Saturday, September 16, 2006

இந்திய அமைச்சர்: பாரிய சொத்து...

இந்திய அமைச்சர்:ஜேர்மனியில் பாரிய சொத்து...


இன்று இந்த இந்தியத் தேசத்தில் பல கோடி மக்கள் வறுமையிலும்,வேலையில்லாத் திண்டாட்டத்திலும் கிடந்து செத்து வரும்போது, இந்திய அரசியல் வாதிகள்,அமைச்சர்கள் இந்தத் தேசத்தைச் சுரண்டி அந்நிய தேசங்களில் சொத்தைச் சேர்க்கிறார்கள்.இது இந்த மண்ணின் சாபக்கேடாகவே இருந்து வருகிறது.ஆட்சியில் இருக்கும் கட்சிகள் தமது ஆட்சிக்காலத்தில் மாநிலத்தையோ அல்லது முழுத்தேசத்தையோ முற்றுமுழுதாக மொட்டையடித்துத் தமது பினாமிகள் மூலமாகச் சொத்துக் குவிப்பது சர்வ சாதாரணமாகிறது.




இந்தியா மக்களின் வரிப்பணத்தை எப்படியெல்லாம் அரசியல்வாதிகள் கொள்ளையிட அனுமதிக்கிறது!

தேசியம்,தேசவொற்றுமை,தேசியக் கொண்டாட்டம்,இந்தியச் சுதந்திர தினமென்றெல்லாம் மக்களைக் குருட்டுத் தேசிய வெறிக்குள் கட்டிப்போட்டுத் தமது நலனை மையப்படுத்தி, இந்தத் தேசத்தைக் கொள்ளைபோடும் இந்திய அரசியல் வாதிகளை மக்கள் இனம் காணுவது மிக முக்கியமாகும்.


நானறிய ஜேர்மனியச் சிறு நகராமான சுவெலம்(Schwelm) ஆஸ்பத்திரியில் ஒரு கேராள மலையாளிக் குடும்பம்,பெயர் தடாதில்( Family Mercy and Joseph Thadathil)- கணவனும் மனைவியுமாக நோயாளிகளைப் பராமரிக்கும் தாதி வேலை பார்த்து வருகிறார்கள்.இவர்கள் மிகச் சாதரணமான"கண்காணி"(இலங்கையில் நோயாளிகளைப் பராமரிப்பவர்களை இப்படிக் கூறுவது வழமை)வேலை பார்ப்பவர்கள், பெரும் அடுக்குமாடி வீடமைத்து திறக்க முடியுமா?


43 வீடுகள் கொண்டதும் கூடவே வைத்தியர்கள் "கிளினிக்"வைப்பதற்கும் கடைகள் நடத்துவதற்குமான இந்தக் கட்டிடம் நிச்சியம் ஜேர்மனிய யுரோவில் 15 மில்லியன்கள் முடியும்.அதவது இந்திய ரூபாயில் 75 கோடிகளாகும்.

இவ்வளவு பெருந்தொகை முடியும் இக்கட்டிடத்தை ஒரு பெரும் தொழில் நிறுவனமே கட்டிக் கொள்ள முடியும்.


ஜேர்மனியில் இத்தகைய சிறு தொழிலாளக் குடும்பம் இதைச் சாத்தியமாக்க முடியாது.

தடாதில் குடும்பமோ மிகச் சாதாரணமான மருத்துவத் தாதித் தொழில் பார்ப்பவர்கள்.இதே வைத்திய சாலையில்(Marienhospital)-மாரியன் கொஸ்பிட்டலில்- எனக்குப் பல பெரும் மருத்துவர்களைத் தெரியும்.அந்த வைத்திய சாலையில் இன்று பெரும் மருத்துவப் பேராசிரியராகக் கடமை புரியும் ஒருவர் பெறும் மாதாந்தச் சம்பளம் வெறும் 4000.யுரோதாம்.இத்தகைய வைத்தியர்களே இப்படியொரு கட்டிடம் கட்ட முடியாது -ஏன் கட்டிடம் பற்றிப் பேசுவான்-தாம் சொந்தமாகக் குடியிருக்க ஒரு வீடு கட்டுவதே கடினமாக இருக்கும்போது, இந்த மருத்துவ தாதிக் குடும்பம் 15 மில்லியன் யுரோ பெறுமதியான தொடர் மாடிக் கட்டிடத்தைக் காகன்(Hagen) எனும் நகரத்தில் அமைத்து, இந்திய முதியவர்கள் மற்றும் வலது குறைந்தவர்களுக்கு ஏதுவாக உதவுவதாகச் சொல்கிறது.இந்தக் காகன் நகரத்தில் வாழும் மலையாளிகள் சுமார் 15 குடும்பமே உண்டு.இதற்குள் வயோதிபர்கள்...என்னவொரு சுத்து.


