அந்நிய விய+கமும்.
>>இலங்கையின் ஓட்டுக் கட்சிகள்-போராளிக் குழுக்கள் அந்நியக் காலில் விழ்த்துவது இலங்கையின் எதிர்காலச் சந்ததியையே,எம் மக்களையும் தேசத்தையும் திருடும் யுத்தப் பிரபுக்களை நாம் அம்பலப்படுத்துவோம்-அறிவோம்.<<
(இலங்கையின் சிங்களக் கட்சிகளின் தலைவர்கள்தம் குழந்தை குட்டிகள் வெளிநாடுகளில்இன்று, இலங்கை இனப்பிரச்சனைக்காகவே ஒரு தேசிய அரசாங்கம் அவசியமாக இருப்பதாகவும்,அதன் வழி முழுமொத்தக் கட்சிகளையும் ஒரு நோக்கத்துக்குள் இணைத்து, இலங்கை இனங்களுக்குள் நிலவும் முரண்பாட்டைத் தீர்த்திடலாமென அரசியல் பரப்புரைகள் நகர்த்தப்படுகிறது.இத்தகைய பரப்புரைக்கு ஏலவே திட்டமிட்டு, கருத்தியல் தளமொன்றை மெல்லவுருவாக்கிய அரசியல் நகர்வுக்குப் பற்பல சிறு குழுக்களும்,புலிகளுக்கு எதிரான-புலிகளால் எதிர் நிலைக்குத் தள்ளப்பட்ட அமைப்புகளும்,அத்தகைய அமைப்பகளுக்குச் சாமரம் வீசிப் பதவிகளைப் பணத்தைப் பெறும் தனி நபர்களும்,இன்னும் ஜனநாயத்தையும்,அரசியல் அமைதியையும்,இனப்பிரச்சனையையும்-தீர்வையும்; அப்பாவித்தனமாகப் புரிந்த சாதரண நபர்களும் பக்கப்பலமாகவிருந்து, இந்தத் தேசிய அரசாங்கம் எனும் விய+கத்துக்கு மக்கள் கருத்தாரவுப் பலத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
படிப்பதும்,வாழ்வதும்போன்றே புலிப்பிரமுகர்களின் மனைவிமார்கள் குழந்தைகள்
வெளிநாட்டில் வாழ்வதும்,படிப்பதும் சாத்தியமாகியுள்ளது.-இதுவொரு அரசியல்.ஆனால்
நாமதைப் புரிந்து கொள்வது அவசியம்.இந்தவொரு முனையில் அமெரிக்க-ஐரோப்பிய அரசுகள்
எங்ஙனம் நேர்கோட்டில் சிந்திக்கின்றனவென்பதைக் கட்டுரையின் பின்பகுதியில்புரிந்து
கொள்ள முனைவோம்.)
சமீத்து அரசியல் காய் நகர்த்தலில் மலையக மக்கள் முன்னணியும்,இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் கூட்டாகவே ஆளும் இராஜபக்ஷ ஆட்சியுடன் இணைக்கப்பட்டதும்,அந்தக் கட்சிகளின் சுயதீனமான முடிவோ அல்லது அவைகளின் ஊசாலாட்டமான முதலாளித்துவ உள்ளடக்கத்தின் வினையாற்றலோ காரணமாக இருப்பதற்கல்லவென்பதும் பலருக்குப் புரிந்த விடையம்தாம்.கடந்தகாலத்திலிருந்து இன்றைய தேசிய அரசாங்கக் கருவ+லம் வளர்த்தெடுக்கப்பட்டது.இது முற்றுமுழுதான அந்நிய, அதுவும் இந்திய இராஜதந்திரத்தினது- ஒரு விய+கத்தின் விளைவானதென்பதும் அதை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிதி மூலதன-இராணுவ ஆர்வங்களினதும்,அத்தகைய ஆர்வங்களின் அரசியல் நகர்வும் ஒப்புதல்களோடு வழிமொழிந்திருப்பதும் இன்றைக்கு மேற்காணும் இரண்டு கட்சிகள் மலையகத்தமிழ் மக்களின் ஒத்திசைவாக இலங்கையரசுடன் இணைகின்றன.இங்கே இஸ்லாமியக் கட்சிகளை ஒரு ஓரத்தில் இணைத்தும், இணைய விடாமலும் தடுத்துக்கொண்டு அரசியல் விய+கத்தை இந்திய அரசு தெளிவாக நகர்த்த முனைவதில் முனைப்பாக இருக்கிறது.
