Friday, September 15, 2006

ஆனந்தசங்கரி:ஒரு பலி ஆடு!

ஆனந்தசங்கரி:ஒரு பலி ஆடு!


தமிழ் மக்களின் அபிலாசைகளென்பவை அதிகாரத்துவத்தை உள்ளார்ந்து நேசித்த தமிழ் மேட்டுக்குடிகளின் கோரிக்கையென்பதை நாம் பல முறைகள் கூறியிருக்கிறோம்.இந்த அதிகாரத்துக்கான நேசிப்பிடம் மக்களின் வாழ்வியல் சார்ந்த மதிப்பீடுகள்,அவர்களது உயிராதாரமான பொருள் வாழ்வு சார்ந்த கோரிக்கைகள் சிறிதளவும் அவர்களது(தமிழ் மக்கள்) நோக்கு நிலையிலிருந்து முன்வைக்கப்படவில்லை.இத்தகைய ஒரு அவலமான அரசியலைக் கடந்த காலத்துத் தமிழர்களின் ஓட்டுக் கட்சி அரசியல் செய்து வந்ததின் தொடர்ச்சியாகப் பற்பல அழிவுகள் நமக்கு வந்து சேர்ந்தன.


இத்தகையவர்களின் இருண்ட அரசியல் சூழ்ச்சிகளால் பலிகொள்ளப்பட்ட தமிழ்பேசும் மக்களின் பொருளாதார உயிர்வாழ்வானது சிதைந்து சின்னாபின்னமாகியபோது, நாம் அதைத் தொடர்ந்து அநுமதித்து வருவதற்கானவொரு அரசியலைத் தமிழரசுக் கட்சியென்ற "ஏகாதிபத்தியத்தின் கைக்கூலித் தமிழ் வக்கீல்கள் அடங்கியவொரு கூட்டம்" மிகக் கயமையானமுறையில் எமக்குள் திணித்தது.அது இலங்கைத் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமது நலன்சார்ந்த மதிப்பீடுகளால் கிரகித்துக் கணித்துக்கொண்டு நம்மீது சவாரி செய்தது.இத்தகையவொரு பாரம்பரியமிக்க கட்சியின் காலவதியாகிப்போன தலைவர் ஆனந்த சங்கரிக்கு இந்திய அநுசாரணையுடன்,ஊக்குவிப்புடன்,பரிந்துரைப்போடு "யுனெஸ்கோ விருது" வழங்கப்படுகிறது.இது விருதுகள் குறித்துப் பிரமிப்புகளைக்கொண்ட தமிழர்களுக்குத் துரோகமாகவும்,தமிழ்பேசும் மக்களுக்குத் துரோகஞ் செய்த ஆனந்தசங்கரிக்கு வழங்குவது முறையில்லையென்றும் சிறார்கள் கருத்தாடுகிறார்கள்.

இங்கே இத்தகைய விமர்சனங்களுடாக மறைக்கப்படும் அரசியலைப் புரிவது அவசியம்.சகாத்திய அகடமி விருதிலிருந்து நோபல் விருதுவரை அரசியல் நோக்கம் மறைமுகமாக இருக்கிறது.இந்த அரசியலுக்குள் ஆதிக்க சக்திகளின் ஆர்வங்கள்,பொருளாதார,அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன.இதைக் காரணமாகக் கண்டுகொள்ள முடியாத தமிழ்ச் சிறார்களுக்கு "துரோகி ஆனந்த சங்கரிக்கு விருதா" என்ற ஆத்திரம்.இது இயல்பாக வரக்கூடியதுதாம்.தமிழ்பேசும் மக்களின் இன்றைய அவல நிலைக்குத் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தாய்க் கட்சியிலிருந்து அன்றய தமிழர் மகாசபை(மகாதேவா: ஐம்பதுக்கு ஐம்பது...) வரை ஆழம் காணமுடியாத துரோகங்கள் நிறைந்த வரலாறு காரணமாகிறது.இதையெல்லாம் கருத்தில்கொள்ளும்போது ஆனந்த சங்கரியென்ற அரசியல் சகுனிக்கு விருது வழங்க முனையும் இந்தியாவுக்குப் பல ஆர்வங்கள் காரணமாவது நாம் புரிந்துகொள்ளத் தக்கதுதாம்!


இந்த விருதுகளினூடாகத் தனது நலன்களைக் காப்பதற்கானவொரு அரசியல் தலைமையைத் தமிழ்பேசும் இலங்கத் தமிழர்களிடம் தோற்றுவித்து,ஒளிவட்டம் கட்டும்போது,இத்தகைய ஆனந்த சங்கரிகள் மக்களின் அகிம்சைத் தலைவர்கள்,ஜனநாயகத் தலைவர்கள் என்ற காவடி ஏற்றப்பட்டு, உலக அரசியல் அரங்குக்கு அறிமுகமாக்கப்படுவது இந்திய அரசியல் விய+கத்தை இலங்கைக்குள் இழுத்து வந்து, அதை உலக அரங்கில் நியாயப்படுத்துவதற்குத்தாம்.இலங்கையில் இதுவரை ஆயுதப்போராட்டத்தைச் செய்யும் புலிகளை வெறும் ஆயுதக் குறுங் குழுவாக்கிய இந்தியா, இப்போது அந்தக் குறுங்குழுவுக்கு நிகரானவொரு அரசியல் தலைமையைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணிப்பதற்கும் அதையே தமிழ்பேசும் மக்களின் நியாயமான தீர்வுக்கானவொரு பெரும் சக்தியாவும் தூக்கி நிறுத்துவதில் இத்தகைய விருதுகள் முனைப்படைகின்றன.

