Saturday, January 27, 2007

சரி,அப்ப ஐ.பீ.சீ வானொலி கேட்போம்

தமிழ்.


"தமிழினி மெல்லச் சாகும்"என்றொரு கட்டுரையைத் தொண்ணூறின் ஆரம்பத்தில் அறிஞர் கோப்பாய் சிவம் எழுதினார்.அப்போது இலங்கைச் சூழலில் இது சாத்தியமில்லை என்றே நான் எண்ணியிருந்தேன்.நாமெங்கே ஆங்கிலக் கலப்போடு தமிழ் பேசுகிறோம்!முன்னம் கலந்த வடமொழியோடு தமிழைத் தமிழாகப் பேசுபவர்கள் நாம்.நமக்கு அந்தப் பிரச்சனை எழ முடியாதென்றும்,திரு.கோப்பாய் சிவம் அவர்கள் வரும் முன் காப்புக்காக அப்படிப் பாரதியின் வாக்கியத்தைச் சுட்டுவதாகவே கருதினேன்.இது தவறென்றாகுமா?எனக்குள் குடையும் ஒரு பெரிய கேள்வி இது.


இயலாமையைச் சொல்லுதல்...


நேற்றுத் தமிழ் வானொலி கேட்போமே-நல்ல பாடல்களைக் கேட்டு இரசிப்போமேயென்று வானொலி கேட்பதற்காக உட்கார்ந்தேன்.

சென்னையிலிருந்து ஒலிபரப்பாகும் சூரியன் பண்பலை(அவர்கள் மொழியில்:சூரியன் எப்.எம்.) வானொலியைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.இதை ஒரு பத்து நிமிடம்கூடக் கேட்க முடியாதவொரு அவஸ்த்தைக்குள் நான்.என்ன நம் தமிழ்நாடு!

அந்த வானொலியில் பாடல்களைத் தொகுத்து வழங்கும் பெண்ணின் தாய் அல்லது தந்தையார் ஆங்கிலேயரோ என்னவோ,அப் பெண்மணிக்குத் தமிழ் வரவில்லை.ஆங்கிலத்தில் தொகுத்துத் தமிழ்ப் பாடல்களை வழங்குகிறார்.அற்பமான பெண்ணா இவள்!தமிழை வெறும் இணைப்புச் சொல்லாகவே பயன்படுத்தினாள்-பாவி!கேட்கவே முடியவில்லை.

உடனே ரீ.பீ.சீ வானொலிக்கு மாற்றியபடி அப் பெண்ணைச் சபித்தேன்."அவங்கள் ஆங்கிலத்தால் கொல்லுறான்கள்,இவங்கள் ஒப்பாரியால் கொல்லுறாங்கள்"என்றார் என் மனைவி.

சரி,அப்ப ஐ.பீ.சீ வானொலி கேட்போம் என்று அலையை மாற்றினேன்."உம் இவங்கள் தலைவர் வாழ்த்துப் பாடுவான்கள்" என்றார் மனைவி.ஆக அவருக்குச் சூரியன் பண்பலையில் ஒலிபரப்பப்படும் பாடல்களைக் கேட்பதில் ஆர்வம்.


எனினும்,ஐ.பீ.சீ.வானொலியின் தமிழ் இனிக்குதே!-ஆங்கிலக் கலப்பு மருந்துக்குமின்றி அவர்கள் செய்யும் ஒலிபரப்பு நமது இலங்கைத் தமிழ் வானொலியை ஞாபகப்படுத்துகிறது.

என்னவொரு கம்பீரமான வானொலி அது.எத்தனை மேதைகளை உருவாக்கிய இலங்கை வானொலி.எண்ணிப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.அந்த மேதைகளிடம் உருவானவரான அத்துல் கமீத்தின் தேன் தமிழ் உச்சரிப்பையும்,ஆங்கிலக் கலப்புமற்ற தமிழைத் தமிழ்நாட்டு வானொலி அறிப்விப்பாளர்கள் கேட்டிருப்பார்கள்.என்றபோதும்...அடிமைச் சேவகத்திலொரு மேன்மை அவர்களுக்கு.