இத்தகைய ஒரு அரசியல் விய+கத் திட்டமிடலில் ஜே.வி.பீ.போன்ற கட்சியை வெறும் இனவாதக்கட்சியினுடைய உள்ளடக்கமாகக் காட்டியபடி அந்தக்கட்சியின் அட்டகாசமான இனத்துவ வெளிப்பாடாகவும் தாம் வழங்கும்-அல்லது பிரேரிக்கும் அரசியல் தீர்வுப் பொதிகளை எதிர்தொதுக்கும் சிங்களச் சமுதாயத்துக்குள் ஒரு பலமிக்கட்சியாகவும் அடையாளப்படுத்த விரும்பும் இந்தியா நமது மக்களினதும்,புலிகளினதும் பாரிய முரண்பாடான ஜனநாயக விழுமியத்தை இன்னும் கூர்மைப்படுத்திக் கொண்டே இத்தகைய ஒரு மிகத் திட்டமிட்ட அரசியல் நகர்வை வலு நிதானமாக நகர்த்தி வருகிறது!
ஈழக் கோசம்:
இந்தப் போராட்டம்,அதாவது ஈழத்துக்கான போராட்டம் என்பது சாரம்சத்தில் காலவதியாகிவிட்டது.இதைக் காலவதியாக்கிய ஜனநாயகத்துக்கான-இயல்பு வாழ்வுக்கான கோரிக்கைகள் புலிகளின் உள்ளார்ந்த அராஜகத்தின்-பாசிச அடக்கு முறைகளிலிருந்து மக்களின் குரல்களாகவும்,உரிமையாகவும் இனம்காணத்தக்கவொரு அரசியற் கோரிக்கையின் அதிமுக்கிய வெளிப்பாடாக முகிழ்த்தபோது,மக்களின் உரிமைகளை அழித்தொதுக்கும் ஒரு அராஜக இனவொடுக்குமுறையரசே தன்னை மக்களின்-தமிழ் பேசும் மக்களின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் கபடம் நிறைந்த அரசியல் நகர்வுக்கு இஃது பாத்திரமாகிறது.இப்போது"ஈழம்"எனும் அரசியற் கோசம் ஒருவிதக் கேலித்தனமான சொற்றொடராகப் பார்க்கப்படுவதும்,இத்தகைய கோசத்தால் அழிக்கப்பட்ட ஒரு இலட்சம் உயிர்களினதும்,சொத்துக்களினதும்,பாதிக்கப்பட்ட வாழ் சூழலினதும்,இடம் பெயர்ந்து அகதிகளான மக்களினதும் சோகம் கப்பிய வரலாற்றின் பிரிதியாக நம் முன் நிற்கிறது.இந்தப் போராட்டக் கோசம் எமது சந்ததிக்குச் சொல்லப் போகும் வரலாற்றுப்பாடமானது-துரோகம் நிறைந்த போராட்டத்தின் பலனாக-இந்திய-சிங்கள,அந்நிய அரசுகளின்- புலிகளின் அரசியலையல்ல.மாறாக எமது சமூகப் பண்பாட்டினது இயலாமையையும்,அதன் வீரியமற்றச் சிந்தனையோட்டத்தையும் வரலாறு பதிந்து செல்லும்.
கடந்த காலங்களின் வரலாறானது "அந்நிய ஆக்கிரமிப்புக்கும்,அழிவுக்கும்,கொலனித்துவ அடக்கு முறைக்கும் உட்பட்ட இந்திய நிலப்பரப்பு" என்பதாக இருக்கும்போது,அத்தகைய நிலைக்குள் மிகச் சுலபமாக வீழ்த்தப்பட்ட இந்தப் பாரிய அகண்ட நிலப்பிரதேசத்தின் இயலாமையென்பது அதன் சமூகப் புறநிலைகளையும்,பண்பாட்டுச் செழுமையற்ற அறிவுப் பரப்பையும் நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டும்போது,வெறுமனவே "நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததால் அந்நியர்களிடம் தோற்றோம்" என்பதாக இன்று சொல்வதுபோல், நாளை ஈழத் தமிழ் மக்கள் சொல்வதற்கு ஒன்று இருக்கும்.அது பெரும்பாலும் புலிகளென்ற ஒரு அமைப்பைக் காரணப்படுத்தும் சமூக உளவியலாக விரிந்து பொருள் வாழ்வுக்குள் பிரபாகரன் என்று வழங்கும்.இது காலத்தால் தவிர்க்க முடியாத வரலாற்று நிகழ்வாக மாற்றப்பட்டு வரும் அரசியலின் வெளிப்பாடே இப்போது "தேசிய அரசாங்கம்"என்ற அரசியல் விய+கத்தில் நிலைப்படும் இராஜ தந்திரமாகும்.
