Tuesday, August 31, 2010

அம்பலமாகும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கப் பாசிசத் திமிர்!

"இரண்டாவது செய்தி எனது இலங்கை உறவுகளுக்கானது. எல்.ரீ.ரீ.ஈ ஐ சேர்ந்த நாங்களும் வேறு போராட்டக் குழுக்களும் எமது இழந்துப்போன உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க ஆயுதப்போராட்டத்தை தொடங்கினோம். நாம் தமிழ் ஈழம்தான் இதற்கு விடை என நினைத்தோம். அந்த இலட்சியம் எமது வழிமுறைகளை நியாயப்படுத்தும் என நினைத்தோம். எமது ஆயுதப் போராட்டத்தின் போது இலங்கை மக்களின் பெரும் துன்பத்துக்கும் கெடுதிக்கும் நாம் காரணமாகினோம். சிலவேளைகளில் நாகரீகமடைந்த நடத்தையில் எல்லா நியமங்களையும் பார்க்கும்போது நடந்தவற்றையிட்டு அதிர்ச்சியடைவேன். எல்.ரீ.ரீ.ஈ யின் ஒரு சிரேஷ்ட தலைவர் அல்லது முன்னாள் தலைவர் என்ற வகையில் இதற்காக

இலங்கையர்களை எல்லோரிடமிருந்து மனதார மன்னிப்புக்காக இறைஞ்சுகின்றேன். தயவு செய்து எம்மை மன்னித்து சகல இலங்கையருக்குமாக ஒரு நல்ல எதிர்காலத்தை அமைப்பதில் முன்னிற்க எமக்கு உதவுங்கள்." By Kumaran Pathmanathan(LTTE)

http://thesamnet.co.uk/?p=22010#comment-177539

அம்பலமாகும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கப் பாசிசத் திமிர்!


புலிகள் சார்பாக மன்னிப்புக் கேட்கும் இந்நாள் புலித்தலைவர் கே.பத்மநாதன்மிகச் சிறப்பாக மேற்காணும் பரந்த மனப்பாண்மையோடு புலிகளது அழிவு யுத்தத்தை உலகுக்குப் பிரகடனப் படுத்துகிறார்.இதன் மூலம் தமிழ் ஆளும் வர்க்கத்தின் பாசிசப்பயங்கரவாதத் திமிரை தமிழ்பேசும் மக்களுக்கு ஒழுங்குறச் சொல்லியுள்ளார்.

இதுவரை நாம் இது குறித்து நிறைய எழுதினோம்.

புலிகள் அழிவுவாதிகளென்றும்,தமிழ்ச் சமுதாயத்தையே முழுமையாக அழித்துவிட்டு அவர்களது அனைத்துவுரிமையையும் அந்நியச் சக்திகளுக்கு விற்பவர்களென்றும் கூறியிருந்தோம்.கூடவே,புலிகள் அந்நியச் சகத்திகளது அடியாட்களே தவிர, விடுதலைப் போராளிகளல்ல என்றுஞ் சொன்னோம்.இதைத் தவிர்த்துப் புலிகள் இறுதிவரைப் போராடி மரணிப்பதாகவும்,அது வீரஞ் செறிந்ததுமாகப் புலிகளே தமக்கு மகுடஞ் சூட்டியபோது அதையும் அம்பலப் படுத்தினோம்!இப்போது, புலித் தலைவர்களில் ஒருவரான கே.பி.என்ற கேடியே தமது அடியாட் பாத்திரத்தையும் மனித விரோத்த்தையும் ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.அது,பெரும் பாலும் சிங்கள மக்களை நோக்கிய மன்னிப்பு.இது வரவேற்கத் தக்கது!


என்றபோதும்,பிரத்தியேகமாக அவர்களது தமிழீழத்தமிழ் பேசும் மக்களிடம் இந்த மன்னிப்புக் கேட்கப்பட்டாதாக இல்லை!அவர் தமது அண்மைய நாடான இலங்கை மக்களிடமேதாம் மன்னிப்புக் கோருகிறார்.எனவே,தமிழீழம் என்பது அடிப்படையில் அவரது கருத்தின்படி இன்னும் இருப்புக்குடையதாகவே இருக்கிறது.அவர் தமிழீழத்தை உத்தியோக பூர்வமாக நிராகரிக்காதவரை இதுவே உண்மை! என்றபோதும்,இந்த அழிவுவாத புலி அடியாட்படையின் தலைவரது மன்னிப்பானது சிங்களச் சமுதாயத்தை நோக்கியதாகவிருப்பதால் அவர் இன்னொரு விஷயத்தையும் மிக அவசியமாக இலங்கை அரசுக்குப் புரிய வைக்கிறார்.


அதாவது,"இவ்வளவு அழிவை நாம் செய்திருப்பினும், இந்த அழிவைச் செய்வதற்கான இயக்கம்-போராட்டம் ஆரம்பிப்பதற்கான சூழலை ஏற்படுத்தியவர்களும்,அத்தகைய மாதிரியானவொரு மன்னிப்பைத்தமிழீழத் தேசத் தமிழ் பேசும் மக்களிடம் செய்தே தீரவேண்டும்" எனப் புறநிலையில் கருத்துக் கட்டுகிறார்.