ஐ.பீ.சீ.வானொலி தமிழைப் பயன்படுத்தும் முறையும்,அதை உச்சரிக்கும் நளினமும் மனதில் பால் வார்க்குதே.எப்படியும் மனைவியின் விருப்பத்துக்குக் குறுக்க நிற்காது வானொலி கேட்பதை விட்டுத் தொலைத்தேன்.


இன்று,இராகமாலிகாப் பாடல் நிகழ்ச்சி பார்த்தேன்.அதே தொல்லை.


தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு இவ்வளவு தாழ்வு மனமா!


ஆங்கிலத்தைத் தவிர வாயில் எதுவும் வராதா?அதைக்கூடச் சரியான உச்சரிப்போடு பேச முடியாதவர்கள், தமிழைக் கொச்சைப்படுத்தும் நரித்தனத்தோடு ஜெயா தொலைக்காட்சியில் நிகழ்வு செய்கிறார்கள்.எதையும் பார்க்கவோ,கேட்கவோ முடிவதில்லை.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு.சிற்றம்பலத்தாரும் திரு.பற்றிமாகரனும் தமிழரின் மரபுவழித் தாயகம் குறித்து, ஐ.பீ.சீ.வானொலியில் உரையாடினார்கள்.அந்த உரையாடலில் அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகள் குறித்து எந்தக் கவனமுமின்றித் தேசிய இனச் சிக்கல்-அடக்குமுறைகள் பேசப்பட்டன.இவற்றில் உடன்பாடில்லாதிருந்தபோதும்,அந்த உரையாடலை மிகவும் விருப்பத்தோடு செவிமடுத்தேன்.

என்ன காரணமாக இருக்கும்?

நான் அமைதியாக யோசித்தபோது,எனக்கு அவ்விரு அறிஞர்களின் தமிழ் பிடித்துப் போய்விட்டது.ஒரு ஆங்கில வார்த்தைக் கலப்புமின்றிச் சரளமாகத் தமிழ் பேசும் நம் கல்வியாளர்களை எண்ணும்போது பெருமையாக இருக்கிறது!அவர்கள் அரசியல் விஞ்ஞானத்தின் மிக உயர்ந்த கலைச் சொற்களைக்கூடத் தமிழில் உள்வாங்கிக் கருத்தாடும்போது மனதுக்குள் ஒரு நம்பிக்கை மிளிர்கிறது.நாம் பேசும் மொழி ஓரளவாவது இலங்கைத் தமிழரால் பாதுகாக்கப்படுமென்று மனதில் எண்ணினேன்.எனக்குத் தமிழைக் கொல்வதும்,மனிதரைக் கொல்வதும் ஒருமாதிரியானவொரு உணர்வாக இருக்கிறது.மொழி குறித்து ஆழ்ந்த புரிதலின்றித் தமிழ் நாட்டு மனிதர்கள் வாழ்கிறார்களே என்ற உணர்வு ஒரு புறமும் கூடவே நெஞ்சை வாட்ட,இந்தத் தமிங்கில மனிதர்கள் எந்த வர்க்கத்தவர்கள்-அவர்களுக்கும் நமது மரபு சார்ந்த மதிப்பீடுகளுக்கும் என்ன சம்பந்தம் என்றும் ஒரு மெத்தனம்.


இது இப்படியிருக்கட்டும்.

இங்கே நான் வாழும் ஜேர்மன் நாட்டின் இன்றைய தினசரி என்ன சொல்கிறது?


"Sprache: Deutsch im Schlussverkauf"
Der Kampf gegen das Denglisch

(தமிழில் சொன்னால் அவர்கள் நாம் சொல்லும் தமிங்கிலீசை"டென்ங்கிலீஸ்"என்கிறார்கள்.கூடவே இப்படிச் சொல்கிறார்கள்:"டென்ங்லீசுவை எதிர்த்துப் போர்"என்று பிரகடனப் படுத்துகிறார்கள்.செயலில் இறங்குகிறார்கள்.நாம்?அமெரிக்கர்களுக்குக் குண்...தொடைக்கிறோம்.)