கேராளவில் பிறந்து வளர்ந்த மத்திய மந்திரி(வெளிவிவகாரம்) வயலார் இரவி தனது பினாமியாக இந்த மருத்துவத் தாதிக் குடும்பத்தை கொண்டிருப்பாரோவெனச் சந்தேகம் கொள்வது தவிர்க்க முடியவில்லை.


இந்தியாவில் நடுத்தெருவில் மனிதர்கள் படுத்துறங்கும்போது, இந்திய அதிகார வர்க்க அமைச்சர் தனது பினாமிய+டாக மக்களின் பணத்தில் தொடர்மாடி கட்டித் திறப்பு விழா நடாத்துகிறார்,ஜேர்மனியில்!(இதோ பத்திரிகைச் செய்தியைப் படிக்கவும்).


மருத்துவத் தாதிக் குடும்பமான தடாதில் பெறும் மாதாந்த வருமானமானது அண்ணளவாக 1600. யுரோவாகும்.கணவனும் மனைவியும் சுமார் 2800. யுரோவை மட்டுமே மாத வருமானமாகப் பெறமுடியும்.இதுள் செலவுகள் தள்ளி மீதாமாவது 1000.யுரோவாகும்.இவர்களால் 15 மில்லியன் பெறுமானமான கட்டிடத்துக்கு வங்கியில் கடன் பெற முடியுமா?மாதாந்தம் வங்கிக்கு கட்டவேண்டிய தொகை மட்டும் 60.000.யுரோவாக இருக்கும்,- கட்டுக்காசு.இது கடன் பெற்றிருந்தால்...

அல்லது இந்தக் குடும்பம் போதைப்பொருள் கடத்தியிருக்கவேண்டும்.இப்படியானவர்களிடமே இவ்வளவு பெருந்தொகை புரளும்.

இதைவிட இந்த ஜேர்மனி இவ்வளவு பெருந் தொகையில் வீடு கட்டும் ஒரு சாதாரணக் குடிமகனை எப்படியெல்லாமோ தோண்டித் துருவி இப்பணத்தின் மூலத்தைக் கண்டுவிடும்.

இது அமைச்சரின் பணம்.இந்தியாவிலிருந்து சுவிசுக்குப் போய், ஜேர்மனியை வந்தடைந்து இருக்கணும்.இப்படி வந்ததனால் ஜேர்மனிய அரசும் ஒத்துழைக்கிறது.


வாழ்க இந்திய ஜனநாயகம்!,வளர்க அவர்கள் தேச பக்தி!!

ப.வி.ஸ்ரீரங்கன்
16.09.2006

7 comments:

மாசிலா said...

இவர்களை போன்றவர்களைத்தான் தேசத்துரோகிகள் என்றழைப்பது. ஒரு நாட்டிற்கு எதிரிகள் வெளியில் மட்டு இருந்து வருவதில்லை. கூட இருந்தே குழி பறிக்கும் அயோக்கிய பரம்பரைகள் இது. என்றாவது ஒரு நாள் மாட்டாமல் போகமாட்டார்கள்.

துணிச்சலுடன், தெளிவாக ஆதாரத்துடன் பதித்த உமக்கு நன்றி. அந்த கொள்ளை கூட்டத்திற்கு அடித்த முதல் சாவுமணி!

Sri Rangan said...

மாசிலா,வணக்கம்.

தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

கடந்த கிழமை இந்த மந்திரி இரவி உத்தியோகப+ர்வமாக ஜேர்மனுக்கு வருகை தந்து, சில ஒப்பந்தங்கள் போட்டார்.இவ்வொப்பந்தங்கள் மூலமாக ஜேர்மனியும்,இந்தியாவும் பரஸ்பரம் இராணுவ ஒத்துழைப்புகள்,பரிமாற்றங்கள்,தொழில் நுட்ப உதவிகள்... என்று தொடர்கிறது.


இன்றைய சூழலில் ஜேர்மனியானது தனது தொழிற்சாலைகளுக்கான மூலவளத்தைத் தேடி,அதைக் கையகப்படுத்த அமேரிக்காவைவிட மோசமாக அலைகிறது.இந்த ஜேர்மனியிடம் எல்லா நாட்டினது மூலவளம் பற்றிய சரியான தரவுகள் இருக்கிறது.அதற்காக இந்த நாட்டைப் பல நாடுகள் நட்புறவு கொண்டாடி அதனிடமிருந்து பல தகவல் பரிமாற்றங்கள் நடப்பதுண்டு.