இலங்கையென்பது இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட நிலப் பிரதேசம் என்பதும்,இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சமூகவுறுகளின் இறமைக்கு அதி முக்கிய பாத்திரம்பெறும் வலையமென்பதும் உண்மையாக இருப்பதால்,பண்டுதொட்டு இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் முடிவுகள்,விருப்பங்கள்,ஆர்வங்கள்,ஆதிக்கங்கள் சங்கிலித் தொடராகப் பின்னப்பட்டு வருகிறது.இந்த இந்தியாவென்ற ஒரு தேச அரசியல் கட்டுமானமானது பிராந்திய ஆதிகத்தின் வெளிப்பாட்டோடு முன் நிறுத்தப்படும் பாரிய யுத்த ஜந்திரத்தோடு"உலகின் பாரிய ஜனநாயக நாடு"என்று பிரகடனம் பெறுகிறது.இந்த நாட்டைப்பற்றிய அரை குறைப் புரிதலின் வெளிப்பாடே நமது போராட்டச் செல் நெறியில்-தந்திரோபாயத்தில் மாபெரும் தவறையேற்படுத்தியது.
எமது மக்களின் விலங்கையொடிப்பதற்காகப் புறப்பட்ட இளைஞர்களை தகுந்த வழிகளில் அரசியல் மயப்படுத்தி,அவர்களைப் புரட்சிகரப் படையணியாகத் திரட்ட வக்கற்ற தமிழ்ச் சிந்தனா முறையானது வெறும் பித்தலாட்டமாக இந்தியா குறித்துக் கருத்துக்களை 80 களில் வெளிப்படுத்தியது."இந்தியா வென்பது உலகத்துக்கு முற்போக்கு நாடாகக் காட்டுவதால் அது தமிழீழக் கோரிக்கையை-தமிழீழத்தை தவிர்க்க முடியாது அங்கீகரித்துத் தன்னை முற்போக்காகக் காட்டும்"என்று நமது அரசியல் வல்லுநர்கள் அன்று புலம்பிச் சொதப்பினார்கள்(இத்தகைய நிலையில் ஓரளவு ஸ்தாபன ஆற்றலுள்ள விஸ்வா நந்ததேவன் போன்றவர்களை அன்றைய புலிப் பினாமிகள் இலங்கையரசின் துணையுடன் கொன்றொழித்தார்கள்).பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடு இந்தியா, எனவே ஈழத்தையும் அங்கீகரித்துத் தமிழர்களுக்குச் சாதகமான நாடாக இருக்குமென்றும் மனப்பால் குடித்த ஈழத் தமிழ் (அரசியல் கைக் குழந்தை) வல்லுநகர்களை அன்றே எள்ளி நகையாடிய சிங்கள அரசியல் தந்திரம் இன்று மிக அற்புதமாகத் தமிழர்களின் உரிமைகளை மறுத்தொதுக்கிவிட்டுப் "புலிப் பயங்கரவாதம்"குறித்து அரசியல் நடாத்த முடிகிறது.இது எவ்வளவு தூரம் நமது முட்டாள்தனத்தைப் பறைசாற்றி வருகிறது!
தேசிய அரசாங்கம்:
இன்றிருக்கும் இலங்கைப் பொருளாதாரச் சமூக வாழ்நிலையில் தேசிய அரசாங்கமெனும் கருவ+லம் எந்த நோக்கு நிலையில் கட்டியமைக்க முனைப்புப் பெறுகிறது,இதன் தேவை யாருக்கு அவசியமானது?
இந்தக் கேள்வியைப் பெரும்பாலும் இலங்கை வாழ் அனைத்து இன மக்களுக்குமான நோக்கு நிலையிலிருந்தே நாம் கேட்கின்றோம்!
கடந்த காலத்தைப்போல் இலங்கையின்; சமூக வாழ்நிலை இன்றில்லை!இன்றைய இலங்கையானது பாரிய மனித அவலத்துக்குச் சொந்தமான இராணுவப் பொருளாதாரத்துக்குள் மையங் கொண்ட இலங்கையாகும்.இந்த இலங்கை அரை இராணுவச் சர்வதிகாரத்துக்குள்ளும் அரைக் காலனித்துவத்துக்குள்ளும் அரசியல் பலமற்றுக் கிடந்தலையும் இலங்கையாக நிலை பெற்றுவிட்டது.முன்னைய இலங்கையில் நிலவிய பெயரளவிலான ஜனநாயகப் பண்புகளே இன்று துளியுமின்றிக் காட்டாட்சியாக மாறிவரும் இலங்கைக்கு ஒரு தேசிய அரசு தேவையாக இருக்கிறது!