சாரம்சத்தில் இலங்கையின் இனப்போராட்டமானது அந்நியத் தலையீட்டுக்குள் வீழ்த்தப்பட்ட வரலாறானது காலனித்துவக் காலத்திலிருந்தே தோற்றம் பெற்றிருப்பினும் அதை முற்றுமுழுதாக இந்தியச் செல்வாக்குக்குள் இறுகத் திணிப்பதற்கு இந்த ஆனந்த சங்கரிகள் அவசியமாகிறார்கள்.கூடவே ஆனந்த சங்கரியென்ற தமது கைக்கூலிக்கு சர்வதேச விளம்பரத்தையும், அங்கீகாரத்தையும் கோரும்போது, புலிகளின் கொலை அச்சுறுத்தலில் இருந்தும் தப்பிக்க வைப்பதற்கு இந்தியா மிகவும் பிரயத்தனப்படுகிறது.இன்றைய தமது நோக்கங்களைச் செவ்வனே செய்வதற்கும்,அதைக் "காலிப் பயல்" ஆனந்த சங்கரிய+டாக நியாயப்படுத்தவும், இந்த ஆனந்த சங்கரி அவசியமாகும்.இதைப் பொருட்படுத்திப் புலிகள் "ஆனந்த சங்கரியைப் போட்டால்" இலக்ஷ்மன் கதிர்காமனின் கொலை தந்த நெருக்கடியைவிட ஆனந்தசங்கரியின்மீதான கொலை மிகப்பெரும் அவப் பெயரையும் அரசியல் பின்னடைவையும் புலிகளுக்கு ஏற்படுத்தும்.இதை எதிர்பார்த்திருக்கும் இந்தியா நிச்சியம் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஆனந்த சங்கரியைத் தனது கூலிப்படையால் ஒரு நாள் கொன்று, புலிகள்மீது அரசியல் பின்னடைவைச் செய்யும்.ஒரு கல்லில் இரு மாங்காய் விழுத்த முனையும் இந்திய-இலங்கை இராஜதந்திரத்தின் ஒரு வெளிப்பாடே இந்த விருதும்,ஒளிவட்டமும்.


ஆனந்த சங்கரிக்கு அறிவு மங்கிப் பதவி ஆசை,ஆனால் இலங்கை-இந்திய இராஜ தந்திரமோ தமிழ் மக்களை அவர்களது தலைமையாலயே கருவறுக்கிறது.இதில் இவர்கள் பெரிய சாதனையைச் சாதித்தே வருகிறார்கள்.

புலிகள் அரசியலைக் காவு கொடுத்து இன்று இருபது வருடங்களுக்கு மேலாகிறது.எப்போது துரையைப்பாவைக் கொன்றார்களோ அன்றே அவர்கள் அரசியல் மக்குகள் ஆனார்கள்.இதிலிருந்து மீண்டு ஒரு புது யுகம் தமிழ்பேசும் மக்களுக்கு உதயமாவதற்குப் புலிகள் தம்மைத் தயார்ப்படுத்தாதவரை இத்தகைய அந்நிய அரசியல் விய+கத்தை உடைத்தெறிய முடியாது.

புலிகள் என்ன செய்தாகவேண்டும்?

தமிழ்பேசும் மக்களின் நலன்களை மையப்படுத்திய கோரிக்கைகளை முன் வைத்து அவர்களைப் போராடத் தூண்டுவதும்,தமிழ் இடதுசாரிகளை தமது வன்முறைக்குப் பலியாக்காது அவர்களைச் சுதந்திரமாக இயங்க விடுவதும்,அத்தகைய தரணத்தில் மக்களின் நலன்சார்ந்து தமது அமைப்பை மத்திய குழுவின் ஆதிக்கத்துள் கொணர்வதும்,நியாயமான உட்கட்சி ஜனநாயகத்தைக் கோரித் தலைமையைத் தோற்றுவதும், புலி இராணுவத்தைப் புரட்சிகர யுத்த தந்திரோபாயத்துக்குள் திணித்து, அவர்கயைப் புரட்சிப்படையாகக் கட்டிக் கொள்வதும் அவசியமாக இருக்கிறது.இதனடிப்படையில் புரட்சிகர அரசியலை உள்வாங்கிச் சர்வதேச அரசியலை முன்னெடுக்காதுபோனால் புலிகளின் அழிவோடு, தமிழர்களின் அனைத்து உரிமைகளும் அம்போதாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
15.09.2004

22 comments:

Anonymous said...

அட போங்கண்ணா எல்லோருமே
(அப்பாவி)ஈழத்தமிழனை எவ்வளவுக்கு
விலைக்கு விற்கமுடியுமோ அவ்வளவுக்கு விற்றுவிட்டார்கள் இனி
நாம கட்டிருப்பதற்கு கோவணம் கூட
மிஞ்சுமா என்பது சந்தேமே.

