அகலக் கால்வைக்கும் ராற்ரா( India's Tata Steel)அழியப் போகிறது.
இந்தியத் தரகு முதலாளிய இரும்புத் தொழில் நிறுவனமான ராற்ற்ரா நிறுவனம் பங்குச் சந்தையில் பணம் கொட்டிப் படுக்கப் போவதென்னவோ உறுதியாகி வருகிறது. உள்ளதையும் கொடுத்து உயிர் வாழும் தகுதியை அது தேடிச் செல்லும் இந்தத் தரணத்தில் அடுத்தவொரு வியூகத்தை அய்ரோப்பியப் பங்குச் சந்தை வல்லூறுகள் வகுத்து வரும்போது அற்புதமாகவொரு கூட்டு நிகழ்கிறது.நேற்று 31.01.2007 இந்தக் கல்யாணம் நடை பெற்றது.
பிரத்தானிய-நெதர்லாந்துக் கூட்டுக் கொம்பனியான கோருஸ்(Corus.)உலகத்தின் இரண்டாவது பெரும் இரும்புத் தொழிற்சாலை நிறுவனம்(18.2 மில்லியன் தொன்கள் இரும்பை வருடமொன்றுக்குத் தயாரிக்கிறது கோருஸ்,ஆண்டின் நிகர வருமானம் 451 மில்லியன்கள் பவுண்கள் ஆகும்.).இதைச் சுண்டங்காய் ராற்ரா(5.3 மில்லியன் தொன்கள் இரும்பைத்தாம் ராற்ரா வருடமொன்றுக்குத் தயாரிக்கிறது,வருட நிகர இலாபம் 186 மில்லியன்கள் யூரோவாகும்) கையக்கப் படுத்தியுள்ளது.
தொழிற் கழகங்களின்"கூட்டு-இணைவு"என்பது இன்றைய பங்குச் சந்தைச் சூதாட்டத்தில் ஒன்றையொன்று விழுங்கி ஏப்பம் விடுவதாகும்.எனினும் இந்தச் சூதாட்டத்தில் ராற்ரா இப்போது குறுகிய கால வெற்றியாக உலகத்தின் இராண்டாவது பெரும் இரும்புத் தொழிற்சாலையைக் கவ்வியுள்ளது.
ராற்ராவின் பங்கு நிலைவரம் மிகவும் பின்னடைவாகச் சாதகமின்றியிருக்கும் போது(8,7 வீதம்) 9,3 பில்லியன் யூரோவுக்கு இந்த கோருஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்துகிறது.இந்தப் பாச்சலானது ராற்ராவின் நிதி மூலதன வலுவைக் குறுகிய காலத்துக்குள் கடுமையாகப் பாதிக்கும்.இந்தப் பாதிப்பில் அதன் மிகப் பெரும் சரிவு பங்குச் சந்தைச் சூதாட்டத்தில் நிகழும் தரணம் நெருங்கும். எட்டாங்கட்டைக்கு எழுதிக் கொடுக்க வேண்டிய நிலையை தோற்றுவிக்கும் ஒரு வியூகத்தை அய்ரோப்பியப் பிசாசுகள் மிகவும் கவனமாகக் காலடியெடுத்து வைத்து ஆரம்பிக்கின்றார்கள்.
ராற்ராவின் கடந்த காலாண்டுக் கணக்கெடுப்பில் ஆண்டின் நிகர வருமானம் வெறும் 186 மில்லியன் யூரோ,வல்லுனர்கள் போட்ட எதிர்பார்ப்புக் கணிப்பைவிட இது மிகவும் குறைந்த நிகர வருமானமாகும்.இந்த நிறுவனம் கச்சா பொருள்களுக்கு மிகவும் கூடுதலான விலையைக் கொடுத்துப் பின்னடைவுக்குள் இருக்கும் போது,தன்னைப் பாதுகாப்பதற்காக சி.எஸ்.என் நிறுவனத்தோடிணைந்து கோருஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தி உயிர் வாழ முனைவதாகச் சொன்னாலும் அதன் சரிவைத் தடுத்து நிறுத்த முடியாதளவுக்குச் சீனாவின் இரும்புத் தேவை நகர்ந்தபடியுள்ளது.சீனாவின் இரும்புக்கான பசி உலகத்தின் இரும்புக் கையிருப்பை இந்தா விழுங்கி விடுகிறேன் என்று நகரும்போது, இரும்பின் விலையும்,அதன் கச்சாப் பொருளின் விலையும் கடுகதிதாம்.
எனவே மூலப் பொருளுக்கான விலை இரட்டிப் பாகும் இந்தச் சூழலில்"விட்டுப் பிடித்தல்"நாடகத்தில் ராற்ரா அகலக் கால் வைத்து இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு அதிர்வைத் தரக் காத்திருக்கிறது.
இந்தியத் தொழிலாளர்களின் வயிற்றில் இன்னுமொரு பலத்த அடி வரும்.அது பல்லாயிரம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் நிலையைத் தோற்றுவிக்கப் போகிறது!
இந்தியாவில் இன்னும் பலபடி பணவீக்கத்தைச் செய்யப் போகும் நாளைய தரணத்தில் இந்திய பொருளாதாரம் வாங்கும் அடி மரண அடியாக இருக்கும்.இது நிகழ்ந்தே தீரும்!
