடுப்புகளுக்கு வழங்கும்.இத்தகையவொரு சூழலில் இலங்கை அரசியல் நகர்வு நிச்சியம் தமிழ் பேசும் மக்களின் அனைத்துவகைவுரிமைப் போராட்டத்தையும் சிதறிடித்து, தமிழ் மக்களைப் புதிய வகையில் ஓடுக்கும் சட்டரீதியான யாப்புகள் இலங்கைச் சிங்கள அரசால் எய்யப்பட்டு,தமிழ் மக்களின் தலையில் தீயை அள்ளிக் கொட்டும்.இங்கே பயன் பெறுவது ஆயுதக் காட்டுமிராண்டிகளின் தலைவர்களும்-மாபியாக் கும்பல்களுமே!

மக்களோ எந்த ஜனநாயக விழுமியங்களுமற்ற இலங்கை மண்ணில் யுத்தப் பிரபுகளின் அடியாட்களாகி அடிமையாய் வாழவே நேரப்போகிறது!

இதைத் தடுத்தாக வேண்டும்!

மக்கள் தமது பிரச்சனைகளுக்கான போராட்டத்தை தமது இருப்புக்கான போராட்டத்தோடு இணைத்து,ஜனநாயகரீதியாக வீதிகளுக்கு இறங்கியாக வேண்டும்.இங்கே இன,மத பேதங்கள் கடந்து மக்களின் கரங்கள் கோர்வைப்படுவது அவசியம்.இந்த நிலைமை உருவாகாதவரை பாசிச அதிகாரங்களை வீழ்த்த முடியாது!மக்களை அணிதிரட்டிப் போராட வைக்கும் சக்தி மக்களின் நலனில் அக்கறையுடைய கல்வியாளர்களிடமே தேங்கிக்கிடக்கிறது.

இவர்களது பங்களிப்பு என்றுமில்லாதவாறு இன்று மிக அவசியமாக இருக்கிறது.ஆயுதங்களுக்காக-அடக்குமுறைகளுக்காகத் தமது ஆன்ம வலுவை இழந்திருக்கும் மக்கள் நல இன்றைய கல்வியாளர்கள் நாளைக்கு முழுமொத்த இலங்கை மக்களையும் அழிக்கும் அரசியலுக்கு உடந்தையாகுவார்களா அல்லது மக்கள் எழிச்சிக்கு வித்திடுவார்களா என்பதை இனிவரும் காலவர்த்தமானம் நிர்ணயிக்கும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
16.06.2006

Wednesday, June 14, 2006

பிணக் கூத்து!

பிணக் கூத்து!


அவர்களுக்கென்றொரு அரசியல்
இவர்களுக்கென்றொரு அரசியல்
இடையில் மக்கள்:நான்-நீ,மற்றும் சுற்றம்
கொன்றபின் யோனியில் ஆண்குறி அமிழ்ந்ததா?
ஆராய்தல் அலுத்த கதை...


கொல்லுவதில்
எவரும் சளைத்தவர்களில்லை!
சிங்களத்து இராணுவத்திடமும்
புலிகளிடமும் பேசும்"மொழிகள்" வேறுபடலாம்
ஆனால்
கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே!!


காத்தான்குடி முன்
அநுராதபுரம்,
சமீபத்தில் கனகம் புளியடி,
வங்காலை வழி
யுத்தத்திற்கு நியாயம்:
"கொழும்பில்"கையை வைக்கப் புலிகளுக்கு ஆலோசனை...


தெரியாதா இது?
புலி அறியாத மக்கள் திரள் உண்டோ?
இறப்பவர்களும் கொலை செய்கின்றார்கள்
கொலையாகிவிடுபவர்களும் இறக்கின்றார்கள்
இறப்புக்கு:
ஸ்ரீலங்கா-தமிழீழ நாட்காட்டி,
சோற்றுக்கு:தேசவொருமைப்பாடு-ஈழ விடுதலை!



பிஞ்சுகளின்
குருதியில் கை நனைப்பவர்களுக்கு
தேசம்,
தேசியம்,
மொழி-மதம்
உணர்வு வழி உயர்வென்றால்
மக்களற்ற மண்ணை
எந்த மடையன்-மடைச்சி கோடிட்டுக் குறி வைப்பான்(ள்)ஸ்ரீலங்கா-ஈழமென்று?


கை நீட்டிச் சோற்றுக்கு அலைந்தவர்களின்
பிணங்களைக் காட்டி
ஈழத்துக்கு இரங்கற்பா பாடுவது தெருக்கூத்து-இது
திராவிடத்து அரசியலின் திருநோக்கு!


செத்தவர்களைச் சொல்லிப் பிழைப்பதும்,
சாக வைப்பதும் ஈழப் போருக்குப் புதிதில்லை
குமரப்பா,
புலேந்திரன்
குல தெய்வமான(புலிகளுக்கு) தீன் மறுக்கப்பட்ட திலீபன்!!!


ஒரு கணப் பொழுதில்
கூடு குலைத்தெறியப்பட்ட யாழ் முஸ்லீம்களும்
இரயர் போட்டெரிக்கப்பட்ட
மாற்றியக்கப் போராளிகளும்
மறுக்கப்பட்ட ஜனநாயகத்துக்காக
மரித்துப்போன விமலேஸ்வரன்- சிவரமணியும்
எதிர்க் கேள்வி கேட்டதற்கு இரையான செல்வி- ரஜனி திரணகமவும்
மனிதர்கள்தாம்-தமிழர்கள்தாம்!


மாத்தையாவும்
அவருடன் மரித்த பல நூறு பாலகர்களும்
கருணாவின் பாசறையில் ஒதுங்கியதற்காகக்
கொல்லப்பட்ட குழந்தைகளும்
தமிழிச்சிகளின் முலைக் காம்பைச் சுவைத்தவர்கள்தாம்.


முண்டங்களே!
பிணங்களின்மீதேறி
தமிழுக்கு உரிமை கேட்காதீர்!
பிணங்களின் முன்னைய நிலையிருப்பில்
ஓலைக் கொட்டிலில்
ஒரு நேரக் கஞ்சியையும் காட்டாதவர்கள் நீங்கள்.


உங்கள் அரச கரும மண்டபங்களில்
உலாவித்திரியும் தாது நீரின் உச்ச சுகாதாரத்தில்
ஒரு பங்கைக்கூட அவர்கள் நுகர்ந்தவர்களில்லை!


அறத்தின் அடி வயிற்றில் கத்தியேற்றி,
மறத்தின் உச்சத்தை உலகுக்கு வழங்கும்
ஒப்பற்ற தமிழ்த் தேசியக் கூச்சல்
இன்னும் எத்தனை பிணங்களோடு
உலகத்தில் கண்ணீர் சொட்டும்?


ஊரெல்லாம்
தமிழர்களை
எட்டப்பரும்,துரோகிகளுமாக
உருவகப்படுத்தும் புலிகள்
உயிர் பறிப்பதும்,கொலைக்கு ஆட்த் தேடுவதும்
தமிழீழ வீரத்தின் விழுப் புண்!


சிங்களத்து உலங்கு வானூர்த்திகளில்
கூடிக் கும்மாளமடித்து
புதுப் பொலிவொடு புன்னகைக்கும்
சூனாப் பானாக்களும்
புலித் தேவர்களும்
மதுவுரைஞர்களும்
சிங்களத்து இரணுவத்துடன்
சிரித்துக் கை குலுக்கும்போது
வங்காலையில்
வாய்க்கரிசி விழுகிறது!


சுண்ணத்தைச் சேர்ந்தே இடிப்பவர்கள்
தமிழகத்து மக்களிடம் திருவாசகம் படிப்பதற்கு
விண்ணப்பித்தபடி...


ஊரெங்கும்
தெருவெங்கும்
வங்காலைக் கொலைகளை
ஒட்டிவைப்பவர்கள்
சிங்களத்துக் கிராமங்களுக்கும்
கொலைகளை
ஏற்றுமதியாக்கிவிடுவதில் ஒருமித்த வீராப்புடன்!


உயிருக்கு:மொழியென்ன-மதமென்ன,இனமென்ன?
முன்னாளில்-
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்"என்ற
தமிழன் வள்ளலாரானார்!


"பேசிய தமிழனைக் கண்டபோதெல்லாம் போட்டேன்"என்றவரும்
தேசத்துப் பிதாவாவார்-பின்னாளில்!!


பிறகென்ன
பிணங்களின் வகை தொகைகளில்
பிணக்கு வைத்து
இனக் குரோதமொன்று தீயாகும்போது
இருப்பவர்களுக்கு
இன்னுமொரு விடுதலை
சாவாக வருவதில்
வியப் புண்டோ-கண்ணீருண்டோ?

அல்லைப் பிட்டியென்ன
அகதி முகாமென்ன
அழிவுக்கு வழிகாட்டி
அரசொன்று கோலாச்சி
தமிழர்களுக்குத்
தேசமொன்று இடுகாடாய்ச் சுடுகாடாய்...


