Thursday, May 17, 2007

தேனிக்கும்பல் மற்றும் ரீ.பீ.சீ.வானொலி...

தேனிக்கும்பல் மற்றும்
ரீ.பீ.சீ.வானொலிக் கயவர்களின்
மக்கள் விரோதப்போக்கு.

இன்று நம்மீது கவிந்திருக்கும் அரசியற் சதிகளுக்கு உடந்தையாக இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களின் சேவகத்தால் பயன் பெற முனையும் ஊடகங்களும் நம்மக்களை இன்னும் அரசியல் அநாதைகளாக்கும் முயற்சிகளைப் புலிப்பாணியிலேயே முன்னெடுப்பதால் நாம் இத்தகைய மக்கள் விரோத ஊடகங்களைத் தினமும் அம்பலப்படுத்தியே வந்துள்ளோம்.

மக்களின் அடிப்படை வாழ்வு பாதாளத்தில் வீழ்ந்து, உயிர்வாழும் எந்த ஆதாரமுமின்றி மக்கள் படும் துயரமானது வெறும் வார்த்தைகாளால் வர்ணிக்க முடியாதவை.இத்தகைய கொடும் வாழ் சூழலில் மக்கள் கிடந்துழல, அவர்களுக்குத் தனிநாடு-சுதந்திரம்-விடுதலை,அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதாகப் புலிகளும்-புலிகளால் பாதிக்கப்படும் மக்களையும் அவர்களின் அடிப்படை ஜநாயக உரிமைகளைப் பாசிச இலங்கை-இந்திய அரசுகளோடு இணைந்து,அவர்களின் தயவோடு மக்களை விடுதலை செய்வதாகவும்,மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடுவதாகவும் பூச் சுத்தும் இந்தப் பொய்யான கயமைவாதிகளும்(தேனீ,ரீ.பீ.சீ.,ஆனந்தசங்கரி,டக்ளஸ்,கருணா குழு,ஈ.என்.டி.எல்.எப்.,புளட்,ஈ.பீ.ஆர்.எல்.எப்,ரெலோ போன்ற அராஜகக் கும்பல்கள்) இலங்கை மக்களின் அடிப்படை வாழ்வாதரங்களோடு மட்டும் விளையாடவில்லை.மாறாகத் தேசத்தின் இறைமையுடனும் அந்தத் தேசத்துள் உயிர்வாழும் உழைக்கும் மக்களின் அனைத்துவகை உரிமைகளுடனும் தமது அரசியல் இலாபங்களைக் கூட்டிக் கழித்து வருகிறார்கள்.இவர்கள் கூறும் கருத்துச் சுதந்திரமென்பது தமது இலக்கை அடைய முனையும் கருத்துக்களைச் சொல்லக் கூடிய ஒரு ஊடகச் சுதந்திரத்தையே.
இத்தகைய சுதந்திரத்தைப் புலிகள் தமது இயக்க நலனின் மதிப்பீடுகளால் சிதைக்கும்போது, அதை நிறுத்தித் தமது இயக்கங்களின் நலனை முதன்மைப் படுத்தும் பிரச்சாரங்களை மட்டும் முன்னெடுப்பவர்கள் தம் இலக்கை அடைவதற்காகவே பாதிக்கப்படும் மக்களின் உரிமைகளைக் கைகளில் எடுத்து வேசம் கட்டுவதென்பது இன்றைய பொழுதில் உலகம் அறிந்த விடையமாகும்.
இதை உறுதிப்படுத்தும் இன்னொரு நிலையைக் கீழ் வரும் வாசகர் விமர்சனம் உறிதிப்படுத்தும்.

வாசகர் ஒருவர் எமக்கு அனுப்பிவைத்த தனது கருத்துக்களை நாம் உங்கள் பார்வைக்கு முன் வைக்கின்றோம்.

தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
17.05.2007





சாரணியன் எழுதிய பார்வையற்ற குழந்தையிடம் துப்பாக்கியா? என்ற விமர்சனத்திற்கு சில குறிப்பு எழுத வேண்டும் என்ற நிலையில் சில குறிப்பை எழுத முனைகின்றேன்.


