Sunday, June 12, 2011

மிகேல் அபத்த உலகை வெற்றியீட்டியவனா?அல்லது அபத்தத்தின் அதியுயர்ந்த கீரோவா?

முப்பது இலட்ச முழு நிதியும் மார்க்சிய கட்சிக்கே போய் சேரட்டுமென முதலாளி...

Der Mythos des Michael May_Sisyphos


ரலாறு பூராகவும் இந்த மனிதவாழ்வுக்கு அர்த்தங்கள் பல கற்பிக்கப்படுகிறது.எந்தக் கற்பித்தல்களும் மனித வாழ்வைப் பூரணமான-சுதந்திரமான புரிதல்களோடு நியாயப்படுத்தவில்லை!

ஏன் வாழவேண்டும் என்பதும்,எதற்குச் சொத்துச் சேர்க்க வேண்டுமென்பதும் நியாயப்படுத்தும்படியாக எப்போதும்இருக்க முடிவதில்லை!

"Absurd" முற்றிலுமாக விரிகிறது,வாழ்வை எண்ணி!

குடும்பம்-பிள்ளை,குட்டி எனக்கொண்ட உறவொடு விரிந்து போகும் விருப்புக்கு குவிப்புறுதிகொள்வதில்மனித வாழ்வு அதிகம் சலித்துப் போகிறது.எதிலும் நம்பகத் தன்மை இல்லை-எங்கும் போலித் தனமும்,நம்ப வைத்துக் "கழுத்து அறுப்பும்" நிலவுகிறது.

நான், எந்த நோக்கமுமற்ற வினைகளுக்குள்த் தினமும் தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்.

"unsinnig" அர்த்தமற்ற உலகமாகப்பட்ட மனித வாழ்வு அழிவிற்குள்...அது,"தவறான-தப்பான,நியாயமற்ற"சட்டங்களால்- ஒழுங்குகளாற் தினமும்இந்த வாழ்வை அழிப்பதில் முடிகிறது.மீள,மீளத் துரத்திவரும்"அபத்தம்(Absurditaet)பயனற்ற,அர்த்தமற்ற செயலை ஊக்குவிக்கிறது.இவற்றை எதிர்க்கும்"மனநிலை" அபத்தவாதத்தின் தெருக்கோடியில் தஞ்சம் கொள்ளும்வரை எனது பௌதிக இருத்தலின் தஞ்சம் "Diskrepanz" இணைவின்மையாகத் தெரிந்தாலும் இரண்டும் ஒன்றாய் விரியும்போது, அபத்தமாகவே உலகும் தோன்றுகிறது.இந்த உலகு எதுவரை?



ஒரு இனத்தை வியாபாரத்தனமாகக் கொன்று குவித்துவிட்டுத் தாமும் மண்டியிட்டுத் தலையைப் பிளக்கக் கொடுத்த புலிகளைக் குறித்து விளங்க முடிதல்சிசிப்போவுக்கு முன் கட்டளைப் போட்ட கடவுளது வேலைக்கொப்பவே இருக்கிறது.

நான் தரையிலிருந்து மலை உச்சிக்குத் தாவும்போது எனது இன்றைய அனைத்து ஊக்கமும் இமையசைக்கும் முன்னமே தரைக்கு வந்து விழுந்து நொருங்கும்போது இதை எதிர்த்தல்-வீராப்புப் பேசலாக சமூகத்துக்குள் கொட்டிவிடுகிறேன்.சிசிப்போ கடவுளைவிடப் பன்மடங்கு பலமானவன்.அவன் உணர்வு நிலை அர்த்தமற்றதை"ஒழுங்கை!க் கடைப்பிடித்தல்-ஒப்புக்கொள்ளலென அர்த்தமுள்ளதாக்குவதாகப் புரியும்போது இந்த மாபெரும் மனிதர் Michael May ஆக மேலெழுகிறது.

கடந்த கால் நூற்றாண்டாகப் பொறியியலாளனாகப் பணிபுரிந்த இந்த மனிதர் பெரும் கட்டுமானத்துறையில் செல்வம் குவித்து வைத்திருக்கிறார்.பல மில்லியன்களுக்குச் சொந்தக் காரனான இந்த மிகேல் மாய்க்கு என்ன நிகழ்ந்தது?

உலகத்தின் அதியுச்சத்தில் கோடிக் கணக்கான சொத்துக்களோடு வாழ்ந்து கீழ் நோக்கிய பார்வை எப்படி வந்தது?