இன்றைய நிலவரப்படி இந்தியாவானது அடுத்த நூற்றாண்டில் உலகத்துக்கு மிக முக்கிய மூலவளம் நிறைந்த நாடாகக் கருதப்படுகிறது.இதை ஜேர்மனிய அணுவிஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஆச்சரியமாக இருக்கிறதா?


ஆனால் இது உண்மை.


யுரேனியத்தின் மூலமான அணு மின்சாரம்,அணுப்பிளப்பு இன்னும் 80 ஆண்டுகளே நீடிக்க முடியும்.அதன்பின்னர் இந்த யுரேனியம் மருந்துக்கும் கிடையாது.


இந்த நுற்றாண்டோடு தொழில் உற்பத்தி முடிவுக்கு வந்துவிடாது தடுப்பதற்கு இந்தியா அவசியமானது.


அடுத்த அணு மூலகம்-யுரேனியத்தின் மாற்று தோரியம் ஆகும்.


இந்தத் தோரியத்தின் அதீத இருப்பு இந்தியாவில் இருக்கிறது.


இந்தியாவை இதன் மூலம் அணுமின்சாரம் செய்வதைத் தடுத்தாகவேண்டும்.அந்தத் தோரியத்தை இந்தியா தனக்கு உபயோகிக்கும் சுதேசி நாடாக உருவாவது தடுக்கப்பட வேண்டும்.


இது சார்ந்து அந்த நாட்டுக்கு இப்பவே மாற்று வழிகள்மூலம் முட்டுக்கட்டையிட்டு செயலாற்ற வேண்டும்.எனவேதாம் பாரிய சதிகளில் அமெரிக்காவும்,ஐரோப்பாவும் முனைகின்றன.இதில் ஜேர்மனியின் வேண்டுகோளுக்குச் செவி சாய்கும் இந்திய மந்திரிகளுக்கு ஜேர்மன் தனது நாட்டில் அன்பளிப்புகளை வழங்க முடியும்.இது தொடர் மாடிகளாகவும் இருக்கலாம்.இது குறித்து நாம் சில தகவல்களைத் தந்திருக்கிறோம்.இது குறித்து ஆய்வை தேசத்தின் நலன் விரும்பிகளே மேற்கொள்வது நன்று.

மாசிலா said...

உமது தெளிவான தொலைநோக்கு விளக்கத்திற்கு நன்றி ஐயா.
தேச பக்தி அற்ற, பதவி, அதிகாரம், பணம், ஆடம்பரம், சொகுசு ஆகியவைகளுக்கு ஆசைப்படுபவர்களை இலகுவாக தம்வசம் மடக்கமுடியும் என நன்கு புரிந்து கொண்டுதான் நாசவேலை செய்கிறார்கள் ஜெர்மெனிக்காரர்கள். அவர்களை சொல்லி குற்றமில்லை. ஏனென்றால் தங்கள் பாதுகாப்புக்கு தொலைநோக்குடன் செய்வது இது.
ஆனால், இப்படி தாய் மண்ணுக்கே கேடு விளைவிக்கும் இந்தியர்கள் தங்களுடைய எதிர்வரும் சந்ததிகளை நினைத்து செயல்படுகிறார்களா என்பது சந்தேகமே. தற்போது இந்தியாவில் ஆட்சியில் உள்ளவர்களில் 90% பேர், நாட்டை கூர்போட்டு அந்நியர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாக விற்றுக்கொண்டுதான் வருகிறார்கள்.

மேலும், ஜெர்மெனி அமெரிக்காவின் ஜால்ரா என்பது தெரிந்ததே.

இது இப்படி இருக்க, உள்நாட்டில், சாதிகளின் பெயரில் சில கீழ்தட்டு மக்களை மற்றவர்கள் இன்றைக்கும் நசுக்கிக்கொண்டு வருகிறார்களே! இதை என்னவென்று சொல்ல?

Anonymous said...

வணக்கம்!

இதுவே உங்கள் தளத்துக்கு முதல் தடவையாக வருகின்றேன். உங்கள் கருத்துக்கள் நன்றாக இருக்கின்றன. மீண்டும் வருகை தருவேன்.
நெல்லி

Anonymous said...

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதாம்...

ரவி said...

சரி தான் நீங்கள் சொல்வது. கண்டிப்பாக அது இந்தியாவை சுரண்டிச்சேர்த்த சொத்துதான்.

Sri Rangan said...

ெந்தழல் ரவி,வணக்கம்.

தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...