வென்றது அவர்கள்தானே?
"ரோம் எரியும்போது நேரோ(Nero)மன்னன் பிடில் வாசித்தானாம்"என்று மனிதவுணர்வின் வக்கிரத்தைக் குறித்துச் சொல்வதற்குத் தமிழ்ச் சூழலில் சொல்வார்கள்!அப்போதெல்லாம் அவன் ஏன்-எதற்காக மகிழ்ந்து, இசைத்தான் என்பதற்கான காரணம் அறிய விருப்பு இருக்கவில்லை.அதையும் நமது தமிழ்ச் சூழல் சொல்லவுமில்லை.
இப்போது நேரோ மன்னன் மகிழும் அந்தத் தரணம் இலங்கையில் உருவாகி வருகிறது.
ரோமானியச் சாம்ராஜ்சியத்தில் ஏற்பட்ட தேக்கம்,பொருள் வளர்ச்சிக்குரிய சூழல் ஸ்த்தம்பித்திருந்தபோது, கட்டுமானத் துறையில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி நேரோ மன்னனுக்குத் தலை வலியாகியது.அவனது பரிவாரங்கள்,பல் துறை விற்பனர்கள்,பொருளாதார மேதைகள் அவனுக்கு அறிவுறுத்தியது "அந்த நேரத்தில் தப்பிப் பிழைக்க முயிற்சித்த" கட்டுமானத்துறையின் நலனுக்கானதாக இருந்தது.
ரோமை எரி.
எரிப்பதன் பலனாகக் கட்டமானத் துறை மீளவும் வீரியத்துடன் வெற்றியீட்டிப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறும் என்றார்கள்.
நெருப்பிட்டான் நேரோ.
எரிந்தது ரோமபுரி.
பிடிலெடுத்து வாசித்தான் நேரோ,மகிழ்ந்தான்:கூத்தாடினான்.
சிறப்பாக ஆதாயமடைந்தார்கள் கட்டுமானத்துறை முதலாளிகள்.மற்றும் ஆளும் பெருமான்கள்!-அப்பாடா நல்ல சந்தோசம்.
இது வரலாறு.
இன்று இலங்கை?
வாகரையில் மக்கள் யுத்தத்தில் சாக,கிழக்கு மாகணம் எங்கும் யுத்தம் விரியப் புலிகள்"தந்துரோபாயப் பின் வாங்கலாக"ஓடித்தப்ப உலகத்துக்குச் சில செய்திகள் கஞ்சிகுடிச்சாறு பற்றிக் கசிகிறது.மனிதவிரோதமான முறையில் நடந்துகொண்ட காலடிகள் தென்படுகின்றன.
ஐயோ மக்கள்...
யாழ்ப்பாணம்: உணவுக்காக ஏங்கிக் கிடக்க,பொருள்களின் விலைகள் ஐரோப்பியச் செலவுப் புள்ளியில் விற்கப்படுகின்றன.வருமானம் பூச்சியம்.வாழ்பவர்கள் தமது உறவுகள் புலம் பெயர்ந்திருக்கும்போது,அவர்களை வதைக்கிறார்கள்-வெருட்டுகிறார்கள்:
"மருந்து குடித்துச் சாவோம் பணம் உண்டியலில் அனுப்பு!-வெஸ்ரன் யூனியன் வங்கிமூலமாக உடனே அனுப்பு."
அனுப்பிய அரை மணிக்குள் காசு கையில்!
கடை விரித்தவர்கள் வாயில் தோசை,புலம் பெயர்ந்தவர்களின் தோளில் சுமை!வங்கியில் கடன்- பெரும் சுமை.வீட்டு வாடகை கட்ட முடியாதென்று கடிதம் வீட்டுக்கு வருகிறது.யுத்தத்தின் சுமை எங்கே முட்டி மோதுகிறது?
யுத்தம்-பொருளாதாரத்தடை!
மில்லியன்கள் டொலருக்குக் கப்பல் வேண்டும் எம்.பி. மகேஸ்வரன்.