ஒவ்வொரு வர்க்கத்திற்குப் பின்னாலும் ஒவ்வொரு வர்க்க நலன் இருப்பதாக ஏற்றுக் கொள்ளும் நீங்கள் வர்க் நலனை ஐக்கியப்படுத்தவே அல்லது வர்க்க நலனை முதன்மைப்படுத்தும் நிலைப்பாட்டையோ உங்களின் விமர்சனத்தில் காணமுடிகின்றதா என வினா எழுப்ப வேண்டியிருக்கின்றது


நீங்கள் குறிப்பிடும் மூன்று பிரிவினர்களாக


1. புலிகள்

2. புலியை எதிர்ப்பவர்களின் அணி

3. தமிழ் அரங்கம் சிறிரங்கன் ஆகியோரின்தளங்களே பிரதானமானவையாக இருக்கின்றன.


இந்தத் தளத்தில் குறிப்பாக புலிகளின் அல்லது அவர்களின் எதிர்ப்பாளர்களின் நிலைப்பாடு பற்றி இங்கு கருத்துக் கூறுவது அவசியம் அற்றது ஆனால் மார்க்சீய புத்தகத்தில் உள்ள கருத்துக்களை பொறுக்கியெடுத்து வைத்திருப்பவர்கள் எளிமையாக மக்களுக்குச் சேரக் கூடிய வகையில் சேர்க்க முடியாதவர்கள்,மக்களையோ,தனிநபர்களையோ அணிதிரட்ட முடியாதவர்கள் என கூறியுள்ளீர்கள்.


இந்த நிலையை என்பது உலகில் உள்ள பொதுவான நிலைகள் தான் ஊடகத்தில் இருப்பவர்கள் இருக்கின்ற வர்க்கச் சமூகத்தின் படைப்புக்கள் அதற்கேதான் சேவகம் செய்ய வளர்க்கப்படுகின்றனர். இந்த நிலையில் இருந்து அதவாது எழுத்து வடிவத்தில் உள்ள குறைபாட்டைத் முதன்மைப்படுத்தும் நீங்கள். ((method) அணுகுமுறை பற்றிய பிரச்சனையை முதன்மைப் படுத்தி அவர்களின் தத்துவார்த்த பிரச்சனை பற்றிய நிலைப்பாட்டிற்கு தகுந்த பதிலை கொடுக்காது அவர்களை உங்கள் எழுத்தாற்றல் மற்றும் உங்களிடம் உள்ள ஊடக பலத்தின் மூலம் நீங்களும் மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்துகின்றீர்கள்.


தத்துவார்த்த நிலையில் இருந்து உங்களால் அவர்களின் நியாயத்தை புரிந்து கொண்டு அவர்களை மக்களின் (புலிகளுக்கு எதிராக மாத்திரம் அல்ல) "ஒருங்கிணைப்பதில்,ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டிய முக்கிய காலகட்ட"மென கருதும் நீங்கள் புலிகளுக்கு எதிரி என்பதற்காக புலிகளின் படைகளில் மூளைச்சலவை செய்து பலிக்கடாக்கலாக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகளை கொல்வதற்கு துணைபோகும் குழுக்களான EPRLF, EPDP, TULF, PLOT, ENDLF, TMVP போன்றவற்றின் ஒடுக்குமுறையை இனபேதமற்று மேற்கொள்ளும் ஆழும் வர்க்க அரசாங்கத்திற்கும் அரசை பாதுகாக்கும் அரச இயந்திரத்திற்கு (இராணுவம், நாடாளுமன்றம்) போன்றவற்றில் அங்கம் வகித்துக் கொண்டு செயற்படும் செயற்பாட்டிற்கு துணை போகும் படி கேட்கின்றீர்கள்.


மார்க்சீயம் என்பது அரசு என்றும் போதே அடக்குமுறையத்திரம் என்றுதான் போதிக்கின்றது. ஆக அரச யத்திரத்தில் அங்கம் வகிக்கும் எவரும் உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ள தகுதியற்றவர்கள் இது JVP போன்ற கட்சிக்கும் பொருந்தும்.


