இரண்டாவது வாய்ப்பைக் குறிவைக்கும் அமெரிக்காவும்,பழைய
பனிப்போரை சாத்தியமாக்கத்துடிக்கும் இருஷ்சியாவும்
போடத்துடிக்கும் கோல்கள்
நிச்சியம் உலகத்தினது குடிகளுக்கு விரோதமானது-உயிர்ப்பலிகளை இலட்சங்களிலிருந்து
மீளவும் மில்லியன்களாக்கும்.
நாம் தமிழீழத்தைக் கனவினில் தாங்கியபடி புலிகளுக்குள் முகத்தைப் புதைக்கிறோமா?இது அபத்தமான கேள்வியாக இருக்கிறதா?இருக்கணும்-இருந்தால் நிச்சியம் நமது அரசியற்பார்வையின் தரிசிப்பு நம்மை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் செல்லப்போகிறது.நமது விடுதலைக்காக நாம் செலுத்திய விலை அதிகமானது.இன்று உலகைப் பங்கீட்டுக்கொள்ளும் அரசியலுக்கு நமது வாழ்வும்-உயிர்ப்பும் பலிகடாவாக்கப்பட்டுவருகிறது.இந்த "நமது"க்குள் உலகத்தின் பல பாகத்திலுமுள்ள தேசங்களின் கனவுகளும் அடங்க நாம் என்று பட்டியலிடும் நமது அரசியல் புரியத் தக்கதே!இது,மிகத் தெளிவானது.
கடந்த சில தினங்களாக இருஷ்சிய மேலாதிக்கம் ஜோர்சியாவில் குண்டுகள் போடுகிறது.படையை நகர்த்திச் சில ஆயிரம் மக்களைப் பலிகொண்டு வருகிறது.கிட்டத்தட்ட 2000 மக்கள் ஜோர்ச்சியாவில பலியாகியுள்ளார்கள் என்று ஜேர்மனிய ஸ்பீகல் பத்திரிகை எடுத்துரைக்கிறது.ஒரு பக்க யுத்த நிறுத்தத்தைச் செய்து இருஷ்சியாவின் தாக்குதலிலிருந்து அமெரிக்க நிறுவனங்களின் சொத்துக்களைப்பாதுகாக்கும் அரசியலை ஜோர்ச்சியா முன்னெடுக்க அமெரிக்காவால் வற்புறுத்தப்பட்டு, அதன் விருப்புக்காக யுத்த நிறுத்தம் அமுலாக்கஞ் செய்யப்படுகிறது.கருங்கடலில் மையங்கொண்ட பூகோள அரசியல் யுத்தம் இன்னொரு தெரிவை உலகுக்கு வழங்கும் அமெரிக்காவின் இரண்டாவது வாய்ப்பை அடியோடு அழிக்குமா?அல்லது அமெரிக்காவின் தந்திரத்தை நிலைப்படுத்தும் சூழலை மத்திய ஆசியாவில் ஏற்படுத்துமா?இதற்கான தெரிவாக ஐரோஆசியாவின் முனைகளில் தவங்கிடக்கும் அரசியலை விளங்கும் ஒரு அவசியம் நமக்குண்டு.
கடந்த ஈராக் யுத்தம் பற்றிய கேள்வியை அமெரிக்க வெளியுறவுக்கொள்கை ஆலோசகர் திருவாளர் ஸ்பீக்கினீவ் ப்பெர்சின்கீ (Zbigniew Brzezinski) அவர்களிடம் கேட்கப்பட்ட அன்றைய ஸைற் பத்திரைகயானது 1998 ஆம் ஆண்டு ஒரு சந்திப்பை அவரோடு செய்துகொண்டது.அங்கே கேட்கப்பட்ட கேள்வியானது அமெரிக்க அரசியலில் பூகோள அரசியலின் வியூகத்தைப்பற்றிய தெளிவை நமக்கு மிக இலகுவாக ஏற்படுத்தக்கூடியளவு போதுமான தகவல்களைக்கொண்டிருக்கிறது.இன்று ஜோர்ச்சியாவில் இருஷ்சிய இராணுவத் தாக்குதல்களைப்பற்றி மேற்குலகமும்,திருவாளர் போப்பாண்டவரும் அமெரிக்க ஆதிக்க வெறியர்களும் சொல்லும் புதிய தத்துவத்தை இருஷ்சிய மேலாதிக்கம் கிஞ்சித்தும் செவிமடுப்பதற்கில்லை.நாம் இந்த அரசியல் குறித்துச் சற்று விரிவாகப் பார்ப்பது அவசியம்.
ஈழம் என்ற கோதாவில் இழந்துவரும் மானுட அழிவில் நமது பூகோள அரசியல் அறிவு கேள்விக்குரியது.இதை மேலும் விரிவாக்கிச் செல்வதற்கு நாம் இன்று நடைபெறும் ஜோர்சிய மற்றும் ஈராக் யுத்தங்கள் பற்றிய சரியான புரிதலை உட்கொள்வது அவசியம்.