சின்னா

Sri Rangan said...

//அட போங்கண்ணா எல்லோருமே
(அப்பாவி)ஈழத்தமிழனை எவ்வளவுக்கு
விலைக்கு விற்கமுடியுமோ அவ்வளவுக்கு விற்றுவிட்டார்கள் இனி
நாம கட்டிருப்பதற்கு கோவணம் கூட
மிஞ்சுமா என்பது சந்தேமே.//


சின்னா தங்கள் கருத்துக்கு நன்றி.

உண்மையைச் சொல்லுறீங்கள்.உண்மைக்கு முன்னால் நான் எதையுரைப்பேன்?

Anonymous said...

what do you want to say? Can you understand your Tamil?
Oh God help him to write.

Anonymous said...

//....இதை எதிர்பார்த்திருக்கும் இந்தியா நிச்சியம் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஆனந்த சங்கரியைத் தனது கூலிப்படையால் ஒரு நாள் கொன்று, புலிகள்மீது அரசியல் பின்னடைவைச் செய்யும்.ஒரு கல்லில் இரு மாங்காய் விழுத்த முனையும் இந்திய-இலங்கை இராஜதந்திரத்தின் ஒரு வெளிப்பாடே இந்த விருதும்,ஒளிவட்டமும்....//

இதைத்தான் புலிகளும் ஈழத்தவரும் ஆரம்பத்திலிருந்து சொல்லி வருகிறார்கள். ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் போன்றவர்களுக்கும் இது தான் 'மாற்றுக்கருத்து' கட்சியால் நடந்தது.
புலியைக்கேட்டால் ரஜனி திரிணகமவுக்கும் இது தான் நடந்தது, கேதீஸ் லோகநாதனுக்கும் இவ்வாறு தான் என்கிறார்கள்.
இதைப்போய் பந்தி பந்தியாக எழுதி இடத்தையும் நேரத்தையும் வீணாக்குகிறீர்கள் !!!!!

Sri Rangan said...

//இதைத்தான் புலிகளும் ஈழத்தவரும் ஆரம்பத்திலிருந்து சொல்லி வருகிறார்கள். ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் போன்றவர்களுக்கும் இது தான் 'மாற்றுக்கருத்து' கட்சியால் நடந்தது.
புலியைக்கேட்டால் ரஜனி திரிணகமவுக்கும் இது தான் நடந்தது, கேதீஸ் லோகநாதனுக்கும் இவ்வாறு தான் என்கிறார்கள்.
இதைப்போய் பந்தி பந்தியாக எழுதி இடத்தையும் நேரத்தையும் வீணாக்குகிறீர்கள் !!!!!//



நண்பரே,வணக்கம்!


நீங்கள் மிகப் புத்திசாலித்தனமாக எனது கருத்தில் ஒரு பகுதியைத் துண்டித்துக் கருத்துச் சொல்கிறீர்கள்.மேலோட்டமாகப் பார்த்தால் தர்க்கம் நிறைந்ததுபோல்தாம் தெரியும்.ஆனால் இது குதர்க்கமானது.


இன்றைய இலங்கை அரசியலில் அந்நிய சக்திகள் புகுந்து விளையாடும் படுகொலைக் களத்தைத் திட்டமிட்டுப் புலிகளிடம் தள்ளிவிட்டு,அந்த அந்நியச் சக்திகளோடு-இலங்கைப் பயங்கரவாதச் சிங்கள அரசுக்கு நியாயம் கற்பிக்கும் தங்கள் கருத்துக்கு எந்த மக்கள் நலனும் இருக்க முடியாது.இதுதாம் நமது காலத்து இழி நிலை.


விட்டால் பண்டாரநாயக்காவைக்கூடப் புலிகள்தாம் போட்டார்கள் என்பீர்கள்.


இங்கே எவரும் பாசிசப் புலிகளை நியாயப்படுத்தவில்லை.


அவர்களின் இந்த மனிவிரோதக் கொலைகளால்தாம் இன்றைய இந்தவகை அரசியல் சூழ்ச்சியே நமது நாட்டில் நிகழ்கிறது.


இவ்வளவுதூரம் கொலைகளும்,அழிவும் தமிழ் வலதுசாரியக் கழிசடைத் தமிழரசுக்கட்சியாலும் அதன் வழி வந்த கூட்டணியாலுமே நிகழ்கிறது.இவர்கள் 1958 பண்டா செல்வா ஒப்பந்தத்தை ஏகாதிபத்திய அமெரிக்காவோடிணைந்து எங்ஙனம் செயலிழக்கச் செய்தார்கள் என்பது வரலாறு அறியும்.அந்த நேரம் அமிர்தலிங்கம் கோஷ்ட்டி வடபுலத்தில் சிங்கள எழுத்துக்களைத் தார் ப+சியழித்து பண்டார நாயக்காவைப் படுகுழியில் தள்ளியதும் நாம் அறிந்தது.


இதைத்தாம் புலிகளும் மாறிமாறி வரும் பேச்சு வார்த்தைகளிலும் பின்பற்றுகிறார்கள்.