Fremd- und Lehnwörter sind Teil einer jeden Sprache. Doch die Dominanz des Englischen geht den meisten Deutschen zu weit. Sie verstehen es nicht.


Düsseldorf. „There’s no better way to fly" heißt der Werbespruch (Die Werber selbst würden wohl sagen: Slogan) der Lufthansa. Und die ist ja bekanntlich noch ein deutsches Unternehmen. Warum heißt es dann nicht: „Keiner fliegt Sie besser"? Zugegeben: Es klänge nicht so bonusmeilenmäßig weltoffen. Aber jeder würde es verstehen.
Die Sprachfreunde der Aktion „Lebendiges Deutsch" regt diese Anglomanie auf: „Dass 60 Prozent der Deutschen gar nicht Englisch können, muss die Lufthansa nicht beunruhigen: Unter ihren Passagieren sind es vielleicht nur 30 Prozent. Und warum soll man zu allen Passagieren nett sein!", heißt es ironisch in einem – wie heißt gleich das deutsche Wort dafür ? – Handout, das die Aktion gerade deutschen Redaktionen zugeschickt hat und das nun auch in unserem Newsroom (!) liegt.


ஜேர்மன் உலகினிலேயே மிகப் பெரும் தொழில்வள நாடு.உலகத்தில் ஏற்றுமதியில் முன்னின்று மிகப் பெரும் அந்நியச் செலவாணியைக் கையில் வைத்திருக்கும் முதலிட நாடு.இந்த நாட்டின் டொச் மொழியை சுமார் நூறு மில்லியன்கள் மக்கள் பேசுகிறார்கள்.இவ்வளவு பெருந்தொகையான ஒரே இனம் ஐரோப்பாவில் மிகக் குறைவு.இந்த நாட்டுக்கே வந்தது வினை.ஆங்கிலத்தை சமீப காலமாக-அதாவது ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன் வெகுஜன ஊடகங்களில் நுழைய விட்டதன் விளைவு, பல மோசமான நிலை உருவாகியதை இப்போதிவர்கள் உணர்கிறார்கள்.


என்ன சொல்கிறார்கள்?

டொச் மொழி தள்ளுபடி விலையில் விற்பனையாகிறதென்கிறர்கள்.


அந்நிய மொழி வார்த்தைகள் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு அங்கம்தாம்-பகுதிதாம்.எனினும் ஆங்கில மொழியின் ஆதிக்கம் டொச் மொழியை அழித்துவிடுமென்று அஞ்சுகிறார்கள்.


எனவே போராட வெளிக்கிடுகிறார்கள்.அதில் அவர்கள் வெற்றியும் பெற வழி சொல்கிறார்கள்.


தங்கள் விமானச் சேவை நிறுவனத்தைச் சாடி அதன் ஆங்கில விளம்பரச் சுலோகத்தை"„There’s no better way to fly" டொச்சில் மொழியாக்கம் செய்யச் சொல்கிறார்கள்.அதை அவர்கள் செய்தே ஆகவேண்டும்-செய்வார்கள்.


நாம் என்ன செய்கிறோம்.

தமிழ்நாட்டை நினைக்க வெறுப்பாய் வருகிறது.


எனக்குக் கவிஞர் காசி ஆனந்தனைப் பிடிக்காது.ஆனால் இந்த இடத்தில் அவர்தாம் என் முன்னே வருகிறார்.அவரது பாடலான"தமிழா நீ பேசுவது தமிழா"பாடல் செவியில்பட்டுச் செல்கிறது.


புதிய வார்த்தைகள் பலவற்றைக் கொண்டது டொச்மொழி.


இது ஆங்கிலம் அளவுக்கு வளர்ந்த மொழி.


அதைவிடவும் மிக ஆழ்ந்த அர்த்தமுடைய,மிக வளர்ச்சியடைந்த டொச்மொழியில் இப்போது சுமார் ஆறு இலட்சம் வார்த்தைகளுண்டு(ஆங்கிலம் கிட்டத்தட்ட ஏழு இலட்சம் வருமா?).