இது நாள்வரை தேசிய அரசெனும் கருவ+லத்தை தமது வர்க்க நலன் கருதி, ஒவ்வொரு இனத்துக்குள்ளும் இருக்கும் ஆளும் வர்க்கங்கள் தத்தமது அரசியல் பாகப்பிரிவினைக்காகப் பேரங்களில் ஈடுபட்டபோது "இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சிப்போக்கிலெழுந்த முரண்பாடுகளை"-அமெரிக்க உளவுப்படை தனக்குச் சாதகமாகப் பாவிக்க வழிவகுத்துக்கொடுத்தும்- ஒவ்வொருவினமும் ஒருவரையொருவர் தலைவெட்டப் பாவித்துச் சிதைத்து வந்திருக்கிறார்கள்.இத்தகையவொரு நிலையில் மக்கள் நலன் சார்ந்த தேசிய அரசு என்ற இந்தக் கோரிக்கை வெறும் இனத்துவ அடையாளத்தைமீறிப் பொதுத் தேசத்தின் அபிவிருத்தியோடும்,தேசிய இனங்களுக்குள் குறைந்தபட்ச சமத்துவத்தைக் கோருவதற்கான வாய்ப்பாகவும் பார்க்கப்பட்ட ஒரு வடிவமாக முதலாளித்துவ ஜனநாயகத்தில் இருக்கிறதென்று பலர் கருத்தாடுகிறார்கள்.ஆனால் இந்தவுண்மையானது எந்தச் சந்தர்ப்பத்தில் சாத்தியமாகுமென்று பார்த்தால் அது பெரும்பாலும் முதலாளித்துவத்தின் அதீத வளர்ச்சிப்போக்கில்- முதலாளித்துவம் பாரிய வளர்ச்சியை எட்டிக்கொண்டு- சமூக வளர்ச்சிப் படிகளை மிக விருத்திக்கிட்டுச் சென்றிருக்கும் வளர்ச்சியடைந்தவொரு சமூகத்திலேயே இது சாத்தியமானவொரு விளைவைத் தரும்.
இலங்கையிச் சமூகமானது மிகவும் பின் தங்கிய நிலப்பிரபுத்துவ எச்சொச்சங்களையும்,தரகு முதலாளித்துவத்தின் மிகக் கேவலமான நுகர்வடிமைச் சமூகக் கூறுகளையுங்கொண்ட மனிதக் குழுக்களாகப் பின் தங்கியிருக்கும்போது இத்தகையவொரு இலங்கையில் தேசிய அரசுவென்ற கானல் நீர் அந்நிய ஆர்வங்களினது மிகத் தெளிந்த நோக்கங்களுக்காக இலங்கையில் முன் தள்ளப்படுகிறது.இத்தகைய தேசிய அரசாங்கமெனும் இந்த அரசியல் நாடகமானது இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தொடர்ந்து நீறுப+த்த நெருப்பாக வைத்திருப்பதற்காத் தூவப்படும் ஒரு இரசாயனக் கலவைதாம்.இது இலங்கையினது எந்த இனப்பிரிவுக்கும் சாதகமான வளர்ச்சிப்படிகளையும் தன்னகத்தே வைத்திருக்கவில்லை.முற்றுமுழுதாக இலங்கையை அந்நிய-பிராந்திய ஆதிக்கத்துக்குள் கட்டிவைத்திருக்கவும் அந்த ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தவுமே இது அரசியல் விய+கமாக விரிகிறது.
இந்தியா பிராந்தியப் பொலிஸ்காரன்:
இன்றைய இந்தியாவானது தனது பிராந்தியப் பொலிஸ்காரன் பதவியைத் தொடர்ந்து ஊசலாட்டத்தோடு காப்பாற்றி வருகிறது.இதன் பாத்திரம் மிகவும் பலவீனப்பட்டுள்ளது.நிதிமூலதனத்தின் அதீதப் பாய்ச்சலானது தொடர்ந்து முதலாளித்துவ ஆர்வங்களை மையப்படுத்திய பெரும் தொழிற்கழகங்களுக்கே சாதகமான அரசியல் வெற்றிகளைத் தந்துகொண்டிருக்கிறது.இது பெரும்பாலும் அமெரிக்க-ஐரோப்பிய முதலீட்டுக் கழகங்களுக்கே சாதகமான எதிர்காலத்தைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.இத்தகைய தரணத்தில் தொடர் தோல்வியைச் சந்திக்கும் இந்தியத் தரகு முதலாளிய வர்க்கத்துக்கு இந்த ஐரோப்பிய-அமெரிக்க அரசுகளோடும் அவர்களின் ஏஜமானர்களான பெரும் தொழிற்கழகங்களோடும் விட்டுக்கொடுப்பு, அரசியல்-பொருளியலுக்கு சமரசமத் தேவையாக இருக்கிறது.
இந்தியத் தேசத்தின் சுயயாண்மையைக்கூட விட்டுக்கொடுக்கும் நிலைக்கு இந்தியக் காங்கிரசுக் கயவாளிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.இதற்கான உந்துதல் இந்தியப் பெரும் தரகு முலாளிகளிடமிருந்து தொடர் தாக்குதலாகக் கட்சி அரசியலுக்குள் தோற்றம் பெறும்போது,அமெரிக்காவுக்கு இந்தியாவின் இயற்கை வளங்களைத் தாரவார்த்துத் தென்னாசியப் பிராந்தியத்தின் சந்தயைத் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்தியா முனைகிறது.ஆனால் இந்தக் கனவைத் தொடர்ந்து, இந்தியா ஆற்றும் பிராந்திய அரசியல் முன்னெடுப்புகள் இலங்கையிலொரு ஸத்திரமான அரசியல் முன்னெடுப்பையும் அது சார்ந்த இந்திய ஆதிகத்தையும்,இந்தியாவின் நலன்களுக்கான இலங்கையாக வைத்திருக்க விரும்புகிறது.தொடர்ந்து இலங்கை யுத்தத்துக்குள் மூழ்கும்போது இந்தியாவைத் தவிர்த்த பல வகை நலன்களைக் குறிவைத்து இலங்கைக்குள் கால் வைக்கும் அந்நிய ஆர்வங்கள் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு எதிராகவும் இந்தியாவின் சந்தைப்படுத்தும் வலுவையும் மிகப் பலவீனப்படுத்தி, இந்தியத் தரகு முதலாளிகளின் பொருள் உற்பத்தியைப் பெரிதும் பாதிக்கும்.