யாழ்ப்பாணத்துக்குப் பொருள் அனுப்பி மக்களுக்குச் சேவை செய்வதும் நோக்காம்.
//He said that this was his second ship and the first ship ‘Jans Clipper MV’ is already chartered by the Sri Lanka Government to ferry goods and food items to the restive Jaffna Peninsula. He told that already there are more than eight cargo ships belonging to Sinhalese owners are under the charter of the Sri Lanka Government for transporting food and other items to Jaffna.//
புல்லாரிக்கிறது.
ஒரு கப்பல் காவிச் செல்லும் பொருள்களை விற்றால் ஆறு கோடி ஆதாயமாம்!
ஆருடைய பணம்?
மேற்குலகில் கோப்பை கழுவும் தமிழனின் பணம்.தன்னைக் கடனாளியாக்கித் தமது உறவின் உயிரைப் பிடித்து வைப்பவ(ள்)ன் புலம் பெயர்ந்த தமிழன்.
...ம்...
போகட்டும்!
யுத்தம்,பசி,நோய் நொடி!
கப்பல்,
கொள்முதல்,
சந்தை,
பேரம்,
ஆயுதத் தரகு,
கோடிகளுக்குள் புரளும் அரசியல் தலைவர்கள்:
மகிழ்ச்சி,
மப்பு,குடி,கும்மாளம்!
பாதைகள் திறக்கமாட்டோம்,-புலிகள் வரிமூலம் வருமானம் பெறும் வழி அது!
கப்பல்மூலம் உணவு போவது ஆமிக்கு,அது தேசத் துரோகம் நாம் தடுப்போம்,அழிப்போம்.
எல்லாம் நடக்கலாம்.
என்றாலும் யாழ்ப்பாணம் பொன் முட்டையிடும் வாத்து இப்போது!
இந்த அரசியலில் இழந்தவர்கள் புலம் பெயர் தமிழர்கள்தாம்!ஊரை,வாழ்வை,நிம்மதியை,பொருளை!
இறுதியாகச் சுமக்கும் கடன்பளு எப்போது உயிரைப் பறிக்கும்?இதுதாம் புலம் பெயர்ந்த தமிழன் கேள்வி!
சொல்லமுடியாது!
யுத்தம் எதற்கு?
நாலு பணம் சம்பாதிப்பார்கள் தலைவர்கள்,தளபதிகள்,முதலாளிகள்.
பொருளாதாரத் தடை:பொருள் தேடுவதற்கு நல்லவொரு வழி!தொடரட்டும்.
யுத்தத்துக்குக் காரணங்கள் பல.அவை மக்களைச் சொல்லி மாமனிதர்கள் மனம் மகிழ்ந்து பொருள் சுமக்க,-பதவிச் சுகம் காண... சொல்லித் தெரிவதில்லை இவைகள்.
நேரோ மன்னன் பிடில்...
போதும்!
எல்லாம் பொன்னான பொருள்-ஆதாரத்தின் அரிச்சுவடி புரிந்தால் பொய்மை பிடரியைத் தட்டும்.
பேதமையான மனது சொல்கிறது: "எல்லாம் எங்கட தலைவர் வெல்வார்! "
வென்றது அவர்கள்தானே?
இராஜ பக்ஷ மட்டுமல்ல எல்லாத் தரப்பும் வென்றே வருகிறது.-மக்களைத் தவிர!
ப.வி.ஸ்ரீரங்கன்
17.01.2006
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
9 comments:
ஸ்ரீரங்கன்:
செவிவழிக்கதையிருக்கட்டும்; வரலாற்றின்படி,
1. ரோம் எரிகையிலே நீரோ ரோமிலேயே இருக்கவில்லை. முப்பது மைல் தூரத்திலேயிருக்கின்றான். எரிந்து முடிந்துதான் அவனுக்குத் தெரியும்.
2. பிடிலோ (வயலினோ) கண்டுபிடிக்கப்பட்டது பதினாறாம் நூற்றாண்டிலே.