போ,போ-போய்ப் பிணங்காவி வா
பின்னொரு தேசிய யுத்தஞ் செய்ய!
போதுமே உன்
பிணக்கூத்து ஈழமே
இனியாவது
இருப்பவரை வாழ்விக்க மாட்டாயோ?


ப.வி.ஸ்ரீரங்கன்
14.06.2006

Sunday, June 11, 2006

தமிழ் சூழலுக்குள்...

தமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும்
கருத்துக்கட்டுமானமும்.



வாழ்வியல் மரபுகள் தகர்க்கப்பட்டுவரும் சூழல் இருபத்தியோராம் நுற்றாண்டாகும்,ஒன்றின் இழப்புக்குப் பின் அந்தவிடத்திற்கு மிகவும் காட்டமான பழைய மரபுசார்ந்தெழுகின்ற ஒரு பிற்போக்கு வடிவத்தை புதியவொழுங்கு போன்று ஒப்பவிக்கிறது இந்த நுற்றாண்டு.

இதற்கு புதிதாய் மலிந்துவிட்ட விஞ்ஞானச் சாகசங்கள் நன்றாய்த் துணைபுரிகின்றன,இதன்பொருட்டு இன்றைய செய்மதிச் செய்திப்பரிவர்த்தனை வானளாவிய தொலைத் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி-வானொலி,இணைய வலைப் பின்னல்களை தனிநபர்-தனிப்பட்ட வலயத்திற்குள் திணித்து விட்டுள்ளது, இது பற்பல சாத்தியங்களை மக்கள் சமூகத்துள் தோற்ற இதன் பயன் பாரிய சமுதாயப் பின்னடைவை-பிளவை வற்புறுத்துகிறது,என்றுமில்லாதவாறு சமூக முரண்கள் மழுங்கடிக்கப்பட்டு சமுதாய மாற்றம் நிகழாத சூழலை ஏகாதிபத்திய நிறுவனங்கள் நிறுவனமயப் படுத்துகின்றன,தற்செயலாகவேனும் உலகமயத்திற் கெதிரான கல்வியல் சார்ந்த கட்டுமானம் நிகழாதபடி இந்த உலகமய அரசியற்தந்திர வியூகம் இப்போது பலமாகக்கட்டப்படுகிறது.

நிகழ்வுசார்ந்தெழுகின்ற அனைத்து நிலமைகளும் நன்றாகத் திட்டமிடப்பட்டுள்ளது,இதன் ஒவ்வொரு அசைவும் நுணுக்கமாக ஆய்வுக்குட்படுத்தி சட்டநிலைமைகளால் தடுக்கப்பட்டு வரும் நிலையில் நமது தமிழ்ச்சூழலை மையப்படுத்தி எதையும் குறித்துரைக்காதிரக்கமுடியாது!

இன்றைய சூழல் நம்மைக் கணிசமான அளவு உதிரிவர்க்கமாகவும், நாடோடிகளாகவும்-ஒட்டுண்ணிகளாகவும் அறிவுத்திறனற்ற அடிமைகளாகவும் மாற்றியுள்ளது,நாம் நமது பாரம்பரியக் கனவுகளில் தஞ்சம் புகுகின்றோம்,தப்பித்தல் எந்த வகைப்பட்டதாயினும் அது நமது பொருள் வயப்பட்ட வாழ்வைப் பாதிக்காதிருக்க கவனமாகப் பழக்கப்பட்டுள்ளோம்.மூன்றாம் உலகத்துக்கேயுரிய அடங்கிப்போகும் மனோபாவம் நம்மை இன்னும் வக்கொழிந்தவர்களாகப் பார்க்கும்படி நாமேயேர்ப்படுத்தி அவற்றை நமது அடுத்த தலைமுறைக்குக் கடத்திக்கொள்ள பற்பல ஊடகங்களுடாய் செயற்படுதல் தற்போது சகஜமாகப்பார்க்க முடியும், எனினும் எமது வாழ்வும் துய்ப்;பும் நம்மில் பலரை இதற்கு மாற்றீடாய்ச் சிந்திக்க வைத்தாலும் நமது கருத்தியற் தளம் மிகவும் பலயீனப்பட்ட நிலைகளால் மிகச்சாதரண காரியத்தைக்கூட மக்கள் சமூக வட்டத்துள் சாதிக்க முடியாதபடி ஆக்கப்பட்டள்ளது.


சிலகால வரலாற்றுண்மைகளை நாம் கேள்விக்குட்படுத்திவிடுதலும் பின் அவற்றை முழு நிலவுகின்ற சூழலுலக்குமான மொத்தக் கண்ணோட்டமாகக் கருதிவிடுதலும் பின்தங்கிய உற்பத்தி நிலவுகின்ற நாடுகளிலுள்ள புத்திஜீவ மட்டத்தின் பகுப்பாய்வாக இதுவரை நிகழ்ந்துவருகிறது,இதன் அப்பட்டமான பரிந்துரைப்புகளை நாம் பல் வகைகளிலான வரலாற்று ஆவணங்களிலும் பார்க்கமுடியும்!

இந்தப்பார்வைகள் வைக்கின்ற மௌன மேதாவியக்கோரிக்கைளை அவற்றை வைத்தவர்களே இன்று மறந்துவிட்டு உலகமய அரசியலில் தமது இருப்பிற்கேற்ற வாறு புதிய மொந்தைக்குள் பழையதை ஊற்றமுடியாது மண்ணுக்கேற்ற மார்க்சியம் பேசும் சூழலில் மறந்துபோயும் வர்க்கம் சார்ந்து பேசாதிருக்கப் பழக்கப்பட்டுவிட்டார்கள்,உலகமயமாதலை ஒருநாட்டினது சுய பொருளாயுத வளர்ச்சியாக வர்ணிக்கும் மேதமையை புலம்பெயர் நாடு
களில் புதிதாய் பட்டம்(!?)பெற்ற தமிழ்ச்சிறுவர்கள் செய்துவருகிறார்கள் .இந்த உலகமயமாதல் என்ன என்பதை அறியவைத்தல் தமிழ்ச்சூழலுக்கான(வெகுஜன)ஆய்வு முறையாக இன்னும் வளரவில்லை.தமிழர்களினது வர்க்கச் சிந்தனை மிகவும் கவனமாக வளர்த்தெடுக்கப்பட்டது,இது தன்னையும் தன் குடும்பத்தையுமே மானுடமாகப் பார்க்கப்பழகியது, எனவே அதன் தேவைகள் அண்டிப்பிழைத்தல் அரசியலை மையப்படுத்தி நகரத்தொடங்கி இன்று கிட்டத்தட்ட ஈராயிரமாண்டாகிவிட்டது!

புலம் பெயர் தமிழ் குழுமம்:

புலம்பெயர்வாழ்வு மிகவும் முரண்படுதன்மைகளை -பொருந்தாத்தன்மைகளை தன்னகத்தே கொண்டுடியங்குகிறது,இணக்கமற்ற இருவேறு அணுகுமுறைகளின் ஒருமாதிரி சேர்க்கையிலேதாம் புலம் பெயர் தமிழ்மக்களினது இருப்பே தங்கியுள்ளது. இங்கெல்லாம் நாம் நமது வாழ்வை சமூகக்கூட்டாகமைக்க முடியவில்லை .இதனால் சமுதாயரீதியான அணுகுமுறையற்றுப்போவதால் குழுவாரீயான அணுகுமுறையே நிலவுவதால் அஃது ஒன்று,மற்றது: தனிநபர்வாத அணுகுமுறை! குழுவாரியான அணுகுமுறைக்குள் சிறு சுய அமைப்பாண்மையும்,ஆற்றலையும் காணும்போது மறுபுறத்திலோ தனிநபர்வாத அணுகுமுறை எல்லாச்சீரழிவுக்கும் பசளையிடும் காரியத்தில் இயங்கிக்கொள்கிறது.

இத்தகைய தனிநபர்வாத அணுகுமுறை பழைய குட்டிப்பூர்ச்சுவா குணாம்சம் காரணமாக மிகவும் இறுக்கமான மரபுசார்ந்து செயற்படும் தந்திரத்தில் மையங்கொண்டுள்ளது, இது கண்டதையும் காசாக்கும் நோக்கோடு சகல 'மக்கள் தொடர்பாடலையும்' பார்க்கிறது. இந்தப்போக்கின் விருத்தியே தமிழ் வானொலி-தொ(ல்)லைக்காட்சி வியூகமும்,அதுசார்ந்த வர்த்தகமும்.இது சுயநலன் கொண்ட தற்பெருமையும்,இறுமாப்பும் கொண்ட தனி நபர்களை உருவாக்கிவிட்டுள்ளது, இவர்களது சமூகவாரியான புரிதல் மிகவும் தாழ்நிலையில் இருக்கிறது,இவர்களே புதிதாய் கற்றுவிட்ட மேதாவிகளாய் உலகத்தின் எந்த பிரச்சனைக்கும் எழுந்தமானத்திற்குப் பதிலளிக்கிறார்கள்
இந்தியா இன்னும் இருபதாண்டுகளில் வல்லரசாகிவிடுமென கருத்திடும் இவர்கள் உலகமயமாக்கலை சுயவளர்ச்சியாகப் பார்க்கும் பிரமையை இறுமாப்பென்பதா அல்ல மூடத்தனமென்பதா?இந்த பட்டதாரி இளைஞர்கள் தமிழ்பேசும் மக்களின் எந்தப்பிரச்சனையையும் புரிய மறுத்து மேற்குலகக் கல்வியின் பிரதி நகலாக-மேற்குலக மானுடர்களாக தொலைக்காட்சிகளில் தோன்றி சாதரணமக்களை அடிமைத்தனத்திற்குப் பழக்கி அதில் தங்கிவாழ வியூகம் அமைத்து யார் யாருக்கோ உதவுகிறார்கள்!