எனவேதாம் நிலைபெறும் இனவாதமும், அதன் தொடர்ச்சியாய் ஆளும் வர்க்கங்களும் தமது நலனையும்,அதிகாரத்தையும்,பாராளுமன்றச் சகதியையும் காத்து வருகிறார்கள்.

நாங்கள் நேரத்தைத்தாம் வீணாக்கிறோம் ஆனால் மக்களின் வாழ்வையல்ல.


நீங்களோ நாம் கூறும் மற்றைய கருத்துக்கள்மீது எந்த எதிர்வினையுஞ் செய்யாது, குதர்க்கத்துக்கு வசதியாகத் துண்டுக் கருத்துக்கு துணையாய் நமது மக்களின் இழிநிலையைத் துணைக்கழைக்கிறீர்கள்.


இன்றைய இலங்கை அரசியல் போற போக்கில் உங்களைப் போலத்தாம் பலர் எரியிற வீட்டில் பிடுங்கிறது மிச்சம் என்கின்றனர்.நமது நிலை இதுவல்ல.


இன்னும் சொல்வோம்,புலிகளைமட்டுமல்ல! மக்களின் விரோதிகள் "ஆனந்தசங்கரிவேடத்தில"; இன்னும் பலர் இருக்கிறார்கள்.இவர்கள் இப்போது மனிதவுரிமை, ஜனநாயகம்,அகிம்சை,இந்தியா என்று புலம்புகின்றனர்.இவர்களையும் தோலுரிப்போம்.கொஞ்சம் பொறுங்கோ.

Anonymous said...

Sri rangan,
Neengal puligali thaya pannathane ippadi eluthukereegal!!

puli ungalai sudathu, payapapda vendam

Anonymous said...

சிறீரங்கன் அவாகளே!
உங்களையும் ரயாகரன் அவா;களையம்
புலிகள் தங்களது கட்சி ஆலோசகாகளாக நியமிக்க இருப்பதாக செய்தி ஒன்று அடிபடுகிறது.
அப்படி அவாகள் கேட்டால் நீங்கள் ஓம் என்பீர்களா?
தட்டிக்கழிக்கக் கூடhது என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

Sri Rangan said...

//Sri rangan,
Neengal puligali thaya pannathane ippadi eluthukereegal!!//

right!

//சிறீரங்கன் அவாகளே!
உங்களையும் ரயாகரன் அவா;களையம்
புலிகள் தங்களது கட்சி ஆலோசகாகளாக நியமிக்க இருப்பதாக செய்தி ஒன்று அடிபடுகிறது.
அப்படி அவாகள் கேட்டால் நீங்கள் ஓம் என்பீர்களா?
தட்டிக்கழிக்கக் கூடhது என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.//

Admitting to being wrong proves that we have grown wiser.

regards

Sri Rangan

Anonymous said...

Somtimes Puligal think wel.
u are the advisers!! m!

Anonymous said...

ஐயா சிறீரங்கன்,

உங்கள் கட்டுரையில் இருந்து நான் விளங்கிக்கொண்டது என்னவென்றால் கலங்கிய ஈழப்பிரசினையில் எல்லோரும் மீன்பிடிக்கிறார்கள் என்பதே. இக்கருத்தில் எனக்கு மிக உடன்பாடே. ஆனால் நீங்கள்தான் எதற்கெடுத்தாலும் 'புலிப்பாட்டு'ப் பாடி வந்தீர்கள். திடீரென்று உங்களுக்கு ஆனந்தசங்கரியைப் பிடிக்காமல் போய்விட்டதால் இந்தியா அவரைப் போட்டுத்தள்ளும் என்று சொல்லுகிறீர்கள்.
இதில் எனது கருத்து என்னவென்றால் , புலிகள் கூட தாங்கள் செய்த குற்றங்களுக்கு இந்தியா, புளொட், ஈபிடிபி, ஸ்ரீலங்கா....போன்றவற்றை குற்றம் சாட்டுகிறார்கள். நீங்கள் மேலே கூறிய கருத்தால் அவர்களின் நியாயப்படுத்தல்களும் சரியாகிறது என்பது தான்.

மற்றும் \,
//..நீங்கள் மிகப் புத்திசாலித்தனமாக எனது கருத்தில் ஒரு பகுதியைத் துண்டித்துக் கருத்துச் சொல்கிறீர்கள்.மேலோட்டமாகப் பார்த்தால் தர்க்கம் நிறைந்ததுபோல்தாம் தெரியும்.ஆனால் இது குதர்க்கமானது..../

நீங்கள் தான் ஆனந்தசங்கரியை இந்தியா 'போட்டுத்தள்ள' போகிறதென்பதை 'கொட்டை' எழுத்தில் பட்டியலிட்டது! பந்தி பந்தியாக எழுதத்தெரிந்த உங்களுக்கு அதில் 'கொட்டை' எழுத்திலோ அன்றி கீழ்கோடிட்டோ வருபவையின் முக்கியத்துவம் என்ன என்பது தெரியாமலிருப்பது அதிசயம் தான்!!!!!

Sri Rangan said...