நிற்க, நீங்கள் மக்களா? நீரோவா? பிடிலா? நெருப்பா?
திட்டிக்கொண்டிராமல், தீர்வினைச் சொல்லுங்களேன்.
நீந்தத்தெரியாத பண்டிதர் ஓடத்திலேறி ஓடக்காரனை "அறிவிலியே! உருப்படுவியா?" என்ற கதைதான் ஞாபகம் வருகிறது :-(
அரசைத் திட்டும் பாயும் புலி ஆதரவாளர்களுக்கும் அரசைத் துதிக்கும் தேனியின் ஞானிகள், நெருப்பின் குஞ்சுகளுக்கும் மார்க்ஸியத்தின் மருக்கொழுந்துகளான உங்களுக்கும் ரயாகரனுக்கும் என்ன வித்தியாசமிருக்கின்றது என யாராவது வாகரையிலே தவிக்கும் மக்களை வைத்துக் கேட்டால், என்ன சொல்வீர்கள்? புரட்சி என்பதென்ன புட்டுக்கு மாக்குழைப்பதா? அப்படியாக இருந்தாற்கூடப் பரவாயில்லை; இப்படிக் குழைக்கலாமே, அப்படி அவிக்கலாமே என்று சாய்மனைக்கதிரையிலே "எங்கெல்ஸ் எங்கே சொன்னார்?" வாசித்துக் கொண்டு கிடந்து குசினிக்குள்ளே பார்த்துக்கத்துவதால், மக்களுக்குப் புட்டு கோப்பையிலே முட்டைப்பொரியலோடு விழுமா?
எந்தச்செய்தி வந்தாலுங்கூட, ஏற்கனவே மார்க்ஸைக் குழைத்து எங்கெல்ஸைக் கரைத்து நான்காம் அகிலத்தில் அவித்து வைத்திருக்கும் பதிவுப்புட்டின் தலைப்பிலும் வாலிலும் கட்டி இங்கே புளொக்கர் கோப்பைக்குள்ளே தள்ளிவிடுகிறீர்கள்
ஸ்ரீரங்கன், சாபம் கொடுத்துக்கொண்டேயிருப்பின், உங்களுக்கு மனச்சாந்தி வருகிறதோ தெரியாது; நிச்சயமாக இது உங்கள் தரப்புக்கும் வெற்றிதான் - மக்களைத் தவிர.
இப்போது சொல்லுங்கள்; என்னதான் இப்போது செய்யவேண்டும் - "எல்லாரும் எல்லாமே பெறவேண்டும், இலங்கையில் இல்லாமை இனிமேல் அறவேணுமெண்டால்????"
//செவிவழிக்கதையிருக்கட்டும்; வரலாற்றின்படி,
1. ரோம் எரிகையிலே நீரோ ரோமிலேயே இருக்கவில்லை. முப்பது மைல் தூரத்திலேயிருக்கின்றான். எரிந்து முடிந்துதான் அவனுக்குத் தெரியும்.
2. பிடிலோ (வயலினோ) கண்டுபிடிக்கப்பட்டது பதினாறாம் நூற்றாண்டிலே.
நிற்க, நீங்கள் மக்களா? நீரோவா? பிடிலா? நெருப்பா?//
பெயரிலி வணக்கம்!
ரோம் எரியும்போது நீரோ மன்னன் ரோமில் இருக்காது போனால் அவன் தீ மூட்டவில்லையென்று அர்த்தமாகுமா?அன்றி அவன் போய் ஒவ்வொரு கட்டமாகத் தீ வைப்பானோ? ரோமின் அனைத்து அதிகாரத்தையும் தனக்குள் புதைத்து வைத்திருந்தவனும்,தடுக்கி விழுந்தாலும் அவனது ஒரு ஒற்றனின் மீதே விழுந்தொழும்ப வேண்டிய அன்றைய காலத்தில் அவனுக்குத் தெரியாது தீ வைக்கப்பட்டதென்பது?...