ஒரு மொழி வளர்வது பொருளாதார வளர்ச்சியுடனேயேதாம்.
எனினும், உலகினிலே பொருளாதாரப் பலமுடைய முதலாம் தரத்தில் இருக்கும் ஜேர்மனிக்கே இந்தக் கதியென்றால் நமது மொழியை நினைக்கக் கவலையாய் இருக்கு.

ஜேர்மனி எந்தப் புதிய அந்நிய வார்த்தைகளையும் உடனடியாகத் தமது மொழியில் (டொச்சில்) புதிய கலைச் சொற்களைச் செய்து, உபயோகிக்க முனைகிறது.


இதோ சில உதாரணம்:


Hier weitere Beispiele:
event – Hingeher
flatrate – Pauschale
blackout – Aussetzer
call center – Rufdienst
countdown – Startuhr
display – Sichtfeld
fast food – Schnellkost
homepage – Startseite
laptop – Klapprechner
no-go-area – Meidezone
public viewing – Schau-Arena
stalker – Nachsteller
website – Netzauftritt
workshop – Arbeitstreff
benchmark – Messlatte
e-commerce – Netzhandel
junkbonds – Schrottanleihen
online/offline – im/vom Netz
pole position – Startplatz 1



நாம் என்ன செய்யப் போகிறோம்?



நமது மொழிக்குச் சமாதிகட்டும் தமிழ்நாட்டு அனைத்து ஊடகங்களையும் கேட்காமல் விட்டுவிடலாம்.எனினும், தமிழ் நாட்டில் தமிழ் செத்தால் உலகத்தில் தமிழ் செத்துவிடுவது மிகச் சுலபம்.



என்ன செய்லாம் இந்தத் தமிழ் நாட்டை?



தமிழர்களுக்கே விரோதமானவொரு தமிழ்நாடு!



கேட்கவே ஆச்சரியமாக இல்லை?

7 comments:

கொழுவி said...

சரி அப்ப சிறிரங்கன் எழுதினதை ஒருக்கா வாசிப்பம் எண்டு வாசித்தன். நியாயமான கோபம் தான். ஆதங்கம் தான்..

ஊடகங்களில் தமிழ் ஈழத்தமிழர்களினால்த் தான் வாழ்கிறது எனலாமாயினும் அறிவியலில் கணிணித் தொழில் நுட்பத்தில்...?

Hariharan # 03985177737685368452 said...

எலக்டிரானிக்ஸ் மாதிரி அறிவியல் படிப்பு தமிழில் படித்திருக்கின்றீரா? தமிழ்மொழியால் மட்டும் பிழைக்க முடியாதுங்க.

தொலைக்காட்சி, வானொலியில் அறிவிப்பாளர்களின் பேச்சுத்தமிழின் தூய்மை ஏற்றம் பெற வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

எந்த ஒரு மொழி மீதும் வெறி, அதீதப்பற்று தேவையில்லை.

அதுவும் தமிழ்மாதிரி இந்திய மொழிகள் மாதிரி அறிவியல் படிப்பை முழுவதும் ஆங்கிலம் தவிர்த்துப் படித்துப் பிழைக்க வழிவகை இல்லாத மொழியின் தளம் குறுகுவது தவிர்க்க முடியாதது.

தமிழ்பேசுவது எனும் போது தமிழாகப் பேசுவதற்கு முயற்சித்தல் நலம் தரும்.

நடைமுறையில் எனது எழுத்துத்தமிழினை விட பேச்சுத்தமிழில் ஆங்கிலச்சொல் கலந்து இருக்கும்.

படியாதவன் said...

#தமிழ்நாட்டை நினைக்க வெறுப்பாய் வருகிறது#
தவறு. தமிழ்நாட்டில் எல்லோரும் அப்படியில்லை.
சென்னையை தளமாகக் கொண்ட ஊடகங்களும் உயர்வர்க்க மற்றும் ஆங்கிலம் பேசுவதை நாகரிகமாக கருதும் இன்றைய தலைமுறையும் தான் காரணம்.