இந்த நிலையே கேள்விகளை-சாரத்தை-இயங்குதளத்தை புரிந்துகொள்வதில் சிக்கலிட்டுள்ளது, முரண்நிலையிலிருந்து கேள்வி கேட்பது சமூக விஞ்ஞானத்தின் ஆரம்பப்படி,இதன்படியே நம்மை-நாம் புரிந்துகொள்வது இன்று மிக மிக அவசியம். புலம்பெயர் தமிழ்பேசும் மக்களினது வாழ்வானது இரண்டும் கெட்டான் சமூகசீவியமாகவிருக்கின்ற இன்றைய சூழலில் இ;துகுறித்து பொறுப்புணர்வோடு ஆய்வுகள்,கருத்துக்கள் முன்வைப்பது இன்றைய இளைய படிப்பாளிகளின் பொறுப்பாகும்!



ஐரோப்பியக்கூட்டமைப்பு நாடுகளினது உயர்கல்லுரீ மற்றும் பல்கலைக்கழகங்களின் சமூக உளவியற்சூழல் மிகவும் தாழ் நிலையிலேயே இருக்கிறது,இஃது ஐ.கூ.அமைப்பின் பொருளியல் நலன்களின்மீதான கருத்தமைவுகளுடன் பிணைவுற்றே தன்னை வெளிப்படுத்துவதால் இதன் வேர்களை நாம் மிக இலகுவாக இந்த ஐ.கூ.அமைப்பின் சமூகக்கட்டுகளுக்குக் கீழ் நிலவும் பாசிசத் தன்மைக்குள் காணமுடியும்.இது ஒரு வகையில் பழைய கொலனித்துவ மற்றும்1938 களில் நிலவிய சமூக உளவியலை மீளக்கட்டுவதற்கும், இளைய தலைமுறையை பூர்ச்சுவா கருத்தமைவுகளுடன் பிணைப்பதற்கும் திட்டமிட்டபடி பெரும் நிறுவனமான பாடசாலை-பல்கலைக்கழகங்களை பயன்படுத்திவருவதை சகல உயர்கல்வி மாணவர்களும் சற்று அவதானமாக நோக்கினால் அறிய முடியும், மேற்குறிபிட்ட படி இதைச் சகல வடிவங்களிலிருந்தும் அந்தக் கல்வி நிறுவனம் சரிவரத் திட்டமிட்படி கடைப்பிடிக்கிறது,ஐரோப்பியக் கூட்டமைப்பின் பாடத்திட்டங்களை வகுக்கின்ற கல்வியாளர்களே இந் நாடுகளின் இன்றைய சமூக உளவியலைத் தீர்மானிப்பவர்களாக சமூகப் புறநிலையுள்ளது.ஐ.கூ.வந்துவிட்டது!

பல் தேசங்கள் கூடி,தத் தம் தேசிய எல்லைகளைக் கடந்து 'கண்ட அரசியலை' நகர்த்தினாலுங்கூட இவர்களது அரசியல் சந்தைப் பொருளாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்வதும் அந்தப் பாதுகாப்புக்கவசத்திற்கு என்றுமே எதிரிகளற்ற கருத்தியல் மேல்நிலையைக் கட்டிக்கொள்வதுமே.

ஐரோப்பியக் கூட்டமைப்பின் அரசியல் தேசங்களின்-மக்களின் கூட்டாகவன்றி வெறுமனவே உடமை வர்க்கத்தினது கூட்டாகக் காணமுடிகிறது!இஃது மிக விரைவாகச் சிதறியே தீரும், யூரோ நாணயம் இன்று பலமுடையதாயினும் நாளை அதன் முடிவு நெருங்கிவிடும்.அப்போது நடைபெறப்போகும் நாடகம் நமது கனவுகளை நொருக்கி நம்மை புகலிடத்திலிருந்தே விரட்டும்,இதை நமது இளைய தலைமுறை புரிந்து விடுமென நம்பமுடியாது.இது இப்படியிருக்க இந்தியாவின் வியூகமோ சொல்லிமாளா!


வாழ்வியல் முரண்கள் புதியவற்றை படைக்கத்துண்டும் நிலைமகளில் - நம்மை வற்புறுத்தும் இன்றைய புலம்பெயர் வாழ்வில் நாம் அவற்றைத் தெரிந்து-புரிந்து காரியமாற்றமுடியாதபடி மிகக் கவனமாக தமிழ்பேசும் மக்களின் விரோதிகள் காரியமாற்றுகிறார்கள், இந்த விரோதிகள் தமிழ்பேசும் மக்களை தமது நலனுக்கேற்றவாறு பயன்படுத்தும் நோக்கோடு நமக்குள் ஆய்வுகளை, கருத்தக்களைக் கொட்டுகிறார்கள்.

இவை புலம்பெயர் வாழ் தமிழ் மக்களை வெறும் கலாச்சாரடிமைகளாக மாற்றிவிடும் வியூகத்தை அடிப்படையாகக் கொண்டியங்குகிறது. இந்தக் கபடவலைக்குடந்தையாக இன்றைய ஊடக வளர்ச்சி இருக்கிறது
இது தமிழக இறுமாப்பு நிறைந்த வர்த்தகச் சினிமா மனிதர்களைப்போல் நமது மனோபாவத்தை மாற்றிவிட பாடு படுகிறது, இதனுடாக நமது சுயவளர்ச்சி முடக்கப்படுகிறது, எதற்கும் இந்தியப் பார்ப்பன கருத்தியலைச் சார்ந்து இயங்கும் மனிதக்குழுவாக நம்மைத் தயார்ப்படுத்தப் பாடுபடும் இந்திய நலன் நமக்கான சுய விடுதலையை,சுதந்தரத்தை-ஆத்மீகவளர்ச்சியை,தனித்துவத்தை,தேசிய அடையாளத்தை நிர்மூலமாக்குவதில் மெதுவாக வெற்றியடைந்து வருகிறது!

இதன் போக்கால் இந்தியச் சந்தை விரிவாக்கப்பட்டுள்ளது,நிரந்திரமான ஒரு நுகர்வுக்கூட்டத்தை ஐரோப்பா மற்றும் அமெரிக்கா,அவுஸ்ரேலியா,ஆபிரிக்காவெங்கணும் கட்டிக்கொள்ள இந்தியத் தரகுமுதலாளிய வர்க்கம் முயற்சித்து வருகிறது.இது இந்தியாவினது ஆசியச் சந்தையைவிட மிக வருமானத்தை அதற்கு அளிக்கக்கூடியது, இந்தச்சந்தையின் நுகர்திறன் வளாச்சியடைந்த சமூகத்தின் திறனோடு ஒப்பிடத்தக்கது.நமது மனோபாவம் வளராவிடினும் நாம் வளர்ச்சியுற்ற முதலாளித்துவ நாடுகளில்தாம் வாழ்கிறோம்.

புலம்பெயர் தமிழராகிய நாம் உளவியல் இரீதியாகப் பலவீனப்படுத்தப்பட்டுள்ளோம்,தமிழகத் திரை முகங்களிடம் தஞ்சமடையுமளவுக்கு நமது அகவளர்ச்சி தடுக்கப்பட்டுவிட்டது. இதிலிருந்து மீள இங்கிருக்கும் குழுவாரியான சுய அமைப்பாண்மையுடைய தமிழப்புத்திஜீவிகள் தமது ஆற்றலை இவைநோக்கித்திருப்பிவிட அவர்களுக்கிருக்கும் ஒரே தடை கருத்துச்சுதந்திர மறுப்பேயாகும்! இஃது தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் கூடுதலாகப் பார்க்கமுடியும்.மாற்றுக்கருத்துக்கு நாம் இடமளிப்பதே நமது எதிர்காலத்தை விருத்திக்கிட்டுச் செல்லும்,இதை இங்கிருக்கும் எந்த ஊடகமும் மறுக்கமுடியாது.