நான் கூறியது செவி வழிக் கதையல்ல!இது அங்கீகரிக்கப்பட்ட உண்மை.வரலாற்றில் பொருளாதார நலன்களின் பின்னே நிகழ்ந்த அழிவுகள் இது.
பிடிலோ என்னவோ அவன் இசைத்தான் மகிழ்ந்தான். என்றே கருதப்படுகிறது!
//நீங்கள் மக்களா? நீரோவா? பிடிலா? நெருப்பா?//
இதை நீங்கள்தான் சொல்லிப்போட்டீர்களே!
தீர்வைச் சொல்லுங்கோவென்று நம்ம நாரதர் பாணியில் கேட்கிறீர்கள்.பெயரிலி கொஞ்சம் மனம் திறந்து சொல்லுங்கோ,இப்போது நடை பெறும் யுத்தம் மக்களுக்கான நியாயமான போராட்டமா?
இதற்குப் பதில் கூறுங்கள்,பின் தீர்வு பற்றிப் பேசுவோம்.
நன்றி கருத்துக்களுக்கு.
அண்ணை ரங்கண்ணை அவங்கள் போராடுவது இருக்கட்டும் நீங்கள் குரைப்பது மக்களுக்காகவோ?அந்த மக்களுக்காக இதுவரைக்கும் துரும்பையாவது கிள்ளிப்போட்டிருக்கிறியளோ சும்மா நாங்கள் மக்கள் பக்கம் நாம் மக்கள் நலனுக்காகப் போராடுகிறோம் என்பதெல்லாம் என்ன இந்த புளொக்கில் பக்கம் பக்கமாக எழுதிக் கிழிப்பதோ அல்லது அங்கிங்கு வருவதையெல்லாம் வெட்டி ஒட்டுவதோ
1.தீர்வு என்ன என்று எம்மை நோக்கி என்ன உன்பது விதண்டவாதம். அது என்ன என்பதை சொல்வது எமது விமாசனத்தின் சாரம்.
2.மக்களுக்காக நிற்க மறுக்கின்ற யாரும், அதை வெளிப்படுத்தி அதற்காக கருத்தளவில் கூட நிற்க முடியாத யாரும், தீர்வைக் கோருவது என்பது உள்ளடகத்தில் மக்களுக்கு எதிரானது.
3.இருக்கின்ற மக்கள் விரோத பிற்போக்கு கூறுகளின் பின் நின்று, அதை விமர்சிக்காது, தீர்வு பற்றி கேட்பது உள்நோக்கம் கொண்டது. அது மக்களை மேலும் மொட்டை அடிக்கும் பிற்போக்கு கும்பல்களுக்கு வாக்களாத்து வாங்குவது தான்.
4.மக்களுக்காக முதல் தீர்வு, மக்களுக்காக நாம் செயல்படும் தளத்தில் முதலில் குரல் கொடுப்பது தான். அதை செய்வதை விடுத்து என் வம்பு பேச்சு
பி.இரயாகரன்
//அண்ணை ரங்கண்ணை அவங்கள் போராடுவது இருக்கட்டும் .
நீங்கள் குரைப்பது மக்களுக்காகவோ?
அந்த மக்களுக்காக இதுவரைக்கும் துரும்பையாவது கிள்ளிப்போட்டிருக்கிறியளோ?
சும்மா நாங்கள் மக்கள் பக்கம், நாம் மக்கள் நலனுக்காகப் போராடுகிறோம்
என்பதெல்லாம் என்ன இந்த புளொக்கில் பக்கம் பக்கமாக
எழுதிக் கிழிப்பதோ அல்லது அங்கிங்கு வருவதையெல்லாம் வெட்டி ஒட்டுவதோ?//
ஈழநாதன் வணக்கம்.
உங்கள் கேள்விக்கேற்றபடி தோழர் இரயாகரனின் கருத்துக்கள் பதில் கூறுவதாகவும் இருக்கிறது.