இந்தியப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் பங்குச் சந்தையானது சாரம்சத்தில் மிகைப்படுத்திவரும் வளர்ச்சி வீதம் ஒரு மண் குதிர் நம்பிக்கையாகும்.வளாச்சியடைந்துவரும் நாட்டில் 9-10 வீதமாகப் பொருள் வளர்ச்சி நிகழ்வதும்,வளாந்த ஜேர்மனி போன்ற நாடுகளில் அந்த வளர்ச்சி 1-2 வீதமாக இருப்பதும் மிக இயல்பானது.ஆனால் பொருளாதாரத்தின் உண்மையான வலு வளர்ச்சியடையும் நாட்டில் மிகப் பலவீனமாக இருக்கும்.ஏனெனில் அங்கு தேசிய முதலாளியத்தின் வலுவாக அது இருப்பதில்லை.அந்த வலு அந்நிய மூலதனத்தின் பாய்ச்சலில் உருவாகுவதாகும்.
அரசை நம்பிப் புருஷாளை விட்ட கதையாகப் போனாலும் போகும் ராற்ராவின் கணிப்பு.
ஆனால் ராற்ரா எதையும் இழக்கப் போவதில்லை(ஏனெனில், அந்தச் சொத்து இந்திய மக்களின் மூலதனத்தைத் திருடிய சொத்தாகும்).
மாறாக இந்தியத் தொழிலாளிகளே இழப்பாளிகளாகும்.அவர்களின் வாழ்வோடு சூதாடும் பங்குச் சந்தை நாளை பட்டுணிச் சாவைத் தொழிலாளக் குடும்பத்து வழங்குமானால் இந்தப் பங்குச் சந்தைச் சூதாட்டத்தை அநுமதிக்கும் இந்திய அரசை என்னவென்பது?
ப.வி.ஸ்ரீரங்கன்
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
6 comments:
fire fox இல உங்கள் பதிவின் எழுத்துக்கள் பிய்த்துப் போட்ட ஜிலேபி போலத் தோன்றுகின்றன: சரி பார்க்கவும். ஏனென்டால் அடுத்ததாக நீங்கள் எழுதப் போற ரிபிசி வானொலிக்கான தோழமையை வாசிக்க இருக்கும் என்னை ஏமாற்றி விடாதீர்கள்.
நீங்கள் சொல்லும் சாத்தியங்களை அடியோடு நிராகரித்துவிட முடியாது....அதே நேரத்தில் தொழிலில் சில மூர்க்கத்தனமான முடிவுகள் அவசியமென்றே படுகிறது.
டாட்டாவின் பங்குகளில் சரிவு வருமென்பதெல்லாம் அதீத கற்பனையென்றே கருதுகிறேன்....ஏனெனில் கடந்த இரண்டு நாட்களில் டாட்டா ஸ்டீல் தவிர மற்றைய அனைத்டு டாட்டாவின் பங்குகள் வலுவானதாகவே காணப்படுகிறது.
பணவீக்கம் அதிகரிக்குமென எந்த கோணத்தில் சொல்கிறீர்கள் என தெரியவில்லை....எனினும் இந்த அரசிடம் தேவைக்கதிகமாகவே அன்னிய செலவானி கையிருப்பு இருக்கிறது என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
தமிழில் பொருளாதாரம் வணிகம் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகள் வருவது குறைவு. அதிலும் வலைப்பதிவுகளில் மிகக்குறைவு. எனவே அந்த இடைவெளியை நீங்கள் நிரப்புவீர்கள் என நினைக்கிறேன். டாட்டா என்ன விதமாக பின்விளைவுகளை சந்திக்க நேரும் என ஒரு விரிவான ஆய்வுக்கட்டுரை தர முடியுமா? ஏனெனில் சர்வதேச வணிகம் தொடர்பான நுணுக்கங்கள் எல்லோருக்கும் தெரிவதில்லை. எனவே இது சம்பந்தமான விரிவான கட்டுரையை எதிர்பார்க்கிறேன்
ராற்ரா (raatrraa) அல்ல, டாடா (Tata).
கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி!
இக்கட்டுரை சம்பந்தமான கேள்விகளுகஇகு இன்னொரு புதிய கட்டுரையில் பதில்கள் தெளிவாக முன் வைக்கிறேன்.ராற்ராவின் நிலை எப்படி மாறுமென்பதற்கு ஜேர்மனிய பிலிப் கொல்ஸ் மான் நிறுவனத்தின் சரிவோடு ஒப்பிடும்போது இலகுவாகப் புரியும்.உலகம் முழுதும் இலட்சக் கணக்கான தொழிலாளர்களை வீட்டுக்கனுப்பியும் அதன் சரிவைத் தடுக்க முடியாது போனது வரலாறு.அனைத்தும் பின்னைய கட்டுரையில் விளக்க முனைகிறேன்.அடுத்து டாடா-ராற்ரா பிரச்சனை...
இது நாம் கற்ற சூழலின் பிரச்சனை.
இலங்கை ,இந்தியாவுக்கான இந்தப் பிரச்சனையை மிக விளக்கமாக வசந்தன் என்ற வலைப்பதிவு நண்பர் எழுதுகிறார்.அங்கே பதில் இருக்கிறது.
ஸ்ரீரங்கன்...
டாட்டா குழுமத்தின் மொத்த மதிப்பைப் பற்றியும் அவர்களின் வரலாற்றைப் பற்றியும் அறிந்தால் தாங்கள் இப்படிப் பேசுவீர்களா என்பது கொஞ்சம் சந்தேகமே. அதாவது, சில சமயங்களில் இடம் பொருள் ஏவல் என்ற சில விஷயங்களை அவதானித்துச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அம்மாதிரியான முடிவுதான் இது. இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி, டாடாவின் நிர்வாகத்திறன், டாடா குழும நிறுவனங்களின் அசாத்திய வளர்ச்சி விகிதங்கள் இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, இது டாடாவிற்கு வெற்றியாகத்தான் முடியும். உலகின் இரும்பு வர்த்தகத்தின் பெரும்பகுதியை இந்தியர்கள் கையகப்படுத்தியிருக்கிறார்கள் என்பது இந்தியராகிய எமக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது.
Post a Comment