இலங்கை மற்றும் தமிழகச் சூழல்:


பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பகுதிகள் இப்போது தமிழர்களின் சுதந்திரமான உயிர்வாழும் ஜனநாயக உரிமையை உறிதிப்படுத்துவதாக யாரும் கனவுகூடக் காணமுடியாதவொரு சூழலை அவைகொண்டுள்ளன, ஒரு
திமிர்த்தனமான அரசபயங்கரவாத நெருக்குவாரத்தோடுகூடிய தனிநபர்பயங்கரவாதம் தலைவிரித்தாடும் தமிழ்ப் பிரதேசங்களில் ஜனநாயகப் பண்புகள் துளியளவேனும் நிலவுவதாக யாரும் குறித்துரைத்தால் அவர் விசமம் பண்ணுபவராகவே கருத இடமுண்டு,அவ்வளவு மோசமானவொரு சூழலை இவ்விடங்களில் வாழும் மக்கள் அனுபவிக்கின்றனர்.


அரை இராணுவத்தன்மையுடைய சர்வதிகார காட்டாட்சிக்குள் இலங்கை-தமிழக தமிழ்பேசும் மக்கள் வாழ்கிறார்கள், நேரடியான அரச வன்முறைஜந்திர நெருக்குவாரத்துக்கு தமிழக மக்கள் முகங்கொடுத்தால் இலங்கைத் தமிழ் மக்களோ அரச-தனிநபர் பயங்கரவாதத்திற்கும் பொருளியல் ஒடுக்குறைக்கும் முகங்கொடுப்பது மட்டுமல்ல முகத்துக்கு நேரே குறிவைத்துக்காத்திருக்கும் சுடுகருவிக்கும் தலைசாய்த்தே சீவிக்கவேண்டும்!

என்றுமில்லாதவாறு உயிர்வாழும் உரிமை மறுக்கப்படும் சூழலில் ஒரு ஆரோக்கியமான கருத்தியில் கட்டுமானம் நிலவமுடியாது,அங்கே நிலவுகின்ற சமூக உளவியல் அரபுநாடுகளை விட பின்தங்கிய குறைவிருத்தியுடைய ஜனநாயகத்தன்மையைக்கூட விட்டுவைக்கா.இது ஆண்டான் அடிமை அமைப்பை மறைமுகமாகப் பிரதிநித்துவப்படுத்துவதில் ஆளுமைமிக்கவர்களை தள்ளி அவர்களது நலனை முதன்மைப் படுத்தும் அரசியலை மையப்படுத்தியே சட்டவாக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதையேதாம் அமெரிக்க பொருளியல் நலன் மூன்றாமுலகில் விரும்புகிறது. இவ்விடங்களில் துளியளவேனும் ஜனநாயப்பண்பு
நிலவுதை உலக ஆண்டான்கள்விரும்புவதில்லை.


தமது அடிவருடியளைக்காக்க இதுவே சரியானதொரு அரசியல் வழியாக அவர்கள் கருதுவதால் இவ் மக்கள் மத்தியில் நிலவும் உணர்வு எப்படியும் உயிர்த்திருத்தலே, இதை விட வேறெதுவம் அவர்தம் சிந்தையில் தோன்றுவதாயின் அதுவே தப்பித்தலாக இருக்கும். இந்தத் தப்பித்தல் காலா காலத்திற்கு மாறு பட்ட வளர்சச்சியையெட்டமுடியுமேயொளிய மாறாக ஆரோக்கியமான வாழ்வியல் பண்புகளை,ஜனநாயகத்தன்மைகளைத் எட்டமுடியாது. ஏனெனில் இங்கு நிலவும் இராணுவப் பொருளாதார உறவுகள் இதற்கு மேலே செல்லும்படியான உற்பத்தியுறுவுகளை ஏற்படுத்த முடியாது
போய்விடுகிறது,
சரியான முதலாளிய வளர்ச்சியற்ற தரகு முதலாளியச் சூழல் இதற்குமேல் நகர முடியாது.

சொந்த முரண்பாடுகளால் நமது சமூகவுருவாக்கம் நிகழும் படியாக கொலனித்துவம் விட்டு வைக்கவில்லை, அது தனது தேவைக்கேற்றபடி தரகு முதலாளியளை உருவாக்கிவிட்டு அதற்கேற்ற திட்டவாக்கத்தை நமக்கு கற்பித்து வருகிறது, இதிலிருந்து இந்தநுற்றாண்டில் மீளக்கூடிய ஆரோக்கியமான நகர்வு தென்படவில்லை.

பாராளுமன்ற ஓட்டுக் கட்சிகள் யாவும் நம்மையும் நமது நாட்டையும் தமது வருமானத்தின் மூலப்பொருளாக பாவித்தல் அறுபதாண்டுகளாக நடைபெற்றுவரும் சங்கதி.இதனால் நாம் நாடு எனும் அமைப்பை விட்டு,நாடுகள் என்ற அமைப்புகளுக்குள் நிர்பந்திக்கப்பட்ட வாழ்வை மேற்கொள்ளும் அவலமேற்பட்டுள்ளது.நமக்கான திட்டவரைவை உலகவங்கி எழுதுகிறது, அதன்படி காரியமாற்றும் ஓட்டுக்கட்சிகள் இப்போது கல்வியில் கைவைக்கும் உலக வங்கியை எதுவும் கூறமுடியாத வக்கற்வர்களாகி அறிவுசார்ந்த துறைகளை மூடிவிடச் சொல்லும் செயலை செவ்வனவே செய்து வருகிறார்கள், இதன்படி இனிமேல் தொழில் சார்ந்த ,அதுவும் உலகமயத்தின் கொள்ளைக்காரருக்குச் சேவகம் செய்யும் கல்வியே சாத்தியமாகப் போகிறது.


இந்தநிலையில் நமது தேசியக் கனவுகள்,தேசிய அலகுகள்,தேசியத்தன்மைகளெல்லாம் மாற்றம் பெறுகின்றன.
எமக்கான நீதி,நியாயம்,உரிமை யாவுமே ஏகாதிபத்யத்தின் நலனுக்கேற்வாறு மட்டுமே இயங்கும்.அடிப்படை வாழ்வுரிமை புதிய வகைமாதிரியானவொரு மொன்னைப் பேச்சாகவே இப்போது பேசப்படுகிறது,இதன் விருத்தி வேறொரு வகையில் மனிதாயத்தின் பெரும் தோல்வியாக -அதுவே ஒரு பெரும் கதையாடலாக இட்டுக்கட்டி அதன் கழுத்தில் நுகம் வைக்கப்பட்டுள்ளது! இந்த நுகத்தடி பற்பல வர்ணங்கொண்ட கனவுகளை விதைப்பினும்
மானிட நேயம்சார்ந்த சமூக உளவியல் இப்போது காலமாகிவிட்டது.


இனி இது குறித்த கதையாடல் பிறிதொரு பாணியிலான மொன்னைப் பேச்சுத்தாம்.இந்தப் பின் தங்கிய கருத்தாடலைத் தாண்டி சுய கௌரவம்,தனிநபர் சுதந்திரம்,தனிநபர் தனித்தன்மை என்பவைகளே உலக மய அரசியலில் ஏகாதிபத்யங்களால் பேசப்படும் உளவியலாக் கருத்துக்கள் கட்டப்படும். இதற்கேற்றவாறு இலங்கை-தமிழக தமிழ் புத்திஜீவகள் ஆய்வுகள் முன்வைத்து அவற்றைத் தலித்துவத்தோடு இணைத்து விடுவதில் பிரயத்தனஞ் செய்கிறார்கள்.இது ஏகாதிபத்யங்களளோடு கூட்டுச் சேர்ந்து நமது விடுதலையைப் பெறுமுடியுமென்று தமிழ் பேசும் உழைக்கும் வார்க்கத்தைக் காட்டிக்கொடுக்கும் மாபெரும் வரலாற்றுத் தவறை நமக்குத் தருமென்பதில் எமக்கு இருவேறு கருத்துக் கிடையாது!


மக்கள் புரட்சிகரமாக இருந்து ஒருமண்ணும் நிகழா,மாறாக நமக்கு உலகு தழுவிய புரட்சிகரக் கட்சியின் அவசியம் முன்னெப்போதையும் விட இப்போது தேவையாகவுள்ளது.உலக உழைக்கும் மக்கள் நம்முடன் தோள் சேரவேண்டும், இதுவே காலமாகிவிட்ட மனிதாயத்தை உயிர் பெறவைத்து நமக்காக அனைத்து தளைகளையெல்லாம் அறுத்தெறியும்.