எனினும் நான் சிலவற்றைச் சேர்க்க விரும்புகிறேன்.
தமிழ்பேசும் மக்களுக்குத் "தாம் சொல்வதும், செய்வதுமே" நியாயமாக இருப்பதாகச் சொல்லும் இன்றைய ஒற்றைத் துருவ அரசியலில்,தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையில் பன்முகப்பட்ட கருத்தியல் பன்மைத்துவத்தையும் அது சார்ந்த அரசியல் விமர்சனத்தையும் கோரி,நாம் எமது மக்களின் தேசிய இனச் சிக்கலுக்கும் அதன் முரண்பாடாய் எழுந்த யுத்தத்துக்கும்,அந்தத் யுத்ததால் மக்கள் எப்படி அழிவுறுகிறார்கள் என்பதையும் பல தரப்பட்ட முறைமைகளில் ஆராய்ந்து இது-இது இந்திந்த நலன்களோடு பிணைந்தவை,இவை மக்களின் பொருட்டு நடை பெறவில்லை.மாற்றாக வௌ;வேறு நலன்களின் நோக்கு நிலையிலிருந்து நமது மக்களைப் பலி கொடுக்கப்படுவதாக ஆய்ந்து சொல்வதெல்லாம் உங்களுக்குக் குரைப்பதாக இருக்கிறதா?
இந்த புளக்கரில் நாம் எழுதுவது மக்களுக்கானதில்லை என்றால்,ஏன் கவிஷன்,ஈழபாரதி,வன்னியன் போன்றவர்கள் நாளொன்றுக்கு ஐம்பது வெட்டியொட்டும் பதிவிடுகிறார்கள்?இவர்களைப்போல் எத்தனை பேர்கள் அதைச் செய்கிறார்கள்!
எங்களைத் தேசத்தில் மக்களுக்காச் செயற்பட அனுமதிக்கும் அரசியல் இல்லாதாக்கப்பட்ட வரலாறு தாங்கள் அறியாததில்லை.இப்படித் தமிழ் மக்களின் அரசியல் பன்மைத்துவத்தைத் "துரோகி"சொல்லி அழித்தொழித்துவிட்டு,பின்பு என்ன செய்தீர்கள் என்பது நியாயமாக இருக்கிறதா?
நாம் எதற்காகப் புலம் பெயர்ந்தோம்?
உண்ண வழியின்றியா,உடுக்க வழியின்றியா?
போராட்டத்தையும்,அதன் பன்முக நியாயப்பாடுகளையும் கொல்லைப் புறத்தில் கூடிக் குழிதோண்டிப் புதைத்தவர்களால் கேடாகக் கொல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காகப் பலர் புலம் பெயர்ந்த சூழலில், உங்கள் கேள்வி ஒற்றைத் துருவ அரசியலின் மிச்சசொச்சமாக விரிகிறது.
நாங்கள் கிழிப்பது இருக்கட்டும்.நீங்கள் இதுவரை கிழித்து வருவது என்ன?
தீவக இடப் பெயர்வு:தந்திரோபாயப் பின்னகர்வு.
வலிகாம இடப்பெயர்வு:தந்திரோபாயப் பின்னகர்வு.
இப்போது கிழக்கு மாகணம்:தந்திரோபாயப் பின்னகர்வு.
இப்படி எல்லாத் தமிழ் மக்களின் வாழ்விடங்களையும் சிங்கள இராணுவத்திடம் பறி கொடுத்துவிட்டு,இறுதியில் நீங்கள் கிழித்த போராட்டம் கிளிநொச்சி மாவட்டத்துக்குள் முடங்கியதுதாம்.இப்போது மக்களை இராணுவம் அடிமையாக்கித் தமது யுத்த ஜந்திரத்துக்குத் தேவையான கூலிகளாகவும்,தமது பிறவுணர்வுகளைப் ப+ர்த்தி செய்யும் உயிரியாகவும் மேற்காணும் மாவட்டத் தமிழ் மக்களைச் சிங்கள வன்கொடுமை இராணுவம் பயன்படுத்தி வருகிறது.இந்த அவலத்தைச் செய்த இந்தப் போராட்டத்தின் செல் நெறி தவறானதென்கிறோம்.