யுத்தம் செய்யும் சமுதாயம் தனது வலுவுக்குள் எந்தவொரு கட்டமைப்பையும் கொண்டிருப்பதில்லை.இது அரசியல் விஞ்ஞானத்தில் மிகத் தெளிவாக நாம் உணரத்தக்கது.இந்தச் சூழலில் இலங்கைபோன்ற மிகவும் பின் தங்கிய-எந்தச் சமூகவுற்பத்தியையும் தனது சொந்த முயற்சியால் முன்னெடுக்காதவொரு நாட்டில் "எந்தச் சுயாண்மையும்" நிலவ முடியாது.இதுதாம் இன்றைய இலங்கையில் யுத்தத்தை"ரெண்டரில்"(குத்தகைக்கு)எடுத்த அந்நிய சக்திகள் தமது வலுவுக்கேற்ற வடிவில் இலங்கைச் சிங்கள-தமிழ் அடியாட்படைகளைத் தகவமைத்து யுத்தத்தைச் செய்து வருகிறார்கள்.தமது சந்தையில் தேங்கிக்கிடக்கும் சிறு இரக ஆயுதங்களை விற்றுத் தொலைப்பதும் அதன் வருமானத்தில் புதிய கனரக ஆயுதங்களின் ஆய்வுகளுக்கு நிதி முதலிடவும் அவசியமாக இருக்கிறது.இது ஒரு பகுதியுண்மை என்பதும் மற்றைய பகுதியுண்மை தொழிற்சாலைகளின் எதிர்காலப் பொருள் உற்பத்திக்கான மூலவளத் தேவையை மையப்படுத்தியதாகவும் விரிகிறது.இன்றைய தொழிற்கழகங்கள் சக்திசார்ந்த"எரிபொருள்,மின்சாரம்"மற்றும் இரும்பு,இரசாயனத் தேவைகளையே எதிர்காலத்தின் அதி முக்கிய உற்பத்தி ஊக்கமாகக் கொள்கிறார்கள்.இதன்படி மூலவளத்தை உறுதிப்படுத்துவதும்,தேவைக்கேற்ப உடனடிப் பயன்பாட்டுக்குள் கொணர்வதற்கான வாய்புகளுக்காகவும் பற்பல சதிகளில் ஈடுபடுகின்றன.இதற்காக தத்தமது நாடுகளின் தூதர்களை இதுசார்ந்த பொறிமுறைக்குள் இணைக்கிறார்கள்.இந்தியாவினது இந்தத் தேசிய அரசுக்கான கனவு இலங்கையில் பலித்திடுவதற்கான அங்கீகாரத்தை அமெரிக்கா வழங்கியிருப்பினும் அந்த அரசியலில் புலிகளை வீழத்;தி முறியடிக்காதும் பார்த்துக்கொள்கிறது.புலிகள் இல்லாத இலங்கையை ஐரோப்பிய-அமெரிக்க நலன்கள் விரும்புவதில்லை.
தொடரும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
10.09.2006
8 comments:
உமது நட்சத்திர பதிவிற்க்கு வந்த பின்னூட்டங்களே கூறும் உமது பதிவுகலுக்கான வாசகர், வெள்ளத்தை, உமக்கு வெக்கமாக இல்லை தொடர்ந்து எழுத, இவ்வளவு நாளும் எழுதி உமக்கு என்று ஒரு 5,6 பேரையாவது சேர்த்து வைத்திருக்க முடியுந்ததா?
இதிலிருந்து தெரிய வேண்டும் உமது கண்ணொட்டம் பிழையானது.
ஒன்று எழுதுவத நிறுத்தும் அல்லது, எழுத்தொட்டத்தை மாற்றும்.
புலி உண்னைகொல்லப்போது என்றபோது வந்த சனத்தில ஒரு 5 பேராவது வந்து பின்னூட்டமிட்டிருப்பினம் நீர் உண்மை சொல்லி இருந்தா.
Hi,
This is the foundation for the Srilanka's national struggle, but all participents are not willing to accept this, because it will damage thier agenda. In our struggle we got lots of unanswer quections and hidden agendas too.