இதுவொரு Absurd !

அனைத்தையும் தலை கீழாக்கிப் பார்க்கும் மன நிலை.அவர் தன்னைப் பிரபலப்படுத்த விரும்பாது இருக்கிறார்.ஆனால்,அவர் பேசப்பட வேண்டியவர்.

நம்மில் எத்தனை மனிதர்கள் இந்த மிகேல் மாய் போன்றிருக்கிறோம்?;ஏன் அப்படி இருக்க வேண்டும்??

மக்களிடம் போருக்குச் சேர்த்த,அபிவிருத்திக்குச் சேர்த்த பணத்தைப் புலிப் பினாமிகள் தமது சொத்தாக்கிவிட்டுச் செல்வந்தாகளாக இருக்கும்போது,இப்படியெல்லாம் அபத்தம் நம் முன் நிழலாட நாமும் அதே அபத்த்தின் இன்னொரு முனையில் நிற்க திருவாளர் மிகேல் மாய்வழி செய்கிறார்.

சிசிப்போவுக்குக் கடவுளது இரகசியமான பரிசு கிடைத்திருக்கலாம்.

அவன் மரணத்தை அரிவாள் சங்கிலித் தொடருக்குமேல் வைத்துவிட்டு மரக்கட்டையை உருட்டினான் என்றால் அவனது உணர்வு எத்தகைய ஒழுங்கைக் கொண்டிருக்கும்?

தனது மனைவியினது அன்பைப் பரிசோதிக்கச் சிசிப்போ கடவுளது அர்த்தமற்ற கட்டளையை ஏற்று, உச்சிக்கும் மடுவுக்குமாகக் குற்றியோடு போராடுவதிலிருந்து இந்த அபத்தவுலகை விளக்க வேறொரு பாணி இருக்குமோ?

அதைத்தான் திரு மிகேல் மாயும் செய்திருக்கிறார்.

மலை உச்சியை நோக்கிய வெற்றிகொள் போர் ஒரு மனிதனது இதயத்தை நிறைத்திருக்குமாயின், சிசிப்போவை இந்தவுலகத்தின் மிக மகிழ்வுக்குரியவனாகவும்,மதிப்புக்குரியவனாகவும் அபத்தத்தின் முகத்தில் ஓங்கி உதைத்தவனுமாகவே நான் பார்ப்பேன்! அதையேதாம்,இந்த மிகேல் மாயும் செய்திருக்கிறார்.

தான் இதுவரை சேர்த்த செல்வத்தை மட்டுமல்ல தனது பெற்றோர் வழி முதிசத்தையும் இந்த மனிதர்கொண்டிருந்தார்.

மிகேல் தனது செல்வத்தையும்விடப்பலமானவர்.சிசிப்போ தான் உருட்டும் பாரிய குற்றியையும்விடப் பலமானவனாகவே பார்க்கத் தக்கவன்.அதனாற்றாம் இரண்டு செயலும் மிக வீரியமானவை!

மிகேல்(பெரும்முதலாளி) கூறுகிறார்: "முதலாளியம்மக்களுக்கு உலகச் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதற்குத் தகுதியற்றது ("Der Kapitalismus ist unfähig, die Menschen am Reichtum teilhaben zu lassen." ) .


பிற்குறிப்பு : திரு மிகேல் மாய்(Michael May)இதனக்குச் சொந்தமான அனைத்துச் சொத்துக்களையும்( 3.059.167.00 € ),கிட்டத்தட்ட முப்பது இலட்சம் யூரோவையும் ஜேர்மனிய மார்க்சிய-லெனியக் கட்சிக்கு நிதியாக-அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு (மார்க்சியக் கல்வியாளர்களைப் பயிற்றுவிக்கவும்,பெண்களைத் தொடர்ந்து போராட்டக் களத்துக்குத் தயார் படுத்தவும் தனது நிதியைப் பயன்படுத்த வேண்டுமெனப் பரந்த மனதுடன்...), வாடகை வீட்டில் மாதம்1365.யூரோ பென்சன்-ஓய்வூதியத்தைக்கொண்டு மிக எளிமையாக வாழ்கிறார்.தன்னைக் குறித்த பிரபல்யப்படுத்தலை விரும்பாமல் இருக்கும் ஒரு சாதரண மனிதரானார்.


மிகேல் அபத்த உலகை வெற்றியீட்டியவனா?அல்லது அபத்தத்தின் அதியுயர்ந்த கீரோவா?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
12.06.2011

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...