வாசகர்களே,வணக்கம்!
இச் சிறுகதையை ஒரு கவிஞர் வீட்டில் வைத்து ஒரு மணித்தியாலத்துக்குள் கிறுக்கினேன்.அந்த வருஷம் 1990.இன்று சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்பு மீளவும் இதை வாசித்துப் பார்க்கிறேன்.இக் கதையில் நமது புலம் பெயர்வு வாழ்வின் நெருக்குதலும்,நமது சமூக சீவியத்தின் சிதைவும் சில வார்த்தைகளின் பின்னே பேசப்படுகிறது.போர் சூழலுக்குள் கிடந்து, உழன்ற போராட்ட வாழ்வின் குற்றவுணர்ச்சியானது கொலைகளையும்,புதை குழிகளையும் வெறுத்தொதுக்கியபோதும்,வந்தமர்ந்த தேசத்தில் வாழ்வுக்காகவும்,வதங்கும் உறவுகளுக்காகவும் நாம் கிழமைகளில் ஒரிரு நாட்கள் களவாக(வேலை அனமதிப்பத்திரமற்ற காலத்தில்)வேலைக்குப் போவோம்.அப்படிப் போகும் காலத்தில் வேலையென்பது சவக்காலைகளிலோ அல்லது உணவு விடுதிகளிலோ வேலை செய்வேன்.இப்படி வேலைக்குப் போனகாலத்தில் சவக் குழிகளுக்கும் எனக்கும் பாரிய தொடர்பொன்று இருந்தது.அது ஈழத்தோடு முடியவில்லை.இங்கேயும் தொடர்கதையானது.
அன்றைய சூழலில் நான் மாதத்தில் நூற்றியிருபது மார்க்கு வரையும் சம்பாதிப்பேன்.இப்பணத்தில்தாம் இங்கு நடை பெறும் இலக்கியச் சந்திப்புகளுக்குப் பிரயாணிப்பதற்கு பயணச் சீட்டு வேண்டுவேன்.எப்போதோவொரு பொழுதில் அம்மாவுக்குப் பிச்சையும் போடுவேன்.அப்படி வாழ்ந்த காலத்தில்தாம் புலம் பெயர் நாடுகளில் இயக்கங்கள் மிக வேகமாகப் பணம் சேர்த்தார்கள்.நாம் வாழ்ந்து விடுதிகளில் பணம் சேர்க்கும் ஒரு இயகத் தோழருக்கும் எனக்குமான தொடர்பாடலோடு உருவான இக்ககதை ஒரு வகையில் எமது சமூகத்தின் மீதான போர்ச் சூழலின் மிகக் கெடுதியான பக்கங்களின் விளைவாலெழுந்த மனப் பிறழ்வாக நம்மைக் கொன்ற பக்கங்களை எழுத்தில் எழுதிப் பார்த்ததன் விளைவே.இக்கதையை இப்போது எழுதிப் பார்த்தால் நிச்சியம் வேறொரு வடிவத்தில் எழுத முடிந்திருக்குமென்று நினைக்கிறேன்.
நானும் மண்டையோடுகளும்.
(புனைவு)
நான் கண் விழித்தேன்.
காலைப்பொழுதா அன்றி மாலைப்பொழுதா?, நேரம் என்னதாயிருக்கும்? இப்படிச் சில கேள்விகளோடு வேறு சில கேள்விகளும்...
என்னயிது வாழ்க்கை சும்மா ஜந்திரத்தனமாய்ப் போய்விட்டதே!
காலை எழுந்ததும் வாழ்வைப்பற்றித்தாம் ஏக்கம்.வாழ்க்கை அவ்வளவு தூரம் கனவாகிப் போய்விட்டது.
நான் எழும்பிய நேரமோ காலைப் பொழுதல்ல நடுப் பகற்பொழுது.
ஏன் நித்திரையை விட்டெழுந்தேன்?
இப்படியொரு கேள்வி தினமும் என்னைத் துளைத்தபடி.
மனிதருக்கு,வாழ்க்கைக்கு உந்து சக்தி செயற்பாடுதானாமே?இருக்காதா பின்னே!
ஒரு மனிதரை,அவர் சிந்தனை,செயற்பாடுகளை,மனத் துணிவை முடக்க வேண்டுமானால்,அவரை எந்த வேலை வெட்டிக்கும் போகாதபடி பார்த்துக்கொள்வது முக்கியம்.