இங்கு அணுகுமுறை சம்பத்தப் பட்ட பிரச்சனை என்பது வேறு தத்துவார்த்த நிலைப்பாடு என்பது வேறு. இதில் மாற்றுக் கருத்துக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதில் எவ்வித கருத்து பேதமும் இல்லை. கருத்தை கருத்தால் வென்றெடுக்க அல்லது அதனை எதிர்க் கொள்ள தாங்கள் கூறுகின்ற எந்த தளமும் இடம் கொடுக்கவில்லை.

மார்க்சீய நிலையில் அரச யத்திரத்தை ஆதரிப்பவர்கள்; மாற்று ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்களுக்கு விரோதமான கருத்துக் கொண்டவர்களை தமது இணையத்தில் போடாதிருப்பதற்கு நியாயம் கூற முடியும். ஆனால் கருத்தை கருத்தால் சந்ததிக்க வேண்டும் எனக் கருதும் நீங்கள் உங்கள் இணைத்தில் சிறிரங்கனின் அல்லது தமிழ் அரங்கத்தின் இணைப்பபை உங்களிடம் தளங்களில் இணைப்புக்களை இட உங்கள் சிந்தனை இடம் கொடுக்க வில்லை. ஆக நீங்கள் எதிர்ப்பது http://www.srisagajan.blogspot.com/, http://www.tamilcircle.net/ அல்லது அவர்களின் தத்துவார்த்த நிலைப்பாட்டையா? ஆக தத்துவ நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்வீர்கள் என்றால் உங்களிடம் உள்ளது பகை முரண்பாடு அல்ல மாறாக நேர முரண்பாடுதான் இருக்கும். ஆனால் தேனி, ரிபிசி போன்றவை முன்வைப்பவை தம்மை மீண்டுமொருமுறை இன்னுமொரு எசமானர்களுக்கு அடிமையாக இருப்பதற்கு சேவகம் செய்பனவாக இருக்கின்றது.

P/S:பொருத்தமில்லாத பகுதிதான் ஆனாலும் இந்த விமர்சனம் மற்றவர்களும் பார்க்கப்பட வேண்டும். இதனால் இதில் பதிவிடுகின்றேன். இதனை தேனிக்கும் அனுப்பி வைத்துள்ளேன் இதனை அவர்கள் பதிவிடமாட்டார்கள் எனினும் இருநாட்கள் சென்ற பின்னர் இதனை பதிவில் இடுங்கள்.

1 comment:

Anonymous said...

வர்க்கமும் மொழி வழக்கும்

தற்பொதுள்ள இணைய தளங்கள் எந்தப் பகுதியினரை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்பது ஒரு தீர்க்கமான சக்தியாக இருக்கின்றது. போராட்டம் அல்லது உரிமை தேவை என்கின்ற மக்கள் கூட்டத்தை எடுத்துக் கொள்ளும் இடத்தில் கல்வித்தகமை> வேலைவாய்ப்பு அற்ற நிலையில் உள்ளவர்களும் அல்லது அந்தச் சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்கள் மற்றவர்களைப் போல தாமும் தமது அடையாளத்தின் மூலம் முன்னே வரவேண்டும் என துடிக்கும் வளர்ந்து வரும் பிரிவினரும் இருக்கின்றனர்.