It's complicated to explain and dangerous to open that matter too.
Take Care
thank You
KK
Dear KK,
We impose ourselves so rashly on other people and yet we find ourselves hard to bear.
In a struggle for truth
the struggle will remain the only truth!
I think that every right imposes a responsibilty,every opportunity a task,and every possession an obligation.
regards
Sri Rangan
'புலிகள் இல்லாத இலங்கையை ஐரோப்பா-அமெரிக்கா நலன்கள் விரும்பாது''
தவறுஎன நினைக்கிறேன் இன்றைய
சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது
புலிகளால் பயனடையவேண்டி
தேவையில்லை மேற்குலகிற்கு.
சடல்வடேர் கெரில்லாக்களை எப்படி
அமெரிக்கா வளர்த்துவிட்டு எப்படி
அழித்தொழித்ததோ அதோ
போன்றதொரு சூழல் இன்று உருவாகி
வருகிறது. தங்கள் தேவைகள் நலன்கள்
தாண்டி மேற்கு நாடுகள் புலிகளை
வைத்திருக்காது.புலிகளுக்கு நிகரான
இன்னொரு சக்தியை உருவாக்க முயலலாம் அது புலியுக்குளேதான்
நடக்கும்.
சின்னா
//'புலிகள் இல்லாத இலங்கையை ஐரோப்பா-அமெரிக்கா நலன்கள் விரும்பாது''
தவறுஎன நினைக்கிறேன் இன்றைய
சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது
புலிகளால் பயனடையவேண்டி
தேவையில்லை மேற்குலகிற்கு.
சடல்வடேர் கெரில்லாக்களை எப்படி
அமெரிக்கா வளர்த்துவிட்டு எப்படி
அழித்தொழித்ததோ அதோ
போன்றதொரு சூழல் இன்று உருவாகி
வருகிறது. தங்கள் தேவைகள் நலன்கள்
தாண்டி மேற்கு நாடுகள் புலிகளை
வைத்திருக்காது.புலிகளுக்கு நிகரான
இன்னொரு சக்தியை உருவாக்க முயலலாம் அது புலியுக்குளேதான்
நடக்கும்.//
சின்னா நீங்கள் குறிப்பிடுவது சரி.இதைத்தாம் நானும் கூறுகிறேன்.அதாவது புலிக்கு நிகரான இன்னொரு சக்தியை உருவாக்குவதற்குத்தாம் வெளிநாடுகள் புலிகளின் முக்கிஸ்தர்களின் குழந்தைகளுக்கு-குடும்பங்களுக்கு வாழ,கல்வி பயில கண்டும் காணாததுபோல்... இதுவொரு அரசியல் சாணாக்கியம்.நீங்கள் சொல்கிற இன்னொரு சக்திதாம் புலிகளாகவே-புலி மனதோடு உருவாக வேண்டும்.சாரம்சத்தில் நம்மெல்லோரிடமும் ஒரு புலியிருப்பது(புலி மனது-எண்ணவோட்டம்)நாம் உணருவதுதாம்.இத்தகைய எண்ணத்தில் உருவகப்படும் தேசிய அபிலாசைகள் அந்நிய சக்திகளின் ஆர்வங்களுக்குப் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ உந்து சக்தியாக மாற்றப்பட்டுவிடுகிறது.இதற்காகவே புலிகள் இல்லாத...என்பதைப் பாவிக்கிறேன்.இலங்கையின் சுயாதீனமான சமூக வளர்ச்சியை அந்நிய சக்திகள் விரும்புவதில்லை.எனவே இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடு இருந்தேயாகவேண்டும் அந்நிய சக்திகளுக்கு.அதுபோல் ஆளும் சிங்கள வர்கத்துக்கும் ஓட்டுக்கட்சிகளுக்கும் இனமுரண்பாடு அவசியமாக இருக்கிறது.இத்தகைய முரண்பாட்டால் உயிர் வாழும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இனப்பிரச்சனை முடிவுக்கு வருவது தமது தலைக்குத் தாமே நெருப்பு வைப்பதுபோல்...இவை குறித்துத் தொடரும் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
நீங்கள் யார் பக்கம்
கொல்ப்படுவது தமிழ் இரத்தங்கள்
இதனை எதிர்க்க வேண்டியது எம்கடமை ஆனால் நடப்பது என்னவோ புலிகளின் வீழ்ச்சியை எண்ணி மகிழும் மனநோயாளியாக எம்மவர்கள்.
மறுபுறத்தில் பேச்சுவாத்தை தேசியம் ஏகம் என்று தேசியத்தின் ஆன்மாவையே இல்லாதாக்கும் குறுந்தேசிய வாதம்.
இது தனது இருப்பை பாதுகாத்துக் கொள்ள எவருடனும் கூட்டுச் சேர தயாராக இருக்கின்றனர்.
கொலைகள் நித்தம் பெருகிக் கொண்டே போகின்றது.