மீண்டும் கட்டிலில் விழுந்து கண்களை இறுக மூடிக்கொண்டேன்.காலைப்பொழுது இல்லாவிட்டாலும் எனக்கு அதுதாம் காலைப்பொழுது.ஆதலால் காலைக்கடன் பாக்கியிருக்கிறதே!
செலுத்த விருப்பமில்லை.ஏனிந்தக் கஞ்சல்தனம்?
செலுத்தினால்...
மீண்டும் குசினி,அரிசி,வெங்காயம்,என்னொத்தவர்களின் கூத்து,பேச்சு...
எல்லாமே எனக்கிப்போது மெளனத்தின் தலையில் கோடாரியால் கொத்துவது போன்றவொரு பிரமை.
கட்டிலில் புரண்டவாறு கண்களை இறுக மூடுகிறேன்.
இருட்டு.
திக்குத் தெரியாத இருட்டு.
எனக்குள்ளா இல்லை வெளியிலா?கேள்வியோடு நேற்றைய நிகழ்வு இருட்டுத் திரையில் காட்சியுருப் பெறுகிறது.
"என்ன வால்டர் இந்தக் குழியில் மண்டையோடு,எலும்புகள் அழியாமல் இன்னும் கிடக்கிறதே?"
"இது பத்தாண்டுகளுக்குமுன் தாட்ட பிரேதக்குழி.நீ இதைப்பார்த்துப் பயப்படதே"
எனக்கு வால்டரின் தைரியமூட்டல் விரக்திப் புன்னகையை வரவழைத்தது.
இருக்காதா பின்னே? நானொரு இலங்கையனாச்சே!மண்டையோடுகள்,எலும்புகள்...
"ரங்கான், மண்டையோட்டைப் பார்த்துக்கொண்டிருந்தது போதும்,அதை குழிக்குள் தள்ளி மூடிவிடு.யாரும் கண்டால் கூடாது."
கூடாதாம்!
புதை குழிகளுக்குள் தங்கள் உறவினர்கள் உருச் சிதைவில்லாமல் வாழுவதாகவெண்ணிப் பூங்கண்டுகள் நாட்டியும்,தண்ணீர் ஊற்றியும் பாசத்தைப் பொழிந்து,தினமும் வந்து, மரித்த உறவினருடன் பேசிக்கொள்ளும் மனிதர்கள் மண்டையோட்டைப் பார்த்தால் கூடாதாம்.
அதுவுஞ் சரிதாம்.
பிறகு...எனக்கு வேலையும் இல்லை,பூ உற்பத்தியிலும் வீழ்ச்சி,வியாபாரப் பிழைப்பிலும் மண்.
நான்,பிரேதக் குழியில் பிரேதம் ஒன்று தாட்டு,மண் குவியலாக இருக்கும் மிகையான மண்ணை அள்ளி எடுத்துவிட்டு எரு மண் போட வேண்டும்.இவ் வேலையைச் செய்வதற்குமுன் மீண்டும் வால்டரிடம்"என்ன வால்டர் இன்றைக்குத் தாக்கின்ற பிரேதத்திற்கு பூஜை,அஞ்சலி ஒன்றுமில்லை,அத்தோடு சுவாமிமாரைக்கூடக் காணவில்லை,கவனித்தாயா?"என்றேன்.
"செத்தவன் வேலைவெட்டி எதுவுமற்றுச் சமூக உதவிப் பணத்தில் வாழ்ந்துகொண்டிருந்தவன்.உறவுக்காரர்கள் யாருமில்லையாம்.அதனால் சுவாமிமார்கள் வந்து பூஜை செய்து,சவ அடக்கஞ் செய்யச் சமூக உதிவித் திணைக்கழகம் பணம் கொடுக்காது."
வால்டர் தங்கள் அரசாங்கத்தின் செயல்களையும்,மதச் செயல் முறைகளையும் கூறிவிட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.நான் அவரை ஏறிட்டுப்பார்த்தேன்.
"ரங்கான்,பணமில்லாதவருக்குக் கடவுளிடம்கூட இடமில்லை.கடவுள் பணக்காரர்களுக்கு மட்டும்தாம்.அந்த மனிதனின் சவ அடக்கத்தைப்பற்றி இப்படித்தானே எண்ணுகிறாய்?"