இந்தப் பகுதியில் ஒரு பகுதியில் பெரும் பகுதியினர் உணர்ச்சி மயப்படுத்தப்பட்ட> மூளைச் சலவை செய்யப்பட்டவையாக ஒடுக்குமுறையை மேற்கொள்பவர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர்.
அடுத்த பகுதியினர் ஜனநாயகம்> தலித்தியம்> பெண்ணியம்> தேசியம் என்ற நிலைகளில் செல்கின்றனர். இவர்கள் கோருவது ஒரு சமூகத்தில் உள்ள மக்களை விட தமக்கும் சலுகை தேவை என்பதை மட்டுமே குறிக்கோளாக இயங்குகின்றனர்.
இங்கு தெருவில் படுத்துறங்கும் தினக்கூலியின் தேவையே அல்லது வேலைக்காக அலைபவர்களின் தேவைக்கும்> அல்லது தனது குடும்பத்தை காப்பாற்ற இந்தச் சமூகத்தால் உருவாக்கப்பட்ட சிறுவர் உழைப்பாளிகளின் தேவைக்கோ நாம் உரைப்பது புரிய வேண்டியது இல்லை.
ஆக இன்றைய இணையதளம் என்பது வளர்ந்த ஒரு சமூகத்தின் ஒரு பிரிவினருக்கானதே. இதில்
கல்விசார் எழுத்து முறை அணுகுமுறை
தமக்கு தெரிந்த அல்லது அந்நியோன்னியமான எழுத்துமுறை அல்லது அதுவே தமக்கு நாகரீகமான எழுத்துமுறை என்ற நிலையில் எழுதுகின்றனர்.
இவற்றிக்கிடையே வசனங்களை> பத்தியமைப்பு எதுவும் தெரியாது தமது முயற்சியால் எழுத்து துறையில் இருப்பவர்களையும் இங்கு இவர்களை கொச்சைப்படுத்த முடியாது.
இந்தப் பகுதியினருக்கு மத்தியில் உழைக்கும் மக்களுக்கான நாளாந்த சொல்லாடல் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்தச் சொல்லாடல் உழைப்பாளிகளுடன் இணைந்து செல்லாத எம்மின் சொல்லாடலுக்கும் நிறையவே மாறுபாடு இருக்கின்றது. இந்த மாறுபாடு என்பது அந்த சொல்லாடல் கொண்டவர்கள் நாகரீக மக்கள் என்ற பொருள் கொள்ள முடியாது.
(உழைக்கும் மக்களின் மொழியாடல் பெண்உறுப்புக்களை குறிக்கும் சொற்கள்> பேமானி> கஸ்மாலம்…)

கொலனித்துவ காலத்தில் சமயத்தை (எம்வாழ்க்கை முறை தவறானது உண்மையான கடவுள் கர்த்தாவே என) பரப்ப வந்தவர்கள்> அல்லது இன்றைய காலத்தில் ஜனநாயகத்தை மீளவும் உருவாக்க முயல்கின்றோம் என்று கூறிக் கொண்டு எம்மை நவீன அடிமைகளாக்குபவர்கள் கொண்டுள்ள சிந்தனைப் போக்கிற்கும் வேறுபாடு என்பது இங்கு இல்லை. (கீழத்தேயவாதம் என்கின்ற கீழ்மைப்படுத்தும் சிந்தனைப் போக்கினை இங்கு விளக்கம் கொடுக்க வருகின்றேன். இதில் மாமேதை மார்க்சை அந்த சாக்கடையில் இணைக்கும் குரூர சிந்தனை கொண்ட ஆய்வாளர்கள் இருக்கின்றனர்).

தமிழ் அரங்கத்தை எழுதுபவர் அல்லது ப.வி என எழுதிக் கொள்பவன் அறிவு படைத்தாலும் குட்டி முதலாளித்துவ வலது பிரிவாக ஊசலாடாமல் குட்டி முதலாளித்துவத்தின் இடது பிரிவாக இருந்து பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்குகின்றனர். (இதன் பொருள் அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட அம்மான்களோ> அல்லது அரசியல் ஆய்வாளர்களோ அல்ல. ஆனால் புலியெதிப்பாளர்களின் புலித் தன்மையை தேனீயில் இணைப்பு இடப்பட்டிருக்கும் ஒரு இணைய தளம் பா.வீ அல்லது சிறிரங்கனுக்கு மருத்துவ உதவி கேட்டு அதாவது ஒரு மனிதனை மலினப்படுத்தி எழுதியிருந்ததை வாசிக்க முடிந்தது. http://namthesam.blogspot.com/2006/11/blog-post_23.html
இப்படியும் நடக்கின்றது இவைகள் எதேர்ச்சாதிகாரமாக நடப்பதில்லை. இவைகள் ஒரு வர்க்கத்தின் குணாம்சம் தான்.)