அரச ஆதிக்கமும்,
அரச ஜந்திரமும் இருவேறு வினைகளின் வடிவங்கள்:

ஒரு நாட்டில் இருவேறு அரச ஜந்திரம் நிலவமுடியுமாவெனுங் கருத்தாடல்கள் இப்போது நமக்குள் நடை பெறும் சூடான விவாதமாகத் தொடர்கிறது,இரு அரச வன்முறை ஜந்திரம் ஒரு நாட்டுக்குள் நிலவுமாயின் அங்கே ஒரு அரச வடிவமில்லையென்பது தெளிவானதுதாம்.ஆனால் உண்மையில் இது சாத்தியமாக சுய பொருளியல் பலம் இருக்கவேண்டும்! எதற்குமே பொருளாதாரமே அடித்தளம்,பொருளாதாரமென்ற அடிமட்டத்தைக் காப்பதற்கான மேல்மட்டக் கவசங்களே அடிமட்டமாகப் பார்க்கப்படுதல் வெறும் சட்ட அறிவின் வெளிப்பாடுதாம், பொருளாதார அடிப்படையற்ற எந்த அமைப்பும் இறுதியில் அன்னியசக்தியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டேயாகவேண்டும்!


இன்றைய தேசிய இனப்பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வுகுறித்துக் கருத்தாடலிடும் சிறார்கள் தமிழ்பேசும் மக்களது பிரச்சனை 'ஒற்றையாட்சியலோ அன்றி கூட்டாட்சியிலோ 'தீர்க்கமுடியாதபடி தமிழர் தரப்பில் பலமான(!?) இராணுவக்கட்டமைப்பு உண்டு ,அது கலைக்கமுடியாதவரை இவை சாத்தியமில்லை, எனவே சுதந்திரக்கூட்டாட்சியே தீர்வாகும்,இது இருவேறு தனிநாடுகளின் கூட்டரசாகவே அமையமுடியும்,ஆகையினால் இலங்கை அரசியற்சட்டம் மாற்றி அமைக்காதவரை தீர்வுசாத்தியமில்லையென்றும் கருத்தாடுகின்ற திடீர் 'அரசியல் ஆய்வாளர்கள்' மத்தியில் சிக்கியுள்ள நாம் இந்த இராணுவக்கட்டமைப்பை இலங்கையரசின் ஆதிக்கத்திலிருந்து நோக்குவோமாயின் அதன் சிதறல் மிகவிரைவாக நிகழாதவரை எந்த உந்து சக்தி தக்கவைக்கின்றதென அறியமுடியும்.


இலங்கையரசின் ஆதிக்கத்திலிருந்து முழுமையாகவோ அன்றி பகுதியாகவோ தமிழ்ப்பிரதேசங்கள் விடுபடவில்லை, மொத்தமாகவே இலங்கையரசினது ஆதிகத்திற்குட்பட்ட பகுதியாகவிருக்கும் தமிழ்ப் பிரதேசங்கள் ஒருபோதும் சுயஅமைப்பாண்மையை பொருளாதார-இராணுவக் கட்டமைவில் செலுத்தமுடியாதென்தை சாதாரண உயர்கல்வி மாணவாரொருவர் புரிந்து கொள்ள முடியும்,இது இப்படியிருக்க இந்த ஆய்வாளர்கள் யாரினது நன்மைக்ககாக இல்லாததை இருப்பதாகக்காட்டி குட்டையைக் குழப்பி துண்டிலிட முனைகிறார்கள்?

இலங்கையரசு முற்றுமுழுதானவொரு பொருளாதாரத் தடையைக் கடைப்பிடித்தால் நிலமையென்னவாகும்?

பாரம்பரிய பிரதேசங்களென்பவை முதலில் இலங்கையரசாதிக்கத்திலிருந்து விடுபடாதவரை இரு இராணுவமெனுங் கருத்தாக்கமே சுத்தப் போலீயானது!

எந்த விடுதலைப் போராயினும் முதலில் நிலவுகின்ற அன்னிய ஆதிக்கத்தை உடைத்தபின்பேதாம் அதன் வன்முறைஜந்திரத்தின் மீது கைவைப்பார்கள்.அந்தக் கைவைப்பு முற்றுமுழுதாய் அதைச் சிதறடிப்பதில் முடிவுறும்,ஆனால் இலங்கையில் தமிழ்பேசும்மக்கள் வாழும் பிரதேசங்களிற் பார்ப்போமானால் நிலமை தலைகீழ்! ஒவ்வொரு பத்துச் சதுர கி.மீ. க்கும் இரண்டு அல்ல மூன்று இராணுவ முகாங்கள் உள்ளன. இவைகள் இலங்கையரினது வன்முறைஜந்திரம்.


இறுதியாகச் சில:


1): தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தவறான ஆய்வுகளைத் திட்டமிட்டு நம்மை ஒடுக்குபவர்கள் விதைக்கிறார்கள்.


2): இதற்கு உடந்தையாக சில தமிழ்ப் புத்திஜீவிகள் தெரிந்தோ தெரியாமலோ ஒத்துழைக்கின்றார்கள்.


3): இந்திய புலனாய்வுத்துறை மீளவும் நமது வாழ்வைச் சிதைக்க களத்தில் இறங்கி புலம் பெயர் மக்களை
தமது நலனுக்கேற்றவாறு மூளைச் சலவை செய்கிறது.


4): புலம்பெயர் தமிழர்கள் சுய அமைப்பாண்மையுடன் வளர்வுறுதலை மட்டுப்பட வைக்க இந்தியா தொடர்ந்து கருத்தியில் யுத்தத்தை தமிழ்ச்சினிமாவூடே நடாத்த முனைகிறது.


5): பாரிய வர்த்தக நலனுக்காய் நம்மீது நுகர்வடிமை மனோபாவத்தைத் திட்டமிட்டு வளர்த்தெடுக்க முனைந்து வரும் இந்திய -இலங்கைத் தரகு முதலாளித்துவம் நமது நாட்டின் இயல்பு நிலையை விரும்பாது தொடர்ந்து கொந்தளிப்பான அரசியல் நிலையைத்தோற்றுவிக்கப் படாதபாடுபடுகிறது.


6): உலக ஏகாதிபத்யம் தனது உலகமயப் படுத்தலில் நமது தேசியத் தன்மைகளை மறுத்து வெறும் கொத்தடிமைகளாக்கி நம்மை இந்திய-இலங்கை தரகு வர்த்தகத்தின் நலனுக்கேற்றவாறு பயன்படுத்தி வருகிறது.


7): இதனுடாய் உலக மயத்தை நம் நாடுகளில் சிறப்பாய்ச் செய்து அறுவடையை கையகப்படுத்த அனைத்து வியூகங்களும் வெற்றியாய் நடைமுறைக்கு வருகிறது.


8): இவ்வளவுக்கும் புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள ஊடகங்களும் ஒத்திசைவாகச் செயற்படுகிறது,இதற்குப் பரிசாக எலும்புத்துண்டங்கள் இவர்களுகிடப்பட்டுவருகிறது.


நாம் தொடர்ந்தும் வேலைக்குப்போய் வீடுமீண்டு சோற்றுக்கோப்பைக்குள்
விழுந்தொழும்பி சண்,சண் கே,ஜெயா மற்றும் அதன் கூட்ட...,
தீபம், ரி.ரி.என்.பார்த்துப் பின்னிரவு இரண்டு மணிக்கு கண்மூடி அதிகாலை
ஐந்துக்கு மீளவும் வேலைக்குப் போகவேண்டும்.



ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்.

Friday, June 09, 2006

புலிகளின் கொலைவெறித் தாக்குதல்...

ரீ.பீ.சீ.வானொலி மீது
மீளவும் புலிகளின் கொலைவெறித் தாக்குதல்!

பாசிசம் எந்த உருவத்தில் வந்தாலும்(தமிழீழ விடுதலை,தாயகம்-சுயநிர்ணயவுரிமை...)அதை அனுமதிக்க முடியாது!நமது காலம் மிகவும் மௌனித்திருக்கத்தக்கதல்ல!உயிர் வாழ்வதற்கே போராடியாகவேண்டிய காலவர்த்தமானத்தில், எதற்காகவும் மௌனித்திருக்க முடியாது.

புலிகளின் அதீத வன்முறை முனைப்பானது மாற்றுக் கருத்துடையவர்களைச் சமூக விரோதிகள்-எட்டப்பர்,தேசத் துரோகிகளெனும் சித்தரிப்புகளுடாகக் கருத்து விதைத்து,அப்பாவிகளான மனிதர்களைப் போட்டுத் தள்ளிவரும் புலிப் பயங்கரமானது எப்போதும் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தைப் பாதுகாக்க முடியாது!

தேசிய விடுதலைப் போராட்டமானது தனிப்பட்டவொரு மனிதரின் சுய முனைப்புக்கான போராட்டமல்ல.

ஒரு இனத்தின் தலைவிதியை அற்ப மனிதரின் நலன் சார்ந்து-அவரதும், அவரது தளபதிகளின் நலனுக்குமான காப்பரணாகக் குறுக்கிவிடும் புலிப் பயங்கர வாதிகளின் போராட்டத்தில் நாம் மரித்தாலும் சரி ஜனநாயக வாதிகளைக் காத்தாகவேண்டும்.