நான் வால்டரின் கேள்வியை அனாதையாக்கி, மெளனமாக மண்ணை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு,சவ அடக்கம் நடப்பதைப் பார்த்தேன்.
அங்கு யாருமில்லை.சவக் குழியை வெட்டிய இரு தொழிலாளிகள் மட்டும் அந்தக் குழியில் சவத்தை இறக்கி,மண்போட்டு மூடிக்கொண்ருந்தார்கள்.
காட்சிகள் மறைந்து விட்டன.
நான் படுக்கையில் கிடந்து உழன்றுகொண்டு,திரும்பி வலது பக்கவாட்டுக்குப் படுக்க ஆயத்தமாகியபோது,என் காதில் மெலிதாக"கலாச்சார மேம்பாட்டுக்கு,கலாச்சாரத்திலிருந்து அந்நியப்படாமலிருப்பதற்கு நீங்கள் பங்களிப்பது நாட்டுக்குத்தான்"போன்ற வார்த்தைகள் ஒலித்தன.
கண்களை அகல விரித்து அறை முழுவதையும் பார்வையால் வட்டமிட்டேன்.
"என்னமாதிரி?உங்கட பங்களிப்பு எவ்வளவு?,ஐம்பதா நூறா?"கேட்டுக்கொண்டே எனது கட்டிலில் அமர்ந்து கொண்டார் ஜெகன்.இயக்கத்துக்குக் காசு சேர்ப்பவர்.
நான் எதுவும் பேசவில்லை.
"நீங்கள் நிரந்தர வேலையில்லாமல் இருக்கிறபடியால் இருபது மார்க் காசு போடுங்கள்."பேரம் பேசினார் ஜெகன்.
"எங்கள் கலை,கலாச்சாரத்தை சிதையாமல் காக்க நாங்கள் புரட்சிகரக் கலாச்சார நிகழ்ச்சிகள் செய்து,காசு சேர்த்து நாட்டுக்கு-நாட்டு விடுதலைக்காக அனுப்பிவைக்கிறோம்."வேறொரு நகரத்திலிருந்து வந்திருந்த இயக்கப் பொறுப்பாளர் சொல்லிக்கொண்டார்.
எனது கண் முன்னால் எமது கலாச்சாரம் நர்த்தனம் ஆடியது.
"கிணற்றில் தண்ணி அள்ளாதே!,நீ அள்ளினால் பாம்பு விழுந்து சாகும்.நாங்கள் வாளியாலை அள்ளி ஊற்றுகிறோம் நீ கைளால் ஏந்திக் குடி."
"கோயிலுக்க வர முடியாது.உங்களுக்கெண்டொரு திருவிழா ஒதுக்குவம்,வெளியில் வைத்துப் படையுங்கோ."
எனது காதுகளில் பணம் பறிக்க வந்த இயக்கத்தவர்களின் பேச்சைவிட மேற்காட்டிய வசனங்களே பலமாக ஒலித்தன.
"எங்கள் கலாச்சாரம் தனித் தன்மையுடையது."மீண்டும் ஜெகன்.
"ஆமாம் உங்கள் கலாச்சாரம் தனித் தன்மையுடையது."இது நான்.
"நீங்கள் செய்யிற உதவியள் எந்த மூலைக்குக் காணும்?போராளிகளின் ஒரு வேளை வயிற்றுக்கே காணாது."மீண்டும் இயக்கப் பொறுப்பாளர்.
என் நினைவலைகளை மண்டையோடுகள்,விலா எலும்புகள்,இடுப்பெலும்புகள் ஆக்கிரமித்துக்கொண்டு,என்னைப் பார்த்து"நீங்கள்தானே எங்களை அழிப்பதற்கு இயக்கங்களுக்குப் பணம் கொடுத்து உதவி செய்தீர்கள்?"என்றெள்ளி நகையாடுவதுபோல்...பயங்கர ஒலியெழுப்பி என்னைத் தாக்க நெருங்குவதுபோன்று ஒரு காட்சி புலனாகியது.
எனக்கு என்ன நடந்தது?
மண்டையோடுகளும், எலும்புகளும் என்னையெதற்காகப் பழிவாங்க வேண்டும்?,ஒரு வேளை எனக்கு மனநோயாக இருக்குமோ?
நான்,என் கண்களை இறுக மூடிக்கொண்டேன்.
"என்ன பின்னேரம் நாலு மணிமட்டும் தூங்குகிறீர்?எழும்பும்."ஜெகன் என்னை விடுவதாக இல்லை.