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” இப்படியான நிலையில் மேலைத்தேய பரிணாமங்களை அளவுகோளாகக் கொண்டு இயங்குபவர்கள் பா.வீ மீது கொள்ளப்பட்ட எழுத்து (abuse)வன்முறைதானே. இதுபற்றி ஏன் மறுப்புக் கூறவில்லை.
இவ்வாறு தரவுகள் எடுத்து விமர்சிப்பது என்பது கூட அவசியம் அற்றது. அளவு கோள் ஒன்று உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு வர்க்கத்திற்குப் பின்னாலும் ஒவ்வொரு வர்க்க நலன் இருக்கின்றது இந்த வர்க்கங்கிடையயே ஐக்கியம் என்பது கூட வெறும் சந்தர்ப்பவாத நிலைதான் ஈழப்போராட்ட வரலாற்றில் பெற்ற பாடமாக இருக்கின்றது. ஐக்கியப்படுத்தவே அல்லது வர்க்க நலனை முதன்மைப்படுத்தும் நிலைப்பாட்டையோ தற்பொழுது இருக்கும் புலியெதிர்ப்பு அணியில் மையத்தில் இருந்து உருவாக்கப்படுமாயின் ENLF என்ற கூட்டமைப்பில் எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் இன்நாட்டு மன்னர்கள் என்று கூட்டு அமைத்து அரசியல் விபச்சாரிகளாக மாறியதைத் தான் வரலாறு விட்டுச் சென்றுள்ளது. தத்தம் வர்க்கத் தேவை பூர்த்தியாகிய பின்னர் தூக்கியெறிந்து விட்டு செல்வர்.

ஆக தமிழ் அரங்கம் அல்லது பா.வி போன்றவர்கள் பெரும்பான்மையான மக்களின் ஒருவராக இருந்து எழுதுகின்றனர். இந்த வரலாற்றுக் கடமையை சிறப்பாக செய்து செய்து கொண்டிருக்கும் இவ்விருவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். நிச்சயம் இவர்களின் கருத்தை மக்கள் பற்றிக் கொண்டால் பெரும் சக்தியாக உருவெடுக்கும்.
உழைக்கும் வர்க்கத்தின் எதிரிகள் விரும்பானாலும் சரி விரும்பாவி;ட்டாலும் சரி இவர்களே பாட்டாளி வர்க்கத்தினை வழிநடத்திச் செல்லும் இடது சாரி குட்டி முதலாளித்துவ பிரிவினர்கள். (லெனின் கூட இடதுசாரி புத்திஜீவிதான்) இவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலர்கள் தான். இவர்களைப் பார்த்து குரைப்பவர்கள் சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பதற்கு சமானம்தான்.
இவர்கள் பிழையான தளத்தில் இருந்து தமது கருத்தை முன்வைக்கின்றனர் என்னவோ உண்மைதான் இதனால் தான் இவர்களால் “பார்வையற்ற குழந்தையிடம் துப்பாக்கியா?
“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என உவமானங்களை அள்ளி வீசிக் கொண்டு விமர்சிக்கின்றனர். பாட்டாளி வர்க்க மொழிநடை இருக்கின்றது. இது நித்தம் வேர்வை சிந்தி> அரைவயிறு காய்ந்து எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கின்ற கோடான கோடி மக்களின் நலன். எம்மைப்போல கணணி வசதி படைத்த மக்கள் கூட்டமல்ல அவர்கள். ஏன் இந்தியாவில் ஏன் உலகில் பாட்டாளிவர்க்க சக்திகள் கணணியை முக்கிய பிரச்சார ஊடகமாக கருதவில்லை என்று கூட தோன்றுகின்றது. இவை முற்றிலும் சரிதானே. வாசிக்கும் வாசகர்கள் தளம் எங்கு இருக்கின்றது. அதனையே போராட்டத்தலைமை முதன்மைப்படுத்தும்.

ஆனால் மக்கள் நலன் என்று சிறுபான்மையினர் தேசியம்> தலித்தியம்> பேச்சுரிமை> தனித்துவவாதம் என்று பல கோசங்கள் போட்டுக் கொண்டு எதிரிகளின் தயவுடன் பதிவிக்கு வரத்துடிக்கும் உழைக்கும் மக்களின் எதிரிகளின் ஆதிக்கத்தை தகர்ப்பதற்கு நிச்சயம் உங்கள் வர்க்கத்திற்கு தேவையான மொழியில் எழுதுவது கூட தவிர்க்க முடியாதுதான். இவை கல்விசார் நிலைய எழுத்து வகையா அல்லது ஏகாதிபத்திய சார்பு எழுத்து வகையாக என்று இன்றும் விளக்கமாக எழுதினால் நன்றாக இருக்கும்.