புலிப் பயங்கரவாதிகள்

எட்டப்பர்.கொம்,

நெருப்பு.ஓர்க்,

நிதர்சனம்.கொம் போன்ற இழி இணையத் தளங்களுடாக மாற்றுக் கருத்தாளர்கள்மீது கிட்டலர் பாணி கருத்தியல் வன்முறை மூலமும்,வன்முறை சார்ந்தும் தாக்குதல் தொடுப்பதை உலகத் தமிழ் மக்கள் புரிந்தாகவேண்டும்.

ரீ.பீ.சி.வானொலிமீதான தாக்குதலானாது(08.06.2006) ஜனநாயகத்துக்கெதிரானது-மாற்றுக் கருத்துக்கு எதிரானது.இதை நாம் கண்டித்தேயாகவேண்டும்.

ரீ.பீ.சி போன்ற கடைந்தெடுத்த முதலாளித்துவ ஊடகங்கள் மக்கள்மீது அதிகாரத்தைச் செய்யும் புலிகளுக்கு மாற்றானவர்களில்லை.அவர்கள் புலிகளிடம் பங்குச் சண்டை நடாத்தும் ஒரு கும்பல்தாம்.எனினும் நாம் ஜனநாயகப்பட்ட மக்களின் நலத்தை முன் நிறுத்துவதால் இத்தகைய ரீ.பீ.சீ வானொலிக்கெதிரான புலிப் பாசிசத்தின் பயங்கராவாதத் தாக்குதலை அம்பலப்படுத்துவது மிகவும் அவசியமானது.

நமது அற்ப சொற்ப உயிரையும் குடிக்க முனையும் புலிகளின் குருதித் தாகமானது எந்தத் தமிழ் குழந்தைகளையுமே விட்டு வைக்கவில்லை!இந்தப் பாசிசப் பயங்கரவாதப் புலிகளின் தலைமையானது கனகம் புளியடியில் பச்சைப் பாலகனின் உயிரைக் குடித்தது.இத்தகையப் பாசிசப் புலிகளா மாற்றுக் கருத்தாளர்களை ஜனநாயக ப+ர்வமாகச் செயற்பட அனுமதிப்பார்கள்?

இன்றைய காலக் கட்டமானது மிகவும் கொடுமையான ஆயுதக் காட்டாட்சி நிலவும் வன்முறைச் சூழலைக் கொண்டியங்குகிறது!

ஐரோப்பாவில் வாழும் மாற்றுக் கருத்தாளர்களை மெல்லக் கொல்லும் திட்டத்தைப் புலிகள் ஏற்கனவே செய்து முடித்துள்ளார்கள்.இப்போது ஐரோப்பாவின் தடைக்குப் பின்பான காலத்தில் நம்மைக் கொல்வதற்குப் புலிகள் தகுந்த திட்டத்துடன் பயங்கரம் புரிகிறார்கள்.

இது கிட்டலரின் நாசிக் கட்சியின் காலத்தை நமக்குக் கூட்டிவருகிறது!

நாம் எங்கும் வாழவே முடியாதவொரு அவலத்தைப் புலிப் பாசிசம் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

புலிகளின் வால்களுக்கு மனித மதிப்பு,மாண்பு எதுவுமே தெரிந்திருக்கவில்லை!அவர்களுக்குப் பிரபாகரனின் பாதத்தைத் தவிர எதுவுமே தெரிந்திருக்கவில்லை.அத்தகையவொரு தலைமுறையைத்தாம் புலிப் பயங்கரவாதிகள் தயாரித்துத் தமிழ் மக்கள் என்கிறார்கள்!இந்தவொரு கூட்டமே மனித நாகரீகத்துக்குப் புறம்பான காட்டுமிராண்டிகளாக உலகில் வலம் வருகிறார்கள்!

இந்தப் பேய்களின் மத்தியில் வாழும் நாம், மாற்றுக்கருத்தாளர்கள்-ஜனநாயகவாதிகள்,மக்கள் நலன் நோக்காளர்கள்மீது நடாத்தப்படும் வன்முறை சார்ந்த கொலை முயற்சிகளை-மனித வருத்தல்களை வன்மையாக் கண்டிக்கிறோம்!

இதை உலகத் தமிழ் மக்களுக்குப் பறைசாற்றி ,எமது மக்களுக்கு ஜனநாயகச் சூழல் கிடைக்கக் குரல் தரும்படி கோரி நிற்கிறோம்.

"ஒழிக புலிப்பாசிசம்!"

"ஓங்குக உலகத் தமிழ்க் குரல்கள்"

இதுதாம் இழந்த மனித மாண்பை மீளப் பெறுவதற்கு எமக்கான ஆயுதம்.


தோழமையுடன்

ப.வி.ஸ்ரீரங்கன்
09.06.2006

Monday, June 05, 2006

ஷோபா சக்தியின் விமர்சனமானது...

ஷோபா சக்தியின் இவ் விமர்சனமானது...


"Der Krieg heute aber kommt nicht vom Himmel oder von Gott wie der Regen,sondern er hat allein gesellschaftliche Ursachen.-Heinz Liepman.(Kriegsdienst verweigerung.seite:40)

"யுத்தமானது இன்று வானத்திலிருந்து வருவதில்லை அல்லது இறைவனிடமிருந்து மழையைப் போன்றோ அல்ல,மாறாக யுத்தமானது சமூகக் காரணிகளிலிருந்தே தோன்றுகிறது."-கைன்ஸ் லீப்மான்.


சத்தியக்கடதாசியில் நண்பர் ஷோபா சக்தி புஷ்பராஜாவின் நூலுக்கான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அவர்தம் விமர்சனமானது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பொருந்தத்தக்க எண்ணங்களையும்,அதனூடான சமூகவுண்மைகளையும் நமக்குமுன் இழுத்து வருகிறது!இதுவரையான ஈழத்தமிழ் மக்களின் போராட்டப் பாதையில் ஆயுதக் குழுக்களால் விதைக்கப்பட்ட புணங்களையும் அந்தப் புணங்களின் தோற்றத்துக்கான கண்ணிகளையும் மிக நுணுக்கமாகச் சொல்லும் ஷோபா சக்தியின் தரவுகள்-அறிவுக் கொள்கைகள் மிக உண்மையானது.விஞ்ஞானப+ர்வமானது.இந்தவொரு தளத்திலிருந்துகொண்டு நாம் எந்த நோக்கத்தில் இன்றைய போராட்ட வாழ்வையும் அதன் இயலாமையையும் நிராகரித்து மக்களின் வாழ்வியல் பெறுமானங்களை முன் நிறுத்துகிறோமென்பதுற்கு அவரது விடாப்பிடியான அறிவ+க்கமிக்க பரிந்துரைப்புகள் சாட்சியாகி வருகிறது.
யுத்தத்தின் வாயிலாக வந்தடைந்த மரணவோலமும்,பயங்கரவாதமும்,காட்டுமிராண்டித்தனமும்-கொலையும்,கொள்ளையுமே நமது மக்களின் வாழ்வியல்ப் பெறுமானமாகிப் போய்,ஒரு தலைமுறையே யுத்தத்தில் மூழ்கி முடவர்களாகிப் போனது அங்கத்தில் மட்டுமல்ல அறிலும்தாம்.இத்தகையவொரு சமூக இழிநிலையில் அந்தச் சமுதாயத்தின் பால் இன்னமும் நம்பிக்கையோடு அதைக் காலத்துக்கேற்ற முறைமைகளில் மக்களின் நலன்களை முன் நிறுத்துவதற்கான தகமைக்கிட்டுச் செல்லத் தூண்டுவது அவசியமாகும்.இதைப் புஷ்பராஜாவின் மொழியில் இப்படிக் கேட்கலாம்:

"விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களின் தலைவர் பிரபாகரன் பற்றியும் இன்று உலகம் விசாலமாகப் பேசிக்கொள்ளும் அளவுக்கு அந்த இயக்கம் எல்லாவிதமான காய்களையும் தனது வசதிக்கேற்ப நகர்த்திக்கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தின் பாறை போன்ற கட்டமைப்பும் மன்னிப்புக்கே இடமில்லாத அதன் கொள்கையும் ஈன இரக்கமற்ற அதன் நடவடிக்கைகளும் தாங்களும் தங்களுடன் சேர்ந்தவர்களுமே தியாகிகள் என்கிற அதன் போக்கும் வரலாற்றில் ஓர் அதிசயம் மிக்க பக்கம் தான். என்றாலும் அது தான் அந்த இயக்கத்தின் இருப்புக்கான காரணமும் கூட. அனைத்து ஈழப்போராளிகள் இயக்கங்களையும் அழித்து விட்டு ஈழ விடுதலைக்காக இன்று போராடும் ஒரே இயக்கம் நாங்கள்தான் என மக்களிடம் ஆதரவு கோரும் விடுதலைப்புலிகளின் தந்திரமே ஒரு மாயையை ஏற்படுத்தும் நடவடிக்கை தான். அவர்கள் யாருடனும் பேசுவர். ராஜீவ் காந்தியுடன் பேசுவர், ரணில் விக்கிரமசிங்க வுடன் பேசுவர், சந்திரிகாவுடன் பேசுவர், பிரேமதாஸாவுடன் பேசுவர், இந்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் பேசுவர், இந்திய இராணுவத்துடன் கை கொடுப்பர். இலங்கை இராணுவத்துடன் உறவாடுவர். ஆனால் மற்றைய இயக்கங்கள் இப்படி ஏதாவது ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டால் துரோகிகள் என்பர். தங்களைத்தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது என்னும் போக்கும் மற்றவர்கள் எல்லோரையும் சந்தேகிக்கும் சுய பயமுள்ள மனோநிலைமையுமே இதற்குக் காரணம். பயத்தின் அடிப்படையில் இருந்தே அராஜகம் பிறக்கிறது.

