Saturday, November 19, 2011

விக்கிப்பீடியாவில் பிரபாகரனது வாழ்க்கைக் குறிப்பை...

பெயரிலிக்கும் எனக்குமான உரையாடலாக...

// அதேநேரத்திலே இரு விடயங்களை நான் தெளிவாக நீங்கள் சொல்லவேண்டுமெனக் கேட்கிறேன்; இயக்கங்கள் எதுவானாலும் உண்மையாக உயிர்களையும் நிகழ்காலவாழ்க்கையையும் இழந்த எத்தனையோ இளைஞர் (இளைஞன் + இளைஞி), மத்தியவயதினர், சார்பான முதியவர்கள் இருந்தார்கள்; இருக்கின்றார்கள்; அதனாலே புலிப்பினாமி புளொட்பினாமி என்று திட்டும்போது, உயிரைக் கொடுத்தவரையும் தேரைக்கொளுத்துகிறவரையும் வகை பிரித்துக் கொஞ்சம் வரையறை செய்வதுதான் நியாயமாகுமா? இல்லையா? இரண்டாவது, /எனது குறிப்புகள்.

வரலாற்றில் ,"கட்டிப்போட்ட " சிந்தனைக்குட்பட்டு வளர்ந்த இன்றைய இளைஞர்கள்-இளைஞிகள் இந்தச் சிக்கலைப் புரிந்து மேலெழுவேண்டிய தேவைக்கானவொரு புள்ளியை நான் அண்மிக்க விரும்புகிறேன்./ என்கின்றீர்கள். இதிலே கருத்தார்ந்த தத்துவப்படுத்தலுக்கப்பால், நடைமுறைக்கு என்ன பயன்? ஆற்றுவெள்ளத்திலே ஓடம் கவிழ்கையிலே நீந்தத்தெரியாவிட்டால், பண்டிதரே, அர்த்தசாஸ்திரமும் ஆவிக்குதவாது; தண்டியலங்காரமும் தலைகாக்காது. பின், யாருக்காக, இந்த நோட்டுகளை நாம் வரைந்துகொண்டேபோகிறோம்! "யாருக்காக! இது யாருக்காக! இந்த நோட்டுகள் மார்க்சிய நோட்டுகள்! எம்மிஞளைஞர்க்காய் எழுதிய நோட்டுகள்" என்ற சின்னக்கோட்டுக்குள்ளேயே அவை பயன் அற்றுப்போமே! :-( // -இரமணிதரன் கந்தையா
http://www.facebook.com/jbharane/posts/2590248437521?cmntid=2599466427965

ன்றிருந்து இன்றுவரையும் இந்தச் சிக்கலைத் தெளிவோடுதானே பேசுகிறேன்!போலித்தனமாக எமது சிறார்களது உயித்தியாகத்தையும்,சிங்கள இனவொடுக்குமுறைக்கெரான அவர்களது வீரஞ் செறிந்த எதிர்ப்புப் போராட்டத்தையும் தேசியவிடுதலை"என்ற ஒற்ற்றைப் பரிணாமத்துள் அடக்கி அதைக் காசாக்கும் புலிகளது மேல் நிலை அரசியற்றலைமையைத்தானே இதுவரை விமர்சிக்கின்றேன்.

புலிகளது அடிமட்டப் போராளிகளைத் தேசபக்தர்கள் என்ற எனது பிடிவாதமான கருத்தில் எந்த மாற்றமும் கிடையாது.இன்றுவரை, இந்த இளைஞர்கூட்டம்(புலம்பெயர்ந்த)இந்த மேல்நிலைப் புலிப்பினாமிகளையும், அந்த தேச பக்தர்களது தியாகத்தையும் இருவேறலகாகப் பார்க்கவேயில்லை!

