கோலமிழந்த ஈழ முற்றம்
நெடும்போர்ப் புயற் பொழுது
நெற்கதிர் தலை வீழ்த்திய குருதி வெள்ளம்

கடும் பசி கண்டகம் சுடலைக் கோலம்
வீடுடை குருதியுறை பிணம்
காடுடையான பிஞ்சுகள்
கேடுடையானார் ஈழத்தவர்
புண் உற்ற போர் நெறியுள்
மண் தின்ன மனங்கள் அழிய
உடலமும் எலும்பும் ஊழியுள் மருவ
உவற்புடை ஊனீழம் சிந்தையுள் எரிய
தீயடைந்த விதியெனத் தேறிய போர்வாய்
மாயும் வகை இதவென்றாகப் போயின உயிரும்
பிணமென வீழ்ந்தன பிஞ்சுகள் இதயம்
பேயடைந்த ஸ்ரீலங்கா போரிடும் புலி என

உடலால் நிலம் தடவிக்
குருதியால் மெழுகினாயா தமிழமுதே?
பின்னயர் அனைவரும் அழிய
அறுந்தது கனவுடன் காலமும் நீயாய்!
No comments:
Post a Comment