யாருக்காக அந்த டொச் வசனங்களும் சொற்களும்?
இடத்தை நிரப்பவா?
இல்லை உங்களுக்கு டொச் தெரியும் எண்டு காட்டவா?

#அறிவியலில் கணிணித் தொழில் நுட்பத்தில்#
ஏன் ஈழத்தமிழர்கள் அந்த துறைகளில் இல்லை என்கிறீர்களா?

உங்கட சில பதிவுகளை பார்த்தன், என்ன சொல்ல வாறீங்கள் எண்டு விளங்கேல்லை.
உ+ம்: வங்காலை படுகொலை பற்றிய கவிதை

பாசிசம், பயங்கரவாதம் எண்டு கனக்க எழுதுறியள். சரியான குழப்பம், இலங்கையில என்ன நடக்குது எண்டு ஏதாவது தெரியுமோ?
சொந்தக்காரர் யாராவது ஊரில இருக்கினமே?

Anonymous said...

##எலக்டிரானிக்ஸ் மாதிரி அறிவியல் படிப்பு தமிழில் படித்திருக்கின்றீரா?##
நான் இலத்திரனியலை A/L வரை தமிழில்தான் படித்தேன்.

#அறிவியல் படிப்பை முழுவதும் ஆங்கிலம் தவிர்த்துப் படித்துப் பிழைக்க வழிவகை இல்லாத மொழி#
இதனை தமிழரின் சாபக்கேடு என்றுதான் சொல்லலாம். ஜப்பானியர்களைப் பார்த்தால் அவர்கள் ஆங்கிலத்தில் வெளியாகும் தொழிநுட்ப ரீதியிலான புத்தகங்களை முதல் வேலையாக மொழி மாற்றம் செய்துவிடுவார்கள்.

இதுதான் அவர்களின் வெற்றியின் இரகசியங்களில் ஒன்றாகும். சொந்த மொழியில் படிப்பது குறிப்பிட்ட துறையில் பூரண விளக்கத்தை தருவதோடு, பலராலும் இலகுவில் விளங்கிக் கொள்ளவும் முடிகிறது. தமிழனால் ஏன் முடியாமல் போனது? கோடிக்கணக்கில் தமிழர் வாழும் தமிழ்நாடு "இந்தியிலிருந்து" விடுதலை பெற்று "ஆங்கிலத்திடம்" அடிமை ஆகி விட்டது.

"நம்மால் ஏன் முடியவில்லை" எனப் பதிவு மட்டுமே போட முடிகிறது.

##நடைமுறையில் எனது எழுத்துத்தமிழினை விட பேச்சுத்தமிழில் ஆங்கிலச்சொல் கலந்து ##

எப்படி, ya,Actually நேத்து morning, I went to the temple. அங்க I met my close friend bala..

அப்படியா?
;-)

Sri Rangan said...

கருத்துகள் கூறிய கொழுவி மற்றும் கரிகரன்,படியாதவன் வணக்கம்-நன்றி!


//எலக்டிரானிக்ஸ் மாதிரி அறிவியல் படிப்பு தமிழில் படித்திருக்கின்றீரா? தமிழ்மொழியால் மட்டும் பிழைக்க முடியாதுங்க.//

இலத்திரனியவியலை தமிழில் நாம் ஏன் படிக்க முடிவதில்லை?இதை ஜப்பானியர்கள் ஆங்கிலத்திலயோ படித்தவர்கள்?நாம் கூறிய கருத்துத் தமிழை மட்டும் படியுங்கோ,அதன் எல்லைக்குள்ளேயே வர்த்தகஞ் செய்யுங்கோ என்றல்ல.