இங்கேயும் நீங்கள் உங்கள் மனவிருப்பத்தின்படியேதாம் கருத்தாடுகிறீர்கள்.


நாம் எதற்கெடுத்தாலும் "புலிப்பாட்டுப்பாடுவது" எதன் பொருட்டெழுந்தது?


ஈழத்தேசமெங்கும் புலிகளின் அரச ஜந்திரத்தின் ஆதிக்கம் மட்டுமே நீடித்து நிலைத்திருக்கும்போது,செயலிழந்து மற்றய சக்திகள் பற்றியோ அன்றித் தொடர்ந்து பலவீனமாக நிலவிய ஸ்ரீலங்காவின் ஆதிகத்தையோ பேசமுடியாது.புலிகளின் ஆதிக்கமும்,அவர்களின் வனமுறை;சார்ந்த ஜந்திரமும் ஈழ மக்களின் சமூக சீவியத்துள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்போது, அவர்களைத்தாம் பாட்டில் இணைத்து உச்ச ஸ்த்தாதியில் பாடினோம்!


இப்போதும் அவர்களையேதாம் பாடுகிறோம்.

அவர்களின் நிர்வாக ஜந்திரம் காட்டமாக நிலைத்து நீடித்திருக்கும்வரை, அவர்கள்தாம் ஈழமக்களின் அனைத்து விவகாரத்துக்கும் காரணர்களாக இருப்பார்கள்.எனவே அவர்களைப் பாடுவதுதாம் சாத்தியம்.இடையில் வலுவாகக் குட்டையைக் கலக்கி அரசியல் நடாத்தும் பற்பல தீய-அந்நிய சக்திகளை நாம் அம்பலப்படுத்துகிறோம்.


அடுத்து ஆனந்தசங்கரியைத் திடீரெனப் பிடிக்காமல் போனதாகக் கூறுகிறீர்கள்.


எமக்கு எப்போது ஆனந்தசங்கரி பிடிப்பானவராக இருந்தார்?


இவர்களின் மாபெரும் தலைவரான பெரியவர் செல்வாவையே நாம் பாரிய விமர்சனமூடாக நிராகரித்தபோது, ஆனந்தசங்கரி எமக்குப் பிடித்தவராக இருந்தாரா?


இங்கே எவரையும் நாம் தனிப்பட்ட முறையில் பிடிப்பவர்,பிடிக்காதவர் என்று பார்ப்பதில்லை.


மக்களின் நலனைத் தூக்கிப்பிடிக்கும் எல்லோரையும் பிடிக்கும்.


ஆனால் ஆனந்தசங்கரிபோன்றோர்கள் மக்களின் நலனைச் சொல்லித் தமது நலனை அடைய முனைவதால்தாம் அவர்களை நாம் அம்பலப்படுத்துகிறோம்.

மக்களின் நலனை முன்னெடுக்கும் எவரையும் பிடிக்கும்.அது மகிந்தாவாயிருந்தாலும் சரி, அல்லது பிரபாகரனாக இருந்தாலும் சரி, இல்லை ஆனந்தசங்கரியாக இருந்தாலும் சரி.

ஆனால் இவர்கள் எல்லோருமே மக்களின் நலனை முன்னெடுக்காத பாசிஸ்டுக்களே!-இதுவரை நாம் காணும் அரசியலில் இவர்கள் அனைவரும் மக்கள் விரோதிகளே!-அந்நியக் கைக்கூலிகளே!

Anonymous said...

நமது சமூகம் ஒரு இழி சமூகம் என்றால்
என்னை பொறுத்தவரை இது மிகையல்ல
தொலைநோக்கு பார்வையற்றது.

ஒன்று துரோகி அல்லது வன்மம் கொண்ட இழிவான கீழ்த்தரமான சிந்தனை போக்கு இதை தாண்டி வேறு
கண்ணோட்டத்தில் உள்வாங்கிக் கொள்வதில்லை.

Sri Rangan said...

//நமது சமூகம் ஒரு இழி சமூகம் என்றால்
என்னை பொறுத்தவரை இது மிகையல்ல
தொலைநோக்கு பார்வையற்றது.

ஒன்று துரோகி அல்லது வன்மம் கொண்ட இழிவான
கீழ்த்தரமான சிந்தனை போக்கு இதை தாண்டி வேறு
கண்ணோட்டத்தில் உள்வாங்கிக் கொள்வதில்லை.//



நாமெல்லோரும் தப்பிககும்; இடம் இதுதாம்! நமது சமூகத்தைக் குற்றஞ் சொல்வதும்,பின்பு தூரநோக்கு...
அன்பரே தூர நோக்கென்று ஒன்று எப்படியுருவாவது?அந்தத் தூரநோக்கு எவரது நலன்களோடு சாத்தியமாகிறது இன்று?இத் தூர நோக்கு எங்ஙனம் நமது சமூகத்திடம் அற்றுப் போயுள்ளது?
இவை கேள்விகள்.இதற்கான விடை மிகச் சுலபம்.