இதனை நிறுத்த வேண்டும் என்று எவரும் போராடவில்லை. மாறாக தமது அந்தஸ்தை பாதுகாக்க புதுப்புது பரப்புரையாளர்கள் பெருகிக் கொண்டே போகின்றனர்.
ஆக இவர்கள் யார் யார் பக்கம் என்று மக்களோ குழப்பத்தில் இருக்கின்றனரா அல்லது மக்களை குழப்புகின்றனர்.
இலங்கை தேசத்தின் ஆழும் அரசாங்கம் மக்களை ஒடுக்குவதற்கு தனது அரச இயந்திரத்தை மாத்திரம் அல்ல சிங்கள கடும் போக்காளர்களை தமிழ் கூலிகளையும் ஒன்று சேர்த்து முழு மக்களையும் ஒடுக்குகின்றது.
இவர்களே தேசியத்தை மேற்கு எஜமானர்களுக்கு காட்டிக் கொடுப்பவர்களாக இருக்கின்றனர்.
இவர்கள் உண்மையில் மக்கள் பக்கம் தான் இருக்கின்றனரா?
யுத்த நிறுத்தம் மீறல் என்றும் தற்காப்பு என்றும் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் என்றும் அரசியலில் மக்களை ஏமாற்றும் தந்திரம் கொண்;ட செயற்பாடுகளும் மக்கள் விரோதம் கொண்ட செயற்பாடுகள் மூலம் அனைத்துப் பகுதியினருமே நிர்வாணமாக இருக்கின்றனர்.
இந்த அரசியல் விபச்சாரிகள் மக்கள் ஒற்றுமை தேசியம் பிராந்தியம் என்று ஒவ்வொருவரும் தத்தமது குறுநலன் பொருந்திய சின்னப்புத்தியைக் கொண்டு மக்களின் இரத்தத்தைக் குடிக்கின்றனர்.
யார் மக்களை கொல்லவதில் அதிக பரிசு பெறுவது என்ற போடடியில்
கருணா புலியும் சரி> பிரபா புலிகளும் சரி சளைத்தவர்கள் அல்ல என்று காட்டிக் கொண்டு இருக்கின்றனர்.
ஆம் இவர்கள் யாரைக் கொல்கின்றனர். பிரபா புலிகளோ தேசியத்தின் வளத்தை இல்லாது ஆக்கின்றனர்.
கருணா புலிகளோ கிழக்கின் மைந்தர்களை கொல்கின்றனர். ஆக இவர்கள் பேசுகின்ற கொள்கைக்கே தீங்காக இருக்கின்றனர்.
ஆனால் அரசியல் சொல்லாடல்கள் கதம்பப் பேச்சுக்கள் அரசியல் அறிக்கைகள் மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர்.
ஆக இனச் சுத்திகரிப்பு என்பது தமிழர்களை தமிழர்களாலும்
முஸ்லீம்கள் தமிழர்களாலும் சுத்திகரிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
சிங்கள இனவாத அரசஇயந்திரம் தன்பங்கிற்கு சுத்திகரிப்பைச் செய்து கொண்டிருக்கின்றது.
//நீங்கள் யார் பக்கம்
கொல்ப்படுவது தமிழ் இரத்தங்கள்
இதனை எதிர்க்க வேண்டியது எம்கடமை ஆனால் நடப்பது என்னவோ புலிகளின் வீழ்ச்சியை எண்ணி மகிழும் மனநோயாளியாக எம்மவர்கள்.//
நண்பரே,வணக்கம்!
நான் எனது சொந்தப் பெயரோடு இதில் வலைபதிபவன்.பெரும்பாலும் என்னைப்பற்றிய முழுவிபரமும் இத்தளத்திலுண்டு!நீங்களோ அநாமதேயமாக வந்து"நீங்கள் யார் பக்கம்?"என்று கேட்கிறீர்கள்!
...உம்... நான் பக்கம் கட்டி ஆடுவதற்குப் பெரும் புள்ளிதானே!
பஞ்சத்துக்கு அடிபட்டவொரு பரதேசியாய் இருக்கும் நானும் எனது குடும்பமும் அதிகாரங்களுக்கெதிரானவர்கள்.அதுவும் தமிழ்பேசும் மக்களுக்குள் நிலவும் அதிகாரத்துவத்தை,அடக்கு முறையை முற்று முழுதாக எதிர்ப்பவர்கள்.
எங்கள் இனம் உலகத்துள் தலைநிமிர்ந்து "யாதும் ஊரே யாவரும் கேளீர்"என்பதை நிரூபிக்கணும்.
இது எனது அவா!