நமது போராட்டம் தோல்விற் சென்றபோதும், அதை திசைதிருப்பிச் செல்நெறியில் மாற்றத்தைக் கோரியபோதெல்லாம் அதை எதிர்த்துத்"துரோகி"சொல்லி அடிமட்டப் புலித் தேசபக்த இளைஞர்களைக் களப் பலி கொடுப்பதுவரை இந்தப் புலம்பெயர்ந்த தமிழர்களைக் கட்டிப்போட்ட கயவர்கள்தாம் மீளவும், நமது போராட்டத்தை(இனவாதச் சிங்கள அரசினது நிறுவனப்பட்ட தமிழ்பேசும் இனத்துக்கெதிரான ஒடுக்குமுறையை)த் தொடரப் போவதாகவும்,புலம்பெயர்ந்த இளைஞர்கள் தம்மை அவற்றோடு இணைத்துத் தார்மீக ஆதரவைத் தரவேண்டுமெனக் காசு பறிப்பதில் இந்த இளைஞர்களைக் கட்டிப்போடுவதில் யாருடைய நலன்கள் காக்கப்படுகிறது?

இந்நிலையுள்,ஆளும் இலங்கை அரசசினது ஆளும் வர்க்கத்துக்கிசைவாக மீளவும் தகவமைக்கப்படும் இந்தச் சதி வலையை அறுத்து நாம் சரியான பாதையோடுதாம் கருத்தியலைப் பரப்பவுதிலிருந்து புதிய நடைமுறைகளை நோக்கிய சாத்தியத்தை எதிர்பார்க்க முடியும்.

அந்தச் சாத்தியமானது நிலத்தில் நிலைகொண்டுள்ள சிங்களவொடுக்குமுறை வன்ஜந்திரத்துக்கெதிராகத் திடமாக மக்கள் எதிர்த்தெழுவதில் புதிய நம்பிக்கைகொண்டிருக்கிறதென்பதால்,அதை நிலைப்படுத்தித் தகவமைப்பதில் நமது இளைஞர்களது புதிய பரிமாணமே அவசியமானது.

இந்தப் புலத்துப் புலிப் பினாமிகள்பின்னால் கொடி பிடிப்பதைவிட நாம் வாழும் தேசத்து முற்போக்குச் சக்திகளை அண்மிப்பதும்,நமது தேசத்தின் இன்றைய நிலையில் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்கான புதிய திசைவழிகளைக் கண்டடையவும்,அதைத் தொடர்ந்து வெகுஜனமட்டுத்துக்கு நகர்த்துவதிலும் இந்த இளைஞர்கள் செயற்பட முடியாதிருப்பது எதனால்?

தொடர்ந்தும் ஏகாதிபத்தியத் திசைவழியில் நமது விடுதலைகுறித்துக் கனவுகொள்வதில் நாம் இவர்களால் பழிவாங்கப்படும் சுயாதீனத் தேசத்து மக்களது சமீபகால அவலத்தையும்,பாலஸ்தீன-குர்தீஸ் மற்றும் நேபாள மக்களதும் விடுதலைiயும் அவமதிக்கின்றோம்.

நாம் தோழமைகொள்ளும் நட்புத் தேசியவினங்களையெல்லாம் தட்டிக்கழித்துவிட்டுத் "தேசங்கடந்த தமிழீழ அரசு"-பிரதமருக்குப் பின்னால் வழிப்பாட்டுத் தனமானகக் கும்பிடு போடுவதில் எந்த மார்க்சியத்தைகொண்டு நாம் நோட்டுக்களைச் சொருகுவது?

என்னைப் பொறுத்தவரையும், நான் மார்க்சியத்தை ஒரு வாய்பாட்டுரீதியாகவொப்பிப்பவன் அல்ல!அதன் சமீபத்திய புதிய பரிணாமங்களைக்கூடச் சேர்த்தே நகர்த்தவதில் இந்த இளைஞர்களை நிராகரிக்வேண்டியவர்களை நிராகரித்துவிட்டு, மக்களது எதிர்ப்புப் போராட்டங்களை அரசியற்படுத்தும் சர்வதேச உரையாடல்களையும் செயற்பாட்டையுமே கோரச் சொல்கிறேன்.


பிரபாகரனைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய விடுதலைக்கு எதிரானவர் என்று எங்கும் சொல்லவில்லை!அவர்,விதேசிய வாதச் சக்திகளைப் பின் தொடர்ந்ததையும்,அவரது நம்பிக்கையையும் தான் அவரது பெயர் கொண்டு உரையாடுகிறேன்!

அவரது போதாமையால் முழுமொத்த மக்களது தியாகமும் அவரது முடிவோடு அழிக்கப்பட்டத்தன் குறியீட்டையே அவரைச் சொல்லி இனங்காட்டுகிறேன்.

இங்கே,எந்த இயக்கவாத மாயையும் நான் விரும்பி ஏற்கவும் இல்லை,அல்லது, தம்மைத்தாம் மார்க்சியர்கள் எனப் பசப்பும் இரயாகரன் கூட்டத்தைப்போல் மார்க்சியமே தெரியாமல் கிளிப் பேச்சையும் பேசிக்கொண்டிருக்கப் போவதில்லை!

புதிய திசைவழியும்-செல்நெறியும்நாடி(அவசியத்தின்பொருட்டு),இந்தப் புலம்பெயர் முன்னேறிய-பின்னேறிய(இயக்கவாத மாயைக்குட்பட்டவர்கள்) இளைஞர்கூட்டம் ஒரு தெரிவுக்கு வந்தாகவேண்டும்.அஃது,இன்றிருக்கும் புதிய உலகவொழுங்கில் அதற்கெதிரான எதிர்ப்புப் போராட்டங்களைச் சளையாது செய்யும் போராட்டத்தோடு, தம்மையும் இனங்கண்டாக வேண்டுமென்பதே எனது அவா!

இதைவிட்டுத் " தலைவர் வருவார்!என்றோ அவர் விடுதலைக்கான போரை மீளத் தகவமைத்துத் தமிழ் தேசத்தை விடுவிப்பார்" என்பதில், நமது ஆற்றல்களைச் சிதைக்கும் கருத்தாடலைத் தொடர்ந்து அநுமதிக்க முடியாதாதன் காலத் தேவையிலேதாம் பிரபாகரனது மரணத்தை மறைப்பது தமிழ்ச் சமுதாயத்துக்குச் செய்யும் துரோகமெனச் சொல்கிறேன்.

வரலாற்றுவெள்ளத்தில்,நீங்கள் உரைத்தபடி, பிரபாகரனது அனைத்து தவறுகளோடும் அவர், தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட சிங்கள அரசின் இனப்படுகொலைக்கெதிரான தனது சக்திக்குட்பட்ட வகையிற் போராடிய ஒரு குறியீடென்றுஞ் சொன்னேன்.

விக்கிப்பீடியாவில் பிரபாகரனது வாழ்க்கைக் குறிப்பைச் சரி செய்து"பிரபாகரன் தமிழ்த் தேசியவிடுதலையின் குறியீடு" என்றும்,தமிழ்மக்கள்மீது சிங்கள இனவொடுக்குமுறை நிகழும்வரை அவர் தமிழ்மக்களது விடுதலையின்மீட்பர் என்றும் நானே திருத்தி எழுதினேன்.

இதுவரையானது அனைத்து இயக்கவாத அமைப்புகளுக்குட்பட்ட சிந்தனைத் தடங்களும், இருக்கும் மக்களது அரசயில் வாழ்வை அந்நியர்களுக்கு ஏலமிடும் அரசியற் போக்கிலிருந்து விடுபட வேண்டிய வகையிற்றாம் ஒரு உரையாடலது தேவையை இப்படியாகவும் உரையாடுவதென நானும் பல இடங்களில் செய்து, கல்லடிபட்டும் தொடர்வது செயற்போக்கில் வந்தடையும் நடைமுறைக்கு இறங்கும் ஒரு முன் நிபந்தனையெனக் காண்கிறேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
19.11.2011

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...