//die zeit: Die Welt stand am vergangenen Wochenende nahe vor einem Krieg. Die Vereinigten Staaten drohten den Irak anzugreifen, weil Saddam Hussein den Waffeninspektoren der Vereinten Nationen den Zutritt zu seinen Militäranlagen verweigert hatte. War diese militärische Eskalation nötig?
Zbigniew Brzezinski: Saddam hat uns keine andere Wahl gelassen. Seine einsame Entscheidung verlangte nach einer entschiedenen Antwort. Der Verzicht auf eine Reaktion hätte die Glaubwürdigkeit gekostet - und zwar nicht nur die der USA, sondern auch die der Vereinten Nationen. Aus diesem Grunde waren übrigens auch die Staaten, die zuvor militärische Angriffe immer abgelehnt haben, in der vergangenen Woche eher schweigsam - oder sie stimmten ihnen sogar zu.//
http://www.zeit.de/1998/48/ein_ende_finden
"ஸைற் பத்திரிகை:கடந்தவார இறுதியில் உலகம் ஒரு யுத்தத்தைத் தரிசிப்பதற்கு அண்மித்து வருகிறது.ஐக்கிய அமெரிக்கா யுத்தம் ஒன்றைச் செய்வதற்கான அச்சத்தை ஈராக்மீது திணிக்கிறது.ஏனெனிலில், சதாம் ஐ.நா.வினது ஆயுதப் பரிசோதகர்களைத் தனது தேசத்தினது இராணுவ நிலைகளுக்குள் விடுவதற்கு மறுத்து வருவதால்.இதற்கு இராணுவ விஸ்தரிப்பு அவசியமா?
ஸ்பீக்கினீவ் ப்பிறஸ்சின்கீ:சதாம் எங்களுக்கு வேறொரு தெரிவை விட்டுவைக்கவில்லை.அவருடைய தனித்த முடிவானது முடிந்த முடிவான பதிலைத் தருகிறது.தவிர்த்துக்கொள்வதூடான மறுவிளைவு நம்பிக்கைக்கு உலை வைக்கிறது.அது,ஐக்கிய அமெரிக்காவுக்கு மட்டுமல்ல,ஐ.நா.வுக்கும்தாம்.இக்கராணத்தால்,உலக நாடுகள் இதற்குமுன் இராணுவத்தாக்குதலை மறுத்தவர்கள்கூட கடந்த கிழமைக்குபின் மௌனித்துகிடக்கிறார்கள்.அல்லது அமெரிக்காவுக்கு ஆதரவை வழங்கிக் கிடக்கிறார்கள்."
மேற்காணும் நேர்முகத்தை 1998 ஆம் ஆண்டு எடுத்த ஸைற் பத்திரிகையானது இன்று இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தத்தை மிகவும் மலினப்படுத்தப்பட்ட வார்த்தைகளோடு வர்ணிக்கிறது."அழிவு.அவலம்,இடப்பெயர்வு" என்று கூறும் இந்த ஊடகங்கள் அன்றைய அடாவடித்தனமான அமெரிக்காவின் ஈராக்மீதான யுத்தத்தை அடக்கி வாசித்தவர்கள்.இவர்களின் அரசியலோடு மத்திய ஆசியாவின் எண்ணை மற்றும் எரிவாயு அரசியல் இருக்கிறது.உலகத்தைப் பங்குபோடும் யுத்தங்கள் அப்பாவி மக்கள்மீது திணிக்கும் வன்யுத்தங்களை இன்றைய வல்லரசுகள் தத்தமது அரசியல் பூகோள நலன்களின் வழிக்கேற்றவாறு நடாத்தி முடிக்கின்றன.இங்கே, ஐனநாயகம்,மானுட நேயம் என்பதெல்லாம் வெற்று வார்த்தைகள்தாமென்பதை அன்றைய அமெரிக்க ஜனாதிபதி காட்டாரின் அரசியல்-பாதுகாப்பு ஆலோசகரும் இன்றைய அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை வகுப்பாளருமான திரு.ப்பிறன்சிஸ்கீ Zbigniew Brzezinski ஊடாக நாம் இனம்காணமுடியும்.
அமெரிக்காவினது உலக மேலாதிக்க வெறியானது இருஷ்சியாவை நான்கு துண்டுகளாக்கும் திட்டத்தை வகுக்கக் காரணமான இந்தப் பேராசிரியர் Zbigniew Brzezinski இன்றைய ஒபாமாவின் அரசியல் ஆலோசகரும் வெளியுறவுக்கொள்கை வகுப்பாளருமாக இருந்தபடி சமீபத்தில் ஒபாமாவை நேட்டோ அணியின் பங்குதார நாடுகளுக்கு அனுப்பிய பின்னணியோடு இந்த இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தம் நடைபெறுவதன் உட் பூசலை நாம் விளங்கிக்கொள்வதன் தொடராக இந்தக்கட்டுரை விரிந்து செல்லும்.
தொடரும்.
ப.வி.ஸ்ரீரங்கன்.
10.08.2008.
No comments:
Post a Comment