இத்தகைய பின்னடைவால் இப்போது விடியும் அரசியல் சூழ்ச்சியை முறியடிக்க முடியாமல் அந்நியச் சக்திகளின் காலில் தண்டமிடப்பட்ட நமது மக்களின் நலன்கள் யாவும் இலவு காத்த கிளியின் கதையாகவே மாறப் போகிறது.
இந்த அவலத்தில் நீங்கள் எம்மைப் பார்த்துக் கேட்க வேண்டியதுதாம்"நீங்கள் என்ன கிழிச்சீர்கள?;"என்று.
1980க்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்த நிலைக்கும் இன்றைய நிலைக்கும் என்ன உறுதியான காரணம்?
தமிழ்பேசும் மக்களின் ஆதிகத்துள் நிலவிய மேற்படி மாவட்டங்களின் நிர்வாகம் எவரிடமுள்ளது?
இராணுவமே மேற்படி மாவட்டங்களை ஆளும்போது, நமது ஈழம் இன்னும் பெரும் நிலப் பரப்புடனா இருக்கிறது?
இங்கே நாம் புளக்கரில் எழுதி அரசியலின் பன்முகத் தன்மையும்,அதைக் கிரகித்து பன்மைத்துவப் பார்வைகளைப் பயிர்ச்சிப் படுத்துகிறோம்!
ஏனெனில் நாம் ஒற்றைத் துரவ அரசியலில் தனிநபர் வழிபாட்டுப் பண்பாட்டையும் அதன் வாயிலாக ஜனநாயக விழுமியங்களையும் மறந்து,சர்வதிகாரத் தன்மை வடிவிலான ஓருகட்சி இயக்க மாயைக்குள் கட்டி வைக்கப்பட்டுள்ளோம்.இதனால் நம்மிடம் பன்மைத்துவக் கண்ணோட்டமின்றியும், ஒரு கருத்துக்கு பன்மைத்துவப் புரிதல் இல்லையென்ற கோதாவில் இறங்கிக் கருத்தாட முனைகிறோம்.
அதை முதலில் முறியடிப்பது நமது நோக்கு.
இதனூடாக எழுதுவோம்.வெட்டியும் ஒட்டுவோம் உங்கள் ஆட்களைப் போலவே!
அதென்ன உங்களுக்கொரு நியாயம்,எமக்கொரு நியாயம்?
நன்றி சிறீரங்கன் ஒரு நஃலு பக்கத்திற்குப் பதில் வரும் எப்படி வாசிக்க நேரம் கிடைக்கப்போகிறதோ என நினைத்துக் கொண்டிருந்தேன்.சுருக்கமாக முடித்ததற்கு நன்றி.முதலில் நீங்கள் நீங்கள் என்று நீங்கள் சுட்டும் நீங்கள் யாருங்கண்ணா?நான் உங்களை நோக்கி எழுப்பிய கேள்வி(பாருங்கண்ணா நான் ரயாகரனைக் கூடச் சேர்க்கலீங்கண்ணா)அதற்கு ஈழபாரதி,வன்னியன் கவிஷன் முதல் இராசையா இளந்திரையன் வரை என் பின்னே நிற்பதாக நீங்கள் சுட்டியது உண்மையிலேயே சுடுதுங்கண்ணா.நான் புளொக்கிலை எழுதியே ரெண்டு வருசம் ஆச்சுங்கண்ணா அப்பப்ப கிசு கிசு எழுதுற மாதிரி என்னையும் நீங்கள் பேடி எண்டு சொல்லீட்டதாலை இப்படிக் கேட்கவேண்டி ஆகிப்போச்சுங்கண்ணா.