"நீங்கள் இசை விழாவுக்கு வாராட்டியும் பறுவாயில்லை.ஒரு இருபது மார்க் ரிக்கற் எடுக்கவேணும்.தமிழ்க் கலாச்சாரத்தைக் காக்க-வளர்க்க உதவி செய்யவேணும்." வந்தவர்களில் ரிக்கற்றை கையில் வைத்திருந்தவர் கட்டாயப்படுத்தினார்.
"எனக்கும்,எனது குடும்பத்துக்கும் இயக்கம் பிரச்சனை கொடுக்காமல் இருப்பதற்காகவாவதும் நான் பணம் கொடுத்தாக வேண்டும்"என்று நினைக்கும்போதே மண்டையோடுகள்,விலா எலும்புகள் என்னைத் தாக்க ஓடிவருவதுபோன்றிருந்தது.
ப.வி.ஸ்ரீரங்கன்
1990 செப்ரெம்பர்.
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
3 comments:
ஸ்ரீரங்கரே இது யாருடைய மண்டையோடு என்று தெரிந்தா எடுத்துப் போட்டிருக்கின்றீர்கள்? அல்லது எதேச்சையா?
பெயரிலி,வணக்கம்!
இது சேயின் மண்டையோடுதாம்.அவரை அமெரிக்கச் சதி கொன்றது.எனவே பொதுவாகச் சதிகளால்-துரோகத்தால் கொல்லப்பட்டவர்களின் கதைக்கு- மண்டையோடுகளைப் பற்றிய ஒரு புனைவுக்கு அவரது எலும்புக் கூடும் பொருந்தும்.
பொருத்தமில்லாத பகுதிதான் ஆனாலும் இந்த விமர்சனம் மற்றவர்களும் பார்க்கப்பட வேண்டும். இதனால் இதில் பதிவிடுகின்றேன். இதனை தேனிக்கும் அனுப்பி வைத்துள்ளேன் இதனை அவர்கள் பதிவிடமாட்டார்கள் எனினும் இருநாட்கள் சென்ற பின்னர் இதனை பதிவில் இடுங்கள்.
hவவி://றறற.வாநநெநறநடி.னந/hவஅட/140507.hவஅட
சாரணியன் எழுதிய பார்வையற்ற குழந்தையிடம் துப்பாக்கியா? என்ற விமர்சனத்திற்கு சில குறிப்பு எழுத வேண்டும் என்ற நிலையில் சில குறிப்பை எழுத முனைகின்றேன்.
ஒவ்வொரு வர்க்கத்திற்குப் பின்னாலும் ஒவ்வொரு வர்க்க நலன் இருப்பதாக ஏற்றுக் கொள்ளும் நீங்கள் வர்க் நலனை ஐக்கியப்படுத்தவே அல்லது வர்க்க நலனை முதன்மைப்படுத்தும் நிலைப்பாட்டையோ உங்களின் விமர்சனத்தில் காணமுடிகின்றதா என வினா எழுப்ப வேண்டியிருக்கின்றது/
நீங்கள் குறிப்பிடும் மூன்று பிரிவினர்களாக
1. புலிகள்
2. புலியை எதிர்ப்பவர்களின் அணி
3. தமிழ் அரங்கம் சிறிரங்கன் ஆகியோரின்
தளங்களே பிரதானமானவையாக இருக்கின்றன.
இந்தத் தளத்தில் குறிப்பாக புலிகளின் அல்லது அவர்களின் எதிர்ப்பாளர்களின் நிலைப்பாடு பற்றி இங்கு கருத்துக் கூறுவது அவசியம் அற்றது ஆனால் மார்க்சீய புத்தகத்தில் உள்ள கருத்துக்களை பொறுக்கியெடுத்து வைத்திருப்பவர்கள் எளிமையாக மக்களுக்குச் சேரக் கூடிய வகையில் சேர்க்க முடியாதவர்கள்> மக்களையோ> தனிநபர்களையோ அணிதிரட்ட முடியாதவர்கள் என கூறியுள்ளீர்கள்.