நீங்கள் ஆயிரம் மொழியைப்படியுங்கள்,அவற்றால் பிழைத்துக் கொள்ளுங்கள்.ஆனால் தமிழ் மக்களோடு தொடர்பாடும்போது-அவர்களின் சமூகத் தளத்தில்-அரங்குக்கு மேடையேறும்போது அவர்களது மொழியோடு வாருங்கள்.முடியவில்லையா?பேசாமால் உங்களுக்குத் தெரிந்தது-நன்றாக வருவது ஆங்கிலமானால் அந்தச் சமூக அரங்கில் ஏறவேண்டியதுதாம்.நான் கலரி டிக்கட்டுங்க.எனக்கு நமது மொழியில்தாம் எதையும் முழுமையாகப் புரிய முடியும்.சேஸ்பியரோ அல்ல பேர்னாட் ஷாவோ எனது பாட்டன்கள் அல்ல.வள்ளுவனும்,இளங்கோவும்,பாரதியும்தாம் எனது பாட்டன்கள்.ஆண்டாள் எனக்குப் பாட்டி.அம்மணி எலிசபத் எனக்கு எந்த முறையிலும் சொந்தமில்லையங்க!

ஒரு மொழியைக் கற்பவர் அந்த மொழிக்குரிய அனைத்துப் பரிணாமங்களையும்(பண்பாடு இன்னபிற) கற்கிறார்.ஆங்கிலச் சூழல்-அவர்களின் வாழ்வியல் மதிப்பீடுகள் அவர்களதே தவிர எமதல்ல.நாம் நாமாக இருப்போம்.இங்ஙனம் இருந்துகொண்டு அவர்களையும் கற்போம்,இணைந்தும் வாழ்வோம்.ஆனால் ஒரு ஆங்கிலேயன் தனது மொழியைத் தவிர்ந்து தனக்குத் தெரிந்த எந்த மொழியையும் தனது சமூகத் தொடர்பாடலில் பயன் படுதுவது இல்லையே!


தமிழால் மட்டும் பிழைக்க முடியாதென்ற கருத்து நிலை இருக்கே,இதுதாம் ஐரோப்பியனின் வெற்றி.


சீனர்கள் ஆரம்பகாலத்துக் கண்டு பிடிப்புகளுக்கு முன்னோடிகள்.இவர்கள் ஆங்கிலத்தில் எதையும் செய்ய வில்லை.


நாங்கள் "அனல் வாதம்,புனல் வாதம் "செய்துகிடக்க போத்துக்கீசியர்கள் ஒரு கீரைபாத்தி நாட்டின் குடிமக்களாக இருந்தபடி நம்மை உதைத்து அடிமை கொண்டார்.


எங்களுக்கு ஐயங்கார்,ஐயர்,செட்டியார்,தேவர்,வேளாளர் என்று பட்டங்கள் மேன்மையானபோது அவர்கள் ஏம்.ஏ.,பி.எச்.டி, என்று மேன்மை கண்டார்கள்.இது இப்படித் தொடர வேண்டுமானால் கரிகரன் சொல்வதை ஏற்கலாம்.

கணினியைக் கண்டவர்கள் ஆங்கிலேயர்களில்லை.அதைக் கண்டவர்கள் முதன் முதலில் ஜேர்மனியர்கள்.அதற்குப் பின்புதாம் அமெரிக்க இராணுவச் செயற்பாடதை உள்வாங்கியது.

அதற்கு ஆங்கிலமல்ல இடுமொழி.

அப்போது இங்ஙனமே எழுதினார்கள்:

110101 = 1* 20 => 1 * 1 1
+ 0* 21 => 0 * 2 0
+ 1* 22 => 1 * 4 4
+ 0* 23 => 0 * 8 0
+ 1* 24 => 1 * 16 16
+ 1* 25 => 1 * 32 32
= 53




52369 = 9* 100 => 9
+ 6* 101 => 60
+ 3* 102 => 300
+ 2* 103 => 2000
+ 5* 104 => 50000
= 52369


o-oo

0100

11110101 11110001 1111 0000 1111 0000 1
1100 00001 1100 00001 1100 0011 1100 0000

xxxxx xxxxxxxxx
xxxxx xxxxxxxxx
xxxxx xxxxxxxxx

கொழுவி said...

சிறிரங்கன் நான் எழுதியது தவறாக புரியப்படும் என்பதில் எனது தவறு தான் அதிகம்.

கணணிக்கான தமிழ் இவற்றிற்கான முயற்சிகளில் ஈடுபட்டவர்கள்.. வெற்றி கண்டவர்கள்.. என்ற ரீதியில் சொல்ல வந்தேன். சரியாக சொல்ல வில்லையென நினைக்கிறேன்.