மறைமுகமான இந்தக் கருத்தானது அவரது மன்னிப்போடு நமக்குள் புலனாவது.எனவே,புலியின் தோற்றத்துக்கும், அத்தகைய சமூகவிரோதச் சூழல் தோன்றுவதற்கும் காரணமான சிங்கள ஆளும் வர்க்கமானது நேரடியாகத் தன்னாலும்-தனது ஒடுக்குமுறையாலும் எழுந்த புலிகளாலும் பழிவாங்கப்பட்ட தமிழ்,சிங்கள,முஸ்லீம் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டுமென்பதே கே.பி.யின் இந்த மன்னிப்பின் அர்த்தமாகும்.


இலங்கைச் சிங்கள இனவாத அரசின் தலைவரெனும் முறையில் மகிந்தா கடந்தகாலுத்துக்கும் , நிகழ் காலத்தும் பொறுப்புடையவரென்பதால் தனது அரசுசார்பாகத் தமிழ்-சிங்கள மக்களிடமும்,குறிப்பாக முஸ்லீம் மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்!

அப்படிக் கோரும் போது,இலங்கை அரசானது தனது இனவழிப்பு அரசியலை ஒத்துக்கொண்டாக வேண்டும்.இலங்கைச் சிங்கள இனவாதத்துக்கு முகங்கொடுத்த ஒரு இயக்கமே அவ்வளவு அழிவை இலங்கைக்கு ஏற்படுத்தியதென்றால், இத்தகைய இயக்கம் தோன்றக் காரணமான அரசியலானது அதைவிட மோசமாகவே இருந்திருக்கும். எனவே,தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பெரும் இனவழிப்பைக் கட்டவிழ்த்துவிட்ட சிங்கள ஆளும் வர்க்கம் எப்போது மன்னிப்புக் கோரும்?


எப்போது தமிழ்-முஸ்லீம் மக்களுக்கு நஷ்டவீடு கொடுக்கும்?


நியாயம் வழங்கும்-நீதி உரைக்கும்?


இதன் வாயிலாக அடிப்படையுரிமைகளை இனங்களிடம் கையளிக்கும்?


கே.பி.யின் அரசியலானது பாசிசத்தை அம்பலப்படுத்தி மன்னிப்புக் கேட்டதென்றால் இந்தப் பாசிச இயக்கத்தின் இருப்புக்கு வித்திட்ட சிங்களப் பாசிச அரசின் இனவழிப்பு-சுத்திகரிப் எப்படித் தமிழ் பேசும் மக்களை வேட்டையாடியதென எவரும் குறித்துணர முடியும்.இதன் வாயிலாகச் சிங்கள ஆளும் வர்க்கமானது இனவழிப்புச் செய்த யுத்தக் கிரிமனல் என்பது மீளப் புலனாக்கப்பட்டுள்ளது.சட்ரீதியான நடவடிக்கையானது உலக நீதி-நியாயங்களுக்கொப்ப மகிந்தாவையும் அவருக்குப் பின்னாலுள்ள ஆளும் வர்க்கத்தையும் குற்றக் கூண்டில் ஏற்றியாக வேண்டும்.இதற்கான சாட்சியே கே.பி.தான்!


அந்த வகையில் கே.பி.க்கு ஒரு தோப்புக் கரணமிட்ட நன்றி.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.09.2010

1 comment:

Anonymous said...

முதலில் தமிழ் இணையதளங்களில் இந்த அடிவருடி அசிங்கத் தமிழனின் அறிக்கைகள் பேட்டிகள் வெளிவருவதை தவிர்க்க வேண்டும். இந்த அடிமை நாய்க்கு சிங்கள இனவாத வெறிபிடித்த அரசுகள் கொன்று குவித்த தமிழரின் எண்ணிக்கை தெரியாமல் போனது வியர்ப்பானதே. பணமும் பதவியும் இவன் ஊழைக் கண்ணை மறைத்து நிற்பதுமல்லாமல் எம் இனமான மறவர்களையும் அவமானப்படுத்தித் திரிகின்றான். உடனடியாக தமிழ் பற்றுள்ள அத்தனை இணையதளங்கள் வலைப் பதிவுகள் இந்த கேடு கெட்ட நாயின் அறிக்கைகள் பேட்டிகளை வெளியிடுவதை நிறுத்துங்கள். இவனது குரல் தானாகவே அடங்கும். யாழ்

தமிழ்மணம் திரட்டி.

அன்றொரு நாள்...மறக்க முடியாத காலம் அஃது!தமிழ்மணம் என்றொரு வலைப் பதிவுத் திரட்டி.எங்களது கருத்துக்களைத் திரட்டி ,ஆரோக்கியமான விவாதத்துக்கு வழ...