பரிசுப் பொருட்கள்
இதில் இன்னுமொரு செய்தியை பெரும் பெருமிதமாக எழுதியது ஏகாதிபத்திய நிறுவனங்கள் கொடுக்கும் வெகுமதிகள் பற்றியதாகும்.
மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களான சிறீதரர்>கூல் ஆகியோருக்கு கிடைக்கப்பெற்ற பரிசு> (இதே போல கிளிநொச்சியின் பண்ணையார் சங்கரிக்கு கிடைத்த பரிசு) பற்றி குது}கலிக்கின்றனர். இவர்களுக்கு கொடுத்தது போல் ஆயிரம் பரிசு கொடுக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் லட்சத்தின் ஒன்றுதான் உண்மையாக மக்களின் நலன்மேல் அக்கறை கொண்டு கொடுக்கும் நிறுவனத்தைக் காண முடியும். அப்படி ஒன்று இருக்குமாயின் ஒரு இடதுசாரி அமைப்பு அந்த பிரதிநிதியை அழைத்து பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டி அறிமுகம் செய்யுமாயின் அதுவேதான் உலகில் சிறந்த பரிசாக இருக்க முடியும். (இது எனது அனுபவம்) நோபல்பரிசாக (ஆயுத விற்பனையில் இருந்து பெறும் வருவாய்) இருக்கட்டும் அல்லது எந்தப் பரியாக இருக்கட்டும் (We are promoting democracy) ஜனநாயகத்தை உயர்த்துகின்றோம் என்ற ஆண்டைகளின் (அடிமைப்படுத்துபவன்). சிந்தனையை அப்படியே பற்றிக் கொண்டு மார்க்சீயவாதிகளை ஏளனம் செய்கின்றனர்.
இதில் சிரிப்புக்கிடமானது என்னவெனில் பொறாமைப்படுவதாக போராட்டத்தில் இரத்தம் சிந்தியவர்கள் எல்லாம் பரிசுக்காக இறக்கவில்லை. மதஅடிப்படைவாதிகள் கூறுவது போல் மேல்லோகத்தில் நல்லவாழ்க்கை கிடைக்கும் என போராடவில்லை. இதே போலதான் பொதுவுடமைவாதிகளும் Jon Paul Satre அவர்கள் நோபல்பரிசை வாங்க மறுத்தார் என்பது தெரியதவர்கள் இருக்க முடியும்.
ஏகாபத்தியம் கொடுக்கும் பண முடிச்சுக்களுக்காக போராடுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இது ஒரு புறமிருக்க பணமுடிச்சுக்களை வழங்குவதற்கு என்றே சுரண்டும் வர்க்கச் சிந்தனை கொண்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புக்கள் இருக்கின்றது என்பதை ஒரு உழைக்கும் வர்க்கத்தின் சிந்தனையை முதன்மைப்படுத்துபவன் அறிந்து கொள்ளாமல் இருக்க முடியாது.



ஆனால் இன்றைய நிலையில் உழைக்கும் வர்க்கத்தவர்களின் பெரும் பகுதியினர் உணர்ச்சி மயப்படுத்தப்பட்ட மூளைச் சலவை செய்யப்பட்டவையாக ஒடுக்குமுறையை மேற்கொள்பவர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர். இவர்களே உழைக்கும் வர்க்கமாகவும் தேசத்தின் நிர்மானிப்பதிலும் தியாகம் செய்வதிலும் முதன்மை இடத்தை பெறுகின்றனர். இந்த வர்க்கத்தின் வாரிசுகள் ஒடுக்குமுறையாளர்கள் அல்லது தலைமை ஏற்றிருக்கும் அடக்குமுறையாளர்களாலும் அழிக்கப்படுவதை நாம் எதிர்க்கின்றோம்.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...