"Was hast du da in der Hand?"

"Eine Eisenstange."

"Was willst du mit der Eisenstange?"

"Den Sohn totschlagen."

"Warum willst du ihn totschlagen?"

Weil er rettunlos verdorben ist,weil Hopfen und Malz an ihm verloren ist."

-Signale von Heinrich Kemner.seite:26.

>கையில் என்ன வைத்திருக்கிறாய்?< >இரும்புக் கம்பி.< >இரும்புக் கம்பியினால் என்ன செய்யும் உத்தேசம்?< >எனது மகனைக் கொல்லப் போகிறேன்.< >எதற்காக அவனைக் கொல்வதில் உனது நாட்டம்?< >காப்பாற்ற வக்கில்லாமால் பழுதடைந்து போனதால்,வாற் கோதுமையும் கொடி முந்திரியும் அழிந்துவிட்டது.< இரண்டாவது யுத்தத்துக்குப்பின் ஜேர்மனியில் நிகழ்ந்த சமூக விளைவுகள் பற்பல, அதை மையப்படுத்திய படைப்புகளை முன்வைத்தவர் கைன்றிக் கெம்னர். சமூகத்தில் மிகக்கடுமையான ஏற்ற தாழ்வுகளும் கொடிய வறுமையும் தலைவிரித்தாடிய போது மிக அவசியமான உற்பத்தி, விவசாயமாக முக்கியம் பெற்றது-அதைப் பராமரிப்பதற்கான முறைமைகளில் மக்கள் அவசியமாகக் கவனஞ் செய்யாதபோது ஜேர்மனிக்கு அமேரிக்கா உதவும் நிலை தோன்றியதன் விளை(ழை)வாக இப்படைப்பு எழுகிறது! இங்கே-தனது தேசத்துப் பயிர்களைக் காக்காத மகனை அப்பன் கொல்வதற்காகவே இரும்போடலைகிறான். உணவுத் தேவைக்காகப் பயிரிடும் விவசாயியோ தனது பயிரின் அழிவில் அதீதக் கோபம் கொள்கிறான்!-மகனைக் கொல்வதில் அவன் முனைப்பாக இருக்கிறான். ஏனெனில் பயிர்களின் அழிவுக்கு அவன் காரணமாகிறான். அவன் அதன்மீது கரிசனை கொண்டு பராமரித்திருந்தால் இவ்வளவு தூரம் அழிந்திருக்க முடியாது. மீளவும் கேட்ப்போம்: எதற்காக? பயிரினது அழிவுக்கு அவனே காரணமாக இருப்பதால்! இங்கோ- நமது ஈழத்திலோ மக்கள் தினமும் அழிகிறார்கள்,நாடு அமைதியிழந்து மக்களின் மரண மயானமாகிறது. எதனால்? சிங்கள-தமிழ் ஆளும் வர்க்க-அரச பயங்கரவாதப் போரினால்! மக்களின் எந்தவுரிமையையும் பொருட்படுத்தாது தமது தேவைகளின் பொருட்டுப் போர் மக்களை அழித்து வருகிறது. சாதாரணமாகப் போர் மனித நாகரீகத்தையே தமிழ்ச் சமுதாயத்திடம் இல்லாதாக்கி அவர்களைக் காட்டுமிராண்டிகளாக்கியபின்னும் நாம் நமது தேசத்தின்-மக்களின் பால் கவனஞ் செய்தும் "ஆயுதங்கள்" நம்மைக் கட்டிப் போடுகிறது! மக்கள் வாய் திறந்து எதிர்வார்த்தை பேசமுடியாது திணறிக்கொண்டிருக்கிறார்கள். எனினும் மரணப்பயம் மக்களின் மனதைக் கட்டிப் போடுகிறது. சமுதாயத்தை இவ்வளவு கொடுமையாக அடக்கித் தமிழ் மக்களின் வரலாற்றைக் காட்டுமிராண்டிச் சமுதாயமாக மாற்றி அழித்துவரும் கொடிய வன்முறையாளர்களை அழிப்பதற்கு நம்மால் இரும்புக் கம்பிகளை எடுக்க முடியாதுபோனாலும்,குறைந்த பட்சமாகவேனும் இத்தகைய அழியுறும் சமுதாயத்தைக் காத்தாகக் கதைத்தோ,பறைந்தோ-பேசிப் பறைந்து கொடுமையான யுத்ததை அம்பலப்படுத்தியாக வேண்டும். இங்கே ஷோபா சக்தியின் நோக்கம் அந்த முறைமையில் சிங்கள தேசத்தின் நிகழ்கால-எதிர்கால அரசியலைச் சுட்டி அதை நம்மோடு பறைந்து கொள்கிறது: //இன்று சிறிலங்காவில் சிங்கள இனவாதம் அதன் உச்சக் கட்டத்தில் இருக்கிறது. சிஹல உருமய, பூமி புத்ர போன்ற பச்சை இனவாதக் கட்சிகள் வெகு வேகமாகச் செல்வாக்குப் பெற்று வருகின்றன. ஆளும் பொதுஜன முன்னணி அரசு மொத்த நாட்டையும் கூட்டி அள்ளி ஏகாதிபத்தியங்களுக்கு அடவு வைத்துள்ளது. அரசு சாத்தியமான வழிகளில் எல்லாம் தமிழ் மக்களின் முசுலிம் மக்களின் மலையக மக்களின் அரசியல் உரிமைகளை மறுத்து வருவதோடு நில்லாது உழைக்கும் சிங்கள மக்களின் வாழ்வாதார உரிமைகளையும் பறித்து வருகிறது. பொது நிறுவனங்களை அந்நிய பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்றுத் தள்ளுவதில் அரசு ஒரு வேகச் சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தச் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைப்பதற்கான தருணத்தை எதிர்நோக்கி ரணில் விக்கிரமசிங்க காத்திருக்கிறார்.//

ஒன்று மட்டும் உண்மை!

நாம் யாருக்காப் பேசுகிறோம்,எழுதுகிறோமென்பதை
மக்கள் புரிந்தார்களோ இல்லையோ ,நாட்டைச் சுடுகாடாக்கும் வானரங்கள் நன்றாக நம்மையறிந்துள்ளார்கள்!

அவர்களின் செவிகளில் மக்களில் கலகக் குரல் தினமும் ஒலிக்கிறது.இந்தவொலி சிதறியாக வேண்டும்.

சிதறுவதற்கு என்ன செய்யலாம்?

மக்களைப் பழமையில் நீந்த வை!

அப்போது காசு பணம் புரட்டிவிடுவதும்,தொடர்ந்தும் துப்பாக்கிக்குத் தலை சாய்த்திடுவது சகஜமாக நிலைக்கும்.

மக்களிடம் தண்டிய சொத்தில் கோவிலமைத்துக் கோவிலால் கொள்ளையடிப்பது ஒரு வியாபார யுக்தி.

ஐரோப்பாவில் கோவிலென்பது பணமுழைக்கும் ஒரு
அற்புதமான வழியைத் திறந்திருப்பதைப்
புலிகளைவிட மற்றெவரும் அறியவில்லை.

இங்கே சோபா சக்தியும் கும்பிடுவதோடு நிற்கிறார்.

//உலகிலேயே போராட்டத்திற்கு என்று பொது மக்களிடம் பணம் சேர்த்து அந்தப்பணத்தில் கோயில் கட்டிக்கும்பிடும் ஒரே விடுதலை இயக்கம் விடுதலைப் புலிகளின் இயக்கம் தான்.//

எங்களுடைய போராட்ட ஆரம்பமானது எவ்வளவுதாம் புரட்சி பேசினாலும் அது உண்மையில் ஒரு புரட்சிகரக் கட்சியின் வழியில் நகர்த்தப்பட்ட முன்னெடுப்புகளில்லை!