Sri Rangan said...

//கணணிக்கான தமிழ் இவற்றிற்கான முயற்சிகளில் ஈடுபட்டவர்கள்.. வெற்றி கண்டவர்கள்.. என்ற ரீதியில் சொல்ல வந்தேன். //

கொழுவி இதை ஏற்றுக் கொள்கிறேன்.


திரு.காசியை மறக்க முடியுமா?


இதுபோகக் கணினி என்றவுடன் பலர் மயங்குகிறார்கள்.அது ஏதோ பெரிய விஷயமென்று.


நம் தமிழாலும் முடியும்.
அதற்கான வலு இருக்கும்போது.


நமது கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள்.


இது பல வழிகளில்.


அது காட் என்றும்
வோட்டோ என்றும்,
அணு உதவி-தடை ஒப்பந்தம் என்றும்
வர்த்தகக் காப்புரிமையென்றும்!



இதைவிட நமது வலுவை யுத்தங்களாலும் சாகடிக்கிறார்கள்.


இதிலிருந்து விடுபட இத்தகைய தாய்மொழி சார்ந்த மீள் பாதுகாப்பு அவசியம்.
இது குறைந்த பட்சமாவது நமது தேசிய அலகுகளைக் காப்பதற்கானவொரு சிறு முனைப்பே.



ஜேர்மனிய மொழியில் என்ன நடக்கிறதென்பதற்காய் -அந்த மொழியில் வந்த வாக்கியத்தைப் பதிந்தேன்.பத்திரிகையின் சுட்டியை இட்டேன்.படிக்காதவனின் கேள்வி வேறுவிதமாகப் போகிறது.நமது நிலையில் இப்ப எமக்குப் பல மொழி பேச வருமென்பதா முக்கியம்?
அவனவன் துண்டைக் காணோம்,துணியக்காணோமென்று ஜந்திரத்தோடு மல்லுக்கட்டி உயிர் வாழும்போது,இதையெல்லாம் செய்து பெயர்(!) எடுப்பதுதானே முக்கியம்.


தமிழ் எனது மொழி.
அது தொடர்பாடலுக்கான ஒரு ஊடகம் மட்டுமல்ல எனக்கு.
அது எனது வாழ்வோடும்,
எனது அடையாளத்தோடும் சம்பந்தப்பட்டது.
நான் யார் என்பதன் தொடக்கப் புள்ளி அதற்குள் பொதிந்திருக்கிறது.



பிரஞ்சு மொழி பேசும் ஆபிரக்கக் கண்ட நாடுகளின் குடிகள் எவ்வளவுதாம் சுத்தமாகவும்-தாய் மொழியாகவும் பிரஞ்சைப் பேசினாலும் அவர்கள் பிரஞ்சு வெள்ளையின வாழ் சூழலுக்குள் வரமுடியாது.இதை செனகல் நாட்டின் அற்புதமான இயக்குனர்கள் தமது சினிமாமூலம் சொல்கிறார்கள்.



கெய்லே ஜெரிமா என்றொரு எத்தியோப்பிய இயக்குனரும் தனது படத்தினூடாக(சன்கோபா Sankofa) இதையே சொல்கிறார்.


இங்கு,தொழில் நுட்பத்தைத் தமிழால் தர முடியாதிருப்பதற்குக் காரணம் நமக்கென்றொரு தேசியப் பொருளாதாரத்தைக் காக்கும் நாடில்லை.நமக்கென்றொரு பொருள் வளமில்லை.நம்மால் முடியாதிருப்பதற்கான முதல் காரணம் அன்றைய காலனித்துவமும்,இன்றைய பல்தேசியமயப்படுத்தப்பட்ட தொழில் அடக்கு முறைகளுமே.இதை மீறுவதற்கு ஒவ்வொரு தேசிய இனமும் தனது சுய நிர்ணயத்தைப் பாதுகாப்பதும்,தேசியத் தன்மைகளை அழியவிடாது போராடுவதுமே ஒரே வழி.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...