நம்மை,நாமே விருத்திக்கிட்டுச் செல்லமுடியாதவொரு ஆதிக்கம்.புறத்திலும்,
உள்ளிலுமாகவிருந்து கருவறுக்கும் அதிகாரத்துவம்.
பல நூறு வருடங்களாக அந்நியர் நம்மைக் கட்டிப்போட்டு நமது அனைத்து வளங்களையும் திருடிய காலனித்துவம்.கடந்த ஈராயிரமாண்டுகளாய்
நமது சமுதாயத்தின் அறிவுப்பரப்பை ஆக்கரமித்திருக்கும் பார்ப்பனிகயக் கருத்தியல்தளம்,
சமூக வளர்ச்சியற்ற பழைய உற்பத்தி முறைகள்,உற்பத்திச் சக்திகள் வளராத உற்பத்தியுறவுகள்,
முதலாளித்துவ வளர்ச்சியே அறியாதவொரு சமுதாயத்திடம் எல்லா வகைக் காரணிகளும் இருக்கும்.


வளர்ச்சிடைந்த ஏகாதிபத்திய நாடுகளில்தாம் என்ன வாழ்கிறது?


படு முட்டாள்தனமான முதலாளித்துவத்தின் கருத்தியல் பரப்புரைகளை
இந்த மக்கள் நம்பவில்லையா?


எங்கும் ஆதிக்க சக்திகள் தமது நலன்களை முதன்மைப்படுத்திய வகைகளிலேதாம் அனைத்தையும் அநுமதிக்கும்போது, நமது சமுதாயத்திடம் தூரநோக்கு என்றும்,இழிநிலையென்றும் மக்களை நோவது சரியாகாது.நமது அமைப்புகள்,அதிகாரத்துவங்களை முதலில் கேள்விக்குட்படுத்துவோம். பின்பு அத்தகைய கேள்விகளை,
அதனூடாக வந்தடையும் கருத்துக்களை மக்களிடம் சென்றடையாது தடுக்கும் ஆதிக்கங்களைத் தெளிவாகப் புரிவோம்.இவைதாம் இப்போதைய அவசியமானவொரு வேலை.


கடந்த காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளெல்லாம்
எந்த வகையில் தமது நலன்களை மற்றவர்களைக் கொன்று காத்தார்கள் என்பதும்,அமெரிக்கா முதல் ஆவுஸ்ரேலியாவரை நாடுபிடித்துக் குடியேறி, அப்பாவி மண்ணின் மைந்தர்களைக் கொன்றழித்து,
இப்போது தமது தாயகமெனக் கருத்தாடும் வெள்ளையின வெறியும்,காலனித்துவமும்,அதன்பின்பான நவ காலனித்துவமும் என்ன வகையில் செயற்படுகின்றது?இவையெல்லாமும்தாம் இழி நிலை!


ஆக நமது சமுதாயத்திடமிருக்கும் மக்கள் விரோதக் கருத்துகள்,அறிவுத் தேட்டங்கள் யாவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆதிக்க சக்திகளின் உயிர்த்திருப்போடு உறவுடையது.சமுதாயத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைக்காதவரை அனைத்துப் பிற்போக்கான கூறுகளும் எமது சமூகத்துள் நிலவவே முடியும்.
இதுவொன்றும் பெரும் கண்டுபிடிப்பல்ல

Anonymous said...

சிறீரங்கன் அவர்களே!
ஆனந்தசங்கரி மட்டுமல்ல, புலிகள் மற்றம் கூட்டமைப்பினர்கூட இந்தியாவின் கவட்டுக்குள் கிடக்கத்தான் விரும்புகிறார்கள். ஆனால் ஆனந்த சங்கரியை மட்டும ;வ்வளவுக்கு நீங்கள் வைவது உங்களது சுய விளம்பரத்துக்ககத்தான். ஆஆனந்தசங்கரியின் விருதுபற்றி இவ்வளவுக்க குதிக்கிறீர்கள் என்றால் விருதுபற்றி உங்களுக்கு இருக்கும் மிகையான அங்கலாய்ப்பே. ஆனந்தசங்கரிபோன்றவர்கள் செத்தபாம்பு என்பதை நீங்கள் அறியமுடியமலிப்பதையிட்டு வருந்துகிறேன். இசத்தபாம்பினாலும் ஏதாவது பலன்கிடைக்குமென்றால் அதபற்றி யோசித்துப்பாருங்கள். ஆரேர்கிமாக இருக்கும். ம்றும்படி உங்கள் எழுத்துக்களில் உங்கள் பலவீனமே மேற்தெரிகிறது. உங்களிடமுள்ள குறையைக்கண்டுபிடிக்க முயற்சிசெய்யுங்கள். தத்துவம் பற்றியும் அரசியல் பற்றியும் பிறகு யோசிப்பம்.

Sri Rangan said...

//...ஆனந்தசங்கரிபோன்றவர்கள் செத்தபாம்பு என்பதை நீங்கள்
அறியமுடியமலிப்பதையிட்டு வருந்துகிறேன். இசத்தபாம்பினாலும் ஏதாவது பலன்கிடைக்குமென்றால்
அதபற்றி யோசித்துப்பாருங்கள். ஆரேர்கிமாக இருக்கும். ம்றும்படி உங்கள் எழுத்துக்களில் உங்கள் பலவீனமே மேற்தெரிகிறது. உங்களிடமுள்ள குறையைக்கண்டுபிடிக்க முயற்சிசெய்யுங்கள். தத்துவம் பற்றியும் அரசியல் பற்றியும் பிறகு யோசிப்பம்.//




வணக்கம்,மீளவும் கருத்துக்களைத் திசைதிருப்பும்...