இன்றைய அவலங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது எமது சமுதாயத்தின்முன் விரிந்து கிடக்கும் குட்டிமுதலாளியப் பண்பாகும்.வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படையாக இருப்பதால் எந்தெந்த வர்க்கம் தத்தமது நலனுக்கான முன்னெடுப்பில் கட்சியில் ஆதிக்கம் பெற்றுக் கொள்கிறதோ அந்த வர்க்கமே கட்சியின்
முன் நகர்வை-போராட்டச் செல் நெறியை,யுத்த தந்திரோபாயத்தைச் செய்கிறது-அந்த வர்க்கத்தின் முரண்பாடுகளேயேதாம் அது கையாள முனைகிறது.

எமது தேசிய விடுதலையமைப்புகள் முன்வைத்த கோசங்கள் பல இந்த வகையிலே எழுந்தவை.

இனவொதுக்கல்,
தரப்படுத்தல்,
தமிழுக்கு அரசகரும மொழி
அந்தஸ்த்துக்காக குரல் கொடுத்த கட்சிகள் தமது சமுதாயத்துக்குள் உழைப்பவர்களை
நாயிலும் கேவலமாகப்"பறையன்,நளவன்,பள்ளன்,அம்பட்டன்,வண்ணான்"
என்று சாதி சொல்லி அடக்கியபடி இவற்றைக் கேட்டுக் கொண்டது.

சிங்கள அரசிடம் தமிழருக்கான தனி மண்ணைக் கேட்ட அதே அரசியல் தனக்குள் ஒடுக்கப்படும் தலித்துக்களை எந்தவுரிமையுமின்றி வாழ நிர்ப்பந்தித்தது.

இத்தகைய வரலாற்றுத் தவறுகளிலிருந்துதாம் போராட்ட இயக்கங்கள் தம்மைத் தகவமைத்தன.அவை தமது படையணிக்கு அடியாளகமட்டுமே தலித்துக்களை இணைத்தார்களேயொழிய புரட்சிகரக் கட்சியைக்கட்டிப் போராடுவதற்கல்ல.

இத்தகைய குட்டி முதலாளியப் பண்பானது இயக்கங்களுக்குள் போட்டியை வெளியிலிருந்து திணிப்பதற்குமுன் உள்ளேயே முகிழ்க்கும் கருவ+லங்களை இந்த நடுத்தரவர்க்க மேல் சாதிய ஆதிக்கக் கல்வி செய்து முடித்தது.இந்தத் தரணங்களின் யாழ்ப்பாண வேளாள ஆதிக்க மனதானது அனைத்துப் புரட்சிகரச் சக்திகளையும் இனம் கண்டு அழித்தொழித்தது.

இதுவே உட்கட்சிக் கொலைகளுக்கு ஆரம்பமான கருத்தியலை போராட்ட இயக்கங்களுக்கு வழங்கியது.இதன் உச்சத்தை அந்நிய நலன்கள் செய்து முடித்தன!

//வர்க்க ஒடுக்குமுறையற்ற சாதியமற்ற இனவாதமற்ற சோஸலிசத் தமிழீழத்தை நோக்கித் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட ஈழப்போராட்டம், அந்த இலட்சியங்களின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் திரளிடையே பெரும் ஆதரவைப் பெற்றிருந்த ஈழப்போராட்டம் இன்று குறுந்தேசிய வெறியும் ஏகாதிபத்திய அடிபணிவும் சகோதரப் படு கொலையும் - பாஸிஸமுமாகப் பரிமாணம் பெற்றிருக்கிறது. இதைத்தான் ஈழப் போராட்டத்தின் தோல்வி என்கிறோம். இந்தத் தோல்வி ஒரு நாளில் நம்மை வந்தடைந்த தில்லை. ஈழப் போராட்டத்தின் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் இந்தத் தோல்விக்கான காரணங்கள் விரவிக்கிடக்கின்றன. அந்த அத்தியாயங்களை கட்டவிழ்ப்பதன் மூலமாகவும் அதன் மூலமாக இதுவரை எழுதப்பட்ட ஈழப் போராட்டத்தின் வரலாற்றைச் சிதைக்கப் பெருமளவு முயல்வதாலும் சி.புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ மிக முக்கியமானதொரு அரசியல் நூலாக - அதன் உள் முரண்களோடு சேர்த்துப் பார்த்தால் கூட - தன்னை நிறுத்திக் கொள்கிறது.//

ஷோபா சக்தியின் இவ் விமர்சனமானது மிகவும் ஊன்றிப் படிக்கத் தக்கது!
இது அவசியமான காலக்கட்டத்தில் வந்திருக்கும் தரமான பார்வையைக் கொண்டிருக்கிறது!



ப.வி.ஸ்ரீரங்கன்
05.06.2006

Thursday, June 01, 2006

புலிகளின் இழி இணையம்:எட்டப்பர்.கொம்

புலிகளின் இழி இணையம்:எட்டப்பர்.கொம்

எங்களுக்குப் பப்பிளீஸ்சிட்டி அவசியமில்லை அன்பர்களே!
எம்மை ஒடுக்குபவர்கள் புலிகளென்று அம்பலப்படுத்திய பின்பும்,புலிகளால் சட்டப+ர்வமாக மறுக்க முடியுமா?

இதுவரை மறுக்கத் தெம்பில்லாது மௌனமாகக் கிடக்கும் ஜேர்மனியப் பொறுப்பாளர்களை பொலிசில் பிடித்துக் கொடுப்பதல்ல எமது நோக்கம்.
மக்களுக்காகப் போராடும் ஒரு அமைப்பென்றால்-தம்மால்-தமது பிராந்தியப் பொறுப்பாளர்களால் தமிழர் ஒருவருக்கு விடப்படும் மரண அச்சுறுத்தல் குறித்து இதுவரை பதிலளிப்பது அல்லது அதுகுறித்துக் கருத்தளிப்பது அவர்களின் பொறுப்பில்லையா?
ஆதாரத்தோடுதானே நாம் பதிவிட்டுள்ளோம்.

இதோ இந்த எட்டப்பர்.கொம்முக்குப் போகவும் http://www.eddappar.com/content/view/57/26/ இங்கே
அவர்களின் வால்கள்விடும் அடுத்த அச்சுறுத்தல்.

இது குறித்து நான் சட்ட நடவடிக்கை எடுத்தபடியே உள்ளேன்.
முதலாவது குற்றத்தை என்னபெற்றால் புலிப் பொறுப்பாளர்மீது போட்டாகவேண்டும்.

அதற்குப் புலிகளின் மேலிடம் என்ன பதிலைத் தரும் எனக்கு?

முதல் நபரை இன்னும் சுட்டப்படவில்லை.

ஜேர்மனுக்கான புலிப் பொறுப்பாளர்கள்
இது குறித்துப் பதில் தராத வேளை
மேற்காணும் நபரையும் சுட்டிக் கொள்வது என் நோக்கு.

இதுவரை எனது கைக்கெட்டிய தகவல்கள்வரை,எனது இருப்புக்குச் சவால்விடும் நடவடிக்கைகளைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் செய்து வருகிறார்கள்.இது குறித்துப் பொதுவாகப் பொலிசில் ஆவணப் படுத்திய குறிப்பை நான் வழங்குவேன்.எனினும் புலிகளின் பதிலிலிருந்தே காரியமாற்றியாக வேண்டும்.அவர்களுக்கு அந்தக்கடப்பாடுண்டு.இது இடம்பெறாதபோது நான் எனது முடிவில் செயலாற்றுவேன்.


இரண்டாவது:

"எட்டப்பர்.கொம்"http://www.eddappar.com/content/view/57/26/
அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

என்னைப்பற்றிய சில தகவல்களை சுவெலம்-என்பெற்றாலில் வசிக்கும் புலிகளின் எடுபிடிகளே திரட்டிக் கொடுப்தாகச் சொல்லிப் பிழையான தகவல்களையும்-பொய்யையும் புலிகளுக்கு வழங்கியுள்ளர்hகள்.அல்லது எட்டப்பார்.கொம்க்கு அனுப்பப்பட்டுள்ளது.அந்த இருவரின் பெயர்களும்

எனக்குத் தெரியும்.
இருவரின் பெயரும் இதுள் அடக்கம்:"விரவதரன்".


ஆக இத்தகைய பிழையான தகவல்களைச் சேகரித்த பொறுப்பாளர்கள் "டுசுல்டோர்ப் மேதின ஊர்வலத்தில்" என்னோடு வாக்குவாதப்பட்ட பொறுப்பாளர்களே.மேதினத்தில் அவர்கள் என்னைப்படம் எடுத்து, போட்டோவை எட்டப்பர்.கொம் உபயோகத்துக்குக் கொடுத்துள்ளார்கள்.அல்லது எட்டப்பர்.கொம் புலிகளின் தளமாக இருக்கலாம்..இவையெல்லாமும் எட்டப்பர்.கொம்முக்கு எதிராக நான் முன்வைக்கும் குற்றச் சாட்டு.அதைப் பொலிசும் ஏற்கிறது.

இவர்கள் வெறும்
ஒழுங்கீனமான பேர்வழிகள்தாம்.
மனிதவிரோதிகளே மற்றவர்களை இனவிரோதிகளாம்!

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...