மற்றும்படி புலி அங்கே பாய்ந்தது இங்கே பதுங்கியது என்று சொல்லும் தகுதி எனக்கு இல்லை என்று பீல் பண்ணுறதாலை அதை எழுதுறதில்லையண்ணா.அப்பப்ப நீங்கள் மக்கள் நலன் சார்ந்து எழுதும் பதிவுகளை நானும் அந்த மக்களில் ஒருவன் தானே என்ற உரிமையிலை கேட்கவேண்டி ஆகிப்போதண்ணா நான் இன்றைக்கும்/என்றைக்கும் இலங்கை சிட்டிசன் தானண்ணா இப்ப சொல்லுங்கோ நான் கேட்கலாமோ கூடாதோ.சும்மா கேள்வி கேட்டாலே என்னைக் கொண்டுபோய்ப் புலிவால்லை கட்டிவிடுறியள் அடுத்த முறை ஊருக்குப் போகேக்கை உங்கடை முன்னைநாள் தோழர்கள் என்னைச் சுட்டா அதற்கான பொறுப்பு உங்களையும் சாருமென்பதை இந்த வலைவாழ் மக்களுக்கு அறியத் தருகிறேன்
நீங்கள் எழுதும் மக்கள் நலன் சார்ந்த பதிவுகளில் சிறீலங்கா இராணுவம்,துணைக்குழு செய்யும் வன்முறைகள் பற்றியோ அவற்றின் ஜனநாயக மீறல் பற்றியோ எதுவும் வருவதில்லையே.புலி கஞ்சா வைத்திருப்பதாக இலங்கையின் ஒன்றாம் நம்பர் புழுகன் சொல்லுறான் எண்டான் அதைக் கொண்டாடி மகிழ்ந்து இரண்டாம் நம்பர் புளுகன் பட்டத்துக்கு ஆசைப்படலாமா.நீங்கள் சொல்லும் மக்களில் ஒருவனாகிய நான் உங்களிடம் எதிர்பார்ப்பது வேறுவகையான எழுத்தண்ணா இதில்லை
எனக்கென்னவோ புலிகளின் தந்திரோபாயப் பின்வாங்கல்களைக் கண்டு மனம் வெதும்பி விரக்தியில் அண்ணர் பேசுறார் போலக் கிடக்கு.. அது தானே யண்ணன்..?
உப்பிடியே பின்வாங்கிக் கொண்டிருந்தா எங்கடை போராட்டம் என்னாகிறது எண்ட கவலை அவருக்கு..
சிறிரங்கனின் அடி மனசில இருக்கிற புலிகள் வெல்ல வேணும் எண்ட ஆசை எனக்குத் தெரியுது.
தீர்வெல்லாம் சொல்லுறது எங்கடை வேலையில்லை. அதை மக்கள் தான் செய்ய வேணும்.. நானோ சிறிரங்கனோ ஈழநாதனோ பெயரிலியோ மக்கள் இல்லை.
அப்படி மக்களில கொஞ்சப் பேர் தீர்வு காண வெளிக்கிட்டால் பிறகு அவையும் மக்கள் இல்லை.
சுனாமிக்கு இறைத்த நிதி வைக்கால் வழி
ஓடி வாலுக்கும் தலைகளுக்கும் தளபதிகளுக்கும் முதலகளைகளுக்கும்
பாய்ந்து மிகுதி மண்ணெண்ணைக்குள்
புகுந்து கப்பலுக்குள் ஓடுது.
புளியங்குளத்தில குந்தியிருந்து
வசூலிப்பதை விட கப்பலுக்குள் விட்டால் ஒரே தடவையில் வந்து
கொட்டுமே கோடியாய்.
ஸ்ரீரங்கன், உங்கள் பின்னூட்டத்திற்குத் தொடரான பதில் நான் தரவேண்டிய கடப்பாடுள்ளது. நிதானமாக எழுத நேரம் கிடைக்கத் தருகிறேன். தாமதத்துக்கு மன்னியுங்கள்.
Post a Comment