பரவாயில்லை.

உங்களுக்கு நாம எழுதுவது சுய விளம்பரத்துக்காகத் தெரிகிறது.

அது சரி நாங்கள் விளம்பரஞ் செய்வது இருக்கட்டும்.அது என்ன செத்தபாம்பில பலன் கிடைக்கிறது?


ஓ தோலையுரிப்பது பற்றியா சொல்கிறீர்கள்!


இதுதாம் தோலிருக்கச் சுளையுண்ணுதல் என்பதோ?


எப்பவும் நடுத்தர வர்க்கக் கண்ணோட்டமானது மக்களை கருத்தியல் ரீதியாக வென்றெடுத்து,அவர்களை நம்பி அணிதிரள முடியாத பலவீனத்தோடு செயற்படும்.அதை நிரூபிப்பதுபோல்தாம் உங்கள் கருத்துக்களும் இருக்கிறது.


நாங்கள் செத்த பாம்புகளை நம்புவதில்லை.


மக்களைத்தாம் நம்புகிறோம்.


உங்களுக்குச் செத்த பாம்பான ஆனந்தசங்கரி, இந்தியாவுக்கும்,உலகுக்கும்அவசியமாக இருக்கிறது.


ஒரு உதாரணத்துக்குச் சொல்வோம்:


ஆவ்கானிஸ்தானின் இன்றைய அதிபர் கசாயை யாராவது பிரபல்யமான மனிதராக அறிந்திருந்தார்களா?


அவ்கானிஸ்தான் மக்களுக்கு இவர் குறித்து பிரபல்யமாத் தெரிந்திருந்ததா?


தலிபானை வீழ்த்திய ஏகாதிபத்தியம் தன்னால் வளர்க்கப்பட்ட பிராணியை அதிபராக்கித் தனது காரியத்தைச் செய்கிறதா?


அதுபோலத்தாம் ஆனந்தசங்கரிக்கும் அந்நிய சக்திக்களுக்குமான உறவு-அவசியப்பாடுகள்.


இதைத்தாம் நாம் குறித்துரைக்கிறோம்.


அடுத்து...இவரை அம்பலப்படுத்தி எமக்கு விளம்பரம் தேடுகிறோம்.


நீங்கள் சொல்வது சரிதாம்.


தத்துவம் பற்றியும் அரசியல் பற்றியும் பிறகு பார்க்கலாமென்று முடிவெடுத்துச் சுமார் கால் நூற்றாண்டாச்சே!


பிறகெதற்கு மீளவும் அதை ஞாபகப்படுத்துகிறீர்கள்.


ஓ இன்னும் நாம் பலனைப் பெறாததால்தாம் உங்களுக்கு இப்படியொரு சந்தேகம் வந்திருக்கு.


அதாவது "என்னடா நாம இன்னும் பலனைப் பெறவில்லையே இதுவரையும் தத்துவத்தையா,அரசியலையா பேசிகிறோம்"என்று எண்ணுகிறீர்கள்.


...ம்...என்ன செய்ய? இது உங்கட நிலை.தெரிகிறது!-புரிகிறது!!


நான் விருதுகளின் பின்னே மறைந்திருக்கும் ஆர்வங்களைச் சொல்லும் போது,
நீங்கள் அதைத் திருப்பி நமக்குப் பலவீனம் என்கிறீர்கள்.
பலவீனமின்றியிருந்திருந்தால் நாம் இலங்கையில் இருந்திருப்போமல்லவா நண்பரே!


நம்மிடம் சரியான பலவீனமுண்டு.அதை மறைக்க முடியுமா?


அது சரி ஆனந்த சங்கரிக்கு விருது கிடைத்தது,"உண்மைக்கு,நியாயத்துக்கு,அகிம்சைக்கு,
எளிமைக்கு,
ஜனநாயகத்துக்கு,கருத்துச் சுதந்திரத்துக்கு,எங்கள் கருத்துகளின் உண்மைக்குக் கிடைத்த வெற்றி"
என்று, தேனீ இணையமும்,ரீ.பீ.சீ வானொலியும்,புளொட் அண்ணன் ஜெகநாதனும் விழுந்து
விழுந்து கத்துகினம் எதற்குத்தாம் இந்தக் கூச்சல்?


ஏதோ "செத்த பாம்பு,விருது பற்றிய மாயை" என்று எங்களுக்குச் சொல்கிறீங்க.
அவங்களோ உலகமெல்லாம் பீறிட்டுக் கத்துகிறாங்கள்.ஒரே குழப்பமாக இருக்கு.


ஓ!... அதுதாம் சொல்லீட்டிங்களே நம்மட பலவீனம் அதுங்கோ!

Anonymous said...

Srirangan,
Sorry
My heart felt condolances..

Anonymous said...

srirangan
Aaga ungalukku pirchchanai
தேனீ இணையமும்,ரீ.பீ.சீ வானொலியும்,புளொட் அண்ணன் ஜெகநாதனும் maddumthan.

vaaaaalga valamudan.