இந்த நிலையை என்பது உலகில் உள்ள பொதுவான நிலைகள் தான் ஊடகத்தில் இருப்பவர்கள் இருக்கின்ற வர்க்கச் சமூகத்தின் படைப்புக்கள் அதற்கேதான் சேவகம் செய்ய வளர்க்கப்படுகின்றனர். இந்த நிலையில் இருந்து அதவாது எழுத்து வடிவத்தில் உள்ள குறைபாட்டைத் முதன்மைப்படுத்தும் நீங்கள். (அநவாழன) அணுகுமுறை பற்றிய பிரச்சனையை முதன்மைப் படுத்தி அவர்களின் தத்துவார்த்த பிரச்சனை பற்றிய நிலைப்பாட்டிற்கு தகுந்த பதிலை கொடுக்காது அவர்களை உங்கள் எழுத்தாற்றல் மற்றும் உங்களிடம் உள்ள ஊடக பலத்தின் மூலம் நீங்களும் மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்துகின்றீர்கள்.
தத்துவார்த்த நிலையில் இருந்து உங்களால் அவர்களின் நியாயத்தை புரிந்து கொண்டு அவர்களை மக்களின் (புலிகளுக்கு எதிராக மாத்திரம் அல்ல) “ஒருங்கிணைப்பதில்> ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டிய முக்கிய காலகட்ட”மென கருதும் நீங்கள் புலிகளுக்கு எதிரி என்பதற்காக புலிகளின் படைகளில் மூளைச்சலவை செய்து பலிக்கடாக்கலாக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகளை கொல்வதற்கு துணைபோகும் குழுக்களான நுPசுடுகுஇ நுPனுPஇ வுருடுகுஇ Pடுழுவுஇ நுனேுடுகுஇ வுஆஏP போன்றவற்றின் ஒடுக்குமுறையை இனபேதமற்று மேற்கொள்ளும் ஆழும் வர்க்க அரசாங்கத்திற்கும் அரசை பாதுகாக்கும் அரச இயந்திரத்திற்கு (இராணுவம்> நாடாளுமன்றம்) போன்றவற்றில் அங்கம் வகித்துக் கொண்டு செயற்படும் செயற்பாட்டிற்கு துணை போகும் படி கேட்கின்றீர்கள்.
மார்க்சீயம் என்பது அரசு என்றும் போதே அடக்குமுறையத்திரம் என்றுதான் போதிக்கின்றது. ஆக அரச யத்திரத்தில் அங்கம் வகிக்கும் எவரும் உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ள தகுதியற்றவர்கள் இது துஏP போன்ற கட்சிக்கும் பொருந்தும்.
இங்கு அணுகுமுறை சம்பத்தப் பட்ட பிரச்சனை என்பது வேறு தத்துவார்த்த நிலைப்பாடு என்பது வேறு. இதில் மாற்றுக் கருத்துக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதில் எவ்வித கருத்து பேதமும் இல்லை. கருத்தை கருத்தால் வென்றெடுக்க அல்லது அதனை எதிர்க் கொள்ள தாங்கள் கூறுகின்ற எந்த தளமும் இடம் கொடுக்கவில்லை. மார்க்சீய நிலையில் அரச யத்திரத்தை ஆதரிப்பவர்கள்> மாற்று ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்களுக்கு விரோதமான கருத்துக் கொண்டவர்களை தமது இணையத்தில் போடாதிருப்பதற்கு நியாயம் கூற முடியும். ஆனால் கருத்தை கருத்தால் சந்ததிக்க வேண்டும் எனக் கருதும் நீங்கள் உங்கள் இணைத்தில் சிறிரங்கனின் அல்லது தமிழ் அரங்கத்தின் இணைப்பபை உங்களிடம் தளங்களில் இணைப்புக்களை இட உங்கள் சிந்தனை இடம் கொடுக்க வில்லை. ஆக நீங்கள் எதிர்ப்பது hவவி://றறற.ளசளையபயதயn.டிடழபளிழவ.உழஅ/இ றறற.வயஅடைஉசைஉடந.நெவ அல்லது அவர்களின் தத்துவார்த்த நிலைப்பாட்டையா? ஆக தத்துவ நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்வீர்கள் என்றால் உங்களிடம் உள்ளது பகை முரண்பாடு அல்ல மாறாக நேர முரண்பாடுதான் இருக்கும். ஆனால் தேனி> ரிபிசி போன்றவை முன்வைப்பவை தம்மை மீண்டுமொருமுறை இன்னுமொரு எசமானர்களுக்கு அடிமையாக இருப்பதற்கு சேவகம் செய்பனவாக இருக்கின்றது.
Post a Comment