நாங்கள் உலகத்தால் இப்போது ஒடுக்கப்படுகிறோம்.எமக்குள்ளேயே பல பிளவுகளை ஏற்படுத்தி இந்தவுலகம் எம்மை வழமைபோலவே ஒடுக்குகிறது.எமது விடுதலைக்கு உயிர்கொடுக்கும் எமது சிறார்களின் தியாகம் அந்நியர்களின் நலனுக்காகப் பயன்படுவதில்போய் முடிகிறது.இது கவலைக்குரிய விடயம்.எமக்குள் அராஜகத்தையும்,அட்டூழியத்தையும் எதிரிகள் மும்மரமாகத் தூண்டுகிறார்கள்.புலிகளின் அழிவை நாம் எதிர்பார்ப்பவர்களில்லை.எமக்கு அது கவலையானது!
இது குறித்து ஏலவே பலமுறை சொல்லியுள்ளோம்:"அந்நியச் சக்திகள் புலிகளை அழிக்க முனைந்தால் நாம் நிபந்தனையின்றிப் புலிகளை ஆதரிக்கிறோம்."அதற்கான தகுந்த அரசியல் பார்வை நம்மிடமுண்டு.நமது மக்களின் உரிமையை எந்தவொரு நபருக்காகவோ அன்றி நாடுகளுக்காகவோ நாம் விட்டுக்கொடுக்க முடியாது.
எமது விடுதலையென்பது பெரும் சிக்கல் நிறைந்த பல்லின முரண்பாட்டுக்குள் தள்ளப்பட்டு மேன்மேலும் சிக்கலாக்கி வருகிறார்கள்.இது திட்டமிட்டு"ஒரு நபரை"தனிநபர் வழிபாட்டுக்குள் தள்ளி"அனைத்தையும் அந்த நபரின் சரி பிழை என்றும் கருத்தியல்கட்டி, கிட்லரிடம் அனைத்தையும் வரவு வைத்துவிட்டுச் சுகமாக ய+தமக்களை அடக்கி ஒடுக்கிச் சுரண்டிய பெரிய பெரிய கம்பனிகள்தாம் இன்று மக்கள் நலனில் அக்கறையுள்ள பெரும் சமூக உற்பத்தியாளர்களாம்!எப்படியிருக்கிறது?இதுதாம் சொன்னேன்"பொருள் வாழ்வுக்குள் பிரபாகரன்" நாமம் மேற்காணும் குறியீடுபோல் வரலாற்றில் நிலைப்படுத்தத் திட்டம் போட்டாச்சு என.
நாம் சகல அந்நிய ஒடுக்கு முறைகளுக்கும் எதிரானவர்கள்போலவே புலிகளின் பாசிச ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானவர்கள்.பிரபாகரனை "பப்பாவில்"ஏற்றிவிட்டு அனைத்தையும் செய்து முடித்துவரும் யாழ்மேலாதிக்கமும் பழைய பெருச்சாளிகளும் புதிய தலைவர்களும்,தளபதிகளும் மக்களையொடுக்கி அந்நியர்களுடன் பேரங்கள் செய்வதும் போராட்டத்தை பின் தங்க வைத்ததும் நடந்தே வந்திருக்கிறது.இல்லையென்றால் திடீரென ஒருபெரும் தளபதி,தமிழர்களின் தலைசிறந்த இராணுவத் தளபதி கருணா அந்நியர்களின் காலில் விழுந்திருக்க முடியாது.இது நீண்டு போகிறது.வாரயிறுதியில் இக்கட்டுரையின் தொடர்ச்சியை எழுதிப் போடுகிறேன்.
எமது நிலைப்பாடு புதிய ஜனநாயகப் புரட்சியின் அடிப்படையில் ஒடுக்கப்படும் எமது மக்களின் உரிமையை வென்றெடுத்து இலங்கையில் புதிய மாற்றுப் பொருளாதார அரசை நிறுவுவதே.இதற்கு புலிகளின் அமைப்புக்குள் மாற்றம் நிகழ்வதை,அந்த அமைப்பைப் புரட்சிகராமாக மீளக் கட்டியமைப்பதையும் நான் கனவு காணுகிறேன்.இது காலத்தால் சரியாகவும் இருக்கலாம் அல்லது இன்றைய காலவர்த்தமானத்தில் காணாமல் அழித்தொழிக்கப்பட்டு புலிகளென்ற அமைப்பு வடிவில் அந்நியக் கைக்கூலி அமைப்பாக மாற்றப்பட்டுத் தமிழர்கள் உரிமைகள் பறிக்கப்படலாம்.இதற்கு காலம்தாம் பதில் தரணும்.
மீளவும் சொல்கிறோம்:நாம் ஓடுக்கப்படும் அனைத்து மக்களின் பக்கம் நிற்பவர்கள்,அவர்கள் எமது இனமாகவும் இருக்கலாம் அல்லது சிங்கள இனமாகவும் இருக்கலாம்.உலகத்தில் வாழும் ஓடுக்கப்படும் மக்களில் நானும் ஒருவன்.அவ்வளவுதாம்!
நீங்கள் யார் பக்கம்''
that is heading.
that's it. Sorry for the misunderstanding.
Post a Comment