கொழுவி said...

//விட்டால் பண்டாரநாயக்காவைக்கூடப் புலிகள்தாம் போட்டார்கள் என்பீர்கள்.//

அப்ப பண்டார நாயக்காவை புலிகள் கொல்லவில்லையா..? அது சதி.. யார் அது ஆனந்த சங்கரி..

Anonymous said...

தொலைநோக்கு பார்வையற்ற சமூகம்
என நான் சுட்டுவிரல் காட்டியது
இவையேதாம்

உங்களிடமிருந்து இதற்கான பதிலை
எதிர்பார்த்தேன் பதில் என் புரிதலுக்கு
அப்பாலுள்ளது. எமது அடிப்படை
சமூககட்டமைப்பிலிருந்தே இதற்கான
பதிலை தேடவேண்டும்.


சின்னா

Anonymous said...

கொடுமையிலும் கொடுமை

Sri Rangan said...

ஃஃஅப்ப பண்டார நாயக்காவை புலிகள் கொல்லவில்லையா..? அது சதி.. யார் அது ஆனந்த சங்கரி..ஃஃ


கொழுவி,இந்த நக்கல் ...................தான் வேண்டாமென்கிறது!நான் கேட்ட சாமானை அனுப்பிவைக்காத உமக்கு நன்றி.எனது வலைக்கு உலை வைக்கிறீரோ?அல்ல நல்ல வடிவத்தைத் தயாரிக்கிறீரோ இன்னும்?

Anonymous said...

ஸ்ரீரங்கன்
புலிகள்பபற்றியும், இளம்போரளிகளை; பற்றியுமான உங்கள் பார்வை சரியானதுதான். ஆனால் பாசிசப்புலிகள் பாசிசப்புலிகள் என்று வரிக்குவரி எழுதிக்கொண்டு அவர்களுக்கு ஆலோசனையும் வழங்குவது வியப்பாக இருக்கிறது. அல்லது பாசிசம் என்பதன் அர்த்தம்புரியாமல் எழுதுகிறீர்களோ?
ஆனந்த சங்கரி போன்றவர்களால் எதுவும்செய்யமுடியாது. ஆனந்தசங்கரி மட்டுமல்ல ஈபிடிபி ரிபிசிபோன்றவையாலும் எதுவும் செய்யமுடியாது. உங்கள் பாசையில் சொல்லப்போனால் மக்களிடமிருந்தது அந்நியப்பட்டு அந்த மக்களிடம் செல்லவேமுடியாமல் தொலைதூரம் வந்துவிட்ட அல்லது புலிகளால் விரட்டப்பட்ட அவர்களால் என்னதான் செய்துவிடமுடியும்? வெளிசக்திகள் இவர்களைப்பயன்படுத்த முயலும் என்பது உண்மையாயினும் எதுவும் செய்த விடமுடியாது. ஆனால் இவர்களால் உங்கள் பாசிசப்புலிகளிறகு எதிரான சிறுசிறு அதிர்வுகளைக்கொடுக்கமுடியும். தமிழ்மக்கள் மத்தியில் விருட்சமாக விழுதுகள் பரப்பிநிற்கும்உங்கள் பாசிசபுலிகளை எதுவும் செய்யமுடியாமல் எல்லோரும் திண்டாடும் நிலையில் பாசிசத்திற்கு எதிராக ரிபிசி என்றால் என்ன ஆனந்தசங்கரி என்றால் என்ன உங்கள் புளொட் ஜெகநாதன் என்றால் என்ன சிறுசிறு அதிர்வுகளைக்கொடுத்தால் நீங்;கள் ஏன் அவற்றைத் தாங்கிக்கொள்கிறீர்கள் இல்லை. அல்லது இவர்கள் எல்லாம் புலிகளைவீழ்த்தி தமழ்மக்களுக்கு தலைமை கொடுத்துவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களா?
அப்படி நம்பினால் நீஙகள் பாவம் ஸ்ரீரங்கன்.

இப்போதைக்கு பல புதியபுதிய கருத்துக்கள் தோன்றுவதை வரவேற்பதும், பாசிசம் மற்றும் உயிர்பிடுங்கும் கொலைகளுக்கெதிராக எழும் குரல்களை ஆதரிப்பதல்ல பலவீனப்படுத்தாமல் இருப்பதும் அவசியம். கொலைகள் எல்லாரும் தான் செய்கினம் என்றும் தட்விட்டுப்போகாது நிறுவனமயப்பட்ட கொலைகளையும் நிறுவனங்களின் பலம் மற்றும் யாதர்த்தங்களையும் ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும்.

ஸ்ரீரங்கd எங்களை நாங்களே திருப்திப்படுத்திகொள்ளவதால் எதுவித பலனுமில்லை. எங்களிடமுள்ள குறைகள் கண்டு அதைநிவர்த்திசெய்வது முதல் முக்கியம்.; குறைகளோடு நாங்கள் பேசும் சித்தாத்தங்களும், அரசியலும் பலவீனமானதாகவே இருக்கும்.
இந்த அரங்குகளில் தோல்விபோகா விவாதம் வீண்.

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...